Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிஸ் - லாசப்பலில் தேசவிரோதிகளால் மாவீரர் நாள் அறிவொப்பொட்டிகள் கிழிப்பு !

Featured Replies

பிரான்சில் தமிழர் வர்த்தக மையமான லாசப்பல் பகுதியில் புதன்கிழமை இனந்தெரியாத தேசவிரோதிகளால் மாவீரர் நாள் அறிவொப்பொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளன.

தமிழர் வர்த்தக நிலையங்களுக்குள் அத்துமீறி புகுந்த இந்தக் கும்பல் மாவீரர் நாள் அறிவொப்பொட்டிகளை கிழித்ததோடு எச்சரித்தும் உளள்ளனர்.

இச்செயல் குறித்து மக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்து அத்துமீறிய இச்செயல் குறித்து பிரென்சுக் காவல்துறையிடம் முறையிடுவதற்கு சில வர்த்தகர்கள் எண்ணியுள்ளனர்.

தமிழர் தாயகத்தில் மாவீரர் கல்லறைகள் சிங்கள் காடையர்களால் அழிக்கப்பட்டுவரும் நிலையில் அந்த மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுக்கான அறிவொப்பொட்டிகள் கிழிக்கப்பட்டமை சிங்கள காடையர்களின் செயலுக்கு ஒப்பனதென தேசிய செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமையும் தமிழர் போராட்டத்தை பலவீனப்படுத்தும் நோக்கிலான கையெடொன்றும் தமிழர் வர்த்தக பகுதியில் இனந்தெரியா தேசவிரோத சக்திகளால் விநியோகிக்கப்பட்டிருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சிதைக்கும் நோக்கில் எழுதப்பட்டிருந்த குறித்த கையேடு சிங்கள புலனாய்வுக்கு கைக்கூலிகளால் விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மாவீரர் நாள் நெருங்கி வரும் நிலையில் மக்களை குழப்பும் இத்தகைய செயற்பாடுகள் தேசவிரோத சக்திகளால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

...... சிங்கள புலனாய்வுக்கு கைக்கூலிகளால் .....

.... ஆ ஆ ஆ .... தலைவரோரை இறுதிவரை இருந்திட்டு ஐரோப்பாவிற்கு காலிடே வந்த இடத்தில் ... மாவீரர் நாள் வசூலையும் பார்க்க உலாவும் ... "தலைமை செயலகம்" ... வீரசூரர்களை தானே குறிப்பிடுகிறீர்கள்!!!! :o

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் வந்தால் தான் இவை அடங்குவினம் என்றால் ஒன்றும் செய்ய ஏலாது.... இன்றைய இளைஞர்கள் தான் அந்தக் கடமையைச் செய்ய வேண்டி வரும். அதற்கு முதல் இந்த விடயத்தை உணர்ச்சி ரீதியாக அணுகமுதல்.. சட்ட ரீதியாக.. அந்தந்த நாடுகளின் சட்டதிட்டத்திற்கு அமைய அணுகுதல் நன்று.

இந்த வேளையில்.. அந்தந்த நாடுகளில்.. அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஊடாக.. உலகிற்கு ஒன்றை நாங்கள் தெளிவாகச் சொல்லிக் கொள்ள வேண்டும்.. நாங்கள் பயங்கரவாதத்தையோ.. வன்முறையையோ விரும்பவில்லை. அவற்றை நாங்கள் கைவிட்டு விட்டதன் பிரதிபலன்.. எங்கள் மீதான பயங்கரவாதமும்.. வன்முறையும்.. அடக்குமுறையும். இதே காரணத்திற்காகவே.. இதனை எதிர்கொள்ளவே நாம் ஆயுதம் தூக்கினோம். வன்முறையை வன்முறையின் மூலம் எதிர்கொண்டோம். உலகம்.. எங்கள் மீதான அனைத்து வித அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் நிறுத்திக் கொள்ள எம்மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளவர்களை கட்டுப்படுத்த வேண்டும். இன்றேல்.. மீண்டும்.. நாமும் அதே பாதையை தெரிவு செய்வதே ஒரே மார்க்கமாக இருக்கும். அப்போது இந்த உலகம்.. அந்தப் பாதையை பயங்கரவாதம் என்று காட்டக் கூடாது. அடக்குமுறையில் இருந்தான விடுதலைக்கான போராட்டமாக சரியாக இனங்காண வேண்டும். எம்மை அங்கீகரித்து நிற்க வேண்டும். இதுவே அநேக தமிழ் மக்களின் விருப்பு. :(:icon_idea:

