Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

7ஆம் அறிவு படம் வந்த பின் போதிதர்மனின் விக்கிபிடியா

Featured Replies

7ஆம் அறிவு படம் வந்த பின் போதிதர்மனின் விக்கிபிடியாவில் பல மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றது , இவர் தமிழர் என்று ஆணித்தரமாக கூறப்பட்ட தகவல்கள் மாற்றப்படுகின்றன , முதலாவது மாற்றம் ஏற்பட்ட பின் சந்தேகப்பட்டேன் , மீண்டும் மாற்றப்பட்டுள்ளது ஆதாரம் இணைத்துள்ளேன் நீங்களே அவதானியுங்கள்

இதை யார் செய்கிறார்கள் ? எவ்வளவு அக்கரை எடுக்கிறார்கள் என்று பாருங்கள்

நவம்பர் முதலாம் திகதி இருந்த விக்கிபிடியா

bodhidharman1.jpg

இன்று விக்கிபிடியா

Edited by hari

விக்கியில் யாரும் மாற்றங்களை செய்யலாம்.

Q:Am I supposed to be able to edit your site, even if I am not logged on?

A: Absolutely. Wikipedia is a free encyclopedia that anyone can edit. While anybody can make submissions, Wikipedia has a number of policies governing how articles are supposed to be written. See the policies and guidelines page for details.

இருவர் அண்மைய மாற்றங்களை செய்துள்ளனர் : http://en.wikipedia.org/w/index.php?title=Bodhidharma&action=history User:Donthomas மற்றும் User:Thamizhsasi ஆகிய இருவரைப்பற்றியும் விக்கியிலேயே தகவல்கள் இல்லை : Wikipedia does not have a user page with this exact name ஆனால் இன்னும் சில மாற்றங்களை செய்த User:Ghostexorcist இவரைப்பற்றிய தகவல்கள் உள்ளன.

  • தொடங்கியவர்

மாற்றியவர்களின் நோக்கம் தெளிவாக தெரிகின்றது , நீக்கப்பட்டவை

He was the third son of a Tamil king of the Pallava Dynasty. He belonged to the vanniyar caste.

Pallava dynasty was a Tamilian dynasty and Zvelebil (1987) proposed that Bodhidharma was born a prince of the Pallava dynasty in their capital of Kanchipuram[4]

  • தொடங்கியவர்
Donthomas இவர்தான் மேல் கூறிப்பிட்ட தகவலை மாற்றியுள்ளார் , பல்லவ அரச குடும்பத்தை இவர் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது இதை அகோதா நீங்கள் விக்கிபிடியாவில் இணைக்கமுடியுமா ? பக்கம் 5 http://www.buddhistdoor.com/download/pdf/linkokcollection_book05.pdf

மற்றங்களை தேடிப்பிடித்த ஹரிக்கும் மீண்டும் உண்மையானதை மாற்ற நினைக்கும் அகூதாவிற்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல தகவல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹரியையும், அகூதாவையும் போல....

பல விழிப்புணர்வாளர்கள் யாழில் தோன்ற வேண்டும்.

நல்லதை அன்றே செய்வது நல்லது. ஹரிக்கும் அகூதாவுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். உங்கள் தேடல் தொடரட்டும்..

  • தொடங்கியவர்

இந்த பக்கத்தை ஆதாரங்களுடன் எழுதியவருக்கு இந்த புத்தகத்தை அனுப்பியுள்ளேன் http://www.buddhistdoor.com/download/pdf/linkokcollection_book05.pdf

பல பக்கங்களில் உடனடியாக மாற்றங்களை ஏற்படுத்த அனுமதி உள்ளது. ஆனால், சில பக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்த அனுமதி தேவை. கணக்கு ஒன்றை ஆரம்பித்தேன். ஆனால், நான்கு நாட்கள் / பத்து சாதாரண மாற்றங்களின் பின்னரே என்னால் இதில் மாற்றத்தை உருவாக்கலாம் ^_^

