கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அம்மா நீ எங்கன இருக்கா? *************************************** எனே,... அம்மா எங்கன இருக்கிறா? கையில் ஒரு பூக்கூடை பையில் ஒரு படையல் என முந்தி மாதம் தவறா உன் விழி மழையின் வீழ்ச்சியில் குளிப்பாட்டி மகிழ்வித்து முத்தம் தந்து குளிர்விப்பவளே நீ எங்கன இருக்கிறா? நீ அறிவியான நான் சாகா வரம் பெற்றவன் யார் சொன்னார் என்னை இறந்ததென்று? மண்ணின் சுவாசத்துக்காக மண்ணில் வாசகம் செய்கிறேன். சாவுக்குள் கண்மூடி உறங்கி உயிர்த்தெழுகிறேன் திக்கெட்டும் தேடுகிறேன் என் உயிர் உறவுகளின் தாயை தேடும் ஓலம் மட்டும் காதில் ஒலிக்கிறதே உன்னை மட்டும் காணவில்லை நீ எங்கன இருக்கிறா? கைகள் மரத்து போய் விறகு விற்று நீ ஊட்…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
கடவுளைத்தேடி நீ ஆலைய கருவறைக்குள் அமைதியாய் போய்விட்டாய், அம்மா என்ற கடவுள் என்னோடு இருப்பதால் உன்னைத்தேடியே ஆலயம் வந்தேன். முகம் கொடுத்து பேச முடியாதவனாய்-உன் பாதணிகளுக்குள் மலர் வைத்துப்போனேன். நீ கடைக்கண்ணால் கண்டதையும் நான் கண்டேன், வீதியோர குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு நீ சென்றபோது மலருக்கு தெரியாது உன்னக்கு என்னை பிடிக்காதென்று இப்போதெல்லாம் நான் வெளியே போவதில்லை. உன்பிம்பம் விழுந்த என் வீட்டுக்கண்ணாடியை சமையலறையில் மாட்டிவிட்டேன். உன் நினைவுகள் என்னை தீண்டும்போது சமயலறைக்கு ஓடிவிடுவேன், உன்பிம்பம் பட்ட கண்ணாடி முன்னே கண்ணீர் வடிக்க, அம்மா கண்டுவிடுவாள் என்று வெங்காயம் உரித்த படி நான்......
-
- 2 replies
- 600 views
-
-
அழகான குக் கிராமம் .... கூப்பிடு தூரத்தில் ஆங்காங்கே .... குடிசைவீடுகள் இடையிடையே ... வேற்று காணிகள் ,முற்பற்றைகள் .... முற்பற்றைகள் நடுவே மண் புற்றுகள் ... எந்தபுற்றில் பாம்பு வசிக்கிறதோ .... அந்த புற்று கோயிலாக மாறும் ...!!! வீடுகள் என்னவோ குடிசைகள் ... பாம்பு புற்றுகள் செங்கல் மாடங்கள் ... பல கால நித்திய பூசை , பால் அபிஷேகம்... ஏட்டிக்கு போட்டியாக புற்றுக்கள் .... கோயிலாக மாறும் போட்டியாக ... விதம் விதமான பூசைகள் .... பக்தர்களுக்கு திண்டாட்டம் .....!!! ஊரில் குறி சொல்பவரே நீதிபதி .... ஊரின் நீதிபதி சொன்னால் இறுதி ... யாரும் திருப்பி பேசமாட்டார்கள் ... பேசினால் நாகதோஷம் பற்றிவிடும் .... அவருக்கு வரும் கனவுகள் ... காலபோக்கில் கோயிலாய் மாறிவிடும் .... அயல் கிராமத்தவரும்…
-
- 2 replies
- 2.3k views
-
-
