Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆனந்த விகடன் (15.2.17) இதழில் வெளியான எனது "நகரத்தின் புதிய தந்தை" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! நகரத்தின் புதிய தந்தை எல்லாவற்றையும் மாற்றப்போவதாக வாக்களித்து நாற்காலியைக் கைப்பற்றிய நகரத்தின் புதிய தந்தைக்கு அவர் பராமரிக்கவேண்டிய பிள்ளைகளின் கணக்கு கொடுக்கப்பட்டது. சாதுவானவர்கள், அடங்காதவர்கள், ஊதாரிகள், அயோக்கியர்களென அனைவரின் புள்ளிவிவரம் அவரிடமிருந்தது. அடங்காதவர்களை அவர் கலாச்சாரக் காவலர்களாக்கினார். ஊதாரிகளுக்கு வெகுமதிகள் கொடுத்தார். சாதுவானவர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்தார். …

  2. Started by Ahasthiyan,

    காலமெல்லாம் கடும் பனியிலும் ஓடி ஓடி உழைத்தவன் - இன்று உறங்கு நிலையில் ஓய்வெடுக்கின்றான் நெஞ்சுறுதியுடன் போராட போனவன்- இன்று வீதி விபத்தில் சிக்கி சிதைந்து போனான் மனைவி மக்களை அன்பாய் நேசித்தவன் - இன்று அசையா மனிதனாக மருத்துவ மனையில் எல்லா கேள்விகளுக்கும் காலம்தான் பதில். ஒரு சோக நிகழ்வு ரெண்டு நாட்களுக்கு முன்பு நிகழ்ந்தது. அவர் பிழைத்து வர இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    • 12 replies
    • 1.6k views
  3. சீ.. தனம் என்னும் அறையில் பூட்டப்படும் கன்னிகள் பல ஆயிரம் ஓதிடும் மந்திரம் பொய்யாகி போகும் தர்மத்தை மறந்து நீ வாழ்வே .. . புரட்சி செய்பவர் நாங்களே ஆதாரம் பல உண்டு பூமியில் வேதனைப் பிடியில் வாழ்க்கை ஏன் ? நீ பூட்டினை உடைத்திட வேண்டும் .. ஜாதிகள் சொல்லி தரம் பார்த்து ஊரினில் அவர்கள் உயர்ந்து நின்றனர் சமத்துவம் சொல்லி இவர்கள் இருக்க சத்தம் இல்லாமல் மனங்களை கொன்றனர் ... புரட்சி குணம் கொண்டு ஒரு மாற்றம் சீ....தனம் கொடுப்பதில் கொண்டுவா ஈழ விழுமியம் காத்திட பேணிட நீ . ஆங்காரம் கொண்டு உன்னை மாற்றிக்கொள் .. பென்னும் பெருளும் வாழ்க்கை என்றால் ஆண் அவைகளை கட்டிட்டு அலையட்டும் நான் முதிர்கன்னியா வாழ்ந்திட்டு போகிறேன் என்னில் தொடங்கட்டும் முதல் பு…

  4. புன்னகை செல்வனே... மதி முகம் கொண்ட தமிழ் செல்வனே எங்களை விட்டு எங்கு சென்றாய்.. தானைத் தலைவனின் தம்பியே தமிழ் ஈழத்தின் புன்னகை செல்வனே எங்களை விட்டு எங்கு சென்றாய்.. போர்க்களத்துலும் நீ வீரன் புன்னகையிலும் நீ மன்னன் நீ சிரித்தால் பூமி சிரிக்கும் நீ இல்லை என்று தமிழ் இனம் அழுகிறது தமிழ் ஈழம் பெற்றெடுத்த தமிழ் செல்வனே தாயகத்தை விட்டு எங்கு சென்றாய் கார்த்திகை கரி நாள் வந்ததுவோ காலனே உனக்கு கண் இல்லையோ எங்கள் செல்வனை ஏன் பிரித்தாய்? தமிழ் ஈழ செல்வனே வானத்தில் இருந்து பாருங்கள் என்றோ ஒரு நாள் மலரும் தமிழ் ஈழத்தின் ஒளி தெரியும்..

