Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோ..சுத்தியுடனான நேர்காணல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே தொடங்கி எங்கே வந்து நிற்கினம்????? :lol::D

  • Replies 99
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் போய்வந்த நூலகங்களில் பாலகுமாரனினதும், ரமணிச் சந்திரனினதும் புத்தகங்கள் நிரம்பியிருக்குமே..

லண்டன் நூலகத்தில்.. லண்டன் பல்கலைக்கழகம் (செனட் கவுஸ்) நூலகத்தில்.. ரமணிச்சந்திரன்.. பாலகுமாரன்.. என்றால் யாரென்றே தெரியாது. :lol::D

கொழும்பு நூலகத்தில் கூட அவற்றை காண முடியாது. ஏன் யாழ் நூலகத்தில் கூட அவை ஒரு மூலைக்குள் தான் இருக்கும். அவை பொழுதுபோக்கு நூல்கள். ஓ.. நீங்கள் அந்த வரிசையில் நின்றா.. சோ.சுத்தியை திறம் என்றீங்க.. அப்ப சரி..! ரமணிச்சந்திரன்.. பாலகுமாரன் நூலகளின் மூன்றாம் தர வாசகர்களோடு ஒப்பிடும் போது.. நீங்களும்.. சோ.சுத்தியும்.. தேறலாம். :):D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் எனது கருத்து இதுதான்.. சோபா சக்தியோ அல்லது வேறு யாரோ, யாரைப் பற்றியும் எழுத முன்னர் தேவையான முன்வேலைகளைச் சரியாகச் செய்யவேண்டும். அவற்றைச் செய்யாமல் வெறும் ஊகத்தில் எழுதப்பட்டதுதான் இந்த நகைச்சுவைப் பதிவு. இது மாட்டை மரத்தில் கட்டிவிட்டு மரத்தைப் பற்றி எழுதியது போன்றதுதான். சோபா சக்தியின் எழுத்துக்களைப் படித்திருந்தால் நன்றாகவே நகைச்சுவையாக எழுதியிருக்கமுடியும். நாமும் ரசித்திருப்போம்!

சோபா.சுத்தி பற்றி எழுத.. இந்தளவு முன்வேலை போதும் என்றே நினைக்கிறேன் கிருபண்ணா. அவரைப் பற்றி.. அவரோட நெருங்கி நின்றவங்களே.. அந்த மாதிரி சொல்லுறாங்களே. அதுபோதாதா..???! :):lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் நூலகத்தில்.. லண்டன் பல்கலைக்கழகம் (செனட் கவுஸ்) நூலகத்தில்.. ரமணிச்சந்திரன்.. பாலகுமாரன்.. என்றால் யாரென்றே தெரியாது. :lol::D

கொழும்பு நூலகத்தில் கூட அவற்றை காண முடியாது. ஏன் யாழ் நூலகத்தில் கூட அவை ஒரு மூலைக்குள் தான் இருக்கும். அவை பொழுதுபோக்கு நூல்கள். ஓ.. நீங்கள் அந்த வரிசையில் நின்றா.. சோ.சுத்தியை திறம் என்றீங்க.. அப்ப சரி..! ரமணிச்சந்திரன்.. பாலகுமாரன் நூலகளின் மூன்றாம் தர வாசகர்களோடு ஒப்பிடும் போது.. நீங்களும்.. சோ.சுத்தியும்.. தேறலாம். :):D:icon_idea:

நான் சொல்ல வந்தது உங்களுக்குச் சரியாகப் புரிந்திருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது!! அந்த வகையில் மகிழ்ச்சியே..

அத்துடன் நீங்களும் சோபா சக்தியின் புத்தகங்களைப் படிக்கத் தேடி இருக்கின்றீர்கள் என்பதும் நல்ல செய்திதான்.. என்ன ஆற்றில் தேடவேண்டியதை குளத்தில் தேடி இருக்கின்றீர்கள்!

ஐயோ ஐயோ.. நீங்கள் சொல்லாமலே அது புரியும் கிருபண்ணா. ஏன்னா.. இந்த நூல்களுக்கு பாடசாலைகளிலேயே தடை போட்டிருந்தாங்க.. நான் பள்ளியில் இருக்கிறப்போ.

மேலும்.. நான் சோ.சுத்தியின்ர ஆக்கத்தைப் படிக்கனும் என்ற துடிப்பில தேடல்ல.. நீங்கள் எல்லாம் சொல்லுறீங்களே.. அவர் ஒரு ஊரறிஞ்ச.. தமிழுலகம் அறிஞ்ச பேரறிஞ்சர் என்று.. அதுதான் தேடிப் பார்த்தேன்.. கிடைக்குதோன்னு. ஆனா.. ம்ம்... கிடைக்கவே இல்ல.

அவருடைய புத்தகங்களை.. ஆற்றில தேடி.. குளத்தில தேடி கிடைக்குமென்னு நான் நினைக்கல்ல.. குப்பையில தேடினா கிடைக்கலாம்...! :):lol::icon_idea:

லண்டன் நூலகத்தில்.. லண்டன் பல்கலைக்கழகம் (செனட் கவுஸ்) நூலகத்தில்.. ரமணிச்சந்திரன்.. பாலகுமாரன்.. என்றால் யாரென்றே தெரியாது. :lol::D

கொழும்பு நூலகத்தில் கூட அவற்றை காண முடியாது. ஏன் யாழ் நூலகத்தில் கூட அவை ஒரு மூலைக்குள் தான் இருக்கும். அவை பொழுதுபோக்கு நூல்கள். ஓ.. நீங்கள் அந்த வரிசையில் நின்றா.. சோ.சுத்தியை திறம் என்றீங்க.. அப்ப சரி..! ரமணிச்சந்திரன்.. பாலகுமாரன் நூலகளின் மூன்றாம் தர வாசகர்களோடு ஒப்பிடும் போது.. நீங்களும்.. சோ.சுத்தியும்.. தேறலாம். :):D:icon_idea:

