கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இனித்தூங்கி கிடக்கோம்.. குரல் ஓங்கிக் கொடுப்போம்.. கண்ணைமூடி வணங்கும் போது கரும்புலியே உன் வதனப் பட்டொளி பார்த்தேன்..... காலங்கள் அழிக்காமல்.. காட்டாறு கலைக்காமல்-ஈழ மாந்தர் தம் இதயத்தில் நீர் போட்ட கோலம்... எத்தனை அழகு... எத்தனை நிறைவு... எத்தனை ஈகம்... எத்தனை வீரம்... மானம் துறக்காமல்... ஈனம் அழித்தவரே... தாயை தலை நிமிர்த்த எதிரி தலைகளெடுத்தவரே.. உங்கள் துயிலகங்கள்.. எங்கள் இதயங்கள்... என்றும் நினைவோம்... என்றும் கண்ணீர்மழை காணிக்கை செய்வோம்.. வீரவணக்கங்கள்.. விழுதான விருட்சங்களே.. இனித்தூங்கி கிடக்கோம்.. குரல் ஓங்கிக் கொடுப்போம்.. ஈழம்..மலரும்வரை.. செந்நீரை இறைப்போம்.. எம் போரை நினைப்போம் வாழ்க தமிழ்.. …
-
- 8 replies
- 1.8k views
-
-
-
சாகத் துணிந்தவர் கூட்டம் சாகத் துணிந்தவர் கூட்டம், ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம். சாகத் துணிந்தவர் கூட்டம், ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம். வேகமுடன் பகை வீடு எரித்திடும் வீரப் புலிகளின் கூட்டம். வேகமுடன் பகை வீடு எரித்திடும் வீரப் புலிகளின் கூட்டம். சாகத் துணிந்தவர் கூட்டம், ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம், ஈழத் தாகத்தை சுமந்திடும் கூட்டம். தூங்கிடும் கூட்டம் என்று எம்மை நினைத்தனர், வேங்கைகள் கூட்டமடா, தமிழ் வேங்கைகள் நாங்களடா. தூங்கிடும் கூட்டம் என்று எம்மை நினைத்தனர், வேங்கைகள் கூட்டமடா, தமிழ் வேங்கைகள் நாங்களடா. ஆண்டி பரம்பரையாக்கவோ எங்களை, ஆண்டி பரம்பரையாக்கவோ எங்கள் - ஆண்ட பரம்பரை நாங்கள் - ஈழம் ஆண்ட பரம்பரை நாங்கள், ஆண்ட பரம்ப…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஈழத்திரு நாட்டில்.. பூர்வீகமாக வாழ்ந்த மண்ணில்.. அடிமைப்பட்ட மந்தைக் கூட்டம் ஒன்றின் விடுதலைக்காய் புலி ஒன்று சொந்த வாழ்வை சொத்தாக்கி உழைத்தது. கூட இருந்த குள்ள நரிகளும் எட்ட நின்ற ஓநாய்களும் மந்தைகளின் வளர்ச்சி கண்டு வாயூறி நின்றன. சில கறுப்பாடுகளும் பட்டியில் காட்டிக்கொடுக்க தயாராகி நின்றன. அப்பப்ப திருடித் தின்றதை விட... ஒட்டுமொத்தமாய் தின்று தீர்க்க தீனியாக்கிட கூட்டுச் சேர்ந்து கும்மாளம் அடிக்க ஓநாய்கள்.. சிங்கத்தின் குகையதில் கழுகுகளின் காலடியில் தவம் கிடந்தன. கால நேரம் வாய்ப்பாகிப் போக சிங்கம் ஒன்றின் பேரினக் கோரப் பசிக்கு மந்தைகள் இரையாகின. சுற்றித் திரிந்த காகம்..கழுகுகள் மிச்சம் தூக்க.. ஓநாய்கள் எலும்பி பொறுக்கி …
-
- 9 replies
- 1.8k views
-
-