ஆனாலும் ஹரியை போன்று விஷ்ணு என்பவரும் கீழ்வரும் மாற்றத்தை கேட்டுள்ளார். A proof that Bodhidharma is from Kanchipuram, Tamil Nadu and he is of Pallava dynasty, from Former Professor of University of Tokyo, Japan: http://www.purple.dt...e-Sea-Route.pdf ஆனால் இது ஆதாரம் இல்லை என கூறப்படுகின்றது, ஒருவரின் கருத்து என்கிறார்கள்.

~~~~ As per the 'The Lin Kok Collection', ref: http://www.buddhistdoor.com/download/pdf/linkokcollection_book05.pdf, and on page 1, it states, B o d h i d h a r m a w a s b o r n a r o u n d t h e y e a r 4 4 0 i n K a n c h i , t h e c a p i t a l o f t h e s o u t h e r n I n d i a n k i n g d o m o f P a l l a v a . H e w a s a B r a h m a n b y b i r t h a n d t h e t h i r d s o n o f K i n g S imh a v a rma n .

என்பதை இணைத்துள்ளேன், பார்க்கலாம்.

Edited by akootha

ஹரியினதும், அகூதாவினதும் முயற்சிகள் பெரும் பாராட்டுக்குரியவை...

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசாங்கம் செய்யும் வேலையை...

தனி மனிதர் செய்யும் போது... சிரமம் ஏற்படும்.

செம்மொழி, கொண்டாடிய தமிழுக்கு இந்தப் பிரச்சினை வரும்... என்று,

வாழும் வள்ளுவன் கருணாநிதியால்.... சிந்திக்க முடியாமல் போய்விட்டது.

இதுக்குள்ளை... அரசியல் சாணக்கியன், உலகத்தமிழனின் தலைவன் பட்டம் குடுத்தாச்சு. தூ.....

Why did Bodhidharma come to China?

7ஆம் அறிவு படம் வந்த பின் போதிதர்மனின் விக்கிபிடியாவில் பல மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றது , இவர் தமிழர் என்று ஆணித்தரமாக கூறப்பட்ட தகவல்கள் மாற்றப்படுகின்றன ,

தெரியாமதான் கேக்குறேன்... போதி தர்மன் ,, ஒரு தமிழன் என்னு நிரூபிக்கப்பட்டா......

என்னதான் பிரளயம் ..ஆவிடப்போவுது?

ஒண்ணை கவனிச்சோமா??

நடைபாதையில் &ஹைவேயில் கூட ,,மற்றவர்களுக்கு வழிவிடாதவர்கள் சீனர்கள்! அப்டி குறுக்க வந்து எவன்கூட மோதினாலும்,,,

ஸாரி கூட சொல்லாம போய்கிட்டே இருப்பவர்கள்!

அவர்கள் நாட்டில் தமிழன் புகழ்பத்தி ஆராய்ஞ்சாலும் ,,, ஒண்ணுமே ஆவபோறதில்ல..!

நிகழ்காலத்துல வாழ்ந்த, பிரபாகரனையே நினைவில வைச்சிருக்காத ,,, வைச்சிருக்க விரும்பாத .......

நம்ம டமிலு வீரப்பரம்பரை...........200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ........

போதி தர்மரை பத்தி திங்க் பண்ணுறது , எமோஷனல் ஆவுறது.......

ஜோக் ஆப் மிலேனியம்& .........வேஸ்ட் ஆப் டைம்!!

  • தொடங்கியவர்

வேஸ்ட் டைம் மட்டுமல்ல மனியும் தான் , உலகில் பல அரசுகள் பல கோடி செலவழிக்கின்றனர் அவர்களின் வரலாற்றை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்ல , உம்மை போல் பலர் தேவை இவர்களுக்கு புத்திமதி சொல்ல

வேஸ்ட் டைம் மட்டுமல்ல மனியும் தான் , உலகில் பல அரசுகள் பல கோடி செலவழிக்கின்றனர் அவர்களின் வரலாற்றை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்ல , உம்மை போல் பலர் தேவை இவர்களுக்கு புத்திமதி சொல்ல

