Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவப்பு விளக்கு (சிறுகதை)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா.. இந்தக் கதை என்னைப் பாதிக்குது என்று சொல்லி நான் இங்க ஒப்பாரியா வைச்சேன். இல்லையே. இந்தக் கதையை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்கனும் என்ற அவசியம் கூட நமக்கு இல்லை. இது யாரோடைய கதை.. அவ்வளவும் தான். அதற்கு மிஞ்சி இதற்கெல்லாம் முக்கியம் அளிக்க நாங்க முட்டாள்கள் இல்ல.

நெடுக்ஸ் அண்ணா, :)

நானும் நீங்களும் மட்டுமல்ல சமுதாயம் இவர்களும் தான். நானும் நீங்களும் இந்த சமுதாயத்தில் ஒருவரே. இவர்களை,இவைகளை பற்றியும் பேசவேண்டியே உள்ளது காரணம் இவர்களும் எமது சமூகத்தின் உறுப்பினர்களே. சமுதாயத்தில் அக்கறை உள்ளவர்களால் இவற்றை தட்டிக்கழிக்க முடியாது இவர்களில் யாரேனும் நமது சகோதர,சகோதரிகளாக கூட இருக்கலாம். சிவப்பு விளக்கு என்றவுடன் ஏதோ உடல்தாகத்தை தணிக்க மட்டும் என்று நினைப்பது பத்தாம் பசலித்தனமே. இந்த நிலைக்கு இவர்கள் வர காரணம் என்ன? எந்த சூழ்நிலை இவர்களை இப்படியாக்கியது ? இதற்கான விடை என்ன என்பதை ஆராய்,பேச வேண்டியதும் ஆக்கபூர்வமுடையவர்களின் சிந்தனையே தவிர வளரவிட்டு வேடிக்கை பார்ப்பதில்லை அழகு.

விபரச்சாரத்தில் ஈடுபடும் பெண்களே எமது ஆண்களை வெறுக்கிறார்கள்,மிருகத்தனமாக எம்மின ஆண்கள் நடக்கிறார்கள்(கதைப்படி)

எனும் போது இப்படி ஒரு மனநிலைக்கு வர எம்மின ஆண்களுக்கு என்ன காரணம் என்ற உளவியலை தெரிந்து கொள்ள வேண்டிய தேவையை உங்கள் கருத்தில் மறுப்பதன் ஊடாக இந்த சமுதாயத்தை காட்டுமிராண்டிகளாக,மனநோயாளிகளாக வைத்திருப்பதை ஊக்குவிக்கிறீர்களா?

நாகேஸ் அண்ணாவின் அதிகம் பேசப்படாத ஒரு விடயத்தை ஆனால் நிச்சயம் பேச வேண்டிய ஒரு விசயத்தை அலசியதை பாராட்டினோமே தவிர ஒட்டு மொத்த சமுதாயமுமே அப்படித்தான் என்ற certificate யாரும் தரவில்லை.

படித்தவர் என்று சொல்லும் நீங்கள் கூட இப்படியான விடையங்கள் தேவை இல்லை என்று கருதுவது கூட சாபக்கேடே ! :icon_idea:

  • Replies 77
  • Views 15.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா, :)

நாகேஸ் அண்ணாவின் அதிகம் பேசப்படாத ஒரு விடயத்தை ஆனால் நிச்சயம் பேச வேண்டிய ஒரு விசயத்தை அலசியதை பாராட்டினோமே தவிர ஒட்டு மொத்த சமுதாயமுமே அப்படித்தான் என்ற certificate யாரும் தரவில்லை.

படித்தவர் என்று சொல்லும் நீங்கள் கூட இப்படியான விடையங்கள் தேவை இல்லை என்று கருதுவது கூட சாபக்கேடே ! :icon_idea:

நான் நினைக்கிறேன்.. இந்த விபச்சாரம் என்பது.. மனித வரலாற்றில் நீண்ட பயணப் பாதையைக் கொண்டது என்று. கிட்டத்தட்ட இதனைப் பற்றி எழுதாத படைப்பாளிகளே இல்லை எனலாம். வராத சினிமாக்களே இல்லை எனலாம். நாகேசும் அதில் ஒருவராக இடம்பிடிக்க விரும்பி இருப்பதில் எமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

மேலும்.. எமது தலைமுறை புரட்சியாளர்களான எமது சகோதர சகோதரிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் இது தொடர்பாக ஏற்படுத்தி இருந்த சமூக விளிப்புணர்ச்சியை விட யாரும் அதிகம் ஏற்படுத்தியதாக நான் கருதவில்லை. பல ஆண்டுகளாக வெளிப்படையான விபச்சார நடவடிக்கைகளை எமது சமூகத்தில் முற்றாக ஒழித்த பெருமை புலிகளைச் சாரும். அதுவும் எமது காலத்தில் நடந்தது. இதில் சிலர் முரண்படக் கூடும்.

மேலும் விபச்சாரிகள் என்போர் சமூகத்தில் பெரும் எண்ணிக்கையானோர் அல்ல. அவர்களைப் பற்றியே சதா பேசிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் ஒரு சமூகத்திற்கு இல்லை.

ஆனால் விபச்சாரிகளை (ஆண் விபச்சாரம் உட்பட) மீட்சிப்படுத்தி சாதாரண மனித சமூக வாழ்க்கைக்குள் அவர்களைக் கொண்டு வர இப்படியான கதைகள்.. படங்கள் எவ்வளவுக்கு உதவும் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

மேலும் விபச்சாரிகளை அவர்களை நாடிச் செல்பவர்களை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த சமூகமும் அப்படித்தான் என்ற எடுகோளை முன் வைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

அந்த வகையில் தான்.. இங்கு எனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன். மற்றும்படி.. விபச்சாரிகள்.. விபச்சாரம் பற்றி பேசக் கூடாது என்பதல்ல எனது கருத்து.

மேலும்.. இப்படியே கதையும் கட்டுரையும் கவிதையும் சினிமாவும் எடுப்பதால் மட்டும் விபச்சாரம் ஒழிந்துவிடப் போவதாக நாம் நினைத்தோம் என்றால் அது எமது முட்டாள் தனங்களில் ஒன்றாகவே இருக்கும்.

முடிந்தால்.. விபச்சாரத்தை தொழிலாக அங்கீகரித்துள்ள இடங்களில்.. விபச்சாரிகளை நாடிச் செல்வதை.. புறக்கணிக்க எல்லோரையும் தூண்டுங்கள். அதன் பின் அவர்களுக்கு மறுவாழ்விற்கான திட்டங்களை முன் வைத்து விபச்சாரத்தை ஒழியுங்கள்.