ஒப்பாரி வீட்டிலும் அழகு ஒன்றுகூடலிலும் அழகு -------மலர் மாலை--------- @@@ தொண்டனுக்கு பிழைப்பு தலைவனுக்கு உழைப்பு -------தேர்தல் ----------- @@@ உடல் முழுதும் நெருப்பு த்துளை வருத்தினாலும் இன்பம் தருகிறது -------புல்லாங்குழல் ------- @@@ இன்பமென நினைத்து இன்பத்தை இழக்கிறான் -----குடிகாரன் ----- @@@ வானம் திரவமாய் தரும் தங்கம் நிலம் தங்கமாய் மாற்றும் திரவம் -----பருவ மழை ------
-
- 9 replies
- 1.8k views
-
-
Posted by சோபிதா on 19/08/2011 in புதினங்கள் | 0 Comment நேசித்த இதயத்திற்கு பாசம் அதிகம் என்றார்கள் ஆனால் உன்னால் அறிந்து கொண்டேன். காதலித்த இதயத்திற்கு வலிகளும் அதிகம் என்று நான் உறவுகள் அற்று தனிமையில் துடித்த போது சொல்லாமல் வந்த உறவு நீ. முகவரி இல்லாத என் வாழ்க்கைக்கு முழு நிலவாய் வந்தவளே. இன்று நான் காதல் பைத்தியத்தில் கண்ணீரோடு அலைகின்றேன். உன்னை நேசித்த பாவத்திற்கு விடை கூறாமல் சென்றவளே விடை பெறும் நேரத்திலும் நினைவுகளை மட்டும் தந்தவளே இன்று உன் கழுத்தில் தாலி என்னும் பாசக்கயிரை கட்டி கணவன் என்னும் நாடகம் போடுபவனை பார்த்து எரிகின்றது என் இதயம்…… உன் வாழ்வின் எல்லை வரை சந்தோசங்கள் மட்டுமே நடை போட வாழ்த்துகின்றது என் உள்ளம் http://ww…
-
- 2 replies
- 1.8k views
-
-
திசைகள் புணர்ந்த இடத்திலிருந்து திரும்பத்தொடங்குகிறேன். நான் நீ இனி முத்தமிட்டுக்கொள்ளலாம். முன்னைய முத்தத்தின் நினைவுகள் கூடாதவகையில் முத்தமிடு. இனியொருபோதும் நிகழமுடியாத சந்திப்பின் இறுதி முத்தமென்று நினைவில்கொள் முத்தமிடு. சாம இரவுகளில் வெற்றுத்திடல்களில் சுடரும் ஒளியிறக்கி முத்தமிடும் மின்மினிகளைப் பார். பேரண்டத்தின் மூர்க்கம் கொண்ட மூலையில் இருந்து எடுத்துவை முத்தத்தை. இதழ் ஊறும் காமம் தீண்டி உயிர்க்கும் விரல்கள் இறந்துபோன காலமொன்றினை கடந்துவரட்டும். மேனிகுழல் வாய்முத்தம் இசைக்கின்றன துவாரங்கள் கனப்பொழுதொன்றில் வித்துறை உடைந்து நிலம் கிழித்து எழுகிறது முளையம், அன்பு. ஒற்றைப் பார்வைக்கும் மற்றைச்சொல்லுக்கும் ஒத்திவைக்கும் …
-
- 10 replies
- 1.8k views
-
-
[size=4]அஞ்சாதா சிங்கமென்றும்[/size] [size=3][size=4]அன்றெடுத்த தங்கமென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞனெனில் நானோ கவிஞனில்லை என்பாட்டும் கவிதையல்ல. பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்முழுதும் வேடமிட்டு மடத்தில் உள்ள சாமிபோல் மாமாய கதையுரைத்து வகுத்துணரும் வழியறியா மானிடத்து தலைவரென்று பிழைத்திருக்கும் ஆண்மையில்லா பேதையனே கவிஞனெனில் நானோ கவிஞனில்லை[/size][/size] ******** **********************…
-
- 11 replies
- 1.8k views
-
-
