Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

...

குட்டிக்கும் என் கருத்து பிடித்திருக்கா விட்டால் என் மன்னிப்பை சொல்லிக் கொள்கிறேன்.

இதில் மன்னிப்புக் கேட்குமளவுக்கு ஒன்றும் இல்லை ரதி :)

  • Replies 1.3k
  • Views 97.6k
  • Created
  • Last Reply

நேற்றிரவு ப.மே.க. வின் அலுவலக வாசலில் கட்டியிருந்த கொடிக்கம்பத்தை யாரோ புடுங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.

மரியாதையா இன்றிரவு திரும்பவும் கொண்டு வந்து நட்டு விடவும். இல்லாவிட்டால் ஒரு கட்சி வாசலிலும் கம்பம் இருக்காது.

சிறி அண்ணா, கட்சிக் கொடிக்கம்பம் நடும் பொது கொஞ்சம் ஆழமா நிலத்தைக் கிண்டி நட்டு இருக்கக் கூடாதா? என்ன கறண்டியாலையா கிண்டினீங்கள்? :lol::D

சிறி அண்ணா, கட்சிக் கொடிக்கம்பம் நடும் பொது கொஞ்சம் ஆழமா நிலத்தைக் கிண்டி நட்டு இருக்கக் கூடாதா? என்ன கறண்டியாலையா கிண்டினீங்கள்? :lol::D

ப.மே.க கட்சி உறுப்பினர்களுக்கு அவர்களது சின்னம் பாம்பே கிண்டி விடும்.

ப.மே.க கட்சி உறுப்பினர்களுக்கு அவர்களது சின்னம் பாம்பே கிண்டி விடும்.

:D:lol: தப்பிலி உங்கட ஏக்கம் புரியுது...

கவிதை உங்களுக்கு பிடிக்கா விட்டால் என்னை மன்னியுங்கள்...நீங்கள் அநேகமாக காதல் கவிதைகளையே எழுதுவதால் அப்படிக் குறிப்பிட்டு எழுதினேன்...மற்றும் படி உள் நோக்கம் எதுவுமில்லை...உங்கள் கருத்தை வெளிப்படையாக எழுதினதிற்கு நன்றி...நான் எழுதிய கருத்து உங்களை மனம் நோக வைத்திருந்தால் மன்னிக்கவும்...நன்றி.

மன்னிப்புக் கேட்குமளவுக்கு தாங்கள் தவறாக ஒன்றும் சொல்லவில்லை!

தங்கள் எதிர்பார்ப்பினைத்தானே கூறியிருந்தீர்கள்.

புரிந்துணர்வுக்கு நன்றி அக்கா! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறி அண்ணா, கட்சிக் கொடிக்கம்பம் நடும் பொது கொஞ்சம் ஆழமா நிலத்தைக் கிண்டி நட்டு இருக்கக் கூடாதா? என்ன கறண்டியாலையா கிண்டினீங்கள்? :lol::D

இதிலை ஏதும் உள்குத்து இல்லையே குட்டி அண்ணா??? :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே நமது ராஜாதி ராஜ , ராஜ மார்த்தாண்ட மகா மாமன்னர் வாத்தியார் மற்றும் மன்னர்காள்! கோட்டையின் மீது நமது கொடியையும் ஏற்றி கோட்டைக் கதவிலும் கொடியிலும் அரச சின்னத்தையும் யாவரும் கண்டு களிக்குமாறு பொறித்து விடுங்கள்! :rolleyes: :rolleyes:

சொல்லின் செல்வரே எங்களுக்கு என்றும் நீங்களே மாமன்னர்.மன்னர் இசைக்கலைஞர் அவர்களிடம் இந்தப் பணியை ஒப்படைப்போம். :rolleyes: யா ம ச வின் கொடியையும் சின்னத்தையும் விரைந்து வந்து இணைக்கும்படிமன்னர் இசைக்கலைஞர் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.அவரின் திறனே அளப்பரியது.மன்னர் சித்தன் :rolleyes:மன்னர் இடையாலைபோபவன் :rolleyes:மன்னர் குளவி :rolleyes:அவர்களையும் தங்கள் பிரச்சாரத்தை புயல்போல் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொல்லுகின்றேன் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய சுயாதீன தேர்தல் திணைக்கள தலைவரை தேர்வு செய்ய வழங்கப்பட்டுள்ள கால எல்லை முடிவடைய இன்னும் 24 மணி நேரங்கள் உள்ளன. அதற்குள் எவருமே இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால்.. இந்த தலைப்பில் உங்கள் அனைவரினதும்.. ஆக்கத்தையும் ஊக்கத்தையும் ஊக்கிவிக்கும் வகையிலும்.. உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தும்.. உங்களின் கோரிக்கைகளை சாதகமாக பரிசிலீக்க நாம் முடிவு செய்துள்ளோம். நம்மள நம்பினவங்கள நட்டாற்றில் விட்டுச் செல்வது அழகல்ல.. என்பதையும் உணர்கிறோம். :):lol:

