யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,
எதிர்வரும் 30.03.2017 அன்று யாழ் இணையம் தனது 19ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.
யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.
எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.
யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.
விதிமுறைகள்:
- யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
- ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
- கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
- கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
- கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
- ஆக்கங்கள் யாழ் களத்திற்கென எழுதப்பட்டதாக/தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
- ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
- ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.
- யாழ் களத்தில் பிரசுரம் செய்து ஒரு வாரம் தாண்டும் வரையிலும் வேறெங்கும் பிரசுரம் செய்யலாகாது.
"நாமார்க்கும் குடியல்லோம்"
நன்றி
யாழ் இணைய நிர்வாகம்
53 topics in this forum
-
இந்த தலைப்பைப் பார்க்கும் பலருக்கு இதில என்ன புதினம் இருக்கு என்று நக்கல் நழினமாக பார்க்கலாம். ஆனால் என்னோடு ஒத்த வயதினருக்கு இந்த லோங்ஸ்இன் வலி புரிந்திருக்கும். ஏறத்தாள 45 வருடங்கள் முன்பாக யாரும் நினைத்த நேரத்தில் இந்த லோங்சை மாட்ட முடியாது.அதை மாட்டுவதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் என்று எழுதாத சட்டம் ஒன்று இருந்தது. பாலர் வகுப்பிலிருந்து பத்தாவது வகுப்பு வரை சந்தோசமாக போகும் பள்ளி வாழ்க்கை ஜீசிஈ எனும் பரீட்சையில் வந்து தடம் புரழும். இதுவரை அரைக் காற்சட்டைளோடு சுதந்திரமாக திரிந்தவர்கள் இந்த பரீட்சையில் சித்தியெய்தினால் மட்டுமே அடுத்த கட்ட படிப்பு மாத்திரமல்ல எதிர் காலமே சூனியமாகிவிடும். இந்த சோதனைகளில் சித்தியடைந்தவர் மட்டும் புதிதாக லோங்ஸ் மா…
-
- 52 replies
- 4.7k views
- 2 followers
-
-
