Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நிர்வாகம் தொடர்பான ஒரு அறிவித்தல்

Featured Replies

யாழ் இணையம் தொடர்வது மகிழ்ச்சிக்குரியது. புதிய நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துகள். திரு.மோகன் அவர்கள்

தொடர்ந்தும் உறுப்பினராக இருப்பது விரும்பத்தக்கது. கசப்புணர்வற்ற தொடர்ச்சி பேணப்படுதல் சிறப்பானது. உயர்ந்த

நாகரிகமான நடைமுறையுமாகும். அது தமிழர்களைப் பலப்படுத்தும்.

  • Replies 163
  • Views 12.9k
  • Created
  • Last Reply

யாழ்களம் ... தமிழ்த்தேசியத்துக்கு எதிரான நிலையோ? அல்லது முற்று முழுதாக இலங்கை.இந்திய அரசின் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்துக்கு ஆதரவான நிலையையோ? அல்லது அவர்கள் சார் நா.க.த.அ இற்கு ஆதரவான நிலையையோ? எடுக்காமலும், புலத்தில் கடந்த வருடம் போல் மாவீரர் நாளை இரண்டாக உடைத்து குழப்ப இலங்கை/இந்திய அரசுக்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணை போகாமலும்? ... தொடர்ந்தால் சந்தோசமே!

மற்றும் யாழில் குழுநிலை விவாதங்களுக்கு இடமளியாதீர்கள். ஓரிரு உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு விளக்கமோ/எதிர் கருத்தோ தெரிவிக்கையில் அவர் சார்ந்தவர்கள் வந்து தாக்குதல் தொடுப்பதை நிறுத்த வேண்டும், புதிதொரு தலைப்புகள் தொடங்கி நிலைமையை மோசமாக்குவதை தடுக்க வேண்டும். ... இது எமது போராட்டத்திலும் நடைபெற்றது ... கருணா சார் குழுவை தலைமை அனுமதித்து ... கனவுகள் கலைய காரணமாகியதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்!!!

என்னதான் புது விதிகள் வந்தாலும், அவைகளுக்கான/நடைமுறைப்படுத்துவதற்கான எல்லை எது! உதாரணமாக ஆபாச மாக எழுத கூடாது என்றால் ஆபாசம் என்றதற்கு எது எல்லை? அத்ற்கு மேல் முன்பு பன்னாடை போன்றவைகளே பிழையான சொல் என்று யாழில் தடை செய்யப்பட்டதும் இருக்கின்றது.

கருத்துக்கள் ... கேள்விகள்/சந்தேகங்கள்/அனுமானங்கள்/நிதர்சனங்களை ... அனுமதியுங்கள் ... பொது நிறுவனங்கள்/அமைப்புகளை நோக்கி எழுப்பப்படும் போது! அப்போது தான் தேடலும் இருக்கும், பிழைகளை திருத்த சந்தர்ப்பங்களும் ஏற்படுத்தப்படும். எல்லாவற்றுக்கும் மேல் எம்மால் எது சரி, எது பிழை என்று அனுமானிக்கக்கூடியதாக இருக்கும். ... அதை விடுத்து தயவு செய்து சர்வாதிகார நிலையினை எடுக்காதீர்கள்.

சில ஆலோசனைகள் ... நிதி தொடர்பாக ..

1. விளம்பரங்கள் என்பது நீண்ட கால திட்டமாக இருக்க வேண்டும்! உடனடியாக விளம்பரம் எடுப்பதிலும் சிரமம் இருக்கும், எதை எடுப்பது என்பதிலும் ஒரு சரியான வரைபு தேவை.

எனக்கும் இங்கு என் நண்பரின் ஓர் ரவல்ஸ் நிறுவனம் ஒன்றுள்ளது. கேட்டால் உடன் தருவார் ... என்ன சிறிலங்கன் எயார்லைன்ஸ் அட்வேட்டாக இருக்கும், அது சரி வராது!

