சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
ஒரு விமர்சனம் உடன்பாடற்றதாக இருக்கலாம். ஆனால் அது தேவையற்றதாக இருக்க முடியாது. மனித உடலி்ல் வலியின் செயற்பாட்டை இது ஒத்திருக்கிறது. அதாவது இது நலமற்ற நிலையின் மீது கவனத்தைக் குவிக்கச் செய்கிறது. என்று விமசனம் பற்றி Winston Churchill கூறுகிறார். (Criticism may not be agreeable, but it is necessary. It fulfils the same function as pain in the human body. It calls attention to an unhealthy state of things. ― Winston Churchill) சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல் விமர்சனமின்மையே என்கிறார்.1986 இல் இலக்கியத்திற்காக நோபல் பரிசுபெற்ற நைஜீரிய நாட்டு எழுத்தாளும் நாடகசாரியருமான Wole Soyinka. (The greatest threat to freedom is the absence of criticism. ― Wole Soyinka) எமது சமுதாயம…
-
- 9 replies
- 1.4k views
-
-
புலம்பெயர் நாட்டில் அல்லது இலங்கையில் ஒரு அறக்கட்டளை அல்லது தொண்டுநிறுவனம் ஆரம்பிக்கவேண்டும் என்றால் யாரிடம் அனுமதி பெறவேண்டும்? அதிலுள்ள சட்டச்சிக்கல்கள் என்ன? மேலதிக விபரங்கள் தேவை தெரிந்தவர்கள் தயவுசெய்து கூறுங்கள்.
-
- 9 replies
- 1.7k views
-
-
கலாச்சாரமும் கலாச்சார சீரழிவும்!! “டேட்டிங்”கலாசாரம் மெல்ல மெல்ல கவனத்துடன் கையாளப்படுவது கேள்விக் குறியாகிவிட்டது.உடல் ரீதியான உறவுக்காகதானே டேட்டிங்?பெண்களே உஷார்..எப்போதும் விழித்திருங்க!எல்லா ஆண்களையுமே சந்தேகிப்பதையும் கைவிடுங்கள்.அறிவுரை சொல்லும்போது இதமா,பதமா சொல்லுங்கள்.”டேட்டிங்”இச்சொல் இன்று மேற்கத்திய நாடு மட்டுமின்றி இந்தியாவிலும் ஏன் இலங்கையிலும் சகஜமாகிவிட்டது.முன்பின் தெரியாத ஒருவருடன் செல்வது டேட்டிங் கிடையாது.நல்ல நண்பர்களாகப் பழகிய பின்னர் ஆண் நண்பரின் வற்புறுத்தலின்பேரில் அல்லது இருவரும் சம்மதித்து செல்வது டேட்டிங்.இப்படி செல்லும்போது கண்ணியப் பேச்சுடன் கட்டுப்பாட்டுக்கு மீறிய செயல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.டேட்டிங் என்பது முட்…
-
- 9 replies
- 1.7k views
-
-
தங்களது தந்தையர்கள் தோற்றத்தில் உள்ள வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் வீழ்ந்துவிடுகின்றனர் அல்லது விரும்பி நட்பு வைத்திருப்பதை பலரும் கூறுவதை கேட்டிருக்கலாம். அவ்வளவு ஏன் நமது நடிகைகள் உள்ளிட்ட பல பெண் பிரபலங்கள் தங்களைவிட மிக அதிக வயதான - அதாவது ஏறக்குறைய தங்களது தந்தை வயதையொத்த - ஆண்களை திருமணம் செய்துகொண்டுள்ளதையே இதற்கு நல்ல உதாரணமாக கூறலாம். நம்ம கோலிவுட்டில் கலக்கி, பின்னர் பாலிவுட் ரசிகர்களின்கனவு கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி, தன்னைவிட மிக அதிக வயதுடைய போனி கபூரை திருமணம் செய்தது, பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்த பத்மா லட்சுமி என பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மேலும் இந்தியாவில் மட்டுமல்லாது பல வெளிநாட்டு தலைவர்களின் வாழ்க்கையை ப…
-
- 9 replies
- 2.4k views
-
-
உயிரான உறவு... மனைவியுடன் சுமுகமான உறவு எப்போதும் வேண்டுமென விரும்பினால், முதலில் அவரை உங்களுடைய மனைவி என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதை நிறுத்துங்கள். அவரை இன்னொரு மனித உயிராகப் பாருங்கள். இப்படிப் பார்த்தால் பிறகு அங்கே எந்தப் பிரச்சனையும் இருக்காது. ‘இவள் என் மனைவி’ என்று நீங்கள் பார்க்கத் துவங்கும் கணத்திலேயே எங்கோ அவள் உங்களின் சொத்து என்றாகிவிடுகிறது. உங்களுக்குச் சொந்தமான சொத்து என்றவுடனேயே உங்களது அணுகுமுறை முற்றிலும் வேறுவிதமாக ஆகிவிடுகிறது. ஒருவரை நீங்கள் உங்களுடைய உரிமைப் பொருளாகக் குறைத்துவிடும் கணத்திலேயே அவருடன் இணைந்து வாழ்வதில் உள்ள அழகு மறைந்துவிடுகிறது. வேறு யாரோ ஒருவருக்கு அவள் அற்புதமானவளாகத் தெரியலாம். ஆனால் உங்கள் கண்களுக்கு வேறுவிதமாகத்தா…
