Jump to content

இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எனக்கு இங்குள்ள கருத்துக்களைப் பார்க்கும்போது தலையில் அடித்து சிரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை

இங்கு பதிவிட்டவர்கள் தேசியம் என்கிறார்கள் பிரிவினை என்கிறார்கள் பச்சைப்புள்ளி என்கிறார்கள் இந்தக்கருத்துக்களத்தில் பல இடங்களில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்களை தொடர்ச்சியாக வாசிப்பவர்களுக்குத் தெரியும் எப்படி எப்படியெல்லாம் முதுகு சொறியலாம் என்பது...!

ஒரு சின்ன உதாரணம் கருத்துப்பதிவுகளை அவதானித்தால் பச்சைப்புள்ளி போடுபவர்கள் அப்படியே வரிசையாகப் பதிவிடுவார்கள் என்னுடைய பச்சை முதலாவது என்னுடைய பச்சை இரண்டாவது.... அதைப்போல அப்படி பச்சை போடுபவர் தன்னை விளம்பரப்படுத்தாவிட்டால் பச்சை நிற எழுத்துக்களால் குறிப்புக் காட்டிக் கொள்வார்...

அடுத்தது தேசியம் என்று அதிகமாக அலட்டுபவர்களைப் பார்த்தால் அவர்கள்தான் அதிகமாக மற்றவர்களமேல் தனிமனிதத்தாக்குதல் நடாத்துபவர்களாக இருக்கிறார்கள் அதே நேரம் தாக்குதலுக்கு முகங்கொடுக்கும் மற்றவர்கள் கூட தமது தனிமனித தாக்குதல்களையும் தாமே சரி என்ற வாதத்தினையும் வைப்பதற்கும் இந்தக்களத்தைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை.

பிரிவினை வரும் என்று பீற்றிக் கொள்கிறார்கள். மனிதர்களை மனிதர்களாக நடாத்தும் பண்புள்ளவர்களிடம் பிரிவினை உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படிப்பார்த்தால் இங்கு அக்கருத்தை முன்மொழிபவர்கள் தங்களால் தங்களை ஆளமுடியாதவர்கள் என்றுதானே அர்த்தம்.

அடுத்தது இங்கு இந்தத் திரியைத் திறந்த போக்குவரத்திற்கும் கூற வேண்டிய விடயங்கள் இருக்கின்றன.

இங்கு உங்கள் கருத்திற்கு உடன்பாடற்றவர்களை சிறந்த கருத்தாளர்ர்களைத் தெரிவு செய்ய முன்மொழிந்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று அவர்கள் உங்கள் கருத்திற்கு இப்படிச் செய்யலாம் அப்படிச் செய்யலாம் என்று ஏதாவது ஆலோசனை வழங்கியிருந்தால் அப்பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கப்படுவது ஏற்புடையது ஆனால் அவர்கள் முழுமையாக எதிர்க்கிறார்கள் அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி தன்னிச்சையாக அவர்களிடம் அத்தகைய திணிப்பை மேற் கொள்வீர்கள்?

ஒரு நீண்ட காலமாக இந்தக்கருத்துக்களத்தை அவதானித்து வருபவளாக என்னுடைய கருத்து....இங்கு ஒரு கருத்துப்பதிவை நடாத்தி ஒரு பொதுத்தளத்திற்கான விடயத்தை முன்னெடுப்பது என்பது இந்தக்களத்தில் குதிரைக் கொம்புக்கு ஒப்பானது.

திரு. மோகன் அவர்களுக்கு தளத்தை விரிவுபடுத்துவதும் தொடர்ந்து நடாத்துவதும் நீங்கள்தான். வித்தியாசமான முறையில் யாழ் கருத்துக்களம் வளர்க்கப்படும் நேரத்தில் அது பல தளத்திலும் பிரவேசிக்கவேண்டும். கடந்தகாலங்களில் இங்கு எத்தனையோ கருத்தாளர்கள் வந்தார்கள் போனார்கள் நிலையாக நிற்பவர்கள் மிகச் சொற்பம். நானறியவே நிறைய இலக்கியவாதிகள் இங்கு வந்து அவர்களுக்குச் சரியான தளம் அமையாததால் இதிலிருந்து விடுபட்டு வலைப்பூக்களில் தம்மை அசைக்கமுடியாத அளவுக்குத் தடம் பதித்துள்ளார்கள். இங்கிருக்கும் பலர் அறிவர். அவர்களுக்கு ஏன் இந்தக்களம் சரியாக அமையவில்லை என்று யாருமே வினவியதில்லை. அண்மையில்கூட இங்கு நின்று கருத்தெழுதும் ஒருவர் திண்ணையில் தான் இனிமேல் வலைப்பூவிலேயே என்னுடைய கவனத்தைச் செலுத்தப்போகின்றேன் இங்கு நிற்பது வீண் என்று அங்கலாய்த்துக் கொண்டார். எப்போது என்று பார்த்தால் தனக்கு உடன்பாடாக யாழ்க்கருத்துக்களம் அமையவில்லை என்ற அதிருப்தியில் சொல்லப்பட்டது. ஆகவே எனக்கு, என்னுடைய ஏகோபித்த விருப்பிற்கு யாழ் அமையவில்லை என்றால் வெளிநடப்புச் செய்யும் மனோநிலையில் உலவும் பலருடைய இப்போதைய கருத்தைப் பார்க்கும்போது குமட்டுகிறது.

இங்கு எல்லோரும் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கருத்துக்களில் தரம் பிரித்து சிறந்த கருத்து என்று தெரிவு செய்வது... என்ன தனிமனிதத் தாக்குதல்களுக்குக் குத்தப்படும் பச்சைப்புள்ளிகள் என்று நினைத்துவிட்டீர்களா?

அண்மையில் விசுகு அண்ணா நிழலியின் கவிதைக்கு இட்டிருந்தார் அப்படி ஒரு சிறந்த கருத்து. அதற்காக மற்றவர்களுக்கு எழுதத் தெரியாதென்பதல்ல மற்றவர்கள் எழுத எத்தனிக்கவில்லை என்றுதான் அர்த்தம். எல்லோருக்குள்ளும் திறமைகள் இருக்கின்றன. கருத்துக்களத்தில் எழுதவந்தவர்களிடம் எழுத்து ரீதியான திறமைகள் கண்டிப்பாக இருந்தே ஆகவேண்டும்.அதை இன்னும் ஓங்கச் செய்வதற்கு ஒரு உந்து சக்தி வேண்டும். அந்த உந்து சக்தியாக இந்த போக்குவரத்தின் சிந்தனையில் உதயமாகிய இந்தப்போட்டி அமையலாம் என்பது என்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கை. இந்தப்போக்குவரத்து இந்தப்போட்டியினை நிகழ்த்துவதால் பிரிவினை வந்துவிடும் என்று பயப்படுவது சுத்த முட்டாள்தனம்.

விளம்பர நிறுவனம் ஒரு போட்டி நிகழ்ச்சியை நடாத்துகிறது என்று நாங்கள் பங்குபற்ற மாட்டோம் என்றால் அந்த நிறுவனத்திற்கு "தயவு செய்து எங்களை உங்களுடைய போட்டி நிகழ்வில் சேர்க்கவேண்டாம். அதற்கு எங்களுக்கு உடன்பாடு இல்லை" என்று அறிவிக்கலாம் அதைவிட்டுவிட்டு அந்த நிறுவனம் இந்தப்போட்டியை நடாத்தினால் நாங்கள் பிரிவினைப்படுவோம் நாங்கள் பணத்திற்காக எழுதவில்லை என்று காரமாக மோதுவதால் யாழ் தன்னுடைய வளர்ச்சிப்படிகளை குறுக்கிக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

இப்போது இந்த விடயத்திற்காக மட்டுமில்லை பலவிடயங்களில் தனித்துவம் தனித்துவம் என்று யாழ் தன்னை குறுகிய வட்டத்திற்குள் நிறுத்தி வைத்திருக்கிறது. இங்கு கருத்திடும் பல கருத்தாளர்கள் இன்னும் சற்று திறமையாக எழுத முற்பட்டதும் இந்த யாழ் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே நிற்கிறது என்று அவர்கள் பெரிய வட்டத்தைத் தேடிச் செல்வார்கள். அப்போது மீண்டும் இந்தப்பதிவை இங்கு நின்று நிலைக்கக்கூடிய கள உறவுகள் தூசுதட்டிப்பார்க்கக்கூடும்... இதற்கு மேல் ஒன்றும் எழுத விரும்பவில்லை

யாரும் இங்கு என்னை எந்த போட்டி நிகழ்விலும் சேர்க்க வேண்டாம்.