    • 12 replies
    • 1.5k views
  5. Started by வர்ணன்,

    என் முகம் தீய்ந்து போனாலும் மோசமில்லை - மோட்சமே உழைக்காமல் வரும் ஊதியமே சொர்க்கம் என்று ஆனாயேடா மொக்கா மொக்கா! என்ன சொல்ல ........... எரியும் சிதையினிடையே கைவிட்டு ..தகனம் கொள் பிணத்திடையிருந்து தங்கம் உருவ நினைக்குது மானிடம்! காலை எழுந்தவுடன் தேநீர் வேண்டும் கை கால் அமுக்கவும்.. அவளே வேண்டும்.. அடடா அடடா கை கால் அலம்பியதும் துடைக்க துண்டும் தந்து நீ கலையாத அழகு கொள்ள சுருங்கா ஆடையும் தந்து... நீ கல்யாணம் கொள்கையில் காலில் விழவும் செய்து... யோசி ... யோசி மலரை கசக்கி எறிய மடி நிறைய .. பொருள் கேட்குது..மானிடம்!! அடுப்படியில் ஒருத்தியை குந்த வைக்க... முற்பணமாய்- ஐம்பது இலட்சம் கேட்பது …

    • 3 replies
    • 1.5k views
  6. ஐயையோ...ஐயையோ....என்னவோ பண்ணுது.... ------------------------------------------- யாழ் களத்தில் அஜீவன் அண்ணா தலைமையில் "டாவின்சி கோட்'டை தமிழில் சினிமாவாக எடுக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது. தமிழ்ப் படமென்றபடியால் இடையிடையே ஒரு காதல் கதை ஓடவேண்டுமென்பதும் ......இரண்டு மூன்று பாடல் காட்சிகளும் இருக்கவேண்டுமென்பதும் படம் வெற்றி பெறுவதற்கான எழுதப்படாத சட்டமல்லவா...? . முழுக்க முழுக்க யாழ் கள நண்பர்களின் பங்களிப்புடனேயே இந்தப் படம் படமாக்கப்பட இருக்கின்றது. எனவே பங்கு பெற விரும்பும் கலைஞர்கள் உடனும் தொடர்பு கொள்ளுங்கள் முதல் முதல் படமாக்கப் படும் விடயம் மங்கள கரமாக இருக்க வேண்டுமென்பதனால் அந்தப் படத்திற்கான ஒரு பாடலைப் படமாக்குவதற்கு ப…

    • 104 replies
    • 12.7k views
  7. சில சமயங்களில்… நான் ஆசைப்படுவதுண்டு… என் அப்பாவைக் கொன்று எங்கள் வீட்டைத் தரைமட்டமாக்கி குறுகலானதொரு நிலத்துக்குள் என்னை விரட்டிய அந்த மனிதனை ஒரு துவந்த யுத்தத்தில் நேருக்கு நேர் சந்திக்க வேண்டுமென்று சில நேரங்களில் நான் ஆசைப்படுவதுண்டு. அந்தச் சண்டையில் அவன் என்னைக் கொன்றுவிடுவான் எனில் நான் ஒருவழியாக நிரந்தர அமைதியில் ஆழ்ந்துவிடுவேன்… இல்லையெனில், அவனைப் பழிவாங்கத் தயாராகிவிடுவேன். • ஆனால், துவந்த யுத்தத்தில் என்னுடைய எதிரியை எதிர்கொள்ளும்போது அவனுக்காக வீட்டில் அவனுடைய அம்மா காத்துக்கொண்டிருப்பாள் என்பதோ, குறித்த நேரத்தில் வராமல் கால்மணி நேரம் தாமதித்தாலும், தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கும் தந்தை ஒருவர் இருப்பார் என்பதோ எனக்குப் புலப்பட்…