-
- 9 replies
- 1k views
-
-
என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்? 1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். 2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும் 3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய் 4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும் 5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம். 6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம்…
-
- 9 replies
- 2.5k views
-
-
ஓப்பன் பண்ணா... "எக்ஸ்கியூஸ்மி சார், உள்ளே வரலாமா?" "யெஸ்!" "குட் மார்னிங் சார். என் பெயர் ஜீவா!" "உட்காருங்க!" "தேங்க் யூ சார்!" "ம்... உங்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க..." "நான்..." கட்... கட்... கட்! நண்பர்களே... நேர்முகத் தேர்வு இப்படித்தான் இருக்கும். கேட்ட கேள்விக்கு ஜாலியாகப் பதில் சொல்லிவிட்டு வேலை வாங்கி விடலாம் என்று நினைத்தால்... ஸாரி! உலகம் உங்களை அத்தனை சுலபமாக ஏற்றுக் கொள்ளாது. இப்போது அதே ஜீவா. வேறு கம்பெனி. "எக்ஸ்கியூஸ்மி சார்... உள்ளே வரலாமா?" "யார் நீ... இங்கே எதற்காக வந்தாய்?" "சார்... இன்டர்வியூ..." "என்ன இன்டர்வியூ... எதற்காக உனக்கு வேலை கொடுக்க வேண்டும்?" "சார்... அது…
-
- 9 replies
- 3.5k views
-
-
`அவரது செயலை சகிக்க முடியாமல் தயக்கத்தோடு அம்மாவிடம் சொன்னேன்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES 'சித்தப்பா தினமும் வீட்டுக்கு வருவார். அனைவரிடமும் கலகலப்பாக சிரித்துப் பேசுவார், தின்பண்டங்கள் வாங்கிவருவார். அவரை எல்லோருக்கும் பிடித்தாலும் எனக்கு அவரை ஒருதுளி கூட பிடிக்காது.' 'சித்தப்பா வீட்டுக்கு வந்ததும் அவரது மடியில் என்னை உட்கார வைத்து தொட்டுத்தொட்டு பேசுவார். மீசையால் என் முகத்தில் உரசுவார். அவர் மடியில் இருந்து எழுந்து ஓடிவிடலாம் என்று தவிப்பேன். அவரது கன்னத்தில் பளார் பளார் என்று அறைய வேண்டும், நகங்களால் பிறாண்ட வேண்டும் என்று உத்வேகம் உந்தும்.' இதைச் சொல்லும் 23 வயது அனாமிகாவின் முகத்தில் வேதனையும், கண்ணில் சீற்றமும் பொங்குகிறது. ஏழு அல…
-
- 9 replies
- 4.4k views
-
-
11.11.11 என்ற நாளின் சிறப்புப் பற்றி விஞ்ஞான ரீதியாக என்னவெல்லாம் பேசலாம், கதை தயாரிக்கலாம் என்றெல்லாம் டிவி சேனல்கள் இதுவரையில் யோசிக்கவில்லை.. அன்றைய தினத்தில் அவதரிக்கப் போகும் அல்லது கட்டாயமாக வெளிக்கொணரப்பட இருக்கும் ஜூனியர் ஐஸ்வர்யாராய் அல்லது ஜூனியர் அபிஷேக்பச்சன் பற்றித்தான் அவர்களுக்குக் கவலை..! தடுக்கி விழுந்த செய்தி வந்தாலே சுடு செய்தியாகப் போட்டு இந்தியாவையே பயமுறுத்தும் செய்தி ஸ்தாபனங்கள், இந்த நல்ல நாளை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன..? குண்டி கழுவ தண்ணீர் இல்லாமல் அலையும் இந்தியனை பற்றிக் கவலைப்படாத சமூகத்தில் இதுவெல்லாம் சகஜம்தானே..! மும்பை செவன்ஹில்ஸ் மருத்துவமனையின் 5-வது மாடியில் நாளை நடக்கவிருக்கும் ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிற…
-
- 9 replies
- 2.6k views
-
-
[media=]http://youtu.be/XvWGcy72ko0
-
- 9 replies
- 993 views
- 1 follower
-
-
அனைவருக்கும் அன்பார்ந்த உலக அன்னையர் தின வாழ்த்துக்கள்! வேரில்லாத மரம் போல் என்னை நீ பூமியில் நட்டாயே உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லித் தந்தாயே பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழிநடத்திச் சென்றாயே உனக்கே ஓர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்!
