கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
648 topics in this forum
-
இதயங்களின் மொழி -------------------------------- அண்ணனைப் பார்க்கும் போது அவருக்கு சத்திர சிகிச்சை முடிந்து பத்து நாட்கள் ஆகியிருந்தது. அண்ணனின் இதயத்தை திறந்து சிகிச்சை செய்திருந்தார்கள். அண்ணன் எப்போதும் மிகவும் தெளிவானவர். வாழ்வை இலேசாக எடுத்துக் கொண்டவரும் கூட. இப்போது சத்திர சிகிச்சையின் பின் முகத்தில் தெளிவு இன்னமும் கூடியிருந்தது, சந்தோசத்தையும் நன்றாகவே காட்டினார். அண்ணனுக்கு மூன்று அடைப்புகள் இருக்கின்றதென்றே இதயத்தை திறந்தார்கள். திறந்த பின் நான்காவதாக இன்னொன்று இருப்பதையும் கண்டுகொண்டார்கள். அதையும் சரிசெய்தார்கள். அது கூட அண்ணனின் மகிழ்ச்சிக்கு ஒரு காரணமோ தெரியவில்லை. அதற்காக எல்லோரும் இப்படித்தான் இந்த விடயத்தை இலகுவாக எடுத்துக் கொள்வார்கள் என்றும் இல்லை. எ…
-
-
- 3 replies
- 243 views
- 1 follower
-
-
"திங்கட்கிழமை லீவு எடுத்திட்டியே" என்று அருகிலிருந்து ஒரு குரல். வேறு யார். எல்லாம் திருமாறனின் நண்பன் தான். அண்ணன் கவுண்டமணி சொன்னது போல் "இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன" என்ற வசனம் தான் அவனுக்கு நினைவிற்கு வந்தது. இவ்வளவு நடந்த பிறகு இனி எங்களால் என்ன செய்ய முடியும். பேசாமல் வேலைக்கு போகலாம் என்றான். "டேய் லூசுத்தனமா கதைக்காம லீவு எடுத்துக்கொண்டு வா" அவனும் விடுவதாய் இல்லை. சரி எதையும் செய்யாமல் இருப்பதைவிட இதையாவது செய்வோம் என்று சம்மதம் தெரிவித்தான். 10மணிக்கு பேரூந்து புறப்படும் என்று அறிவிப்பார்கள். இருவரும் சரியாக அங்கு சென்று காத்திருப்பார்கள். அதன் பின்னரே ஏற்பாட்டாளர்கள் வந்து சேர்வார்கள். நானும் வருகின்றேன் என்று சொன்னவர்களில் பலரை அங்கு காணக்கிடைக…
-
- 3 replies
- 1.8k views
-
-
கோழிகள் கூட்டமாக வாழ்ந்த அந்த வளவுக்குள் தான் பூனையும் ஒருநாள் வந்து சேர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இடத்தை பிடித்து வசதியாக இருந்துகொண்டு அந்த வளவிலேயே கிடைத்த உணவுகளை உண்டு வளர்ந்தும் வந்தது. சும்மா கிடக்கிற இடம் தானே என்றும் மென்மையான வனப்பான தேகத்தைபார்த்தும், கவர்ச்சியான கண்களை ரசித்தும், அமைதியாக அரைகண்ணை மூடி தியானம் செய்யும் அழகையும் பார்த்து கோழிகள், ரொம்பவே நல்லவர் இருக்கட்டும் எங்களுக்கும் இவரால் மோட்சம் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டன. கோழிகள் எப்போதும் கொத்துப்படுவதும், கத்திக்கொண்டு திரிவதும் கிண்டி கிளறி களைத்துப்போனதும் அப்படியே அங்கினேக்கை சூடுகண்ட இடங்களில் கண்ணை மூடி சுகங்களை அனுபவித்தும் நாட்களை கடத்திக்கொண்டு இருந்தன. வளவுக்குள்ள இடைக்கிடை கு…
