Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி உங்களுக்கு நகைச்சுவை????அல்லது உங்கள் உரையாடல்கள் நகைச்சுவை?இத்தலைப்பு இடம்பெற்ற இடம்தான் சிரிப்போம்சிறப்போம் பகுதி...ஆனால் அவ்வளவும் விசமம்.????

என்ன அண்ணா பிரச்சனை எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக எழுதுங்கள் அது தான் தமிழனுக்கு அழகு

  • Replies 1.3k
  • Views 97.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

shock-face.jpg

ஆ...... இங்கேயுமா?

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி தனது வா.வா.கட்சியை அம்போ... என விட்டுப்போனதால்....

தலைமையின்றி தத்தளிக்கும் வா.வா.கட்சியினரை ப.மே.க.வுக்கு வரும்படி அழைக்கின்றோம். :D:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அவர்கள் ஆரம்பித்து உறவுகளின் அமோகமான ஆதரவுடன் வீறு நடைபோட்ட இத்திரியில் நெடுக்ஸ் அவர்களின் விடுவித்தல் யா ம ச வை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நெடுக்ஸ் அவர்கள் தன்னை விடுவித்துக் கொண்ட பின்னர் யா ம ச வின் நிலை பற்றி

யா ம ச வின் உறுப்பினர்களின் கருத்துக்களை கட்சியை ஆரம்பித்தவர் என்ற முறையில்

அறிய வேண்டிய கடமை எனக்கு உண்டு.

நெடுக்ஸ் அவர்கள் ஆரம்பித்த களமாளுமன்றத் தேர்தலில் அவருடை பங்களிப்பு

இல்லாமல் யா ம ச பங்கு கொள்வதா இல்லையா என்பதை யாழ்கள மன்னர்கள் சபையின்

உறுப்பினர்கள் அறியத் தரவும்.

நெடுக்ஸ் அவர்கள் பொறுப்புணர்வுடன் தனது கடமையைச் செய்ய

மீண்டும் வரவேண்டும் என்று யா ம ச வேண்டிக் கொள்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி தனது வா.வா.கட்சியை அம்போ... என விட்டுப்போனதால்....

தலைமையின்றி தத்தளிக்கும் வா.வா.கட்சியினரை ப.மே.க.வுக்கு வரும்படி அழைக்கின்றோம். :D:icon_mrgreen:

எமது தலைவர் தலைக்கு கீழ் வேலை கூடியதால் தற்காலிகமாக ஓய்வில் சென்றுள்ளார்.அவர் மீன்டு வரும் வரை நான் காபாந்து தலைவராக பொறுப்பேற்றுள்ளேன். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் நன்பர்களே. :)

நிழலி தனது வா.வா.கட்சியை அம்போ... என விட்டுப்போனதால்....

தலைமையின்றி தத்தளிக்கும் வா.வா.கட்சியினரை ப.மே.க.வுக்கு வரும்படி அழைக்கின்றோம். :D:icon_mrgreen:

நீங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தை சரியாக வாசிக்கவில்லை போலும்.

கலைக்கப்பட்ட ஒரு கட்சியின் உறுப்பினர்கள், முதலாவதாகப் பதியப்பட்டுள்ள கட்சியில் சேர்ந்ததாக முடிவு எடுக்கப்படும் என '8 ஆ' யாப்புக் கூறுகிறது. அதற்கமைய 'வா வா' கட்சியின் உறுப்பினர்களை உள்வாங்கியுள்ளோம். 19 ஆம் சட்டத் திருத்தத்தையும் தாண்டி கூடுதல் அதிகாரம் மிக்க பதவிகளை அவர்களுக்கு பகிர்ந்தளிப்பது பற்றி கட்சித் தலைமை மந்திர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. :D

கைவிடப்பட்டவர்களின் கண்ணீர் துடைப்பதே எங்கள் கடமை.

http://www.youtube.com/watch?v=jGrH2-0J7wA

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தை சரியாக வாசிக்கவில்லை போலும்.

கலைக்கப்பட்ட ஒரு கட்சியின் உறுப்பினர்கள், முதலாவதாகப் பதியப்பட்டுள்ள கட்சியில் சேர்ந்ததாக முடிவு எடுக்கப்படும் என '8 ஆ' யாப்புக் கூறுகிறது. அதற்கமைய 'வா வா' கட்சியின் உறுப்பினர்களை உள்வாங்கியுள்ளோம். 19 ஆம் சட்டத் திருத்தத்தையும் தாண்டி கூடுதல் அதிகாரம் மிக்க பதவிகளை அவர்களுக்கு பகிர்ந்தளிப்பது பற்றி கட்சித் தலைமை மந்திர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

எமது தலைவர் தலைக்கு கீழ் வேலை கூடியதால் தற்காலிகமாக ஓய்வில் சென்றுள்ளார்.அவர் மீன்டு வரும் வரை நான் காபாந்து தலைவராக பொறுப்பேற்றுள்ளேன். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் நன்பர்களே. :)

வா.வா.கட்சியின் கால்பந்து தலைவராக சஜீவன் பொறுப்பெடுத்துள்ளார்.

நீங்க எப்படி, அந்தக் கட்சியினரை உங்கள் கட்சிக்கு, இழுப்பீர்கள்.

இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. இதை எதிர்த்து சுப்ரீம் கோட் போக... ப.மே.க. தீர்மானித்துள்ளது.

சகோதரன் சஜீவன் வெறும் கால் பந்து விளையாடுவதாக போக்குக் காட்டுகிறார். அவருக்கு விளையாட்டு துறை அமைச்சர் பதவி தயாராகிக் கொண்டு இருக்கிறது. வெறும் இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் அல்ல நாங்கள். :lol:

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன் சஜீவன் வெறும் கால் பந்து விளையாடுவதாக போக்குக் காட்டுகிறார். அவருக்கு விளையாட்டு துறை அமைச்சர் பதவி தயாராகிக் கொண்டு இருக்கிறது. வெறும் இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் அல்ல நாங்கள். :lol:

இந்தத்துறை அலுத்துப்போச்சு. :rolleyes: .மற்றது எங்கட கட்சியோட சீன்டுறது நெருப்போட விளையாடுறதுக்கு சமன் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்சி ஒன்றை அதன் ஸ்தாபகர் தன்னிச்சையாக கலைக்க.. சுயாதீன தேர்தல் திணைக்களம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் நான் பதவி விலகிக் கொள்ள முன் வந்திருக்கிறேனே.. தவிர.. களமாளுமன்றத்தின் செயற்பாடுகளை கள உறவுகள் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. அது அவர்களது பெரு விருப்பின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்ட ஒன்று ஆகும். அந்த வகையில் அதை அவர்கள் மேலும் தொடர முடியும். அதற்கு என் பூரண ஒத்துழைப்பு இருக்கும். அதுமட்டுமன்றி.. என்னால் எந்த இடையூறும் இருக்காது என்பதை உறுதி செய்கிறேன்.

கட்சிக் கலைப்பு: ஒரு கட்சியை அதனை ஸ்தாபித்தவர் தவிர வேறு எவரும் கலைக்க முடியாது. கட்சியை ஸ்தாபித்தவர் கட்சிக் கலைப்பை செய்ய வேண்டின்.. அது குறித்து சுயாதீன தேர்தல் திணைக்களத்திற்கு தன் நிலைப்பாட்டை அறிவித்து.. அதனை சுயாதீன தேர்தல் திணைக்களம் அங்கீகரித்தால் மட்டுமே அந்தக் கட்சிக் கலைப்பு செல்லுபடியாகும்.