உலக அரசுகள் எல்லாம் வரலாற்றை சேமிச்சு வைக்கிறது ,,, நீள்வது ,,,

அவங்க சந்ததிக்காய் ,, அவர்களுக்கா போராடியவர்களை கெளரவபடுத்ததானே.....!!!..

இந்த சந்ததியில வாழ்ந்த,,, எங்க மாவீரர்களுக்கே , சரியா .............

அஞ்சலி செலுத்த முடியவில்லையே.... பிறகு எப்டி? எமக்கு வரலாறு?

ஏன் ஹரி அண்ணா என்மேல இப்டி கோவ படுறீங்க?

கவலை வராதா?

உங்கள எல்லாரையும் போலவே ,,,எனக்கும் ரொம்ப பிடிக்கும்!! :)

  • கருத்துக்கள உறவுகள்

ஹரி,அகூதா ஆகியோரின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

http://kalaiy.blogspot.com/2011/11/elaa.html

போதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு!

இயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக "இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்" என்று அழைக்க முடியுமா? ஏழாம் அறிவு எனும் திரைப்படம், "போதி தர்மர் ஒரு தமிழன்" என்பதால், தமிழர்கள் எல்லோரும் பெருமைப் பட வேண்டுமென்கிறது. போதி தர்மன் என்ற புத்த பிக்குவின் பௌத்த மதப் பின்னணியை மறைத்து, அவனை ஒரு தமிழனாக மட்டும் பார்க்க வேண்டும் என்று கோருகின்றது. மதத்தை விட, மொழியே முக்கியம் என்று கருதும் தமிழ் இன உணர்வாளர்களுக்கு, போதி தர்மன் ஒரு தமிழ்- பௌத்தன் என்பதை ஏற்றுக் கொள்ள தயக்கம் ஏன்? தமிழ் இன உணர்வு என்ற போர்வையின் கீழ் மறைந்திருக்கும், இந்து மத உணர்வு இங்கே வெளிப்படுகின்றது.

சில வருடங்களுக்கு முன்னர் பகத் சிங் பற்றிய திரைப்படம் வெளியானது. அன்றிலிருந்து சீக்கிய தேசியவாதிகள், பகத்சிங்கை தமது நாயகனாக தூக்கிப் பிடிக்கின்றனர். பல வரலாற்று நாயகர்களின் பாத்திரம், அவர்களின் கொள்கைகளுக்கு முரணாக திரிபுபடுத்துவது உலகெங்கும் நடப்பது தான். இந்து மத சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த ராஜராஜ சோழன், தமிழ் தேசியவாதிகளால் மாபெரும் தமிழனாக புகழப் படுகிறான். போதி தர்மர், பௌத்த மதத்தை பரப்பிய மதகுரு என்ற உண்மை மறைக்கப் பட்டு வருகின்றது. 7 ஆம் அறிவு என்ற ஜனரஞ்சக சினிமாவின் புண்ணியத்தால், "ஒரு வீரத் தமிழனாக" மறு அவதாரம் எடுத்துள்ளார். தமிழர்கள் மறந்து விட்ட போதி தர்மனை அறிமுகப் படுத்தக் கிளம்பிய சினிமா, அந்த மகானின் வரலாற்றை திரிபு படுத்த வேண்டிய அவசியம் என்ன? வரலாற்றையும், நிகழ்கால கற்பனைக் கதையையும் கலந்து தயாரிப்பது சினிமாவில் வழமையானது தான். Davinci code என்ற ஆங்கிலத் திரைப்படம் கூட, அவ்வாறான கதை தான். அதிலே, வரலாற்றுக்கு இசைவாக நிகழ்கால கற்பனையை அமைத்திருப்பார்கள். ஆனால், 7 ம் அறிவு கூறும் 6 ம் நூற்றாண்டு வரலாற்றுக்கும், நிகழ்கால சம்பவங்களுக்கும் இடையில் எந்த வித தொடர்புமில்லை.