என் பேரை என் அனுமதியின்றி எங்கும் சேர்க்க வேண்டாம்.

(இது சரி தானே அக்கா?) :)

  • Replies 306
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாரும் இங்கு என்னை எந்த போட்டி நிகழ்விலும் சேர்க்க வேண்டாம்.

என் பேரை என் அனுமதியின்றி எங்கும் சேர்க்க வேண்டாம்.

(இது சரி தானே அக்கா?) :)

என்னுடைய கருத்தைச் சொன்னேன் இதற்குப் பதில் எழுதவேண்டிய அவசியம் எனக்கு இல்லை தம்பி.....

"ஓம் தம்பி.".. என்று நான் எழுதினால் நாளைக்கே அக்கா உங்களால் எனக்கு உடன்பாடில்லாவிடயத்தில் இப்படி எழுதும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளானேன் என்பீர்கள் இது தேவையா எனக்கு....:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்னுடைய கருத்தைச் சொன்னேன் இதற்குப் பதில் எழுதவேண்டிய அவசியம் எனக்கு இல்லை தம்பி.....

"ஓம் தம்பி.".. என்று நான் எழுதினால் நாளைக்கே அக்கா உங்களால் எனக்கு உடன்பாடில்லாவிடயத்தில் இப்படி எழுதும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளானேன் என்பீர்கள் இது தேவையா எனக்கு.... :)

:D :D

அக்கா நீங்கள் சொல்லி தட்டுவேனா? :rolleyes:

ஜீவா குடுத்த பொருளும், குடுத்த வாக்கும் மாறுவதில்லை :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த நிகழ்வை போக்குவரத்து தொடர்நது நடாத்தவேண்டும்..நீங்கள் வியாபரத்தில் இருப்பவர்....இப்படியான நிறைய எதிர்ப்புகளை எல்லாம வியாபாராத்தில் நீங்கள் பாத்திருப்பீர்கள் இதை எல்லாம் கண்டு துவண்டுவிடாமல்.......தொடந்hதும் இதை நீங்கள வெற்றிகரமாக நடாத்தவேண்டும்.....யாழின் வளர்ச்சிக்கு இது நல்லதோர் முயற்ச்சி.....மோகன் அண்ணா அன்ட் யாழ் கள நிர்வாகம் போக்கவரத்துக்கு இந்த நிகழ்சியை வெற்றிகரமாக நடாத்திட அணுமதி கொடுக்கவேண்டும் என்று யாழ் சுண்டல் ரசிகர் மன்றத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறன்........

சாகாரா அக்காக்கு ஒரு பச்சை......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு பாடசாலையில் திறமையான மாணவனை மேடையில் அழைத்து பரிசு கொடுத்து மதிப்பளிச்சா அதனோட அhத்தம்...மற்ற மாணவர்கள் எல்லாம் முட்டாள்னா? அதை பார்த்து அடுத்த வாட்டி நாங்களும் பரிசு வாங்கணும்ணு தானே அப்படி செய்யிறாhங்க? இல்லை ஒரு மாணவணுக்கு பரிசு கொடுத்ததுக்காக டீச்சர் டீச்சர் நாங்க இனி ஸ்க்கூலுக்கே வரமாட்டம் என்டு சொல்லுறமா??

Posted

In general, an opinion is a subjective belief, and is the result of emotion or interpretation of facts. An opinion may be supported by an argument, although people may draw opposing opinions from the same set of facts. Opinions rarely change without new arguments being presented. However, it can be reasoned that one opinion is better supported by the facts than another by analysing the supporting arguments. In casual use, the term opinion may be the result of a person's perspective, understanding, particular feelings, beliefs and desires. It may refer to unsubstantiated information, in contrast to knowledge and fact-based beliefs.

கீழே வருவது யாழ் போன்ற பொதுத் தளங்களுக்கு ஒத்து வராதது. தொழில் துறை தளங்களுக்கு ஏற்புடையது.

Collective or professional opinions(You may be expected to have a professional degree in the field that relates to the subject that you are commenting on) are defined as meeting a higher standard to substantiate the opinion.- Wikipedia

இதுவரையில் பரிசளிக்க முடியாத கருத்தையும், இனம் காணத்தக்க திறமையயும் சேர்த்து குழம்புவோரே பரிசிலுகுக்குச் சார்பாக வாதாடுகிறார்கள். மேலும் பத்தி பத்தியாக மூக்கால் சினுங்கும் குழந்தைகளாக இருக்கிறார்களே தவிர விசையத்திற்கு வர விரும்புகிறார்கள் இல்லை. (விசுகர் அண்ணா "எழுத்தாளர்" என்ற பதத்தை பாவித்தார். ஆனால் அது "கருத்துக்கு பரிசி"லுக்கு வாதாடுவோரிடம் இது வரையில் எடுபடவில்லை. எல்லோரும் அந்த பதத்தை புறம் தள்ளி விட்டர்கள். எல்ல கருத்திலும் அவர் நல்ல முகத்தை காட்டியும், பச்சை குத்துவோர் இதுவரையில் அவரின் எந்த கருத்துக்கும் மதிப்பளிக்கவில்லை. ஆபிரகாம் லிங்கன் வெள்ளையர்களின் கருத்துகளைச் சட்டை செய்ய வில்லை. அவர் பலர் ஏற்றுகொள்ளும் கருத்து சரியாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதவில்லை.

கருத்து பரிசளிக்க தக்கதொன்றல்ல. திறமையிலிருந்து பிறக்கும் ஆலோசனைகள் வேறு(Consultation). கற்பனைப்படைப்புக்கள் வேறு. உதாரணத்திற்கு நான் கருத்துகளுக்கு பரிசளிப்பது தவறு என்று தையில் ஒரு கருத்து கூறி பரிசை வங்கிவிட்டு, தை முழுவதும் கருத்துகளுக்கு பரிசளிப்பது சரி என்று கருத்து கூறியவர்களால் உந்தப்பட்டு மாசியில் எனது கருத்தை நான் மாற்றிக்கொண்டு கருத்துக்கு பரிசளிப்பது சரி என்று கருத்து கூறலாம். இதில் எனக்கு அளிக்கபட்ட பரிசு என் தற்போதைய கருத்தில் எனது பிழையான கருத்துக்காகும். ஒருவரின் கருத்து மாறலாம். அதை பரிசைக் கொடுத்து கடமைப் படுத்தி தடுத்துப் பிடிப்பது தவறு.

குற்றவாளியை குற்றவாளி என்பது மனச்சாட்சியான கருத்து. குற்றவாளியை குற்றத்தை நிரூபிக்க முடியாததால் நிரபராதி என்று வாதாடுவது தொழில் துறை வக்கீலின் வாதம். யாழ் போன்ற கருத்துக்களங்களில் குற்றவாளி குற்றவாளியே. கெயிலி அந்தனியின் வழக்கில் தளங்கள் தங்கள் கருத்துக்களில் தாயார் குற்றவாளியே என்று பெருந்தொகையாகக் கருத்து கூறியிருந்தும் எதிர்த் தரப்பு வக்கீலின் வாதத்தால் தாயர் விடுதலை செய்யப்ப்ட்டார். உலகப்புகழ் பெற்ற சிம்சன் வழக்கிலும் இதுவே நடந்தது. இன்னமும் கென்னடியைக் கொன்றது CIA என்பது பலரது நம்பிக்கை. இதனால்த்தான் தொழில்துறை ரீதியாக பயிற்றப்படாத பொதுமக்கள், பரிசு ஆவலில் கருத்து என்று கூறி பல விதண்ட வாதங்களை வைத்து தம்மை திறமையா ன வக்கீல்களாக காட்ட முனைவதைத் தடுக்க முடியாது. பரிசில் வழங்குவதை ஆதரித்தாலும் பச்சைக்கு எழுதுவது யாழில் உண்மை என்கிறார் நெடுக்கர். பிரிந்து வாதாடுவோர் திரும்பச் சேர்ந்து கருத்து கூறுவது யாழில் குறைவு என்கிறார் ரதி அக்கா. ஒரே கருத்தை இருவர் கூறி இருவரும் பரிசில் பெற முடியாதென்பதால் வேணுமென்றெ ஒருவர் கூறும் கருத்துக்கு எதிர்க் கருத்தை வைக்கவேண்டிய தேவையைப் பரிசில் கட்டாயம் தூண்டியே தீரும்.

