கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
வீரயுக நாயகன் வேள் பாரி - 1 புதிய வரலாற்று தொடர்சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., முன்னுரை இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி. தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புந…
-
- 127 replies
- 525.9k views
-
-
ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது... கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர். மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார். வெளியில் நி…
-
- 82 replies
- 308.3k views
-
-
எனது நண்பர்களின் அப்பாக்களைப் பார்க்கும் போது எனக்கும் இப்படியொரு அப்பா இருந்திருக்கக் கூடாதா என்று இப்போதும் ஏங்குகிறேன். ஆனால் அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. என்னைப் போல இன்னும் பலர் இருக்கலாம். அவர்களுக்கு நடந்தவை எனக்கு நடந்திருக்கலாம். இந்த அப்பாக்கள் பற்றியும் எல்லொரும் அறிய வேன்டுமென்பதற்காக இதை எழுதுகிறேன். எனது வாழ்க்கை பற்றி பலர் இதன் மூலம் அறியக் கூடும், ஆனால் அது முக்கியமல்ல எனக்கு. இவ்வாறான மனிதர்களின் அரக்கக் குணம் வெளிக்கொணரப்பட வேனண்டும் என்பதன் காரணத்தினால் எழுதுகிறேன். இது எனது வாழ்க்கையில் நடந்த, இன்றுவரை மறக்க முடியாத அப்பாவுடனான அனுபவங்களின் ஒரு சிறு தொகுப்பு.............. எனது அப்பாவை ஒரு கொடுமைக்காரராகத்தான் நினைவில…
-
- 59 replies
- 135.2k views
-
-
"அம்மா நான் போயிட்டு வாறேன்" என்று கூறிவிட்டு நாக்கை கடித்து கொண்டாள் வித்தியா. அம்மா தான் இப்போது இல்லையே! பழக்கத்தில் சொல்லிவிட்டேன் என்று நினைத்து அண்ணியிடம் என்றாலும் சொல்லிவிட்டுப் போகலாம் என்று அவர்களின் அறையை நோக்கினாள். வழக்கம்போல் அது பூட்டித்தான் இருந்தது. அண்ணிக்கு இப்போதுதான் சாமம் மாதிரி இருக்கும் என்று நினைத்துவிட்டு கீழே இறங்கி வந்தாள். வெளியில் போகும்போது "அம்மா நான் போயிட்டு வாறேன்" என்று சொல்லிப் பழகியவளுக்கு அன்று எதையோ இழந்தது மாதிரி இருந்தது. ஆம் வித்தியாவின் தாய் இறந்து 10 நாட்களுக்குப்பின் இன்று தான் முதல்முதலாக அலுவலகத்திற்கு புறப்படுகிறாள் வித்தியா. அம்மாவின் பிரிவை தாங்குவதற்கும், மனம் ஆறுதல் அடைவதற்கும் அவளுக்கு இன்னும் பல நாட்கள் தேவைப்பட…
-
- 40 replies
- 109k views
-
-
கள நண்பர்களுக்கு வணக்கம். நான் கடந்த மாதம் பூராக பிரான்ஸ்சில் இல்லை. ஏறத்தாள 25 வருடங்களுக்குப் பின்பு இலங்கைக்குச் சென்றிருந்தேன். எனது வாழ்க்கையில் பாதியை தொலைத்த எனது புலப்பெயர்வு கடந்த மே மாதத்தில் எனக்குப் புதிய ரத்தத்தைப் பாச்சியது. நான் 25 வருடங்களின் பின்பு தாயகத்தைப் பார்த்தபொழுது எனது மனதின் வலிகளையும், நான் பார்த்த கேட்ட செய்திகளை கற்பனை என்ற கலப்படங்கள் இல்லாது உங்களுடன் பகிரலாம் என ஆவலாக உள்ளேன். இதன் தலைப்பு < நெருடிய நெருஞ்சி> . இதை நான் விளம்பரத்திற்காகவோ அல்லது பொழுது போக்கிற்காகவோ எழுதவில்லை. உங்களுடைய ஆரோக்கியமான விமர்சனங்களே என்னைத் தொடர்ந்து எழுத வைக்கும் ஊக்கிகள். நண்பர் சாத்திரி தனது பயணத்தை சொல்லும் பொழுது , நானும் சொல்வது சரியா …
-
- 516 replies
- 65.6k views
- 1 follower
-
-
இணையத்தில், ரசித்த... குட்டிக் கதைகள். ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது..அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்..ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன்..நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார் அவர் மனைவி.. மகனோ எனக்கும் நான் வேலைசெய்யும் கம்பெனியில் போன் உண்டு அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான்.. நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன்.. வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள் உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்…
