Jump to content

ஈன்ற பொழுதினும் பெரிதுவந்த தந்தை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

மூத்த மகள் வளர்ந்து விட்டாள். பதின்மக் காலம் அவளுடயத்தாகிவிட்டது. அப்பா, அப்பா என்று என்னைக் கதாநாயகனாய் கொண்டாடிய அவள், தானே கதாநாயகி என்னும் தொனியில் ஆடுகிறாள், நடக்கிறாள், கதைக்கிறாள், ஏன் பேசவும் செய்கிறாள் என்னை.

மவுசு குறைந்த தென்னிந்திய திரைப்பட கதாநாயகன் போலாகிவிட்டேன் நான். இந்த வேதனையைக் கூட தாங்கிக் கொள்ளலாம் ஆனால் தாயுடன் சினேகிதியாகி விட்டாள் என்பதை ஜீரணிக்க கஸ்டமாக இருக்கிறது.

ஒன்றாய்

உலா வருகிறார்கள்..

பச்சை எரிச்சலாய் இருக்கிறது.

உடுப்புக் கடை,

சப்பாத்துக்கடை,

கோப்பி சொப்,

சினிமா

என்று

சுற்றித் திரிகிறாகள்...

என்னோடு

கார் ஓடியதையும்,

மலை ஏறியதையும்,

பந்தடித்ததையும்,

எனது கழுத்திலிருந்து ஊர் சுற்றியதையும்,

யானை மேல் என்னுடன் இருந்து

இளவரசி போல் உலா வந்ததையும்

மறந்து விட்டாள் போல இருக்கிறது அவளது நடவடிக்கை.

இருப்பினும் அவளுக்கு தெரியாமல் ரசிக்கிறேன் அவளின் அலட்சிய பார்வையையும், பேச்சையும். பேரானந்தம் அது..

பிறந்த போது கூட நான் தான் முதலில் அவளைக் கண்டேன்... அதன் பின் தான் தாயிடம் போனாள். இன்று நான் என்று ஓருவன் இருப்பது போல காட்டிக் கொள்கிறாள் இல்லை. முன்பெல்லாம் கேட்காமல் கிடைக்கும் அவளின் முத்த மழையில் சளிப்பிடித்து கிடந்திருக்கிறேன். இப்ப வரண்ட புமியாய் எனது முகம்..... நானே கேட்டுப்போனாலும் யானைப்பசிக்கு சோளம் பொரி போல சின்னதாய் ஒன்று பட்டும் படாமலும் தருகிறாள்.

எனது உலகம் இப்படியாய் போய்க் கொண்டிருந்த போது ஒரு நாள் எனது பிறந்த நாள் வந்தது. பரிசாய் ஒரு புத்தகம் தந்தாள்..

முத்தை (முகத்தை) தொலைத்து விட்டேனோ

என்று

நடுங்கியிருந்த போது

முத்தமிட்டு

மெதுவாய்த் தந்தாள்

நோர்வேஜிய மொழியில்

”என் தந்தை”

எனறொரு தலைப்பிட்ட

ஒரு பொக்கிஷத்தை

அதிலிருந்து

மொழிபெயர்த்த சில வரிகள்

முதல் பக்கம்

30. புரட்டாதி. 2009...

என் அப்பாவுக்கு!

அன்பிலும் அன்பு

கொண்டுள்ளேன் உன்னில்.

தந்துள்ள

பொக்கிஷத்தை பாதுகாப்பாய்

என்னும் நம்பிக்கையில்

காவியா......

பொக்கிஷத்தில் இருந்து சில வரிகள்

நான்

என்றென்றும்

நன்றியுடையவள்

உனது

சிரிப்பு

பொறுமை

அன்பு

நட்புக்கு

.........................

நீ

வீராதி வீரன்

கடமையிலும்

அன்பிலும்

........................

எனது

தந்தை

நீ

இருப்பினும்

குழந்தைப் பருவத்தில்

நீ

பரிமாறிய சிரிப்புக்கும்,பொறுமைக்கும்

நாம்

ஒன்றாய் செய்த செயல்களுக்கும்

தந்த ஆறுதலுக்கும்

ஆயிரம் ஆயிரம்

நன்றிகள்

........................

என்னுடன்

நடையபின்று

உலகத்தை

காண்பித்தாய்

அதன் மீதான

பார்வைவை

பெருப்பித்தாய்

.........................

தந்தையே

நீ

பலமானவன்

புத்தி உடையவன்

ஆனால்

நினைக்காதே

உன்

வாழ்வு

சாமான்யமானதென்று

........................

காலச்சக்கரம் ஓடுகிறது

ஆனால்

ஏமாற்றமலும்

வற்றாமலும்

இருக்கிறது

உனதன்பு.

மாறாத

உன் வாஞ்சை

மூச்சைப்

போன்றதெனக்கு

..........................

நன்றி.

நீ

எனதுறுதியில்

கொண்ட

நம்பிக்கைக்கு

...........................

