Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

லெப்.கேணல்.அருணன் (அருணா) அவர்களது 3ம் ஆண்டு நினைவுநாள் இன்று. 27.02.2009 அன்று விமானக்குண்டுத் தாக்குதலால் வீரச்சாவடைந்தார்.

aruna270209.jpg

3ம் ஆண்டு கடந்த நினைவுநாளில் இன்று அருணாண்ணா பற்றிய பதிவுகள் சில:-

கொள்ளைபோன கனவும் ஓராண்டு நினைவுகளும்

ஓராண்டை இழுத்து வந்துவிட்டது காலம்

உன் நினைவுகள் தா(தே)ங்கிய மனங்களில்

நீ எத்தனையோ அடையாளங்களாய்.....

தேசம் தேசியம் என்றெல்லாம்

கனவுகள் நிரம்பியல்லவா உனது

கடிதங்களை எழுதினாய்...!

ஒவ்வொரு தோழமைப் பிரிதலின் முடிவிலும்

உரமூட்டி உரமூட்டியல்லவா

உன்னைத் தீட்டிக்கொண்டாய்....!

உனதும் உன்போன்ற தூயவர்கள் கனவுகளிலும்

காலம் இப்படியொரு கோலம் வரையுமென்று

கனவில்கூட எண்ணாத ஒரு பொழுதொன்றில்

எங்கள் கோட்டைகள் சிதைவுறத் தொடங்கியது....

எங்கள் கொள்கைகள் நலிவுற்றுச் சாகத் தொடங்கிய

நாளில் நீ ஞானிபோய் சொன்னாயாம்....

மேமாத முடிவுகளைத்

தைமாதமே உரைத்த நீ

மாசி27 கிபீரடியில்

உன் கொள்கையும் இலட்சியமும்

தமிழீழ தேசத்தின்

கனவுடனே கரைந்து போனது....

நீ கண்ட கனவும்

உன்போல் ஆயிரமாயிரம் பேரின் கனவுகளும்

கொள்ளைபோய்விட்டன.....

தடுப்பு முகாம்களிலும் அகதி முகாம்களிலும்

அள்ளுண்டு அரியுண்டு

அனைத்துமே பூச்சியத்தில் போய் நிற்கிறது.

வாழ்வோடு உன்னில் பாதியானவள் - உன்

உயிரின் துளியான உன் குழந்தை

உனது வயதான பெற்றோர்கள்

உன்னை நேசித்த நாங்கள் எல்லோரும்

நீயிருந்தால் நீயிருந்தாலென்று

எத்தனையோ விதமான கற்பனைகள்

எங்களுக்குள்.....

உன்னை வார்த்தாற்போல

உன் செல்வமகன்

அவன் மழலைக்குரலில்

உன் குணங்கள் யாவும்

தேங்கிக் கிடப்பது போல....

உன்னை எழுதுகிறான்

உன்னைத் தேடுகிறான்....

உன் நினவுகளை எங்களோடு தேக்கி

அவன் மழலைக்குரலில் நீயே வாழ்கிறாய்....

தொலையலையில் அழைக்கும் போதெல்லாம்

என்னை அத்தையென்கிறான் உன் பிள்ளை

அக்கா அண்ணா பற்றியெல்லாம் அக்கறைப்படுகிறான்.....

அவன் குரல் கேட்டால்

உன்னையே காண்பது போன்ற பிரமை....

நீ வந்தால்....

இந்த மகிழ்வுகள் எத்தனை நிறைவாயிருக்கும்...?

(லெப் கேணல் அருணன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு 27.02.2010)

அருணாண்ணை வீரச்சாவு அதை நம்பவா…..?

இணையத்தில் மேய்ந்து ஊரிலுள்ள உறவுகளின் இருப்பை உறுதிப்படுத்துகிறேன். காணும் தளமெங்கும் காயங்கள் சாவுகள் என இணைவலையெங்கும் துயர்முட்டி வழிகிறது....காக்கவும் ஆழின்றி கையொடுக்கவும் நாதியின்றித் தினம் வன்னிப்பெரு நிலப்பரப்பெங்கும் நிறைந்த சாவும் கண்ணீருமாக யாருக்கும் யாருடனும் பேசவோ உறவாடவோ முடியாத பொழுதுகளால் பின்னப்பட்டிருந்தது நாட்கள். பயங்கரமான கனவுகளும் பாதைதெரியாத நினைவுகளுமாக அந்த நாட்கள் ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவும் அவலப்பட்டபடி அழுதபடி…..அப்படியான ஒருநாள் மதியம்…..

