Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் ஹைகூக்கள் ------------------------------------------------------------------------விஞ்ஞான தந்தை மெய்ஞான தந்தை கலாம் --------இளமையிலும் மாணவன் இறப்புவரை மாணவன் கலாம் --------கிராமத்தில் பிறந்து கிரகத்தை ஆராய்ந்தவர் கலாம் ---------இளைஞனின் கனவு விஞ்ஞானத்தின் அறிவு கலாம் --------அறிவியலின் அற்புதம் அரசியலின் தியாகம் கலாம்

  2. பச்சை புல்வெளி-------பச்சை புல் வெளியில் .....உச்சி வெய்யிலில் நின்றாலும் ....உச்சி குளிரும் மனிதனே ....உச்சி குளிரும் .....!!!கண் ......எரிச்சல் உள்ளவர்கள் ....கண் கூச்சம் உள்ளவர்கள் ....பச்சை புல் வெளியை ....உற்று பார்த்துவந்தால்.....கண்ணின் நோய்கள் தீரும் ....மனிதா கண்ணின் நோய்தீரும் ....!!!அதிகாலை வேளையில்....பனித்துளி பன்னீர் துளிபோல் ...சுமர்ந்துகொண்டு அழகை ...காட்டும் பச்சை புல்வெளியில் ....ஒருமுறை கை நனைத்துப்பார் ....குளிர்வது கை மட்டுமல்ல ....மனமும்தான் மனிதா....!!!பூமிக்கு இயற்கை கொடுத்த .....பச்சை கம்பளம் புல்வெளி ....துணிப்புல் மேயும் முயல் ....அடிப்புல் வரை மேயும் மாடு ....பறந்து திரியும் பட்டாம் பூச்சி ....பச்சைப்புல் வெளியின் கதகளிகள் ....!!! மரம் வளர்…

  3. அகர வரிசை அடுக்காக்கி அன்பே அமுதே அழகே என்று அடுக்கு மொழி பேசிலேன் அன்னைக்கு அடுத்ததாய் அகத்திலொரு அணியாய் கொண்டேன் அருகிருந்து நீ அன்பு வளர்க்க - இன்று அவதிப்படுகிறேன்..! அழகிய மலராய் அகிலம் வந்தாய் அகத்திலும் வந்தாய் அருகிருக்க மட்டும் அனுமதி மறுக்கிறாய் அன்பான உறவுக்கு அவசரம் ஏனோ அர்த்தமாய் கேள்வி கேட்கிறாய்...! அவலம் இவன் அன்பு தாழ் திறக்க அவதிப்படுவது அறியாயோ அருமலரே....! அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் அன்று அரிவரியில் அவசரமாய் உச்சரித்தது அர்த்தமாய் இன்று அதிர்கிறது மனத்திடலெங்கும்..! அது கேட்டு அரங்கேறத் துடிக்கிறது அன்பான குருவியதன் அருங்கவி..! அது ஒரு ஜீவகவி …

  4. படித்தேன் பிடித்தது.. பிடிக்கவில்லையா.. அடிக்கவராதீர்கள்.. கவி(கமல்) பாவம்.. அவர்தானே எழுதியது.. மனித வணக்கம் தாயே, என் தாயே! நான் உரித்த தோலே அறுத்த கொடியே குடித்த முதல் முலையே, என் மனையாளின் மானசீகச் சக்களத்தி, சரண். தகப்பா, ஓ தகப்பா! நீ என்றோ உதறிய மை படர்ந்தது கவிதைகளாய் இன்று புரியாத வரியிருப்பின் கேள்! பொழிப்புரை நான் சொல்லுகின்றேன். தமயா, ஓ தமயா! என் தகப்பனின் சாயல் நீ அச்சகம் தான் ஒன்றிங்கே அர்த்தங்கள் வெவ்வேறு தமக்காய், ஓ தமக்காய்! தோழி, தொலைந்தே போனாயே துணை தேடி போனாயோ? மனைவி, ஓ காதலி! நீ தாண்டாப் படியெல்லாம் நான் தாண்டக்குமைந்திடுவாய் சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை. மகனே, ஓ…

