Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூவுக்கும் பெயருண்டு

Featured Replies

வணக்கம் கள உறவுகளே !!!!!!!!!!!!!

ஓர் குறுந்தொடர் மூலம் உங்களைத் தொடுகின்றேன் . எமது மூதாதையரது வாழ்வும் , வாழ்வியலும் இப்போது உள்ள இயந்திரத்தனங்கள் இல்லாது இயற்கையுடனேயே ஒட்டி இருந்தது . அதனாலேயே அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடனேயும் , அளவற்ற மக்கட் செல்வங்களுடனும் வாழ்ந்து மறைந்தார்கள் . அவர்கள் தங்கள் வாழ்நாளில் கண்ணுற்ற பூக்களுக்கு எப்படியெலாம் தெள்ளு தமிழில் பெயர்களைச்சூட்டி எமக்கு விட்டுப் போனார்கள் என்ற தேடலின் பயனாக வந்ததே இந்தக் குறுந்தொடர் . இத்தொடரில் பொருள் மயக்கங்கள் , தவறான புரிதல்களைத் தவிர்க்குமுகமாக , எனது அறிவுக்கு எட்டியவகையில் ஒவ்வொரு பூக்களுடன் அவைபற்றி சிறுகுறிப்புகள் விக்கிபீடியாவின் துணைகொண்டு வருங்காலங்களில் போட்டுவிடுகின்றேன் . உண்மையில் இந்தத் தொடரை , எனது அன்புத் தங்கையும் , கள உறவுமான யாயினியின் முன் அனுமதி பெற்றே தொடருகின்றேன் . இந்தத் தொடரின் பெருமை எல்லாம் யாயினிக்கே போய்ச்சேரும் . நான் இத்தொடரில் இணை இயக்குனர் மட்டுமே . வழமைபோல் உங்கள் விமர்சனங்களையும் , ஆதரவினையும் நாடி நிற்கின்றேன் :) :):) .

நேசமுடன் கோமகன்

01 . காந்தள்

41976333710585632323610.jpg

02 . ஆம்பல்

42480233726093297439510.jpg

Edited by கோமகன்

  • Replies 156
  • Views 50.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவதாக எமது கார்த்திகைப்பூ இருந்தால் நன்றாக இருக்கும்

இது எனது வேண்டுகோள் மட்டுமே.

நன்றி.

  • தொடங்கியவர்

முதலாவதாக எமது கார்த்திகைப்பூ இருந்தால் நன்றாக இருக்கும்

இது எனது வேண்டுகோள் மட்டுமே.

நன்றி.

மிக்க நன்றிகள் விசுகு உங்கள் நேரத்திற்கும் , கருத்துப் பகிர்வுகளுக்கும் . மேலும் , காந்தள் பூவும் , கார்த்திகைப் பூவும் ஒன்றே ........... .நான் உங்களை ஏதோ.................... என்று நினைத்தேன்

உங்கடை தேசியம் கேள்விக்குறியாப் போச்சே ராசா???????????????? :lol: :lol: :D:icon_idea: .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளாகிய எங்களைப் போல

பூக்கள் பலவிதம்

ஒவ்வொன்றும் ஒருவிதம்

தொடருங்கள் கோமகன்

எங்கள் ஆதரவு எப்பவுமே உங்களுக்கு உண்டு. தொடருங்கள் காத்திருக்கிறோம் வாசிப்பதற்கு.

இயற்கையுடன் இயைந்த நம் மூதாதையர்களின் வாழ்க்கை முறையை அறிய மிக ஆவல். தொடருங்கள்....

9434435-little-boy-with-bouquet-of-flowers-on-white-background.jpg

மலர்க்கொத்துடன் வாழ்த்துக்கள்!

தொடருங்கள் கோ! :)

Edited by கவிதை

தொடருங்கள் காத்திருக்கிறோம் வாசிப்பதற்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகன்!உங்கள் குறுந்தொடர் தொடர என் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள் விசுகு உங்கள் நேரத்திற்கும் , கருத்துப் பகிர்வுகளுக்கும் . மேலும் , காந்தள் பூவும் , கார்த்திகைப் பூவும் ஒன்றே ........... .நான் உங்களை ஏதோ.................... என்று நினைத்தேன்

உங்கடை தேசியம் கேள்விக்குறியாப் போச்சே ராசா???????????????? :lol: :lol: :D:icon_idea: .