  8. ''தூக்கு தமிழா துவக்கு...'' தூக்கடா தமிழா துவக்கு.... துட்டர் படையதை தாக்கு.... எம் மண்ணில் நாங்கள் ஆழனும்.... தமிழீழம் அதிலே காணணும்... சுதந்திரம் எமக்காய் வாழனும்... நாம் சுததந்திர நாட்டில வாழனும்... அடிமைகள் வறுமைகள் ஒழியனும்.... அவலங்கள் அதனூடே களையனும்... எம் தமிPழ் ஈழத்தை பார்கனும்... உலகே எம்மை கண்டு வியக்கனும்.... அவை யாவும் இன்றது நடக்கனும்.... அதற்காய் நீயது தூக்கு... தமிழா நீ தான் துவக்கு.... வன்னி மைந்தன்- வன்னி மைந்தன்-

  9. Started by மாறன்,

  10. Started by மோகன்,

    வாழ்தல் - வ.ஐ.ச.ஜெயபாலன் தொடுவானில் கை அசைக்கும் மணக்கோலச் சூரியன். பின்னே படுக்கை அறை வாசலின் நீலத் திரை அசைந்தபடி. எப்படியும் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம் பறவைகளாக உதிர்ந்து ஆர்ப்பரித்துச் சிதறிய வானம் இனி வீதியோரப் பசுமரங்களுள் அடைந்துவிடும். என் தலைக்குமேல் இன்று நிலா முழைக்குமா நட்சத்திர வயல்தான் பூக்கப் போகிறதா அல்லது கறுப்புக் கம்பளத்தில் பறக்குமா இந்த மாரி இரவு. கண் சிந்தும் பிரிவுகளில் நிறைகிறது வாழ்வு. ஒவ்வொரு தோழதோழியர் செல்கிறபோதும் காதலியர் வசைபாடி அகல்கையிலும் நாளை விடியாதென உடைந்தேன். இனி முடிந்ததென்கிற போதெல்லாம் பிழைத்துக் கொள்கிறது தாய் வீழ்ந்த அடியில் குட்டிவாழை பூக்கிற உலகு. ஒப்ப மறுக்கினும…

    • 6 replies
    • 1.7k views
  11. கார்த்திகை பூக்களே நலமா? கல்லறை தெய்வங்களே சுகமா? உறவுகள் நலமா? நீங்கள் துயிலும் தாய்மடி நலமா? தூயவர்ளே நீங்கள் துயின்ற துயிலும் இல்லங்கள் இல்லையே...!!! எங்கே போனீர்கள்? எங்கள் மனங்களில் நிம்மதி இல்லையே...!!! அட யார் அழுவது அங்கே?..... எங்கள் பிள்ளைகள் கண்மூடி துயின்றது தாய்மண்ணின் மடியில் அவர்கள் எப்போதும் வாழ்வது எங்களின் இதயங்களின் அடியில்.....!!! கடைசித்தமிழன் இறுதிமூச்சு இருக்கும் வரை எங்கள் கண்மணிகளின் நினைவிருக்கும். அவர்களின் கனவும் இருக்கும். கார்த்திகை பூக்களே நலமா? கல்லறை தெய்வங்களே சுகமா? உறவுகள் நலமா? நீங்கள் துயிலும் தாய்மடி நலமா? விதையாய் விதைத்தோம் …

  12. 2003 ம் ஆண்டு மாவீரர் நினைவாக வடித்த கண்ணீர் இன்றும் கார்த்திகை மாதத்து ஓளிக்கீற்றுக்கள் உலகெல்லாம் ஒரு தரம் எம் தேசம் நோக்கும் அற்புத நாள் தமிழீழ தீபம் அணையாமல் எரிந்திட தம்மை அழித்து அத்தீபத்தை ஏற்றிய உத்தம புருசர்களின் உன்னத நினைவுநாள் அடக்கி அடக்கியே சிங்களம் எம்மை அடிமைகளாக்கியபோது விலங்குடைத்து எம்மினத்தை விடுதலையாக்கிய வீரப்புருசர்களின் நினைவுநாள் சிங்களச் சீற்றர்களின் உறக்கம் கலைத்த உன்னத புருசர்களின் உத்தம நாள் புதியதோர் பரணி படைத்த புலித்தெய்வங்களின் நினைவு நாள் சுயத்தை தொலைத்து பொது நலத்தை நாடிய புண்ணிசீலர்கள் மக்களிற்காகவும் தாய் மண்ணிற்காகவும் விதையாகி எம்முள்ளே நினைவாகி நிலையான…

