Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று எங்கள் தேசியக்கவிஞரின் பிறந்தநாள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரிடமாவது "தேரில் ஏறினாய் தினமும் தீர்த்தம் ஆடினாய்" பாடல் இருந்தால் இணைத்துவிடுங்கள்...இத்தோடு மேலும் இரண்டு நல்லூர் கந்தன் பாடல்கள் தாயகக் கவிஞரால் எழுதப்பட்டவை

நீ ஏறிவந்த தேர் இருக்கு

இழுத்து வந்த வடம் இருக்கு

எங்கேயடா போய் ஒளிந்தாய் முருகா...

இப்போ வள்ளி தெய்வயானையுடன் என்ன விளையாட்டு?

  • Replies 56
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் - கடல்

வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்

  • கருத்துக்கள உறவுகள்

தேசியக்கவிஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புதுவை இரத்தினதிரை அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

எனக்கு கவிதையை ஓரளவு தன்னும் ரசிக்க ஆர்வத்தை ஏற்படுத்தியது, புதுவை அண்ணாவின் கவிதைகளே.....

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் அழிக்க முடியாத கவிஞனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

புதுவை ஐயாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

அவரது படைப்புக்கள் காலத்தை வென்று வாழும்!

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களின் தேசத்து தேசியக் கவிஞனிற்கு

இன்று அகவை ஒன்று கூட

அகம் சிலிர்க்கின்றது.

வரைய எந்த வார்த்தையும் வகையவும் இல்லை.

வையகத்திலும் இல்லை.

மெளனமே வார்த்ததைகளாக.

என் மனம் யாகிக்கும்

புவனத்தின் மெளவலில்

இந்த வலி மறையாதிருக்கும்.

இது ஏற்றும் மறையே!

விடியலில் வீதி திறக்கும்.

ஆளில்லா இடத்தில் எந்த அரவமும்

அகம் சொரியாது.

தாளில்லா தடயம்

பெரு மூச்சே ஒரு புலமாக புயம் தழுவும்.

ஈழப் பெரு வீச்சே!

நீ ஏற்றிய புரட்சி வரிகளில்

ஈழம் நிமிர்வெய்தும்.

எங்களின் தேசத்து தேசியக் கவிஞனிற்கு

இன்று அகவை ஒன்று கூட

அகம் சிலிர்க்கின்றது.

வரைய எந்த வார்த்தையும் வகையவும் இல்லை.

வையகத்திலும் இல்லை.

மெளனமே வார்த்ததைகளாக.

என் மனம் யாகிக்கும்

புவனத்தின் மெளவலில்

இந்த வலி மறையாதிருக்கும்.

இது ஏற்றும் மறையே!

விடியலில் வீதி திறக்கும்.

ஆளில்லா இடத்தில் எந்த அரவமும்

அகம் சொரியாது.

தாளில்லா தடயம்

பெரு மூச்சே ஒரு புலமாக புயம் தழுவும்.

ஈழப் பெரு வீச்சே!

நீ ஏற்றிய புரட்சி வரிகளில்

ஈழம் நிமிர்வெய்தும்

எங்களின் தேசத்து தேசியக் கவிஞனிற்கு

இன்று அகவை ஒன்று கூட

அகம் சிலிர்க்கின்றது.

வரைய எந்த வார்த்தையும் வகையவும் இல்லை.

வையகத்திலும் இல்லை.

மெளனமே வார்த்ததைகளாக.

என் மனம் யாகிக்கும்

புவனத்தின் மெளவலில்

இந்த வலி மறையாதிருக்கும்.

இது ஏற்றும் மறையே!

விடியலில் வீதி திறக்கும்.

ஆளில்லா இடத்தில் எந்த அரவமும்

அகம் சொரியாது.

தாளில்லா தடயம்

பெரு மூச்சே ஒரு புலமாக புயம் தழுவும்.

ஈழப் பெரு வீச்சே!

நீ ஏற்றிய புரட்சி வரிகளில்

ஈழம் நிமிர்வெய்தும்.

எங்களின் தேசத்து தேசியக் கவிஞனிற்கு

இன்று அகவை ஒன்று கூட

அகம் சிலிர்க்கின்றது.

வரைய எந்த வார்த்தையும் வகையவும் இல்லை.

வையகத்திலும் இல்லை.

மெளனமே வார்த்ததைகளாக.

என் மனம் யாகிக்கும்

புவனத்தின் மெளவலில்

இந்த வலி மறையாதிருக்கும்.

இது ஏற்றும் மறையே!

விடியலில் வீதி திறக்கும்.

ஆளில்லா இடத்தில் எந்த அரவமும்

அகம் சொரியாது.

தாளில்லா தடயம்

பெரு மூச்சே ஒரு புலமாக புயம் தழுவும்.

ஈழப் பெரு வீச்சே!

நீ ஏற்றிய புரட்சி வரிகளில்

ஈழம் நிமிர்வெய்தும்

எங்களின் தேசத்து தேசியக் கவிஞனிற்கு

இன்று அகவை ஒன்று கூட

அகம் சிலிர்க்கின்றது.

வரைய எந்த வார்த்தையும் வகையவும் இல்லை.

வையகத்திலும் இல்லை.

மெளனமே வார்த்ததைகளாக.

என் மனம் யாகிக்கும்

புவனத்தின் மெளவலில்

இந்த வலி மறையாதிருக்கும்.

இது ஏற்றும் மறையே!

விடியலில் வீதி திறக்கும்.

ஆளில்லா இடத்தில் எந்த அரவமும்

அகம் சொரியாது.

தாளில்லா தடயம்

பெரு மூச்சே ஒரு புலமாக புயம் தழுவும்.

ஈழப் பெரு வீச்சே!

நீ ஏற்றிய புரட்சி வரிகளில்

ஈழம் நிமிர்வெய்தும்

எங்களின் தேசத்து தேசியக் கவிஞனிற்கு

இன்று அகவை ஒன்று கூட

அகம் சிலிர்க்கின்றது.

வரைய எந்த வார்த்தையும் வகையவும் இல்லை.

வையகத்திலும் இல்லை.

மெளனமே வார்த்ததைகளாக.

என் மனம் யாகிக்கும்

புவனத்தின் மெளவலில்

இந்த வலி மறையாதிருக்கும்.

இது ஏற்றும் மறையே!

விடியலில் வீதி திறக்கும்.

ஆளில்லா இடத்தில் எந்த அரவமும்

அகம் சொரியாது.

தாளில்லா தடயம்

பெரு மூச்சே ஒரு புலமாக புயம் தழுவும்.

ஈழப் பெரு வீச்சே!

நீ ஏற்றிய புரட்சி வரிகளில்

ஈழம் நிமிர்வெய்தும்

பிரிகேடியர் பால்ராஜ் பற்றி தாயகக் கவிஞர்

எங்களின் தேசத்து தேசியக் கவிஞனிற்கு

இன்று அகவை ஒன்று கூட

அகம் சிலிர்க்கின்றது.

வரைய எந்த வார்த்தையும் வகையவும் இல்லை.

வையகத்திலும் இல்லை.

மெளனமே வார்த்ததைகளாக.

என் மனம் யாகிக்கும்

புவனத்தின் மெளவலில்

இந்த வலி மறையாதிருக்கும்.

இது ஏற்றும் மறையே!

விடியலில் வீதி திறக்கும்.

ஆளில்லா இடத்தில் எந்த அரவமும்

அகம் சொரியாது.

தாளில்லா தடயம்

பெரு மூச்சே ஒரு புலமாக புயம் தழுவும்.

ஈழப் பெரு வீச்சே!

நீ ஏற்றிய புரட்சி வரிகளில்

ஈழம் நிமிர்வெய்தும்

பிரிகேடியர் பால்ராஜ் பற்றி தாயகக் கவிஞர்

எங்களின் தேசத்து தேசியக் கவிஞனிற்கு

இன்று அகவை ஒன்று கூட

அகம் சிலிர்க்கின்றது.