இருட்டடி பாகம் - 1 எங்கள் ஊரும் பிற ஊர்களைப் போலவே செழிப்பான தோட்டங்கள், தோப்புக்கள், பனங்கூடல்கள், வெட்டைகள், புல்வெளிகள் நிறைந்த ஒரு சாதாரண கிராமம். எல்லா ஊர்ப் பிள்ளைகளையும் போலவே பள்ளிக்குடம், ரியூசன் என்று இளம் பிராயத்து சிறுவர்கள் முதல் வளர்ந்த மாணவர்கள் வரை நித்தமும் படிக்கவென்று ஓடுப்பட்டுத் திரிந்தாலும், கிடைக்கும் சொற்ப இடைவேளைகளில் விளையாட்டுக்களுக்கும் வேறு பொழுதுபோக்குகளுக்கும் எங்களால் நேரத்தை ஒதுக்கக் கூடியதாகத்தான் இருந்தது. ஓவ்வொரு வயதுக் குழுவிலும் இருப்பவர்கள் காலநேரத்துக்கு ஏற்றபடி வேறுவேறு விளையாட்டுக்கள் விளையாடுவோம். கிட்டிப்புல், கிளித்தட்டு, சிரட்டைப்பந்து போன்ற கிராமத்துக்கேயுரிய பாரம்பரிய விளையாட்டுக்கள் முதல் கிரிக்கெற்…
-
- 66 replies
- 5.9k views
-
-
கூடைப்பந்து மைதானத்தில் நாலு பக்கம் கோடு போட்ட - நான்முகன் நடுவில் இட்ட புள்ளி நீயே ! காதிலும் வளையம் மூக்கிலும் வளையம் நாக்கிலும் வளையம் -நாபி உன்னிலும் மின்னுது வளையம் ! கண் இமைக்கு கருமை கைகளுக்கு மருதாணி - தொப்புள் உன்னிலும் ஒளிருது ஸ்டிக்கர் ! கோடிகள் கொட்டும் திரையிலும் கொடியிடை அசைவினில் - குளோசப் முழுதும் கொள்ளையடிக்கின்றாய் ! நடிகைக்கு தரும் நான்கு கோடியில் மூன்று கோடி - முழுதும் முகம் காட்டி முழுங்குகின்றாய் ! எதிர்த்து வரும் வாலிபர் வெறித்த கண்கள் கருத்தாய் மேயும் - தாவணியில் மின்னும் ஆவணியும் நீதானே ! காலையில் கல்லூர…
-
- 20 replies
- 3.5k views
- 1 follower
-
-
கிராமத்தில் வாழும் மக்களுக்கு கிடைக்கும் பல சுக போகங்கள் நகரத்து மக்களுக்கு கிடைப்பதில்லை.அதிலே ஒன்றை எடுத்து விடலாம் என்று தொடங்குகின்றேன். எந்தக் காலங்களாலும் சரி ஏதோ ஒரு திருவிழா சன சமூக நிலையம் திறப்பு விழா அல்லது ஆண்டுவிழாஎன்று ஏதோ ஓர் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும்.கோவில்களில் திருவிழா தொடங்கினால் கொடியேற்றத்தில் இருந்து பூங்காவனம் வரைக்கும் ஏட்டிக்கு போட்டியாக சிகரம்கள் கட்டி பெரிய மேளம் சின்னமேளம் கண்ணன் கோஸ்டி என்று விடிய விடிய கூத்துக்கள் நடக்கும்.இந்தக் காலங்களில் ஒவ்வொரு திருவிழாகாரரினதும் கூத்துக்களை விலாவாரியாக அச்சடித்து கார்களில் ஒலி பெருக்கி கட்டி காலையில் இருந்து மாலை வரை இடை இடையே பாட்டு சத்தங்களின் நடுவே அன்றைய நிகழ்ச்சி நிரலையும் சொல்லிக் கொண…
-
- 44 replies
- 7k views
- 1 follower
-
-
என் முதலாவது காதலியே...! உன்னை நெஞ்சோடு…, இறுக்கமாக அணைத்த நாள், இன்னும் நினைவிருக்கின்றது! நீ…,! எனக்கு மட்டுமே என்று.., பிரத்தியேகமாக... படைக்கப் பட்டவள்! உனது அறிமுகப் பக்கத்தில், எனது விம்பத்தையே தாங்குகிறாயே! இதை விடவும்…,, எனக்கென்ன வேண்டும்? உனது நிறம் கறுப்புத் தான்! அதுக்காக…., அந்தக் கோபாலனே கறுப்புத் தானே! அதுவே உனது தனித்துவமல்லவா? உன்னைப் பற்றி…, எனக்கு எப்பவுமே பெருமை தான்! ஏன் தெரியுமா? ஜனநாயகமும்...சோசலிசமும், உடன் பிறந்த குழந்தைள் போல.. உன்னோடு ஒன்றாகப் பிணைந்திருக்கின்றனவே!, உலக அதிசயங்களில் ஒன்றல்லவா, இது? என்னவ…
