Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வணக்கம் நீண்ட இடைவெளியின் பின்பு சமாதான தேசத்தில் இருந்து யாழ் உறவுகளுடன் இணைகின்றேன். படித்த சில ஆக்கங்களில் மனதை கவர்ந்த சில.....உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். 1) நாய்களை அவிழ்த்து விட்டுவிட்டு கல்லைக் கட்டிப் போட்டிருக்கின்றார்கள். - கவிஞர் சுரதா 2) தாய் இறுக்கிப் பிடிப்பது பிள்ளை விழாமலிருக்கவே அன்றி பிள்ளையை கொல்வதற்காக அல்ல - கவிப்பேரரசு வைரமுத்து (என் மானசீக துரோணாச்சிரியார்) 3) கன்னத்தில் அடித்துவிட்டு காதுக்குள் போவதுதான் உசத்தியான வசனம் - கவிப்பேரரசு 4) சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல் உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேன் - கவிஞர் சுரதா மின்னல் கண்டு மலரும் ஓர் மலர் உண்டென்று இதை வாசித்த பின்புதான் நான் அறிந்தேன். 5) குஞ்சாகப் பொர…

    • 9 replies
    • 3.3k views
  2. நாங்கள் எவ்வளவதான் தமிழ்.. தமிழ்.. என முழங்கினாலும் பலருக்கு நகைப்பாக இருக்கும் எதிர்த்து வாதம் செய்வார்கள். வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் வாய்பிளந்து பார்ப்பார்கள். இங்கே இந்த ஒளிப்பதிவில் அலெக்ஸ் கொலியர் சொல்வதை கேளுங்கள். இவர் அமெரிக்காவின் மிகப்பெரும் ஆராய்ச்சியாளர், பேராசிரியர், இவர் தனது பட்டறையில் மற்றவர்களுக்கு விளக்குகிறார் இப்படி, ஒரு காலத்தில் உலகில் ஒரே ஒரு மொழிதான் நாம் அனைவரும் பயண்படுத்தியுள்ளோம் அந்த மொழி தமிழ் என அழகாக எழுதியும் காட்டுகின்றார். ஒளிப்பதிவில் 1:38.00 நிமிடத்தில் இருந்து பாருங்கள் அவரது குரலும் அவர் எழுதுவதும் தெளிவாக தெரியும். http://youtu.be/ZegXpXm4bug தமிழ் உலகை ஆண்ட மொழி, உலகிற்கு ந…

  3. வலி்ச்சாலும் பிடிச்சிருக்கு! மீன் கொடித் தேரில் மன்மத ராசன் ஊர்வலம் போகின்றான் என்றொரு திரைப்படப் பாடல் கேட்டிருப்பீர்கள்.. மன்மதன் கரும்பை வளைத்து வில்லாக வைத்திருப்பானாம் அவனுடைய தோள்களில் தொங்கும் அம்பறாத்துணியில் மலர்கள் நிரம்பி வழியுமாம் அந்த மலர்களை அம்புகளாக (கணைகளாக) ஆண்களின் மீதும் பெண்களின் மீதும் எய்துகொண்டிருப்பானாம். அப்படி எய்யப்படும் மலர்(க்கணைகள்) அம்புகள் எவர் மீது விழுகின்றனவோ, அவர்களுக்குக் காதல் அரும்புமாம். இது பழந்தமிழர் நம்பிக்கை. இது சரியா? தவறா? என்று ஆய்வு செய்யும் முன்னர்... ஆண் மீது பெண்ணுக்கும் - பெண் மீது ஆணுக்கும் ஏற்படும் ஈர்ப்புக்கு இன்றைய அறிவியல் கூறும் வேதியியல் (ஆர்மோன்) விளக்கத்தோடு ஒப்புநோக்கத்தக்கதாக இச்சிந்தனை வி…