தீட்டப்பட்டுள்ள யாழ் களமாளுமன்ற அடிப்படை விதிமுறைகளுக்கு அமைய.. ஒரு கட்சியை கலைக்க மேற் சொன்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால்.. அது மேற்கொள்ளப்படாமையும்.. சுயாதீன தேர்தல் திணைக்களமே குற்றவாளியாக்கப்பட்டுள்ள நிலையிலும் அதன் தலைமைப் பதவியில் நான் நீடிப்பது மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. அந்த வகையில் தான் நான் அப்பதவியில் இருந்து என்னை விடுவித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்தேன்.

மேலும் கள உறவுகளின் பலமான ஆதரவோடு உருவாக்கப்பட்ட களமாளுமன்றத் திட்டம் கலைக்கப்பட மாட்டாது. அப்படிக் கலைக்கப்பட வேண்டின்.. அது அதற்குரிய விதிமுறைகளுக்கு அமையவே மேற்கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமன்றி... வா. வா கட்சியின் கலைப்பை சுயாதீன தேர்தல் திணைக்களம் அங்கீகரிக்கவில்லை. காரணம்.. அது தனிநபர் ஒருவர் மீதான குற்றச்சாட்டின் பெயரில்.. கட்சி அங்கத்தவர்களின் விருப்பு அறியாமல் எடுக்கப்பட்டுள்ள ஒரு முடிவாக இருப்பதால்.. சுயாதீன தேர்தல் திணைக்களத்தின் தற்காலிக தலைவர் என்ற வகையில் இந்த அறிவிப்பை விடுக்கிறேன்.

களமாளுமன்ற தேர்தலுக்கு முன்னர்.. சுயாதீன தேர்தல் திணைக்களத்திற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடத்தப்படும். அதில் தேர்தெடுக்கப்படும் கள உறவே.. தொடர்ந்து களமாளுமன்றத்துக்கான சுயாதீன தேர்தல் திணைக்களச் செயற்பாடுகளை கவனித்துக் கொள்வார். களமாளுமன்றுக்கான முதல் தேர்தலையும் நடாத்துவார்.

யாழ் களமாளுமன்றம்.

சுயாதீன தேர்தல் திணைக்கள.. இடைக்காலத் தேர்தல்... கார்த்திகை 2011.

சுயாதீன தேர்தல் திணைக்களத்தின் புதிய தலைவராக.. கள உறவுகளினால்.. அதிகம் பிரேரிக்கப்படும் கள உறவு பதவி ஏற்கலாம். இதில் ஏலவே அந்தப் பதவியில் இருந்தவரை பிரேரிக்க முடியாது. இருவருக்கு சம பிரேரிப்புக் கிடைப்பின்.. அவர்களின் தனிப்பட்ட விருப்பு அறியப்பட்டு.. அவர்கள் இருவரிடையேயும் பணிகள் பகிரப்படலாம். இரண்டுக்கு மேற்பட்டோர்.. இந்தப் பதவியை அலங்கரிக்க முடியாது.

இந்த தேர்தல்.. 48 மணி நேர பிரேரிப்புக்கு முன் வைக்கப்படுகிறது.

இது 28-11-2011 GMT 2300 இல் இருந்து ஆரம்பித்து.. 30-11-2011 GMT 2300 வரை அமுலில் இருக்கும். இந்தக் கால இடவெளியில் அதிகம் தடவைகள் அதிகம் கள உறவுகளால் பிரேரிக்கப்படும் உறவு தானாக அந்தப் பதவியை ஏற்றுக் கொள்வதனூடு.. எனது பதவி விலகல் உறுதி செய்யப்படும். அப்படி எவரும் பிரேரிக்கப்படா விடத்தும்.. எனது தற்காலிக பதவி.. 48 மணி நேரங்களில் முடிவுறுத்தப்படும். அந்த வகையில் யாரேனும்.. ஒரு கள உறவு முன் வந்து இதனை பொறுப்பேற்று.. இந்த திட்டத்தை செயற்படுத்தி இதர கள உறவுகளின் பெரு விருப்பை சாத்தியப்படுத்துமாறு அன்போடும்.. வினயத்தோடும் கேட்டுக் கொள்கின்றேன்.

யாழ் கள உறவுகளால் இப்பதவிக்கு பிரேரிக்கப்படும் உறவு.. ஏதாவது ஒரு கட்சியை சார்ந்தவராக இருந்தால்.. அவர் அந்த கட்சியை விட்டு பகிரங்கமாக விலகிக் கொண்டதாக அறிவித்த பின்னரே.. சுயாதீன தேர்தல் திணைக்களப் பதவியை அலங்கரிக்க முடியும்.

மீண்டும் 48 மணி நேரங்களின் பின் உங்களின் பிரேரிப்பு இறுதி முடிவுகளோடு சந்திப்பேன். தங்களின் மேலான ஆதரவிற்கும் பங்களிப்பிற்கும் மிக்க நன்றிகள். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன் சஜீவன் வெறும் கால் பந்து விளையாடுவதாக போக்குக் காட்டுகிறார். அவருக்கு விளையாட்டு துறை அமைச்சர் பதவி தயாராகிக் கொண்டு இருக்கிறது. வெறும் இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் அல்ல நாங்கள். :lol:

இந்தத்துறை அலுத்துப்போச்சு. :rolleyes: .மற்றது எங்கட கட்சியோட சீன்டுறது நெருப்போட விளையாடுறதுக்கு சமன் :lol:

சஜீவன் எங்கள் ப.மே.க. கட்சிக்கு வந்தால்... நிதி அமைச்சர் பதவி தரப்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்றம்.

சுயாதீன தேர்தல் திணைக்கள.. இடைக்காலத் தேர்தல்... கார்த்திகை 2011.

சுயாதீன தேர்தல் திணைக்களத்தின் புதிய தலைவராக.. கள உறவுகளினால்.. அதிகம் பிரேரிக்கப்படும் கள உறவு பதவி ஏற்கலாம். இதில் ஏலவே அந்தப் பதவியில் இருந்தவரை பிரேரிக்க முடியாது. இருவருக்கு சம பிரேரிப்புக் கிடைப்பின்.. அவர்களின் தனிப்பட்ட விருப்பு அறியப்பட்டு.. அவர்கள் இருவரிடையேயும் பணிகள் பகிரப்படலாம். இரண்டுக்கு மேற்பட்டோர்.. இந்தப் பதவியை அலங்கரிக்க முடியாது.

இந்த தேர்தல்.. 48 மணி நேர பிரேரிப்புக்கு முன் வைக்கப்படுகிறது.

இது 28-11-2011 GMT 2300 இல் இருந்து ஆரம்பித்து.. 30-11-2011 GMT 2300 வரை அமுலில் இருக்கும். இந்தக் கால இடவெளியில் அதிகம் தடவைகள் அதிகம் கள உறவுகளால் பிரேரிக்கப்படும் உறவு தானாக அந்தப் பதவியை ஏற்றுக் கொள்வதனூடு.. எனது பதவி விலகல் உறுதி செய்யப்படும். அப்படி எவரும் பிரேரிக்கப்படா விடத்தும்.. எனது தற்காலிக பதவி.. 48 மணி நேரங்களில் முடிவுறுத்தப்படும். அந்த வகையில் யாரேனும்.. ஒரு கள உறவு முன் வந்து இதனை பொறுப்பேற்று.. இந்த திட்டத்தை செயற்படுத்தி இதர கள உறவுகளின் பெரு விருப்பை சாத்தியப்படுத்துமாறு அன்போடும்.. வினயத்தோடும் கேட்டுக் கொள்கின்றேன்.

