Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். வருகிறார் அப்துல்கலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வருகிறார் அப்துல்கலாம்

abdul.gif

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் யாழ்ப்பாணம் வரவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தூதரகம் மேற் கொண்டுள்ளது.

ஜனவரி 22 அல்லது 23 ஆம் திகதியில் யாழ்ப்பாணம் வரும் கலாம் யாழ். பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். பின்னர் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் வருகைதரவுள்ள அவர், அங்கும் மாணவர்களைச் சந்தித்துப் பேசுவார்.

கலாம் யாழ்ப்பாணம் வருவதை உறுதி செய்தது இந்தியத் தூதரகம். அவரது வருகையின் போதான நிகழ்ச்சி நிரலில் யாழ்ப்பாணத்தில் இந்த மூன்று விடயங்களுமே இப்போதைக்குத் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தது.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=29350727431116465

  • Replies 72
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
249px-Black_flag_waving.svg.png

அங்கு அனைத்தையும் இழந்து தவிக்கும் எமது மக்களின் ஆறுதலுக்கு இப்படியானவர்களை போக அனுமதியுங்கள்.அங்கிருக்கும் சிறுவர்கள் மனதில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் எம்மாலும் முடியும் என்ற நம்பிக்கையும் வளர வேண்டும் .

இப்போது வருவதை விட இன்னமும் அதிக புள்ளிகள் பெற்று அவர்கள் இலங்கையில் தமிழனின் பெருமையை உலகிற்கு சொல்ல வேண்டும் .

எமக்கு தேவைப்படும் அரசியல் தீர்விற்காக உலகத்திற்கு காட்ட,அல்லது இங்கு எமது தலைப்பு செய்திகளில் போட அவர்களை இராணுவம் அடிக்கவும், கொல்லவும்,பாலியல் கொடுமைகள செய்யவும் இங்கிருந்து நேர வேண்டாம்.

அங்கிருப்பவர்களினது அழிவில் தான் இங்கிருப்பவர்களின் அரசியல் நடக்கின்றது.

அதைத்தான் காலை எழும்பி முதல் வேலையாக எதிர்பார்கின்றார்கள்.அதன் ஒரு அங்கமே பிரேதத்துடன் போன பதினோரு பேரை காணவில்லை என்ற செய்தி.

பறை மேளம் அடிக்க பார்திருப்பதுதான் இப்போ புலம் பெயர்ந்தவனின் வேலையாகிவிட்டது .

முதலில் இந்திய அரசின் உதவியுடன் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு நீதி தேடித்தருவாரா இந்த அப்துல் கலாம் என்று பாருங்கள். ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த இருப்பையே அழித்தொழித்துவிட்டு இப்போது உல்லாசப் பயணம் வருகிறார்கள் இந்தக் கயவர்கள். முடிந்தால் அப்துல் கலாம் தனது சொந்த விருப்பில் வரட்டும், அப்போது ஏற்றுக்கொள்கிறோம், மாறாக இந்திய உளவுத்துறையின் நாடகத்தில் பாத்திரமேற்க வந்தால் நாயை ஒதுக்குவதே சரி.

உங்களைப் பொறுத்தவரை ஈழத்தில் தேனும் பாலும்தான் இப்போது ஓடுகிறது. ஆகவே அப்துல் கலாம் போன்றவர்கள் அங்கே சென்றவுடன் உடனேயே இளைஞர்களெல்லாம் விஞ்ஞானிகளாக மாறிவிடுவார்கள், அப்படித்தானே??

இவரது வருகையை ஒழுங்கு செய்தது இந்திய வெளியுறவுத்துறை. தமிழரைப் பொறுத்தவரைக்கும் இந்திய உளவுத்துறைக்கும் இலங்கை உளவுத்துறைக்கும் இடையே வேறுபாடு கிடையாது. இருவரினது செயற்பாடும் ஒன்றுதான், அதாவது இலங்கையில் தமிழனின் இருப்பை இல்லாதொழித்து அடிமைப்படுத்துவது. அதன் ஒரு படிதான் இங்கே தேனும் பாலும் ஓடுகிறதென்று காட்டுவதன் மூலம் சர்வதேசத்தில் முள்ளிவாய்க்கால்ப் படுகொலையை கொஞ்சம் கொஞ்சமாக மறைத்து இறுதியில் தடயமே இல்லாமல் அழித்து விடுவது. முள்ளிவாய்க்கால்ப் படுகொலையின் பின்னரான இந்திய வெளியுறவுத்துறையின் அனைத்து நகர்வுகளும் இதனையே கட்டியம் கூறுகின்றன. ஐ. நா மனிதவுரிமைக் கவுன்சில்க் கூட்டத்தொடர்கள் முதல் அண்மையில் அவுஸ்த்திரேலியாவில் முடிவடைந்த பொதுநலவாய நாடுகளின் கூட்டத் தொடர் வரை இந்தியா நடந்துகொண்டவிதம் மிகவும் வெளிச்சமானது, அதாவது போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து இலங்கையைக் காப்பாற்ற தன்னால் முடிந்த னைத்தையுமே அது செய்யும். சில தினங்களுக்கு முன்னர் கூட இலங்கை அரசால் வெளிவிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு இந்திய அரசு கூறியுள்ள கருத்தையும் அதனை இலங்கை அரசு ஏற்றுக்கொண்ட விதத்தையும் பாருங்கள், உண்மை புரியும். அமெரிக்க, பிரித்தானிய அறிக்கைகளை உடனடியாகவே விமர்சித்து ஒதுக்கித்தள்ளிய இலங்கை அரசு இந்திய ஆலோசனைகளை மட்டும் வரவேற்றது ஏன்?