Edited by nedukkalapoovan

பிரபாகரன் எல்லாம் வரவேண்டாம் ... இப்பதானே பிரான்ஸில் அடையாரும் புலிகளில் சேர்ந்திருக்கிறார்களாம்!! ... போனகிழமையும் வாள் வீச்சு!! ... அவர்களை கொண்டு மீண்டும் தாக்குதலுக்கு ஆயத்தம் போல் இருக்கிறது ... நொண்டிச்சாட்டு தேடுகிறார்கள்!!!

சில நாட்களுக்கு முன் யாழில் ஒரு உறுப்பினர் ...

.... தற்போது புலமெங்கும் மாவீரர்நாள் எனும் பெயரில் மாஜாஜாலங்களுடன் திடீரென தோன்றி உலாவுவோரின் முகமூடிகள் கிழிந்து உண்மை வெளிவர, தமிழ்த்தேசியம் இன்னொரு 30 ஆண்டுகளுக்கு பின் போயிருக்கும் .... சாபம்!!!!

புலத்தில் கூட ....

பிரபாகரன் இருக்கும்போது ... எதிரி, துரோகிகள்/ஒட்டுக்குழுக்களாக மட்டுமே எம் மத்தியில் செயற்பட முடுந்தது!

இன்று ... எதிரி, புலிகளாக வந்து செயற்பட தொடங்கியிருக்கிறான்!!!

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் கூட ....

பிரபாகரன் இருக்கும்போது ... எதிரி, துரோகிகள்/ஒட்டுக்குழுக்களாக மட்டுமே எம் மத்தியில் செயற்பட முடுந்தது!

இன்று ... எதிரி, புலிகளாக வந்து செயற்பட தொடங்கியிருக்கிறான்!!!

புலிகள் சரணடைந்த அந்த கணத்தில் இருந்து.. அவர்களால் அதுவாக இருக்க முடியாது. இருக்கவும் விட மாட்டார்கள். அந்த வகையில்.. அவர்களை இன்னும் புலிகள் என்று நாம் அடையாளம் காட்டிக் கொண்டிருப்பது தான் ஆபத்தானது. அதுதான் இத்தனை பிரச்சனைகளுக்கும் அத்திவாரம். சரணடைந்த எல்லோரும் ஆபத்தான காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்றில்லை. சிலர் விரும்பியோ விரும்பாமலோ.. அச்சுறுத்தல்களின் பெயரிலோ ஈடுபடுகிறார்கள். ஆனால் வெளிநாட்டில் அவர்களின் செயல்களை எதிரிக்கு துணை போகும் செயல்களை அனுமதிக்க முடியாது. அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை. வெளிநாடுகளில் தவறான வழியில்.. எதிரிக்கு உழைப்பவர்கள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருப்பதே இதற்கு தீர்வாகும். அது முன்னாள் புலியாகட்டும்.. பிரபாகரனின் முன்னாள் வலது கையாகட்டும். தலைவரே சில விடயங்களில் தன்னைத் தவிர வேறு யாரையும் அதிகம் நம்பியதில்லை..! சொந்த மனைவியையே நம்பியதில்லை.