வணக்கம்....

தொலைபேசியழைப்பில் வந்த குரலொன்று.

யாரெண்டு தெரியுதா?

இல்லை...

என்ற எனக்குத் தன்னை ஞாபகப்படுத்திய குரல். 3வருடங்கள் மேலாக தொடர்பற்றிருந்த தோழனின் குரல் அது. குழந்தைகள் , குடும்பம் என விசாரிப்புகள் நீண்டு இறுதியில் வன்னிக் களமுனையில் போய் விழுந்தது கதை.

செய்தியேதும் அறிஞ்சியளோ ?

என்ன வளமையான செய்திதானே... சாவும் துயரும் இதைவிட என்னத்தை இப்பெல்லாம் அறியிறம்.....?

என்ற எனக்கு…

நேற்று "அருணாண்ணை" வீரச்சாவு என்றான் அந்தத் தோழன்.

உண்மையாவா ?

நம்பிக்கையிழந்து மீளவும் கேட்ட எனக்கு அவன் மீளவும் சொன்னான். ஓம்....

'அருணாண்ணை' இழந்தோமா உங்களை ....? அந்தத் தோழன் விடைபெறும் வரையிலும் ஒளிந்திருந்த அழுகையை வெளிப்படுத்தாமல் கண்களும் குரலும் என்னைக் காத்துக் கொள்கின்றன.

அருணாண்ணை அருணாண்ணையின் குடும்பம் , அடுத்து அந்தக் களமுனையில் வாழும் தோழ தோழியர்கள் அவர்கள் குடும்பங்கள் என விசாரிக்கிறேன். மேலும் பலர் வீரச்சாவுகள் , விமானத்தாக்குதலில் இழப்புகள் என அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

அடுத்ததென்ன நடக்கப்போகுது ?

கேட்ட எனக்குச் சொன்னான்.

யாரையும் எதையும் சொல்ல முடியாத நிலமையிருக்கு…..எல்லாம் முடியப்போகிறது…..நம்ப முடியாதவைகள் எல்லாம் நடக்கப்போகிறது…..

எல்லாம் முன்னறிந்த கடவுள் போல அவன் சொன்னான்.

ஏன் அப்பிடி ? அவன் அடுக்கிக் கொண்டு போன காரணங்களில் நியாயம் உண்மையென்று பல்லாயிரம் விடயங்களை ஏற்றுக் கொள்ளும்படியாக அவனது கதையிருந்தது.

அழிபடாமல் வரலாறுகளைச் சேகரிக்க வேணும்….அதற்கான வேலைகளைச் செய்ய வேணும்…..அதற்கான வழிகள் பலவற்றையும் சொன்னான். மீண்டும் தொடர்புகளோடு இருப்போமென விடைபெற்றுக் கொண்டான்.

இமை விட்டிறங்காமல் முட்டிய கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். அருணாண்ணை நினைவுகளை விட்டிறங்காமல் எங்களுக்குள் நிரந்தரமாகிப் போனாரா? நம்பவே முடியவில்லை.

கதைப்பதை விட அதிகம் கடிதங்களில் தான் அருணாண்ணை பேசுவது நிறைய….2006 வரை அவ்வப்போது கடிதங்களோடு களம் நிலம் காவியம் மாவீரம் என அருணாண்ணை எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றும் கனமான பொழுதுகளில் மீளவுமான உயிர்ப்பையும் எழுச்சியையும் தரும் வல்லமை மிக்கவை. „மீழும் நினைவுகள்“ என அரசபயங்கரவாதம் செய்த இன அழிவுகளையெல்லாம் தன் எழுத்துக்களுக்குள் சேமித்து அவர் அனுப்பிய தொலைமடல்கள் கையெழுத்துப் பிரதிகள் ஏராளம். ஐரோப்பிய வானொலிகள் பலவற்றில் அருணாண்ணையின் எழுத்துக்கள் ஒலிவடிவாக உயிர்த்து அவலங்களையெல்லாம் ஆவணமாக்கியது.

