Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்ல மட்டன் (இறைச்சி) வாங்குவது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு வந்தால் மட்டன் பிரியர்கள் ஆசையாக, இறைச்சிக் கடையின் கூட்டத்தில் காத்திருந்து வாங்கிவரும் இறைச்சிக்கு மனைவிமார்களிடம் விதவிதமான கமெண்டஸ்கள்!

நானும் எவ்வளவு நேரம் தான் வேக வைக்கிறது? வேகவே இல்லை! உங்களை போலவே கிழட்டு ஆடா பார்த்து கரி வாங்கி வந்தீர்களா? என்று ஒரு நக்கல்!

உங்கள் முகத்தை பார்த்தாலே இளிச்சவாயன் என்று அறிந்து இந்த பசையில்லா மட்டனை உங்கள் தலையில் கட்டிவிட்டானா? என மடையன் பட்டம் கொடுத்து மட்டம் தட்டும் மனைவி!

கரி கடைகாரன் பொண்டாட்டியை பார்த்து ஜொல்லு விட்டு இருந்த சமயத்தில் வெறும் எலும்பாக உங்கள் தலையில் கட்டிட்டாங்களா பார்த்து வாங்கமாட்டீர்களா? என்று ‘ அக்கரையுடன்’ ஆலோசனைகளும் மனைவிகளால் வழங்கப்படும்.

மனைவியிடம் மட்டன் வாங்கி நல்ல பேர் வாங்கவும்(கொஞ்சம் சிரமம் தான்), உண்மையில் நல்ல மட்டன் வாங்க இதோ டிப்ஸ்கள்!

செம்மறி ஆடு இறைச்சி வேண்டுமா? வெள்ளாடு இறைச்சி வேண்டுமா?

மட்டன் (Mutton) என்று சொல்லப்படுவது செம்மறி ஆடு இறைச்சிதான்.

சவான் (Chevon) என்றால்தான் வெள்ளாட்டு இறைச்சி.

நமக்கு செம்மறி ஆடு இறைச்சி வேண்டுமா? வெள்ளாடு இறைச்சி வேண்டுமா? என்று முடிவு செய்யுங்கள்?

நிறைய பேர் வெள்ளாடு இறைச்சியைதான் விரும்புகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை! ஆனால் செம்மறி ஆடு இறைச்சிதான் மிகவும் ருசியானது என்பது நிறைய பேருக்கு தெரியவில்லை!

