கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது. எழுச்சி கொள்க கவிஞர்களே! தாயகமூச்சு எமக்கில்லையா? ஆயிரம் தடைகளை ஆரும் போட்டாலென்ன? உன்னிப் பெருமூச்செடுத்து உறவணைக்க எழுந்திடுக. நோயுண்ணும் உடல் நலித்தும், பேயுண்ணும் உணர்வொழித்தும், தாய் நிலத்தின் வேதனையை - எம் தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது என வரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா? கூடாது... கூடவே கூடாது. முற்றத்து மணற்பரப்பில் முழுமதியின் எழிலொளியில், சுற்றம் சூழப் புற்பாய் போட்டமர்ந்து பேசி, அடிவளவு மூலையிலே படர்ந்த முல்லைச் சொதி மணக்கும் கவளச் சோறெண்ணி, ஏக்கங்களை மட்டுமே எமதாக்கி, பனிநிலங்களில் உயிர் தொய்ய வாழ்கிறோமே.... விட்டுவிடுவோமா? தாய்நிலத்தி…
-
- 8 replies
- 1.4k views
-
-
விட்டம் வெறித்து மருத்துவர் கையில் இருக்கையில்.. பத்து வயதில் தாமிரபரணியில் பக்கத்து வீட்டு குமரேசனது போலிருந்த ஞாபகம்.. பதிமூன்றில் கண்ணாடி முன் அறியாத மனதில் லேசாய் வந்த கலவரம் ஞாபகம்.. பதினைந்து வயதில் பெருமூச்சோடு காகிதம் அடைத்தது இன்னும் ஞாபகம்.. இருபதில் ஊர்முன்னே நிமிர்ந்து நடக்க செருக்கு தந்த ஞாபகம்.. இருபத்தேழில் காதல் பொழுதில் கணவர் கண்பட்டு வெட்கமின்னும் ஞாபகம்.. முப்பதில் செல்ல மகள் பசி தீர்த்த திருப்தியும் ஞாபகம்.. நாப்பது வயதில் தட்டுப்பட்ட சிறு கட்டி தந்த கேள்விக்குறிகள் ஞாபகம்.. எல்லாம் கடந்து எனை அழித்து அவ…
-
- 17 replies
- 1.5k views
-
-
நாங்கள் நடந்தது…….! நாங்கள் நடந்தது உங்கள் வாழ்வு தலைநிமிர தலைநிமிர்வுக்காகத் தலைதந்து களம் வீழ்ந்தோம் வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்து நிமிர்வதற்கே நிமிர்வதற்காய் நிமிருங்கள் நீதிக்காய் துணியுங்கள் துணிவுடைத்தோன் தலைவனவன் சொல்லியதை மறக்காதீர் மறக்காது மதிநுட்பம் தாங்கியோராய் மதிகொடெழுந்தலே எழுச்சியிலே பேரெழுச்சி காணுகின்ற நிலை தோன்றும் தோற்றத்தின் தொடராக மாற்றங்கள் நிகழ்ந்தேறும் ஏற்றமதை காண்பதற்கு எங்களுக்குள் எழுச்சிகொள்வோம் தன்னெழுச்சி கொள்ளாது மண்னெழுச்சி கொள்ளாது கொள்கையிலே உறுதிகொண்டோர் தோற்றதில்லை உலகினிலே …
-
- 1 reply
- 1.7k views
-
-
வண்டுகள் தேன் எடுப்பதுர்க்கு பூவை சுற்றி வருவது போல் நானும் உன்னை சுற்றி வருகுறேன் உன் இதையத்தில் குடி கொள்வதுர்க்காய்