இது கொஞ்சம் ஓவர்

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் ஓவர்

1987 ஒக்டோபருக்கு சென்று வாருங்கள்.. ஓவரா.. உண்மையா என்று புரியும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியாயின் விசமிகள் சன நடமாட்டமில்லாத வேளையில் தான் இதனைச் செய்திருக்கமுடியும். வேற்று இன மக்களைப் பயன்படுத்தியும் இதைச் செய்திருக்கலாம்.

ஆக மொத்தத்தில் சுவரொட்டிகளை அகற்றவேண்டுமென்று நினைத்தவர்களை எவராயிருப்பினும் அவர்களின் திட்டத்திற்கு மாற்றுத்திட்டமொன்றை வகுத்து செயற்பட்டால்

ஏன் சுவரொட்டிகளைக் கிழித்தோம் என்று அவர்களே வெட்கும்படி செய்யமுடியும்.

- சுவரொட்டிகளை சிறிய அளவில் பதித்து அதை வீடுகள் தோறும் சென்று வினியோகிக்கலாம் அல்லது தபாற்பெட்டிகளில்கூட இடலாம்.

- மின்னஞ்சலில் அல்லது தபாலில் அனுப்பலாம்.

- கடைகளில் உட்புறமாக அல்லது ஆட்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டலாம்.

நக்குகிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன என்று தமிழில ஒரு பழ மொழி இருக்குது.இந்த நோட்டிசுகளை கிழிச்சவர்களுக்கு அதிலிருந்த தேசியத்தலைவருடைய படமும் மாவீரச் செல்வங்களுடைய நினைவுத் தூபி யின்ரை படமும் தெரியேல்லை.எப்படி தாயத்திலை சிங்களபடையினருக்கு மாவீரர் தூயிலும் இல்லங்களை இடிச்சு அழிக்கிற போது அதில் விதைக்கப்பட்டிருப்பவர் உன்னதமான மனிதர்கள் என்ற நினைப்பு வருவதில்லையோ அதைப் போலத்தான் இவர்களுக்கும்.இவர்கள் நேர்மையான சரியான ஆட்களாக இருந்தால் எதற்காக சுவடொட்டிகளை கிழிக்கவேண்டும்.மக்கள் மீது இவர்களுக்கு நம்பிக்கை இருந்தால் அவர்கள் எது உண்மை பொய் என்று தீர்மானிக்க விட்டுவிடலாம் தானே? மக்களுக்கு தகவல் சென்று சேரக் கூடாது என்று தடுப்பதன் மூலம் இவர்கள் தான் பொய்யான ஆட்கள் உண்மை தெரிந்தால் மக்கள் தங்கள் நிகழ்வுகளுக்கு வரமாட்டார்கள் என்று பயப்படுவது தெரிகிறது. மாவீரன் கஜன் உருவாக்கிய ஈழமுரசிலிருந்து அவரது படத்தையும் மாவீரன் நாதனது படத்தையும் தூக்கி எறிந்த இவர்களுக்கு மாவிரர்கள் தொடர்பாட சுவரொட்டிகளை கிழித்து வீசுவது ஒன்றும் பெரிய விடையமில்லை.

இனியும் சிங்களவனின் கை கூலி என்று ஏமாற்றாது இது புலத் தமிழர்களையும் சொத்துக்களையும் ஆள்வதுக்கான அதிகாரபோட்டியும் தான். எப்படி இருந்தாலும் இப்படி ஒரு இனத்துக்கு விடுதலை என்ன வேண்டி இருக்கு? அதுவும் புலத்து பு**களு என்ன சம்ந்தம் வடகிழக்கு மக்களின் அரசியலில்?

இந்த சகோதரிபோல் எத்தனை சகோதர சகோதரிகள் தங்கள் உறவுகள் தாயக விடுதலைக்கு தம்மை அர்பணித்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செய்வதைக்கூட சிலர் அனுமதிக்கமாட்டார்கள் போல் உள்ளதே

விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் ஆயுதங்களை மௌனிப்பதாக விடுத்த அறிவிப்புடன் தமது அனைத்துக் கட்டமைப்புக்களையும் கலைப்பதாக அறிவித்திருக்க வேண்டும்.