யாழ் கள உறவுகளால் இப்பதவிக்கு பிரேரிக்கப்படும் உறவு.. ஏதாவது ஒரு கட்சியை சார்ந்தவராக இருந்தால்.. அவர் அந்த கட்சியை விட்டு பகிரங்கமாக விலகிக் கொண்டதாக அறிவித்த பின்னரே.. சுயாதீன தேர்தல் திணைக்களப் பதவியை அலங்கரிக்க முடியும்.

மீண்டும் 48 மணி நேரங்களின் பின் உங்களின் பிரேரிப்பு இறுதி முடிவுகளோடு சந்திப்பேன். தங்களின் மேலான ஆதரவிற்கும் பங்களிப்பிற்கும் மிக்க நன்றிகள். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

-------

அதுமட்டுமன்றி... வா. வா கட்சியின் கலைப்பை சுயாதீன தேர்தல் திணைக்களம் அங்கீகரிக்கவில்லை. காரணம்.. அது தனிநபர் ஒருவர் மீதான குற்றச்சாட்டின் பெயரில்.. கட்சி அங்கத்தவர்களின் விருப்பு அறியாமல் எடுக்கப்பட்டுள்ள ஒரு முடிவாக இருப்பதால்.. சுயாதீன தேர்தல் திணைக்களத்தின் தற்காலிக தலைவர் என்ற வகையில் இந்த அறிவிப்பை விடுக்கிறேன்.

-------

வா.வா. கட்சியின் தலைவரின் ராஜினாமா செல்லாது என்று அறிவித்த தேர்தல் திணக்களத்தின் தீர்ப்பு வரவேற்கத் தக்கது.

ஒருவர் நினைத்தவுடன் கட்சி ஆரம்பிக்கவும், கலைக்கவும் முடிந்தால்... அப்பாவி தொண்டர்களை மற்றக் கட்சிக்காரன் பார்த்து கேலி செய்வான். கட்சித் தலைவர் நிழலி தொடர்ந்து கட்சிக்கு தலைமை தாங்கி வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் வந்து உட்கார வேண்டும் என்று ப.மே.க. கேட்டுக் கொள்கின்றது. :D:lol:

Edited by தமிழ் சிறி

இப்படி எழுதி எனது எதிர்காலத்திட்டத்திற்கு ஆப்பா? :o

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எழுதி எனது எதிர்காலத்திட்டத்திற்கு ஆப்பா? :o

வரும் தேர்தலில் ப.மே.க. கட்சி தான்... அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து, அரசு கட்டிலில் ஏறும் என்று பத்திரிகைகளும், ஜோதிடர்களும் கூறுவதுடன் வல்வை தான் ஆயுட்கால பிரதமர் என்று புலநாய்வுத்துறையின் அறிக்கையும் வந்த நிலையில் சந்தேகம் வேண்டாம் தலைவி. நிழலியின் வா.வா. கட்சியினர் எதிர்க்கட்சி வரிசையில் தான்... உட்காரப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை என்ர சக தோழர்கள்....

யாழ் காதலர் கட்ச்சி வாழ்க்க

யாழ் காதலர் கட்சிக்குத் தான் மக்கள் ஓட்டு கூட.....

யாழ் காதலர் கச்சிதான் இப்ப முதல் இடத்தில நிக்குது.... நாங்கள் தான் ஆச்சிய பிடிப்போம் என்ரதை பெருமையுடன் சொல்லி கொள்ள விரும்புகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

எமது தலைவர் தலைக்கு கீழ் வேலை கூடியதால் தற்காலிகமாக ஓய்வில் சென்றுள்ளார்.அவர் மீன்டு வரும் வரை நான் காபாந்து தலைவராக பொறுப்பேற்றுள்ளேன். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் நன்பர்களே. :)

நிழலி என்ற பெயரை பாவித்து மோசடி நடத்திருக்கு, நானும் நிழலியின் அவதாரை பார்த்து அவர்தான் என நம்பிவிட்டேன்,

அத்துடன் அவரின் கணக்கிற்கு பல கோடிகளை அனுப்பிட்டேன் கட்சி உறுப்பினர்களை உல்லாசமாக வைத்திருக்கனும் என்று கேட்டபடியால், கட்சிக்காக சேர்ந்த பல கோடிகளுடன் கம்பி நீட்டிவிட்டார் கேடி போலி நிழிலி,

இதை காபாந்து தலைவர் சஜூவன் காடபியின் பாதுகாப்பு அணியினரை வைத்து உண்மையான நிழலியை வலை வீசி தேடி வருகிறார்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அவர்கள் ஆரம்பித்த களமாளுமன்றத் தேர்தலில் அவருடை பங்களிப்பு

இல்லாமல் யா ம ச பங்கு கொள்வதா இல்லையா என்பதை யாழ்கள மன்னர்கள் சபையின்

உறுப்பினர்கள் அறியத் தரவும்.

தொடர்ந்து பங்குபற்ற வேண்டும் என்பதே இந்த மன்னரின் அவா..! :icon_mrgreen:

சிலர் தொட்டாற்சிணுங்கிகள் போல இருப்பதற்கு மன்னர்கள் சபை பொறுப்பேற்க முடியாதல்லவா? :lol:

மன்னர்களுக்கென்று ஒரு கௌரவமும், ஆளுமையும் ஆற்றலும் இருக்கின்றது. அவற்றை விட்டுவிலக முடியாதென்பது இந்த மன்னரின் கருத்தாகும்..! :lol:

நாங்கள் தான் ஆச்சிய பிடிப்போம் என்ரதை பெருமையுடன் சொல்லி கொள்ள விரும்புகிறேன்

ஏன் பையா.. ஆச்சி அவ்வளவு வேகமா ஓடுவாவே? :wub::rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுயாதீன தேர்தல் திணைக்களம் பணவிரயம் செய்து நடாத்தும் தேர்தல் களத்திற்கு ஒரு நன்மையையும் தராது என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட யாழ் கள உயர் குழாம் அமைப்பு தீர்மானம் இயற்றியுள்ளது. தீர்மானத்தைச் செயற்படுத்த எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என்ற கோதாவில் பதவி விலகிய பின்னரும் தேர்தலைக் கோரிய முன்னாள் சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளரின் கள உறுப்புரிமையையும் முறையற்ற தேர்தலையும் இரத்துச் செய்யுமாறு எமது அமைப்பின் தலைவர் சாத்திரியாரைப் பணிக்கின்றேன். அவ்ர் எனது உத்தரவை சிரமேற்கொண்டு செயற்படுத்துவார்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பங்குபற்ற வேண்டும் என்பதே இந்த மன்னரின் அவா..! :icon_mrgreen:

சிலர் தொட்டாற்சிணுங்கிகள் போல இருப்பதற்கு மன்னர்கள் சபை பொறுப்பேற்க முடியாதல்லவா? :lol:

மன்னர்களுக்கென்று ஒரு கௌரவமும், ஆளுமையும் ஆற்றலும் இருக்கின்றது. அவற்றை விட்டுவிலக முடியாதென்பது இந்த மன்னரின் கருத்தாகும்..! :lol:

ஏன் பையா.. ஆச்சி அவ்வளவு வேகமா ஓடுவாவே? :wub::rolleyes::lol:

ஆட்ச்சி :lol::wub::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பையனின் கட்சி ஆச்சியையும் அவவின் கட்சியுடன் இழுத்துக் கொண்டு ஓடுவதால் இனி நாடாளு மன்றத்தில் மன்னர்கள் ஆட்சிதான்! :lol:

மாமன்னா செங்கோலுடன் வருகிறார் , பராக், பராக்!! :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுயாதீன தேர்தல் திணைக்களம் பணவிரயம் செய்து நடாத்தும் தேர்தல் களத்திற்கு ஒரு நன்மையையும் தராது என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட யாழ் கள உயர் குழாம் அமைப்பு தீர்மானம் இயற்றியுள்ளது. தீர்மானத்தைச் செயற்படுத்த எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என்ற கோதாவில் பதவி விலகிய பின்னரும் தேர்தலைக் கோரிய முன்னாள் சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளரின் கள உறுப்புரிமையையும் முறையற்ற தேர்தலையும் இரத்துச் செய்யுமாறு எமது அமைப்பின் தலைவர் சாத்திரியாரைப் பணிக்கின்றேன். அவ்ர் எனது உத்தரவை சிரமேற்கொண்டு செயற்படுத்துவார்.