தாயகம் என்றால் விடுதலைப்புலிகளின் வழிமுறையை கையில் எடுங்கள். இவற்றைத் தவிர்த்து சிவப்பு விளக்கென்று போட்டு கதை எழுதுவதால் மட்டும் பெரிய புரட்சி நடந்துவிடப் போவதாக போக்குக் காட்டுவது கிட்டத்தட்ட 50 அல்லது 60 ஆண்டுகால பழமையான கருத்தியல் முறை ஆகும். இதற்கு எல்லாம் இன்றைய சமூகம் எடுபடுமா என்பது கேள்விக்குரிய ஒன்று..! அவனவன்.. அவனவள்.. அயலர்வர்களே உணராதபடிக்கு வீட்டில் இருந்து கொண்டே விபச்சாரம் செய்யும் நிலைக்கு முன்னேறி உள்ள நிலையில்.. வெறும் கதையும் கவிதையும்.. இவற்றை முடித்து வைக்கும் என்ற நம்பிக்கையில் மிதக்க நாம் தயார் இல்லை. நாம் விபச்சாரத்தை கட்டுப்படுத்த நிறையச் செய்ய வேண்டியுள்ளது. அது குறுகிய கால.. நீண்ட கால திட்டங்களை செயற்பாடுகளை கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு கதை.. கட்டுரை.. அல்லது சினிமா இதைச் செய்யும் என்றால் இப்போ விபச்சாரம் முற்றாக கைவிடப்பட்டிருக்க வேண்டும். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனால் முதலில் உருவாக்கப்பட்ட தொழில் விபச்சாரம்தான். அது மனிதகுலம் அழியும் வரை ஒழிக்கப்படமாட்டாது. இதைப் புரியாமல் ஒழிக்கவேண்டும் என்று புறப்படுபவர்கள் உண்மையிலேயே அனுதாபத்திற்குரியவர்கள்.

நெடுக்ஸ் அண்ணா,

வசந்தபாலன்,செல்வராகவன் படங்களுக்கும்,தரணி,பேரரசுவின் படங்களுக்கும் வித்தியாசம் இல்லையா???? முன்னைய இருவரின் படங்களில் முரண்பாடுகள் இருப்பினும் யதார்த்தமான உண்மையான சினிமா அதிகம் இருக்கும். (அதுக்காக பாலுமகேந்திரா,பாரதிராஜா எடுக்காத படமா என்று கேட்காதீர்கள் நாங்கள் யூத் இப்ப இருக்கிற சினிமா தான் பார்போம் :lol: ) மற்றையதில் மாஸ்,ஹீரோயிசம் தான் அதிகம் இருக்கும் அதே போல தான் ஒவ்வொருத்தர் எழுத்தும். மேற்குலகில் இப்படியான இடங்களை யாரும் கடந்து செல்லாமல் விட்டிருப்பதே அதிகம் தான்(இங்கை டுசெல்டோர்ஃப் ரயில் நிலையத்துக்கு ரயிலில் செல்பவர்களுக்கே தெரியும் அருகில் உள்ள கட்டிடத்தில் கண்ணாடியில் சிவப்பு,பச்சை,நீலம் வண்ணம் ஒட்டப்பட்டு இலக்கங்கள் இடப்பட்டிருக்கும் அரை குறை ஆடைகளுடன் பெண்கள் இருப்பதும்) இதுக்காக அங்கே போக வேண்டும் என்று இல்லை அப்படியான ஒரு சூழலில் நாகேஸ் அண்ணா வின் எழுத்தும் கண்கூடு பார்க்கும் விடயத்தை எழுதியதால் அதன் உண்மைத்தன்மை உரிதிப்படுகின்றது என்பது தான் கருத்தே தவிர நாகேஸ் அண்ணா எப்படி வாரார் என்பதல்ல.

விடுதலைப்புலிகளின் காலத்தில் விபச்சாரம் குறைவாக இருந்தது என்பது மறுக்க முடியாத ஒன்றாயினும் இன்று புலிகளின் வீழ்ச்சிக்கு பின் நிலை தலைகீழாக மாறியுள்ளது என்பதையும் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இன்று தினசரி செய்திகளை ஆக்கரிமிக்கும் விடையங்களாக தாயகத்தில் இவை மாறியுள்ள நிலையில் இவற்றை அலட்சியம் செய்தல் எவ்வளவு புத்திசாலித்தனமானது என்று தெரியவில்லை.

மேற்குலகை பொறுத்தவரை இது சாதரணவிடையம் ஆதலால் இவை பற்றி அதிகம் பேசப்படுவதில்லை ஆயினும் இன்று தாயகத்தில் யாழ் பஸ் நிலையத்தில் ஒரு யுவதி ஆணை உறவுக்கு அழைத்தாள் அவன் திருப்பி அடித்தான். யாழில் லொட்ஜில் விபச்சாரம், திருகோணமலையில் இடுகாட்டில் விபச்சாரம் என்று தினமும் பத்திரிகைகளை அலங்கரிக்கும் செய்திகள் எமது

இனத்தின் அவமானச்சின்னங்களே .. போரினால் தான் இவை ஏற்பட்டது என்றால் போரில் சம்பந்தப்பட்ட இரு தரப்புக்களுமே பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள் அந்த வகையில் இவற்றுக்கு எனக்கும், உங்களுக்கும் ஏன் எல்லாருக்குமே பொறுப்பு கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது,.

மற்றும்படி இதில் கதை,கவிதை எழுதி மாற்றம் வந்துவிடும் என்று நிச்சயம் நான் நம்பவில்லை. ஆயிரமாயிரம் உணர்ச்சிக்கவிதகள்,கதைகள்,பேச்சுக்கள் கேட்டே தன் இனத்தின் பரிதாபம் கண்டு ஒற்றுமையாக ஒரு முடிவுக்கு வராத, ஏன் இத்தனை ஆயிரம் போராளிகள்,மாவீரர்கள்,லட்சக்கணக்கான சனத்தின் இறப்புக்கு பின்னரும் தமக்கு என்ன தேவை என்று சிந்திக்க தெரியாத கூட்டத்துக்கு நானும்,நீங்களும் எழுத்தான் திருந்துவார்கள் என்றால் அதை விட மிகப்பெரிய முட்டாள் தனம் வேறு ஏதும் கிடையாது. உங்களுடைய கேள்விக்கான பதிலே தவிர வேறேதும் இல்லை. ஆயிரத்தில் ஒருவர் திருந்தினாலே பெரிய விசயம் தான்.