-
-
- 313 replies
- 62.8k views
- 1 follower
-
-
இங்கு நான் எழுதப் போவது என்னுடைய சொந்த அனுபவங்கள் மட்டுமே அதுவும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் அனுபவங்கள். தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை பெரும்பாலும் சாதாரணமாக எவரும் எழுதவோ அல்லது மற்றையவர்களிடம் பகிர்ந்து கொள்ளவோ விரும்ப மாட்டார்கள். அதுவும் குறிப்பாக எமது தமிழ் சமூகத்தில் அது நாம் சிறந்தவர்கள். உயர்வானவர்கள் மேன்மையானவர்கள் என எம்மை சுற்றி நாமே கட்டியமைத்திருக்கும் ஒரு கட்டமைப்பினை தகர்ந்துவிடுமோ என்கிற ஒரு பயத்தினாலேயே வெளிப்படையாக எழுதுவதோ பேசுவதோ கிடையாது அப்படி யாராவது எழுதினாலும் எழுதும் ஒருவரை சமுதாயத்தை அல்லது கலாச்சாரத்தினை கெடுப்பவன் என்கிற முத்திரையை குத்தி ஒதுக்கி விடுவதே எமது சமூகத்தின் சிந்தனைப்போக்கு. 70 களில் ஆயுதத்தினை சில இளைஞர்கள் கையில் தூக்கியபொழ…
-
- 303 replies
- 61k views
-
-
ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் 1. மீண்டும் சிவகாமியின் சபதம் கே.என்.சிவராமன் இந்த இடம்தான். இங்குதான் தன்னைச் சந்திக்க ஒரு நபர் வருவார் என்றும் அவர் சொற்படி நடக்கும்படியும் புலவர் தண்டி கட்டளையிட்டிருந்தார். அதை ஏற்றே மல்லை கடற்கரைக்கு கரிகாலனும் நடந்து வந்திருந்தான். ஆனால், எப்போதும் மனதை ஆற்றுப்படுத்தும் அந்த இடம் அன்று ஏனோ அலைக்கழித்தது. நிச்சயம் சந்திக்கப்போகும் நபர் யாராக இருக்கும் என்ற கேள்வியின் அழுத்தத்தால் இந்த உணர்வு விளையவில்லை. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதற்கான எச்சரிக்கையே அது. என்னவாக இருக்கும்? மேடான பகுதியில் அழுத்தமாகக் கால்களை ஊன்றியபடி புருவங்கள் முடிச்சிட சுற்றும்முற்றும் அலசத் தொடங்கினான். வைகாசி மாத சுக்கில ப…
-
- 171 replies
- 58.7k views
- 1 follower
-
-
வாணி அவளின் பெயர்.அவளுக்கு முன்று தங்கைகள்.வாணி பொறுப்பான பெண்.அவள் அப்பா அவளுக்கு பத்து வயசாய் இருக்கும் போது ஆகும் போது இறந்து விட்டார்.அவள் அம்மா கூலி வேலை பண்ணிதான் தன்னோட நான்கு குழந்தையும் வழத்தாள்...வாணி தன்னோட தங்கைகள் பாக்கணும் என்று. தங்கைகளை பக்குறதுக்கக வாணியின் படிப்பய் அவங்கள் அம்மா நிறுத்தி விட்டார்...அம்மா என்னை பாடசாலைக்கு அனுப்பும்மா நான் போகணும் என்று அழுதாள்... வாணி இதோ பாரம்மா!வேலைக்கு போக தங்கைகளையும் யாரம்மா பாக்குறது என்று அம்மா அழ ஆரம்பித்தாள்..வாணி சொன்னால் அம்மாவிடம் .. அம்மா நான் போகலை.. அம்மாவும் சோகத்தை மகள் முன்னால் காட்ட வில்லை.தன்னோட பிள்ளைகளை கவலை பட விட கூடாது என்று... வாணி வழந்தாள் பருவம் அடந்தாள்..வாணி உள்ளுக்குள் அழ…
-
- 8 replies
- 46.7k views
-
-
விடாமுயற்சி - கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் ஜோடி கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலு முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தன.. ஆண் குருவியும், பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.. ஒரு நாள் பெரும் காற்று வீசியது.. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன.. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது.. குருவிகள் மனம் பதறிக் கதறின.. கடல் நீரில் விழுந்து, கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபட…
-
- 4 replies
- 42.7k views
-
-
