Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Malta ஒரு புதிய அனுபவம் - 08

Featured Replies

பயணம் 01

கடந்த சில வாரங்களாக எனது அலுவலக வேலையில் மிகவும் அழுத்தமான பணிகளை சுமக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

  • எனது முகாமையாளரின் விடுப்பு
  • புதிய உற்பத்தி பொருளின் அறிமுகம்
  • நூற்றுக்கும் மேற்பட்ட புதிய பணியாளர்களின் வேலை நியமனம்
  • எமது ஏனைய அலுவலகங்களை மறு சீரமைத்தல்
  • மில்லியன் கணக்கிலான விளம்பரமும் அதற்கான பேரங்களும்

என் மீது பாரிய பணிகளை சுமத்தியது. அது என்னை மறைமுக மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. அது என் குடும்ப வாழ்க்கை, நண்பர்கள் மட்டத்திலும் எதிரொலித்தது.

  • இனம்புரியாத கோபம்
  • ஒரு விரக்தி
  • மகிழ்ச்சியும் கோபமும் மாறி மாறி வருதல்
  • அலட்சியம்
  • செயற்திறனில் ஒரு மந்தம்.

நிச்சயமாக ஒரு புதிய இடத்திற்கு, அலுவலக வேலையை மறந்து, கை தொலைபேசிகளை அணைத்து மகிழ்வாக குடும்பத்துடன் கழிக்க வேண்டிய தேவை எனக்கு கட்டாயமாக ஏற்பட்டது. அதற்கு நானும் என் மனைவியும் தெரிவு செய்த இடம் தான் Malta

ஒரு உதைபந்தாட்ட வீரானின் காலும் பந்தும் போல அமைத்த இத்தாலி நாட்டுக்கு கீழே அமைந்த மத்திய தரைக்கடலில் அமைந்த ஒரு சிறிய தீவு தான் Malta

maltacq.jpg

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே Malta தீவுக்கு நோர்வேயில் இருந்து விமானம் பறக்கும். அன்றைய விமானமும் முழுமையாக ஆட்களை நிரப்பியவண்ணமே பறந்தது. விமானதினுள்ளே இருந்த Wifi இல் எனது மடிகணணியில் நைஜீரிய விமான விபத்தை பற்றிய செய்திகளையும் படங்களையும் பார்த்துகொண்டிருந்தேன்.

அப்படி என்ன தான் பார்க்கிறீங்கள் என்று என் மனைவி கணினியை எட்டி பார்த்த போது, தட்ஸ்தமிழில் தி மு க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் குஷ்புவின் இடுப்பை (??? எனக்கு இன்னும் சந்தேகம் இடுப்பையா என்று) கிள்ளியது யார் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை தட்டிவிட்டேன்.

விமான விபத்துகள் பற்றிய செய்திகளை விமானத்தில் இருந்தவாறே படிப்பது எவ்வளவு அழுத்தத்தை கொடுக்கும், அது எனது விடுமுறை மகழ்ச்சியே கெடுத்துவிடும்.

மகனோ விமானத்தின் கண்ணாடியால் எட்டி பார்த்தவாறே அப்பா அந்தா தெரியுது இத்தாலி என்று கொலம்பஸ் கணக்கா கூவி கொண்டிருந்தான்.

அப்பா அடுத்த முறை என்னை பசிலோனாவுக்கு கொட்டி கொண்டு போகவேண்டும் என்று என்னிடம் சத்தியமும் வாங்கி கொண்டான். இது அவனுக்கான பயணம் அல்ல எனது மன அழுத்தத்தை குறைபதற்கான பயணம் என்று அந்த நான்கு வயது மகன் அறிய அவனுக்கு அறிவு போதாது.

Malta இல் இருக்கும் ஒரே சர்வதேச விமான நிலையத்தில் என்னையும் என் மனைவி, மகனையும் சுமந்த norwegian விமானம் தரை இறங்கிய போது ஞாயிறு காலை பத்து மணி. உள்ளே இருந்த பயணிகள், விமானியின் பாதுகாப்பான தரையிறக்கத்தை பாராட்டி கைதட்டினார்கள்.