-
- 9 replies
- 5.7k views
-
-
வணக்கம், கொஞ்ச நாளாக எனக்கு ஒரு சந்தேகம்.ஊரில படிக்காத ஆட்கள் இங்கே புலத்தில் சாதரண காசாளாராக வங்கி, சுப்பர் மார்கட்,பெற்றோல் செட்களில் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறி, மனேஜர் அல்லது அதற்கு மேலான பதவியை அடைகிறார்கள்.இது எங்கட ஆட்கள் மட்டுமல்ல,ஒரு நாட்டில் இருந்து பிழைப்பதற்காக வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு வந்து விடா முயற்சியால முன்னுக்கு வரும் சிலரைப் பற்றித் தான் கதைக்கிறேன் இங்கு நான் அவர்களது கல்வித் தகுதியைப் பற்றி கதைக்க வரவில்லை.என்னுடைய கேள்வி என்ன என்டால் இதே இவர்கள் எங்கட[தங்கட] ஊரில் இருந்து இருந்தால் இவர்களால் இந்த நிலைக்கு வந்து இருக்க முடியுமா?...உதாரணத்திற்கு இலங்கையில் ஒரு வங்கியில் மனேஜராக வேண்டுமானால் அதற்கு என கல்வித் தகுதிகள் இருக்க வேண்டும் அல்…
-
- 9 replies
- 1.2k views
-
-
நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விடுங்கள். எந்த விஷயத்தையும், பிரச்னையையும் நாசூக்காகக் கையாளுங்கள். விட்டுக் கொடுங்கள். சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத் தான் ஆக வேண்டும் என்று உணருங்கள். நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். மற்றவர்களை விட உங்களையே எப்பொழுதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள். எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம்…
-
- 9 replies
- 1.9k views
-
-
இதோ பத்து ஐடியாக்கள்! சும்மா நலம் விசாரிப்பதற்காக போன் செய்வது என்பது கூடவே கூடாது. முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே போனை பயன்படுத்த வேண்டும். அதேபோல எதிர்முனையில் பேசுபவர், ‘‘அப்புறம் வேற என்ன விசேஷம்?’’ என்று ஆரம்பித்தால், வம்புப் பேச்சுக்குத் தயாராகிறார் என்பதை உணர்ந்து உஷாராகிவிடவேண்டும். சதாசர்வ காலமும் செல்போனிலேயே பேசாமல் வாய்ப்புக் கிடைக்கும்போது காயின் போனில் பேசுவது என்று முடிவெடுங்கள். ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு ரூபாய் காயினைப் போடும் போது காசு செலவழிவதைக் கண்ணெதிரே பார்க்கமுடியும். தானாகவே பேச்சு குறையும். காலப்போக்கில் செல்போனிலும் சிக்கனமாகப் பேசும் பழக்கம் வந்துவிடும். எல்லா செல்போன் நிறுவனங்களுமே குறிப்பிட்ட நேரத்தில் பேசினால், …
-
- 9 replies
- 2.1k views
-
-
காமக் கட்டுப்பாடு 14 காரட் தங்கத்தை விட உயர்ந்த தர தங்கத்தை நகை செய்து அணியாதே என்கிறது தங்கக் கட்டுப்பாட்டு விதி. அதிகமான பிள்ளைகளைப் பெறாதே என்கிறது குடும்பக் கட்டுப்பாட்டு விதி. 30 ஏக்கருக்கு மேல் விளைநிலம் வைத்துக் கொள்ளாதே என்கிறது உச்ச வரம்புக் கட்டுப்பாட்டு விதி. இன்னும்பல கட்டுப்பாட்டு விதிகளிருக்கலாம். அவ்விதிகளை மீறுபவருக்குத் தண்டனையும் உண்டு. அவற்றைச் சில பல அரசியற் கட்சிகளும் ஆதரிக்கின்றன. காமக்கட்டுப்பாடு என்பதொன்று. அதுவே மக்கள் மக்களராய் வாழ உதவுது, ஆகலின் அக்கட்டுப்பாடு ஏனைய கட்டுப்பாடுகளை விட மிகவும் அவசியமானது. காமம் கட்டுப்படுவதா? அன்றா? சாத்தன் ஒரு யெளவன புருஷன். அவனது குடும்பத்தில் அவனுக்குத் தங்கைமார், தமக்கைமார், புத்திர…