பயணம் ..................... பத்து வருடங்களிற்கு பின்னர் மீண்டும் இந்தியாவிற்கான எனது பயணம். கடைசியாக 2001 ம் ஆண்டு நேபளம் சென்று அங்கிருந்து தரைவழியாக இந்தியா போயிருந்தேன்.ஆனால் இந்தமுறை எனது பயணம் எனக்கே வித்தியாசமானதாகவிருந்தது. காரணம் இந்தத் தடைவை எனது சொந்தப் பெயரில் சொந்தக் கடவுச்சீட்டில் பிரெஞ்சுப் பிரசையாக செல்வது மட்டுமல்லாது விடுமுறை எடுத்து மனைவியுடன் அவளது குடும்பம் மற்றும் என்னுடைய நண்பர்களை மட்டுமே சந்திப்பதற்காக செல்லும் பயணம்.இந்தப் பத்து வருடத்தில் என்னவோ எல்லாம் நடந்து முடிந்து விட்டது. எனது இந்திய நண்பர்கள் அனைவருமே நான் போராட்டத்தில் இணைந்ததன் பின்னர் அறிமுகமானர்கள் மட்டுமல்லாது ஈழப் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எம்முடன் கைகோர்த்து நடந…
-
- 283 replies
- 41k views
- 2 followers
-
-
ராஜ்சிவா- இதோ 2012ம் ஆண்டு பிறந்து ஐந்து மாதங்கள் முடிந்துவிட்டது.. இந்த நேரத்தில், பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால், அது ’2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது’ என்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும் முக்கியத்துவம்தான். “சரியாக இன்னும் ஒரு வருடத்தில் உலகம் அழியப் போகிறதா?” என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது. இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால், எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.அது….! ‘மாயா’. மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன…
-
- 67 replies
- 35.2k views
-
-
ஒரு இளம் பெண்ணும் இருபத்தாறு ஆண்களும்: மாக்சிம் கார்க்கி: மொழிபெயர்ப்பு: சுரா மூலம்: லேகா புத்தகங்கள் http://www.lekhabooks.com/short-stories/322-oru-ilam-pennum-irupattharu-aangalum.html நாங்கள் இருபத்தாறு ஆண்கள். ஒரு இருட்டு நிறைந்த அறையில் அடைக்கப்பட்டிருந்த எங்களுக்கு காலை முதல் இரவு வரை கோதுமை மாவைக் கொண்டு பிஸ்கட்டுகள் தயாரிப்பதுதான் வேலை. செங்கற்களால் ஆன, அழுக்கும் பாசியும் பிடித்த சுவரிலிருக்கும் துவாரங்கள் தான் அந்த அறையின் சாளரங்கள். வெளியே நோக்கியிருக்கும் சாளரத்தின் பலகைகள் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அதன் வழியாகச் சூரிய ஒளி உள்ளே வரமுடியாமல் இருந்தது. சாளரத்தின் பலகைகளுக்கு மேலே பிசையப்பட்ட மாவு ஒட்டியிருந்தது. …
-
- 4 replies
- 34.2k views
-
-
இந்தப் படத்தைப் பாருங்கள். நன்றாக உற்றுப் பாருங்கள். தரையில் விரிக்கப்படும் ஒரு கம்பளம் (Carpet) என்று இதை நீங்கள் நினைத்தால், இனி நான் எழுதப் போவதை நிச்சயம் படிக்க வேண்டிய ஒருவராக நீங்கள் இருப்பீர்கள். கம்பளம் போல, அச்சு அசலாக இருக்கும் இது கம்பளமே அல்ல. 'சரி, கம்பளம் இல்லை. அப்படியென்றால் காகிதம் ஒன்றில் வரையப்பட்ட ஒரு சித்திரம்' என்று மறுபடி நீங்கள் நினைக்கலாம். அப்படி நினைத்தாலும், நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள். கம்பளமும் இல்லை. காகிதத்தில் வரையப்பட்ட சித்திரமும் இல்லை. அப்படியென்றால் இது என்ன? இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடிய ஆய்வுடன்தான், நம் பயணம் இந்தத் தொடரில் ஆரம்பமாகப் போகின்றது. இந்தத் தொடர், நான் இதற்கு முன்னர் எழுதிய 'மாயா மக்கள்' பற்றிய தொடரைப் போல, மர…
-
- 27 replies
- 34k views
- 1 follower
-
-
நாங்கள் தொடர்ந்து ஒரு கதையை உருவாக்குவோமா? சரி நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் ஒருவர் இரு வரிகள் உபயோகிக்கலாம் ஆனால் கதை தொடர்ச்சியாக போக வேண்டும் அத்துடன் நீங்கள் மற்ற இரசிகள் பதில் எழுதும் வரைய்ம் பொறுத்து இருக்க வேண்டும் சரியா? ஆரம்பிப்போமா?
