Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

05.01.2008 அன்று சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ்(அருள்வேந்தன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் கேணல் சாள்ஸ் அவர்களுடன் லெப்டினன்ட் வீரமாறன், லெப்டினன்ட் காவலன் ஆகியோரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.

கேணல் சாள்ஸ் தொடர்பாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அவர் தெரிவித்தவை:

புலனாய்வுத்துறையின் தாங்கும் சக்தியாக ஒரு மாவீரனாக கேணல் சாள்சைப் பார்க்கின்றேன். போர்க் களங்களில் தன்னை ஆகுதியாக்க கேணல் சாள்ஸ் பல தடவை முன்னின்றுள்ளான்.

ஆனால் போர் களத்தின் வெளியே நின்று போர்க் களத்தின் அழுத்தத்தின் சக்தியாக நின்று, உழைத்து அந்த உழைப்பின் சக்தியாக நின்ற சாள்சை நினைவு கூரவேண்டும்.

சில நடவடிக்கைகள் கடினமான சூழலில், கால நிர்பந்த நிலையில், அந்த நடவடிக்கையின் இயங்கு சக்தியாக கேணல் சாள்ஸ் இருந்தான்.

பிறேமதாச காலத்தில் எமது போராட்டம் அடுத்த சவாலை எதிர்கொண்ட போது, தேசியத் தலைவருக்கு ஓரு புலனாய்வு அறிக்கை கிடைத்தது. அது அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ணா, சனாதிபதி பிறேமதாச, படைத்தளதிகளால் திட்டம் தீட்டப்பட்டது.

எமது தேசியத் தலைவரை கொன்று, தாக்குதல்களைத் தொடுத்து, தேசிய விடுதலைப் போராட்டத்தை இல்லாது அழிப்பதே அத்திட்டம்.

இந்த நிலையிலேயே அவர்களின் தலைநகரிலேயே அவர்களைச் செயற்பட முடியாதென்று நாம் அப்போது கற்பித்தோம். அதைச் செய்து காட்டியவன் சாள்ஸ்.

சாள்சின் ஆளுமை என்பது, வரலாற்றில் அதீத தன்னம்பிக்கை, வரலாற்றில் பெரும் வெற்றியாக அமைந்த கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல். அங்கு நம்மால் செய்ய முடியாத வெற்றிகளை எமது போராளிகள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று, இதை விட பெரியது இருக்கு அதை நம்பிக்கையுடன் செய்வோம் என்று சாள்ஸ் சொன்னான்.

கொழும்பு களத்தில் கேணல் சாள்ஸ் பல வரலாற்றுத் தடத்தைப் பதித்துள்ளான். அதற்காக அவன் உழைத்த உழைப்பு மிக அதிகம்.

Col-Charles.jpg

Col_Charles.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Posted (edited)

பல சரித்திரங்களை படைத்த கேணல் சார்ல்ஸ் உட்பட்ட மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!

Edited by akootha
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள், மாவீரர்களே....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

candle.gif

தாயக விடுதலைக்காக இந்நாளில் வீரகாவியமான வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல சரித்திரங்களை படைத்த கேணல் சார்ல்ஸ் உட்பட்ட மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!

Posted

பல சரித்திரங்களை படைத்த கேணல் சார்ல்ஸ் உட்பட்ட மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.