நன்றி சொல்லவார்த்தை இல்லை நண்பனே உனக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை தானாடாவிட்டாலும் தசை ஆடும் உன் போராட்டம் உலகையே ஆட்டும் கொடியவன் சிங்களன் கொடுமைகளை ஈழத்தமிழனைக் கொன்ற கொடுங்கோலரை வெளிக் கொணரும் உன் போராட்டம் உளி போல உனக்கு நான் ஒளிபோல எனக்கு நீ தமிழன் நீயடா தலை நிமிரடா; வெளியேறும்சிங்களம் ஒருநாள் தெளிவாகும்தமிழீழம் மறுநாள் தனியாக நீயில்லைத் தமிழா என்னோடு தரணியெங்கும் தமிழன் உன்னோடு முகம் தெரியா முத்தமிழா உனக்கு என் வீரமுத்தங்கள்; ;
-
- 9 replies
- 1.8k views
-
-
நாங்கள் புலம்பெயராத தமிழர்கள்....... பிணங்களின் ஓலங்களையும் இழப்புக்களின் வலிகளையும் சகித்தபடி சிந்தனைகளைப் புதைத்து விட்டு தூங்கப் பழகியிருக்குறோம் வீட்டின் கோடியில் இற்றுப்போன உடல்களின் எஞ்சிய எலும்புகளின் நடுவே அமைதியாக இருந்து உணவருந்திக்கொள்கிறோம் கோப்பையில் இருந்து எழும் சொந்தங்களின் இரத்த வாடையை நினைவுபடுத்தாது தேநீரை சுவைத்துக்கொள்கிறோம் விடுதலைக்காய் வீழ்ந்தவர்களின் நினைவுகளை சுமந்த நாட்களில் கொடிகளைப் பிடித்தவாறு ஆக்கிரமிப்பாளர்களின் தேசிய கீதங்களைப் பாடிக்கொள்கிறோம் ஏசிய வாய்களால் யூதாஸ்களைப்பாடி எங்களின் மீட்பராய் துதித்துக்கொள்கிறோம் இடித்துக் கொட்டப்பட்ட கல்லற…
-
- 7 replies
- 1.8k views
- 1 follower
-
-
வானம் வசப்பட்ட கதையிது தொடரும் வானத்தை அண்ணாந்து பார்த்து நடுங்கிய நாட்கள் பனை நெஞ்சின் பின்னும் பதுங்குழிகளிலும் பதுங்கிக் கிடந்தோம் இன்று குனிந்த முகங்கள் நிமிர்த்தி கொஞ்சம் சிரிக்கிறோம்! தலைவன் புண்ணியத்தில் தலைநகரில் பெரும் தீயெழ உலகத்தமிழர்களின் உள்ளத்தில் பெருமகிழ்ச்சி எத்தனை ஆண்டுகள்தான் இனவெறி எச்சங்களை எங்கள் தலைகளில் கொண்டு வந்து கொட்டுவீர்கள்? எங்கள் உயிர் வலியின் உச்சங்களை உணரத் தவறியவர்களே உணர்ந்து கொள்ளுங்கள்! வான் ஏறிவந்து இனி உங்கள் தலையிலும் குண்டுகள் கொட்டுவோம்! எங்கள் புலிகளுக்கு பாய்வதற்கு மட்டுமல்ல பறக்கவும் தெரியும் பார்த்ததும் பதைத்தீர்கள்;! இனி என்ன செய்வதாய் உத்தேசம்? வ…
-
- 11 replies
- 1.8k views
-
-
என்னதான் பெரிதாய் .. ஒப்புக்கு ஜனநாயகம் பேசு........ என்னமோ பெரிதாய் ஊரோடு ...... சண்டைக்கு வா.! என்னதான் பெரிதா... ஏதும் வேசம் போட்டாலும்....... தென்னை ஓலையில் வளர்த்திய...... உன் தங்கை உடல் பார்த்து அழுவாய்.....அழுதே ஆவாய்..! கன்னமது சுட்டு கொண்டு ஓடி ........ உன் கரங்களில் பட்டு தெறிக்கும்....... கண்ணீரில்....... எழுத்துக்கள் வாசி........! குளிர் காய நினைத்து...... வீட்டை எரித்தாய்....... குப்பி விளக்கை அணைத்துக்கொண்டு...... கூரைமீது படுத்தாய்..! பற்றி எரிகிறது பார் - இப்போ....... நீ சுமந்த பாவம் ........ உன்னை கொல்லும்......! நாம் நேசிக்கும் பூமி....... நாமிருக்கும் வரை- என்றும் உன்னை வெல்லும்! 8)
-
- 9 replies
- 1.8k views
-
-
-