  5. கால்கள் போகும் திசையில் நடக்கின்றேன். கால வெய்யிலில் காய்ந்து விட்ட உடலோடு! கால்கள் மூன்றாகி நடக்கையில், மனம் மட்டும், அங்கும் இங்குமாய், மரம் விட்டு மரம் தாவும் குரங்காகின்றது! காலம் தான் எவ்வளவு குறுகியது! கிளித்தட்டு மறித்த கோவில் வீதிகளில், யாரோ பந்து விளையாடுகின்றார்கள்! களிப்போடு அவர்கள் எழுப்பும் குரல்கள், காதுக்கு இனிமையாய் இருக்கின்றன! கிட்டப் போய் விளையாட ஆசை வருகின்றது! அப்பு என்று யாரோ அழைப்பது கேட்கையில், ஆசை முளையிலேயே உயிர் விடுகின்றது! முதுமை என்பது, முந்திய அனுபவங்களின் இரை மீட்புக் காலம் போலும்! பழைய அனுபவங்கள் படமாக ஓடுகின்றன! இழந்து போன சந்தர்ப்பங்கள், எக்காளமிட்டுச் சிரிப்பது போல பிரமை! இமை வெட்டும் நேரத்தி…

    • 34 replies
    • 12.3k views
  6. நிலவின் வருகை: ஒரு இரவின் இடையில் உயிரின் கலசம் உடைந்தது உணர்வுகளின் ஆர்ப்பரிப்பின் உச்சத்தில் அவளை இறுகத் தழுவினேன் இறுக்கி அணைத்தேன் முத்தமிடா இடங்களை காதலின் உச்ச வரிகள் நிரப்பிச் சென்றன யுகங்களுக்கு அப்பால் இருந்து கால பைரவன் உயிரின் துளிகளை சுமந்து என்னிடம் தந்தான் என் தேவதையின் காதல் இடைவெளியை அந்த உயிர் துளிகளால் நிரப்பினேன் ஒரு மொட்டின் அசைவை தன்னில் என் தேவதை எனக்குச் சொன்னாள் ஆயிரம் கலவிகள் கடந்த வீரத்தையும் தன் நீந்தலையும் என்னுள் என் ஆண்மை தன்னைப் பற்றி வாய் வலிக்கச் சொன்னது 2 அந்த அறை எனக்கு கருவறை அந்த அறையில் ஒரு உயிரின் வருகைக்காய் காத்திருந்தேன் என் தாய…

  7. நான் என்றுமே நேரம் தவறுவதில்லை எல்லாம் உங்களிடம் கற்றுக் கொண்டதுதான் பிந்திச் செல்வதால் நீங்கள் படும் அவஸ்தையை பக்கத்தில் இருந்து அடிக்கடி பார்ப்பவன் நான் ..... நீங்கள் தள்ளாடி நடந்ததாய் எந்த பதிவும் இல்லை என்னிடம் எத்தனை மணிக்கு வந்தாலும் ''எல்லாரும் சாப்பிட்டாச்சா'' என்று கேட்பதில் நீங்கள் தனிரகம்.... அதிகாரம் செய்வது உங்களுக்கு பிடித்தமானதொன்று ஆனால் பணியாட்களிடமும் அன்பு தான் அடிக்கடி பொறாமைப்படுவேன் உங்களைபார்த்து ''எப்பிடிதான் இவரால மட்டும் முடியுதோ ''என்று ஆனாலும் அருமையான அப்பா எனக்கு !!!!!!! ''செய்யமாட்டேன்'' என்று சொல்லி அதை செய்துமுடித்து செய்யாதது போல இருப்பது உங்கள் கை வந்த கலை அது தெரிந்த போதிலும் உங்களிடம…

  8. வணக்கம் நண்பர்களே! இது ' வேங்கையன் பூங்கொடி" எனும் காவியம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யும் பகுதி.

  9. ......................................................................முகவரி ......................................................................இதய ராஜ மன்மதன் ......................................................................இதய இடதுபுற ஒழுங்கை ......................................................................காதல் குறுக்கு தெரு ......................................................................காதல் நகர் இன்று இலத்திரனியல் சாதங்கள் உலகையே ஆக்கிரமித்து விட்டன . காதலர்கள் இயந்திரமயமாகி விட்டனர் . கிடைக்கும் நேரத்தில் முகநூல் ,வாடசப் .ஈமெயில் வைபர் என்று இலத்திரனியல் சாதனத்தில் காதலை பரிமாறுகிறார்கள் அவை பரிமாற்று சாதனங்களாக இருக்கின்றனவே …