குறிப்பாக அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவற்றை.

தங்களின் அதிகார போட்டிக்காக இந்த அமைப்புக்கள் தமிழின ஒற்றுமையைக் குலைக்கும் மிகக்கேவலமான செயற்பாட்டை செய்து வருகின்றன.

இதுவரை ஒருவருக்கு ஒருவர் துரோக முத்திரை குத்தி வந்த இவர்கள் இப்போது ஒரு புனித நிகழ்வையே சீரழிப்பதற்கான செயற்பாடுகளில் இறங்கி விட்டனர்.

சுவரொட்டி கிழிப்பை துயிலும் இல்ல அழிப்புடன் ஒப்பிடும் தலைமைச் செயலகத்தைச் சேர்ந்தோர் மாவீரர் நாள் நிகழ்விற்கே போட்டி நிகழ்வு வைப்பதை எதனுடன் ஒப்பிடுவது?

இந்த சகோதரிபோல் எத்தனை சகோதர சகோதரிகள் தங்கள் உறவுகள் தாயக விடுதலைக்கு தம்மை அர்பணித்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செய்வதைக்கூட சிலர் அனுமதிக்கமாட்டார்கள் போல் உள்ளதே

இந்த அக்கா கூப்பாடு போடுவது வழமைாயன மாவீரர் நாள் நிகழ்விற்கு எதிராக நடாத்தப்படவுள்ள போட்டி நிகழ்விற்கான சுவரொட்டி கிழித்ததற்காக. இந்த போட்டி நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவில் இவாவும் ஒருத்தர்.

தனது மூன்று உடன்பிறப்புக்களும் செய்த அந்த ஒப்பற்ற உயிர்கொடைக்கு அவா கொடுக்கிற நல்ல மரியாதை!

Edited by மின்னல்

தேசியத்தலைவரின் நிலையை கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் இவர்களை எல்லாம் இயக்கத்தில் வைத்து கொண்டு நடத்த எவ்வளவு கஸ்ரப்பட்டிருப்பார் மூன்று வருடங்களுக்குள் இவர்கள் போடும் ஆட்டம் இருக்கே இவர்களை அழிக்க யாரும் தேவையில்லை இவர்களே அதையும் பார்த்துக்கொள்வார்கள் அனால் வேதனை என்னவெனில் இவர்கள் தாங்கள் சண்டையில் இறந்தாலும் தமிழ் ஈழத்தை மீட்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மாவீராகியுல்லார்கள் அவர்களுக்கு இவர்கள் என்ன பதில் கூறப்போகின்றார்கள் ?

நக்குகிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன என்று தமிழில ஒரு பழ மொழி இருக்குது.இந்த நோட்டிசுகளை கிழிச்சவர்களுக்கு அதிலிருந்த தேசியத்தலைவருடைய படமும் மாவீரச் செல்வங்களுடைய நினைவுத் தூபி யின்ரை படமும் தெரியேல்லை.எப்படி தாயத்திலை சிங்களபடையினருக்கு மாவீரர் தூயிலும் இல்லங்களை இடிச்சு அழிக்கிற போது அதில் விதைக்கப்பட்டிருப்பவர் உன்னதமான மனிதர்கள் என்ற நினைப்பு வருவதில்லையோ அதைப் போலத்தான் இவர்களுக்கும்.இவர்கள் நேர்மையான சரியான ஆட்களாக இருந்தால் எதற்காக சுவடொட்டிகளை கிழிக்கவேண்டும்.மக்கள் மீது இவர்களுக்கு நம்பிக்கை இருந்தால் அவர்கள் எது உண்மை பொய் என்று தீர்மானிக்க விட்டுவிடலாம் தானே? மக்களுக்கு தகவல் சென்று சேரக் கூடாது என்று தடுப்பதன் மூலம் இவர்கள் தான் பொய்யான ஆட்கள் உண்மை தெரிந்தால் மக்கள் தங்கள் நிகழ்வுகளுக்கு வரமாட்டார்கள் என்று பயப்படுவது தெரிகிறது. மாவீரன் கஜன் உருவாக்கிய ஈழமுரசிலிருந்து அவரது படத்தையும் மாவீரன் நாதனது படத்தையும் தூக்கி எறிந்த இவர்களுக்கு மாவிரர்கள் தொடர்பாட சுவரொட்டிகளை கிழித்து வீசுவது ஒன்றும் பெரிய விடையமில்லை.