உங்கள் அறிவை மெச்சத் தோன்றுகின்றது நெடுக்கு

ஒரு பொது நூலகத்தில் இலக்கிய புத்தகங்கள், நாவல்கள் போன்றவற்றுக்கு ஒரு சிறு பகுதியைத்தான் ஒதுக்குவார்கள். ஆனால் அறிவியல் நூல்கள் மற்றும் படிப்புக்கு உதவும் உசாத்துணை புத்தகங்களுக்கு ஒதுக்கப்படும் இடம் அதிகமாகவே இருக்கும். ஊரில் இருக்கும் சனசமூக நிலையங்களால் நடாத்தப்படும் சிறிய ரக நூலகங்களில் மட்டுமே அதிகளவில் நாவல்களும் சஞ்சிகைகளும் இருக்கும். நாவல்கள்,கவிதைகள் மற்றும் இலக்கியங்கள் அனைத்துமே ஒரு வகையில் பொழுது போக்கு வகைக்குள் தான் அடங்கும். எனவே அவற்றுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து நூலகம் அமைப்பதில்லை. இந்த அடிப்படை வேறுபாட்டை புரியாமல் லண்டன் நூலகத்திலும், யாழ்ப்பாண நூலகத்திலும் கொழும்பு நூலகத்திலும் பொது இடங்களில் நாவல்களை தேடிய உங்கள் அறிவு மிகவும் மெச்சத்தக்கது. இனி பிரஞ்சு நூலகம் சென்றும் அம்புலிமாமாவை தேடிப்பாருங்கள்

..அத்துடன் சாத்திரி சொன்னது போல புலிகளின் கட்டுப்பாட்டில் ஒன்று அனுமதிக்கப்பட்டால் அது பல வடிகட்டல்களின் பின் தான் அனுமதிக்கப்பட்டு இருக்கும். புலிகள் பலகாலமாக பல புத்தகங்களை, சஞ்சிகைகளை, பத்திரிகைகளை தடை செய்து வைத்திருந்தனர். இந்த வரிசையில் சரிநிகர் பத்திரிகை (யாழ் பல்கலைக்கழகம் தவிர்ந்த), குமுதம் சஞ்சிகை கூட குறிப்பிட்ட காலத்துக்கு தடை செய்யப்பட்டு இருந்தது. வானொலி அலைவரிசையை தடை செய்ய கூடிய தொலில்நுட்ப வசதிகள் இல்லாமையால் தான் மக்களின் குரல் போன்றவற்றை வேறு வழியின்றி அனுமதித்து இருந்தனர். அத்துடன் மக்களின் குரல் போன்ற நிகழ்சிகளை கேட்கும் கடும் புலி எதிர்ப்பாளர்கள் கூட நாளடைவில் புலி ஆதரவாளராக மாறக்கூடிய விதமாகத்தான் ஈபிடியின் அன்றைய நடவடிக்கைகளும் அமைந்து இருந்தது (இதில் பங்கர் திருமகன் போன்ற பல நிகழ்ச்சிகளை எழுதி தயாரித்து நடத்திய அற்புதன் தான் பின் நாளில் தினமுரசு ஆசிரியராக இருந்தவர்)

நீங்கள் சோபாவின் எழுத்து தரத்தை; இன்று புலம்பெயர் தமிழ் இலக்கிய பரப்பில் அவருக்கு இருக்கும் தனி இடத்தை மதிக்காவிடின் அது உங்களின் பிரச்சனை. ஆனால் நீங்கள் மதிக்காத காரணத்தால் புலம்பெயர் இலக்கிய அவருக்கான இடம் இல்லாமல் போய்விடும் என்று 'பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடும்' கணக்காக கற்பனை பண்ண வேண்டாம். உங்களைப் போன்ற எழுத்துக்கும் நடவடிக்கைகளும் வேறுபாடு இருக்கும் ஒருவரின் விமர்சனம் எவரையும் எதுவும் பண்ணிவிடாது

..முதலில் ஒன்றை எழுதமுன் அது பற்றி வாசித்து அறியுங்கள். ஒருவரின் இலக்கியம் பற்றி அறிய அவரது எழுத்தை வாசித்து அறியுங்கள். இல்லாவிடில் இப்படியான அரை குறை பத்திகளைத் தான் எழுத முடியும். கிருபன் சொல்வது போல நீங்கள் சோபாவின் எழுத்தை வாசித்து இருந்தால் மிக அருமையாக கலாய்த்து இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கு ஒரு பச்சை கொடுக்க வேண்டும்.பச்சை முடிந்து விட்டது பிறகு வந்து கொடுக்கிறேன்...சோபா சக்தியின் கொரில்லா,இன்னும் சில நாவல்கள் லண்டன் நூலகத்தில் உள்ளது நான் அங்கு தான் வாசித்தேன்...அத்துடன் ரமணிச் சந்திரன்,பாலகுமாரன் நூல்கள் கூட லண்டன் நூலகத்தில் உள்ளது...பூபாலசிங்கம் புத்தகசாலையில் எந்த வித அரசியல் சம்மந்தமான புத்தகங்கள் விற்பதில்லை என சொன்னார்கள் ஆகவே அவர்கள் விநியோகிக்கும் கடைகளீல் எல்லாம் இந்த புத்தகங்கள் இருக்காது

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் அறிவாலயம் புத்தகசாலையில் கொஞ்சக்காலத்திற்க்கு முன்னர் நான் போய் சோபசக்தியின் சில புத்தகங்களை கேட்டபோது பின்னால் மறைச்சு வைத்திருந்து எடுத்துத்தந்தார்கள்..பாவம் பயத்தினால் போலும்..ஆனால் அண்மையில் நான் அங்கு போனபோது நல்லவடிவா முன்னுக்கு அடுக்கி இருந்தார்கள்..நன்றாக விலைப்படுகுது போலும்...வேணும் எண்டால் அடுக்கியிருக்கிறதை போட்டோ எடுத்துப்போட்டுவிடுகிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் இன்று ஈழத்து எழுத்தாளர் என்றால் (சோபா மீதான விமர்சனங்களை தவிர்த்து) சட்டென எவரும் சொல்லும் பெயர் சோ.பா என்பதாகும். கிளிநொச்சியில் நூலகத்தில் சோபவின் புத்தகங்கள் இருந்தது மட்டுமல்லாமல் சோபா எழுதிய கெரில்லா நாவலை புலிகள் அரசியல் துறை போராளிகள் அனைவரிற்கும் படிக்க கொடுத்திருந்தனர். அப்பொழுது வெளிநாட்டிலிருந்து சென்ற ஒருத்தர் அதை பாத்து அதிர்ச்சிடைந்து புதுவையிட்டை போய் இவனின்ரை புத்தகம் எல்லாத்தையும் எதுக்கு வாசிக்கக் குடுத்திருக்கிறீங்கள் பத்தாதற்கு வெளிப்படையா புத்தகசாலையிலையும் வைச்சிருக்கிறியள் உங்களிற்கு விசரோ எண்டு கேட்டார். அதுக்கு புதுவை சொன்னார் முடிந்தால் அவனை விட திறமாக ஒரு புத்தகத்தை எழுதிக்கொண்டுவா நானே வெளியிட்டு வைக்கிறதோடை புத்தக சாலையிலும் வைக்கிறன். அதை விட்டிட்டு மற்றவை எழுதினதை குறை சொல்லித் திரியாதை எண்டார். அதுபோலத்தான் முடிந்தால் சோபாவை விட சிறந்த அளவில் எழுதி அதனை பலரையும் சென்றடைய செய்து பெரியளவில் வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி சோபாவை பின்னிற்கு தள்ளுங்கள். இல்லாட்டி எழுதிறதை வாங்கி வாசிச்சிட்டு வாசிக்க விருப்பம் இல்லாவிட்டால் பேசாமல் இருக்கிறது நல்லது

