Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றத்தை ஒதுக்கிவிட்டு அரசியல் தீர்வை பெற்றெடுங்கள் - ஒபாமா நிர்வாகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

amerika%20kuuddamaippu.jpg

சிறீலங்கா அரச தலைவர்கள் மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு, தமிழர்களுக்கு நீதியான தீர்வு ஒன்றை வென்றெடுப்பதில் கவனம் செலுத்தும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒபாமா நிர்வாகம் எடுத்துக் கூறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (28-10-2011) மூன்றாவது நாளாகவும் இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்புக்கள் தொடர்ந்தன என்று கூட்டமைப்பினர் கூறினர். சந்திப்புகளில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து அனேகமாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டமைப்பினருடனான சந்திப்புக்கள் அனைத்தையும் ராஜாங்கத் திணைக்களமே ஏற்பாடு செய்தது என்பதால் அங்கேயே அவர்களது சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின்போது, சிறீலங்கா அரசுடன் பேசி தீர்வைப் பெறுவதில் அதிக அக்கறை காட்டுமாறு கூட்டமைப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

போர்க் குற்றச்சாட்டு விடயத்தில் தமிழர் தரப்பு பிடிவாதம் பிடிக்காமல் அதனைப் பயன்படுத்தி தமக்கான அரசியல் தீர்வை சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் பெற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

போர்க் குற்றச்சாட்டால் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள சிறீலங்கா அரசின் பலவீனங்களைப் பயன்படுத்தி தமிழர்களின் நலன்களை வென்றெடுக்கப் பாருங்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த கருத்து தெரிவித்துள்ளனர்.

தாயகத்தில் உள்ள தமிழர்களின் அசைக்க முடியாத பிரதிநிதிகள் என்ற வகையில், தமிழர்களின் தலைமைத்துவ வகிபாகத்தை ஈழத் தமிழர்கள் மத்தியிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் கூட்டமைப்பு பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அமெரிக்க அதிகாரிகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வந்தது

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.eeladhesa...ndex.php?option

போர்க்குற்றத்தை ஒதுக்கிவிட்டு அரசியல் தீர்வை பெற்றெடுங்கள் - ஒபாமா நிர்வாகம்

அதைப்பற்றி முடிவெடுக்க வேண்டியவர்கள் தமிழர்களே அமேரிக்கா கிடையாது

போர்க்குற்றத்தை ஒதுக்கிவிட்டு அரசியல் தீர்வை பெற்றெடுங்கள் - ஒபாமா நிர்வாகம்

அதைப்பற்றி முடிவெடுக்க வேண்டியவர்கள் தமிழர்களே அமேரிக்கா கிடையாது

தமிழர்கள் முடிவெடுத்து என்ன பயன்?? ஆகப்போவது எதுவுமேயில்லை.

அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் மனது வைத்தால்தான் போர் குற்றம் - தமிழர்களிற்கான தீர்வு எல்லாமே கிடைக்கும்.

எமக்குத் தேவையானது கிடைக்க இவற்றை நோக்கி எமது காய் நகர்த்தல்களைச் செய்வதே ஒரே வழி.

அதைவிடுத்த அமெரிக்காவை நம்பேலாது, இந்தியா எதிரி எண்டு இருந்தம் எண்டா எமக்குக் கிடைக்கப்போவது ஒண்டுமே இல்லை.

நீங்கள் சொல்வது சரி இருந்தாலும் மற்றைய நாடுகளின் தயவுடன் பெறப்படும் சுதந்திரம் உண்மையான சுதந்திரமாக அமையுமா ? சிலவிடயங்களை சாதிக்கலாம் என எவருடனும் சேரலாமா ?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி இருந்தாலும் மற்றைய நாடுகளின் தயவுடன் பெறப்படும் சுதந்திரம் உண்மையான சுதந்திரமாக அமையுமா ? சிலவிடயங்களை சாதிக்கலாம் என எவருடனும் சேரலாமா ?

சுதந்திரத்துக்கான பாதை எதுவும்தெரியாதபோது

கிணற்றுக்குள் விழுந்தவன் என்ன செய்வான்?

