நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
இந்திய துணை தூதரக நடவடிக்கை சொல்லும் செய்தி என்ன? யாழ்ப்பாணத்தில், முன்னாள் வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களால், கிட்டு பூங்காவில் ஒழுங்கு செய்யப்பட்ட மாவீரர் மாத நினைவுகள் தொடர்பில் நடாத்தப்பட்ட மரம் நாட்டும் நிகழ்வில் இந்திய தூதரக அதிகாரி கிருஷ்ணமுர்த்தி அவர்களும், துணை தூதர் ராஜேஷ் ஜெயபாஸ்கர் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். ஜெயபாஸ்கர் மதுரையை சேர்ந்த வெளிநாட்டு சேவையியல் அதிகாரி. அதேவேளை கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் (ரா?) உளவுத்துறை அதிகாரியாக இருந்தவர். மாவீரர் மாத நிகழ்வுகளில் இந்திய அதிகாரிகள் ஒருபோதும் ஆர்வம் காட்டியதில்லை. இம்முறை இவர்கள் கலந்து கொண்டது மட்டுமல்லாது, கார்த்திகைப்பூவினையும் அணிந்து கொண்டிருந்தனர். இது ஒரு முக்கிய செய்தியை சொல்லும்…
-
- 12 replies
- 1.4k views
-
-
தொப்பிகல கைப்பற்றப்பட்டது என்ற செய்தி சிறீலங்கா படைத்தரப்பால் அறிவிக்கப்பட்டடதைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர் மத்தியில் சந்தர்ப்பத்தை ஒட்டிய வழமையான கருத்தாடல்கள் எழுந்துள்ளன. இக்கருத்தாடல்கள் பலநூற்றுக் கணக்கில் பல்வேறுதரப்பட்ட மொழியாளுகைகளோடு நடக்கின்றன எனினும், அனைத்தினதும் அடிப்படைக் கருத்து இரண்டு விடயங்களை மட்டுமே சுற்றிச் சுழல்கின்றன: 1) "தொப்பிக்கல ஒன்றும் அத்தனை முக்கியமான இடமில்லை. இதைப் பிடித்துவிட்டு மகிந்தர் கொக்கரிப்பது வேடிக்கை." 2) "பிடிப்பது ஒன்றும் கடினமல்ல தக்கவைப்பதே கடினம். இழப்புக்கள் எமக்குப் புதிதல்ல தொப்பிக்கலையின் வீழ்வு ஒரு விடயமே இல்லை." மேல் கூறப்பட்ட இரு விடயங்களிலும் உண்மைகள் இல்லாது இல்லை. இருப்பினும், தொப்பிக்கல…
-
- 12 replies
- 3.5k views
-
-
யாழ்க்கள செய்திக் குழுமத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்த வாரச் செய்தி ஆய்வை நான் எழுதுகிறேன்.இதைப் ஆய்வென்றாமல் அலசல் என்றால் தான் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் தமிழ் பத்திரிகை உலகில் எழுதப்படும் அலசல்கள் எல்லாமுமே ஆய்வென்று சொல்லப்படுவது முதலில் தவறானது.மேலும் செய்திகளை சுய பார்வையில் தருவது அலசலே தவிர ஆய்வல்ல. எனது கவனத்தை ஈர்த்த பிரதானாமான செய்தி சிறிலங்காவின் பொருளாதாரம் பற்றியது.இது பற்றி பல கட்டுரைகள் ப்லூம்பேர்க்,மற்றும் ரொய்ட்டர்ஸ் வெளியிட்டிருந்தார்கள்.அதனைத
-
- 12 replies
- 5.2k views
-
-
பான்கீமூன் அவர்கள் இன்றைய நாளில் வவுனியா முகாமுக்கு சென்றுவந்தார் அங்கே இருந்த சிறுவர்கள் எல்லோரும் கையில சிங்கக்கொடுயுடன் அவரை வரவேற்றிருக்கினம். அங்கே சிங்கக்கொடியும் பறக்கவிடப்பட்டிருந்தது என்ன கொடுமையிது அவர்கள் கட்டாயத்தின் பேரிலதான் அந்தக்கொடியை பிடித்திருக்கிறார்கள் என்பது உன்மையான விடயம் அங்கே சென்று மக்களிடம் குறைகனளக்கேட்டறிஞ்சவராம் ஆனால் சுத்திலும் இரானுவம் நிக்கேக்க மக்கள் என்னன்டு குறைகளை கூறுவது அந்த ஆளுக்கு இதுகூடத்தெரியேல . இந்தப்போட்டோவைப்பார்த்து நானும் ஏதோ சிங்களக்கிராமத்துக்கு ஆள் போட்டுவந்திரக்கிறார் என்டு பார்த்தால் இல்ல அவர் தமிழருடைய வவுனியாமுகாமுக்கெல்லே போட்டு வந்திருக்கிறார்
-
- 12 replies
- 3.3k views
-
-
ரியாலிட்டி ஷோவில் இருக்கும் 23 வயதான இலங்கை யுவதியை பத்து வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் தந்தை , முதன் முதலாக சந்திக்கும் போதே , பெண்ணின் நடத்தை குறித்து அதிருப்தியில் பகிரங்கமாக அவரை கண்டிக்கிறார் யாழ் வாசிகள் இதனைப் பற்றி ஏதும் அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?