தமிழன் புகழ் வானில் உயர்ந்தது வரி உடை அணிபவன் ஆணையில் பறந்தது! திரி சடை சிவனும் திடுக்கிட்டு மூன்றாம் விளி திறந்தான் ... முகமலர்ந்து வாழ்த்தினைப் பகர்ந்தான்... சிங்கங்கள் முகத்தை அஷ்டகோணலாக்கி அ'சிங்கங்கள்' ஆயின! பறந்தது உண்மை குண்டு விழுந்ததும் உண்மை இருந்தது இருந்தபடியே இருப்பதாக அறிக்கை வாந்தி எடுத்தார் அரசாங்க அமைச்சர் அவர் மனசுக்குள் நிறைய எரிச்சல்! உலகம் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே 'அது எப்படி புலி வானில் பறக்கலாம்?' என்று வேதாந்தம் பேசின... வெறும் அறிக்கைகள் வீசின! இறக்கைகள் விரித்து இன்னும் இன்னும் பற என்று தமிழர் வாய்கள் பேசின...! …
-
- 6 replies
- 1.8k views
-
-
பள்ளிப்பருவத்திலே சித்திரம் வரைவதில் வாலி அவர்கள் மிகவும் முனைப்பாக இருந்தாராம். அப்போதைய காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஒவியத்தில் கரை தேர்ந்து இருந்தவர் ஓவியர் “மாலி”. அவரது தீவிரமான ரசிகரான இவருக்கு, பள்ளித் தோழன் பாபு என்பவன் ” வாலி ” என்னும் பெயர் சூட்டி ஓவியத்தில் மாலியைப் போலவே நீயும் ஒரு கலக்கு கலக்குவாய் என்று வாழ்த்தினானாம். அப்போது அவர் பாரதியாரின் ஒவியம் ஒன்றை வரைந்து அதன் கீழ் வாலி என்று கையொப்பமிட்டு அதைத் தனது தமிழ் வாத்தியாரிடம் காட்டினாராம். அதைப் பார்த்துப் பாராட்டிய தமிழ் வாத்தியார் “உனக்குத்தான் வாலில்லையே, அப்புறம் ஏன் வாலி என்று பெயர் சூட்டினாய்?” என்று கேட்டாராம். அதைக் கேட்ட சுற்றி நின்ற மாணவர்கள் சிரித்து விட்டார்களாம். அப்போது ஒரு துண்டுக் காகித…
-
- 4 replies
- 1.8k views
-
-
(கரும்புலித்தினம் நினைவாக ......) லட்சியம் வெல்வோம் சத்தியம் செய்வோம்....... உயிரை பாலாக்கி உரமூட்டி அனுப்பிவைத்தோம் உயிரினும் மேலாம் தமிழ் ஈழ விடுதலைக்கு உரமாகி போனாயோ உயிர் மீண்டு வந்திடுவாய் .. களமாடும் படையினிலே கரும்புலியாய் ஆகு மட்டும் கருத்துடனே காத்திருந்து கண்ணியமாய் வாழ்ந்த வரே காவியமாய் போனீரோ காலன் அவன் நாடினிலே கரை தெரியாக் கடலினிலே கப்பல்களை களையெடுக்க காட்டாற்று வேகமுடன் களமாடிய காளைகளே கன்னியர் காவிய வீரர் தினம் நினைப்போம் லட்சியம் வெல்வோம் சத்தியம் செய்வோம்
-
- 9 replies
- 1.8k views
-
-
அப்பால் தமிழ் இணையத்தளத்தில் வெளிவந்துள்ள கவிதை இது. படித்தேன். பிடித்திருந்தது. பகிர்கிறேன். எதிரிக்காயும் கவலைப்படும் உள்ளம் தமிழர் உள்ளம் என்பது கவிதையில் மீண்டும் வெளிப்படுகிறது. போர்த்துக்கீசரில் தொடங்கி, சிங்களவரிடம் வந்து... கவிஞர் மிக இயல்பாகவும், கவிநயத்தோடும் கவிதை வடித்து வைத்துள்ளார். இந்தக் கவிதையை வாசித்ததும் எனக்கு நினைவில் வந்த வரிகள்: இசையை மட்டும் நிறுத்தாதே எழுதியவர்: க.வாசுதேவன் 1. அமெலியா, போர்த்துக்கல் அழகியே, நீ சற்று அதிகமாகவே குடித்துவிட்டாய் இன்று இது எம் இறுதி இரவு சாளரத்தினூடே பார் இருள் அடர்த்தியாக இருக்கிறது வானெங்கும் அளவிற்கதிகமாகவே விரவிக் கிடந்தாலும் நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்? …