-
- 7 replies
- 1.6k views
-
-
அது ஒரு தனியார் கல்வி நிறுவனம். நான் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலம். முதல் வாங்கில் இருக்கும் கூட்டத்தில் நானும் அடக்கம். வாத்தியார்மார் முன்னுக்கு இருகிற படிக்கிற பிள்ளையள் என்று ஒரு நல்லெண்ணத்தில இருக்க, நாங்கள் நசுக்கிடாமல் நல்லாச்சுத்து மாத்து விடுவம். தமிழ் படிப்பித்த ஆசிரியை திடீர் என்று நின்று விட்டார். அன்று புதுசாக யாரோ தமிழுக்கு வரபோகினம் என்று எல்லாருக்கும் டென்சன். அதிபருடன் மெல்லிதாக கருப்பாக கிட்டத்தட்ட நடிகர் நாகேஷ் கருப்பாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒருவர். இவர்தான் இனி உங்கள் தமிழ் ஆசிரியர் என்று அறிமுகம் செய்து விட்டு அதிபர் போய்விட்டார். வந்த உடனே "வேற்றுமை " என்று கரும்பலகையில் எழுதி விட்டு முதலாம் வேற்றுமையில் தொடங்கி முழங்கத…
-
-
- 14 replies
- 2.9k views
-
-
ஆடி மாத பின்னிரவு ,அந்த நாள் ஏறித்த கோரவெய்யிலை சற்று தணித்து அதிகாலையை வரவேற்க பச்சை வயல்களை தழுவிய படி மெல்லிய இளங்காற்று தஞ்சாவூரை வருடுகின்றது . உரத்தநாட்டு கிராமம் - தஞ்சாவூர் புதுக்கோட்டை நெடுஞ்சாலையின் ஓரம் ஒரு கீற்றுக்கொட்டகையில் பெற்றோமக்ஸ் விளக்கு ஒளியின் உதவியுடன் சிற்பிகள் சிலர் உளியால் கருங்கற்களை செதுக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். பல்லவர் காலத்தில் இருந்து இன்று வரை இந்த உளிஓசை இங்கு கேட்டுக்குகொண்டுதான் இருக்கு . கொட்டகையை சுற்றி எங்கும் பெரிய பெரிய கருங்கற்கள் தீட்டபடாமல் நீண்டுகிடக்கின்றன. அங்கிருக்கும் ஒரு பெரிய கருகங்கல்லில் தலைக்கு கையை கொடுத்தபடி சாய்ந்திருகின்றான் சாரங்கன், அவனருகில் இருந்து இடது கைவிரலை ஆட்டிய படி எதையோ அழுத்திசொல்லும்…
-
- 0 replies
- 1k views
-
-
மாலை 5 மணி காவல்துறைக்கு ஒரு அம்மா வருகின்றார். நானும் எனது பெண்பிள்ளையும் பூங்காவுக்கு போனோம். மகள் 5 வயசு விளையாடிக்கொண்டிருந்தாள். நான் (6 மாதக்கர்ப்பிணி) சற்று அயர்ந்து விட்டேன். கண் முழித்துப்பார்த்தால் என் பிள்ளையைக்காணவில்லை. ஐயோ ஐயோ உடனே தேடுங்கள் கண்டு பிடியுங்கள் எல்லோரும் உதவுங்கள்............... இப்படித்தான் இந்தக்கதை ஆரம்பமாகிறது............. நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறை அவசரப்பிரிவுகள் அத்துடன் அந்த ஊரில் ஒரு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு தேடுதல் தீவிரப்படுத்தப்படுகிறது............ தொடரும்.....