எல்லோரும் வெள்ளாடு இறைச்சி வேண்டும் எனக் கேட்பதால் கசாப்புக்கடைகாரர் செம்மறி ஆட்டின் வாலில் கருப்பு மை தடவியும், அல்லது வேறு வெள்ளாடு வாலை செம்மறி ஆட்டின் வாலிற்கு பதிலாக சொருகி பாவலாகாட்டும் கசாப்புகடையும் உண்டு. வெள்ளாடு இறைச்சிதான் வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால் காசாப்பு கடையில் தொங்கும் இறைச்சியின் வாலை தொட்டு மை தடவி உள்ளதா என பாருங்கள், அல்லது ஒட்டு வாலா என அறிய இழுத்து பாருங்கள். ஒரு சில கில்லாடி கடைகாரர் கருப்பு நிறம் ஆக்க ஹேர் டை அடித்துவிடுகிறார்கள் தொட்டாலும் கண்டுபிடிக்கமுடியாது! மேலும் ஒட்டல் வால் பகுதியை உள்பக்கமாக தைத்துவிடுவார்கள் அதுவும் எளிதா கண்டுபிடிக்கமுடியாது! எனவே செம்மறி ஆடு இறைச்சியை கண்டு பிடிக்க ஒரே டிப்ஸ் இறைச்சியில் கடைகாரர் எவ்வளவுதான் கழுவினாலும் லேசாக அதன் ரோமங்கள் ஒட்டிகொண்டிருக்கும் அதை உன்னிப்பாக கவனித்து இது செம்மறி ஆடு இறைச்சி எனக் கண்டு பிடிக்கலாம்! அது இல்லாதது வெள்ளாடு! மேலும் செம்மறி ஆடா, வெள்ளாடா, அல்லது மாட்டிறைச்சியா என கண்டுபிடிக்க என்சைம் பரிசோதனை, பைபர் எண்ணிக்கை பரிசோதனை,அனட்டாமிக்கல் பரிசோதனை பல பரிசோதனைகள் இருந்தாலும் அவைகள் கால்நடை மருத்துவர்களால் மட்டும் முடிந்தவைகளாக உள்ளது. ஒரு அதிர்ச்சி கொசுறு செய்தி, ஒரு நாயின் தலையை,கால்களை துண்டித்துவிட்டு தோலை உரித்துவிட்டு தொங்கவிட்டால் அசல் வெள்ளாட்டு இறைச்சி போன்றே இருக்கும்.இதை கண்டுபிடிக்க நிச்சயம் கால்நடை மருத்துவரின் உதவி தேவை! முனிசிபல் மற்றும் கார்ப்பரேஷன் பகுதியில் கால்நடை மருத்துவர் இறைச்சியை பரிசோதித்து அதன் தொடை பகுதியில் அவர் பணிபுரியும் நிலையத்தின் முத்திரையை பதித்திருப்பார், தலையில் நெற்றி பகுதியில் அரக்கு சீல் இருக்கும் இவைகளை கவனித்து வாங்கலாம். தலையில் இருக்கும் முத்திரை அந்த ஆட்டை உயிருடன் இருக்கும் பரிசோதனை செய்ததற்கான அடையாளம்.இந்த அடையாளம் இருந்தால் தான் இறைச்சி கூடத்திற்குள் ஊழியர்கள் அனுமதிப்பார்கள். அறுக்கப்பட்டு உறித்து வெளியே வரும் போது கால்நடை மருத்துவரால் மீண்டும் இறைச்சியை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டதன் அடையாளம் தான் தொடையில் வைக்கப்பட்டுள்ள முத்திரை!

இளம் இறைச்சியா? கிழட்டு ஆட்டு இறைச்சியா?

தொங்கி கொண்டிருக்கும் இறைச்சியின் கழுத்து பகுதியை உன்னிப்பாக கவனியுங்கள். 1)கழுத்து பகுதி தடிமனாக பெரிதாக இருந்தால் அது வயதானதாக இருக்கலாம். இந்த இறைச்சி வேகவைக்க சிரம்ம படவேண்டும்

2) கழுத்து பகுதி மிகவும் சிறிதாக இருந்தால் இது குட்டியா இருக்கலாம் அல்லது சரியான வளர்ச்சியில்லா சவலை ஆடாக இருக்கலாம். இந்தவகை வளவளப்பாக பசை இல்லாமல் இருக்கும். இதுவும் நமது சமையலுக்கு ருசிசேர்க்காது.

3)மிதமான கழுத்து உள்ள இறைச்சி நமது சமையலுக்கு உகந்தது. நமக்கு மனைவியிடமிருந்து வசைகளையும் குறைக்கும்.

4)கழுத்தின் வெட்டு பட்ட பகுதி ஐஸ் கிரீமை வெட்டியது போல் (Smooth cuting) இருந்தால் முன்பே இறந்த ஆட்டினை வாங்கி கசாப்பு செய்திருக்கிறார்கள் என அனுமானிக்கலாம். இதையும் நமது ஆரோக்கியத்தை எண்ணி தவிர்க்கலாம்.

5) கழுத்தின் வெட்டு பகுதி பிசிறுகளுடன் மேலும் இறைச்சி இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் நல்லது.

6) கிட்னியை சுற்றி கொழுப்பு சூழ்ந்துள்ளதா எனப் பார்க்கவேண்டும். இது போஷாக்காக வளர்க்கப்பட்டுள்ளதற்கான் அடையாளம்.