அப்புறம் நெடுக்ஸ் அண்ணா இப்படி எல்லாத்துக்கும் ஆயுதத்தை எடுத்தால் கடைசியில் எல்லாரும் ஆயுத்தத்துடன் தான் அலையவேணும். ஆயுதம் என்பது அமைதியை,சமாதானத்தை ஏற்படுத்த ஒரு கருவியே தவிர ஆட்சி செய்யவல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதனால் முதலில் உருவாக்கப்பட்ட தொழில் விபச்சாரம்தான். அது மனிதகுலம் அழியும் வரை ஒழிக்கப்படமாட்டாது. இதைப் புரியாமல் ஒழிக்கவேண்டும் என்று புறப்படுபவர்கள் உண்மையிலேயே அனுதாபத்திற்குரியவர்கள்.

கிருபன் அண்ணா ஒழிக்க சொல்லவில்லை அண்ணா எம்மினத்தில் இதை குறைக்கச்சொல்லுகிறோம். அண்மையில் ஒரு சிங்கள நடிகை குடுத்த பேட்டியில்

இலங்கையில் விபச்சாரிகள் இல்லை என்றால் ஆண்கள் மனநோயாளிகளாகத்தான் இருப்பார்கள் என்று. இது முற்றிலும் உண்மையான கருத்தே. ஆனால் பொருளாதாரத்தில் பிந்தங்கிய வேறு வழி இல்லாமல் தமது குடும்பத்தை காப்பாற்றவேண்டிய இன்னோரன்ன காரணங்களுக்காக வலிந்து விபச்சாரத்தில்

தள்ளப்படுவோரை தடுக்க அவர்களை சமூகத்தில் முன்னேற்றுவதற்கான பொறிமுறைகளைக் காணவேண்டும் என்றே கூறுகிறேன். :icon_idea:

(இது கூட யாரோ வெள்ளைக்காரி போறால் வாறாள் என்பதற்காக எழுதவில்லை அந்தளவுக்கு எல்லாம் எனக்கு பெரிய மனசும்,புரட்சி செய்யும் எண்ணமும் இல்லை. தற்போது வரும் செய்திகளை படித்த பின் எம்மினத்தில் இப்படி நடக்கும் போது தான் இவற்றை எழுத தூண்டியது.)

நோ ரென்சன் யா :lol: :lol: :D .

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரன் , நெடுக்கர் , உங்கள் கருத்துக்களை நிதானமாக உள்வாங்குகின்றேன் . உங்கள் இருவரையும் தனிப்பட்ட முறையில் மனம் நோகப் பண்ணியிருந்தால் உங்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன் . ஆனால் , எனது கருத்துக்களுக்கு இல்லை . காரணம் , நாகேசின் கதை எனது மனதில் ஏற்படுத்திய அதிர்வலைகளையே அவருக்குப் பதிவிட்டேன் . நீங்கள் கேட்ட கேள்விகளை பேசாப் பொருளில் ஒரு பதிவை ஆரம்பித்து விவாதிப்போம் . இங்கு வேண்டாமே !!!!!! :) :) :) :) .

கோமகன், நீங்கள் யாரையும் தனிப்பட்ட ரீதியாகப் புண்படுத்தவில்லை. முற்றிலும் பொறுப்பற்ற ஒரு கருத்தைப் பதிவிட்டிருக்கிறீர்கள். அதனால் மன்னிப்புக் கேட்பதை விடுத்து அந்தக் கருத்தை நீக்கிவிட வேண்டியதே நீங்கள் செய்ய வேண்டியது. சிவப்பு விளக்குப் பகுதிக்குப் போவதும் சேவைகள் பெறுவதும் பாரதூரமான விசயமாக இருக்கையில் "எல்லா ஆண்களும் அதை ஏதோ ஒரு அறியா வயதில் செய்கிறார்கள்" என்ற தொனியில் வந்த கருத்து ஒரு பதின்ம வயது வாசகனுக்கு எந்த மாதிரியான புரிதலைக் கொடுக்கும் என நினைக்கிறீர்கள்? இதுவும் ஏதோ சுய இன்பம் மாதிரி சாதாரண விஷயமாக்கும் என்று நினைத்து விட மாட்டானா? மேலும் உங்கள் இந்தக் கருத்து தமிழ் சமூகத்தில் மட்டுமன்றி மேற்கத்தைய சமூகத்திலும் கூட உண்மையில்லாத ஒரு விடயம். ஏனெனில் பலர் ஒழுக்கம் குறித்து இல்லாவிட்டாலும் கூட தங்கள் சொந்த ஆரோக்கியம் சுகாதாரம் குறித்தாவது சிவப்பு விளக்குப் பகுதிகளுக்குச் செல்வதில்லை.

ஜஸ்ரின் உங்கள் கருத்துப்படி பார்த்தால் எயிட்ஸ் ஆட்கொல்லி நோய் இப்போது இல்லாமல் போயிருக்க வேண்டுமே?????????????? மேலும் , நான் எழுதிய பதிவுக்கு நாகேஸ் தரும் பதிலின் அடிப்படையிலும் , மட்டுக்கள் சிபார்சு செய்தால் , நீக்குவதா ? இல்லையா ? என்று பரிசீலிக்கின்றேன் :) :) :) :) .

  • தொடங்கியவர்

வழமையான நாகேஷ் பாணிக் கதை.. தமிழினத்தின் பெருமைகள் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் புலம்பெயர்ந்த சூழலில் எப்படிக் காணாமல் போகின்றது என்பது தெரியும்தான். எனினும் தமிழர்களின் இரத்தத்தில் ஊறிய சில சிந்தனைகள் அப்படியே மாறாமல் இருக்கின்றது.

கிருபன் நன்றிகள்...நாகேஸ் பாணிக்கதை என்றால் நகைச்சுவை கதை என்று இல்லை :lol: :lol: .தானே சும்மா பகிடிக்கு சொல்றன்...நாகேஸ் (மிது)பாணி எழுத்து ஒன்று இருக்குது என்று ஒரு அங்கீகாரத்தை தந்த கிருபனுக்கு மீண்டும் எனது நன்றிகள் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் உங்கள் கருத்துப்படி பார்த்தால் எயிட்ஸ் ஆட்கொல்லி நோய் இப்போது இல்லாமல் போயிருக்க வேண்டுமே?????????????? மேலும் , நான் எழுதிய பதிவுக்கு நாகேஸ் தரும் பதிலின் அடிப்படையிலும் , மட்டுக்கள் சிபார்சு செய்தால் , நீக்குவதா ? இல்லையா ? என்று பரிசீலிக்கின்றேன் :) :) :) :) .