-
- 313 replies
- 32.9k views
-
-
யாழ்களத்தில் களேபரம் இந்தப்பகுதியில் வரும் கதாபாத்திரங்கள் எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிடுபவை அல்ல. சித்தரிக்கப்படும் சம்பவங்கள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.
-
- 282 replies
- 32.6k views
-
-
வணக்கம், நலமாக இருக்கிறீர்களா? வாழ்க்கை எப்படி போகின்றது? "அட என்னத்த இங்க வந்து கண்டோம்" என அலுத்துக்கொள்கிறீர்கள் போல? இருங்கோ தேத்தண்ணி போட்டு கொண்டு வாறன். சரி இப்ப நாங்கள், என்னை போல, உங்களை போல, நம்மை போல சில மனிதர்களை பார்ப்போமா? இஞ்ச பாருங்கோ இப்பவே சொல்லி போட்டன். இது முற்றிலும் ஒரு கற்பனை கதை என்ன. இடங்களின் பெயர்கள் மட்டும் நிஜ வாழ்வில் உள்ள இடங்கள். சம்பவங்களும், கதாபாத்திரங்களும் கற்பனை. பிறகு அங்க அவுஸ்திரேலியாவில இருக்கிறவ கோவ பட கூடாது. சரியோ?? சரி இனி உங்களுக்காக புலத்தில் இருந்து ஓர் புலம்பல்... புலத்தில் இருந்து ஓர் புலம்பல் ஈழத்தில் வடமராட்சியில் காலம் காலமாக வாழ்ந்த ஓர் குடும்பம், நாட்டு நிலமையால் அவுஸ…
-
- 244 replies
- 31.3k views
-
-
நிலா அக்காவின் குடும்பம் பெரிய குடும்பம். நிலா அக்காவுக்கு அப்பா, அம்மா , நான்கு அண்ணன்மார்கள்.இரண்டு அண்ணன்மார் திருமணம் ஆனவர்கள்.இரண்டு பேர் படித்து முடித்து விட்டு வேலை செய்கிறார்கள்.. நிலா அக்காவும் ஒரு பட்டதாரிதான்.... இரண்டு தினத்துக்கு முன் நான் நிலா அக்கா வீட்டிற்குப் போயிருந்தேன் நிலா அக்காவைக் கண்டதும் எனக்கு சந்தோசமாய் இருந்தது.. ”என்னக்கா இந்த பக்கம்.?. குழந்தை பிறக்கப் போகுது போல? என்ன குழந்தை” என்று ஆவலாய்க் கேட்டேன்... ”ஏன்டி நான் என்ர அம்மா வீட்டுக்கு வரக் கூடாதோ? ம்ம்ம்ம் இன்னும் இரண்டு மாதம் தான் இருக்கு.. குழந்தை பிறந்து விடும்.. ஆனால் என்னை மாதிரி பெண்ணாய் பிறக்காமல் இருந்தால் சரிதான்” என்றார் சோகமாக.... பதிலுக்கு நானும்..”ஏன் அக்கா…
-
- 57 replies
- 31.1k views
-
-
வணக்கம், நேற்றையோட பள்ளிக்கூடத்தில ஒரு குழந்தையிண்ட பிரசவம் மாதிரி எனது ஒருகட்ட படிப்பு உத்தியோகபூர்வமா முடிஞ்சிட்டிது. இப்ப கொஞ்ச நாளா யாழுக்க மினக்கட நேரம் கிடைச்சு இருக்கிது. இருந்தாலும்.. எப்ப நான் யாழில இருந்து காணாமல் போவன் என்று எனக்கே தெரியாது. அதனால.. ஒரு முன்னேற்பாடா.. இன்னும் சில நூறுவருசங்களால எங்களைப்பற்றி ஆராய்ச்சி செய்யப்போகும் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவலாம் எண்டுற நப்பாசையில இதுவரை காலமும் நான் யாழில பழகின ஆக்கள்பற்றி ஒரு சின்னப்பதிவு ஒண்டை நான் காணாமல் துலைஞ்சு போவதற்கு முன்னம் வச்சுப்போட்டு போகலாம் எண்டு நினைக்கிறன். எழுதுறதற்கு வசதியாக இருப்பதற்காகவும், எனக்கு தெரிந்த, நான் கருத்தாடல் செய்து பழகிய ஒருவரையும் தவறவிடாமல் இருக்கிறதற்காகவும்…
