நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
வணக்கம்! நானும்தான் நீண்ட காலமாக கட்டான உடலை பெறுவதற்கு (மேலுள்ள படத்தில் உள்ளது போன்று) முயற்சி செய்தேன். முடியவில்லை. முயற்சியைக்கைவிட்டு விட்டேன். ஆனால் இவ்விடையமாக நான் யாழ் கள உறவுகளின் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கின்றேன். யாழ் களத்தில் படத்தில் உள்ளது போன்ற உடலமைப்பை தீவிர பயிற்சியின் மூலம் பெற்ற நண்பர்கள் இருக்கக்கூடும். அவர்கள் தமது அனுபவங்களை மனந்திறந்து பகிர்ந்து கொள்ளலாம். மேலும் இதிலுள்ள தீய விளைவுகளைப் பற்றியும் விவாதிக்கலாம். இதைவிட எவ்வாறு உடற்பருமனைக் குறைக்கலாம் அல்லது கூட்டலாம் என்பது பற்றிய உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக இருக்கின்றேன். வேறு இணையத்தளங்களிலுள்ள கட்டுரைகளை வெட்டி ஒட்டாது, கூடுதலான வரை உங்கள் வாழ்பனுபவங்களை பகிர்ந்து கொண்டால் நன்…
-
- 29 replies
- 6.6k views
-
-
காபி ஒரு கோப்பை, புற்று நோய்க்கு குட்பை! மார்ச் 05, 2007 சென்னை: தினசரி காஃபி அருந்துவோருக்கு புற்று நோய், சர்க்கரை வியாதி வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஒரு காலத்தில் காபி குடிப்பது உடல் நலனுக்குத் தீங்கானது என்று கருதப்பட்டது. காபி அருந்தினால் புத்துணர்ச்சி ஏற்பட்டாலும் அது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு புதிய ஆய்வின்படி காஃபி சாப்பிட்டால் பல்வேறு வகையான புற்று நோய், சர்க்கரை வியாதி ஆகியவை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. புற்று நோய்க் கட்டிகள், வயிற்று புற்றுநோய், ஈரல் புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படுவது குறையுமாம். மும்பை, பாபா அண…
-
- 10 replies
- 6.5k views
-
-
இது ஒரு சாதரண சோதனைதான் உங்களைப்பற்றி அறிய. உங்கள் நெஞ்சில் ஒரு கையையும் வயிற்றில் ஒரு கையையும் வைத்து சதரணமாக சுவாசியுங்கள். அப்பொழுது பின் வருவனவற்றில் எவை நடந்தது என்று அறியத் தரவும், அதன் பின் உங்களைப்பற்றி சொல்கிறேன்: 01) நெஞ்சில் உள்ள கை வயிற்றில் உள்ளதைவிட கூட அசைத்தது 02) வயிற்றில் உள்ள கை அதிகமாக அசைத்தது 03) இரண்டுமே சரி சமனாக அசைத்தது 04) இரண்டும் அசையவில்லை (மேலே போய்விட்டீர்கள் நம் முன்னோரை கேட்டதாக கூறவும்) உங்களால் உணர முடியாவிட்டால், உங்கள் அன்புக்குரிய யாரையாவது உதவிக்கு அழைக்கவும்
-
- 38 replies
- 6.5k views
-
-
படித்ததில், இவை யாழ் களத்திலுள்ளோருக்கு பயனுள்ளவையாக இருக்குமேயென இங்கே பதிகிறேன். கொலஸ்டரோல்(கொழுப்புச் சத்து) என்பது என்ன? இது எமது உடலிலுள்ள ஒரு கொழுப்புப் பொருள். இது உடலுக்குத் தேவையான பொருளும் கூட. உதாரணமாக, பால் சார்ந்த ஹோர்மோன்களான ஈஸ்ரோஐன், புரொஜெஸ்டரோன் ஆகியவற்றின் உற்பத்திக்கு அவசியமானது. கலங்களின் பகுதியாகவும் உள்ளது. ஆனால் இரத்தத்தில் வழமைக்கு மேலான இதன் அதிகரிப்பு நோய்களுக்கு காரணமாகிறது. கொலஸ்டரோல் தவிர்ந்த வேறு கொழுப்புக்களும் எமது உடலில் உள்ளன. கொலஸ்டரோல், ரைகிளிசரைட் (TG), பொஸ்போ லிப்பிட்ஸ் ஆகிய அனைத்துமே கொழுப்புக்கள் (Lipids) எனப்படுகின்றன. கொழுப்புக்கள் நீரில் கரைய முடியாதவை. எனவே அவற்றை உடலின் ஒரு பகுதியிலிருந்து வேறு ப…