சாத்திரி ஓரு இடத்தில் கூறியதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் < ஒருவரை ஒருவர் விமர்சிப்பதானால் , விமர்சிப்பவர் விமர்சிக்கப்படுபவரை விட சாதனைகள் படைத்தவராக இருக்க வேண்டும் > இது ஒரு பொதுவான இயங்கு விதி :) :) :) . மற்றும்படி நான் இலக்கியத்தில் தவ்வல் :) .

  • கருத்துக்கள உறவுகள்

அறிஞர்கள் சுத்தி வளைத்து பந்தி பந்தியா எழுதி என்ன சொல்கிறார்கள் என்றால்.............

"சர்கரை இல்லாத ஊரில் இலுப்பை இலை சர்கரை என்கிறார்கள்"

அதை யார் இல்லை என்றார்கள். அனால் இலுப்பை இலை சர்கரை இல்லை என்ற நெடுக்கால போவனின் கருத்தை ஏற்கிறார்கள் இல்லை. ஏனென்றால் தாங்கள் புத்தகங்களை படித்த மேதைகளாம்.இனி முஸ்லிம்களின் அடக்குமுறை பற்றி யாரும் எழுதுவதென்றால் குரான் படிக்க வேண்டும் போல் உள்ளது. குரான் என்ன சொன்ன எமக்கு என்ன? எம் கண் முன்னே பெண்களுக்கு செய்யும் கொடுமைகளை செய்யாதே என்று சொல்ல குரான் எதற்கு?

கோம்ஸ்..

சுப்புடு அவர்கள் இசை வித்திவான்களை விமர்சனம் செய்தவர். ஆனால் அவருக்குப் பாடத்தெரியாதே?? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கோம்ஸ்..

சுப்புடு அவர்கள் இசை வித்திவான்களை விமர்சனம் செய்தவர். ஆனால் அவருக்குப் பாடத்தெரியாதே?? :rolleyes:

சுப்புடுவிற்கு பாடத் தெரியாது ஆனால் இசையை பற்றித் தெரியும். இராகங்களைப்பற்றித் தெரியும். இசை மேதைகள் பலரின் பாடல்களை விட அவர்களது இசையே இரசிக்கக்கூடியதாக இருந்தது இளையராஜா உட்பட. இளையின் இசைக்கு நான் அடிமை ஆனால் அவரின் பாடிய பாடல்கள்களில் தென்பாண்டி சீமையிலேயும் மற்றும் நான் தேடும் செவ்வந்தி பூவிது இரண்டுமே பிடித்திருந்தது. ஆனால் இசை அனேகமாக எல்லாமே :icon_idea:

அப்படிப்பார்த்தால் பிரபாகனிற்கும் சண்டை தான் தெரியும் அரசியல் தெரியாது அதை அவர் விரும்பியதும் இல்லை எனவே அவரை அரசியல் ரீதியாக விமர்சிக்கலாமா?? உங்கள் கூற்றுப்படி அது கூடாது அல்லது சண்டை தெரிந்தவர்கள் மட்டுமே அவரை விமர்சிக்கலாமா?? <_<

அடுத்ததாக கோமகன் சொன்ன உதாரணம் இந்தியாவிற்கு நான் போய்விட்டு வந்து எழுதிய பயணம் பற்றிய தொடரில் இருந்தது; தமிழ்நாட்டில் நான் தங்கியிருந்த விடுதியில் நான் ஜெயபாலன்(பொயற்) சுசிந்திரன். றஞ்சித். மகேந்திரன் ஆகியோரிற்கிடையில் நடந்த விவாதத்தில் பிரபாகரன் பற்றிய விமர்சனம் வந்தபொழுது நான் அவர்களிடம் சொல்லியிருந்தேன் பிரபாகரனை விட உறுதியானதொரு போராட்டத்தை நடத்திமுடித்தவர்கள் எவராவது இருந்தால் அவர் மீதான விமர்சனத்தை முன்வையுங்கள் மற்றையவர்களிற்க்கு அந்த தகுதி இல்லை.. அதே போலத்தான் சோ.பா வை விட நல்லதொரு புத்தகத்தை எழுதிவிட்டு அவன் மீதான விமர்சனத்தை முன் வையுங்கள்.

Edited by sathiri

சாத்திரி அண்ணை,

கருத்துரிமை எல்லோருக்கும் இருக்கு. அதையே நெடுக்காலபோவான் செய்கிறார். அதற்கு மாற்றுக்கருத்து நீங்கள் சிலர் தெரிவிக்கிறீர்கள். அதில் தவறில்லை. ஆனால் நெடுக்கை இவ்வாறு ஒரு பதிவை இடவே கூடாது என்பது தவறல்லவா? :unsure:

சென்ற கிழமை நடந்தது இது.. Autodesk நிறுவனத்தின் மென்பொருள் ஒன்றை உபயோகிப்பதற்கான பயிற்சி. பயிற்சியாளர் அவ்வப்போது மென்பொருளில் குறைகளாக சிலவற்றைக் கூறி (அவை குறைகள் அல்ல என்பது என் அபிப்பிராயம்) மட்டம் தட்டினார். ஆனால் மென்பொருளுக்கான கோடிங் எழுதத் தெரியாத ஒருவர், சிறப்பான அந்த மென்பொருளை விமர்சித்தது முதலில் எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால் அது அவரது கருத்துரிமைதானே என்று எண்ணி சமாதானமானேன். அதுபோலத்தானே இதுவும்? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அறிவை மெச்சத் தோன்றுகின்றது நெடுக்கு