  4. ‘ஆட்டைப் பெரிய திருவிழா’ (பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்) ‘ஆட்டை’ என்ற சொல்லுக்கு விளையாட்டின் திருப்பம் (turn in a game) என்று சென்னைப் பல்கலைக்கழக தமிழ் களஞ்சியம் (Tamil Lexicon – Madras University 1982) பொருள் கூறுகிறது. ‘ஆட்டைத் திருவிழா’ எனில் வருசத் திருவிழா (Annual Festival) என்றும் விளக்குகிறது. மேலும், ஆட்டைக்கோள், ஆட்டைக் காணிக்கை, ஆட்டைப் பாழ், ஆட்டை வாரியம், ஆட்டைப் பிறாயம் பொன்ற சொற்களும் ஒத்த பொருள் உடையனவாக கல்வெட்டுக் கலைச்சொல் அகராதிகளில் குறிப்பிடப்படுகிறது. ஆட்டை என்ற சொல் அதன் நேர்பொருளில் விளங்கிக் கொள்ளப்பட்டு கடைபிடிக்கப்பட்ட காலம் மாறி, இன்று ‘திருடுவது’ என்ற பொருளில் உலக வழக்காகத் திரிந்து வழங்குவது உற்று நோக்கத்தக்கது. வியப்பு என்னவெனில் ‘ஆட…

    • 9 replies
    • 2.6k views
  5. நிலம் 1. நிலம் (பொதுவாக சொல்வது) 2. கல்லாங்குத்து நிலம் - கற்கள் மிகுந்து காணப்படும் நிலம் 3. செம்பாட்டு நிலம் - செம்மண் நிலம் 4. மேய்ச்சல் நிலம் - கால்நடைகள் மேய்யும் நிலம் 5. வட்டகை நிலம் - சுற்றிலும் வேலியிடப்பட்ட நிலம் 6. அசும்பு -- வழுக்கு நிலம் 7. அடிசிற்புறம் - உணவிற்க்காக விடப்பட்ட மானிய நிலம் 8. அடுத்தூண் - பிழைப்புக்கு விடப்பட்ட நிலம் 9. அறப்புறம் - தருமச் செயல்களுக்கு வரிவிலக்குடன் விடப்பட்ட இடம் 10. ஆற்றுப்படுகை - நதி நீர் பாசனத்தில் உள்ள வண்டல் படுகை நிறைந்த நிலம் 11. இதை - புன்செய் சாகுபடிக்கான நிலம் 12. இறையிலி - வரி நீக்கப்பட்ட நிலம் 13. உவர்நீலம் - உப்புத்தன்மை கொண்ட நிலம் 14. உழவுகாடு - உழவுக்கேற்ற நிலம் 15. உ…

  6. மருத்துவர்களே திருமூலர் சொல்லும் கல்வி உண்மைதானா! திருமந்திரத்தில் நம் வாழ்வியலுக்குத் தேவையான பல உண்மைகள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதில் கலவி பற்றி அவர் சொல்கின்ற சில செய்திகளில் உண்மை இருப்பது போன்று தோன்றவே மருத்துவப் பதிவர்களிடமே கேட்டு விடலாம் என்ற எண்ணம் தோன்றியது. குழந்தையின் பாலை நிர்ணயம் செய்யும் செயலைக் குறித்துச் சொல்லுகையில் - குழவியும் ஆணாம் வலத்தது வாகில் குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில் குழவியும் இரெண்டாம் அபான னெதிர்க்கில் குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே என்கிறார். அதாவது கலவியின் போது ஆணினுடைய மூச்சு…