அதையே தமிழன் இன்று செய்யணும்.

வெளியில் வந்து களைப்பாறியதும் மதியைப்பயன்படுத்தணும்.

நான் நினைக்கிறேன் சிலரது தனிப்பட்ட நோக்கங்கள் தேவைகளுக்காக இந்தச் செய்தி திரித்து எழுதப்பட்டிருக்கிறது என்று!

தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேச அரங்கிற்கு வருவதையிட்டு சிறீலங்கா அரசு அதிகளவுக்கு கிலி கொண்டுள்ளது என்பது என்பதே உண்மை.

விடுதலைப்புலிகளுக்கு பயங்கரவாத முத்திரை குத்தியதை போல தமிழ் தேசிய கூட்டமைப்பக்கு செய்ய முடியாது என்பதே சிறீலங்கா இன்று எதிர் கொள்ளும் நெருக்கடி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் சரி பிழைகளுக்கு அப்பால் எமக்கு கிடைக்கக் கூடிய சரியான சந்தர்பங்களை நாங்கள் உரிய முறையில் பயன்படுத்த நாங்கள் உந்து சக்தியாக இருக்க வேண்டுமே தவிர அதற்கு நந்தி மாதிரி முட்டுக் கட்டையாக இருக்கக் கூடாது.

உலக ஒழுங்கு என்பது தவிர்க்க முடியாதபடி தெற்காசியவிலே மையங்கொண்டுள்ளது.கடந்த நூற்றாண்டில் ஐரோப்பாவை மையங்கொண்டிருந்த நெருக்கடிகள் தவிர்க்க முடியாதபடி இரண்டு உலகப் போரையும் அதன் மூலம் பல நாடுகளின் விடுதலையையும் கொண்டுவந்தன.

இந்த நூற்றாண்டின் நெருக்கடியின் குவிமையம் இந்து சமுத்திரத்தில் தான் உள்ளது.

தனது நெருங்கிய நண்பர்களான சூடானின் பசீரையும் லிபியாவின் கடாபியையும் சீனா கைவிட்டது போல் மகிந்தரையும் கைவிடும் நிலை நிச்சயம் வரும்.

ஓரு விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படும் போது போராடிய தரப்புக்கு இரண்டு தெரிவுகள் தான் விடுப்படும்.

ஓன்று சரணாகதி அரசியல்

மற்றது சமரச அரசியல்.

மக்களுக்காக உண்மையாக பேராடிய தரப்பு ஒருபோதும் சரணாகதி அரசிலை ஏற்றுக் கொள்ளாது. ஆனால் அது தான் மீள் எழுச்சி கொள்வதற்காக சர்வதேச சமூகத்துடன் (எதிரியுடன் அல்ல என்பது இதில் முக்கியம்) சமரச அரசியலுக்கு செல்வது வழக்கம். இன்றைக்கு விடுதலைப் போரிலே வென்ற பல விடுதலை இயக்கங்கள் இதைத்தான் செய்திருக்கின்றன.

இவ்வாறான சந்தர்பத்தில் எதிரி திட்டமிட்டு எதிர்ப்பு அரசியல் இருப்பதை போன்ற ஒரு மாயையை உருவாக்குவான். அப்போது தான் விடுதலைப் போராட்டத்தின் மீள் எழுச்சியை சிதைத்து தடுக்க முடியும்.

இதையிட்ட கவனம் தான் இப்போது எங்களுக்கு தேவை?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை

நன்றி நவம் தங்கள் கருத்துக்கும் நேரத்திற்கும்

உங்கள் கருத்திற்கு நன்றி நவம். இந்தத்திரிக்குப்பொருத்தமான சிந்திக்க வைக்கும் தங்கள் கருத்திற்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி நாங்கள் போர் குற்றத்தை கைவிடுகின்றோம். குறைந்த பட்சம் பதிலுக்கு நீங்கள் தமிழர் வாழும் பிரதேசங்களில் இருந்து சிங்கள இராணுவத்தை முற்றாக வெளியேற்றி, ஈபிடிபி, கருணா ஆயுதக் கும்பல்களின் ஆயுதங்கள் முற்றாகக் களைந்து அவற்றையும் தமிழர் வாழும் பிரதேசங்களில் இருந்து அப்புறப் படுத்தி, மீண்டும் இராணுமோ அல்லது இந்த ஆயுதக் குழுக்களோ ஆக்கிரமிக்காமல், ஐ.நா படையையோ அல்லது வேறு ஒரு அமைப்பையோ நிலை கொள்ள வழிவகை செய்வீர்களா? ... இவ்வாறு தில்லாக கேட்டிருந்தால் த.தே.கூவுக்கு நான் தலை வணங்குகின்றேன்.

'போர்க்குற்ற' துருப்பை கைவிட்டால் தமிழர்களுக்கான அதியுச்ச தீர்வொன்று வருமென்றால் நல்லதே. நம்மட சனம் தற்போதுள்ள இழிநிலையில் இருந்து மீண்டு எழ வேண்டும். வடக்குக் கிழக்கு தமிழர்களின் பூர்வீக பூமி என்பதை தக்க வைக்க வேண்டும்.

கைவிட்டாலும் தீர்வு வருமென்பது என்ன நிச்சயம்? அதனை உறுதிப்படுத்த அமெரிக்காவுடன் பேசும் தற்போதுள்ள தலைமை, தீர்வை அமெரிக்காவின் ஊடாக பெற வேண்டும்.

அதன் பின் புலம் பெயர்ந்தவர்கள் போர்க் குற்றத்தை தூக்கிப் பிடிக்கலாம். அதற்கான வேறு தளங்களையும் உருவாக்க வேண்டும்.

கிடைக்கும் சந்தர்ப்பங்களை பாவிப்பது மிக முக்கியம்.

உங்கள் கருத்திற்கு நன்றி நவம். இந்தத்திரிக்குப்பொருத்தமான சிந்திக்க வைக்கும் தங்கள் கருத்திற்கு.

Version:1.0 StartHTML:0000000167 EndHTML:0000001415 StartFragment:0000000454 EndFragment:0000001399

நன்றி நண்பர்களுக்கு

இங்கே இருட்டின் நிறம் கொண்ட மின்னஞ்சல் பத்திரிகை ஒன்றை நீங்கள் பர்த்திருக்கலாம்.இந்த அனாமதேய பத்திரிகை எதிர்ப்பு அரசியலை பேசிக் கொள்வதாக சிலர் நினைக்கிறார்கள்; என்னைப்பற்றி இரண்டொரு தடவை இந்தப் பத்திரிகை அவதூறு பிரச்சாரம் செய்த பொது நான் இங்குள்ள சைபர் கிறைம் பிரிவில் முறையிட்டேன்.

அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் ஐரோப்பாவில் இருந்து118 ஐபி முகவரிகளுக்கு ஊடாக 3831 தடவையும் சிறீலங்கா தவிர்ந்த உலகளவில் 267 ஐபி முகவரிகளுக்கு ஊடக 6458 தடவையும் அனுப்பி வைக்கப்பட்டதும் சிறீலங்கா இருந்து மட்டும் 3 ஐபி முகரிகளுக்கு ஊடக (இவை சிறீலங்கா அரசின் பெயரிலான பதிவில் உள்ளவை) 25472 தடவையும் மற்றவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது கண்டறிப்பட்டுள்ளது.

சரி நாங்கள் போர் குற்றத்தை கைவிடுகின்றோம். குறைந்த பட்சம் பதிலுக்கு நீங்கள் தமிழர் வாழும் பிரதேசங்களில் இருந்து சிங்கள இராணுவத்தை முற்றாக வெளியேற்றி, ஈபிடிபி, கருணா ஆயுதக் கும்பல்களின் ஆயுதங்கள் முற்றாகக் களைந்து அவற்றையும் தமிழர் வாழும் பிரதேசங்களில் இருந்து அப்புறப் படுத்தி, மீண்டும் இராணுமோ அல்லது இந்த ஆயுதக் குழுக்களோ ஆக்கிரமிக்காமல், ஐ.நா படையையோ அல்லது வேறு ஒரு அமைப்பையோ நிலை கொள்ள வழிவகை செய்வீர்களா? ... இவ்வாறு தில்லாக கேட்டிருந்தால் த.தே.கூவுக்கு நான் தலை வணங்குகின்றேன்.