ஒரு பொது நூலகத்தில் இலக்கிய புத்தகங்கள், நாவல்கள் போன்றவற்றுக்கு ஒரு சிறு பகுதியைத்தான் ஒதுக்குவார்கள். ஆனால் அறிவியல் நூல்கள் மற்றும் படிப்புக்கு உதவும் உசாத்துணை புத்தகங்களுக்கு ஒதுக்கப்படும் இடம் அதிகமாகவே இருக்கும். ஊரில் இருக்கும் சனசமூக நிலையங்களால் நடாத்தப்படும் சிறிய ரக நூலகங்களில் மட்டுமே அதிகளவில் நாவல்களும் சஞ்சிகைகளும் இருக்கும். நாவல்கள்,கவிதைகள் மற்றும் இலக்கியங்கள் அனைத்துமே ஒரு வகையில் பொழுது போக்கு வகைக்குள் தான் அடங்கும். எனவே அவற்றுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து நூலகம் அமைப்பதில்லை. இந்த அடிப்படை வேறுபாட்டை புரியாமல் லண்டன் நூலகத்திலும், யாழ்ப்பாண நூலகத்திலும் கொழும்பு நூலகத்திலும் பொது இடங்களில் நாவல்களை தேடிய உங்கள் அறிவு மிகவும் மெச்சத்தக்கது. இனி பிரஞ்சு நூலகம் சென்றும் அம்புலிமாமாவை தேடிப்பாருங்கள்

..அத்துடன் சாத்திரி சொன்னது போல புலிகளின் கட்டுப்பாட்டில் ஒன்று அனுமதிக்கப்பட்டால் அது பல வடிகட்டல்களின் பின் தான் அனுமதிக்கப்பட்டு இருக்கும். புலிகள் பலகாலமாக பல புத்தகங்களை, சஞ்சிகைகளை, பத்திரிகைகளை தடை செய்து வைத்திருந்தனர். இந்த வரிசையில் சரிநிகர் பத்திரிகை (யாழ் பல்கலைக்கழகம் தவிர்ந்த), குமுதம் சஞ்சிகை கூட குறிப்பிட்ட காலத்துக்கு தடை செய்யப்பட்டு இருந்தது. வானொலி அலைவரிசையை தடை செய்ய கூடிய தொலில்நுட்ப வசதிகள் இல்லாமையால் தான் மக்களின் குரல் போன்றவற்றை வேறு வழியின்றி அனுமதித்து இருந்தனர். அத்துடன் மக்களின் குரல் போன்ற நிகழ்சிகளை கேட்கும் கடும் புலி எதிர்ப்பாளர்கள் கூட நாளடைவில் புலி ஆதரவாளராக மாறக்கூடிய விதமாகத்தான் ஈபிடியின் அன்றைய நடவடிக்கைகளும் அமைந்து இருந்தது (இதில் பங்கர் திருமகன் போன்ற பல நிகழ்ச்சிகளை எழுதி தயாரித்து நடத்திய அற்புதன் தான் பின் நாளில் தினமுரசு ஆசிரியராக இருந்தவர்)

நீங்கள் சோபாவின் எழுத்து தரத்தை; இன்று புலம்பெயர் தமிழ் இலக்கிய பரப்பில் அவருக்கு இருக்கும் தனி இடத்தை மதிக்காவிடின் அது உங்களின் பிரச்சனை. ஆனால் நீங்கள் மதிக்காத காரணத்தால் புலம்பெயர் இலக்கிய அவருக்கான இடம் இல்லாமல் போய்விடும் என்று 'பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடும்' கணக்காக கற்பனை பண்ண வேண்டாம். உங்களைப் போன்ற எழுத்துக்கும் நடவடிக்கைகளும் வேறுபாடு இருக்கும் ஒருவரின் விமர்சனம் எவரையும் எதுவும் பண்ணிவிடாது

..முதலில் ஒன்றை எழுதமுன் அது பற்றி வாசித்து அறியுங்கள். ஒருவரின் இலக்கியம் பற்றி அறிய அவரது எழுத்தை வாசித்து அறியுங்கள். இல்லாவிடில் இப்படியான அரை குறை பத்திகளைத் தான் எழுத முடியும். கிருபன் சொல்வது போல நீங்கள் சோபாவின் எழுத்தை வாசித்து இருந்தால் மிக அருமையாக கலாய்த்து இருக்கலாம்.

இங்கு சிலர்.. அவரை... தமிழ் அறிஞர் சோபா.சுத்தி என்று சொல்லீனம்.. பல தமிழ் அறிஞர்களின் நூல்கள் இருக்கின்ற.. இடத்தில் தானே தமிழ் உலகம் ஏற்றுக் கொண்டவற்ற நூலை தேட முடியும்.. நிழலியண்ணா.

மேலும்.. நான் லண்டனிலும்.. கொழும்பிலும்.. ரமணிசந்திரனின் நூல்கள் காணக்கிடைப்பதில்லை என்று கிருபண்ணா சொன்னதற்கு பதிலாக.. சொல்லி இருக்கிறேனே தவிர அவற்றைத் தேடி அங்கு போனேன் என்று எங்கு எழுதி இருக்கிறேன். ஒரு மட்டுறுத்தினரே இப்படி கருத்தை திரிக்கப்படாது.

உங்கள் கருத்துத் தவறு. விடுதலைப்புலிகள் 1990 களின் ஆரம்பத்தில் சில தமிழக சஞ்சிகைகள்.. மற்றும் நூல்களை தடைசெய்யக் காரணம்.. இந்திய உளவு அமைப்புக்கள் செய்து வந்த பிரச்சாரத்தை தடுக்கும் நோக்கமும்.. கல்வி சாரா விடயங்களைக் கொண்ட புத்தகங்கள்.. பாடசாலை நூல்நிலையங்களை நிரப்பி நிற்பதும்.. கலாசார பேணல் கருதியுமே ஆகும்.

அந்தத் தடை பின்னர் நூல்கள் மீதான மேலாய்வுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதில் இருந்து மாற்றம் பெற்றுவிட்டதோடு.. கிட்டத்தட்ட எல்லா சஞ்சிகைகளும் அனுமதிக்கப்பட்டன. ஏன் சினிமாவிற்கும் தடை இருந்தது. பின்னர் அதுவும் விலக்கப்பட்டு விட்டது. இந்திய சினிமாக்கள் நிறுத்தப்பட்ட வேளையில் உள்ளூர் சினிமாவுக்கு முக்கியம் அளிக்கப்பட்டு கிரமமாக படங்கள் வெளியிடப்பட்டும் வந்தன. அதன் பின்னர் சமூகச் சீரழிவற்ற.. போராட்ட தன்மையை பாழடிக்காத சினிமாக்கள் அனுமதிக்கப்பட்டன.

