Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சுதந்திரத்தின் வலி தெரியாது தந்திரத்தால் வந்த சுதந்திரத்தை கொண்டாடுதாம் சிங்களம் தமிழனின் ரத்த வாடையுடன் கொண்டாடுதாம் சுதந்திரத்தை கேடுகெட்ட சிங்களம் ரெண்டுக்கும் சுதந்திரம் போய் கனகாலம் வடக்கில் ஒரு கூட்டம் சுதந்திரம் எங்கேயெண்டு தேட கிழக்கிலே ஒரு கூட்டம் உதயமாகுதெண்டு லூசுக் கதை கதைக்குது சுதந்திரம் போய் கனகாலம் வெள்ளை போட்ட பிச்சையை போராடி பெற்றதெண்டு கொண்டாடும் பே சிங்களமே சுதந்திரம் உனக்குமில்லை எனக்குமில்லை என்பதை எப்பொழுது உணரப்போகிறாய்...?

  2. Started by nunavilan,

    காதலி மலர்களிலும் சிறந்தவளே என் கரம் மறுத்த கனிமொழியே - உன் கண்ணீரை பூக்களாக தூவி விடு என் கல்லறையில் வஞ்சி உன்னிடம் நான் கெஞ்சி நிற்க வெஞ்சினம் கொண்டு வெறுத்து சிவந்;தவளே செவ்வானமும் சிறகடிக்கும் புள்ளினமும் வண்ணிலவும் வருடும் பூங்காற்றும் செந்தணல் மூட்டி என்னைச் சிதறடிக்க உன் கண்ணீரை பூக்களாக தூவி விடு என் கல்லறையில் வெண்சங்கு கழுத்தழகி விலையற்ற மணியவளே உன் சொல்லில் உண்மையில்லை உதயம் இனி உலகிலில்லை வெறுத்து நிற்கும் மலரிடம் வெதும்பி நிற்கும் வண்டு இது உயிரற்று விழுமொழிய ஒதுங்கி மட்டும் போய்விடாது என்றாவது உன் உணர்வுகளில் சலனம் என்று ஒன்று வந்தால் உன் கண்ணீரை பூக்களாக தூவி விடு என் கல்லறையில். . . . eelam…

  3. மெல்லத் தமிழினி மேற்சாகப் போகுதோ மெல்ல ரும் மெளனம் காட்டுமோ வுலகம் வெழுதினான் வல்லவனிருந்தே வெறத்தானுணவை மெல்லக் கதறினேன் மூழ்கினேன் சோகத்தில் மெல்ல முடியா மலே. வெள்ளிப் பனியுறையும் வெள்ளையர் தேசத்தே தெள்ளிய குறிக்கோளாய் தானவர் தரணிக்கு காவுகொள்ளும் தமிழனத்தின் குருதியது வழிந்தோட மேவியே வழிகாட்டும் அரக்கர்களின் கொடுமைதனை சீலத்தன்மையொடு சிந்தனையும் சேர்த்தங்கே காலவன் கைகளுக்கு கைவிலங்கு போட்டிடவே மனிதத்தின் வகையறிந்து மாயுமெங்கள் உறவுகளை கனிவுகொண்டு காத்திடவே கருவாக எண்ணியங்கே பண்பாளன் பார்த்திபனாம் திலீபனென்னும் மறுபெயரான் காட்டிய வழிநெருங்கி கடந்தவீரெட்டு தினங்களாய் ஏட்டிலோரைந்து கோரிக்கை தான் வைத்து …

  4. குழந்தைகளுக்கான பாடல்களை தொகுத்த பதிவு யாழிலிருக்கோ? யாழில் தேடிப்பாத்தன் ஒன்றும் அம்பிடவில்லா. நான் எதிர்பாக்கிறது, நிலா நிலா ஒடிவா நில்லாமல் ஒடிவா மாதிரி .....