ஆக இந்திய வெளியுறவுத்துறை ஒழுங்கு செய்த இன்னொரு கண்துடைப்பு நாடகத்தை வரவேற்கிறீர்கள், நல்லது இதேபோல், முன்னால் வெளியுறவுச் செயல்ர் சரண், நிருபமா ராவ் போன்ற இந்திய அதிகாரிகளின் பயணங்கள் கூட இந்திய வெளியுறவுத்துறையினரால்த்தானே ஒழுங்கு செய்யப்பட்டன?? அவர்களால் எம்மக்களுக்கோ அல்லது மாணவடர்களுக்கோ கிடைத்த ஒரு நண்மையைச் சொல்ல முடியுமா உங்களால்?? அப்துல் கலாமின் விஜயத்திற்கும், சரண், நிருபமா போன்றோரின் விஜயத்திற்கும் இடையே வித்தியாசம் உங்களுக்குத் தெரிந்தது எப்படி??

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96234

தாயகத் தமிழனின் துயரத்தில் குளிர்காய்கிறான் புலம் பெயர் தமிழன் என்று சகட்டுமேனிக்குச் சொல்லும் நீங்களெல்லாம், அதே தாயகத் தமிழனுக்கு நடந்த படுகொலைகளையும் அக்கிரமங்களையும் மறைக்கத் துணை போகிறீர்கள் என்பதுதான் உண்மை.

இதெல்லாம், தனது சொந்த நாட்டு மக்களின் விடுதலையில் அக்கறை கொள்ளாமல் இன்னொரு நாட்டின் உளவுத்துறைக்கு விலை போய், மூன்றாவது நாட்டின் ஆட்சியைப் பிடிக்க கூலிப்படைகளாய் மாறிய உம் போன்றவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் காலை எழும்பி முதல் வேலையாக எதிர்பார்கின்றார்கள்.அதன் ஒரு அங்கமே பிரேதத்துடன் போன பதினோரு பேரை காணவில்லை என்ற செய்தி.

பறை மேளம் அடிக்க பார்திருப்பதுதான் இப்போ புலம் பெயர்ந்தவனின் வேலையாகிவிட்டது .

முன்னாள் இந்திய தமிழ் ஜனாதிபதி அப்துல் கலாம் தான் நினைத்த போது.... வட பகுதிக்கு வர, எமக்கு காந்தீய வழியில் கறுப்புக் கொடி காட்டும் உரிமை உள்ளது. திருக்குறளை கரைத்துப் படித்த, இந்திய தமிழ் விஞ்ஞானி அப்துல்கலாம் ஜனாதிபதியாய் இருக்கும் போது... தெரியாத... யாழ்ப்பாணம். இப்ப.. தெரியுதோ...?

தமிழக உறவுகள் கூடாங்குளம் அணு மின் உலை எதிர்ப்புப் போராட்டத்தின் போதும் இந்த இந்திய தேசிய முகவர் தான் அனுப்பி வைக்கப்பட்டார்.அவரின் முகமூடி தமிழ் நாட்டு மக்களிடம் கிழிந்து பல காலாம்.யாழ்ப்பாணம் வரும் இவருக்கு அதே வகையான வரவேற்ப்பைக் கொடுத்து தமிழர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மிடம் இப்போ உள்ள, ஒரே... ஆயுதம். கறுப்புக் கொடி மட்டும் தான்.

Gaucho_hat.gifயாழில் இதை யாராவது பரிசளித்து விடுங்கள், இவருக்கு!

அங்கு அனைத்தையும் இழந்து தவிக்கும் எமது மக்களின் ஆறுதலுக்கு இப்படியானவர்களை போக அனுமதியுங்கள்.அங்கிருக்கும் சிறுவர்கள் மனதில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் எம்மாலும் முடியும் என்ற நம்பிக்கையும் வளர வேண்டும் .

.

ஆமா......அர்ஜுன் அண்ணா சொன்னதுபோல் , அனைத்தையும் இழந்து தவிக்குற எம் மக்களுக்கு ஆறுதல் சொல்ல ......

நாங்க அனைத்தையும் இழக்க காரணமே இல்லாத... இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதிய உள்ள வரவிடுங்க! அன்ட்.......

அங்குள்ள சிறுவர்கள் சாதிக்க இனிமே ,, அர்ஜுன் அண்ணா சிபாரிசு பண்ணுற பேர்வழி வந்துதான்....

அட்வைஸு பண்ணணும்!

ஏனுங்க அர்ஜுன் அண்ணா உங்க மனசு முழுக்க ,,, ஏன் இப்ப்டி கெட்ட சிந்தனை?

இவ்ளோ யுத்த சூழ்நிலையிலையும், யார் ஆதரவும் அட்வைஸ்ஸும் இல்லாமலே ...

எங்க தாயகம் கல்வில சாதிச்சது உங்க கண்ணுக்கே படுறதில்லையா?

இந்திய செய்திகள வாசிச்சுபுட்டு... அவங்க ஓவர் செண்டிமெண்ட் கருத்துக்கள்ல

வண்டி ஓட்டுறீங்களாக்கும்!

அர்ஜ்ன் அண்ணா ....... எங்க இன/சன தொகைக்கு ....& எமக்கு உள்ள டிப்பிறஷன்க்கு இடைலயிலயும்.........

ஊர்ல இருக்குற எங்க மாணவர்கள் ,,, ஓ/லெவல்..ஏ/லெவல் ல எடுக்குற ரிசல்ட் இருக்கே ... ஒப்பீட்டளவில... அப்துல்கலாம் எந்த பிரச்சினையும் இல்லாத இந்தியாவில இருந்து அட்வஸ் பண்ண்யும் ,, அவங்க ஊர் மாணவர்கள் நெனைச்சுகூட பார்க்கமுடியாத விகிதம்!

தாயக கல்வியில் உள்ள மிகபெரிய குறைபாடே ,,,, காலம் காலமா சில லூசுகள்,, சொல்றமாதிரி தமிழ் தமிழ்னு மட்டும் வாழ்ந்ததனால.....!!