சீறீலங்காவின் மீதான போர்குற்றம் மற்றும் இனப்படுகொலைக் குற்றங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைவிடவும் முடியாது ஆமெரிக்கா நினைத்தாலும் அதை தடுத்து விடவும் முடியாது. சிறீலங்காவின் நண்பர்கள் தற்காலிகாக வேண்டுமானால் அவர்களை காப்பாற்றலாம். ஆனால் நிரந்தரமாக அது முடியாது என்பதே உலக வரலாறு சொல்லும் உண்மை

அறிக்கை வரும் வரையில் காத்திருக்கலாம். பேசி தீர்க்க வேணும் என்பது பிளேக் பலதடை கூறிய விடயம். அதை கூற இப்படி ஒரு பேச்சு வார்த்தைகளுக்கு திரும்ப அழைத்தவர்களயின் அது அமெரிக்கர்களின் முட்டாள்தனம்.இப்படி செய்தி கூட்டமைபை கஸ்டத்தில் போடவாயிருக்கலாம். அவர்கள் வழமையில் பேசுபவற்றை வெளியில் சொல்வதில்லை. அதை பாவித்து ஆரம்பிக்கபடும் விஷம பிரசாரமாயிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

போர்குற்றம் நிருபிக்க படும் இடத்து பாரிய வெள்ளிச்சம் உருவாகும்.

காரணம் இதில் இடுபட்டவர்கள் யார் என்பதுதான். ஒரு நாட்டின் அரசு அதன் இராணுவம் என ஒட்டுமொத்த சிங்களமுமே தமிழர்களை அழித்தார்கள் என்பது எளிதாக நிருபிக்க படும் இடத்து கடந்த முப்பது வருடமாக நாம் அனுபவித்த துன்பத்தை வெளியுலகிற்கு ஆதரங்களுடன் கொண்டு வந்து நிருபிக்க முடியும். அதன் ஊடாகவே எமது வாழ்விற்கான பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு நிரந்தர தீர்வை வலியுறுத்தமுடியும். தவிர யாராவது ஒருவர் தமிழர்களுக்கு ஒரு தீர்வை கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் சிங்களத்தை அடிபணிய வைக்க இருக்கும் ஒரே மூலமும் இதுதான். சிங்களம் என்பது ஒரு சுதந்திர அரசு அதை எளிதாக புறம் தள்ளி தமிழருக்கு ஒரு தீர்வை ஒரு மூன்றாம் தரப்பால் முன்வைக்க முடியாது. அக போர்குற்ற விசாரணையே இதற்கு ஒரு வாசல் கதவாக இருக்க முடியும்.

ஆனல் துரதிர்ஷ்ட வசமாக இதில் ஒன்றுமே அவதட்கு இல்லை.

தற்போதைய பொருளாதார வீழ்ச்சி அதனூடு புறப்பட்டுள்ள சீன பூதம் இவைகளே தற்போதைய சினிமா காட்சிகளின் தயரிப்பளர்களகவும் டையரேக்டோர்களகவும் இருக்கின்றன என்பதே உண்மை. போர்குற்றம் என்று கோட்டுக்கு போய் சிங்களத்தை மட்டும் தண்டிக்க முடியாது இதை புரிந்து கொள்பவர்களாக உயர்மட்ட கீழ்மட்ட தமிழர்கள் இல்லை. ஒருவேளை மகிந்தவை சர்வதேச கோட்டில் நிறுத்தினால் இந்தியாவும் கூண்டில் ஏறவேண்டும் என்பதை சுலபமாக மறந்துவிடுவதே அதற்கான காரணம். இந்தியாவின் குற்றங்களையும் கொண்டுவந்தால் மஹிந்தவிட்கான தண்டனை குறைய வாய்ப்பிருக்கும்போது .............. அதை மறைத்து தான் மட்டும் தண்டனையை பெறக்கூடிய நல்லவனாக மஹிந்த இல்லை?