    • 5 replies
    • 4.1k views
  5. உரிமைக்குரல் பாடல் ஒளி வடிவில் Click http://www.alaikal.com/video

  6. படிப்பு வேண்டாமென்று மூட்டை கட்டிவிட்டு பழக்க தோசத்தில் றோட்டில் நின்ற‌போது நண்பர்கள் சேர்ந்து நல்லதொரு முடிவெடுத்து படிக்க சென்றோம் தனியார் கல்விநிலையம் குறளி வித்தைகாட்டி கூஅடித்து கூட்டமாய் வாங்குமேசை தட்டி வகுப்பை குழப்பி பாடம் படிக்காமல் பின்வாங்கில் படுத்துறங்கி நாங்கள் செய்த சேட்டைகள் கொஞ்சநஞ்சமல்ல நாளும்பொழுதும் நாசமாய் போக வாத்தி சொன்ன பாடம் வராமல் ஓடிவிட பரீட்சை வருகுதென்று செவியில் விழுந்த செய்தி பதறித் துடித்துப் படிக்க வைத்தது விட்டுவிட்ட பாடத்தை எட்டிப் பிடிக்கவென்று படிக்க தொடங்கி பாடத்தை கவனிக்க புரிய தொடங்கியது பாடம் மட்டுமல்ல படிக்காமல் விட்டுவிட்ட பகுதி பெரிதென்று நண்பர்கள் சேர்ந்து நல்லா படிக்கவென…

  7. நினைவுகள் சுமந்த வாழ்க்கை -------------------------- தென்னங் கீத்தின் ராகம் கேட்டு பன்னைப் பாயில் படுத்துக் கிடந்து முத்தத்து மணலில் கைகள் அளைந்து முழுவதும் முழுவதும் மூழ்கிக் கிடந்தோம் வேலிக் கிளுவை பூக்கள் பார்த்து வெய்யில் அடிக்கும் வானம் தொட்டு செக்கச் சிவந்த பூக்கள் இரசித்து சொக்கிச் சொக்கி நாங்கள் இருந்தோம் வண்டில் வகிரும் பாதை பார்த்து மாடுகள் இசைக்கும் சலங்கை கேட்டு ஓரமாய் ஒதுங்கும் ஒத்தைக் காகம் ஒவ்வொரு பொழுதும் பார்த்துக் கிடந்தோம் மாமரக் குயிலின் மதுரம் கேட்டு மணக்கும் மண்ணின் வாசம் நுகர்ந்து மனிதர் முகங்கள் பார்த்துச் சிரித்து மனதில் நிறைவை சுமந்து இருந்தோம் குட்டிக் குட்டிப் பழனி ஆண்டிகள் கோயில் கட்டித் தேர…

  8. Started by gowrybalan,

    இன்றைய காலையின் விடியலின் வரவினை அறியவிக்க சேவல் கூவவில்லை..! களவாடிப் போனது யார்,,,,? விழித்துப் பார்த்தேன் வெளிச்சத்தையும் காணவில்லை..! போர்-மே(மோ)கம் சூழ்ந்ததால் எமது காலைச் சூரியனும் காணாமல் போய்விட்டான்...! இன்றைய பொழுதுகள் நற் பொழுதுகளின் விடியலுக்கான... தேடல்களாய்-நாளும் தொடர்கிறது..... நமது விடியல் விடிகிறது விடியாப் பொழுதுகளாய்...!

    • 9 replies
    • 1.9k views
  9. கறுப்பி உனக்கு வெள்ளை மாளிகை எதுக்கு...??( கொ. ரைசு) அடி... கொண்டலிசா ரைசு உன் மண்டை என்னடி லூசா...?? உன் உதட்டில் என்ன சாயம்....??? அது யாரு கடிச்ச காயம்...??? நீ இங்கு வருவதென்ன மாயம்....??? நீ சண்டை காற கோழி இன்று சொல்ல வந்ததென்னடி ஞாயம்....??? காலு மேல காலு போடுற நீ அலு.... நீ புஸ்சுடய வாலு திரும்பி பாரடி - நீ உன் தோலு.... நீ நாட்டிடையே கோலு மூட்டுற நீ ஆலு.... நீ புஸ்சுக்கு முளைச்ச வாலு உன் வார்த்தை எல்லாம் சீலு.... வெள்ளை மாளிகை உனக்கு கறுப்பி உனக்கு எதுக்கு....??? நன்றி - வன்னி மைந்தன் - :roll: :roll: :roll: :r…