-
- 28 replies
- 4.2k views
-
-
இளையராஜாவின் தரை தப்பட்டை இசை போல கூவி செல்லும் மல்ரி பெரல் செல்லின் ஒலி,ரகுமானின் இசைபோல காதுகளை கிழித்து போகும் சன்னங்களின் சத்தம்,திரும்பும் இடம் எல்லாம் பழைய தும்பு தடிகள் போல தும்பு எழும்பி இருக்கும் மரங்களும் கிளைகளும் ஐன்பது கலிபரின் துப்பல்கள் செய்த மாய வேலை இவ்வாறு ஒரு பெரும் சமர் ஜெயசுக்குறு களமுனையில் பப்பா லையினில் அரங்கேறிய படி இருந்தது .... நாலு நிலைகளு உடைத்து எதிரி மூர்க்கமாக ஒரு நகர்வை முன்னேடுக்கிறான் கடல்புலிகளின் மகளிர் படையணி லெப்டினன் கேணல் காதம்பரி தலைமையில் அதை எதிர்கொண்டு இருந்தது,நிலைகள் உடைத்து கட்டுக்குள் போகமுன்னம் உதவிகள் அழைப்புக்கள் என ,வோக்கிடோக்கி சங்கேத மொழிகளை பேசிக்கொண்டு இருந்தது ... பப்பா லையினில் அடிவிளுகுதாம் எக்கோ பக்கம்…
-
- 6 replies
- 2.6k views
-
-
அழைப்பு மணி ஒலித்த பத்தாவது நிமிடம் கதவு திறக்கிறது. புலநாய்வில் கைதேர்ந்த சீலனிற்கு ஒரு தடவைக்கு மேல் மணி ஒலி எழுப்பும் அவசியம் இருக்கவில்லை. உள்ளே அவர்கள் இருக்கிறார்கள் என்பதும் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதும் மணியினை அமிழ்த்து முன்னரே அவனிற்குத் துல்லியமாய்த் தெரிந்திருந்தது. அதனால் கதவு திறக்கும் வரை பொறுமையாய்க் காத்திருந்தான். நிலா கதவினைத் திறந்தாள். பம்பாய் வெங்காயத்தின் மூன்றாவது அடுக்கின் நிறத்தில் அழகிய மென்மையான மேற்சட்டை அணிந்திருந்தாள். வெள்ளி நிறத்தில் பாதணிகள் அணிந்திருந்தாள். அவள் தொப்புளிற்கும் பாதணிகளிற்கும் இடைப்பட்ட பகுதியில் எந்த ஆடையும் இருக்கவில்லை. விமான ஓடுதளத்தில் பாதைதெரிவதற்காகப் பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகள் போன்று, அவளது ப…
-
- 14 replies
- 3.2k views
-
-
ஒரு கிராமத்தில் முதலாளி ஒருவர் இருந்தார் . அவருக்கு கீழே சில வேலையாட்களும் வேலை செய்தார்கள். அந்த முதலாளி சரியான கஞ்சன் . ஒரு நாள் அவன் தன் நிறுவனத்துக்கு செல்லும் போது, தெருவோரத்தில் ஒரு இளைஞ்சன் செருப்பு தைத்து கொண்டிருப்பதைக் கண்டான். அவரிடம் அவருக்கு விருப்பமான, வார் அறுந்த செருப்பு காரில் இருந்தது . இளைனனுக்கு அருகில் சென்று ஏய் இங்கே வா ...இதை தைத்து கொடு ..எவ்வளவு ஆகும் என்றார். அவனும் ஐயா 50 ரூபாய் ஆகும் என்றான். தன் சடடைப்பையில் கை வைத்து ஒரு நூறு ரூபாத் தாளை எடுத்து , காட்டி என்னிடம் சில்லறை இல்லை .மீண்டும் வரும் போது தருகிறேன் என்றார் . பையன் சற்று தயங்கி ஐயா ...ஒரு பத்து ரூபா தருவீர்களா? என்றான். அட நீயும் அட்வான்ஸ் வேறு கேட்கிறா…
-
- 7 replies
- 3.1k views