வரைய எந்த வார்த்தையும் வகையவும் இல்லை.

வையகத்திலும் இல்லை.

மெளனமே வார்த்ததைகளாக.

என் மனம் யாகிக்கும்

புவனத்தின் மெளவலில்

இந்த வலி மறையாதிருக்கும்.

இது ஏற்றும் மறையே!

விடியலில் வீதி திறக்கும்.

ஆளில்லா இடத்தில் எந்த அரவமும்

அகம் சொரியாது.

தாளில்லா தடயம்

பெரு மூச்சே ஒரு புலமாக புயம் தழுவும்.

ஈழப் பெரு வீச்சே!

நீ ஏற்றிய புரட்சி வரிகளில்

ஈழம் நிமிர்வெய்தும்

http://youtu.be/89PI8fKIHcY

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்பிற்குரிய சகோதரம், நீங்கள் இங்கே பகிர்ந்திருக்கும் வீடியோவில் உள்ள குரல் புதுவை அண்ணாவின் குரல் அல்ல.

முல்லைச் செல்வனின் குரல்!

Edited by Nirupans

தாயகப் பரணி பாடி தமிழால் தலைவனின் சிந்தனையினை பார் முழுதும் பரப்பிடத் துணையிருந்த தாயக் கவிஞரை நாமும் வாழ்த்துவோம்! நல்ல கவிதை அக்கா!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசியக்கவிஞரின் கவிதை நூல்கள்

வானம் சிவக்கிறது (1970),

ஒரு தோழனின் காதற் கடிதம்,

இரத்த புஷ்பங்கள்(1980),

உலைக்களம்,

நினைவழியா நாட்கள்,

பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்,

இவற்றை விட ஒலிப்பேழைகள் பலவற்றில் கவிஞரின் குரல் வழிக்கவிதைகள் பற்பல...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை - போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள செய்தவர்.


  • “இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம்


    எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்”
    “துயரம் அழுவதற்காக அல்ல... எழுவதற்காக

    - இத்தகைய மகத்தான சொற்களை கவிதையாக எழுதியவர் அவர், ஆதலால், ஆற்றுப்படுத்திய மனத்துடன் கவிஞருக்கு பதிவை…

    ”அட மானுடனே!
    தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்
    பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்
    நிலம் சுமப்பதோ நீண்ட காலம்.
    அன்னை மடியில் இருந்து கீழிறங்கி
    அடுத்த அடியை நீ வைத்தது
    தாயகத்தின் நெஞ்சில்தானே.
    இறுதியில் புதைந்தோ
    அல்லது எரிந்தோ எருவாவதும்
    தாய்நிலத்தின் மடியில்தானே.
    நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்
    பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்
    ஆதலால் மானுடனே!
    தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்”


வாழ்க்கையின் மீதான அதி உன்னதமான நம்பிக்கைகளையும், அழகியலையும் தரும் இத்தகைய உக்கிரமான கவிதைகளை எழுதிய கவிஞர் புதுவை இரத்தினதுரை, தனது பதினான்காவது வயதில் கவிதை எழுத தொடங்கி, முப்பத்தேழாவது வயதில் (1935) விடுதலைப் பாதையில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர், ஒரு சிற்பக் கலைஞரும் கூட.

“எமது மக்களுடைய நுகத்தடிகளை உடைத்தெறிவதில் நானும் போராட வேண்டும் என்று நினைத்தேனே தவிர, தொடர்ந்தும் கவிதை எழுதிக் கொண்டிருப்பேன் என்ற நினைப்பில் நான் வரவில்லை. ஆனால், அமைப்புக்கு வருவதற்கு முன்பே எனது துறை கலையாக இருந்தபடியால், அமைப்புக்குள் நுழைந்த பின்பும் இயக்கத்தில் கலைப் பண்பாட்டுத் துறையை கவனிக்க வேண்டியதே எனக்கிடப்பட்ட பணி ஆகியது. இந்தப்பணியை நான் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்” என உறுதியுடன் கூறிவந்த புதுவை இரத்தினதுரை, ”ஈழத்தில் மட்டுமல்ல மானுடம் எங்கு வதைபடுகிறதோ, அங்கெல்லாம் அவர்களுடைய மொழியில் எனது கவிதை பேசும்” என்கிறார்.

கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளை படித்தும், கவிதைப் பாடல்களை கேட்டும் பலநூறு இளைஞர்களும், இளைஞிகளும் விடுதலைப் படையினில் வந்து சேர்ந்து “மண் மீட்புக்காக” களமாடிக் கொண்டிருப்பதை சென்னையில் என் அண்டை வீட்டில் வாழும் ஈழத் தமிழ் நண்பர் யொனி, சொல்ல கேட்கும் பொழுது - கவிஞரின் “கவிதாயுதம்” இருப்பதிலேயே உயர் கருவியாக மதிக்கப்பட்டு - மெய் சிலிர்க்க வைக்கிறது.

ஈழமண்ணில் தோன்றிய மிகச்சிறந்த ஆய்வாளர்களும் ஒருவரான பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள், புதுவை இரத்தினதுரை கவிதைகள் பற்றி குறிப்பிடும்பொழுது,


  • “...இந்த மண் எங்களின் சொந்த மண் இதன்


    எல்லைகள் மீறி யார் வந்தவன்.
    நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து
    நின்றது போதும் தமிழா - உந்தன்
    கலைகள் அழிந்து கவலை மிகுந்து
    கண்டது போதும் தமிழா இன்னும்
    உயிரை நினைத்து உடலை சுமந்து
    ஓடவா போகிறாய் தமிழா...”


என நெருப்பாக தொடங்கி நீளும் ஒரு பாட புதுவை இரத்தினதுரை எழுதியுள்ளார். அந்த பாடல் வரிகள் எத்தகைய தாக்கத்தை மக்கள் மனத்தில் ஏற்படுத்தியது என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன் - ஈழத்திலுள்ள திருநல்வேலி சந்தியில் 1993இல் ஒரு நாள் அதிகாலை 4 மணியளவில் ஒருவர் தேநீர் குடித்துவிட்டு, சுருட்டு பற்ற வைத்துக்கொண்டு குளிருக்காக தலையையும் காதையும் மறைத்து தான் போட்டிருந்த போர்வையுடன் மிதிவண்டியில் ஏறிய நேரத்தில் இந்தப் பாடலும், “வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” பாடலும் ஒலிபரப்பாக மிதிவண்டியில் அப்படியே நின்றபடி கேட்டுவிட்டு சென்றார். புதுவை இரத்தினதுரையின் புரட்சிக் கருத்துக்களையும் நெகிழ்ச்சியான அனுபவங்கலையும் பாடலில் கேட்டு, உறைந்துபோன அந்த ஈழத் தமிழனின் செயலை கண்டு மனம் நெகிழ்ந்தேன்” என்று பூரிப்போடு கா.சிவதம்பி எழுதியுள்ளார்.

விரும்பி இடம்பெயர்வது வேறு - விரும்பாமல் வன்முறை செய்து இடம்பெற வைப்பதென்பது வேறு. புலம் பெயர வைப்பவன் - இறுதியில் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அவனை மன்னிக்கவே கூடாது என மனம் பதற வைக்கிறது புதுவை இரத்தினதுரையின் சில படைப்புகள்.