-
- 11 replies
- 2.6k views
-
-
விவசாயம் செய்வதற்குப் பல முறைகள் இருந்தாலும் எமது நாட்டில் வீட்டுத் தோட்டம் செய்வதற்கு மிகவும் இலகுவானதும் பயனுள்ளதுமாகக் கருதியதால் hugelkultur முறையைப் பற்றி எழுதுகிறேன். அதுமட்டுமல்லாது இம் முறையானது Permaculture எனப்படும் இயற்கை உணவுச் சுற்றை அண்டியதாகவும் உள்ளது. இப் பதிவின் இறுதியில் எனது குறுகிய hugelkultur பயிற்செய்கை அனுபவத்தையும் எழுதுகிறேன். சுருக்கமாகச் சொன்னால் hugelkultur முறையானது மரக் கிளைகள அடுக்கி மண்ணினால் மூடி அதன்மேல் பயிரை வளர்த்தலாகும். விரிவாக இது பற்றிக் குறிப்பிடும் முன்னர் இதன் பலன்களைப் பற்றிப் பார்த்தால் இப் பதிவை வாசிப்பதற்கு ஆர்வம் உண்டாகலாம். இயற்கை, இயற்கை, … இலவசம். குறுகிய இடத்தில் பயிர் நடப்படும் நிலப்பரப்பை அதிகர…
-
- 17 replies
- 4.1k views
-
-
ஒரு சாதாரண பயணம் இது கதையுமில்லை கத்தரிக்காயுமில்லை - எனது பல பயணங்களில் இதுவும் ஒன்று. இது முதற் தடவையும் இல்லை, இறுதியும் இல்லை - ஆனால் தொடரும் எனது பயணங்களில் ஒன்று. இங்கு இதே முறையில் பலதடவைகள் வந்திருந்தாலும், ஒவ்வொருமுறையும் புதிய அனுபவங்கள் + புதிய மனிதர்கள். முதற்தடவையாக பகிர்கின்றேன். பல பெயர்களை தவிர்த்துள்ளேன். கற்பனை கலக்காத ஒரு பதிவு இது. புதன் கிழமை மச்சான் நான் முதலாம் திகதி திரும்புறன் எப்படா வாறாய்? - தொலைபேசியில் ஒரு கதறலா அதட்டலா என்று புரியாத நண்பனின் குரல். இவனை சமாளிப்பது இலகுவான விடயமில்லை என்று எனக்கும் தெரியும். சிலவேளைகளில் அன்பினால் அதட்டுவதும் அதிக உரிமை எடுப்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. மச்சான், எனக்கு கொழும்ப…
-
- 36 replies
- 3.6k views
-
-
1 அரை மனிதர்களாக இன்னும் எத்தனை காலம் வாழப்போகின்றோம்? அனைத்துலகப்பெண்கள்நாள் ஆண்டுதோறும் சிறப்பாக, உலகெங்கும் கொண்டாடப்பட, அழுவதே நாளாந்த வாழ்வாகிப்போன அவலம் சுமக்கும் பெண்கள் உலகம் ஒன்று உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? உறவுகள் தொலைத்தவர் துயரை எத்தனைபேரால் புரிந்திட முடியும்? இழப்புக்கள் தரும் வலிகளோடு அனுதினமும் போராடி போராடி, அழுவதைத்தவிர வழியே இல்லாமல் அல்லாடி அல்லாடி அவலம் சுமக்கும் எங்கள் தாயகப்பெண்கள் நிலை எத்தனை பேருக்கு தெரியும்? வாழ இடமின்றி தத்தளித்து தவித்து உயிரே போனாலும் சரி எம் நிலம் மீட்க எமக்காக நாமே போராடுவோம் என தனித்து நின்று போராடும் எங்கள் மண்ணின் பெண்கள் அன்றாடம் படும் அவலங்கள் எ…