முக்கிய குறிப்பு: சுயாதீன தேர்தல் ஆணையளாராக நாம் தொடர முடிவெடுக்க நேர்ந்தால்.. களமாளுமன்றத் தேர்தலை கூடிய விரைவில் நடத்தி முடிக்க முடிவு செய்வோம். அதனால் உங்களின் கட்சிச் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதோடு.. கட்சி உறுப்பினர்கள் பட்டியலை.. கட்சிக் கொடி.. சின்னம்.. கொள்கை.. கொள்கைப் பரப்பு.. இவற்றை அறிமுகம் செய்து கொள்வது... தேர்தலை இலகுவில் எதிர்கொள்ள உதவியாக அமையும். :):lol:

சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கான புதிய ஆணையாளரை தெரிவு செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம்.. முடிய இன்னும் 16 நிமிடங்கள் உள்ளன.(GMT 2300). அந்தப் பதவிக்கு தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பித்து அதனை ஏற்றுக் கொள்ள மீண்டும் நினைவூட்டலும் அனுமதியும் அளிக்கப்படுகிறது. அப்படி யாரும் இணைந்து கொள்ளாத பட்சத்தில்.. அந்தப் பதவி நிலையை தொடர்ந்து கள உறவுகளின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து நானே செய்ய வேண்டி ஏற்படும்.

நன்றி. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்றம் சுயாதீன தேர்தல் ஆணையகம்/திணைக்களம் - தேர்தல் ஆணையர் பதவி.

யாழ் கள களமாளுமன்ற.. சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் பொறுப்புக்களை.. கள உறவுகள் சிலர் வெளிப்படையாக வெளிப்படுத்திய.. விருப்புக்கு அமைய நானே தொடர்ந்து கொள்வது என்று தீர்மானித்து அதற்கான உறுதிப்படுத்தலை இதனூடு அறியத்தருகிறேன்.

இந்த சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் ஆணையர் பதவி GMT 2314; 30-11-2011 இல் இருந்து எங்கள் கட்டுப்பாட்டில் மட்டும் இருக்கும் என்பதையும் இத்தாழ் அறியத்தருகின்றோம். இது களமாளுமன்ற அடிப்படை யாப்பியலுக்கு உட்பட்டதுடன் அதற்கு அமைய நடந்து கொள்ளும்..!

நன்றி.

மேலும்.. இந்தப் பதவி ஏற்பின் பின்னான முதல் அறிவித்தலாக.. களமாளுமன்ற கட்சிகள் தங்கள் உறுப்பினர் பட்டியலை வெளியிட தாழ்மையோடு கோரப்படுகின்றன. அதுமட்டுமன்றி.. கட்சிக் கொடி.. நிறம்.. சின்னம் இவற்றையும் அறிமுகம் செய்வதோடு.. கட்சிக்கு என்று ஒரு பஞ்ச்.. வாசகமும் வைத்துக் கொள்ள கோரப்படுகின்றனர். :):lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

yarlhouse.jpg

யாழ் கள களமாளுமன்ற.. பொதுத் தேர்தல் அறிவிப்பு.

வாக்குப் பதிவுக்கான காலம்: 25-12-2011 (GMT 0000 இல் இருந்து GMT 2400)

தேர்தல் பிரச்சார முடிவுத் திகதி: 24:12:2011 (GMT 2400)

தேர்தல் பிரச்சார ஆரம்பம்: தேர்தலுக்கான இந்த அறிவிப்பு பதியப்பட்டதில் இருந்து.

தேர்தலில் போட்டியிட தேவையான தகுதி: சுயாதீன தேர்தல் ஆணையகத்தால் பதியப்பட்ட கட்சியாக இருப்பதோடு.. தேர்தல் தினத்திற்கு 24 மணி நேரம் முன்னாகவாவது.. கட்சி உறுப்பினர் பட்டியல்.. கொள்கை.. கொடி.. சின்னம்.. இவற்றை வெளியிட்ட கட்சியாக இருக்க வேண்டும்.