  • “ஊர் பிரிந்தோம்


    ஏதும் எடுக்கவில்லை
    அகப்பட்ட கொஞ்சம் அரிசி,
    பருப்பு, இரண்டு பாய், இருமல் மருந்து,
    மனைவியின் மாற்றுடுப்பு மூன்று,
    காற்றுப் போய்க்கிடந்த மிதிவண்டி,
    காணியுறுதி,
    அடையாள அட்டை அவ்வளவே,
    புறப்பட்டு விட்டோம்.
    இப்போ உணருகிறேன்
    உலகில் தாளாத துயரெது?
    ஊரிழந்து போதல் தான்.”


இந்த நிலை - அரை நூற்றாண்டாக... ஈழமண்ணில் தொடர்கிறது. இது நாளையும் தொடரும் என்கிற போது... சொல்லி புலம்ப சொற்களில்லை. இயலாமையால் மனம் மௌனமாகிறது.


  • “தம்பி பெஞ்சாதியின் தமையன் வீட்டில்


    இரவில் பாய்விரிக்க எங்கு இடமிருந்தாலும்
    அங்கு உடல் சரிப்பு.
    வீட்டுக்காரரின் தூக்கம் கலையுமென
    இருமலைக் கூட உள்ளே புதைப்பு
    களவுக்கு வந்தவன் போல மனைவியுடன் கதைப்பு
    கிணற்று வாளி தட்டுப்பட்டாலே படபடப்பு
    ஒண்டுக்கிருத்தல்,
    குண்டி கழுவுதல்
    ஒவ்வொன்றையும் பயந்தபடி ஒப்பேற்றல்.”


இப்படி காலம் காலமாக சிதைந்தும் - மனம் சிதையாமல் இருப்பதெப்படி?. நம்பிக்கை. உண்மையின் மேல் ஈழத் தமிழர்கள் வைத்திருக்கும் பெரு நம்பிக்கை. இந்த நூற்றாண்டிற்கு மட்டுமல்ல - இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழனின் விடுதலைப் போராட்டத்திற்கான இந்த “எரிசக்தி” கையிருப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது.


  • “இன்று நடை தளர்ந்தும்


    நரை விழுந்தும் தள்ளாடும்
    ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய இளைஞர்களே!
    வெள்ளைத் தோல் சீமான்கள்
    வீடு திரும்ப மூட்டை கட்டியபோது
    நீங்கள் ஏன் ஊமையானீர்கள்?”


என்று ஒரு ஞாயமான வினாவை தனது கவிதை மூலம் புதுவை இரத்தினதுரை எழுப்புகிறார். செய்யவேண்டிய வேலையை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்து விட்டால் தலைமுறைகள் ஏன் தத்தளித்தாடுகிறது என்று கேட்ட கவிஞர், இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கும் சுருக்கென சூடு வைக்க தயங்கவில்லை,


  • “உடல்கீறி விதை போட்டால்


    உரமின்றி மரமாகும்
    கடல் மீது
    வலை போட்டால்
    கரையெங்கும் மீனாகும்.
    இவளின் சேலையைப் பற்றி
    இந்தா ஒருவன்
    தெருவில் இழுக்கின்றான்
    பார்த்துவிட்டுப்
    படுத்துறங்குபவனே!
    நீட்டிப்படு.
    உனக்கும் நெருப்பூட்டிக் கொளுத்த
    அவனுக்கு வசதியாக இருக்கட்டும்.
    ‘ரோஷ’ நரம்பை
    யாருக்கு விற்று விட்டுப்
    பேசாமற் கிடக்கின்றாய்?”


இத்தகைய அற்புத படைப்பின் மூலம் - ஈழத் தமிழ்மக்களை போராட்ட களத்திற்கு செல்ல வழியமைத்தவர் புதுவை இரத்தினதுரை.


  • “......சும்மா காற்றில் பற்றியா இந்தத் தீ மூண்டது?


    இந்த அனல் பிடித்தெரிய எத்தனை காலம் பிடித்தது.
    எத்தனை பேரைத் தீய்த்து
    இந்த தீ வளர்த்தோம்.
    எத்தனை பேரை நெய்யாக வார்த்தோம்
    அணைய விடக்கூடாது
    ஊதிக்கொண்டேயிரு.
    பற்றியெரியப் போகுதெனப் பதறுவர்
    ஊதுவதை நிறுத்தி விடாதே
    இந்தத் தீயின் சுவாலையிற்தான்
    மண் தின்னிகள் மரணிக்கும்.”


மீண்டும் ஊரில் நுழைய - தெருவில் நடக்க - தன் வீட்டு நிழலில் களைப்பாற துடிக்கும் என் உறவு ஈழத்தமிழினத்திற்கு எப்போது விடிவுகாலம் பொறக்கும் என்று எண்ணும்படியாக துக்கம் தொண்டையை அடைக்க என்னை நிலைதடுமாற செய்தது புதுவை இரத்தினதுரையின் கவிதைகள். அவரின் படைப்பை மொத்தமாக ( நூல்: பூவரசம்வேலியும் புலுனிக் குஞ்சுகளும்; ஆசிரியர்: புதுவை இரத்தினதுரை; வெளியீடு: விடியல் பதிப்பகம், பக்கம்: 432; விலை: ரூ.300) படித்து முடித்தபோது மண்ணைப் பற்றியும், மண்ணுக்கும் மனிதனுக்குமான பாசம் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும், உறவுப் பிரிவின் துயரங்களைப் பற்றியும், வாழ்க்கையின் உன்னதங்கள், அழகியலைப் பற்றியும், புரட்சியைப் பற்றியும், அறுந்துபோகாத உறுதியான நம்பிக்கைகள் எனக்குள்ளே கூடியிருப்பதை உணர்கிறேன்.

உண்மையான ஒவ்வொரு தமிழனிடமும் கவிதை மூலமாக புலம்பினார் புதுவை இரத்தினதுரை. மனித நேயமுள்ள உலகத்து மனிதர்களிடம் புலம்பினார். நெஞ்சு வெடித்து இனத்துக்காகக் கதறிய இந்த கவிஞனுக்கு என்ன சொல்ல போகிறது இந்த உலகம். பதறி துடிக்கும்போது கவனிக்காமல் போய் வழக்கம் போல் எழவுக்கு துக்கம் விசாரிப்பது போலவே இந்த பதிவையும் வருத்தத்தோடு எழுதுகிறேன்.

குறைந்த அளவு இரக்கத்தையாவது உலகம் காட்டியிருக்கக் கூடாதா ஈழமக்களுக்கு..? என் வாழ்நாள் முழுவதும் நினைத்து வெட்கப்படுவேன்.


  • ஈழக் கவியரசே


    நீயும் என்ன
    பாவம் செய்தாயோ
    நானறியேன்
    ஈழத்தமிழனாய்
    நீ பிறந்ததை தவிர

    எம்மின மக்களை
    எவனும் மதிக்கவில்லை
    இந்த உலகில்

    சிங்களவனாவது
    பறவாயில்லை
    தமிழனை மிருகமாய்
    மதித்து சுட்டுக்
    கொல்கிறான்

    ஈழக்கவியரசே
    என்ன பாவம்
    செய்தாயோ
    நானறியேன்
    ஈழத்தமிழனாய் நீ
    பிறந்ததைத் தவிர

    நீ கூவியதெல்லாம்
    கவிதையானது
    உன் கவி கேட்டவர்
    கண்களில் கண்ணீரெல்லாம்
    கடலானது

    பிறந்த மண்
    சுட்டிருந்தாலும்
    விட்டுப் பிரிந்தால்
    காலமெல்லாம் நின்று
    வலிக்கும் மனமென்று
    பாட்டில் அழுதவன் நீ

    பாவி நீ

    பக்கத்து நாட்டில்
    பிறந்திருந்தால்

    தமிழனை மறந்து
    தமிழ் எழுதி இருந்தால் கூட
    தமிழர்களே விழா எடுத்து
    உனக்கு
    விருது வழங்கி
    பாராட்டு விழா நடத்தி இருப்பார்கள்

    ஏன் புதுவை நீ அமெரிக்காவில்
    மைக்கேல் யக்சனாய்
    பிறந்து இறந்திருந்தால்

    எத்தனை தமிழர்கள்
    அழுது கவிதையால் உனக்கு
    மறுமொழி போட்டு இருப்பார்கள்

    படுபாவம் நீ
    தமிழ்கவி உன்னை கொன்ற
    சிங்களவன் துப்பாக்கி கூட
    தான் சிரித்ததற்காய் ஒரு
    தடவையாவது அழுதிருக்கும்

    ஆனால்
    நீ இறந்த தகவலை
    கண்ணீரோடு பகிர்ந்த என்
    கண்ணீரை துடைக்க கூட
    ஒரு வார்த்தை இட இங்கு
    எந்த தமிழனும் இல்லை
    என்பதால்

    ஈழத்தமிழன் நானும்
    பாவம்தான்....