நல்ல ஒரு முயற்சிக்கும் திறமைக்கு பரிசளித்தால் அதை யார்தான் எதிர்ப்பார்கள். கருத்தொன்றுக்கு நல்ல கருத்தென்று பரிசளிப்பதும், வானவில்லின் ஏழுநிறங்களில் ஒன்றைத் தெரிந்தெடுத்து அது தான் மிகவும் அழகான நிறம் என்று கூறுவதும் சரிக்குச் சரி. பணதிற்க்காக பிள்ளையானும், கருணாவும், டக்கிளசும் யரோ எழுதிய அறிக்கைகளை வாசிப்பதை யாரால் ஏற்றுக்கொள்ள முடியும். நிச்சயமாக அது அவர்களின் கருத்தல்ல.

Posted

வல்வை சகாறா உங்கள் வினாக்களிற்கு நன்றி. ஒரு வியாபார நிறுவனம் எனும் வகையில் பரந்த வீச்சுடன் இங்குள்ள பல்வேறு விடயங்கள் பற்றி கருத்து கூறுவதற்கு நாம் விரும்பவில்லை. ஒரு அனுசரணையாளர் எனும் அளவுடன் எமது பேச்சுக்களை இங்கு மட்டுப்படுத்தி கொள்ள விரும்புகின்றோம்.

நீங்கள் கூறியபடி குதிரை கொம்பாக அமையும் எனும் காரணத்தினாலேயே ஆரம்பத்திலேயே விதி முறைகளை மட்டு படுத்தியதோடு இறுதி முடிவு : போக்குவரத்து எனவும் தீர்மானிக்கப்பட்டது. எல்லோருக்கும் விதம்,விதமான வெவ்வேறு தனிப்பட்ட கருத்துக்கள் காணப்படும். எல்லோருடைய தனிப்பட்ட கருத்துக்களையும் கேட்டு நடந்தால் எதுவித காரியத்தையும் செய்ய முடியாது. கடைசியில் அது கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் மாறிய கதையாகவே போகும்.

நிச்சயம் இந்த முயற்சியை பொறுப்பான முறையில் அணுகி பயனுள்ள முறையில் பிரயோகிக்க முயற்சி செய்கிறோம்.

ஏற்கனவே கூறியபடி,

சில மாற்றங்களை ஆலோசிக்கின்றோம். உ+ம்:

ஆம், வெவ்வேறு பிரிவுகளில் வெவ்வேறு ஆற்றல்கள் உள்ளன என்பது உண்மை. ஆனால், கீழ் வரும் களங்களை மட்டுமே உள்ளடக்க வேண்டும்.

செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

கோடிப்பாலை [அறிவியற்களம்]

விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

இவற்றில்

கோடிப்பாலை [அறிவியற்களம்]

விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

ஆகிய இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம்.

சிறந்த கருத்தாளர் எனும் சொற்பதத்தை மாற்றி வேறு ஒரு பதத்துடன் உ+ம்: 'பயனுள்ள ஆக்கம் / கருத்து' ஊக்கம் அளிக்கலாம்.

இன்று Jan 12, 2012. இம் மாதத்தின் இறுதி வாரத்தின் முன்னர் தேவையான மாற்றங்களை செய்து, தெளிவான ஒரு திட்டத்தை உருவாக்கி இந்த முயற்சியை முன் எடுக்க முடியும் என்கின்ற நம்பிக்கையுடன் செயற்படுகின்றோம்.

நன்றி

Posted

எனக்கு இங்குள்ள கருத்துக்களைப் பார்க்கும்போது தலையில் அடித்து சிரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை

இங்கு பதிவிட்டவர்கள் தேசியம் என்கிறார்கள் பிரிவினை என்கிறார்கள் பச்சைப்புள்ளி என்கிறார்கள் இந்தக்கருத்துக்களத்தில் பல இடங்களில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்களை தொடர்ச்சியாக வாசிப்பவர்களுக்குத் தெரியும் எப்படி எப்படியெல்லாம் முதுகு சொறியலாம் என்பது...!

ஒரு சின்ன உதாரணம் கருத்துப்பதிவுகளை அவதானித்தால் பச்சைப்புள்ளி போடுபவர்கள் அப்படியே வரிசையாகப் பதிவிடுவார்கள் என்னுடைய பச்சை முதலாவது என்னுடைய பச்சை இரண்டாவது.... அதைப்போல அப்படி பச்சை போடுபவர் தன்னை விளம்பரப்படுத்தாவிட்டால் பச்சை நிற எழுத்துக்களால் குறிப்புக் காட்டிக் கொள்வார்...

அடுத்தது தேசியம் என்று அதிகமாக அலட்டுபவர்களைப் பார்த்தால் அவர்கள்தான் அதிகமாக மற்றவர்களமேல் தனிமனிதத்தாக்குதல் நடாத்துபவர்களாக இருக்கிறார்கள் அதே நேரம் தாக்குதலுக்கு முகங்கொடுக்கும் மற்றவர்கள் கூட தமது தனிமனித தாக்குதல்களையும் தாமே சரி என்ற வாதத்தினையும் வைப்பதற்கும் இந்தக்களத்தைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை.

பிரிவினை வரும் என்று பீற்றிக் கொள்கிறார்கள். மனிதர்களை மனிதர்களாக நடாத்தும் பண்புள்ளவர்களிடம் பிரிவினை உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படிப்பார்த்தால் இங்கு அக்கருத்தை முன்மொழிபவர்கள் தங்களால் தங்களை ஆளமுடியாதவர்கள் என்றுதானே அர்த்தம்.

அடுத்தது இங்கு இந்தத் திரியைத் திறந்த போக்குவரத்திற்கும் கூற வேண்டிய விடயங்கள் இருக்கின்றன.

இங்கு உங்கள் கருத்திற்கு உடன்பாடற்றவர்களை சிறந்த கருத்தாளர்ர்களைத் தெரிவு செய்ய முன்மொழிந்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று அவர்கள் உங்கள் கருத்திற்கு இப்படிச் செய்யலாம் அப்படிச் செய்யலாம் என்று ஏதாவது ஆலோசனை வழங்கியிருந்தால் அப்பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கப்படுவது ஏற்புடையது ஆனால் அவர்கள் முழுமையாக எதிர்க்கிறார்கள் அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி தன்னிச்சையாக அவர்களிடம் அத்தகைய திணிப்பை மேற் கொள்வீர்கள்?

ஒரு நீண்ட காலமாக இந்தக்கருத்துக்களத்தை அவதானித்து வருபவளாக என்னுடைய கருத்து....இங்கு ஒரு கருத்துப்பதிவை நடாத்தி ஒரு பொதுத்தளத்திற்கான விடயத்தை முன்னெடுப்பது என்பது இந்தக்களத்தில் குதிரைக் கொம்புக்கு ஒப்பானது.

திரு. மோகன் அவர்களுக்கு தளத்தை விரிவுபடுத்துவதும் தொடர்ந்து நடாத்துவதும் நீங்கள்தான். வித்தியாசமான முறையில் யாழ் கருத்துக்களம் வளர்க்கப்படும் நேரத்தில் அது பல தளத்திலும் பிரவேசிக்கவேண்டும். கடந்தகாலங்களில் இங்கு எத்தனையோ கருத்தாளர்கள் வந்தார்கள் போனார்கள் நிலையாக நிற்பவர்கள் மிகச் சொற்பம். நானறியவே நிறைய இலக்கியவாதிகள் இங்கு வந்து அவர்களுக்குச் சரியான தளம் அமையாததால் இதிலிருந்து விடுபட்டு வலைப்பூக்களில் தம்மை அசைக்கமுடியாத அளவுக்குத் தடம் பதித்துள்ளார்கள். இங்கிருக்கும் பலர் அறிவர். அவர்களுக்கு ஏன் இந்தக்களம் சரியாக அமையவில்லை என்று யாருமே வினவியதில்லை. அண்மையில்கூட இங்கு நின்று கருத்தெழுதும் ஒருவர் திண்ணையில் தான் இனிமேல் வலைப்பூவிலேயே என்னுடைய கவனத்தைச் செலுத்தப்போகின்றேன் இங்கு நிற்பது வீண் என்று அங்கலாய்த்துக் கொண்டார். எப்போது என்று பார்த்தால் தனக்கு உடன்பாடாக யாழ்க்கருத்துக்களம் அமையவில்லை என்ற அதிருப்தியில் சொல்லப்பட்டது. ஆகவே எனக்கு, என்னுடைய ஏகோபித்த விருப்பிற்கு யாழ் அமையவில்லை என்றால் வெளிநடப்புச் செய்யும் மனோநிலையில் உலவும் பலருடைய இப்போதைய கருத்தைப் பார்க்கும்போது குமட்டுகிறது.