தேர்தல் வரையான கட்டாய விதிப்பு: நாளுக்கு ஒரு நகைச்சுவை பஞ்சாவது தேர்தலில் நிற்க விரும்பும் கட்சிகள் பதிய வேண்டும். இது கள உறவுகளை.. தனிநபர்களை வேதனைப்படுத்தவோ.. புண்படுத்தவோ கூடாது.

தேர்தல் பிரச்சார வடிவம்: படங்கள்.. காணொளிகள்.. ஆபாசமற்ற சினிமா பாடல்கள்.. நகைச்சுவைகள்.. இவை போன்ற மேலும் அங்கீகரிப்படக் கூடிய வேறு நவீன வடிவங்களும்.. அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எந்த வடிவில் அமைந்திருந்தாலும்.. பெண்கள்.. ஆண்கள் சம்பந்தப்பட்ட ஆபாசம்.. கவர்ச்சி.. அங்கீகரிக்கப்படவில்லை. ஊழல்... பண ஆசை.. பொன்னாசை.. பொருளாசை.. பெண்ணாசை.. ஆணாசை காட்டுதல் முற்றாக தடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காதலர்களுக்கு என்று கட்சி அமைத்துள்ளவர்கள்.. இதில் மிக கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் கட்சிக்கு.. இது கத்தி முனையில் நடப்பது போன்றதாக இருக்கும்..!

கூட்டணி: களமாளுமன்ற விதிக்கமைய கட்சிகள் தமக்கிடையேயோ.. தனிநபர்களிடையேயோ கூட்டணி அமைக்க முடியாது.

சுயேட்சைகள்: சுயேட்சைகள் என்ற நிலையில் யாரும் தேர்தலை சந்திக்க முடியாது. கட்சி உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும்.

கட்சிகளின் கடமை: தேர்தலில் நிற்க விரும்பும் கட்சிகள்.. அதன் உறுப்பினர் பட்டியலை வெளியிடுவதோடு.. பிரதம வேட்பாளரின் பெயரோடு.. பிரதம வேட்பாளர் என்று குறிப்பிட வேண்டும். தேர்தலில் நிற்க விரும்பும் கட்சிகள்.. பிரதம வேட்பாளரின் பெயரோடு.. கட்சி உறுப்பினர் பட்டியலை வெளியிட்டு.. தமது விருப்பை.. தேர்தல் திகதிக்கு 24 மணி நேரத்திற்கு முன் வரை அறிவிக்கலாம். தேர்தல் காலத்தின் போதோ.. பின்னோ.. அறிவிக்க முடியாது.

எதிர்பார்ப்பு: கண்ணியமான.. குழப்பம் இன்றிய சீரான பண்பான செயற்பாடுகள்.

விதிமீறுவோர் மீதான நடவடிக்கைகள்: சுயாதீன தேர்தல் திணைக்கள விதிகளை மீறும் போது அவை குறித்து எச்சரிக்கை தரப்படும். தொடர்ந்தும் விதிகள் மீறப்படின்.. குறித்த கட்சியின் நிரந்தரப் பதிவு நிலை தற்காலிக நிலையாக மாற்றப்பட்டு.. அது தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும்.

தேர்தலில் நிற்க தகுதி பெற்றுள்ள கட்சிகள் விபரம்:

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) () பதியப்பட்டுள்ளது.

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) () பதியப்பட்டுள்ளது.

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) () பதியப்பட்டுள்ளது.

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) () பதியப்பட்டுள்ளது.

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா.) () பதியப்பட்டுள்ளது.

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்.) () பதியப்பட்டுள்ளது.

இப்பதிவில் மேலதிக சேர்க்கைகளுக்கோ.. திருத்தத்திற்கோ இடமில்லை.

உங்களை ஒத்துழைப்புக்கு நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லின் செல்வரே எங்களுக்கு என்றும் நீங்களே மாமன்னர்.மன்னர் இசைக்கலைஞர் அவர்களிடம் இந்தப் பணியை ஒப்படைப்போம். :rolleyes: யா ம ச வின் கொடியையும் சின்னத்தையும் விரைந்து வந்து இணைக்கும்படிமன்னர் இசைக்கலைஞர் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.அவரின் திறனே அளப்பரியது.மன்னர் சித்தன் :rolleyes:மன்னர் இடையாலைபோபவன் :rolleyes:மன்னர் குளவி :rolleyes:அவர்களையும் தங்கள் பிரச்சாரத்தை புயல்போல் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொல்லுகின்றேன் :lol:

மன்னர்கள் சுவி மற்றும் வாத்தியாரின் வேண்டுகோள்களுக்கிணங்க மன்னர்கள் சபைக்கான சின்னம் அறிமுகப்படுத்தப்படுகிறது. :wub:

swordaxe.jpg

எதிர்க்கட்சிகள் வாலாட்டினால் கோடரியால் பிளந்து வாளால் அறுத்து மன்னர்கள் தங்கள் வெஞ்சினத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதை இக்கணம் அறியத்தருகிறோம்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றிரவு ப.மே.க. வின் அலுவலக வாசலில் கட்டியிருந்த கொடிக்கம்பத்தை யாரோ புடுங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.

