Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன்- ஜெ.

Featured Replies

தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன்- ஜெ.

தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக இப்போது நான் வெட்கப்படுகிறேன்.அதிமுகவினரை திருப்திப்படுத்தவே விருப்பமில்லாமல் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தேன். தகுதியில்லாதவர்கள் அரசியலில் உயர் நிலையை எட்டினால் தேமுதிகவினர் போலத்தான் நடப்பார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா காட்டமாக கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று தேமுதிகவையும், அதன் தலைவர் விஜயகாந்த்தையும் கடுமையாக விமர்சித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். அவரது பேச்சின்போது தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுவதாக அவர் கோபத்துடன் கூறினார்.

முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க எனக்கு சற்றும் விருப்பமில்லை. ஆனால் அதிமுக தொண்டர்கள் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று விரும்பியதால் அவர்களின் விருப்பப்படியே கூட்டணி வைத்தேன். எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் கூட கட்சியினரின் விருப்பத்தை மதித்துக் கூட்டணி வைத்தேன்.

ஆனால் தகுதியே இல்லாத அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்ததற்காக இப்போது நான் வெட்கப்படுகிறேன். விஜயகாந்த் இன்று சட்டசபையில் நடந்து கொண்டதைப் பார்க்கும்போது தகுதி இல்லாதவர்கள் அரசியலில் உயர் நிலையை எட்டினால் இப்படித்தான் ஆகும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டசபையில் இன்று பேசிய பேச்சுக்கள் மிகவும் கீழ்த்தரமானது. சபையின் மாண்பை அவரது பேச்சு குலைத்து விட்டது

எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தில் இப்போது விஜயகாந்த் இருப்பதற்கும், அவரது கட்சி இந்த மாண்பு மிகுந்த சட்டசபைக்குள் நுழைவதற்கும் அதிமுகவும், அதன் தொண்டர்களும், எங்களது உழைப்பும்தான் காரணம் என்பதை அவர்கள் உணர வேண்டும். நாங்கள் இல்லாவிட்டால் உங்களுக்கு ஒரு சீட் கூட கிடைத்திருக்காது.

அதேசமயம் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்திருக்காவிட்டாலும் கூட அதிமுக அமோக வெற்றி பெற்றிருக்கும். காரணம், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள்.

ஆனால் அதிமுகவுடன் இணைந்ததால் தேமுதிகவுக்குத்தான் அதிர்ஷ்டம் அடித்தது. அந்தக் கட்சிக்கு 29 சீட்கள் கிடைத்தன. அக்கட்சிக்கு முதன்மை எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தும் கிடைத்தது.அத்தனைக்கும் காரணம் அதிமுகதான்.

ஆனால் இனிமேல் தேமுதிவுக்கு இறங்குமுகம்தான். அதை நான் திட்டவட்டமாக சொல்லிக் கொள்கிறேன் என்று கடுமையாக சாடினார் ஜெயலலிதா

http://www.alaikal.com/news/?p=95602

  • கருத்துக்கள உறவுகள்

தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன்- ஜெ.

விஜயகாந்த் இன்று சட்டசபையில் நடந்து கொண்டதைப் பார்க்கும்போது தகுதி இல்லாதவர்கள் அரசியலில் உயர் நிலையை எட்டினால் இப்படித்தான் ஆகும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டசபையில் இன்று பேசிய பேச்சுக்கள் மிகவும் கீழ்த்தரமானது. சபையின் மாண்பை அவரது பேச்சு குலைத்து விட்டது

விஜயகாந்த் என்ன பேசினார் என்பதனையும் இணைத்தால் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளு மன்றத் தேர்தலில் தி மு க வுடன் தே தி மு க

கூட்டணி வைக்க வுரும்புகின்றது.

அதற்கான ஏற்பாடுகள் தான் இவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Edited by சித்தன்

இது என்ன சட்டசபையா இல்லை சாக்கடையா? இதுக்குள்ள இந்த நாயளுக்கு வல்லரசு என்ட கனவு வேற.

கன்றாவி விஜயகாந்த்...........

தன்னை தானே கெடுத்துக்குது...!

அட சீ.....தன்னோட படத்துல ,,

இந்தியாவ பாகிஸ்தான் தீவிரவாதிகளிட்ட இருந்து காப்பாத்துற மாதிரி .......

நாக்க கடிச்சுகிட்டு ,தலையை சிலிர்த்துகிட்டு .பில்டப் கொடுக்குறாரே .....

கோமாளிபோல ....ஒரு சட்ட சபைல !

சித்தப்பு விஜயகாந்த்..... நீங்க ஒரு மாநிலத்தோட முதல்வராக...

விஷயம் இல்லாத காந்த்!

அப்பிடிதான் இனி மக்கள் பேசிக்குவாங்க!

சித்தன் கொடுத்த லிங்க் ல 0:12 செக் பாருங்க,,, சிங்கம் எப்பிடி பம்முதுன்னு.....

அப்புறம் 3:18 ல ..?? வடிவேலு சொன்னமாதிரி..........

நிஜமாவே இவரு தண்ணி சாமிதான்! :)

அதை விட விஐயகாந்த்துக்கு பின்னால இருக்கிற ரெண்டு பெண்களையும் பாருங்கோ. என்ன பண்ணுறது என்டு முழிக்கினம்.

