மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
-
கல்லெறிந்த கைகள் குருத்தோலை தாங்கின குருத்தோலை ஞாயிறு - மார்ச் 25 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யூதேயா தேசத்தின் தலைநகரமாக இருந்தது எருசலேம். அதன் அருகில் யோர்தான் நதியின் அக்கரையில் இருந்த ஒரு கிராமத்தின் பெயர் பெத்தானியா. அது இயேசுவுக்கு மிகவும் பிடித்த கிராமம். காரணம் அங்கேதான் இயேசுவின் அன்புக்குப் பாத்திரமான லாசர் என்பவரும் அவருடைய இரு சகோதரிகளான மார்த்தாள், மரியாள் ஆகியோரும் வசித்துவந்தனர். இவர்கள் இயேசுவின் போதனைகளை ஏற்று அவரை மெசியா என்று நம்பினார்கள். இயேசு பெத்தானியா வழியே செல்லும்போதெல்லாம், அவரையும் சீடர்களையும் வரவேற்று, தங்கள் இல்லத்துக்கு அழைத்துச் சென்று உப…
-
- 2 replies
- 2.1k views
-
-
மனநிம்மதி மனநிம்மதி என்பது கிடைக்க பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள். எது கிடைத்தாலும் கிடைக்கும், மனநிம்மதி கிடைப்பது அரிது என்பது நம்முடைய அனுபவம். பதவி உயர உயர நிம்மதி குறைவது இயல்பு. சொத்து, பதவி, அந்தஸ்தை எல்லோரும் விரும்புகிறார்கள். அத்துடன் இன்றுள்ள அமைதி அவை எல்லாம் கிடைத்தபின் இருக்குமா என்றால், இருப்பது கடினம் என்பதை எல்லோரும் அறிவார்கள். கடவுள் சிருஷ்டியை வர்ணிக்கும் செய்யுள் ஒன்று. கடவுள் மனிதனைச் சிருஷ்டிக்கின்றார். பின்னர் தன்னருகேயுள்ள பல பாத்திரங்களிலுள்ள செல்வங்களை அவன் மீது வர்ஷிக்கின்றார். முதலில் ஆரோக்கியம்' என்ற பாத்திரத்தை எடுத்து அவனுக்கு அபிஷேகமாகத் தலை மீது கொட்டினார். பின்னர் கல்வி', தைரியம்', செல்வம்', சந்தோஷம்' என அங்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
வாழவா பிறந்தான்?-------------------------- மனிதன் மல மூத்திரங்களிற் புரள்கிறான், அவற்றை வாயிலும் வைத்துக் கொள்கிறான். பாடத்தேர்வில் தோற்கிறான், வெட்கத்தால் நஞ்சை உண்டு விடுகிறான், வறுமை, நோய் முதலியவற்றில் உழல்கிறான். கடு வெயிலில் நெற்றி வியர்வை நிலத்தில் விழச் சோற்றுக்கு உழைக்கிறான். அடிமை வேலையில் அழுங்குகிறான், வைத்தியஞ் செய்து கொள்வதற்கு அவகாச மில்லாமலே துள்ளித் துடித்துப் போய்விடுகிறான். குத்துப்படுகிறான், கொலையுண்கிறான், கொள்ளை கொடுக்கிறான். இரயில் மோட்டார் வண்டி, வானவூர்தி முதலியவற்றால் விபத்துக்குள்ளாகிறான், நீரில் அமிழ்கிறான், தீயில் வேகிறான், உறவினரை யிழந்து தவிக்கிறான், வேலை கிடையாமல் அலமருகிறான், மற்றைப் பிராணிகளாற் கடிபடுகிறான், குற்றஞ் செய்த…
