Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருமையான சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு தவறவிட்டுள்ளது – கஜேந்திரகுமார் கண்டனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kajendran%20ponnampalam.jpg

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த 60 வருடங்களாக இடம்பெற்ற அநீதிகளுக்கு சர்வதேசத்தின் முன்பாக நீதி கேட்கவும், தமிழர்களின் உரிமைக்கான நிலைப்பாட்டை தெளிவாக சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லவும் காலம் கொடுத்திருக்கின்ற இந்த அருமையான சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார்.

ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாகக் கேட்டபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது,தமிழ் மக்களுடைய சரித்திரத்தில் மிகவும் முக்கியமானதொரு காலகட்டம் இதுவாகும். சர்வதேசத்தின் பார்வை முழுமையாக இலங்கைத் தீவின் மீது இன்று விழுந்திருக்கின்றது. இந்த நிலையில் 60 வருட காலமாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கேட்கக்கூடிய சந்தர்ப்பம் இன்று கிடைத்திருக்கின்றது.

எனவே தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற கோணத்தில் எமது மக்கள் சர்வதேசத்திடம் எதனை எதிர்பார்க்கின்றார்கள் என்பதனை தெரியப்படுத்த வேண்டிய கடமைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள்.

தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளை சர்வதேச அரங்கில் பதிவு செய்ய வேண்டிய கடமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது. ஆனால் இந்தக் கடமைப்பாட்டை நிறைவேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறியிருக்கின்றது.

அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சோகமளிக்கக்கூடிய வகையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் பிரேரணை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப் போவதாக அறிகின்றோம்.

எனவே இந்த ஜெனிவா மனிதவுரிமைகள் ஆணைக்குழு அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டை அவர்களுடைய மனோநிலையை வெளிப்படுத்த முடியாத போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனி இருப்பதும், இல்லாமல் போவதும் ஒன்றே. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முடிவு தமிழ் மக்களிடம் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியிருக்கின்றது’ என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளப் போவதில்லை என அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை காண்பதில் எவ்வித தடைகளையும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பு போடக்கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

http://www.eeladhesa...lle-nachrichten

நிச்சயமாக கூட்டமைப்பு அதன் பச்சோந்தித் தலைமையாலும், அதன் எடுபிடிகளாலும் நிலைமைகளை சிக்கலாக்கி வைத்துள்ளனர்.

அவர்கள் பொறுப்புள்ள ஒரு குழுவை ஏற்கனவே அனுப்பியிருக்க வேண்டும்.

ஆனால் தேர்தலில் போட்டியிடுவதும் அறிக்கைகள் விடுவதும் மட்டுமே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வேலையல்ல. கஜேந்திரகுமாரும் தனது குழுவுடன் ஜெனீவா சென்று வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் ஆதரங்களுடன் சிங்கள அரச பயங்கரவாதிகளின் தமிழனப் படுகொலைகளை விளக்கியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக கூட்டமைப்பு அதன் பச்சோந்தித் தலைமையாலும், அதன் எடுபிடிகளாலும் நிலைமைகளை சிக்கலாக்கி வைத்துள்ளனர்.

அவர்கள் பொறுப்புள்ள ஒரு குழுவை ஏற்கனவே அனுப்பியிருக்க வேண்டும்.

ஆனால் தேர்தலில் போட்டியிடுவதும் அறிக்கைகள் விடுவதும் மட்டுமே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வேலையல்ல. கஜேந்திரகுமாரும் தனது குழுவுடன் ஜெனீவா சென்று வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் ஆதரங்களுடன் சிங்கள அரச பயங்கரவாதிகளின் தமிழனப் படுகொலைகளை விளக்கியிருக்கலாம்.

செய்வார் ஆனால் செய்யமாட்டார்.  நாமல் இராஜபக்சவுடன் பின் எப்படி  கூத்தடிப்பது? 

