Jump to content

இரு உதடுகளின் முத்தம் நீங்கிய நாட்கள்: கவிதை நிழலி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது என்னோட ஆதங்கமும் கூட. யாழிலும் சரி பலர் துணைவியை.. பிரிஞ்சிட்டு.. பிரிவின் வலின்னு கவிதை.. கட்டுரை.. கதை எல்லாம் எழுதி தங்க பிரிவை துணைவிக்கு சொல்லுறாங்களோ.. இல்லையோ.. அடுத்தவங்களுக்கு வெளிப்படுத்திறாங்க...

ஆனா நான் அறிய.. எத்தனையோ பெற்றோர் தாயகத்தில் பிள்ளைகளைப் பிரிந்து கண்ணீரோடு வாழ்வதை கண்டிருக்கிறன். ஏன் வெளிநாட்டில் உள்ள தன் பிள்ளைக்கு கடிதம் போட ஆங்கிலத்தில் விலாசம் எழுத முடியாது..தபால் நிலையத்தில் அந்தரித்து நின்ற தாயைக் கண்டிருக்கிறேன்.. உதவி இருக்கிறேன். அந்த வகையில் தான் பிரிவின் வேதனை சொல்லும் இந்த இடத்தில் அதனையும் முன் வைத்தேனே அன்றி நிழலி அண்ணர் சங்கடப் படனும் என்பதற்காக அல்ல..! :):icon_idea:

இதையும் ஒருக்கா நேரம் கிடைச்சா படியுங்கோ...

மனசுக்குள் என்ன..?!

http://www.yarl.com/...showtopic=84659

தம்பிகள் நெடுக்கு

இசை

மற்றும் குட்டி

தாய் தகப்பன் சகேகாதரர்கள் என்பது ஒரு படி

அது எம் எல்லோராலும் உணரப்பட்டதும் மறுப்பெதுவுமின்றி ஏற்றுக்கொள்ளவும் கூடியது. இதில் வாதம் ஆராய்ச்சி எதற்குமே இடமில்லை.

அவற்றைப்பிரிந்து அழுதிருக்கின்றோம். துவண்டிருக்கின்றோம்.......

ஆனால் வாழ்க்கைச்சக்கரத்தில் அதைத்தாண்டி நாம் வந்தாகவேண்டும்

இப்போ இங்கு வருவது அதன் அடுத்த கட்டம்

மனைவி பிள்ளை பற்றியது

அதைத்தான் நிழலி பதிந்துள்ளார்

ஆனால் தாய் தகப்பன்படியைத்தாண்டாத உங்களைப்போன்றவர்கள் அதை இங்கு எழுதினால் அதையும் வரவேற்கும் நிலையே என்றும் உண்டு.

அதற்காக குடும்பத்தன் தான் பெற்றோர் பிரிவு பற்றியும் எழுதவேண்டும் என அடம் பிடிப்பது சரியல்ல.

எனக்குத்தெரியும் எத்தனை வயதுவரை நான் எனது அம்மாவின் துணையை நாடினேன் என்று.

எத்தனை வயதுவரை அப்பரின் தோளில் தொங்கினேன் என்று. அதையே எனது பெற்றோரும் அளவாக எடுத்தனர். அடுத்த கட்டத்துக்கு போனபோது சிறு வலி எல்லோருக்கும் இருந்தாலும் அதுதானே வாழ்க்கை என்பது இது தானே என வாழப்பழகிக்கொண்டோம் இல்லையா?

அதுபோலவே

எனது பிரிவாலா அல்லது அவனது மனைவியின் பிரிவாலா என் பிள்ளை துவண்டுபோவான் என்பதையும் என்னால் உணரமுடியுமல்லவா?

  • Replies 77
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அருமை நிழலி வாழ்த்துக்கள்

நிழலியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து போடப்பட்ட 10 பச்சைப் புள்ளிகளில் ஒன்று எனது. அதே நேரம் நிழலியைப் போலவே அவரது 7/ 8 வயது சிறுவனுக்கும் தாய், தங்கையின் பிரிவு மனதில் வலியைக் கொடுத்திருக்கும் என்பதை தகப்பன் அறிந்திருந்தாலும் அங்கே எதுவும் பகிரப்படவில்லை என்பதே எனது ஆதங்கமாக இருந்ததே தவிர பதியப்பட்ட உணர்விற்கு (கவிதைக்கு) எதிராக எதுவும் நான் குறிப்பிடவில்லை!