திரும்பவும் ஒரு மூடத்தனமான கருத்து கோமகன்! நீங்கள் அறியாவிட்டாலும் கூட எயிட்ஸ் நோய் அதிகமாகப் பரவ பாலுறவு தான் காரணம், அதன் பிறகு தான் இரத்த மாற்று, போதை ஊசி, தாயிலிருந்து சிசுவுக்கு போன்ற வழிகள் எல்லாம். எயிட்ஸ் நோயாளிகள் அதிகம் காணப்படும் கண்டம் ஆபிரிக்கா-காரணம் பல ஆபிரிக்க கலாச்சாரங்களில் பலதார மணம் போன்ற பாலியல் தொடர்புகளை அதிகரிக்கும் நடைமுறைகள் சாதாரணமாகக் காணப்படுகின்றன. எயிட்ஸின் பாதிப்பு நோயாளி இறந்து விடுவதோடு நிற்பதில்லை. சகாரா பாலைவனத்திற்கு கீழேயுள்ள ஆபிரிக்க நாடுகளில் மில்லியன் கணக்கான அனாதைக் குழந்தைகள், அதில் பலரும் எச்.ஐ.வி தொற்றோடு, வாழ்கிறார்கள். தாய்-தந்தையை எயிட்ஸ் கொண்டு போய் விட்டது. இது ஒரு பாரிய சமூகப் பிரச்சினை. எயிட்ஸ் மட்டுமன்றி கொனேரியா, சிபிலிஸ் கூட பாலியல் தொழிலாளர்களிடமிருந்து தான் வருகின்றன. பிரான்சில் எப்படியோ தெரியாது. அமெரிக்காவில் இந்த பாலியல் நோய்கள் ""பொதுச் சுகாதாரப் பிரச்சினை" யாகவே பார்க்கப் படுகின்றன. இங்கே நிரந்தரப் பிரஜையாக வர விரும்புவோர் கட்டாயம் இந்த மூன்று பாலியல் நோய்களுக்குமான பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் - நோய் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டால் தகுந்த சிகிச்சை/ஆலோசனைக்குப் பின்னர் தான் உங்களை உள்ளே விடுவார்கள். விபச்சாரிகளிடம் போவது ஏதோ சிகரட் குடிப்பது மாதிரி உங்களோடு மட்டும் முடிந்து விடும் ஒரு கெட்ட பழக்கம் அல்ல-அதனால் நீங்கள் வாழும் சமூகத்திற்கே நீங்கள் ஆப்பு வைக்கிறீர்கள். முற்போக்கு, தனிமனித சுதந்திரம் பற்றி சிலாகிக்க முன்னர், பாலியல் நோய்களைப் பற்றிய விஞ்ஞான அறிவைப் பெறுவது மூடத்தனமான கருத்துகளைத் தவிர்க்க உதவும்.

  • தொடங்கியவர்

< இவனுக்கு இவளவும் என்னத்துக்கு என்று வாய் உளறியது ..

அவனறியாமாலே...

அப்பொழுது டெலிபோன் அடித்தது.

மறு முனையில் ஒரு மிகவும் வயதான மூதாட்டி

ராஜாவை தேடி வந்த அவசர அழைப்புக்கு அவள் கூறிய காரணத்தினால்

தலையணை கீழ் இருந்த அவ்வளவு கட்டு கொண்டெம் ஏன் என்று விளங்கியது

ஆம் ,,கோல் கேள் மாதிரி ....ராஜா ஒரு கோல் போய்

சுரேஸ் அறிந்தால் ,,அறியத்தான் போறான் ..

கண்ணாடி அறையில்லாத தான் வசிக்கும் இந்த இடத்தில் இருந்தும் ..என்று,,,......>

அமைதியாக , அதிக ஆரவாரமில்லாமல் , இரண்டு விடையங்களை நறுக்கென்று மண்டை கலங்கச் சொல்லியுள்ளீர்கள் நாகேக்ஷ் . முதலாவதாகப் , புலம்பெயர்ந்த பிரம்மச்சாரிகளது வாழ்கை முறையும் , அவர்கள் பார்வையில் பாலியல் என்றால் என்ன ? என்பதும் . இதில் , எந்தப் பிரம்மச்சாரியாவது தான் சிவப்புப் பகுதிக்குச் செல்லவில்லை என்றால் , அது வடிகட்டின பொய் என்று தான் சொல்வேன் . இரண்டாவதாகப் புலம் பெயர் வாழ்வில் எமது சமூகத்தின் < அரை அவியல் முட்டைக் கலாச்சாரத்தால் > எற்பட்ட பிறள்வினால் , பாலியல் தொழிலில் எமது சமூகத்தின் விலைமகன்களது பங்களிப்பு . இதைச் சொல்வதிற்கு ஒரு எழுத்தாளனுக்குத் தனியான துணிச்சல் வேண்டும் . அதை நீங்கள் செய்தது உண்மையிலேயே பராட்டப்படவேண்டிய விடையம் . மேலும் , நீங்கள் பன்முகப்பட்ட படைபுகளைத் தரவேண்டும் என்பதே எனது ஆவல் :):):):) 6 .

கோமகன் உங்கள் கருத்துக்கு நன்றிகள்...இந்த சிறுகதை எழுதும் பொழுது இப்படியான சலசலப்புக்கள் கட்டாயம் வரும் என்று தெரியும்.அதுவும் யாழில் இணைக்கும் பொழுது தயக்கத்துடன் தான் இணைத்தேன் ..இப்படித்தான் இருக்கிறது என்று சொல்ல வரும் பொழுது இப்படி த்தான் இருக்கிறது என்று தெரிந்தாலும் இப்படி இல்லை என்று ஓங்கி அடிக்க வேண்டிய தேவை பழமை வாத கருத்துடையவர்களுக்கு இருக்கு நன்கு அறிவேன் . அவர்கள் இதை ஏற்றுக் கொண்டால் இவ்வளவு காலமும் காப்பாற்றி வைத்திருக்கின்ற அந்த பொய்மையான இருப்புக்களுக்கு ஆபத்து என்று நன்கு அறிவார்கள் .அவர்கள் எந்த விதப்பட்டும் மூர்க்கத்தனமாக வாதிடுவார்கள் நன்கு அறிந்தே இந்த கதையை எழுதினேன் .

