Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ இனப்படுகொலைக்கு விசாரணை கோரி 'அமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையத்தளத்திலேயே' ஒரு விண்ணப்பம் தொடங்கப்பட்டிருக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"நம்பிக்கையே வாழ்க்கை"யென யாரோ சமீபத்தில் இலங்கையில் சொன்ன ஞாபகம்..

அதனால் மீண்டும் முயற்சிக்கு..

http://wh.gov/4oa

.

  • Replies 83
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக பல தடவைகள் முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை இலகுவாக கை நாட்டு போடவழி தெரிந்தவர்கள் உதவினால் பேருதவியாக இருக்கும்.

இதற்காக பல தடவைகள் முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை இலகுவாக கை நாட்டு போடவழி தெரிந்தவர்கள் உதவினால் பேருதவியாக இருக்கும்.

உங்களுக்கு பிரச்சனை கொடுக்கும் பகுதியை "Ctrl + Prt Scr" Keyகளை சேர்த்து அமர்த்தி screen saving செய்து, Paint ன் மூலம் இங்கே வெட்டி ஒட்ட முடியும். அல்லது முடிந்தவரை விவரம் எழுத்த பாருங்கள்

சிலவழிகள்:

1. உங்கள் கணனிகளை மீள ஆரம்பியுங்கள்.

2. வேறு நேரத்தில் கை நாட்டு இட பாருங்கள்.( காலை, மாலை)

3. வேறு பிறவுஸ்சரை உபயோகியுங்கள். (i.e, firefox, safari, chrome)

4. வேறு வகை கணனிகளுக்கு சென்று செய்ய பாருங்கள். (Apple, IBM)

5.வேறு இடத்து கணனிகளை உபயோகப்படுத்த பாருங்கள( காரியாலயம், வீடு, வாசிகசாலை, நண்பர் வீடு)

6.சில மென் பொருள்களை இடைநிறுத்திப் பாருங்கள். (Firewall)

Edited by மல்லையூரான்

இதற்காக பல தடவைகள் முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை இலகுவாக கை நாட்டு போடவழி தெரிந்தவர்கள் உதவினால் பேருதவியாக இருக்கும்.

மல்லையூரான் தந்த பதிலுடன்:

1. கணக்கு ஒன்றை திறப்பதில் பிரச்சனையா? இல்லை

2. திறந்த கணக்கை பின்னர் உங்கள் மின்னஞ்சல் ஊடாக இயக்கவைப்பதில் பிரச்சனையா? இல்லை

3. இயங்கும் கணக்கை அந்த தளத்தில் வைத்து உங்கள் பெயரை பதிவதில் பிரச்சனையா?

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ கண்டுபிடிச்சு 2118உதவியவர்களுக்கு நன்றி குறிப்பாக மல்லையூரான் மற்றும் அகூதா இருவருக்கும் மீண்டும் நன்றி.

நான் 2186 கையெழுத்து போட்டுள்ளேன்.

உங்களுக்குத் தெரிந்தவர்கள் நண்பர்களிடமும் கையெழுத்திடும்படி கேழுங்கள். ஒன்றையும் இழக்கப் போவதில்லை. முயற்சிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது பங்கிற்கு 5 பேரைவிட்டு வாக்களித்துள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய மெயில் விலாசம் ஏற்கனவே பதியப்பட்டிருப்பதாகவும் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா

என்றும் மீண்டும் மீண்டும் வருகின்றது.

எனக்கு எங்கிருந்தும் கடவுச்சொல் கிடைக்கவில்லை

அதை எப்படிப் பெற்றுக்கொள்வது?

என்னுடைய மெயில் விலாசம் ஏற்கனவே பதியப்பட்டிருப்பதாகவும் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா

என்றும் மீண்டும் மீண்டும் வருகின்றது.