-
- 5 replies
- 1.8k views
-
-
இரசியப் புரட்சியை காளியின் கடைக்கண் பார்வை எனவும் யுகப் புரட்சி எனவும் போற்றிப் பாடியதால் புரட்சிக் கவிஞன் ஆனவன் ஒவ்வொரு கவிக்கும் இசையோடு தாளமும் கொடுத்து ஓசையோடு நயம் கொடுத்து எழுதி வைத்ததால் இசைக் கவிஞன் ஆனவன் பெண்ணடிமையை எதிர்த்ததால் பாஞ்சாலி சபதத்தில் மனுதர்ம சாஸ்த்திரத்தை திரிபு படுத்திய சாஸ்த்திரம் என்றதால் புதுமைக் கவிஞன் ஆனவன் கோகுலத்துக் கண்ணனைத் தன் காம வேட்கை தீர்க்கும் காதலனாக்கிப் பாடியதால் தன்னினச் சேர்க்கைக் கவிஞன் ஆனவன் இன்னும் குழந்தையாக்கிப் பார்த்ததனால் paedophile கவிஞன் ஆனவன் தமிழர் ஆண்ட மண்ணை மறவர் வீரம் படைத்த நிலத்தை சிங்களத் தீவென்றழைது அறியாமையை வெளிப்படுத்தியதால் அறிவிலியான கவிஞன் ஆனவன். …
-
- 13 replies
- 1.8k views
-
-
மன்னிக்க நண்ப....! வாசல் தாண்டி உன் மிதிவண்டி வைரவர் கட்டில் கால் தாங்கி நிமிரும். எங்கோ பார்வைகள் போவதாய் கொள்ளையிட்ட உன் மெளனப் புன்னகை இன்னும் விடுபடாமல்.... கண்ணுக்குள் கவிதையெழுதிய - நீ நெஞ்சுக்குள் இருந்த நினைப்பை ஏனோ நெடுங்காலம் அடைகாத்தாய் ? நேரம் வருமென்று காத்திருந்தா இல்லை நெருப்பிது சுடுமென்றா போகவும் வரவும் புரியாத பார்வை தந்தாய் ? கனவுக்குள் காதல் நினைவுக்குள் கரைந்த உன் பார்வைகள் நினைவுக்குள் அறுபடாமல்.... இன்னும் நினைவில் இருக்கிறாய்.... காலம் தந்தது உனக்காய் ஒரு கவிதை மட்டும் தான். மன்னிக்க நண்ப, மறுபடி ஒரு கவிதை உனக்காயில்லை மன்னிக்க நண்ப..... 20.12.2001
-
- 6 replies
- 1.8k views
-
-
ஒரு பெண்ணின் அழுகை...... மணம் முடிச்சு இன்னுடனே மாசம் மூணு ஆகி போச்சு.... ஆனாலும் மனசதிலே சங்கடமே சூழ்திருச்சு.... காலம் எல்லாம் கண்ணீரிலே வாழும்படி ஆகிருச்சு.... ஏறி வந்து ஆட்டம் போட்ட இன்பமெல்லாம் ஓடிருச்சு..... கட்டி வைச்ச கற்பனையும் கணப்பொழுதில் உடைஞ்சிருச்சு... நல்ல வாழ்வு தேடி நாம நாடு மாற முனைகயிலே... எவனோ வந்து என்னவனை எங்கோ கடத்தி போனாங்களே....??? என்ன ஏதோ தெரியவில்லை இன்னு வரை பதில் இல்லை.... காணவில்லை பட்டியலில் கணக்கு சேர்த்து போட்டாங்களே.... ஜயோ ராசா கண்ணு முன்னே அவலம் வந்து சூழ்ந்திருச்சே..... ஆண்டு பல வாழ வேண்டி ஆசை பட்ட …
-
- 6 replies
- 1.8k views
-
-
மாயை… - வ.ஐ.ச.ஜெயபாலன் . இலையுதிர்கால சருகுகளாய் உலகமெங்கும் சிதறினமே அம்ம நீ போனது எங்கடி அனுதினம் உன்னையே தேடினேன். இனிவழி ஏதென நோகையில் இணையத்தில் வந்து கண் சிந்தினாய். நீயுமா தேடினாய் கண்ணம்மா?. எல்லை இலாத மின் அம்பலம் அங்கு ஏங்கும் மனசுகள் சங்கமம் உந்தன் இருப்பை உணர்வதில் உயிரே மயங்குது கண்ணம்மா . இணைவெளியிடைக் கண்ணம்மா உந்தன் எழிலில் மொழியில் கரைகிறேன் அகதி அழிந்திடும் அன்பிலே ஆதரவான மொழியிலே. ஆவியைத் தின்கிற கண்ணிலே போதை ஆசை சிவந்த இதழ்களிலே காட்ச்சியும் பேச்சுமே…