-
- 11 replies
- 6.5k views
-
-
- அதிர்ச்சி சர்வே "கணவன், மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் நிகழும் செக்ஸ் உறவில் நேசமும், மனம் லயிக்கும் நெருக்கமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இருவருக்குமே இருக்கும் மனநெருக்கடியும், பிரச்சினைகளும், சோர்வும் படுக்கை அறையை பெயரளவுக்கு உடல்கள் மட்டும் இணையும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. கணவன்-மனைவி படுக்கை அறை உறவு ஏதோ ஒரு சடங்கு, சம்பிரதாயம் போல் ஆகிவிட்டது. இந்த நிலையை சமூகம் உணர்ந்து விழித்துக்கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் எல்லையில்லாமல் போய்விடும்'' -என்கிறார், பிரபல செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் டி.காமராஜ். இவரது `இந்தியன் அசோசியேஷன் பார் செக்ஸாலஜி' சார்பில் ச…
-
- 7 replies
- 6.4k views
-
-
அப்பிளின் மகிமை! ஆயுட்காலத்தைக் கூட்டுமாம் வெள்ளி, 04 மார்ச் 2011 08:57 அப்பிள்பழம் உடலுக்கு ஆராக்கியமானது என்பது காலாகாலமாக அறியப்பட்ட ஒரு விடயம். தினசரி ஒரு அப்பிளைச் சாப்பிடுவதன் மூலம் வைத்தியர்கள் அணுக விடாமல் தடுக்கலாம் என்ற ஒரு கூற்றும் உள்ளது. இப்போது விஞ்ஞானிகளும் இதை நிரூபித்துள்ளனர். பழங்கள் அளவில் சிறியவைகளாக இருந்தாலும் மனித மரபணுவோடு அவை பல தொடர்புகளைக் கொண்டுள்ளன. உணவை சாதாரணமாகச் சாப்பிடலாம் அல்லது அப்பிள் ஒன்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம். சாதாரணமாகச் சாப்பிடுகின்றவர்கள் சராசரியாக 50 நாட்கள் வாழுகின்றார்கள் என்று எடுத்துக் கொண்டால், ஆப்பிள் ஒன்றுடன் சேர்த்துச் சாப்பிடுகின்றவர்கள் 55 நாள் வாழுகின்றார்கள் என்று விவசாயம், உணவு, மற்றும் …
-
- 15 replies
- 6.3k views
-
-
செக்ஸ் உணர்வு மனிதனுக்கு எப்போது தோன்றியது என்ற கேள்விக்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால், செக்ஸ் உணர்வு மனிதன் தோன்றிய ஆதி காலத்தில் இருந்து தோன்றியது. அதில் எந்த மாற்றமுமில்லை. ஆனால், அதன் செயல்பாடுதான் வேறுபட்டுக் கொண்டே போகிறது. அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? வேறொன்றும் இல்லை. நமது சமுதாய சூழ்நிலைதான். அப்படியென்றால், இதில் என்ன தவறுநடக்கிறது. கல்ச்சர் (கலாசாரம்) என்ற அடிப்படையில் தவறு செய்கிறோம்.உதாரணத்திற்கு தமிழ்நாடு என்று வைத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் ஒரே சூழ்நிலை, ஒரே தோற்றம் ஒரே மனநிலையை எதிர்பார்க்க முடியாது. கன்னியாகுமரியில் இருக்கும் ஒருவர் தமிழனாக இருந்தால், அவரது நடை, உடை பாவனை போன்றவற்றில் கேரளா மனம் வீசத்தான் செய்…
-
- 35 replies
- 6.3k views
-
-
குழந்தைகளின்(18 மாதம்) தலை ஏன் வியர்கிறது? கூடுதலாக நித்திரை கொள்ளும் போதுதான் அவதானிக்க முடிகிறது. இப்போது இங்கு குளிர் காலம். இருந்தும் நாங்கள் வெப்பநிலையை அதிகம் கூட்டுவதில்லை. 22 - 23 பாகை செல்சியஸ் தான் இருக்கும் இருந்தும் அவனின் தலையில் மிகவும் வியர்வை கசிந்து உள்ளது. இது சில குழந்தைகளுக்கு பொதுவென கூகிள் தேடலில் அறிந்தேன். இதுபற்றி இங்கு யாருக்காவது தெரியுமோ? நன்றி.