இதுக்குள்ள ஒருத்தர் விஐயகாந்தை நோக்கி "இது சினிமா இல்ல ஒராள் பத்து பேரை அடிக்க" என்டு குரல் விடுகிறார். :D :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் கட்சியில் இருக்கும் போது இந்த அ மு கா சேட்டைபிடித்து எழுத்து சண்டையே போட்டிருக்கு.

இப்போ நாகாரீகம் பற்றி பேசுது.

"யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சொவ்கியமே. கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது."

எதிர் கட்சியில் இருக்கும் போது இந்த அ மு கா சேட்டைபிடித்து எழுத்து சண்டையே போட்டிருக்கு.

இப்போ நாகாரீகம் பற்றி பேசுது.

"யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சொவ்கியமே. கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது."

  • கருத்துக்கள உறவுகள்

திமுக காங்கிரசினை உதறிவிட்டு தேமுதிகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது. அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைத்து மதிமுக, பாட்டாளிமக்கள் கட்சியையும் சேர்க்க விரும்புகிறது. அண்மையில் சோ அவர்கள் வைகோவினைச் சந்தித்ததாக ஒரு செய்தி அடிபடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாதான் பிரச்சினையைத் தொடங்கினமாதிரி தெரியுது..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா - விஜயகாந்த் காரசார மோதல்

தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கும் இடையே கடும் காரசார மோதல் மூண்டது.

இதன் இறுதியில் விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக உறுப்பினர்கள் அவையிலிருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

சட்டசபை இன்று கூடியதும் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்து தே.மு.தி.க. உறுப்பினர் சந்திரகுமார் கேள்வி எழுப்பினார்.

அதற்கு முதல்வர் ஜெயலலிதா எழுந்து இதுகுறித்து பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

அதற்கு சந்திரகுமார் என்ற தேமுதிக எம் எல் ஏ எழுந்து இதை ஏன் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு செய்யவி்ல்லை.அப்போதே செய்திருக்கலாமே என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த முதல்வர், விலை ஏற்றத்திற்கு பின்னர் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.,

தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறும் என்று ஆவேசமாக கூறினார். உங்களுக்குத் திராணி இருந்தால் தனித்து நின்று பாருங்கள் என்றும்

விஜயகாந்த்தைப் பார்த்துக் கூறினார்.

இதைக் கேட்டு எழுந்த விஜயகாந்த் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி எப்படி வெற்றி பெறும் என்பது பற்றி அனைவருக்கும் தெரியும் என்றார்.

அதற்கு மீண்டும் எழுந்த ஜெயலலிதா தே.மு.தி.க.,விற்கு தனித்து போட்டியிட திராணி உள்ளதா. பெண்ணாகரம் இடைத்தேர்தலில்

தே.மு.தி.க. டெபாசிட் இழந்தது என கூறினார்.

தேமுதிக உறுப்பினர்கள் எழுந்து கடுமையாக கோஷமிட்டனர். பதிலுக்கு அதிமுகவினரும் கோஷமிட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தேமுதிக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர்..ஆளுநர் ஆட்சி எனில் தனித்து நிற்கத் தயார் என விஜய்காந்த் கூறினார்

http://tvrk.blogspot.com.au/2012/01/blog-post_31.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தம்மா எத்தினை தடவைதான் வெக்கப்படுறது...

வீடியோவைப் பார்க்க என்ன கையப் புடிச்சு இழுத்தியா காமடிதான் நினைவுக்கு வருகுது.... :lol:

http://www.youtube.com/watch?v=0IFrpNko-Es

தகுதிய பத்தி யார் பேசறது ஜெயலலிதா?

சந்திரகுமார் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்து கேள்வி கேட்டா?

ஜெயலலிதா, சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க எனக்கு சற்றும் விருப்பமில்லை என்று சொல்லுறாங்க. அவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்க.

கந்தப்பு

பெண்ணாகரம் இடைத்தேர்தலில் அதிமுக ,தேமுதிக ரெண்டும் தான் டெபாசிட் இழந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் உங்களை நம்பியதிற்கு...?

வி.காந் - கள்ளுக்கடை என்று நினைத்துவிட்டார் போல

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க. வுடன் எவரும் நிரந்தர நண்பர்களாக இருந்ததாக... சரித்திரமே இல்லை.

முன்பு பா.ம.க. ராமதாஸ் இருந்தார், ம.தி.மு.க. வைகோ இருந்தார்... எல்லோரும் அவமானப் படுத்தப் பட்டு வெளியேற்றப்பட்டவர்களே. இப்போது தே.மு.தி.க. விஜயகாந்தின் முறை. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்காமல்... அ.தி.மு.க. தனித்து தனது வேட்பாளர்களை அறிவித்த போதே.... பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது.

தி.மு.க. இனி விஜயகாந்தை தனது பக்கம் இழுக்க... செங்கம்பளம் விரிக்கவும் தயாராகிவிட்டது.

இதுக்குள்ளை, தமிழக காங்கிரஸ் என்ன செய்யலாம்... என்று நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டுள்ளது.