எப்படி மறப்பது இந்த மே 18 ஐ .....? ------------------- பகீரதன் தாழம் பூவோடும் தாமரைத் தட்டோடும் நாகதீபம் வரை வந்து போகிறீர்கள் . வெள்ளை உடுப்புடுத்தி நீங்கள் வரும்போது வெள்ளைக் கொடியோடு வெண் புறாக்கள் போன கதை வந்து வந்து போகுது. . எதோ கொண்டு வருகிறீர்கள் கொடுத்ததும் பார்க்கிறீர்கள். இனி இவர்கள் மறந்து போவார்கள் மாண்ட தமிழர்களை மறைத்த உறவுகளை. . எப்படி மறப்பது இந்த மே 18 ஐ..... ? - இது கொன்ற தினத்தை கொண்டாடிய நாள் அல்லவா! . மேனி கருகி மேடாய் தெரிந்த நாள் கூட்டாய் கொன்று குவித்ததை கூகிளில் பார்த்து கூக்குரல் இட்ட நாள். குழிவெட்டி எம் குஞ்சுகளை குடும்பத்தோடு புதைத்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
நெல்லியடியில் நெத்தியடியாய் நெடுநாள் சிங்களப் பகை நொருக்கி வீழ்ந்த அந்த நெடும் வீரன் மில்லர் வழியில்… தமிழராம் எம் தாகமாம் தமிழீழம் விடியும் வரை பிச்சை கேட்டு அடிமைகளாய் வாழப் போவதில்லை…! விடியலின் கனவோடு கந்தக மூச்செடுத்து சாவினில் வாழும் மறப் புலிகளாய் கரும்புலிகளாய் எம் தேச விடியலை சிதைக்க நினைக்கும் தடைகள் முடிப்போம். விடியற் சூரியனை கூவி அழைத்து ஈழ வானில் சேர்த்து.. மின்னிடும் வான் தாரகைகளாய் நாமும் மிளிர்வோம். தலைவன் வழியில்.. விடியலின் வேளை வரை தமிழர் நாம் என்றும் கரும்புலிகளே…! ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ http://thesakkaatu.com/doc1704.html
-
- 2 replies
- 596 views
-
-
அண்;மையில் நான் ஒரு நினைவாஞசலியைப் பார்க்க நேரிட்டது. அது ஐரோப்பிய நாட்டில் வெற்றிகரமாக இயங்கும் வர்த்தக நோக்கமுடைய இணையத்தளமொன்றில். வன்னியில் அவலம் அதிகரித்தவண்ணமிருந்தவேளை, விடுதலைக்காய் தேடல்களில் ஈடுபட்டு கணவன் இந்தியச்சிறையில், அதேவேளை அவரது குடும்பம் தமிழர் விரோததேசமாம் இந்தியாவினது ஏவலில் சிங்களம் சிதறியடித்த குண்டுகளில் ஒருத்தரும் மிஞசாது சாகடிக்கப்பட்டனர். தனது அன்புள்ளங்கள் பிரிந்த இரண்டாது வருடநினைவிற்காய் பின்னுட்டமாக ஒரு கவிதை சிவகரன் இணைத்திருக்கிறார். வாசிக்கவும். கால்களில் கூடு பின்னும் முடிவற்ற பாதை அவ்வளவுதானா ... பிள்ளைகள் மாய்ந்தபின் சுவற்றில் கிடக்கும் புத்தகப்பையாய் அவன் கனவுகள் எல்லாம் இருள் மூடுமோ கிணற்றடியில் எடுப்பாரின்ற…
-
- 2 replies
- 1.8k views
- 1 follower
-
-
ஆகாயக் கூரையின் கீழ் அலைபாயும் நினைவுகளை அலையவிட்டு அலையவிட்டு ஆனசுகம் தேடுகின்றேன். காயம்பட்ட நினைவுகளை கண்ணீரில் தோய்த்தெடுத்து நாளைவரும் தலைமுறைக்கு நல்லகவி பாடுகின்றேன். தண்ணீரில் துன்பம் கரையாது என்றே கண்ணீரில் மையெடுத்து கவியெழுதப் பார்க்கின்றேன். மேகம்போல் நெஞ்சில் முன்னோடும் நினைவுகளை முன்னிறுத்தி முன்னிறுத்து முகவரியை தேடுகின்றேன். முன்நிலாக் காலத்தில் - என் முதிராத பருவத்தில் கண்டதெல்லாம் கனவாமோ ? கண்டறியத் துடிக்கின்றேன். இந்தநிலாக் காலத்தில் யாருமில்லா பக்கத்தில் அந்தநிலா ஒளியெறிந்து - என்னை விளையாட அழைக்கிறதே. உள்ளசுகம் அத்தனையும் அடைந்துவிடத் துடித்தாலும் வந்ததெல்லாம் வலி…