    யாரும் உனக்கு
    அனுதாப அஞ்சலி
    தெரிவிக்காமல் போனாலும்
    என் கண்ணீர் கவி எழுதினால்
    அது உன் இருப்புக்காகத்தான்
    இருக்கும்


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நினைவழியா நாட்கள் புதுவையின் வாக்கு மூலம்

என் அன்புக்குரியவர்களே!

என்ன அவசரம்?

வாசலில் உம்மை வரவேற்கின்ற போதே

என் வாக்கு மூலத்தையும்

கூறிவிடுகிறேன்..

வானவில்லுக்கு எவரும் வர்ணம் பூசுவதில்லை.

கரையை தழுவும் அலைகளை ,

திரும்பி போ என்று ;

எவரும் கட்டளை இடுவதில்லை.

குருவிகளுக்கு இது தான் உங்கள் கூடு என்று,

எவரும் பாதை காட்டுவதில்லை.

கவிஞனும் இப்படித்தான்..

அவனுக்கு எவரும்,

அடியெடுத்துக் கொடுக்க முடியாது.

கொடுக்கவும் கூடாது.

மூண்ட நெருப்பைக்

காற்றால் தூண்ட முடியுமே தவிர

காற்றே நெருப்பின் மூலமா முடியாது,,

இது போன்றதுதான் கவிதையும்,

பாடத்திட்டம் போல படிக்க முடியாது,

கவிஞனை உயர்த்தி விடலாமே தவிர,

உருவாக்க முடியாது.

தண்ணீருக்கு நிறம் இல்லை என்பது விஞ்ஞானம்.

பச்சை நிறம் என்பது கவிதை.

காற்றை கண்களால் பார்க்க முடியாதென்பது

வாழ்வியல் உண்மை.

தென்றலை

தொட்டுத் தழுவலாம் என்பது கவிதை.

உணர்ச்சி,உவமை,கற்பனை,படிமம்,குறியீடு

இவையெல்லாம்,

கவிதையை அழகு படுத்தும் ஆடைகள்,

அரிதார ஒப்பனைகள்.

ஆடைகள் தேவையானவையே;

அதற்காக ஆடைகளே ஆளாக முடியாது.

வீரியமிக்க வார்த்தைகள் கவிதைக்கு உயிரூட்டும்.

என்றாலும்,

வார்த்தைகளின் கோலமும், ஜாலமும் மட்டுமே

கவிதையாகாது.

சரி,அப்படியாயின் கவிதை என்றால் என்ன?

வாழ்கை தான் கவிதை.

கண்ணுக்கு முன்னால் விரிந்து கிடக்கும்

மண்ணிலிருந்தே கவிதையும் உருவாகின்றது.

காதில் விழும் செய்திகள் தரும் உணர்வுகள் கூட,

கவிதையாக்கலாம்.

நெஞ்சில் விழுந்து அதிர்வூட்டுபவையும்,

நினைவில் வந்து தடம் பதிப்பவையும்,

கவிதைக்கு கருப்பொருளாகி விடலாம்.

பட்டும் படாமலும்,

மண்ணை தொட்டு தொடாமலும்,

சிறகை விரித்து உயரப்பறக்கும்

சிட்டுக்குருவியல்ல கவிஞன்,

நிலக்கிளி,

மண்புழு,

அருகம்புல்

இவைகள் போல கவிஞனையும்

மண்ணிலிருந்து பிரிக்க முடியாது.

அப்படியானால்,

என்னையும் என் மண்ணிலிருந்து பிரிக்கமுடியாது.

வசந்த காலத்தில் மட்டும்,

குயில் குரலெடுத்து கூவும்,

மழை மேகம் கவிகின்ர போது தான்,

மயில் அழகுகாட்டி ஆடும்.

பறவைகளுக்கு பாட்டும்,பரதமும்

சொந்த மகிழ்ச்சியின் சுகம் கருதியே வரும்.

ஆனால் கவிஞன் அப்படியல்ல........

ஊரின்,

உலகத்தின்,

தன்னினத்தின்,மனுக்குலத்தின்

சோகத்தைத் தூக்கி மடியிலே கட்டுவன்.

வீரத்தை எடுத்து முடியிலே பதிப்பான்.

தன்னினம்,

விடுதலைக்கு விலை கொடுக்கும் போது,

கவிஞனின் கவிதை;

கைவாளாகிக் கொள்கிறது.

பூக்களுக்கு ஏன் பூதோம் என்று புரியாது.

வாய்காலில் ஓடிவரும் நீருக்கு,

போகுமிடம் தெரியாது.

ஆனால் கவிஞனுக்குத் தன் பிறப்பின் அர்த்தமும்,

போகும் வழித் தெளிவும்,

நிச்சயம் தெரியும்,

தெரியாது என்பவன் கவிஞன் அல்ல.

தெரிந்தும் ஊமையனவன் மனிதனே அல்ல.

மூச்சு விடும் அனைத்துமே போராடுகின்றன.

போராட்டமே மனுக்குலத்தின் மனுக்குலத்தின் அசைவு,

தேங்கி நிற்கும் எல்லாமே மாசடையும்,

போராட்டம் நீரோட்டம் போன்றது.

எனவே அங்கு

தன்னலத் தவளைகள் முட்டையிடுவதில்லை.

பொறாமைப் பேத்தைகள் பிறப்பதில்லை.

பெற்றவளே தான் பிள்ளையை புகழ கூடாது.

என்பார்கள்.

எனவே,என் கவிதைபற்றி

எதுவும் இங்கே கூறமாட்டேன்.

நான் சொல்லத் துடித்தவற்றை,

உள்ளே உள்ள கவிதை சொல்லும்.

நான் அடிமையாக இருக்க விரும்பவில்லை.

ஆகவே தான் விடுதலையை விரும்புகிறேன்

நான் சுதந்திரமாக இருக்க ஆசைப்படுகிறேன்.

அதனால் தான்

விடுதலை நோக்கிய போராட்டத்துடன்,

இணைந்திருக்க விரும்புகிறேன்.

விடுதலை தேடிப்புறப்பட்ட அணியில் ஒருவனாக,

வேங்கைகளில் ஒருவனாக இருப்பது,

எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.

சாரமற்ற ஒரு சராசரி வாழ்வாகி

என்வாழ்வு கழியாமல்,

பொருள் பொதிந்த,அர்த்தம் நிறைந்த

போராட்டமே வாழ்வான வாழ்வே,

எனக்கு நிறைவாக இருக்கிறது,

அநீதிக்கு எதிராக அணிவகுப்போர்

எல்லோருமே கவிஞர்களே!

நீதியின் பக்கம் நிமிர்ந்து நிற்கும்,

எல்லோருமே கலைஞர்களே!!

விரல்களை மடித்து எண்ணிக்கொண்டு

பெயர்களை சொல்லிப்பாருங்கள்.