எனக்கு எங்கிருந்தும் கடவுச்சொல் கிடைக்கவில்லை

அதை எப்படிப் பெற்றுக்கொள்வது?

post-8566-0-72919700-1317945794_thumb.jpg

நீங்கள் முதலில் உங்கள் கணனியை அல்லது Internet Explorer யை மூடி, திரும்ப தொடக்குங்கள். பின்னர் தரப்பட்ட இணைப்பில் சொடுக்கி வெள்ளை மாளிகை தளத்திற்கு செல்லுங்கள் அந்த பக்கத்தில் உள்ள “SIGN IN” பொத்தானை அமுக்குங்கள்.

post-8566-0-63274400-1317945796_thumb.jpg

அந்த பக்கத்தில் உள்ள “Forgot Your Password” இணப்பை அமுக்கி உங்கள் மின்னல் அஞ்சல் விலாசத்தை பதிவு செய்துவிடுங்கள். அவர்கள் உங்கள் கடவு சொல்லை திரும்ப அமைத்து உங்கள் மின்னல் அஞ்சலுக்கு அனுப்பிவிடுவார்கள்.

Edited by மல்லையூரான்

Signatures needed by October 29, 2011 to reach goal of 5,000 : 2,443

இணப்பு சிலசமயம் நேரே தேவையான Petitionநிற்கு செல்வதில்லை.

இங்கே சொடுக்குங்கள்.

https://wwws.whiteho...-lanka/h0bvBbSg

(நேற்று இந்த இணப்பும் தொழில் படாது இருந்திருக்கிறது. இன்று திருத்தியுள்ளேன். முயற்சித்து பார்க்கவும்.)

கிடைக்காவிட்டால் Pettions இன் உள்ளே போய் support an international investigation அல்லது Sri Lank என்று தேடுங்கள்.

Page cannot be found என்று வந்தாலும் பொது Petitions பக்கத்தில் உள்ள தேடு பொத்தானை உபயோகித்து தேடுங்கள்.

இப்போது தேவைப்படுவது 2330.

தமிழ் நாட்டு உறவுகள் அக்கறைகாட்டுமளவிற்கு தன்னும் புலம் உறவுகள் அக்கறை காட்ட வேண்டும். பிரத்தியேக நன்றி தமிழ்நாட்டு உறவுகளுக்கு. 5000 மட்டும் எங்கள் குறிக்கோளாக இருக்க படாது. வெள்ளை மாளிகையை விளிக்க வைக்கதக்க அளவு கையொப்பங்கள் தேவை.

Edited by மல்லையூரான்

தமிழ் நாட்டு உறவுகள் அக்கறைகாட்டுமளவிற்கு தன்னும் புலம் உறவுகள் அக்கறை காட்ட வேண்டும். பிரத்தியேக நன்றி தமிழ்நாட்டு உறவுகளுக்கு.

எல்லா உறவுகளுக்கும் நன்றிகள்.

5000 மட்டும் எங்கள் குறிக்கோளாக இருக்க படாது. வெள்ளை மாளிகையை விளிக்க வைக்கதக்க அளவு கையொப்பங்கள் தேவை.
முற்றிலும் உண்மை மல்லையூரான்.

வாக்களித்தோருக்கு நன்றி.

நிறைய தமிழரல்லாதாரும் வாக்களித்திருக்கிறாகள்.

தன் கையயே தனக்குதவி. தமிழர்கள், நாம் முன்னின்று நமக்கு தீங்கு விளைத்த ராசபக்சாவை கூண்டில் ஏற்ற உழைக்க வேண்டும்.

இன்னமும் 2079 கையெழுத்துகள் தேவைப்படுகிறது. நீங்கள் நேரே போகமுடியவில்லையாயின் இந்த இணைப்பை சொடுக்குங்கள்.

https://wwws.whiteho...-lanka/h0bvBbSg

இல்லாவிடில் "Open Petition" என்பதை சொடுக்கி உள்ளே சென்று International Investigation அல்லது Sri Lanka என்ற பதங்களை உபயோகித்து Petition நை தேடுங்கள். Petition தெரிய தொடங்கியவுட்ன் Find More Information என்ற பொத்தானை அமத்தி உள்சென்று கைநாட்டு இட முடியும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

என் நண்பர்களும் போட்டுவிட்டார்கள் இன்னும் - 2071

நான் 2947ka கையெழுத்து போட்டுள்ளேன்

3000 மேலும் 2000 இன்னும் 20 நாட்கள் உள்ளன. நான் முகநூலில் இணத்துளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதுவரை ஆறு கையொப்பங்களை உறுதி செய்துள்ளேன். இன்னும் நண்பர்களை இழுக்க வேண்டும், கடக்க வேண்டிய தூரம் சிறிதளவே.

கையெழுத்துகள் தேவைப்படுவது 1860.