-
-
சுஜாதா எப்பவோ இரண்டு வார்த்தைகளில் எழுதிய கதைகளைப் பற்றிச் சொல்லியிருந்தார். கதைதான் இரண்டு வார்த்தைகளில் முடிய வேண்டும். தலைப்புக்குக் கணக்கு இல்லை.நன்றி ;சுஜாதா -------------சுஜாதா கொடுத்த உதாரணக் கதை கீழே ;-------------தலைப்பு: ஆபிசில் எத்தனை ஆம்பிளைங்க?கதை: முதலிரவில் கேள்வி-------------- என் கதைகள் தொடருது -------------- தலைப்பு ; பத்துமணி நேரத்துக்கு மேல் புடவைக்கடைக்குள் மனைவி .வரவேற்பாளர் மண்டபத்தில் குழந்தையுடன் கணவன் . ஒரு ஒட்டு துணிகூட மனைவி வாங்கவில்லை . கடுப்படைந்தார் கணவன் . கதை ; செலக்சன் சரியில்லை
-
- 1 reply
- 1.7k views
-
-
இரத்தக்காட்டேரி! சோழகக் காற்று சுழற்றி அடித்ததில் பால் போன்ற மணல் தரையில், தூரிகை இன்றியே காற்றின் கைகள் தன்னிச்சையாக ஒரு விதமான சித்திரங்களை வரைந்திருந்ததைப் பார்த்த அவள் கால்கள் இயல்பாகவே அவற்றை விலத்தி நடந்தன. மேடுகளாகவும் பள்ளங்களாகவும் காற்றினால் வரையப்பட்டிருந்த அந்த அழகான வேலைப்பாடுகள் நிறைத்த சித்திரங்களை அவள் எப்போதுமே ரசிப்பது வழக்கம். பனை மரங்களும் தென்னம்பிள்ளைகளும் நாவல் மரங்களும் மலை வேம்புகளுமாக பரவிக் கிடந்த அந்த காட்டு வழியில் அவள் கண்கள், பற்றைகளுக்குள் பதுங்கியிருந்து என்னைப் பறித்துக் கொள் என்று அழைப்பு விட்ட ஈச்சை பழங்களையும் பார்க்கத் தவறவில்லை. மண்ணில் அவள் கால்கள் புதைந்து எழும்போது ஏற்பட்ட இதமான உணர்வு அவளை ஆட்கொண்ட போது …
-
- 39 replies
- 4.2k views
-
-
ஒரு அறை நடுவில் ஒரு விளக்கு எதிர் எதிர் மூலைகளில் இரண்டு ஆண் பூனைகள், இரண்டு பெண் பூனைகள் விளக்கு அணைக்கப்படுகின்றது அடுத்து என்ன நடக்கும்? ------------------- இதனை கள உறவுகளே தொடருங்கள்
-
- 13 replies
- 1.3k views
-
-
இருளில் தெரிந்த தேவதை.(இது கதையல்ல) கடந்த மார்கழி 13 ந் திகதி விடுமுறைக்கான பயணம்.இலங்கைக்கு செல்லக்கூடிய சாதகமான சூழல் இன்னமும் சரி வராததால் வழைமை போல இந்தியாவிற்கான பயணம்.ஒன்ரரை மாதங்கள் விடுமுறைக்காலம் என்பதால் எனது நண்பர்களையும் சந்தித்து போவது என முடிவெடுத்து முதலில் மும்பையில் இறங்கி அங்கு நான்கு நாட்கள் பின்னர் கோவா.கர்நாடகா.தமிழ்நாடு என பயணப் பாதை திட்டமிடப் பட்டது.மும்பையில் எனது மனைவியின் தம்பி ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் பொறியியலாளராக இருப்பதால் அவனும் விடுமுறை எடுத்து எங்களிற்காக காத்திருந்தான்.மும்பையில் இரண்டாம் நாள் மாலை மனைவி தனது தம்பியுடன் பொருட்கள் வாங்க போய்விட நான் எனது நீண்டகால நண்பன் டோனியலை சந்திப்பத்காக அவன் கடை வைத்திருக்கும் மல…
-
- 13 replies
