Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடாபியின் கொலையும் லிபியாவின் எதிர்காலமும் உலக அரசியலும்

கடாபியின் கொலையும் லிபியாவின் எதிர்காலமும் உலக அரசியலும் 13 members have voted

  1. 1. உங்கள் பார்வையில் கடாபி யார்?

    • சர்வாதிகாரி
    • தேசியவீரன்
    • மேற்குலகால் ஏமாற்றப்பட்ட தலைவர்
  2. 2. லிபியாவின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

    • ஒரு மக்களாட்சி அமையும்
      0
    • மேற்குலகின் கட்டுப்பாட்டுக்குள் அமையும்
    • நாடு பிளவுபடும்
    • மீண்டும் ஒரு இராணுவ புரட்சி ஏற்படும்
      0

Please sign in or register to vote in this poll.

Featured Replies

கிட்டத்தட்ட 42 வருடங்கள் லிபியாவை ஆண்ட கடாபி இன்று மேற்குலக ஆதரவுடன் கிளர்ச்சியார்களால் கொல்லப்பட்டார். இதனுடன் எட்டு மாத மக்கள் போராட்டமும் நிறைவுக்கு வரலாம்.

ஆனாலும் லிபியாவின் எதிர்காலம் எவ்வாறு அமையும்? ஒரு தெளிவற்ற நிலையிலேயே உள்ளது.

இதை கருத்தில் கொண்டு ஒரு கருத்துக்கணிப்பை/கருத்துக்களை பரிமாறுங்கள் - நன்றி.

லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டார்: http://www.yarl.com/...showtopic=93229

கடாபியின் கடைசி நாட்கள்? : http://www.yarl.com/...showtopic=90591

லிபியாவை கையளிக்கமாட்டேன்: கடாபி : http://www.yarl.com/...showtopic=91691

எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள்: http://www.yarl.com/...showtopic=81917

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பார்வையில் கடாபி யார்?

* சர்வாதிகாரி

லிபியாவின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

* மேற்குலகின் கட்டுப்பாட்டுக்குள் அமையும்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பார்வையில் கடாபி யார்?

*மேற்குலகால் ஏமாற்றப்பட்ட தலைவர்

லிபியாவின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

* மேற்குலகின் கட்டுப்பாட்டுக்குள் அமையும்

  • கருத்துக்கள உறவுகள்

நாற்பத்தி ஒரு வருடங்கள், இராணுவச் சீருடையுடன் பதவியில் இருந்த ஒருவரை....

என்னால் சர்வாதிகாரியாகத்தான் பார்க்க முடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கடாபி பற்றி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. அவரைப் பற்றி லிபிய மக்களுக்கே அதிகம் தெரியும். எங்களைப் பொறுத்தவரை.. அவர் சிங்கள எதிரியின் கூட்டாளி. இன அழிப்புக்கு ஒத்துப்போனவர். இதற்கான விடை இல்லை என்பதால்.. நான் எதனையும் தெரிவு செய்யவில்லை.

லிபியாவின் எதிர்காலம்.. மேற்குலகின் நலன்களுக்கு ஏற்ப அமையும். லிபியாவில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை மேற்குலகம் ஜனநாயக விரிவாக்கம் என்ற போர்வையில் தன்னகப்படுத்த முயலும். ஆனால் கடாபியின் கொலை இந்த விடயத்தில் மேற்குலகம் நிம்மதியாக இருந்து அதைச் செய்ய அனுமதிக்காது. ஈராக் போல இல்லாவிடிலும்.. எதிர்கால லிபியா கடாபியின் காலத்தை விட நெருக்கடிகள் நிறைந்த லிபியாவாக.. லிபிய மக்களின் நிம்மதி ஜனநாயகம் என்ற போர்வையின் கீழ் பறிக்கப்பட்டதாக இருக்கும்..! அதேவேளை.. கடாபியின் இழப்பை எண்ணி லிபிய மக்கள் வருந்தும் நிலையும் தோன்றும். அப்போது மேற்குலகம் எண்ணிப்பாராத விளைவுகளைக் கூட அது சந்திக்க நேரலாம்.

ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று குத்துவெட்டுப் படுவதை ஜனநாயகத்தின் கீழ் அங்கீகரிக்கும் அமெரிக்க சன நாய் அக உலகம்.. மக்கள் விரும்பும் ஒரே தலைமையின் கீழ் அவர்கள் வாழ்வதை அங்கீகரிக்கா. காரணம்.. ஆட்சி மாற்றங்களும்.. நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலையும் மேற்குலக செல்வாக்கை பிரயோகிக்க அவர்களுக்கு வெகு இலகுவாக வழிசமைத்துக் கொடுக்கும் என்பதால்.

  • கருத்துக்கள உறவுகள்

நாற்பத்தி ஒரு வருடங்கள், இராணுவச் சீருடையுடன் பதவியில் இருந்த ஒருவரை....

என்னால் சர்வாதிகாரியாகத்தான் பார்க்க முடிகின்றது.

என்னைப்பொறுத்தவரை நடப்பதெல்லாம் ஒரு நாடகம். அதன் உள்பக்கம் எமக்கு தெரிந்திருக்கவாய்ப்பில்லை. இத்தனை மாதங்களாக இத்தனை நாட்டுப்படைகளுடனும் ஆயுதங்களுடனும் அவர் நின்றுபிடித்திருக்கின்றார் என்றால் அவருக்கு அவரது மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது. அத்துடன் அவர் பெரும் தவறுகள் செய்ததாக நான் அறியவில்லை. சதாம் உசைனுடன் ஒப்பிடக்கூட முடியாதவர். ஒரு காலத்தில் எமக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்தவர். 41 வருடங்கள் என்பது பெரிதுதான். ஆனால் இவரிடமிருந்து இன்னொருவரிடம் போனால் இது கூட அந்த மக்களுக்கு கிடைக்காது.

ஆரம்பத்தில் தேசிய வீரனாக ஆட்சியைப் ஆரம்பித்து சமயம் பார்த்து மேற்குலகால் ஏமாற்றப்பட்ட ஒரு சர்வாதிகாரி.

ஒரு காலத்தில் உலகில், புரட்சியாளர்களால் மதிக்கப்பட்டவர். தடம் மாறிப் போனார்.

நீண்ட காலம் அடக்குமுறைக்குள் வாழ்ந்ததால் அமைதியான மக்களாட்சி அமைய தாமதமாகும். போதாததிற்கு கட்டுப்பாடான இராணுவ பயிற்சியற்ற புரட்சியாளர்களிடம் உள்ள ஆயுதம் எவரிற்கு எதிராகவும் திரும்பலாம். இவர்களை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டு வருவது மிக முக்கியம். மீண்டும் ஒரு இராணுவப் புரட்சி ஏற்பட சந்தர்ப்பங்கள் இருந்தாலும், மில்லியன் / பில்லியன் கணக்கில் குண்டைக் கொண்டு

கொட்டிய மேற்குலகம் இலாபம் பார்க்க முதல் உள்ளூர் சண்டைகளுக்கு அனுமதிக்கப் போவதில்லை.

தற்போதுள்ள அனுபவமற்ற நிருவாகம் எப்படி கையாளப் போகிறார்கள் என்பதிலேயே எதிர்காலம் தங்கியுள்ளது.

பி.கு.

எனது தெரிவு இல்லாததால் நான் வாக்கிடவில்லை.

Edited by தப்பிலி

  • தொடங்கியவர்

கடாபி பற்றி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. அவரைப் பற்றி லிபிய மக்களுக்கே அதிகம் தெரியும். எங்களைப் பொறுத்தவரை.. அவர் சிங்கள எதிரியின் கூட்டாளி. இன அழிப்புக்கு ஒத்துப்போனவர். இதற்கான விடை இல்லை என்பதால்.. நான் எதனையும் தெரிவு செய்யவில்லை.

இதை எமது கோணத்திற்குள் வைத்து பார்க்கின்றீர்கள். சரியாக இருக்கலாம்.

நான் முன்வைத்த பார்வை இன்றைய உலக அரசியலை கருவாக வைத்து.

  • தொடங்கியவர்

அரபு நாடுகளில் எங்குமே மக்களாட்சி இல்லை என்றும் மத்தியகிழக்கில் இஸ்ரேலில் மட்டுமே மக்களாட்சி நடக்கின்றது என்பதை உலக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுவது உண்டு.