இங்கு எல்லோரும் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கருத்துக்களில் தரம் பிரித்து சிறந்த கருத்து என்று தெரிவு செய்வது... என்ன தனிமனிதத் தாக்குதல்களுக்குக் குத்தப்படும் பச்சைப்புள்ளிகள் என்று நினைத்துவிட்டீர்களா?

அண்மையில் விசுகு அண்ணா நிழலியின் கவிதைக்கு இட்டிருந்தார் அப்படி ஒரு சிறந்த கருத்து. அதற்காக மற்றவர்களுக்கு எழுதத் தெரியாதென்பதல்ல மற்றவர்கள் எழுத எத்தனிக்கவில்லை என்றுதான் அர்த்தம். எல்லோருக்குள்ளும் திறமைகள் இருக்கின்றன. கருத்துக்களத்தில் எழுதவந்தவர்களிடம் எழுத்து ரீதியான திறமைகள் கண்டிப்பாக இருந்தே ஆகவேண்டும்.அதை இன்னும் ஓங்கச் செய்வதற்கு ஒரு உந்து சக்தி வேண்டும். அந்த உந்து சக்தியாக இந்த போக்குவரத்தின் சிந்தனையில் உதயமாகிய இந்தப்போட்டி அமையலாம் என்பது என்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கை. இந்தப்போக்குவரத்து இந்தப்போட்டியினை நிகழ்த்துவதால் பிரிவினை வந்துவிடும் என்று பயப்படுவது சுத்த முட்டாள்தனம்.

விளம்பர நிறுவனம் ஒரு போட்டி நிகழ்ச்சியை நடாத்துகிறது என்று நாங்கள் பங்குபற்ற மாட்டோம் என்றால் அந்த நிறுவனத்திற்கு "தயவு செய்து எங்களை உங்களுடைய போட்டி நிகழ்வில் சேர்க்கவேண்டாம். அதற்கு எங்களுக்கு உடன்பாடு இல்லை" என்று அறிவிக்கலாம் அதைவிட்டுவிட்டு அந்த நிறுவனம் இந்தப்போட்டியை நடாத்தினால் நாங்கள் பிரிவினைப்படுவோம் நாங்கள் பணத்திற்காக எழுதவில்லை என்று காரமாக மோதுவதால் யாழ் தன்னுடைய வளர்ச்சிப்படிகளை குறுக்கிக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

இப்போது இந்த விடயத்திற்காக மட்டுமில்லை பலவிடயங்களில் தனித்துவம் தனித்துவம் என்று யாழ் தன்னை குறுகிய வட்டத்திற்குள் நிறுத்தி வைத்திருக்கிறது. இங்கு கருத்திடும் பல கருத்தாளர்கள் இன்னும் சற்று திறமையாக எழுத முற்பட்டதும் இந்த யாழ் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே நிற்கிறது என்று அவர்கள் பெரிய வட்டத்தைத் தேடிச் செல்வார்கள். அப்போது மீண்டும் இந்தப்பதிவை இங்கு நின்று நிலைக்கக்கூடிய கள உறவுகள் தூசுதட்டிப்பார்க்கக்கூடும்... இதற்கு மேல் ஒன்றும் எழுத விரும்பவில்லை

இதுவரைக்கும் விளக்கம் கொடுக்க வேண்டியவர்கள் விளக்கம் கொடுக்கவில்லை. இதற்கு இத்தனை வரிகளில் விளக்கம் கொடுத்த உங்களின் விளக்கத்தில் விளப்பம் இல்லை எனக்கு. இன்னும் கொஞ்சம் தெளிவா விளப்பமாச் சொன்னால் புரியும். காத்திருக்கின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோழர் போக்குவரத்து நீங்கள் ஆரம்பியுங்கள் ... எனது புல் சபோட்டு உங்களுக்கு உண்டு...

Posted

தோழர் போக்குவரத்து நீங்கள் ஆரம்பியுங்கள் ... எனது புல் சபோட்டு உங்களுக்கு உண்டு...

தோழா, கொஞ்சம் பொறுப்பா. கொஞ்சம் ஜோசிக்க வேண்டியும் கொஞ்சம் இருக்கு. தோழன் சொன்னால் கேளுப்பா. Then, ur wish. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விளையாட்டு வேறு அரசியல் வேறு என விவாதம் செய்தவர்கள் எல்லாம் அரவிந்தன் அவர்கள ஆரம்பித்த திரியில் நெஞ்சை தொட்டு யாரும் பங்கேற்கவில்லை என எதிர்தரப்பு கோஸ்டிகள் சொல்லட்டும்.. குட்பாலுக்கு ஒரு திரி.. கிரிக்கெட்டுக்கு ஒரு திரி... கோல்டு மெடல் வாங்கியாச்சா இல்லையா சரி போகட்டும் ஏதோ சிடி.... புக்குகள்... தோழர் போக்குவரத்து  இந்த மாதிரி தேசியம்  அது இது என சிக்கல் வந்துடும் என தெரிந்துதான் நல்லவர்களை நாலும் தெரிந்தவர்க்ளை நடுவர்களாக நியமித்து இருக்கார்...  அதிலும் ஆக்கபூர்வமான திரிகளுக்கே பரிசீலனை கொடுத்திருக்கார்...  ஊர் புதினமோ அல்லது வழக்கம் போல கும்தலக்க திரிகளுக்கோ அல்ல.. என்பதுதான் எனது தாழ்மையாக கருத்தாக உள்ளது புலி தோழா...

Posted

புரட்சி: உங்களின் நல்ல மனத்தை தெரிகிறது. இருந்தும் இங்கே விழுந்து விழுந்து எதிர்க்கருத்துக்களுக்கு பச்சை குத்தி அவற்றை வாழவைப்போரில் ஒருசாரார் இலங்கை அரசின் சம்பளப் பட்டியலில் இருப்போர் என்பதால் பச்சை எதை ஆக்க முடியும் என்பதை தீர்மானிக்கிறது. இருந்தும் நீங்கள் முதலில் குறிப்பிட்டிருந்த மாதிரி பச்சை ஒரு மூலையில். ஆனால் பணம் பாதளம் வரை பாயத்தக்க பலமுள்ளது. தனி நிறுவனம் தனது விதிகளுக்கிணங்க பரில் வழங்க நல்எண்ணத்துடன் வந்தாலும் இலங்கை அரசின் முகவர்கள் பணத்தால் தங்கள் பலத்தை நிரூபிக்க ஒரு புது பாதையை திறப்பதாகிறது. அப்போது யார் யார் ஏன் யாழுக்கு வருகிறார்கள் என்பதையும் இப்படிப்பட்ட கருத்துப் பகிர்வுகளில் உள்ளடக்க வேண்டி வரும். இது வேண்டாதது.

மோகன் அண்ணா சந்தா மூலம் அங்கத்தவர்களை சேர்க்க வேண்டுமாயின் எல்லாத்திட்டமிடலும் முடிய சட்டத்துறை சவால்களில் அவருக்கு உதவி வேண்டி வரும். எனவே சந்தா திட்டஙகளை நல்ல முறையில் நடை முறைப்படுத்த இன்னும் ஒரிரு வருடங்கள் எடுக்கலாம். இப்போது யாழுக்கு பண உதவிகள் வரத்தக்க ஒரே வழி விள்ம்பரம். இந்த நேரத்தில் அவரால் அழைக்க பட்ட அங்கத்வர்கள் முன் வந்து போக்கு வரத்தின் சில விருப்பங்களையும் நிறைவேற்றி யாழுக்கும் நேரடி பணம் விளம்பரங்கள் மூலம் கிடைப்பதையும் நிறைவேற்ற வேண்டும். தனி நிறுவனங்கள் யாழின் அங்கத்தவர்கள் மீது நேரடி பலப்பிரயோகம் செய்யத்தக்க சந்தர்பங்களை இந்த குழு மற்றி அமைத்து பணம் சம்பந்தமான விடையங்களுக்கு இந்த குழு மட்டும் தான் விதிகளை கடைசியாக தொகுத்து நடை முறைப் படுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