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்து மதம் தன்னுள் பல்வேறு தத்துவப் புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது. மிகச் சரியாக அந்தப் புதையல்களைக் கண்டெடுத்தவர்களைதான் நாம் ஞானிகள் என்று கொண்டாடி வருகிறோம். அற்புதமான சிந்தனைகளை செறிவுமிக்க தத்துவங்களை சாதாரண மக்களும் புரிந்துகொள்வதற்காகவே அவை கதை வடிவில் சொல்லப்பட்டன. பழம் கிடைக்காமல் போன சாதாரண விஷயத்திற்கு யாராவது கோபப்படுவார்களா? என்ன சொல்கிறது சேவற்கொடியோன் கதை? ஞானம் அடைதலின் இரண்டு வழிகளை அந்த நிகழ்வு அடையாளம் காட்டுகிறது. அம்மையும் அப்பனும் இருக்கின்ற இடம் விட்டு நகராது. பிரம்மச்சரியம் காத்து இறையோடு இணைந்து நிற்றல் பிள்ளையார் வழி. உலக விஷயங்களில் உழன்று, உலக விஷயங்களைச் சுற்றி வந்து அனுபவித்து, பின் இறைத்தேடலில் ஞானம் கேட்டு வரும்போது ஒரு மெல்லிய பிணக்கு …
-
- 2 replies
- 1.1k views
-
-
காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா நான் படித்த பின்னரும் சேர்த்து வைத்துக் கொள்ளும் சில புத்தகங்களில் காமத்திலிருந்து கடவுளிற்கு என்ற ரஜனீவ் அவர்களின் நூலும் ஒன்று. எனக்குத் தெரிந்தவரை காமச் சாமியார் என்று 1970 களில் சந்தேகிக்கப்பட்ட “ஓசோ” என்று உலகத்தால் அறியப்பட்ட ரஜனீஜ் அவர்களபை; பற்றிய செய்திகளையோ அன்றில் அவரது கருத்துக்களையோ நான் சிறு வயதிலிருந்தே வாசிப்பதில்லை. ஆனால் பிற்காலத்தில் ஒரு தடவை “ கிருஸ்ணா என்ற மனிதனும் அவனது தந்துவங்களும் ” என்ற தலைப்பில் ரஜனீஜ் எழுதிய ஒரு புத்தகத்தைக் கண்ட போது அதையும் வாசிக்காமல் விட என்னால் முடியவில்லை. காரணம் கிருஸ்ணா என்பவர் பரமார்த்தா என்று தான் எல்லோரும் சித்தரிப்பது வழக்கம். கிரு…
-
- 2 replies
- 1.5k views
-
-
சமயங்கள் துருப்பிடித்த பாத்திரத்தில் நல்ல பாலை ஊற்றலாமா? 'இஸ்லாம்' என்ற அரபுச் சொல்லுக்கு, 'முழுமையான சாந்தி (அமைதி) நிலை' என்பது கருப்பொருள். அனைத்து உயிர்களும்--அனைத்து ஆன்மாக்களும் ஆதிப்பரம்பொருளான இறைவனிடம் இருந்து வந்தவைதாம். இந்த ஆன்மாக்கள் தனித்து நிற்கும் காலமெல்லாம், இது சரியில்லாத குறைநிலை. இவை ஒவ்வொன்றும் தாங்கள் பிரிந்து வந்த மூலப்பரம்பொருளிடம் சேர்ந்து ஐக்கியமானால்தான், ஒவ்வொன்றும்சரியான நிறை நிலையடைந்ததாகும்.இதுதான் சமச்சீர் முழுமை நிலை இதுதான் முழுமையான சாந்தி (" அமைதி'') நிலை--இதற்குப் பெயர்தான் இஸ்லாம். 'ஏ, ஆன்மாவே! நீ திருப்தியுறும் வகையிலும், உன்னை அனுப்பியவன் திருப்தியடையும் விதத்திலும் நீ ஆ ண்டவனிடமே மீண்டும் சேர…
-
- 2 replies
- 2.9k views
-
-
நவராத்திரிக் கொண்டாட்டத்தின் பின்னாலுள்ள எருமை அரசியல்:: வி.இ.குகநாதன் 10/24/2020 இனியொரு... படம் 1 பொதுவாகவே இந்து சமய விழாக்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தொல் பழங்குடிகளை ஆரியர்கள் வெற்றி கொண்ட நிகழ்வுகளாகவே கட்டமைக்கப்பட்டிருக்கும். இதற்காக ஒரு அரக்கன் கற்பிக்கப்பட்டு, அவனது இறப்பினைக் கொண்டாடும் விழாக்களாகவே அவை கட்டமைக்கப்பட்டிருக்கும். இந்த வகையில் மகிசாசூரன் { எருமைத் தலையோன்} வீழ்ச்சியினைக் கொண்டாடும் ஒரு விழாவாகவே நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. `பிரம்மனிடம் வரம் பெற்ற மகிசாசூரன் தேவர்களைத் துன்புறுத்த, இந்திரன் உட்பட்ட தேவர்களும் தோற்கடிக்கப்பட, துர்க்கை மகிசாசூரனைக் கொல்லுகிறாள்` என `தேவி மகாத்மியம்` எனும் புராணநூல் கூறுகின்றத…