அண்மையில் ஒரு பழக்கடை வாலிபனை கொலைசெய்தது மூலம், துனிசியாவில் ஆரம்பாமனது அரபு புரட்சி. அந்த சர்வாதிகாரி தப்பியோடினார். பின்னர், எகிப்தில் அது நடந்தபொழுது மேற்குலகம் சற்று ஆடிப்போனது. முபாரக் கைதாகி விசாரணைக்கு உள்ளாகியுள்ளார். ஆனால், மக்களாட்சி அங்கு அரங்கேறுமா என்பது கேள்வியே.

பின்னர் எட்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமானது லிபிய மாற்றங்கள். மேற்குலகம் நேரடியாகவே போரில் இறங்கியது.

மூன்று நாடுகள் - வெவ்வேறு உலக அணுகுமுறை.

அதேவேளை பஹ்ரேய்ன் பிரச்சனை சவூதி அரபிய ஆதரவுடன் அணைக்கப்பட்டது. ஏமனில், சிரியாவில் தொடர்கின்றது.

உலக அரசியல் இடியப்ப சிக்கல் போன்றது.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை கடாபி ஒரு தேசிய வீரன்...லிபியாவின் எதிர்காலம் மேற்குலகின் கட்டுப்பாட்டுக்குள் அமைந்து பின்னர் மீண்டும் ஒரு இராணுவ புரட்சி ஏற்படும் என்பது என் கருத்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பார்வையில் கடாபி யார்?

* சர்வாதிகாரி

லிபியாவின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

* மேற்குலகின் கட்டுப்பாட்டுக்குள் அமையும்

  • கருத்துக்கள உறவுகள்

லிபிய மக்களை பொறுத்த வரையில் கடாபி ஒரு தேசிய வீரர்.அந்நாட்டில் தொழில் புரிந்த உறவினர் கூறியதாவது கடாபியை மக்கள் தெய்வமாக தொழுதார்கள் என்று.ஒரு குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தைக்கு வங்கியில் கல்விக்காக பணத்தை லிபிய அரசு இடுவதாக நண்பர் ஒருவர் கூறினார்.எந்தளவில் உண்மை என தெரியவில்லை.

மேற்கு நாடுகளின் அரசுகளும் அவர்களின் மீடியாக்களும் ஒருவரை பயங்கரவாதியாக்க சிந்திக்கும் மனிதன் விடவே கூடாது.அமெரிக்கா செய்த கொலைகளை விட கடாபி பெரிய கொலைகளை செய்யவில்லை. அப்போ எப்படி கடாபி பயங்கரவாதியாக முடியும்??

  • கருத்துக்கள உறவுகள்

----

இத்தனை மாதங்களாக இத்தனை நாட்டுப்படைகளுடனும் ஆயுதங்களுடனும் அவர் நின்றுபிடித்திருக்கின்றார் என்றால் அவருக்கு அவரது மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது.

---

கடந்த மாசி மாதம் 17ம் திகதி, கடாபிக்கு எதிராக புரட்சியாளர்கள் கிளர்தெழுந்த போது...

கடாபிக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா தொடக்கம் சில நாடுகள் குரல் கொடுத்தன,

அதிலும்....மகிந்த தனது நாட்டுக்கு வந்தால்... பாதுகாப்பு கொடுக்கமுடியும் என்று கூறியதாக இங்கு தான் எங்கோ வாசிதேன். காலப் போக்கில் கடாபிக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் வலுவாகவே.... எல்லா நாடும் வில்லங்கத்தை ஏன் விலைக்கு வாங்குவான், என்று கடாபியை கை கழுவி விட்டதாலேயே... கடாபியால் நாட்டை விட்டு தப்பி ஓட முடியாமல்..... கழிவு தண்ணீர் ஓடும் வாய்காலுக்குள் ஒழித்திருந்து இறந்ததை, கடைசிவரை தனது நாட்டில், நின்று போராடியிருக்கிறார் என்று கடாஃபியை போராட்ட வீரானாக விசுகு சித்தரிப்பது சரியல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீல ஸ்ரீ பெர்சியாவுக்கு கெட்ட காலம் பிறக்குது. கெட்ட காலம் பிறக்குது. :)

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னப்பா புரட்சி படை.....மேற்குலகின் ஆதரவுடன் செயல்பட்ட கூலிப்படைக்கு புரட்சிபடை என்று மேற்குலக ஊடகங்கள் சொன்னா நாங்களும் நம்ப வேணுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில் மேற்குலகால் ஏமாற்றபட்ட ஒரு மனிதன்,

லிபியாவின் எதிர்காலத்தை பொறுத்தவரையில் மேற்குலகின் ஆளுமையிலே இருக்கவேண்டிய துரதிஸ்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மாசி மாதம் 17ம் திகதி, கடாபிக்கு எதிராக புரட்சியாளர்கள் கிளர்தெழுந்த போது...