- 2.6k views
-
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர் புலிகளின் போரியல் வரலாற்றில் ஒரு மைற்கல் மட்டுமல்ல அது ஒரு திருப்புமுனை. 1997 ம் ஆண்டே, கிளிநொச்சி ஆனையிறவுப்பகுதிக்கான வேவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. கிளிநொச்சி ஆனையிறவு வேவு நடவடிக்கை கடினமானதாகவே இருந்தது. ஏற்கனவே ஒரு படைப்பிரிவு வேவு நடவடிக்கையை ஆரம்பித்தபோதும் எதிர்பார்த்த பெறுபேற்றை அடைய முடியவில்லை. இதனால் செம்பியன் வேவு அணி, சாள்ஸ் அன்ரனி வேவு அணிகள் வேவு நடவடிக்கையைப் பொறுப்பெடுத்தன. பாரிய நிலப்பகுதியை உள்ளடக்கி, பல கட்டமைப்புக்களுடன் கூடிய காப்பரண்களைக் கொண்டு அமைந்த இப்படைத்தளங்களின் தாக்குதல் திட்டத்தை வகுப்பதற்கு உட்பகுதி வேவுத்தகவல்களே மிக அவசியம் ஆனவையாக இருந்தன. உட்பகுதி வேவுத்தகவல்கள் இன்றி திட்டத்தை த…
-
- 9 replies
- 4.6k views
-
-
இருள் வெளியின் விடிவெள்ளி. காலிக்கடற்கரையின் அலைகள் அவனது கால்களை வந்து வந்து நனைத்துச் சென்று கொண்டிருந்தது. அலைகளோடு கரைந்து கனவுகள் நுரையாக கண் முன்னே பரந்து கொண்டிருந்தது. மக்களுக்காக மக்களின் வாழ்வுக்காக கரைந்து போகும் நஎண்ணத்தை அந்தக் கரைகளில் நின்றே பலமுறை உரக்கச் சொல்லியிருக்கிறான். மனிதர்களின் குரல்களைவிட அலைகளின் குரலே அவனது காதுகளை நிறைத்துக் கொண்டிருந்தது. அந்தக் கரையோர மணலில் வெறும் கால்களைப் புதைத்துக் கொண்டு சற்று நேரம் எதையோ யோசித்தான். தான் பிறந்த கரையோரக் கிராமத்தின் நினைவுகள் வந்திருக்க வேண்டும். முகத்தில் அறைந்த கடற்காற்றின் மென்விரல்கள் அழகாய் வாரியிருந்த தலைமுடியைக் குழப்பியது. விரல்களால் தலைமுடியைக் கோதினான். அங்கங்கு காதல் சோடிகள் காத…
-
- 8 replies
- 1.7k views
-
-
" உயர்தர பரீட்சை எடுத்தவுடன் நண்பர்களுடன் ஊர் சுற்றி திறியும் பொழுது , இப்ப இருப்பது போல் கையடக்க தொலைபேசி ஒன்றுமில்லைதானே ஆனபடியால் நாலுக்கும் நாலரை மணிக்குமிடையில் எல்லோரும் பாடசாலை முன்றலில் ஒன்றுகூடுவோம் ,குறைந்தது ஐந்து சைக்கிளில் நண்பர்களுடன் ஊர் உலாத்தலுக்கு வெளிக்கிடுவோம் முதலில் போவது மருதடிக்கு .சைக்கிளை எம் மீது சாய்த்துக்கொண்டு மருதடியானை வணங்குவோம் உள் சென்று தரிசிப்பதை தவிர்த்து கொள்வோம் ,வேறு தரிசனங்கள் செய்வதற்காக.,.சந்தனம்,விபூதி மறக்காமல் பூசிகொள்வோம் காரணம் வீட்டை போகும் பொழுது அம்மா கேட்டால் பள்ளிகூடத்தில விளையாடிவிட்டு, கோவிலுக்கு போயிற்று வாறோம் என்று சொல்லி நல்ல பிள்ளைகள் என்று பெயர் எடுப்பதற்காக அந்த திருவிளையாடலை செய்வோம்.. நாலு திசையு…
-
- 34 replies
- 7.5k views