இனி... தமிழக அரசியலில் நல்ல நகைச்சுவையான காட்சிகளை நாம் கண்டு களிக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சட்டசபை வாசலில் வைத்து எல்லாரையும் ஊத விட்டுதான்(அல்ககோல் அளக்கும் கருவியை) உள்ள விட வேணும். :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

மதிமுகவை உதாசீனப்படுத்திய ஜெ. இன்றாவது உணர்வாரா?

அன்று தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க கடுமையாக முயன்று வந்ததால், தனக்கு உற்ற தோழனாக, பாசம் மிக்க உடன் பிறவா சகோதரனாக கூடவே இருந்து வந்த வைகோவை உதாசீனப்படுத்திய முதல்வர் ஜெயலலிதா, இன்றாவது வைகோவின் அருமையையும், மதிமுகவின் நாகரீகத்தையும் உணர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுகவிலிருந்து பிரிந்து வந்த வைகோ மதிமுகவை ஆரம்பித்த பின்னர் அக்கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது அதிமுகவால்தான்.இதை இன்றளவும் வைகோ மறக்கவில்லை, மதிமுகவும் மறக்கவில்லை.

இடையில் மீண்டும் திமுகவுடன் நட்பு பாராட்டிய வைகோ, 2006 சட்டசபைத் தேர்தலில் திமுக தனக்கு தேவையான சீட்களை ஒதுக்காததால் மனம் உடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டார். அப்போது அவரை அழைத்து 35 சீட்களைக் கொடுத்து போட்டியிட வைத்தார் ஜெயலலிதா. தேர்தலில் அதிமுக கூட்டணி தோற்றது என்றாலும் வைகோ, ஜெயலலிதாவின் தோழமை உறுதியாகவே இருந்தது.

இந்த நிலையில்தான் 2011 தேர்தலில் திடீரென மதிமுகவை விட்டு அதிமுக விலகத் தொடங்கியது. சட்டசபைத் தேர்தலில் வெல்ல வேண்டுமானால் அதிமுகவின் ஓட்டுக்களைப் பிரித்து வரும் தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க வேண்டும் என்று சிலர் பலரால் கொடுக்கப்பட்ட ஆலோசனையை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா வைகோ ஓரம் கட்டினார். தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டினார்.

அந்தத் தேர்தலில் வைகோ தனது கட்சியினருக்காக 21 சீட்களை மட்டுமே கேட்டார். கடந்த தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்டிருந்தாலும், கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வருவதால் இந்த அளவுக்கு இறங்கி வந்தார் வைகோ.

ஆனால் 6 சீட்தான் என்று அடிமாட்டு ரேஞ்சுக்கு இறங்கிப் பேரம் பேச ஆரம்பித்தது அதிமுக. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் வைகோ. சில நாட்கள் பேச்சுவார்த்தைக்குக் கூட அவர் போகவே இல்லை, அவ்வளவு அதிர்ச்சி கிடைத்தது அவருக்கு.

அதிமுகவும் வைகோவைக் கண்டு கொள்ள்ளவில்லை. தேமுதிகவுடன் தொடர்ந்து ரகசியமாகவே பேசி வந்தது. இடதுசாரிகளைக் கூட அதிமுக கண்டு கொள்ளவில்லை. பிற கட்சிகளையும் கூட அது கண்டு கொள்ளவில்லை.

தேமுதிகவுடனான உறவு இறுதியாகும்வரை அக்கட்சியைத் தவிர வேறு கட்சிகள் குறித்து அதிமுக கவலைப்படவில்லை என்பது அனைவருக்குமே தெரியும். தேமுதிகவுடன் ரகசியமாக நடந்து வந்த பேச்சுவார்த்தை முடிந்து உடன்பாடு ஏற்பட்ட பிறகுதான் பிற கட்சிகள் குறித்த நினைவே ஜெயலலிதாவுக்கு வந்தது.அதுவரை இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட அனைத்துமே காத்துக் கிடந்தன -பெரும் விரக்தியுடன்.

அதன் பிறகும் கூட மதிமுகவை அதிமுக பேச்சுக்கு அழைக்கவில்லை. மாறாக சரத்குமார் கட்சி, டாக்டர் சேதுராமன் கட்சி, புதிய தமிழகம் கட்சி எனகுட்டிக் கட்சிகளுன் பேச்சுவார்த்தை நடத்தினர். இடதுசாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மதிமுகவை அழைக்கவே இல்லை.

வெறுத்துப் போன வைகோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவுக்கு வரப் போகிறார் என்று தெரிந்தவுடன்தான் மறுபடியும் அவரது கட்சியைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அப்போது 8 சீட் தருவதாக கூறினர். இதையும் வைகோ ஏற்கவில்லை. பிறகு மீண்டும் கிடப்பில் போடப்பட்டது மதிமுக.

அதன் பின்னர் நீண்ட இழுபறிக்குப் பின்னர் 12 சீட் தருவதாக கூறினார்கள். ஆனால் இம்முறை வைகோ திட்டவட்டமாக கூறி விட்டார் – 21 சீட் தந்தால் பேசலாம் என்று. அது முடியாது என்று வைகோவிடமேநேரடியாக கூறி விட்டது அதிமுக. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த வைகோ தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து விட்டு ஒதுங்கிக் கொண்டார். அப்போதும் கூட அவர் ஜெயலலிதாவையோ அல்லது அதிமுகவையோ விமர்சிக்கவில்லை.