-
- 0 replies
- 789 views
-
-
எங்களுக்கும் காதலிக்கு கவிதை எழுத வருமல்ல அமேரிக்கன் ஜீண்ஸ் போட்டு பொட்டு வைக்காமல் கியூட் பிகர் போல பூனை நடையில் நீ வரவேண்டும் அந்த அழகை அடுத்த தெரு பிகரும் பெற வேண்டும் பசுபிக் கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே பெண்குமரி நீயும் நானும் ஆடுவோம் அங்கு செய்யாத செயல் எல்லாம் செய்வோம் சென்ட் பூசுவோம் கிங்கிலிஸ் பேசுவோம் ஜாலியா யோக்கிங் போவோம் நாம் ஜாலியா ஆடுவோம்
-
- 15 replies
- 1.1k views
-
-
கண்ணுக்குள்ள நிக்கிறியே -என்ன (னை) விண்னுக்குள்ள தள்ளுறியே, அடியே...... எ எண்ணத்தில தீய வைக்கிறியே........ செவ்விதழை மடிக்கிறியே-என்ன(னை) செவ்வாயில புதைக்கிறியே, கொடியே.... ஏஞ்சிந்தையில புது சிந்துபாடுறியே............... ஒத்திவச்ச காணிய கடக்கயில பத்தியெளும் பெருமூச்சு-உன்ன பாக்கையில தோணுதடி! பொத்திவச்ச ஆசையெல்லாம் முத்திவந்து முனுங்குதடி!! நெத்தி சுருக்கி நீ பாக்கையில நெட்டுருகி போகுதடி! எட்டுவைச்சு பாதகத்தி நீ நடக்கையிலயென் சத்திகெட்டுப்போகுதடி!! மனச சுத்தி அடிக்கிறியே மலைய சுருக்கி சுமக்கிறியே....... கனவ அள்ளி தெளிக்கிறியே கையளவிடை மறைக்கிறியே....... ஊன உருக்கி -புது உருவம் திரட்டுறியே கானக்குயிலாய் உருவேத்திறியே........... …
-
- 4 replies
- 740 views
-
-
மறந்தும் வலிக்கும் நினைவு மறைந்தும் தெரியும் தழும்பு அணைந்தும் எரியும் அகல் காய்ந்தும் தளிர்க்கும் காம்பு ஓய்ந்தும் வீசும் காற்று உறைந்தும் மீளும் உணர்வு அடங்கியும் எழும் ஆன்மா இறந்தும் வாழும் உயிர் எரியும் அகலில் வலிகள் விலக தளிர்க்கும் காம்பால் தழும்பு மறைய வீசும் காற்று உணர்வை மீட்க எழும்பும் ஆன்மா வாழும் இனி....
-
- 9 replies
- 763 views
-
-
செத்தும் காத்த என் அம்மாவின் பிறந்தநாள் நினைவில் . அம்மா பிறந்தது 1917 உடுவில் மகளிர் கல்லூரி வரவேற்ப்பில் மகத்மா காந்திக்கு மாலை சூடி ஆசி பெற்றது நவம்பர் 2017 (இறக்கிற வரைக்கும் காந்திய செல்வாகுடனேயே வாழ்ந்தார், விடுதலையும் சமூக சமத்துவமும் கவிதையும் அவரிடமிருந்து கற்றதுதான்.) . 2013 நவம்பரில் அம்மாவின் சமாதிக்குச் சென்றபோது கோத்தபாய ராசபக்சவின் விசேட உத்தரவின் பேரில் என்னைக் கைதுசெய்ய இராணுவம் எங்கள் பண்ணைக்கும் வன்னிவளான்குழம் கோவிலுக்கும் நடுவிலுள்ள காட்டுக்குள் காத்திருந்தனர், நல்ல வேலையாக நான் கார் சார்தியிடம் ”40 வருடமாக ஒவ்வொரு தடவை பண்ணைக்கு வரும்போதும் வன்னிவிளான்குளம் அம்மன் கோவிலில் கற்பூரம் கொழுத்திவிட்டு வரும்படி சொல்லுவார். 40 வருடங்களாக நான…