-
- 8 replies
- 6.3k views
-
-
தேனீரைச் சுவைத்துக் குடிக்கும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் "கிரீன் டீ" என அழைக்கப்படும் பச்சைத் தேநீர் பற்றி ? தேநீர்களின் பெயர்களைக் கேட்டுக் கேட்டுக் குழம்பிப் போயிருக்கும் நமக்கு புரியாமல் போய்விட்ட ஆனால் அற்புதமாகக் கிடைத்த ஒன்று தான் இந்த பச்சைத் தேநீர். இந்தத் தேநீர் மகத்துவமானது என ஆராய்ச்சிகள் வியந்து பேசுகின்றன என்பது தான் இந்தத் தேனீரைப் பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது என நான் நினைப்பதற்குக் காரணம். இந்தத் தேனீரை குடிப்பதால் உடல் பருமன் குறைகிறது எனவும் இந்தப் பச்சைத் தேநீர் உடலிலுள்ள இன்சுலின் சுரக்கும் தன்மையை வலிமைப்படுத்தும் எனவும் யு.கே பர்மிங்காம் பல்கலைக்கழகம் பச்சைத் தேநீர் பற்றி வெளியிட்டிருக்கிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுக…
-
- 6 replies
- 6.3k views
-
-
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும்இ புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும்இ ரிபோஃப்ளேவின் என்ற வைட்டமின் 'பி'யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது. தயிரில் உள்ள புரோட்டீன்இ பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒருமணி நேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் அதே நேரத்தில் ஜீரணமாகி விடுகிறது. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமியான பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியவை உருவாக்குகிறது. இயற்கையிலேயே ஒருவர் அழகாக இருக்க தயிரைத் தவிர சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நர…
-
- 33 replies
- 6.2k views
-
-
கர்ப்பிணி மனைவியைப் பற்றி கவலையா? -------------------------------------------------------------------------------- பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் hPதியாகவும், உளவியல் hPதியாகவும் பல மாற்றங்களுக்கு ஆளாகிறhர்கள். முன்பெல்லாம் கர்ப்பமாக இருக்கும் மனைவியை கவனிப்பது, கணவன்மார்களுக்கு சவாலாக இருந்தது. இதனால் குடும்பத்தில் உள்ள மூத்தப் பெண்களே அவர்களை கவனித்தனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, பாpசோதனைகள் செய்வது, வேளா வேளைக்கு உணவுகள் - மருந்து மாத்திரைகள் சாப்பிட வைப்பது என்று அனைத்திலும் மூத்தப் பெண்கள் பங்கு வகித்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறி இருக்கிறது. கர்ப்பிணி மனைவிமார்களை பராமாpப்பதில் கணவன்மார்களும் அதிக அளவில் பங்கெடுக்க தொடங்கியுள்ளனர் மகப்பேறு மருத்த…
-
- 30 replies
- 6.2k views
-
-