-
- 2 replies
- 999 views
-
-
நீயும் நானும் எதிரியடா- உனை நீண்டு வளர விட மாட்டேண்டா அல்லும் பகலும் அறுப்பேண்டா- உன் அத்தி வாரம் உடைப்பேண்டா... பாட்டன் ஆண்ட தேசமதை பறிக்க நீயும் வந்தாயோ...?? வெட்டி பயல்கள் நாமோட - உன்னை வெட்டி எறியாமல் விடுவேமோ...?? இல்லை நெஞ்சில் துணிவென்றோ எண்ணியே நீயும் வந்தாயோ அன்னியா உன்னை ஆண்டிடவே அகில தமிழர் விடுவாரோ...?? கொள்ளி கட்டை ஏந்தியே- எங்கள் கோட்டையை எரிக்க வந்தாயோ...?? இத்தனை துணிவு உனக்கென்றால் இனியும் உன்னை விடுவோமோ...?? - வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1.1k views
-
-
இன்றென்ன..! ஆண்டு பல கடந்தும் அடியோடு மறந்திருந்தும்..? எப்படி எங்கிருந்து என்னறிவுக் கெட்டாமல் விரல் வழியாய்த் தாளில் விழுந்தாய்!, ஒரு வேளை நீ கூட என்னை நினைத் தாயோ? எதுவேனும்.. என் புலனுக்கறியாமல் தாள் மீது ஒரு கவியாய் விழுந்த உன் பெயர் வியப்பூற உயிர் பெற்று விம்பமாய் என் முன்னெழவும் உன் வாசம் நாசிதனில் ஏறிப் புரக்கடித்து கண்ணோரம் ஆசைக் கனவாக வழிகிறது வாழ் கனவே..! கால நதிக்கரையில் நாம் நடந்த காற் தடத்தை ஆண்டுகளின் ஆற்றோட்டம் அரித்தாலும் எஞ்சியுள்ள சுவட்டுக் கரைக் குருதிச் சுற்றோட்ட வெப்பமென்னில் இறக்கும் வரை வாழ்வாய் என் காலம் கடந்தவளே.. திரு.திருக்குமரன்
-
- 2 replies
- 1.2k views
-
-
லண்டனுக்கு படையெடுப்பு வருகின்றார் அயல்நாட்டிலிருந்து நம்மவரும் மற்றோரும் படையெடுக்கின்றனர் லண்டனை நோக்கியே பெருகிவரும் எம்மவர் வியாபார ஸ்தாபனங்கள் மூலைக்கு ஒன்றாய் புதிதாய் முளைத்தபடியே வேலையில்லாத் தட்டுபாடும் இங்கே மணித்தியாலத்துக்கு மூன்று பவுண் என்றே வெற்றிடம் நிரப்பிடக் கூட்டம் இங்கே வருகின்றார்கள் லண்டனை நோக்கியே நாடிவந்து நயமாய் பொய் கூறி பெறப்போகும் அரச உதவிபணகுறைப்புக்கள் கள்ளகாட்டின் விளைவால் புதிய இலக்கம் பதியும் முறையும் புழக்கத்தில் விதித்திட்ட புது சட்டதிட்டங்கள் இறுக்கமாகிப்போன நிலைகள் பாடுபட்டு பணம் சம்பாதிக்கும் வழிகள் பறி போய்விட்ட நிலையிலும் பதிக்கின்றார்கள் பாதங்களை லண்டனில் …
-
- 2 replies
- 1.5k views
-
-
ஒவ்வொரு தோட்டாவுக்கும் கணக்கு பார்த்து மௌனமானவர்கள் மீண்டும் தேடப்படுகிறார்கள். அடிக்கொரு குண்டு போட்டு நாடு பிடித்தவர்கள் விரட்டப்படுகிறார்கள்👏
-
- 2 replies
- 455 views
-
-