பெருத்த மன வேதனையுடன் மதிமுக தேர்தல் களத்திலிருந்து ஒதுங்குவதாக அவர் கூறினார். இதையடுத்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், மதிமுகவின் முடிவுக்கு தனக்கு வேதனை அளிப்பதாக கூறினார். இருப்பினும் வைகோவின் அன்புச் சகோதரியாக தான் எப்போதும் இருப்பேன் என்றும் கூறியிருந்தார்.

அன்று வேண்டி வேண்டி அழைத்த தேமுதிகவை இன்று எட்டி உதைத்து விட்டார் ஜெயலலிதா. மேலும், இப்படிப்பட்ட கட்சியுடன் போய் கூட்டணி வைத்தேன் என்று நினைக்கும்போது பெரும் வேதனையாக இருக்கிறது என்றும் கோபத்துடன் கூறியுள்ளார்.

ஆனால் அன்று மதிமுக வெறும் 21 தொகுதிகளைத்தான் கேட்டது. அதைக் கூட கொடுக்க முடியாமல் தேமுதிகதான் வேண்டும் என்று உறுதியாக இருந்தது அதிமுகதான். இதை தமிழக மக்கள் நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள்.

அன்று அவ்வளவு தூரம் இறங்கி வந்து கெஞ்சினார் வைகோ. ஆனால் இருந்த இடத்திலிருந்தே அடாவடியாக பேரம் பேசியவர் விஜயகாந்த். இப்போதாவது ஜெயலலிதா புரிந்து கொண்டார் சரித்தான்…

http://www.alaikal.com/news/?p=95706

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

01.jpg 09.02.12 கவர் ஸ்டோரி

ண்கள் சிவக்க... நாக்கைக் கடித்தவாறு ஆவேசமாக வசனங்களைப் பேசும் விஜயகாந்தை சினிமாவில் மட்டுமே பார்த்திருப்போம். அதே விஜயகாந்தை சட்டமன்றத்திலும் நேரில் பார்த்து அதிர்ந்து போனார்கள் ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.க்களும்.

சட்டமன்றத்தில் முதல்முறையாக முதல்வர் ஜெயலலிதாவும், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தும் நேரிடையாக மோதிக்கொண்டது எதார்த்தமாக நிகழ்ந்தது அல்ல என்ற செய்தியும் அரசியல் வட்டாரத்தில் கசிகிறது. இதன் பின்னணியை அறிய, தே.மு.தி.க. முக்கிய நிர்வாகிகளிடம் விசாரித்தோம். மோதலுக்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போனார்கள்.

‘‘சட்டசபை விவாதத்திற்கு முன்னதாக அன்று காலையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமான பதினைந்து லட்ச ரூபாய்க்கான ‘செக்’கை முதல்வரிடம் வழங்க முதல்வர் அலுவலகத்திற்குச் சென்ற பண்ருட்டி ராமச்சந்திரனையும், எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமாரையும் முதல்வர் அலுவலக அதிகாரிகள் நீண்ட நேரம் நிற்க வைத்திருக்கிறார்கள். இதுவும் கேப்டனின் கவனத்துக்குப் போனது. பண்ருட்டிக்கு ஏற்பட்ட அவஸ்தையை தானும் அனுபவித்த சந்திரகுமார், அதனாலேயே சட்டசபையில் கூடுதலாகப் பொங்கியிருக்க லாம்’’ என்று சட்டசபை மோதலுக்கான காரணத்தைக் கூறுகிறார்கள்.

அதேசமயம், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் எல்லா கட்சிகளுமே தனித்து நின்று தங்கள் பலத்தை சோதித்துக்கொண்டாலும், அடுத்து வருகிற நாடாளு மன்றத் தேர்தலில் கூட்டணி களைத் தவிர்க்க முடியாது. இந்தச் சூழலில் தே.மு.தி.க.மீது முதல்வர் உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்தி யிருப்பது எங்கள் கட்சிக்கு நெருக்கடியை உருவாக்கும்’’ என்பதையும் தே.மு.தி.க.வினர் வெளிப்படையாகவே விவாதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘இனி தே.மு.தி.க.வுக்கு அரசியலில் இறங்குமுகம்தான்’ என சட்டசபையில் முதல்வர் வீசிய சாட்டையடி வார்த்தைகள், தே.மு.தி.க.வை தி.மு.க. பக்கம் கொண்டு செல்லும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

‘‘எட்டே மாதத்தில் ஒட்ட முடியாத அளவுக்கு உடைந்துவிட்டது இந்தக் கூட்டணி. இதன் எதிரொலியாக அடுத்தடுத்த தேர்தல்களில் தனது பலத்தை நிரூபிக்கவேண்டிய நெருக்கடி விஜயகாந்துக்கு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி இவ்வளவு காலமும் நீடித்ததே அதிசயம்’’ என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

கடந்த தேர்தலில் அல்லாடிக்கொண்டிருந்த சூழலில், அ.தி.மு.க. கூட்டணியைத் தவிர தே.மு.தி.க.வுக்கு மாற்று வழி இல்லை. தவிர, இரு கட்சிகளிலும் உள்ள இரண்டாம்கட்டத் தலைவர்கள் அதிகார ‘ருசி’க்காக கூட்டணி முடிச்சை இறுக்கிக் கட்டுவதில் மும்முரமாக இருந்து, அதைச் சாதித்தும் காட்டினார்கள்.

தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றபிறகு, பல கட்டங்களில் விஜயகாந்த் அடக்கியே வாசித்தார். எதிர்காலத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் கனவு இருந்தாலும்கூட கூடங்குளம், முல்லைப் பெரியாறு விவகாரங்களில் மத்திய அரசை வெளிப்படையாகவே போட்டுத்தாக்கிய விஜயகாந்த், மாநில அரசுக்கு எதிராக ‘கண்டனம்’ என்கிற வார்த்தையைக்கூட உபயோகிக்கவில்லை. 2014-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரையிலாவது கூட்டணி ‘தேரை’ தள்ளிக்கொண்டு போய்விடவேண்டும் என விஜயகாந்த் திட்டமிட்டிருந்ததுதான் இதற்குக் காரணம். ஆனால். சட்டசபையில் நடந்த காரசார மோதல் எல்லாவற்றுக்கும் முடிவுகட்டிவிட்டது’’ என்கிறார்கள்.

இதுபற்றி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் பேச்சுக் கொடுத்தபோது, “சட்டசபையில் ஆளும்கட்சியை கடினமான வார்த்தைகளால் குறைகூறாமல், மக்கள் பிரச்னைகளை மட்டும் சுட்டிக்காட்டவேண்டும் என்பதுதான் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கேப்டன் கொடுத்திருந்த அறிவுரை. கவர்னர் உரை மீதான விவாதத்தில் கடந்த 31-ம் தேதி பேசிய எங்கள் கட்சி அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் அதைத்தான் கச்சிதமாகச் செய்தார்.

ஆனால், இந்த அணுகுமுறை தே.மு.தி.க. இளம் எம்.எல்.ஏ.க்கள் பலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் கேப்டனிடம், ‘பண்ட்ருட்டியாரின் பேச்சால் முதல்வரிடம் நாம் பணிந்து போவது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டது. இது நம் கட்சிக்கு நல்லதில்லை’ என தூபம் போட்டிருக்கிறார்கள். அன்று முழுக்க தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களிடம் இது பற்றிய பேச்சுத்தான் சீரியஸாக ஓடியிருக்கிறது.

இந்தச் சூழலில்தான் (1-ம் தேதி தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.வுமான வி.சி.சந்திரகுமார் பேசுவதென்று முடிவு செய்யப்பட்டிருந்தது. தனது பேச்சுக்கான குறிப்புகளை முன்தினம் இரவே கேப்டனைச் சந்தித்துக் காட்டியிருக்கிறார். அதில் மாநில அரசை நேரடியாகத் தாக்கும் விதமாக இருந்த சில வார்த்தைகளைப் பார்த்த அவர், ‘அவங்க கூட்டணியிலதான் நாம ஜெயிச்சோம். தி.மு.க.வினர் மாதிரியெல்லாம் நாம பேசக்கூடாதப்பா’ எனச் சொல்லி சில திருத்தங்களைச் செய்து கொடுத்திருக்கிறார்.

எனவே பக்குவமாகப் பேசும் மனநிலையில்தான் சந்திரகுமாரும் போனார். அதன்பிறகு பால் விலை உயர்வு சம்பந்தமான விவாதத்தின்போது பேசிய பால்வளத்துறை அமைச்சர் மூர்த்திதான் விவாதத்தை தேர்தல் அரசியல் பக்கம் திருப்பிவிட்டார். இளைஞரான சந்திரகுமாரிடம், பண்ருட்டியார் அளவுக்கு பக்குவத்தை எதிர்பார்க்க முடியாதுதானே? அவரும் ‘பட’க்கென்று, ‘உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே பால் விலையையும், பஸ் கட்டணத்தையும் நீங்கள் உயர்த்தியிருக்கவேண்டியதுதானே?’ எனக் கேட்டுவிட்டார். இதனால், ‘அடுத்து வருகிற சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திராணி இருந்தால் நீங்கள் தனியாகப் போட்டியிடுங்கள்’ என முதல்வர் சவால் விடும் அளவுக்கு விவகாரம் முற்றிவிட்டது.

கேப்டனைப் பொறுத்தவரை சங்கரன்கோவிலில் களமிறங்கும் திட்டம் இதுவரை இல்லை. ஆனால் ஜெயலலிதா சவால் விட்டிருப்பதால், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும், ‘நாம் அங்கு போட்டியிட்டே தீரவேண்டும்’ என வலியுறுத்தியிருக்கிறார்கள். எனவே, ‘கவர்னர் ஆட்சியில் இடைத்தேர்தல் நடந்தால் போட்டியிடத் தயார்’ என்கிற தனது நிலையிலிருந்து கேப்டன் இறங்கி வருவார் என்றே நினைக்கிறோம்’’ என்கிறார்கள் நம்பிக்கையுடன்.