தமிழ்வெப்றேடியோ என்ற இணைய வானொலியின் பெரும்பான்மையான நிகழ்ச்சிகளில் அருணாண்ணையின் ஆக்கம் இருக்காது போகாது. தமிழினம் மீதான சிங்களப்பயங்கரவாதப் புடுகொலைகள் 1956 முதல் 2001 கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் வரை எழுதிய ‘மீழும் நினைவுகள்‘ இன்றுவரையும் மீட்கப்படக் காரணமாய் தனது எழுத்துக்களால் பதிந்த ஒரு போராளி.

போர்க்குணம் மிக்க அந்த மனிதனுக்குள் அரசியல்ஞானம் உலகியல் விஞ்ஞானம் என எதைக்கேட்டாலும் இலகுவாய் புரிவிக்கும் திறன்மிக்க ஆழுமையென அருணாண்ணையின் அமைதியான தோற்றத்திற்கும் பின்னாலும் பேச்சுக்குப் பின்னாலும் ஆல்போல் விழுதேற்றிப் பரவியிருக்கிறது.

சட்டென்று மூக்குநுனியில் நிற்கும் அவரது கோபம்….சொன்ன வேலையை சொன்ன நேரத்துக்குள் செய்து கொடுக்கப்படாவிட்டால் தனது அமைதியால் அதையுணர்த்தி அடுத்த வேலையை அவர் கேட்கும் அவகாசத்துக்கு முன்னால் செய்வித்துவிடுகின்ற சாதுரியம் எல்லாம் அருணாண்ணையின் ஆழுமை தான்.

2001 அக்கினி கீல நடவடிக்கையில் இலங்கையரச படைகள் ஆயிரமாயிரமாய் செத்துடிந்து வல்லமை பொருந்தியதாய் நம்பப்பட்ட அரச இராணுவபலம் புலிகளின் காலடியில் விழுந்தபடியிருக்க ஒரு கடிதம் எழுதியிருந்தார்…..அந்தக் களமுனையின் நுனியிலிருந்து களமாடிக் காவியமான தனது தோழர்கள் பற்றியும் உலகு அந்தக்கள முனையை எப்படிப் பார்க்கப்போகிறது என்பதையெல்லாம் தனது எழுத்துக்குள் நிரப்பியனுப்பிய நீலக்கடித உறைக்குள் நான் கண்டது ஒரு சாமானியக் குணத்தையல்ல…..ஒரு போராளியின் இதயத்தை…..

அக்கடிதத்திலிருந்து சில வரிகள் இவை……

உலகே வன்னிக்கு உலாப்போய்வரக் கிடைத்த சமாதான காலம் ஊர் போன போது அருணாண்ணையைச் சந்தித்தது கதைத்தது சேர்ந்து உணவருந்தியது மாவீரர் துயிலிடங்கள் சென்றது என நினைவுகள் யாவும் அருணாண்ணையுடனான அந்து நாட்களைத்தான் மீளமீளக் கொண்டு வந்தது.

தனது தோழர்கள் தனது தொடர்பில் உள்ளவர்களென அருணாண்ணையை நேசிக்கும் அனேகருக்கு எங்களை அறிமுகம் செய்து அவர்களுடனான உறவுகளை ஏற்படுத்தித் தந்து விட்டதெல்லாம் ஒருநாள் இப்படி இழந்து போவதற்கா…..?

மறுமுறை சந்திப்பதாய் பயணம் சொல்லிய அந்தக் கடைசிச் சந்திப்பு……வன்னிப் பெருநிலப்பகுதியிலிருந்து வவுனியா வர வெளிக்கிட்ட நேரம்….பிள்ளைகள் ஒவ்வொருவராய் மாமா அக்கா அன்ரி அண்ணாவென விடைபெற்று கடைசியில் அருணாண்ணையிடம் விடைபெறப் போனார்கள்.