மேலும்.. சோபா.சுத்தியின் நூல்கள் கிளிநொச்சியில் இருந்ததோ இல்லையோ என்பதெல்லாம் நான் அறியவே இல்லை. ஆனால் விடுதலைப்புலிகள் திருநெல்வேலியில் நடத்திய நூல்நிலையத்தில் பள்ளிக்காலத்தில் சென்று படித்திருக்கிறேன். அப்போது முன்னாள் ஒட்டுக்குழுத் தலைவர்கள் பற்றிய சில நூல்களும் அங்கிருக்க கண்டிருக்கிறேன். அதன் மூலம்.. விடுதலைப்புலிகள் அந்த ஒட்டுக்குழு தலைமைகளை அங்கீகரிக்கின்றனர் என்பது அல்ல அர்த்தம். அன்றைய அரசியல்.. சூழலை மக்களுக்கு வெளிக்கொணர.. மக்கள் உணர அவற்றை அனுமதிக்கின்றனர் என்பதை நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில்.. இந்த நூலும் அங்கு வந்திருக்கலாம். மற்றும்படி.. தமிழ் உலகம் அங்கீகரித்த ஒரு பெரிய படைப்பாளி என்ற நிலையில் அங்கு நூல்கள் வந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும்.. தீராநதியில்.. எழுதிய பலரின் ஆக்கங்கள்.. தமிழக உறவுகள் மத்தியில் பெரிதும் போய்ச் சேர்ந்துள்ளன. ஈழத்தவர்களின் சில வலைப்பூக்கள் ஆனந்த விகடன் போன்ற தமிழகத்தின் வாரச்சஞ்சிகைகளில் கூட அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஈழத்தவர்கள் பற்றிய படைப்புக்களை தமிழக உறவுகள் இணையத்தில் படிப்பது இன்றைய நவீன தொடர்பாடல் வசதிகள் உள்ள நிலையில் ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில்.. சோபா.சுத்தி உட்பட பல ஈழத்தமிழர்களின் வலைப்பூக்கள் தமிழக உறவுகளால் படிக்கப்படுகின்றன. அதற்காக சோபா.சுத்தி.. பெரிய தமிழுலகம் அங்கீகரித்து நிற்கும் படைப்பாளி என்ற தோற்றப்பாடு மிகவும் அபரிமிதமான ஒன்றே தவிர உண்மையான அளவீடு அதுவாக இருக்க முடியாது என்பதற்கு.. அதே தமிழக உறவான பிரியா தம்பி.. இவரைப் பற்றி அறிந்து கொண்டு.. முகநூலிலும்.. வலைப்பூக்களிலும்.. கீற்று இணையத்தளத்திலும் எழுதியமை.. நன்கு சான்று பகர்கிறது.

அண்மையில் தமிழக இலக்கிய பரிசளிப்பு நிகழ்வுகளில் சில புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சோபா.சுத்தி இடம்பெற்றிருப்பதாக நான் அறியவில்லை. நிச்சயம்.. புலிகள் பற்றிய கொடூரக் கருத்துக்கள்.. தேசிய தலைவர் பற்றிய சாதியக் கருத்துக்கள்.. விடுதலைப் போராட்டம் பற்றிய.. ஒரு பலவீனத் தோற்றப்பாட்டை காட்டும் கருத்துக்கள்.. யாழ்ப்பாண தலித்தியம்.. இப்படியான.. சாதியக் கருத்துக்கள். இவற்றோடு கலந்த மாக்சியம்.. பெரியாரிசும்.. இவற்றிற்காக.. அவரது எழுத்துக்களைப் படிக்கும்.. ஒரு இணைய வட்டம் உள்ளது. அது இப்படியான கருத்துக்களுக்கு என்று உள்ள ஒரு வட்டம் தான். அந்த வட்டத்தால்.. சோபா.சுத்தி எழுதினால் என்ன எவர் எழுதினால் என்ன அது வாசிக்கப்படும். இவற்றின் அடிப்படையில் சோபா.சுத்தி தமிழ் உலகம் ஏற்றுக் கொண்ட பெரிய படைப்பாளி.. அறிஞர் என்ற புலுடாக்கள் அவசியமில்லையே.... இதுதான் எங்கள் தெளிவான நிலைப்பாடு.. நிழலி அண்ணர். :):icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக கோமகன் சொன்ன உதாரணம் இந்தியாவிற்கு நான் போய்விட்டு வந்து எழுதிய பயணம் பற்றிய தொடரில் இருந்தது; தமிழ்நாட்டில் நான் தங்கியிருந்த விடுதியில் நான் ஜெயபாலன்(பொயற்) சுசிந்திரன். றஞ்சித். மகேந்திரன் ஆகியோரிற்கிடையில் நடந்த விவாதத்தில் பிரபாகரன் பற்றிய விமர்சனம் வந்தபொழுது நான் அவர்களிடம் சொல்லியிருந்தேன் பிரபாகரனை விட உறுதியானதொரு போராட்டத்தை நடத்திமுடித்தவர்கள் எவராவது இருந்தால் அவர் மீதான விமர்சனத்தை முன்வையுங்கள் மற்றையவர்களிற்க்கு அந்த தகுதி இல்லை.. அதே போலத்தான் சோ.பா வை விட நல்லதொரு புத்தகத்தை எழுதிவிட்டு அவன் மீதான விமர்சனத்தை முன் வையுங்கள்.

பிரபாகரனைப் பற்றி.. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கூட விளித்துக் கூற நான் கேட்டிருக்கிறேன். ஆனால்.. நீங்கள் பெரிசாகக் காட்ட முனையும் சோபா.சுத்தியைப் பற்றி தமிழ் புத்தகக் கடைகள் நடத்துபவர்கள் கூட ஒன்றும் சொல்லக் காணமே..! இந்த நிலையில் அவர் எழுதிய புத்தகம்.. ஏதோ உலகப் புகழ்பெற்ற புத்தகம் என்ற கணக்கான எடுப்பு எதற்கு..????! அதுதான் புரியல்ல..????! சோபா.சுத்தி எதையாவது எழுதிட்டுப் போகட்டும்.. ஆனால் அவரின் கருத்தியல் போக்கை விமர்ச்சிக்கும் உரிமை.. தமிழ் பேசும்.. வாசகர்கள் எமக்கு உண்டு..! சோபா சுத்தியின் புத்தகத்திற்கு அளிக்கும் முன்னிலையை விட... இதை நீங்கள் முதலில் அங்கீகரிக்கக் கற்றுக் கொள்வது அவசியம்.