சட்டமன்றத்தில் வி.சி.சந்திரகுமார் பேசிக் கொண்டிருந்தபோது விவாதத்தை விறுவிறுப்பாக்கியதில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கும் பங்கு உண்டு. இருவரும் ஒரே மாவட்டத்துக்காரர்கள். ஈரோடு அரசியலில் ஏற்கெனவே இவர்களுக்குள் உரசல் உண்டாம். பால் விலை பற்றி சந்திரகுமார் பேசிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட செங்கோட்டையன், ‘ஒழுங்காக விவரம் தெரிந்தால் பேசுங்கள். பால் விநியோகம் சம்பந்தமாக மாடு வைத்திருந்த எங்களைப் போன்றோருக்குத்தான் தெரியும்’ என்றார் காட்டமாக. அதற்கு சந்திரகுமார், ‘நானும் பால் வியாபாரம் செய்தவன்தான்’ என்றார் பதிலடியாக. இவர்களின் மோதல் ஈரோடு அரசியலிலும் எதிரொலிக்கும் என்கிறார்கள்.

‘உங்கள் ஆவேசப் பேச்சால் இரு கட்சிகளின் கூட்டணியே உடைந்துவிட்டதே?’ என தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சந்திரகுமாரிடம் கேட்டபோது, ‘‘கேப்டன் உத்தரவுப்படி மிக கண்ணியமாகவே சபையில் நடந்துகொண்டோம். ஆளும்கட்சியினருக்கு விமர்சனங்களைக் கேட்கும் சகிப்புத்தன்மை இல்லை’’ என்றார்.

இந்நிலையில், தே.மு.தி.க.வின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘கடந்த தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க., மக்கள் பிரச்னைகளுக்காக பெரும் நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அதேபோல், மக்கள் பிரச்னைகளைக் கையில் எடுத்துக்கொண்டு தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டங்களை நடத்த கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. கூட்டணி குறித்து கேப்டன் எதுவும் முடிவு செய்யவில்லை. ஆளுங்கட்சி ஆதரவு இனிமேல் கிடைக்காது என்பதால் கட்சி எம்.எல்.ஏ.க்களை தொகுதியில் தீவிரமாக கவனம் செலுத்துமாறு கேப்டன் அறிவுறுத்தியுள்ளார்’’ என்றார்.

கூட்டணி தர்மம் என்றால் என்ன?

சட்டசபையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அன்று மதியம் மீடியாக்களைச் சந்தித்தார் விஷயகாந்த். ‘என்னுடைய அரசியல் வேறு மாதிரி’ என்று ஆரம்பத்திலேயே விறுவிறுப்பை ஏற்றியவர், ‘ஆளுநர் ஆட்சியின் கீழ் தேர்தலைச் சந்திக்கத் தயாரா’ எனக் கேட்ட அதே கேள்வியை மீண்டும் முன் வைத்தார். தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜினாமா செய்யத் தயார் என்றும் அ.தி.மு.க. தயாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

சட்டசபையில் மக்கள் பிரச்னைகளை முன்வைக்க விடமாட்டேன் என்கிறார்கள் ஆளும்கட்சிக்காரர்கள் என்று குற்றம் சுமத்தியவர், ‘கூட்டணி தர்மம் என்றால் என்ன’ என்ற கேள்வியை எழுப்பி அதிர வைத்தார். தனக்கு தகுதி இல்லை என்று சொன்னதற்காக கடும் கண்டனத்தையும் தெரிவித்தார்.

‘சட்டசபை நிகழ்ச்சிகளை தூர்தர்ஜன் மூலம் ஒளிபரப்ப வேண்டும்’ என்றவர், ‘அ.தி.மு.க. உறுப்பினர்களும் கையை நீட்டிப் பேசியதை ஏன் ஒளிபரப்பவில்லை’ என்றார்!

-குமுதம் ரிப்போட்டர்

  • கருத்துக்கள உறவுகள்

09.02.12 வம்பானந்தா

தேகப் பயிற்சிகளை முடித்த வம்பானந்தா, முகத்தை ரீஃப்ரெஷ் செய்துகொண்டு குடிலுக்குள் நுழைந்தார். அவருக்காகக் காத்திருந்தது ஆவி பறக்கும் காபி. அதைக் குடித்து முடித்துவிட்டு தம்ளரை டேபிளில் வைத்தபோது, விரல்களை நீட்டி ஏதோ சொல்ல எத்தனித்தார் சிஷ்யை.

‘‘அம்மணி... அமைதி, அமைதி! உன் முகத்தில் கோபம் இல்லை; நாக்கையும் கடித்துக்கொள்ளவில்லை. இருந்தும், நமது ஆசிரம சட்டத்தில் விரல்களை நீட்டிப் பேசுவது தவறு. அது உரிமை மீறல் சம்பந்தப்பட்டது... புரிந்துகொள்’’ என்று நக்கலாகச் சொன்னார் வம்பானந்தா.

‘‘ஓஹோ, கதை இப்படித்தான் போகிறதோ..! தே.மு.தி.க. விஜயகாந்த் போல ஆரம்பித்துவிட்டீர்கள். அப்படியே முதல்வர் ஜெயலலிதா போல் முடித்துவிடுங்கள்!’’ சிரித்தார் சிஷ்யை.