-
- 12 replies
- 1.7k views
-
-
முகம்மது தம்பி மரைக்கார் - சிங்களப் பேரினவாதிகளின் வாய்களில், அவ்வப்போது அவலை அள்ளிப் போடுவதில், ரணில் விக்கிரமசிங்க பிரசித்தி பெற்றவர். பேரினவாதிகளுக்குக் கடுப்பேற்றும் கருத்துகளைக் கூறி, அவர்களின் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்வது ரணிலுக்கு வாடிக்கையாகும். சில நாள்களுக்கு முன்னர், வடக்குக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைத்துக் கூறிய விடயங்கள், அரசியலரங்கில் ‘காட்டுத் தீ’யை ஏற்படுத்தி இருக்கின்றன. இதன் காரணமாக, அவர் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுச் சண்டையில், விடுதலைப் புலிகள், இராணுவத்தினர் என, இரண்டு தரப்பாலும் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ரணில் விக…
-
- 12 replies
- 1.4k views
-
-
நெருப்பின் நியாயங்கள் அமைதியாக ஒருவன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவன் தற்கொலை செய்வதில்லை. அது மானுடத்தின் இயல்பும் இல்லை. சராசரி எதிர்பார்ப்புகளும் எதிர்நீச்சலும் என வாழ்க்கை நகரும். வாழ்க்கையின் நகர்வு ஸ்தம்பிதம் அடைந்து, எதிர்பார்க்கவும் எதிர்நீச்சல் போடவுமான மானுட இயல்பு மறுக்கப்படும் போது வெறுமை மிஞ்சுகிறது. அந்த வெறுமையெங்கும் பிணங்களும் சதைகளும் ஓலங்களும் நிறைந்து இறுதியில் வெறுமை நிரம்பி வெடித்து சிதறுகிறது. இவ்வாறு வெடித்து சிதறும் தன்மையை இக் கொடும் செயலின் காரணிகளை அழிக்கும் நோக்குடன் நிதானமாக கையாள்பவர்களே கரும்புலிகள். தேச மக்களின் உயிரைக்காக்கவும் உயிரின் பெறுமதியை ஆழமாக நேசிப்பதன் வெளிப்பாடாக அவரது வாழ்வு மறு வடிவமடைகிறது. தன்னை கொடுத்து பிற உய…
-
- 11 replies
- 3.4k views
-
-
தமிழர் தாயகத்தின் அடையாள சின்னமாக விளங்குவது பனை என்கின்ற கற்பகதரு ஆகும். இந்தியா உட்பட எத்தனையோ நாடுகளில் பனை மரம் இருப்பினும் யாழ்ப்பாணப் பனைமரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. யாழ்குடாநாட்டை குறிப்பிடும் போது குறியீட்டுப் பொருளாக பனைமரத்தைக் காண்பிப்பது வழமை. அந்த வகையில் பனை மரத்தை ஊடகங்களும் யாழ் குடாநாட்டைக் குறிப்பிடுவதற்கும் இலங்கையின் வடபகுதியைக் குறிப்பிடுவதற்கும் பனை மரத்தைக் குறிப்பிடுவது நாம் அறிந்த உண்மை. பனைமரம் தமிழ் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கியது என்றே சொல்லலாம். தமிழர் தாயகப் பகுதிகளில் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கு பனை மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது. ஆனால், இயற்கை அனர்த்தம் தவிர்ந்து கடந்தகால யுத்தம் காரணமாக மட்டும் தமிழர் தாயகப் பகுதிகளில் ச…
-
- 11 replies
- 5.3k views
-
-