  10. 1989.... ஈழத்தில் இந்திய ஆக்கிரமிப்பு நேரம் புலியும் சிங்கமும் கைகுலுக்கிய காலம்.... பலாலியில் இருந்து சிங்கள விமானப்படை இருக்கை கழற்றிய வெற்று.. விமானங்கள் சில பல ஆயிரங்கள் கறந்து.. மந்தைகளாய் அடுக்கிப் பறந்தன தமிழ் இளைஞர்கள் கூட்டம்..! மேற்கு நாட்டில் அகதி அந்தஸ்துக்காய் அலையும் தமிழன் அணியணியாய் புறப்பட்டான்.. காணி விற்றும் தாலி விற்றும் பணம் திரட்டியே சொகுசாய் ஒரு வாழ்க்கை தேடி.. தாயக விடியலைப் பின்போட்டு தன் குடும்ப விடியலை முன் வைத்து...! 1990...... காலம் மாறிப் போனது குலுக்கிய கரங்கள் சண்டை இட்டன..! அதே இருக்கை கழற்றிய விமானங்கள் தமிழன் தலையில் பீப்பாய் குண்டுகளாய் கொட்ட... ஓடினவன் அதிஸ்டமென்…

    • 116 replies
    • 11.2k views
  11. ஒரு அழகான​ காலைப்பொழுது !சூரியன் மலைகளில் பட்டுத் தெறித்ததில் பூமியெங்கும் பரவசம் ! மலை விட்டு இறங்கிய​ அருவி மெதுவே தரை தட்டி நதியானது. பார்வை பட்ட​ இடமெல்லாம் திரும்ப​ மனமின்றி பதிந்து நின்றது. நதி நிலை அருகே தனி வழி நடந்தேன். கண் முன்னே கடவுளின் உலகம் போல் கரும் கல் மலை! நிமிர்ந்து பார்க்கும் போதெல்லாம் அந்த​ இயற்கை கட்டிய​ சுவரின் பின்னே இன்னுமோர் உலகமும், மனிதர்களும் இருக்கிறார்கள் என்கிற​ பிரமை எழுவதை தவிர்க்க​ முடியவில்லை. உயர்ந்து நின்ற​ அந்த​ மலை மௌனத்தின் பரிமானம் எனக்கு உணர் த்தி நின்றது. அடிவாரத்தில் போய் அப்படியே தங்கி விடலாமா, மனம் கேட்டது..! உற்றுப் பார்த்த​ போதெல்லாம் என்னை வாவென்று அழைக்கிறதோ, என்ணத் தோன்றியது. ' உனக்கும் எனக்கும் அதி…

  12. எமக்காகப் பிறந்தவர் எம்மில் பிறப்பாரா? வானத்து எல்லையெங்கும் வண்ணப் பூச்சொரியும் கார் காலத்து ஓர் இரவு களிப்பான மார்கழியில் ஞாலத்து இருளகற்ற நம் பாவம்தனை மீட்க காலத்தின் தேவைக்காய் கன்னி மகன் அவதரித்தார் ஓளியாக வந்த இந்த உத்தமனாம் இறை மைந்தன் வழியாக எம் வாழ்வில் வந்து பிறப்பாரா? துளிகூட அமைதியின்றி துன்புறும் சோதரரின் துயரைத் துடைக்க மனத் துணிவைத் தருவாரா? ஆயுதமே வேதமென்றும் அடக்குமுறை கொள்கையென்றும் அன்பை வெறுப்பவர்க்கு நற் பண்பைத் தருவாரா? ஆணவத்தின் பிடியினிலே அல்லலுறும் இப்பூமி காண்பதற்கு புது உலகக் கதவு திறப்பாரா? மனிதத்தைத் தொலைத்து விட்ட மகத்தான பூமியிலே தனிமனித நேயத்தை தரணியெங்கும் விதைப்பாரா? வன்முறைகள் சூழ்ந்த இந்த வக்கிர …

    • 3 replies
    • 11.2k views
  13. என்னை விட்டு நீங்கிய என் சுவாசமே .. உன்னை விட்டு நான் நீங்க வில்லை.. உன்னைவிட்டு நான் நீங்கினால் .. என்னை விட்டு நீங்கிவிடும் எந்தன் உயிர் தென்றலுக்கு தெரியும் வாசனை மீது மலர் கொண்ட நேசம் கடல் நுரைக்கு தெரியும் கடல் மீது அலை கொண்ட நேசம் முகிலுக்கு தெரியும் மேகம் மீது வானவில் கொண்ட நேசம் என் கவிதைக்கு தெரியும் நான் உன் மீது கொண்ட நேசம் - அனால் உனக்கு மட்டும் என் நேசம் புரியாமல் போனதேன் என் விழியன் பார்வையில் கலந்தவள் நீ என் இதயத்தின் துடிப்பில் உறைந்தவள் நீ என் உடலின் உயிரோடு சேர்ந்தவள் நீ என் நாடி நரம்புகளில் உணர்ச்சியாய் வந்தவள் நீ என் சுவாசமாக என்னுள் நுளைபவள் நீ என் பாதங்கள் செல்லும் பாதையாய் தொடர்பவள் நீ என் நிழலாக என்னோடு …

