Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. [size=6]புத்தனாவது சுலபம்-எஸ்.ராமகிருஷ்ணன்[/size] அருண் இரவிலும் வீட்டிற்கு வரவில்லை. பின்னிரவில் பாத்ரூம் போவதற்காக எழுந்து வந்தபோது கூட வெளியே பார்த்தேன் அவனது பைக்கைக் காணவில்லை. எங்கே போயிருப்பான். மனைவியிடம் கேட்கலாமா என்று யோசித்தேன். நிச்சயம் அவளிடமும் சொல்லிக் கொண்டு போயிருக்க மாட்டான். கேட்டால் அவளாகவே அருண் எங்கே போயிருக்கக் கூடும் என்று ஒரு காரணத்தைச் சொல்வாள். அது உண்மையில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும், பிறகு எதற்குக் கேட்டுக் கொள்ள வேண்டும். பலநாட்கள் அருண் பின்னிரவில் தான் வீடு திரும்பிவருகிறான். இப்போது அவனுக்கு இருபத்திநாலு வயதாகிறது. இன்ஜினியரிங் படிப்பை கடைசிவருசத்தில் படிக்காமல் விட்டுவிட்டான். இனிமேல் …

  2. வேலி - கோமகன் அதிகாலை மூன்று மணிக்கு வேலையால் வந்து படுத்து, செத்த சவம் போலக் கிடந்த என்னை ஐந்து மணிக்கு அடித்த தொலைபேசி அழைப்பு, வெறி கொள்ள வைத்தது. மறுமுனையில் நரேன் என்ன மச்சான் நித்திரையாய் போனியே என்று லூசுத்தனமாக தனது கதையை தொடங்கினான் . “உனக்கு தெரியும் தானே மச்சான் என்னம் ரெண்டு கிழமையிலை எங்கடை சூராவத்தை பிள்ளையார் கோயில் கொடி ஏறுது . நீ நாளையிண்டைக்கு ஊருக்கு போறாய் தானே அதுதான் உனக்கு ஞாபகப்படுத்த எடுத்தனான்” என்றான் நரேன் .நித்திரை கலைந்த கோபத்தில் தூசணத்தால் நரேனை பேசிவிட்டு மீண்டும் படுத்தேன். எனக்கு இன்னும் கோபம் அடங்கியபாடாகத் தெரியவில்லை .நட்பு என்ற போர்வையில் நாகரீகம் தெரியாத மனிதர்களாக இருக்கின்றார்களே என்று மீண்டும் தலையணையைக் கட்டிப்பிடித்தேன் .…

  3. எங்கே அந்த சொர்க்கம்? வற்றாத கடல், வாகான பாலம், வாசல் திண்ணை, வளைந்து கொடுக்கும் அப்பா, வாஞ்சையே வடிவான அம்மா, எளிய வாழ்க்கை, எதிர் வீட்டு மனிதர், அமைதியான தெரு, ஆலய மதில்கள், அறிவு புகட்டும் கலைக்கூடங்கள,; அலை உரசும் கடற்கரை, படகுச் சவாரி காலையில் கலகலக்கும் ஊர்ச்சந்தை, சோழகத்தில் சுழன்றாடும் பனைமரங்கள், பூமணத்தைச் சுமந்து வரும் தென்றல், விடலைகள் துள்ளி விளையாடும் கடற்கரை, குமரிகளின் கும்மாளச் சிரிப்பொலி, என்றென்றும் மனதை விட்டகலா மண்ணின் மணம் இவையனைத்தும் இன்று போரின் வடு சுமந்து, புன்னகையின் பொலிவிழந்து, வீதிகளில் வெறுமை படர்ந்து, நீர் வற்றிப்போன குளங்களை விட்டு பறவைகள் விலகிச் செல்வது போல எங்கள் ஊரின் எழில் குலைந்த பின் எச்சங்களாக மிச்சமிருக்கும் ஒரு சிலர். இன்னும் …

