Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை

Featured Replies

imagescame7xai.jpg

காலை வேளை 5 மணியாகி இருந்தது . தூரத்தே சேவல் ஒன்று காலை விடிவதற்குக் கட்டியங் கூறியது .இருட்டுக்கும் பகலுக்கும் நடந்த போரில் இருட்டு தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தது . எனக்குப் பக்கத்தில் படுத்திருந்த றொனியன் காலை நக்கி அதன் சந்தோசத்தைக் காட்டியது . இன்னும் கடைசி மகள் எழுந்திருக்கவில்லை . நான் மெதுவாக எழும்பி உடம்பை சிவருக்கு முட்டுக்குடுத்துக் கொண்டு இருந்தேன் . இடுப்பில் கட்டி இருந்த மூத்திரப்பை முட்டியிருந்தது . எனக்கு வாய் நமநமத்தது . பக்கத்தில் இருந்த வெத்திலையையையும் , பொயிலையையும் பாக்கையும் , கலந்து வாய்க்குள் வைத்துக்கொண்டேன் .என் மனமோ காலம் என்னும் சக்கரத்தை திருப்ப முயன்று வெற்றியுங் கொண்டது .எனது அப்பா மலாயாவில் வேலை செய்து கொண்டிருந்தபோது நான் பிறந்தேன் . எனக்கு ஒரு அண்ணை இருந்தார் .நான் பிறந்து இரண்டு வயசாகும் போது எனது அம்மா செத்துப்போனா . நாங்கள் எல்லோரும் இங்கை வந்திட்டம் . அப்பா வேலையால எங்களை விட்டிட்டு மலாயாக்குப் திரும்பவம் போய்விட்டார். நானும் அண்ணையும் அம்மாச்சியோடையும் மாமாக்களோடையும் வளர்ந்தோம். அம்மாச்சி என்னில் கூடப் பட்சம் காட்டினாலும் , எனக்கு யாரும் அம்மாவைப் போல வரவில்லை . சின்ன வயதிலேயே ஏக்கம் என்னுடன் சொந்தங் கொண்டாடியது . நானும் வளரந்து பெரியவளானேன் . எனது முறை மச்சானை அப்பா கலியாணம் செய்து வைத்தார் . கலியாணத்திற்குப் பிறகு சிறிது அம்மாவின் குறை எனக்குத் தெரியவில்லை . எங்கடை சந்தோசத்திலை ஆறு பிள்ளையள் பிறந்தினம் . அதுகளை வளக்கப்பட்ட பாடு கொஞ்ஞநஞ்சமில்லை . இப்ப அவையள் எல்லாம் வளந்து ஒவ்வொரு குடும்பத்தில போய் இருக்கினம். கடைசி மகள் என்னோட இருக்கிறாள் . என் கண்ணில் கண்ணீர் என்னை அறியாது பொளக்கென்று விழுந்தது . இலைப்பையடியானே எப்ப என்னைக் கூப்பிட் போகின்றாய் ? என்று என் மனம் ஏங்கியது . ஏனோ எனது மனம் பிரான்ஸ்சில் இருக்கும் எனது கடைக்குட்டியை சுற்றி வட்டமிட்டது . 21 வயசில அம்மா நான் வெளீல போனால் தான் எங்கட குடும்பம் உருப்படும் எண்டு போனவன் இப்ப என்ன செய்யுறானோ ? பாவம் , அவன் தான் என்னைப் பேசிப் பேசி காசு அனுப்புவான் . எப்பவும் அம்மா அம்மா என்று கையுக்கை காலுக்கை நிப்பான் . குளிருக்கை என்ன கஸ்ரப்படுகின்றானோ ? என்னால் எனது விசும்பலை அடக்கமுடியவில்லை . இப்போழுது நிலம் நன்றாக வெளித்திருந்தது . பிள்ளையார் கோயில் மணியோசை காற்றில் கலந்து வந்தது . திடீரென பக்கத்தில் இருந்த தொலைபேசி சிணுங்கியது .மெதுவாக தொலைபேசியை எடுத்தேன் . அம்மா............. என்று கடைகுட்டியின் குரல் கேட்டது,

"எப்பிடி அம்மா இருக்கிறியள் ?"

என்று ஆசையுடன் கேட்டான் .

" எனக்கென்னடா நீ இருக்கேக்கை குறை".

" என்ன குரல் ஒரு மாதிரி கிடக்கு ".

" இப்பதானே எழும்பின்னனான் என்னம் சலம் எடுக்க ஆள் வரேலை . செரியா நோகுது ".