  10. ''கண் மூடி தாக்குதல்'' கண்ணை மூடி வந்து இங்கு கண் மூடி தாக்கிறியே.... கஸ்ரப் பட்டு நான் வடித்த கவிதைகளை வெட்டுறியே... காரணங்கள் கேட்டு வந்தால் சொல்ல நீயும் மறுக்கிறியே.... உன் மனசில் என்ன வைத்து என்னை வந்து தாக்கிறியோ...??? விதி முறைகள் மறந்து வந்து வீண் பழியை வீசிறியே.... காரணங்கள் இன்றி வந்து கண் மூடி தாக்கிறியே.... கோரமதை வந்து ஏனோ இன்று என்னை சாடுறியோ....??? அட என் ஊற்றெடுக்கும் உணர்வுகளை அடைத்துவிட துடிக்கிறியோ....??? அதனாலோ வந்து என்னில் கண் மூடி தாகிறியோ....??? நன்றி வன்னி மைந்தன் :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: …

  11. மணல் சுமக்கும் கடற்கரை , இந்தக் கன்னம் சுமக்கும் கை விரல் , . நித்தம் உன் நினைவுகள் சுமக்கும் இந்த இதயம் என மெல்ல நீள்கிறது இந்த கடற்கரை காட்சிகள் இன்னும் என்னுள் கரை தொடாத அலைகலென கனக்கிறது கைரேகை முழுவதும் அழியாத உன் ஞாபகங்கள் !.. - பனித்துளி சங்கர்

    • 0 replies
    • 1.5k views
  12. Started by மோகன்,

    திரு முருகு - வ.ஐ.ச.ஜெயபாலன் தினைப் புனத்தின் மத்தியிலே வேங்கை மர நிழலில் தேன் தினைமா துடைத்து வெண்தாடி பிய்த்தபடி நிற்கின்றேன். தேவதைபாதி சூனியக் காரிபாதியாக காவல் பரணில் சிரிக்கின்றாள் வள்ளி வயல் நிறைய பூனையாக்கப் பட்ட யானைகள் அலைகிறது. நிலா முகத்தி மான்விழியாள் முல்லைச் சிரிப்பழகி தேன் மொழியாள் என்று சொன்ன கவிதை எல்லாம் பாழுள் புறம்காலால் தட்டிவிட்டாள். வேங்கை மரத்தடியில் உடைந்த புல்லாங்குழல் பிய்ந்த மயிலிறகும் தலைமயிரும் கண் சிமிட்டிக் கண்ணனும் வந்தவர் என்கிறாள் ஏளனப் பணிவு இதில் வேறு எள்ளல் சிரிப்பு. வெறிக்கும் சோம மது புறக்கணிப்பின் ஆலகால விசம். எல்லார்க்கும் தேன் கமழ்ந்து எட்டாத குறிஞ்சி மலர். விந்த…

    • 5 replies
    • 1.7k views
  13. அகத்தியன் என்பவர் தற்போது சிறையில் இருக்கும் போராளி அவர் எழுதிய கவிதைகளை இந்த தொகுதியில் இணைக்கிறேன்; தேட‌ல்...! கிழித்தெறியப்பட்ட இதயத்தாளின் ஒரு புறத்தில் அடைத்துவைக்கப்பட்ட எங்கள்-அழுகையொலியும்,வேதனையும்.., அருகதையிழந்த மக்களின் குருதிச்சாயமும் குரூரத்தின் கோரத்தனமுமே மிஞ்சிக்கிடக்கிறது.....! எடுத்தவர்கள் எவராயினும்- காணாமல் போனவர் சங்கத்தில் காட்டிப்பதியுங்கள் எங்களின் இருப்பையும் எங்களின் இழப்பையும் நாங்கள்- காணாமல் போவதற்குள்..! நன்றி அகத்தியன்