இது கவிதை .

மனைவி பிள்ளைகள் பிரிவு வெறுமையையும் ஒரு வித பயத்தையும் தரும்.

எமது பெற்றோரை நாம் பிரிந்திருக்கும் போது இப்படியான உணர்வு வரமாட்டாது ,அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம வரும் வெறுமை வராது.

மனைவி வரமட்டும் சோனாவை கட்டிப்பிடித்துக்கொண்டு படுக்கவேண்டியதுதான்.

சோனா -எனது பெரிய புஷ்டி தலையணைக்கு நான் வைத்த பெயர்.

மேலும் அர்ஜுனின் பதிவை மேற்கோள் காட்டியமைக்குக் காரணம், அவர் பன்மையில் வாத்தையைப் பாவித்தபடியால் மட்டுமே, நான் எனது தனிப்பட்ட கருத்தைக் கூறி இருந்தேன்!!

அதெல்லாம் சரி... இசை இன்னும் பெற்றோரின் படி தாண்ட இல்லையா? :blink::unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்ஸ், குட்டி, யாயினி, ஆகியோரின் கருத்துக்கள் நன்றாக இருந்தன. :)

அவர்கள் அந்த நிலையை தாண்டி.... கட்டம், கட்டமாக வருவதனை வடிவாகக் கூறிய, விசுகின் கருத்தும் அருமை.smilie_gut.gif

நிழலிக்கு மகள் என்றுதான் நினைத்தேன் விசுகுவின் பயணம் & நிழலியின் கவிதையில் இருந்து, ஆனா மகன் என எழுதியுள்ளனர், நிழலி???.

அன்பு வைத்த யார் பிரிந்தலும் அது எம் மனதில் தாக்கமே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

---

இன்னொன்றில்

வெள்ளை நிறத்தில்

அன்பு இருந்தது

"இவன் என் அப்பா"

என கட்டிப் பிடித்து

இறுக்கி சிரிக்கும்

சின்னச்

சிறுக்கியின்

பாசம் இருந்தது

------

என் மகள் அணிந்து கழட்டிய

'ஸ்கேர்ட்டும்"..

எல்லாமும் அப்படியே

இருக்க

எதுவும் அற்ற சூனியம்

அப்பிக் கொள்கின்றது

என் மகளின்

ஒரு மழலைச் சொல்லுக்காக

மெளனமாகவே இருக்கும்

கேட்காத இசை கொண்ட

எட்டாவது ஸ்(சு)வரம் ஆக

மாறலாம் என்று இருந்தது

------

:நிழலி

(ஊருக்கு மனிசி மற்றும் மகளை அனுப்பிய பின் வீட்டை வந்த பின் தோன்றிய ஒரு உணர்ச்சி இது)

சனவரி 04, 2012

நிழலிக்கு மகள் என்றுதான் நினைத்தேன் விசுகுவின் பயணம் & நிழலியின் கவிதையில் இருந்து, ஆனா மகன் என எழுதியுள்ளனர், நிழலி???.

அன்பு வைத்த யார் பிரிந்தலும் அது எம் மனதில் தாக்கமே

நன்றாகத் தமிழ் தெரிந்த, உடையார் நிழலியின் கவிதையை வடிவாக வாசிக்கவில்லைப் போல் உள்ளது.

"இவன் என் அப்பா" என்று, சின்னச் சிறுக்கி தான் சொன்னவள்.

கவிதையில் உள்ள மயக்கமே... அது தான் உடையார். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றாகத் தமிழ் தெரிந்த, உடையார் நிழலியின் கவிதையை வடிவாக வாசிக்கவில்லைப் போல் உள்ளது.

"இவன் என் அப்பா" என்று, சின்னச் சிறுக்கி தான் சொன்னவள்.

கவிதையில் உள்ள மயக்கமே... அது தான் உடையார். :)

சிறி நான் மகள் என்றுதான் வாசித்தேன், ஆனா பலர் மகன் மகன் என கருத்து எழுதியுள்ளதை பார்க்க, நிழலிக்கும் கூட பயம் வருமில்லையா (யாருக்கோ தான் சி.வீ மகனை தெரித்துவிட்டது என்று), அதுதான் நிழலிக்கு கேள்வி போட்டனான். நீங்க மேலே உள்ள பலரின் கருத்தை திரும்ப வாசித்து பாருங்கள்

அவர்கள் சொல்வது சரி உடையார்.