"ஏன் தங்கைச்சி இன்னும் எழும்பேலையே "?

"அவள் பாவமடா , கைக்குழந்தையோட கஸ்ரப்படுறாள்".

கடக்குட்டி நெருப்பெடுக்கத் தொடங்கீட்டான் .இனி இவனை நிப்பாட்டேலாது . தான் வரப்போறதாய் சொன்னான் . நான் தான் தடுத்து விட்டேன் .எனக்கு ஏன் இப்பிடி கடவுள் சோதிக்கிறார் ? போனவருசம் கடைசி மருமோள் வரும்பொழுது நடந்து திரிந்த என்னை , இந்த வருடம் நடக்கேலாமல் படுக்கையில் போட்டு விட்டாரே ? என்று மனம் கடவுளுடன் சண்டை பிடித்தது . குசினியில் வந்த சத்தம் மகள் எழும்பியதிற்கான அறிகுறியாகத் தெரிந்தது . எனக்கு தேத்தண்ணியை கொண்டுவந்து தந்து விட்டு , எனக்கு பல்லு மினுக்கி , மூத்திரப்பை மாத்தி விட்டாள் . என்ர பிள்ளை இப்படி , செய்வது எனக்குப் பெரிய மனக்கஸ்ரமாக இருந்தது . என்னை ஏன் கடவுள் எல்லாருக்கும் பாரமாய் வைத்தருக்கின்றார் ? என்று என் மனம் அழுதது.

"பிள்ளை அக்காவுக்கு ஒருக்கால் போன் போட்டு அவாவை வரச்சொல்லுறியே ? எனக்கு அவாவைப் பாக்கவேணும் . தம்பி வேலைக்கு வெளிக்கிட்டானே "?

"இல்லையம்மா பிள்ளையளுக்குப் படிப்பிக்கிறார் . போகமுதல் அவனை ஒருக்கால் என்னைப் பாக்கச் சொல்லு."

எனது மனம் வளக்கத்துக்கு மாறாக எல்லோரையும் நினைத்துக் கொண்டிருந்தது . மகள் குசினியில் இடியப்பம் அவித்துக் கொண்டிருந்தாள் . அவளிற்கும் வேலைக்கு நேரமாகி விட்டிருந்தது . மூத்தமகள் சிறிது நேரத்தின் பின்பு வந்தாள் .

"என்னம்மா பாக்கவேணும் எண்டு சொன்னியளாம் ?"

"ஓம் பிள்ளை எனக்கு உன்னைப் பாக்கவேணும் போல கிடக்கு ".

கடைசி மகள் வேலைக்குப்போய்விட்டிருந்தாள். மூத்தமகள் , எனக்கு இடியப்பத்தையும் சம்பலையும் கொண்டு வந்து என்னருகே இருந்து எனக்குத் தீத்திவிட்டாள் . என் கண்களிலில் இருந்து கண்ணீர் வந்தது .

"ஏன் அம்மா அழுகிறியள் சின்னப்பிள்ளையள் மாதிரி"?

"உங்களுக்கெல்லாம் பாரமாய் போட்டன் பிள்ளை".

என்று விசும்பலுடன் சொன்னேன் .

"ஆ....... சொல்ல மறந்து போனன் .காலமை வெள்ளன உன்ரை கடசித்தம்பி பிரான்ஸ்சில இருந்து போன் பண்ணனான்".

"என்னவாம் அம்மா"?

"விசர்பெடி என்னைப் பாக்க வாரப்போறராம் .உங்கள்ளை நம்பிக்கை இல்லையாம் . விசர்பெடிக்கு நல்ல பேச்சுப் பேசி வரவேண்டாம் எண்டு சொன்னன் ".

"இருங்கோ அம்மா வாறன் ".

என்று மூத்த மகள் முன் விறாந்தைக்குப் போய்விட்டாள். நான் எனக்குப் பக்கத்தில் இருந்த மருந்துகளை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டேன். தம்பி வேலைக்கு போக ஆயுத்தமாகி என்னிடம் வந்தான் . வளர்ந்து பெரிய பதவியில் இருந்தாலும் அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போகும் குணம் உள்ளவன் . நான் தம்பியை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன் . ஏனோ அவனைப் பார்க்கவேண்டும் போல் இருந்தது .

"அம்மா நான் போட்டவாறன் . என்ன உங்களுக்கு வாங்கிறது "?

"நீ போட்டு வா . வரேக்கை கொஞ்ச வெத்திலை வாங்கியா தம்பி ."