ஆக தற்போதைய சுழலில் இந்திய இதை விரும்புமா?

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது இருப்புக்கே அல்லாடும் நேரத்தில் தமிழருடைய விடிவு? இது சாத்தியமா? சம்மந்தன் போன்றவர்கள் தமது இருப்பை இழந்து தமிழருக்காக போராடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உங்களிடம் இருந்தால் உங்களை விட அதி சிறந்த ஏமாளி யாரும் இல்லை.

சம்மந்தன் போன்றவர்கள் கருணாநிதியிலும் கீழானவர்கள் (ஒரு வேளை மேலாக இருந்தாலும் அவர்களால் ஒன்றும் புடுங்க முடியாது என்பதும் உண்மை) எதாவது மேடை ஏறி நாடகம் போட்டு தமது இருப்பை உறுதிசெய்ய தெரிந்தவர்கள். நல்ல அரசியல் நடிகர்கள். அரசியல் தீர்வு மூலமே நாம் ஒரு விடுதலையை அடைய முடியும் என்பதை புலிகள் பலமுறை சொன்னார்கள் யாருக்கும் விளங்கவில்லை. திரும்ப திரும்ப அரசியல் தளங்களை அமைத்தார்கள் இந்தியாவிற்கு அது தெரிந்துதான் தொடர்ந்தும் எல்லாவற்றையும் அழித்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பை கூட ஒரு தொலைநோக்கு பர்வையீலேயே உருவாக்கினார்கள் ஆனல் தளம் வேறுவிதமாக அமைந்துவிட்டது இளையோரிடம் அதன் தலைமை சில நாட்களில் சென்றுவிடும் என்ற எதிர்பார்ப்பு புலிகளிடம் இருந்தது................. இனி சம்மந்தன் செத்தாலும் சாகவில்லை என்று அவரது உடலை வைத்தே இந்தியா அரசியல் செய்யும்.

சீனாவை புறம் தள்ள அமெரிக்க எல்லா இடமும் ஓடுகின்றது ........... அதன் ஒரு அங்கமே தற்போதைய ரி என் ஏ சந்திப்பு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இலவச லாப்டாப் கம்பியுட்டர்களை மாணவருக்கு கொடுப்பதாக அறிவித்தார் அதன் வேலை திட்டம் இப்போது தொடங்கி உள்ளது. அதில் இலவச ஒபரேடிங் சிஸ்டமான லீநேக்சை பதிப்பதாக இருந்தது. அதை மறித்து மைக்ரோசொப்ட்வரை (விண்டோஸ்) நிறுவுவதற்கான பேச்சுக்கு ஆகவே ஹிலரி ஜெயலலிதாவை சந்தித்தார். அது கைகூடி இப்போது அந்த கொம்பியுட்டர்கள் விண்டோசுடனேயே வெளிவர இருக்கின்றது. இந்திய கொடுத்த நிகழ்ச்சி நிரலின் பகுதியாகவே த தே கூ வை அமெரிக்கா அழைத்துள்ளது இதன் உள்நோக்கமே போர்குற்ற விசாரணையை கைவிடுமாறு நேரடியாக கேட்காது மறைமுகமாக வேறு நாடகம் ஒன்றில் ஈடுபடுத்தினால் அது மறக்க பட்டுவிடும் என்பதே அதன் நோக்கம்.

போர்குற்ற விசாரணை முன்னெடுக்க படுவது என்பது ஒவ்வரு தமிழனுடைய உழைப்பில் இருக்கிறது எங்களது அயராத பரப்புரை ஒன்றுதான் ஒரே வழி. அண்ணன் அகூதா போன்று நாம் ஒவருவரும் உழைத்தால் அது நிச்ச்ச்சயம் சாத்தியம்.