-
- 2 replies
- 791 views
-
-
இந்துக்களின் பண்டிகைகள் விரதங்கள் பற்றி சாத்திரிமார்களும் பிராமணர்களும் கணிப்பீட்டாளர்களும் சேர்ந்து முடிவெடுத்து தாயகத்தில் நடைமுறைகப்படுத்துவதற்காக ஒரு பட்டியல் ஒன்றை தாயரித்துள்ளனர் இந்துமாமன்றத்தினர். இதனை நேற்றைய உதயன் பத்திரிகையில் பார்த்தேன். உங்களில் யாராவது இச்செய்தியை இங்கு இணைக்கமுடியும் எனின் இணைத்து விடுங்கள் .நன்றி
-
- 2 replies
- 1.2k views
-
-
பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி தொன்மை மிக்கது. நம் முன்னோர்கள் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன் தாழியினுள் தன் தாத்தா/பாட்டி உடலை வைத்துப் பாதுகாப்பாக அடக்கம் செய்துள்ளனர். அடக்கம் செய்தனர் என்பதை விடப் பாதுகாப்பாக வைத்துள்ளனர் எனலாம். இது மாதிரி எகிப்தின் மக்கள் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்னரே வலிமையான பிரமிடை அமைத்துப் பதப்படுத்தப்பட்ட இறந்த உடலைப் பாதுகாத்து வைத்துள்ளனர். இது மட்டுமல்ல நம் ஊர் தாழிகளிலும் பிரமிடுகளிலும் இறந்தவர்கள் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்துவைத்துள்ளனர். பண்டையகால மக்கள் ஏன் இப்படி இறந்தவர்கள்…
-
- 2 replies
- 737 views
-
-
இன்று நயினை நாகபூசணி அம்மன் ஆலயக் கொடியேற்றம்
-
- 2 replies
- 1.1k views
-
-
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது . நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது, ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று …
-
- 2 replies
- 969 views
-
-
அன்பேசிவம்என்றால் அவன் கையில்ஏன்சூலாயுதம் ? யாராவது விளக்கம் சொல்லுங்களேன்?
-
- 2 replies
- 1.3k views
-
-
ஒரு சாலையில் இரு துறவிகள் ஒரு அட்டையை பிடித்துக்க்கொண்டு நின்று கொண்டிருந்தனர். அந்த அட்டையில், "கவனம், முடிவு வந்துவிட்டது, திரும்பிச் செல்லவும்" என்று எழுதியிருந்தது. அப்போது வேகமாக ஒரு கார் வந்து இவர்கள் அருகில், கிறீச்சிட்டு நின்றது. வண்டி முழுவதும் இளைஞர்கள். வண்டி ஓட்டி வந்த இளைஞன் வெளியே எட்டிப் பார்த்து. உங்களை மாதிரி சாமியார்களுக்கு நல்ல வார்த்தையே சொல்லத் தெரியாதே! எப்பப் பார்த்தாலும் கவனமாக இரு, அப்படிச்செய், இப்படிச்செய், நிதானமாக நட என ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பீங்களே, உங்களோட ஒரே தலைவலி! என்று சொல்லிக்கொண்டே வேகமாக வண்டியை ஸ்டார்ட் செய்து மேலே சென்றான். சில நிமிடங்களில் அந்த வண்டி எதிலோ மோதி எங்கோ விழுந்த சப்தம் கேட்டது. அப்போது முதல் துறவி மற்ற …
-
- 2 replies
- 1.4k views
-
-