இந்த கருத்துப்ப்டத்துடன், கூட்டமைப்பை தாக்குவது சம்பந்தமாக எனக்கு உடன்பாடு இல்லை,

இருந்தாலும் மாற்றுக்கருத்துக்கு மதிப்பளித்து இணைக்கின்றேன்

kunchamani.jpg

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இதை வரைந்த RKR யாழ்கள உறுப்பினரும் ஆவார்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

வேரொரு பக்கத்தில் Raji Logan “சம்பந்தன் செல்லவேண்டுமென்பதுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதேவையில்லை. சம்பந்தன் ஏற்கனவே அமெரிக்காவுடன் தங்கள் நிலையை விளக்கிவிட்டனர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. அது பற்றிய விடயங்கள் வெளியில் வரவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. காலஅவகாசம் கொடுத்தால் சிங்களவர்கள் திருப்பியும் ஏமாற்றுவித்தை செய்வார்கள். இது அவர்களுக்குக் கைவந்தகலை. காலதாமதமும் கிழித்தெறிதலும் இவர்கள் காலங்காலமாகச் செய்துவரும் பணி. ´ என்று சொன்னதை கவனிக்க வேண்டும். அதே பக்கத்தில் நான் சொன்ன கருத்தின் சில அம்சங்களை இங்கு மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

2

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த அமர்வுகளில் கலந்துகொள்வதில்லையென முடிவு எடுத்துள்ளது. கூட்டமைப்பின் முடிவு மாபெரும் தவறு என கஜேந்திரகுமார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு தப்பான இராசதந்திரமல்ல. மனித உரிமைகள் மீறல் தொடர்பாக புலிகள்மீதும் குற்றச்சாட்டப் பட்டுள்ளது. இந்த நிலையில் கூட்டமைப்புக் கலந்துகொண்டால் விவாதத்தைத் தள்ளிப்போடவோ திசை திருப்பவோ முனையும் இலங்கைக்கும் அதன் ஆதரவு ஆதரவு அணிக்கும் மட்டும்தான் வாய்பாகிவிடும்.

குறச்சாட்டுக்களை நிராகரிக்க ஆதாரங்கள் இன்றி புலிகளை வெறும் வார்த்தைகளால் மட்டும் நியாயப் படுத்தும் முயற்ச்சி இன்னும் மோசமானதாகவே அமையும்.மேலும் இலங்கை தனது வளமையான இராசதந்திரத்தைப் பயன்படுத்தி அமரிக்காவையும் கூட்டமைப்பையும் முரண்பட வைத்துவிடும் ஆபத்துமுள்ளது. . புலிகள்மீதான குற்றச் சாட்டுக்களை முனிலைப் படுத்தி நிகழ்ச்சிகளைத்த் திசை திருப்ப வாய்ப்பாகிவிடும்.

நோக்கங்கள் எதுவாக இருப்பினும் அமரிக்காவின் முன்னெடுப்பினால் மட்டுமே போர்க்குற்றம் இன்னமும் வலுவுடன் உள்ளது. அமர்வைப் பயன்படுத்தி

இலங்கை கூட்டணிமீது சில நிபந்தனைகளை திணிக்க சர்வதேச ஆதரவைக் கோரும் ஆபத்துமுள்ளது. . இதுபற்றி மேற்படி அமர்வில் கலந்துகொள்ளும் தமிழ் அமைப்புக்கள் கவனமாக இருக்கவேண்டும்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 அமர்வில் கூட்டமைப்பு கலந்து கொள்ளாவிட்டால் பந்து எப்பவும் இலங்கை அரசின் பக்கத்திலேயே இருக்கும். அதைச் சமாழிக்க இலங்கை அரசுக்கு வல்லமை இல்லை. கூட்டணி இலங்கை அரசின் நெருக்கடிகளை பங்குபோட்டுக்கொள்ளவேண்டும் என்று கஜேந்திரகுமார் விரும்ப மாட்டார். மேலும் கூட்டமைப்பு அமர்வில் புலிகள் தொடர்பான விடயங்களில் அமரிக்காவுடன் முரண்பட நேர்வதும் இலங்கை அரசுக்கே சாதகமாக அமையும்.

விவாதம் இப்போது வேண்டாம் என்கிற அரசு விவாதத்தை திசை திருப்பவே கூட்டமைப்பின் பிரசன்னத்தை பயன்படுத்தும்.