-
- 11 replies
- 1.4k views
-
-
சபிக்கபட்ட இனமென்று தெரிந்திருந்தும் உன்னை நிமிர்த்திட நான் துடித்தேன். யாருக்கும் கிடைக்காத பொக்கிசமாய் அர்சுனனை மீண்டும் உன் குடியில் பிறக்கவைத்தேன்! ஆயிரம் ஆயிரம் அபிமன்யூக்களை உனக்கென்று கொடுத்து வைத்தேன்! சதுரங்க ஆட்டத்தின் வித்தைகள் தெரிந்தவனை உன் கூட்டத்தின் தளபதியாக்கினேன்! சுதந்திரத்தின் வாசம் புரியட்டும் உனக்கு என்று பறவைகளை உன் வாசலுக்கு அனுப்பி வைத்தேன்! நல்ல எண்ணங்கள் புத்தியில் வரட்டுமென வாசனை மலர்களை உன் வீட்டு வாசலில் வைத்தேன்! கிடுகு வேலிக்குள் சண்டியனாய் நீ வளர்ந்தாய்! வடக்கென்றும் கிழக்கென்றும் தீவென்றும் பிரிவுகள் பல பேசி கோமணமும் இல்லாது அம்மணமாய் நீ…
-
- 13 replies
- 1.2k views
-
-
பால் சுரக்கும் ஆண்கள். தாத்தாவை சீண்டி விட்டு தாவி ஓடுகையில் தாவிவரும் கைத்தடியும் காலில் பட்டுவிட பாதத்தில் பால் சுரக்கும். அழுக்கு முந்தானையில் அதிரசம் முடிந்து வைத்து உனக்குத்தான், ஒழிச்சு சாப்பிடு என்ற பாட்டியின் பாசத்தில் - என் கேசத்தில் பால் சுரக்கும். கன்னத்தில் நீர் உறைந்திருக்க கட்டிலில் தான் படுத்திருக்க தான் அடித்த தழும்பில் பரிவுடன் தடவிடும் தந்தை கையில் பால் சுரக்கும். அண்ணனுக்கு அடித்ததென்று கன்னத்தில் அடித்துவிட்டு கிட்ட வந்து பாக்கட்டில் பணம் வைக்கும் சித்தப்புவிடம் பால் சுரக்கும். ஆடுபுலி ஆடடத்தில் அளாப்பி விளையாட அக்காவு…
-
- 13 replies
- 2k views
-
-
மனப்பொருத்தம் பூமிப் பந்தின் சுழற்சிக்கு ஏற்ப கால நிலை மாறுகிறது. அது போலவே மனிதனின் வாழ்வும் சுழன்று கொண்டே இருக்கிறது . வருடங்கள் காலச் சுழன்றோ ட சக்கரத்தில் மனிதனின் வளர்ச்சியும் மாறிக் கொண்டே இருக்கிறது ... மாற்றங்கள் எப்போதுமே மாறாதவை . கருணாகரன் க லாவதி தம்பதிகளும் ,போர்க் .காலச் சூழ்நிலையால் புலம் பெயர்ந்து பிரான்சின் நகரப்பகுதிக்கு அண்மையில் ,மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தைக்ளுமாய் வாழ்வை ஆரம்பித்தார்கள். கருணாகரன் ஆரம்பத்தில் எந்த வேலை கிடைத்தாலும் செய்வான். பின்பு குடும்பத்தி ன் செல்வைக்க கட்டுப்படுத்தமுடியாமல் மேலும் ஒருபகுதி நேர வேலையாக கடைக்கு கணக்கு எழுதும் வேலையும் செய்து வந்தான் . அவர்கள் ஊதியமாக சி…