கருத்துகளுக்கு பரிசளித்தால் நான், புலி கோமகன் ஆகியோருடன் இணைந்து தொடந்து எதிர்ப்புக் காட்டுவேன். அது யாழின் இருப்பை ஓரிரு மாதங்களுக்குள் கேள்விக் குறியாக்கி விடும். யாழின் அங்கத்தவர்களை நேரடியாக கட்டுப்படுத்த தக்க மற்றயவை சில யாழின் ஆரோக்கியத்தை தவிடு பொடியாக்கி விடும். நான் கிருபன் அண்ணவையையும் மற்ற குழு அங்கத்தவர்களையும் அழைக்கிறேன், போட்டிக்கு தகுதியான விதிகளை முறையான பாதைகளைப் பாவித்து அமைத்து போட்டியை யாழ்மூலம் நடத்தி, போக்கு வரத்திற்கு அங்கத்தவர் மீது நேரடியான தொடர்புகள் இல்லாமல் ஆனால் வேண்டிய விளம்பரங்களை அவர்கள் விரும்பும் விதங்களுக்கு ஏற்பச் செய்து கொடுத்து உங்கள் கடமைகளை செய்ய ஆரம்பியுங்கள் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் கிருபன் அண்ணவையையும் மற்ற குழு அங்கத்தவர்களையும் அழைக்கிறேன், போட்டிக்கு தகுதியான விதிகளை முறையான பாதைகளைப் பாவித்து அமைத்து போட்டியை யாழ்மூலம் நடத்தி, போக்கு வரத்திற்கு அங்கத்தவர் மீது நேரடியான தொடர்புகள் இல்லாமல் ஆனால் வேண்டிய விளம்பரங்களை அவர்கள் விரும்பும் விதங்களுக்கு ஏற்பச் செய்து கொடுத்து உங்கள் கடமைகளை செய்ய ஆரம்பியுங்கள் என்று.

இந்தத் திரியில் நான் பெரிதும் அக்கறை காட்டவில்லை. எனவே எதிர்ப்பு, ஆதரவு இரண்டுக்குமான வாதங்களைச் சரியாகப் பார்க்காமல் எனது கருத்து எதையும் கூறுவது பொருத்தமில்லை.

எதிர்ப்புக்கான முக்கிய காரணம் யாழின் சார்பில் போக்குவரத்து என்ற தனிநபர் இந்தப் போட்டியை ஆரம்பித்தமை என்பதுதான் முக்கியமாகத் தெரிகின்றது. போக்குவரத்து புதிய உறுப்பினர் என்பதால் அவரின் பின்புலம் தெரியாததும், அவர் பக்கச் சார்பாக அல்லது யாழின் அடிப்படை நோக்கத்தைத் (அது என்ன?) திசை திருப்பக் கூடியமாதிரியான வகையில் இந்தப் போட்டியை நடத்தக் கூடும் என்ற சந்தேகங்களும் எதிர்ப்புக்குக் காரணமாக அமையலாம். இவ்வாறான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் விதிகளை மாற்றியமைத்தால் சிலவேளை இந்தப் போட்டி எல்லோரது ஆதரவைப் பெறக் கூடும்!

சி.கு.

சுயமான ஆக்கங்களை ஊக்குவிக்க இப்படியான போட்டிகள் உதவலாம், எனினும் அதன் மூலம் கிடைக்கும் பரிசுப் பணத்தை வெல்லுபவர்கள் தாம் விரும்பும் தொண்டு நிறுவனம் ஊடாக தாயக மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்கு உதவினால் நல்லது. உ+ம்: BBC இல் வரும் Weakest Link வெற்றியாளர் தாம் விரும்பும் தொண்டு நிறுவனத்தைச் தேர்வு செய்வார். பரிசுப் பணம் தொண்டு நிறுவனத்திற்கு நேரடியாக அனுப்பப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வல்வை சகாறா உங்கள் வினாக்களிற்கு நன்றி. ஒரு வியாபார நிறுவனம் எனும் வகையில் பரந்த வீச்சுடன் இங்குள்ள பல்வேறு விடயங்கள் பற்றி கருத்து கூறுவதற்கு நாம் விரும்பவில்லை. ஒரு அனுசரணையாளர் எனும் அளவுடன் எமது பேச்சுக்களை இங்கு மட்டுப்படுத்தி கொள்ள விரும்புகின்றோம்.

நீங்கள் கூறியபடி குதிரை கொம்பாக அமையும் எனும் காரணத்தினாலேயே ஆரம்பத்திலேயே விதி முறைகளை மட்டு படுத்தியதோடு இறுதி முடிவு : போக்குவரத்து எனவும் தீர்மானிக்கப்பட்டது. எல்லோருக்கும் விதம்,விதமான வெவ்வேறு தனிப்பட்ட கருத்துக்கள் காணப்படும். எல்லோருடைய தனிப்பட்ட கருத்துக்களையும் கேட்டு நடந்தால் எதுவித காரியத்தையும் செய்ய முடியாது. கடைசியில் அது கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் மாறிய கதையாகவே போகும்.

நிச்சயம் இந்த முயற்சியை பொறுப்பான முறையில் அணுகி பயனுள்ள முறையில் பிரயோகிக்க முயற்சி செய்கிறோம்.

ஏற்கனவே கூறியபடி,

சில மாற்றங்களை ஆலோசிக்கின்றோம். உ+ம்:

ஆம், வெவ்வேறு பிரிவுகளில் வெவ்வேறு ஆற்றல்கள் உள்ளன என்பது உண்மை. ஆனால், கீழ் வரும் களங்களை மட்டுமே உள்ளடக்க வேண்டும்.

செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

கோடிப்பாலை [அறிவியற்களம்]

விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

இவற்றில்

கோடிப்பாலை [அறிவியற்களம்]

விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

ஆகிய இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம்.

சிறந்த கருத்தாளர் எனும் சொற்பதத்தை மாற்றி வேறு ஒரு பதத்துடன் உ+ம்: 'பயனுள்ள ஆக்கம் / கருத்து' ஊக்கம் அளிக்கலாம்.

இன்று Jan 12, 2012. இம் மாதத்தின் இறுதி வாரத்தின் முன்னர் தேவையான மாற்றங்களை செய்து, தெளிவான ஒரு திட்டத்தை உருவாக்கி இந்த முயற்சியை முன் எடுக்க முடியும் என்கின்ற நம்பிக்கையுடன் செயற்படுகின்றோம்.

நன்றி

நன்றி உங்கள் புரிதலுக்கு போக்குவரத்து. மேலும் கிருபன் குறிப்பிட்டவற்றைக் கவனத்தில் எடுக்கவும்.

இந்தத் திரியில் நான் பெரிதும் அக்கறை காட்டவில்லை. எனவே எதிர்ப்பு, ஆதரவு இரண்டுக்குமான வாதங்களைச் சரியாகப் பார்க்காமல் எனது கருத்து எதையும் கூறுவது பொருத்தமில்லை.

எதிர்ப்புக்கான முக்கிய காரணம் யாழின் சார்பில் போக்குவரத்து என்ற தனிநபர் இந்தப் போட்டியை ஆரம்பித்தமை என்பதுதான் முக்கியமாகத் தெரிகின்றது. போக்குவரத்து புதிய உறுப்பினர் என்பதால் அவரின் பின்புலம் தெரியாததும், அவர் பக்கச் சார்பாக அல்லது யாழின் அடிப்படை நோக்கத்தைத் (அது என்ன?) திசை திருப்பக் கூடியமாதிரியான வகையில் இந்தப் போட்டியை நடத்தக் கூடும் என்ற சந்தேகங்களும் எதிர்ப்புக்குக் காரணமாக அமையலாம். இவ்வாறான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் விதிகளை மாற்றியமைத்தால் சிலவேளை இந்தப் போட்டி எல்லோரது ஆதரவைப் பெறக் கூடும்!

சி.கு.

சுயமான ஆக்கங்களை ஊக்குவிக்க இப்படியான போட்டிகள் உதவலாம், எனினும் அதன் மூலம் கிடைக்கும் பரிசுப் பணத்தை வெல்லுபவர்கள் தாம் விரும்பும் தொண்டு நிறுவனம் ஊடாக தாயக மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்கு உதவினால் நல்லது. உ+ம்: BBC இல் வரும் Weakest Link வெற்றியாளர் தாம் விரும்பும் தொண்டு நிறுவனத்தைச் தேர்வு செய்வார். பரிசுப் பணம் தொண்டு நிறுவனத்திற்கு நேரடியாக அனுப்பப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

<p><p>

யாரும் இங்கு என்னை எந்த போட்டி நிகழ்விலும் சேர்க்க வேண்டாம்.

என் பேரை என் அனுமதியின்றி எங்கும் சேர்க்க வேண்டாம்.

(இது சரி தானே அக்கா?

