யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
50 topics in this forum
-
Dr Abdul Kalam அவர்கள் மறைந்த நேரம் வாய் விட்டு அழுதேன். அந்த நேரம் கிறுக்கியது … நானும் இட்ட தீ மூள்க மூள்கவே.... இன்றைய காலை குளியலின் வெந்நீர் சூடு காலில் அறைகின்றது வழமையை விட வேகமான வெப்பத்துடன் வெந்நீர் தூவலுடன் எந்தன் கண்ணீரும் கலந்து அங்கே யார் ஐயா நீங்கள் மனதில் ஏன் ஐயா எங்களுக்கு இந்தப் பாரம் … நாள் ஒன்றுக்கு மேல் நான் கண்ணீர் சிந்தியது இதுவரை நான்கு தடவைகள் தான் – நேசத்துக்குரியோரை இழந்த நேரங்கள் இப்போது மீண்டும் ஒரு தடவை அந்த சோகம் யார் ஐயா நீங்கள் மனதில் ஏன் ஐயா எங்களுக்கு இந்தப் பாரம் … குழந்தைகள் இல்லை யே…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஆண் பெண்ணை தினமும் தூசணங்களால் அர்ச்சிப்பதும், அடி உதை கொடுத்து துன்புறுத்துவதும், பயமுறுத்துவதும்.. பெண் ஆணை தினமும் தூசணங்களால் வசைபாடுவதும், பயமுறுத்துவதும், மன உளைச்சலை கொடுப்பதும்.. ஒருவருடன் இன்னொருவர் ஒரே வீட்டுக்குள் போட்டி போட்டு ஒருவரில் இன்னொருவர் குற்றம் காண்பதும்.. சமூகத்திற்கு ஒரு போலி வேடத்தை காட்டுவதற்காக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து பாசாங்கு செய்வதும்.. இன்னொருவரை மனதில் நினைத்துக்கொண்டு வேறொருவருடன் வாழ்வதும்.. ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் படுத்து எழும்புவதும்.. காவல்துறை வீட்டுக்குள் வருவதும்.. திருமணம் ஒருவரை இன்னொருவர் உத்தியோகபூர்வமாக துன்புறுத்துவதற்கும், தமது கீழ்த்தனங்களை காட்டுவதற்கும் அரசாங்கத்திடம் இருந்…
-
- 22 replies
- 2.6k views
-
-
மன்னித்துப் பார் வளங்கள் பலவும் பெருகும் வாழ்வின் அர்த்தங்கள் புரியும் மன்னித்துப் பார் இறுகிக் கிடக்கும் பாறையென இதயம் கனத்துக் கிடக்கிறதா? பனியாய் உருகி பாசத்ததைப் பகிர்ந்திட மன்னித்துப் பார் ஏழு தரமல்ல எத்தனை தரம் வேணுமென்றாலும் மன்னித்துப் பார் மனிதம் புனிதமடையும் மரணம் கூட மகத்தானதாய் அமையும் மலரைப்போல மனம் மென்மையடையும் மன்னித்துப் பார் இறுக்கங்கள் தளரும் இதழ்களில் புன்னகை அரும்பும் பேச்சினில் இனிமை கூடும் அணைப்பினில் அன்பு பெருகும் மன்னித்துப் பார் மகிழ்வான தருணங்கள் மனதை வருடும் புலரும் பொழுதுகள் கூட புன்னகை பூக்கும் மன்னித்துப் பார் மன அழுக்குகள் அனைத்தும் அகன்றே ப…
-
- 13 replies
- 1.8k views
-
-
இந்த வருட யாழ் 21வது அகவைக்காக பயணம் பற்றி எழுதலாம் என்று நினைத்திருந்த போது எழுத்தாளர் சுவி அவர்கள் பயணக் கட்டுரை எழுதி ஒரு கலக்கு கலக்கிவிட்டார்.இதுக்குப் பின் எப்படிடா எழுதுவது என்று எண்ணினாலும் சரி என்ன தான் நடந்தாலும் யாழ்இணையத்திற்கு நான்பட்ட கடன் என்று ஒன்று இருக்கல்லவா அதற்கான நன்றிக்கடன் தான் இது.அதுக்காக நாகபாம்பு ஆடுதென்று நாக்கிளிபுழுவும் ஆட வெளிக்கிட்டுட்டுது என்று யாரும் எண்ணாமலிருந்தால் பெரிய உதவியாக இருக்கும். தொடரும்.