எனது மதிப்புக்குரிய நெடுக்கு தம்பிக்கு(அவர் எனது யாழ் களத்தில் நீண்ட கால நண்பர். :lol: (அவருக்கு தெரியாவிட்டாலும் ஏற்று கொள்ளாவிட்டாலும் ) பதில் அளிக்க வெளிக்கிட்டால் எனக்கு கட்டாயம் விரைவில் தமிழ தட்டச்சு தெரிந்து இருக்கவேண்டும் .அவரளவு விரைவாக என்னால் தட்டச்சு செய்ய முடியாது ..அவருக்கு பதில் அளிப்பது மூலம் விரைவில் தமிழ் தட்டச்சு பழகிவிடலாம் அது தான் ஒரு நன்மை எனது அனுபவத்தில் கண்டது அதுவுக்கும் எனக்கும் நேரமில்லை

கோமகன் கூறிய பதில் சிவப்பு விளக்கு பகுதிக்கு ஒரு பிரமச்சாரி போகாமால் இருந்திருக்க மாட்டான் நான் இப்படித்தான் எடுத்து கொள்ளுகிறேன்...ஒருவன் கனவிலாவது ஒருவனோடு ஒருத்தியோடு படுத்திருப்பான் என்று தான் சொல்லியிருப்பார்.. பாலியல் பற்றிய சரியான தெளிவில்லாத கலாச்சர கட்டுப்பாடுகளினால் தொட்டாலே ஸ்கிலிதம் போய் விடுகிறது .கீழை தேசத்து நாட்டவர் பலருக்கு...செக்ஸின் புனிதமும் அதன் உச்சமும் தெரியாத கீழத்தேசத்தவர்கள் வெறும் தொடுவதே செக்ஸ் என்று நினைத்து ஏமாந்து போகிறார்கள் ...மேலைத்தேசத்தில் இருப்பது போல் கீழைத்தேசத்தவர்களுக்கு பாலியல் கல்வி அவசியம் அப்படி இருந்தால் தான் அந்த சமுதாயம் ஆரோக்கிய சமுதாயமாக இருக்கும்.

கோமகன் சிவப்பு விளக்கு பகுதி என்றது ஒரு குறியீடு என்றே நம்புகிறேன் ..அப்படி இல்லாமல் கூறி பொதுமைபடுத்தி இருந்தால் பிழை என்றே நானும் நம்புகிறேன்

Edited by நாகேஷ்

நாகேஷ், உங்கள் கதை பற்றி இங்கே அவ்வளவாகக் குறைகள் சொல்லப் படவில்லை. கோமகன், குறியீடாக 'சிவப்பு விளக்குப் பகுதியை" பாவித்தார் என நான் நினைக்கவில்லை. கனவில் மிதப்பதும் உறவு கொள்வதும் அப்படி குறியிட வேண்டிய அளவுக்கு பேசக் கூடாத விடயங்கள் அல்ல. எனக்கு மேலே அவர் எழுதியிருக்கும் பதிலைப் பாருங்கள். மனிதர் "எல்லா ஆண்களும் சிவப்பு விளக்குப் பகுதிக்குப் போகிறவர்கள் தான்" என்று அப்பாவித் தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார். அப்படி இல்லா விட்டால் எயிட்ஸ் ஏன் இன்னும் உலகில் இருக்கிறது என்றும் கேட்கிறார். பாலியல் விடயங்களில் மதில் மேல் பூனையாக இருக்கும் இளைய தலைமுறையினரை பிழையான பக்கம் தள்ளி விடக்கூடிய ஒரு தவறான தரவு என்பதாலேயே நான் கோமகனின் கருத்தை மீளப்பெற்றுக் கொள்ளச் சொல்கிறேன்!

கற்பனாவாதம் வேறு ,யதார்த்தம் வேறு .

நாகேஷ் எழுதியது யதார்த்தம்.நாலு சுவருக்குள் இருந்து விட்டு வியாக்கியானம் எழுதலாம் .நாலு இடம் சுற்றி பார்த்தால் தான் இப்படிஎல்லாம் உலகம் இருக்கா என்று தெரியும்.நல்ல கதை எழுதும் எழுத்தாளர்களை எடுத்து பார்த்தீர்களானால் அவர்கள் நிறைய இடங்களுக்கு பயணம் செய்திருப்பார்கள் .நிறைய வித்தியாசமான மக்களை பல மட்டங்களிலும் சந்தித்திருப்பார்கள் அதனால் தான் அவர்களால் மனிதர்களை அவர்கள் உணர்வுகளை,செய்கைகளை தத்துருபமாக எழுதமுடிகின்றது .

அதை விட்டு எதற்கும் விடுதலைபுலிகள்ஆட்சிக்காலம் என்றால் ,விடுதலைப்புலிகள் மொட்டாக்கு போடச்சொன்னாலும் மக்கள் போட்டிருப்பார்கள் அப்பேர்ப்பட்ட ஆட்சிதான் அங்கு நடத்து .கோமகனின் வேறொரு பதிவிற்கு பதில் நான் இடவில்லை அவர்கள் ஆட்சி பற்றியது ,பாலும் தேனும் அங்கு ஓடியிருந்தால் பிரான்ஸ் மாதிரி இருக்குதேன்றால் ஏன் புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் அங்கு சென்று குடியேறவில்லை .மாறி வாக்கு போட்டால் விரல் இருக்காது என்று எம்மவர்க்கு நன்கு தெரியும்.சுதந்திரம் என்று இல்லாமல் வேறு இது இருந்தும் பிரயோசனமில்லை .

ஈரானில் ஷா இருக்கும் போது இருந்த அதே மக்கள் தான் கொமேனி வந்தபோதும் இருந்தார்கள் .ஆனால் அவர்கள் முழுவாழ்க்கை முறையும் மாறிப்போனது .அதே போல் தான் புலி கட்டுப்பாட்டுக்குள் இருந்த அதே மக்கள்தான் இன்று கிளிநொச்சியிலும் இருக்கின்றார்கள் .ஏன் இந்த மாற்றம்? பசி வந்தால் பத்தும் பறந்துவிடும்.

நானும் இதைத்தான் எனது பாணியில் சொல்கின்றேன் ஜஸ்ரின் . அரைவேக்காட்டுத்தனமான பாலியல் புரிதல்கள் எங்குமே வேண்டாம் என்று . அதேவேளையில் , திரைமறைவில் எல்லாவற்றையும் செய்து கொண்டு வெளியே போலி வேடம் போடுபவர்களையுமே கண்டிக்கின்றேன் :) :) :) :) .

பிழையான கருத்தைச் சொன்னது நீங்கள்-பிறகு அரை குறை புரிதல் பற்றி எப்படி உங்களுக்கு அக்கறை என்கிறீர்கள்? அது எப்படி திரை மறைவில் ஒருவர் செய்வது உங்களுக்குத் தெரிய வருகிறது? எல்லா ஆண்களும் சிவப்பு விளக்குப் பக்கம் ஒரு தடவையாவது போயிருக்கிறார்கள் எனச் சொல்ல என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கு? உங்கள் அபிப்பிராயம் ஆதாரமாகாது கோமகன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் சொல்லுவதில் நியாயம் இருக்கின்றது. சிவப்பு விளக்குப் பகுதிக்கு விடுப்புப் பார்க்கப் போவதற்கும் அலுவல் பார்க்கப் போவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. அத்துடன் அந்தப் பகுதியில் விருப்பமில்லாமல் வாழவேண்டிய சூழலிலும் சிலர் இருக்கின்றார்கள் என்பதும் உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நாகேசு நீங்கள் ஒரு பண்பட்ட எழுத்தாளர் என்பது நாம் ஏற்கனவே உங்கள் முன்னைய கதைகளில் இருந்து அறிந்தது. பேசாதவற்றை பேசும் சக்தி உங்கள் கதைகளுக்கு உண்டு. அவற்றை வெளி உலகிற்கு அப்பட்டமாக எடுத்து வருவது ஒரு துணிவுதான். வாழ்த்துக்கள்.