தவிர தா தே கூ அவர்கள் பாவபட்டவர்கள் அவர்களால் இப்படியான மேடை ஏற முடியுமே தவிர வேறு எதை செய்யமுடியும்? சும்மா எதிர்பார்புகளை அள்ளி கொட்டிவிட்டு அவர்களை திட்டி தீர்ப்பதில் என்ன இருக்க போகின்றது. அரசியல் ரீதியாக முன்னெடுப்புகளை செய்யும் நிலையில் தற்போதைய உலகு இல்லை .............. சிங்களவனின் அதிர்ஷ்டம் போற்குற்றத்தில் இந்த்யாவையும் கூட்டி வைத்துள்ளான். இந்தியாவில் ஒரு அரசியல் மாற்றம் வரும்வரையில் காத்திருப்பதை தவிர வேறு வழி இப்போது இலை. இருக்கும் ஒரே வழி பரப்புரை...............

அநேகமாக இத்தகைய முடிவு எடுக்கப்படலாம் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். கூட்டமைப்பினரை அழைத்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஈழத்தில் வாழும் தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதென்பது புலம் பெயர் தமிழரின் ஆதிக்கத் தனத்தை மட்டுப்படுத்த அல்லது அகற்றுவதற்கான செயற்பாடு என்று கூறியிருந்தேன். அதற்கான அத்திபாரம் இடப்பட்டுள்ளது.

போர்க்குற்றம் ஓரங்கட்டப்படும் நிலைக்கு வந்துள்ளது இதிலிருந்து தெளிவாகின்றது. ஆனால் தாயகத்தில் வாழும் தமிழர்களுக்கு இந் நாடுகள் என்ன பெற்றுக் கொடுக்கப்போகிறது என்பதில் தெளிவில்லை. இங்குதான் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் பெறப் போகின்றது.

போர்க்குற்றத்தை ஒதுக்கிவிட்டு அரசியல் தீர்வை பெற்றெடுங்கள் - ஒபாமா நிர்வாகம்

இத்தலைப்பில் இணைக்கப்பட்டிருக்கும் முதன்மைச் செய்தி தமிழின விரோதிகளின் நலனைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ளது. 70 % ஆன செய்தி தவறானது. இவ்வாறான செய்திகளை இணைத்து என்ன நடக்கிறது என்பதை அறியும் முயற்சியாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் தலைப்பை பார்த்து விட்டு அப்படி இருக்காது என்று வந்து பார்த்தபோது இரண்டு விடயங்கள் உறுத்தியது.

ஒன்று இந்த தகவலுக்கு ஆதாரம் ஒன்றும் இல்லை. மற்றும் தலைப்பை குழப்பும் இந்த வரி.

"போர்க் குற்றச்சாட்டு விடயத்தில் தமிழர் தரப்பு பிடிவாதம் பிடிக்காமல் அதனைப் பயன்படுத்தி தமக்கான அரசியல் தீர்வை சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் பெற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்."

எப்படியப்பா பிடிவாதம் பிடிக்காமல் அந்த விடயத்தை வைத்து ஆதாயம் பெறலாம்?

பள்ளிக்கு போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் தானே தீபாவளிக்கு வெடிக்கு காசு வறுகலாம்?

இவ்வறான தலைப்புக்கள் மிகவும் திட்டமிட்ட ரீதியில் இங்கு இணைக்கப்படுகின்றன.இதன் பின்னணியில் சிறிலங்கா இந்திய அரசுகளின் ஏவலாளர்கள் இருக்கிறார்கள்.

முதலில் கூட்டமைப்பு போர்க்குற்றச்சாட்டுக்கள் பற்றி இதுவரை பேசியது கிடையாது.கூட்டமைப்பால் சிறிலங்காவில் இருந்து கொண்டு அது பற்றிப் பேச முடியாது.போர்க்குற்றச்சாட்டுக்கள் மனித உரிமைகள் சார்ந்த விடயம் அதை முன் எடுப்பதற்க்கு மனித உரிமை அமைப்புக்கள் ஊடகங்கள் புலம் பெயர் தமிழர்கள் அவர்களின் ஆதரவை நாடி நிற்க்கும் புலம் பெயர் அமைப்புக்கள் அரசியற் கட்ச்சிகள் இருக்கின்றன.