தமிழ் மக்களின் வரலாற்றில் மிக முக்கியமான காலக்கட்டம் இதுவாகும் கூட்டமைப்பு பங்குபற்றியே ஆகவேண்டும் என்று என்று கஜேந்திரன் வலியுறுத்துகிறார்.

தமிழ் மக்கள் வரலாற்றில் முக்கியமான திருமலைத் தேர்தலில் சம்பந்தரை வீழ்த்த எதிர் வேட்பாளரை நிறுத்தியதுபோன்று இலங்கை அரசுக்கே சாதகமாக அமையக்கூடிய ஒரு நிலைபாட்டை வலியுறுத்தக்கூடாது என்று பணிவன்புடன் கஜேந்திரகுமாரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் அவர்களே, கூட்டமைப்பின் உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் பி.பி.சி க்கு செவ்வி அளிக்கும் போது சம்பந்தர் தன்னுடனோ,ரெலோவுடனோ சேர்ந்து பேசாமல் ஜெனிவாவுக்கு செல்லாத முடிவை சம்பந்தர்/சுமந்திரன்/ மாவை எடுத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.இது தான் தோன்றிதனமாக உங்களுக்கு தெரியவில்லையா??

இராஐ தந்திரமாகவும் இருக்கலாம்.படிச்சவன் பத்தையும் செய்வான் நமக்கு எதற்கு வம்பு.எல்லாம் தலைவர் வழி நடக்கும் பொருமை காப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய நுணாவிலான்,

தீர்மானத்தின் ஜனநாயகம் பற்றி நான் விவாதிக்கவில்லை. சம்பந்தர் ஜெனீவா செல்வது அரசின் திசை திருப்பும் உத்திக்கு மட்டுமே உதவியாக அமையும் என்பதே எனது விவாதம். புலிகள்மீதான குற்றச்சாட்டுக்களை மையத்துக்கு கொண்டுவந்து கூட்டமைப்பின் பக்கத்தில் பந்தை தட்டிக்கொண்டிருக்க அது வாய்ப்பாகிவிடும். புலிகலின் மீதுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கூட்டமைப்புக்கும் அமரிக்கா மற்றும் மேற்க்கு நாடுகளிடையே மோதலை ஏற்படுத்த இலங்கை அரசு முனையும். கடந்த 1987ல் இஎஉந்தே சிங்கள ஆட்ச்சியாளரின் இராசதந்திரத்தின் அடிப்படையே தமிழர் தரப்புக்கும் தமிழர்மீது ஆர்வம் காட்டும் சர்வதேச நாடுகளுக்குமிடையில் சிண்டு முடிந்து சண்டை வளர்பதாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பந்தர் ஜெனிவாவுக்கு போவது அரசுக்கே சாதகமாக அமையும் என்பதே எனது வாதம். மேற்க்கு நாடுகளிடமும் சம்பந்தப்பட்ட ஐநா அமைப்புகளிடமும் சம்பந்தர் பேச வேண்டிய எல்லாவற்றையும் பேசி விட்டார். சர்வதேச சமூகத்துடன் தமிழரின் பல்வேறு அமைப்புகளும் பேசிவருகிறது..

மேற்க்கு நாடுகளும் சம்பந்தரை வரவேண்டாம் என்று சொன்னதாக உறிதிப் படுத்தப் படாத தகவல்கள் உள்ளன. இந்த நிலையில் எதற்க்காக கஜேந்திரகுமார் சம்பந்தரை ஜெனீவாவுக்கு போகவில்லை என்று திட்டுகிறார் என்பது புரியவில்லை.

Edited by poet

1.“தமிழ் மக்கள் வரலாற்றில் முக்கியமான திருமலைத் தேர்தலில் சம்பந்தரை வீழ்த்த எதிர் வேட்பாளரை நிறுத்தியதுபோன்று இலங்கை அரசுக்கே சாதகமாக அமையக்கூடிய ஒரு நிலைபாட்டை வலியுறுத்தக்கூடாது என்று பணிவன்புடன் கஜேந்திரகுமாரிடம் கேட்டுக்கொள்கிறேன்.“

2.கஜேந்திரகுமாரும் தனது குழுவுடன் ஜெனீவா சென்று வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் ஆதரங்களுடன் சிங்கள அரச பயங்கரவாதிகளின் தமிழனப் படுகொலைகளை விளக்கியிருக்கலாம்.