எம் இல்லங்கள் மீது - இடி இறங்கும் ஒரு நாளில்- இலங்கையின் - சுதந்திரம் பற்றி- ஏன் ஒரு கவலை-உனக்கு? புறங்கையால் அதை தள்ளிவிடு சோதரா! உன் கண்களில் ஊசி தைத்துபோனதை கண்டு சொல்ல இன்னொருவன் வேணுமா? என்ன நீ? சொத்து-சுகம்- சொந்தம் பந்தம்- ஒட்டுமொத்தமாய் கூட்டியள்ளி கொளுத்திவிட்டு வந்து- கட்டிடகாட்டின் மத்தியில் நின்று- உன் கண்ணீரை பிறர் காணுமுன் துடைக்கிறாயே - அது பொய்யா-? சிங்கத்தின் வால் கொண்டு முகம் துடைப்பவன் எவனாயிருந்தாலும் வாழட்டும்- இரு ஒரு விநாடி- உன் முழங்கையை ஒரு தடவை முகர்ந்து பார்- நண்பா! சிதறி போன உன் உறவுகளை - துண்டம் துண்டமாய் பொறுக்கி சென்று கொள்ளி வைத்துவிட்டு வந்தாயே- ரத்தவாடை இன்னும் உன் நாசி துவாரங்களில் க…
-
- 2 replies
- 1.4k views
-
-
நாங்கள் மீண்டும் ஒருமுறை அழுது தீக்கிறோம். நீயோ எங்கள் அழுகையை ரசிக்கும் ஆவலில் எப்போதும் வரட்டும் என்கிறாய்…
-
- 2 replies
- 660 views
-
-
எண்ணங்கள் எப்போதும் எதிரொலிகளாய் நிரப்பப்பட்டிருக்கின்றன எல்லையற்ற வெற்றிடங்களின் ஏகாந்தத்தில் கற்பனைகள் கண்டபடி பாய்கின்றன மனதின் விருப்பத்துக்கும் ஆசைகளில் அலைதலுக்கும் அங்கீகரிக்காதவை கூட அகலக்கால் வைத்தபடி எத்தனை தூரமும் எத்தனை வேகமும் கொண்டதாய் எந்திரங்கள் போலன்றி எதிர்ப்பற்று எங்கெங்கோ அலைகின்றன ஏன்தான் இத்தனை ஆசைகளோ எவரோடும் ஒப்பிட்டு ஒப்பற்று எதிரிகளாகின்றன எண்ணங்கள் எப்போதும் எம் மனதுக்கு ஏற்ராற்போல் எம்மை மட்டும் நினைவில் கொண்டபடி
-
- 2 replies
- 494 views
-
-
எங்கள் தேசத்தின் குரல் ஓய்ந்திடவில்லை ஆண்டுகள் எட்டு ஓடி மறைந்ததா?- எங்கள் தேசத்தின் குரல் ஓய்வெடுத்து ஆண்டுகள் எட்டானதோ? அன்பே மூலதானமாக அடக்கமே ஆளுமையாக அறிவே ஆயுதமாக தமிழினத்தின் குரலை தரணிக்கு எடுத்துக் கூறிய எங்கள் அன்பு பாலா அண்ணா உலகத்தைவிட்டு பறந்தோடி ஆண்டுகள் ஏழு ஆனதோ? உண்மையுள் உண்மையாய் உண்மையே உணர்வாய் உண்மையே இவராய் உண்மையாய் வாழ்ந்த உயரிய மகன்-இன்று எம்மைவிட்டு சென்றதை இன்னும் நம்ப மனம் மறுக்கின்றது உலகின் பார்வையில் இவரின் உறக்கம் சாவு எனச் சொல்லப்படலாம் ஆனால், உலகத்தமிழர் உளங்களில்- இவர் என்றும் வாழ்ந்திருக்கும்; மனிதன். தமிழின விடிவுக்காகவே இறுதிவரை உழைத்த உறுதியான போராளி இவர். பாழும் நோய் வந்து பாடையேறும் நாளை இரக்கமின்றி தெரிவித்தபோது பத…
-
- 2 replies
- 545 views
-
-