    • 2 replies
    • 1.1k views
  14. உங்களுக்கொன்று தெரியுமா நாங்களெல்லாம் அனாதைகள்; அம்மா இருந்தும் அப்பா இருந்தும் மண்ணிழந்த அனாதைகள்.. மண்ணெண்றால் உயிரென்று புரிய ஊர்விட்ட அனாதைகள்; ஆடிப்பாடி ஓடி விளையாடிய இடம் காடாய் கனக்க விட்டுவந்த அனாதைகள்; தவறிழைத்தோம். அங்கேயே படுத்து அங்கு வெடித்த குண்டுகளோடு வெடித்து சிதறியிருக்கலாம்; வெடிகளைதாண்டி உடையும் வலி தீரா அனாதைகள் நாங்கள்; எங்கள் மண்; எங்கள் வீடு; நாங்கள் பிறந்து கத்திய போது அதன் அழுகையை துடைத்து சிரிப்பாக்கிய சுற்றம் சீவ சீவ பச்சைபிடித்த பசுமை உயிர் வார்த்த பூமியென - அனைத்தையும் பயந்து பயந்து தொலைத்த அனாதைகள்; தெரு தாண்டி தெரு தாண்டி நாடுகளை கடந்துநின்று தன் நாடுவேண்டி நிற்கையில் …

  15. பிள்ளையைக்கொன்றவரிடம் நீதி கேட்கும் பசு .. கெஞ்சி அழுது புரண்டு நடந்து இறுதியில் பொறுமையிழந்து ஆகக்குறைந்ததது Bus யை முட்டுவாய். அப்பொழுது தான் நீ அவர்களைக்காண்பாய்.. உள்ளே இருப்பவன் வெளியில் நடப்பவன் எங்கேயோ இருப்பவன் உனக்கு உதவாதவன் உன் கதை தெரியாதவர் உன் நிலமே அறியாதவர் எல்லோரும் வருவர் ஒன்றாக திரண்டு உன் மேல் பாய்வர் ரணமாவாய் உயிருடன் உண்பர் மிகுதியைப்புதைப்பர் பயங்கரவாதியை ஒழித்ததாக ஒன்றாக விருந்துண்டு மகிழ்வர் எம் கதையை ஒருமுறை படி பசுவே... யாராவது இந்தப்பசுவைக்கண்டால் சொல்லுங்கள். தமிழரின் கதையைக்கொஞ்சம் படிக்கும்படி.

  16. வாழ்த்துக்கள்...! இது தான் நம் நாடு கலந்து கொள்ளாத கடைசி மாநாடு....! அடுத்தமுறை ஒன்பதாம் நாடாக கண்டிப்பாய் எம்மை வரவேற்பீர்....! அங்கே: இன்று நீங்கள் செய்வது போல் குடும்பக்கதை பேசோம்...! தொழில்நுட்பம் உரைத்து - உமை வியப்பில் ஆழ்த்துவோம்....! தீவிரவாதத்துக்கு - உண்மை இலகணம் சமைப்போம்....! நாம்நாட்டின் வளம் கொண்டு நாம் வாழும் இரகசியம் உங்களுடன் பகிர்ந்தே மகிழ்திருப்போம்....! முடியும் என்பாதே நம் தாரக மந்திரமாய் ஆங்கு உரத்தே ஒலிக்கும்....! வேண்டும் என்றால் இருந்து பாரும் நடக்க இருப்பதை உரைப்பது தான் நம் பரம்பரைப் பழக்கம்....!

  17. கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து கேட்கும்போது நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென்று ஒருவரும் கொல்லப்படவில்லை என்றனர் யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்புதானே என்றனர் அவர்கள் கூறினர் ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாம் என்று யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோம் என்றனர் பின்னர் கூறினர் போராளிகளே மக்களைக் கொன்றனர் என்று பின்னர் கூறினர் படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோம் என்று இறுதியில் யுத்தம் போராளிகளுக்கு எதிரானது என்றனர் நிகழ்த்திய எல்லாவற்றையும் மறுத்துக்கொண்டு மேலும் அதை தொடர்ந்தபடி எல்லாவற்றையும் மறப்போம் என்றனர் எதையும் பகிராமல் …

    • 0 replies
    • 861 views
  18. பாரதி கண்ட யாழ்ப்பாணத்துச் சுவாமி.. கோவிந்த சாமி புகழ் சிறிது சொன்னேன்; குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான், தேவிபதம் மறவாத தீர ஞானி, சிதம்பரத்து நடராக மூர்த்தி யாவான் பாவியரை கரையேற்றும் ஞானத் தோணி, பரமபத வாயிலேனும் பார்வை யாளன்; காவிவளர் தடங்களிளே மீன்கள் பாயும் கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன். தங்கதாற் பதுமைசெய்தும் இரத லிங்கம் சமைத்துமவற் றினிலீசன் தாளை போற்றும் துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்; தோழரே!எந்நாளும் எனக்கு பார்மேல் மங்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும் வானவர்கோன்,யாழ்ப்பாணத் தீசன் தன்னைச் சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அதுகண்டீர் சர்வ சித்தி. குவளைக் கண்ணன் புகழ் யாழ்பாணத் தையனை…