-
-
இழப்பின் துயரிலும் இழக்காத மனவுறுதியோடு...! தொலைபேசியழைப்பு வருவதும் தொடர்பு அறுபடுவதுமாக இருந்தது. அந்த அழைப்பு 15வருடங்கள் தொடர்பறுந்து போனவளின் அழைப்பாக இருக்குமென்பதை அறியாத 01.10.2013 இன் தொடக்க நாள். நீங்கள் என்னோடை படிச்சனீங்கள் நீங்களும் மேனகாவும் தான் என்னை இயக்கத்துக்கு எடுத்தனீங்கள் என்ரை பேர்.....! இந்த நம்பருக்கு ஒருக்கா எடுங்கோ நான் உங்களோடை கனக்கக் கதைக்க வேணும். நானிப்ப வேலையில நிக்கிறேன் இரவு எங்கடை நேரம் 9மணிக்குத்தான் வீட்டை போவன் நாளைக்கு பகல் எடுக்கிறனே....? புறவாயில்லை நான் முளிச்சிருப்பன் மறக்காமல் எடுங்கோ. அவளது குரலில் பதட்டமும் ஏதோவொரு கதையைச் சொல்லத் துடிப்பது போலவும் அவசரமாகச் சொல்லிவிட்டு தொடர்பை அறுத்தாள். முளிச்சிருப்பேன் என்ற …
-
- 4 replies
- 878 views
-
-
அது துனிசியாவில் ஒரு நகரம்.. முகமெட் ஓரளவு வசதியானவன் சொந்தமாக TAXI வைத்திருந்தான்.. திருமணமாகி ஒரு ஆண்குழந்தை அழகான மனைவி சொந்தவீடு ஆனந்தமான வழமாக வாழ்க்கை என வாழ்வு போய்க்கொண்டிருந்தது.. மார்கழி மாசம் சரியான குளிர் மனைவி கேட்டாள் பிள்ளையைக்கூட்டிக்கொண்டு போய் அம்மாவீட்டில் 2 நாள் தங்கி வரட்டா என. இன்றைய தினத்தின் முக்கியத்தை உணராதவன் அதற்கென்ன ஆனால் நான் வேலைக்கு போய்விட்டு அங்கு வரமாட்டேன் அங்கு வந்தால் ஆட்கள் அதிகம் அவர்களுடன் பொழுது போகும் ஆனால் நான் ஓய்வெடுக்கமுடியாது என. அது வழமையாக நடப்பது என்பதால் மனைவியும் ஒத்துக்கொண்டாள். வழமை போல டக்சியை எடுத்துக்கொண்டு புறப்பட்ட முகமெட் மனைவியைக்கொண்டு போய் தாய்வீட்டுக்கு போகும் புகையிரத ந…
-
- 97 replies
- 10.1k views
- 1 follower
-
-
நாம் கடையை வாங்கியதே விற்றவர் சொன்னார்தான். களவு எடுக்க என்றே ஆட்கள் வருவார்கள் கவனம் என்று. ஒரு மாதத்தின் பின் ஒரு தமிழ் பெடியன் கடைக்கு வந்தான். வந்த உடனேயே அக்கா எப்பிடி இருக்கிறியள் என்று அவன் இயல்பாக நலம் விசாரித்தபடி கதைக்கத் தொடங்கினான். ஆளும் நல்ல ஸ்மாட். பார்க்க நல்ல பெடியன் போல் இருந்தது. அதனால் நானும் இயல்பாகி அவனுடன் கதைக்கத் தொடங்கினேன். என்னுடன் மட்டுமல்ல என் கணவருடனும் மிகவும் நட்பாகிவிட்டான் அவன். அவன் பெற்றோர் சகோதரர்கள் பற்றிச் சொன்னவை அவனை ஒரு பண்பான குடும்பத்துப் பிள்ளை என எண்ண வைத்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. நான்கு மாதங்களின் முன்னர் ஒருநாள் நானும் கணவரும் நிற்கும்போது வந்தவன் கணவரைத் தனியே அழைத்துச்…
-
- 39 replies
- 3.8k views
-
-