மரியாதையா இன்றிரவு திரும்பவும் கொண்டு வந்து நட்டு விடவும். இல்லாவிட்டால் ஒரு கட்சி வாசலிலும் கம்பம் இருக்காது.

சிறி அது கொடிக்கம்பமா :rolleyes: நான் ஏதோ புதுவித அகப்பை என்று நினைத்து கொண்டு போட்டேன். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றிரவு ப.மே.க. வின் அலுவலக வாசலில் கட்டியிருந்த கொடிக்கம்பத்தை யாரோ புடுங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.

மரியாதையா இன்றிரவு திரும்பவும் கொண்டு வந்து நட்டு விடவும். இல்லாவிட்டால் ஒரு கட்சி வாசலிலும் கம்பம் இருக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றிரவு ப.மே.க. வின் அலுவலக வாசலில் கட்டியிருந்த கொடிக்கம்பத்தை யாரோ புடுங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.

மரியாதையா இன்றிரவு திரும்பவும் கொண்டு வந்து நட்டு விடவும். இல்லாவிட்டால் ஒரு கட்சி வாசலிலும் கம்பம் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

yarlhouse.jpg

யாழ் கள களமாளுமன்ற.. பொதுத் தேர்தல் அறிவிப்பு.

வாக்குப் பதிவுக்கான காலம்: 25-12-2011 (GMT 0000 இல் இருந்து GMT 2400)

தேர்தல் பிரச்சார முடிவுத் திகதி: 24:12:2011 (GMT 2400)

தேர்தல் பிரச்சார ஆரம்பம்: தேர்தலுக்கான இந்த அறிவிப்பு பதியப்பட்டதில் இருந்து.

தேர்தலில் போட்டியிட தேவையான தகுதி: சுயாதீன தேர்தல் ஆணையகத்தால் பதியப்பட்ட கட்சியாக இருப்பதோடு.. தேர்தல் தினத்திற்கு 24 மணி நேரம் முன்னாகவாவது.. கட்சி உறுப்பினர் பட்டியல்.. கொள்கை.. கொடி.. சின்னம்.. இவற்றை வெளியிட்ட கட்சியாக இருக்க வேண்டும்.

தேர்தல் வரையான கட்டாய விதிப்பு: நாளுக்கு ஒரு நகைச்சுவை பஞ்சாவது தேர்தலில் நிற்க விரும்பும் கட்சிகள் பதிய வேண்டும். இது கள உறவுகளை.. தனிநபர்களை வேதனைப்படுத்தவோ.. புண்படுத்தவோ கூடாது.

தேர்தல் பிரச்சார வடிவம்: படங்கள்.. காணொளிகள்.. ஆபாசமற்ற சினிமா பாடல்கள்.. நகைச்சுவைகள்.. இவை போன்ற மேலும் அங்கீகரிப்படக் கூடிய வேறு நவீன வடிவங்களும்.. அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எந்த வடிவில் அமைந்திருந்தாலும்.. பெண்கள்.. ஆண்கள் சம்பந்தப்பட்ட ஆபாசம்.. கவர்ச்சி.. அங்கீகரிக்கப்படவில்லை. ஊழல்... பண ஆசை.. பொன்னாசை.. பொருளாசை.. பெண்ணாசை.. ஆணாசை காட்டுதல் முற்றாக தடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காதலர்களுக்கு என்று கட்சி அமைத்துள்ளவர்கள்.. இதில் மிக கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் கட்சிக்கு.. இது கத்தி முனையில் நடப்பது போன்றதாக இருக்கும்..!

கூட்டணி: களமாளுமன்ற விதிக்கமைய கட்சிகள் தமக்கிடையேயோ.. தனிநபர்களிடையேயோ கூட்டணி அமைக்க முடியாது.

சுயேட்சைகள்: சுயேட்சைகள் என்ற நிலையில் யாரும் தேர்தலை சந்திக்க முடியாது. கட்சி உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும்.