-
- 145 replies
- 14.9k views
- 1 follower
-
-
கஞ்சா விற்கும் காஞ்சனாவும் கண்ணி வைக்கும் காவலனும்,,,,,,,, ! போதை தரும் வாதை சிரிப்புக்குமட்டும்,சிந்திக்கக்கூடாது......! 🥀..............(1) அந்த நீதிமன்ற வளாகம் அன்று காலை ஒரே பரபரப்பில் இருக்கின்றது.வக்கீல்களும், தரகர்களும்,கட் சிக்காரர்கள் வாதிகள்,பிரதிவாதிகள்,வேடிக்கை பார்க்க வந்தவர்கள்,சின்னசின்ன வியாபாரம் செய்பவர்கள் என்று பலராலும் நிரம்பி வழிகின்றது.அது தற்காலிக கட்டிடத்தில் நடைபெறுவதால…
-
- 60 replies
- 9.7k views
- 1 follower
-
-
இன்று இங்கே சனி காலை நேரம். வழமையாக இரவு படுக்கப் போக எப்படியும் 11, 11.30 ஆகி விடும். புலம் பெயர்ந்தும் மாறாத பழக்கங்களில் இதுவும் ஒன்று. அதிசயமாக நேற்று இரவு 10 மணிக்கே படுக்கைக்கு போயாயிற்று । காலையில் துணைவியார் அதிசயமாக நல்லதொரு "mood " உடன் என்னப்பா இரவெல்லாம் ஒரே கனவு என்று கொண்டு வந்தார்। தேடிக் கதைக்க வரும் அருமையான சந்தர்பங்களை விட மனமில்லாமல் கையில் இருந்த வேலை எல்லாவற்றையும் விட்டு விட்டு என்னப்பா என்ன விஷயம் என்று கேட்டேன். இல்லையப்பா சிங்களவர் , சோனகர் , தமிழர் எல்லோரும் ஒரே சண்டை , நீர்வேலியில் வைத்து நாங்கள் எல்லோ இடையில் மாட்டுப்பட்டுப் போனோம்। ஓடித் தப்பிக்கலாம் எண்டால் கை கால் ஒண்டும் வேலை செய்யுதில்லை அப்பிடியே இறுக்கிப் போச்சுது ,…
-
- 7 replies
- 1.6k views
-
-
இரு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நின்றபோது பெரும்பாலும் ஓட்டோவில தான் திரிந்தது. பணச்செலவுதான் அதிகமே தவிர தாங்கமுடியாத வெய்யிலில் நடந்து செல்வதோ அல்லது பஸ்சுக்காகக் காத்திருப்பது கொடுமையிலும் கொடுமை. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கணவருடன் சென்றபோது அந்தாள் என்னை ஓட்டோவே பிடிக்க விடாமல் பஸ்சிலும் சைக்கிளிலும் கொண்டு திரிந்து சிலோனே வெறுத்துப்போயிருந்த எனக்கு, கணவன் இல்லாமல் தனியாகச் சென்றது ஒருவித சுதந்திரமாகவும் நின்மதியாகவும் இருந்தது. அதுக்காக அதிக பணம் கொடுத்து ஓட்டோவில் திரியவில்லை. எங்கள் அயலில் ஓட்டோ ஓடுபவர் நியாய விலையைக் கூறியதால் நின்ற இரு வாரங்களில் பன்னிரண்டு நாட்கள் அதிலேதான். மனுசனுக்கு குர்தா தைக்க யாழ்ப்பாணத்தில் ஒரு கடையில் கொடுத்திருந்தேன…
-
- 38 replies
- 4.6k views
- 2 followers
-
-
எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளும் நாமும் காலம் தன்போக்கில் கடந்து செல்ல நாமும் எம் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயங்களையும் கடந்து எம் குழந்தைகளின் வளர்ச்சிகளில் மகிழ்வை காணும் தருணம் இப்போது. எம்மில் பலருக்கு வரும் ஏக்கம் எமது குழந்தைகளின் எதிர் காலம் எப்படியிருக்கும்? எந்த துறையை தெரிவு செய்யப்போகின்றர்கள் என்பது. எம்மில் எத்தனை பேர் எம் குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ற துறையை தெரிவு செய்ய விட்டுவிடுகின்றோம்? அப்படி விடுவதில் பெற்றோருக்கு சிலவேளைகளில் எந்த பிரச்சனையும் இருக்காது ஆனால் உறவினர் அயலவர் என்ன சொல்லுவார்களோ என்ற கவலை தான் பெரிது. வைத்தியர் வக்கீல் போன்ற சில குறிப்பிட்ட தொழில்துறைகளைத்தான் எல்லோரும் தம் குழந்தைகளிடம் தெரிவு செய்யவேண…
-
- 13 replies
- 2.4k views
-
-
விசித்திரமான கனவொன்று இடையிலே குழம்பி அதிகாலை அலாரச்சத்தம் கேட்டுத் திடுக்கென விழித்தெழுந்தான் வசந்தன். சில வினாடிகள் மட்டுமே நீடித்த அக்கனவை அவனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை; காட்சிகளும் நினைவில் இல்லை. மிகவும் பிரயத்தனப்பட்டு மீண்டும், மீண்டும் யோசித்து என்ன கனவு என்று யூகிக்க முனைந்தான். எனினும் 'தாயகத்தில், அவனது ஊரில் அவனுக்கு ஏதோ ஒரு புதையல் ஒன்று எதிர்பாராத விதமாகக் கிடைக்கப்போகிறது' என்பதை மட்டும் அந்தக் கனவில் கண்டதாக உணர முடிந்தது. இவ்வாறு அவன் சிந்தித்துக்கொண்டிருக்கையில், குளியலை முடித்துவிட்டு அவனிடம் படுக்கையறைக்கு வந்த அவன் மனைவி கல்யாணி "என்னப்பா விடிய எழும்பினதும் கையுமா யோசிச்சுக்கொண்டு இருக்கிறீங்கள்? நேரம் 6:10 ஆச்சு. வேலைக்குப் பிந்…
-
- 58 replies
- 7.5k views
- 1 follower
-
-
இந்த பாழாய் போன போரிலே எந்த சண்டையும் நடைபெறாமல் 29 வருடமாக (அதிகமான வருடங்கள்) இடம்பெயர்ந்தது காங்கேசன்துறை மக்களே. இங்கு பல்லின, பல்மத பலசாதி மக்கள் ஒன்றாய் கூடி வாழ்ந்த காலமும் ஒன்றிருந்தது. அன்று யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் மாநகரசபையாகவும் பருத்தித்துறை, காங்கேசன்துறை நகர சபையாவும் கொடிகட்டிப்பறந்தன. எனது வீட்டை சுற்றி இருந்தவர்கள் வேறு ஜாதியினர், வேறு மதத்தவர், வேறு இனத்தவர் +வேறு மொழி பேசுபவர்கள் - ஆனால் எங்களுக்குள் வேறுபாடு இருந்ததில்லை. இது காங்கேசன்துறை பற்றிய ஒரு அறிமுகம் மட்டுமே. ஆனால் முப்பது வருடங்களின் பின்னான மாற்றம் - தொடரும்.