‘‘கற்பூர புத்திதான்... ஜனவரி 31-ம் தேதி புதிய ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியதும், கவர்னர் ரோசய்யா தனது உரையில் வழக்கம்போல் அரசின் நலத்திட்டங்கள், ‘தானே’ புயலின் பாதிப்பை சமாளித்தது குறித்தெல்லாம் புகழ்ந்து தள்ளிவிட்டார். அடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம் அரங்கேறியது. எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அன்று வரவில்லை. துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்தான் பேசினார். ‘புயல் பாதித்த மாவட்டங்களில் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லை’ என்று பேசியதுமே, இந்த அரசு குறுகிய காலத்தில் என்னென்ன செய்தது என அடுக்கிய முதல்வர், ‘இக்கட்டான இந்த சூழ்நிலையில் தமிழக அரசு போல விரைந்து செயல்பட்ட ஒரு மாநில அரசைக் காட்ட முடியுமா? துணைத் தலைவரால் சுட்டிக்காட்ட முடியுமா?’ என சவால்விட்டார். அ.தி.மு.க. - தே.மு.தி.க. அரசியல் குஸ்திக்கு இதுதான் பிள்ளையார் சுழி.’’

‘‘சரி...’’

‘‘பண்ருட்டி, ‘அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதுதான் எதிர்க்கட்சியின் பணி. எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச் செய்வது எதிர்க்கட்சி ஆகாது.. ஆளுநர் உரையில் நிறைகளும் உள்ளன; குறைகளும் இருக்கின்றன’ எனச் சொல்லிய பிறகுதான் ‘சவால்’, சூளுரை எல்லாம் அரங்கேறியது. பண்ருட்டியின் இந்தப் பேச்சு விஜயகாந்துக்குப் பிடிக்கவில்லையாம். தனது நெருக்கமான கட்சிப் பிரமுகர்கள் சிலரிடம், ‘அடுத்தடுத்த கட்டங்களில் நமது கட்சியை வளர்ப்பதற்கு முதல் காரியம் எதிர்ப்பைக் காட்டுவதுதான். அதுதான் எதிர்க்கட்சியின் லட்சணம். இவர் என்னவோ நிறைகள் இருக்கின்றன, குறைகள் இருக்கின்றன... எல்லாவற்றுக்கும் எதிர்ப்புக் காட்டக்கூடாதுனு அந்த ஆளுங்கட்சிக்கு ஜவ்வாதைப் பூசியிருக்கிறார்’ என வெடித்தாராம்.’’

‘‘உங்கள் பாயின்ட் புரியுது சுவாமி, புரியுது.. ஓஹோ, பிப்ரவரி 1-ம் தேதி கேப்டன் சட்டசபைக்கு வந்து மோதியதற்குப் பின்னணி இதுதானா!’’ வியந்தார் சிஷ்யை.

‘‘கரெக்ட். ஆனால், முதலில் தலை ஆடக் கூடாதில்லையா... அதனால் வால் ஆரம்பித்தது. தே.மு.தி.க.வின் கொறடா சந்திரகுமார் எடுத்ததுமே பஸ் கட்டண உயர்வு, பால் விலை என ஆளும்கட்சி மீது குற்றப்பத்திரிகையை ஆரம்பித்துவிட்டார். சபாநாயகர் ஜெயகுமார், ‘இதற்கெல்லாம் ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டது’ எனச் சொல்லியும் முற்றுப்புள்ளி வைக்காமல் பேசிக்கொண்டே இருந்தார் கொறடா. உடனே, அ.தி.மு.க. உறுப்பினர்கள் பதிலுக்கு கூச்சலிட்டனர். இந்த சச்சரவுக்கு இடையில் ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஆகியோர் பதில் சொன்னாலும், தே.மு.தி.க. உறுப்பினர்கள் ஓயவில்லை. அப்போது பால்வளத் துறை அமைச்சர் டி.மூர்த்தி சட்டென்று கடந்த சட்டமன்றத் தேர்தல் குறித்துப் பேச, விவாதத்தின் திசை மாறியது. இதில் ஆங்காங்கே பேசிய ஜெயலலிதா ஒரு கட்டத்தில், ‘சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனியாக நிற்க முடியுமா?’ எனச் சொல்ல, எழுந்தார் கேப்டன்... அப்புறம் என்ன... ‘நீயா நானா?’ என காரசார விவாதங்கள் அரங்கேற ஆரம்பித்தன. நாக்கைக் கடித்தபடி விரல் நீட்டி விஜயகாந்த் பேச, அடுத்து நடந்ததுதான் உனக்குத் தெரியுமே!’’

‘‘ஆக, உங்களது ஓபனிங்கை நியாயப்படுத்திவிட்டீர்கள்!’’ கலாய்த்தார் சிஷ்யை.

கலகலவென சிரித்த வம்பானந்தா, ‘‘இந்த அமளியைப் பார்த்த பிறகுதான் முதல்வர் தன் முடிவை தீர்மானகரமாகச் சொன்னார். ‘எதிர்க்கட்சித் தலைவரின் நடவடிக்கைகள் தகுதியில்லாதவை.. எனது அணியால்தான் இந்தக் கட்சியின் உறுப்பினர்கள் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். இவர்களோடு கூட்டணி வைத்துக்கொள்ள சற்றும் விரும்பவில்லை.. என் கூட்டணியில் இல்லாமல் இருந்திருந்தால், அவர்களுக்கு ஒரு சீட் கூட கிடைத்திருக்காது. இவர்களைப் பார்த்து வருத்தப்படுகிறேன். வெட்கப்படுகிறேன்..’ என பொரிந்து தள்ளிவிட்டார். அவையிலிருந்து வெளியே வந்த விஜயகாந்தும் ‘கவர்னர் ஆட்சி வந்தால் தேர்தலைச் சந்திக்க நாங்களும் தயார்’ என்று பதில் சவால் விட்டிருக்கிறார்.’’