    • 5 replies
    • 1.1k views
  4. நெஞ்சாத்தியே நீதானடி என் வாழ்கையே (1) பாகம் 1 தூங்கி எழுஞ்சு கிளம்பி ரெடி ஆகவே மணி பன்னிரண்டு ஆச்சு. இன்று ஓய்வு நாள். அதனால் தாமதமாகவே எழுந்தேன். அக்கா காலைலயே இட்லி, பொங்கல்னு தலபுடலா ரெடி பண்ணி வச்சிருந்தா. என்ன எப்பவும் காய்ஞ்சு போன ப்ரெட் தானே இருக்கும். இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? அம்மா அளவுக்கு இல்லனாலும் ஓரளவுக்கு நல்லாவே சமைப்பா. அதனால தைரியமா சாப்பிடலாம். நான் சாப்பிட சாப்பிட “இன்னும் எடுத்துக்கோடா” என்று மேலும் ரெண்டு இட்லியை எடுத்து வைத்தாள் தட்டில். “போதும். இப்பவே இவ்வளோ சாப்டா அப்புறம் லஞ்ச் என்ன சாப்பிடுறது? வாயித்துல கொஞ்சமாச்சும் இடம் காலி இருக்கணும்” நான் தடுத்தேன். “டேய் அடி வாங்குவ. காலைலேயே எழுஞ்சு எல்லாம் ரெடி பண்ணிருக்கேன். நீதான் சாப்…

  5. கிழக்கில் உதிக்காத சூரியன் என்ற இக்கதையில் கர்ணனால் எழுதப்பட்டுள்ள கடாபியண்ணா தலைவருக்கு நிகரான இயல்பும் தலைமையையும் தான் வளர்த்த போராளிகளையும் தனது உயிரைவிட மேலாக நேசித்த உன்னதமானவர். இந்தக் கடாபியண்ணா பற்றி பலரிடம் கேட்டிருந்தேன் எழுதுமாறு. இன்னும் யாரும் அந்த மனிதன் பற்றி அதிகம் எழுத முடியவில்லை. ஆயினும் அவரது வாழ்வு பற்றிய ஒருபகுதியை கர்ணன் எழுதியிருப்பதால் இங்கு இணைக்கிறேன். [size=5]கிழக்கில் உதிக்காத சூரியன் (தளபதி கடாபியின் வாழ்வைப் பதிந்துள்ள கதையிது)[/size] யோ.கர்ணன் பத்தாம் வகுப்பு படித்த காலத்திலேயே எங்களது கணக்கு வாத்தியார் செற்றாக திரிந்த எங்கள் நால்வரை வகுப்பில் நிற்க வைத்து மன்மதக் குஞ்சுகள் எனத் திட்டியிருந்தார். அவரது கோபம் நியாயமானதுதான…

  6. உறுதி[ப்]பத்திரம் அதிகாலையில் தொலைபேசி தொல்லை கொடுத்து என்னை எழுப்பியது நான் என்னடா காலந் காத்தால் நித்திரையை தூங்க விடாம பண்ணுதே என்று போட்டு அமத்தி வைக்கலாமே என்று பாத்து போணை தூக்கினேன் அது இலங்கையில் எனது மாமனாரின் வீட்டில் இருந்து வந்தது .எனது எனது மனைவியிடம் கொடுத்தேன்.அவளும் பேசினாள் என்னங்க அப்பா சீரியசா கிடக்காராம் வாங்க உடன்டியாக போகலாம் என்றாள். என்னடி கொப்பன் சாகப்போறான் போல என்றேன் அவளோ எனக்கு கேட்டாள் கேள்வி காது முதல் கால் வரை குளிர்ந்தது . சரி சரி உடனே போறது என்றால் சும்மாவோ அந்த வெள்ளக்காரன்ட லீவு கேட்கணும் . அவன் நம்மட ஆள் என்றாலும் பரவாயில்லை அவனிடம் முண்டித்தான் லீவு கேட்கணும் அவன் குரைப்பான் என்பது எனக்கு தெரியும். அதிகாலை நான் அவனிடம் செ…