தம்பி விடைபெற்று வேலைக்குப் போய் விட்டான் . என்னைச் சுற்றி அமைதியாக இருந்த்து சூழல். இவர்கள் திரும்பி வரும் வரையும் நான் தனியாகவே இருப்பேன் . என்றும் பிள்ளைகளால் கலகலவென்று இருந்த வீடு , இன்று எல்லோரும் ஒவ்வொரு திக்கிலுமாக பாழடைந்து போய் இருந்ததைப் பார்க்க மனசு ஏக்கத்தில் வெம்பியது . எனக்குத் திடீரென நெஞ்சுக்குள் செய்வது போல் இருந்தது . தங்கைச்சீ................ என்று கூப்பிட்டேன் . மகள் ஓடிவருவது எனக்கு மயங்கிய கண்ணில் மங்கலாகத் தெரிந்தது . நான் பொத்தென படுக்கையில் அலங்கமலங்க விழுந்தேன் . என்னிடம் கிட்ட வந்த மகள் அழுது கொண்டே , பக்கத்தில் இருந்த சிறீதரன் டொக்ரரிடம் ஆள் அனுப்புவது எனக்கு மெதுவாகக் கேட்டது . என்னைச் சுற்றி இருளும் வெளிச்சமும் இரட்டை வேடத்தில் நடித்தன . சிறீதரன் என்னிடம் வந்து என்னைப் பரிசோதித்து விட்டு

"அம்மாக்கு காலம் கிட்டீட்டுது எல்லாருக்கும் சொல்லுங்கோ , என்னம் ஒரு நாள் மெத்த இப்பவே அடங்கத் தொடங்கீட்டா ".

என்று சொன்னது எனக்கு தெளிவாகவே கேட்டதால் , கண்களைத் திறந்தேன் . மகள் அழுது கொண்டு நின்றாள் .

"என்ன பிள்ளை ஏன் அழுகிறாய் ? சிறீதரன் என்னவாம் "?

" ஒண்டுமில்லையம்மா , உங்களுக்கு சீனி குறைஞ்சு போச்சாம் , அதாலை மயங்கிப்போனியள் ".

எனக்கு மகள் தெரிஞ்சே பொய் சொல்வது புரிந்தது . நான் ஆயசத்துடன் கண்களை மூடிக் கொண்டேன் . நான் மெதுவாக என்னை இழப்பதை என்னால் உணர முடிந்தது . நான் இருளிற்கும் வெளிச்சத்திற்கும் இடையில் போய்ப் போய் வந்தேன் . நான் விடுகின்ற மூச்சு எனக்கே கேட்டது . ஏன் இப்படி எனக்கு நடக்கின்றது என்று அதிசயமாக இருந்தது . என்றும் இல்லாத அதிசயமாக வீடு ஆட்களால் நிரம்பி இருந்தது . நான் மீண்டும் கண்களை மூடிக் கொண்டேன் . மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது . எனது கடைசி சம்மந்தி என்னருகில் வந்து என்னுடன் கதைப்பது , எங்கோ இருந்து கேட்பது போல் கேட்டது .

"என்னணை ? உனக்கு ஒண்டுமில்லை . இங்கை என்னைப்பார் . என்னோடை உன்ரை கடைசிமோன் வந்து , உனக்கு தண்ணி விடுறார் ."

என்னால் எனது கண்களை திறக்க முடியவில்லை , கண்ணில் கண்ணீர் வந்தது . ஆவேசமான பலம் உந்த என்ரை கடைக்குட்டியைத் தடவக் கையைத்தூக்கினேன். தூக்கிய கை பட்டென இறங்கியது . நான் மிதந்து கொண்டிருந்தேன் . நான் எதுவித வலியும் இல்லாமல் பஞ்சாக உணர்ந்தேன் .

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிநேர ஆத்மதவிப்பு...

என்றோ ஒருநாள் எங்கள் எல்லோருக்கும் வந்தே தீரும்.

சலனமில்லாமல் வழுக்கிச்செல்கிறது கதையின் இயல்பு வாழ்த்துக்கள் கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலுள்ள எழுத்து நடை!

திரும்பவும் ஊருக்குக் கொண்டு போகின்றது!

பிறப்பு போலவே இறப்பும் நாமறியாமலே நடக்கும் என்பது எனது கருத்து!

இறக்கும் போது, தூக்கத்தில் இருந்து விழிப்பது போல இருக்கும் என்று ஒரு ஞானி எழுதியிருந்ததைப் படித்திருக்கின்றேன், கோமகன்!