    • 0 replies
    • 984 views
  19. அணைக்கப்பட்ட ஒளியில் பிணைக்கப்பட்ட நிலையில் ஆண்மையின் வன்மையிலும் பெண்மையின் மென்மையிலும் அலைக்கழிந்து களித்தன அந்தரங்கங்கள்! செளித்து வளர்ந்த புல்வெளியும்... அதில் வளைந்து நெளிந்த நீராறும்... நெடிதுயர்ந்த மலைமுகடும்... கொஞ்சும் இயற்கை எழிலை விஞ்சிய பெண்மையின் நிர்வாணத்துக்குள் ஆழப்புதைந்து களிக்கத் துடித்தது ஆண்மை! மங்கிய ஒளியில் நிகழும்... மங்களமான நிகழ்வுகளெல்லாம் மயங்கிய நிலைகொடுக்க, தயங்கியே தஞ்சமடைவதாய் ஆண்மைக்குள் புகலிடம் கொண்டது பெண்மை! இயங்கிய ஈருடலும்... கிறங்கிய நால்விழியும்... காரிருள் கானகத்தை உரசி... சூடேற்றிப் பற்றவைக்க, அடித்தோய்ந்த மழையில் நனைந்து நின்ற மரக்கிளைகள்போல் ஈரத் துளிசிந்தி பாரமாகின தேகங்கள்!!! …

  20. அந்தா பிள்ளையள் அம்மா பிறந்த வீடு. -சாந்தி ரமேஷ் வவுனியன் - கால்களுக்கடியில் மிதிபட்டுக் கொண்டிருந்த சருகுகளை விலக்கிக் கொள்கிறேன். பதின்னான்காண்டுத் தவம் கலைத்த மிதப்பில் சருகுகளுக்கடியிலிருந்து என் சிறுவயது ஞாபகங்கள் மெல்ல மெல்லப் பொலிவு பெறுகிறது. 'சடான்ரை மோளெல்ல' பழுத்துக் கிழப்பவருவத்தையண்டிய நாகேசு ஆச்சியின் கேள்வியில் இன்னும் ஞாபகம் மறவாது நினைவுகளில் நினைபடும் ஒருத்தியென்பதில் உள்ளுக்குள் புழுகம் சொல்லுக்குள் அடங்காச் செருக்கு. மழையரித்த செம்பாட்டுப் புழுதிக்குள்ளிருந்து பெயராத மண்வாசமாய் என் சின்னக் கிராமத்துச் சீரெல்லாம் எழுந்துவர ஆமியும் அவர்களின் வாகனங்களும் எவரங்கே ? கேள்விக்குப் பதிலிறுக்க …

    • 4 replies
    • 1.7k views
  21. Started by சண்டமாருதன்,

    கோவத்தின் பெறுமதி அறியாதவன் கண்ணீரின் கனதி அறியாதவன் அடிமைத்தனத்தை அழகென ஆரதிப்பவன் மானத்தின் மகத்துவம் புரியாதவன் அவன் யார்? நான் நான் இழவு வீட்டில் சண்டை பிடித்தேன் மயானத்துக்கு செல்ல முடியாத பிணங்கள் முற்றத்தில் நாறுகின்றது பாடை தூக்க நாலுபேரை ஒன்றாக நிற்க விடவில்லை ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழியை ஊர் ரெண்டுபட்டால் கொன்றவனுக்கு கொண்டாட்டமென்று புதுமொழியாக்கியவன் பேரினவாதம் கோவணங்களை அவிட்டு கொடியாய் பறக்கவிட்டுள்ள நிலையில் உரிமையாளர்கள் என்கோவணம் பெரிது உன்கோவணம் பெரிது என போட்ட சண்டையில் முன் நிற்பவன் சாவு வீடு நோக்கி நட்பு பகை மறந்து செல்வார்கள…