சுவரில் இருந்த கடிகாரம் 'டாண்... டாண்...' பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது. திடுக்கிட்டவளாக தன் நினைவுகளில் இருந்து மீண்டாள் சந்தியா. சாய்ந்திருந்த தூணில் இருந்து சற்று நிமிர்ந்தமர்ந்து பார்வையை சுற்றுமுற்றும் ஓடவிட்டாள். அவள் அருகில், அவளின் ஒரே மகனான ராஜு நன்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அடுத்த அறையில் இருந்து வரும் 'லொக்கு... லொக்கு...' இருமல் ஒலி அவள் தாயாரின் உடல் நிலையை ஊருக்குகே பறைசாற்றியது. எதிரே கண்ணாடி பிரேமினுள் இருந்து அவளது அப்பா அவளை தன் சோடப்புட்டி கண்ணாடியோடு பார்த்து சிரித்தார். " ம்..." நீண்ட பெருமூச்சு அவளிடம் இருந்து வந்தது. 'அப்பா செத்து ஐந்து வருடமாச்சு' தனக்குள் நினைத்துக் கொண்டாள். அவள் நினைவுகளில் மீண்டும் புதைந்துகொண்டாள் அவளை அ…
-
- 5 replies
- 1.3k views
-
-
நெடுஞ்சாலையின் அதிவேகத்தோடு வழுக்கியபடி ஓடிக்கொண்டிருந்த வாகனம் சற்று வேகத்தைக் மிதப்படுத்தி வெளிச்செல்லும் பாதையில் வளைவாக ஓடி சிவப்பு வெளிச்சத்தில் தரித்து நின்ற பொழுதில் வாகனத்துக்குள் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அனாவிற்கு தான் போகுமிடத்தை அண்மித்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. அனா, அழகு என்றால் அனா என்று சொல்லுமளவிற்கு அங்கங்கள் ஒவ்வொன்றும் அளந்து செய்த செப்புச் சிலை. உயரமும் உயரத்திற்கேற்ற உடல்வாகும் பொன்நிற முடியும் பொலிவான தோற்றமும் கொண்ட அழகி மட்டுமல்ல அறிவு, துணிவு, ஆளுமை, கொண்ட பெண். சிறு வயதிலேயே படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டுத் துறையிலும் கலைகளிலும் அனாவின் தனித்தன்மை பெற்றவர்களை மட்டுமல்ல ஆசிரியர்களையும் வியக்க வைத்திருக்கிறது. உயர்வகுப்…
-
- 5 replies
- 1.6k views
-
-
நேற்று ஒரு சம்பவம் வேலை இடத்தில் நடந்தது எல்லோரும் சாப்பிட அமர்த்து இருக்கும்போது கண்டவர் ..காணாதவர் என்று வர அனைவருக்கும் மாறி மாறி வணக்கம் சொல்லிட்டு உணவை சூடாக்கி சாப்பிட தொடங்கும் நேரம் பார்த்து பக்கத்தில் இருந்த ஆளின் தொலைபேசி ..பார்த்த முதல்நாளா என்னும் பாடலுடன் ஒலியை எழுப்ப அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கி பார்க்க சட்டென போனை எடுத்து ஐந்து நிமிடம் கழித்து எடுக்கிறேன் வையும் என்று பதில் சொல்லி இணைப்பை துண்டித்தார் அவர் ... அந்த போன் வந்த நேரம் தொட்டு அருகில் இருந்தவருக்கு முகம் மாறிட்டு சாப்பிடாமல் அவரை பார்ப்பதும் பின் சாப்பாட்டை பிசைவதுமா இருந்தார் அவரின் செயலை பார்க்கும்போது ஆள் செம கடுப்பா இருக்கு என்று மட்டும் விளங்குது ..சரி என்னதான் பிரச்சினை என்று …
-
- 6 replies
- 1.8k views
-
-