    • 17 replies
    • 11.1k views
  14. திலீபன்....... போர் மட்டுமே தெரியும் ........ புலிகளுக்கு என்றவர்க்கு....... நீர் ஆகாரம் கூட இலாது - புரட்சியில்... நீந்தவும் தெரியும் என்று சொல்லி........ தன்னை தானே........ வேருக்கு உரமாக்கிய செம்பருத்தி!! கூச்சல்களும் கூவல்களும் .... செத்து செத்து விழுந்தாலும்..... எதிரி கை முத்தமிடும் பிழைப்பும்..... தொடர் கதையாய் இன்னும் இருந்தாலும்... ஒரு சுடர் அணைந்து போச்சுதே...... இன்னும் இருட்டு..... இதயத்தின் ஒரு மூலையில்!! உயிர் உருக உருக ....... தனை எரித்து போனது ஒரு ....... ஊரெழுவின் வர்த்தி........ ஊருக்கு வெளிச்சம் வந்ததோ இல்லையோ........ உன் பேருக்கு - இறப்பு என்றுமேயில்லை! தியாகம் என்பார்.......... அதன் உச்சம் என்பார்…

  15. அம்மா அம்மா என்காத உயிர் இல்லையே அவள் இல்லையேல் வாழ்வு தொல்லையே! எம் தொல்லை என்றும் பொறுத்திருப்பாள் எம்மை கண் இமைபோன்று காத்திருப்பாள்! எம்மை காக்க அரும்பாடுபட்டாள் எம்மை சான்றோனாக்க பெரும்பாடுபட்டாள்! திட்டிப்பேசினாலும் வட்டிலில் சோறு வைப்பாள் நாம் பட்டினி கிடந்தால் மனம் துடித்திருப்பாள்! எம்மை காக்க இரவினில் விழித்திருப்பாள் எமக்காகவே உயிர் கொடுத்திருப்பாள்! தன் வயிறு பசித்திருந்து எம் வயிறு புசிக்க தன் உணவு சேர்த்து எம் வட்டிலில் போட்டு! நாம் உண்ணும் அழகு கண்டு தான் திருப்தி கொண்டு உள்ளம் களித்திருப்பாள்! தன் உயிர் கொடுத்து எம் உயிர் வளர்த்தாள் அன்னை! அவள்தான் நான் உலகில் வந்து கண்ட முதல் தெய்வம்.

    • 101 replies
    • 11k views
  16. எல்லாமே ... கடந்துபோகும் .... நீ மட்டும் ... விதிவிலக்கா ....? ஆயிரம் காலத்து .... பயிர் -திருமணம் .... காதலின் ஆயிரம் .... நினைவுகளை .... கொன்று நிறைவேறும் ...!!! வாழ்க்கை ஒரு .... நாடக மேடை .... காதலர் .... விட்டில் பூச்சிகள் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K A 00 A

  17. குட்டிகுட்டியாய் குழந்தை வரைந்த பறவைகளின் ஓவியத்தில் தன் குஞ்சுகளை தேடி வந்திருக்ககூடும் நிஜத்தில் ஒரு தாய் பறவை! -துங்கை செல்வா ..பெரம்பலூர்!

  18. முள்ளிவாய்க்கால் ஓரத்திலே விடிவு முடிவான காலத்திலே அங்கும் இங்கும் எங்கும் ஒப்பாரிகள் முதுமையான பசுமை நினைவை சுமக்கும் வாய்க்கால் இப்போது பயங்கரமாய் இரத்தம் கலந்த சிவப்பாய் மனிதரை அல்ல சடலங்களை சுமக்கிறது கந்தகப்புகையை சுவாசித்து வாழ்ந்த மக்கள் கையில்லாமலும் காலில்லாமலும் சிறைப்பிடிக்கப்பட்டார்கள் - ஓவியா- முற்காலத்தில் மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர் நேற்று அழுகுரல் எழுந்து ஊழித் தாண்டவமாடி இன்று சுடுகாட்டுச் சாம்பலாய்க்கிடக்கிறது தொடர் வேவுவிமான இரைச்சலில் மழையாயிற்று எறிகணை இழந்த உறவுகள் போக எஞ்சியவர் சித்தம் இழந்தனர் எல்லாம் சூன்யமாயிற்று அழுகுரல் நிரம்பிய மண் அதிர்விலிருந்து …