7) பொதுவாக ஆண் கிடாதான் கசாப்புக்கு விற்பனைக்கு வரும். அதனால் சிறிதாக இருந்தால் இளம் குட்டி! பெரிதாக கெட்டியாக இருந்தால் வயதானதாக இருக்கலாம். இதை வாங்கி சமைத்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என நினைக்கவேண்டாம். அப்படியெல்லாம் இல்லை.

8) தொங்கப்பட்டுள்ள ஆட்டில் விரை (Testis) இல்லையென்றால் அது பெண் ஆடாக இருக்கலாம். பொதுவாக இளம் பெட்டை ஆடுகள் இனப் பெருக்கத்திற்கு பட்டியில் வைத்துக்கொள்வதால் இந்த வயது பெட்டை ஆடுகள் கசாப்புக்கு வருவதில்லை. வயதான, நோயுற்ற, குட்டி போடமுடியால் இறந்துவிட்ட பெட்டை ஆடுகள்தான் விற்பனைக்கு வருகிறது. இதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

எந்த பகுதி இறைச்சியை வாங்கலாம்?

சிலர் தொடை கறியை மட்டும் கொடுங்கள் என்று வாங்குவார்கள் அந்த பகுதி கொஞ்சம் வேகுவதற்கு நேரம் அதிகம் ஆகும். ஒரு ஆட்டின் கழுத்து, நெஞ்சு பகுதி, முன்னங்கால் பகுதி, தொடை பகுதி,சிறிது ஈரல் என எல்லாம் பகுதியிலிருந்தும் சீராக இருக்கும்மாறு வாங்குவது நல்லது. இளம் சிகப்பு ( ரோஜா) நிறம் இறைச்சியாக இருந்தால் நன்று. கொஞ்சம் டார்க்காக இருந்தால் அது கிழடாக இருக்கலாம் இதை வேகவைக்க சோடா உப்பு, பப்பாளி காய் என பல டிப்ஸ்கள் தேவைபடும். மேலும் சாப்பிட்டுமுடித்துவிட்டு பல் இடுக்கில் மாட்டிக்கொள்ளும் இறைச்சி துகள்களை அகற்றும் வேலை பிரதானமாக இருக்கும். ஆடு அறுக்கும்போதே அருகில் காத்திருந்து சுடசுட அந்த இறைச்சியை வாங்கிவந்து வேகவைத்தால் அது இளம் ஆடாக இருந்தாலுமே வேகவைக்க சிரமப்படவேண்டும். ஆடுகள் அறுக்கப்ட்டு சில மணிநேரங்கள் தோங்கவிடும் போதுதான் தசைபகுதியில் உள்ள மையோகுளோபின் மாறுதல்கள் நடந்து விரைப்புத் தன்மை விலகி சமைக்க தயாராகிறது.எனவே அப்படி வாங்கி வந்த இறைச்சியை நல்ல காற்றோட்டமான பாத்திரத்தில் சில மணி நேரம் வைத்திருந்து பிறகு சமைக்கலாம்.

இரத்தம், குடல் வறுவல் அபிமானிகளுக்கு ஒருவேண்டுகோள் இதில் சத்துக்களும் குறைவு, ஆரோக்கியத்திற்கும் அவ்வளவு நல்லது இல்லை. ஆசையாக இருந்தால் சில நாட்கள் சாப்பிடலாம். ஆனால் நன்றா சமைத்து!