-
- 6 replies
- 1.3k views
-
-
கிழவியும் அவள் புருஷனும் - கவிதை கவிதை: கார்த்திக் நேத்தா, ஓவியம்: ஹாசிப்கான் மலை மாடு சாய்வதாய் வெளியில் சரிகிறது இரவு. முதுகில் ஒட்டிய மணல் உதிர்வது போல மழை விழுந்து கொண்டிருந்தது. அந்தி பத்திக் கொண்டு போகும் வெள்ளாட்டங்குட்டியாய் நிலவு. தூரத்துக் குடிசையில் விளக்கு விடும் எச்சில் முட்டையாக சுடர். சுடரின் விரிந்த கூந்தலாக சுற்றிலும் அலையும் இருள். பரதேசம் போன புருசனுக்காக பணியாரம் சுட்டு வைத்து வாசலில் செத்தக் குந்துகிறாள் கம்பூணிக் கிழவி. குளிரில் நடுங்கும் ஆட்டு வால் போல அவள் உதடு எதையோ முணுமுணுத்தது. சாராய கவிச்சியோடு வந்து சேர்கிறான் அவளின் புருஷன். கிண்ணியில் பணியாரம் அடுக்கித் தந்து விட்…
-
- 0 replies
- 1.9k views
-
-
கவிஞர்வை வைரமுத்து மரங்கள் குறித்து பாடிய கவிதை மரங்களை பாடுவேன்வாரும் வள்ளுவரேமக்கட்பன்பில்லாதவரை என்ன சொன்னீர்,மரம் என்றுமரமென்றால் அவ்வளவு மட்டமா.!!வணக்கம் ஒளவையேநீட்டோலை வாசியான் யாரென்றீர்மரமென்றுமரமென்றால் அத்தனை இழிவா !!பக்கத்தில் யாரவர் பாரதிதானேபாஞ்சாலி மீட்காத பாமரரை என்னவென்றீர்நெத்தை மரங்கள் என்றீர்மரங்கள் என்றால் அவ்வளவு கேவலமா !!மரம் !!!!!!சிருஷ்டியில் ஒரு சித்திரம்பூமியின் ஆச்சரிய குறிநினைக்க நினைக்க நெஞ்சூறும் அனுபவம்.விண்மீனுக்குத் தூண்டில் போடும் கிளைகள்சிரிப்பை ஊற்றிவைத்த இலைகள்உயிர் ஒழுகும் மலர்கள்மனிதன்தரா ஞானம் மரம் தருமெனக்குமனிதன் தோன்றும் முன் மரம் தோன்றிற்றுமரம் நமக்கு அண்ணன்அண்ணனை பழி…
-
- 1 reply
- 4.7k views
-
-
பாடிப் பறந்த குயில் மாஞ்சோலையெங்கும் மாங்கனிகள் தோரணம் மரக்கிளைகள் மத்தியிலே மாங்கிளிகள் மோகனம்; தூங்கும் பழங்களிலே அணில்களின் மோகம்; துள்ளிப் பாய்வதிலே மந்திகளின் ஆர்வம் சோலையின் மறைவினிலே கோகிலத்தின் ராகம் சொற்கள் வந்த திசையினிலே அதைக் காணாத சோகம் நேரில் வந்து கூவுவதற்கு இதற்கேனோ தயக்கம் நெடுநாளாய் இதுபற்றி என் மனதிலே ஏக்கம் ஆவலுடன் காத்திருந்தேன் அடுத்த ஓசை கேட்க அலறிப் பறந்ததுவே காக்கையொன்று நுழைய தாழாத சோகம் என்னை வந்து தாக்க தவித்ததே மனம் பழசையெண்ணி ஏங்கி வேலைத் தலமொன்றில் வேலைதேடிப் போக வேலையின்றி இருந்தவரோ நீ யாரென்று கேட்க பயத்துடனே பதில்சொல்லி பதுமையாய் நிற்க பார்த்திருந்த மங்கையரோ புன்முறுவல் பூத்தார். வேலையங்கே கிடைத்தபின்னர் வேடிக்கைகள் பல…