எங்கள் தேசியத்தலைவர் திரு.வே.பிரபாகரனின்,

பெயரை சொல்லி முதல் விரலை மடிப்பீர்கள்.

நெருப்பாக நின்று எதிரியை நீறாக்குவது

இவரின் ஒருபக்கமென்றால்,

நிலவாக குளிர்ந்து நிழலாக நிற்பது

இவரின் மறுபக்கம்.

பிரபாகரன் என்ற பெயர்

தலைவன் என்றும்,தளபதி என்றும் நின்றுவிடாது,

கலைஞன் என்றும்,கவிஞன் என்றும் நீளும்....

அவரின் குடையின் கீழ் நிற்கும்

பல்லாயிரக் கணக்கானவரில்

நானும் ஒருவன் என்று பதிவு இருக்கும்.

எவ்வளவு பெருமை.

அந்த தலைவனின் பேனா

என் கவிதைகள் பற்றி பேசியதா?

இதைவிடப்பேறு

எவருக்குக் கிடைக்கும்!

இராமாயணக் காவியம் மெய்யானால்

அனுமனே!

எம்மண்ணில் ஆதியில் கால்வைத்த

ஆக்கிரமிப்பாளன் ஆகின்றான்.

பொய்யானால்

வால்மீகியின் ஆதிக்க உணர்வைக் கண்டு

எனக்கு ஆத்திரம் வருகின்றது

பாரதப்படைகள் இங்குவந்த

ஒவ்வொரு தடவையும்

எங்கள் மண் பற்றி எரிந்துள்ளது.

எல்லோரையும் போலவே

பாரதப்படைகளை

நானும்,என் பரம்பரையும்

மறக்கமாட்டோம்;

மன்னிக்கவும் மாட்டோம்;

நான் எழுதி வைத்த

எண்ணிலடங்காத கவிதைகளையும்

அச்சேறிய ஆயிரக்கணக்கான கவிதைகளையும்

என்னை தேடி வீடு வந்த இந்திய சிப்பாய்கள்

எப்படி சிதைக்க முடியும்?

கைநடுங்காமலும்,மெய்பதறாமலும்

என் கவிதைகளை எப்படி எரிக்க முடிந்தது?

தகனத்துக்கு பின் தளிர்த்தவைகளும்

நினைவில் நிழலாடி நின்றவைகளும்

நண்பர்களால் தேடி சேர்ந்தபின்

"நினைவழியா நாட்கள்"என்றாகியுள்ளது.

அன்பன்,

புதுவை இரத்தினதுரை

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் புதுவை இரத்தினதுரை

wp9094f5ab.jpg

ஈழ விடுதலைப் போருடன் பயணிக்கும் இலக்கியத்தில், அறியப்பட்ட பாடலாசிரியர். இரவும் ஒரு நாள் விடியும் அதனால், என்பது போன்ற, தமிழகத் திரைப்பாடல்கள் போர்க் கீதங்களாக ஒலித்த நாட்களில், ஈழ எழுச்சி கீதங்களை தமக்கான தனித்துவங்களோடு ஆக்கத் தொடங்கி இன்று வரை (இன்றைய பாடல்கள் எழுச்சிப் பாடல்கள் என்ற நிலையிலிருந்து ரசனைக்குரிய ஜனரஞ்சகப் பாடல்கள் என்னும் தளம் நோக்கிச் செல்வதாகவே தனிப்பட உணர்கிறேன். இதற்கு பாடல் ஆக்கம் பெரும்பாலும் இளையவர்களான போராளிகளின் கைகளில் இருப்பதுவும் ஒரு காரணம். அது தவிர திரைப்படங்கள் ஆகட்டும் அல்லது பாடல்கள் ஆகட்டும் நாம் எமக்கான உதாரணங்களாக இந்திய சினிமா மற்றும் இசையினையே முன்னெடுத்துப் பார்ப்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ) ஈழப் போராட்டப் பாடற்களத்தில் புதுவை இரத்தினதுரைக்கு பெருமளவு பங்கிருக்கிறது.

பாடற்களம் தவிரவும் கவிதைப் பரப்பிலும் இவர் அறியப் படுகிறார். புலிகள் அமைப்பில் இணைவதற்கு முன்பே இவரது கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. ஆரம்பத்தில் தீவிர இடதுசாரியாக இருந்திருக்கின்றார் என அவரது முன்னைய கவிதைகள் சொல்கின்றன. பிற்காலங்களில் கூட தனது சில பல கவிதைகளில் என் ஜேவிபி தோழனே என விளித்திருக்கிறார். தனது மே தின கூட்டங்கள் குறித்து நினைத்திருக்கின்றார்.

ஆயினும் எது கவிதை என்ற சுழலில் அவரும் சிக்காமல் இல்லை. விடுதலைப் புலிகள் பத்திரிகையில் வியாசன் என்னும் புனைபெயரில் எழுதிய கவிதைகளை, அவர் தற்போதைய எண்ணக் கருக்களுக்கேற்ப அவை கவிதைகளா என தனக்குத் தெரியாதெனவும், ஆனால் அவற்றை உரைச் சித்திரங்கள் எனத் தன்னால் கூற முடியும் எனவும் சொல்கிறார்.

உலைக் களத்தில் வெளியாகும் புதுவையின் உரைச்சித்திரங்கள் நிறைந்த வீச்சைக் கொண்டவை. சம காலத்தின் மீதான அவரது பார்வையைச் சொன்னவை. அவரது கோபங்களைக் கூறியவை. (புலம் பெயர் தமிழர்கள் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய இரண்டு வரிகள் அண்மைக் காலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமாதானத்திற்கான காலத்தில் அவர் புலம்பெயர் நாடுகளுக்கு வந்திருந்த போது அவரை விமர்சிக்க அது பெருமளவு பயன்பட்டது.)

94 இல் ஆட்சிக் கட்டிலேறிய சந்திரிகா அரசுடனான சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்த காலத்தில் அவர் உலைக்களத்தில் எழுதுகிறார்.

மேடைக்குப் புதிய நடிகை வந்தாள்

நல்ல நடிப்புடன் நாடகமாடினாள்

கதையற்ற கலைப்படைப்பு என்பதால்

பெரிய படிப்புக்காரியின் பொய் வேடம்

நீண்ட காலத்துக்கு நிலைக்க வில்லை.

இடை வேளையுடன் திரை விழுந்தது.

ஈழத் தமிழர் ஏமாளிகள் என்ற கதை

திருத்தியெழுதப்பட்டதை

அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.

இனி அமைதிக்கு வந்த அன்னப்பறவை

குண்டுகள் சுமந்து வந்து கொட்டும்.

கொட்டட்டும்.

95 ஒக்ரோபர் 30 யாழப்பாண இடப்பெயர்வின் பின்னர் துயர் சுமந்து இடிந்து போயிருந்த காலத்தில் அவரது படைப்புக்கள் சோகத்தைச் சுமக்கின்றன.

இடைவெளியற்று இடி விழுகிறது எமக்கு

அவலம் அன்றாட வாழ்வாச்சு

கறிக்கு உப்பானது கண்ணீர்

நாசித்துவாரங்கள் காற்றையல்ல

கந்தகத் துகள்களையே சுவாசிக்கின்றன.

அடுத்த நேர உணவு எந்த அகதி முகாமில்..

யாரறிவார்..

அதே நேரம் பொதுமக்களை நோக்கிய நம்பிக்கை அறைகூவல்களாக இருந்திருக்கின்றன.

எரியுண்டு போகுமா எம்மண்

நடவாது

பூவரசு பூக்கும் பூமிக்கு

வெள்ளரசு வந்தா விலங்கிட முடியும்..

மழை நீரால் மட்டும் பயிர்செய்யும் பூமியிது

அசையாதென்பதறிக

எந்நாட்டு மக்களையும் எம் தேசம் வரவேற்கும்

படையோடு வருபவர்க்கு எம் தலைவாசல் மரமிடிக்கும்.