இந்த ஞாயிறு இந்த டிப்ஸ்களுடன் கசாப்புகடைக்கு வீறுகொண்டு செல்லுங்கள். நல்ல தரமான மட்டன் வாங்குங்கள் மனைவியிடம் நல்ல பேர் வாங்குங்கள்! டிப்ஸ்கள் வழங்குவது எளிது! கசாப்புகடைகாரரின் மீசையை கவனத்தில் கொள்ளுங்கள், மேலும் அவரின் கசாப்பு வெட்டு கத்தியின் மேல் ஒரு கண் இருக்கட்டும். பயத்தை வெளியே காட்டிகொள்ளாமல் நீங்கள் குறிப்பிடும் இறைச்சியை தைரியமாக கேட்டு வாங்குங்கள்! இல்லை என்றால் கடையை மாற்றுங்கள்!! என்னுடைய டிப்ஸ்களை நீங்கள் நடை முறைப்படுத்தி வாங்க முயற்சித்து கடைகாரர் மூலம் இலவசமாக கிடைக்கும் திட்டுகளோ, இரத்தக் காயங்களுக்கு ஆசிரியர் குழு பொறுப்பு இல்லை!!

http://kaalnadaidoct...og-post_29.html

  • கருத்துக்கள உறவுகள்

--------

8) தொங்கப்பட்டுள்ள ஆட்டில் விரை (Testis) இல்லையென்றால் அது பெண் ஆடாக இருக்கலாம். பொதுவாக இளம் பெட்டை ஆடுகள் இனப் பெருக்கத்திற்கு பட்டியில் வைத்துக்கொள்வதால் இந்த வயது பெட்டை ஆடுகள் கசாப்புக்கு வருவதில்லை. வயதான, நோயுற்ற, குட்டி போடமுடியால் இறந்துவிட்ட பெட்டை ஆடுகள்தான் விற்பனைக்கு வருகிறது. இதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

--------

யாழ்ப்பாணத்தில் அநேகமானோர் கிடாய் ஆட்டிறைச்சியை தான் விரும்பி வாங்குவார்கள்.

கடைக்காரரால்.... எல்லாருக்கும் கிடாய் வெட்டி கொடுக்க முடியாததால்...

கிடாயின் விதையை வெட்டி எடுத்து, மறி ஆட்டின் மடியில்... வைத்து தைத்து, கிடாய் என்று சொல்லி விற்பார்.

ஒரு கிடாயின் விதையுடன்... ஏழெட்டு மறி ஆட்டை வித்து விடுவார்.

இறைச்சிக் கடையில்... தொங்கும் ஆட்டில் உள்ள விதை, ஒரிஜினல் தானா... என்று கிட்டப் போய் பார்த்து வேண்ட வேண்டும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அட! ஆட்டிறைச்சி வாங்குவதற்கு இவ்வளவு சூட்சுமங்கள் மறைந்திருக்கின்றது இன்று தான் தெர்யும்!

இணைப்புக்கு நன்றிகள், பெருமாள்!

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாளுக்கு நன்றி

மட்டன் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் விரும்பி சாப்பிடுவேன் அதிலும் மட்டன் பிரைட் என்றால் சொல்லவே ..... நாவூறுது :wub:

Goat+liver+fry.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எருமையின் மேல் ஏறி நின்று ஆடு வாங்க அட்வைஸ்?

நல்ல விடயம். தொடுப்புக்கு நன்றி.

கவனம் இப்போது எல்லா வருத்ததிர்க்கும் காரணம் இறைச்சி .

சைவ சாப்பாடு பற்றி ஓஷோ சொல்லியது. (நான் அசைவம் மெல்ல மெல்ல என்னை மாற்ற முயற்சித்து வருகிறேன், மிகவும் கடினமாக உள்ளது. நீங்கவேற ஆட்டிறைச்சி பற்றி போட்டு மனசை கெடுக்க வேண்டாம். )