ஆங்கிலத்தை மட்டும் எழுத பேச சரியா தமிழீழ குழந்தைகள் எல்லாருமே முறையா தெரிஞ்சு வைச்சிருந்தா,, இன்னிக்கு கதையே வேற !!

  • கருத்துக்கள உறவுகள்

அப்துல் கலாம் வருகையை ஏற்பாடு செய்யும் இந்திய வெளியுறவுத்துறை இந்தியக் கொள்கை வகுப்பாளர்களினதும் இலங்கையரசின் அனுசரணையுடனும்தான் செய்கின்றது. எனவே பிரமாண்டமான வரவேற்பை அளிக்க யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மக்களை கட்டாயம் தயார்படுத்துவார்கள்.

புலம்பெயர் தமிழர்களுக்கும் தாயகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கும் பிளவை ஏற்படுத்த இப்படியான வருகைகள் கட்டாயம் உதவும். அதைத் தடுக்கமுடியாத புலம்பெயர் தமிழர்கள் அமைப்புக்கள் கையாலாக நிலையில் இருப்பதனால்தான், அப்துல் கலாம் மீது வீண் அவதூறுகளைக் கொண்டவேண்டி வருகின்றது. இவை கூட நமது தோல்வியடைந்த மனப்பான்மையால்தான் வருகின்றது..

எனவே அவதூறுகளைத் தவிர்த்து நாகரிகமான முறையில் எதிர்ப்புக்குரல்களை வெளிப்படுத்தவேண்டும். முடிந்தால் தாயகத்தில் உள்ள தமிழர்களைக் கொண்டு ஒரு சில கறுப்புக்கொடிகளைக் காட்டினால்கூட அது அரசியல்ரீதியான வெற்றியே.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்திய அரசின் உதவியுடன் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு நீதி தேடித்தருவாரா இந்த அப்துல் கலாம் என்று பாருங்கள். ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த இருப்பையே அழித்தொழித்துவிட்டு இப்போது உல்லாசப் பயணம் வருகிறார்கள் இந்தக் கயவர்கள். முடிந்தால் அப்துல் கலாம் தனது சொந்த விருப்பில் வரட்டும், அப்போது ஏற்றுக்கொள்கிறோம், மாறாக இந்திய உளவுத்துறையின் நாடகத்தில் பாத்திரமேற்க வந்தால் நாயை ஒதுக்குவதே சரி.

உங்களைப் பொறுத்தவரை ஈழத்தில் தேனும் பாலும்தான் இப்போது ஓடுகிறது. ஆகவே அப்துல் கலாம் போன்றவர்கள் அங்கே சென்றவுடன் உடனேயே இளைஞர்களெல்லாம் விஞ்ஞானிகளாக மாறிவிடுவார்கள், அப்படித்தானே??

இவரது வருகையை ஒழுங்கு செய்தது இந்திய வெளியுறவுத்துறை. தமிழரைப் பொறுத்தவரைக்கும் இந்திய உளவுத்துறைக்கும் இலங்கை உளவுத்துறைக்கும் இடையே வேறுபாடு கிடையாது. இருவரினது செயற்பாடும் ஒன்றுதான், அதாவது இலங்கையில் தமிழனின் இருப்பை இல்லாதொழித்து அடிமைப்படுத்துவது. அதன் ஒரு படிதான் இங்கே தேனும் பாலும் ஓடுகிறதென்று காட்டுவதன் மூலம் சர்வதேசத்தில் முள்ளிவாய்க்கால்ப் படுகொலையை கொஞ்சம் கொஞ்சமாக மறைத்து இறுதியில் தடயமே இல்லாமல் அழித்து விடுவது. முள்ளிவாய்க்கால்ப் படுகொலையின் பின்னரான இந்திய வெளியுறவுத்துறையின் அனைத்து நகர்வுகளும் இதனையே கட்டியம் கூறுகின்றன. ஐ. நா மனிதவுரிமைக் கவுன்சில்க் கூட்டத்தொடர்கள் முதல் அண்மையில் அவுஸ்த்திரேலியாவில் முடிவடைந்த பொதுநலவாய நாடுகளின் கூட்டத் தொடர் வரை இந்தியா நடந்துகொண்டவிதம் மிகவும் வெளிச்சமானது, அதாவது போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து இலங்கையைக் காப்பாற்ற தன்னால் முடிந்த னைத்தையுமே அது செய்யும். சில தினங்களுக்கு முன்னர் கூட இலங்கை அரசால் வெளிவிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு இந்திய அரசு கூறியுள்ள கருத்தையும் அதனை இலங்கை அரசு ஏற்றுக்கொண்ட விதத்தையும் பாருங்கள், உண்மை புரியும். அமெரிக்க, பிரித்தானிய அறிக்கைகளை உடனடியாகவே விமர்சித்து ஒதுக்கித்தள்ளிய இலங்கை அரசு இந்திய ஆலோசனைகளை மட்டும் வரவேற்றது ஏன்?

ஆக இந்திய வெளியுறவுத்துறை ஒழுங்கு செய்த இன்னொரு கண்துடைப்பு நாடகத்தை வரவேற்கிறீர்கள், நல்லது இதேபோல், முன்னால் வெளியுறவுச் செயல்ர் சரண், நிருபமா ராவ் போன்ற இந்திய அதிகாரிகளின் பயணங்கள் கூட இந்திய வெளியுறவுத்துறையினரால்த்தானே ஒழுங்கு செய்யப்பட்டன?? அவர்களால் எம்மக்களுக்கோ அல்லது மாணவடர்களுக்கோ கிடைத்த ஒரு நண்மையைச் சொல்ல முடியுமா உங்களால்?? அப்துல் கலாமின் விஜயத்திற்கும், சரண், நிருபமா போன்றோரின் விஜயத்திற்கும் இடையே வித்தியாசம் உங்களுக்குத் தெரிந்தது எப்படி??

http://www.yarl.com/...showtopic=96234

தாயகத் தமிழனின் துயரத்தில் குளிர்காய்கிறான் புலம் பெயர் தமிழன் என்று சகட்டுமேனிக்குச் சொல்லும் நீங்களெல்லாம், அதே தாயகத் தமிழனுக்கு நடந்த படுகொலைகளையும் அக்கிரமங்களையும் மறைக்கத் துணை போகிறீர்கள் என்பதுதான் உண்மை.