7 ஆம் ஆறிவு சினிமா பற்றி வரும் கடுமையான விமர்சனங்கள், அந்த படத்தை ஆதரித்த ரசிகர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 7 ம் அறிவு, ஒரு அபத்தமான கதையை வைத்து எடுக்கப் பட்டுள்ளமை அவர்களுக்கே தெரிகின்றது. அதனால் இப்போது, படத்திலே வரும் ஈழ ஆதரவு வசனங்களை மேற்கோள் காட்டி ஆதரவு தேடுகின்றனர். "தமிழீழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியதற்காக" ஜெயலலிதாவை ஆதரிக்குமாறு கோரியவர்கள் தான், இந்த நியாயத்தையும் முன் வைக்கிறார்கள். ஜெயலலிதா முதல் முருகதாஸ் வரை, சில வசனங்களை மட்டுமே பேசி தமிழனை ஏய்க்கலாம் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு பெரும்பான்மை ஓட்டுகளையும், முருகதாசுக்கு பெட்டி நிறைய பணத்தையும் அள்ளிக் கொடுப்பதற்கு, குறிப்பிட்ட சில வசனங்களே போதும். இதெல்லாம் ஈழப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து நடந்து வரும் கூத்துகள் தான். ஈழத்தில் தமிழன் செத்துக் கொண்டிருப்பான். தமிழகத்தில் அதைக் காட்டியே பிழைப்பு அரசியல் நடத்துவார்கள். 7 ஆம் அறிவு சினிமாவும், ஈழத் தமிழரின் பிணங்களைக் காட்டி காசு வசூல் பண்ணுகின்றது.

போதி தர்மரை தமது காவிய நாயகனாக கொண்டாடத் தொடங்கியிருக்கும் தமிழ் உணர்வாளர்கள்,அவர் ஒரு "தமிழ் பௌத்த பிக்கு" என்ற உண்மையை கூறுவதில்லை. ஏழாம் அறிவு திரைப்படமும் இந்த தகவலை வேண்டுமென்றே மறைத்துள்ளது. போதி தர்மர் பௌத்த மதத்தை சேர்ந்த மாமேதை என்பதாலும், சீனாவில் பௌத்த மத பிரசங்கம் செய்ததாலும் தான் உலகப் புகழ் பெற்றார். பௌத்த மதத்தின் ஒரு கிளையான, ஜென் (Zen) பிரிவை தோற்றுவித்தவரும் அவரே. இன்றைக்கும் சீனா, ஜப்பான் மட்டுமல்லாது, உலகெங்கும் வாழும் ஜென் பௌத்தர்கள் போதி தர்மரின் தத்துவ போதனைகளை கற்கின்றனர். 7 ஆம் அறிவு திரைப்படம், தமிழர்களுக்கு போதி தர்மரை அறிமுகப் படுத்துவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே, மேற்கத்திய நாடுகளில் நன்கு அறிமுகமானவர்.

போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும், அவரின் போதனைகள் அடங்கிய நூல்கள், ஆங்கிலத்திலும், பிற ஐரோப்பிய மொழிகளிலும் பதிப்பிக்கப் பட்டுள்ளன. இந்த நூல்கள் யாவும், மேலைத்தேய நகரங்களில் உள்ள புத்தகக் கடைகளில் கிடைக்கின்றன. சீனாவில் மட்டுமல்ல, மேலைத்தேய நாடுகளில் கூட, தலைசிறந்த தத்துவ அறிஞராக போற்றப்படும் போதி தர்மரை, ஏழாம் அறிவு திரைப்படம் அவமானப் படுத்தியுள்ளது. போதி தர்மரை குங்பூ ஆசிரியராகவும், சித்த வைத்தியராகவும் மட்டும் காட்டுகின்றது. போதி தர்மரின் போதனைகளை தேடிப் படிக்கும் தமிழன் அறிவாளியாகி விடுவான். அதன் பிறகு, ஒரு மாமேதையை தமிழகம் மறந்த காரணம் என்ன என்று ஆராயத் தொடங்கி விடுவான். அதற்கு இடம் கொடுக்கலாமா? தமிழனின் ஆறாவது அறிவை மழுங்கடிப்பது தானே, ஏழாவது அறிவு தயாரித்தவர்களின் நோக்கம்? புத்திசாலித் தமிழன் ஆபத்தானவன். அதனால், சிந்திக்கும் திறனன்ற "வீரத் தமிழன்" தான் அவர்களுக்கு தேவை.