நிழலிக்கு... ஒரு மகனும், ஒரு மகளும் என்று இரண்டு பிள்ளைகள்.

மூத்தவன் கனடாவிலை நிக்கிறான், இளையவள் ஊருக்குப் போயிட்டாள். :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவர்கள் சொல்வது சரி உடையார்.

நிழலிக்கு... ஒரு மகனும், ஒரு மகளும் என்று இரண்டு பிள்ளைகள்.

மூத்தவன் கனடாவிலை நிக்கிறான், இளையவள் ஊருக்குப் போயிட்டாள். :rolleyes::D

நன்றி சிறி,

Posted

அது வேறு உணர்வு இது வேறு உணர்வு என்றுதான் சொல்ல வந்தேன்.நான் சொன்ன விதம் பிழையாக இருக்கலாம் குட்டி.மன்னித்து விடவும்

Posted

அருமை நிழலி, நன்றி பகிர்வுக்கு, உங்கள் உணர்வை கவிதை வடிவில் தந்துள்ளீர்கள், பச்சை இல்லை நாளைதான்

நன்றி உடையார்.. என் முழு உணர்வையும் கவிதையாக வடிக்க முடியவில்லை எனக்கு. ஒரு சில நிமிடங்களில் எழுதி முடித்த கவிதை என்பதால் அவசரமாக எழுதி இருக்கின்றேன் என்று மீண்டும் வாசிக்கும் போது புரிகின்றது

உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள், நிழலி!

இனிக் கொஞ்ச நாளைக்கு, ஆட்டுக்குடலும் இல்லை! ஈரல் வறையும் இல்லை!

நண்டுக் கறியும் இல்லை!

சோறும் பருப்புக் கறியும் தான்!!!

இவை மட்டுமே.... மற்ற சமாச்சாரமும் கொஞ்ச நாளைக்கு இல்லை.... :)

நிழலி அண்ணா.. நீங்கள் உங்கள் துணைவி மகளைப் பிரிந்து மன உருகிப் பாடிய இக்கவிதையை வரவேற்றுக் கொண்டு.. இதே நிலையில் உங்கள் அப்பா.. அம்மா உங்களைப் பிரிந்து கவிதையே வடிக்காமல்.. உருகி இருந்திருப்பதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா...???! (ஏனெனில் பலர் தமது தனிமையை உணரும் போதுதான் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. அந்த வகையில் இதனை முன் வைக்கிறேன். மற்றும்படி வேறு எதுவும் இல்லை..!) :):icon_idea:

நெடுக்கு,

எப்பவும் அன்பும் பாசமும் மேலிருந்து கீழாக பாய்வதை விட கீழிருந்து மேலாக பாய்வது தான் இயல்பு. பாட்டியும் பாட்டனும் காட்டிய பாசத்தை அப்புவும் ஆச்சியும் அப்படியே என் அப்பனுக்கும் அம்மாக்கும் காட்டினர். அவர்களிடம் பாசம் பயின்ற என் அப்பனும் அம்மாவும் அதை எனக்கு ஊட்டினர். இன்று அவர்களிடம் உணர்ந்த அந்த அபரிதமான பாசத்தை என் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் பரிமாறுகின்றேன். இது மனித இயல்பு. இந்த சங்கிலித் தொடர்ச்சியில் முன்னைய உறவுகள் மீது வைத்த அதே அளவான பாசமும் அன்பையும் திருமணத்தின் பின் பிள்ளைகளும் பிறந்த பின் அப்படியே வைத்திருக்க இயலாது. அவர்களுக்கான இடத்தில் மனைவியும் பிள்ளைகளும் பிடித்து பல நாட்களாகி விட்டன. இதன் அர்த்தம் அம்மாவின் பிரிவோ அப்பாவின் பிரிவோ துயரம் தராத விடயம் என்று அல்ல, அவையும் வலி ஏற்படுத்துவனவே. ஆனால் மனம் இந்த பிரிவுக்கு சிறு வயதிலிருந்தே தயாராகிக் கொண்டு வந்து 30 இன் அதை அப்படியே அதன் போக்கில் ஏற்றுக் கொள்ள பழகிவிட்டது. வாழ்க்கையின் போக்கில் இது மிகவும் இயல்பான ஒன்று.