-
- 12 replies
- 1.3k views
-
-
அதிகாலைப் பனியில் அரை றாத்தல் பாணுக்காய் ஆலாய்ப் பறந்த அம்மையாரின் காலம். கூப்பன் அரிசியில் அரை வயிற்றுக் கஞ்சியும் மரவள்ளிக் கிழங்கும் மக்கள் உயிர்வாழ ஒத்துழைப்புச் செய்தன. பத்தாம் வகுப்புச் சித்தியடைந்தபின் தொடர்ந்து படிக்க வேண்டுமென்ற எனது ஆசை நிறைவேற்றப்படாமல் ஆண்டொன்று கழிந்தது. காரணம் எங்கள் கிராமப் பாடசாலையில் அப்பொழுது உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப் படவில்லை. தினமும் நகரப் பள்ளிகளுக்குச் சென்று வருவதும் கடினம். ஏனக்கோ எப்படியாவது உயர்தரம் படித்து ஓர் ஆசிரியையாக வரவேண்டுமென்ற கனவு. எனது விருப்பப்படி எப்படியோ ஓர் கல்லூரியில் அனுமதியும் கிடைத்து விட்டது. ஆனாலும் அங்கு தங்கிப் படிக்க வீட்டு நிதிநிலமை இடம் தராது. எனவே அதிபர் ஆசிரியர்களின் ஆலோசனையுடன் என்னைப்போல எதிர்க…
-
- 8 replies
- 1.1k views
-
-
“அத்தான் எழும்புங்கோ“ காலை நித்திராதேவியின் அணைப்பின் சுகம் கலைந்த கடுப்பையும் மீறி அழைத்த குரல் காதில் தேனாக நுளைந்தது. அழைத்தபடி அருகே வந்து தட்டி எழுப்பிய கையை பட்டென்று பற்றி அணைத்தான். “விடுங்கோ“ அவள் சிணுங்கிச் சிவந்தாள். சிவந்த கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டுத் தட்டியவன் அவள் அழகை ரசிக்கத் தொடங்கினான். சிவந்த கன்னம் அவன் கைபட்டதால் மேலும் சிவந்து நெற்றியை அலங்கரித்த குங்கும நிறத்தோடு கலந்தது. சாமியைக் கும்பிட்ட அடையாளம் அவள் நெற்றியில் மெல்லிய வெண்ணிறக் கோடாக மிளிர்ந்தது. கூந்தலில் சூடியிருந்த மல்லிகை மலரின் மணம் அவன் நாசியில் ஏறி நித்திரைச் சோம்பல் எல்லாம் விரட்டி அடித்தது. ஆறரை மணிக்கு எழுந்து காலைக் கடன்கள் எல்லாம் முடித்து வேலைக்குப் புறப்பட அவனுக்கு …
-
- 37 replies
- 3.3k views
-
-
வந்தனா கொஞ்சம் நில்லுங்கோ, இன்று எனக்கொரு பதிலைச் சொல்லி விட்டுப் போங்கோ. நான் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர் பார்க்குறீங்கள் சந்திரன். பிள்ளைகள் பள்ளிகூடத்தால வந்திருப்பினம், இனித்தான் நான் போய் சமைக்க வேண்டும். வந்தனா எத்தனை நாட்கள் நாங்கள் இந்தக் கந்தோரில இரவுப் பணியாற்றி இருக்கிறோம். என்னுடைய ஆசையை நான் கூறிவிட்டேன் , நீங்கள்தான் பிடிகொடுக்காமல் நழுவுறீங்கள். என் நிலைமையை புரிந்து கொள்ளுங்கோ சந்திரன். தெரியும் வந்தனா, உங்களுக்கு இந்த வேலைகூட நான்தானே வாங்கித் தந்தனான். வாறகிழமை 30ம் தேதி விடுமுறையும் கூட ஒருமுறை என்ன சொல்லுங்கோ. என்னால் வரமுடியாது சந்திரன். ஆனால் நான் உங்களுக்கு ஒரு உதவி செய்யலாம். என்ன என்ன உதவி, ஆசையாய் இருக்கு கெதியாய் சொல்லுங்கோ. சும்மா ப…