மணித்தியாலத்திற்கு 10 கையெழுத்துகள்.

தினம் 250 கையெழுத்துகள்.

நாங்கு நாட்களில் 1000 கையெழுத்துகள் என்றால்

இன்னும் எட்டு, பத்து நாட்களில் குறைந்த பட்ச இலக்கை அடைந்துவிடலாம்.

ஆனால் அது போதுமா எமக்கு.

500,000 தமிழீத்தமிழர்களுக்கு மேல் புலத்திலிருக்கிறார்கள்.இவர்களில் 50%மேல்(250,000) கணனி ஒன்றை எட்டத்தக்கவர்களாக இருக்க வேண்டும். இவர்களில் 20% தாயகத்தின் மீது கரிசனை காட்டி வக்களித்தால் 50,000 கையொப்பம் புலம் பெயர் தமிழர்களிடம் இருந்து மட்டும் வரலாம்.

வேண்டிய வாக்குகள் 1459

கடந்த இண்டரை வருடகாலத்திலும் பார்க்க, கடந்த ஓரிருமாதங்களின் நடப்புகள் போர்குற்ற விசாரணையை அவசியமாக்கி விட்டுவிட்டன. ஆர் குத்தியோ சில அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவை போர்குற்ற விசாரணையின் அவசியத்தை மட்டுமின்றி அவசரத்தையும் மிகைப்படுத்தியுள்ளன.

கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகள் தமது இலங்கைக்கான நிபந்தணையற்ற ஆதரவை ரத்து செய்து விட்ட.ன. இவை இலங்கை அரசு தமிழர்களுக்கு ஒரு தீர்வு காட்ட அழுத்தத்தை கொடுத்து நிர்பந்திக்க தொடங்கியிருக்கின்றன. அமெரிக்க அரசு, ஏமாற்று அதிகாரிகளின் கையில் மட்டும் விட்டு விடாமல் ராசாங்க அமைச்சும் இலங்கை விடயத்தில் தனது நேரடி பார்வையை செலுத்த தொடங்கியிருக்கிறது. இந்த அழுத்தங்களினால் இலங்கை அரசு அவசரமவசரமாக இன்னோரு சோல்பரி (பலனில்லாத, ஆனால் பார்வைக்கு நியாமானது போல்த்தோன்றும்) அரசியல் அமைப்பொன்றை தமிழர்கள் மீது திணித்து தன்னை விடுவிக்க முயலலாம். இந்த ஆபத்து நமக்கு இந்தியாவின் பக்கத்திலிருந்து வரதக்க சந்தர்ப்பம், மற்றைய நாடுகளையும் விட இன்னும் அதிகமாக இருக்கிறது. பழய மும்மூர்த்திகள் இல்லாததும், புதிய வெளிவிவகார அதிகாரி இன்னமும் இலங்கை ஊழல்களால் வாங்கப்பட்டு முடியாமையும் இலங்கைக்கும் பெரிய பந்தையமாக மாறியிருக்கிறது. இந்தியா தனது பக்கத்தில் உணரும் நெருக்கடிகள்

1. இந்தியாவிற்கு இலங்கையிலிருந்து சீனாவை மற்றைய எல்லா நாடுகளிலும் பார்க்க அதிக ஆர்வத்துடன் வெளியேற்றியாக வேண்டும்.

2. அதை அமெரிக்காவோ அல்லது வேறு எந்தவொரு மேற்கு நாட்டின் தலையீடோ இல்லாது செய்து முடிக்க வேண்டும்.

3. இதை செய்யும் போது மேற்கு நாடுகளை கோபபடுத்தாமல் செய்ய வேண்டும்.

4. இலங்கை சம்பந்தமாக தனது போர்குற்ற ஒத்தாசை உதவிகளை, சேர்பாடுகளை நேரத்திற்கு மூடிமறைத்து விட வேண்டும். இல்லையேல் ஐ.நா நிரந்தர அங்கத்தவர் ஆசை முன் செல்லாது.

5. தமிழ்நாட்டுத் தோல்வி, தமிழ்நாட்டு காங்கிரஸ் அலகையே இல்லாமல் செய்து விட்டது. அந்த தோல்வியை இனியும் மறுக்காமல் தமிழ் நாட்டில் கிடைக்கதக்க வாக்குகளை தமிழர்களிடம் இரந்து வேண்ட வேண்டிய தேவை காங்கிரசுக்கு மற்றைய மானிலங்களில் இருந்து எழும்ப ஆரம்பித்திருக்கிறது.