first of all you are killing an animal

you do not need to kill to feed yourself

when you were living in the cave age there was no cultivation

no food and you had to survive…

just imagine the beautiful animal was alive

and you cut the head

even to imagine to cut an animal and eat it

is so insensitive…

to kill an animal is so extremely insensitive

the moment you are walking on the inner journey

to kill is so painful…ugly…inhuman…

meat gives very low frequency

pure red energy

it is very good for a growing person

it needs the protein of that meat to grow

meat may be very good for the body

but you are not the body

if you think you are just the body and this mind and this ego

keep eating meat and it will reassure the bodymind

but within you there is a spirit

and your spirit needs lighter frequencies of food

it needs green and purple…higher frequencies

higher qualities of softer food

meat gives you red energy

it is not spiritual light

so you are loosing your spiritual energy

and the higher is sucked into lower red frequency

it is damaging your spiritual body

your stomach is not made to dissolve meat

it has no teeth…it is soft

people who eat meat

have a lot of acids in the body to dissolve the meat

and then the energy is extracted

the human body is not a meat consuming mechanism

the stomach is very sensitive

and needs softer food

most people who die early

are dying out of some stomach ailment

meat is too strong for the body but the body can adapt to anything

so it starts creating so many chemicals…acids…

to dissolve and extract the energy from the meat

if you stop eating meat

you can burn a hole in the stomach with the unabsorbed acid

a person who eats meat cannot stop eating meat suddenly

because the body has developed a system

to create acid to dissolve the meat

if meat eating people suddenly stop eating meat

their stomach will be destroyed

they have to gradually get off meat

a meat eating person has to continuously eat meat

because it also needs to absorb acids that are released in the system

and he gets so used to that hard energy that without it he feels empty

you understand ?

meat is not good for a meditator

the fish in the ocean is soft meat

chicken is harder meat

then you go to cow goats and animals…harder meat

the only meat perhaps understandable is oceanic…fish

because it is still soft

your body cannot be harmed so much

there are so many choices of nutrition

why kill the poor fish ?

that is what meditations are all about

growing more and more sensitive to life

and if you cannot give life you cannot take it away

if it is a question of life and death and you have no choice

i can understand

but there is so much choice !

meditators have to avoid killing for food

i remember once a friend of mine was eating fish

eating the fish he was saying…oh…very badly cooked fish…no good…

and he threw the fish away

i said…strange…you killed the fish

at least be grateful to the fish

thank the fish for its meat

he said the fish was not cooked well…i do not want it

he did not even respect the life of the fish

even the fish must have thought

at least you wanted to eat me…eat me fully

do not throw me away

now they throw it away…for not tasting right !

poor fish…just think it was living…

its life taken away and then rejected

because the chef did not use the right sauce !

human beings have become so insensitive

in the past the red indians

and the old mexicans and the ancient people

did a ritual and bowed down

thanking the animal for the food

at least they were grateful !

they bowed saying thank you for your meat

i am sorry i have to kill you to eat today

Edited by kssson

நான் இந்த பிரச்சனையால், இப்பவெல்லாம் என்னுடைய சில மச்சான்மார்களுடன் சேர்ந்து உயிராடு வாங்கி அங்கேயே அவர்களைக் கொண்டே அறுத்து 8 பேராக பங்கு போட்ட்டு அதில் ஒரு பங்கை வாங்கி வைத்து விடுகின்றேன்

ஆட்டு இறைச்சியை விட ஆட்டு இரத்த வறை அந்த மாதிரி இருக்கும்

ஒரு நண்பன் இப்படித்தான் ஒரு ஆட்டை வாங்கி பங்கு போட்டு வீட்டுக்கு கொண்டுவந்து என்னையும் சின்ன துண்டுகாளாக வெட்ட வைத்தான். அந்த இறைச்சி சூடாக இருந்தது. அன்றோடு போனது எனது ஆட்டிறைச்சியின் ஆசை. இப்பவெல்லாம் எப்போதாவது தான் சாப்பிடுவது.

உந்த இரத்த வறை, குடல் கறி போன்றவற்றுக்கு கிட்டவும் போவதில்லை.