அப்ப இதுவரைக்கும் ஒற்றுமையாக நடைபெற்று வந்த மாவீரர் நாள் நிகழ்விற்கு போட்டியாக இன்னொரு நிகழ்வை வைக்கிறதை என்னவென்று சொல்லுறீங்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் ஆயுதங்களை மௌனிப்பதாக விடுத்த அறிவிப்புடன் தமது அனைத்துக் கட்டமைப்புக்களையும் கலைப்பதாக அறிவித்திருக்க வேண்டும்.

100 % உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

mark-hamblin-donkey-peering-over-a-stone-wall-uk.jpg

பசிக்குது என்று வால் போஸ்டரை சாப்பிட்டு போட்டுதுகள் .. விடுங்கப்பா.. :icon_idea:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் ஆயுதங்களை மௌனிப்பதாக விடுத்த அறிவிப்புடன் தமது அனைத்துக் கட்டமைப்புக்களையும் கலைப்பதாக அறிவித்திருக்க வேண்டும்.

அதற்கான அவசியம் இருந்திருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் புலத்தில் அனைத்துலக தொடர்பகம், தலமைச்செயலகத்தில் பொறுப்பிலிருந்த பலர் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரே இலங்கை அரசின் பக்கம் இழுக்கப்பட்டுடவிட்டனர். அதே போல் தாயகத்தில் புலனாய்வுத்துறையின் முக்கிய உறுப்பினர்கள் இலங்கை அரசின் பக்கம் சென்றுவிட்டனர். இதன் காரணமாகவே திடீர் என்று பல ஆண்டுகள் ஒதுக்கிவைக்கப்படட கே பி அனைத்துலக விவகாரங்களுக்காக புலிகளாகளால் அறிவிக்கப்படடார். ஆயுதங்களை மொளனிப்பது என்ற நிலைக்கும் மிக மோசமான இறுதிக்கட்டத்திற்கும் யார் யார் பின்புலத்தில் காரணமோ அவர்களே இன்று முண்டியடித்துக்கொண்டு நிற்கின்றனர்.

(இறுதியாக மக்களுடன் மக்களாகச் சென்ற புலனாய்வுத்துறை உறுப்பினர்கள் இரண்டுநாட்களில் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு வவுனியா நகரில் சுதந்திரமாக நடமாடத்தொடங்கிவிட்டனர். இது வன்னியில் உள்ள பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்த வெளிப்படையான விடயம். அதேபோல் இந்தியா மற்றும் கொழும்பு ஊடாக வெளிநாடுகளுக்குச் தப்பிச் சென்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் புலனாய்வுத்துறையினரே)