  7. தமிழை எளிமையாக கற்க 'ஐ' தமிழ்: மதன் கார்க்கியின் புது கான்சப்ட்! இப்பொழுது நாம் எழுதி படித்துக் கொண்டிருக்கும் தமிழ் வடிவ மானது பண்டைய காலங்களிலிருந்து பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்தது. மொழியின் ஒலி மாறுவதில்லை. ஆனால் காலத்திற்கேற்ப எழுத்தின் வடிவம் மாறி வந்துகொண்டிருக்கிறது. கல்வெட்டில் இருந்த தமிழும், ஓலைச் சுவடிகளில் இருந்த தமி ழும், அச்சகங்கள் வந்தபோது அதற்காக மாறிய தமிழ் எழுத்துக் களையும் நாம் அறிவோம். கடைசியாக எழுத்துக்களை சீரமைத்து கொடுத்தவர் பெரியார். சில காலமாகவே வா. செ. குழந்தைசாமி போன்ற அறிஞர்கள் எழுத்துச் சீரமைப்பை பற்றி பேசி வந்திருக்கிறார்கள். இப்போது இருக்கும் தமிழ் எழுத்து வடிவங்களை மேலும் எளிமையாக்க 'கார்க்கி ஆராய்ச்சி மையம்' மேற்கொண்டுள்ள முய…

    • 8 replies
    • 10.4k views
  8. Started by Sabesh,

    ஒளடதம் என்றால் என்ன?

  9. 'மல்’ என்றால் வலிமை எனப்பொருள். வலிமையான கருங்கற்களால் ஆன நிலப்பகுதி மலை எனப்பட்டது. மலையையும் மலை சார்ந்த இடத்தையும் குறிக்குங் திணை-குறிஞ்சித் திணை மிக உயர்ந்த மலை - மிசை/ விண்டு - very high mountain விண்டு - விண்ணளாவிய மலை நாட்டின் குறுக்காக உள்ள மலை - விலங்கல் - blocking mountain ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கடுக்காகப் பாறைகள் அமைந்திருக்கும் மலை - அடுக்கல்- mountain as stratified. மூங்கிற்காடுகள் உள்ள மலை -வரை மிக நீண்ட மலைத்தொடர் - நெடுவரை (இங்கு வரை என்றால் பொதுமலை) காடுகள் அடர்ந்த மலை - இறும்பு - foothill மரங்கள் அற்ற, ஓரளவு சிறிய புதர்களைக் கொண்ட மலை - பிறங்கல் பனியால்(dew) மூடப்பட்டிருக்கும் மல…

  10. என்னடா இது! இந்த மதுரைக்கு வந்த சோதனை! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி திருவிளையாடல் புராணத்தில் வரும் பாண்டிய மன்னன் - ஏமனாதப் புலவர் - பாணபத்திரர் - மதுரைச் சொக்கநாதர் சோமசுந்தரக் கடவுள் போன்று அண்மையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை பகிரலாம் என்றிருக்கிறேன். எடுத்துக்காட்டுகள் ஒரு பொது-ஒப்புமைக்காகச் சொல்லப்பட்டதே தவிர அதை அப்படியே எடுத்து, இதில் யார் மன்னன், யார் ஏமனாதப்புலவர், யார் அவைக்களப் புலவர், யார் சொக்கநாத சோமசுந்தரக்கடவுள் என்று ஆராய்ச்சியில் இறங்க வேண்டாம் என்று அன்புடன் வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இனி கதைக் களத்துக்கு வருவோம். கடவுட்கொள்கை சார்ந்த தத்துவ நிலைப்பாடுகளில் வடதுருவமும், தென் துருவமும் போன்று கருத்து நி…

  11. ஒருவர் வந்து என்னிடம் இக் கேள்வியைக் கேட்டு விடை கூறச்சொன்னார். எனக்கு விடை தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் தந்துதவவும். தட்டானிற்கு சட்டை போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார். (சில வேளையில் கேள்வியில் பிழையிருக்கலாம்) வடிவேலின் 23ம் புலிகேசியில் வருகின்ற கேள்வி இது.