"போதி தர்மரை எத்தனை தமிழர்களுக்கு தெரியும்?" இந்தக் கேள்வியை ஒரு ஆவணப் படத்தில் வருவது போன்று, திரைப் படத்தில் கேட்கின்றார்கள். தமிழர்கள் எல்லோரும் தெரியாது என்று கையை விரிக்கிறார்கள். அதே நேரம், சீனர்களுக்கு நன்கு தெரிந்துள்ளது. அதிலும் "ஒ யா.. குங்பூ மாஸ்டர்" போன்ற பதில்களை மட்டும் பதிவு செய்கிறார்கள். மேற்கொண்டு பேசுவதற்கு சீனர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. அதற்கு இடம் கொடுத்தால், சீனர்களை தமிழர்களை அழிக்க தேடி வரும் வில்லன்களாக காட்ட முடியுமா? விசாரணையை அத்துடன் நிறுத்திக் கொண்டு, சூர்யாவின் சர்க்கஸ் வித்தை, ஸ்ருதிஹாசனின் மரபியல் ஆராய்ச்சி என்று கதை நகருகின்றது.

சரி, அவர்கள் தான் விசாரிக்கவில்லை, ஒரு சராசரித் தமிழனுக்கு தேடல் இருக்காதா? அந்த அளவுக்கு தமிழன் புத்திசாலி இல்லை என்று தெரியாமலா, முருகதாஸ் ஏழாம் அறிவு படம் எடுத்திருப்பார்? முதலில், போதி தர்மர் காஞ்சிபுரத்தில் பிறந்தார் என்ற ஒற்றைத் தகவலை வைத்தே, அவரை தமிழன் என்று டைரக்டரால் நம்ப வைக்க முடிந்திருக்கிறது. போதி தர்மர், பௌத்தராக மதம் மாறிய பிராமணர் என்று, அவரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. "பார்ப்பனர்கள் என்போர் வடக்கே இருந்து வந்த ஆரியர்கள்," என்ற திராவிட கற்பிதங்களினால் உருவான தமிழ் தேசியம், பிராமண போதி தர்மரை தமிழர் என்று நம்புவது எங்கேயோ இடிக்கிறது. ஏழாம் அறிவு திரைப்படம் கூறுவது போல, "போதி தர்மர் ஒரு பல்லவ இளவரசர்" என்ற கூற்று எங்கேயும் நிரூபிக்கப் படவில்லை. இதனை வெறுமனே சினிமாக்காரர்களின் வரலாற்றுத் திரிபாக மட்டும் கருத முடியாது. ஆக்கிரமிப்பாளர்கள் திணிக்கும் ஆதிக்க அரசியலும் அதனுள் அடங்கியுள்ளது.

ஏழாம் அறிவு திரைப்படத்தில், போதி தர்மரின் மரபணு கொடுத்து உயிர்ப்பிக்கப் பட்ட கதாநாயகன் பேசும் வசனம் ஒன்று : "மதமாற்றம், இனமாற்றம் காரணமாக தமிழர்கள் தமது அறிவியல் செல்வத்தை இழந்து விட்டார்கள்." போதி தர்மர் காலத்து அறிவியல் பிறகு எப்படி காணாமல் போனது? அதனை யார் அழித்தார்கள்? தமிழர்களை யார் மதமாற்றம், இனமாற்றம் செய்தார்கள்? மரபணுவால் உயிர்ப்பிக்கப் பட்ட போதி தர்மரின் மறு அவதாரத்திற்கு இந்த உண்மைகள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமளிக்கின்றது. ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் புத்த மதம் பரவியிருந்தது.

தமிழகத்தில் பௌத்தமும், சமணமும் பெரும்பான்மை தமிழ் மக்களின் மதங்களாக இருந்தன. தமிழ் மொழிக்கு சிறப்புச் சேர்க்கும் ஐம்பெரும் காப்பியங்களில், சிலப்பதிகாரம் தவிர்த்து மற்ற நான்கும் பௌத்த மதப் பின்னணியில் எழுதப் பட்டுள்ளன. ஐரோப்பியர்கள் வானாந்தரங்களில் வாழ்ந்த காலத்தில், பீகாரில், நாலந்தா பல்கலைக்கழகம் இயங்கிக் கொண்டிருந்தது. (கி.மு. 5 - கி.பி. 1193) அதில் கல்வி கற்பதற்கு சீனாவில் இருந்தும் மாணவர்கள் வந்தனர். ஏழாம் அறிவு திரைப்படத்தில் காட்டப்படும் காஞ்சிபுரம் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது, நாலந்தா பல்கலைக்கழகமும் பௌத்த மத மேற்படிப்புக்காக உருவாக்கப் பட்டவை. அங்கே அறிவியல் பாடங்களும் போதிக்கப் பட்டன.

