Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பும் இரவு உணவும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரவு உணவுக்கு...

சொதியும், இடியப்பமும் என்றால் நான் வருவேன்.

கொஞ்சக் காலம் பேச்சுவார்த்தைக்கு வரும் புலிகளின் தலைவர்களை கூட்டிச் சென்று தங்கள் அதிகாரத்தைக் காட்டினார்கள்( பொதுவாக அரச மரியாதயில் வராத புலிகளுக்கு ப்ரான்ஸில் தமிழ்கார்கள் 2 பக்க கார்சிக்னலை போட்டுக் கொண்டு முன்னால் வழிகாட்டிய கதை வேற.) இனி தமிழ்கூட்டமைப்பை வைச்சு படம் காட்ட போகிறார்கள்......

இனி என்ன அடுத்தது?????????????

  • தொடங்கியவர்

இது அப்படியான சந்திப்பல்ல. இந்த ஒரு நிகழ்வில் மட்டுமே அவர்களைச் சந்திக்க முடியும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கென இங்கு ஒரு அமைப்பு இருக்கிறது. இந்நிகழ்வு அவ்வமைப்பால் ஒழுங்குபடுத்தியதுதான். படம் காட்டுபவர்கள் ஒழுங்கு படுத்தியிருந்தால் அதனை நான் இங்கு கொண்டு வந்து இணைத்திருக்கமாட்டேன்.

இரவு உணவுக்கு...

சொதியும், இடியப்பமும் என்றால் நான் வருவேன்.

அங்கு கட்டாயம இடியப்பமும் சொதியும்தான். வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்? இடியப்பம் சொதியை மறப்பதற்கு இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகள் செல்லும்....

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிகழ்வை நானும் வரவேற்கிறேன்.

வசதி ஏற்படின் கலந்து கொள்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான நிகழ்வுகள் வரவேற்கப்படவேண்டும் கூட்டமைப்பு தாங்கள் நடாத்திய சந்திப்புக்கள் பற்றி பகிரங்கமாக விவாதிக்கவேண்டும் ஆனால் மேலதிக விபரங்களிற்கும் நுழைவு சீட்டுக்களிற்கும் என்று ஒரு வசனம் உள்ளதே ??? அதுதான் கொஞ்சம் உறுத்துகிறது.. நுழைவதற்கு கட்டணமா??

இல்லை உணவிற்கு கட்டணமா?? உணவிற்கென்றால் பரவாயில்லை கூட்டமைப்பு அன்னதானம் நடத்த வரவில்லைத்தானே

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்கு 100 டொலர்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

சாத்திரி, கூட்டமைப்பு இந்தச் சந்திப்புகளைப் பற்றிய விபரங்களை பகிரங்கமாக விவாதிப்பது நல்லதில்லை. ஏனெனில் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று சொல்ல முடியாது.

இந்நிகழ்வு கூட்டமைப்பிற்கு ஆதரவானவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. செலவுகளைச் சமாளிப்பதற்கும் நிதி சேகரிப்பிற்காகவும் இக்கட்டணம் அறவிடப்படுகிறது.

100 டொலர்கள் எனக்கும் உதைக்கின்றது.

இவ்வாறான சந்திப்புக்கள் மிக மிக அவசியமானவை.

பொருத்தமான கேள்விகளால் பச்சோந்திகளின் அடிவருடித் தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களைக் கேட்டறியலாம். இது ஸ்ரீ லங்கா அரசின் வேலை என்று சொன்னாலும் ஆச்சரியப் படக்கூடாது.

எம்மவரால் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட தமிழ் பல்கலைக்களகத்தைப் பற்றி சம்பந்தனிடம் கேட்டால் - அப்பிடி ஒன்று இருக்குதா என்றும் கேட்பார்? சில அன்பு எச்சரிக்கைகளையும் விடுக்கலாம். அடுத்த தலைமை பற்றி (சம்பந்தனின் வால் சுமந்திரன் தவிர்த்து) , அதன் அவசியம் பற்றி கதைக்கலாம்.

கூட்டமைப்பு கொழும்பில் பலகோடி பெறுமதியான மாளிகை (கட்சி அலுவலகமாம்) வாங்க நினைக்குது, துடிக்குது. தேவை தான்! ஆனால் முதலில் அவர்களது அலுவலகம் மட்டகளப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் அமைய வேண்டும் எனக் கோரலாம். பலர் நில - புலங்களை இலவசமாகவே கொடுப்பார்கள்.