  13. என்னவள் எனக்கு தந்த ....அத்தனை நினைவு பொருட்களும் .....கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!என்னையும் அவளையும் ....ஓவியமாய் வரைந்ததை ....கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!என் காதலை திருப்பி தா ....கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....வலிகள் நெருஞ்சி முள்போல் ....குத்துகின்றன அவளுக்காக ....காதலையும் கொடுத்துவிட்டேன் ....!!!அவளுக்காக எழுதிய அத்தனை .....கவிதைகளையும், கிழித்து விட்டேன்....வரிகளை தான் மறக்க முடியவில்லை.......!நினைவில் என்றும் வைத்திருப்பேன் ....ஆயுள் வரை கவிதைக்காக ....ஆயுள் வரை காதலிப்பதற்காக ....!!!+கே இனியவன் காதல் சோக கவிதை உன்னை மறுக்கும் நேரத்தில்....என்னை மறக்கிறேன் ....உன்னை நினைக்கும் நேரத்தில் ...என்னை மறக்கிறேன் .....!!!என்னை மறக்கிறேன்...உன்னை நினைக்கிறன் .…

  14. வழுவழுப்பான யுத்த வீதியின் சலனமில்லா சதுரங்களில் சாம்ராஜ்ய சண்டைகளில் சமத்துவம் தேடி.......... கறுப்பன் வீழ்த்திய வெள்ளையனின் சிரசுகள் களத்தின் ஒரத்தில் கதியின்றி.... துண்டாடிய சிரசுகளில் சிப்பாய்க்கு சில்லறைகள். அரசிக்கு ஏன் ஆயிரங்கள் கட்டங்களில் முன்னேறி வெள்ளை ராஜாவின் கதைமுடித்து களம் இப்போ கறுப்பர் கையில் அளிவிலா பலம் பெற்றும் அரசனவன் போனபின்பு ஏன் ஆளாது அடங்கிப்போனாள் அரசியவள் ஆட்டம் ஓய்ந்து போச்சு மேசை மீதான வன்முறைகள் பலகை மேல் மரண வாடை உணர்வதில்லை குப்புறக் கவிழ்ந்த முகங்கள். …

  15. உலகை வளைத்து உள்ளே நாட்டை துளைத்து நுரைத்து பொங்கும் நாலு பெருங்கடல்!! பவளப்பாறைகள் அதை உண்ணும் மீன்கள் மீன் பிடிக்கும் மீனவன் என ஒரு சங்கிலி தொடருக்கு ஆதாராம்!! கட்டுமரம் முதல் கப்பல் வரை கட்டிக் காத்திடும் கடல்ராஜா இந்த பெருங்கடல்கள்!! நீலத்திமிங்கலம் நீந்தி பழகிடும் பென்குவின்களும் நடந்து சென்றிடும் டிஸ்கவரி காட்டாத இன்னும் பல உயிரினங்களை உள்ளே வைத்து ஆச்சர்யம் காட்டும் ஆழி பெருங்கடல்!! தண்ணீர் கொண்டு நாட்டை பிரிக்கும் எல்லை என்றனர் சிலர்!! ஆனால் தண்ணீர் கொண்டு நாட்டை இணைக்கும் பாலம் என்றனர் பலர்!! கடலின் அழகை ரசிக்க நினைத்தால் மகிழ்ச்சி பொங்கிடும்!! மாசுபடுத்தி அழிக்க நினைத்தால் …