இந்த இடியப்பச் சிக்கலான பிரச்சனைக்குள் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று அடயாளம் காணுதல் என்பது எக்காலத்திலும் சாத்தியமில்லை. இத்தால் யார்மீதும் எவர் செயற்பாட்டின் மீதும் மக்கள் நம்பிக்கை கொள்ளப்போவதில்லை. முதலில் இவர்கள் அனைவரையும் தூக்கி எறிவதே அவசியம். இவர்களுக்கு செவி சாய்க்கவோ இவர்கள் பின்னால் செல்வவோ கூடாது. எந்த ஒரு அமைப்பு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மாவீரர் குடும்பங்களுக்கும் புனர்வாழ்வுக்கு உதவி செய்கின்றதோ அவர்களுக்கே மாவீரர் தினத்தை வழிநடத்தும் தகுதி இருக்கின்றது. மற்ற அனைத்துத் தரப்பையும் தூக்கி எறிவதே ஆரோக்கியம். அவ்வாறு வழிநடத்த யாரும் இல்லாத பட்சத்தில் மாவீரர் தினத்தில் கும்மியடிப்பதில் இருந்து விலகி மாவீரர் பெயரால் தொண்டு நிறுவனங்களுக்கு உதவிகளை செய்வதே அவர்களுக்கான மரியாதை. இனிமேல் காலங்களில் மறைமுகமான செயற்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த ஒரு அமைப்பும் மறைமுகமாக செயற்பட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான அரசியல் சு+ழல் இல்லை. மறைமுகமாகச் செயற்படும் எவர் பின்னாலும் செல்லத்தேவையில்லை.

முன்னாள் புலி இன்னாள் புலி தலைவருடன் நின்றவர்கள் தலமைச் செயலகம் தொடர்பகம் நெடியவன் கொடியவன் எவனாக இருந்தாலும் தூக்கியெறிவது அவசியமானது. புலம்பெயர் தேசங்களில் மறைமுகமான எந்தச் செயற்பாட்டிற்கும் அவசியம் இல்லை. மறைமுகமான செயற்பாடு என்பது விடுதலையின் முயற்ச்சியை தொடர்ந்து பயங்கரவாதமாக மாற்றிக்கொண்டிருப்பதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/7y_KuMLuL7c

அதற்கான அவசியம் இருந்திருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் புலத்தில் அனைத்துலக தொடர்பகம், தலமைச்செயலகத்தில் பொறுப்பிலிருந்த பலர் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரே இலங்கை அரசின் பக்கம் இழுக்கப்பட்டுடவிட்டனர். அதே போல் தாயகத்தில் புலனாய்வுத்துறையின் முக்கிய உறுப்பினர்கள் இலங்கை அரசின் பக்கம் சென்றுவிட்டனர். இதன் காரணமாகவே திடீர் என்று பல ஆண்டுகள் ஒதுக்கிவைக்கப்படட கே பி அனைத்துலக விவகாரங்களுக்காக புலிகளாகளால் அறிவிக்கப்படடார். ஆயுதங்களை மொளனிப்பது என்ற நிலைக்கும் மிக மோசமான இறுதிக்கட்டத்திற்கும் யார் யார் பின்புலத்தில் காரணமோ அவர்களே இன்று முண்டியடித்துக்கொண்டு நிற்கின்றனர்.

(இறுதியாக மக்களுடன் மக்களாகச் சென்ற புலனாய்வுத்துறை உறுப்பினர்கள் இரண்டுநாட்களில் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு வவுனியா நகரில் சுதந்திரமாக நடமாடத்தொடங்கிவிட்டனர். இது வன்னியில் உள்ள பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்த வெளிப்படையான விடயம். அதேபோல் இந்தியா மற்றும் கொழும்பு ஊடாக வெளிநாடுகளுக்குச் தப்பிச் சென்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் புலனாய்வுத்துறையினரே)

ஹிந்தியக் காட்டுமிராண்டி ஜனநாயக அரசியல்வாதிகளின் சிந்தையும் இதைப் போலவே இருக்கும்.

அப்ப இதுவரைக்கும் ஒற்றுமையாக நடைபெற்று வந்த மாவீரர் நாள் நிகழ்விற்கு போட்டியாக இன்னொரு நிகழ்வை வைக்கிறதை என்னவென்று சொல்லுறீங்கள்??

போட்டி மாவீரர் தினம் என்று சொல்லும் தம்பி வேறோரு திரிக்காக நான் எழுதிய தை கொஞ்சம் படியுங்கள் தம்பி !