  7. நானும்... எனக்கும், நீயும்... உனக்கும் என்ரை வீட்டுக்கிச்சின் ஜன்னலை முறுக்கி விட்டா முன்வீட்டு முற்றத்திலே நடக்கிறது எல்லாம் அப்படியே தெரியும். இப்ப நல்ல வெயில் காலம் முன்வீட்டு மனுசி வெளியிலே வந்து பூக்கண்டுகளுக்குள்ளே புல்லுப்புடுங்கும், மரங்களை வெட்டும், சாடிகளை மாற்றும, கொத்தும். புரட்டும் வெயில் வந்தா மனசி சும்மா இருக்க மாட்டாது. அதிகாலை வேலைக்குப் வீடு திரும்ப எப்படியும் ஒரு எட்டு மணியாகும். தோட்டத்திலே நிண்ட மனுசி எனக்கு கையைக் காட்டியது. என்ன இவ்வளவு வேளைக்குத் தொடங்கிவிட்டாய்.... கிறேற்ரா, என்று பக்கத்தில் போய் விசாரித்த போது.... இந்த வீக்கன் என்ரை மகன் தன்ரை ஆளோடு வாறான் அது தான் கொஞ்சம் வடிவா இருக்க வேண்டும்.... நல்ல வெய்யில்........தானே, வேளைக்கே தொ…

  8. ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய் சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு பின்வரும் குறிப்புகளில் இருந்து, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்... எஃப்.எம் தொகுப்பாளினிக்கு மதியம் 12 மணி வெயிலில் போன் போட்டு, 'குளிருதே... குளிருதே... உடம்பெல்லாம் உதறுதே...’ என்ற பாடலை ஒலிபரப்பச் சொல்லி, என் நண்பன் அரவிந்துக்கு டெடிகேட் செய்வேன் (அப்போதுதான் அரவிந்த் மறுநாள், 'நெஞ்செல்லாம் சிதறுதே... நீ வேணும்னு கதறுதே...’ என்ற பாடலை எனக்கு டெடிகேட் செய்வான்). நீங்கள் நினைப்பது சரிதான். நான் படித்து முடித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்கிறேன். ஓர் ஆண், வேலை இல்லாமல் இருப்பது …

  9. பெண் பாவம் வேண்டாம்! கிராமமும் இல்லாத, நகரமும் இல்லாத இடைப்பட்ட ஊரில் திருமணம் ஒன்றுக்கு நானும் என் தோழியும் கிளம்பினோம். பெண்ணின் தாயார் எங்களின் தோழி. திருமண ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன. வரவேற்பு இனிதாக நடந்து முடிந்தது. மறுநாள் விடிந்ததும் திருமணம். எல்லோரும் உற்சாகமாகப் பேசிவிட்டுப் படுத்தோம். விடிகாலை மாப்பிள்ளை வீட்டார் இருந்த பகுதியில் ஒரே களேபரம். மாப்பிள்ளையின் தாய் மாமா இரவு படுத்தவர் எழுந்திருக்கவேயில்லை. மாஸிவ் ஹார்ட் அட்டாக். தூக்கத்திலேயே உயிர் போய்விட்டது. மணப்பெண் குளித்து பாதி அலங்காரத்தில் இருக்கிறாள். சமையல் வேறு பாதியில் நிற்கிறது. அரசல் புரசலாக பெண்ணின் ராசி பற்றி விமர்சனம் எழுகிறது. என் தோழியின் குடும்பத்தினர் கையைப் பிசைந்து…