பிள்ளையள் நல்லாப்படிச்சு கெட்டிக்காறரா எங்கடை நாட்டுக்குத் திரும்பி வரவேணுமென்ன…..

எனச்சொல்லி என் மகன் பார்த்திபனை கட்டிப்பிடித்துக் கொஞ்சினார். எனது மகள் வவுனீத்தா மட்டும் ஏதோ கோபித்துக் கொண்டு நின்றாள்.

மாமாக்குச் சொல்லீட்டு வாங்கோம்மா….

என்ற எனக்குப் பின்னால் வந்து நின்றாள்.

என்னம்மா என்ன சொல்லீட்டு வாங்கோவன்…..

இல்லையென்பதைத் தலையசைப்பால் உணர்த்தினாள்.

ஏன் ? என்னம்மா ?

மாமா மருதன்மாமாவைப் பேசினவர். அதான் நான் அவரோடை கோவம். ஆக்களைப் பேசக்குடாது…அவருக்ககொண்டும் தெரியாது……என்றாள். காலையில் ஏதோ அருணாண்ணை சொன்னவிடயமொன்றை மருதன் மறந்து போனதற்காக விழுந்த பேச்சு அது.

அது மாமா சும்மா பேசினவரென்னை….என மருதன் சொன்ன சமாதானத்தையும் அடம்பிடித்தாள்.

பிள்ளையைக் கொண்டு போய் யாழ்ப்பாணத்தில விட வேணும் கனபேருக்குப் பாடம் நடத்தப்பிள்ளைதான் சரி….என்றான் இன்னொரு போராளி…..

இறுதியில் எல்லாரும் சேர்ந்து அவளைச் சமாதானம் செய்து வாகனத்தில் ஏற்றிவிட்டு கையசைத்து விடைதந்து அனுப்பி வைத்தனர்.

மாலையில் அருணாண்ணையின் இருப்பிடம் வந்து சேரும் போது பிள்ளைகளை ஒருதரம் மோட்டார் சயிக்கிளில் ஏற்றிச் சுற்றி அவர்கள் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் ஒரு மாமாவாய் அருணாண்ணை எத்தனையோ அவதாரங்களாய்……பணம்மட்டுமே குறியாய் கடிதங்களால் குதறியும் காசைமட்டுமே கறந்த உறவுகளின் சபித்தலால் சோர்ந்து போய்விடும் வேளைகளில் அருணாண்ணைக்கு அதையெல்லாம் கடிதங்களாய் எழுதுவேன். எனது கடிதங்களுகெல்லாம் தனது பதில்களால் துணிவையும் மீண்டும் எழுகைக்கான எழுத்துக்களாக எழுதிய கடிதங்கள் யாவும் ஒரு நல்ல தோழமையின் அண்ணணின் ஆதரவைத் தரும் வல்லமை மிக்கவை…..எதை மறந்து எதை நினைத்து……இனி எங்கள் அருணாண்ணையை எங்கே தேட……

ஆட்கள் வந்து சந்தித்துச் செல்லவென அமைக்கப்பட்ட ஒற்றையறை மர நிழலில் பேசியவை……பகிர்ந்தவை…….அவர் அனுப்பிய வைத்த ஈழநாதம் வெள்ளிமலர்…..முதல் முதலாகப் பதிப்பித்த “சாள்ஸ் அன்ரனி“ படையணியின் சிறப்ப நூல் என்னையும் வந்தடைய வழிசெய்த அருணாண்ணையிடமிருந்து விடைபெற்று அவரை அவரது தோழர்களை நினைக்க நேசிக்கவென நிறையவே அறிமுகங்கள் தந்த அந்தத் தோழனின் ஆழுமையைச் சொல்ல பல்லாயிரம் பக்கங்கள் நீட்ட வேண்டும்.

தொடர்ந்த தொலைபேசி உரையாடல்….கடிதங்கள்…..என தொடர்ந்தது உறவு. என் குழந்தைகளின் நினைவுகளுக்குள் நிற்கும் பலருக்குள் அருணாண்ணைக்குத் தனியிடம் உண்டு. எங்கே நின்றாலும் மறக்காமல் பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்துமடல் அனுப்ப மறப்பதில்லை. யார் அனுப்புகிறார்களோ இல்லையோ அருணாண்ணையின் வாழ்த்துமடல் வந்தால் போதும் என்ற நிலைக்கு என் குழந்தைககளின் மனசுக்குள் குடியிருந்த இராஜகுமாரன் அருணாண்ணை.

