Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேரளர்களால் தமிழர்கள் விரட்டியடிப்பு; தமிழகம் நோக்கி அகதிகளாக வருகை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் விரட்டியடிப்பு: கேரளத்தினர் வெறி

இடுக்கி மாவட்டத்தில் வசித்து வந்த தமிழர்கள் 40 குடும்பத்தினர் கேரளத்தினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். இதனால் பயந்துபோன அவர்கள், உயிருக்கு பாதுகாப்பு தேடி தமிழக எல்லைக்கு வந்து சேர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். இடுக்கி மாவட்டத்தில் உள்ள காரித்தோடு, நெடுங்கண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அவர்கள் தஞ்சம் தேடி ஓடி வந்தனர். அவர்கள் போடி அருகே கோணாம்பட்டி கிராமத்தில் தங்கள் உறவின்ர்கள் சிலர் வீட்டில் தஞ்சம் புகுந்தனர்.

http://www.nakkheera...ws.aspx?N=67087

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் காலகாலமாக அடிவாங்கி ஓடிக்கொண்டிருந்த போது நின்று திருப்பி அடிக்க ஒரு வீரத்தலைவன் பிரபாகரன் கிடைத்தான் அவரின் காலத்தில் தனி நாடு பெறுவதற்கு சேர்ந்து போராடாது இருந்து காலத்தை வீண் அடித்து விட்டு இப்போது அகதியாக ஓடி ஒதுங்க்குவதைத்தவிர வேறு வழியில்லை தமிழா ஓடு .........

தமிழா உனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை வீணடித்து விட்டாய் அன்று நீ சிந்திக்கவில்லை இன்று நீ கண்டிப்பாக சிந்திப்பாய் இப்போது மிகவும் காலதாமதமாகி விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனினதும் புலிகளினதும் இருப்பு... சிங்களவர்களை மட்டும் தமிழர்களுக்கு எதிராக வாலாட்டாமல் அடக்கி வைக்கவில்லை... தமிழர்களின் மறைமுக எதிரிகளையும் மெளனமாக்கி இருக்கிறது. இன்று அந்த இருப்பு இல்லை என்ற நிலையில்.. தமிழர்கள் மீது எல்லா வகையிலும் எதிரிகள் தாக்கத் தொடங்கிவிட்டார்கள். அந்த வகையில் தான் பிரபாகரனினதும்.. புலிகளினதும் இருப்பை இந்தக் கேரள நாராயணர்களும்... ஹிந்திய மேனன்களும்.. சோனியாக்களும் சிங்களத்தோடு சேர்ந்து நின்று அழித்தனர்..!

பிரபாகரனினதும் புலிகளினதும் இருப்பு.. தமிழக மக்களின் பாதுகாப்பையும் கடலிலும் சரி.. மாநிலத்திலும் சரி அதற்கு வெளியிலும் சரி உறுதி செய்திருக்கிறது என்பதையே இந்த நிகழ்வுகள் அப்பட்டாம இனங்காட்டுகின்றன.

33 வருடமாக உள்ள பிரச்சனைக்கு இன்று.. தமிழன் மீது அடிக்க முடியுதுன்னா.. அதற்குக் காரணம்.. மத்தியில் ஆட்சியில் இருக்கும் சோனியா காங்கிரஸ் தான். 35 வருடம் போராடிய ஈழத்தமிழனை சிங்களவன் வெல்லவும் அதே காங்கிரஸ் தான் காரணம்...! அந்த வகையில் காங்கிரஸ் அழியாமல்.. தமிழ் நாடு தனி நாடாகாமல்.. தமிழனுக்கு எனி விடிவில்லை..! புலிகளின் இருப்பை மீள நிறுவுவதன் மூலமே தமிழர்களின் நாட்டையும் இனத்தையும் காக்க முடியும்..! :(:icon_idea:

Edited by nedukkalapoovan

35 வருடம் போராடிய ஈழத்தமிழனை சிங்களவன் வெல்லவும் அதே காங்கிரஸ் தான் காரணம்...! அந்த வகையில் காங்கிரஸ் அழியாமல்.. தமிழ் நாடு தனி நாடாகாமல்.. தமிழனுக்கு எனி விடிவில்லை..!

அதற்குரிய நடவடிக்கைகளை சமார்த்தியமாக நகர்த்த சம்பந்தப்பட்ட தலைமைகள் அதை உணர்ந்து சமயோசிதமாக நடக்கவேண்டும்.