தனிமை, திடீரென புரட்டிப் போடப்பட்ட வாழ்வியல் மாற்றங்கள் கதையோடு பின்னிப் பிணைகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனாவாதம் வேறு ,யதார்த்தம் வேறு .

நாகேஷ் எழுதியது யதார்த்தம்.நாலு சுவருக்குள் இருந்து விட்டு வியாக்கியானம் எழுதலாம் .நாலு இடம் சுற்றி பார்த்தால் தான் இப்படிஎல்லாம் உலகம் இருக்கா என்று தெரியும்.நல்ல கதை எழுதும் எழுத்தாளர்களை எடுத்து பார்த்தீர்களானால் அவர்கள் நிறைய இடங்களுக்கு பயணம் செய்திருப்பார்கள் .நிறைய வித்தியாசமான மக்களை பல மட்டங்களிலும் சந்தித்திருப்பார்கள் அதனால் தான் அவர்களால் மனிதர்களை அவர்கள் உணர்வுகளை,செய்கைகளை தத்துருபமாக எழுதமுடிகின்றது .

அதை விட்டு எதற்கும் விடுதலைபுலிகள்ஆட்சிக்காலம் என்றால் ,விடுதலைப்புலிகள் மொட்டாக்கு போடச்சொன்னாலும் மக்கள் போட்டிருப்பார்கள் அப்பேர்ப்பட்ட ஆட்சிதான் அங்கு நடத்து .கோமகனின் வேறொரு பதிவிற்கு பதில் நான் இடவில்லை அவர்கள் ஆட்சி பற்றியது ,பாலும் தேனும் அங்கு ஓடியிருந்தால் பிரான்ஸ் மாதிரி இருக்குதேன்றால் ஏன் புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் அங்கு சென்று குடியேறவில்லை .மாறி வாக்கு போட்டால் விரல் இருக்காது என்று எம்மவர்க்கு நன்கு தெரியும்.சுதந்திரம் என்று இல்லாமல் வேறு இது இருந்தும் பிரயோசனமில்லை .

ஈரானில் ஷா இருக்கும் போது இருந்த அதே மக்கள் தான் கொமேனி வந்தபோதும் இருந்தார்கள் .ஆனால் அவர்கள் முழுவாழ்க்கை முறையும் மாறிப்போனது .அதே போல் தான் புலி கட்டுப்பாட்டுக்குள் இருந்த அதே மக்கள்தான் இன்று கிளிநொச்சியிலும் இருக்கின்றார்கள் .ஏன் இந்த மாற்றம்? பசி வந்தால் பத்தும் பறந்துவிடும்.

விடுதலைப்புலிகளின் ஆட்சி பற்றி கதைக்க நீங்கள் அங்கு எவ்வளவு காலம் அந்த ஆட்சியின் கீழ் வாழ்ந்தீர்கள் என்று சொல்ல முடியுமா..??! நாகேசின் கதையை யதார்த்தவாதம் என்று சொல்லும் தாங்கள் விடுதலைப்புலிகளின் ஆட்சி பற்றிய தங்கள் கற்பனாவாதத்தை மட்டும் திணிப்பதன் நோக்கம் என்னவோ..??!

மேலும் நாகேசின் கதை.. விபச்சாரிகளிடம் விசிட் அடிப்பவர்களுக்கு யதார்த்தவாதமாக இருக்கலாம். குறிப்பாக ஒட்டுக்குழுக்கள்.. இந்தியப் படை காலத்திலும்.. தென்னிந்தியாவில்.. இந்தியாவில் தங்கி இருந்த போதும்.. நடிகைகள் உள்ளிடங்க பலருடன் இந்திய உளவுப்படை அளித்த பெண்களோடு.. தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வரலாறுகளையும் மக்கள் அறிவார்கள்.

விடுதலைப்புலிகள்.. சமூக ஒழுக்கம் நோக்கிய கடுமையான சட்ட நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தார்களே தவிர.. மக்களை அடிமைப்படுத்தவில்லை. விடுதலைப்புலிகள் காலத்தில் யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்குக் கிழக்கில் கொழும்பில் இருந்தும்.. வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்களைத் தவிர எயிட்ஸ் உட்பட்ட பால்வினை நோய்களின் தாக்கம் இருக்கவில்லை. ஆனால் இன்று அது எல்லை கடந்து போய்க்கொண்டிருப்பதோடு.. பெரும் சமூகச் சீரழிவுக்கு உட்பட்டு ஒரு இனம் அழிந்து கொண்டிருக்கிறது. இது சுதந்திரம் அல்ல. ஒரு இன அழிப்பின் வடிவமாகும். இதனை தடுத்து நிறுத்தி இருந்தவர்கள் புலிகள். புலிகளைப் பற்றிய உங்கள் போலித்தனமான கற்பனாவாதங்கள் எமக்குத் தேவையில்லை. அதேபோல்.. ஓரிருவர் விபச்சாரிகளிடம் விசிட் அடிப்பதற்காக எல்லோரும் அப்படிச் செய்கின்றனர் என்ற தொனிப்பொருளில் விபச்சாரிகளை நாடுவோருக்கு தெம்பூட்டி.. விபச்சாரத்துக்கு வாழ்வளிக்க முனைவது ஏன் என்பதும் எமக்குத் தெரியும்.

ஒரு விடுதலை வேண்டி நிற்கும் இனத்திடம் உள்ள விடுதலைக்கான ஓர்மத்தை அழிக்க.. எதிரிகள் பாவிக்கும் ஆயுதங்களில் பாலியலும் குறிப்பிடத்தக்கது. இதை ஹிட்லரும் இரண்டாம் உலகப் போரின் போது பாவித்திருக்கிறார். பிற இடங்களிலும் பாவிக்கப்பட்டுள்ளது. திறந்த பாலியல் செயற்பாடு என்பதை ஒரு சமூகம் அங்கீகரிக்கும் நிலையில்.. அது முகங்கொடுக்க வேண்டிய பிரச்சனைகள் பல. அதில் ஒரு சமூகத்தை அழிக்கக் கூடிய ஏன் நாட்டை அழிக்கக் கூடிய பால்வினை நோய்களின் தாக்கம் முக்கியமானது.