வடக்கே இஸ்லாமியரான துருக்கிய இனத்தவர்களின் படையெடுப்பினால், நாலந்தா பல்கலைக்கழகமும் அதன் அறிவியல் செல்வங்களும் அழிக்கப் பட்டன. தெற்கில், இந்துக்களான பல்லவர்களின் படையெடுப்பினால் காஞ்சிபுரத்தின் அறிவுச் செல்வங்கள் அழிக்கப் பட்டன. பல்லவர்கள் பௌத்த, சமண மடாலயங்களை தீ வைத்துக் கொளுத்தினார்கள். சமணக் கோயில்களும், பௌத்த விகாரைகளும் இந்துக் கோயில்களாக மாற்றப் பட்டன. பௌத்த, சமண மதங்களை சேர்ந்த தமிழர்கள், பலவந்தமாக இந்துக்களாக மதமாற்றம் செய்யப் பட்டனர். மதம் மாற மறுத்தவர்கள் படுகொலை செய்யப் பட்டனர்.

சைவ மத நாயன்மார்களான சம்பந்தரும், சுந்தரரும், திருநாவுக்கரசரும் கட்டாய மதமாற்றத்திலும், இனப்படுகொலையிலும் ஈடுபட்டவர்கள். தமிழ் பேசும் பௌத்தர்களையும், சமணர்களையும் கழுவேற்றிக் கொன்ற கதைகளை தேவாரங்களிலும் பாடி வைத்துள்ளனர். இந்தக் கொடுமைகள் எல்லாம் பல்லவர் காலத்தில் நடந்தேறின. தமிழர்கள் தமது தொன்மையான அறிவியலை இழந்த வரலாறு இது தான். காஞ்சிபுரத்தில் பௌத்த மத தமிழர்கள் வளர்த்த அறிவுச் செல்வத்தை அழித்த பல்லவ அரச வம்சம்சத்தில், போதி தர்மர் எப்படிப் பிறந்திருக்க முடியும்? இது ஒரு மாபெரும் வரலாற்று மோசடி அல்லவா? தமிழர்களின் எதிரிகளை நல்லவர்களாக காட்டுவதற்காக வரலாற்றை திரிக்கும் ஏழாம் அறிவு, ஈழத் தமிழர்களுக்காக உருகுகிறது. ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை தான் ஞாபகம் வருகின்றது.

டாவின்சி கோட் திரைப்படம் எடுத்தவர்கள், கிறிஸ்தவ நாட்டை சேர்ந்தவர்கள். அதன் பெரும்பான்மையான பார்வையாளர்களும் கிறிஸ்தவர்கள் தான். இயேசுவின் புதல்வி பற்றி கற்பனை கலந்து படம் தயாரிக்கும் தைரியம் அவர்களுக்கு இருந்தது. டாவின்சி கோட் தயாரித்தவர்கள் நினைத்திருந்தால், நிகழ்கால அரசியளுக்கேற்றவாறு முஸ்லிம்களை வில்லன்களாக காட்டியிருக்கலாம். ஆனால், அந்த திரைப்படத்தின் வில்லன்கள் கிறிஸ்தவ திருச்சபையை சேர்ந்தவர்கள். கிறிஸ்தவ கடும்போக்காளர்களின் எதிர்ப்பை மீறி, திரைப்படத்தை வெளியிட்டார்கள். ஏழாம் அறிவு தயாரித்தவர்களுக்கு, அந்த தைரியம் கிடையாது. மரபணு கொடுத்து உயிர்ப்பித்த நவீன போதி தர்மன் யாரை பழிவாங்கத் துடித்திருப்பார்? தமிழ்நாட்டில் பல்லவர்களின் வாரிசுகளை தேடிச் சென்று வேட்டையாடியிருப்பார். போதி தர்மன் எதற்காக, தனக்கு இன்றைக்கும் தெய்வ ஸ்தானம் வழங்கி கௌரவிக்கும் சீனர்களுடன் முரண்பட வேண்டும்?

திரைப்படத்தில் சீன வில்லனின் ஹிப்னோடிச வித்தைகளை கண்டு வியந்த சூர்யாவுக்கு, சுருதிஹாசன் கூறுவார்: "இதுவும் தமிழர்களின் நோக்குவர்மம் கலை. போதிதர்மரால் கொண்டு செல்லப்பட்டது." இதைக் கேட்ட சூர்யா: "எப்பேர்ப்பட்ட துரோகம்" என்று கொதிப்பார். யார் யாருக்கு துரோகம் செய்தார்கள், என்பது மரபணுவால் உயிர்ப்பிக்கப்பட்டவருக்கு தெரியாதா? களரி (குங்பூ), நோக்குவர்மம் (ஹிப்னோடிசம்) போன்ற தமிழரின் தொன்மையான கலைகள், இந்து மன்னர்களான பல்லவர்களின் காலத்தில் தானே புறக்கணிக்கப் பட்டன? அதனால் தானே, இன்றுள்ள தமிழர்களுக்கு அது பற்றி எதுவும் தெரியவில்லை? அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், போதி தர்மர் சொல்லிக் கொடுத்த கலைகளை சீனர்கள் இன்றைக்கும் மறக்கவில்லை என்பது தமிழர்களுக்கு பெருமையில்லையா? போதி தர்மர் தென்னிந்தியாவில் இருந்து வந்த பௌத்த துறவி என்பதை, சீனர்கள் இன்றைக்கும் மறக்கவில்லை.

போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் சீனத் திரைப்படத்தை இணையத்திலேயே பார்வையிடலாம்.(Bodhidharma - The Master of Zen) சீனத் திரைப்படத்தில், தென்னிந்தியாவில் இருந்து வந்த போதி தர்மர், தியானத்தையும், குங்க்பூ தற்காப்புக் கலையையும் போதிப்பது விபரமாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. இதற்கு மாறாக, ஏழாம் அறிவு என்ற தமிழ்த் திரைப்படம், போதி தர்மரின் வரலாற்றைத் திரித்து அவரை அவமதிக்கிறது. சுருக்கமாக சொன்னால், "தமிழனுக்கு துரோகமிழைக்கும் தமிழனை வீரனாகக் காட்டுவது" தான் ஏழாம் அறிவின் திரைக்கதை.

ஏழாம் அறிவு திரைப்படத்தின் இறுதியில், சூர்யா தமிழனின் உணர்வைத் தூண்டும் வசனங்களை அடுக்குவார். யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததால், தமிழர்களின் அறிவுடைமை இழக்கப் பட்டது. உண்மை தான். ஆனால், போதி தர்மனுக்கு, 6 ம் நூற்றாண்டில் தான் படித்த காஞ்சிபுரம் நூலகம் எரிக்கப்பட்ட வரலாறு தெரியவில்லை. யாழ்ப்பாண நூலகத்தை எரித்த சிங்கள இனவெறியர்களினதும், காஞ்சிபுரம் நூலகத்தை எரித்த இந்து மதவெறியர்களினதும் நோக்கம் ஒன்றாகவே இருந்துள்ளது. ஏழாம் அறிவு எடுப்பதற்கு முன்னர், போதி தர்மனை பற்றி ஆராய்ச்சி செய்த டைரக்டர் முருகதாசுக்கு இது தெரியாமல் இருக்க முடியாது. அதையெல்லாம் சொன்னால், தணிக்கைக் குழுவினர் கத்திரிக்கோல் போட்டு விடுவார்களா? "பக்கத்து நாட்டில் தமிழனை அழித்த ஒன்பது நாடுகளின் துரோகம்" பற்றி சொல்லத் தெரிந்தவர்களுக்கு, தைரியமாக அந்த நாடுகளை பெயரிடத் தெரியவில்லை. வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் இந்திய இராணுவ அதிகாரிகள் களத்தில் நின்றுள்ளனர். செய்மதிப் படங்களை வழங்கியுள்ளனர். ஈழத் தமிழர்கள் இந்தியாவை தமது தாய்நாடு போன்று நம்பினார்கள். ஒருவர் எமது நம்பிக்கைக்கு எதிராக நடப்பது தான் துரோகம்.

ஏழாம் அறிவு, இந்திய அரசு மீதான விமர்சனங்களை கவனமாகத் தவிர்க்கின்றது. அதற்கு காரணம் இல்லாமலில்லை. ஈழப்போரை ஆரம்பித்து வைத்ததும், முப்பது வருடங்களின் பின்னர் அதனை முடித்து வைத்ததும் இந்தியா தான். "இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை என்பதாலும், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தொப்புள்கொடி உறவுகளாலும்," இந்தியா தமது பக்கம் நிற்கும் என்று ஈழத்தமிழர்கள் நம்பினார்கள். உண்மையில், இந்திய மேலாதிக்க நலன்களுக்காக, ஈழத்தமிழர்கள் பொம்மைகளாக ஆட்டி வைக்கப் பட்டனர். சீனாவுடனான வர்த்தகப் போட்டியில், ஈழத்தமிழர்களை இந்தியா சார்பானவர்களாக தொடர்ந்து வைத்திருக்கவே விரும்புகின்றது. தமிழகத்தில் சில அதிரடி அரசியல்வாதிகளும், திரையுலக பிரமுகர்களும் பொம்மலாட்டக் காரர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