-
- 33 replies
- 4.7k views
- 1 follower
-
-
நெகிழி குணாளனுக்கு சலிப்பே ஏற்பட்டுவிட்டது. குணாளனின் தந்தையார் கந்தையருக்கும் கடுப்பேறிப் பேசிக்கொண்டே துப்பரவு செய்துகொண்டிருந்தார். கந்தையற்றை துணைவி பாக்கியமக்காவும் விடுவித்தகாணியைப் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்திட வேணுமெண்ட அவாவிலை ஷஷ துலைவாங்கள் நிலமெல்லாத்தையும் நாசமாக்கிப் போட்டாங்கள்,, என்று புறுபுறுத்தவாறு குப்பைவாரியால் குப்பைகளை இழுத்து ஒன்றாக்குவதில் முனைப்போடு நின்றார். ஆனால் இழுக்க இழுக்க வளவுக்குளாலை ஒரே பொலித்தீனாகவே வந்துகொண்டிருந்தது.. " உவங்கள் கண்ணிவெடியை எடுத்து முடிச்சாலும் இது முடியாதுபோல கிடக்கென்று,, அங்கலாய்த்தவாறு இழுத்துக்கொண்டு நிற்க, அடுத்த வளவு அன்னம்மாக்காவும் தனது காணியை நோக்கி நடந்தவாறு " என்ன பாக்கியமக்கா மண்ணோட சண்டையோ! என்…
-
- 16 replies
- 3.9k views
-
-
கோபம் காலையில் காபி சூடாயிருந்தால் கோபம் பஸ் வண்டி க்கு காத்திருக்கும் போது ஒரு வகை எரிச்சல் உடனான கோபம் . வேளைக்கு உணவின்றேல். புகைச்சலுடன் கோபம். ஏழைக்கு இறைவன் மீது கோபம் குழந்தை சிந்தும் உணவின் மேல் கோபம் குழந்தையின் முரண்டு பிடித்தால் கோபம் உதட்டு அருகே வரும் உணவு கீழே சிந்திய கோவம் எரியும் அடுப்பில் காஸ் தீர்த்து விடடால் கோபம் .. ஆழ்ந்த உறக்கத்தில் அலாரம் மீது கோபம் விரும்பியது கிடை க்கா விடடால் கோபம் . காத்திருக்கும் அவள்/அவன் வராவிடடால் கோபம் . பந்தி உணவில் கடைசி வரி கிடைத்தால் கோபம் பசி வேளையில் உணவின்றேல் கோபம் நீண்ட வரிசையி ல் குற…
-
- 15 replies
- 2.5k views
-
-
இது ஒரு பொன் மாலைப்பொழுது….. என் முன் ஆளுயர நிலைக்கண்ணாடி உற்றுப் பாா்க்கிறேன் இது நானா? இதில் தொியும் விம்பம் என்னதா? அடடா, காலம் என்னையும் எனது இளமையையும் எத்திப் பறித்து விட்டதா? தினமும் பாா்க்கும் கண்ணாடிதான் ஆனாலும் இன்றுபோல் பாா்க்கத் தவறி விட்டேனா? மீண்டும் கண்களை இடுக்கி நிதானமாக உற்றுப் பாா்க்கிறேன் சந்தேகமில்லை இது என் உருவம் தான் முகத்தில் சுருக்கம் முடி அடியில் வெண்மையின் நெருக்கம் துடிப்பும் துள்ளலும் ஆடங்கிய கை கால்களில் சிறிது நடுக்கம் அத்தனை விடயங்களையும் அட்டவணைப்படுத்தும் என் ஞாபகச் சிறகுகளில் சற்று…