2. உறுப்பினர்களிடம் சந்தா அறவிடுவது. குழுக்களை நியமிக்கலாம், இவர்கள் இன்னென்ன மாதத்திற்கான செலவுகளை ஏற்க வேண்டும் என தீர்மாணிக்காலாம், அது நீண்ட கால யாழ்கள ஓட்டத்திற்கும் நல்லது.

... முதலில் உமாமகேஸ்வரனில் தோன்றிய சார்புக்குழு, பின் மாத்தயா குழு, கருணா குழு ... என்று தொடர்ததே ... அழிவிற்கு முதல் காரணம் ... இது யாழில் வேண்டாம்!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு எழுதப்பட்டுள்ள கருத்துக்களை பார்க்கும்போது பலர் இந்தவசனத்தை கவனிக்கவில்லை போல்த்தெரிகின்றது. மோகன் ஒரு இடமும் ஓடிஒதுங்கமாட்டார், யாழ் இணையம் உள்ளவரை திரைமறைவிலாவது இருந்து செயற்பட்டுக்கொண்டுதான் இருப்பார். 'யாழ் இணையம்' மோகனின் குழந்தை. தனது குழந்தையைவிட்டு அவர் எங்குபோய்விடமுடியும்? உங்கள் கருத்துக்களில், தெளிவான சிந்தனைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிழலி பற்றியோ வலைஞன் பற்றியோ இணையவன் பற்றியோ சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

இப்ப அவை என்ன சொல்ல வரினமெண்டால்.....மோகனும் அப்பப்ப வந்து அஞ்சாறு இடத்திலை தன்ரை வேலையை காட்டச்சொல்லி நிக்கினம்...அதுதான் உங்கை கொஞ்ச சிம்மசொப்பனங்களுக்கு வெட்டிக்கொத்தி நிமித்தி எடுக்கச்சொல்லினம்.

இவ்வளவு சூடு பறப்பிற்கு பின் எனக்கு பிடித்த பாடலையும் ஒருக்கால் கேளுங்களேன் ...

http://youtu.be/mk9vqz87kmg

மோகன், தயவுசெய்து புதிய நிர்வாகத்திடம் கையளிக்கும் முன்னர், திண்ணையை இல்லாது செய்து விடுங்கள்! இங்கு தான் நோய்கள் உருவெடுக்கின்றன ... கடந்த சில நாட்களாக யாழில் வந்த நோய்கள், திண்ணை மூலமே!

மோகன், தயவுசெய்து புதிய நிர்வாகத்திடம் கையளிக்கும் முன்னர், திண்ணையை இல்லாது செய்து விடுங்கள்! இங்கு தான் நோய்கள் உருவெடுக்கின்றன ... கடந்த சில நாட்களாக யாழில் வந்த நோய்கள், திண்ணை மூலமே!

உந்த நோயை சில நேரங்களில் நீங்களும் அங்கை தொற்றுவிக்கிறினீங்கள் தானே ,,பிறகென்ன வெள்ளையாய் கொம்ப்ளைன்ட்

ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

நான் அறிந்த வரையிலும் சுதந்திரமாக தமிழ் மக்களின் முதன்மைப் பிரச்சினை பற்றி விவாதித்து பொது அரசியல் அறிவை பங்குபற்றுதல் மூலம் ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள களம் அமைத்துக் கொடுத்த ஒரு தமிழ் தளம் யாழ் மட்டுமே. இதை உருவாக்கி நீண்டகாலம் பொறுப்பெடுத்து நடாத்திய மோகன் அண்ணா அவர்களின் பங்களிப்பு உன்னதமானது.

அவரை நேரடியாக பார்த்ததில்லை. ஆனால் சில நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டபடி, அதைவிட யாழ் களத்தை நிர்வகித்த முறையில் நான் உணர்ந்து கொண்டதன்படி அவர் ஓர் உன்னத சாதனையாளன். மிகவும் உயர்ந்த பொறுப்புணர்வு உடையவர், நேர்மையானவர், கடின உழைப்பாளி, சிறந்த தகவல் தொழில் நுட்ப வல்லுநர், மிகச் சிறந்த நிர்வாகி என்பது அவரைப் பற்றி என் மனதில் இக்கணத்தில் தோன்றிய மதிப்பீடுகள். இப்படியான ஒருவர் கிடைப்பது மிக மிக அரிது. தமிழினத்தின் உயர் விழுமியங்களை பேணிவந்த யாழ்களம் தமிழினம் செய்த ஒரு பாக்கியம்தான்.