இதெல்லாம், தனது சொந்த நாட்டு மக்களின் விடுதலையில் அக்கறை கொள்ளாமல் இன்னொரு நாட்டின் உளவுத்துறைக்கு விலை போய், மூன்றாவது நாட்டின் ஆட்சியைப் பிடிக்க கூலிப்படைகளாய் மாறிய உம் போன்றவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை.

ரகுநாதனின் நல்ல கருத்துக்கு பாராட்டுக்களும், பச்சைப் புள்ளியும். :):rolleyes:

நாங்களெல்லாம் நாட்டைவிட்டு ஓடிவந்து இங்கே போத்திபடுத்துக்கிடக்க உங்களுக்கு யாரும் விடுதலை எடுத்து தரவேண்டும். அப்துல் கலாம் யார் உங்களுக்கு மாமனா ? சித்தப்பனா ?

தம்பிமாரே இனி நடப்பதை பார்த்துக்கொண்டு இன்னொரு அடுக்கு போர்வை இருந்தால் எடுத்து போருங்கோ,அதுதான் உங்களால் இனி முடியும்.

வாயை திறக்க வேண்டிய நேரத்தில் முடியிருந்ததற்கான தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்.

அப்துல் கலாம் வருகையை ஏற்பாடு செய்யும் இந்திய வெளியுறவுத்துறை இந்தியக் கொள்கை வகுப்பாளர்களினதும் இலங்கையரசின் அனுசரணையுடனும்தான் செய்கின்றது. எனவே பிரமாண்டமான வரவேற்பை அளிக்க யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மக்களை கட்டாயம் தயார்படுத்துவார்கள்.

புலம்பெயர் தமிழர்களுக்கும் தாயகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கும் பிளவை ஏற்படுத்த இப்படியான வருகைகள் கட்டாயம் உதவும். அதைத் தடுக்கமுடியாத புலம்பெயர் தமிழர்கள் அமைப்புக்கள் கையாலாக நிலையில் இருப்பதனால்தான், அப்துல் கலாம் மீது வீண் அவதூறுகளைக் கொண்டவேண்டி வருகின்றது. இவை கூட நமது தோல்வியடைந்த மனப்பான்மையால்தான் வருகின்றது..

எனவே அவதூறுகளைத் தவிர்த்து நாகரிகமான முறையில் எதிர்ப்புக்குரல்களை வெளிப்படுத்தவேண்டும். முடிந்தால் தாயகத்தில் உள்ள தமிழர்களைக் கொண்டு ஒரு சில கறுப்புக்கொடிகளைக் காட்டினால்கூட அது அரசியல்ரீதியான வெற்றியே.

யதாரத்த்தமான கருத்து.

அப்துல் கலாம் ஒரு இந்தியத் தேசியவாதி. இந்திய ஆழும் வர்க்க நலன்கள் என்ற வட்டத்துக்குள் எப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இப்போது அவர் வருகையும் இந்திய ஆழும் வர்க்க நலன்கள் சார்ந்ததே தவிர ஈழத்தமிழர் மீதான கரிசனை என்ற பேச்சுக்கே இடமில்லை. இது வெளிப்படையான உண்மை. இருந்தும் இவர் வருகையை ஈழத்தமிழர் தமது நலன்களுக்காக பாவிக்க வேண்டுமாயின் இவர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை தவிர வேறு வழியில்லை. ஆனால் சிங்களத்தின் அடக்குமுறைக்குள் இருக்கும் மக்களை பார்வையிட சிங்களத்தின் கூட்டாளி வருகின்றார். ராஜபக்சவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் எவ்வகையான அச்சம் மக்களிடம் இருக்கின்றதோ அவ்வகையான அச்சமே இவர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதிலும் இருக்கின்றது. ஆகையால் அவர் வருகை ஒரு வெற்றிகரப் பயணமாக அவர்களுக்கு அமையவே அதிக வாய்ப்பு இருக்கின்றது.

புலம்பெயர் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையில் ஒருங்கிணைந்த செயற்பாடு கணிசமான அளவேனும் அரசியல் ரீதியாக இருந்தால் இந்த வருகையை ஓரளவு கையாளலாம். இவ்வாறான நிகழ்வுகள் சொல்லும் செய்தியானது புலம்பெயர் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் ஒரு அரசியல் ரீதியான இணைப்பும் செயற்பாடும் அவசியம் என்பதே.

தற்போதைக்கு இவர் வருகையை ஒட்டி சிங்களம் ஆக்கிரமித்த மக்களை சிங்களத்தின் தோழில் கைபோட்டபடி அப்துல் கலாம் பார்வையிடும் அடிப்படையில் கருத்தோவியங்கள் சித்திரங்கள் வரைந்து ஏலுமானவரை ஒரு பிரச்சார செய்தியை பரப்புவது புலம்பெயர் மக்களால் செய்யக் கூடிய ஒன்று.

அங்கு அனைத்தையும் இழந்து தவிக்கும் எமது மக்களின் ஆறுதலுக்கு இப்படியானவர்களை போக அனுமதியுங்கள்.அங்கிருக்கும் சிறுவர்கள் மனதில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் எம்மாலும் முடியும் என்ற நம்பிக்கையும் வளர வேண்டும் .

இப்போது வருவதை விட இன்னமும் அதிக புள்ளிகள் பெற்று அவர்கள் இலங்கையில் தமிழனின் பெருமையை உலகிற்கு சொல்ல வேண்டும் .