-
- 183 replies
- 29.1k views
- 1 follower
-
-
சிறிலங்காவின் இனப்பிரச்சினை மூன்று இனங்களையும் மூன்று துருவங்களாக்கியுள்ளது. ஆனாலும் இந்த மூன்று இன மக்களுடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவை தந்த அனுபவங்கள் பல. இவற்றுள் சில மிகவும் கசப்பானவை இன்னும் சில மிகவும் நெகிழ்ச்சியானவை. ஏங்கள் வீட்டில் வேலை செய்து எங்கள் அம்மாவின் சாப்பாட்டைச் சாப்பிட்டு எங்களில் ஒருவனாகப் பழகிய சிங்கள இனவெறியனே எங்கள் வீட்டைத் தீயிட்ட கசப்பான கடந்த கால நினைவும் என் மனதை விட்டு அகலவில்லை. கொடும் புற்றுநோயினால் எனது தாய்க்கு தினமும் இரத்தம் மாற்ற வேண்டிய தேவையுடன் நான் இருப்பதை அறிந்து எனக்குக் கூடத் தெரியாமல் தன் பெயரைக் கூடச் சொல்லாமல் என் அம்மாவிற்குக் குருதி தந்த எனது அலுவலகத்தில் வேலை செய்த சிங்களச் சகோத…
-
- 205 replies
- 28.7k views
-
-
மாதவி தன் போட் காரை அந்த பசன் டிசைனிங் நிறுவனத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு தனது வகுப்பை நோக்கிப் போனாள்...அது ஒரு தனியார் நிறுவனம் அதில் படிப்பது என்றாலே அதிக காசு செலவாகும். மாதவி அந் நிறுவனத்தில் சுமார் ஆறு மாதமாக நவீன ரக ஆடை வடிவமைப்பு,மேக்கப் போடுதல்,தலை முடியை எப்படி எல்லாம் ஸ்டைலாக்கலாம் போன்றவற்றை படித்து வருகிறாள். இவள் இப்படி எல்லாம் வந்து படிக்கிறதாலே அவளை வசதியான வீட்டு செல்லப் பிள்ளை என நினைக்க வேண்டாம்.அவளுக்கு வேலையும் இல்லை, காதலனும் இல்லை,இப்ப காதலிக்கிற வயசும் இல்லை அவளுக்கு நாற்பது வயது[நாற்பது வயதில் காதலிப்பவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.] கல்யாணமாகி மூன்று குழந்தைகளும் உள்ளனர்.கணவன் ஒரு வியாபாரி,வியாபாரத்திற்காக ஊர்,ஊராக சுற…
-
- 109 replies
- 27.3k views
-
-
உங்களின் லண்டன் என்ற கனவுலகத்திற்கு வந்தவுடன் உங்களை எல்லோரும் பவுண் காசு கொடுத்து வரவேற்பார்கள் என்றுதானே நினைத்திருந்தீர்கள். இங்கு வாழ்க்கையை இழுத்து பிடித்து வாழ்வதற்கு பலர் வீதி வீதியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். லண்டன் உங்களை பாராட்டி, சீராட்டி வளர்க்கும், பணத்தை அள்ளித்தரும் என்று நினைத்தால் அது உங்களின் முட்டாள்தனம்.ஹீத்ரோ எயார் போட் உங்களை செங்கம்பளம் போட்டு வரவேற்காது உங்களை குத்தி குடையும். போனகிழமை வெளிநாட்டுக்கு போய்விட்டு ஹீத்ரோ எயார் போட் இமிக்கிறேசன் கவுண்டரில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு பக்கத்து கவுண்டரில் ஒரு நேபாள தேசத்து பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் இளம் பெண் ஸ்ருடன்ட் விசாவில் வந்திருக்கிறாள்.இமிக்கிறேசன் ஒபிஸர் கேட்கும் கேள்விக்கு கூட ஆங்க…
-