-
- 9 replies
- 2.6k views
-
-
"மே" தினம். தினமும்... 16, 18 மணித்தியாலம் என்று, முழுக்க கடுமையாக உழைக்கும், தொழிலாளர்களுக்காக.... போராடி.. எட்டு மணித்தியால வேலை செய்வதை உறுதிப்படுத்திய தினம் இது. இந்தப் போராட்டம்... ஒரு கம்யூனிச நாட்டில் நடந்திருந்தால், ஆச்சரியப் பட்டிருக்க மாட்டேன். இது, அமெரிக்காவில் நடந்தது. மருத்துவர், தாதியர்கள், தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் போன்றவர்களுக்கு லீவு இல்லை. சரித்திரத்தை கதைத்தால்.... உங்களுக்கு, பிடிக்காது என்று எனக்கு வடிவாய்த் தெரியும். ஆன படியால்... நிகழ்காலத்துக்கு வருவோம். நாளைக்கு யாருக்கு லீவு, யார் வேலைக்குப் போக வேணும்? என்ன காரணத்தால்... வேலைக்குப் போக வேண்டும், என்பதை.... கூறுங்களேன்.
-
- 9 replies
- 916 views
-
-
தமிழ் பிராமணியத்தின் மனசாட்சிக்கு - சுப. சோமசுந்தரம் இந்தத் தலைப்பில் என்னிடம் உள்ள கருத்துக்கள் பல காலமாகவே என்னுள் உறைபவையாயினும், இவற்றை எழுத்தில் பதிவு செய்யுமுன் சிறிது யோசித்தேன்; சற்றே தயங்கினேன். அதற்குக் காரணங்கள் சிலவுண்டு. எனக்கு வாய்த்த சிறந்த பிராமண நண்பர்கள், பிராமணர்கள் பேசுவதற்கும் பழகுவதற்கும் பொதுவாக இனிமையானவர்கள் என்னும் என் கருத்து, அவர்களோடு உணர்வுப்பூர்வமாக நான் ஒன்றிய நினைவுகள் – இவ்வாறு அடுக்கலாம். இவற்றையெல்லாம் மீறி எங்கோ பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற உந்துதல். முடிவெடுத்த பின் எழுதித்தானே ஆக வேண்டும் ! பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகத்திடமிருந்து அநேகமாக அனைத்து விடயங்களிலும் அவர்கள் வேறுப…
-
- 9 replies
- 3.7k views
- 1 follower
-
-
நாங்கள் அனைவரும் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை காணப்படாவிடினும் பிறப்பின் அடிப்படையில் ஏதோ மதத்துடன் அல்லது மதங்களுடன் மற்றும் சாமியார்களுடன் எங்கள் வாழ்க்கையில் இணைக்கப் பட்டுள்ளோம். ஒவ்வொரு சாமியார்களினதும் உண்மையான உள்நோக்கங்கள் எவை என்பதை நாம் கண்டறிவது கடினம். ஆயினும், மக்களை வசீகரிப்பதற்காகவும், அவர்களை தொடர்ச்சியாக தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதற்காகவும் வெவ்வேறு சாமியார்கள் வெவ்வேறு விதமான நுட்பங்களை கையாள்கின்றார்கள். இவற்றில் முக்கியமான ஒன்று மீண்டும் மீண்டும் தமது உரைகளில் – பிரச்சாரங்களில் சாவு – நோய் – தோல்வி – பிரச்சனை – வேதனையின் பெயரால் மக்களை மூளைச்சலவை செய்வதாகும். ‘மூளைச்சலவை எனும் உத்தியை அரசியல்வாதிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும…
-
- 8 replies
- 1.3k views
-
-