ஐரோப்பாவில் செம்மறி ஆட்டை (Lamb /Mutton ) விட ஊர் ஆட்டில் (Goat) கொழுப்புக் குறைவு. எல்லாக் கடைகளிலும் விற்பதில்லை. கோழியையும் விட கொழுப்புக் குறைந்தது. காப்பிலிகள் அதிகம் இதனைத்தான் சாப்பிடுவார்கள்.

http://www.thoroughlyfood.co.uk/article/94/Goat-Meat-A-great-healthy-alternative-

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெருமாளுக்கு நன்றி

மட்டன் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் விரும்பி சாப்பிடுவேன் அதிலும் மட்டன் பிரைட் என்றால் சொல்லவே ..... நாவூறுது :wub:

Goat+liver+fry.jpg

என்ன உது?உருளைக்கிழங்கு பிரட்டல்கறி மாதிரி கிடக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உது?உருளைக்கிழங்கு பிரட்டல்கறி மாதிரி கிடக்கு?

இது எப்படியிருக்கு ?

1024px-Kaleji_Curry.JPG

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டிறைச்சியை சின்னத் துண்டுகளாக வெட்டி சமைத்தால்.... சுவையாக இருக்கும்.a43a.gif:D

கொஞ்சக் காலமாக ஆட்டிறைச்சி சாப்பிடுவது குறைவு. இந்தத் திரியை பார்த்ததால்

இந்த வார விடுமுறையில் நிறைய இஞ்சி, உள்ளி, கறுவாய், ஏலம் போட்டு உறைப்பான பங்கு ஆட்டிறைச்சி குழம்பு நல்ல சுடு சோற்றுடன் சாப்பிட வேண்டும் போல போல கிடக்கு.

இது எப்படியிருக்கு ?

1024px-Kaleji_Curry.JPG

பார்த்தால் நல்லத்தான் இருக்கு சாப்பிட்டால் கொழுப்பு ஏறிவிடும் எனக்கில்லை என் கணவருக்கு அதுதான் பயமாக இருக்கின்றது :lol::D:lol::D:wub::icon_mrgreen:

ஒரு நண்பன் இப்படித்தான் ஒரு ஆட்டை வாங்கி பங்கு போட்டு வீட்டுக்கு கொண்டுவந்து என்னையும் சின்ன துண்டுகாளாக வெட்ட வைத்தான். அந்த இறைச்சி சூடாக இருந்தது. அன்றோடு போனது எனது ஆட்டிறைச்சியின் ஆசை. இப்பவெல்லாம் எப்போதாவது தான் சாப்பிடுவது.

உந்த இரத்த வறை, குடல் கறி போன்றவற்றுக்கு கிட்டவும் போவதில்லை.

கிடாய் ஆட்டில் குடல் கறியும், இரத்த வறையும், மூளைப் பொரியலும், கொழுப்பும் தான் சூப்பர். நான் மச்சான், ஆட்டை பங்கை சிறிய துண்டுகளாக வெட்டும் போது, கொழுப்பை பச்சையாகவே சாப்பிடுவான்.

ஆட்டு விதை கறியினுள் போட்டு சமைத்து வரும் போது அந்த மாதிரி இருக்கும்

நிழலி, அடுத்த முறை கிடாய் வெட்டும்போது எனக்கும் சொல்லவும். சும்மா வந்து எட்டிப் பார்க்கத்தான்..... :icon_idea: :icon_idea: :icon_idea:

கொஞ்சக் காலமாக ஆட்டிறைச்சி சாப்பிடுவது குறைவு. இந்தத் திரியை பார்த்ததால்

இந்த வார விடுமுறையில் நிறைய இஞ்சி, உள்ளி, கறுவாய், ஏலம் போட்டு உறைப்பான பங்கு ஆட்டிறைச்சி குழம்பு நல்ல சுடு சோற்றுடன் சாப்பிட வேண்டும் போல போல கிடக்கு.

தப்பிலி, நான் ஆட்டிறைச்சிக் கறியுடன் சேர்க்கும் எல்லாவற்றையும் கலந்து ஒன்று ஒன்றரை நாள் வைத்து மறினேற் செய்து விட்டுச் சமைப்பேன். அது உடன் இறைச்சிக் கறியைவிட மிகவும் நன்றாக இருக்கும். முக்கியமாக, இஞ்சி, உள்ளி என்பன அதிகம் சேர்ப்பேன்.