-
- 14 replies
- 3.9k views
- 1 follower
-
-
கவிதையோ கவிதை கதையோ கவிதையோ எதுவோ ஒன்று இணையம் 21 க்கு இயற்றிடலாம் என்று தண்டோரா போட்டு விட்டனர் இன்று பண்புடன் ஏற்று அதை செப்புதல் நன்று மண்ணில் விதையிடில் மரம் முளைக்கலாம் மரத்தின் கிளையில் கவிதை பறிக்கலாமோ மயங்கிய மதியை மனசுக்குள் தேற்றி அறிவெனும் ஒளியை அகலினில் ஏற்றி ஒரு கை பார்க்க புடைத்தது நெற்றி கொப்பியடித்தால் கிடைத்திடும் வெற்றி காலம் கடந்த பட்டுக்கோட்டை பாடல்களை பக்குவமாய் தறித்து இட்டு கட்டிடலாமோ காலத்தால் அழியாத கண்ணதாசன் கவிதைகளை கன்னா பின்னா என்று உரு மாற்றிடலாமோ அவதாரபுருஷன் வாலியின் வாலிப வரிகளை வாலைப் பிடித்து வளைத்து போடலாமோ …
-
- 8 replies
- 1.7k views
-
-
மனிதாபிமானம் (சிறு கதை) அண்மையில் ஒரு உணவகத்தில் சாப்பிடச்சென்றிருந்தேன். அது ஒரு அல்யீரிய நாட்டவருக்கு சொந்தமான உணவகம். அன்று PSG இன் உதை பந்தாட்டம் இருந்ததால் உணவை ஓடர் செய்து விட்டு அவரது அகண்ட திரையில் விளையாட்டையும் பார்க்க தயாரானேன். சிறிய நேரத்தில் அந்த உணவக முதலாளி ஒருவரை அழைத்து வந்து எனக்குப்பக்கத்து மேசையில் இருந்தி விட்டு என்ன சாப்பிடுகின்றீர்கள் என்று கேட்க அவரும் ஒரு சிறிய சாப்பாட்டை சொல்லி இன்று இது மட்டும் போதும் எனக்கு என்றார். குடிக்க என்ன வேண்டும் என்ற கேள்விக்கு ஒன்றும் வேண்டாம் என்றபடி முதலாளியை இரு கையெடுத்துக்கும்பிட்டார். …
-
- 14 replies
- 3.2k views
-
-
உலகில் பிறந்த எத்தவொரு மனிதனுக்கும் தாய் மொழி என்பது உரித்தானது. மனிதன் தன் உணர்வுகளையும் உள்ளக் கிடக்கைகளையும் வெளிக்காட்டுவதற்கு மொழி உதவுகின்றது . 1999 ஆம் ஆண்டு நடந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21-ம் நாளை உலக தாய்மொழி தினம் என்று அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இத்தினம் உலகமெலாம் கொண்டாடப்படுகிறது. நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மிகவும் தொன்மையானதும், இனிமையானதும் ஆகும். தாய்மொழியில் எழுதவும் பேசவும் சிறப்புற்ற மனிதனின் சிந்தனை ,செயல் என்பன சிறப்பானதாகவே இருக்கும். தாய்மொழி கற்றலில் சிறந்த மனிதனால் வேற்றுமொழிகளையும் சிறப்புற கற்க முடியும் என்பது உளவியல் நிப…
-
- 18 replies
- 2.8k views
- 1 follower
-
-
பாசமலர்ச் சோலை கை நிறைய மலர்கள் புன்னகையின் இதழ்கள் கண்களிலோ மொழிகள் கலகலக்கும் ஒலிகள் பாசமலர்ச் சோலை பால் மணக்கும் மழலை நேசமுடன் வருடும் மயிலிறகாய் விரல்கள் சிரிப்பினிலோ உவகை சிணுங்கலிலோ உரிமை மொழிகளில்லா உலகில் மோகனமாய் விழிகள் பஞ்செனவே கால்கள் பழங்களென விழிகள் பிஞ்செனவே விரல்கள் கொஞ்சுகின்ற பார்வை கண்சிமிட்டும் அழகு கை அசைப்பில் அழைப்பு சிந்துகின்ற சிரிப்பு சேய் அவனின் துடிப்பு அபிநயமோ வேதம் அணைப்பினிலோ மோகம் என்னவென்று வியக்கும் எடுத்தணைத்தால் மயக்கம்
-