அவர் பொறுப்பிலிருந்து சற்று பின்வாங்குவது மிக மிகக் கவலையான விடயம். இந்த வெற்றிடத்தை இலகுவில் நிரப்பிவிட முடியாது என உணர்கிறேன்.

நிழலி நீண்டகாலம் மட்டுறுத்துனராக இருந்து பெற்ற அனுபவம் யாழ் களத்தை தொடர்ந்து கொண்டு செல்ல அவருக்கு நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன். சில தனிப்பட்ட நட்புகள், கொள்கைகள் அவரின் நிர்வாகத்தில் பிரச்சனைகளை கொடுக்காவிட்டால் அவரால் சிறப்பாக நடாத்த முடியும் என்ற நம்பிக்கை உண்டு.

அவ்வப்போது அளவாக, பொறுப்புடன் கருத்துக்கள் எழுதும் இணையவன் பற்றி அதிகம் அறியாவிட்டாலும், தைரியமாக கருத்துக்களைப் பகிரும் ரதி அவர்கள் இணையவன் மீது கூறிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனது சொந்த அனுபவத்தின்படி, இணையவன் எனது சில கருத்துக்களை நீக்கும் பொது, சில வேளைகளில் தனி மடலில் மிகப் பொறுப்பான முறையில் அறிவித்திருந்தார். நிழலியும் சில வேளைகளில் அவ்வாறே அறிவிப்பது வழக்கம்.

எது எப்படியோ யாழ் களம் எந்தக் களையையும் இழக்காமல், மேன்மேலும் சிறப்புற வேண்டும்; இக்கட்டான சூழலில் எம்மினம் இருக்கும் போது அதன் மீட்சிக்கு தொடர்ந்து களம் அமைக்க வேண்டும் என்பதே எனது அவா.

உந்த நோயை சில நேரங்களில் நீங்களும் அங்கை தொற்றுவிக்கிறினீங்கள் தானே ,,பிறகென்ன வெள்ளையாய் கொம்ப்ளைன்ட்

100%உண்மை! ... அதனால்தான் உதை நீக்க வேண்டிய கட்டாயத்தை கோருகிறேன்

அடுத்தது இந்த யாழ் உறவோசை! ... வேண்டா பிரட்சனைகளை நாம் கிளப்பும் பகுதியாக உள்ளது!¬ ...

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணையில்.... நிர்வாகம் சம்பந்தப்பட்ட விடயங்களையும், நிர்வாகத்தை விமர்சிப்பதையும் தடை செய்தால்.... பாதிப்பிரச்சினை தீர்ந்துவிடும்.

நிர்வாகதிடம் ஏதாவது, கேட்டு தெளிவு பெறவேண்டுமென்றால்.... அவரவர் தனிமடல்களில், கேட்டு தெளிவு பெறலாம்.

நாற்சந்தியில் நின்று நாறடிக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே என்ன பேசணும் ...............

என்ன எழுதணும் ......................என்று முதலிலேயே எழுதி தனி மடலில் அனுப்பிவிட்டால்..........

எமக்கும் வெட்டி ஒட்ட இலகுவாக இருக்கும். :lol::D :D

:)

  • கருத்துக்கள உறவுகள்

<p>

<strong>நான் அறிந்த வரையிலும் சுதந்திரமாக தமிழ் மக்களின் முதன்மைப் பிரச்சினை பற்றி விவாதித்து பொது அரசியல் அறிவை பங்குபற்றுதல் மூலம் ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள களம் அமைத்துக் கொடுத்த ஒரு தமிழ் தளம் யாழ் மட்டுமே. இதை உருவாக்கி நீண்டகாலம் பொறுப்பெடுத்து நடாத்திய மோகன் அண்ணா அவர்களின் பங்களிப்பு உன்னதமானது.