-
- 17 replies
- 3.5k views
- 1 follower
-
-
-
- 120 replies
- 14.8k views
-
-
நண்பர்கள் என்பவர்கள் எம்மோடு இரண்டரக்கலந்தவர்கள் எம்மை அறிந்தவர்கள் புரிந்தவர்கள் என்பதையும் தாண்டி முகம்தெரியாமலேயே நட்பு வைத்துக்கொள்ளலாம் அதனாலும் பல நல்லது செய்யலாம் பல அரிய விடயங்களை பெறலாம் என்பதை எனக்கு அறிமுகமாக்கியது யாழ் தான். அதன் தொடர்ச்சியாக முகநூலிலும் பயணம் தொடர்கிறது கருத்து எழுதுவதில் யாழ் தந்த அனுபவம் மற்றும் அறிமுகங்களோடு முகநூல் பாவனையும் எனக்கு மேலும் நல்ல சிறந்த நட்புக்களையும் தேடல்களையும் தொடர்புகளையும் தந்திருக்கிறது. அது மேலும் மேலும் வளரும் சாத்தியமுள்ளது. எமது இலக்கிலும் நண்பர்களை சேர்ப்பதில் அவதானமாகவும் தொடர்ச்சியாக இருந்தால் முகநூலும் எமக்கு ஒரு வரப்பிரசாதமே. …
-
- 34 replies
- 12.4k views
- 2 followers
-
-
எனது சின்னமகன் பட்டப்படிப்பு முடியும் தருவாயில் 3 மாதம் வேலை செய்து அந்த வேலை சம்பந்தமான அறிக்கை சமர்ப்பித்து நேரடி பரீட்சையிலும் சித்தி பெறணும் அதன்படி பெரிய கம்பனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்திருந்தான் இவனோடு ஒரு பிரெஞ்சுக்காரர் ஒரு ஆபிரிக்கர் இவன் என 3 பேரை அந்த நிறுவனம் எடுத்திருந்தது இவர்களுக்கு பொறுப்பானவர் ஒரு பிரெஞ்சுக்காறர். 3 மாதம் முடியும் தருணம் இவர்களுக்கு பொறுப்பானவர் வெளிநாட்டுக்காரரான இருவருக்கும் மிகவும் உதவியாக இருந்தார் பரீட்சைக்கு எவ்வாறு எழுதுவது நேர்முகத்தெர்வில் எவ்வாறு பதிலளிப்பது என்பது போன்று உதவியதோடு மட்டுமன்றி இறுதி நாள் நேரடி பரீட்சை நடைபெறும் இடத்துக்கும் நே…
-
- 12 replies
- 1.2k views
-
-
புதுவருடமே. .........? புது வருடமே நீ வருகிறாய். .. தீராத வலி சுமக்கும் எமக்கு என்ன தரப்போகிறாய்? எங்கே என் தம்பி. .? எங்கே எம்டன் இருந்த உறவுகள் எங்கே? யாரிடம் கேட்பது?--....... பதில் காலத்தை கேட்பதா - இல்லை கடவுளை கேட்பதா ? தமிழனின் வாழ்க்கை இது என்று வாழ்வதா? வாழ்ந்தோம் வாழ்ந்தோம் சொந்த ஊரில் வாழ்ந்தோம் இழந்தோம் இழந்தோம்-- இன்று எல்லாம் இழந்தோம். கனவுகள் கலைந்து நினைவுகள் சிதைந்து காலோடு கால் தடுமாறி கொண்டு தெருவோரம் நடக்கின்ற குடிகாரன் போல் இருக்கின்ற இன்றைய வாழ்வில். ... புதுவருடமே வந்து என்ன செய்வசெய்வாய். ......?