மேற்கத்திய ஆதிக்கத்தில் இருக்கும்.. சியராலியோன் என்ற அழகிய ஓரளவு முன்னேறிய ஆபிரிக்க தேசத்தில் குடித்தொகையில் கிட்டத்தட்ட 50% ஆனோர் எயிட்ஸ் பாதிப்புக்கு உள்ளாகி அங்கு பெரும் சமூக நெருக்கடியை ஆக்கிரமிப்பாளர்கள் தோற்றுவித்துள்ளனர்.

புலிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சொந்த இனத்தையே ஆக்கிரமிப்பாளனுக்கு அடகு வைக்கக் கூடிய உங்களைப் போன்றவர்களுக்கு சமூகத்தில் இவற்றின் தாக்கம் குறித்த கவலை அறிவியல் சார்ந்த சிந்தனை இருக்க வாய்ப்பில்லை. ஆனால் கற்பனாவாதம் என்ற பிற்போக்குக் கருத்தியலூடு இங்கு வருவதன் நோக்கம்.. புளொட் போன்று சொந்த தமிழ் பெண்களை கடத்தி வைத்து இந்தியப் படைகளுக்கு சிறீலங்காப்படைகளுக்கு விபச்சாரம் செய்யவிட்டு கூலிப்படை நடத்தி வாழ்ந்ததை தற்காத்துக் கொள்ளவும் தான் என்பதை நாம் அறிவோம்.

மேற்கு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள வவுனியாவை சேர்ந்த பல தமிழ் பெண்கள் அகதி அந்தஸ்துப் பெற.. தாம் புளொட் அமைப்பினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்களைப் பதிவு செய்துள்ளமையையும் இங்கு சுட்டிக்காட்டலாம். அப்படி ஒரு பதிவு புலிகள் தொடர்பில் எங்கும் இருப்பதாக காண முடியாது. அப்படியானவர்கள் தங்களைப் போலவே பிறரும்.. விபச்சாரிகளை நாடிச் செல்வதாக கற்பனை செய்து கொண்டு.. அதனை யதார்த்தவாதம் என்று சொல்லிவிடுவதால்... அவை யதார்த்தமாக முடியாது..!

இந்த உலகில் விபச்சாரிகளை நாடுவோர் தொகை நாடாதோர் தொகையில் ஒரு சிறிய சதவீதமே ஆகும். இதனை தெரிந்து கொண்டு புலிகளின் மையக் கருத்தை சாகடிக்க என்று.. விபச்சாரத்துக்கு வாக்காளத்து வாங்க வருவது நன்று. :):lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதைத்தான் எனது பாணியில் சொல்கின்றேன் ஜஸ்ரின் . அரைவேக்காட்டுத்தனமான பாலியல் புரிதல்கள் எங்குமே வேண்டாம் என்று . அதேவேளையில் , திரைமறைவில் எல்லாவற்றையும் செய்து கொண்டு வெளியே போலி வேடம் போடுபவர்களையுமே கண்டிக்கின்றேன் :) :) :) :) .

திரைமறைவை சாட்டு வைச்சு.. அடுத்தவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி தங்கள் தங்கள் சுய தவறுகளை நியாயப்படுத்துவதை இந்தக் கதையிலும் நான் காண்கிறேன். இது எமது சமூகத்தைப் பிடித்துள்ள ஒரு பீடை. விபச்சாரம் மீதான உண்மையான சமூக அக்கறையை விட.. தனது தவறுக்கு நியாயம் தேடுவதையும்.. அதற்காகவே விபச்சாரத்துக்கு சமூக அங்கீகாரம் தேவை என்று விரும்புபவர்களாகவும் எம்மவர்களில் சிலர் உள்ளனர். அதற்காகவே ஒரு இனம் அழிந்தாலும் கூட அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.

ஆனால் உண்மையான சமூக ஆர்வலர்கள் இதனை தெளிவாக இனங்கண்டு.. இவர்களை சரியாக வகைப்படுத்தி.. அவர்களுக்குரிய வடிவில்.. அவர்களுக்குரிய பாசையில் பதில் சொல்லவும்.. அவர்களுக்கு உண்மையில் மீட்சி அவசியம் என்று கண்டால் மீட்சி அளிக்கவும் தயாராகவே உள்ளனர்..!

இதற்காக பல மையங்களில் உள நல உடல நல ஆலோசனைகளும்.. அடிப்படை பாலியல் கல்வியும் அளிக்கப்படுகின்றன.மேற்கு நாடுகளில் கூட விபச்சாரிகளை நாடிச் செல்வது கெளரவப் பிரச்சனையாக உடல் நலம் சார்ந்த பிரச்சனையாக நோக்கப்படுகிறது. ஒரு தலைவர் விபச்சாரியிடம் போனவர் என்று இனங்காணப்பட்டாலே அவர் மீதான மதிப்பை மக்கள் இழக்கச் செய்கின்றனர். அந்தளவுக்கு விபச்சாரம் எல்லா மக்களாலும் அங்கீகரிக்கப்படக் கூடிய சமூக நடவடிக்கையாக இல்லை. அது சமூகத்தை சீரழிக்கக் கூடிய ஒன்றாகவே பல தரப்பு மக்களாலும் பால்வினை நோய் சார்ந்தும் நோக்கப்படுகிறது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா போல ஒரு வல்லரசு இருந்தது: அதன் பெயர் ரோமாபுரி. கல்வி கட்டிடக் கலை என்று எல்லாவற்றையும் வளர்த்த ரோமாபுரி தேய்ந்தழிந்து போக முக்கிய காரணம் அவர்கள் அனுபவித்த பாலியல் கேளிக்கைகள். பாலியல் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதைக் குறித்தே எல்லாம் என்று தலையில் தூக்கி வைத்தாடும் போது மனித வளர்ச்சி அப்படியே நின்று விடும்-இது என் கருத்து. எதற்கெடுத்தாலும் "மேற்கு நாடுகளில் இது நல்லாயிருக்கு" என்று உதாரணம் காட்டும் எங்கள் முற்போக்காளர்கள், மேற்கு நாடுகள் இப்போது தூக்கியெறியத் துடிக்கும் குப்பைகளையே உதாரணமாகக் காட்டுவது வேடிக்கை. மேற்கு நாட்டுக் காரன் வேலை செய்து கொண்டு படிக்கிறான், 14 வயதிலேயே வாகனம் ஒடுகிறான், தனக்குப் பிடித்த துறையில் மேலே வர சில சமயம் பள்ளியிலிருந்து விலகி தன் வீட்டுக் கராஜில் வேலைத் தளம் அமைத்து வேலை செய்கிறான், இப்படி நூறு விஷயங்களை மேற்கு நாட்டவனிடமிருந்து கற்றுக் கொள்ள முடியும். இந்தப் பாழாய்ப்போன பாலியல் சுதந்திர வேட்கை தான் எங்கள் ஊனக் கண்ணுக்குத் தெரியுது. சுகன் ஒரு தடவை சொன்னது போல "எங்களுக்கு எல்லாமே கவட்டுக்குள் இருந்து தான் ஆரம்பிக்குது'!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தலைவர் விபச்சாரியிடம் போனவர் என்று இனங்காணப்பட்டாலே அவர் மீதான மதிப்பை மக்கள் இழக்கச் செய்கின்றனர்.