இல்லையெனில் அழிவுகள் தொடரும்.

நாம் ஒவ்வொருவரும் கூட எம்மால் ஆவன செய்யவேண்டும். ஆவர் இல்லை இவர் செய்யவேண்டும் எனக்கூறி இருக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் பிரபாகரனிடம் கருணையை எதிர்பாராதீர்.

உலகத்தமிழினம் முழுவதும் அவனோடு நிற்கும் மறவாதீர்

Edited by விசுகு

தமிழ்நாட்டு தமிழனுக்கும் இலங்கை தமிழனை போல் உலகம் எங்கும் ஓடி அகதியாக ஒரு அரிய சந்தர்ப்பம்.

நாடு கடந்த தமிழ் நாடு அரசு அமைக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு தமிழனுக்கும் இலங்கை தமிழனை போல் உலகம் எங்கும் ஓடி அகதியாக ஒரு அரிய சந்தர்ப்பம்.

நாடு கடந்த தமிழ் நாடு அரசு அமைக்கலாம் .

லொள்ளு...?

ம்..அப்படியே 'மடகாஸ்கர்' தீவையும் படகில் சென்று பிடித்து தமிழர் நாட்டுக்கு தீர்வை எட்ட முயலலாம்..

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

சிலதுக்கு சொறியாமல் இருக்கமுடியாது.

வளர்ந்த இடம் அப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு தமிழனுக்கும் இலங்கை தமிழனை போல் உலகம் எங்கும் ஓடி அகதியாக ஒரு அரிய சந்தர்ப்பம்.

நாடு கடந்த தமிழ் நாடு அரசு அமைக்கலாம் .

ஒரு வேளை மாலைதீவு போன்றதொரு தீவைப்பிடித்து விட்டால் தமிழ் நாட்டு மக்கள் அங்கு போய் குடியிருக்கலாம்.இனி அதற்கும் படித்த அதாவது உமாமகேஸ்வரன் போன்ற தலைவர்கள் வரவேண்டுமே!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை மாலைதீவு போன்றதொரு தீவைப்பிடித்து விட்டால் தமிழ் நாட்டு மக்கள் அங்கு போய் குடியிருக்கலாம்.இனி அதற்கும் படித்த அதாவது உமாமகேஸ்வரன் போன்ற தலைவர்கள் வரவேண்டுமே!!!

:lol: :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளிகளுக்கும் சிங்களவருக்கும் இடையே உள்ள ஒரு

ஒற்றுமை தமிழரை அழிப்பதே.

எங்கும் புரட்சி வந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டு தமிழனுக்கும் இலங்கை தமிழனை போல் உலகம் எங்கும் ஓடி அகதியாக ஒரு அரிய சந்தர்ப்பம்.

நாடு கடந்த தமிழ் நாடு அரசு அமைக்கலாம் .

இஞ்சை ஒராளுக்கு "பிரபாகரன்" எண்ட பெயரை வைச்சு ஆரும் ஏதாவது கருத்தெழுதவெளிக்கிட்டால்...உடனை உதற வெளிக்கிட்டுடும்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை ஒராளுக்கு "பிரபாகரன்" எண்ட பெயரை வைச்சு ஆரும் ஏதாவது கருத்தெழுதவெளிக்கிட்டால்...உடனை உதற வெளிக்கிட்டுடும்.

அது ஒருவிதக்காதல்

எனக்கு மட்டும்தான் என்கின்ற கொள்ளை ஆசை. :wub::D

  • கருத்துக்கள உறவுகள்

லொள்ளு...?

ம்..அப்படியே 'மடகாஸ்கர்' தீவையும் படகில் சென்று பிடித்து தமிழர் நாட்டுக்கு தீர்வை எட்ட முயலலாம்..

.

ராசவன்னியன், நாங்களெல்லாம் மடகஸ்காரைப் பிடிக்கிறதாவது. ரோ போட்டுக்குடுத்த திட்டத்தையே குழப்பிக் கூழாக்கி மாலைதீவைக் கோட்டை விட்ட கெட்டிக்காரர் நாம், நாமாவது மடகஸ்காரைப் பிடிப்பதாவது. சோத்துப்பாசலிருந்தால் கட்டி வைய்யுங்கள், இன்னொரு சுற்றுச் சுற்றி வரலாம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெறி பிடித்த மலையாளிகளால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர்

கேரள மாநிலத்தில் உள்ள உடுப்பஞ்சோலை, ஆணைக்கல்மெட்டு, ஆட்டுவாரை, மணத்தோடு, தலையங்கம், சதுரங்கப் பாறை, நெடுங்கண்டம் போன்ற பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகிறார்கள்.