- 12 replies
- 2.1k views
-
-
அன்று மிஸ்டர் ஆபீசர் தனது அலுவலக உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்ற நாள். நெருங்கிய சில அலுவலக சகாக்களுடன் மதிய உணவை முடித்துக் கொண்டு விடைபெற்று வீடு வந்தபோது அவர் மனைவி உமாவும், ஒரே ஒரு மகள் கவிதாவும் இன்னும் வேலையில் இருந்து வீடு திரும்பியிருக்கவில்லை. வீட்டுக்கு வெளியே இருந்த சாய்மனைக் கதிரையில் சாய்ந்தவர் தனது அலுவலக நினைவுகளை அசை போட்டார். நிர்வாக உதவியாளராகத் தொடங்கிய அவரது பணிக்காலத்தின் இடையே கம்ப்யூட்டர் மயமான பொழுதில் தொழிநுட்பத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் போக இறுதி வரை சாதாரண அலுவலராகவே வேலை செய்து ஒய்வு பெற்றார். (எனினும் அலுவலக உத்தியோகத்தர் என்னும் திமிர் அவரிடம் எப்போதுமே குடி கொண்டிருந்தது. வேலை தவிர்ந்த வெளியிடங்களில் நண்பர்கள், உறவினருடன் உரைய…
-
- 15 replies
- 3.2k views
- 1 follower
-
-
1988 ஆடி மாதம் சனிக்கிழமை. வேகமாக துவிச்சக்கரவண்டியில் வந்த சங்கரை மறித்தான் கோபால். என்ன மச்சான் கிளாசுக்காப் போகிறாய்? ஓமோம் சோதியற்ற பிஸிக்ஸ். உமக்கு ? எனக்கு பொருளியல் கிருஸ்ணானந்தான் ஆசிரியரின் கிளாஸ். அங்க பார் ஆமிக்கார்கள், எல்லோரையும் மறிக்கிறாங்கள். இன்றைக்கு கிளாசுக்கு போனபாடுதான். சங்கர் க.போ.த உயர்தரம் கணிதபிரிவில் கல்வி கற்கிறான். பொறியிலாளராக வேண்டும் என்ற விருப்பம். கோபால் யாழ்மத்திய கல்லூரியில் வர்த்தகதுறையில் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கிறான் . நன்றாகப் படித்து பல்கலைக்கழகம் சென்று கற்று தனது சகோதரிகளை கரைசேர்க்கவேண்டும் என்று விரும்பினான். கோபாலின் அப்பா ஒரு சட்டத்தரணி. பலருக்கு பல்வேறு விதமாக உதவும் எண்ணம் கொண்டவர். தகப்…
-
- 13 replies
- 3.9k views
- 1 follower
-
-
இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகள்! செப்ரெம்பர் 11, 2001 இல் நான்கு விமானங்களைப் பயங்கர வாதிகள் கடத்திச் சென்று அமெரிக்காவின் கிழக்குக் கரைகளில் இருந்த இலக்குகளைத் தாக்கியதை யாவரும் அறிவர். கடத்தப் பட்ட விமானங்களுள் ஒன்று அமெரிக்காவின் பென்ரகன் எனப்படும் பாதுகாப்புத் தலைமையகத்தின் மேற்குப் பகுதியைத் தாக்கியதில் ஒரு பாரிய ஓட்டையுடன் கட்டிடத்தின் பெரும்பகுதி இடிந்து வீழ்ந்தது. ஜெசி வென்சுரா, இப்போதும் வாழும் 67 வயது முன்னாள் அமெரிக்க அரசியல் வாதி. தனது அரசியல் பதவிகள் தீர்ந்து போன பின்னர், தொடர்ந்து பொது வாழ்வில் நிலைக்க அவர் தேர்ந்தெடுத்த பாதை சதித்திட்டங்கள் (conspiracy theories) குறித்த விவரணப் படங்கள் தயாரிப்பது. 9/11 தாக்குதல் உண்மையில் அமெரிக்க அரசின் உளவுத…
-
- 27 replies
- 3.8k views
-
-