ஆட்டை பங்கை சிறிய துண்டுகளாக வெட்டும் போது, கொழுப்பை பச்சையாகவே சாப்பிடுவான்.

ஆட்டு விதை கறியினுள் போட்டு சமைத்து வரும் போது அந்த மாதிரி இருக்கும்

:blink: :blink: :o

தப்பிலி, நான் ஆட்டிறைச்சிக் கறியுடன் சேர்க்கும் எல்லாவற்றையும் கலந்து ஒன்று ஒன்றரை நாள் வைத்து மறினேற் செய்து விட்டுச் சமைப்பேன். அது உடன் இறைச்சிக் கறியைவிட மிகவும் நன்றாக இருக்கும். முக்கியமாக, இஞ்சி, உள்ளி என்பன அதிகம் சேர்ப்பேன்.

நான் இரண்டு மூன்று மணித்தியாலங்கள்தான் ஊற விடுவேன். அடுத்த முறை செய்து பார்க்கிறேன்.

கறியை இறக்கியவுடன் இறைச்சித் தூளும் (கறுவா, ஏலம், சிறிது கராம்பு, ஒள்ளுப்பம் சின்னச் சீரகம் பெரிய சீரகம், கறிவேப்பிலை எல்லாவற்றையும் வறுத்து அரைத்தது), கொஞ்சம் பச்சை மிளகாயையும் சின்ன வெங்காயத்தையும் மிகச் சிறிதாக அரிந்து அதனுடன் எலுமிச்சம் புளியும் போட்டால் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டு இறைச்சிக்கு உள்ளி போட்டால் கறி சுவையாக இருக்காது என சொல்கிறார்களே உண்மையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிடாய் ஆட்டில் குடல் கறியும், இரத்த வறையும், மூளைப் பொரியலும், கொழுப்பும் தான் சூப்பர். நான் மச்சான், ஆட்டை பங்கை சிறிய துண்டுகளாக வெட்டும் போது, கொழுப்பை பச்சையாகவே சாப்பிடுவான்.

ஆட்டு விதை கறியினுள் போட்டு சமைத்து வரும் போது அந்த மாதிரி இருக்கும்

இப்பிடியொரு சுப்பர்ரலண்ட்...மச்சான் சகலன் கூட்டுசேருறது வலு கஸ்டம்!!!!!......அதுசரி கிடாயிலை எல்லாத்தையும் உப்பு தூள் புளி விட்டு அமுக்கிட்டியள்......உள்ளதை சொல்லுங்கோ எலும்புகளை என்ன செய்தனியள்? :(

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியொரு சுப்பர்ரலண்ட்...மச்சான் சகலன் கூட்டுசேருறது வலு கஸ்டம்!!!!!......

பரிமளத்தின் அண்ணன், தம்பிமாரும்...

உங்களுக்கு, மச்சான் மாதிரித்தானே..... :D:lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இறைச்சிக் குழம்புக்கு உள்ளியை விட செத்தல் மிளகாயை கையாள கிள்ளிப் போட்டால் கொஞ்சம் உறைப்பாகவும் உருசியாகவும் இருக்கும்!

ஆட்டு இறைச்சிக்கு உள்ளி போட்டால் கறி சுவையாக இருக்காது என சொல்கிறார்களே உண்மையா?

உள்ளியின் வாசம் காரணமாக சிலருக்கு சமையலில் உள்ளி சேர்ப்பது பிடிக்காது.

அதனால் இருக்கலாம்.

தாளிக்கும் பொழுது கடைசியில் உள்ளி போடுவேன். அத்துடன் இறைச்சியுடனும் உள்ளியைத் தட்டிப் போட்டு ஊற வைப்பேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.