ஊரடங்கிய நடுநிசி. புளிய மரம் இருந்த இடம் தெரியாது அழிக்கப்பட்டிருக்கிறது. அது பிரசவித்த அனைத்துப் பேய்களதும் தடங்கள் காற்றில் பதிந்திருக்கிறது. முடக்கு வருகிறது. உரப்பையில் துவக்கை மறைத்து, ஏசியா துவிச்சக்கர வண்டியில் கோடன் சேட்டும் சாரமும் கட்டிப் பயணித்த பதின்வயது முகங்களின் சிரிப்பு அப்படியே அந்த முடக்கில் கண்ணிற்குப் புலப்படாத உணர்வாய் உறைந்திருக்கிறது. ஐபோன் ஆறு எஸ்சின் மூன்று பரிமாணத் தொழில்நுட்பம் போன்று, உறைந்த படத்தை அழுத்திப் பிடித்தால் உள்ளுர அது காணொளியாகி மறைகிறது. கடந்து நடக்கிறேன். சந்திக் கடையில் நின்று கதைபேசியவர் தடங்கள். காதிற்குள் ஒலி ஏறாத போதும் அவர்கள் உதட்டசைவை வாசிக்க முடிகிறது. கடந்து போகக் கோவில் வருகிறது. குஞ்சம்மா மூதாட்டி வழமை போல் ஜன்னலூடு கு…
-
- 14 replies
- 2.2k views
-
-
குறிப்பு- கீழ்வரும் கதை புகழ்பெற்ற ஷெர்லக் ஹோம்சும், வாட்சனும் யாழ் நகர வீதிகளில் உலாவினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் புனையப்பட்டதாகும். பேக்கரி ஒழுங்கைக்குள் நுழையும் போது இடதுபக்கமாக இருக்கும் நீர்ப்பாசன திணைக்களத்தால் 221B என இலக்கமிடப்பட்ட மதகுதான் எனக்கும் ஷெர்லக் ஹோம்ஸிற்கும் பகல் வீடு.அடித்து கொளுத்தும் யாழ்ப்பாண வெயிலில் கூட அந்த இடம் குளு குளுப்பாய் இருக்கும்.தலைக்கு மேல் இலங்கை மின்சாரசபையின் மர அழிப்பையும் மீறி வியாபித்திருக்கும் ஆலமரம் குளுமைக்கு ஒரு காரணம் என்றால் பிரதான வீதியின் மறுபுறம் இருக்கும் ரியூசன் கொட்டிலில் படிக்க வந்து போகும் இளம் சிட்டுக்கள் அதற்கு இன்னொரு காரணம்.காலை ஆகாரத்தை முடித்தபின் முழு பற்றரி சார்ஜ் ஏற்றிய கலக்சி S3 யோடு இங்கே வ…
-
- 14 replies
- 2.4k views
- 1 follower
-
-
முன்பெல்லாம் வானத்தில் நட்சத்திரங்கள் தெரியாவிட்டாலும் கூட நீலமற்ற வெண்சாம்பற் புகைகளாய்த் தெரியும் வானத்தைப் பார்த்தபடி இருக்க அருணா எப்போதும் சலித்ததில்லை. எமது ஊர் போல் வவ்வால்களும் பறப்பதில்லைத்தான். ஒரு குருவி கூடவா பறக்கக் கூடாது என்னும் ஆதங்கம் இன்று அவளுக்கு எழத்தான் செய்தது. மனதில் எழுந்துள்ள சோர்வின் வெளிப்பாடுதானோ இது என்று அவள் மனம் எண்ணியது. அங்குகூட இப்போதெல்லாம் வவ்வால்கள் பறப்பதில்லை என்று அங்கு சென்றபோது பக்கத்து வீட்டு ஜீவா கூறியது நினைவில் வந்தது. எல்லாமே கொஞ்சக் காலத்துக்குத் தானோ? மனிதர்கள் போல் பறவைகளும் மாற்றிடம் தேடிக்கொண்டு செல்லவாரம்பித்து விட்டன என எண்ணிக்கொண்டாள். நிர்மலன் இப்பொழுதெல்லாம் நன்றாகவே மாறிவிட்டான். வேலை முடிந்து ஆவலாக வீடு வருபவன…
-
- 23 replies
- 2.5k views
-