  10. சிகரத்தை எட்டிய சிறிய தவளை வெகு காலத்திற்கு முன்பு…சிறிய தவளைகள் பல ஒன்று சேர்ந்து ஒரு பந்தயத்திற்கு ஏற்பாடு செய்தன. மிகப்பெரிய கோபுரம் ஒன்றில் ஏறி அதன் உச்சியை அடைய வேண்டும் என்பது தான் பந்தயத்தின் இலக்கு. இந்தப் பந்தயத்தைப் பார்ப்பதற்காகவும், போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் அந்த பெரிய கோபுரத்தைச் சுற்றி மிகப்பெரும் கூட்டம் கூடி விட்டது. போட்டி ஆரம்பமாகி விட்டது. உண்மையிலேயே அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவருக்குக் கூட அந்த சிறிய தவளைகளால் கோபுரத்தின் உச்சியை அடைய முடியும் என்ற நம்பிக்கை இல்லை. கூட்டத்திலிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்….. “வழி மிகவும் கடினமானது” “இந்தச் சிறிய தவளைகளால் நிச்சயமாக உச்சியை அடைய முடியாது” “வெற்றிபெ…

  11. அந்த மாதிரி பொம்பளை மனம் இறுக்கமாகவே இருந்தது. அம்மா மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இத்தனைக்கும் அப்பா போன பிறகு அம்மாதான் எல்லாமாமுமாக இருந்து என்னைப் பார்த்து கொள்கிறாள். இருந்தும் கோபத்தின் கனலில் மனம் பின்னோக்கி சென்று எண்ணிப் பார்த்தது. எங்கள் தெருவில் வசித்து வந்த பவானி அம்மாள் இறந்து விட்டாள். அம்மாவை விட நான்கைந்து வயது இளையவளாக இருக்கக் கூடும்.என் சிறுவயது பருவத்தில் இதே தெருவில்தான் வசித்து வந்தாள். குழந்தைகள் என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம். அதுவும் நானென்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் என் அம்மாவோ, இல்லை மற்ற குழந்தைகளின் அம்மாக்களோ அவளை எப்போதும் அருவெறுப்பாகவே பார்ப்பார்கள். அவள் எங்கள் தெருவில் வரும்போது எங்களுக்கு அதட்டல் விடப்படும். "ஏன்மா அந…

  12. கொலம்பஸின் வரைபடங்கள்-யோ.கர்ணன் என் சனங்கள் பாவம் முன்னொரு போது போரினின்று நான் வெளியேறுகையில் ஒன்பதாம் திசையில் வழிகாட்டி ஒளிர்ந்த நட்சத்திரத்தை அவர்களுடைய வானத்திலேயும் ஒளிரச்செய்யும் என் ஆண்டவரே.. – த.அகிலன்- – 01- அவுஸ்திரேலியா நோக்கி சென்ற அகதிகள் படகொன்று கடந்த மாதம் விபத்துக்குள்ளாகியிருந்தது. கிட்டத்தட்ட நூறு பேரளவில் அதில் மரணமாகியிருக்கக்கூடும். இது இந்தப்பகுதியில் நடந்த முதல் விபத்தல்ல. கடைசி விபத்துமல்ல -குறிப்பாக அகதிகளையேற்றிக் கொண்டு சென்ற கப்பல்களிற்கு. உண்மையில் அவற்றை கப்பல்கள் என்றும் சொல்ல முடியாது, படகுகள். துரதிஸ்டவசமான உண்மையென்னவெனில் யுத்தபூமிகளிலிருந்து தப்பிப்பதற்கு பலரிடமுமுள்ள முதல் தெரிவாகவும் வாய்ப்…

