Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளி- மனைவி- தற்கொலையும் மர்மங்களும்-குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்

Featured Replies

முன்னாள் போராளி- மனைவி- தற்கொலையும் மர்மங்களும்-குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்

வாழ்க்கை வெறுத்துவிட்டது அதனால் குறுணல் நஞ்சைக் குடித்து தற்கொலை செய்கிறோம் என்று குறிப்பிட்டு முன்னாள் போராளியும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணியில் வறுமை காரணம் அல்ல என கண்டறியப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, முள்ளியவளை என்ற முகவரியைச் சேர்ந்த 29 வயதான நிரஞ்சனும் 27 வயதான சங்கீதாவும் இவ்வாறு தற்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தமது மரணத்திற்கான காரணமாக வாழ்க்கை வெறுத்து விட்டதால் இந்த முடிவுக்கு வந்ததாக குறித்த முன்னாள் போராளியும் அவரது மனைவி சங்கீதாவும் தமது மரண சாசனத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

எதற்காக வாழ்க்கை வெறுத்தது? என்பதை அவர்கள் தமது கடிதத்தில் குறிப்பிடவில்லை. இவர்கள் வறுமையாலோ அல்லது ஆதரவின்மையாலோ பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கவில்லை என்றும் முள்ளியவளைவாசி ஒருவர் குறிப்பிட்டார். சங்கீதா தொடர்ச்சியாக தற்கொலைக்கு ஏன் முயற்சித்துள்ளார் என்பதன் பின்னணியில் சமூகத் துன்புறுத்தல்களே காரணமாக இருந்திருப்பதாக அறியப்படுகிறது. இந்நிலையில் அடுத்த ஜென்மத்திலும் தனது செல்லக் கணவருடன் இணைந்து வாழ வேண்டும் என்ற விருப்பத்தை சங்கீதா எழுதியுள்ளார்.

பரிதாபகரமாக நடந்த இந்த தற்கொலையின் பின்னணியில் மர்மங்கள் இருப்பதாக குளோபல் தமிழ் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் குறிப்பிடுகின்றார். இது தொடர்பில் முதல் கட்ட விசாரணைகளில்; முகாமில் இருந்து விடுதலையாகி சமூக வாழ்வில் இணைந்துகொண்ட முன்னாள் போராளியான 29 வயதான நிறஞ்சனை முன்னர் காதலித்த சங்கீதா திருமணம் செய்யுமாறு கோரியுள்ளார். எனினும் காலில்லாத தன்னை திருமணம் முடித்து என்ன செய்யப் போகிறாய் என நிறஞ்சன் மறுத்திருக்கிறார். தன்னை மறந்து வேறு திருமணம் முடித்து சந்தோசமாக வாழும்படி நிறஞ்சன் வற்புறுத்தியுள்ளார். எனினும் அதனை மறுத்த சங்கீதா தனது உயர்தரப் பரீட்சை முடிந்தவுடன் கடந்த 3 மாதத்தின் முன்பிருந்து பதிவுத் திருமணம் செய்து நிறஞ்சனுடன் வாழத் தொடங்கியுள்ளார். இதன்போது கையடக்கத் தொலைபேசியில் தனது சகோதரனுக்கு குறுந்;தகவல் அனுப்பிய சங்கீதா தன்னைத் தேட வேண்டாம் நிறஞ்சனைத் திருமணம் செய்து வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார்.

உயர் சாதியைச் சேர்ந்த சங்கீதாவும் அவரைவிடக் குறைந்த நிலையில் இருந்த நிறஞ்சனும் இணைந்து வாழ்ந்ததில் சில சமூக முரண்பாடுகளும் நிலவி இருக்கிறது. வசதியான நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த சங்கீதாவை அவரது வீட்டார் ஏற்க மறுத்துவிட்டனர்.

தவிரவும் நிறஞ்சனின் குடும்பத்தில் அவரது அன்புச் சகோதரரைத் தவிர வேறு எவரும் அவரை பொருட்படுத்துவதில்லை. நீ சொத்தி சும்மா இருந்து சாப்பிடுகிறாய் என எல்லோரும் வஞ்சித்துள்ளனர். எனினும் அவரது சகோதரர் இவரது வாழ்வை முன்னேற்ற வங்கிக் கடன் உள்ளிட்ட பொருளாதார உதவிகளைச் செய்து கடை ஒன்று போட்டு கொடுக்க முனைந்திருக்கிறார். ஆயினும் நிறஞ்சனின் வீட்டார் சங்கீதாவுடன் சேர்ந்து வாழ்வதனையும் ஏற்காததுடன் ஒரு சகோதரி சங்கீதாவை அடித்ததாகவும் கூறப்படுகிறது ( இதனை உறுதிப்படுத்த முடியவில்லை) இவ்வாறான பல சமூகம் சார்ந்த வஞ்சித்தல்களால் மனமுடைந்தே இவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.