என்னையும் சேர்க்க வேண்டாம்
Posted

நாம் சிலர் போட்டியில் பங்கு பற்ற விரும்பவில்லை என்பதை தெரிவித்திருந்தோம். இது சிலரைப் புண்படுத்தியிருக்கலாம், இருந்தாலும் இப்படியான போட்டி களத்திற்கு ஆரோக்கியமில்லாதது என்று கருத்துக்கொண்டவர்கள் எம்மை நாம் விலத்திக்கொண்டோம். களத்தில் கருத்தெழுதுவோர் பலர் புனை பெயர்களில்த்தான் எழுதுகிறார்கள். அதன் ஒரு கருத்து அவர்கள் தங்களை வெளிப்படுத்த விரும்வில்லை என்பதுமாகும். எனவே போட்டியில் பங்கு பற்ற விரும்புவோர் வெளிப்படையாக தங்களைத் தாங்கள் அறியவைக்க வேண்டுமே தவிர பொதுவில் எழுதுவோரின் கருத்துக்களை வலிய உள்வாங்கி பரிசளிக்க தக்க ஒழுங்குமுறைகள் போட்டியில் இருக்கக் கூடாது. இது கருத்தெழுதுவோரின் சுதந்திரத்தைப் பாதிக்கும். பரிசிலை விரும்பாதோரும், அதேநேரம் அதை நேரில் சொல்ல விரும்பாதோரும் கருத்தெழுத முடியாத நிலைக்கு தள்ளப் படக்கூடாது. யாழ் இதுவரையும் போலவே எவரும் எதையும் பணபான முறையில் எழுத்தும் சுதந்திரத்தை பேணவேண்டும்.

Posted

நாம் சிலர் போட்டியில் பங்கு பற்ற விரும்பவில்லை என்பதை தெரிவித்திருந்தோம். இது சிலரைப் புண்படுத்தியிருக்கலாம், இருந்தாலும் இப்படியான போட்டி களத்திற்கு ஆரோக்கியமில்லாதது என்று கருத்துக்கொண்டவர்கள் எம்மை நாம் விலத்திக்கொண்டோம். களத்தில் கருத்தெழுதுவோர் பலர் புணை பெயர்களில்த்தான் எழுதுகிறார்கள். அதன் ஒரு கருத்து அவர்கள் தங்களை வெளிப்படுத்த விரும்வில்லை என்பதுமாகும். எனவே போட்டியில் பங்கு பற்ற விரும்புவோர் வெளிப்படையாக தங்களைத் தாங்கள் அறியவைக்க வேண்டுமே தவிர பொதுவில் எழுதுவோரின் கருத்துக்களை வலிய உள்வாங்கி பரிசளிக்க தக்க ஒழுங்குமுறைகள் போட்டியில் இருக்கக் கூடாது. இது கருத்தெழுதுவோரின் சுதந்திரத்தைப் பாதிக்கும். பரிசிலை விரும்பாதோரும், அதேநேரம் அதை நேரில் சொல்ல விரும்பாதோரும் கருத்தெழுத முடியாத நிலைக்கு தள்ளப் படக்கூடாது. யாழ் இதுவரையும் போலவே பணபான முறையில் எவரும் எதையும் எழுத்தும் சுதந்திரத்தை பேணவேண்டும்.

:):):) .

Posted

யாழ் கருத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், யாழ் கருத்து கள பொறுப்பாளர் விரும்பும் வகையில் வியாபார ரீதியாக யாழ் இணையத்தை முன்னேற்றும் வகையிலும் எமது நிறுவனம் சார்பாக இந்த முயற்சியை செய்கின்றோம். இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு யாழ் கருத்து களத்தில் எழுதுகின்ற உங்கள் ஆதரவு தேவை. நன்றி

இந்த பகுதியை நடத்துவதற்கு அனுமதி தந்த நிர்வாகத்திற்கு முதற்கண் நன்றி.

இத பண்ண அவருக்கு நேரடியாவும், மறைமுகமாவும் ஆதரவு தந்தது,, யாழ்னு அவரே ...

சொல்றாரு இல்லியா? அப்புறம் ஏம்பா இந்த புடுங்கல்?

வியாபார ரீதியா .....

ஐ மீன்............ கொமர்ஷியலா.,.........யாழை முன்னேற்றலாம்,,, அப்பிடீன்னுதானே

எல்லாருமே கொய்யால,,, ரொம்ப சிந்திக்குறோம்...

இத போக்கு வரத்து,, யாழ் நிர்வாக அனுமதியோட செய்தா ,,, என்ன தப்பு எங்கிறேன்! :)

Posted

இந்த முயற்சி முன் எடுக்கப்படுவதற்கு ஊக்கம் அளிக்கும் அனைவருக்கும் நன்றி.

குறிப்பிட்ட சில பிரிவுகள் மட்டுமே இங்கு உள்ளடக்கப்படுகின்றது. அனுசரணை தொடர்பாக மேலும் பல மாற்றங்கள் ஆலோசிக்கப்படுகின்றன. இந்த முயற்சி சாத்தியம் ஆகினால் ஒவ்வொரு பிரிவிலும் அண்மை காலத்தில் எழுதப்பட்ட கருத்துக்களில்/ஆக்கங்களில் நாம் எமது நிறுவனம் சார்பாக மாதம் ஒரு தடவை ஊக்கம் அளிக்க விரும்பும்படியான பதிவுகளில் சிலவற்றை ( உ+ம் ) இங்கு சுட்டி காட்ட விரும்புகின்றோம். இது Jan 2012 தொடக்கம் Dec 2012 வரை முன் எடுக்கப்பட உள்ள ஒரு பரீட்சார்த்த முயற்சி.

செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

தமிழர்களென்றால் பரவாயில்லை..பாவம் நாய்களைக் கொல்லாதீர்கள்!

கருத்து இல#1 Justin : http://www.yarl.com/...ndpost&p=719964

எனது மகளின் நகைச்சுவை நாடகம்.

கருத்து இல#1 sathiri : http://www.yarl.com/...ndpost&p=665775

நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்களது 'வில்லிசை'

கருத்து இல#1 sOliyAn : http://www.yarl.com/...ndpost&p=682222

எனக்கு பிடித்த எழுத்தாளார்

கருத்து இல#62 குட்டி : http://www.yarl.com/...ndpost&p=636175

அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

சாத்திரியின் கொலைவெறி புட்டுப்பானைமீது ஆட்லெறித்தாக்குதல்.

கருத்து இல#1 sathiri : http://www.yarl.com/...ndpost&p=717545

கோடிப்பாலை [அறிவியற்களம்]

Youtube காணொளி+ஒலி உடன் தரவிறக்கம்

கருத்து இல#1 r.raja : http://www.yarl.com/...ndpost&p=714509

கெமரா வாங்க உதவி தேவை.

கருத்து இல#4 தப்பிலி : http://www.yarl.com/...ndpost&p=700409

கனடாவில் விஞ்ஞானத்தில் கலாநிதி ஆராய்ச்சிப் பட்டம் பெற என்ன செய்ய வேண்டும்..?!

கருத்து இல#7 KULAKADDAN : http://www.yarl.com/...ndpost&p=703475

விளரிப்பாலை [சிந்தனைக்களம்] இல் மெய்யெனப் படுவது , சமூகச் சாளரம் ,பேசாப் பொருள் பிரிவுகள் மட்டும்

நீங்கள் எப்பிடி ஆனவர்

கருத்து இல#1 வீணா : http://www.yarl.com/...ndpost&p=686581

உயிர்வாழ்க்கை ஒரு உன்னதமான சந்தர்ப்பம்

கருத்து இல#1 akathy : http://www.yarl.com/...ndpost&p=702068

மேற்செம்பாலை [சிறப்புக்களம்] இல்நாவூற வாயூற , நலமோடு நாம் வாழ பிரிவுகள் மட்டும்

அவசர உதவி: ஆட்டுக் குடல் கறி எப்படி சமைப்பது

கருத்து இல#3 suvy : http://www.yarl.com/...ndpost&p=713617

Abscess பற்றி தெரியுமா

கருத்து இல#7 nedukkalapoovan : http://www.yarl.com/...ndpost&p=671742

அனுசரணை பற்றிய விபரம் தொடரும்..