கள்ள மட்டை போட்டு, வரி கட்டாமல் பெரும் பணக்காரர்களாக இருக்கும் நம்மவர்களில் சிலரை வியந்து பார்த்து தலையில் தூக்கி வைத்திருக்கும் நமது தமிழ்மக்கள், விபச்சாரிகளிடம் போவோர்களையும் ஆண் சிங்கங்கள் என்று பெருமை பேசக்கூடும்! :icon_mrgreen:

அதற்கான முயற்சிகள் தான் யாழில ஈடேறிக் கொண்டிருக்கிறது. இன்றல்ல.. இது பல காலமா நடக்கிற ஒன்று தான்.

விபச்சாரிகளிடம் போகும் தங்கள் பிள்ளைகளைப் பற்றி தாய் மாரோ.. அவன் ஆம்பிள.. சேறு கண்ட இடத்தில.. மிதிச்சு.. தண்ணி காணுற இடத்தில கழுவிட்டுப் போற பரம்பரை என்று சொல்லி.. உசுப்பேத்தி உசுப்பேத்தியே.. பொலி காளைகளா.. ஊர் மேய விடுவினம். அப்புறம் என்ன.. அது ஊரெல்லாம் மேஞ்சு.. ஏதேனும் அவிஞ்சு கடைசில ஆஸ்பத்திரி வழிய கிடக்கும்..!

அப்புறம் தான் பெருமை பேசிய அம்மாக்காரி.. ஆஸ்பத்திரியும் வீடுமா அலையேக்க.. ஊருக்கு உண்மை அம்பலமாகும். அதுக்கு அப்புறம்.. முந்தாணையை தூக்கி மொக்காடா போட்டிட்டு முகத்தை மறைச்சுக்கிட்டு திரிய வேண்டியான். அந்தப் பரம்பரையில வந்ததுகள்.. இப்ப என்றால் கறுப்புக் கண்ணாடியை தலையிலும் காரிலும் மாட்டிட்டு போகினம். அதுதான் வித்தியாசம். இப்படி கொழும்பிலும் முஸ்லீம்கள் சிலர் செய்ய கண்டிருக்கிறன். அப்ப தான் எங்க பாட்டி சொன்னாங்க.. எங்கட சில ஆக்களின்ர அந்தக் காலத்துக் கூத்துகளை. :lol::D:icon_idea:

Cattle%20matting.jpg

பொலி காளைகளின் ஜொப் இதுதான்.. பெட்டை மாடு மேல ஏறி நின்று சவாரி விடுறது.

Edited by nedukkalapoovan

அதற்கான முயற்சிகள் தான் யாழில ஈடேறிக் கொண்டிருக்கிறது. இன்றல்ல.. இது பல காலமா நடக்கிற ஒன்று தான்.

விபச்சாரிகளிடம் போகும் தங்கள் பிள்ளைகளைப் பற்றி தாய் மாரோ.. அவன் ஆம்பிள.. சேறு கண்ட இடத்தில.. மிதிச்சு.. தண்ணி காணுற இடத்தில கழுவிட்டுப் போற பரம்பரை என்று சொல்லி.. உசுப்பேத்தி உசுப்பேத்தியே.. பொலி காளைகளா.. ஊர் மேய விடுவினம். அப்புறம் என்ன.. அது ஊரெல்லாம் மேஞ்சு.. ஏதேனும் அவிஞ்சு கடைசில ஆஸ்பத்திரி வழிய கிடக்கும்..!

அப்புறம் தான் பெருமை பேசிய அம்மாக்காரி.. ஆஸ்பத்திரியும் வீடுமா அலையேக்க.. ஊருக்கு உண்மை அம்பலமாகும். அதுக்கு அப்புறம்.. முந்தாணையை தூக்கி மொக்காடா போட்டிட்டு முகத்தை மறைச்சுக்கிட்டு திரிய வேண்டியான். அந்தப் பரம்பரையில வந்ததுகள்.. இப்ப என்றால் கறுப்புக் கண்ணாடியை தலையிலும் காரிலும் மாட்டிட்டு போகினம். அதுதான் வித்தியாசம். இப்படி கொழும்பிலும் முஸ்லீம்கள் செய்ய கண்டிருக்கிறன். அப்ப தான் எங்க பாட்டி சொன்னாங்க.. எங்கட ஆக்களின்ர அந்தக் காலத்துக் கூத்துகளை. :lol::D:icon_idea:

நான் சொல்லிய கருத்துக்கும் , நீங்கள் சொல்கின்ற கருத்துக்கும் என்ன வித்தியாசம் ? உள்ளுடன் ஒன்றுதானே . ஏன் எனது கருத்தை மட்டும் மாற்றச்சொல்லி ஒற்றைக்காலில் நிற்கின்றீர்கள் :( ?

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்லிய கருத்துக்கும் , நீங்கள் சொல்கின்ற கருத்துக்கும் என்ன வித்தியாசம் ? உள்ளுடன் ஒன்றுதானே . ஏன் எனது கருத்தை மட்டும் மாற்றச்சொல்லி ஒற்றைக்காலில் நிற்கின்றீர்கள் :( ?

நான் உங்கள் கருத்தை மாற்றச் சொல்லி எங்க கேட்டன். நான் நீங்கள் புலம்பெயர் நாடுகளில் உள்ளவங்க எல்லாருமே.. விபச்சாரிகளிடம் ஏதோ ஒரு கட்டத்தில் போனவங்க என்ற தொனியில் எழுதியதற்கே எனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளேன். அப்படி எல்லோரும் போவதில்லை. அப்படிப் போகாத நன்னடத்தை உள்ளவர்களில் பலரை நான் கண்டிருக்கிறேன். அது தமிழர்கள்.. வெள்ளையர்கள்.. கறுப்பர்கள்.. என்று எல்லா இனத்திலும் அடங்கும்..!

நீங்கள் ஜாஸ்ரின் உங்கள் கருத்தை அகற்றக் கேட்டதை நான் கேட்டதாகக் கருதி இக்கருத்தை எழுதி இருக்கீங்க என்று நினைக்கிறேன். :):icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.