தமது தற்கொலையினை தமது கைத் தொலைபேசிக் காணொளியூடாக பதிவும் செய்துள்ளனர். வறுமையில் வாடியவர்கள் என்றால் தற்கொலையை எவ்வாறு காணொளியாகப் பதிவு செய்திருக்க முடியும்? நிறஞ்சனின் சகோதரர் ஒரு அரசாங்க உத்தியோகத்தர். சங்கீதாவின் குடும்பமும் நடுத்தரவர்க்க குடும்பமே என குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் கூறுகிறார்.

இந்த தற்கொலை குறித்து மேலதிகமான விபரமான செய்திகளை பெற குளோபல் தமிழ்ச் செய்திகளின் அலுவலகத்தில் இருந்து முல்லைத் தீவின் மரண விசாரணை அதிகாரி காசிநாதர் றவீந்திரநாதனை தொடர்பு கொண்டோம் அவரும் தற்கொலைக்கான காரணம் சமூக முரண்பாடுகளும் குடும்பங்களிடையே இருந்த முரண்பாடுகளுமே எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்கொலைக்கு இருவரும் இரண்டு பாத்திரங்களில் கொக்கோகோலா மற்றும் குறுனல் நஞ்சு வடை ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தத் தற்கொலை குறித்து முல்லைத் தீவில் இருந்து பெறப்பட்ட நேரடி குரல் சாட்சியங்களும் எம்டம் உண்டு.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/72727/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த சொல்கிறது....:(

  • கருத்துக்கள உறவுகள்

a2.jpg

a3.jpg

a4.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படிப்பித்த மாணவியுடடன், தன் மனைவியை விட்டு ஓட்டம் எடுத்தவனும் ஒரு மனிதன். தன் கால் ஊனத்தால் காதலை கைவிட்டு தன் காதலிக்கு நல்வாழ்கைக்கு சிபாரிசு செய்கின்ற இந்த உள்ளம் உடையவனும் ஒரு மனிதன். இந்த மனம் உடையவனைத்தான் சாவுகூட இவன் கௌரவத்தை ஊனமாக்க முடியாது.

சாதீயம் என்பது ஒரு மனித நோயே அல்ல, அது ஒரு பிணநோய்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊனமுற்ற இளைஞனுக்கும் துணிவுடன் அவரை

வாழ்க்கைத் துணையாக ஏற்ற இந்த சகோதரிக்கும்

ஆதரவாக இருக்க வேண்டிய சமுதாயம்

அவர்களின் வாழ்க்கையையே வெறுக்கும் அளவிற்கு

உபத்திரவம் கொடுத்திருக்கின்றது.

சமுதாயம் என்பது வேறு யாரும் அல்ல

நானும் நீங்களும் தான்.

ஆழ்ந்த இரங்கல்கள்

படிப்பித்த மாணவியுடடன், தன் மனைவியை விட்டு ஓட்டம் எடுத்தவனும் ஒரு மனிதன். தன் கால் ஊனத்தால் காதலை கைவிட்டு தன் காதலிக்கு நல்வாழ்கைக்கு சிபாரிசு செய்கின்ற இந்த உள்ளம் உடையவனும் ஒரு மனிதன். இந்த மனம் உடையவனைத்தான் சாவுகூட இவன் கௌரவத்தை ஊனமாக்க முடியாது.

சாதீயம் என்பது ஒரு மனித நோயே அல்ல, அது ஒரு பிணநோய்!

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லன் வகுத்ததடா...... வருவதை எதிர் கொள்ளடா.

காதல் என்பது தூய மனத்தில் தோன்றும் உயிரின் இன்பத்தின் ரீங்காரம். வாழ்க்கை என்பது சகதியில் உழலும் உடம்பின் விடுதலைப் போராட்டம். இதில் வெற்றி பெற்றோர் இன்பத்தின் மடியில்.