ஜேந்திரகுமார் நேரடியாக வந்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாம். அதைவிட்டு அறிக்கை விட்டுக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தோழ தோழியர்களே,

நாளை ஜெனிவாவில் இலங்கை எதிர் மேற்க்குலகம் என்கிற சூழல் அமைவதா?

அல்லது அதற்க்குப் பதிலாக இலங்கை எதிர் சம்பந்தர் என்கிற சூழல் அமைவதா?

இதில் எது தமிழர் நலன்களுக்குச் சாதகமானது என்பதுதான் நமக்கு முன் உள்ள கேழ்வி.

சம்பந்தர் வந்தால் புலிகளின் மீதான மேற்குலகின் குற்றச் சாட்டுக்களை இழுத்துவிட்டு

சம்பந்தர் எதிர் மேற்குலகம் என்கிற நிலமையை உருவாக்குவதே இலங்கையின் உத்தி.

ஏற்கனவே பசில் ராஜபக்ச கூட்டமைப்பினர் புலிகளின் போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என அறிக்கை விட்டிருக்கிறார் என்பதையும் இங்கு நினைவு படுத்துவது பொருத்தமானதாகும்.

சம்பந்தர் எடுத்த முடிவு சரியானது என்பதை நாளைய நிகழ்வுகள் புலப்படுத்தும்

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு.கஜேந்திரகுமார் அப்படியான பதவியில் தற்போது இல்லை.கூட்டமைப்பின் கருத்துக்களுக்கு சர்வதேசரீதியில் வலிமை அதிகம்.

இப்போதுள்ள கேள்வி

1.ஜெனிவாவில் மேற்கு நாடுகளால் சிறிலங்காவுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானத்தை கூட்டமைப்பு பகிஸ்கரிக்கிறதா?அல்லது ஆதரிக்கிறதா?2 இல் ஒரு பதிலை அது தமிழ்மக்களுக்கு முன் வைக்க வேண்டும்.ஏன்,எதற்காக என்ற கேள்விகள் அடுத்த கட்டம்.

2.ஜெனிவாவுக்கு புலம்பெயர் தமிழர்கள் ஊர்வலமாகச் சென்று தங்கள் கோரிக்கைகளைக் கொடுப்பதா? அல்லது நிறுத்துவதா?தமிழ்மக்களின் பிரதிநிதிகளிடம் நாம் கேட்கிறோம்.மக்கள் பிரதிநிதிகளே பயனற்ற விடயம் என்று புறக்கணிக்கும் விடயத்தை சாதாரண தமிழ் போவதால் ஏதேனும் பயன் இருக்குமா?இல்லையா?

3.அறிக்கையில் ஜெனிவாத் தீர்மானம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லையே ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசு புலிகளைப்பற்றிக் கதைக்காவிட்டாலும் புலி எதிர்ப்பாளர்கள் புலி!புலி! என்று புலிப்பூச்சாண்டி காட்டுகிறார்கள்,ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் (மேற்குலகால் தடைசெய்பட்ட)பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் தொடர்பானது அல்ல.மாறாக ஐநாவில் உறுப்புரிமை பெற்ற ஒரு பொறுப்புள்ள நாடு செய்த மனித உரிமை பற்றியதாகும்.பயங்கரவாதிகளிடம் மனித உரிமைகளை எதிர்பார்த்தால் அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்று பொருள்படும். ஆகவே தேவையில்லாமல் இதற்குள் புலிகளைச் செருக வேண்டிய அவசியம் இல்லை.போர்க்குற்ற விசாரணை என்று வரும் போது இரு தரப்பினாலும் செய்யப்பட்ட போர்க்குற்ற மீறல்கள் பற்றி விவாதிக்கலாம்.

இறுதியாக ஓன்று சொல்ல விரும்புகிறேன்.