    • 8 replies
    • 7.8k views
  12. திருக்குறள் தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம் பொருள் இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல். இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதும் மேற்கண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும் மயிலப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது. இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார். கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய ம…

    • 8 replies
    • 4.4k views
  13. எல்லா(hello)! வணக்கம் மக்களே... இங்கு படைத்துறையில் பயன்படுத்தக்கூடிய வகையில் 1000+ கலைச்சொற்களை தொகுத்து ஆக்கியுள்ளேன். அவற்றுள் என்னால் இயன்றளவு பழந்தமிழ்ச் சொற்களை கையாண்டுள்ளேன். இச்சொற்கள் படைத்துறை பற்றி எழுதுபவர்களுக்கு பெருமளவில் பயன்படும் என்று நம்புகின்றேன்! ''நாம் குறைந்த சொற்களை வைத்து எல்லாவற்றிற்கும் ஒப்பேற்றிவிடலாம் என்று எண்ணுகிறோம். அது பிழை... எப்பொழுதும் பேச்சில் சொற்றுல்லியம் தேவை; இல்லையெனில் பொருள் பிறழும்'' தமிழறிஞர் இராம.கி

  14. உலகின் எல்லா நாடுகளிலும் இப்போது தமிழர்கள் வாழ்கின்றார்கள். முன்பெல்லாம் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடாக தமிழகத்தை அடுத்து இலங்கையையும், மலேசியா சிங்கப்பூரையுமே நாம் உதாரணம் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் தற்பொழுது உலகின் எல்லா மூலைகளிலும் தமிழர்கள் பரந்து விரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பல்வேறு காரணங்களுக்காகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வெவ்வேறு நாடுகளில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சூழ்நிலை. இப்படி புலம்பெயர்ந்து செல்லும் போது, இருக்கின்ற நாட்டின் தேவைக்கேற்ப புதிய மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இது தவிர்க்கப்படமுடியாத ஒன்றே. ஆகினும் தமிழ் மக்கள் தாய் மொழியை மறந்து விடாமல் தங்களது அடுத்த சந்ததியினருக்கும் இ…

    • 8 replies
    • 8.6k views
  15. ஆங்கிலம் துரித கதியில் நவீன சொற்களை உருவாக்க பின்னிற்பதில்லை. கூகிள் தேடற்பொறியில் தேடுவது கூகிளிங் என்று வினையாகக் கூட சொல்லப்படும் நிலை.. ஆங்கில அகராதியில் கூட. அதுபோல்.. செல்பி. தமிழும்.. அதற்கு சளைத்ததல்ல. யாழ் பிளாக்குகளுக்கு.. குடில்கள் என்ற பெயரை அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரியது. வலைப்பூக்கள் என்று இன்று பெரிதாக அறியப்படுகின்றன. அதே போல் பேஸ்புக்..மூஞ்சிப் புத்தகம்.. யாழில் முன்மொழியப்பட்டு.. இப்போ முகநூல் என்றாகி நிற்கிறது. செல்பிக்கும் யாழில் தமிழ் பெயர் வைப்பமே... எங்கள் முன்மொழிவுகள்.. சுயமி.. அல்லது முகமி... நீங்களும் முன்மொழிந்து தமிழ் நவீனமாக உதவுகள்.. உறவுகளே..!

    • 8 replies
    • 2.1k views
  16. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்தார். வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில் திருவள்ளுவர் திருநாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. பேரவையின் நிறுவனரும், கவிஞருமான வைரமுத்து அதில் கலந்து கொண்டு பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து பேசியது: இந்திய அரசு தேசிய அடையாளங்களாக சிலவற்றை காத்து வருகிறது. ஆனால், தேசிய நூல் என்ற ஓர் அடையாளம் இன்று வரை உருவாக்கப்படவில்லை. இனம் கடந்து, மொழி கடந்து, இடம் கடந்து உலகப் பொதுமறையாகத் திகழும் திருக்குறள் தான் தேசிய நூலாகத் திகழமுடியும் என்று தமிழர்கள் நம்புகிறோம். எனவே, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுகிறோம். ஒரு கருத்து நூறு ஆண்டுகள் நீடி…