புலிகள் மட்டுமே விமர்சனத்துக்குரியவர்கள் கிடையாது. புலிகளை விமர்ச்சிப்பவர்களும் விமர்சனத்துக்குரியவர்களே ஆவர். அப்படி விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு புலிகளை அதன் தலைமையை ஈழவிடுதலைப் போராட்டத்தை.. விமர்சிக்க எந்த அருகதையும் கிடையாது. அதுபோல் தான் மாக்சியமும்.. பெரியாரிசுமும்.. எதுவும். இதையும் நீங்கள்.. சோபா.சுத்தியிடம் கொண்டு போய் சேர்ப்பது அவசியம்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணை,

கருத்துரிமை எல்லோருக்கும் இருக்கு. அதையே நெடுக்காலபோவான் செய்கிறார். அதற்கு மாற்றுக்கருத்து நீங்கள் சிலர் தெரிவிக்கிறீர்கள். அதில் தவறில்லை. ஆனால் நெடுக்கை இவ்வாறு ஒரு பதிவை இடவே கூடாது என்பது தவறல்லவா? :unsure:

சென்ற கிழமை நடந்தது இது.. Autodesk நிறுவனத்தின் மென்பொருள் ஒன்றை உபயோகிப்பதற்கான பயிற்சி. பயிற்சியாளர் அவ்வப்போது மென்பொருளில் குறைகளாக சிலவற்றைக் கூறி (அவை குறைகள் அல்ல என்பது என் அபிப்பிராயம்) மட்டம் தட்டினார். ஆனால் மென்பொருளுக்கான கோடிங் எழுதத் தெரியாத ஒருவர், சிறப்பான அந்த மென்பொருளை விமர்சித்தது முதலில் எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால் அது அவரது கருத்துரிமைதானே என்று எண்ணி சமாதானமானேன். அதுபோலத்தானே இதுவும்? :rolleyes:

அதை;தான் நான் முதலேயே சொன்னேன் கருத்துரிமை அனைவரிற்கும் இருக்கு அதை சோ பாவும் சொல்லட்டும் நீங்களும் சொல்லுங்கள். நெடுக்கும் சொல்லட்டும். கருத்தை சொன்னதற்காக மட்டுமே ஒருவனை துரோகியாக்கவேண்டாமே அதுதான் என்னுடைய கருத்து.

மற்றும்படி நெடுக்கை இப்படியான ஒரு பதிவை இடவேண்டாம் எண்டு நான் எங்கும் எழுதவில்லை. சொ.பாவிற்கான பதிலை அல்லது அவனை விட திறைமையாக எழுதுங்கள் எண்டுதான் சொன்னேன்.

உங்கள் விவாதப்படி கருத்துரிமை எல்லாரிற்கும் இருக்கு அதற்காக பிரபாகரனை பற்றி எல்லாருமே கண்டபடி விவாதிக்க விட்டிட்டு நீங்கள் பொறுமையாய் பதில் சொலிக்கொண்டு இருப்பிங்களா?? ஆம் என்றால் சொல்லுங்கள். அது சரியான கருத்துரிமை இல்லையெண்டால். அது அவரவர் வசதிக்கேற்ற கருத்துரிமை

ம்ம்ம்.. இளையராஜா, தலைவர்.. ஏன் எனக்குப் பிடிக்கும் என்பதால் இங்கே கொண்டு வந்தீர்களா சாத்திரி அண்ணை..? :rolleyes:

சரி அது இருக்கட்டும்.. தலைவரை யாருமே இதுவரை விமர்சனம் செய்யவில்லையா? அப்படியே விமர்சனம் செய்தவர்களையெல்லாம் என்ன மென்னியைத் திருகி கொன்று போட்டு விட்டோமா? :rolleyes:

நெடுக்கை இந்தமாதிரி பதிவை இடவேண்டாம் என்று நீங்கள் சொல்லவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். நான் கோமகனின் பதிவுக்குத்தான் பதில் போட்டிருந்தேன். கீழே பார்க்கவும்.. :unsure:

சாத்திரி ஓரு இடத்தில் கூறியதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் < ஒருவரை ஒருவர் விமர்சிப்பதானால் , விமர்சிப்பவர் விமர்சிக்கப்படுபவரை விட சாதனைகள் படைத்தவராக இருக்க வேண்டும் > இது ஒரு பொதுவான இயங்கு விதி :) :) :) . மற்றும்படி நான் இலக்கியத்தில் தவ்வல் :) .

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி ஓரு இடத்தில் கூறியதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் < ஒருவரை ஒருவர் விமர்சிப்பதானால் , விமர்சிப்பவர் விமர்சிக்கப்படுபவரை விட சாதனைகள் படைத்தவராக இருக்க வேண்டும் > இது ஒரு பொதுவான இயங்கு விதி :) :) :) . மற்றும்படி நான் இலக்கியத்தில் தவ்வல் :) .

கோமகன் இது என்ன கதை? ஒருவருடைய எழுத்தை விமர்சிக்க அவர்களை விட சிறந்த எழுத்தளாராக இருக்க வேண்டுமானால் நாங்கள் எல்லாம் புத்தன்,சாஸ்திரி,ச‌காரா அக்கா எழுத்தை கூட‌ விமர்சிக்க தகுதி அற்றவர்களா?...கிருபன் சொன்ன மாதிரி முழுமையாக அவர்களுடைய எழுத்துக்களை படித்து விட்டு விமர்சிக்கலாம் ஆனால் நீங்கள் சொல்கிற படி பார்த்தால் சோ.சக்தி தானே எழுதிப் போட்டு தானே படிக்க வேண்டியது தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி ஓரு இடத்தில் கூறியதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் < ஒருவரை ஒருவர் விமர்சிப்பதானால் , விமர்சிப்பவர் விமர்சிக்கப்படுபவரை விட சாதனைகள் படைத்தவராக இருக்க வேண்டும் > இது ஒரு பொதுவான இயங்கு விதி :) :) :) . மற்றும்படி நான் இலக்கியத்தில் தவ்வல் :) .