பிள்ளைகளுக்குத் தனித்தனியே கடிதம் எழுதி அவர்களின் கடிதம் மாமாவாகி…….எங்களுக்கும் கடிதம்மாமாவென்றே நினைவுகொள்ள வைத்த அருணன் என்ற ஆழுமை……27.02.09 அன்று நிரந்தரமாய் பிரிந்துவிட்டதாய் வந்த செய்தி…..செய்தி கேட்டதும் என் மகன் பார்த்திபன் உடைந்து கலங்கியதும்…மகள் வவுனீத்தா மெளனமாகி அருணாண்ணை எழுதிய கடிதங்களை ஒவ்வொன்றாய் எழுத்துக்கூட்டி வாசித்ததும்…..மாவீரர் துயிலிடத்தில் மாமாவை சந்திப்போமென்று சமாதானம் கூறியதும்……பொய்த்து எல்லாம் எங்கள் கைகளைவிட்டுத் தொலைவாகிக்கிடக்கிறது……

காலம் அருணாண்ணையையும் குடும்பமாக்கி ஒரு குழந்தைச் செல்வத்துக்குத் தந்தையுமாக்கியது……அந்தச் செல்வத்தைச் சிரித்தபடி தூக்கி வைத்திருந்த படம் மட்டும்தான் இன்று அருணாண்ணையின் ஆழுமையைச் சொல்லியபடி நினைவுகள் நீண்டு விரிந்து நிழல்பரப்பிக் கிடக்கின்றன……

03.07.09

Posted

ம்ம்ம்................ :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம்ம்ம்................ :(

???

வீர வணக்கங்கள்...!

Posted

வீரவணக்கங்கள்..!

Posted

அருணாண்ணையின் வீரச்சாவுச் செய்தி கேட்ட 2வது நாள் எழுதிய பதிவு இது.

மாவீரர் துயிலிடத்தில் மாமாவைச் சந்திக்கும் துயரோடு

ஆளரவமற்ற வனாந்தரத்துப்

பெருமுகத்தில் அலைகிறது ஆன்மா.

மீள் பொழுதின் வரவில் - உன்

நினைவுகளைத் தெளித்துவிட்டுக்

கனவாகிப் போனாய்....

நீயெழுதிய கடிதங்கள்

மஞ்சள் கடதாசிப்பூக்கள்

மறக்காமல் அனுப்பும்

பிறந்தநாள் புத்தாண்டு

வாழ்த்து மடல்கள் - உன்

நினைவாய்க் கிடைத்தவைகள்

எல்லாம் கண் முன்னால்

உன்னை நினைவுபடுத்திபடி....

'போய் வருகிறோம்'

போர் நிறுத்த காலத்துச்

சந்திப்பு முடிந்து பிரியும் நேரம்

'சந்திப்போம்' என்றாய்

இன்று வந்த செய்தியுன்னை

இழந்தோமென்கிறது.

மாமாவின் மரணம் கேட்ட

உன் மருமக்கள் சொல்கிறார்கள்.

'கடிதம் மாமா'

இனியெங்களுக்கு இல்லை...

இதயம் நொருங்கிச் சிதிலமாகிறது.

அவர்கள் பகிரும்

உனது ஞாபகங்களில்....

மாமா தந்த சிலுவைப் பென்ரன்

மாமா தந்த ஐஸ் கிறீம்

மாமாவுடனான

மோட்டசயிக்கிள் பயணம்

மாமாவின் மடியில் விளையாடிய

நினைவென்று நீட்டுகிறார்கள்

நினைவுகளை.....

மாமா இல்லையினி

மாவீரர் துயிலிடத்தில் மாமாவைச்

சந்திக்கும் துயரோடு அவர்கள்....

எங்கடை மாமாக்களும் அன்ரியவையும்

ஏனம்மா சாகினம் ?