06a.jpg

‘‘அவர்களது அடுத்த மூவ் என்ன?’’

‘‘கவர்னர் ஆட்சி வந்தால் இடைத்தேர்தலைச் சந்திக்கத் தயார் என்று விஜயகாந்த் சொன்னதை அரசியல் வட்டாரத்தில் அர்த்தத்தோடு பார்க்கிறார்கள். ஏற்கெனவே அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறியவர்களுடன் தி.மு.க. ரகசிய பேச்சு நடத்தி வருவதாக உளவுத்துறை முதல்வருக்குத் தகவல் சொல்லியிருக்கிறதாம். கட்சியில் இருந்து வெளியேறியவர்களையும், விஜயகாந்தையும் வைத்து தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி ஏதும் நடக்கிறதோ என்ற சந்தேகமும் இருப்பதாகச் சொல்கிறார்கள். சட்டசபை மோதல் குறித்து கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘எதிர்க்கட்சிகளை எப்படி நடத்துவது என்பதற்கு அ.தி.மு.க.வுக்கென தனி ‘பாணி’ உண்டு. அதுதான் இப்போதும்’ என்று சொன்னார். ‘அவர் பேச்சில் சூட்சுமம் உண்டு’ என்கிறார்கள் விவரமறிந்த சிலர்...’’

‘‘என்ன சூட்சுமம்?’’

‘‘கருணாநிதி தனக்குப் பிடிக்காத நபர்களையும் சரி, கட்சிகளையும் சரி தன் வார்த்தை விளையாட்டில் சில சூட்சுமங்களை வைத்து தேவையென்றால், அவர்களை தன் அருகிலும் சேர்த்துக்கொள்வார்; இல்லை என்றால் அண்டவும் விடமாட்டார். தே.மு.தி.க. விலகினால் அறிவாலயத்தின் வாசல்கள் திறந்துதானே இருக்கும். ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். தே.மு.தி.க. உண்ணாவிரதத்துக்கு ஆதரவு கொடுக்க தி.மு.க. முன்வந்ததையும், அதற்கு விஜயகாந்த் மறுத்ததையும். கருணாநிதியின் மகள் செல்வி மூலம் விஜயகாந்த் மனைவியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதையும் சொல்லியிருக்கிறேன். சட்டசபை சம்பவம் மூலம் இருவரும் நெருங்கி வருகிறார்கள். இது சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.’’

‘‘ஓஹோ!’’

‘‘ஆனால், இதுகுறித்து அ.தி.மு.க. தலைவியும் யோசிக்காமல் விட்டுவிடுவாரா என்ன... உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் விஜயகாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பறிக்க முயற்சி நடந்தது பற்றிச் சொல்லியிருந்தேன். தே.மு.தி.க.வின் பெரிய தலைகள் சிலர் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.. பல சம்பவங்களால் அவர்கள் நொந்துபோய் இருக்கிறார்களாம். பல சமயங்களில் நேரம் காலம் பார்க்காமல் நடுச் சாமத்தில்கூட போனை போட்டு மண்டகப்படி பூஜை நடத்திவிடுகிறாராம் கேப்டன். இரவு வந்தாலே நடுங்கிப் போய் இருக்கிறார்களாம்! இதற்கு ‘யார் மணியைக் கட்டுவது?’ என்ற கவலையோடு முந்திரி பூமிவாசி மற்றும் சினிமா புகழ் படுதாக்கள் நிற்கிறார்களாம்.. இதெல்லாம் ஜெயலலிதா கவனத்துக்கும் போயிருக்கிறதாம். ஆகவே, ரொம்ப சீண்டினால் அதிருப்தியில் ஒலிக்கும் முரசுகளுக்கு ஆதரவுக் கரம் கொடுத்து தனி முரசாக மாற்றிவிட வேண்டும் என சீரியஸாக இருக்கிறாராம் அம்மா..’’

‘‘சூப்பர் பிளான்தான்!’’

‘‘அவர் இன்னொரு அஸ்திரத்தையும் தீட்டி வைத்திருக்கிறாராம். அது வேறு யாருமல்ல... வைகைப் புயல் வடிவேலு! விஜயகாந்திடம் தீரா பகையோடு இருக்கும் வடிவேலு ஏற்கெனவே கேப்டன் மீது தான் போட்ட கேஸ்களுக்கு உயிரூட்டக் காத்திருந்தார். ஒரே கல்லில் இரு மாங்காய்கள்.. ‘ஜெயலலிதாவிடமும் நல்ல பேர் வாங்கலாம்; விஜயகாந்தையும் பழி தீர்த்துவிடலாம்’ என்பதுதான் காமெடியின் இலக்கு’’ என்ற வம்பானந்தா, அடுத்து திவாகரன் படலத்துக்குப் போனார்.

-குமுதம் ரிப்போட்டர்

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலா அண்டியோடு கூட்டணி வைத்ததற்கே வெட்கபடாதவர் நீங்கள்.

இந்த கட்சி கூட்டணிக்கு போயும் போயும் வெட்கபடுரீன்களே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.