-
- 3 replies
- 793 views
-
-
சித்தப்பா அன்பின் உருவானவரே! பாசத்தின் உறைவிடமானவரே! தந்தைக்கு நிகர் அற்றவரே! தாய் போன்று எமை வளர்த்தவரே! தந்தையின் உடன் பிறப்பே!- தந்தை போன்றே எமை காத்தவரே! அறியா வயதில் அப்பா முகம் பார்க்க ஏங்கியதில்லை – என் அப்பாவாக நீங்கள் இருந்தீங்கள் - ஆனால் தந்தையுடன் வாழ்ந்தாலும் தங்கள் முகம் பார்க்க ஏங்கதா நாள்லிலை அன்னை மடி தேடியதில்லை அன்னை உருவில் உங்கள் அன்பு ஆசைப்பட்டதை வாங்கியும் தந்தீங்கள் - என் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றியும் வைத்தீங்கள் தப்புக்களை தட்டியும் கேட்டீங்கள் வாழ்க்கையெனும் பாதையில் வீறு கொண்டு நடக்கவும் செய்தீர்கள் தோல்விகளைக் கண்டு துவண்டிடும் போதெல்லாம் - அவை தோல்வியல்ல வெற்றியின் அறிகுறி என்று உற்சாக…
-
- 17 replies
- 20.6k views
-
-
புயல் சுழன்றடித்த பெருந்தீவின் மாயான அமைதியில் சலனமில்லா ஊர்களின் நிசப்தம் தின்று மூச்சடங்கிபோன தெருக்களில் வீடுறையும் மனிதர்கள் ஒருவரும் இல்லாது தாழிடப்பட்ட கதவுகளுக்கு பின்னால் முன்பொரு காலத்தில் எந்நேரமும் விளையாட்டு சாமான்கள் விழுந்துடையும் சத்தங்களும் விண்ணதிரும் வாய்பாடொதும் ஒசையும் கண்ணுறங்க வைக்கும் தாலாட்டு பாட்டும் நினைவின் தொகுப்பாய் எஞ்சிய ஒற்றை நிழற்படம் முன் சிறுபிள்ளை பிரார்த்தனை முனுமுனுப்புகளுமிருந்தன இமைப்பொழுதில் ஒன்றுமில்லாதுபோன துயரிரவின் பேரமைதியில் ஊமைநிலத்தில் ஊடுருவிய புத்தரின் நிலைகுத்திய காந்த விழிகளுக்கப்பால் 'புயலின் சூன்யத்தை, கோர பசியை, தீரா உயிர்வேட்கையை, மாளா குரூரத்தை, அழிவின் ஆரோகணத்தை, ஏதொவொரு பிணத்தை புண…
-
- 15 replies
- 1.2k views
-
-
ஏழையாய்ப் போனேனே.... கோமேதகக் கண்ணிரண்டும் கோடி பெறும் கட்டிவைத்த முத்துக்களாய்.. பற்கள் மின்னும்.. தங்கநிற மேனியோ... கண்கள் கூசும் தாமரை அவள் வார்த்தை.. சங்கீதமாகும் எல்லாமும்.. என் சொத்தே எண்ணி வாழ்ந்தேன்... பொல்லாத செல்க் காலானால் ஏழையானேன்.