உண்மையில் காந்தளும் கார்த்திகையும் ஒன்று எனறுதான் நானும் இதுவரையில் நினைத்திருந்தேன்..! ஆனால் வேறு வேறு என்று போட்டிருக்கிறார்கள்..!

காந்தள் மலர் (Scarlet Bauhinia)

Scarlet%20Bauhinia.jpg

கார்த்திகை மலர் (Gloriosa Superba)

220px-Gloriosa_rothschildiana_01.jpg

  • கருத்துக்கள உறவுகள்

<p><p><p>

உண்மையில் காந்தளும் கார்த்திகையும் ஒன்று எனறுதான் நானும் இதுவரையில் நினைத்திருந்தேன்..! ஆனால் வேறு வேறு என்று போட்டிருக்கிறார்கள்..!

காந்தள் மலர் (Scarlet Bauhinia)

Scarlet%20Bauhinia.jpg

கார்த்திகை மலர் (Gloriosa Superba)

220px-Gloriosa_rothschildiana_01.jpg

காந்தள் என்னும் பெயர் கொண்டு 3 வேவ்வேறு வடிங்களை கொண்ட பூக்கள் இருக்கிறது..ஆனால் காந்தள் மலருக்கு உரிய விளக்கத்தோடு உள்ளது என்றால் கார்த்திகை மலரே..சரியோ பிழையோ எனக்கு தெரிய இல்லை..இங்கே இரண்டு பூக்கள் வந்துட்டு.2 காந்தள்(கார்த்திகை மலருக்கு இப்படி ஒரு குறிப்பு படித்ததை பகிர்கிறேன்.)'காந்தள்' என்பதுஇ குறிஞ்சி நிலக் கடவுளான முருகனுக்கு அடையாளம். ஆகவே அதை முதலில் சொல்கிறார் கபிலர். 'காந்தள் மெல்விரல்' என்று குறுந்தொகையில் வருகிறது. காந்தள் மலர் மனிதக் கையைப்போலவே இருக்குமாம்.

Edited by யாயினி

1,2,3, start...................

வாழ்த்துக்கள். அனைத்து மலர்களையும் தொடுத்து மாலையாக்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பகிருங்கள் கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள் விசுகு உங்கள் நேரத்திற்கும் , கருத்துப் பகிர்வுகளுக்கும் . மேலும் , காந்தள் பூவும் , கார்த்திகைப் பூவும் ஒன்றே ........... .நான் உங்களை ஏதோ.................... என்று நினைத்தேன்

உங்கடை தேசியம் கேள்விக்குறியாப் போச்சே ராசா???????????????? :lol: :lol: :D:icon_idea: .

சரி பிழை

தெரிந்தது தெரியாதது இருக்கட்டும் கோ

ஒரு தொகுப்பை ஆரம்பிப்பவரிடமிருந்து இப்படி ஒரு பதில் வரலாமா?

ஒரு விடயத்தில் தெளிவின்மைக்கும் தேசியத்துக்கும் என்ன சம்பந்தம்?

அதிலும் இத்தனை கேள்விக்குறிகளுடன்???

இப்படித்தான்

தேசியத்தை நேசிக்கவேண்டுமென்றால் எல்லாம் தெரிந்திருக்கணும்

எல்லாவற்றையும் துறந்திருக்கணும் என்ற எடுதுகோளால்தான் எவனும் இனி எமக்காக போராடப்போவதில்லை என்ற தேக்கநிலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜி படத்து பாட்டுல வாற ஆம்பல் இதுவா????? :unsure:

http://www.youtube.com/watch?v=csojPBVlQj0&feature=fvwrel

கோமகன்!

உங்கள் தேடலுக்கான பூக்கள் இங்கே இருக்கின்றனவா பாருங்கள்.