100 டாலர் பெரிய காசில்லை. தாராளமாக கொடுத்து, கொஞ்சம் கூட்டமைப்பைத் தட்டிக் கொடுங்கள். குறிப்பாக அடுத்த தலைமைத்துவம் இப்போதே இனம் காணப்பட வேண்டும் என வலியுறுத்தல் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

பில் கிளின்ரன் ரொரன்டோ பல்கலைகளகத்தில் பேச பல ஆயிரம் டொலர்கள் கொடுத்தவர்களாம்.அது போல தான் சம்பந்தருக்கும் கொடுக்க வேண்டும் போல.பொதுக்கூட்டமும் நடைபெறுகிறதாம். யாரும் போகலாம்.கட்டணம் இலவசம் :) .இடம் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த தகவலின்படி....

Middle field & Finch இல் அமைந்திருக்கும்

கனடா ஐயப்பன் ஆலய மண்டபத்தில் இன்று நண்பகல் 2 மணியிலிருந்து 6 மணிவரை கூட்டமைப்பினர் கலந்துரையாடுகிறார்கள் முற்றிலும் இலவசம். எல்லோருக்கும் அனுமதி உண்டு.

அத்தோடு அங்கு கேள்விகள் தொடுக்கலாம் என்றும் தொடுக்கப்படும் கேள்விகள் எழுத்து மூலம் கொடுக்கப்பட்டால் மாத்திரமே பதிலளிக்கப்படும் என்றும் அறிய முடிகிறது. தயவு செய்து அங்கு கேள்விகளை எழுதிக் கொடுத்துக் கேளுங்கள். அநாகரீகமான சொல்லாடல்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான சந்திப்புக்கள் மிக மிக அவசியமானவை.

பொருத்தமான கேள்விகளால் பச்சோந்திகளின் அடிவருடித் தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களைக் கேட்டறியலாம். இது ஸ்ரீ லங்கா அரசின் வேலை என்று சொன்னாலும் ஆச்சரியப் படக்கூடாது.

எம்மவரால் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட தமிழ் பல்கலைக்களகத்தைப் பற்றி சம்பந்தனிடம் கேட்டால் - அப்பிடி ஒன்று இருக்குதா என்றும் கேட்பார்? சில அன்பு எச்சரிக்கைகளையும் விடுக்கலாம். அடுத்த தலைமை பற்றி (சம்பந்தனின் வால் சுமந்திரன் தவிர்த்து) , அதன் அவசியம் பற்றி கதைக்கலாம்.

கூட்டமைப்பு கொழும்பில் பலகோடி பெறுமதியான மாளிகை (கட்சி அலுவலகமாம்) வாங்க நினைக்குது, துடிக்குது. தேவை தான்! ஆனால் முதலில் அவர்களது அலுவலகம் மட்டகளப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் அமைய வேண்டும் எனக் கோரலாம். பலர் நில - புலங்களை இலவசமாகவே கொடுப்பார்கள்.

100 டாலர் பெரிய காசில்லை. தாராளமாக கொடுத்து, கொஞ்சம் கூட்டமைப்பைத் தட்டிக் கொடுங்கள். குறிப்பாக அடுத்த தலைமைத்துவம் இப்போதே இனம் காணப்பட வேண்டும் என வலியுறுத்தல் நல்லது.

மன்னிக்க வேண்டும் உங்களுக்கு 100 $பெரிய காசில்லையா :unsure:

கூட்டத்திற்கு போனேன் ,போன காரணம்,

நீங்கள் பேச்சுவார்த்தைக்கு போகும் போது சிறிலங்கா என்னசொல்லுது ,இந்தியா என்ன சொல்லுது ,அமெரிக்கா என்ன சொன்னது என்பதை கேட்க .அதற்கான பதில் கிடைக்கவில்லை .சொல்லவும் மாட்டினமாம் சொன்னா சிறிலங்கா தாங்கள் என்ன கதைக்கினம் என அறிந்து விடுமாம்.