ஆழ்ந்த அநுதாபங்கள் இழப்புக்களை சந்தித்தோருக்கு.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

"அந்த வானம் அழுதால்தான் இந்த பூமியே சிரிக்கும். அந்த வானம் போல் சிலபேர் வாழ்கையும் இருக்கும்"

இந்த சாதியத்தால் தமிழ் சாதி எத்தனையோ உயிர்களை குடித்துவிட்டது. சிலபேர் இறந்த பிணமாக சுவசித்துகொண்டிருக்கிரார்கள். இனியாவது சங்கீதாவின் குடும்பத்தார் மகிழ்ச்சியாக வாழ எனது வாழ்த்துக்கள்.

சரியான சமூதாயத்தை கட்டுவிக்காத குற்ற உணர்வு எங்களின் சில அணுக்களை கொன்றுவிடும்.

  • தொடங்கியவர்

போராளியான இவரை கைது செய்து உள்ளே அடைத்து வைத்த எதிரி கூட விடுதலை செய்துவிட்டான்; ஆனால் சாதித் திமிரும் வர்க்க திமிரும் இருக்கும் எங்கள் சனம் இவர்களை கொன்று விட்டது

இங்கு எதிரி யார்?

சிங்களப் பேரினவாதத்திற்கு நிகரானதே எமக்குள் இருக்கும் சமூக முரண்படு என்பதை இவ்வாறான முன்னாள் புலிகளின் பரிதாப மரணங்கள் பறைசாற்றுகின்றது.

ராணுவமும் கொல்லும் சாதியமும் கொல்லும். ராணுவம் கொல்லும் வரலாறு வெறும் நாற்பது வருடம்தான் ஆனால் சாதியம் கொல்வதற்கு ஆயிரமாண்டு வரலாறு. சுனாமியால் தப்பியவனையும் கொல்லும் முள்ளிவாய்க்காலில் தப்பியவனையும் கொல்லும்.

இனத்துக்காக காலைக்கொடுத்து சாதியத்தை எதிர்கொள்ள முடியாமல் உயிரை விடுவது நெஞ்சை அறுக்கும் விசயம். எமது சமூகத்துள் இருக்கும் வக்கிரம் எப்படிப்பட்டது என்பதை இவ்வாறான சம்பவங்கள் உணர்த்துக்கின்றது.

இந்த சமூக முரண்பாடு ஒழிய வேண்டுமானால் இந்த இனம் அழிந்து சிதைந்து அளயாளமற்றுப்போகவேண்டும் என்பதைத்தவிர வேறு வழியில்லை. மனிதர்களை இணைக்கும் சங்கிலியானது சாதியாலும் அது சார்ந்தவற்றாலும் பிரதேசவாதங்கள் போன்றவரற்றாலுமே இருக்கின்றது. இவ் இணைப்பே ஒரு சமூகமாக இருக்க முற்படுகின்றது தவிர மொழியோ வேறு எந்த தேசிய அடயாளமோ இல்லை. ஏற்றதாழ்வுகாளாலும் முரண்பாடுகளாலும் இணைக்கப்படும் தனிமனிதர்கள் ஒரு சமூகமாகவோ இனமாகவோ என்றைக்கும் இருக்கமுடியாது என்பதே உண்மை.

  • தொடங்கியவர்

இனத்துக்காக காலைக்கொடுத்து சாதியத்தை எதிர்கொள்ள முடியாமல் உயிரை விடுவது நெஞ்சை அறுக்கும் விசயம். எமது சமூகத்துள் இருக்கும் வக்கிரம் எப்படிப்பட்டது என்பதை இவ்வாறான சம்பவங்கள் உணர்த்துக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இவர்களது மரணத்தை பார்க்கும் வரை ஈழத்தில் பெரிதாக சாதீயம் இல்லை என நினைத்திருந்தேன்...பார்த்த பிறகு தான் சிங்களவரை விட எங்களவர் சிலர் கேவலம் என தெரிந்தது...அவர்களது ஆத்மா ஒன்றாக துயில் கொள்ளட்டும்.

புலிகள் இன்று இருந்து இருந்தால் இவர்கள் செத்து இருப்பார்களா? சாதியம் பற்றிப் பேசித்திரிவோர் இதற்க்குப் பதில் சொல்லட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பிற்போக்கு வாதங்களோடு யாழ் களம்..!

போரிற்குப் பின்னால் நிலவும் சூழ்நிலையில்.. போராளிகளின் வாழ்வியல் என்பது மாறுபட்டு நிற்கிறது.

விடுதலையாகியும் எதிரியினால் துன்புறுத்தப்படும் ஒரு வாழ்வியல்.