என் அம்மா அப்பாவை விட்டு பிரிந்து தனியனாகி டுபாய் போய் இருந்த காலத்தில் சுமையாக அழுத்திய தனிமையும் தவிப்பும் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவை எடுக்க வைத்தது. அது வரை சில காரணங்களால் எக்காலத்திலும் திருமணம் செய்ய மாட்டேன் என்றே முடிவெடுத்து இருந்தேன்.

இது இப்படி இருக்க நான் ஏற்கனவே அப்பாவின் இழப்பு பற்றி ஒரு கவிதை யாழில் எழுது இருக்கின்றேன்.

Posted

பிற்குறிப்பு: நிழலி இப்போ... சமைக்க பஞ்சிப் படுவார் என்பதால், நிழலியின் வீட்டுக்கு விருந்துக்குச் சென்ற உறவுகள்.. தினமும் ஒரு நேரச் சாப்பாடு செய்து கொடுத்தால் நல்லது. :D:icon_idea:

நண்பேண்டா............ !!

சகாரா, நிலாமதி அக்கா, தமிழச்சி, அர்ஜுன்....இதை கொஞ்சம் பார்க்கவும்

"உப்பில்லாத போது தான் உப்பின் அருமை தெரியும்" என்பார்கள்.அதுவா நிழலி?.

பகிர்வுக்கு நன்றி.

நன்றி நுணா...

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பீலிங்ஸ்.. :rolleyes:

ஆக மொத்தம் நமக்கு கடுப்பேத்திடிங்கப்பா :lol::icon_idea:

(சாறி பாஸ் பச்சை காலியாகிட்டுது) :)

ஏன் மச்சி...பிரியமானவர்கள் அருகில் இல்லையா

பிரிவின் ஏக்கத்தை வெளிப்படுத்திய விதம் நன்று.

"பலர் தமது தனிமையை உணரும் போதுதான் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்வார்கள்"-நெடுக்ஸ்- நன்று.

நன்றி செண்பகம். இன்றுதான் முதன் முதலாக என் பதிவு ஒன்றுக்கு பதில் எழுதி உள்ளீர்கள் என்று நினைக்கின்றேன். சரி தானே?

நிழலி... அழகான கவிதைகள் எப்போது பிறக்கும் என்றால் மிகவும் பிரியத்திற்கு உரியவர்கள் பிரிந்திருக்கும்போதுதான் இனி கொஞ்சநாளைக்கு உங்களிடமிருந்து அதிகமான கவிதைகளை எதிர்பார்க்கலாம் :wub:

நன்றி..சின்னனை பிரிந்தது உடலின் அனைத்து அங்கங்களையும் பிரிந்த போன்ற உணர்வை தருகின்றது. வீடு நரகமாக தெரியுது

...அத்துடன், அப்படியே என் உயிர் நண்பன் தமிழ் சிறி சொன்னதையும் பார்க்கவும்

இரு உதடுகளின் முத்தம் நீங்கிய நாட்கள் - பிரிவு

கவிதை அழகு நிழலி.

நன்றி கறுப்ஸ்

அண்மைய காலங்களில் வரும் கவிதை,கதைகளுக்கு கருத்து எழுத முன்வருவதில்லை..அதுவும் சில,பல வலிகளால் ஏற்பட்ட தாக்கம் தான்...உங்கவிதைக்கு நான் தான் முதல் பச்சை குத்தினேன்...பிரிவு பற்றி எழுதிய கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது...பிரிவின் வலியால் இனி யாழிலும் வெட்டு,கொத்து அதிகரிக்கப் போகிறது.ம்ம்ம்...

நன்றி ஆச்சி யாயினி

பிரிவில் தெரியும் வலி , கவி வரிகளாக........

..கணணியிலுங்கள் திறமைகளை,காட்ட சிறந்த தருணம் அதிக படைப்புக்களை தாருங்கள்

எல்லாம் உள்ளது தான் வாழ்க்கை

(இன்பம் துன்பம் ,பிரிவு சோகம் ,.தனிமை உறவு இணைவு .மகிழ்வு .)

நன்றி அக்கா

இது கவிதை .

மனைவி பிள்ளைகள் பிரிவு வெறுமையையும் ஒரு வித பயத்தையும் தரும்.

மிகவும் உண்மையான வரிகள் அர்ஜுன். வெறுமையும் பயமும் கொண்ட உணர்வை எழுத வார்த்தைகள் வருகின்றது இல்லை.