ஆங்கிலத்தில் சொல்வார்கள்: damn you do and damn you don't. If you do whatever it is you are going to do then you are in trouble, if you don't act out what you were going to do then you are in trouble another way. நீங்கள் ஒரு விடயத்தினை செய்ய முனைந்தாலும் பிரச்னை, அந்த விடயத்தினை செய்யாமல் விட்டாலும் பிரச்னை தான். இது கூட்டமைப்புக்கு சரியாக பொருந்தும். அதற்கு முன்னால் மூன்று தெரிவுகள் இருந்தன. மகிந்தவுக்கு ஆதரவு, ரணிலுக்கு ஆதரவு, நடுநிலை. இதில் மகிந்தவுக்கு ஆதரவு தந்தாலும் பிரச்சனை, நடுநிலைமை வகித்தாலும், அதுவே மகிந்தவுக்கு சார்பாகி பிரச்சனை. ஆகவே மூன்றாவது தெரிவே அவர்கள் முன் இருந்த தவிர்க்க முடியாத தெரிவு ஆக இருந்தது. மறுபுறம்... சர்வத…
-
- 11 replies
- 1.5k views
-
-
-
தோல்வியில் முடிந்த மீட்பு நடவடிக்கையும், முற்றுகைக்குள் சிக்கிய சிறப்புப் படையணியும் | வேல்ஸ் இல் இருந்து அருஸ் April 4, 2022 முற்றுகைக்குள் சிக்கிய சிறப்பு படையணி எதிரியின் எல்லைக்குள் தாக்குதல் நடத்துவது என்பது எதிரியை அச்சமடைய வைப்பது ஒருபுறம் இருக்க, தாக்குதல் நடத்தும் தரப்பின் பிரச்சாரத்திற்கு மிகவும் சிறந்த வாய்ப்பாகும். பிடல் கஸ்ரோ அவர்கள் கூறியது போல ஆயிரம் மேடைப் பேச்சுக்களை விட ஒரு கெரில்லாத் தாக்குதல் மிகச் சிறந்த பிரச்சாரமாகும். ஆனால் உக்ரைன் விவகாரத்தில் அதனையும்விட மேல், அதாவது தாக்குதல் நடத்துவது மட்டும் தான் உக்ரைன் படையினரின் பணி; பிரச்சார வேலைகளை மேற்குலக அரசியல் தலைவர்களும், ஆய்வாளர்களும், ஊடகங்களும் பலமடங்கு பெரிதாக செய்து முடிப்பார்க…
-
- 11 replies
- 715 views
-
-
யாழ்இணைய செய்தி ஆய்வு எத்தனை காலந்தான் மகிந்தரின் வீராப்பு? தென் தமிழீழத்தில் மட்டக்களப்பை முற்றாக கைபற்றி விட்டதாக சிங்கள இனவாதிகள் ஏதோ ஒரு நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த மாதிரி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இராணுவ ஆக்கிரமிப்பினால் எமது தமிழீழ மக்கள் அகதிகளாக தங்கள் சொத்துக்கள், வதிவிடங்கள் அத்தனையையும் இழந்து, இன்று அரைவயிறு உணவுடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் வேளையில், மகிந்தாவின் அரசு பசுமைப்புரட்சி செய்வதாகக் கூறிக்கொண்டு தென்தமிழீழத்தில் சிங்கள குடியேற்றத்தின் மூலம் தனது கைங்கரித்தைக் காட்ட முனைகின்றார். இது போன்றவை காலங்காலமாக ஒவ்வொரு சிங்கள அரசாங்கங்களும் நடைமுறை படுத்திக் கொண்டிருக்கின்றது. இப்படி வீராப்பு பேசும் மகிந்தர் சிங்கள இராணுவம…
-
- 11 replies
- 5.2k views
-
-
தடைகள் உருவாக்கும் தனிநாடு யாழ் இணைய செய்தி அலசல் எழுதியவர்: உ. துசியந்தன் தடைகள். மானுடத்தின் மாபெரும் வெற்றிகளின் இரகசியம். அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஆதாரம். தொழில்நுட்ப சாதனைகளின் ஊக்கசக்தி. விடுதலை வேண்டிநிற்கும் இனங்களின் உற்சாகம். மானுட சமூகத்தின் பரிணாம வளர்ச்சி என்பது "தடை மீறல்" என்பதனூடாகவே நிகழ்ந்திருக்கிறது. தடை போடல் இருக்கும் வரை, தடை மீறல் என்பது நிகழ்ந்து கொண்டேயிருக்கும். தமது தனித்துவத் தேசிய அடையாளத்தையும் - சுயநிர்ணய உரிமையையும் - தாயக விடுதலையையும் வேண்டி நிற்கும் ஒரு இனத்தைப் பொறுத்தவரையில், தடைகள் என்பவை அவர்களின் "இருப்பு"க்கான சவாலாகும். அன்றுதொட்டு இன்றுவரை தமிழ்மக்கள் பல்வேறுபட்ட தடைகளுக்கும், அரசியல் - இராணு…
-
- 11 replies
- 8.2k views