ஜெனவாவில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது கூட்டமைப்பு ஜெனிவா செல்லாததால் கிடைத்த வெற்றி என்று கருணாநிதி 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து போர்நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று போஸ்டர் ஒட்டினமாதிரி கூட்டமைப்புக்கு வக்காலத்து வாங்க வேண்டாம்.

,ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் (மேற்குலகால் தடைசெய்பட்ட)பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் தொடர்பானது அல்ல.மாறாக ஐநாவில் உறுப்புரிமை பெற்ற ஒரு பொறுப்புள்ள நாடு செய்த மனித உரிமை பற்றியதாகும்.பயங்கரவாதிகளிடம் மனித உரிமைகளை எதிர்பார்த்தால் அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்று பொருள்படும். ஆகவே தேவையில்லாமல் இதற்குள் புலிகளைச் செருக வேண்டிய அவசியம் இல்லை.போர்க்குற்ற விசாரணை என்று வரும் போது இரு தரப்பினாலும் செய்யப்பட்ட போர்க்குற்ற மீறல்கள் பற்றி விவாதிக்கலாம்.

இறுதியாக ஓன்று சொல்ல விரும்புகிறேன்.

ஜெனவாவில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது கூட்டமைப்பு ஜெனிவா செல்லாததால் கிடைத்த வெற்றி என்று கருணாநிதி 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து போர்நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று போஸ்டர் ஒட்டினமாதிரி கூட்டமைப்புக்கு வக்காலத்து வாங்க வேண்டாம்.

சிறிலங்கா அரசு புலிகளைப்பற்றிக் கதைக்காவிட்டாலும் புலி எதிர்ப்பாளர்கள் புலி!புலி! என்று புலிப்பூச்சாண்டி காட்டுகிறார்கள்,ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் (மேற்குலகால் தடைசெய்பட்ட)பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் தொடர்பானது அல்ல.மாறாக ஐநாவில் உறுப்புரிமை பெற்ற ஒரு பொறுப்புள்ள நாடு செய்த மனித உரிமை பற்றியதாகும்.பயங்கரவாதிகளிடம் மனித உரிமைகளை எதிர்பார்த்தால் அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்று பொருள்படும். ஆகவே தேவையில்லாமல் இதற்குள் புலிகளைச் செருக வேண்டிய அவசியம் இல்லை.போர்க்குற்ற விசாரணை என்று வரும் போது இரு தரப்பினாலும் செய்யப்பட்ட போர்க்குற்ற மீறல்கள் பற்றி விவாதிக்கலாம்.

இறுதியாக ஓன்று சொல்ல விரும்புகிறேன்.

ஜெனவாவில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது கூட்டமைப்பு ஜெனிவா செல்லாததால் கிடைத்த வெற்றி என்று கருணாநிதி 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து போர்நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று போஸ்டர் ஒட்டினமாதிரி கூட்டமைப்புக்கு வக்காலத்து வாங்க வேண்டாம்.

கூட்டமைப்பு எப்போதுமே போர்க்குற்றவிசாரணையை ஆதரிக்காதது. அண்மையில் அமெரிக்காவுடன் பேசியபின் கொஞ்சம் தெம்பு வந்து ஆமாப்போட்டது. இப்போது உண்மையான மிரட்டல்கள் இருந்தால் தன் பழைய நிலைக்கு திரும்பியிருக்கலாம். இந்த பிரேரணை எப்படி இலங்கைக்கு எதிரானதாக இருக்கிறது என்று முடிவுக்கு வருகிறீர்கள்? அமெரிக்க அதிகாரிகள் இதில் இலங்கை பயப்பட ஒன்றும் இல்லை என்று இலங்கையில் வைத்தே கூறியிருக்கிறார்கள்.

ராஜபக்சா Gang கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இல்லாத நேரம் ஒரு 1983 நடத்தி முடித்தால் என்ன செய்யலாம்?