மாவை இன்னமும் எழுதுபதுகளில் சிலப்பதிகார கதை சொல்லுகின்றார் ,

சுமேந்திரன் நேரடியாகவும் மறைமுகமாகவும் நாங்கள் இப்படித்தான் செய்வோம் விரும்பினால் நீங்களும் அங்கே வந்து அரசியல் செய்யுங்கோ என்ற பாணி,

சம்பந்தர் அசல் கூட்டணி அமுசடக்கு அரசியல் .போனதில் நம்பிக்கை தந்த விடயம் சர்வதேசம் உண்மையில் தமிழர்களுக்கு ஒரு தீர்வு கொடுக்க சொல்லி சிறிலங்காவை நெருக்கடி செய்கின்றது ,இந்தியா உட்பட .

ராதிகா சிற்சபேசன் பேசினார் .அவர் அரசியலில் மிக உன்னத நிலைக்கு போய்விட்டார் .உண்மை ,நேர்மை ,உறுதி அவர் பேச்சில் அப்படியே தெரிந்தது.அந்த மூவரும் அவரிடம் இருந்து அரசியல் கற்க வேண்டும் .நாடும் ,சூழ்நிலையும் காரணமாக இருக்கலாம் .

அர்ஜுன், தகவலுக்கு நன்றி.என்ன பேசினார்கள் என்பதை தெரிவிக்காமல் இருப்பது நல்லது.சிறிலங்காவை தொடர்ந்து குழப்பத்திலும், அழுத்தத்திலும் வைத்திருந்து பெறவேண்டியதை பெற்றுக்கொள்ள வேண்டியது தான்.சிறிலங்கா , தனது சகாக்களான சீனா,ரஸ்யா,பாகிஸ்தான் போன்ர நாடுகளுடன் சேர்ந்து மாற்று நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க அமெரிக்க பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என்பதை ரகசியமாக வைத்திருத்தல் நல்லது.அத்தோடு அமெரிக்காவும் ஒருவேளை பேசப்பட்டவை ரகசியமாக இருக்கவேண்டும் என கூறி இருக்கலாம்.

  • தொடங்கியவர்

நான் இராப்போசன விருந்திற்குச் சென்றிருந்தேன். அவர்களுக்கு ஊக்கமளிக்கவேண்டுமென்பதற்காக மட்டுமே அங்கு சென்றிருந்தேன். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பயனாக அவர்கள் மேல் எனக்கு இன்னும் மதிப்புக் கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை. அவர்கள் அங்கிருந்து கொண்டு ஒரு துரும்பைத் தூக்கிப் போட்டாலும்கூட அதற்கு நான் மிகவும் மதிப்பளிக்கிறேன். பாதுகாப்பான நாட்டில் இருந்து கொண்டு நாம் செய்யாதவற்றை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் மீது எனக்கு எப்போதும் மதிப்பு இருக்கும்.

அவர்களைப் பலப்படுத்த வேண்டியது எமது கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்களுக்கு முன் நாம் ஒன்றைத்தெரிவு செய்யணும். கூட்டமைப்பு மீதான எமது பலவீனமான பார்வை.

அவர்களிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்கின்றோம்?

அண்ணனை நம்பாததம்பியின் பார்வை எப்படி இருந்தாலென்ன?

சுதந்திரமாகவும் கோடீசுவரனாகவும் வாழும தம்பியின் பார்வைக்கும் வறுமையில் வாடும் அண்ணனின் தேவைகளும் கோரிக்கைகளும் ஒட்டுமா?

எனவே இப்படியான சந்தர்ப்பங்கள் மூலம் நாம்பேசணும். அவர்களுடன் ஒரு இணக்கத்துக்கு வரணும். எவரோ இதனைக்கெடுக்க எடுத்துவிட்ட 100டொலர் கதையில் துவண்டு அவர்களை தூற்றுகிறோம். ஏன் அங்கு போய் இதை அவர்களிடம் நேரடியாக பேசமுடியாது? அப்படி பேசி 100 க்கு பதிலாக 25ஆவது கொடுக்க நாம் தயாராக இல்லாதபோது அவர்களை மட்டும் வன்னிக்கு போ மட்டக்களப்பு போ ஐரோப்பா வா கனடாவா என சொல்ல எமக்கு என்ன தகுதியுண்டு?