    • 8 replies
    • 858 views
  17. http://www.projectmadurai.org/pmworks.html

    • 8 replies
    • 1.3k views
  18. 1 . களரிப்பயட்டு - விக்கிபிடியா - 2. வர்மக்கலை - விக்கிபிடியா 3 . பரதநாட்டியம் - விக்கிபிடியா 4. சித்த மருத்துவம் - விக்கிபிடியா மேலதிக விபரங்களுக்கு - விக்கிபிடியா போதிதர்மன் , அகத்தியர் உங்களுக்கு தெரிந்தவற்றையும் இங்கு இணையுங்கள் , இவற்றை அழியாமல் காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எழுதுங்கள் , உலகத்தின் பார்வையில் தமிழ் கலைகள் , இந்தியனின் கலைகள் என்றே பார்க்கப்படுகின்றது எமக்கொரு நாடு இல்லாததால்

    • 8 replies
    • 3.7k views
  19. மார்க்சீயமும் தமிழ் இலக்கியமும் : ஒரு வரலாற்றுக் கணக்கெடுப்பு - எம். ஏ. நுஃமான் - -------------------------------------------------------------------------------- மார்க்சியம் உலகைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தத்துவம் என்ற வகையிலும், உலகை மாற்றுவதற்கான ஒரு வழிமுறை என்ற வகையிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து உலகில் பெரும் செல்வாக்குச் செலுத்திவருகிறது. மானுட விழுமியங்களை நோக்கிய மனிதனின் முழுமையான வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் சகல தளைகளையும் உடைத்து உண்மையான மனித விடுதலையைப் பெற்றுத்தரும் ஒரு தத்துவமாக அது கருதப்படுகிறது. பூரண விடுதலைக்குத் தடையாக இருக்கும் தனியுடைமை, வர்க்க முரண்பாடு, சுரண்டல் ஆகியவற்றைக் களைந்து பொதுவுடைமை, சமத்துவம், சமூ…

    • 8 replies
    • 5.6k views
  20. இலக்கியமும் உணவுக் குறிப்புகளும் தொல்காப்பியம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என அமையும் சங்க நூற்களில் உணவு முறை பற்றிய பல்வேறு குறிப்புகள், புலவர்களால் வருணனைகளாகவும், உவமைகளாகவும் பாடல் களில் கூறப்பட்டுள்ளன. கவிதை போன்ற இலக்கியப் படைப்புகளில் உணவு முறை போன்ற குறிப்புகள் முழுவதுமாக எதிர்பார்க்க இயலாது. எனினும் இலக்கியம் என்பது சமூக வாழ்வை விவரிக்கும் போக்குடையதால், அதிலும் குறிப்பாக, நாகரிகம் வாய்ந்த சங்க காலத்து மக்களின் வாழ்வைச் சங்க இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுவதால், சங்க இலக்கியங்களிலிருந்து அக்கால மக்களின் உணவு முறைகளும், பழக்கங்களும் தெளிவாகத் தெரிகின்றன. தொல்காப்பியம் தரும் உணவுக் குறிப்புகள் : தொல்காப்பியத்தின் இலக்கண நூற்பாக்களில் சில, அக…

  21. பிரியாணிக்கு தமிழ் சொல் என்ன ? ஊண்துவை அடிசில்’-பதிற்றுப்பத்து -சங்க இலக்கியம்

  22. வன்னி நாட்டார் பாடல்களில் ஒரு பார்வை வன்னி விவசாயக்கிராமங்கள் நிரம்பியது.இங்கு குளங்களும் கோயில்களும் காடுகளும் நிரம்பியுள்ளன.வன்னிவள நாட்டின் பாரம்பரியமிக்க வாழ்வியல் வழி பாடுகள் சடங்குகள் தொழில்கள் என்பன பற்றிய நாட்டார் பாடல்கள் ஏராளமாக உள்ளன. அவை பெரும்பாலும் பள்ளு, சிந்து, கும்மி, வசந்தன் எனவும் கூத்து, கதைப் பாடல்களாகவும் அமைந்துள்ளன. பிள்ளையார் சிந்து, விறுமன்சிந்து, வதனமார்சிந்து ஐயனார் சிந்து, முருகையன்சிந்துஎன வழிபாட்டிலும், பண்டிப்பள்ளு, குருவிப்பள்ளு, குருவிச்சிந்து இகொட்டுக்கிணற்றடிப்பிள்ளையார் கும்மி, கமுகஞ்சண்டை, என வகைவகையாக வழக்கிலுண்டு. “முடியோடு தேங்காயைக் கையிலெடுத்தோம் மூத்ததோர் கணபதியைத் தோத்திரம் செய்தோம்” என என்ன வேலை செய்யப்புகுந…