குமாரணதுங்காவின் குடும்பத் தலைவிக்கு

யாரேனும் இதனை அறியக் கொடுத்திடுக.

அவரது கவிதைகளில் எள்ளலும் கேலியும் ஆங்காங்கே தொனிக்கிறது. 96 இல் யாழ் குடா நாட்டை இராணுவம் முழுமையாகக் கைப்பற்றிய பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டு நகருக்குள் வாழச்சென்ற சில பிரபலங்கள் மீதான தனது எள்ளலை இப்படிச் சொல்கின்றார்.

புராதன வாழ்வின் பெருமை அறியாது

நிவாரண வரிசையில் நிற்பதே தொழிலென

எட்டியுதைக்கும் கால்களுக்கு முத்தமிட்டபடி

புத்திஜீவிகள் சிலர் உன்னைப் பார்த்து புன்னகைக்கலாம்.

சிங்கக் கொடியேற்றும் போது

நந்திக் கொடியேற்றவும் நாலு பேர் இல்லாமலா போய் விடும்?

கும்பிட்டு வாழமாட்டோம் எழுதியவன்

உள்ளே வந்துள்ளான்

கூப்பிட்டழைத்துக் கொடியை ஏற்றுக.

வானம் எம் வசமென்று வாழ்த்துப் பாடிய சிலரை

இங்கு காணவில்லை.

சந்தக் கவிஞர்களல்லவா

உனக்கு வந்தனம் பாட வந்திருப்பார்கள்.

வாசலில் நிற்க வைக்கவும்.

சாமரம் வீச இவர்களே தகுதியானவர்கள்.

குவேனியின் பிள்ளைகளுக்கு குற்றவேல் செய்ய

காட்டாற்று வேகக் கதைக்காரன்

வீட்டுக்கு வந்தள்ளார்.

பதவியுயர்வுக்காக உனக்குப் பாதபூசை செய்வார்

பழைய பேப்பர் வழங்குக

அவர் பாடநூல் அச்சிடட்டும்..

பகையுடன் இனி உறவில்லையெனப் பாடியவரே

உமக்கு என்ன நடந்தது

உள்ளி கண்ட இடத்தில் பிள்ளைபெறும் வித்தையை

உமக்குச் சொல்லித்தந்தது யார்.?

பொதுவாக இவரது இத்தகைய உரைச் சித்திரங்களில் பிரதேச பேச்சு வழக்குக் கதையாடல்களும், பழமொழிகளும் நிறைந்திருக்கும். ஈழத் தமிழரின் அரசியல் வரலாற்றைச் சொல்லும் போது

காற்றுக்கொதுங்கிய போர்த்துக்கீசனின்

கண்ணிலெம் தாயகம் தெரியும் வரை

தலையில் கட்டிய தலைப்பாகையை

முதுகில் தொட்டுப் போவதென

உயர்ந்த வாழ்வுக் குரியவராய் இருந்தோம் நாம்.

எம்மை நாமே எழுதினோம்.

வெடிமருந்துடன் வந்தவனை

வேலும் வாளும் வெல்ல முடியவில்லை

வேற்றொருவனின் காலில் விழுந்தோம்.

கிணற்றில் விழுந்த குங்குமச் சரையாய்

கொஞ்சம் கொஞ்சமாய்க் கரைந்தோம்.

யானைகள் மிதிக்கும் சேனைப்புலவாய்

மாறி மாறிப் பலரின் மகுடத்தின் கீழ்

நாறிக் கிடந்தது நம் வாழ்வு

வெள்ளைக் காரன் வெளியெறிய போது

சேனநாயக்காவிற்கு சிம்மாசனம் கிடைத்தது.

குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு விடயம் புதுவை இரத்தினதுரை, தான் தேர்ந்தெடுத்த போராட்டப் பாதையினூடு தன்னோடு பயணித்த சக தோழர்களின் பிரிவுகளையும் பதிவு செய்திருக்கிறார். இந்திய அரசிடம் 5 அம்சக் கோரிக்கையை முன் வைத்து சாகும் வரை உண்ணா நோன்பிருந்து மரித்த திலீபனை அவர் தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளையெனப் பாடுகின்றார்.

சென்ற இடமெல்லாம் தீ மூட்டி எரித்து விட்டு

அந்த இராமன் கூட அயோத்தி திரும்பினான்.

திலீபனே நீயேன் திரும்பி வரவில்லை.

வழி நிறைய எம்முற்றம் பூத்த வீரியக் கொடியை

அழியா முதலென்றல்லவா அழகு பார்த்தோம்!

அதை வேரோடிழுத்து வெய்யிலில் போட்டது

இமயம் உயரமெனும் அகம்பாவம்.

‘கந்தன் கருணை’ யிலிருந்துன் கால் நடந்த போது

கோயில் வீதியே குளிர்ந்து போனது.

கூட்டி வந்து கொலுவிருத்தினோம்.

சாட்சியாக எல்லாவற்றையும் பார்த்தபடி

வீற்றிருந்தாள் முத்துமாரி.

பன்னிரண்டு நாட்களாக உள்ளொடுங்கி

நீ உருகியபோது

வெள்ளை மணல் வீதி விம்மியது.

உன்னெதிரே நின்று எச்சில் விழுங்கியபோது

குற்றவுணர்வு எம்மைக் குதறியது.

வரண்டவுடன் நாவு அண்ணத்தில் ஒட்டியபோது

திரண்டிருந்த சுற்றம் தேம்பியது.

இவர் ஈழப் போரில் நிகழ்ந்தேறிய சகல சமாதானப் பேச்சுக்களையும் ஒரு வித எச்சரிக்கையுணர்வுடனே அணுகியிருக்கிறார். வரலாற்றில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை முன்னிறுத்தியே அவை பற்றிப் பேசுகிறார். சமாதானப் பேச்சுக்கள் தொடர்ந்தும் காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு மாவீரர் தினத்தில் அவரது உணர்வுகள் இவ்வாறு இருந்திருக்கின்றன..

இம்முறை துயிலுமில்ல வாசல்

திறக்கும் போதே

என்ன கொண்டு வந்தீர் எனக் கேட்டால்

பதிலேதும் உண்டா எம்மிடம்..?

சம்பூ கொணர்ந்தோம்

சவர்க்காரம் கொணர்ந்தோம்

சீமெந்தும் முறுக்குக் கம்பியும்

செல்போனும் கொணர்ந்தோம் என்று

சொல்ல முடியுமா அவர்களுக்கு

2004 இறுதியில் சுனாமிக்கு உறவுகளைத் தின்னக்கொடுத்ததெம் தேசம். அந்த வலியின் அவலங்களை அவர் வெளிப்படுத்தும் வார்த்தைகள் இவை.

முள்முடி சூடி

முதுகிற் பாரச் சிலுவை சுமந்த

பாவப்பட்ட மக்களின் பயணப்பாடு முடிந்தது.

இயேசுவே

எம்மையேன் இரட்சிக்க மறந்தீர் சுவாமி

ஆலமுண்ட நீல கண்டனே

எம்மைச் சாவு தின்றபோது தாங்காதிருந்ததற்கு

அன்று மட்டும் உமக்கென்ன அலுவல் இருந்தது பிரபு

அல்லாவே பிள்ளைகளைக் கைவிட்டதேனோ?

புத்தபெருமானே

வெள்ளம் வருகுதென்றாயினும்

சொல்ல வேண்டாமா..?

எல்லோரும் ஒதுங்கிக் கொண்டீர்

நாம் தான் தனித்துப்போனோம்

நிகழ்காலத்திலான அவரது கவிதைகள் சமாதான மாயையில் சிக்கிப்போன நிலைபற்றிச் சொல்கின்றன. சலிப்பினையும் விரக்தியினையும் ஏமாற்றத்தினையும் அவை பேசுகின்றன.