அவர்கள் தேயிலை தோட்டம், ஏலத்தோட்டம், காப்பி தோட்டங்களில் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த கேரளக்காரர்கள் அங்கு வசித்து வரும் தமிழர்களை தாக்கி விரட்டி அடித்து வருகிறார்கள். நெடுங்கண்டம், காரித்தோடு, கரியன்மலை போன்ற பகுதிகளில் வீடு, வீடாக புகுந்து தமிழர்களை தாக்கி விரட்டி அடித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் உயிர் தப்பி இரவோடு இரவாக போடி மற்றும் தேவாரம் வந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.

போடி தாலுகா அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு உணவு மற்றும் தங்குவதற்கு தேவையான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலர் கூறும் போது, மின் இணைப்பை துண்டித்து விட்டு கேரளக்காரர்கள் வீடு வீடாக புகுந்து தாக்கி வருகிறார்கள்.

இதுகுறித்து கேரள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பது இல்லை. போலீசாரும் எங்களை தாக்க வருகிறார்கள் என்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சதுரங்க பாறை என்ற இடத்தில் வசித்து வந்த தமிழர்கள் 100 குடும்பத்தினர் கேரளக் காரர்களின் அட்டூழியம் தாங்காமல் தேவாரம் வந்தனர்.

மாவட்ட கலெக்டர் பழனிசாமி உத்தரவின் பேரில் உத்தமபாளையம் தாசில்தார் சூரியகலா மற்றும் வருவாய் அதிகாரிகள் கேரளாவில் இருந்து வரும் அனைத்து தமிழர்களை தங்க வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்து உள்ளனர்.

100க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 250 பேர் தேவாரத்தில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=67155

மலையாளிகளின் பிரச்சார இணையத் தளம்.

எவ்வளவு சாதுரியமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனு அனுப்பி காரியம் சாதிக்க முயல்கின்றனர்.

ஆனால், தமிழகத்தினர் தகவல் தொழில் நுட்பத் துறையில் முன்னணியில் இருந்தும், வலைபதிவுகளில் சாதனை படைத்தும் என்ன பயன்.

TN FISHERMAN போல முல்லைப் பெரியாரில் இல்லையே????? இனியாவது....

http://supportkerala.org/

(முகநூல் ஊடாக)

  • கருத்துக்கள உறவுகள்

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கல்லணை மூலமாக கடலுக்கு செல்லும் நீரை பாசனத்துக்கு திருப்பினான் கரிகால் சோழன். உலகிலேயே முதன்முதலாக நீரின் பாதையை திருப்பிய நிகழ்வு அதுதான். அதுபோல மேற்கு மலைகளின் வழியே அரபிக்கடலுக்கு சென்ற தண்ணீரை 116 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகப் பகுதிகளுக்கு திருப்பினார் பென்னி குக். இரண்டு அணைகளும் இன்னும் செயல் பாட்டில் உள்ளன.

800px-Mullaperiyar_-from_inside.JPG

முல்லைப்பெரியாறு - தண்ணீரை தேக்கி பின்னர் திறந்து விடும் அணை அல்ல. மாறாக, பள்ளத்தில் வீழும் தண்ணீரை தடுத்து நிறுத்தி ஒரு அளவுக்கு மேல் உயரச் செய்து - மேட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லும் நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள அணையாகும். எனவே, மற்ற அணைகளைப் போல வண்டல் தேங்கி வயதாகிப்போகும் ஆபத்து இந்த அணைக்கு இல்லை.

176 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையில் எவ்வளவு உயரத்திற்கு தண்ணீர் தேக்கப்படுகிறதோ அந்த உயரத்துக்கு ஏற்ற அளவு அதிக தண்ணீர், அணையின் பக்கவாட்டில் உள்ள மலைச்சுரங்க வழியாக தமிழ்நாட்டிற்கு வருகிறது.