இது ஒரு தீபாவளிக் கதை: பாவம் நரகாசுரன் -பேராசிரியர் சி. மௌனகுரு நாளைக்குத் தீபாவளி. அடிக்கடி நண்பர்களும் மாணவர்களும் தொலைபேசியில் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்கள். அனைவரும் மகிழ்ச்சிகரமாக இருகிறார்கள் போலத் தெரிகிறது. கொண்டாட்டம் என்பது மகிழ்ச்சிதானே? மகிழ்ச்சியாக எல்லோரும் இருப்பதைத்தானே நாம் விரும்புகின்றோம். மட்டக்களப்பில் நான் பிறந்த காலங்களில், அதாவது 1940களில், இற்றைக்கு 77 வருடங்களுக்கு முன்னர், தீபாவளியை யாரும் கொண்டாடவில்லை. நாங்களும் வீட்டில் இதைக் கொண்டாடியதாக ஞாபகம் இல்லை. எமக்கு அன்று கொண்டாட்டம், சித்திரை மாதப் புதுவருடம் தான். அன்று தான் எங்கள் வீட்டில் பலகாரம் சுடுவார்கள். முதல் நாளிரவு நான்கைந்து குடும்பங்கள் சேர்ந்து பலகார…
-
- 2 replies
- 1.2k views
-
-
அறை வாங்கினேன் மறு கன்னத்திலும் ஏசுவே இனி என்ன செய்ய??????? (காசி ஆனந்தன் நறுக்குகள்) விசுகு அண்ணா ஏசுநாதர் ""ஒருகன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு என்று கூறியது"" ......ஒருவர் அடிக்கும் போது மறு கன்னத்தை காட்டு என்று இயேசுவை சிலுவையில் அறைந்த மனித இனம் மேலோட்டமாய் புரிந்து கொண்டு பைபிளை கற்பிப்பதால் தான் இவ்வளவு பிரச்னையும் ..................உண்மையில் அவர் கூறிய கருத்தின் ஆழத்தை பார்த்தால் இன்னொருவன் உனக்கு தீங்கு செய்யும்போது அவனுக்கு நீ செய்தது தீங்கு என்று உணர்த்தி அவனை நல்வழியில் நடாத்தி அவனுடன் சமாதானம் செய் என்பதாகும் ..................அவனை பழி வாங்காதே என்னும் அர்த்தத்தையே கூறி நிற்கிறது ................இதையே நான் படித்தேன் .......ஆனால்…
-
- 2 replies
- 960 views
-
-
சிவ கீதை ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியாகிய ஸ்ரீ சிவபெருமான் இராமருக்கு உபதேசித்து அருளியது இந்த சிவ கீதை. கீதை என்பது பாட்டு. கீதைகள் சிவ கீதை, ஸ்ரீ இராம கீதை, பகவத் கீதை, சூர்ய கீதை எனப் பலவாகும். இதில் சிவகீதை பத்ம புராணத்தைச் சேர்ந்தது. இராமர் வனவாசத்தில் சீதையைத் தேடி வருந்திய பொழுது அகத்தியமுனிவரால் இராமருக்கு விரஜா தீட்சை செய்விக்கப் பெற்று, பாசுபத விரதத்தை அனுஷ்டிக்கச் செய்து, அதன் பயனால் சிவபெருமான் பாசுபத அஸ்திரப் படையைத் தந்து, அதனால் இராவணனை வென்று சீதையை மீட்பாய் என்று கூறி, சிவபெருமான் விஸ்வரூப தரிசனம் தந்தருளி, சிவகீதையை உபதேசித்தார். இராமர் பேரானந்த மடைந்தார். இக்கீதையில் பாசுபத விரதத்தால் சிவபெருமானை வழிபடும் முறையும், அனைவரும் …
-
- 2 replies
- 2.4k views
-
-
கம்யூனிசத்தின் தோல்வியை மிகக் குதூகலமாகக் கொண்டாடும் முதலாளித்துவ எழுத்தாளர்கள் கூட ரசியாவிலும் சீனாவிலும் மக்களுக்கு உணவு, உடை, வீடு, சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை என்றோ, அதனால்தான் மக்கள் சோசலிசத்தைக் கைகழுவி விட்டார்கள் என்றோ கூறுவதில்லை. “வெறும் அடிப்படைத் தேவைகளைக் கொண்டு மட்டும் திருப்தியடைவதற்கு மனிதன் என்ன மிருகமா? அமெரிக்கா, ஐரோப்பாவைப் பாருங்கள்…! விதவிதமான உணவு வகைகள், அன்றாடம் மாறும் ரசனைக்கேற்ற உடைகள், புதுப்புது வடிவிலான கட்டிடங்கள், திரைப்படங்கள், கேளிக்கைகள், மதுபானங்கள், குளிர்பானங்கள், விதவிதமான நுகர் பொருட்கள்… என்று வாழ்க்கைத்தரம் பெரிதும் “முன்னேறி’ விட்டது. ரசியா, சீனாவில் இத்தகைய “முன்னேற்றம்’ இல்லை.” “மன…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