« ம் அனைவரின் சொந்தம் கறுப்பு நாய் கறுப்பு நாய்க்கு அனைவரும் சொந்தம் அது சதா அலைகிறது. சர்க்கஸ் உலகம் கூடாரத்துள் மயிர்கூச்செறியும் சாகச வித்தைகள் காட்சிக் கேற்ப மாறும் பின்னணி இசை பசிதாகம் விற்பனையும் நடுவே இடையிடையே யாவற்றையும் நையாண்டி செய்கிற கோமாளிக் குள்ளர்கள் ஒரு பேயின் முகம் போல யிருக்கிறது ஒரு பேயின் முகம் போல யிருக்கிறது அதன் முகம் கண்களில் தீக் கங்குகள் ஏதேன் தோட்டத்தில் பிறந்தவை அதனுடைய வார்த்தைகள் கருநாகங்கள் படமெடுத் தாடுகின்றன கழுத்திலிருந்து புதைத் தழுத்துகிறது அதனுள் கடைசிச் சொட்டு மிழந்து வெளிர்ந்து பொங்கி யதனைத்தையும் உறிஞ்ச பிய்த்து எறிந்த சதை கூரையிலிருந்து ஒழுகுகிறது …
-
- 2 replies
- 1.1k views
-
-
மேக விசும்பலால் கண்ணயற, கடைவானைப் பார்த்தேன். துருத்திய மூக்கின் நுனி குருதி பட்டு சிவந்தது இடி மீறும் குண்டொலியால் செவிபிளந்து ஊன் கதறியது நீல வானக் கதிர்கள் நுழையவொண்ணா கதிரலைகள் மேவிக் கொண்டிருந்தது. "ஏ! கடவுளே! பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் அண்ட மீன்களை ஒருமுறை இவ்வேழை நோக்கவியலாதா? நாளுமோர் மீன் முளையும் நானும் போய் நுழையவியலாதா?" நீட்டிய உயிர்க்கிளை மீதொரு நாட்டிய விழி புதைய விண்ணுலகன் நாவில் பிரிந்து எச்சில் ஊறியது என்னுள் செவிப் பறைகள் அறைந்து கொண்டது. செல்க! செல்க! மானிடனே செல்கவே! புவிக் கோளம் தாண்டி அக்கினியில்லா மீன்களைத் துண்டிக்கச் சென்றேன் என்னில்லப் புறாவின் சிறகெடுத்து. சாந்தமில்லா மீன்கள் வீணி…
-
- 2 replies
- 1.1k views
-
-
http://3.bp.blogspot.com/_JwDEbzlHuBY/SRGYiNwz-JI/AAAAAAAAFAc/ft_g-a6Ut8Y/s1600-h/image001-728569.jpg http://3.bp.blogspot.com/_JwDEbzlHuBY/SRGYiWfivZI/AAAAAAAAFAk/d0PWZLF74GI/s1600-h/image002-729153.jpg
-
- 2 replies
- 1.1k views
-
-
உருப்பெற்று உருப்பெற்று வார்த்தைகள் வரிசைகட்டி நிற்கின்றன பேறுகாலநிலை; பேரவஸ்தை! ஞாபகங்களின் தொடர்பறுந்து விடாமல், கண்ணாடிக் குவளையை கை பற்றுதல்போல் தாள்களில் பிரசவிக்கும் கணம்வரை கவனம் வேண்டியிருக்கிறது! கைதவறி வைத்துவிட்ட கைத்தொலைபேசி, மருமகள் மீதான அம்மாவின் வசைபாடல், மூன்றுநாள் காய்ச்சலோடு மூத்தவளின் முனகல், அடுக்களைக்கும் அறைகளுக்குமாய் அந்தரித்து திரியும் மனையாள்…. கவனத்தை சிதைத்த காலைநேர களேபரங்களோடு கருக்கொண்ட கவிவரிகளும் கட்டறுந்து விடுகின்றன. அடிக்கடி சிணுங்கும் அலுவலக தொலைபேசிகள், கணினிக்குள் தொலைந்துபோன கணக்கியல் பதிவுகள், முகாமையாளரின் மேலாண்மை சிடுசிடுப்புக்கள் கூட்டங்கள் கொதிநிலை …
-
- 2 replies
- 918 views
-
-
வானம் நீயானால் - நான் மேகமாக வரம் வேண்டும் விழிகள் நீயானால் - நான் இமைகளாக வரம் வேண்டும் தூக்கம் நீயானால் - நான் கனவாக வரம் வேண்டும் கவிதை நீயானால் - நான் நல்ல வரிகளாக வரம் வேண்டும் நிலம் நீயானால் - நான் உன்னுள் புதையும் பிணமாக வரம் வேண்டும்...