-
- 7 replies
- 1.2k views
-
-
************ சிறு பருவத்திலிருந்து ஒரு பழக்கம் அதை பழக்கமென்பதைவிட கணிப்பு என்று சொல்லலாம் ஒருவர் குடித்திருந்தால் அவருடன் எந்த பேச்சுவார்தையும் அன்று வைப்பதில்லை. இது எனது தகப்பனாரின் குடிக்குப்பின்னாலான நடவடிக்கைகளை பார்த்து வந்து அதன் பின் நண்பர்கள் உறவுகள் என தொடர்ந்து வந்திருக்கிறது எல்லோரது செயலும் எனது கணிப்புக்கு உரமேற்றியிருக்கின்றனவே தவிர ஒரு போதும் வலுவிளக்கச்செய்ததில்லை. நான் தான் இப்படியான கணிப்பு வைத்திருக்கின்றேன் என்றில்லை குடிப்பவர்களே மற்றொரு குடிப்பவரை பார்த்து இவ்வாறு தான் சொல்கிறார்கள் எமது சமுதாயமும் இப்படித்தான் ஒரு கணக்கு போட்டு வைத்துக்கொள்கிறது எனது தகப்பனார் என்னிடம் ஒரு முறை சொன்னார் …
-
- 22 replies
- 2.4k views
-
-
சித்திரையைப் பர்சோனிபை (personification) செய்து எல்லோரும் சித்திரையாளாக்கி விட்டார்கள். அதனால் எனக்கும் சித்திரையென்னும்போது பழைய சின்னமேள நாட்டியத்தாரகை சித்திராவின் நினைப்புத்தான் வருகிறது. அந்தப் பெண் இப்போது கிழவியாகிச் செத்தும் போனாளோ தெரியாது. அதற்கென்ன நாட்டியத்தாரகை பத்மினியை யாராவது கிழவியாகவா நினைத்து எழுதுவார்கள் பேசுவார்கள் அப்படித்தான் இதுவும். சித்திரை வந்தாள் நித்திரையில் ஆழந்திருந்தேன் நீண்ட துயில் ரா முழுதும் தத்திமித்தா தையெனும் ஓசை – அட எத்திசையில் வுருகிறது என்று புலன் போனதங்கே சித்திரையாள் என்னிடம் வந்தாள். கட்டழகி மொட்டழகிற் கச்சைகட்டித் துள்ளி நட மிட்டதனை எங்ஙனம் சொல்வேன் - பிடித் த…
-
- 3 replies
- 1.7k views
-
-
இரும்பாய் கனத்த என் இதயம் துடுப்பிழந்த படகைப்போல் அலைகளால் இழுத்து செல்லப்பட்டு அன்னிய தேசத்தில் அனாதையாய் எங்கெங்கோ புலப்படும் ஒளி இழந்த மின் விளக்குகள் போல் தெரிகிறேன் கொஞ்சம் கொஞ்சமாய் ! என்னுள் அன்று இழந்தவையோ இருக்கின்றன இன்னும் அணையாமல் நினைவெனும் நினைவிடத்தில் ! என் நிதர்சனத்தின் நீண்ட பயணத்தில் நீங்காது நீள்கின்றன நீறு பூத்த ஆறாத ரணங்களாய் எட்டாண்டின் நினைவுகள் ! காலச்சுழற்சியில் கற்பனைகளும் கலைந்துப்போக வன்னி மண் நினைவுகள் மட்டும் என் உணர்வை விலை பேசியதாய் ஏன் தானோ நிலையாய் நிற்கின்றன? உணர்வுகள் உருக்குலைந்தன உறவுகளும் உடைந்துபோகின நிதானமான என்னை நிர்கதியாக்கின அன்றைய நாள்... என்னை நித்தமும் ந…
-
- 4 replies
- 2.6k views
-
-
அழகோ அழகு பள்ளிச் சிறுமி பருவம் அடைந்ததும் பேரழகு பருவப் பெண் மண மேடையில் இன்னும் அழகு மணப்பெண்ணுக்கு மாலையிடட மணமகன் அழகு மணமக்களுக்கு முதற்குழந்தை பரிசு பெற்ற அழகு அழகுக்கு குழந்தையின் மழலை ப் பேச்சு அழகு தத்தி த்தவளும் மழலையின் முதலடி அழகு தத்தி நடைபயிலும் மழலையின் ஒவ்வொரு அசைவும் அழகு அழகுக்கு அழகு சேர்க்கும் பெண் குழந்தை இன்னும் அழகு புரிந்து நடக்கும் மனையாள் ஆடவனுக்கு அழகு பெற்றோருக்கு முதற் குழந்தை பெருமித அழகு என் பையன் என் பொண்ணு என்ற அப்பாக்கு கர்வம் கொண்ட அழகு ஆண் பிள்ளையும் ப…
-
- 6 replies
- 5k views
-