தைப்பொங்கல் இலங்கைத் திருநாட்டில் ஆலயம் தோறும் சமய சொற்பொழிவு, நேரடி அஞ்சல், அறநெறி கருத்தரங்கம் போன்றவைகளில் வழங்கி தனது பங்களிப்பை அளித்து மக்களை நன்நெறிப்படுத்துபவர் முதுநிலைப் பேச்சாளரும் பண்டிதையுமான வித்துவாட்டி வசந்தா வைத்தியநாதன். கொழும்பு விவேகானந்தா சபையின் உப தலைவராகவும், கலாசாரத் திணைக்கள ஆலோசகராகவும், இந்து கலைக்களஞ்சிய ஆசிரியராகவும் அகில இலங்கை சமாதான நீதிவானாகவும் பணியாற்றும் அம்மையாரை "சர்வதாரி' புதுவருடப் பிறப்பை முன்னிட்டு வெள்ளவத்தையிலுள்ள கம்பன் கோட்டத்தில் சங்கமத்திற்காக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.வணக்கம் வசந்தா வைத்தியநாதன் அவர்களே நாளை பிறக்கவுள்ள ""சர்வதாரி' புதுவருடப் பிறப்பு பற்றி உங்கள் கருத்து? என்ன என வினவியபோது அவர் தந்த பதில் வரு…
-
- 2 replies
- 1.5k views
-
-
மதம் பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பொதுவுடைமைவாதம்’ என்றும், தந்தை பெரியார் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பெரியாரியம்’ என்றும் கொள்ளப்பட்டு, அவைகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மதம் மதம் பற்றி மார்க்ஸோ, எங்கெல்ஸோ தனித்துப் புத்தகங்கள் எதுவும் வெளியிடவில்லை. ஆனால் அவர்களின் படைப்புக்களில் ஆங்காங்கே மதம் பற்றிய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். லெனின் மதம் பற்றி அதிகமாகப் பேசியும், எழுதியும் இருப்பதால் ‘மதத்தைப் பற்றி’ எனும் தலைப்பில் தமிழில் நூலாக வெளிவந்துள்ளது. ஆனால், தந்தை பெரியார் மதம் குறித்து பல கட்டுரைகள் எழுதியும், பல மேடைகளில் பேசியும் உள்ளதால், அவைகளெல்லாம் தொகுக்கப்பட்டு பல தொகுதிகளாக வெ…
-
- 1 reply
- 807 views
-
-
திரு சத்திய நாராயண் கோயன்கா அவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் பெர்னே நகரில் ஆற்றிய உரையிலிருந்து... நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் விரும்புகிறோம். ஏனெனில், இவற்றுக்குதான் நம் வாழ்வில் குறைபாடு உள்ளது. நாம் அனைவரும் அவ்வப்பொழுது மனக்கலக்கம், எரிச்சல், இணக்கமின்மை, துயரம் ஆகியவற்றை அனுபவிக்கிறோம். அவ்வாறு நாம் நிலையின்றி தவிக்கும்பொழுது, நாம் படும் துயரத்தை நம்மிடம் மட்டும் வைத்துக்கொள்ளாது அவற்றைப் பரப்பவும் செய்கிறோம். துயரப்படுபவரை சுற்றி எங்கும் சமநிலையின்மை சூழ்கிறது. அவரைச் சுற்றி இருப்பவர்களும் கலக்கம் அடைகிறார்கள்; சினம் அடைகிறார்கள். கண்டிப்பாக இது வாழ்வதற்கான சரியான முறை அன்று. ஒருவர் தனக்குள்ளே மன அமைதியுடன் வாழ வேண்டும்; மற்றவ…