சுயாதீன தேர்தல் திணைக்களம்.. களமாளுமன்ற அடிப்படை விதிகளுக்கு உட்பட்டது.

அந்த வகையில்.. அதன் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதான எனது அறிவிப்பு விடப்பட்டு.. அதற்கான மாற்றுத் தலைமை உருவாக்கப்படும் வரை.. அது களமாளுமன்ற விதிப்படி தேர்தல் மூலமே சாத்தியம் என்ற அடிப்படையில்.. 48 மணி நேர தற்காலிக பதவி அடிப்படையில்.. சுயாதீன தேர்தல் திணைக்களத் தலைமைப் பதவிக்கு தேர்தலைக் கோரி உள்ளேன்.

மற்றும்படி.. பதவி விலகலுக்கான அறிவிப்பு.. 48 மணி நேரத்தில் அமுலாகும்..! அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. களமாளுமன்ற அடிப்படை விதிகளைப் பின்பற்றியே பதவி விலகலைச் செய்ய முடியும். எடுத்தவுடன் தன்னிச்சையாக முடிவெடுக்கும் சர்வாதிகாரப் போக்கையும்.. மற்றவர்களின் பொது விருப்புக்கும்.. கருத்துகளுக்கு மதிப்பளிக்காத தன்மையையும் மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகம் மறுதலிக்கிறது..!

பண விரயம் என்ற போர்வையில் கட்சிகளின் பொது விதிகளுக்கு அப்பால் கட்சிகள் தாந்தோன்றித் தனமான சர்வாதிகார நிலையில்.. பிரகடனங்களை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளை சுயாதீன தேர்தல் திணைக்களம் மற்றும் களமாளுமன்றின் ஆதரவோடு... களமாளுமன்ற ஆட்சிப்பீடம் மட்டுமே உருவாக்க முடியும். களமாளுமன்றின் முதல் ஆட்சிப் பீடமே இன்னும் தெரிவு செய்யப்படாத நிலையில்.. சுயாதீன தேர்தல் திணைக்களம்.. அதனை செய்யும். :)

எனது சார்பில்.. சுயாதீன தேர்தல் திணைக்கள புதிய தலைவருக்காக..

1. ஆதி.

2. அரவிந்தன். (பிரேரிப்பு: வாத்தியார்)

பிரேரிக்கிறேன். இது ஒரு சுயாதீன பிரேரிப்பு ஆகும்..!

(இவர்களில் ஆதி எந்தக் கட்சியையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.) (தவறு திருத்தப்பட்டுள்ளது.)

நீங்களும்.. உங்களுக்கும் இவர்களையோ அல்லது வேறு யாரேயும் பிரேரிக்க முடிந்தால்... அதனைச் செய்யலாம். இவை சுயாதீனப் பிரேரிப்புக்கள். இறுதி முடிவுகளை அந்தந்த உறுப்பினர்களே தமது சுயவிருப்புக்கு ஏற்ப எடுப்பர். இந்தப் பிரேரிப்புக்கள்.. இந்தத் தேர்தல் மூலம்.. எங்கள் சுயாதீன விருப்பை வெளிப்படுத்த என்று மட்டும் அமைகிறது. . :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுயாதீன தேர்தல் திணைக்களம்.. களமாளுமன்ற அடிப்படை விதிகளுக்கு உட்பட்டது.

அந்த வகையில்.. அதன் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதான எனது அறிவிப்பு விடப்பட்டு.. அதற்கான மாற்றுத் தலைமை உருவாக்கப்படும் வரை.. அது களமாளுமன்ற விதிப்படி தேர்தல் மூலமே சாத்தியம் என்ற அடிப்படையில்.. 48 மணி நேர தற்காலிக பதவி அடிப்படையில்.. சுயாதீன தேர்தல் திணைக்களத் தலைமைப் பதவிக்கு தேர்தலைக் கோரி உள்ளேன்.

மற்றும்படி.. பதவி விலகலுக்கான அறிவிப்பு.. 48 மணி நேரத்தில் அமுலாகும்..! அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. களமாளுமன்ற அடிப்படை விதிகளைப் பின்பற்றியே பதவி விலகலைச் செய்ய முடியும். எடுத்தவுடன் தன்னிச்சையாக முடிவெடுக்கும் சர்வாதிகாரப் போக்கையும்.. மற்றவர்களின் பொது விருப்புக்கும்.. கருத்துகளுக்கு மதிப்பளிக்காத தன்மையையும் மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகம் மறுதலிக்கிறது..!

பண விரயம் என்ற போர்வையில் கட்சிகளின் பொது விதிகளுக்கு அப்பால் கட்சிகள் தாந்தோன்றித் தனமான சர்வாதிகார நிலையில்.. பிரகடனங்களை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளை சுயாதீன தேர்தல் திணைக்களம் மற்றும் களமாளுமன்றின் ஆதரவோடு... களமாளுமன்ற ஆட்சிப்பீடம் மட்டுமே உருவாக்க முடியும். களமாளுமன்றின் முதல் ஆட்சிப் பீடமே இன்னும் தெரிவு செய்யப்படாத நிலையில்.. சுயாதீன தேர்தல் திணைக்களம்.. அதனை செய்யும். :)

எனது சார்பில்.. சுயாதீன தேர்தல் திணைக்கள புதிய தலைவருக்காக.. ஆதியை பிரேரிக்கிறேன். இது ஒரு சுயாதீன பிரேரிப்பு ஆகும்..! :icon_idea:

இந்த யாப்பு யாரால் எழுதப்பட்டது, சோல்பரி யாப்பு போன்று இது என்ன நெடுக்கால போவானின் யாப்பா?

யாப்பபு முதலில் பொதுக்குழுவின் விவாதத்துக்கு விடப்பட்டதா?

பொது குழுவின் எத்தனை வீதத்தினர் இந்த யாப்பை ஆதரித்து வாக்களித்தனர்?

அனைத்து அதிகாரங்களும் சுயாதீனா ஆனைக்குழுதலைவர் என்ற ஒருவரிடம் குவிந்து கிடப்பது முறையா?

இத்தனை கேள்விகளை கேட்கும் உரிமையை இந்த யாப்பு எனக்கு அளிக்கிறதா?

ஏன் எனில் நான் ஒரு ஜனநாயக வாதி.

சுயாதீன தேர்தல் திணைக்களம் பணவிரயம் செய்து நடாத்தும் தேர்தல் களத்திற்கு ஒரு நன்மையையும் தராது என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட யாழ் கள உயர் குழாம் அமைப்பு தீர்மானம் இயற்றியுள்ளது. தீர்மானத்தைச் செயற்படுத்த எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என்ற கோதாவில் பதவி விலகிய பின்னரும் தேர்தலைக் கோரிய முன்னாள் சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளரின் கள உறுப்புரிமையையும் முறையற்ற தேர்தலையும் இரத்துச் செய்யுமாறு எமது அமைப்பின் தலைவர் சாத்திரியாரைப் பணிக்கின்றேன். அவ்ர் எனது உத்தரவை சிரமேற்கொண்டு செயற்படுத்துவார்.