  16. "நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்?" கண்களை திறந்து காலங்கள் மறந்து கடைசியில் வானத்தை பார்த்துக் கொள்வேன். மண்டியிட்டு அமர்ந்து மண்ணகம் குனிந்து கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன். உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்! நாளை உலகம் இல்லை என்றானால் அன்பே என்ன செய்வாய்? ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை ஒரு நாளில் வாழ்ந்துக் கொள்வேன். உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து இரு விழி மூடிக் கொள்வேன். மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து மரணத்தை மரிக்க வைப்பேன். நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்? காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும் பூலோகம் அழிவதில்லை. ஆயிரம் மின்னல் பிரிக்கின்றபோதும் வ…

  17. நாங்கள் பொங்குவோம் பொங்கலோ பொங்கல்... பொங்கலோ பொங்கல்... கல்லு மூண்டு வச்ச அடுப்பில கனதியான புது மண் பானை வச்சு முக்குறிகளை முழுசா அதற்கு வச்சு பக்கத்தில கட்டோட கரும்பு வச்சு புது நெல்லு மணி விளக்கி பசும்பாலும் நெய்யும் மனமா விட்டு பக்குவமா சக்கரை கலந்து பதமாக வெந்து வர முந்திரி வத்தலும் முந்திரிப்பருப்பும் ஏலத்தூளும் தூவி பொங்கல் பொங்கி வர வெடி சுட்டு பொங்கலோ பொங்கல் எண்டு பாட்டி குலவையிட பக்கத்துக்கு வீட்டிலும் முன் வீட்டிலும் கூட வெடியோசை வானைப் பிளத்தது பொங்கலோ பொங்கல்... பொங்கலோ பொங்கல்... இது முன்பொரு காலம். ஆனால் இப்ப முன் வீட்டு குடும்பம் இன்னும் முகாம்ல இருந்து வரயில்ல முள்ளு கம்பிக்குள்ள முழுசா அடைபட்டு இருக்கினம்…

  18. நான் தூங்க உன் மடி தேவை...... கவிதை.... என் காதலியின் நினைவில் கண்கள் கலங்கிட அவளை மனதின் முன் நிறுத்தி மறுபடியும் நினைக்கிறேன்..... என் நினைவுதெரிந்த முதல்கொண்டே அவளை நேசித்தேன்..... காலை தூக்கம் கலைந்தமுதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை என் சுவாசமும் அவள் தான்... என் குருதிச் சுற்றோட்டமும் அவள்தான்.... காலையில் கண்டால் பொன்னாக மினுங்கிடுவாள் மதியத்தில் பார்த்தால் நெருப்பாகக் கொதித்திடுவாள்... மாலையிலே மறுபடியும் மனதைக் கவர்ந்திடுவாள்.... இரவு என்றதும்; குளிர் நிலவைப்போல் குளிர்ந்திடுவாள்.... இயற்கையின் அனைத்து அழகையும் உள்வாங்கி மலர்ந்திடுவாள் என் மனதின் சோகத்துக்கு மருந்தாக அமைந்தி…

  19. கைகோர் தமிழா கைகோர்........! கைகோர் தமிழா கைகோர்........! இந்த பூமியில் வாழ கைகோர்...! தூய தமிழனாய் வாழ கைகோர்..! உழுதுண்டு வாழ்ந்தவர் நாங்கள்.! அதை உலகுக்கு தந்தவர் நாங்கள்.! நிலம் இன்றி அகதியாய் சிறுபான்மை......சின்னமாய் நாங்கள்! மூத்தவர் ஆண்டு சென்றுவிட... வந்தவர் நாம் மெனியாய் .. அடிமையாய் தொடர்கின்றோம் ......... எட்டு கோடியாய் உள்ளோம் ....! எட்டி உதைத்திட ஒன்று சேர்வோம்...... பூமியில் திசையெங்கும் வாழ்கின்றோம்.... சொந்தமாய் நிலம் ஒன்று சேர்ப்போம........ தொழுது நாம் வாழ்ந்த கோவில் அங்கு குண்டுகள் வீழ்கின்றது இன்று சிறு துண்டு தசைகளாய் வீழ்ந்து - சாகிறான் தமிழன் தினமும் ............. நிலாச் சோறு உண்ட முற…