தமிழர் தாயகத்தில் போரினால் பெற்றோர்களை இழந்த 80ஆயிரம் குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் 16 இருந்து 17 ஆயிரம் பேர் மாவிரர்களுடைய அல்லது மாவிரர் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள்.இதில் 8ஆயிரம் பேர் கல்வியை முற்றாக நிறுத்திவிட்டார்கள்.அதிலும் 4ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் பேர் வரை ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படுகிறார்கள்.கிழக்கு மாகாணத்தில் மட்டும் 1800 குழந்தைகள் அதுவும் மாவிரர் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக அடிமை வாழ்வுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்141 குழந்தைகள் அநாதரவான நிலையில் பிச்சை எடுக்கிறார்கள்.

இந்த உரியவர்கள் கடந்த இரண்டு வருடத்தில் இந்தக் குழந்தைகளுக்காக என்ன செய்தார்கள்?எந்தவித சித்தரவதையும் அச்சுறுத்தலும் இல்லாத ஐரோப்பிய சிறைகளில் இருந்த தங்களது சகாக்களின் வழக்கு செலவுக்காக மக்களிடம் நிதி திரட்டிய இவர்கள் இந்தக் குழந்தைகளின் நலனுக்கக மாவிரர் குடும்ப நிதியம் என்ற ஒன்றை உருவாக்கியிருக்கலாம் அல்லவா?

இன்றைக்கு இந்த உரியவர்களிடம் இருக்கும் பேராட்டத்தின் பேரால் சேர்த்த சொத்துக்கள் இந்தக் குழந்தைகளின் பசிப் பிணியை தீர்க்கப் போதாதா?அவர்களுக்கு கல்வியறிவு ஊட்டப் போதாதா?

நம்பிக்கை ஓளியும் யாழ்கள உறவுகள் சிலர் சேர்ந்து உருவாக்கிய நேசக்கரம் செய்ததில் 100ல் ஒரு பங்காவது இந்த உரியவர்கள் செய்திருக்கிறார்களா? நேசக்கரத்தக்குக்கு நெருக்கடி கொடுத்ததும் நம்பிக்கை ஒளியை துரோகள் ஆக்கியதும் தானே இவர்கள் செய்த வேலை.

'மாவிரர்கள் புனிதமானவர்கள்.'

அவர்களுடைய புனிதத்தை கெடுக்காதீர்கள்

'மாவிரர் தினத்தோடு விளையாடாதீர்கள்' என்று ஓங்கி உரத்துக் கத்தும் இவர்கள் அந்தப் புனித்தை மதித்திருக்கிறார்களா?

ஓரு மாவிரனின் பெற்றோர் தனது பிள்ளைக்கு மனமுருகி அஞ்சலித்து சமர்ப்பணம் செய்யும் பூவை திருட்டுத்தனமாக எடுத்துவந்து இன்னொரு மாவிரனின் பெற்றோருக்கு விற்பதற்கு பெயர் தான் புனிதமா?

ஓரு பூவை 2 யுரோவுக்கு அல்லது பவுண்சுக்கு மாவீரரின் பெற்றோருக்கு விற்று காசாக்கிக் கொண்டு அது போராட்டுத்துக்கான நிதி சேகரிப்பு என்று நியாயப் படுத்த தெரிந்த இந்த உரியவர்களுக்கு போராட்டத்துக்கு தங்களது பிள்ளைகளையே கொடுத்த மாவிரர்களின் பெற்றோர்களிடம்; ஒரு நூறு யுரோ அல்லது பவுண்ஸ் கேட்டால் மறுப்பேதும் சொல்லாமல் தந்திருப்பார்கள் என்பதில் ஏன் நம்பிக்கையில்லாமல் போனது?

சுரி 2009 முள்ளிவாயக்கால் வரை தான் நிதி தேவைப்பட்டது என்பதை ஏற்றுக் கொண்டாலும் 2009,2010 மாவிரர் தினங்களிலும் இதே தவறைத்தானே அதாவது அஞ்சலித்து வைத்த புவை திரும்ப எடுத்து விற்கும் வேலை தானே செய்யப்பட்டது.தாயகத்தில் இருந்து வந்து இதில் கொண்டு இந்தத் தவறை தட்டிக் கேட்ட மாவிரர் குடும்பங்களை துரோகிகள் குழப்பவாதிகள் என்று தானே இந்த உரியவர்கள் முத்திரை குத்தினார்கள்!