அவரை நேரடியாக பார்த்ததில்லை. ஆனால் சில நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டபடி, அதைவிட யாழ் களத்தை நிர்வகித்த முறையில் நான் உணர்ந்து கொண்டதன்படி அவர் ஓர் உன்னத சாதனையாளன். மிகவும் உயர்ந்த பொறுப்புணர்வு உடையவர், நேர்மையானவர், கடின உழைப்பாளி, சிறந்த தகவல் தொழில் நுட்ப வல்லுநர், மிகச் சிறந்த நிர்வாகி என்பது அவரைப் பற்றி என் மனதில் இக்கணத்தில் தோன்றிய மதிப்பீடுகள். இப்படியான ஒருவர் கிடைப்பது மிக மிக அரிது. தமிழினத்தின் உயர் விழுமியங்களை பேணிவந்த யாழ்களம் தமிழினம் செய்த ஒரு பாக்கியம்தான்.

அவர் பொறுப்பிலிருந்து சற்று பின்வாங்குவது மிக மிகக் கவலையான விடயம். இந்த வெற்றிடத்தை இலகுவில் நிரப்பிவிட முடியாது என உணர்கிறேன்.

நிழலி நீண்டகாலம் மட்டுறுத்துனராக இருந்து பெற்ற அனுபவம் யாழ் களத்தை தொடர்ந்து கொண்டு செல்ல அவருக்கு நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன். சில தனிப்பட்ட நட்புகள், கொள்கைகள் அவரின் நிர்வாகத்தில் பிரச்சனைகளை கொடுக்காவிட்டால் அவரால் சிறப்பாக நடாத்த முடியும் என்ற நம்பிக்கை உண்டு.

அவ்வப்போது அளவாக, பொறுப்புடன் கருத்துக்கள் எழுதும் இணையவன் பற்றி அதிகம் அறியாவிட்டாலும், தைரியமாக கருத்துக்களைப் பகிரும் ரதி அவர்கள் இணையவன் மீது கூறிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. <span style="color: #006400">எனது சொந்த அனுபவத்தின்படி, இணையவன் எனது சில கருத்துக்களை நீக்கும் பொது, சில வேளைகளில் தனி மடலில் மிகப் பொறுப்பான முறையில் அறிவித்திருந்தார். நிழலியும் சில வேளைகளில் அவ்வாறே அறிவிப்பது வழக்கம்.எது எப்படியோ யாழ் களம் எந்தக் களையையும் இழக்காமல், மேன்மேலும் சிறப்புற வேண்டும்; இக்கட்டான சூழலில் எம்மினம் இருக்கும் போது அதன் மீட்சிக்கு தொடர்ந்து களம் அமைக்க வேண்டும் என்பதே எனது அவா.  

உண்மையில் இணையவன் நீங்கள் சொல்வது போல இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தின் மீள் பரிசீலனைக்கு நன்றிகள் அதே நேரம் யாழ் இணையத்தை வியாபார நோக்கோடு இயக்கக முயற்சிகள் எடுப்பதோடு கருத்துக்களத்தில் சில பிரச்சனைகளை தவிர்ப்பாதற்கு சில ஆலோசனைகளை முன் வைக்கலாமென நினைக்கிறேன்.

1) ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட புனைபெயர்களில் வந்தால் அவரின் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டதும் அவரிற்கு எச்சரிக்கை கொடுத்து தடை செய்தல்.(யாராக இருந்தாலும்)

ஆமோதிக்கிறேன்

2)யாழ் இணையத்திற்கென வருகின்ற வாசகர்கள் அங்கு இருக்கும் படைப்புக்களிற்காகவே அதிகம் வருகிறார்கள். கருத்துக்களை பகிர்கின்றார்கள். எனவே நிருவாகம் ஒரு கருத்தாளனின் கருத்தையும் ஒரு படைப்பாளியின் படைப்பினையும் ஒரே தராசில் நிறுத்து தீர்ப்பு வழங்குவதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இதை தனிப்பட என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

3)ஒருவர் தடை செய்யப்படும் பொழுது அவர் மற்றையை பகுதிகள் அனைத்திலும் கருத்து எழுதும் உரிமத்தை தடை செய்து அதே நேரம் அவர் தன் பக்கத்து நியாயத்தினையும் எடுத்துரைக்க வசதியாக உறவோசை பகுதியில் அவரை அனுமதித்தல்.