கட்சிகளின் கடமை: தேர்தலில் நிற்க விரும்பும் கட்சிகள்.. அதன் உறுப்பினர் பட்டியலை வெளியிடுவதோடு.. பிரதம வேட்பாளரின் பெயரோடு.. பிரதம வேட்பாளர் என்று குறிப்பிட வேண்டும். தேர்தலில் நிற்க விரும்பும் கட்சிகள்.. பிரதம வேட்பாளரின் பெயரோடு.. கட்சி உறுப்பினர் பட்டியலை வெளியிட்டு.. தமது விருப்பை.. தேர்தல் திகதிக்கு 24 மணி நேரத்திற்கு முன் வரை அறிவிக்கலாம். தேர்தல் காலத்தின் போதோ.. பின்னோ.. அறிவிக்க முடியாது.

எதிர்பார்ப்பு: கண்ணியமான.. குழப்பம் இன்றிய சீரான பண்பான செயற்பாடுகள்.

விதிமீறுவோர் மீதான நடவடிக்கைகள்: சுயாதீன தேர்தல் திணைக்கள விதிகளை மீறும் போது அவை குறித்து எச்சரிக்கை தரப்படும். தொடர்ந்தும் விதிகள் மீறப்படின்.. குறித்த கட்சியின் நிரந்தரப் பதிவு நிலை தற்காலிக நிலையாக மாற்றப்பட்டு.. அது தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும்.

தேர்தலில் நிற்க தகுதி பெற்றுள்ள கட்சிகள் விபரம்:

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) () பதியப்பட்டுள்ளது.

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) () பதியப்பட்டுள்ளது.

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) () பதியப்பட்டுள்ளது.

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) () பதியப்பட்டுள்ளது.

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா.) () பதியப்பட்டுள்ளது.

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்.) () பதியப்பட்டுள்ளது.

இப்பதிவில் மேலதிக சேர்க்கைகளுக்கோ.. திருத்தத்திற்கோ இடமில்லை.

உங்களை ஒத்துழைப்புக்கு நன்றி. :)

இது அநியாயம் இதில என்ட கட்சியைக் காணோம்...நான் ஒருத்தரையும் தேர்தலில் போட்டியிட விட மாட்டேன்...எல்லாத்தையும் குழப்புவேன்

அட ஆமா , ரதி கட்சிய காணவே இல்லியே, இதுக்கு ,நெடுக்கு பதில் சொல்லியே ஆகணுமே!

அப்புறம் ரதியக்கோவ் , எதையும் பொறுமையா தட்டி கேட்கணும், இப்டி ”ரா”வா

அடிச்சவன் மாதிரி ராங்கா , ரவுடிதனம் பண்ணப்படாது! <_<

அது அது,,, பப்பி ஷேம் ! <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது அநியாயம் இதில என்ட கட்சியைக் காணோம்...நான் ஒருத்தரையும் தேர்தலில் போட்டியிட விட மாட்டேன்...எல்லாத்தையும் குழப்புவேன்

கட்சிப் பதிவுகள் நிறைவுக்கு வந்தன.

இதுவரை களமாளுமன்ற அங்கீகாரத்திற்கு வேண்டப்பட்ட ஐந்து கட்சிகள் நிரந்தர பதிவுக்கான அங்கத்துவ ஆதரவைப் பெற்றுள்ளன. அதற்கு மேலதிகமாக அனுமதிக்கப்பட்ட இரண்டு கட்சிகளில் ஒன்றுக்கு நிரந்தர அனுமதி கிடைத்துவிட்டது. அனைவருக்கும்.. யாழ் கள களமாளுமன்ற திட்டமிடல் குழு சார்பில் வாழ்த்துக்கள்.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2) + நிரந்தரப் பதிவு நிலை

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) (2) பதியப்பட்டுள்ளது.

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (5) பதியப்பட்டுள்ளது.

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) (4) பதியப்பட்டுள்ளது.

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) (2) பதியப்பட்டுள்ளது.

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா.) (5) பதியப்பட்டுள்ளது.

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்.) (6) பதியப்பட்டுள்ளது.

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா.) (1) நிபந்தனைளுடன் பதியப்பட்டுள்ளது. (நிபந்தனை : தேர்தலுக்கு முன் தேவைப்படும் 2 அங்கத்தவர்களில்.. இரண்டாமவரை இணைத்துக் கொள்ள வேண்டும். இன்றேல் கட்சிப் பதிவு சுயாதீனமாகவே ரத்தாகும். கட்சிப் பெயர் மட்டும் பதிவாகி இருக்கும்.)