-
-
சம்பந்தர் துரோகியா? நிராஜ் டேவிட் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரலாறு பற்றியும், அதன் உருவாக்கத்தின் பின்னால் இருந்த உழைப்புக்கள் பற்றியும் கடந்த வாரம் இந்தப் பத்தியில் சற்று விரிவாக ஆராய்ந்திருந்தோம். சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இலங்கை ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், த.தே.கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றது. சுயநிர்ணய உரிமை, வடக்கு கிழக்கு இணைப்பு என்கின்ற கோரிக்கையின் அடிப்படையில் அந்த அமைப்பு தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றது. இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்மையிலேயே தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிநடாத்த தகுதியானதா? தமிழ் தேசியக் கூட்டமைப்பே இன்று ஈழத் தமிழர்களின் உண்மையான அரசியல் பிரதிநிதிகளா? …
-
- 11 replies
- 1.3k views
-
-
என்னப்பா சுவிஸ்ல எல்லாரும் சந்திக்க போயினமாம் என்றொரு செய்தி வந்திருக்கிறது.. கூட்டனி கூட்டமைப்பு தேவாநந்தா பிள்ளையான் தொண்டமான் ஹக்கீம்.. சித்தார்த்ன்...
-
- 11 replies
- 1.4k views
-
-
* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 11 replies
- 4.4k views
-
-
-
மாதுளம்பழ தோட்டம். இந்த தோட்டம் இருக்குமிடம் எமது யாழ் உறவு ஒருவரின் வீட்டு கோடிக்குள். பராமரிப்பாளர் மிகவும் திறந்த மனதுடன் பேட்டியளிக்கிறார்.
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கையின் அழைப்பை ஏற்று, ஜனவரி 20-24, 2012ல், அங்கு மும்மொழித் திட்டத்தை தொடங்கி வைக்கும் வைபவத்தில், நானும் என் குழுவினரும் கலந்து கொண்டோம். இலங்கையில் இதுவரை நடந்த, நடந்து வரும் அனைத்து சம்பவங்களையும், போர்க் காலசம்பவங்களையும் பற்றி, நான் கனத்த இதயத்தோடு அறிவேன். போருக்கு பின்னால், அங்கு வாழும் இலங்கை தமிழ் மக்களைச் சென்று பார்த்து, கலந்துரையாடி, அங்குள்ள நிலைமை என்ன என்று அறிந்து வர வேண்டுமென, வெகுநாளாக நினைத்துக் கொண்டிருந்தேன். எனவே, எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, இலங்கைக்கு சென்று வந்தேன். இலங்கை தமிழர் பிரச்னையில், நான் இரண்டு விதமாக பங்கெடுக்க முடியும். ஒன்று, இந்தியாவில் இருந்து கொண்டே அறிக்கை விடுவது, பத்திரிகைகளில் எழுதுவது, பகைமையை…
-
- 11 replies
- 1.5k views
-
-
பொன்.சிவகுமாரன் பதியப்படாத உண்மை! அந்தநாளுக்கு முந்தையபொழுதில் அதைப்போன்றஒரு காட்சியை தமிழீழம் பார்த்துஅறிந்து இருக்கவில்லை.மிகவும் உணர்ச்சிநிறைந்த ஒரு இறுதிநிகழ்வு அதற்குமுன்னர் நடந்ததில்லை. தமிழீழவிடுதலைக்கான போராட்டம் மெதுமெதுவாக ஆயுதப்போராட்டத்தைநோக்கி நகர்ந்துகொண்டிருந்த அந்த ஆரம்பபொழுதில் சிவகுமாரன் என்ற ஆயுதபோராட்டவீரனுக்கு தமிழ்மக்கள் கொடுத்த திரளான இறுதிவழிஅனுப்புநிகழ்வானது அப்போது தமிழீழவிடுதலைக்கான ஆயுதபோராட் டுத்தில் நின்றுகொண்டிருந்தவர்களுக்கும் அதற்குப்பின்னர் போராட்டகளத்துக்கு வுந்தவர்களுக்கும் மிகப்பெரிய உந்துதலைக்கொடுத்தது. பொன்.சிவகுமாரன் தான்வாழும்போதும் தமிழீழவிடுதலையை முன்னகர்த்த ஓயாது பாடுபட்டதுபோலவே தன் மரணத்தின்போதும் விடுதலைப்போராட்…