ஏன் போராளிகளோடு மக்கள் இயல்பாக பழக முடியவில்லை என்றால் அதற்குக் காரணம்.. சாதியம் அல்ல.. சிங்கள இராணுவத்தின்.. அதன் துணைக்குழுக்களின் இருப்பும் அச்சுறுத்தலும்.

மேலும்.. போராளிகள் நீண்ட காலம் சமூக வாழ்வியலில் இருந்து போராட்ட சுமைக்குள் வாழ்ந்தவர்கள். அவர்களை மீண்டும் சமூக வாழ்வியலுக்குள் இணைத்துவிட வேண்டிய பொறுப்பு.. சமூக ஆர்வலர்களைச் சாரும். புலம்பெயர்ந்தும்.. உள்ளூரிலும் இருக்கும் புத்திசீவிகள்.. சமூகவியலாளர்கள்.. ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை வரைந்து அதன் கீழ் அனைத்துப் போராளிகளுக்கும் சமூக மீளிணைவுக்கான வாய்ப்பை.. உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அதைச் செய்யாமல்.. சாதியம் பலியிட்டு விட்டது என்று சாதியத்தை குறைபிடித்து தங்கள் சொந்தத் தவறுகளை மறைக்க நினைக்கும் அதே பழைய பிற்போக்கு வாதத்தால் யாழ் களமும் நிறைந்திருப்பது வேதனைக்குரியது.

செயற்பட வேண்டிய தளத்தை விட்டு.. குறைகளை.. தேடிக் கண்டறிந்து குற்றங்களால்.. செத்துக் கொண்டிருக்கும் சாதிய விசப் பயிருக்கு தண்ணீருற்றும் கணவான்களே.. சிந்தியுங்கள். செயற்பாடல்லாத புத்திமதிகள்.. அல்ல.. இந்தப் போராளிகளின் சமூக வாழ்வியலை மீட்கப் போவது. செயற்பாடுள்ள.. அவர்களை நெருங்கிச் செல்லும் செயல்களே.. அவர்களை மீட்சிப் படுத்தும்..!

இவர்களிற்கு தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய சமூகவியல் ஆர்வலர்களே எமக்குத் தேவை. எதிரியின் பிடிக்குள்ளும் இவர்களுக்கு உதவக் கூடிய தைரியசாலிகளே எமக்கு வேண்டும். சாதியக் கூப்பாடு போட்டு.. தவறுகளை அடுத்தவன் தலையில் போட்டுவிட்டு.. தான் முற்போக்குவாதி என்று அடுத்தவன் சாவில் விளம்பரப் பறைசாற்றும் பிற்போக்கையும்.. சாதியத்தோடு சேர்ந்து அழிக்கும் நிலை வர வேண்டும். அப்போதுதான்.. அறிவியல் பூர்வமான.. சமூக அணுகுமுறைகளோடு.. இந்த மனிதர்களின் சமூக வாழ்வு மீட்கப்பட்டு மீளளிக்கப்படும் நிலை வரும்..!

புத்திசீவிகளே.. சாதிய விமர்சகர்களே சிந்தியுங்கள்..! இப்போராளிகளை நோக்கி.. சமூகவியலை எடுத்துச் செல்லுங்கள். துணிச்சல் மிக்க செயற்பாடுகளை களத்தில் நின்று வழங்குங்கள். தூர நின்று கொக்கரிக்காதீர்கள்..!

உடலால் மேற்கு நாடுகளில் வாழ்ந்து கொண்டும் சிந்தனையால் கீழை நாடுகளில்.. கிடக்கும் நிலை வேண்டாம். மேற்கு நாடுகள் காட்டும்.. சமூகவியலை.. இந்தப் போராளிகளிடமும்.. தாயக மக்களிடமும் எடுத்துச் செல்லுங்கள். போராளிகள் மத்தியில் மன உழைச்சலை.. மன இறுக்கங்களை... பொருண்மிய நெருக்கடிகளை.. களையவும்.. மக்களும் போராளிகளும் ஒருங்கிணையக் கூடிய சமூக செயற்பாடுகளையும்.. ஊக்குவியுங்கள். இதனை தடுப்பவனை.. எதிரிகளை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். நீங்களும்.. கூடவே அவர்களைப் பயங்கரவாதிகள் என்று பார்ப்பீர்களானால்.. முள்ளிவாய்க்காலில் அழிந்தது.. புலிகள் என்று உச்சரிப்பீர்களானால்.. உங்களுக்கும்.. எதிரிகளுக்கும் என்ன வேறுபாடு..! இந்தப் போராளிகளின் சாவிற்கு.. எமது அறியாமைகளும்.. எதிரியின் இருப்புமே காரணம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சமூகத்தில் உள்ள சாதிய பிரச்சனையே எங்களால் தீர்க்க முடியவில்லை எமக்கென்றொரு நாட்டை பெறுவது எப்படி சாத்தியமாகும் ???????