-
- 2 replies
- 708 views
-
-
வானும் கனல் சொரியும்-தரை மண்ணும் கனல் எழுப்பும் அலையடிக்கும் கடலும் அதில் தாவும் எம் கரும்புலியும் வானில் பறக்கும் வான்புலியும் மதிமயக்கும் உயிர்குடிக்கும் சிங்களச்சேனை கதிகலங்கும் அவர்தம் அங்கம் சிதறும் தறுதலையாய் தரணியிலே அவமான சின்னமாய் சிங்களவனுக்கு குடைபிடிக்கும் ஓநாய்க்கூட்டம் அதன் கதிகலங்க என்சேனை அசையா எம் தலைவன் தலைமையில் அணிவகுக்கும் ஆயிரம் ஆயிரம் விடுதலை வேங்கைகள் எமக்காய் உருகும் செங்களமாடும் புலிச்சேனை காற்றில் கந்தகம் கலக்கும் இடம் எல்லாம் கரும்புலியின் தியாகவேள்வியின் உயிர் உருகும் உருகும் அந்த மானிடத் தெய்வங்கள் திவ்வியமாய் எம் இதயத்தில் நிறுத்தியே அலையும் சிங்களப் பேய்களுக்கும் தாயை விட உயர்ந்த எம் தரணிக்காய் போராடும் என்…
-
- 2 replies
- 1.6k views
-
-
பனி உமிழும் மாலைப்பொழுதில் மொழிபெயர்ப்பு: பேராசிரியர் மு.விஜயகுமார் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி ஆவடி, சென்னை – 600062 யாருடைய பனித்துகள்கள் இவைகள்? தெரிவது போல உணர்கிறேன். அவரின் வீடோ அருகே உள்ளகிராமத்தில் நானோ இங்கு ஓய்வில். என்இருப்பை அறிய வாய்ப்பில்லை. காடுகள் முழுவதும் பனித்துளிகளின் கைகள் படர்ந்துள்ளது. என் இளமை ததும்பும்குதிரை பனிஉதிரும் காடுகளுக்கும் சிலைபோன்ற ஆறுகளுக்கு இடையைவீடுகளற்ற இடத்தை கண்டு சற்றே குழம்பியது. அதன் கழுத்தில் உள்ள மணிகள் அசைந்து தவறுகள் நேராமல் கவனமாக இருக்க வேண்டி கட்டளையிட்டது. …
-
- 2 replies
- 545 views
-
-
எங்க நாடு ஏழை நாடு மல்லி எப்ப வரும் மருந்து எமக்கு தம்பி-பா.உதயன் 😔 ———————————————————————————————————— wealthy nations have purchased enough doses to vaccinate their entire populations.in the meantime poor countries are suffering to get their corona vaccine.Rich countries just 14% of the world population have bought 54% of the corona vaccines.they have enough vaccines for all.Rich countries have a moral obligation to help poor countries to get enough vaccines.If rich countries shares there will be enough vaccines for all world population.Pls save the poor people to. நாலு காசு கையில் இல்லை தம்பி நம்மை கொரோனா விட்டு போகுதில்லை தம்பி எங்க நாடு ஏழை நாடு …
-
- 2 replies
- 665 views
-
-
காதலை வரமாகக் கொடுத்தான் இறைவன் ! அதனை சாபமாக மாற்றிக்கொண்டான் மனிதன் !! காதல் எப்பொழுதும் தோற்பதில்லை ! காதலர்கள்தான் தாமே தோற்றுப்போகிறார்கள் !! காதலைக் காதலியுங்கள்...! காதலும் உங்களைக் காதலிக்கும்...!! வாழும் வாழ்வினை இனிதாய் வாழவைக்கும்...!!! அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
-
- 2 replies
- 1.1k views
-