மற்றவர்களுக்கு:

கூட்டமைப்பு புலி வெருட்டுக்களுக்கு பயந்து போகவில்லை அல்ல. உருத்திரா புலிகளுக்காக பேச்சுவார்தைகளில் ஈடுபட்டவர். அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுக்களில் ஈடுபடுகிறார். சம்பந்தர் எதற்கு பயப்பட வேண்டும்? இலங்கை ஐ.நாவில் புலிக்கதையைப் பாவித்து தப்பப் பார்த்தால் சவேந்திராவை கூட்டத்தில் ஒதுக்கியமாதிரி ஒதுக்கிக்கி விடுவார்கள். இது மகிந்த நடத்தும் Night Club Parliament அல்ல அவர்கள் நினைத்தபடி வந்து ஆடிவிட்டுப்போக. இது நவதீதம் பிள்ளையின் Show.

Edited by மல்லையூரான்

அமெரிக்க அதிகாரிகள் இதில் இலங்கை பயப்பட ஒன்றும் இல்லை என்று இலங்கையில் வைத்தே கூறியிருக்கிறார்கள்.

அதுதான் அவர்களின் ராஜதந்திரம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா கூட்டம் புறக்கணிப்பு: சம்பந்தர் - சுரேஷ் கருத்துப் பிளவு

111201170809_sampanthar_tna_304x171_bbc_nocredit.jpg

ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக கலந்துகொள்ளப்போவதில்லை என்கிற முடிவு சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் கருத்துக்களே தவிர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்தல்ல என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ஐ.நா. கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேரடியாக பங்குபெற வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து என்றும், அனால் அதற்கு மாறான முடிவெடுக்கப்பட்டிருப்பதில் தமக்கு உடன்பாடில்லை என்றும் அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வியில் தெரிவித்தார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் செவ்வி

மாற்று மீடியா வடிவில் இயக்க

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரை சந்தித்துவிட்டு இலங்கை திரும்பிக்கொண்டிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், பிபிசி தமிழோசையிடம் பேசுகையில், ஐ.நா. மன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பதாக முடிவெடுக்கப்பட்ட விதம் மிகவும் ஆரோக்கியமற்ற ஒன்று என்றும், இந்த பிரச்சினை தொடர்பாக தாம் கொழும்பு சென்றதும் மற்றவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

சனிக்கிழமை தமிழோசையிடம் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜெனிவா கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என்று முடிவெடுத்ததாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை தவிர்க்கவும், மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்கள் எழாமல் இருப்பதற்காகவும் தமது கட்சி ஜெனீவா மாநாட்டில் பிரசன்னமாகாதிருக்க தீர்மானித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

அதேசமயம், இதற்கான காரணங்களை ஊடகங்களுடன் முழுமையாக விவாதிக்க தாம் விருமபவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/02/120226_tnaongenevaboycott.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேர்.பொன்.இராமநாதன் தொடக்கம் உதுதான் நடந்துகொண்டிருக்கு......ஹாய் டமில்ஸ் காணிபூமியளை வித்துப்போட்டு இஞ்சாலை வாற வழியை பாருங்கோ.......அவுஸ்ரேலியாவுக்கு பக்கத்திலை சிலோனை விட பெரிய தீவுகள் இருக்காம்.எங்களுக்கு காசு பெரியபிரச்சனையில்லையெண்டது உலகத்துக்கே தெரிஞ்ச விசயம்........

நீண்ட காலத்தின் பின்னர் ஒரு யதார்த்தமான விவாதம் நன்றாக உள்ளது.

பொதுவாக புலிகள் பேச்சுவார்த்தைகளில் தவறுகள் விட்டனர் எனக்கூறுபவர்களும் இதில்கலந்துகொண்டு இன்றே விவாதிப்பது நன்று, நாளை கூட்டமைப்பும் அப்படி இல்லை இப்படி செய்திருக்கவேண்டும் எனக்கூறுவதை விட.

(முகநூல் ஊடாக) புலத்தில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் களத்தில் நிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிப்பதை தவிர்ப்போம் ! காலம் வரும்வரை எமக்கு இருக்கும் பலத்தை கட்டி காக்க தமிழ் தேசிய கூட்மைப்பு எடுக்கும் முடிவுகள் சிறப்பானதே என்பதை ராஜதந்திரம் தெரிந்த தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் !