ஆமோதிக்கிறேன்

4)ஒருவரின் கருத்துக்களிற்கு அல்லது தனிமனித தாக்குதல் சம்பவங்களிற்கு வேண்டுமானால் நிருவாகம். முறைப்பாட்டு முறையை (றிப்போட்)ஏற்று நடவடிக்கையை எடுக்கலாம் அனால் படைப்புகளிற்கு கருத்தாளர்கள் நிருவாகத்திடம் முறையிடாமல் தங்கள் விமர்சனங்களையோ எதிர்வினைகளையோ பகிரங்கமாக வைத்த பின்னர் அதனடிப்படையில் முடிவுகளை எடுக்கலாம்.

ஆமோதிக்கிறேன்

இவை என்னுடைய ஆலோசனைகள்தான் பரிசீலிப்பது நிருவாகத்தை பொறுத்தது

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் யாழுக்கு சில நாட்களாக வர முடியவில்லை.... சொல்லாமல் கொள்ளாமலே நிறுத்தி விட்டார்களே என நினைத்தேன்.

மோகன் அண்ணா.... இவ்வளவு காலமாக யாழை மிகச்சிறப்பாக நிர்வகித்ததற்கு மிக்க நன்றிகள்.... :)

யாழை முடக்காமல் பொறுப்பான, நம்பிக்கைக்குரிய, அனுபவசாலிகளான நிழலி, இணையவன் மற்றும் வலைஞனிடம் பொறுப்பளித்தில் மிக்க மகிழ்ச்சி....கோடி நன்றிகள்.

நிழலி, இணையவன் மற்றும் வலைஞன்..... யாழை இன்னும் சிறப்பாக நிர்வகிக்க வாழ்துக்கள். என்னால் முடிந்தளவு உதவிகளை தேவையான பட்சத்தில் செய்துதவுவேன். முடியாவிட்டால், அகுதா கூறியது போல, நிட்சயமாக உபத்திரவம் இல்லாமல் இருப்பேன்.

Edited by Sabesh

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான, நல்ல செய்தி!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொதுவான கருத்தியல் மாற்றத்துக்கான தளமாக யாழ் தனது பங்களிப்பை நல்கி வருகின்ற வேளையிலே அதனது இடைநிறுத்த அறிவித்தல் ஒரு இடைவெளியைத் தோன்றுவிக்கப் போகின்றதே என்ற அங்கலாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகன் அண்ணா, தொடர்ந்து களத்தைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல இருக்கும் நிழலி, இணையவன் மற்றும் வலைஞன் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

பல படைப்பாளிகளையும், எழுத்தாக்கத்துறை சார்ந்தும் எம்மவர்களை வளர்த்தெடுத்ததில் பெரும் பங்கு யாழுக்கு உண்டு. யாழ் இணையமானது தமிழரின் அரசியல், பண்பாடு, பொருண்மியம் என விரிந்து வீரியத்தோடு பயணிக்க வேண்டிய காலமாகும். தமிழினம் தொடர்ந்து ஏமாறும் இனமாகவும், ஏமாற்றப்படுமினமாகவும் ஒற்றுமையற்றோராயும் இருக்கின்ற இந்தச் சூழலில் முகமறியாது கருத்தியல் தளத்திலாவது குழுநிலை வாதப் போக்குகளைக் கடந்து கருத்தியல் ரீதியாக ஒன்றாகப் பயணிக்கும் வாய்பை யாழ் உருவாக்க வேண்டும். அரசியல் சூனியமான நிலையில், எமக்கான அரசியலை யாரோ முன்னெடுப்பார்கள் என்ற எண்ணத்தில் தமிழினம் இசைவாக்கம் அடைந்துவரும் வேளையில் யாழின் ஆரோக்கியமான பணி அவசியமானது. தொடரும் களத்திடையே புதிய சிந்தனைகளும் புரிந்துணர்வான சொற்பிரயோகங்களுமாய் யாழ் களம் விரியட்டும். தமிழினம் விடுதலைபெறட்டும்………….