அதைத்தான் வாதவூரன் குறிப்பிட்டார். பங்குபற்றி கொஞ்சம் பணத்தையும் கொடுத்து அவர்களுக்கு ஏதாவது சொல்லி அதை அவர்கள் கேட்கும் தகமையை வளருங்கள் என்று.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நான் இராப்போசன விருந்திற்குச் சென்றிருந்தேன். அவர்களுக்கு ஊக்கமளிக்கவேண்டுமென்பதற்காக மட்டுமே அங்கு சென்றிருந்தேன். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பயனாக அவர்கள் மேல் எனக்கு இன்னும் மதிப்புக் கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை. அவர்கள் அங்கிருந்து கொண்டு ஒரு துரும்பைத் தூக்கிப் போட்டாலும்கூட அதற்கு நான் மிகவும் மதிப்பளிக்கிறேன். பாதுகாப்பான நாட்டில் இருந்து கொண்டு நாம் செய்யாதவற்றை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் மீது எனக்கு எப்போதும் மதிப்பு இருக்கும்.

அவர்களைப் பலப்படுத்த வேண்டியது எமது கடமை.

எமது விடிவிற்காக ஈழத்தில் இருந்து இப்ப போராடுபவர்கள்

எனக்கு கூட்டமைப்பில் என்றும் மரியாதை தான் .நாட்டில் இருந்து அரசியல் செய்யும் அவர்களை என்றும் மதித்தே வந்திருக்கின்றேன் .மேலுள்ள எனது பதிவு

நேற்றைய கூட்டத்தை பற்றிய விமர்சனம் தான் அது ஒழிய ,அவர்கள் அரசியல் நிலைப்பாட்டை பற்றியதல்ல.அவர்கள் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட தமிழரின் பிரநிதிகள்.அவர்கள் எடுக்கும் முடிவுகளில் தான் இப்போ தமிழனின் எதிர்காலமும் தங்கியிருக்கு எனலாம் .

ஏதோ ஒன்றை பாடமாக்கி ஒப்பிப்பதுபோல் அவர்கள் பேச்சு இருந்தது.உலகம் இன்று எங்கோ போய்கொண்டிருக்கின்றது ,விடயங்களை நேரடியாக பேசி சொல்ல வந்ததை அடித்து சொல்லி ,சிலவற்றை சொல்லவும் முடியாது என நேரடியாக பேசும் பக்குவம் வரவேண்டும் .

பூடகம் ,பொடி வைத்து பேசுவது சரிவராது .

சிறிலங்கா அரசிடம் ஒன்றும்,இந்தியாவிடம் ஒன்றும் ,சர்வதேசத்திடம் ஒன்றும் , நாட்டு மக்களுக்கு ஒன்றையும் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஒன்றையும் சொல்லி ஏமாத்துவார்களாயின் ,எல்லாம் முடிந்த பின் திட்டி பிரயோசனம் இல்லை .முன்னர் போல் இல்லை இப்போ இருக்கும் வசதிகளை வைத்து அனைவருமே உலகில் என்ன நடக்கின்றது என அறிந்து வைத்திருக்கின்றார்கள் .சும்மா பொதுமகனுக்கு கூட பதின்மூன்றாம் திருத்த சட்டத்தில் இருந்து சுயநிர்ணய உரிமை வரை தெரியும்.

கடைசி மேலோட்டமாக நாம் எங்கே நிற்கின்றோம் என்றாவது சொல்லியிருக்கலாம் .சர்வதேசம் ஒன்றை செய்யபோகின்றதென்றால் அது சிறிலங்காவிற்கு தெரிவதை பற்றி அக்கறை படாது ,தான் செய்வதை செய்தே தீரும்

.

கூட்டத்திற்கு போனேன் ,போன காரணம்,

நீங்கள் பேச்சுவார்த்தைக்கு போகும் போது சிறிலங்கா என்னசொல்லுது ,இந்தியா என்ன சொல்லுது ,அமெரிக்கா என்ன சொன்னது என்பதை கேட்க .அதற்கான பதில் கிடைக்கவில்லை .சொல்லவும் மாட்டினமாம் சொன்னா சிறிலங்கா தாங்கள் என்ன கதைக்கினம் என அறிந்து விடுமாம்.