- 271 replies
- 26.1k views
-
-
உறவுகளிற்கு வணக்கம். யாழ் களத்திலை இந்திர ஜித்தின்ரை தொடர் கதையை பாத்த உடைனை நானும் ஒரு தொடர் கதை எழுதுவம் எண்டு நினைச்சன். இதுவும் நடந்த ஒரு உண்மை சம்பவம்தான் சம்பவத்துடன் சம்பந்த பட்டவரின் அனுமதியுடன் கதை எழுதபடுவதார் கதையில் வருபவர்களின் பெயர்கள் மட்டும் மாறியிருக்கிறது. அதே நேரம் கதையை படித்து விட்டு அடுத்த தொடர் எப்படியிருக்கும் எண்று உங்கள் ஊகங்களையும் இங்கு தெரிவியுங்கள். உண்மை சம்பவம் எண்ட படியால் கதையின் போக்கை மாத்த முடியாது.சரியாக ஊகிப்பவருக்கு இராவணணிட்டை சொல்லி ஏதாவது பரிசு தர சொல்லுறன் சரி கதைக்கு போகலாம் தெரியாத பாதை தெளிவானபோது கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் ஓர் தங்கு விடுதி கோயிலுக்கு போன சாந்தியும் தாயாரும் அவர்கள் தங்கி…
-
- 189 replies
- 26k views
-
-
அப்பா அம்மா மகள் - நா.கோகிலன் வேலை அதிகமாக இருந்த போது காயத்ரியின் செல்ஃபோனிற்கு தொடர்ச்சியாக அழைப்பு வந்தது. மாதத்தின் ஆரம்ப நாட்கள் என்பதால் வங்கியில் கூட்டம் அதிகம். இந்த நேரத்தில் செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்தால் மேனேஜர் திட்டுவார். ஓயாமல் அழைப்பு வரவே எடுத்து “ஹலோ!” என்றாள். “அக்கா! எவ்ளோ நேரம் ட்ரை பண்றது?” மறுமுனையில் அழுகை சத்தம் கேட்டது. “அம்மா நம்மை விட்டுட்டு போயிட்டாங்க...” பணிப்பெண் திவ்யாவின் குரல். அம்மா இறந்து விட்டாள் என்பது நெஞ்சில் அறைந்தது. அதன்பிறகு எப்படி இயங்கினாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. அவளின் முகத்தில் எழுந்த திடீர் அதிர்ச்சியைப் பார்த்தே ‘துயரமான செய்தி’ என்பதை வங்கியிலிருந்த அனைவரும் அறிந்தார்கள். கால் டாக்ஸி வரவழைத்து காயத்ரியை…
-
- 0 replies
- 25.6k views
-
-
சூரியனை நோக்கி ஒரு பயணம்! MAY 5, 2016 / மீராபாரதி வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் (பிரின்ஸ் எட்வேட் ஹைலன்ட்) சூரியன் எழுந்தபோது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பல நாடுகளினுடான ஒரு வருடத்திற்கான பயணம். கனடாவில் வாழ்ந்த கடந்த இருபது வருடங்களில் இந்தியா, நேபாளம், ஐரோப்பா (சுவிஸ், ஜெர்மன், இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து) மற்றும் கியூபா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு நாம் இருவரும் ஒன்றாகப் பயணம் செய்திருக்கின்றோம். இம் முறை இருவரும் ஒரு வருடத்திற்கு பயணம் செய்யத் தீர்மானித்திருக்கின்றோம். மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பயணிக்கின்றோம். ஆகவேதான் சூரியனை நோக்கிய பயணம் எனத் தலைப்பிட்டுள்ளோம். இப் பயணத்தில் சூரியனினால் நாம் எரிந்து போகலாம் அல்ல…
-
- 21 replies
- 25.5k views
- 1 follower
-