Posted

ஒரு குடும்பஸ்தன் (மகளைப் பிரியும் தகப்பன்/ மனைவியைப் பிரியும் கணவன்) என்ற முறையில் உங்கள் பிரிவு புரிந்து கொள்ளப்படுகிறது நிழலி!

அதே நேரம் தாயை, தங்கையைப் பிரிந்த உங்கள் மகனிடம் அவனது மனநிலையைக் கேட்டீர்களா? (மனைவியும் மகளும் என்று மட்டும் போட்டதால் கேட்கிறேன்) முடிந்தால் அதையும் இங்கே உங்கள் ஆக்கத்தில் தாருங்கள்...

அர்ஜுன், நீங்கள் சொல்வது ஒரு வேளை உங்களின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் என நினைக்கிறன். "எமது" என்று பன்மையில் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!

எனது பெற்றோரை/ உடன் பிறந்தோரைப் பிரிந்து இங்கே வந்த பின்பு எவ்வளவோ வெறுமை, ஏக்கம், கவலை, கோபம், தனிமை என்று அவர்களின் பிரிவின் வலியை நான் உணர்ந்தேன். இன்று வரை பல சந்தர்ப்பங்களில் அந்த உணர்வுகள் வந்து போவதை அவதானிக்கக் கூடியதாகவே உள்ளது!!

குட்டி,

தங்கையையும் தாயையும் பிரிந்த என் மகனின் உணர்வுகளும் அவற்றை அவன் நாசூக்காகவும் அதே நேரத்தில் குழந்தைத் தனமாக மறைக்க முனைவதையும் பார்க்க மனசு முழுதும் பொங்கி வருகின்றது. அவனது வயதுக்கு இந்த பிரிவை காரண காரியங்களுடன் அவன் ஏற்றுக் கொள்ள முயல்வதே எனக்கு ஒரு Lesson ஆக இருக்கின்றது.

மனைவியின் அப்பா கடும் சுகவீனமுற்று இருக்கின்றார். எந்த நேரத்திலும் எதுவும் நடக்க கூடியதாகவும் தப்பி பிழைத்தால் இன்னும் சில வருடங்கள் வாழலாம் என்றதாகவும் சூல்நிலையும் இருக்கின்றது. அவர் சாக முதல் உயிருடன் அவரைப் பார்க்க மனைவி விரும்பினார். மாமா (மனைவியின் அப்பா) என் மகளை ஒரு முறை கூட பார்க்காததால் அவளையும் கூட்டிக் கொண்டு போனார். எல்லாரும் போகவும் அதற்கான செலவை சமாளிக்கவும் என்னிடம் காசு இல்லை. என் அப்பா என் இரு பிள்ளைகளையும் பார்க்க முன்னமே செத்துப் போயிட்டார். மாமாவாவது இரண்டு பிள்ளைகளையும் பார்த்து விட்டு போகட்டும் என்றே அனுப்பி வைத்தேன்.

இதை என் மகனுக்கு அவனுக்கே புரிகின்ற மாதிரி பல வழிகளில் விளங்க வைக்க முயற்சி செய்தேன். இந்த முயற்சியில் நான் வெற்றி பெற்று உள்ளேன் என்றே இன்று புரிந்து கொண்டேன்

இப்போது அவன் என் மனைவியின் சகோதரியின் வீட்டில் கிழமை நாட்களில் நிற்கின்றான். வார இறுதியில் என்னிடம் வருவான் (இரு வீட்டிற்கான தூரம் 5 நிமிடம் கார் பயணம் மட்டுமே)

அடுத்தது பெற்றோரை பிரிவதை சொல்லி உள்ளீர்கள்

பெற்றோரின் பிரிவு துயரம் தான். ஆனால் அவர்களை பிரிந்தாலும் வாழ்க்கையில் முன்னேறிக் காட்டுவதே எம்மை பிரிந்த அவர்களின் துயரை துடைப்பதற்கான சரியான வழி என்று உணர்ந்து அதன் வழி சென்று இருப்பீர்கள் தானே?

பிரிவின் ஏக்கத்தை அழகாக கூறும் நல்லதொரு கவிதைக்கு நன்றிகள் நிழலி அண்ணா.

நன்றி தமிழினி....

Posted

நிழலி அண்ணாவிடம் திட்டு வாங்க வேண்ட வேண்டி வருமோ என்ற பயம் தான்..