    • 7 replies
    • 6.8k views
  23. பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட தமிழர்களின் மருத்துவத்துறைக்கான பங்களிப்பு எப்போதும் வெகுந்து பாராட்டப்பட்டு வரும் நிலையில்.. பிரித்தானியாவுக்கான.. என்ற உயிரியல் மருத்துவத்துறை புலமைசார் நிறுவனம்.. தமிழர் பாரம்பரிய மாதமாக தை மாதத்தை.. தமிழ் மரபுத் திங்கள் என்று அடைமொழியோடு.. அனுஷ்டித்து தமிழர்கள் உயிரியல் மருத்துவத்துறையில் ஆற்றி வரும் பங்களிப்பை கெளரவப்படுத்தி உள்ளது. Celebrating Tamil Heritage Month 2024 2 January 2024 This January we're celebrating Tamil Heritage Month by speaking to our Tamil members about their heritage Lavanya Kanapathypillai, Biomedical Scientist, Cellular Pathology, Royal Berkshire NHS …

  24. தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் 01.துணைவி 02.கடகி 03,கண்ணாட்டி 04.கற்பாள் 05 காந்தை 06.வீட்டுக்காரி 07.கிருகம் 08.கிழத்தி 09.குடும்பினி 10.பெருமாட்டி 11.பாரியாள் 12.பொருளாள் 13.இல்லத்தரசி, 14.மனையுறுமகள் 15.வதுகை 16வாழ்க்கை 17.வேட்டாள் 18.விருந்தனை 19.உல்லி 20.சானி 41.தலைமகள் 42.ஆட்டி 43.அகமுடையாள் 44.ஆம்படையாள் 45.நாயகி 46.பெண்டாட்டி 47.மணவாட்டி 48.ஊழ்த்துணை 49.மனைத்தக்காள் 50.வதூ 51.விருத்தனை 52.இல் 53.காந்தை 54.பாரியை 55.மகடூஉ 56.மனைக்கிழத்தி 57.குலி 58.வல்லபி 59.வனிதை 60.வீட்டாள் 61.ஆயந்தி 62.ஊடை 🤔🤔

    • 7 replies
    • 3.5k views
  25. உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாய் இருந்த போதும் காலாதிகாலமாக தமிழ் பல மொழிகளிடம் இருந்து சொற்களை வாங்கி தன்னை வளப்படுத்தியே வந்திருக்கிறது. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” எனும் பண்டைத் தமிழரின் பரந்த மனோநிலையும் இதற்கு ஒரு காரணம். வடமொழி முதல், மலாய், டச்சு, போர்த்துகீசு, ஆங்கிலம் என பல மொழிகளிடம் இருந்து சொற்களை சுவீகரித்து அவற்றை “திசைச் சொற்கள்” என இலக்கணப்படுத்தியும் வைத்துள்ளது தமிழ். ஆனால் இந்த போக்குவரத்து ஒன்றும் ஒரு வழிப்பாதை அல்ல. ஏனைய மொழிகளும் தமிழிடம் பல சொற்களை இரவல் வாங்கியுள்ளன என்பது மறுக்கவியலாத உண்மை. சொற்களை மட்டுமல்ல, இன்று மலாய், பாசா இந்தோனேசியா என இரு சிறு மொழிகளாய் பிரிந்து கிடக்கும் மலாய் மொழி, ஒரு காலத்தில் தமிழ் பல்லவ எழுத்துருக்…

    • 7 replies
    • 3.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.