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி.) (0) (ஆகக் குறைந்தது ஒரு அங்கத்தவர் ஆதரவு கூட வழங்கப்பட்ட குறித்த கால எல்லைக்குள்.. இல்லாததால் பதிவு வழங்கப்படவில்லை. கட்சிப் பெயர் மட்டும் பதியப்பட்டுள்ளது. தேர்தலில் தனித்து நிற்க முடியாது. ஆட்சிக்கும் தனித்துச் செல்ல முடியாது.)

நிரந்தரப் பதிவு பெற்றுள்ள கட்சிகள்.. தங்கள் அங்கத்துவர் பட்டியலை வெளியிடுவதோடு.. தேர்தல் மற்றும் கட்சி கொள்கை வகுப்புக்கள்.. கட்சிக்கான கொடி.. இலட்சினை.. போன்ற விடயங்களில் கவனம் செலுத்தலாம்.

வழங்கப்பட்ட காலக் கெடு.. கடந்த GMT 22:00 20-11-2011 இல் முடிவடைந்து விட்டதால்.. அனைத்துக் கட்சிப் பதிவுகளும் நிறுத்தப்படுகின்றன. தேர்தல் திகதி அறிவிக்கப்படும். அதற்கு முன் களமாளுமன்ற பொதுவிதிகள் சமர்பிக்கப்பட்டு.. அங்கீகாரம் கோரப்படும்.

அனைத்து பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் அதன் அங்கத்தவர்களுக்கு மதிப்பளித்து.. அங்கத்தவர் பட்டியலை.. வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது..! அப்படி செய்யாத கட்சிகள் தேர்தலில் பங்கெடுப்பதில் இருந்து தடுக்கப்படலாம்.

கட்சிகளில் அங்கத்துவம் பெறுவதற்கு எந்தக் காலவரையறையும் இல்லை..!

நன்றி. :):lol::icon_idea:

உங்கட கட்சிக்கு நிபந்தனை பதிவு தான் வழங்கப்பட்டுள்ளது. கட்சி ஒன்றை நிரந்தரமாகப் பதிவு செய்ய ஸ்தாபித்தவர் தவிர குறைந்தது இரண்டு கட்சி உறுப்பினர்கள் அங்கத்துவம் பெற்றிருக்க வேண்டும். உங்கள் கட்சிக்கு ஒரு அங்கத்தவர் ஆதரவு மட்டுமே இருப்பதால்.. நிபந்தனைப் பதிவு மட்டுமே தரப்பட்டுள்ளது.

நீங்கள் உங்கள் கட்சிக்கு தேர்தலுக்கு 24 மணிக்கு முன்னாவது.. ஸ்தாபகரைத் தவிர இரண்டு அங்கத்தவர்கள் ஆதரவு உள்ளதை நிரூபித்தால்.. களமாளுமன்ற விதிக்கமைய கட்சிக்கு நிரந்தரப் பதிவும்.. தேர்தலில் நிற்கவும் சந்தர்ப்பம் அளிப்போம்.

அறிவிலியின் கட்சிக்கு பெயர் பதிவைத் தவிர வேறு பதிவு தரப்படவில்லை. காரணம்.. அவரின் கட்சிக்கு இன்னும் அங்கத்தவர்கள் சேரவில்லை. அறிவிலியும் இரண்டு அங்கத்தவர்களைக் கட்சிக்கு சேர்த்துக் கொண்டால் அவரின் கட்சிக்கும் நிரந்தரப் பதிவும் தேர்தலில் நிற்க வாய்ப்பும் அளிக்கப்படும்.

ஆனால் எனிமேல் புதிய கட்சிகளை இந்த தேர்தல் ஆண்டில் பதிவு செய்ய இடமளிக்கப்படமாட்டாது. இவை அனைத்தும் முன்னர் சொல்லப்பட்டுள்ள களமாளுமன்ற விதிக்கு உட்பட்ட நடவடிக்கைகள் ஆகும். :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள மன்னர்கள் சபையின் கொடியை மீண்டும் அறிமுகப்படுத்துவதில்

மன்னர்கள் பெருமையடைகின்றனர்.

mannarkal.jpg

Uploaded with ImageShack.us

எங்கள் சின்னம்

swordaxe.jpg

யா ம ச வின் வேட்பாளர்கள் :rolleyes:

மாமன்னர் சுவி அண்ணர் பிரதமர்

மன்னர் இசைக்கலைஞர் மந்திரி

மன்னர் சித்தர் மந்திரி

மன்னர் குழவி துணை சபாநாயகர்

கட்சியின் கொள்கைகள் வெகுவிரைவில் வெளியிடப்படும்.