மாவீரர்கள் என்பவர்கள் தேசத்தின் சொத்து.அதேபோல மக்களே புலிகள் புலிகளே மக்கள். இது தான் உண்மை. வுpடுதலைப் புலிகள் இயக்கம் என்பது தனி ஒரு பிரிவுக்கு சொந்தமானதல்லது.அது தேசியத்தை நேசிக்கும் அனைவருக்கும் பொதுவானது. தேசியத்தலைவர் என்று சொல்கிற போது அவர் தனி ஒரு பிரிவினருடைய தலைவர் அல்ல! அவர் தமிழ் மக்களுடைய தலைவர்! மக்களை பிளவு படுத்தவும் தேசிய செயற்பாட்டாளர்களுக்கும் மக்களுக்கும் துரோகி பட்டம் கொடுக்கவும் அவர்களது படங்களையும் விபரங்களையும் ஊடகங்களில் வெளியிட்டு எதிரிக்கு காட்டிக் கொடுக்கவும் யாருக்கும் உரிமை இல்லை! அது எந்த விதத்திலும் தேசியச் செயற்பாடும் இல்லை.

ஏனவே மாவிரர்கள் வியாபாரப் பொருட்கள் அல்ல!இன்றைய காலகட்டத்தில் யார் அனைவரையும் ஓரணியில் இணைத்து மாவீர்களது நினைவுகளை உண்மையாக நினைவு கூர முற்படுகிறார்களோ எவரொல்லாம் மாவீரர் குடும்பங்களை பராமரிக்க வேண்டும் அவர்களது குழந்தைகளக்கான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனை கொண்டிருக்கிறார்களே அதற்காக உழைக்கிறார்களோ அவர்கள் நடத்தும் மாவிரர் நிகழ்வுகள் தான் உண்மையான மாவிரர் நிகழ்வாக இருக்கும்

மாவிரர்களுடைய சுவரொட்டிகளை கிழித்தெறியும் உரியவர்களுக்கும் மாவிரர்களுடைய துயிலும் இல்லங்களை சிதைத்து அழித்த சிங்கள் பேரினவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?

இப்ப ருத்திரா அண்ணை தங்களை ஆதரித்து வெளியிட்டதைப் போல ஒரு போலி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அக்கா கூப்பாடு போடுவது வழமைாயன மாவீரர் நாள் நிகழ்விற்கு எதிராக நடாத்தப்படவுள்ள போட்டி நிகழ்விற்கான சுவரொட்டி கிழித்ததற்காக. இந்த போட்டி நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவில் இவாவும் ஒருத்தர்.

தனது மூன்று உடன்பிறப்புக்களும் செய்த அந்த ஒப்பற்ற உயிர்கொடைக்கு அவா கொடுக்கிற நல்ல மரியாதை!

மின்னல் அண்ணாச்சி அவ உரிய இடத்தில தான் இருக்கிறா நீங்கள் ஏனாம் பொணான்டோ அண்ணாச்சியோட இரகசிய சந்திப்பு நடத்திறயள்.பாரிசு 2 லை உள்ங கோட்டல்லை அப்படி என்ன 2 மணி நெரமா கதைச்சனிங்கள்.

என்ன உறவுகளே பெர்னாண்டோ யாரென்று தெரியில்லையா அவர் தான் பாரிசிலுள்ள சிறீலங்கா தூதரகத்திலுள்ள ........அதிகாரி

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் ஒரு தரம் மாவீரர் இரண்டுதரம் மாவீரர் மூண்டுதரம்... மணியடிக்கமுதல் யாராவது முதல் ஏலத்தை எடுக்கவும். :( :( :(

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.