இன்றைய மின்னஞ்சலில் வந்தது... தொப்பை எனக்கில்லாவிடினும், யாழ்கள உறவுகளுக்கிருந்தால் பயன்படுமே! என்றவிதத்தில் இதை பதிகிறேன். தொப்பையா...? மனிதர்களின் உருவ அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தொப்பை இன்றைய நவீன காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும். கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சியில்லாத வாழ்க்கை முறைகளால் தான் மனிதர்களுக்கு இந்த தொப்பை ஏற்படுகிறது. ஆனாலும் கூட இந்த தொப்பை பிரச்சனையிலிருந்து பெரும்பாலும் பெண்கள் தப்பிக்கொள்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும், ஏனென்றால் பெரும்பாலான பெண்களுக்கு உடல் எடை கூடுகிறதே தவிர, தொப்பை மிகக் குறைவானவர்களுக…
-
- 17 replies
- 6.2k views
-
-
வல்லாரை கால்வாய் மேட்டிலும், குளக்கரைகளிலும், ஆற்றோரங்களிலும், வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர் பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும். * இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம். வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும். * வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைக்கலாம். * பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டாக வை…
-
- 28 replies
- 6.2k views
-
-
காலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது? உடலின் பல நோய்கள் நம் வயிற்றுப் பகுதியில்தான் ஆரம்பிக்கின்றன. மலச்சிக்கல், வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் எனச் சாதாரணமாகத் தொடங்கும் பிரச்னைகள்கூட பல மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட…
-
- 0 replies
- 6.2k views
-
-
-
நல்லதோர் வீணை செய்வோம்! கடந்த சில மாதங்களாக யாழின் பதிவுகளில் என் கவனத்தை ஈர்த்தவை உடல், மன ஆரோக்கியம் பற்றிய பல் வேறு மூலங்களில் இருந்தும் பகிரப் படும் பதிவுகளாகும். இவை அனைத்தும் நல்ல நோக்கத்தோடு பகிரப் பட்ட பதிவுகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மூலங்களின் நம்பகத் தன்மை அல்லது முழுதான மூட நம்பிக்கைகளின் அடிப்படை போன்ற காரணங்களால் இந்த ஆரோக்கியப் பதிவுகள் சில தவறான தகவல்களையும் வாசிப்போரிடையே புகுத்தி விடுவதைக் கண்டேன். இப்பதிவுகளுக்கு தனித் தனியாகப் பதில் இடுவதை விட நாமே வாசகர்கள் அறிய ஆவல் கொள்ளும் ஆரோக்கிய அறிவியல் தகவல்களைத் தொகுத்து வழங்கினால் என்ன என்ற அவா எனக்கு எழுவதால் இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன். இந்தத் தொடரில் பகிரப் படும் தகவல்கள் டாக்டரின் ஆலோசனைகள் அல்ல (…
-
- 38 replies
- 6.2k views
-
-