இதன் காரணமாக இந்தியா ஈழத்தினர் மீதும், இலங்கை மீதும் தான் விரும்பும் ஒரு அரசியல் அமைப்பை திணிக்க முயன்றால் அது ஆச்சரியபடுவத்கில்லை.

இப்படியான ஒரு அரைவேக்காட்டு தீர்வு உலக நாடுகளால் தமிழர்கள் மீது திணிக்க படுவது தடுக்க படவேண்டுமாயின் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு துரும்பு போர்க்குற்ற விசாரணை.

ஆற்றுக்குள் விழுந்து தத்தளிப்பவனுக்கு அருகில் மிதக்கும் துரும்பை எட்டிபிடிக்க முயல்வதும் ஆபத்து போலத்தான் படும். ஆனால் வெளியில் நின்று அவனுக்கு உதவ முயலும் உறவுக்கு விழுந்தவன் அந்த துரும்பை பற்றிவிட்டானாயின் அவனை மீட்பது சுலபம் என்பது தெரியும். அதனால்த்தான் தாயக மக்களோ அல்லது அரசியல் கட்சிகளோ ஆதரவு அளிக்கவிட்டாலும் புலம்பெயர் மக்கள் அதன் அவசியத்தையும், அவசரத்தையும் உணர்ந்து செயலாற்ற வேண்டியவர்களாக இருக்கிறது. எனவே பிரட்டப்படாத கல்லென்று ஒன்றில்லாமல் எல்லோரும் சேர்ந்து உழைத்து இந்த போர்குற்ற விசாரணையை நிஜமாக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

1,290 கையெழுத்துக்கள் தேவைப்படுவது .

புலம் பெயர் மக்கள் போராடத்தை ஊக்குவிப்பவர்கள் என்று பெயர் எடுத்தவர்கள். இவர்களின் ஊக்குவிப்புக்களாலோ அல்லது வேறு எதனாலோ தாமே முன்வந்து உயிரையே கொடுத்து போராடிய இழைஞர் திலகங்கள் மட்டும் 50,000 தை எட்டும்.

இதில் கொல்லப்பட்ட அப்பாவிகளின் கணக்கு வேறு. அது 150,000தை தாண்டும். ஆனால் 5,000 பேர் முன்வந்து விசாரணைக்கு ஒப்புதல் கொடுத்தால் இதில் ஒரு விசாரணை தொடங்கி நீதி கிடைக்க சந்தர்பம் இருக்கு.

நம் உறவுகள் கொலை செய்யபட்டு இறந்துவிட்டார்கள். விசாரணை ஒன்று நடந்து அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். நாம் அதற்கு ஒப்புதல் கொடுத்து, முன்னின்று நியாயம் கேட்டு, விசாரணையை தொடக்கி வைக்க வேண்டாமா? எப்படி நாம் எமக்கேன் இந்த வம்பு; நாமுண்டு; நமது குடும்பம் உண்டு; நளைக்காலை எமது தொழில் உண்டு என்று ஒதுங்க முடியும். இழக்க இதில்(அகுத மேலே ஓரிடத்தில் கூறியிருப்பது போல்) ஒரு ஐந்து நிமிட பொழுதை தவிர வேறு எதைத்தான் கற்பனை தன்னும் பண்ணி பார்க்க முடியும்?

நீங்கள் கொடுக்கும் ஒரு ஒப்புதலில் 30 பேருடை கொலைக்கு ஒரு விசாரணை ஆரம்பமாகச் சந்தர்ப்பமிருக்கு. எத்தகைய வலு வீதம் இது?. நம் உறவுகள் 50,000 ஏற்கனவே முன்வத்து இந்த விடுதலைக்கு உயிரைக்கொடுத்து உதாரணம் காட்டியிருகிறார்கள். இப்போ நாம் 5000 பேர் முன்வந்து இந்த ஒப்புதலிற்கு கைநாட்டு இட்டு இறந்த வீரர்களோடு இறந்து விடாமலிருக்க எமது தமிழீழ விடுதலை கனவுக்கு உயிர் கொடுக்க மாட்டோமா?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.