மாவை இன்னமும் எழுதுபதுகளில் சிலப்பதிகார கதை சொல்லுகின்றார் ,

சுமேந்திரன் நேரடியாகவும் மறைமுகமாகவும் நாங்கள் இப்படித்தான் செய்வோம் விரும்பினால் நீங்களும் அங்கே வந்து அரசியல் செய்யுங்கோ என்ற பாணி,

சம்பந்தர் அசல் கூட்டணி அமுசடக்கு அரசியல் .போனதில் நம்பிக்கை தந்த விடயம் சர்வதேசம் உண்மையில் தமிழர்களுக்கு ஒரு தீர்வு கொடுக்க சொல்லி சிறிலங்காவை நெருக்கடி செய்கின்றது ,இந்தியா உட்பட .

ராதிகா சிற்சபேசன் பேசினார் .அவர் அரசியலில் மிக உன்னத நிலைக்கு போய்விட்டார் .உண்மை ,நேர்மை ,உறுதி அவர் பேச்சில் அப்படியே தெரிந்தது.அந்த மூவரும் அவரிடம் இருந்து அரசியல் கற்க வேண்டும் .நாடும் ,சூழ்நிலையும் காரணமாக இருக்கலாம் .

இந்த சுமந்திரன் போக்கு ஆரம்பத்தில் இருந்தே சந்தேகத்துக்கு இடமானது மாவை ஏற்க்கனவே சில சச்சைகளுக்குள் உள்ளானவர் இவர்கள் தமிழ் மக்கள் பிரச்சனையை பேசுகிறார்களா ?அல்லது அவர்களின் தனிப்பட்ட பிரச்சனையை பெசுகின்றார்களோ ?இதற்கிடையில் இவர்களின் பின்னல் ஒரு கூட்டம்.

அர்ஜுன் உங்களுக்கு ஒரு பச்சை

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கூட்டமைப்பில் என்றும் மரியாதை தான் .நாட்டில் இருந்து அரசியல் செய்யும் அவர்களை என்றும் மதித்தே வந்திருக்கின்றேன் .மேலுள்ள எனது பதிவு

நேற்றைய கூட்டத்தை பற்றிய விமர்சனம் தான் அது ஒழிய ,அவர்கள் அரசியல் நிலைப்பாட்டை பற்றியதல்ல.அவர்கள் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட தமிழரின் பிரநிதிகள்.அவர்கள் எடுக்கும் முடிவுகளில் தான் இப்போ தமிழனின் எதிர்காலமும் தங்கியிருக்கு எனலாம் .

ஏதோ ஒன்றை பாடமாக்கி ஒப்பிப்பதுபோல் அவர்கள் பேச்சு இருந்தது.உலகம் இன்று எங்கோ போய்கொண்டிருக்கின்றது ,விடயங்களை நேரடியாக பேசி சொல்ல வந்ததை அடித்து சொல்லி ,சிலவற்றை சொல்லவும் முடியாது என நேரடியாக பேசும் பக்குவம் வரவேண்டும் .

பூடகம் ,பொடி வைத்து பேசுவது சரிவராது .

சிறிலங்கா அரசிடம் ஒன்றும்,இந்தியாவிடம் ஒன்றும் ,சர்வதேசத்திடம் ஒன்றும் , நாட்டு மக்களுக்கு ஒன்றையும் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஒன்றையும் சொல்லி ஏமாத்துவார்களாயின் ,எல்லாம் முடிந்த பின் திட்டி பிரயோசனம் இல்லை .முன்னர் போல் இல்லை இப்போ இருக்கும் வசதிகளை வைத்து அனைவருமே உலகில் என்ன நடக்கின்றது என அறிந்து வைத்திருக்கின்றார்கள் .சும்மா பொதுமகனுக்கு கூட பதின்மூன்றாம் திருத்த சட்டத்தில் இருந்து சுயநிர்ணய உரிமை வரை தெரியும்.

கடைசி மேலோட்டமாக நாம் எங்கே நிற்கின்றோம் என்றாவது சொல்லியிருக்கலாம் .சர்வதேசம் ஒன்றை செய்யபோகின்றதென்றால் அது சிறிலங்காவிற்கு தெரிவதை பற்றி அக்கறை படாது ,தான் செய்வதை செய்தே தீரும்

.

பேசியவை எதாவது இராஜதந்திர காரணமாக மறைக்கபடலாம்............

தமது கட்சி இலட்சியம் கொள்கை இதுகள் பற்றி ஏதாவது பேசினார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.