  13. Started by லக்கிலுக்,

    தோழர் விஜய் ஒரு மிகச்சிறந்த கம்யூனிஸ்ட். பார்க்கும் பிகர்களை எல்லாம் தன்னுடைய பிகராக நினைக்கும் மிகச்சிறந்த பொதுவுடைமைவாதி. நண்பர்களின் பிகர்களை மட்டும் சிஸ்டராக நினைக்கும் நற்குணமும் அவருக்குண்டு. முந்தையப் பதிவொன்றில் நான் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் என்னுடன் பணியாற்றிய சகப்பணியாளர். வாயைத் திறந்தாலே பச்சை நிறத்தில் Aய்த்தனமாக பேசக்கூடிய அசுரப் பேச்சாளர். அவருக்கு அப்போது 35 வயதிருக்கலாம். காதல் திருமணம் செய்து அதன் விளைவாக அழகான ஒரு மகளை ஈன்றெடுத்திருந்தார். என்னைப் போன்ற இளைஞர்கள் எப்போதும் "சாட், சாட்" என்று உயிரை விட்டுக் கொண்டிருந்ததை கண்ட நண்பருக்கும் இயல்பாகவே சாட்டிங் மீது பிடிப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் அவருக்கு சாட்டிங்கில் மாட்டியவர்கள் நிறையப் பேர் அமெர…

  14. கதையல்லாத கதைகள் 02-யோ.கர்ணன் “ரைகர்ஸ்” யாழ்ப்பாணத்திலிருக்கும் நாற்பதினாயிரம் சிங்களப்படைகளையும் உயிருடன் பிடித்து வைத்துக் கொண்டு பேரம் பேசி தமிழீழத்தையடையப் போகிறார்களா அல்லது நாற்பதினாயிரம் சிங்களச் சிப்பாய்களின் சடலங்களை வைத்துக் கொண்டு பேரம் பேசி தமிழீழத்தையடையப் போகிறார்களா என உலகின் திசையனைத்திலுமிருந்த தமிழ் ஆய்வாளர்கள் அனைவரும் தலையைப்பிய்த்துக் கொண்டிருந்த பொழுதது. உச்சபட்சமாக, வன்னியிலிருந்த ஆய்வாளரொருவர் ஈழநாதம் பத்திரிகையில் பின்வருமாறு எழுதியிருந்தார்- ‘நமது குறைநிர்வாக இராச்சியத்தை சில வல்லரசுகள் பயங்கரவாத இயக்கமாக தடை செய்துள்ளன. நல்ல கூடைப்பந்து விளையாட்டு வீரன்தான் பந்தை எப்பொழுதும் தனது கையில் வைத்திருக்க வேண்டும். சாணக்கியம் மிக்க இரா…

  15. இணைவு - ஜெயமோகன் [1 ] கொல்லம் படகுத்துறையில் இறங்கி நேராக என் சாரட் நோக்கி ஓடினேன். ஸ்காட் மிஷனில் இருந்து எனக்காக அனுப்பப் பட்டிருந்த வண்டி.என்னுடன் என் பெட்டியை தூக்கியபடி மாத்தன் ஓடிவந்தான். நான் மூச்சிரைக்க ஏறி அமர்ந்ததும் அவன் பெட்டியை என் அருகே வைத்தான். வண்டிக்காரன் மாத்தனிடம் “எங்கே?” என்றான். நான் உரக்க “பன்னிரண்டாம் ரெஜிமெண்ட்… பன்னிரண்டாம் ரெஜிமெண்டின் தலைமை அலுவலகம்” என்றேன். அவன் திரும்பி “பொதுவான வண்டிகளை உள்ளே விடமாட்டார்கள்” என்றான். “என்னிடம் கர்னல் மெக்காலேயின் ஆணை இருக்கிறது… போ” என்று நான் சொன்னேன். மாத்தன் “டாக்டர் அலெக் பெய்ன்ஸ்” என்று முறைப்படி அழைத்தான்.“நான் இப்போது என்ன செய்யவேண்டும்?” “நீ மெதுவாக அங்கே வா…