இந்தத் தடவை வானப் பயணம் போனவர்

வந்து இறங்கியதிலிருந்து

ஆவியாய் வெளியேறிக் கரைகிறது

மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும்..

மேசையிலமர்ந்து பேசுவதென்பது

பூதகியிடம் பால் குடிப்பதைப் போன்றதே

உறிஞ்ச வேண்டும்

விழுங்கக் கூடாது

சிரிக்க வேண்டும்

சிக்குப்படக்கூடாது

சமாதானத்தின் எதிர்பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்ட இன்றைய நிலையின் நாளைய நோக்குக் குறித்து எழுதும் கவிஞர் புதுவை இரத்தின துரையின் உலைக்கள வரிகள் இவை

நெஞ்சுக்குள் அலையெற்றிய

மாயக்கனவுகள் வெளியேற

நிஜமனிதர்களாக நிற்கிறோம் இப்போது.

மினுங்கிய மின்சாரமற்று

தொடர்புக்கிருந்த தொலைபேசியற்று

செப்பனிடப்பட்ட தெருவற்று

மாவற்று – சீனியற்று – மருந்தற்று

ஏனென்று கேட்க எவருமற்று

கற்காலத்துக்குத் திரும்புகிறோம் மீண்டும்.

கணினிகளையும் காஸ்சிலிண்டர்களையும்

வீட்டு மூலையில் வீசிவிட்டு

மெருகு குலையா மதில்களின் மின்குமிழ்களையும்

விறாந்தையின் தரைவிரிப்புகளையும்

மாடியிற் பூட்டிய அன்ரனாக்களையும்

அசுமாத்தமின்றி அகற்றிவிட்டு

பதுங்கு குழிக்குப் பால்காச்சிவிட்டோம்.

விடுவிக்கப்பட்ட ஊர்களை

விடுதலைபெற்ற தேசமென வெளிச்சம் செய்து

ஆடிய கூத்துக்கள் ஒவ்வொன்றாய் அகல

மீண்டும் நிஜத்துக்குத் திரும்பியது அரங்கு.

இப்போ மயக்கம் கலைந்த மனிதர்களைச் சுமந்து

மாரீசப் போர்வை கலைத்துக் கிடக்கிறது மண்.

இன்றைய விடிகாலையிற் துயில்நீங்கி

தாய்நிலம் வாய்திறந்து பாடும்

விடுதலைப்பாடல் பரவுகிறது வெளியெங்கும்.

மனச்சாட்சியின் கதவுகள் திறந்தபடி

எல்லோர் முகங்களிலும் அறைந்தபடி

கேட்கும் பாடலை உணரமுடிகிறதா உன்னால்?

தீயினில் எரியாத தீபங்களே

காற்றும் ஒருகணம் வீச மறந்தது

கடலும் ஒருநொடி அமைதியாய் கிடந்தது

தேற்றுவார் இன்றியெம் தேசம் அழுதது

தீருவில் வெளியிலும் தேகங்கள் எரிந்தது

தீயினில் எரியாத தீபங்களே -எம்

தேசத்தில் நிலையான வேதங்களே

மண்ணினில் விதையான முத்துக்களே -நாம்

மாதவம் செய்து பெற்ற சொத்துக்களே

நெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள் -புலி

நிச்சயம் வெல்லுமென்று கூறுங்கள்

கடலினில் கடல்புறா பயணங்கள் போனது

சிறிலங்கா இராணுவம் பொறிவைக்க லானது

குமரப்பா புலேந்திரன் உடன் பத்து வேங்கைகள்

கொள்கையின்படி நஞ்சை குடித்தபின் சாய்ந்தனர்

இளமையில் சருகாகிக் போனவரே -எம்

இதயத்தில் உருவான கோவில்களே

அப்துல்லா ரகு நளன் ஆனந்தகுமார் மிரேஸ்

அன்பழகன் றெஜினோல்ட் பழனி கரனுடன் தவக்குமார்

ஆகிய வேங்கைள் அனலிடை போயினர்

காவிய நாயகர் களப்பலி ஆகினர்

மக்களுக்காக கடல் சென்றீரே -மண

மாலைகள் வாட முன்னர் போனீரே

எங்களின் கடலிலே எவனெம்மை பிடிப்பது

எங்களின் படகினை எவனிங்கு தடுப்பது

இந்திய அரசது ஏன்துணை போனது

இடியுடன் பெருமழை ஏன் உருவானது

கண்களில் நீர் சுமந்து நிற்கின்றோம் -நீர்

காட்டிய பாதையிலே செல்கின்றோம்

காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று

ஈழப்போராட்டத்தில் "மறைமுகக் கரும்புலிகள்" என்றொரு சொற்பதமுண்டு. தற்கொடைத்தாக்குதலை நடத்துபவர்கள் கரும்புலிகள் என்ற பேரால் அழைக்கப்படுவர்.

இதென்ன மறைமுகக் கரும்புலி?

வீரச்சாவடையும் போராளிகளுக்கு இராணுவநிலையோடு அவர்களின் சாவு அறிவிக்கப்படும். வித்துடல் இருந்தால் அதற்குரிய மரியாதையோடு விதைக்கப்படும். உடல் இல்லையென்றால் நினைவுக்கல் நாட்டப்படும்.

பின்வரும் நினைவுநாட்களில் அவர்களின் கல்லறையிலோ நினைவுக்கல்லிலோ நினைவுகூரப்படுவர்.

அதாவது அவர்களின் பெயர், அடையாளங்கள் என்பன வெளிப்படுத்தப்பட்டு உரிய மரியாதையும் கெளரவமும் வழங்கப்படும்.

ஆனால் இவையெதுவும் கிடைக்காமலும் பலர் போராட்டத்துக்காக உயிரை அர்ப்பணிக்கின்றனர். அதுவும் தற்கொடைத் தாக்குதலைச் செய்கின்றனர். அவர்களின் பெயர்களோ தகவல்களோ வெளிவிடப்பட மாட்டா. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் வெளியில் வரா.

கல்லறைகளோ நினைவுக்கற்களோ இரா. மாவீரர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெறா. சம்பந்தப்பட்ட சிலருடன் மட்டும் உறங்கிப்போகும் உண்மைகள்.

இவர்களைக் குறிப்பதே 'மறைமுகக் கரும்புலிகள்' என்ற சொற்பதம்.

போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் தடைநீக்கிகளாகச் செயற்பட்டு மடிந்தவர்கள்.

தம் சுயத்தையே அழிக்கும் மனத்திடமும் விருப்பமும் இவர்களிடமுண்டு.

இவர்கள் பற்றிய ஒரு பாடல்தான் இது. திருமலைச்சந்திரனின் குரல் அருமையாக உணர்வை வெளிப்படுத்துகிறது. இன்றைய நாளில் இவர்கள் பற்றிய பாடலொன்றைப் பதிவாக்குவது பொருத்தமானதும்கூட.