யாயினி,

மட்டுவாக இருந்தாலும், நிர்வாக பிரிவில் இருந்தாலும் தொடர்ந்து களத்தில் சாதாரணமாக உரையாடிக்கொண்டு இருப்பவர்களில் நானும் ஒருவன் (அல்லது நான் மட்டும் தான் இப்போதைக்கு)....என்னை (என் குடும்பத்தை மோசமான விதத்தில் இழுக்காமல்) திட்டி எழுதிய எதையும் கண்டு கோபித்ததாகவோ அல்லது அவற்றை நீக்கியதாகவோ நினைவு இல்லை...அப்படி இருக்க என் பதிவொன்றுக்கு நேர்மையான உங்கள் பதிலை இடுவதற்கு தடுத்தது எது என்று அறிய விரும்புகின்றேன்.

உணர்வுகளுக்கு உருவம் இல்லை என்பார்கள். ஆனால், உணர்வுகளுக்கும் வடிவம் கொடுப்பவைதான் கவிதை வரிகள்.

உணர்வுகள் வரிகளாய் வடிவமாகி மீண்டும் உணர்வாகவே வந்து நிற்கும் . உணர்வுகளின் வலிமை என்பது சோகத்திலும் பிரிவிலும்தான் தோல்வியிலும் வெறுமையிலும்தான் மிக அதிகமாக வெளிப்படுகின்றன. அந்த வகையில் இந்தக் கவிதையில் பிரிவின் வலியும் உறவுகளின் வெறுமையினால் உருவாகிய வலியும் அருமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

நன்றி கவிதை

நான் அறிவு பூர்வமானவன் அல்ல. உணர்வு பூர்வமானவன். பல தடவை உணர்வுகள் அறிவை மேவி முடிவுகள் எடுக்க வைத்து, அதனால் கடும் துன்பம் அனுபவித்தவன்...ஆனாலும் உணர்ச்சி மயமாக இருப்பதும் ஒரு சுகம் தான்

நிழலி உங்கள் கவிதையில் பிரிவு,ஏக்கம்,பாசம் எல்லாம் தெரிகிறது...நீங்களும் மகனைக் கூட்டிக் கொண்டு மனைவியோட போயிருக்கலாம் என்ன காரணமோ தெரியவில்லை நீங்கள் போகவில்லை

எல்லாம் பொருளாதார பிரச்சனைதான். நாலு பேருக்கும் டிக்கெட் எடுக்கவும், அங்க போன பின் ஏற்படும் செலவை சரிக்கட்டவும் காசு இல்லை என்னிடம். ஒரு Pay check (cheque) இற்கும் இன்னொரு pay check இற்கும் இடையில் வாழும், கடன் வாங்க பயந்து நடுங்கும் ஒரு சராசரி தமிழ் ஆண் நான். காசு இருந்து இருந்தால் நிச்சயம் நானும் மகனும் கூடப் போயிருப்போம்

வீட்டில் தனிய இருக்கவேண்டி வந்தால் சமைக்கத் தெரிந்திருந்தாலும் சமைக்க மனம் வராது! நித்திரைக்கு மட்டும்தான் வீடு என்றாகிவிடும். நல்லவேளை மகனும் பயணம் போகவில்லை!

உண்மையான வரிகள்...அனுபவித்து எழுதி உள்ளீர்கள் கிருபன்

உணர்ச்சிக் கவிஞன் நிழலியின் கவிதை

நன்றி

தனிமையை அனுபவிக்கும் போது தான்

அதன் கொடுமை தெரியும்.

நன்றி வாத்தியார்

Posted

தம்பிகள் நெடுக்கு

இசை

மற்றும் குட்டி

தாய் தகப்பன் சகேகாதரர்கள் என்பது ஒரு படி

அது எம் எல்லோராலும் உணரப்பட்டதும் மறுப்பெதுவுமின்றி ஏற்றுக்கொள்ளவும் கூடியது. இதில் வாதம் ஆராய்ச்சி எதற்குமே இடமில்லை.

அவற்றைப்பிரிந்து அழுதிருக்கின்றோம். துவண்டிருக்கின்றோம்.......

ஆனால் வாழ்க்கைச்சக்கரத்தில் அதைத்தாண்டி நாம் வந்தாகவேண்டும்

இப்போ இங்கு வருவது அதன் அடுத்த கட்டம்

மனைவி பிள்ளை பற்றியது

அதைத்தான் நிழலி பதிந்துள்ளார்

ஆனால் தாய் தகப்பன்படியைத்தாண்டாத உங்களைப்போன்றவர்கள் அதை இங்கு எழுதினால் அதையும் வரவேற்கும் நிலையே என்றும் உண்டு.