உங்கள் ஆதரவுக்கும் பொறுமைக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் போகாத பகுதியாகவே பார்த்து எடுத்திருக்கிறார்கள். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி போக்குவரத்து,

உங்கள் முயற்ச்சி வெற்றியடைய வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போக்குவரத்தின் ஆக்கபூர்மான இந்த திட்டம்.. யாழ் களத்தினை நடத்திறவர்களுக்கும்.. யாழ் களத்தில் கருத்தாளர்களாக உள்ளவர்களுக்கும்.. அதன் பார்வையாளர்களுக்கும்.. போக்குவரத்துப் போன்ற விளம்பர அனுசரனையாளர்களுக்கும்.. நன்மை பயக்கும் ஒன்றே. சும்மா விளம்பரத்தை ஒட்டிட்டு காசு வாங்கிறதிலும்.. இது எவ்வளவோ மேல். காசு கொடுக்கிறவங்களுக்கும் ஒரு திருப்தி.. வாங்கிறவங்களுக்கும் திருப்தி. களத்தில் உள்ளவங்களுக்கும் குற்ற உணர்வற்ற நிலை..! அந்த வகையில் இதனை நோக்க வேண்டுமே தவிர.. போட்டி என்ற அடிப்படையில் பார்ப்பதை கைவிட்டு விடுவது நன்று..! :):icon_idea:

Posted

நான் இங்கு அதிகம் கருத்தெழுதுவதில்லை. ஆனால் பலரின் நல்ல படைப்புக்களுக்கு ஒரு ரசிகனாக இருக்கிறேன்.

எனக்குத் தோன்றுவது என்னவென்றால், இங்கு நல்ல, சுய கருத்து எழுதுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதற்குள்ளே நல்ல கருத்தெழுதுபவர்களுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைக்கின்றன. பாராட்டுக்கள் கிடைக்கின்றன.

அதற்கு மேலே, பரிசு என்பது, குண்டுச்சட்டிக்குள்ளே குதிரை ஓட்டுவது போலாகும் என்று நம்புகிறேன்.

இங்கே பலரும் தம் வேலை/குடும்பப்பணிகளுக்கு மேலே இங்கே வந்து கருத்து எழுதுகிறார்கள். அவர்களுக்கு இது ஊக்கம் தரும் என்று கூறினாலும், அவர்கள் பரிசு பற்றிக் கவலைப்படுபர்கள் போல் தோன்றவில்லை. உண்மையில் விருப்பம் இல்லாதவர்களை ஊக்கப்படுத்த முடியும் என்றும் தோன்றவில்லை.

Posted

உங்கள் ஆதரவுக்கும் பொறுமைக்கும் நன்றி

அனுசரணை பற்றிய விபரம் தொடர்ச்சி :

யாழ் இணையத்தில் நேரடியாக விளம்பரம் செய்வதன் மூலம் ( Front Page Ads / any other click ads ) எமது நிறுவனத்தின் வியாபார முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க அளவில் எதுவிதமான பயனும் கிடைக்கப்போவது இல்லை என்பது நிதர்சனமான உண்மை. ஆனால், நீண்ட கால பொழுதில் நாம் SEO ( Search Engine Optimization ) மூலம் எமது நிறுவனத்தின் Online Marketing Campaign ஐ நன்றாக செய்வதற்கு இப்படியான அனுசரணை உதவும் என கருதுகின்றோம். யாழ் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்பும் ஏனைய வியாபார நிறுவனங்களுக்கும் உதவும் வகையில்/அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இது பற்றிய சில விளக்க குறிப்புகளை ( எமது நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் ஆலோசகர் உதவியுடன் ) பின்னர் எமது yarl blog இல் ( கனடா போக்குவரத்து ) இடுகின்றோம்.

இந்த SEO இன் ஒரு பகுதியாகவே எமது Online Marketing Budget இல் யாழ் இணையத்தின் மூலமான Marketing Campaign க்கும் ஒரு தொகையை ஒதுக்குவதற்கு முன் வந்தோம். இங்கு எமது விளம்பரத்திற்கான முதலீட்டை Charity Work உடன் ஒன்றிணைத்து நாம் குழம்பி கொள்ள விரும்பவில்லை.

ஒரு விடயத்துக்கு Cash Value காணப்படும் போதே வியாபாரம் செய்பவர்கள் அதனுடன் இணைந்து செயற்படுவதற்கு முன் வருவார்கள். மாதம் ஒரு தடவை அன்பளிப்பு சான்றிதழை கருத்தாளர் ஒருவருக்கு வழங்குவதும் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தாது. கருத்தாளர் ஒருவர் வெகுமதி ஏதும் பெற்று கொள்ளாமல் தொண்டு நிறுவனம் ஏதாவது உதவியை பெறுவது யாழ் இணையம் வர்த்தக ரீதியாக முன்னேற்றம் அடைவதற்கு உதவாது என்று கருதுகின்றோம்.

இங்கு கருத்து எழுதும் கருத்தாளர்களில் அதிகம் ஆனோர் வெளிநாடுகளில் நல்ல வசதியுடன் வாழ்கின்றார்கள், உயர் பதவிகளிலும் இருக்கலாம். அவர்களிற்கு எப்போதாவது ஒரு தடவை கிடைக்ககூடிய வெறும் 50 டாலர் பெறுமதியான அன்பளிப்பு சான்றிதழ் ஒரு பொருட்டே அல்ல, அது பல் குத்தவும் உதவாது என்பது உண்மை. ஆனால் வர்த்தக ரீதியான கண்களுடன் யாழ் இணையத்தை பார்க்க/அணுக வேண்டுமானால் இங்கு ஒவ்வொரு கருத்தாளர்களினாலும் செலவளிக்கப்படும் நேரம், அதன் Value உணரப்பட வேண்டும். எமது இந்த அனுசரணை வர்த்தக ரீதியாக இந்த இணையம் முன்னேறுவதற்கு நிச்சயம் உதவும் என கருதுகின்றோம்.

Louis Szekely ( C.K ) பிரபலமான ஒரு stand up comedian. கடந்த மாதம்இவர் ஒன்லைன் மூலமாக ஒரு மில்லியன் திடீரென சம்பாதித்தார். எப்படி என்று பாருங்கள் : https://buy.louisck.net/news

அனுசரணை விபரம்

மிகுதி பின்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாங்கள் இங்கே செலவழிக்கும் நேரம் எங்களுக்கு இல்லாவிடினும்.. யாழிற்கு.. அல்லது யாழ் சார்ந்த தொண்டர் நிறுவனத்திற்கு ஒரு டாலரை கொடுத்தாலே அது பெரிய விடயம்..!