எமக்கு தேவைப்படும் அரசியல் தீர்விற்காக உலகத்திற்கு காட்ட,அல்லது இங்கு எமது தலைப்பு செய்திகளில் போட அவர்களை இராணுவம் அடிக்கவும், கொல்லவும்,பாலியல் கொடுமைகள செய்யவும் இங்கிருந்து நேர வேண்டாம்.

அங்கிருப்பவர்களினது அழிவில் தான் இங்கிருப்பவர்களின் அரசியல் நடக்கின்றது.

அதைத்தான் காலை எழும்பி முதல் வேலையாக எதிர்பார்கின்றார்கள்.அதன் ஒரு அங்கமே பிரேதத்துடன் போன பதினோரு பேரை காணவில்லை என்ற செய்தி.

பறமூகமேளம் அடிக்க பார்திருப்பதுதான் இப்போ புலம் பெயர்ந்தவனின் வேலையாகிவிட்டது .

நாங்கள் எழுதி பொழுது போக்கிறம் நீர் ஏன் இதுக்க மூக்கை நீட்டுகிறீர். உம்ம ஊர் தான் சுதந்திரமா இருக்கு, ராஜபக்ச உங்க போன்ற ஆட்களை வரட்டாம்,அங்க போய் வயலை கொத்தி உழுது நாலு பேருக்கு சாப்பாட்டு போடும்

ஆனைக்கும் என்றோ அடி சறுக்கும்.

ஏழை இந்திய மக்கள் பலன் பெறுவார்கள் என்ற நம்பிக்கைவைத்து என் உடல் ஆவி பொருள் யாவும் உனக்கே அர்ப்பணம் என்று வாழ்நாளின் பெரும் பகுதியை அந்த மக்களின் நலன் கருதி உழைத்தவர்தான் அப்துல் கலாம். இந்த அறிவுப்பெருங்கடலை போற்றி 30 பல்கலைகழகங்கள் கலாநிதிப்பட்டங்கள் கொடுத்திருப்பதாக கேள்விப் படுகிறேன். எந்த கட்சியும் சாரா உழைப்பை கண்ட ஊழல் நிறைந்த காங்கிரசே இவரை ராஷ்டிரபதியாக்கியது (குடியரசுத்தலைவர்). குழம்பிப்போன சடையுடனும், சாமனிய உடையுடனும் 30 பி.எச்.டிகளுடனும் ராஷ்டிரபவானுக்கு சென்ற கலாம் தனது கன்னி உரையை "எந்தரோ மாகானு பவலு "என்றுதான் ஆரம்பித்தார். இது வரைக்கும் அநாதை சிறுவன் அப்துல் கலாம் ஆபிரகாம் லிங்கனை விட உயர்ந்த சரித்திரம் படைத்திருந்தார். ராஷ்டிரபதியான கலாம், அன்றே, இன்று வெளியே இருந்து போராடும் அன்னா கசாரை விட தனக்கு பதவி கொடுத்த கங்கிரசுடன் உள்ளே இருந்து அதன் அரசை எதிர்த்துப் போராடியிருந்தார்.

ஆனால் இந்த யானைக்கு எந்த வயலின் அறுகு சறுக்கியதோ தெரியாது. இன்று இவர் காங்கியசுக்கு போடும் தாளம் கனிமொழி, கருணாநிதி போட்ட தாளத்தையும் விட பலமாக கேட்பது இவர் என்ன சங்கடத்தில் மாட்டிவிட்டர் என்று எண்ண தோன்றுகிறது .

இலங்கைக்கு ஏன் வருகிறார் என்பது தெரியாது ஆனால் உண்மையில் இவர் போகவேண்டிய இடம் சோனியாவின் வீடு. எடுக்க வேண்டிய உசாத்துணை ஹெட்லன்ஸ் ருடே வெளிவிட்ட 2 மணித்தியால அறிக்கை. இவர் அதைச்செய்தாராயின் இன்று இவர் வரும்போது காறி உமிழ்ந்துவிட்டுப் போக தாயாராக இருக்கும் தமிழ்ச்சனம் இவரை தான் தேடிச்சென்று காலில் பூ போட்டு விழுந்து கும்பிடும்.

பட்டங்களுக்கு மேல் கலாநிதி பட்டம் எடுத்திருக்கும் அப்துல் கலாம் இந்த சின்ன வேண்டுகோளை விளங்கிக் கொள்வாரா?

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்துல் கலாம் என்ற ஒரு விளம்பர பிரியர்

Share48

சமீபத்தில் தோழர் அருள் எழில் தன்னுடைய முக நூலில் அப்துல் கலாமை கோமாளி என்று விமர்சித்ததற்காக அவர் மீது இந்திய காதலர்கள் பாய்ந்து பிராண்டி இருந்தார்கள், அதை ஒட்டி என்னுள் எழுந்த ... அப்படி என்ன அப்துல் கலாம் சாதித்து விட்டார் என்ற கேள்வியும், அவருடைய முகமூடியையும் கழட்டி உள்ள என்ன தான் இருக்கு என்று மற்றவர்களுக்கு காட்டி விட வேண்டும் என்ற எண்ண ஓட்டமுமே நான் இந்த கட்டுரைய எழுதுவதற்கு காரணமாக அமைந்து விட்டது.