நல்ல ஒரு கதைக்கு நன்றிகள்! தொடர்ந்து எழுதுங்கள்!!!

  • தொடங்கியவர்

கடைசிநேர ஆத்மதவிப்பு...

என்றோ ஒருநாள் எங்கள் எல்லோருக்கும் வந்தே தீரும்.

சலனமில்லாமல் வழுக்கிச்செல்கிறது கதையின் இயல்பு வாழ்த்துக்கள் கோமகன்

மிக்க நன்றிகள் சகாறா அக்கா உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு :) :) :) .

கடைசி நேரம் வரை ஒரு எதிர்பார்ப்பு............. அம்மாவின் பார்வையில், ஒரு மகனின் கண்ணீர்த் துளிகள்.... வரிகளாய் வரிக்க......... மீண்டும் வரிகள் பிரவாகமெடுக்கின்றது, ........... எம் விழிகளில்!

என்னால் எனது கண்களை திறக்க முடியவில்லை , கண்ணில் கண்ணீர் வந்தது . ஆவேசமான பலம் உந்த என்ரை கடைக்குட்டியைத் தடவக் கையைத்தூக்கினேன். தூக்கிய கை பட்டென இறங்கியது . நான் மிதந்து கொண்டிருந்தேன் . நான் எதுவித வலியும் இல்லாமல் பஞ்சாக உணர்ந்தேன் .

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தின் கடைசி நேரத்தை கதையாக வடித்துள்ளீர்கள் நானும் என் அம்மம்மா சாவும் போது பக்கத்தில் இருந்து பார்த்தேன்...உங்களது பச்சை என்னோடது :)

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் புங்கையூரான் , கவிதை , ரதியக்கா , உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு . மரணம் ஓர் சுகானுபவம் , அதை அடையும் முன்பு நாம் எவ்வளவு வேடங்களைப் போடுகின்றோம் :) :) :) ?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் ஒருநாள் வரும் மரணம்...........யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

......தூக்கத்திலே போய்விடால் பெரும்பேறு.....

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல எழுத்து நடை...பாராட்டுக்கள் கோமகன் அண்ணா..தொடர்ந்து எழுதுங்கள்

மனதை தொட்டது கோமகன் .எனது மனைவி இன்னமும் அவர் தாயாரின் இழப்பில் இருந்து விடுபடவில்லை .தாயின் இழப்பு என்றால் என்ன சும்மாவா ?

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் நான் சிறு வயதிலிருந்து பெரும்பாலும் அம்மம்மாவுடன்தான் வளர்ந்தவன். அவர்தான் எனக்கு அம்மா மாதிரி அவர் இறந்தபொழுது நான் அருகில் இருக்கவில்லையென்கிற ஏக்கம் இன்னமும் எனக்கு உண்டு. உங்கள் கதையை படித்ததும் அவர் ஞாபகம்தான் வந்து போனது

  • தொடங்கியவர்

எல்லோருக்கும் ஒருநாள் வரும் மரணம்...........யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

......தூக்கத்திலே போய்விடால் பெரும்பேறு.....

மிக்க நன்றிகள் நிலா மதி அக்கா உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு :) :) .

  • தொடங்கியவர்

நல்ல எழுத்து நடை...பாராட்டுக்கள் கோமகன் அண்ணா..தொடர்ந்து எழுதுங்கள்

மிக்க நன்றிகள் சுபேஸ் உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :) :) :) .

மனதை தொட்டது கோமகன் .எனது மனைவி இன்னமும் அவர் தாயாரின் இழப்பில் இருந்து விடுபடவில்லை .தாயின் இழப்பு என்றால் என்ன சும்மாவா ?

ஏனோ தெரியவில்லை அர்ஜூன் உங்கள் கருத்துகள் எனக்கு உண்மையிலேயே ஒரு மனநிறைவைத் தருகின்றன மிக்க நன்றிகள்

:) :) :) .

கோமகன் நான் சிறு வயதிலிருந்து பெரும்பாலும் அம்மம்மாவுடன்தான் வளர்ந்தவன். அவர்தான் எனக்கு அம்மா மாதிரி அவர் இறந்தபொழுது நான் அருகில் இருக்கவில்லையென்கிற ஏக்கம் இன்னமும் எனக்கு உண்டு. உங்கள் கதையை படித்ததும் அவர் ஞாபகம்தான் வந்து போனது

மிக்க நன்றிகள் சாத்திரி உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு :) :) :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.