வேதனை

வலித்தது

நீ

தவறிழைத்த போது.

அதன்

தாக்கம் மரித்த போது

உண்மை தெளிந்து,

புரிந்தது

நீ

சாதாரணமானவன்

அல்லவென்று

...........................

கற்பித்தாய்

தவழ

எழும்ப

நடக்க

ஓட

விடா முயற்சி

சுயகட்டுப்பாடு

பாராட்டு

ஊக்கம்

ஆர்வம்

மேலும்

கற்கவும்

மெதுமையும்

பொறுமையும்

மரியாதையும்

நட்பும்

அன்பும்

கற்பித்தாய்

.........................

வாழ்வும்

வாழ்க்கையும்

மாறலாம்.

கனவுகள்

கானலாகலாம்

அவை பெரிதல்ல

என் மீது நீ கொண்ட அன்பும்

உன் மீது நான் கொண்ட அன்பும்

வாழ்ந்திருக்கும் வரை.

..........................

முதன் முதலில்

உலகம் கண்ட போது

உயரத்தில்

உன்

தோள் மேலிருந்தேன்

நீ

மெதுவாய் ஆடி

நடக்கையில்

வாழ்க்கை

பெருத்தது

அரைத் தூக்கத்தில்

நீ என்னைத்

தோளில் சுமந்தது

போல்

சுமந்து

மறவேன்

உன்னையும்

நீ

தந்த

குழந்தைப் பிராயத்தையும்

............................

எனதன்புத் தந்தையே

என்றென்றும்

நான் உன்னுடையவள்

............................

பொக்கிஷத்தை

பார்த்தபின்

ஈன்ற பொழுதினும், பெரிதுவந்த

தந்தையாய்

கண் கலங்கி

நெஞ்சு விம்மி

நின்றிருந்தேன்

திருப்தியான நாள்

.................

பின் பொருநாள் மெதுவாய் கேட்டேன் ”அய்யா அந்த புத்தகத்தை வாசித்து விட்டா வாங்கித் தந்தாய் என்று ”அதிலென்ன சந்தேகம்” என்றால் அலட்சியமாய்...

மீண்டும் உயிர்த்திருந்தேன்....அவளின் பதிலால்

30.09.2009

இன்றைய நாளும் நல்ல‌தே.

http://visaran.blogspot.com/

Posted

ஒரு தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உணர்வுபூர்வ பந்தம் , நூலிளை இடைவெளியில் உணரப்படும் . மிக அழகாக சொல்லியிருக்கிறியள் விசரன் :) :) :) .

Posted

ஒரு தந்தையின் உணர்வுகளை அப்படியே கொண்டு வந்திரக்கிறீர்கள் சஞ்சய். :wub: உங்களைப்பற்றி சின்னகுட்டியர் யாழில் ஒழுதியபொழுது சே இத்தனை நாள் வலைப்பதிவில் குப்பை கொட்டியிருக்கிறேன் உங்கள் பதிவுகளை பார்தததேயில்லையே என நினைத்து எங்கள் வலைப்பக்கத்தை ஒரு முறை மேய்ந்துவிட்டு சின்னகுட்டியர் இப்பதான் ஒரு உருப்படியான வேலை செய்திருக்கி றார் என நினைத்தேன் :lol: :lol: . இப்பொழுது யாழில் கண்டதும் மகிழ்ச்சி :)

Posted

தந்தைக்கும் மகளுக்குமான உறவை அழகாக சொல்லியிருக்கும் ஒரு அழகான பதிவு. நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சஞ்சயன் நன்றி பகிர்வுக்கு, நீங்கள் சொல்வது மிகச் சரி, என் மகளுக்கும் 9 வயதுதான் ஆகப் போகுது, ஆனா வீட்டில் கட்டுப்பாடுகள் அவாவின் கைக்குள், தம்பிமாரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது எல்லா வேலைகளும், பார்த்து ரசிக்க மனதுக்கு இன்பமா இருக்கும், அருமையாக சொல்லியுள்ளீர்கள் பாசப் பிணைப்பை. நீங்க சொன்ன விதம் தனி அழகு & அதைவிட தெரிவு செய்த தலைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்பாக்களுக்கு பெண் மகவுகளுடனான பிணைப்பு ஒரு படி மேல் :D

Posted

பிறந்த போது கூட நான் தான் முதலில் அவளைக் கண்டேன்... அதன் பின் தான் தாயிடம் போனாள்.

எனது அனுபவமும் இப்படித்தான்.

நல்ல பதிவு சஞ்சயன். உங்கள் வரவு யாழுக்கு மெருகூட்டுகின்றது.

Posted

அபியும் நானும் மற்றும் தெய்வத் திருமகள் ஆகிய திரைப்படங்களை நான் பார்த்தபொழுது நானும் ஒரு அப்பா ஸ்தானத்திற்கு போய் அனுபவித்து பார்த்து நெகிழ்ந்திருந்தேன். இந்தப் படைப்பினைப் படிக்கும் போது கூட அப்படியானதொரு மனநிலையை நான் உணர்ந்தேன்.