திருப்பிச் சுடலாம் தானே ஆமிக்காறனை...?

கேட்கிறான் உங்கள் பார்த்திக்குட்டி

சொல்ல வார்த்தையில்லை.

சொல்லியழ முடியவில்லை.

இன்னும் யாரை எவரையெல்லாம்

இழக்கப்போகிறோம்.....?

வரும் நாட்கள் இனியெந்தத்

தோழனைத் தோழியை

அண்ணனைத் தம்பியை

அக்காவையென எங்கள் வீரங்களைத்

தன்னோடு கூட்டிப் போகப்போகிறது...?

29.02.09

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள்.

Posted

அருணாண்ணையின் கையெழுத்து.....

aruna2.png

aruna1.png

Posted (edited)

வீர வணக்கங்கள் !!!

Edited by akootha
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலில் அரசியல்வாதிகள், பொலிஸாரிடமிருந்தே  ஆரம்பியுங்கள் ஊழல் மோசடியை. ஊழல் மோசடியின் ஊற்று இவர்களே.
    • இன்று பலருக்கு தர்ம சங்கடம். மஹிந்த, ரணில் ஆட்சியில் இல்லாதது. இல்லையேல் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தை எச்சரிப்பார்களா? மைத்திரி பிச்சை எடுத்து கட்டவில்லையா? அவ்வாறே இவரும் செய்ய வேண்டியதுதான். இல்லையேல் பணிப்பெண்ணாக அவுஸ்திரேலியாவில் வேலைது செய்ய கட்டவேண்டியதுதான் யாரும் ஏற்றுக்கொண்டால்.  வெளிநாட்டில் இவ்வாறு அந்தப்பெண்ணை நடத்தியவர் உள்நாட்டில் எப்படி நடத்தியிருப்பார்? 
    • உண்மை! மக்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்தபோது, வடக்கில் எல்லாம் இயல்பு நிலையில் உள்ளது எனக்காட்ட, இவர் அரசுக்கு முண்டு கொடுத்து, தகுதியற்றவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணிக்கமர்த்தி தேர்தலில் காலங்களில்  தனக்கு வாக்களிக்கும்படியும் கேட்டுக்கொண்டாராம். அரசிடமும் கூலி வாங்கி, மக்களை கடத்தி கொலை, கொள்ளை நடத்தியும் சேகரித்துக்கொண்டார். இதில அரசோடு சேர்ந்து மக்களின் பிரச்னைக்காக உழைத்தாராம். அப்போ ஏன் மக்கள் இவரை நிராகரித்தனர் என்று யாரும் பேட்டி எடுக்கவில்லையா இவரிடம்? முன்பெல்லாம் கலைத்து கலைத்து பேட்டி எடுத்தார்களே. இவரே கேட்டு கொடுத்திருப்பாரோ? சிலர் தனக்கெதிராக பொய்யான அவதூறுகளை பரப்பியதால் தோற்றுவிட்டாராம். அதெப்படி, இவர் நன்மை செய்திருந்தால் எப்படி அவதூறு பாரப்பமுடியும்? சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? முறையிடுபவர்கள் முழுசம்பளம் பெறலாமென எதிர்பார்ப்போடு சேர்ந்திருப்பார்கள், உண்மை தெரிந்த பின் விலகவும் முடியாது, முறைப்பாடு அளிக்கவும் முடியாது, தாம் செய்தது தமக்கு எதிராக திரும்பும் எனத்தெரியும், அதனால் காத்திருந்திருக்கிறார்கள். சேர்த்தது எல்லாவற்றையும் பிடுங்கிப்போட்டு உள்ளே போடவேண்டும். எல்லாத்துறைகளிலும் இவரால் நியமிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு வேலை செய்யவும் தெரியாது, நீதி நிஞாயமும் தெரியாது, ஊழலும் லஞ்சமும் சண்டித்தனமுமே நிறைந்திருக்கிறது. இவரால் பணிக்கமர்த்தப்பட்டவர்கள் யாவரையும் விசாரணை செய்து தகுதியற்றவர்கள் நீக்கப்படவேண்டும். விசேஷமாக பிரதேச செயலகங்களில் அதிகமான முறைகேடுகள் இடம்பெறுகின்றன. அவர்களுக்கு பிரச்சனைகளை கையாளும் அறிவுமில்லை திறனுமில்லை மக்களை அலைக்கழிக்கிறார்கள்.  