"இபோலா".... உலகை உலுக்கும், புதிய வகை நோய். வாஷிங்டன்: எபோலோ ஆப்பிரிக்காவில் மட்டுமல்லாமல் வேறு சில நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இருந்தாலும் இதுகுறித்து யாரும் பீதி அடையத் தேவையில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தைச் சேர்ந்த எம்.பி. டொனால்ட் டிரம்ப் இதுகுறித்துக் கவலை தெரிவித்துள்ளார். நமது நாட்டுக்கு நாம் எபோலோவை இறக்குமதி செய்யக் கூடாது என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் மத்திய அமெரிக்காவிலிருந்து வரும் அகதிக் குழந்தைகள் மூலம் அமெரிக்காவிலும் எபோல பரவி விடுமோ என்று அச்சம் தெரிவித்துள்ளார். இவர் மட்டுமல்லாமல் டிவிட்டரில் இப்படித்தான் பல அமெரிக்கர்கள் பீதியுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். பலர் எபோலா நோயா…
-
- 29 replies
- 6.2k views
-
-
கருக் கலைப்பு செய்ய கணவரிடம் "பர்மிஷன்" வாங்க வேண்டுமா? கணவரின் அனுமதி இல்லாமல் ஒரு பெண் தன் கருவைக் கலைக்கலாமா? சட்டப்படி அது செல்லுமா? லக்னோ ஐகோர்ட்டில் ஒருவர் தன் மனைவி மீது வழக்கு தொடர்ந்தார். தன் கருத்தைக் கேட்காமலேயே தன் மனைவி கருக்கலைப்பு செய்ய முடிவு செய்து விட்டதாகவும், சட்டப்படி இது குற்றம் என்றும், மருத்துவ ரீதியான கருக்கலைப்புச் சட்டத்தின் கீழ், தன்னிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார். ஆனால் இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. "மெடிக்கல் டெர்மினேஷன் ஆப் பிரெக்னன்சசி' சட்டத்தின் பிரிவு 3 (4)ல், "கருவுற்ற தாயின் ஒப்புதல் இன்றி, கருக்கலைப்பு செய்யக் கூடாது' என்று கூறப்பட்டுள்ளது. இதில் கணவரின் கருத்து பெறப்ப…
-
- 5 replies
- 6.2k views
-
-
மீனின் செதில்களை போன்று தோல் உரிகிறதா? ஆபத்து [ திங்கட்கிழமை, 01 யூன் 2015, 07:16.09 மு.ப GMT ] சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை தடிப்பு தோல் அழற்சி என்றும் கூறுவார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுடைய தோல் மீனின் செதில் போல் இருப்பதால் இதை மீன் செதில் படை என்றும் அழைப்பார்கள். சொரியாசிஸின் வகைகள் சொரியாசிஸ் வல்கெரிஸ்(Psoriasis vulgaris): இது பொதுவாக அதிகளவில் காணப்படும் வகையாகும் . சிவந்த தட்டை வடிவமாக தோன்றி பின்னர் வெள்ளை நிற செதில் போன்ற தோலால் மூடப்படுகிறது. இந்த பகுதிகள் பிளேக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. நேர்மாறான தடிப்புத் தோல் அழற்சி(inverse psoriasis): இது பொதுவாக இனப்பெருக்க உறுப்புகளின் கீழே , மார்புகளின் கீழ் இ…
-
- 2 replies
- 6.2k views
-
-
பல்லுக்கொதிக்கு.. பாட்டி வைத்தியம் உள்ளதா? எனக்குத் திடீரென்று... கடைவாய்ப்பல்லில். பல்லுக்கொதி வந்து விட்டது. இன்று சனிக்கிழமை... பல்லு டாக்குத்தரும், பூட்டு. திறந்திருந்தாலும்... முன், அனுமதி பெறமுடியாமல் செல்ல முடியாது. அந்தநேரங்களில் மருத்துவமனைக்குச்... செல்ல வேண்டும். அது, எனக்கு... விருப்பமில்லை. உங்களிடம்... சனி, ஞாயிறு பல்லுக்கொதியை... தாக்குப் பிடிக்கக் கூடியதாய்... ஏதாவது, பாட்டி வைத்தியம் உள்ளதா... உறவுகளே...