சார்வாதிகார பாசிச ஆட்சியில் இருந்து மீண்டு ஜனநாயக ஆட்சிக்கு வர வேண்டும் என அனைத்து கட்சிளுக்கும் மன்னர் கட்சி அறை கூவல் விடுக்கிரது. :icon_idea:

நெடுக்ஸ் அவர்கள் ஆரம்பித்து உறவுகளின் அமோகமான ஆதரவுடன் வீறு நடைபோட்ட இத்திரியில் நெடுக்ஸ் அவர்களின் விடுவித்தல் யா ம ச வை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நெடுக்ஸ் அவர்கள் தன்னை விடுவித்துக் கொண்ட பின்னர் யா ம ச வின் நிலை பற்றி

யா ம ச வின் உறுப்பினர்களின் கருத்துக்களை கட்சியை ஆரம்பித்தவர் என்ற முறையில்

அறிய வேண்டிய கடமை எனக்கு உண்டு.

நெடுக்ஸ் அவர்கள் ஆரம்பித்த களமாளுமன்றத் தேர்தலில் அவருடை பங்களிப்பு

இல்லாமல் யா ம ச பங்கு கொள்வதா இல்லையா என்பதை யாழ்கள மன்னர்கள் சபையின்

உறுப்பினர்கள் அறியத் தரவும்.

நெடுக்ஸ் அவர்கள் பொறுப்புணர்வுடன் தனது கடமையைச் செய்ய

மீண்டும் வரவேண்டும் என்று யா ம ச வேண்டிக் கொள்கின்றது.

ஜனநாயக முறை படி எது நடந்தாலும் மன்னர்கட்சி தனது முடியை கொடுத்தாவது ஆதரிக்க வேண்டும், நான் கட்சியின் தலைமைக்கு கட்டுபடுகிறேன்.

Edited by சித்தன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த யாப்பு யாரால் எழுதப்பட்டது, சோல்பரி யாப்பு போன்று இது என்ன நெடுக்கால போவானின் யாப்பா?

யாப்பபு முதலில் பொதுக்குழுவின் விவாதத்துக்கு விடப்பட்டதா?

பொது குழுவின் எத்தனை வீதத்தினர் இந்த யாப்பை ஆதரித்து வாக்களித்தனர்?

அனைத்து அதிகாரங்களும் சுயாதீனா ஆனைக்குழுதலைவர் என்ற ஒருவரிடம் குவிந்து கிடப்பது முறையா?

இத்தனை கேள்விகளை கேட்கும் உரிமையை இந்த யாப்பு எனக்கு அளிக்கிறதா?

ஏன் எனில் நான் ஒரு ஜனநாயக வாதி.

களமாளுமன்ற யாப்பு.. உங்களின் முன் வைக்கப்பட்டு பரிந்துரைகளுக்கும் வழி செய்யப்பட்ட பின்னரே அமுலுக்கு வந்துள்ளது. இதுவரை யாப்புப் பற்றிய பரிந்துரைகள் எமக்குக் கிடைக்கவில்லை.

யாப்பு மாற்றம்.. திருத்தங்கள் பற்றிய பரிந்துரைகளை நீங்கள் எப்போதும் சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் முன் வைக்கலாம். அது அதனை பரிசீலித்து திருத்தங்களை மேலதிக இணைப்புகளாக வெளியிடும். இவை அனைத்தும் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எந்த அதிகாரமும்.. எவரிடமும் நிரந்தரமாகக் கையளிக்கப்படவில்லை. மக்கள் சபைக்கு பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டைக் கொண்ட அமைப்புகளாகவே சுயாதீன தேர்தல் திணைக்களம்.. மற்றும் களமாளுமன்றம் உள்ளது.

மேலும் யாப்பை மீண்டும்.. உங்கள் முன் வைக்கிறோம்... வாசிச்சு.. பரிந்துரைகளை முன் வைக்கலாம். புதிய தலைமை அதனை பரிசீலித்து... மாற்றங்களை இணைக்கும்.

yarlhouse.jpg

யாழ் கள களமாளுமன்றம்: "Yarliament" - Governing Body.

களமாளுமன்ற விதிகள்.. விதப்புரைகள்.

அடிப்படைக் கட்டமைப்பு:

அ: உறுப்பினர்கள் சபை- Members' council (ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி)

ஆ: மக்கள் சபை - People's Council (யாழ் கள உறுப்பினர்கள் அனைவரும்)

களமாளுமன்ற ஆட்சிக்காலம்: தேர்தலுக்கு தேர்தல்.. ஓராண்டு காலம். இடையில் மக்கள் சபையின் ஏறக்குறைய 60% (அதாவது ஏறக்குறைய 20 பச்சைப் புள்ளிகள்) , ஆளும் கட்சின் 60% வாக்குகள் மற்றும் எதிர்கட்சியின் 50% வாக்குகள் இன்றியோ களமாளுமன்றில் குறித்த கட்சியின் ஆட்சியை அதன் பதவிக்காலம் முடிய முன் கலைக்க முடியாது.

கட்சிப் பதிவு நிலைகள்.

நிரந்தரப் பதிவு பெற்ற கட்சிகள் மட்டுமே தேர்தலில் நின்று உறுப்பினர் சபைக்கு போட்டி இட்டு ஆட்சி அமைக்கவும்.. எதிர்க் கட்சி வரிசையில் உட்காரவும் முடியும்.

நிபந்தனையுடன் கூடிய நிரந்தரப் பதிவு மற்றும் தற்காலிக பதிவு பெற்ற கட்சிகள் எவையும் தேர்தலில் நிற்க முடியாது. உறுப்பினர் சபையில் இடம்பெற முடியாது.

கூட்டணி: கட்சிகள் தமக்கிடையே கூட்டணி அமைக்க முடியாது. அதேபோல் மக்கள் சபை உறுப்பினர்களுடனும் கூட்டணி வைக்க முடியாது. கட்சி அங்கத்துவம் மட்டுமே உறுப்பினர் சபையில் இடம்பெற வகை செய்யும்.

கட்சிக் கலைப்பு: ஒரு கட்சியை அதனை ஸ்தாபித்தவர் தவிர வேறு எவரும் கலைக்க முடியாது. கட்சியை ஸ்தாபித்தவர் கட்சிக் கலைப்பை செய்ய வேண்டின்.. அது குறித்து சுயாதீன தேர்தல் திணைக்களத்திற்கு தன் நிலைப்பாட்டை அறிவித்து.. அதனை சுயாதீன தேர்தல் திணைக்களம் அங்கீகரித்தால் மட்டுமே அந்தக் கட்சிக் கலைப்பு செல்லுபடியாகும்.

சுயாதீன தேர்தல் திணைக்களமும் கட்சிகளைக் கலைக்க முடியாது. கட்சிகள்.. நிபந்தனைகளை. விதிகளை மீறின்.. அதன் பதிவு நிலையை சுயாதீன திணைக்களம்.. நிரந்தப் பதிவில் இருந்து தற்காலிகமாக மாற்றிக் கொள்ளும். ஆனால் இந்த மாற்றத்திற்கான காரணத்தை சுயாதீன தேர்தல் திணைக்களம்.. ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டும்.