உணர்வுகளும் வார்த்தைகளும் உயிர்ப்புடன் என் மனதினை நெகிழ வைத்திருந்தது!

வாழ்த்துக்கள் ..... தங்கள் எழுத்துக்கு மட்டுமல்ல... தங்களுக்கும் தங்களின் அன்புறவுகளுக்கும் சேர்த்து. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் என் அப்பாவைத் தான் மிகவும் பிடிக்கும்...நன்றாக எழுதுகிறீர்கள் தொட‌ர்ந்து உங்கள் கதைகளை இணையுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு:  அவசர செய்தி! உயிர்காக்க விரைவாகப் பகிருங்கள்   நிலமை கடும் தீவிரமாகச் செல்கிறது. எலிக்காய்ச்சல் யாழ்ப்பாணத்தில் வெகு வேகமாகப் பரவுகின்றது.   பருத்தித்துறை வைத்தியசாலை மருத்துவ நிபுணர் வெளியிட்டுள்ள செய்தியில் ,    இதுவரை பருத்தித்துறை வைத்தியசாலையில் மட்டுமே 5 பேர் உயிரிழந்துள்ளனர். பத்து நோயாளிகள் நோய் தீவிரமாகி யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.   உங்களுக்கு காய்சல் , உடம்பு வலி , மூட்டு வலி , கண் சிவப்பாதல், சிறுநீர் கழிப்பது குறைதல், கண் சிவப்பாகுதல், வயிற்று வலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.   சேற்று நிலங்களில் வேலை செய்தவர்கள், விவசாயிகள், மீனவர்கள் , அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெள்ள நீரில் நடந்து திரிந்தவர்கள் பருத்தித்துறை சுகாதார பணிமனையை தொடர்புகொண்டு (MOH office) , நோய் வருவதற்கு முன்பான மாத்திரைகளை பயன்படுத்தி உங்களை உயிராபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவை தடுப்பூசிகள் அல்ல , அன்டிபயட்டிக் மாத்திரைகள். தடுப்பூசிக்கு பயப்படுவார்கள் கூட அச்சப்படாமல் இதைப் பயன்படுத்தலாம்.   அவசரமாக பகிருங்கள். உங்களுக்குத் தெரிந்து மேலே சொன்னதுபோல தேங்கி நிற்கும் நீர் நிலைகளோடு தொடர்பு பட்டு ஆபத்தில் உள்ளவர்களை உடனடியாக சுகாதார பணிமனைக்கு ( MOH office) யிற்கு அழைத்துப் போங்கள்.   உங்களுக்குத் தெரிந்த எல்லோருக்கும் இந்த செய்தியை அனுப்புங்கள். நீங்களும் யாரோ ஒருவரை மரணத்தில் இருந்து காப்பாற்றலாம். இதை புறக்கணிக்காமல் பகிருங்கள்.   தகவல் மூலம் : செல்லத்துரை பிரசாந், பொது மருத்துவ நிபுணர் பருத்தி துறை ஆதார வைத்தியசாலை . பிரதி - சி.சிவச்சந்திரன் https://www.facebook.com/share/p/18UmzZibeV/
    • நெளிவு சுளிவு தெரிந்தவர்களிடம் கழுத்தைக் குடுக்க வேண்டும் ...... கண்டபடி யாரிடமும் குடுக்கக் கூடாது . ........ அதுக்கென்றே பிறந்த சிலர் இருக்கின்றார்கள் .....அவர்களை நாடவேண்டும் . ......!    
    • நேரம் கிடைத்தால்…. இஸ்லாமியர்களின்    தலைமயிர் வெட்டும் காணொளிகளை பாருங்கள். படு பயங்கரமாக தலையில் அடிப்பார்கள், திடீரென்று கழுத்தை  எதிர்பாராத கோணத்தில் திருப்புவார்கள், நெருப்பு கொழுத்துவது என்று ஒரே… பயங்கரமாக இருக்கும். “யூ ரியூப்பில்” பார்வையாளர்களை கவர்வதற்காக செய்கிறார்கள் போலுள்ளது. ஆனாலும்…. தலையை கொடுத்தவன், உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும்.  
    • இதுபோல இந்த தலைமயிர் வெட்டும் தமிழ் அண்ணையள், கழுத்தை முடக்கி நெட்டி முறிப்பதும் ஆபத்தான வேலை. அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன்…நெட்டி முறித்தவுடன் ஆள் அப்படியே…பரலைஸ்ட் ஆகி படுத்து விடுவார். இதன் பின் வழமையான தமிழ் அண்ணையிடம் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன்.  வேண்டாம் என்றபின்னும் பழக்க தோசத்தில் திருப்பி விட்டால் என்ற பயம்தான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.