ஹாலிவூட்டில் அரசியல் கலந்த ஜனரஞ்சக திரைப் படங்கள் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் ஆலோசனையுடன் எடுக்கப் படுவது இரகசியமல்ல. ஏழாம் அறிவு புகட்டும் தமிழ் இனவுணர்வு சாயம் படத்திலேயே வெளுத்து விடுகின்றது. புத்தரை விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றாக திணிக்கத் தெரிந்த இந்து மதமல்லவா? போதி தர்மரை காட்டி, தமிழனின் மூளைக்குள் இந்துத்துவா சிந்தனை திணிக்கப் படுகின்றது. ஏழாம் அறிவு வெறும் பொழுதுபோக்குப் படமல்ல. திரைப்படத்தைப் பார்க்கும் கோடிக்கணக்கான தமிழர்களை வசியப்படுத்தி, இந்திய மேலாதிக்க திட்டங்களுக்கு ஆதரவாக வென்றெடுக்கும் உள்நோக்கம் கொண்டது. அது தான் "நோக்கு வர்மம்". ஒரு திரைப்படம் மூலம், தமிழர்களின் கண்களைக் கட்டும் கண்கட்டி வித்தை.

*********************************

முன்னைய பதிவு :

- "ஏழாம் அறிவு" திரைப்படம் மறைக்கும் உயிரியல் போர் வரலாறு

  • தொடங்கியவர்

உலக அரசுகள் எல்லாம் வரலாற்றை சேமிச்சு வைக்கிறது ,,, நீள்வது ,,,

அவங்க சந்ததிக்காய் ,, அவர்களுக்கா போராடியவர்களை கெளரவபடுத்ததானே.....!!!..

இந்த சந்ததியில வாழ்ந்த,,, எங்க மாவீரர்களுக்கே , சரியா .............

அஞ்சலி செலுத்த முடியவில்லையே.... பிறகு எப்டி? எமக்கு வரலாறு?

ஏன் ஹரி அண்ணா என்மேல இப்டி கோவ படுறீங்க?

கவலை வராதா?

உங்கள எல்லாரையும் போலவே ,,,எனக்கும் ரொம்ப பிடிக்கும்!! :)

அது உண்மைதான் , எங்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த உலகில் எங்காவது ஒரு இடம் ஒதுக்கி வருடத்தில் ஒரு நாளில் உலகத்தமிழர்கள் அனைவரும் சென்று வழிபட வேண்டும் என்பதுதான் எனது ஆசை ,

ஹரியினதும், அகூதாவினதும் முயற்சிகள் பெரும் பாராட்டுக்குரியவை அத்துடன் அவர்கள் இருவருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஹரி அண்ணாக்கு எனது பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழையும், தமிழர்களையும் அழிக்க பல கட்டம் கட்டமாக நடவடிக்கைகள் மேற்கொள்கின்றார்கள் இதுவரைக்கும் அவர்களால் அழிக்க முடியவில்லை காரணம் ஈழத்தமிலரும்தான் ஆனாலும் இதுவரைக்கும் பாதுகாத்து வரும் நாம் இனிமேல் வழ்ப்பதர்க்கும் முயற்சிக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்கிறேன் என தப்பாய் நினைக்காதீங்கோ போதிவர்மா தமிழன் தானே தமிழ் நாட்டில் இருந்து தமிழ்ர்களுக்கு தன்னுடைய கலைகளை பழக்காமல் ஏன் சீனா போனார்?

கொஞ்சம் புத்தியும் காசும் வந்தவுடன் தமிழர்கள் இல்லாத இடமா பார்த்து மூ பண்ணுவது தமிழர்களின் இயல்பு.

இதுக்கும் மிஸ்டர் போதிதர்மரோ... பனக்காயோ விதிவிலக்கல்ல...

போதிதர்மன் ஒரு தமிழ் பௌத்தன்தான். பல்லவர் காலத்தில் பெருகிய பௌத்தர் சமணர்களுக்கு எதிரான இந்துக்களின் பரப்புரைகள், அவர்களது திறமைகளைக் கூட ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற முடிவிற்குக் கொண்டு வந்திருக்கிறது. அதனால்தான் ஆள் எஸ்கேப்.

படம் செய்திகளைக் காட்டும் பரிமாணம் மிகமிகப் பெரியது. அப்பப்பா என்னமா கார்களையெல்லாம் பார்வையாலேயே டொங்லீ மோத வைக்கிறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.