உறுப்பினர் சபை:

ஆளும் கட்சி பதவி நிலைகள்:

பிரதமர் + இரண்டு அமைச்சுக்கள் (மட்டும்) + களமாளுமன்ற சபாநாயகர்+ ஊடகப் பேச்சாளர். (தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சி.. ஆட்சி அமைக்க அழைக்கப்படும். கட்சித் தலைமை பதவி நிலைகளை தீர்மானிக்கும். அதுவே பதவிகளையும் நிரல்படுத்தும். பதவிகள் அனைத்தும் சுழற்சி முறைக்குரியவை. மக்கள் சபை.. பதவிக்குரியவர்களை பெரும்பான்மை கொண்டு நிராகரிப்பின்.. பதவி நிலைகள் மாற்றப்பட வேண்டும். ஒருவர் ஒரே தடவையில் இரண்டு பதவிகளை வகிக்க முடியாது. போதிய உறுப்பினர்கள் இல்லையேல் பதவி வெற்றிடமாக விடப்பட வேண்டும். மக்கள் சபை அந்தப் பதவியை தமக்குள் எடுத்துக் கொண்டு பணி செய்யும்.)

ஆளும் கட்சியில் ஒருவரே ஒரு பதவியை ஒரு குறிப்பிட்ட காலத்தில் வகிக்கலாம்.

எதிர்க்கட்சி பதவி நிலைகள்:

நிழல் பிரதமர் + ஆளும் தரப்பு அமைக்கும் அமைச்சுக்களுக்கு ஒத்த.. இரண்டு நிழல் அமைச்சுக்கள் (மட்டும்) + நிழல் சபாநாயகர்+ நிழல் ஊடகப் பேச்சாளார்+ (எதிர்க்கட்சியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பதவி அளிக்கப்பட வேண்டும். தேர்தலில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் கட்சிகளுக்கான பதவிகள் நிரல்படுத்தப்படும். பதவிகள் அனைத்தும் சுழற்சி முறைக்குரியவை)

(களமாளுமன்றம் 7 (இது குறையலாம்.. ஆனால் கூடாது) கட்சிகளுக்கு மட்டுப்படுத்திய ஒரு மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகக் கட்டமைப்பு என்ற வகையில்.. இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. )

பதவி நிலைகளுக்குரிய அதிகாரங்கள்.

பிரதமர்: களமாளுமன்றத் தலைவர். களமாளுமன்றத்தில் ஆளும் கட்சி கொண்டு வரும் ஒவ்வொரு நிகழ்ச்சித்திட்டத்திற்கும் தலைமை ஏற்றல்.. பொறுப்புக் கூறுதல்.. அமைச்சர்களை பிற பதவி நிலைகளை நியமித்தல்.. அவர்களுக்கான பதவி அதிகாரங்களை மக்கள் சபைக்கு பகிரங்கப்படுத்தல். கள விதிகளை ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஏற்று நடப்பதைக் கண்காணித்தல்.. கண்ணியமான செயற்பாட்டை உறுதி செய்தல்..!

அமைச்சுக்கள்(2 மட்டும்): பிரதமரின் கட்டளைக்கு பிரகடனத்திற்கு ஏற்ப அமைய அவற்றின் செயற்பாடுகள் இருக்கும். குறிப்பாக களச் செயற்பாடுகளில் மக்கள் சபை உறுப்பினர்களுக்கு புத்துணர்வழிக்கக் கூடிய வழிகளில் கருத்துப் பகிர்வைச் செய்யும் வழிமுறைகள் குறித்துக் கண்டறிதல்.. சிறப்பான தலைப்புகளை மக்கள் சபைக்கு வழங்கல்.. நல்ல தகவல்களைப் பரிமாறல்.. யாழ் களத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப திட்டங்களை முன் வைத்தல்.. பொது சமூக தளத்திற்கு அவசியமான உதவித் திட்டங்களை முன் வைத்தல். மக்கள் சபை உறுப்பினர்களை மகிழ்ச்சி உறுதி செய்தல். சண்டை சச்சரவுகளை தவிர்த்தல். ஒற்றுமையை பேணுதல்.

அமைச்சர்களின் தனிப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் பிரதமரே மக்கள் சபைக்கு பொறுப்புக் கூறுவார். எனவே பிரதமரே அமைச்சர்களின் செயற்பாடுகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டும்.

சபாநாயகர்: களமாளுமன்றில் ஆளும் கட்சியின் வழமையான.. மற்றும் விசேட நிகழ்ச்சி நிரல்கள் பற்றி மக்கள் சபைக்கு முன் கூட்டியே அறியத்தருதல். முன் கூட்டிய நிகழ்ச்சிரலில் அடங்காத விடயங்களை களமாளுமன்றில் கதைக்கவோ.. கருத்துப் பகரவோ முடியாது. களமாளுமன்றச் செயற்பாடுகளில்.. ஆளும்.. தரப்பு.. எதிர்த்தரப்பு இருவருக்கும் சம வாய்ப்பளித்து.. களமாளுமன்றச் செயற்பாடுகளால் மக்கள் சபை பயன்பெற உதவுதல்.

களமாளுமன்ற ஊடகப் பேச்சாளர்: களமாளுமன்றில் ஆளும் கட்சியின் செயற்பாடுகள் குறித்த ஊடகச் செய்திகளை தருதல். மக்கள் சபைக்கு களமாளுமன்றச் செயற்பாடு குறித்து பிரதமர்.. அமைச்சர்கள்.. சபாநாயகர்களுக்கு மேலதிகமாக அல்லது அவர்களின் கூட்டு அறிக்கையை சமர்ப்பித்தல். ஆளும் கட்சி சார்பில்.. ஒருவரே ஒரே தடவையில் மக்கள் சபைக்கு பதில் அல்லது பொறுப்புக் கூற வேண்டும். அந்த வகையில் ஊடகப் பேச்சாளரே அதிகம் மக்கள் சபைக்கு முன் தோன்றி மக்கள் சபை முன் வைக்கும் கேள்விகளுக்கு பதிலிறுக்க வேண்டும்.

எதிர்க்கட்சி பதவி நிலைகள்.

நிழல்.. பிரதமர்.. நிழல் அமைச்சர்கள்.. நிழல் சபாநாயகர்.. நிழல் ஊடகப் பேச்சாளர்.. இவர்களின் பதவி என்பது.. எதிர்க்கட்சிகள் சார்பில்.. ஆளும் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில்.. அவர்களுக்கான வழிகாட்டல்களைச் செய்தல்...அவர்களின் திட்டங்கள் கொள்கைகள் தொடர்பில்.. குறை நிறைகளை சுட்டிக்காட்டுதல்.. அவர்களின் உபயோகமாக திட்டங்களுக்கு ஒத்துழைத்து.. மக்கள் சபைக்கு நிறைவான சேவையை வழங்கலை.. எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பில்.. ஆளும் கட்சி பதவி நிலைக்கு ஏற்ப இவர்களின் பதவி நிலைகள்.. எதிர்கட்சிகள் சார்பில்.. நிழல் தன்மையோடு இருக்கும்.

தேர்தல்: தேர்தல் திகதி ஆண்டு தோறும்.. எமது உயிரிலும் மேலான மாவீரர்களின் நினைவு நாளான மாவீரர் தினம் (27-11-2011) முடிவடைந்த பின் அறிவிக்கப்படும்.

சுயாதீன தேர்தல் திணைக்களம்.