ஒரு ஊனமுற்ற இளைஞனுக்கும் துணிவுடன் அவரை

வாழ்க்கைத் துணையாக ஏற்ற இந்த சகோதரிக்கும்

ஆதரவாக இருக்க வேண்டிய சமுதாயம்

அவர்களின் வாழ்க்கையையே வெறுக்கும் அளவிற்கு

உபத்திரவம் கொடுத்திருக்கின்றது.

சமுதாயம் என்பது வேறு யாரும் அல்ல

நானும் நீங்களும் தான்.

ஆழ்ந்த இரங்கல்கள்

மனச கொல்லுறமாதிரி இந்த திரி!

இத வாசிச்சபோது,.............

என்னாச்சும் எழுதணும்போல இருந்திச்சு......

என்னத்த எழுதணும்னு தெரியவே இல்ல........!

கடைசில வாத்தியார் பின்னாடியே போறேன்......!

சிந்திக்கிற விதமும், பளீர்னு கன்னத்தில அடிக்குறமாதிரி கருத்தும்...

எப்பவும்போலவே....வாத்தியார் உங்க கருத்து!!

போராளியான இவரை கைது செய்து உள்ளே அடைத்து வைத்த எதிரி கூட விடுதலை செய்துவிட்டான்; ஆனால் சாதித் திமிரும் வர்க்க திமிரும் இருக்கும் எங்கள் சனம் இவர்களை கொன்று விட்டது

இங்கு எதிரி யார்?

கவலையான விடையம். ஜரோப்பாவிலும் இப்படி சில நடந்து ஒதுக்க பட்டவர்கள் இருக்கிறார்கள்.... ஆனால் இங்கு அவர்கள் பொருளாதரத்திலும் வேறி சில நடத்தையிலும் சிறப்பாக இருப்பதால் பிரச்சனையில்லை ஆனால் மன அழுத்தங்கள் இருக்கு....

இங்கு எதிரி யார் என்றால்?

சாதி மாறிக் கட்டிய பெரும் தலைகள் எல்லாமே தன்னை விட சாதி கூடின பெண்ணை காட்டிவிட்டு சாதியை ஒழிப்போம் என்றால் எப்படி சாதி ஓழியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம், இது மிகவும் மனவருத்தத்திற்குரிய விடயம். இது போன்ற நிலைமை இனியோருவருக்கு நேராமல் தடுக்க வேண்டியது எமது கடமை. எவ்வாறு தடுக்கலாம்? அவர்களுக்கு அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு ஒரு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இது புலம்பெயர் தமிழர்களாகிய எம்மால் மட்டும் தான் முடியும்.

எம்மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற சிந்தனையால், இன்று கஷ்டப்படும் ஒருவரது வேண்டுகோளை இங்கு இணைக்க விரும்புகிறேன்.

இவர் போரின்போது காயப்பட்டு இடுப்பிற்குக்கீழ் உணர்வில்லை, பெரிய காயம், நடக்க முடியாது. மருந்துகூட வாங்க முடியவில்லை. நிலத்தில் படுப்பதால் காயம் பெரிதாகிறது. மனைவிக்கு ஒரு கால் உணர்வில்லை. மகள் இப்போது ஒரு மனநோயாளி. மகனுக்குத் தோல் சம்பத்தப்பட்ட வருத்தம் உள்ளது. ஒரு நேர உணவிற்குக்கூட தற்போது கஷ்டப்படுகிறார். சுயதொழில் செய்ய விரும்புகிறார். இவர் electronic

repair shop போட விரும்புகிறார்.

இவருக்கு உதவ விரும்புவோர் தயவு செய்து என்னுடன் தொடர்புகொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

உதவி கோரப்படும் தொகை $1500.00 USD for the repair shop and Bed

நீங்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ உதவி செய்யலாம்.

நன்றி

சுபா சுந்தரலிங்கம்

s.suba@tgte.org

:icon_mrgreen::D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.