  22. சர்வதேச மனித உரிமைகள் தினம் -விடையதைச் சொல்லு…! 76 Views விடையதைச் சொல்லு…! ********** சர்வதேசம் சொல்லுது இன்று மனித உரிமைகள் நாளாம் எமக்கு…அட இல்லாத ஒன்றை இருக்கெனச் சொல்ல இந்த நாளும் இருக்குது இப்போ… மனிதரின் உரிமை என்ன என்று எழுதி வைச்சவர் ஆரப்பா சொல்லு…? விடுதலைப் போரில் செத்தவர் யாரு…? நினைச்சுப் பார்க்க உரிமை இருக்கா….? கைதியாய் பிடிச்ச உறவுகள் எங்கே…? அவர்களின் நிலையதை அறிய உரிமை இருக்கா….? புனர்வாழ்வு பெற்ற எம்மவர் எல்லாம் நல்வாழ்வு வாழ உரிமை இருக்கா…? ஈழ மண்ணில் வாழும் எங்கள் இனத்துக்கு என்ன அடிப்படை …

  23. தமிழ் ஈழக் காற்றே - புலம்பெயர் தமிழர்களின் வலியை பதிவு செய்த வைரமுத்து.! சென்னை: இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத மனிதத் துயரம் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை. உடலோ வெளிநாட்டில்; உயிரோ தாய்நாட்டில். புலம்பெயர் மக்களின் புலம்பலாக தமிழ் ஈழக் காற்றே என்ற பாடலை கவிபேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இந்த பாடலை விடியோவாக தயாரித்து வைரமுத்து வெளியிட்டுள்ளார். இப்பாடலுக்கு இசையரசன் இசைமைத்துள்ளார். பாடலில் ஈழத்தில் தமிழ் இனத்திற்கு நடந்த அநீதி குறித்து நெருப்பை போல் வரிகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார் வைரமுத்து. ஈழத்தின் வன்னிக்காடுகளையும், வல்வெட்டித்துறையயையும், முல்லைத் தீவையும் நந்திக்கடலையும்ட, நல்லூர் முருகனையும் குறிப்பிட்டு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி உள…

    • 4 replies
    • 986 views
  24. காற்றும் வறண்டு கிடக்கும் இதுபோன்ற ஒரு கோடையில் தான் உனை பிரிந்தேன். உனைப்பிரிந்த அந்த காலம் புல் நுனிகள் கருகிய அந்த காலம் காலமாகிப் போய்விடாமல் கிடக்கிறது. அன்று, உயிப்பூவிதழ்களின் சாயங்களை வெளுறவைத்த பெரும் கோடையின் கோபம் நரம்புகளின் பச்சையத்தை தீண்டவே இல்லை........ இன்று, விழிப்பூவிதழ்களில் எழுகின்ற வாசம் தளம்பல்களை தந்தாலும் கோடைக்கு முன்னான அந்த இளவேனிற்காலத்தின் படிமங்களை மீட்டுகின்றன.......... வற்றிய குளத்தின் நிலப்பொருக்கிடைகளில் மக்கிக் கிடக்கும் சிறுவெண் நண்டுக்கூடுகளாய் காதல் உனக்குள்ளும் இருக்க கூடும் இன்னும், எனக்குத்தெரியும் இருந்தவரை நல்ல காதலியாக இருந்தவள் நீ. எனக்குத்தெரியும் பிரியும்வரை அன்பை பொழிந்தவள் நீ …

  25. நெடு நாளாய் கவிதைப் பக்கம் போகவில்லை. காரணம் கவிதை வரவில்லை. தமிழினத்தின் பரிதாப நிலைதான் அதற்கான காரணம். எரிகின்ற வீட்டில் குளிர்காய முற்பட்டது போல எல்லோரும் தலைவர்களாக முற்படும் அவலம் மனத்தை என்னவோ செய்கின்றது. இது எனது பழைய கவிதை. முகநூல் நினைவூட்டியதால் பகிர்கிறேன். தொகையறா பிடி கழன்ற வெட்டரிவாள் மொட்டைக் கத்தி பெயரிழிந்த ஊர் பேயன் மந்த புத்தி அடி கழன்ற சட்டி அன்பற்ற தாய்மை அவனியிலே இன்று தமிழினத்தின் சால…

    • 0 replies
    • 460 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.