யாழ் உறவுகளோடு இணைந்து

நொச்சியான்

நான் யாழில் புது உறுப்பினராக இருந்தாலும் யாழை பலவருடங்களாக வாசிப்பவன். அதனை முடபோகிறார்கள் என்று அதிர்ந்தவர்களுள் நானும் ஒருவன். நிழலி உங்கள் முடிவு மிகவும் நன்று. உங்களுக்கு எங்கள் உதவி எப்போதும் இருக்கும். உங்கள் நிர்வாகத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கு. நிழலி, இளையவன், வலையன் முவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

திண்ணை, யாழுக்கு தேவையா???????????????

திண்ணை, யாழுக்கு தேவையா???????????????

நல்ல கேள்வி தான் நெல்லையான்... ஆனால் திண்ணை இல்லாவிட்டால் இங்கே பல திரிகள் ஆரம்பித்து கருத்துக் களத்தைத் திண்ணையாக்கி விடுவார்களே? பிறகு கருத்துக் களத்தில் திண்ணை வேண்டுமா என்ற கேள்வி வரும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திண்ணை, யாழுக்கு தேவையா???????????????

கிடங்குவெட்டி வளர்த்தநாய்மாதிரித்தான் இப்ப நாங்கள் திரியிறம்....திண்ணையுமில்லையெண்டால்???????என்ரை கடவுளே!!!!!!

வயித்தாலையடி,வாந்தியடி,சொறிசிரங்கு,அரைவிசர்,முழுவிசர் எல்லாம் எல்லா இடத்தையும் நாறடிச்சிடும்....திண்ணை வந்து ஒரு சுமைதாங்கி....அதிலை வந்துநிண்டு எல்லாரும் சத்தியெடுத்துட்டு...பிறகு உள்ளுக்கு வருவம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிடங்குவெட்டி வளர்த்தநாய்மாதிரித்தான் இப்ப நாங்கள் திரியிறம்....திண்ணையுமில்லையெண்டால்???????என்ரை கடவுளே!!!!!!

வயித்தாலையடி,வாந்தியடி,சொறிசிரங்கு,அரைவிசர்,முழுவிசர் எல்லாம் எல்லா இடத்தையும் நாறடிச்சிடும்....திண்ணை வந்து ஒரு சுமைதாங்கி....அதிலை வந்துநிண்டு எல்லாரும் சத்தியெடுத்துட்டு...பிறகு உள்ளுக்கு வருவம்.

திண்ணையில் வந்ததும் கை கால் முகம் கழுவி உள்ளே வாருங்கள் என்று சொன்னால் நன்றாக இராதா அண்ணா?. . :icon_idea:

திண்ணையில் நடக்கும் தனி நபர் வாக்குவாத பிரச்சனைகள், திரிகளுக்குள் புகக் கூடாது. திண்ணையிலோ தனி மடல்களிலோ தீர்க்கப்பட வேண்டும்.

அல்லது திண்ணையே வேண்டாம்.

கண்ணீர் சிந்தும் 'சீரியல்கள்' இங்கு வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலியின் கருத்தைப்பார்த்தால்

எலி புகுந்து விட்டது என்று வீட்டைக்கொழுத்தியது போலிருக்கு. :(

தப்பிலியின் கருத்தைப்பார்த்தால்

எலி புகுந்து விட்டது என்று வீட்டைக்கொழுத்தியது போலிருக்கு. :(

களத்தில் பரவும் பிரச்சனைகள் பல திண்ணையிலே உருவாகின்றன. அதனை திண்ணையில் உள்ளவர்களே கழுவித் துடைக்க வேண்டும். வெளியில் கொண்டு வந்தால், மற்றவர்கள் தலையிடுவது தவிர்க்க முடியாதது.

திருத்தியத்தற்கான காரணம் - 'பல' எனும் சொல் சேர்க்கப்பட்டுள்ளது.

Edited by தப்பிலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.