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சா Gang கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இல்லாத நேரம் ஒரு 1983 நடத்தி முடித்தால் என்ன செய்யலாம்?

அடேங்கப்பா!!!!சிறிலங்கா அரசு புலிகளும் த.வி.கூட்டணியும் இருந்தபோதே 1983 ஐ நடத்தி முடித்து விட்டார்கள்.இப்ப ஒரு இனக்கலவரம் நிகழ்ந்தால் புலிகள் இருந்தாலாவது எதிர்த்துத் தாக்கியிருப்பார்கள்.புலிகள் வளர்ச்சியடைந்த பொழுது தமிழினப்படுகொலைகள் இனக்கலவரங்கள் தெற்கில் பெரிய அளவில் நடக்கவில்லை.இப்ப வெறுங்கையோடு இருக்கும் கூட்டமைப்புத் தலைவர்கள் கலவரம் ஒன்று வரும் நிலையில் அதைத் தடுக்கக் கூடிய சக்தியில் இருக்கிறார்கள் என்று நம்புவதற்கு தமிழ்மக்கள் முட்டாள்கள் இல்லை.மேலும் நடத்தி முடித்த இனப்படுகொலைக்கான சர்வதேச அழுத்தங்கள் இருக்கும் போது அதனை மேலும் வலுவாக்கக் கூடிய வகையில் இனக்கலவரங்களைத் தூண்ட சிங்களம் தற்போது தயாரில்லை என்பதே யதார்த்தம்.அப்படி இனக்கலவரம் நடந்தால் முதலில் வெளிநாட்டுக்கு ஓடுபவர்கள் கூட்டமைப்பின் தலைவர்களாகத்தான் இருக்கும்.

தசரதனுக்கு கூனி தமிழருக்கு கூட்டமைப்பு

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-02-27 10:00:08| யாழ்ப்பாணம்]

ஐ.நா. மனிதவுரிமை ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகிவிட்டன. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப் பதில் அமெரிக்கா திடசங்கற்பம் பூண்டுள்ளது. அதேநேரம் தமக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேறுவதைத் தடுப்பதற்காக இலங்கை அரசு பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது. இந் நிலையில் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கையயான்றை வெளியிட்டுள்ளார். இதில் ஜெனிவா கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாமைக்குத் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘... தற்போது நிலவும் நிலையற்ற நிலைமை தொடருமேயானால் அது வன்முறைக்கு வித்திடலாம். குடிமக்கள் அதனால் மீண்டும் பாதிக்கப்படலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்சுகிறது. தற்போதைய சூழ்நிலையில் அமைதிகாக்கப்படுவதும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதும் அவசியமான செயற்பாடுகள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது. எனவே இந்தக் காரணங்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவில் பிரசன்னமாகியிருக்க மாட்டாது.’ இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். சம்பந்தன் தெரிவித்த கருத்துக்களின் சாராம்சம் என்னவென்று ஆராய்ந்தால், தற்போது நாட்டின் நிலைமை சரியாக இல்லை. ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறினால்-அந்தக் கூட் டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பங் கேற்றிருந்தால் நாட்டில் கலவரம் ஏற்படும் என்று சம்பந்தன் அஞ்சுகிறாராம்.

வன்னியில் மிக மோசமான போர் நடந்த போது இந்தியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த என்.கே.நாராயணனைத் தனிப்பட்ட முறையில் சந்தித்த சம்பந்தனுக்கு வன்னியில் நடந்த வன் யுத்தம்-அழிவு தெரியவில்லை. ஆனால், இப்போது வன்முறை வெடிக்கும் என்று அச்சமாம். அப்படியானால் எங்களுக்காக வெளிநாடுகள் ஏதாவது செய்யட்டும். நாம் ஒதுங்கிக் கொள்வோம் என்பது கூட்டமைப்பின் முடிபு. இதுதான் முடிபாக இருந்தால் நீங்கள் உங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருக்க வேண்டும்.