கடாபிக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா தொடக்கம் சில நாடுகள் குரல் கொடுத்தன,

அதிலும்....மகிந்த தனது நாட்டுக்கு வந்தால்... பாதுகாப்பு கொடுக்கமுடியும் என்று கூறியதாக இங்கு தான் எங்கோ வாசிதேன். காலப் போக்கில் கடாபிக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் வலுவாகவே.... எல்லா நாடும் வில்லங்கத்தை ஏன் விலைக்கு வாங்குவான், என்று கடாபியை கை கழுவி விட்டதாலேயே... கடாபியால் நாட்டை விட்டு தப்பி ஓட முடியாமல்..... கழிவு தண்ணீர் ஓடும் வாய்காலுக்குள் ஒழித்திருந்து இறந்ததை, கடைசிவரை தனது நாட்டில், நின்று போராடியிருக்கிறார் என்று கடாஃபியை போராட்ட வீரானாக விசுகு சித்தரிப்பது சரியல்ல.

இதை இப்படிச்சொன்னால் நல்லது என்று நினைக்கின்றேன்.

இங்கு பரவலாக பேசப்படும் விடயம் இது இன்று.

2 வருடங்களுக்கு முன் தனது பெண் பாதுகாப்பாளர்களுடன் சிவப்பு கம்பளவரவேற்புடன் கடாபி பிரான்சுக்கு அழைக்கப்பட்டார். அதன்போது பிரெஞ்சு ஐனாதிபதி பல மில்லியன் பெறுமதியான அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றைக்கொடுத்து கையெழுத்திடக்கேட்டார்.

அதில் உள்ள குழிபறித்தல்களை உணர்ந்த கடாபி தனது நீண்டநாள் நண்பராகிய பிரான்சின் அதிபர் சார்கோசியிடமே முடியாது என்று சொல்லிவிட்டார்.

அன்று பிடித்தது சனியன் கடாபிக்கு. அந்த ஒபப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால் இன்னும் 1000 வருடத்துக்கும் மேலாக கடாபியை பிரெஞ்சுசுப்படைகள் லிபியாவில் காத்துநின்றிருக்கும். ஆனால் இன்று கடாபியை அழிக்க முன்னின்றதே பிரெஞ்சுப்படைகள் தான்.

இன்று பிரெஞ்சு மக்களிடையே ஒரு கேள்வியுண்டு.

அது லிபியாவில் ஆட்சி மாற்றத்துக்காக சார்கோசி மக்கள் பணத்தில் பல மில்லியன்களைச்செலவிட்டுவிட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

அதற்கு அடுத்த வருடம் தேர்தலைச்சந்திக்கவேண்டியுள்ள சார்கோசியின் பதில் என்னவாக இருக்கும்?

லிபியா இத்தனை வருடங்கள் என் கையில் என்பதாகவே இருக்கும்.

அரசியலில் இது எல்லாம் சகசமுங்கோ.........

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை நடப்பதெல்லாம் ஒரு நாடகம். அதன் உள்பக்கம் எமக்கு தெரிந்திருக்கவாய்ப்பில்லை. இத்தனை மாதங்களாக இத்தனை நாட்டுப்படைகளுடனும் ஆயுதங்களுடனும் அவர் நின்றுபிடித்திருக்கின்றார் என்றால் அவருக்கு அவரது மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது. அத்துடன் அவர் பெரும் தவறுகள் செய்ததாக நான் அறியவில்லை. சதாம் உசைனுடன் ஒப்பிடக்கூட முடியாதவர். ஒரு காலத்தில் எமக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்தவர். 41 வருடங்கள் என்பது பெரிதுதான். ஆனால் இவரிடமிருந்து இன்னொருவரிடம் போனால் இது கூட அந்த மக்களுக்கு கிடைக்காது.