மன்னர் இசைக்கலைஞரும்

மன்னர் குழவியும்

அதற்கான பணிகளில் ஈடுபடுவார்கள் .

யா ம ச வின் உறுப்பினர்கள்

மன்னர் இசைக்கலைஞர்

மன்னர் இடையாலைபோபவன்( இவர் இடையாலை போகமாட்டார் ):lol:

மன்னர் குழவி

மன்னர் சித்தர்

மாமன்னர் சுவி

மன்னர் வாத்தியார் ( ஆயுட்கால உறுப்பினர் ):icon_idea:

யா ம ச

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள மன்னர்கள் சபையின் தேர்தலை நோக்கிய பணிகள் மற்றைய கட்சிகளை விட சிறப்பாகவும் கிரமமாகவும் உள்ளமை பாராட்டத்தக்கது.

கட்சிகள் எங்கள் இனப் பாரம்பரியம்... தமிழ் தேசிய இன அடையாளங்களை.. மீள இனங்காட்டக் கூடிய.. வகையில் செயற்பட்டு.. எமது இன இருப்பிற்கான அடையாளங்களை புதிய சந்ததி அறியச் செய்தாலும் நல்லது. ஆனால்.. எமது இன அடையாளங்களை.. வரலாற்றியல் அடையாளங்களை.. கட்சிகள் சொந்தம் கொண்டாடுவது ஏற்கக் கூடியதல்ல. ஆனால்.. பிரச்சாரங்களில் மக்களை அறிவூட்ட அவற்றைப் பயன்படுத்தலாம்.

தமிழர்களின் பாரம்பரிய ஆட்சிகளில்.. அரசுடமை.. வீரம்.. காதல்... வீர விளையாட்டுக்கள்.. நகைச்சுவை.. மொழியியல்.. கலை.. இலக்கியம்.. நடனம்.. பண்பாடு.. தொழில்துறை.. விவசாயம்.. கப்பல் துறை.. கட்டுமானம்.. நீர்ப்பாசனமும்.. முகாமைத்துவமும்.. என்று பல அம்சங்கள் சிறந்து விளங்கியுள்ளன. அவற்றை மீண்டும் மக்களுக்கு அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள்.. வரவேற்கப்படும்.

தேர்தல் ஆணையகத்தின் முன்னைய அறிவிப்புக்களின் படி.. தேர்தல் காலத்தில் சரியான... தேர்தலை நோக்கிய கட்சிச் செயற்பாடுகளைக் கொண்டிராத கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்தும் தடை வரலாம்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பாரம்பரிய.. கட்ட.. உள்ளக விளையாட்டு.. an ancient Tamil Pachesi board.. சுவடி..

turkey19.jpgturkey-patoli.jpg

உசாத்துணை: http://viewzone2.com...ientturksx.html

இப்படியான விடயங்களை அறிமுகப்படுத்திச் கட்சிச் செயற்பாடுகளை செய்வது வரவேற்கப்படும். காதலர் கட்சி கூட தமிழர்களின் நளினமும் எளிமையும் மிக்க.. அழகை.. பெண்மையை.. அதன் இயல்பை.. ரசிக்கும் காதல் உணர்வுகளை.. பாரம்பரிய காதல் வரலாற்றியலை சொல்லலாம். அதை நவீனப்படுத்தியும் எமது காதல் நவீன உலகிலும்.. பாரம்பரிய விழுமியங்களை காவிச் செல்ல புதிய சந்ததிக்கு அவற்றை அடையாளம் காட்டலாம். அதைவிட்டிட்டு.. ஆள் கூட்டி விடுற.. வேலைகளை செய்வது.. எந்தப் பயனையும் தரா. இந்தத் தலைப்பில்.. பல உபயோகமாகவற்றைச் செய்யலாம். அதற்கு முன்னோடியாக இருக்கும்.. யாழ் கள மன்னர்கள் சபை பாராட்டிற்குரியது. :):icon_idea:

அகநானூறு கால தமிழிச்சியின்.. காதல்.. மொழி... காதலனின் பிரிவிலும்.. இயற்கையின் இயல்பில் மயங்குகிறாள்... தமிழ் அகநானூற்றுப் பெண். இன்றைய பெண்களோ.. காதலன் என்று பல ஆண்களை தெரிவு செய்து வைச்சுக் கொண்டு.. நாளுக்கு ஒன்றாய்.... பப்பில்.. கிளப்பில்.. போதையில்.. தள்ளாடுதுகள்...! :):lol:

O man of hill country, where in winter

it rains heavily with sweet thunders,

all living beings sleep at midnight,

the fathers of hill-dwelling maidens,

with pretty jewels and fragrant hair,

have searched for sleeping place during the chase

but returned home to sleep on the bed of tiger-hide.