அதற்காக குடும்பத்தன் தான் பெற்றோர் பிரிவு பற்றியும் எழுதவேண்டும் என அடம் பிடிப்பது சரியல்ல.

எனக்குத்தெரியும் எத்தனை வயதுவரை நான் எனது அம்மாவின் துணையை நாடினேன் என்று.

எத்தனை வயதுவரை அப்பரின் தோளில் தொங்கினேன் என்று. அதையே எனது பெற்றோரும் அளவாக எடுத்தனர். அடுத்த கட்டத்துக்கு போனபோது சிறு வலி எல்லோருக்கும் இருந்தாலும் அதுதானே வாழ்க்கை என்பது இது தானே என வாழப்பழகிக்கொண்டோம் இல்லையா?

அதுபோலவே

எனது பிரிவாலா அல்லது அவனது மனைவியின் பிரிவாலா என் பிள்ளை துவண்டுபோவான் என்பதையும் என்னால் உணரமுடியுமல்லவா?

இதை விட என்னால் சிறப்பாக விளக்கமாக எழுதி இருக்க முடியாது விசுகு

ஆனால் என்ன துயரம் என்றால், இப்படி தெளிவாக சொல்ல, வந்த விடயத்தை மிகவும் சுலபமாக எழுத முடிகின்ற உங்களால் ஏன் அநேகமாக அப்படி எழுத முடிவதில்லை? வெறும் குரோதமும், 'நான் இப்படித்தான் என்னை வெளி உலகுக்கு Project பண்ணுவேன்" எனும் வேண்டா பிடிவாதமும் தான் உங்களுக்குள் இருக்கும் தெளிவான கருத்தாளனை முடமாக்குகின்றது

உண்மையில் உங்கள் இந்த பதிலும் எழுதிய முறையும் ....அருமை...

உங்களிடம் நிறைய எதிர் பார்க்கின்றேன்/ எதிர் பார்க்கின்றோம்

அவர்கள் சொல்வது சரி உடையார்.

நிழலிக்கு... ஒரு மகனும், ஒரு மகளும் என்று இரண்டு பிள்ளைகள்.

மூத்தவன் கனடாவிலை நிக்கிறான், இளையவள் ஊருக்குப் போயிட்டாள். :rolleyes::D

நன்றி சிறி,

official ஆக எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும்தான் உடையார் :D

அது வேறு உணர்வு இது வேறு உணர்வு என்றுதான் சொல்ல வந்தேன்.நான் சொன்ன விதம் பிழையாக இருக்கலாம் குட்டி.மன்னித்து விடவும்

யாரங்கே....

அர்ஜுனா தான் எழுதியதில் பிழை இருக்கலாம் என்று மன்னிப்பு கேட்பது?

"உண்மை தான் மன்னா"

"ஆஹா.... என்ன ஆச்சரியம்... "

"மன்னா இன்று மேற்கில் சூரியன் உதிக்கும் போதே நினைச்சன்... இப்படி ஏதாவது அதிசயம் நடக்கும் என்று"

Posted

நிழலியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து போடப்பட்ட 10 பச்சைப் புள்ளிகளில் ஒன்று எனது. அதே நேரம் நிழலியைப் போலவே அவரது 7/ 8 வயது சிறுவனுக்கும் தாய், தங்கையின் பிரிவு மனதில் வலியைக் கொடுத்திருக்கும் என்பதை தகப்பன் அறிந்திருந்தாலும் அங்கே எதுவும் பகிரப்படவில்லை என்பதே எனது ஆதங்கமாக இருந்ததே தவிர பதியப்பட்ட உணர்விற்கு (கவிதைக்கு) எதிராக எதுவும் நான் குறிப்பிடவில்லை!

என் மகனின் வயது 6

அவனது உணர்வுகள் ஒரு பெரும் கவிதை அல்லது மனோவியல் நாவல்

அதை அவனே பிறிதொரு காலத்தில் எழுத விரும்பினால் எழுதட்டும். தகப்பனாக நான் இருந்தாலும் நான் அவன் அல்ல. அவனது உணர்ச்சிகளை என்னால் ஓரளவுக்கு அறியத் தான் முடியும், உணர முடியாது

எனக்கான கவிதையை நான் எழுதுகின்றேன்

அவனுக்கான கவிதையை அவன் விரும்பினால் ஒரு காலத்தில் எழுதுவான்

Posted

ஒவ்வொரு உறவின் பிரிவிலும் வேவ்வேறுவிதமான கவலை உணர்வுகள். மகன் கூட இருப்பதால் கொஞ்சம் பொழுது போகுமென நினைக்கிறேன்.