இந்த இயக்க விதி.. பற்றி நான் இங்கு தான் கேள்விப்படுகின்றேன். நாங்கள்.. 9ம் ஆண்டில் படிக்கும் போதே கம்பரின்.. புகழேந்தியின் இலக்கியங்களுக்கு சோதனைக்காக.. விரிவும்.. விமர்சனமும் எழுதி இருக்கமே. அப்போ.. நாங்கள் கம்பன் போல்.. கவிஞனாகும் வரை.. அது நடக்க சாத்தியமில்லையோ..??!

மேலும்.. படைப்பாளி.. கவிஞன்.. அறிஞன்.. இது போன்ற பட்டங்களை எந்தப் பல்கலைக்கழகங்களும் கொடுப்பதில்லை. அந்தந்த சமூகங்கள் தங்கள் தற்றுணிவுச் "சட்டங்கள்" மூலம்.. தமக்கு வேண்டியவர்களுக்குக் கொடுக்கிறது. இது உண்மையில்.. நியாயமானவையா என்பது கேள்விக்குரிய ஒன்று. விவாதத்திற்குரிய ஒன்று.

விமர்சனம் என்பது.. ஒருவன் ஒரு படைப்பை வாசித்து தான் உணர்தலை.. வெளிப்படுத்தும் ஒரு உணர்வு வெளிப்படுத்தல் என்பதாகவே நான் உணர்கிறேன். நாங்கள் இலக்கியத் திறனாய்வு செய்யவில்லை. ஒருவரின் எழுத்துப் போக்குப் பற்றிய விமர்சனத்தை.. நாங்கள் அந்த எழுத்துப் போக்குப் பற்றி அறிந்தவற்றின் அடிப்படையில் எமக்குரிய வடிவில் தருகிறோமே அன்றி.. வேறெதனையும் செய்யவில்லை.

மேலும்.. எனக்கு சோ.சுத்தியின்.. எழுத்துக்களை விமர்சிக்க... நானும்.. மாற்றுக்கருத்தாளனாக பரினமிக்க வேண்டும் என்ற நிலை வந்தால்.. நிச்சயமா.. அந்த நிலையை அடையாமல்.. நிச்சயம் கருத்துக்களின் போக்கு குறித்த விளிப்பூட்டலை விமர்சனமாக எழுதுவேன். அதை எந்த இயக்க விதியும் தடை செய்ய முடியாது.. கோமகன் அண்ணா.

சேக்ஸ்பிரியரின் நூலை விமர்சிக்க.. மாணவர்கள் எல்லாம் சேக்ஸ்பியர் ஆகனும் என்றது போல இருக்கு உங்கள் விதி. அது இன்றைய உலகில் எம்மிடம் எடுபடாது.. சரிவராது அண்ணா. :):icon_idea:

Edited by nedukkalapoovan

எந்த ஒரு மனிதனும் எந்தத் தத்துவத்திற்கும் முற்றுமுளுதான நடைமுறை உதாரணம் ஆகிவிடமுடியாது. படைப்பாளிகள், தங்கள் படைப்புக்கள் போல் வாழத்தேவையில்லை. இன்னமும் சொல்வதானால் படைப்பாளி படைப்பாக இருப்பது சாத்தியமற்றது. கதைசொல்லி கதைக்கு வெளியே இருந்தால் மட்டுமே கதை வரும்.

தாங்கள் சிந்தித்த தத்துவங்களோடு தங்கள் பாத்திரங்களை உலாவவிட்டு, அதன்வாயிலாகத் தங்களது சிந்தனைகளை படைப்பின் நுகர்வோரோடு பகிர்ந்துகொள்வது மட்டுமே படைப்பாளிகள் செய்வது. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு குரல் உள்ளது. படைப்பிற்குள் மட்டுமே அந்தக் குரல் கேட்கப்படவேண்டியது. இந்தக்குரல் படைப்பாளியிலும் அப்பப்போ அவதானிக்கப்படலாம் என்றபோதும், அது தேவை அற்றது. ஒரு படைப்பின் நுகர்வோர் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான். படைப்பைத் தங்களிற்குள் உள்வாங்கி தங்கள் மனவெளியில் குறித்த படைப்பை மீள ஓடவிட்டுத் தங்களிற்குள் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியது மட்டுமே. பிடிக்காத படைப்புக்களை நுகரவேண்டிய கட்டாயம் எவரிற்கும் இல்லை. அதேநேரம், எமக்குப் பிடிக்காதவை எவரிற்குப் பிடிக்கக்கூடாது, எவரிற்கேனும் பிடித்தால் அவர்கள் வெறுக்கப்படவேண்டியவர்கள் என்பதும் ஏற்புடையதல்ல.

ஒரு படைப்பை அனுபவிப்பதற்கு ஒருவரிற்குத் தேவையானது படைப்பும் தானும் மட்டுமே. ஒரு மென்பொருளை குறித்த ஒரு கணனியில் ஓட்டுவதைப்போல, ஒரு படைப்பைத் தன்னுள் ஓடவிட்டு அதன் ஓட்டத்தை தனக்குள் அவதானிக்க வேண்டியது மட்டுமே. மென்பொருளை உருவாக்கும் போது அதை உருவாக்கியவன் அம்மணமாய் இருந்தானா, சழி அடைத்த மூக்கைத் தன் விரல்களால் தோண்டிவிட்டுத் தட்டச்சுச்செய்தானா என்பதுபோன்ற விசாரணைகள் எந்தக் கணனிக்கும் அவசியமற்றன. மென்பொருள் உருவாக்கியின் மூளைக்கும் அதை ஓட்டுகின்ற தளத்தின் மூளைக்குமிடையேயான பரிமாற்றங்கள் மட்டுமே அங்கு இருக்கமுடிவன.

'எழுதுவது அரைவாசி. படிப்பவன் கையில் மற்றைய பாதி' என்ற கூற்று பலகாலமாக வளங்கி வருகின்றது. இன்னுமொரு விதத்தில் பார்த்தால் ஒரு எழுத்தாழனும் வாசகன் தான். அவனது உணர்வை அவன் வாசிப்பதே அவனது எழுத்து. அவனது உணர்வை பிறிதொருவர் அவனை விட ஆழளமாக வாசிப்பதும் சாத்தியமாகலாம். அந்தவகையில், எழுதுவது அரைபங்கைக் காட்டிலும் குறைவானது. வாசிப்பிற்குத் தான் அதிக பங்குள்ளது. சரியாக வாசிக்கத் தெரிந்தவன் எந்த எழுத்தாளனைப் பார்த்தும் பயப்படவேண்டிய அவசியம் எழாது.