When I am separated from you,

I suffer whenever I think of you.

When I wait long for you outside,

during the night, while all sleep,

at the cold and unfriendly north wind,

in our garden, and stand embracing a tree

and pondering over your return—

Such standing and waiting is sweeter than

embracing your body so as to press

my well shaped heaving breasts many times

and to surround you with my arms wearing shining bangles.

Akananuru 58

உசாத்துணை: http://www.humanisti...s.org/tamil.htm

E_1277020409.jpeg

இன்று காதலுக்கு தூது போக.. எம் எஸ் என்.. பேஸ் புக்.. எஸ் எம் எஸ்.. போல.. அன்று இயற்கையை ரசித்து காதல் செய்த தமிழர்கள்.. காதல் தூதனுப்பிய அன்னப்பறவை வகைகள் இப்படியாக இருக்க வேண்டும் என்பதாகவே தமிழ் இலக்கிய புலவர்கள்.. அதனை வர்ணித்துள்ளனர். இன்று அவை அழிந்துவிட்டன. இருந்தாலும்.. எமது காதல் இலக்கியங்கள் அவற்றை வாழ வைக்கின்றன.

பாரம்பரிய மனிதர்களின் திருமண வாழ்க்கையில்.. தமிழர்களின் காதல்.. திருமண வாழ்வும் உள்ளடக்கம்..!

http://books.google....id=ulAU-xjqQ5kC

Edited by nedukkalapoovan

அறிவிலியின் கட்சிக்கு பெயர் பதிவைத் தவிர வேறு பதிவு தரப்படவில்லை. காரணம்.. அவரின் கட்சிக்கு இன்னும் அங்கத்தவர்கள் சேரவில்லை. அறிவிலியும் இரண்டு அங்கத்தவர்களைக் கட்சிக்கு சேர்த்துக் கொண்டால் அவரின் கட்சிக்கும் நிரந்தரப் பதிவும் தேர்தலில் நிற்க வாய்ப்பும் அளிக்கப்படும்.

வேணாம் நெடுக்கு அழுதுடுவேன்!

பார்வையாளர் கட்சின்னா... அதுக்கு பேரு ஒரு கட்சியா?

அதுக்கு பேரு மிஸ்டர் பொதுஜனம்!

நான்கூட நெடுக்கு , பிரிச்சு மேய்ஞ்சு ஆராயுற டாலன்ற்பத்தி ...

என்னமோ நெனைசேனே! <_<

  • கருத்துக்கள உறவுகள்

பாரம்பரிய விழுமியங்களை காவிச் செல்ல புதிய சந்ததிக்கு அவற்றை அடையாளம் காட்டலாம். அதைவிட்டிட்டு.. ஆள் கூட்டி விடுற.. வேலைகளை செய்வது.. எந்தப் பயனையும் தரா. இந்தத் தலைப்பில்.. பல உபயோகமாகவற்றைச் செய்யலாம்.

ஆள் கூட்டுற வேலை என்றால்... மாமா வேலையா.... நெடுக்ஸ்? :D:lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள காதலர் கட்சி தலைமையை இன்னும் 24 மணிநேரத்தில் யாரும் பொறுப்பெடுக்காது விட்டால் கட்சி கலைக்கப்படும் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். :(

இதிலை ஏதும் உள்குத்து இல்லையே குட்டி அண்ணா??? :rolleyes::lol:

சத்தியமா இதில எந்த ஒரு தப்பான எண்ணத்திலும் நான் எழுத இல்லை... :blink::( (வசீகரா படத்தில், திருமணப் பந்தலுக்கு வாழைமரம் நடுவதற்கு வடிவேலுவுக்கும் விஜய்க்கும் நடக்கும் உரையாடல்- ஒரு காமெடி சீன்..) :)^_^

வேணாம் நெடுக்கு அழுதுடுவேன்!

பார்வையாளர் கட்சின்னா... அதுக்கு பேரு ஒரு கட்சியா?

அதுக்கு பேரு மிஸ்டர் பொதுஜனம்!

நான்கூட நெடுக்கு , பிரிச்சு மேய்ஞ்சு ஆராயுற டாலன்ற்பத்தி ...

என்னமோ நெனைசேனே! <_<

கட்சி என்ற வார்த்தையைப் எழுதாமல் வெறும் பார்வையாளர்களாக ( என்னைப் போல் ஒருவனா :lol::D ) இருந்திருக்கலாம் நீங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.