-
- 1 reply
- 858 views
-
-
காதலர்க்கு ஓர் தினம் காதலோ தினந்தினம் கனிவான செந்தமிழால் காதலர் தினந்தன்னை கவியாலே கனிய வைக்க களமமைத்துத் தந்த மொழிமேலே பற்றுவைத்து மின்னிணைய வசமாக்கி அழியாத செந்தமிழை அனைத்துலகம் அறிவதற்கு யாழிணையப் பெயர் தாங்கி மிளிர வைத்த எம்முறவே காதலர்க்கு ஓர் தினம் காதலோ தினமென்று விதவிதமாய் கவிதொடுப்போர் வரிசையிலே நானுமிங்கே மின்னிணைய தொடர்பாலே மனத்தெழுந்த பாமாலை கன்னித்தமிழ் கொண்டு சாற்றுகிறேன் காணீரோ! ஆணினமும் பெண்ணினமும் அன்பாலே அருகிணைந்து பேணிநிற்கும் புதுவுறவே காதலின் பிறப்பாகி கண்களைத் தூதுவிட்டு துணையின்பக் கூடமைத்து திண்மை நிலையினராய் உயர்புலத்து வாழ்வமைத்து ஏமக் கிழத்தியவள் மென்மையுறு இதயத்தில் தூமலரின் பண்பாகி ஞ…
-
- 5 replies
- 1.4k views
-
-
சுமையிழுக்கும் காளைகளுக்கு......... புல்லு கூட கொடுத்ததில்லை... வக்கணையாய் ............. காத தூரம் நடந்தே நொய்ந்துபோன அதன் - கால்களில் பிழை பிடிப்பார்..............! களிம்பு தடவ - நினைத்ததுண்டா? முகில்களுக்கு இறுதி அஞ்சலியாம்.............. மழைவந்தால்மட்டும் -பிறந்த நாள் வாழ்த்தாம்! என்னயிதுவோ -கருத்து கப்பலோ? வயிறுகிழிந்து கொட்டிய வான ....... குருதி உடலில் ஏனோ கறையான் கள் பெயரில் கப்பல்? தாய் தேசமது விடியலையே தந்தை தேசமெதுவென்று தெரிந்தாலும்....... அவர்களெமை நம்பலையே...........! போகயெண்ணிய வாகனம்............ விரைவு பாதை நடுவே உருளைகள் ........ செயலற்றதால் உடைந்ததாய் ஆச்சு வாழ்வு..! நீ வெட்டி வீரம் காட்டு ....... வெள…
-
- 2 replies
- 867 views
-
-
முத்துக்குமரா பார் நீ பாரில் தமிழீழ விடுதலை முத்துக்குமரா எங்களுக்காக உன்னுடல் வெந்தாய் விடுதலைக்காய் வித்தானய் வெந்தணல் மீது உன்னுடல் முத்தே உன் நினைவு எம்மை வாட்டுதய்யா! விடுதலை வித்தே ஈழ மக்களின் சொத்தே! உன் உறவுகள் நாம் எம் இனமடா நீ தீ வைத்தது உனக்கல்ல பேரினவாத பேரசுகளுக்கு வைத்தாய் ஈகை போராளியே உன் ஈகம் தமிழருக்கு விடுதலை தீயை விதைத்தடா பரவியது தீ பார் பாரெங்கும் விடுதலை பெறும் வரை உன் தீ அடங்குமாய்யா! எம் மனங்களில் அது விலகுமாய்யா! பார் நீ பாரில் தமிழீழ விடுதலை வா நீ வந்து பார் அதுவரை நாம் ஓயோம் சரவணை மைந்தன் http://www.eelampoem.tk/2015/01/muththu.html
-
- 16 replies
- 1.1k views
-
-
சப்பாத்தின் விலை ஒன்பது தொண்நூறு விற்பவனிடம் வாதாடிக் களைத்துவிட்டேன் குறையும் இருபது சதத்திற்காய் வாயாற முடியாது இருந்த காலங்களில் எல்லாம் வறுமையின் கோரத்தை போக்க நட்சத்திரங்களை எண்ணியபடி வயிறை நீரால் நிறப்பியதுண்டு இது சற்றே மாறுபட்டது ஆடம்பரம் என்றோ ஆசைஎன்றோ வரையறுத்து விட்டு விட்டால் கால்கள் தேவையற்றதாய் போய்விடும் ஊரென்றால் பறவாயில்லை சப்பாத்துமுள்ளும் சாணிப் பட்டியும் கிரவல் றோட்டும் பழகிப்போன ஒன்று இது சற்று மாறுபட்டது மண்ணில் கால் படுவதே இல்லை மாறிப்பட்டு விட்டால் குளிரின் கோரம் ஊசியாய் குத்த விறைத்த கால்கள் பாறைபோல் ஆகும். இருக்கும் பழசுகளிலும் இடையிடையே ஓட்டை எப்படியும் இந்தமாதம் …
-
- 6 replies
- 894 views
-
-
கவிப்பேரரசு கண்ட கருப்பு நிலா அளவாகத்தீயெரிந்தால் அதனை விளக்கென்போம் அளவுக்கு மீறிவிட்டால் அதனை நெருப்பென்போம் அளவுக்கு மேல்பொறுமை அன்னமே நீ காட்டியதால் களவுக்குப் போனதம்மா காத்துவைத்த உன்சொத்து ம் தற்போதைய எமது நாட்டு நடப்பிற்கும் இந்த கவிதை மிகப்பொருத்தமாக இருக்கின்றது. பொறுத்தார் பூமியாழ்வார் என்பது பழங்கதை. இன்று பொறுத்தவர் இழந்து நிற்பதுதான் மிச்சம். புரிந்தால் அனைவரும் அணிதிரள்வோம். விடுதலை என்னும் சிறகை விரிக்கவே விரைந்து உதவுவோம்.