இப்படித்தான் ஒருமுறை பணக் கஷ்டத்தில், எல்லோரையும் ஊருக்கு அனுப்பிப் போட்டு தனியே கிடந்து கஷ்டப்பட்டேன். பெரும் நரகம்.

தமிழ் சிறியிண்ட கதையைக் கேட்டு யாழ் கள மெம்பெர்ஸ் இன் சமையல்களைச் சாப்பிட்டு இன்னும் கவலையைக் கூட்ட வேண்டாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிள்ளைகளைப் பற்றிய .... ஒவர் பில்டப்பும், பெற்றோருக்கு ஆபத்து.

Posted

பிள்ளைகளைப் பற்றிய .... ஒவர் பில்டப்பும், பெற்றோருக்கு ஆபத்து.

இது உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலி அண்ணாவிடம் திட்டு வாங்க வேண்ட வேண்டி வருமோ என்ற பயம் தான்..

யாயினி,மட்டுவாக இருந்தாலும், நிர்வாக பிரிவில் இருந்தாலும் தொடர்ந்து களத்தில் சாதாரணமாக உரையாடிக்கொண்டு இருப்பவர்களில் நானும் ஒருவன் (அல்லது நான் மட்டும் தான் இப்போதைக்கு)....என்னை (என் குடும்பத்தை மோசமான விதத்தில் இழுக்காமல்) திட்டி எழுதிய எதையும் கண்டு கோபித்ததாகவோ அல்லது அவற்றை நீக்கியதாகவோ நினைவு இல்லை...அப்படி இருக்க என் பதிவொன்றுக்கு நேர்மையான உங்கள் பதிலை இடுவதற்கு தடுத்தது எது என்று அறிய விரும்புகின்றேன்.

ஏன் நிழலி அண்ணா நான் சாதரணமாக எழுதியதை  பெரிதுபண்ணி கேள்வி கேக்கிறீங்கள்??நான் ஒன்றும் தவறாக கருதி எழுத இல்லை என்பதை  தெளிவாக கூறிக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மையான வரிகள்...அனுபவித்து எழுதி உள்ளீர்கள் கிருபன்

எல்லாம் மூன்று மாத அனுபவம்தான்!

:icon_mrgreen:

Posted

துணை, குழந்தைகளைத் தற்காலிகமாகப் பிரிந்து ஒரு நாள் இருப்பதே மிகக் கஸ்டம் தான். ஆனால் அதையும் பழக்கிக் கொள்ளத்

தானே வேண்டும்.நல்ல கவிதை! வாழ்த்துக்கள்! 7வது பச்சை.....

நண்பேண்டா............ !!

சகாரா, நிலாமதி அக்கா, தமிழச்சி, அர்ஜுன்....இதை கொஞ்சம் பார்க்கவும்

இவர்களில் யார் நிழலியில் அக்கறைப் பட்டு விருந்துக்கு அழைத்தார்கள் அல்லது அன்பாக வீட்டை சாப்பாடு கொண்டு போய் கொடுத்தார்கள்................????

  • கருத்துக்கள உறவுகள்
Posted

<p>

ஒவ்வொரு உறவின் பிரிவிலும் வேவ்வேறுவிதமான கவலை உணர்வுகள். மகன் கூட இருப்பதால் கொஞ்சம் பொழுது போகுமென நினைக்கிறேன்.

இப்படித்தான்  ஒருமுறை பணக் கஷ்டத்தில், எல்லோரையும் ஊருக்கு அனுப்பிப் போட்டு தனியே கிடந்து கஷ்டப்பட்டேன். பெரும் நரகம்.  

தமிழ் சிறியிண்ட  கதையைக் கேட்டு யாழ் கள மெம்பெர்ஸ் இன் சமையல்களைச் சாப்பிட்டு இன்னும் கவலையைக் கூட்ட வேண்டாம்.

முக்கியமாக சகாறா அக்காவின் சாப்பாட்டை சாப்பிட வேண்டாம்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் பகுடிக்குத் தான் எழுதினேன் அக்கா கோபிக்க வேண்டாம்[ஸ்மைலி வேலை செய்யவில்லை]

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.