……………………………வள் இதழ்

ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,

தண்கயக் குவுளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை,

உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ், கூவிளம்,

எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,

வடவனம், வாகை, வான்பூங் குடசம்,

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல் இணர்க் குரவம்,

ப|சும்பிடி, வகுளம், பல் இணர்க்காயா,

விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,

குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங்கோங்கம்,

போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,

தில்லை, பாலை, கல் இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமா ரோடம்,

வாழை, வள்ளி, நீள்நறுநெய்தல்,

தாழை, தளவம், முள்தாட்தாமரை,

ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,

சேடல், செம்மல், சிறுசெங்குரலி,

கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,

காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,

பாங்கர், மராஅம் பல்பூந் தணக்கம்,

ஈங்கை, இலவம், தூங்கு இணர்க்கொன்றை,

அரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,

பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,

வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,

தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி,

நந்தி, நறவம், நறும் புன்னாகம்,

பாரம், பீரம், பைங்குருக்கத்தி,

ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,

நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,

மா இருங்குருந்தும், வேங்கையும், பிறவும்

பத்துப்பாட்டு:

8. குறிஞசிப்பாட்டு ( 61 – 95 )

பாடியவர்: கபிலர்.

  • தொடங்கியவர்

யாழ்கள உறவுகளாகிய எங்களைப் போல

பூக்கள் பலவிதம்

ஒவ்வொன்றும் ஒருவிதம்

தொடருங்கள் கோமகன்

மிக்க நன்றிகள் வாத்தியார் உங்கள் நேரத்திற்கும் வாழ்துக்களுக்கும் :):):) .

  • தொடங்கியவர்

எங்கள் ஆதரவு எப்பவுமே உங்களுக்கு உண்டு. தொடருங்கள் காத்திருக்கிறோம் வாசிப்பதற்கு.

இயற்கையுடன் இயைந்த நம் மூதாதையர்களின் வாழ்க்கை முறையை அறிய மிக ஆவல். தொடருங்கள்....

மிக்க நன்றிகள் கல்கி உங்கள் நேரத்திற்கும் ,கருத்துப் பகிர்வுகளுக்கும் :):):) .

  • தொடங்கியவர்

9434435-little-boy-with-bouquet-of-flowers-on-white-background.jpg

மலர்க்கொத்துடன் வாழ்த்துக்கள்!

தொடருங்கள் கோ! :)

மிக்க நன்றிகள் கவிதை உங்கள் நேரத்திற்கும் ,கருத்துப் பகிர்வுகளிற்கும் :):):) .

தொடருங்கள் காத்திருக்கிறோம் வாசிப்பதற்கு.

மிக்க நன்றிகள் நிகே உங்கள் நேரத்திற்கும் , கருத்துப் பகிர்வுகளிற்கும் :):):) .

  • தொடங்கியவர்

03 அடும்புப் பூ

52327615.jpg

அடும்பு என்பது ஒருவகையான படரும் கொடி. இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும்.இதன் அறிவியல் பெயர் ஐப்போமியா பெஸ் கேப்ரே (Ipomoea pes-caprae). சங்க இலக்கியங்களிலே நெய்தல் நிலத்திலே விளைவதை குறித்துள்ளனர் பல பாடல்களில்.நற்றிணை என்னும் நூலில் (பாடல் 254ல்) 'குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்' என்று குறிப்பிடப்படுகின்றது. இதன் இலை ஆட்டுக்காலின் குளம்படி போலும் கவைத்து (இரு கிளையாக) உள்ளதைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவதைப்போலவே அறிவியலிலும் Biloba குறிக்கப்பட்டுள்ளது. இக்கொடியின் மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக இருக்கும்.

04 அவரைப் பூ

19778111.jpg

அவரைக் கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். இதன் நிலைத்திணையியல் அறிவியல் பெயர் லாப்லாப் பர்பூயூரிசு (Lablab purpureus). இக்கொடி நிலைத்திணை இயலில் ஃவேபேசி (Fabaceae) என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. இந்த அவரையிலும் பல வகைகள் உண்டு

56035947.jpg

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

கோமகன்!உங்கள் குறுந்தொடர் தொடர என் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றிகள் குசா உங்கள் நேரத்திற்கும் ,வாழ்துக்களுக்கும் . உங்களைக் கண்டதில் அளவற்ற ஆனந்தம் கொண்டேன் . மேலும் எனது கடிதம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் என நினைக்கின்றேன் :):):) .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

05 அனிச்சம் பூ

88299725.jpg

45455303.jpg

அனிச்சை அல்லது அனிச்சம் (Anagallis arvensis, Scarlet pimpernel) மிகவும் மென்மையான இதழ்களினை உடைய ஒரு பூக்களைக் கொண்ட ஒரு தாவர இனம். முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடக்கூடிய இயல்புடையது இந்தப் பூ. இதன் இதழ்கள் மென் செம்மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களாகக் காணப்படும்.