  20. அகிலமெங்கும் உன் பெயர் குழந்தை அடிமை நாட்டில் நீ ஓர் தீவிரவாதி! ஆம் நீ ஓர் தீவிரவாதி! பார்வைக் கணையால் பதைக்க வைக்கும் நீ ஓர் தீவிரவாதி பறக்கு முன்னே உன் இறகொடித்த பின்னும் பார்வையால் கொல்லும் நீ ஓர் தீவிரவாதி! மனிதம் இழந்த‌ மனிதர் மத்தியில் மனம் தேடும் நீ ஓர் தீவிரவாதி! அப்படிப் பார்க்காதே அன்பே அதைத்தாங்கும் வலிவெமக்கில்லை மன்னித்து விடு தேவதையே இது மானிடர் வாழும் பூமி! தேவதைகளுக்கு இங்கே இடமில்லை! இல்லாத இறைவைனின் இறையாண்மை இங்கு வேதம்! அரசியல் சட்டமென்றோர் அரக்கச் சட்டையணிந்த‌ அசுரர் வாழும் அவனியிப் பூமி! தமிழனாய் பிறந்ததால் தன்மானம் இருப்பதால் சுடப்பட்டாய் நீ சுதந்திரம் கேட்டதால்! …

  21. அம்மா முகம் தெரியாது அகரவரியும் தெரியாது ஆண்டவனும் கைவிட்ட அநாதைகளாய் தமிழர் நாம் அகதிமுகாம்களிலே வாடுகிறோம்.. குளிப்பதற்குக் கூட கும்பலாய் தான் போகவேணும் குடிதண்ணீர் பெறுவதற்கும் குழந்தை முதல் குமரி வரை குத்துக்கல்லாய் நிக்கவேணும் கட்டிக்கொள்ள மாற்றுச்சேலையில்லை காலுக்கொரு செருப்புமில்லை கழிவறைக்குப் போவதற்கும் காவலுக்குச் சிங்கள நாய்கள் ரண்டு கன்னியரின் கற்பு எல்லாம் காடையரால் சூறையாட காட்டிக்கொடுக்கும் நாய்களும் கண்டபடி குதறிவிட கண்ணிரண்டால் பார்த்தும் கூட காதிரண்டால் கேட்டும் கூட கன்னியவள் கற்பை காப்பாற்ற முடியவில்லை எம்மால் நாலுசுவருக்குள் நடப்பதெல்லாம் நடுவெளியில் நடக்குதைய்யா தட்டிக்கேட்க யாருமில்லை …

  22. இந்த கவிதை 2016ம் ஆண்டு வைரமுத்து முள்ளிவாய்க்கால் போய் வந்து கவிதை எழுதிய நேரம், அதற்கு சாட்டையடி பதிலாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. மீண்டும் வைரமுத்துவுக்கு ஆதரவாக நமது மக்கள் கெம்பி திரியும் இந்நாட்களில் இதை மீள பதிவது சாலப்பொருத்தமாய் இருக்கும். எழுதியவர் யாரெனெத்தெரியவில்லை முள்ளிவாய்க்கால் போனவரே முள்ளிவாய்க்கால் போனவரே தமிழ் முத்து வைரக் கவியரசே இன்னல் நிறைந்த எம்வாழ்வை இரு கண் கொண்டு கண்டீராம் குலுக்கக் கையே இல்லையென கல்மனம் கலங்கி நிண்டீராம் தெள்ளுத் தமிழில் இனிதாக - நீர் தெளித்த கவிதை கண்ணுற்றேன். உம்மைப் பார்த்து ஒருவார்த்தை இளம் ஈழக்கவி நான் கேட்கின்றேன் கண்ணை மறைத்து இதுகாற…