'அந்தாளோட தொல்லை தாங்கலடா' - அப்பா குறித்து அன்பாக நண்பர்களிடம் அடிக்கடி கூறியதுண்டு! இப்படிச் சொல்லாத பையன்கள் இருக்கிறார்களா? அப்பரின் தொல்லை தாங்கமுடியவில்லை என்ற மகன்களின் புலம்பலும், என் பேச்சை மதிக்கிறானில்லை என்ற அப்பாக்களின் ஆதங்கங்களும் கலந்த புகார்கள் அம்மாக்களின் பார்வைக்கு வருவதை பல வீடுகளில் பார்க்கலாம்! சின்னவயதில் அப்பாவின் நெஞ்சில் தூங்கி, அப்பா தூக்கிக்கொண்டு நடந்து செல்கையில் தோளில் முகம்புதைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த நாட்கள் நினைவுகளின் இடுக்குகளில் எங்கோ ஒளிந்திருந்து எப்போதாவது எட்டிப்பார்க்கும்! அப்பாக்களின் அட்வைஸ்களை சிறுவயது முதல் கேட்டுக் கொண்டிருந்ததாலோ என்னவோ அப்பா எதையும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை,…
-
- 8 replies
- 1.8k views
-
-
பொதுவாகவே 'பாசம்" அப்பிடி என்றால்........எல்லோருக்கும் நினைவில் வருவது அம்மா..............ஆனால்....தன்னுடைய பாசங்களை எல்லாம் நெஞ்ஞங்களில் சுமந்து குடும்பத்துக்காக ஒடி ஒடி உழைத்து சற்று கண்டிப்பு...சற்று பாசம்..என்று குடும்பத்தை கொண்டு இயக்குவது தந்தை என்னும் இந்த மாபெரும் உறவு......தன்னுடைய பாசத்தை நேரடியாக காட்டா விட்டாலும் மறைமுகமாக பிள்ளைக்கு ஒன்றென்றால்..துடிக்கும் அந்த துடிப்பு தந்தைக்கே உரித்தான ஒன்று.................. அந்த வகையில்...பல அம்மா சென்டிமென்ட் திரைப்படங்கள் தமிழ் திரையுலகை ஆண்டிருந்தாலும்...தந்தையினுடைய பாசத்தை சொல்லும்...திரைப்படமாக வெளிவந்தது..1987 இல் வெளிவந்..'அன்புள்ள அப்பா" திரைப்படம்......இதில் அப்பாவாக சிவாஜியும்...மகளாக..நதியாவும் நடித்திர…
-
- 8 replies
- 2.3k views
-
-
திருமணத்திற்கு பின் மினி ஸ்கர்ட் அணியக்கூடாதா? திருமணத்திற்கு பிறகு எனக்கு பிடித்த ஆடைகளை அணிவதில் பல பிரச்சனைகள்.எனக்கு இல்லை; என்னை சுற்றியுள்ள சமூகத்திற்கு. படத்தின் காப்புரிமைHELEN CAROLIN என் சேலை முந்தானையின் வண்ணம்.. என் குட்டைபாவாடையின் நீளம்.. என் சுடிதாரின் கை அல்லது ஸ்லீவ் இல்லாத மாதிரி.. என் சட்டையின் பாக்கெட்.. நான் உடுத்தும் உடைகளை வைத்து என்னை ஏன் எடைபோடுகிறீர்கள்? எனக்கு பிடித்தவற்றை அணிவது உங்கள் கண்களுக்கு ஏன் பிடிப்பதில்லை? என அவர்களை கேட்கவேண்டும் போல இருக்கும்.. ஆனால் எப்போதும் போல மௌனம்தான் என் பதில்.. படத்தின் காப்புரிமைHELEN CAROLINA நான் பாலூட்டும் தாயாக இருப்பதால், வீட்டில் இருக்கும…
-
- 8 replies
- 1.8k views
-
-
முதற்கண் பாசம் உள்ள யாழ்கள் உறவுகளுக்கு நீண்ட நாட்களின்பின் என் வணக்கம் . உறவுகளின் இன்ப துன்பங்களில் உங்கள் ஆறுதல் வார்த்தைகள் சிறப்பு நிகழ்வுகள் பிறந்த நாள் மணிவிழா நாட்களில் உங்கள் ப வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மிகவும் சிறந்தவை . வேறு எந்த இணைய தளத்திலும் இல்லாத் ஒரு சிறந்த் பண்பு நம் யாழ் களத்தில் உண்டு. என் தற்போதைய வாழ்வில் எழுத் நேரம் இல்லத நிலைமை உங்களுக்குபுரியும் ஆனாலும் இடையில் நேரம் கிடைத்தால் ஒருபத்து நிமிடமாவது வாசிக்க ( சுவாசிக்க) வருவதுண்டு... என் நண்பி கோடைவிடுமுறைக்கு தாயகம் செல்ல உள்ளார் ...அவரது தயார் தனது நோய் வாய்ப்பட்ட மூத்தத் சகோதரனை பார்க்க விரும்புகிறார் . தன்னையும் யும் அழைத்து செல்லும்படி மன்றாட்ட்மாக் கேட்கிறார்…