இன்றைய தகவல் தொழிநுட்ப உலகில் பொழுதுபோக்கு ஊடகங்கள் மலிந்து கிடக்கின்றன. வேலை / வகுப்பு முடிந்து வீடு வந்து தான் தொலைக்காட்சியில் அல்லது கணினியில் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க வேண்டும் என்ற நிலை மாறி யூடியூப் (YouTube), முகநூல் (Facebook) போன்ற சமூக ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சியாலும், ஸ்மார்ட்போன்களின் (smartphones) உதவியுடனும் நாம் எங்கு சென்றாலும் எந்த நேரத்திலும் விரும்பிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கக் கூடியதாக இருக்கிறது. கடைக்காரர் கொத்துரொட்டி போடும் ஓர் பத்து நிமிட இடைவெளியில் வடிவேலுவின் பழைய பகிடி ஒன்றை யாழில் கள உறவு ஒருவர் பகிர்ந்ததை கைத்தொலைபேசியில் பார்த்துச் சிரிப்பதை ஓரிரு தசாப்தங்களுக்கு முன்னர் நினைத்திருப்போமா?! இவ்வாறு கேளிக்கை ஊடகங்க…
-
- 17 replies
- 4.5k views
-
-
இந்தத் தென்னைகளே சாட்சி.. பல வீடுகளுக்கு குண்டுகள் வைத்து தகர்த்தவன் யார் என்பதற்கு. அயராத மக்கள் இன்னும் ஊரில் இருக்கிறார்கள். புகையிலை தோட்டம். தொண்டமனாறுக்கு குறுக்கே பாலம். செல்வச்சந்நிதி. ஈஸ்டாமில் ஒரு குட்டி எஸ்ரேட் ஏஜென்ட் வைச்சிருந்து எப்படியோ செல்வம் திரட்டி.. வேலணை சாட்டியில் உல்லாச விடுதி நடத்தும் ரில்கோ. செங்கரங்கள் நீட்டி.. பனைக் கறுப்பிகள் கூந்தல் தடவி.. ஒளித்து விளையாடும்.. சூரியன். வேலணை சாட்டி.. அந்திசாயும் வேளை. யாழ்ப்பாண கடைசி தமிழ் மன்னனின் சமாதி என்று சொல்லப்படுகிறது. சுற்றி நிற்பதை யமுனா ஆறு என்கிறார்கள். தமிழரின் வாழ்வு போல் சிதைந்து நிற்கும் சங்கிலியனின் சரித்திரம். விட்டால்.. …
-
- 31 replies
- 6.8k views
- 1 follower
-
-
உன் தோள் சாய ஆசைதான்.... காலை எழுந்ததிலிருந்து சுந்தரத்தின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. காரணம் என்னவென்று சொல்லத் தெரியவில்லை. வீடு அமைதியாக இருந்தது. முன்பெல்லாம் தாத்தா தாத்தா என்று தோள்மீதும் மார்மீதும் புரண்டு மடிமீது தவழ்ந்த செல்லப் பேரன்கள் இருவரும் இ;ப்பொழுது தம் தேவைகளைத் தாமே கவனிக்கும் அளவு வளர்ந்து விட்ட பின்பு அவரை திரும்பியும் பார்ப்பதில்லை. காரணம் அவர்கள் கைகளில் பல தொழில் நுட்பச் சாதனங்கள். காலை எழுந்ததும் அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டு வேகவேகமாக தத்தமது கருமங்களை கவனித்தபடி 'போய் வருகிறேன்' என்று சொல்லக் கூட நேரமில்லாமல் 'அப்பா யாராவது கதவைத் தட்டினால் பார்த்து திறவுங்கள் கவனம்' என்று சொல்வதைத் தவிர நின்று நிதானித்த…
-
- 31 replies
- 3.7k views
-
-