ஆகவே கூட்டமைப்பு இதில் தலையிடாது அதற்கான அவசியமும் இல்லை.அப்படிக் கூட்டமைப்பு எதாவது அறிக்கை விட வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட நான் மேலே கூறிய தரப்புக்களுடன் பேசியே ஒரு முடிவுக்கு வர முடியும்.

ஆனால் அமெரிக்க மேற்குலக அரசுகள் சிறிலங்காவுடன் ஆன பேரம் பேசுதலுக்கு இதனை உபயோகிப்பார்கள்.அவர்களாற் கூட இனி போர்க்குற்றத்தைக் கிடப்பில் போட முடியாது.அது மகிந்தவின் கழுத்தில் தொங்கும் நிரந்தரமான கத்தி.அந்தக் கத்தியயை அமெரிக்காவோ அல்லது மேற்குலகமோ தமக்குத் தேவையானவற்றைப் பெற மட்டும் கிழே போடாது.அப்படிப் போட்டால் மகிந்த இவர்கள் சொல்வதைக் கேட்கப் போவதில்லை என்று அவர்களுக்கு நன்கு தெரியும்.மகிந்த பதவியில் இருந்து இறக்கப்படும் போது அவர்கள் கத்தியைச் சொருவுவார்கள்.

இதில் தமிழர் தரப்புடன் அம்ரிக்கா பேசுவது தமது நலங்களைப் பாதுகாக்கும் நோக்கில். ஆகவே இதில் நாங்கள் கத்தியை எந்தப் பலனும் இன்றி இறக்க முடியாது என்பதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.இதில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.கூட்டமைப்புத் தலைவர்கள் இதனைப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புவோம்.

நாங்கள் கத்தியை அகற்றுவோம் என்று மகிந்தவுக்கு போக்குக் காட்டுவர்கள் ஆனால் அவர்கள் கத்தியை இறக்கமாட்டர்கள்.ஏனெனில் சீவிய கத்தி எப்போதும் உறையுள் இருக்கும்.கத்தி கழுத்துக்க நிக்கும் மட்டும் தான் மகிந்த சொற்கேட்பான் எண்டு மேற்குலகிற்கு நன்கு தெரியும்.

இதில் கூட்டமைப்பு பேரம் பேசி எடுக்க வேண்டியவை,

தமிழர் தாயகத்தின் நிலம், நீர், ஆகாயம் மீதான தமிழரின் உரித்து.

தமிழர் தாயகத்தில் இருந்து சிறிலங்காப் படை விலக்கம்.

தமிழர் தாயகத்தின் எல்லைகள்.

தமிழ்த் தேசிய அரசின் அதிகாரங்கள்.

1) யுத்தத்திற்குப் பின்னரான புனரமைப்பு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் (Post war reconstruction and reconciliation) ரீதியானதும் நேர்மையானதுமான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் புனரமைப்பு நடவடிக்கைகளில் அனேகமானவை வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை நீண்ட காலத்திற்கு நிலை நிறுத்துவதற்கும் சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதற்கானதுமாகவே காணப்படுகிறது.

2) நீதியானதும், நேர்மையானதுமான புனரமைப்பு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் கடந்த 2 வருட காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் பேச்சுவார்த்தை மூலமான தீர்வு காண்பதற்கான சாதகமான சூழ்நிலை இன்று தோன்றியிருக்கும், ஆனால் இன்று இந்த வாய்ப்பு தவறவிடப்பட்டு, நிலைமை சிக்கலடைந்திருப்பதால், தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் அரசியல் தீர்வு முன்வைக்கப்படுவது, அர்த்தமுள்ள ஒரு புனரமைப்பு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளினூடாக நிலையான சமாதானம் ஏற்படுவதற்கு முன் நிபந்தனையாக அமைந்திருக்கிறது.

3) அத்தகைய எந்தொரு அரசியல் தீர்வும் தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைவதுடன், சர்வதேச ரீதியான சுயாதீனமான போர்க்குற்ற விசாரணை ஒன்றினூடான இடைக்கால நீதி (Transitional Justice) பெற்றுக் கொள்வதனூடானதாக அமைய வேண்டும். நீதி இல்லாத எந்ததொரு அரசியல் தீர்வும் நிலையான சமாதானத்தை கொண்டு வரப்போவதில்லை.