-
- 5 replies
- 1.8k views
-
-
நான் கவிதை எழுதியது நிஜம் அவன் உள்ளம் கவர்ந்ததும் நிஜம் அவன் சிந்தனைகளுக்கு சவால் விட்டதும் நிஜம் நான் காதல் கொண்டது நிஜம் அவனால் நேசிக்கப்பட்டதும் நிஜம் காதல் அன்பு பார்த்து வந்ததும் நிஜம் என் காதல் கல்லறைக்குப் பூத்ததும் நிஜம் நான் கண்ணீர்க்கு வாக்கப்பட்டதும் நிஜம் என் காதலன் நேசமானவன் என்பதும் நிஜம் ஆனால் நேசத்தை நிரூபிக்க காதல் நிஜமில்லாமல் போனதும்... நிஜம்..!! நன்றி: நித்தியா www.suduvanam.blogspot.com
-
- 7 replies
- 1.8k views
-
-
துணிந்து எழு!துடுப்பு எடு! என் இளைய தோழா! இரு கைகளிலும் இருப்பது உளியென விரல் கொண்ட தோழா! நீ எழுந்து வாடா! "எட்டாத பழம் புளிக்கும்" என்பதும் கிட்டாதாயின் வெட்டென மற"ப்பதும் உன் முயற்சிக்கு முட்டாள்கள் போட்ட முட்டுக்கட்டைகள்! எங்கே தவறை நீ தட்டிக்கேட்க துணிந்து விடுவாயோ என தம்மட்டம் அடித்து தற்பெருமைபேசும் வெட்டி மனிதர்கள் போட்ட சட்டங்கள் 'அடிபடு! வாழ்க்கையில் அனுபவத்தால் அடிபடு! சுடச்சுட பொன் மிளிரும் புண்படப்படத்தான் பண் பட்டு மனம் உறுதியில் திகழும்! வெட்டுப்பட்டாலும் மரம் தளிர்கிறதே முட்டிமுட்டி மோதி போட்ட வித்தும் விண்ணை எட்டி விடத்துடிக்கிறதே! என் தோழா! ஒரு தோல்வியில் நீ கலங்கலாமா? விழும் ஒவ்வொரு …
-
- 7 replies
- 1.8k views
-
-
மெல்லிதாய் மேலெழும்பி நாள் தோறும் புலர்ந்து மறையும் வலையுலக நாழிகைகள் நடுவே தொலைந்து போகின்றன எங்களின் உணர்வலைகள்! நிரூபனின் நாற்று ஆண்கள் மட்டும் தான் அதிகம் எழுதலாம் என்பதும் அவர்கள் மட்டும் தான் தம் உணர்வுகளை உச்சுக் கொட்டலாம் என்று கூறுவதும் யார் இங்கு இயற்றி வைத்த சட்டமோ தெரியவில்லை! எங்களுக்குள்ளும் சாதாரண மனிதர்களைப் போன்ற மன உணர்விருக்கும், எம் உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து எழுதிட இணையம் வாய்ப்புத் தந்தது- ஆனால் எம் இடையே உள்ள பச்சோந்திகளும், நரிகளும் காழ்ப்பில் எம்மைக் கொல்கிறார்கள்; காம சுகம் தேடும் மோகத்தில் அலைந்து காறி உமிழ நினைக்கிறார்கள்! நாளைய பெண்களின் விடுதலை நம் உளத்தில் தோன்றும் இன்றை…
-
- 16 replies
- 1.8k views
-
-
ஒரு சொல்லில் கவிதை கேட்டாய் அசைந்தாடும் 'அலை'களென்றேன் பால்நிலவில் நனைந்திருந்தால் அலை அழகு கவி என்றாய். வானமகள் பானம்விடும் 'வானவில்'லைச்சொன்னேன் சாரல் மழை சேர்ந்தாலே-அது சந்தக்கவி என்றாய். தென்றலுக்கே தெரியாது திறந்து கொள்ளும் 'பூக்கள்' என்றேன் வண்டினம் வந்து பாடாமல் அதில் வடிவு கவி ஏது என்றாய். வ…
-
- 10 replies
- 1.8k views
-