அடுத்துத் தகுதியுள்ளவன் தான் விமர்சிக்கலாம் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் அது அடிப்படையில் சரிபாhர்த்துக்கொள்ள முடியாத நிபந்தனை—எது தகுதி? எவ்வாறு தகுதிகளை ஒப்பிடுவது? அந்த ஒப்பீடைச் செய்யும் லாயக்கு யாரிற்கு உள்ளது? என்பன முடிவைக் காணமுடியாக் கேள்விகள். எவரும் எதையும் விமர்சிக்கலாம். ஆனால் இந்தப் படைப்பின், இன்ன விடயத்தை இன்ன காரணங்களிற்காக நான் விமர்சிக்கின்றேன் என்ற அடிப்படையில் விமர்சனம் அமைய வேண்டும். விமர்சனத்திற்கு எழும் எதிர்விமர்சனத்தை எதிர்நோக்கவும் தேவைப்படின் குறைந்தபட்சம் தன்னிலையினை மாற்றவேண்டிய அவசியம் பற்றிச் சிந்திப்பதற்கும் விமர்சகன் தயாராக இருக்கவேண்டும். மாறாக, நேற்றைய கட்டுரையில் நீ இதனை எழுதினாய், அல்லது இன்னும் மோசமாக நேற்றைய கட்டுரையில் இதனை நீ எழுதியதாக அவன் சொன்னான், எனவே நீ இனி என்ன எழுதினாலும் உன்னை நான் சாடுவேன் என்ற மனநிலை என்னைப் பொறுத்தவரை ஏற்புடையதல்ல. ஹிட்லர் கிளம்பி வந்து தான் ஆறு மில்லியன் யூதர்களைக் கொன்றமை சரி என்று ஒரு தர்க்கத்தை முன்வைத்தால், அதைக் கூர்ந்து படிப்பதற்கு எவரிற்கும் எவரும் தடைவிதிக்கக்கூடாது என்பது எனது அபிப்பிராயம். மேலும், அவ்வாறு படிககும் ஒருவர், ஹிட்லர் முன் வைத்த தர்க்கத்தை மறுதலிக்க தன்னிடம் எந்தக் கருத்துமே இல்லை என்று உணர நேரின், தனது தேடல்கள் அனைத்தும் ஹிட்லரின் வாதத்தின் முன் தோற்பதை அவர் உணரின், ஹிட்லரின் வாதத்தை வெல்லும் தர்க்கத்தைத் தான் பெற்றுக் கொள்ளும்வரை குறைந்தபட்சம் தனது தோல்வியினை ஒத்துக்கொள்ளும் மனநிலையேனும் விமர்சகனிற்கு இருக்கவேண்டும்.

எனது அபிப்பிராயத்தில், படைப்பை விட்டுவிட்டு படைப்பாளியை விமர்சிப்பதை விவாதிப்பது நேரவிரயம். ஆனால் எம்.எஸ்.சுப்புலட்சுமி கணிகையர் குலத்தில் பிறந்தார் என்பது தொட்டு, படைப்பாளிகளின் வாழ்வை மட்டும் அவதானிக்கும் அவதானிப்புக்கள் உலகில் மனிதன் இருக்கும் வரை இருந்துகொண்டுதான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் ஆக்கபூர்வமான பதிவுக்கு நன்றி!

விமர்சனங்களைப் பற்றி ஜெயமோகன் (அவரும் தமிழின் முன்னணி எழுத்தாளர்தான்)..

இலக்கியத்தைப் பொறுத்தவரை பெரிய சிக்கல் என்னவென்றால், உண்மையிலேயே புத்தகங்களைப் படித்துத் தன்னுடைய கருத்துகளை சுயமாக உருவாக்கிக்கொண்டவர்கள் பத்துப் பேர் தான் இருப்பார்கள். நூறு பேர் எதையுமே படித்திருக்க மாட்டார்கள். ஒரு அரட்டையில் உட்கார்ந்து கொண்டு ஒரு கருத்து உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். நேரில் அவர்களிடம் போய் நீ என்ன படித்திருக்கிறாய் ? எந்தப் புத்தகத்தின் அடிப்படையில் நீ சொல்கிறாய் ? என்றால் அவர்களால் சொல்ல முடிவதில்லை. எல்லாரும் உங்களை அப்படிச் சொல்கிறார்கள் என்பார்கள்.

அரட்டையில் வரக் கூடிய கருத்துகளுக்கு எந்த மதிப்பீடும் கிடையாது. உண்மையான கருத்துகள், ஆர்வம் போன்றவை இல்லாதவர்களுடைய கூற்றுகளை நான் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை.

அறிஞர்கள் சுத்தி வளைத்து பந்தி பந்தியா எழுதி என்ன சொல்கிறார்கள் என்றால்.............

"சர்கரை இல்லாத ஊரில் இலுப்பை இலை சர்கரை என்கிறார்கள்"

அதை யார் இல்லை என்றார்கள். அனால் இலுப்பை இலை சர்கரை இல்லை என்ற நெடுக்கால போவனின் கருத்தை ஏற்கிறார்கள் இல்லை. ஏனென்றால் தாங்கள் புத்தகங்களை படித்த மேதைகளாம்.இனி முஸ்லிம்களின் அடக்குமுறை பற்றி யாரும் எழுதுவதென்றால் குரான் படிக்க வேண்டும் போல் உள்ளது. குரான் என்ன சொன்ன எமக்கு என்ன? எம் கண் முன்னே பெண்களுக்கு செய்யும் கொடுமைகளை செய்யாதே என்று சொல்ல குரான் எதற்கு?

இலக்கியவாதிகள் எல்லா நாட்டிலும் எல்லா சமூகத்திலும் உள்ளார்கள். ஆனால் அவர்கள் தமது மக்களின் தேவைகளுடனும் அவர்களின் வாழ்வியலை முன்னகர்த்த கூடியனவாயும் முக்கியமாக அந்த மக்களை அடையக்கூயனவாயும் இருக்கவேண்டும்.

இல்லாவிட்டால் அது : "சர்கரை இல்லாத ஊரில் இலுப்பை இலை சர்கரை" என்றாகிவிடும் என்பது உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.