    • 4 replies
    • 726 views
  23. மருதப் பாட்டு வ.ஐ.ச.ஜெயபாலன் கருகும் நீரில் தலைகீழாக மருத மரங்களும் என் நினைவுகளும் நெளிய சிற்றாறு நடக்கிறது. பறக்கிற குறு மணலோடு பார்வையில் தென்படும் இராணுவத் தடங்கள் கண்ணை உறுத்தியபோதும் போர் ஓசைகள் மவுனித்த துணிச்சலில் பாலியாற்றம் கரையில் இருந்தேன். இருந்தும் என்ன நம் வீர விந்துகள் இன்னும் சிறையில் என்பது நெருடும். தென்றலிலோ வரால் மீன்களின் இராப்போசனத்திலோ நாணல்கள் அசைகின்றன. வண்டின் பாடலில் மயங்கி மொட்டுகள் துகில் அவிழ்க்கிற மாலை. அழிக்கப்பட்ட காடுகளும் காடு மண்டிய வயல்களுமானதே நீர்ப் பறவைகளை இழந்த என் மருத வழி. எனினும் நீர் ஓடி நெல்தழைத்து நீர்ப்பறவை வான் நிறைய ஆம்பலின்கீழ் வரால் மறையும் நாளுக்காய் முட்டையாய் காத்திருக்கும…

  24. ____________________ எங்கள் யுத்தகால நிகழ்வுகள் பற்றி அவர்கள் கலந்துரையாடப் போகிறார்கள். யாரும் குற்றங்களை இழைக்கவில்லை என்றே எல்லா விசாரணைகளும் சொல்லுகின்றன. குழந்தைகள் எல்லாவற்றையும் அறிவார்கள் மிக மிக கொடிய இரவுகளை பனி படர்ந்திருந்த இரவுகள் என்றே அவர்கள் சொன்னார்கள். எல்லாருடைய கைகளிலும் குருதி பிறண்ட கோடுகள்தானிருக்கின்றன. சரியாக ஆயுதங்களை பாவித்தார்களா எனவும் சரியாக குண்டுகளை வீசினார்களா எனவும் சரியான இடத்தில் நிலை கொண்டிருக்கிறார்களா எனவும் எல்லா அறிக்கைகளும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. ஜனநாயக மேசைகளில் வடிந்து கொண்டிருக்கிற குருதியை ஏந்தும் எல்லா விசாரணைகளும் தந்திரம் வாய்ந்திருக்கின்றன. குழந்தைகள் மறுக்கப்பட்ட பூமியில் அ…

  25. சுனாமிப்பாதிப்பின்போது எழுதிய கவிதைகள் சுனாமியிலே மடிந்த எம் சொந்தங்களுக்குச் சமர்ப்பணம். ---------------------------------------------- கட்டடிப் போட்ட நாய்போல் காலை நக்கும் கடலே - உன்னை அழகியவோர் அவளாக நினைத்திருந்தேன் - உன் அலைச் சேலை உயர்ந்த பின்பு தான் தெரிகிறது நீ ஓர் அருவருக்கத் தக்க மிருகமென்று ஆங்கிலேயன் உனக்கு வைத்த தமிழ்ப் பெயர் சீ! ஐப்பானியன் தனக்குத் தெரிந்த தமிழில் உனக்கு வைத்தான் பெயர் சுனாமியென்று ஆமியடித்தது போதாதென்று சுனாமி நீ வேறு வந்திருக்கிறாய் பஃறுளி ஆற்றையும் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோட்டத்தையும் கொடிய நீ கொண்டாய் பூம்புகார் உன்னால் புதையுண்டு போனது துவாரகா நகரம் துவம்சமானது இவ்வாறுதான் நீ தென் குமரியின் வாழ்வை உன் வக…

    • 2 replies
    • 623 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.