கல்லறைகள் காணாது

கண்சொரிவாள் அன்னை

நீங்களில்லை என்றுஎங்கள்

வாய்கள் சொல்லவில்லை

காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று

புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு

வாசல் வந்து ஆடுகின்ற பிள்ளை நிழல்பார்த்து

வாடுமந்த தாய்களின்றி கேட்க வந்த கூற்று

வாய்களின்றி பாடுதிங்கே காலநதிக்காற்று

வராற்றில் மூன்று பக்கம் விரிந்ததம்மா நேற்று

தேசமெங்கும் தேடுகின்ற விழிகளிங்கு ஆயிரம்

வாசமலர் கையெடுத்து நின்றகாலை ஆயிரம்

வீதியெங்கும் சுடரெத்த சாகும்பொழுதிலே -விழி

நீரெடுத்து விளக்கெரித்தோம் எங்கள் மனதிலே

கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை

நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை

பந்தலிட்ட நினைவுக் கோயில் படங்கள் தேடுதும்மை

விந்தையென்று உலகம் இன்று சொல்லி நிற்குதும்மை

சுவரில்லாடும் முகங்கள் இன்று தேடுதெங்கள் கண்கள்

சுவரில்லாமல் வரைந்து விட்ட ஓவியங்கள் நீங்கள்

வார்த்தையின்றி பாடுமோசை காற்றில் கேட்கவில்லை

காத்திருந்த விழியில் உங்கள் முகங்கள் மாறவில்லை

மழை குளித்த மரங்கள் மீது தளிர் திறக்குது -எங்கள்

மல்லிகையில் புதியதொரு முகை பிடிக்குது

வெற்றி வாகை தோன்றி காலை உலகை தொழுகுது -இந்த

செய்தியெல்லாம் நீங்களென்று காலம் சொல்லுது

கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை

நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை

காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று

புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு

ஊர்களின்றி பேர்களின்றி போன செய்தி கேட்டு

வாசலெங்கும் வீசுமென்று தேடுதிங்கு காற்று

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை -சில

வேங்கைகள் முகவரி அறிவதில்லை

பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை -கரும்

புலிகளின் கல்லறை வெளியில் இல்லை.

காலப் பெருவெளி நீளும் பொழுதிலும்

கண்ணில் தெரிவதுமில்லை -இங்கு

வாழும் தலைமுறை சாகும் கரும்புலி

வாழ்வை அறிவதுமில்லை -இவர்

வாசம் புரிவதுமில்லை

கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துமே

கைகள் அசைத்திட்டுப் போவார் -ஒரு

தொட்டில் வளர்ந்தவர் தோளில் சுமந்தவர்

சொல்லி புறப்பட்டுப் போவார் -எங்கள்

தோழர் நெருப்பென ஆவார்

நொடியில் ஒருபெரும் வெடியுடன் கரும்புலி

நெருப்புடன் சங்கமமாகும் -எங்கள்

விடிவினுக்காகவே இடியென எதிரியின்

முடிவுடன் அவருடல் சாயும் -அவர்

மூச்சும் பெரும் புயலாகும்.

நன்றி

மூலம் :- http://eelam.tamilpower.com/poems.html

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சகாரா,

தேசியக் கவிஞன் புதுவை இரத்தினத்துரையின் கவிதைகளை ஒரே தலைப்பில், கொண்டு வரும் உங்கள் பணிக்கு, மிக்க நன்றிகள்.

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டொன்று கூடியிருக்கிறது.

 

பெருங்கவியே! வாழ்த்துக்கள்.

 

உனைத் தேடுகிறோம் எங்கிருக்கிறீர்கள்?

 

பெருங்கவியே நின் பிறந்தநாளில் உனைத்தேடும் பதிவை இங்கிடும்போது ஆத்மநட்பு கசிகிறது.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111986

  • கருத்துக்கள உறவுகள்
கவிஞர் ஜயாவிற்கு கட‌வுள் அருளால் நீங்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறோம்
 
  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்தாலும் நலமுடன் இருக்கவேண்டும் தமிழே...உன் கவிபடித்து தமிழ்வளர்த்த ஏகலைவர்கள் பிரார்த்திக்கிறோம் தினமும்...

அவர் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை. :( விரைவில் ஏதும் தகவல் கிடைக்கும் என நம்புவோம். :rolleyes:

நன்றி அக்கா முகநூல் பகிர்வுக்கு. அதன் மூலம் தான் இத்திரிக்குள் உள்நுழைந்தேன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

புதுவை ஆயுதம் தூக்கிய போராளி அல்ல. அவர் மொழிப்பற்று மிக்க ஒரு சாதாரண பொதுமகன். அவரை பிடித்து வைத்துள்ளவர்கள் மனிதாபிமான அடிப்படையில் அவரின் வயது.. உடல்நிலை கருத்தி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

 

தயா மாஸ்ரரை விட்டவைக்கு.. புதுவையை விடுறது பெரிய விடயம் அல்ல..!

 

ஜேவிபியில் எத்தனையோ பேரை ரோகணவின் படுகொலைக்குப் பிறகு மன்னித்து விட்டவைக்கு.. இவரை விடுதலை செய்வது பெரிய விடயம் அல்ல..!

 

ஆனால்.. சிங்கள இனவாத பூதம் அதைச் செய்ய அனுமதிக்குமா..????!

  • கருத்துக்கள உறவுகள்

அக்கினிப் பிழம்பாகி,

அணைக்கும் கரங்களாகி,

திக்கெட்டும் முரசறைந்த,

தெய்வீகக் கவிஞன், நீ!

 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

கால்நூற்றாண்டுகளுக்கு முன் மாபெரும் கலாசார விழாவொன்றை கிளிநொச்சி 4ம்வாய்க்கால் வயல்வெளியிலே நடாத்தியிருந்தார். விழா முடிந்து வீட்டிற்குப் போகும் வழியில் கவின்கலைக்;கல்லூரிக்கு முன்பாக நின்றார். ஏலவே அவரோடு அறிமுகம் இருந்தமையால் அன்றும்  உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. எப்போதும் கம்பீரமான உற்சாகமான உரையாடலுக்குச் சொந்தக்காரர் புதுவை. பரவிப்பாஞ்சான் பகுதியிலே(பின்னாளில் சமாதானச் செயலகம் இருந்த இல்லம்) கவின்கலைக் கல்லூரியை நிறுவிக் கற்பித்தற் செயற்பாடுகள் நடைபெற்றதொரு காலம். அச்சமற்ற அந்தப் பொழுதுகள் வருமா? ஆனால் புதுவையண்ணா நீங்கள் வரவேண்டும் என்பதே எமது வேண்டுதல்.

புதுவையண்ணாவைத் பதிவு செய்யும் வல்வை சகாறா அவர்களுக்கு நன்றிகள்.


எம் தேசப் பெருவெளியின்
ஞானத் திருதருவாய்
வாய்த்த எம்பெரும் கவியே
வரவேண்டும் வரவேண்டும்!
 

  • 1 year later...

தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பிறந்தநாளான இன்று சகாறா அக்காவின் இக்கவிதையை மீளவும் வாசித்தேன். புதுவை இரத்தினதுரை அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப் பையனாக.. இருந்த போது.. விடுதலைப்புலிகள் இதழில்.. வியாசனின் வரிகளில் கவர்ந்திழுக்கப்பட்டு.. வரிநடைக் கவிதைகளை ஆக்க கற்றுக் கொண்டதே.. புதுவை இடம் இருந்துதான்.  அந்த வகையில்.. புதுவை என்றும் நினைவில் இருப்பார். வாழ்த்துக்கள் கவிஞரே. உங்கள் விடுதலையையும் எதிர்பார்க்கிறோம். சிங்களம் போற போக்கைப் பார்த்தா.. இதனை சர்வதேசம் தான் சாத்தியமாக்க வேண்டும் போல் உள்ளது. அதற்கு உழைக்க புலம்பெயர் மக்கள் முன்வர வேண்டும்.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்தக்கள் ஐயா

 

உமது காலத்தில் வாழ்ந்த

பெருமையை  பெறுபவர் நாம்

உமது கவிதையின் சூடு பட்டு  

அணலாகி உருக்கப்பட்டவர் நாம்

குப்பைகளும்

நரிகளும்

அதிகரித்த இவ்வேளையில்

தேடுகின்றேர் உம்மை

வரணும்

கூட்டணும்

வெளிக்காட்டணும் பலர் முகங்களை.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.