-
- 1 reply
- 1.1k views
-
-
இன்பமெங்கே? 1. இன்பத்தைத் தேடுகிறாய் தம்பி இன்பத்தைத் தேடுகிறாய் இங்குள தங்குள தென்றலைந்தே அதை எங்கெங்கு தேடியும் காணக் கிடைக்காமல் இன்பத்தைத் தேடுகிறாய் தம்பி இன்பத்தைத் தேடுகிறாய் 2. ஏழ்மையதின்பமடா தம்பி ஏழ்மையதின்பமடா வாழ்வினில் வீணே வழிகெட்டுப் போகாமல் வாய்த்த தவஞானம் தோய்ந்து சுகம் பெறில் ஏழ்மையதின்பமடா தம்பி ஏழ்மையதின்பமடா 3. அறியாமை இன்பமடா தம்பி அறியாமை இன்பமடா நெறியோடு ஞானப் பிழம்பென வாழ்ந்(து) உள நிம்மதியோடுயர் நன்மதி கூட்டிடில் அறியாமை இன்பமடா தம்பி அறியாமை இன்பமடா 4. புகழின்மை இன்பமடா தம்பி புகழின்மை இன்பமடா இகழ்பவர் யாவரும் ஈசனென்றே மனம் இன்ப நிலை கண்டு துன்பத்தை மாயத்திடில் புகழின்மை இன்பமடா தம்பி புகழின்மை இன்பமடா 5. நோயதும் இன…
-
- 6 replies
- 1.1k views
-
-
03.தமிழீழம் தாய்நாடு அது எங்கள் தமிழீழம் எம் தமிழ்த் தாய்நாடு தமிழீழம்! உரக்கச் சொல்வோம் இதை உலகுக்கும் எடுத்துச் சொல்வோம்! இங்கே யார் நாங்கள்...? இங்கே யார் நாங்கள்...? எட்டுத் திக்கிலுமிருந்து.. எழுகின்ற கேள்விக்கு.. என்ன விடை..? இதை அறிந்து சிலபேர், அறியாமல் பலபேர், உனக்குள் இருக்கும் உன் தாய்நாடு எங்கே...? இருபத்தியோரம் நூற்றாண்டின் இயந்திர வாழ்வில்..! சுவடுகள் பதிக்குமுன் ஓருகணம் நில்லுங்கள்! உனக்குத் தெரிந்த உன் தாய்நாடு என்று எதைச் சொல்லிக்கொள்ளப் போகிறாய்..? உன் எண்ணக்கரு என்ன சொல்கிறது..? என் எண்ணக்கரு இதைத்தான்.. எண்ணிக் கொள்கிறது! தாய்நாடு அது எங்கள் தமிழீழம் எம் …
-
- 5 replies
- 1.6k views
-
-
(ஆறுவருடங்கள் முதல் எழுதிய கவிதையிது. இன்று பழைய தூசுதட்டியதில் கண்ணில் எட்டியதை இணைக்கிறேன்) ஞாபகங்களுடன் இன்றும்.... மீண்டும் சந்திப்பதாய் ஒரு மாலைநேர ஈரக்காற்றின் உவர்ப்போடு அழுததாய் ஞாபகம். தாஜ்மகால் பற்றியும் தலைசிறந்த காதல் இலக்கியம் தந்த ஜிப்ரான் பற்றியும் நிறையவே பகிர்தல்கள். ஒரு தாஜ்மகால் ஒரு முறிந்த சிறகு எங்களுக்காயும் எழுதப்படுமெனும் எண்ணமேயில்லை கௌரவப் பிரிதலாய் அது நீண்டதொரு தசாப்தம் நிறைவாகிறது. என்றாவது நினைவு வரும் சிறுவயது ஞாபகம் போல் எப்போதாவது வந்துபோகும் ஞாபகங்களுடன் இன்றும்.... காதலென்ற …