தேர்தல் சுயாதீன தேர்தல் திணைக்களத்தால் மட்டுமே நடத்தப்படும். இதில் ஆளும் கட்சியோ.. எதிர்க்கட்சியோ செல்வாக்குச் செய்ய முடியாது. மக்கள் சபை அதன் கருத்துக்களை சுயாதீன தேர்தல் திணைக்களம் முன் கூறலாம். அதேபோல்.. உறுப்பினர்கள் சபையும் தங்கள் கோரிக்கைகளை சுயாதீன தேர்தல் திணைக்களத்தின் முன் வைக்கலாம்.

சுயாதீன தேர்தல் திணைக்களப் பணிகள்: பதவிக்கால நிறைவுத் திகதி.. தேர்தல் திகதி.. அறிவித்தல். ஆட்சிக்குரிய கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தல்.. களமாளுமன்ற உறுப்பினர் சபையின் பதவி நிலைகளை உறுதி செய்தல்.. களமாளுமன்ற விதிகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்று கண்காணித்தல்.. சரியான நேரத்தில்... தேவையின் பொருட்டு செய்யப்படும்.. களமாளுமன்ற ஆட்சிக் கலைப்பை உறுதி செய்தல்...போன்ற செயற்பாடுகள் அமையும். சுயாதீன தேர்தல் திணைக்களம்.. உறுதி செய்யாமல்.. இவை எதுவும் நிகழ்ந்துவிட்டதாக எவருமே கருத முடியாது. சுயாதீன தேர்தல் திணைக்களப் பணியாளராக ஒருவர் மட்டுமே இடம்பெற முடியும். மக்கள் சபையின் ஓர் உறுப்பினராக.. நெடுக்காலபோவன் ஆகிய நான் என் முதற் கடமை செய்வேன். இது ஓராண்டு காலம் வரை நீடிக்கலாம். அதன் பின் இப்பதவிக்கான வெற்றிடம் குறித்து மக்கள் சபைக்கு அறியத்தரப்பட்டு.. அந்தப் பதவிக்கு வர விரும்புவோர் பற்றிய விபரம் அறியப்பட்டு.. அது களமாளுமன்றில்.. மக்கள் சபை.. உறுப்பினர் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு.. அங்கு பெரும்பான்மை பெறும் ஒருவர்.. மக்கள் சபையில் இருந்து அந்தப் பதவிக்கு வர தேர்ந்தெடுக்கப்படுவார்.

தேர்தல் பிரச்சாரம்: தேர்தல் பிரச்சாரங்களுக்கு தேர்தல் திகதிக்கு முன்னராக இரண்டு வாரங்கள் தரப்படும். தேர்தல் தினத்திற்கு 24 மணி நேரங்களுக்கு முன் அனைத்து வடிவ தேர்தல் பிரச்சாரங்களும் நிறுத்தப்பட்டாக வேண்டும். அப்படிச் செய்யாத கட்சிகளின் நிரந்தரப் பதிவு நிலை தற்காலிக பதிவு நிலைக்கு மாற்றப்படும்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது.. தீவிர.. பண ஆசை.. பொன்னாசை.. பெண்ணாசை.. ஆணாசை.. பொருளாசை.. காட்டிப் பிரச்சாரம் செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது. கண்ணியமான பிரச்சாரங்கள் அங்கீகரிக்கப்படும். பிரச்சார வடிவங்கள் நவீன தகவல் தொழில்நுட்பத்தை புகுத்தியதாக இருப்பின் அது வரவேற்கப்படும்.

கட்சிக் கொள்கைகள்.. சின்னங்கள்... கொடிகள்.: கட்சிக் கொள்கைகள்.. கொடிகள்.. சின்னங்கள்.. பெண்களை.. ஆண்களை.. சிறுவர்களை.. பிற உயிரினங்களை எள்ளி நகையாடும் வண்ணமோ.. சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு வகை செய்யும் வண்ணமோ.. பெண்களை.. ஆண்களை.. சிறுவர்களை.. உயிரினங்களை.. வியாபார.. விளம்பரப் பொருளாக கருதும் வகையிலோ.. பிற நிஜக் கட்சிகள்.. மக்கள் மதிப்புப் பெற்ற அமைப்புக்களின் கொள்கைகள்.. கொடிகள்.. சின்னங்கள் சார்ந்தவகையாகவோ இருக்கக் கூடாது. தனி நபர்கள்.. பொது அமைப்புக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகவும் இருக்கக் கூடாது. உங்களின் சுய சிந்தனைக்கு.. உருவடிவம் கொடுக்கும் வகையில் கண்ணியமாக.. சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கலாம். நகைச்சுவை உணர்வை.. அறிவியல் உணர்வை.. சமூக உணர்வை தூண்டுவதாக இருப்பின் வரவேற்கப்படும். எக்கட்டத்திலும்.. எந்த வடிவிலான ஆபாசத்திற்கும். இன உடற் கவர்ச்சிக்கு... இடமளிக்கப்படமாட்டாது.

களமாளுமன்றச் செயற்பாடுகள்.

யாழ் களத்தின் நற்பெயரிற்கு பங்கம் நேரா வண்ணமும்.. கள உறவுகளின் (மக்கள் சபை + உறுப்பினர் சபை) தனிப்பட்ட.. மற்றும் பொது உரிமைகளை பாதிக்கப்படாத வண்ணமும் களமாளுமன்றச் செயற்பாடுகள் இருக்க வேண்டும். மேலும் செயற்பாடுகள்.. மக்கள் சபைக்கு ஏதாவது ஒரு வழியில் உதவுவதாக இருக்க வேண்டும். மக்கள் சபையில் ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும். பிரச்சனைகளை சச்சரவுகளை தனிப்பட்ட போட்டி பகைமைகளை எந்த விதத்திலும் தூண்டக் கூடாது.

யாழில் கருத்துப் போட்டிகளை.. சுய ஆக்கங்களைப் படைத்தல் மற்றும் அதற்கான ஆற்றலை வெளிப்படுத்தும் போட்டிகளை நடத்தல்.... நல்ல தலைப்புகளை உருவாக்கும் போட்டிகள்.. என்று மக்கள் சபை உறுப்பினர்களின் செயற்பாடுகளை.. அவர்களோடு கூட நின்று சம நிலை.. சம உரிமை என்ற கொள்கைக்கு ஏற்ப.. நின்று.. ஊக்குவிக்க வேண்டும். நல்ல நகைச்சுவைப் பதிவுகளை தந்து.. இனிய பொழுது போக்கிற்கான ஆக்கங்களை தந்து..பலமான நகைச்சுவை ஆக்கங்களைப் படைத்து தொய்வின்றிய.. நகைச்சுவை உணர்வை அதிகரிக்கச் செய்து.. நலமான.. மன அழுத்தமற்ற.. உயர் இரத்த அழுத்தமற்ற.. வாழ்விற்கு வகை செய்ய வேண்டும்.

களமாளுமன்றக் கலைப்பு: (களமாளுமன்ற ஆட்சிக் கலைப்பு அல்ல.)

இவை மீறப்படும் பட்சத்தில்.. களமாளுமன்றை நிரந்தரமாகவோ.. அல்லது தற்காலிகமாகவோ கலைத்துவிட.. யாழ் கள நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது. இருந்தாலும்.. யாழ் கள நிர்வாகம்.. மக்கள் சபைக்கு (யாழ் கள உறுப்பினர்கள் அனைவரையும் உள்ளடக்கியது மக்கள் சபை) அதன் செயற்பாட்டுக்கான காரணங்களை தெளிவாக முன்வைக்க வேண்டும். அதை மக்கள் சபை.. 15 பச்சைப் புள்ளிகளால் அங்கீகரித்தல் வேண்டும். அதன் பின்னரே.. கள நிர்வாகத்தின் செயற்பாடு நியாயமானது என்று கொள்ளப்படும். களமாளுமன்றம்.. கலைக்கப்பட்டதாக கருத்தப்படும். களமாளுமன்றம் கலைக்கப்பட்டதும்.. அதன் அனைத்து கட்டமைப்புக்களும் தானே இல்லாமல் போகும். அதன் பின்னர் யாரும்... களமாளுமன்றச் செயற்பாட்டை முன்னெடுக்கக் கூடாது. கள நிர்வாகத்தின் மக்கள் சபையின் முடிவுக்கு மதிப்பளித்து.. அதை ஓர் சிநேகித பூர்வ செயலாக மட்டுமே நோக்க வேண்டும்.