விசுகு அண்ணா,

நான் ஜோர்டான்காரரிடம் இருந்து அறிந்து கொண்டதில்.. :unsure:

பதவிக்கு வந்த புதிதில் கடாபி மிகவும் மக்களால் விரும்பப்பட்டவர். ஆனால் ஒரு பத்தாண்டுகள் கழிந்தவுடன் அவரைச் சுற்றியிருந்த புகழ்பாடிகளின் புண்ணியத்தில் அவர் தலைக்குள் போதை ஏறிவிட்டிருந்தது. :huh:

மீதி 31 ஆண்டுகளில்மக்கள் ஆதரவு என்பது ஏறக்குறைய இல்லாமலே போய்விட்டிருந்தது. ஆனால் இவர் "கடாபி" எனும் பழங்குடியில் (Tribe) இருந்து வந்தவர். கடைசியாக அவர் தங்கியிருந்த Sirte எனும் இடம் அந்தப் பழங்குடியினர் பிரதேசம். அங்கே அவருக்கு ஆதரவு ஓரளவு இருந்திருக்கிறது. :unsure:

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம் என்கிற பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது..! :unsure:

டிஸ்கி: நான் தமிழ்சிறி அண்ட் கோ மாதிரிதான் வாக்களிச்சிருக்கிறன்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னப்பா புரட்சி படை.....மேற்குலகின் ஆதரவுடன் செயல்பட்ட கூலிப்படைக்கு புரட்சிபடை என்று மேற்குலக ஊடகங்கள் சொன்னா நாங்களும் நம்ப வேணுமோ?

கனடாவின் சிபிசியில் புரட்சிப்படை எண்டாங்கள்.. நேற்று கடாபி காலமானதும் லிபியப் படைகள் கடாபியைக் கொன்றார்கள் என்று செய்தி வாசித்தார்கள்..! :huh:

நல்லாத்தான் திருப்புறாங்கப்பா பிளேட்டை..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

<p>

----டிஸ்கி: நான் தமிழ்சிறி அண்ட் கோ மாதிரிதான் வாக்களிச்சிருக்கிறன்..!
தமிழ்சிறி & கோ, உலக அரசியலை கரைச்சுக் குடித்தவர்கள்.அவர்கள் சரியான இடத்திலே தான் வாக்குப் போடுவார்கள்.biggrin.giflaugh.gif
  • தொடங்கியவர்

தமிழ்சிறி & கோ - இதுவரை கேள்விப்பட்டது மகிந்த & கோ :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி & கோ - இதுவரை கேள்விப்பட்டது மகிந்த & கோ

மகிந்த & கோ உள்ளூராட்சி அரசியலுக்கு மட்டுமே...bye.gifbiggrin.gif

என்னதான் சொல்லுங்கோ கடாபி தன் நாட்டு மக்களுக்கு நன்மையே செய்துள்ளார்.ஐரோப்பாவிற்கு எரிபொருள் வழங்குவதிலிருந்து ,இப்போ என்ன நடக்கப்போகின்றது, குத்தகைக்கு போட்டி போட்டு ஐரோப்பாவும் அமெரிக்காவும் அங்கே கால் வைக்கப்போகின்றது,யாரால் தடுக்கமுடியும்.உண்மை இப்படியிருக்கும்போது,ஏன் வீணாய்?

  • தொடங்கியவர்

என்னதான் சொல்லுங்கோ கடாபி தன் நாட்டு மக்களுக்கு நன்மையே செய்துள்ளார்.ஐரோப்பாவிற்கு எரிபொருள் வழங்குவதிலிருந்து ,இப்போ என்ன நடக்கப்போகின்றது, குத்தகைக்கு போட்டி போட்டு ஐரோப்பாவும் அமெரிக்காவும் அங்கே கால் வைக்கப்போகின்றது,யாரால் தடுக்கமுடியும்.உண்மை இப்படியிருக்கும்போது,ஏன் வீணாய்?

உலகம் முழுவதுமாக பல பில்லியன்கள் பதுக்கப்பட்டுள்ளன, 60-80 பில்லியன்கள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இவர் இறப்பால் சில மேற்குலக அரசுகள், நிறுவனங்கள் உட்பட பலருக்கு கொண்டாடம். இந்தப்பணத்தையும் மக்களுக்காக செலவிட்டு சில அரசியல் மாற்றங்களையும் கொண்டுவந்திருக்கலாம்.

மேற்குலகால் ஏமாற்றப்பட்ட தலைவர் அதுமட்டுமல்ல அவர்களால் பாவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.