-
- 8 replies
- 4.1k views
-
-
அந்த ஆசிரியர்கள் வாரத்தின் தொடக்கத்தில் கூட அப்படி நடக்கும் என்று யோசித்து இருக்கமாட்டார்கள்... போலிஸ்காரர் இருக்கும் பக்கம் தலைவைத்து கூட படுத்து இருக்கமாட்டார்கள்.. மகாநதி படம் பார்த்து விட்டு சிறையில் இவ்வளவு கொடுமைகள் நடுக்குமா? ஜென்மத்துக்கு சிறைபக்கம் போகவே கூடாது, அந்த பக்கம் தலைவைத்து படுக்க கூட கூடாது என்று வைராக்கியமாக வாழ்ந்து இருக்க வேண்டும்..... ஆனால் எல்லாம் சடுதியில் நடந்து முடிந்து விட்டது... காரணம் படித்தவர்களுக்கு புத்தி இருக்காது என்பதற்கு நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சி உதாரணம்... சென்னை எம்ஜியார் ஜானகி கல்லூரியில் படித்த மாணவி திவ்யாவின் தற்கொலையால் நான்கு ஆசிரியர்கள் வாழ்க்கையையே அடியோடு மாற்றிவிட்டது... இவர்கள் வாழ்க்கை …
-
- 8 replies
- 2.7k views
-
-
மதிகெட்ட அறிவுரையும் துதிபாடும் பெண்ணி(ன)யமும். - சாந்தி ரமேஷ் வவுனியன் - 25.04.06 அன்று கொழும்பு நகரில் இராணுவ தலைமையகத்தின் குண்டு வெடிப்புத் தொடர்பான உடனடி ஊகங்களும் , அறிவித்தல்களும் உலக ஊடகங்களை விட எங்களது தமிழ் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட ஒன்றாகும். அரச தரப்பின் செய்தியை அப்படியே பிரதி பண்ணி அருகில் நின்று பார்த்தது போல் சம்பந்தப்பட்ட தாக்குதலை வவுனியாவைச்சேர்ந்த அனோஜா குகராஜா என்ற தற்கொலைக் குண்டுதாரியால் நிகழ்த்தப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. அந்த இளம்பெண் கர்ப்பிணியாயிருந்தார் என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்க புலத்தில் உள்ள பெண்ணிலைவாதிகளை தங்களைத்தாங்களே அழைத்துக் கொள்ளும் சிறு கும்பலும் விழுந்தடித்துக் கொண்டு மாரடிக்க தயாராகியது. . நன…
-
- 8 replies
- 2.5k views
-
-
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது 2. ஏதோ சொல்ல வந்து பின் 'அதை விடுங்க' என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணப;படுத்துவது. 3. 'அன்பு' என்ற பெயரில் ஆயிரம் 'போன்கால்' பண்ணி நச்சரிப்பது 4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது 5. 'இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க' என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது 6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாப்பிடாமல் காத்து கொண்டிருப்பது . 7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது 8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது 9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் 'ரூல்ஸ்' போடுவது …
-
- 8 replies
- 1.8k views
- 1 follower
-