  16. இதழில் கதை கணவன் யார் மீதோ பயங்கர கோபமாக சண்டைக்கு புறப்படுகிறான் என்பதை புரிந்துகொள்கிறாள் மனைவி. அவன் சட்டையை மாட்டிக்கொண்டு மேலிருந்து பொத்தான்களை பொருத்த இவள் மேலிருந்து கழற்ற ஆரம்பிக்கிறாள். "என்ன செய்கிறாய்.."கோபமாக "எங்கே புறப்பட்டு விட்டீர்கள் "அவன் கண்களை வாஞ்சையோடு நோக்கியவாறு கேட்கிறாள் "வெளியே ஒரு வேலை இருக்கிறது" "எனக்கு தெரியும் சண்டைக்கு போகிறீர்கள்.." "ம் என்னையே சீண்டி பார்க்கிறார்கள் அவர்களை அடித்தால்தான் மனம் ஆறும்" "நீங்கள் வீர்ர்தான் ஆனால் அடித்தால் பகை வளரும் வஞ்சம் வைத்து காத்திருப்பார்கள் என்னிலோ குழந்தையிலோ கூட பகைமையை காட்ட முனைவார்கள்" "தொட்டுவிடுவார்களா உன்னையோ பிள்ளையையோ" "என் பேச்…

  17. அணிலார் ஒரு சின்ன வீடு கட்ட ஆசைப்பட்டு சில காளான் குடைகளை வாங்கப் போனார். இடையில் குறுக்கிட்ட குருவியார்.. அணிலாரே அணிலாரே காலங்கெட்டுப் போய் கிடக்கு.. எதுக்கும் தரம்.. கலப்படம் பார்த்து எடுமையா என்றார்.. போற வழியில் அணிலாருக்கு பசி எடுக்கவே.. சில பழங்களைப் பறித்துக் கொண்டு போக எண்ணினார்.. ஆனால் குருவியோரோ விடுவதாக இல்லை.. பொறுமையா அணிலாரே.. எப்படி இருக்கும் உம்ம காளான் வீட்டுக் கூரைன்னு.. ஒருக்கா பரிசோதிச்சு சொல்லுறன்.. எதுக்கும் அவசரப்படாதேயும் என்றார்.. அதற்கு அணிலாரோ.. குருவியாரே.. அதெல்லாம் நல்லா தான் இருக்கு.. உமது அக்கறைக்கு நன்றி என்றார்.. குருவியாரை காய்விட்டிவிடும் கணக்காக. அணிலாரே உமது நன்றியை உம்மோடு வைச்சுக் …

  18. வர்ணகலா by ஷோபாசக்தி இந்தச் சிறிய கதையின் முடிவு எப்படி அமையப்போகிறது என்பதைத் தேர்ந்த வாசகரான நீங்கள் இதற்கு அடுத்தடுத்த பத்திகளில் நிச்சயமாகவே ஊகித்துவிடுவீர்கள். அய்நூறுக்கும் அதிகமானவர்கள் உட்கார்ந்திருந்த அரங்கில், மிதுனா பாலப்பா இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்ததுமே நானும் முடிவைச் சட்டென ஊகித்துவிட்டேன். ஆனால், அந்த முடிவை நோக்கி கதை எவ்வழியால் அசையப்போகிறது என்று எனக்குப் புரியவில்லை. எனவே நான் பொறுமையாக உட்கார்ந்திருந்து மிதுனா பாலப்பா சொன்ன கதையை முழுவதுமாகக் கேட்டே பாரிஸிலிருந்து முந்நூற்றைம்பது கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்த ‘ரென்’ பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து, அரசறிவியல் படித்துக்கொண்டிருந்த மிதுனா பாலப்பாவுக்கு அன்றைய கா…