    • 6 replies
    • 10.8k views
  19. கல்லரை முன் கண்ணீர் சிந்தி கண்துடைக்க என்னை எழுப்பிவிடாதே உன் கருவறையில் ஜனனிக்க வேண்டும் நான்! ......................... உன் உள்ளங்கையில் குடியேற ஆசைப்பட்டு முற்றத்தில் சொட்டியது அந்திமழை ....................... உதிர்ந்தது பூ வலியில் துடித்தாய் நீ! .................... சொட்டுச்சொட்டாக உள் இறங்கி உரைந்துப் பனிச்சிலையானது! மனசெல்லாம் நீ! ...................... தீக்குள் விரலை வைத்தால் உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதடி நான் பூக்களை பரித்துவிட்டால் உன் பாதி உயிர் கரையுதடி நீ என்ன முரண்களின் மகளா! .................. என் உதடு யாத்திரீகன்கள் உன் …

  20. விழியும் மலரும்..!! மலர்ந்த அந்த பொழுதினில் வீசிய இதமான தென்றலில் மலர்களின் மெல்லிசை கேட்டு மலர்ந்தது என் விழி... மலர்ந்த விழி மொட்டுடைந்த அந்த மலரின் மெல்லிசை வந்த திசையினை தேடின..!! தேடிய அந்த விழியில் விழுந்ததோ பல மலர்கள் வாடின விழிகள்.. பூத்திருந்த மலர்களை பார்த்தும்.. மலர்கள் ஒவ்வொன்றினதும் இதமான சிரிப்பு விழிகளிள் விழுந்த போதும்..!! விழிகள் அதனை ரசிக்கவில்லை.. வீசிய தென்றலில் மலர்கள் தலையசைத்து விழியிடம்.. பேசின பல கதைகள்.. ஆனால் விழியோ மெளனம்..!! விழியின் ஏக்கம் அறியுமா மலர்கள்.. மலரின் குணம் அறியுமா விழிகள்.. மலரில் தேன் அருந்த தேனிக்கள் மெதுவாக …

    • 53 replies
    • 10.6k views
  21. மதமதை மதமதை நீயிழிப்பாய் மடமையில் இன்றதை நீ செய்வாய் ஒன்றதை ஒன்றதை நீ மறந்தாய் உன்னிலை மீதிலே நீ உமிழ்ந்தாய்... அறிவுரை அறிவுரையென விரித்தாய்- அந்த அறிவினையதிலே நீ வீழ்ந்தாய் ஊழ்வினை ஊழ்வினை உள்கணக்க வேறென்ன வேறென்ன நீயுரைப்பாய்... இரும்பது மீதிலே ரயிலோடும் இல்லென இல்லென நீயுரைத்தால் உன்னிலை உன்னிலை என்னவென்போம் ஊழ்வினையதுவே மேலே என்போம்... பார்வையிழந்தவர் குருடராவார்- நீ பார்வையுள்ள குருடனானாய் எத்திசை எத்திசை பார்த்திடினும் எல்லாம் உனக்கு இருளதுவே... மெய்யது பொருளது என்னதுவோ மெய்யென நீயானால் சொல்லிடுவாய் வேரது இல்லா மரமேயென்றால்- நீ வேறு கண்டத்து பிறவியாவாய்...

  22. தோற்றுப்போனவர்களின் பாடல் சிங்களத்தில்; மொழிபெயர்ப்பு: அஜித் ஹேரத் பிரசுரம்: ஜேடிஎஸ் சிங்களம் பாசனா அபேவர்த்தன http://www.jdslanka....-05-27-13-16-53 POEM WITH DHEPAM TV INTERVIEW Listen My poem and interview http://www.facebook.com/reqs.php?fcode=56c1a1166&f=1281801813#!/profile.php?id=826038684&v=app_2392950137 தோற்றுப் போனவர்களின் பாடல் எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனெனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்…

    • 41 replies
    • 10.5k views
  23. [size=4]வாழ்க்கை ஒரு போராட்டம் போராடும் வரை லட்சக்கணக்கான விந்தணுக்களுடன் சண்டையிட்டு போராடி தான் பிறக்கின்றோம் போராட்டத்தில் பிறந்து போராட்டத்தில் வளர்ந்து போராட்டத்தில் மடிவது தான் நம் வாழ்க்கை பிறப்பதற்கே லட்சக்கணக்கான அணுக்களை வென்ற நம்மால் வாழ்வதற்கான போராட்டத்தில் வெல்ல முடியாதா என்ன?!!! வாழ்ந்து தான் பார் நண்பா...[/size]

    • 5 replies
    • 10.2k views
  24. முரண் இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை ~நாயே!பன்றியே!குரங்கே!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.