    • சொன்னால் நம்ப மாட்டியள் எனக்கு ஒருகிழமையா கழுத்து சுளுக்கு ஏற்பட்டு இருக்கு ..டாகடர் x  ரே எல்லாம் எடுத்து  வித்தியாசம்   ஒன்றுமில்லை என்று.. சொல்லி விடடா...இவர் நண்பருக்கு சொல்கிறார்  இவ நாளும்பொழுதும் கம்ப்யூட்டறில் இருக்கிறது  .அது தான் இந்த சுளுக்கு..என்று .உங்களுக்கு ஏதும் கைவைத்தியம்( கிராமத்து வைத்தியம்) தெரியுமா?  பகிடி இல்லை நிஜமாக ... எழுதுங்கள்.
    • அரசியலமைப்பு தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒருதரப்பாக பயணிப்பது அவசியம் என்கிறார் சத்தியலிங்கம் அரசியலமைப்பு தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருதரப்பாக பயணிக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு இனப்பிரச்சனைக்கான தீர்வு காணப்படவேண்டும் என்பதில் தமிழரசுக் கட்சி உறுதியாக இருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்ப்படும் போது ஒட்டுமொத்த தமிழ்மக்களின் குரலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் ஒன்றாக இணைந்து தமிழ்மக்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை அரசுடனான பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கவேண்டும்.இதுதான் கட்சியின் நிலைப்பாடகவும் இருக்கும் இது தொடர்பாக எமது கட்சியின் மத்தியகுழுவில் ஆராய்ந்து உரிய முடிவை எடுப்போம். தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்றவகையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஈ.பி.ஆர்.எல்.எப்.,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் , தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகிய கட்சிகளுடன் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையினை நடத்தியிருந்தோம். அப்போது தாங்கள் அனைவரும் ஒருகூட்டாக இருக்கிறோம். எனவே தமிழரசுக் கட்சிதான் தனித்துள்ளது. எனவே நீங்கள் வந்து எமது சின்னத்தில் கேட்கலாம் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருந்தனர்.அந்தவகையில் திருகோணமலையில் ஒன்றாக போட்டியிட்டமையினாலேயே ஒரு பிரதிநிதித்துவத்தை தக்கவைக்கக்கூடியதாக இருந்தது. எனவே நாங்கள் முயற்சிகளை எடுத்திருக்கின்றோம். கடந்த முறை உள்ளூராட்சி தேர்தல் முறைமையினால் அதில் தனித்தனியாக போட்டியிட்டு பின்னர் ஒன்றாகலாம் என்ற ஆலோசனையினை முன்வைத்திருந்தோம். ஏனெனில் அந்த தேர்தலில் வட்டார அடிப்படையில் நாம் பெரும்பான்மையாக வெற்றி பெற்றாலும் உள்ளூராட்சி அமைப்புக்களில் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அதனை தவறுதலாக புரிந்துணர்ந்த ஏனைய கட்சிகள் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டிருந்தமை உங்களுக்கு தெரியும். இருப்பினும் அரசியல் அமைப்பு தீர்வு விடயத்தில் நாங்கள் அனைவரும் ஒருதரப்பாக பயணிக்க வேண்டும் என்பது எனது கருத்து. தமிழ்த் தேசிய கட்சிகள் இடையே வடகிழக்கில் அதிகமான பிரதிநிதித்துவத்தை எமது கட்சி பெற்றுள்ளது. அத்துடன் எமது கட்சி 75வருட வரலாற்றுபாரம்பரியம் கொண்ட தாய்கட்சி. எனவே தமிழ் கட்சிகளை பொதுவான நோக்கத்திற்காக ஒன்றுபட்டு செயற்படுவதற்கான நடவடிக்கையினை நாம் எடுப்போம் என்றார். https://thinakkural.lk/article/313624✂️
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.