பெரும்பாலான இந்திய அடிமைகளுக்கும், பொது புத்திகளுக்கும் அப்துல் கலாம் என்ற பெயரை உச்சரித்த உடனே கும்பி கும்மி அடிக்க ஆரம்பித்து விடுகிறது . அப்துல் கலாம் என்ற ஒரு பிம்பமே அவர் வேலை செய்த பாதுகாப்பு துறையில் ஊழல் செய்வதில் உலக சாதனை புரிந்து கொண்டிருக்கும் பார்ப்பனிய அம்பிகளால் உருவாக்கப்பட்ட ஒன்றே. ஆரம்ப காலத்தில் இருந்தே அப்துல் கலாம் தன்னை பார்ப்பனியத்தொடு அடையாளப்படுத்தி கொள்ளுவதில் சுய இன்பம் கண்டவர் என்பது அவரை உற்று கவனித்து இருப்பவர்களுக்கு நன்கு புலப்படும் . அந்த பார்ப்பனிய காதல் தான் சாதாரண தொழில் நுட்ப வல்லுனரை இந்திய பாதுகாப்பு துறையின் ஆலோசகர் என்ற உயரத்திற்கும், இந்தியாவின் உயர்ந்த அலங்கார பதவியான குடியரசு தலைவர் பதவிக்கும் இட்டு சென்றது.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சாமியார் மடத்தில் பஜனை பாடுவது போல் அறிவுரை எடுக்கும் இந்த ஆத்மாவின் காலத்தில் அவரது தலைமையின் கீழ் இருந்த பாதுகாப்பு துறையில் பார்ப்பனிய அம்பிகள் ஊழலில் புகுந்து விளையாடினார்கள், இன்றளவிலும் விளையாடி கொண்டு இருக்கிறார்கள் என்பது அவருக்கு தெரிந்தும் அதை பற்றி கண்டு கொள்ளாமல் உடம்பில் உள்ள அத்துணை ஓட்டைகளையும் பொத்தி கொண்டு இருப்பது ஏனோ. பார்ப்பனிய அம்பிகள் கோலேச்சும் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளையும் அது சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களையும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று இந்த உத்தமர் குரல் கொடுக்க வேண்டியது தானே அங்க தான் சூட்சுமம் இருக்கிறது அப்துல் கலாம் தன்னை பிரதிநிதப்படுத்துவதற்கு யாருடைய காலையும் கழுவுவதற்கு தயங்க மாட்டார். அப்படி இருக்கையில் அவர் பார்ப்பனிய அம்பிகளின் பகையை எக்காலத்திலும் சம்பாதிக்க விரும்ப மாட்டார்.

apthul.jpg From 23 October 2011

கல்வியில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்ற சமூக நீதியை ஒழித்து விட்டு எல்லாரும் மறுபடியும் கனவு காணவேண்டும் என்று கூவினதாலேயே அரைமண்டையர்களின் கனவு கண்ணனாக வானளாவ புகழப்படுபவர் தான் அண்ணன் கலாம். கலாம் அண்ணாத்தேக்கு அடுத்த இந்திய மாமாவாக.. அது தான் நேருவாக.... ஆசையோ என்னவோ அவரு எங்கெல்லாம் பொடிசுகள் கூட்டம் காணப்படுகிறதோ அங்கெல்லாம் ஆஜராகி கனவு காண்பதை பற்றி வகுப்பெடுக்க ஆரம்பித்து விடுவார். உடனே யோவ்... அவரு ஒவ்வொரு குழைந்தைகளிடம் பேசி அவர்களை உற்சாகப்படுத்துவது தப்பா என்று சிலர் குரல் எழுப்புவது புரிகிறது. ஆனால் அவரு எந்த குழந்தைகளிடம் போய் வகுப்பெடுக்கிறார் என்று உற்று கவனித்தால் புரியும் அண்ணன் கலாமின் நோக்கம். பின்ன அண்ணன் எண்ண மாநகராட்சி பள்ளிகளில் போயா பாடம் எடுக்கிறார் ? சங்கர வித்தியாலயங்களிலும், கல்வி வியாபாரிகள் நடத்தும் கல்வி தொழிற் கூடங்களிலும் தானே போய் அவரது கனவுகளை கூவி கூவி வியாபாரம் செய்கிறார். அவனுங்க தானே அண்ணனின் விளம்பர மோகத்தை புரிந்து கொண்டு செயல்படுபவர்கள். மாநகராட்சி பள்ளி கூடத்திற்கு சென்று பாடம் எடுத்தால் எவன் கண்டுக்குவான். பூணூல் அணிந்து கொண்ட குழந்தைகளின் மீது அண்ணனுக்கு எப்பவுமே ஒரு தனி பாசம் தான்.

கல்வியில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது திறமையானவர்களுக்கு வாய்ப்புகளை மறுப்பது போன்ற செயல் என்று சொல்லும் மாமா கலாம், பிறப்பில் இருந்து இறக்கும் வரை மனிதர்களை சாதிவாரியாக பிரித்து சமூகத்தில் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கி மேலே உட்கார்ந்து கொண்டு பிறப்பின் பெயரால் சலுகைகளை அனுபவித்து கொண்டிருக்கும் அம்பிக்களை எதிர்த்து மட்டும் எதுவும் பேசிட மாட்டார். பின்னே.... அம்பியாண்டவர்கள் நடத்தும் ஊடகங்களில் தம்முடைய பெயரை இருட்டடிப்பு செய்து விட்டால் என்னாவது என்ற எண்ணம் விளம்பர பிரியரான மாமா கலாமிற்கு வராதா என்ன ? ....

என்னய்யா எளிமையாக வாழும் ஒருவரை போய் விளம்பர வெறியர் என்று சொல்லுகிறாயே என்றும் சிலர் கேட்கலாம் ? அப்படி பட்டவர்களுக்கு ஒரு கேள்வி. ஏன் மாமா கலாமை போல் எளிமையாக எந்த அறிவாளிகளும் வாழவில்லையா ? ...வாழ்கிறார்கள் ஆனால் அவர்கள் அவர்களுடைய எளிமையை வியாபாரமோ, விளம்பரமோ செய்வதில்லை. உதாரணத்திற்கு ஒடுக்கப்பட்ட இருளர் இன மக்களின் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பதற்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்து கொண்ட அய்யா கல்வி மணியை கூறுவேன். கல்வி மணி என்ன மாமா கலாமை போல் அறிவாளியா என்றும் சில அறிவொழிகள் கேட்கலாம் . ஏன் அணுகுண்டு வெடிக்கிறவனும், அணுகுண்டை வைத்து அனுப்பும் ஏவுகணையை நிர்மாணிப்பதில் ஈடுபடுபவனும் மட்டும் தான் அறிவாளியாக இருக்க முடியுமா , சமூகத்தை மேம்படுத்த உழைக்கும் சமூக விஞ்ஞானிகள் அறிவாளியாக இருக்க முடியாதா என்ன ?