1947 இல் இந்திய நாடு அரசியல் சுதந்திரம் அடைந்த போதும், 1956 இல் கேரள மாநிலம் தமிழ்நாட்டிலிருந்து பிரிந்த போதும் - முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு திருப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 2,17,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றன. இந்த உரிமையை இந்திய அரசோ, கேரள அரசோ தட்டிப்பறிக்க முடியாது.

800px-Mullaperiyar_IA.png

ஆனால், 1970 களில், அணை பலவீனமாக இருக்கிறது என்கிற கட்டுக்கதையைப் பரப்பி, அதனை பலப்படுத்த வேண்டும் என்று இரண்டு மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டு - அதற்காக, ஒரு தற்காலிக ஏற்பாடாக அணையின் உயரத்தை 136 அடியாக குறைத்தார்கள். தமிழ்நாடு அரசின் செலவில் அணை பலப்படுத்தப்பட்ட பின்னர் அணையின் உயரத்தை மீண்டும் உயர்த்த, ஏற்கனவே ஒப்புக்கொண்டதற்கு மாறாக கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

கடைசியில் உச்சநீதிமன்றம் அணையை உடனடியாக 142 அடிக்கும், பேபி அணை எனப்படும் பகுதியில் நடைபெற வேண்டிய சிறிய மராமத்து பணிகள் முடிந்த பின்னர் 152 அடிக்கும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று 2006 ஆண்டு ஆணயிட்டது.

ஆனால், முதுகெலும்பற்ற தமிழ் நாடு அரசு - உச்ச நீதிமன்ற ஆணையை செயல்படுத்தவில்லை. இத்தனைக்கும் முல்லைப்பெரியாறு அணை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

இப்போது - புதிதாக அணை (அதாவது, கேரள அரசின் கட்டுப்பாடு), 120 அடிக்கு மட்டுமே தண்ணீர் (அதாவது, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் இல்லை) என்கிறது கேரள அரசு. இத்தனைக்கும் முல்லைப்பெரியாறு அணை தண்ணீரால் மின்சாரம் தவிர வேறு பாசன பயன் எதுவும் கேரளாவுக்கு இல்லை.

தமிழ்நாடு அரசின் நேர்மையற்ற கோழைத்தனத்தால் - தமிழ்நாட்டின் பாசன பரப்பு 2,17,000 ஏக்கரிலிருந்து 46,000 ஏக்கராக சுருங்கியதுதான் கிடைத்த பலன்.

முல்லைப்பெரியாறு சிக்கல் குறித்த சந்தேகங்களை போக்கும் காணொளி:

http://arulgreen.blogspot.com/

M.I.A, Born Free from ROMAIN-GAVRAS on Vimeo.

மலையாளிகளின் பிரச்சார இணையத் தளம்.

எவ்வளவு சாதுரியமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனு அனுப்பி காரியம் சாதிக்க முயல்கின்றனர்.

ஆனால், தமிழகத்தினர் தகவல் தொழில் நுட்பத் துறையில் முன்னணியில் இருந்தும், வலைபதிவுகளில் சாதனை படைத்தும் என்ன பயன்.

TN FISHERMAN போல முல்லைப் பெரியாரில் இல்லையே????? இனியாவது....

http://supportkerala.org/

(முகநூல் ஊடாக)

24TVMULLAPERIYAR_168088f.jpg

சென்னையிலிருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகைகள் - குறிப்பாக "டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இந்து" - மலையாளிகள் ஆதிக்கத்தில் இருக்கின்றன. இவை முல்லைப் பெரியார் என்பதை "முல்லப் பெரியார்" என்று மலையால தொனியில் எழுதுகின்றன.

அதேபோல, முல்லைப் பெரியாறு அணை தொடர்பான செய்திகளில் மலையாளிகள் கருத்தினையே சென்னையிலிருந்தும் எழுதுகின்றன.

சென்னையில் ஆதிக்கம் செலுத்தும் மலையாள பத்திரிகையாளர்கள் தங்களை பத்திரிகையாளர்களாகக் கருதாமல் மலையாளிகளாகவே கருதி உண்மைக்கு எதிராக செயல்படுவது குறித்த ஒரு ஆங்கில கட்டுரை:

Rising emotions, falling objectivity, the truth behind Mullaiperiyar coverage in Chennai newsrooms

http://www.theweekendleader.com/Causes/853/The-M-factor.html

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.