மலேரியா போய் கஞ்சா வந்தது! உலகளாவிய ரீதியில் மக்களின் ஆரோக்கியத்தைக் குறைக்கும் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் காரணிகளை ஆராய்ந்தால் வளர்ந்த மேற்கு நாடுகளிலும் அபிவிருத்தியடையாத ஆபிரிக்க, ஆசிய நாடுகளிலும் வெவ்வேறு விதமான காரணிகள் பிரதானம் வகிப்பதைக் காணலாம். மேற்கு நாடுகளில், மூன்றில் ஒரு பங்கினர் உடல் எடை அதிகரித்தவர்களாகவும் அதனால் வரும் உடல் நோய்களால் அவதியுறுவோராகவும் உள்ளனர்: இதய நோயும், புற்று நோய்களும் முதன்மையான மரண காரணிகளாக அமெரிக்காவில் இருக்கின்றன. ஆபிரிக்காவிலும் அபிவிருத்தியடையாத தெற்கு-தென்கிழக்காசிய நாடுகளில் தொற்று நோய்கள் முதன்மையான சவால்களாக இருக்கின்றன. நீர்மூலம் பரவும் வயிற்றோட்ட வகை நோய்கள் ஒரு புறமும், பூச்சிகளால் பரவும் மலேரியா போன்ற இரத்தத் தொற…
-
- 6 replies
- 1.6k views
-
-
"லண்டனிலிருந்து சுதா வந்திருக்கிறாள் வீ க்கென்ட் பின்னேரம் வாறீயா போய் சந்திப்போம்" "யார் மச்சான் சுதா" "டேய் டேய் சும்மா பம்மாத்து விடாத முந்தி நீ சுழற்றிகொண்டு திரிஞ்சாய் கலா, அவளோட போவள் 'இரட்டை பின்னல்' அவளைத்தான் சொல்லுறன்" "கலா ...." " டேய் நீ எனக்கு விசரை கிளப்பாதை" "யாரப்பா போனில் சுதா,கலா என்று முழுசிக்கொண்டிருக்கிறீயள்" "மச்சி வைடா மனிசி வாராள் பிறகு ,நான் எடுக்கிறன்" "குகன் எடுத்தவன் யாரோ கலாவின்ட பிரண்டாம் சுதா லண்டனிலிருந்து வந்திருக்கிறாளாம், மீட் பண்ண வரட்டாம்." "போய் மீட் பண்ணுங்கோவன்" "மீட் பண்ணலாம் , சுதா யார் என்று யோசிக்கிறன்" "என்ன உங்களுக்கு டிமஞ்சியா கிமஞ்சியா எதாவது வந்திடுதே" " ஏ…
-
- 33 replies
- 9.5k views
-
-
மனிதர் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளம் உண்டு; அந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமே நமது தனித்துவமாக உலகிற்கு தோன்றுகிறது. நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது. சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது; அவர்களின் 'குறைகள் என்று ஏனையோரால் சொல்லப்படுபவை' குறைகளாகத் தோன்றாது; முழுமையான மனிதராக அவர்கள் காட்சியளிப்பர். எனினும் அவர்கள் மீது பொறாமை ஏற்படாது. மற்றவர்களின் அடையாளத்தை புரிந்து கொள்ளும்/புரிய முயற்சிக்கும் மனது அன்பின் ஊற்றாகிறது. ஒருவர் தனது அடையாளம் எது …
-
- 27 replies
- 4.5k views
-
-
-
கடவுள் படைக்காத மனிதர்கள்! அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக வரும் முன்னர் சில ஆண்டுகள் முன்பிருந்தே அடிப்படை வாதக் கிறிஸ்தவர்களின் (evangelical Christians) கை கொஞ்சம் கொஞ்சமாக ஓங்க ஆரம்பித்து விட்டது. இவர்களின் பழமை வாதக் கொள்கைகளும் அக்கொள்கைகளை மதச் சார்பின்மையுடய அமெரிக்க சட்டத்தினுள் குறுக்கு வழிகளில் புகுத்தி மற்றவர்களின் நம்பிக்கைகளைத் தாங்கள் தீர்மானிக்கும் தீவிரமும் இவர்களை நான் "கிறிஸ்தவ தலிபான்கள்" என்று அழைக்கக் காரணங்கள். இந்தப் பழமை வாதக் கிறிஸ்தவர்களின் நீண்ட கால இலக்குகளில் ஒன்று டார்வினின் கூர்ப்புக் கோட்பாடு (theory of evolution). 1859 இல் சார்ள்ஸ் டார்வின் உயிரியல் உலகின் மிக முக்கியமான முன் மொழிதலான "உயிரினங்களின் கூர்ப்பு" எனும் தியரியை ஒரு நூலா…
-
- 14 replies
- 3.2k views
-