-
- 11 replies
- 1.6k views
-
-
மறக்க முடியாத உன் முதல் முத்தம் வேண்டாம் நான் இறக்க வேண்டும் கடைசி முத்தம் கொடு * நீ தூங்குவதே இல்லையா என் தூக்கங்களில் கனவாய் வருகிறாயே * எல்லாரும் கவிதைக்குள் கருத்தைதான் தேடுவார்கள் நீ மட்டும் உன்னைத் தேடுவாய் * நீ வாங்கிக் கொடுத்த செருப்போடுதான் இன்றும் நடக்கிறேன் கைகளில் சுமந்தபடி * என் கவிதைகளை எப்படி படிக்க வருகிறாய் என்பதை கற்றுக்கொடு நீ குளிப்பதை எப்படி எட்டிப் பார்ப்பது என்பதை கற்றுக் கொள்கிறேன் -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 996 views
-
-
காலதேவனின் சாபம் காற்றடைத்த பைகளை நிரப்ப கருமேகங்களிடம் கையேந்தும் நிலை வர்ணங்களைப் பிரிக்கத் தெரியவில்லை எனக்கு நீலம்,பச்சை என கருமையும் செம்மையுமே என் கனவிலும் குடிகொள்கின்றன புரியாத புதிர்களாய்ப் புரட்டிப் போடப்படுகின்றன பொழுதுகள் புலர்ந்தாலும் சாய்ந்தாலும் விதைக்கப்படுகின்றன நச்சு விதைகள் நத்தைகளுக்கு கூட ஓடு இல்லையாம்- இது கொசுறுத்தகவல் கருவேலங்காட்டிற்குள் கானக்குயில் பாட்டிற்காய் காத்திருந்த காலங்கள் போய் கறிவாடை வீசாத விடியலுக்காய் காத்திருக்கின்றோம் மொட்டுக்கள் மலரமுன்னே வண்(ம்)டு(பு)களால் வன்புணரப்படும் போது பேசாதிருந்து பிறப்புறுப்புகளைப்பற்றி பேசியவுடன் பிறவிப்பலன் அடைந்ததாய் பெருமைகொள்கிறது பெண்ணியம் உச்சி மீத…
-
- 9 replies
- 1.9k views
-
-
Feb 10 2005, 08:49 PM இதயத்து சேகங்களை இறக்கிவைத்து சுமக்கும் சுமைகளையும் சொல்லிட வார்த்தைதேடி கலைந்துபோகும் என் கனவுகளை கலைத்து பிடித்து கட்டிவைக்க விழையும் வாலிபன்நான் வசந்தத்தை அனுபவிக்கும் வயதில் வறுமையை தாங்கலாம் வெறுமையை...........?? முடியவில்லை வீதியில் வீசப்பட்டடோ விக்கப்பட்டவனே இல்லை சொந்தம் சுற்றம் எல்லாம் உண்டு உற்றாருக்கும் பெற்றாருக்கும் உதவி உதவியே உதிரிபாகங்கள் தேய்ந்துபோய் உடலும் மனமும் சோர்ந்து.....என் துக்கங்களை தூக்கம்மட்டும் அவ்வப்போது தத்தெடுத்து கொள்ளும் இதோ என்னை தத்து கொடுத்துவிட்டேன் நிதந்தரமாக (ஒரு நண்பனின்உண்மை கதையிது
-
- 13 replies
- 2.9k views
-