4) யுத்தத்திற்குப் பின்னர் வடக்கு- கிழக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பல செயற்பாடுகள், சுதந்திரத்திற்குப் பின்னர் சிங்கள அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொண்ட பாரபட்சமானதும் அவமானத்தை ஏற்படுத்துவதுமான செயற்பாடுகளுக்கு ஒப்பானதாகக் காணப்படுகிறன்றன. இது மீண்டும் ஒரு வன்முறை ஏற்படுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.

5) வடக்கு-கிழக்கில் இருந்து இராணுவத்தினர் வாபஸ் பெறப்பட வேண்டியது, அவசியமானதாக இருந்தாலும், நிலையான சமாதானம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, மிகையான இராணுவக் கட்டமைப்புக்களை இல்லாமல் செய்வதன் மூலம் இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட வேண்டும்.

6) நிலையானதும், நீதியானதுமான அரசியல் தீர்வுக்கு கணிசமான காலம் எடுக்கும் என்பதால், சுயநிர்ணய உரிமை அடிப்படையில், இடைக்கால தன்னாட்சி நிர்வாக கட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டு தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும் வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டும். அத்துடன், தமிழர் தாயகப் பகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்பட்டு, அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு தமிழ் மக்கள் தமது பூர்வீக இடங்களில் வாழ்வதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும். அத்துடன், மரபுரீதியாக தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களில் அவர்களை விரட்டியடித்துவிட்டு உருவாக்கப்பட்ட சிங்கள குடியேற்றங்கள், இராணுவ மயமாக்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு தமிழ் மக்கள் மரபுரீதியாக வாழ்ந்த பிரதேசங்களில் தமது வாழ்க்கையை மீளவும் ஆரம்பிக்க தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=a758b6e0-c973-4619-b1df-35dee3f8f573

... ஈழதேசம், தமிழ்தை, ... போன்றவைகளுக்கு தெரியும் செய்திகள் வேறொருவருக்கும் தெரிவதில்லை?? ...

சிறீலங்கா அரச தலைவர்கள் மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு, தமிழர்களுக்கு நீதியான தீர்வு ஒன்றை வென்றெடுப்பதில் கவனம் செலுத்தும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒபாமா நிர்வாகம் எடுத்துக் கூறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (28-10-2011) மூன்றாவது நாளாகவும் இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்புக்கள் தொடர்ந்தன என்று கூட்டமைப்பினர் கூறினர். சந்திப்புகளில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து அனேகமாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டமைப்பினருடனான சந்திப்புக்கள் அனைத்தையும் ராஜாங்கத் திணைக்களமே ஏற்பாடு செய்தது என்பதால் அங்கேயே அவர்களது சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின்போது, சிறீலங்கா அரசுடன் பேசி தீர்வைப் பெறுவதில் அதிக அக்கறை காட்டுமாறு கூட்டமைப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

போர்க் குற்றச்சாட்டு விடயத்தில் தமிழர் தரப்பு பிடிவாதம் பிடிக்காமல் அதனைப் பயன்படுத்தி தமக்கான அரசியல் தீர்வை சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் பெற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

போர்க் குற்றச்சாட்டால் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள சிறீலங்கா அரசின் பலவீனங்களைப் பயன்படுத்தி தமிழர்களின் நலன்களை வென்றெடுக்கப் பாருங்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த கருத்து தெரிவித்துள்ளனர்.

தாயகத்தில் உள்ள தமிழர்களின் அசைக்க முடியாத பிரதிநிதிகள் என்ற வகையில், தமிழர்களின் தலைமைத்துவ வகிபாகத்தை ஈழத் தமிழர்கள் மத்தியிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் கூட்டமைப்பு பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அமெரிக்க அதிகாரிகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வந்தது

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

:o
  • கருத்துக்கள உறவுகள்

ஈழதேசம் - வல்லமை தாராயோ....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.