அப்போதுதான் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் கொண்டுவரும் போது தமிழர்கள் தரப்பில் கருத்து கூறுவதற்கு கூட அங்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லை என்று பேசப்படும். ஆனால் நீங்களோ! ஆ! கடவுளே! இப்படியயாரு முடிபா? கூனியை இனங்காணாத தசரதனும் உங்களை புரிந்துகொள்ள முடியாத ஈழத்தமிழ் மக்களும் மிகப்பெரும் பாவங்கள். ஆனாலும் அடுத்த தேர்தலிலும் நீங்கள்தான் தாயகக் கோட்பாட்டின் காவலர்கள். என் செய்வோம் இறைவா!

http://www.valampuri...ws.php?ID=27319

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு and 4 others like this.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அன்பான தமிழ்பேசும் உறவுகளே !

ஜெனீவாவில் இன்று நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக கலந்து கொள்ளப்போவதில்லை என்கிற முடிவு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அனைவரின் கருத்தல்ல என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியத் தந்து இருக்கிறார்கள். ஐ.நா. கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேரடியாக பங்குபெற வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து ஆனால் அதற்கு மாறான முடிவெடுக்கப்பட்டிருப்பதில் தமக்கு உடன்பாடில்லை என்பதுடன் இந்த அறிக்கையினால் தாம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் இது தொடர்பாக உடனடியாக கலந்துரையாடி முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பு :- இது தொடர்பாக எமது தலைமைப் பீடம் எடுத்த முடிவை பற்றி உங்கள் கருத்துக்கள் இங்கு பதிவிடுங்கள் கரணம் அவை நேரடியாக அவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

facebook-TNA

இது மேற்குலத்துக்கும் இலங்கைக்குமான போர் இதில் கூட்டமைப்பு கல்ந்து கொள்வதால் விவாதம் திசைதிருப்படலாம்.

கூட்டமைப்பு கலந்து கொண்டாலும் சிங்களவனுக்கு நன்மை கலந்து கொள்ளா விட்டாலும் சிங்களவனுக்கு நன்மை.

கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை என்பதனை சிங்களவன் இப்பவே சந்தோசமாக அனுபவிக்க தொடங்கிவிட்டான் ஏன் எனில் அவளவுக்கு கூட்டமைப்பின் பீது புலத்தமிழர்கள் வெறுப்பாக மாறிவருகிறார்கள்.

விவாததில் கூட்டமைப்பு கலந்து கொள்வதால் தமிழருக்கு என்ன பாதிப்பு & நன்மை என்பதுக்கு சரியான காரணம் சொல்ல தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தர்பங்கள் எப்போதும் எவருக்காவும் காத்து இருப்பது இல்லை, சந்தர்பம் கிடைக்கும் போது அதை சரியாக பயன்படுத்த தெரிந்தவனே புத்திசாலி, ஒரு காலத்தில் எமது பிரச்சினையை சர்வதேசமய படுத்த நாம் எவ்வளவு பாடு பட்டோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். பலத்துடன் இருந்த போது இப்படி ஒரு சந்தர்பம் எமக்கு கிடைக்கவில்லை, பலமற்று இருக்கும் இந்த நிலையில் இது எமக்கு கிடைத்த ஒரு மிக பெரிய வரபிரசாதம் அதை சரியாக பயன்படுத்தி இருக்க வேண்டும் அதுவே புத்தி சாலித்தனம்.

அய்யா கஜேந்திரன் நிங்களாவது ஜெனிவாவுக்கு சென்றிருக்கலாம் சென்றிருந்தால் கூட்டமைப்பின் உண்மை முகம் தெரியவந்திருக்கும் நீங்களும் மற்றவர்களை குறைப்படும்போது நீங்கள் அதற்காக ஏதாவது முயற்சித்திருக்க வேண்டும் முயற்சித்திருந்தால் உங்களை தமிழ் மக்கள் போற்றி இருப்பார்கள்

சுமந்திரன் பீ.பீ.சி இற்கு இன்று பேட்டி கொடுத்தார்.இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவர இருக்கும் நாடுகள் தான் தங்களை போகவேண்டாம் என்று சொன்னதாக. தாங்கள் செய்வேண்டிய அலுவல்களேல்லாம் செய்து விட்டாதாகவும் சொன்னார் .

அதன் உண்மைத்தன்மை ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.