போக்குவரத்து.. உங்கள் கருத்தை வரவேற்கிறேன்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரிசியைச் சோறாக்கி கஞ்சி வடிப்பதுபோல் அரசியல் கருத்துக்களையும் ஆராய்ந்து வடித்து எடுக்கலாம். பல பதிவுகளில் விசுகு அவர்கள் வடித்தெடுக்கும் அரசியல் கருத்துக் கஞ்சி புத்திக்கும் உரமூட்டுவதாக உணரமுடிகிறது.😌
    • தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்! நிலாந்தன் "ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்" adminDecember 15, 2024 கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தனக்கு முன்னால் நின்ற இளைஞரிடம் கேட்டிருக்கிறார் “யாருக்கு வாக்களிக்கப் போகிறாய்?” “ஊசிக்குத்தான்” என்று இளைஞர் பதில் சொல்லியுள்ளார். “ஊசிக்கா?” இவர் திரும்பக் கேட்க, “ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்” என்று அவர் சிரித்துக் கொண்டு பதில் சொல்லியுள்ளார். உண்மை. அர்ஜுனா சிரிக்க வைக்கிறார். கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து, வைத்தியசாலையின் பணிப்பாளரோடு அவர் வாக்குவாதப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் ஒரு சபை குழப்பி போல நடந்துகொண்டார். இவற்றைப் பார்த்துச் சிரிக்கும் ஒவ்வொரு தமிழரும் அர்ஜுனாவை மட்டும் பார்த்துச் சிரிக்கவில்லை. தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஏனென்றால் அவருக்கு வாக்களித்தது தமிழ் மக்கள்தான். தமிழரசியல், குறிப்பாக ஆயுதப் போராட்ட அரசியல் அதிகம் சீரியஸானது. ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான கடந்த 15 ஆண்டு கால அரசியலிலும் சீரியஸ் அதிகம். கலகலப்பு, பம்பல்,சிரிப்பு குறைவு. கடந்த 15 ஆண்டுகளாக அவ்வாறு அரசியலை சிரிக்கும் விடயமாக மாற்றும் கார்ட்டூனிஸ்டுகள் குறைந்த ஒரு தமிழ்த் தேசியப் பரப்பில் அர்ஜுனா ஒரு “கார்ட்டூன் கரெக்ராக”,  “கரிக்கேச்சராக” -(caricature) அதாவது கேலிச்சித்திரமாக மேலெழுந்துள்ளார். அவர் எல்லாவறையுமே கரிக்கேச்சர் ஆக்கிவிடுகிறார். தன்னையும் சேர்த்து. அவர் மருத்துவ நிர்வாகத் துறைக்குள் வேலை செய்தவர். ஒரு போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதென்றால், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற ஒழுங்குமுறை தெரியாதவராக இருக்க முடியாது. அதை அவர் மாகாண நிர்வாகத்துக்கு ஊடாக அணுகியிருக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சுக்கூடாக அணுகியிருக்கலாம். இரண்டையும் அவர் செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக தனக்கு மக்கள் அதிகாரம் கிடைத்திருப்பதாக அவர் கருதுகிறார். அது அதிகாரம் அல்ல. அது ஒரு பொறுப்பு. அந்தப் பொறுப்பை உணர்ந்து அவர் நடப்பதாகத் தெரியவில்லை. இதனால் அரச அதிகாரிகள் மீதும் திணைக்களங்களின் மீதும் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அவற்றின் கனதியை இழக்கின்றன. அரச உயர் அதிகாரிகளும் திணைக்களங்களும் கேள்விக்கு அப்பாற்பட்டவை அல்ல. அர்ச்சுனா கேட்கும் கேள்விகளை ஒரு பகுதி மக்கள் ரசிக்கிறார்கள்; ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். ஆனால், அக்கேள்விகளை எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதுபோல, அர்ச்சுனா “மிஸ்ரர்.பீனின்” பாணியில் கேட்கும்போது அக்கேள்விகள் அவற்றின் சீரியஸ்தனத்தை இழந்துவிடுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அவர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்து கொண்ட விதம், அவருக்கும் மருத்துவர் சத்தியமூர்த்திக்கும் இடையிலான முரண்பாடு, அவருக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்றவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது, அவர்,யாருக்கும் பொறுப்புக்கூறத் தேவையில்லாத ஒருவராகத் தன்னை கருதுகிறாரா என்று கேள்வி எழுகிறது. அர்ஜுனாவை மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கும் சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள,ஆங்கில ஊடகங்களும் அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களைத்தான் மறைமுகமாக விமர்சிக்கின்றன. தென்னிலங்கையிலும் மேர்வின் டி சில்வாக்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சுயேச்சைகள் அல்ல. கட்சித் தலைமைக்குக் கீழ்ப்பட்டவர்கள். ஆனால் அர்ஜுனா யாருக்கும் கட்டுப்படாத, யாரையும் பொருட்படுத்தாத ஒருவரா? மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்றில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படிப் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதனை அவருக்கு யார் கற்றுக் கொடுப்பது? அல்லது அவர் யாரிடமிருந்தாவது கற்றுக்கொள்ளத் தயாரா? ஒன்றில் சபை நாகரீகம் தெரிய வேண்டும். அல்லது வெட்கம்,அவையடக்கம் இருக்க வேண்டும். இவை எவையுமே இல்லாத ஒருவரை ஏன் தமிழ் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அல்லது அவரைப்போன்ற ஒருவரைத் தெரிந்தெடுக்கும் அளவுக்கு தமிழ்மக்களை நிர்பந்தித்த காரணிகள் எவை? அர்ஜுனா தற்செயலாக மேலெழவில்லை. விபத்தாக மேலெழவில்லை. அவர் தெரிந்தெடுக்கப்படுவதற்கான அகப்புற நிலைமைகளை உருவாக்கிய காரணிகள் உண்டு. தமிழ் அரசியல் சமூகம் அவற்றை ஆராய வேண்டும். தலைமைத்துவ வெற்றிடம்; தங்களுடைய சின்னச்சின்ன அன்றாடப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்க யாராவது வேண்டும் என்று தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் சிந்தித்தமை; தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஐக்கியமின்மை, அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் வெறுப்பும் ; தமிழ்த் தேசியக் கட்சிகள் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளைக் கவனிக்கத் தவறியமை ; சமூக வலைத்தளங்களால், யூரியூப்களால் ஊதிப் பெருப்பிக்கப்படும் பிம்பங்கள்….போன்ற பல காரணங்களின் விளைவு அவர். அவருக்கு விழுந்த வாக்குகள் சுமந்திரன், கஜேந்திரகுமார் உட்பட முக்கிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு விழுந்த வாக்குகளைவிட அதிகம். அவர் தன்னுடைய கலகத்தைத் தொடங்கியது சாவகச்சேரி ஆஸ்பத்திரியில். அந்த ஆஸ்பத்திரி வாசலில் இருந்து சிறிது தூரத்தில்தான் ரவிராஜின் சிலை உண்டு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சாவகச்சேரி மக்கள் ரவிராஜின் நினைவுகளை விடவும் அர்ஜுனாவின் நேரலைகளுக்கு அதிகம் வாக்களித்திருக்கிறார்கள். ரவியின் சிலை கண்ணீர் விடுவதுபோல உங்களுக்கு தோன்றவில்லையா? என்று மனோகணேசன் என்னிடம் கேட்டார். அர்ஜுனாவின் சுயேச்சைக் குழுவுக்கு வாக்களித்தது மொத்தம் 27,855 பேர். யாழ்ப்பாணத்தில் விழுந்த செல்லுபடியாகும் வாக்குகளின் தொகை மொத்தம் 358,079. இதில் 8.56விகிதத்தினர் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். “அது ஒரு சிறிய தொகைதான். ஆனால் அந்தத் தொகை அடுத்தடுத்த தேர்தலில் பல மடங்காகப் பெருகும் ஆபத்தை எப்படித் தடுப்பது?” என்று மூத்த,ஊடகச் செயற்பாட்டாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். தேசமாகத் திரட்டப்படாத மக்கள் எதிர்காலத்திலும் அர்ஜுனாக்களைத்தான் தெரிவுசெய்யப் போகிறார்கள் என்று நான் அவருக்குச் சொன்னேன். சமூக வலைத்தள ஊடகச் சூழலும், குறிப்பாக யுரியுப்பர்களும் அந்தச் சிறிய தொகையை பெரிய தொகையாக மாற்றுவதை எப்படித் தடுப்பது? யூரியூப்பர்களின் காலத்தில் தேசத்தைத் திரட்டுவதற்கான புதிய, படைப்புத்திறன் மிக்க உபாயங்களைத் தமிழ்த் தேசியவாதிகள் கண்டுபிடிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை முன்நிறுத்தி, தமிழ் மக்களைத் தேமாகத் திரட்ட முயன்ற தரப்புகளுக்கு எதிராக சில யூரியுப் வெறுப்பர்கள் (haters) தனிப்பட்ட தாக்குதல்களை நடாத்தினார்கள். தமிழக எழுத்தாளர் தொ.பரமசிவன் வெறுப்பர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்… ” இப்ப எழுதும் சிலரின் எழுத்தை வாசித்தால் வெறுப்புதான் முழுமையாய் வெளிப்படும். எதிர்ப்பை வெளிப்படுத்துவது தவறல்ல. வெறுப்பு என்பது இரு காரணங்களால் வெளிப்படுவது. ஒன்று இயலாமை; மற்றொன்று பொறாமை. இதற்கு மருந்தே கிடையாது”. தமிழ்த் தேசியப் பரப்பில் அவ்வாறு மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாத வெறுப்பர்கள் தொகை அதிகரித்து வருகின்றது. கட்சிகளுக்குள்ளும் கட்சிகளுக்கு வெளியிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் வெறுப்பர்கள் பெருகி வருகிறார்கள். இவ்வாறு கட்சிகளாலும் ஊடகங்களாலும் வெறுப்பர்களாலும் சிதறடிக்கப்படும் ஒரு மக்கள் கூடத்தைத் திரட்டத் தவறிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் எப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்கினார்கள்? அது தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஒரு தண்டனை. அதே சமயம் அர்ஜுனாவுக்கு தமிழ் மக்கள் வழங்கிய வெற்றியை எப்படிப் பார்ப்பது? அது தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிய தண்டனையா? நிலாந்தன்     https://www.nillanthan.com/7018/
    • முடிந்தால் முட்டையை ஆட்டையைப் போட்டுப் பார் . ........!  😂
    • இந்த பொது வெளியில் நான் எழுதிய அரசியல் கருத்தானது  புரிந்து கொள்ளும் ஆற்றல், அறிவு உடையவர்களுக்கானது மட்டுமே. 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.