அதுவும் இந்த வருமான வரியை ஒழுங்காக கட்டாத நடிக மா...மாக்களுக்கு ஊழலுக்கு எதிராக பேசும் மாமா கலாமின் மீது எப்போதுமே ஒரு தனி ஈடுபாடு உண்டு. பின்ன இருக்காதா மாமா ஊழலுக்கு எதிராக தானே பேசுவாரு வரிகட்டாம அரசாங்கத்தை ஏய்ப்பவனுங்களை பற்றி எல்லாம் பேசமாட்டாருல்லா. அப்படி பேசுனா அவனுங்க என்னைக்கே கலாம் மாமாவுக்கு கட்டம் கட்டி இருக்க மட்டானுங்களா. மாமாவுக்கும் நடிகனுங்கனா ஒரு தனி இது தான். அது தான் ஏன் என்று புரியலை. அதிலும் பெரிய கொடுமை என்னன்னா கோலிவுட்டில் பூனை கண்ணழகியை வைத்து வியாபாரம் செய்த விவேகம் கெட்ட மாமா பயலை தன்னால் பங்கு பெறமுடியாத இந்திய விஞ்ஞான கல்வி நிறுவன விழாவில் தனக்கு பதிலாக அனுப்பி பேச வைத்தது தான். சாதி கூட்டங்களில் கைதட்டுக்களை வாங்குவதற்காக பேசுகின்ற ஒருத்தனை சமூகத்தை கட்டமைக்க தயாராகி கொண்டிருக்கும் எதிர்கால சிற்பிகளுக்கு மத்தியில் உரையாற்ற அனுப்பி வைத்ததை என்னவென்று சொல்ல..... மாமா கலாமின் கண்களில் தகுதி வாய்ந்த வேறொருவர் படவில்லையா... இல்லை படங்களில் தன்னை சின்ன கலைவாணராக அடை மொழியை (கலைவாணர் மட்டும் இருந்திருந்தால் இந்த பயலை வாரியலாலேயே விளாசி இருப்பார்) தனக்கு தானே வைத்து கொண்டு நடிகைகளின் புரோக்கராக அலையும் மாமா பயலின் தகுதியே போதுமென்று கலாம் மா..மா.. நினைத்தாரோ என்னவோ அது அவருக்கே வெளிச்சம்.

இதெல்லாம் போதாதென்று கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்சினையில் நம்ம மாமா கலாம் என்ன சொல்கிறாரோ... அணுகுண்டை வெடிக்க வைத்தும் ஏவுகணையில் எப்படி அனுப்பலாம் என்றும் ஆராய்ச்சி செய்யும் மாமா என்ன சொல்லுவார் என்பது உலகம் அறிந்த விடயம் தானே..... அதை ஏற்று கொள்ள வேண்டும் என்று சேது பாலத்தின் ஒனரான ராமன் பெயரை கொண்ட மருத்துவர் ஒருவர் கலாமிற்கு வரிந்து கட்டி கொண்டு களத்தில் இறங்கியது அதை விட கொடுமை. வரிந்து கட்டியவரும் விவேகம் கெட்ட மாமாவும் சாதி கூட்டங்களில் சாதி வெறியை ஏற்றி கொண்டு அலைபவர்கள் என்பது மட்டுமின்றி இருவருக்கும் ஒரு விடயத்தில் நிறைய தொடர்பு உள்ளது. அது என்னன்னா பூனை கண்ணழகியை வைத்து மாமா பயல் வியாபாரம் பண்ணினான் என்றால் மருத்துவர் தன்னோட சாதிக்கட்சியின் மகளிர் அணியின் தலைவியாகவே ஆக்கி பெருமை(?) பட்டு கொண்டிருப்பவர். இப்படி பூனை கண்ணழகியை கஸ்டடியில் வைத்து கொண்டு அலைபவர்கள் கலாம் மாமாவிற்கு வரிந்து கட்டி கொண்டு இறங்கி இருப்பது பார்ப்பதற்கு எங்கேயோ இடிப்பது போல் உள்ளது . அதுசரி அவங்க எங்கே வைத்து இடித்தால் நமக்கு என்ன. அது அவங்களோட சொந்த விடயம்.

சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிராக தூக்கத்திலும் பேசும் இந்த அம்பிகளின் அபிமானி மக்களின் உயிர்கள் பற்றிய பாதுகாப்பை கேள்விக்குறிக்குள்ளாக்கும் அணுமின் நிலைய பிரச்சினையில் பத்து நாட்கள் கழித்து தன்னுடைய கருத்தை சொல்வேன் என்று அறிக்கை விட்டார். இவர் கடந்த காலத்தில் குடிமக்களின் தலைவராக அமர்த்தப்பட்டதை எண்ணினால் எங்கேயாவது போய் முட்டி கொள்ளலாம் என்று தான் தோன்றுகிறது. அதுசரி இவர் எப்படி குடியரசு தலைவரானார் என்று யாராவது கேட்கலாம். ஆளுகின்ற கட்சிகளின் அடிமைகளாய் செயல்பட்ட குடியரசு தலைவர்களுக்கு மத்தியில் தெளிந்த சுய அறிவோடு செயல்பட்ட முத்தான கே.ஆர். நாராயணன் மீண்டும் குடியரசு தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் எங்கே தங்களது தப்பு தாளங்களை தொடர முடியாமல் போய்விடுமோ என்று கட்சி சார்புகளுக்கு அப்பாற்பட்டு பார்ப்பனிய அம்பிகள் ஓன்று கூடி அந்த முத்தை வீழ்த்த சிறுபான்மை முகமூடி அணிவித்து அனுப்பப்பட்ட அம்பு தான் நம்ம கலாம் மாமா. கலாமிற்கு எதிராக நின்றால் அவர்களை சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்று முத்திரை குத்தி சிண்டு முடிந்து விடலாம் என்பதோடு குசராத்தில் இசுலாமியர்களுக்கு எதிரான வெறியாட்டத்தை உலக நாடுகளின் மத்தியில் மறைக்க கலாமை ஒரு போர்வையாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்ற ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கிற திட்டத்தின் ஒரு பகுதி தான் கலாம் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட அம்பிகள் அவர்களோட கும்பிகளை ஓரிடத்தில் வைத்து விடாமல் ஓடியாடி வேலை செய்தது.. அவர்கள் தங்களுடைய வேலையை எவ்வித தடங்கலும் இன்றி செய்து முடிக்க தேர்ந்தெடுத்த ஒரு ஆயுதம் தான் விளம்பர பிரியரான அப்துல் கலாம்.