மக்கள் சபை: உறுப்பினர் சபை கள அங்கத்தவர்கள் அல்லாத எல்லா கள உறவுகளும்.. இதில் அங்கம் வகிப்பர். உறுப்பினர் சபை அங்கத்தவர்களுக்கு தேர்தல்களின் போது வாக்களிப்பில் மட்டும்.. மக்கள் சபை உறுப்பினர் அந்தஸ்து அளிக்கப்படும்.

மக்கள் சபை செயற்பாடுகள்:

மக்கள் சபை உறுப்பினர்கள்.. அனைத்து தேர்தல்களிலும் சுய முடிவின் பிரகாரம் வாக்களிக்க முடியும். மக்கள் சபை உறுப்பினர்களின் சுய.. பொது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவை மீறப்படும் போது அவர்கள் அதனைச் சுட்டிக்காட்டி.. தீர்வு தேடலாம். அதனை அவர்கள் உறுப்பினர் சபையில்.. பிரதமர்.. அல்லது நிழல் பிதரமரின் பார்வைக்கு வைக்கலாம். அவர்கள் கண்டு கொள்ளாத பட்சத்தில் கட்சிகள் மீதான குற்றச்சாட்டாக சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் முன் வைக்கலாம். அதுவும் கண்டுகொள்ளவில்லை என்றால்.. கள நிர்வாகத்தின் முன் வைக்கலாம். தீர்வைப் பெற முனையலாம். அந்தளவுக்கு நிலைமைகள் உருவாகாத வண்ணம்.. உறுப்பினர் சபை நடந்து கொள்ளும் என்று நம்புகின்றோம்.

உறுப்பினர் சபை +மக்கள் சபை = களமாளுமன்றம்.

ஆளும் தரப்பு.. எதிர்தரப்பு களமாளுமன்றில்.. கொண்டு வரும்.. புதிய.. நடைமுறையில் இல்லாத திட்டங்கள்.. கொள்கைகள்.. வரைபுகளை அமுலுக்கு கொண்டு வர.. அந்த வரைபுகள் தகுந்த விளக்கங்களுடன் மக்கள் சபையின் முன் கொண்டு வரப்பட்டு.. அதற்கு 60% அதாவது 20 பச்சைப்புள்ளிகள் பெறப்பட்டு அதன் பின்னரே அதை.. அமுலுக்கு வர உறுப்பினர் சபைக்கு வாக்கெடுப்புக்கு கொண்டு வர முடியும். உறுப்பினர் சபையில் 60% ஆளும் கட்சி உறுப்பினர்களினதும் 50% எதிர்க்கட்சி உறுப்பினர்களினதும்.. ஆதரவு இருந்தாலே அது சட்டமாக்கப்பட முடியும்.

உறுப்பினர் சபை.. நிகழ்காலத்தில் உள்ள.. கள விதிக்கு களமாளுமன்ற விதிக்கு உட்பட்ட ஆனால் மெருகூட்டப் பட வேண்டிய திட்டங்களை.. செயல்வடிவங்களை கொண்டு வர நினைத்தால்.. அதனை செயல்படுத்த ஆளும் தரப்பின் 60% வாக்குகளும்.. எதிர்தரப்பின் 50% வாக்குகளும் அவசியம். மக்கள் சபை வாக்கெடுப்பு அவசியம் இல்லை. ஆனால் மக்கள் சபை வழங்கும் பரிந்துரைகளுக்கு வழிசமைக்க வேண்டும். மக்கள் சபை அதனை வாக்கெடுப்புக்கு கேட்டால் அதனை வாக்கெடுப்புக்கு விட்டு அதன் 60% வாக்குகளைப் பெற்ற பின்னர் தான் அமுலுக்கு கொண்டு வர முடியும்.

(ஆளும் தரப்பு 60% என்பது ஆளும் தரப்பு உறுப்பினர்களின் எழுத்துமூல ஆதரவும் அவர்களின் மொத்த எண்ணிக்கையும் என்ற அடிப்படையில் கணக்கிடப்படும். எதிர்தரப்பின் 50% என்பது அவர்களின் எழுத்துமூல ஆதரவு மற்றும் அவர்களின் மொத்த எண்ணிகை என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படும். மக்கள் சபைக்கு மட்டுமே பச்சைப்புள்ளி.) தேர்தல்களின் உறுப்பினர் சபை அங்கத்தவர்களும் பச்சைப்புள்ளியை பயன்படுத்தலாம். ஏனெனில் அவர்கள் அடிப்படையில் மக்கள் சபை உறுப்பினர்களும் கூட.)

(இவை அனைத்தும் களமாளுமன்ற அடிப்படை விதிமுறைகள். இவற்றில் மாற்றமோ திருத்தமோ செய்ய வேண்டின்.. நீங்கள் சுயாதீன் தேர்தல் ஆணையகத்திற்கு அதனை முன் வைக்கலாம். அது சம்பந்தப்பட்ட விடயங்களை ஆராய்ந்து மாற்றங்களை பரிசீலித்து அமுல் படுத்தும்.)

முற்றும்.

இவற்றை கட்சிகளும்.. மக்கள் சபை உறுப்பினர்களும்.. தெளிவாகப் படித்து விளங்கிக் கொண்டு.. மாவீரர் தினம் முடிந்து தேர்தல் தினம் அறிவிக்கப்படும் வரை தங்கள் கட்சிக் கொள்கைப் பரப்புச் செயற்பாடுகளை.. கொடிகள்.. சின்னங்கள்.. கொள்கைகள்.. வகுப்பதை.. மக்கள் சபை உறுப்பினர்களின் வாக்குகளை கவர வகை செய்யலாம்.

(இப்பதிவில் எந்தத் திருத்தங்களும் என்னாலோ.. எவராலுமோ செய்யப்பட மாட்டாது. அப்படி திருத்தம் செய்வது காண்பிக்கப்படின்.. இவ்விதிகள் செல்லுபடியற்றதாகும். திருத்தங்கள்.. மேலதிக இணைப்புக்களாக தொடரப்பட வேண்டுமே தவிர அடிப்படை விதிகளை மாற்ற அது இடமளிக்காது. எனவே எழுத்துப் பிழைகள் இருப்பினும்... அதனை திருத்த முடியாது என்ற காரணத்தால்.. எழுத்துப் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கை என்ர சக தோழர்கள்....

யாழ் காதலர் கட்ச்சி வாழ்க்க

யாழ் காதலர் கட்சிக்குத் தான் மக்கள் ஓட்டு கூட.....

யாழ் காதலர் கச்சிதான் இப்ப முதல் இடத்தில நிக்குது.... நாங்கள் தான் ஆச்சிய பிடிப்போம் என்ரதை பெருமையுடன் சொல்லி கொள்ள விரும்புகிறேன்

நீங்கள் ஆச்சியை பிடியுங்க, அப்புவை பிடியுங்கோ அது உங்கட விருப்பம், ஆனால் பதவியை மன்னர்கள் மட்டும்தான் பிடிப்பார்கள். :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.