06 ஆத்திப் பூ

60985148.jpg

82713673.jpg

ஆத்தி மரம் (Bauhinia racemosa), ஒரு சிறிய, அடர்த்தியான மரமாகும். சீசல்பீனியேசியே (Caesalpiniaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். இது கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் வரை உயரமான இடங்களில் எங்கும் காணப்படுவதுடன், இலங்கை , சீனா , திமோர் , இந்தியா ஆகிய நாடுகளிலும் இது பரவலாக உள்ளது.

54589920.jpg

குறுந்தொகை 24. முல்லை திணை – பரணர் - தலைவி சொன்னது

கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்

என்னை யின்றியுங் கழிவது கொல்லோ

ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து

எழுகுளிர் மிதித்த ஒருபழம் போலக்

குழையக் கொடியோர் நாவே

காதலர் அகலக் கல்லென் றவ்வே.

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-fig-tree/

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

பூக்களின் பட்டியல் மற்றும் விபரங்கள் எல்லாம் மிகவும் நன்றாக இருக்கிறது...மிகவும் நன்றிகள்...தொடருங்கோ.:)

  • தொடங்கியவர்

<p><p><p>

காந்தள் என்னும் பெயர் கொண்டு 3 வேவ்வேறு வடிங்களை கொண்ட பூக்கள் இருக்கிறது..ஆனால் காந்தள் மலருக்கு உரிய விளக்கத்தோடு உள்ளது என்றால் கார்த்திகை மலரே..சரியோ பிழையோ எனக்கு தெரிய இல்லை..இங்கே இரண்டு பூக்கள் வந்துட்டு.2 காந்தள்(கார்த்திகை மலருக்கு இப்படி ஒரு குறிப்பு படித்ததை பகிர்கிறேன்.)'காந்தள்' என்பதுஇ குறிஞ்சி நிலக் கடவுளான முருகனுக்கு அடையாளம். ஆகவே அதை முதலில் சொல்கிறார் கபிலர். 'காந்தள் மெல்விரல்' என்று குறுந்தொகையில் வருகிறது. காந்தள் மலர் மனிதக் கையைப்போலவே இருக்குமாம்.

மிக்க நன்றிகள் யாயினி உங்கள் நேரத்திற்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் :):):) .

  • தொடங்கியவர்

கோமகன்!

உங்கள் தேடலுக்கான பூக்கள் இங்கே இருக்கின்றனவா பாருங்கள்.

……………………………வள் இதழ்

ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,

தண்கயக் குவுளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை,

உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ், கூவிளம்,

எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,

வடவனம், வாகை, வான்பூங் குடசம்,

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல் இணர்க் குரவம்,

ப|சும்பிடி, வகுளம், பல் இணர்க்காயா,

விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,

குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங்கோங்கம்,

போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,

தில்லை, பாலை, கல் இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமா ரோடம்,

வாழை, வள்ளி, நீள்நறுநெய்தல்,

தாழை, தளவம், முள்தாட்தாமரை,

ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,

சேடல், செம்மல், சிறுசெங்குரலி,

கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,

காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,

பாங்கர், மராஅம் பல்பூந் தணக்கம்,

ஈங்கை, இலவம், தூங்கு இணர்க்கொன்றை,

அரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,

பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,

வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,

தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி,

நந்தி, நறவம், நறும் புன்னாகம்,

பாரம், பீரம், பைங்குருக்கத்தி,

ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,

நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,

மா இருங்குருந்தும், வேங்கையும், பிறவும்

பத்துப்பாட்டு:

8. குறிஞசிப்பாட்டு ( 61 – 95 )

பாடியவர்: கபிலர்.

மிக்க நன்றிகள் செம்பகன் உங்கள் நேரத்திற்கும் , கருத்துப் பகிர்வுகளுக்கும் . உண்மையிலேயே உங்கள் தகவல்கள் எனக்குப் பெரிதும் உதவுகின்றன . அதேவேளையில் , நான் எனது பாணியில் எழுத்துக்களின் வரிசையில் தரம் பிரித்து அவைக்கான சிறு விளக்கக் குறிப்புகளைக் கொடுக்கின்றேன் . உங்கள் பட்டியலையும் அப்போது நிட்சயம் இணைத்து விடுகின்றேன் :):):) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.