-
- 11 replies
- 867 views
-
-
-
- 11 replies
- 1.9k views
-
-
தேர்தல் சொல்லப் படாதா கதைகள் வ,ஐ,.ச,ஜெயபாலன் (குமுதம் வெளியிட்ட பிரதியில் சில சொற்க்கள் edit பண்ணப்பட்டுள்ளது} தமிழ் மக்களை அச்சுறுத்திய தேர்தல் வெளிப்படையான மாறுதல்கள் எதனையும் ஏற்படுத்தாமல் நடந்து முடிந்துவிட்டது. எனினும் புலம் பெயர்ந்தும் வாழும் இலங்கைத் தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழக உணர்வாளர்களுக்கும் நடந்து முடிந்த தேர்தல் கள யதார்த்தையும் எதிர்கால அரசியலின் இயங்கு திசைகளையும் சாத்தியமான தெரிவுகளையும் தெளிவாகக் கோடிகாட்டிச் சென்றுள்ளது. சிங்களபிரதேசம் என்று அடையாளப் படுத்தப்படும் தென்பகுதி மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக மகிந்த வெற்றி பெற்றுள்ளார். எனினும் சிங்கள மத்திய மாகாணத்தில் மலையக தமிழர் செறிந்துவாழும் நுவரெலியா மாவடமாவட்டத்தில் மட்டும் மகிந்த தோற்க்கடிக்கப் …
-
- 11 replies
- 1.2k views
-
-
* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 11 replies
- 4.9k views
-
-
CTR வானொலி போகும் போக்கு மண்ணையும் மனங்களையும் மறந்த மக்களின் ஊடகமாக உருவெடுக்குமா?? * இவ் விடயம் 02. 06. 2010, (வெள்ளி), தமிழீழ நேரம் 12:04க்கு பதிவு செய்யப்பட்டது புலத்தமிழர், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல் சர்வதேசத்தில் ஒலிக்கும் புலம் பெயர் தமிழரின் உரிமைக் குரலை முழுமையாக நசுக்குவதற்கு சிறிலங்கா அரசு எத்தனித்து வரும் ஒரு கால கட்டத்தில் தமிழ் ஊடகங்கள் தமது வீச்சான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டிய ஒரு தருணத்தில் கடந்த சில தினங்களாக கனடாவின் தமிழ் தேசிய ஊடகங்கள் தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கின்ற செய்திகள் தமிழ் ஆர்வலர்களை விசனமடைய வைத்துள்ளதுடன் சினங் கொள்ளவும் செய்துள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் (31-05-2010) CTR வானொலியில் அடிக்கடி மீள் ஒளிபரப்புச் செ…
-
- 11 replies
- 1.8k views
-
-
எதையும் எழுதக் கூடிய மன நிலையில் நான் இல்லையென்றும், அதனாலேயே மூன்று மாதங்களாக என்னுடைய இணையத் தளத்தை அப்படியே கிடப்பில் போட்டேன் என்றும் கடந்த கட்டுரையில் எழுதியருந்ததை வாசித்த சிலர் என்னுடன் தொடர்பு கொண்டார்கள். என்னை தொடர்ந்து எழுதும் படியும் அத்துடன் வெப்ஈழம் இணையத்தில் தொடர்ந்தும் ஆக்கங்கள் இடம் பெறுவதற்கு தம்மால் முடிந்த பங்களிப்பை செய்கிறோம் என்று அன்போடு கூறினார்கள். அவர்களின் ஆர்வத்தினால் மிக்க மகிழ்ச்சி அடைந்த நான் அவர்களிடம் நிபந்தனைகளுடன் கூடிய சில கோரிக்கைகளை முன்வைத்தேன். என்னுடைய தளத்தில் எழுதுகின்ற பொழுது “தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்பது போன்ற மோசடியான கட்டுரைகளை எழுதக் கூடாது”, “மறுவாசிப்பு என்ற பெயரிலோ வேறு வகையிலோ தேசியத் தலைவரை கொ…
-
- 11 replies
- 1.5k views
-