    • 4 replies
    • 1.1k views
  19. யேசுவாக நானா அல்லது நானாக யேசுவா? http://1.bp.blogspot.com/-hwxRhe7cuPY/UHsusAruoRI/AAAAAAAABDs/fcpPGEWU2bE/s320/Jesus.jpg என்னை பரவசப்படுத்தியதோர் விடயம் ஏறத்தாள 19 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அந்நாட்களில் நான் ஒஸ்லோவிலுள்ள ஒரு வயோதிபமடத்தில், வயோதிபர்களைப் பராமரிக்கும் தொழில் செய்துகொண்டிருந்தேன். அது ஒரு பனிக்காலத்து நாள். அன்றைய காலைநேரத்து இளவெயில் குளிரை விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தது. உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால்வரையில் மூடிக்கட்டிக்கொண்டு வேலைத்தளத்துக்குள் உட்புகுந்து உடைமாற்றி, வெள்ளை பான்ட், வெள்ளை சட்டை போட்டுக்கொண்டேன். மேலதிகாரி எமக்கு என்ன என்ன வேலைகள் இன்று உள்ளன என்றும், நான் யார் யாரை ‌எழுப்பி பர…

  20. கடைசிக்கடிதமும் காயாத கண்ணீரும். அவன் இருக்கிறானா ? எங்கே….? வதைமுகாமிலா அல்லது வவுனியா முகாமிலா பத்தாயிரத்துக்கும் மேல் சரண்புகுந்த தோழ தோழியருள் அவனும் தப்பியிருக்கிறானா ? அக்கா அக்கா என அவன் ஸ்கைபியில் கூப்பிடும் குரலும் மறைந்து…ஸ்கைபியில் அவன் பெயர் இப்போது சிவப்பாகிக் கிடக்கிறது…. ஏதோ எனது வீட்டில் என்கூடப்பிறந்த ஓர் இரத்த உறவு போல அவன் என்னுடன் வாழ்ந்து கொண்டிருந்தவன். தனக்குள்ளான துயரங்களை வெற்றிகளையென எல்லாவற்றையும் கடிதமெழுதி இளைப்பாறிக்கொள்ள “அன்பின் அக்கா” என்று ஆரம்பித்து அனைத்தையும் எழுதியனுப்புவான். எத்தனையோ தோழதோழியரின் எழுத்துக்கள் ஞாபகங்கள் போல இவனும் எனக்கு எழுதிய கடிதங்கள் பேசிய வார்த்தைகளென இவன் ஞாபகமாய் ஏராளம் நினைவுகள்…… யார…

    • 4 replies
    • 2.5k views
  21. ஆதித்த குலத்தவனும் இணையிலா வீரனுமான சோழன் தித்தன் தனது அரண்மனை வாயிலில் புகுமுன்பு நான்கு திக்குகளிலும் தனது வீர விழிகளைச் செலுத்தினான். அரண்மனையிருந்த அரச வீதியிலும் கூட வாட்போர் வீச்சும் வேலெறிப் பந்தயமும், விற்போரும் மற்போருமாகப் பல வீர விளையாட்டுகள் அன்று நடந்து கொண்டிருந்ததைக் கண்ட தித்தன் மனத்தில் மட்டும் அவ்விளையாட்டுகள் எந்தவித மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. இந்திர விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் புகாரில் போலவே உறையூரிலும் நடந்து வந்த அந்தக் கோலாகலக் காட்சிகள், தூரத்தே காவிரிக் கரையில் அந்த நள்ளிரவிலும் நடந்து வந்த கேளிக்கைக் கூத்துக்கள் இவையனைத்தின் ஒலிகள் கூட அவன் காதில் விழுந்தும் வீரனான தித்தன் மனம் சோகத்தில் ஆழ்ந்து கிடந்தது. உலகெலாம் தன வீரப்புகழ் பாட, உறையூரை…