-
- 1 reply
- 2.1k views
-
-
]பிள்ளைப்பேறு! மணமக்கள் கண்ணை மூடிக் கொண்டு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடாது. அவசரப்படாமல் 5- வருடத்திற்குப் பிறகு பிள்ளைப் பெற்றுக் கொண்டால் நல்லது. குழந்தையைப் பெற்றுக் கொண்டால் மனைவியைக் கொஞ்சுவதா? குழந்தையைக் கொஞ்சுவதா? பிறகு வாழ்க்கையின் லட்சியம் என்ன இருக்கிறது?அநாவசியமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால் உடம்புக்கு கெடுதல்தான். திருமணமான 8-]வருடத்தில் 10- பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டால் அவர்களை எப்படிப் படிக்க வைக்க முடியும்? வைத்திய வசதி செய்ய முடியும்? வாழ்க்கை நடத்த முடியும்? இதற்காகச் சட்டம் செய்ய முயற்சித்து வருகிறார்கள். கூடிய சீக்கிரம் போஸ்ட் ஆஃபீசில் மாத்திரை விற்கப் போகிறார்கள். கடவுளுக்கு மேலே உத்தரவு போடப்போகிறார்கள். கடவுள் கொடுத்தார்இ எல்லாம் பகவான்…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஞானி ஒருவரை சந்தித்த பணக்காரன் ஒருவன் ” சுவாமி என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. விளை நிலங்களும் ஏராளம் உள்ளது, உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது. எனவே நான் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை எவரிடமிருந்தும் எந்த உதவியையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை?” என பெருமையடித்துக்கொண்டான். புன்சிரிப்போடு கேட்ட ஞானி ” வா சற்று தூரம் நடந்து விட்டு வரலாம் ” என்றார். ” கடுமையான வெயிலில் போகவேண்டுமா? என தயங்கினாலும் ஞானி கூப்பிடும்போது மறுப்பது நன்றாக இருக்காது என்பதால் கிளம்பினான். சிறிது தூரம் சென்றதுமே வெப்பம் தாங்காமல் தவித்த செல்வந்தன் ஏதாவது நிழல் இருந்தால் சற்று ஒதுங்கலாமே என எண்ணி சுற்றும் முற்றும் பார்த்தான். எந்த நிழலும் தென்பட வில்லை ஞானி கேட்டார் ” என்ன தேடு…
-
- 1 reply
- 851 views
-
-
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சிற்ப வேலைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோயில் சிறப்புப் பெற்று விளங்குகிறது. இக் கோயில் அறந்தாங்கியிலிருந்து 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் சிவபெருமான் ஆவுடையார் என்றும், ஆத்மநாதசுவாமி என்றும் அழைக்கப்படுவதால் அவ்வூர் ஆவுடையார் கோயில் என்றே வழங்கலாயிற்று. இவ்வூரைத் தமிழ் இலக்கியங்கள் திருப்பெருந்துறை என்றே குறிப்பிடுகின்றன. மாணிக்கவாசகரான வாதவூரர் இக் கோயிலின் வரலாறு மிகவும் சிறப்புடையதாகும். மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த இரண்டாம் வரகுண பாண்டிய மன்னனிடம் தமிழ் இதிகாசங்கள் கூறுகின்ற நாயன்மார்களில் ஒருவரான வாதவூரர் அமைச்சராக இருந்தபோது மன்னனுக்கு…
-
- 1 reply
- 925 views
-