-
- 15 replies
- 6.1k views
- 1 follower
-
-
சர்க்கரைக்கொல்லி எனும் சிறுகுறிஞ்சான் கடல் கடந்த தமிழ் மருத்துவம் மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றும் வழிபற்றிச் சித்தர்கள் கூறிய கருத்துக்களை இங்கே காண்போம். அகத்தியரால் 1200இல் பின்வருமாறு நோய்வரும் வழி விவரிக்கப்பட்டுள்ளது. "கோதையர் கலவி போதை கொழுத்தமீ னிறைச்சி போதைப் பாதுவாய் நெய்யும் பாலும் பரிவுட ணுன்பீ ராகில் சோதபாண் டுருவ மிக்க சுக்கில பிரமே கந்தான் ஒதுநீ ரிழிவு சேர உண்டென வறிந்து கொள்ளே'' அதாவது பலருடன் / அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல், மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவுவகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எ…
-
- 4 replies
- 6.1k views
-
-
திராட்சைப் பழம் எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகவும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளர் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நா…
-
- 28 replies
- 6k views
-
-
வணக்கம், இன்னொரு ஆராய்ச்சி... இப்ப எங்கள் எல்லாருக்கும் இருந்திட்டு தலையிடி, காய்ச்சல் வருகிது. சிலர் அடுத்தநாள் டொக்டரிட்ட போய் காட்டுவீனம். ஆனால், பலர் அப்படி செய்வதில்லை. பேசாமல் வருத்தத்தை அனுபவித்து கஸ்டப்பட்டுக்கொண்டு இருப்பீனம். இல்லாட்டி தங்கட பாட்டில ஏதாவது மருந்து குளிகைகளை போடுவீனம். இப்படி போடப்படுகிற மருந்துக் குளிகைகளில பிரபல்யமானது பனடோ, தைலனோ, அஸ்பிரின்.. இவை.. நான் உடனடியாக மருந்து குளிகைகள் போடுவதில்லை. டொக்டரிட்டையும் போவதில்லை. வருத்தம் ஓரளவு துன்பம் தரத்தொடங்கியதும் முதலில் பனடோல் அல்லது தைலனோலை நாடுவேன். வருத்தம் எக்கச்சக்கமாய் முத்தியபின் தான் டொக்டரிடம் ஓடுவது. ஆ... அந்த அனுபவம் பயங்கரமானது... உடம்பில குளிர் ஊதல் அடிக்க.. …
-
- 19 replies
- 6k views
-
-
ஜீன்ஸ் உடை அணியப்போறீங்களா? இதைப் படிங்க! ஆணோ, பெண்ணோ அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் ஒரு உடையாக இருக்கிறது ஜீன்ஸ். எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் துவைக்காமல் போட்டுக்கொள்ளலாம் அப்படி ஒரு சவுகரியம் அந்த உடையில் உள்ளது. ஆனால் ஜீன்ஸ் உடையில் சில அசௌகரியங்களும் இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். ஆண்களுக்கு ஆண்மை குறைபாடும், பெண்களுக்கு நரம்பு தொடர்பான நோய்களும் ஏற்படுவதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். ஜீன்ஸ் அணிந்த இளசுகளை கேட்டாலே அந்த உடையைப் பற்றி கதை கதையாக கூறுவார்கள். சவுகரியமான உடை, தன்னம்பிக்கை தரக்கூடிய உடை, அழகை எடுப்பாக எடுத்துக்காட்டும் என்றெல்லாம் கூறுவார்கள். ஜீன்ஸ் உடை அணிய எத்தனை காரணங்களை கூறினாலும் இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ச்சியாக அணியும் ஆண்கள…
-
- 14 replies
- 6k views
-
-
உடல் எடை அதிகமானவர்களைப் பார்த்து, ’நீ எந்தக்கடையில அரிசி சாப்பிடுகிறாய்?’ என்று கிண்டலாக கேட்பார்கள். அதிகமாகச் சாப்பிடுவதைத்தான் அவ்வாறு கேலி செய்வார். பெண்களாக இருந்தால் திருமணமாகி குழந்தை பிறந்தபிறகு ஏற்படும் தைராய்டு பிரச்னை காரணமாக உடன் எடை அதிகரிக்கலாம். உடற்பயிற்சியின்மை எப்போதும் ஓய்வு, நொறுக்குத் தீனி, போன்றவை எடையைக் கூட்டிவிடும். ஆண்களுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், மது அருந்துவதாலும் எடை கூடும். மனதில் மகிழ்ச்சி அதிகமானால் கூட எடை கூடுவதை நடுத்தர வர்க்கத்தினரிடையே காணலாம். குண்டானவர்கள் தங்கள் பணிகளை உற்சாகமாய் செய்ய முடியாது. மூட்டு வலி, முதுகு வலி, தசை வலி என அடிக்கடி சிரமப்பட நேரிடும். தங்கள் வயதைவிட முதியவராகவும், கவர்ச்சியமான தோற்றமும் இல்லாமல் இருப்…
-
- 4 replies
- 6k views
-