  22. படிச்சன் பிடிச்சிருந்தது பாட்டி வடை சுட்ட கதை( 2020) 1.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள்.கார்ப்பரேஷன் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினவன் " தா கெய்வீ .. ஒனக்கு இன்னியோட 60 வயசு முடியுது. உன்னை சாம்பலாக்கி உன் சொந்தக்காரவுங்களுக்கு கூரியர் அனுப்பனும் கெளம்பு கெளம்பு "என்றான் 2.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள். தான் வழக்கமாய் கடை போடும் புளிய மரம் கருகிக்கிடப்பதை பார்த்து அதிர்ந்தாள். வேடிக்கை பார்க்கும் சோம்பேறி ஒருவனை கேட்டாள் " இன்னாச்சு நைனா ..மரம் இப்டி கருகி கிடக்குது?" .அவன் சொன்னான் "எனுக்கு இன்னா தெரியும்மே.. நேத்து கருப்பா மழை பேஞ்சுச்சாம். இந்த ஏரியால எல்லா மரமும் இப்படித்தான் ஆயிருச்சு. 3.பாட்டி வழக்கம்போல் கடை போட…

  23. செஞ்சோலை -என் ஞாபகப்பதிவிலிருந்து ஒரு பேப்பரில் இருந்து சுதந்திரா http://www.orupaper.com/issue53/pages_K__Sec2_34.pdf http://www.orupaper.com/issue53/pages_K__Sec2_35.pdf

  24. Started by nunavilan,

    நந்தியாவட்டை பர்வதம் பாட்டியின் தொணதொணப்பு நின்றபாடில்லை. நேற்று காலையில் இருந்து துவங்கிய இந்தத் தொணதொணப்பு நிற்காது போலிருக்கிறது. வயதான காலத்தில் பாட்டிக்கென்று என்ன இருந்து விடப் போகிறது? உடல் நலம் பேணுவதில் ஏதாவது உதவி கேட்பாளாயிருக்கும். “என்ன பாட்டி? இப்படித் தொந்தரவு குடுக்குற ஆளாயிருந்தா, நீ அத்தையோட வீட்லயே இருந்துக்க. இங்க வராத. இப்ப என்ன வேணும் உனக்கு?” “தங்கம், டேய்… இராசா, உங்க தாத்தன் நெனப்பைக் கூட்டியாறப் பொறந்த ஆளுடா நீ. பாட்டிக்குக் கண்ணு ரெண்டும் எதோ மசமசன்னு இருக்குடா. விஜயம்மா வீட்டுக்குப் போயி நாஞ்சொன்னேன்னு சொல்லு, நந்தியாவட்டைப் பூ பறிக்க விடுவாங்க. கொஞ்சம் நிறையவே பறிச்சுட்டு வாடா!” பாட்டிக்காகப் பூப்பறிக்க விஜயம்மா வீட்டுக்குப் போனான்.…

  25. கடலோடி கழுகு --------------------------- சூர்யா -------------- கடலும் கடல் சார்ந்த இடம் பரத நிலப்பரப்பு என தமிழ் இலக்கியங்கள் கூறுகிறது.அந்த நிலப்பரப்பின் சொந்தக்காரர்கள் பரதவர் என அழைக்கப்பட்னர். இங்கு உப்பும் மீனும் பிரபலம்.தமிழகத்தின் கடலோர பகுதி அது. இராமேஸ்வரம் என அழைக்கப்படும் பகுதி. அன்று சாதாரண நாளாகவே பொழுது விடிந்திருந்தது.”ச்சே என்ன வாழ்க்கைடா” என்ற வார்த்தைகளோடு அவன் தன் குலத்தொழிலுக்கு புறப்பட்டான் கடல் அன்னையை வணங்கிவிட்டு. வாலிபன் அவன்..அதே ராமேஸ்வரத்தில் அவன் ஊரில் அதிகம் படித்தவன் அவன் தான்.அதாவது நாலாம் வகுப்பு.அவனை அனைவரும் மைக்கேல் என அழைப்பர்.கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது ஒவ்வொரு மீன் பிடி பயணத்தின் போதும். ஆனாலும் அவன் பின்வாங்கி…

    • 4 replies
    • 3.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.