குசராத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளை, அதனை கட்டவிழ்த்து விட்ட அயோக்கியர்களை சக இசுலாமியாராக (சந்தேகத்திர்க்குறிய விடயம் தான்) இல்லையென்றாலும் சக மனிதன் என்றளவிலாவது இன்றளவு கூட கண்டிக்க வக்கில்லாத ஒருத்தரை சிறுபான்மை மக்களின் பிரதிநிதியாக முன்னிறுத்திய கவாலித்தனம் அரைமண்டையன்களின் மண்டையில் முளைக்கும் விபரீதமான புத்திகளுக்கு மற்றுமோர் உதாரணம்.

சமூகத்தை பற்றி எந்தவித தெளிவும் இல்லாமல் ஆய்வகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரை கொண்டு வந்து சமூகத்தை வழி நடத்த சொன்னால் அவர் சமூகத்தை தனது ஆய்வு சாலையில் உள்ள சோதனை எலியாக தான் பார்ப்பார் என்பதற்கு கலாம் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. தங்களுடைய எளிமையை வைத்தே வியாபாரம் செய்பவர்களும் நம்மிடையே உண்டு என்பதை கலாம் நம்மிடையே இருப்பதை வைத்து தெரிந்து கொள்ளலாம். பதவிக்கு ஆசைப்படாதவரை போல் தன்னை காட்டி கொண்டு போட வேண்டியவர்களுக்கு எல்லாம் சால்ராவும் கூழை கும்பிடும் போட்டு ரெண்டாவது தடவையாக குடியரசு தலைவர் பதவியை அடைய அவர் பண்ணிய அலம்பல்கள் அவருடைய பதவி வெறியையும் அம்பலபடுத்தியது.

மொத்தத்தில் விளம்பரம் கிடைத்தால் சாதி, மதவெறியன்களோடு உறவாடுவது என்ன.... மனித மாமிசம் தின்பவர்களோடு கூட சாப்பாட்டு அறையை பகிர தயங்க மாட்டார் இந்த சைவ பிரியர். உள்ளதிலேயே பெரிய கொடுமை என்னன்னா அவரு சைவ சாப்பாடு சாப்பிட்டதால் நல்லவர் என்றும் எளிமையானவர் என்றும் விளம்பரம் கொடுத்தானுங்களே அந்த கொடுமை தான் தாங்க முடியாத கொடுமை.

http://meenavarthuyaram.blogspot.com/2011/10/blog-post_22.html

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதனின் நல்ல கருத்துக்கு பாராட்டுக்களும், பச்சைப் புள்ளியும். :):rolleyes:

:)

மன்னிப்பு கோர வேண்டும்... !

ஆமோதிப்பு?

நீதி தரவேண்டும்.. பதில் சொல்லவேண்டும்.. எண்டு அவர்களே விரும்பினாலும் தரமுடியாததை கேட்டு தமிழ்ப்பட ஸ்டைலில் உணர்ச்சிவசப்படுறத விட்டுவிட்டு.. தமிழீழத்தை சீரழித்ததுக்கு பொறுப்பேற்கவேண்டும்.. மக்கள் கொலைகளுக்கு மன்னிப்பு கேக்க வேண்டும் எண்டு போராட்டம் பிரச்சாரம் செய்யவேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

அப்துல் கலாமும், ரஹ்மானும்.... தொப்பி பிரட்டிகள் இல்லை, என்பதை நிரூபிக்க வேண்டும்.

Edited by தமிழ் சிறி

தேவையில்லாத துவேசம் தேவையில்லை... சக தமிழர்கள் எமக்கு செய்யாத அநியாயத்தையா முஸ்லீம்கள் செய்துவிட்டார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இதில் துவேசம் எங்கிருந்து வந்தது?

நல்ல முஸ்லீம் அரசியல்வாதியின் பெயர் தெரிந்தால்.... சொல்லுங்கள். பனங்காய்.

நான் எழுதிய கருத்தை, மீளப் பெறுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சக கவிஞரான தமிழ் விஞானி அப்துல்கலாம் அவர்களை யாழுக்கு வருக வருக என வரவேற்க்கிறேன். திரு அப்துல்கலாம் அவர்களது நிகழ்ச்சி நிரலில் யாழ் ஒஸ்மானியா கல்லூரியும் கைதடியில் உள்ள செவி விழிபுலனிழந்தவர்களது பாடசாலையும் சேர்கப் படவேண்டுமென்று இந்திய தூதரக அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன். வடகிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் ஏழைப்பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிர உங்கள் வரவு பயன்படும் என்கிற நம்பிக்கையுடன்

கவிஞன் கலைஞன் வ.ஐ.ச.ஜெயபாலன் visjayapalan@gmail.com

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு இந்தியா செய்த அட்டூழியத்தை மன்னிப்போம் மறக்கமாட்டோம் என்பதை எம்மவர்கள் உணர்த்த வேண்டும் இந்த முன்னால் இந்திய ஆளும்வர்க்க பிரதிநிதிக்கு......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.