( தமிழீழ விமான படையினர் - வான் புலிகள் எந்தவித தானியக்க கருவிகளும் இன்றி, சரியான ஓடு பாதையின்றி, மக்கள் நடமாடும் வீதிகளில்/ பாடசாலை மைதானங்களில் கூட விமானங்களை பாதுகாப்பாக இறக்கி இருந்தார்கள் என்பது வரலாறு).

img0803br.jpg

கொளுத்தும் வெய்யில், மஞ்சள் மக்கி மண், மஞ்சள் கட்டிடங்கள், காய்ந்த புட்கள், பனை குடும்பத்தை சார்ந்த மரங்களும் எங்கோ அரேபியாவின் ஒரு பகுதியில் தரை இறங்கியது போன்ற உணர்வை தான் ஏற்படுத்தியது.

img0929gy.jpg

img0526ni.jpg

பிழையான இடத்தை விடுமுறையை கழிக்க தெரிவு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் தான் தோன்றியது.

img0529wr.jpg

பயணம் தொடரும்...

Edited by பகலவன்

  • Replies 93
  • Views 13.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன முந்திக்கொட்டைக் கணக்காய் எழுதுகின்றேன் என்று நினைக்கவேண்டாம். விண்ணைத்தாண்டி வருவாயில் வரும் ஓ சோனா பாடல் அங்கே தான் எடுத்தார்கள் என நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்

என்ன முந்திக்கொட்டைக் கணக்காய் எழுதுகின்றேன் என்று நினைக்கவேண்டாம். விண்ணைத்தாண்டி வருவாயில் வரும் ஓ சோனா பாடல் அங்கே தான் எடுத்தார்கள் என நினைக்கின்றேன்.

உண்மை தான் தூயவன். அடுத்துவரும் பகுதிகளில் அந்த பாடல் எடுக்கப்பட்ட வீதியை ஒத்த வீதிகள் வருவதால், அப்போது குறிப்பிடலாம் என்று இருக்கிறேன்.

நன்றி உங்கள் கருத்திற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

அப்படியே ஒரு நடை அண்ணனிடம் வந்திருக்கலாமே.......

  • கருத்துக்கள உறவுகள்

மோல்டா என்ன மோல்டா அங்கு எல்லாம் மனிதர்கள் போவார்களா :rolleyes: ...அடுத்த தடவை மனைவியோடு விடுமுறை போகும் போது இஸ்தான்புல்[istanbul] போங்கள் மகிழ்ச்சியோடு பொழுதைக் கழிக்க நல்லதொரு இடம் :D:lol:

  • தொடங்கியவர்

விசுகு அண்ணா,

விரைவில் உங்கள் நாட்டிற்கே வந்து உங்களை சந்திப்பேன் அண்ணா.

ரதி,

நிச்சயமாக.. உங்கள் ஆலோசனையை அடுத்தமுறை விடுமுறை பயணத்தின் போது கவனத்தில் எடுக்கிறேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுடன் பயணக்கட்டுரை.

உங்களுடன் இணைந்து, நாமும் மோல்டாவை தரிசிக்க ஆவலாக உள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பகலவன் உங்கள் பயணகட்டுரையை.....

  • தொடங்கியவர்

படங்களுடன் பயணக்கட்டுரை.

உங்களுடன் இணைந்து, நாமும் மோல்டாவை தரிசிக்க ஆவலாக உள்ளோம்.

தொடருங்கள் பகலவன் உங்கள் பயணகட்டுரையை.....

நன்றிகள் தமிழ் சிறி மற்றும் புத்தன்.

  • தொடங்கியவர்

பயணம் 02

Malta சர்வதேச (??? ஒரே ஒரு ) விமான நிலையத்தின் நான்காவது வாசல் வழி உள்நுழைந்த போது, கையில் வைத்திருந்த கறுப்பு (குளிர்)கண்ணாடியை காணவில்லை.

ஆசை (?) மனைவியின் நச்சரிப்பு தாங்காமல் திரும்ப விமானத்தை நோக்கி நடையை கட்டியபோது மறித்தால் ஒரு மாது. அழகுபதுமை. குளிர் கண்ணாடியால் கண்களை மறைத்து இருந்தாள்.

"நீங்கள் திரும்ப விமான ஓடுபாதைக்குள் நுழையமுடியாது. உங்களுடைய பிரச்சனை என்ன என்று சொன்னால் என்னால் தீர்த்து வைக்க முடியும்." என்றாள் அழகான ஆங்கிலத்தில் மெதுவாக உச்சரித்தபடி. (Malta வின் முதன்மை மொழி ஆங்கிலம் என்பது அவள் பேசுவதில் புரிந்தது)

என் கண்களின் திசை கண்டு மனைவியே பதிலளித்தாள்.

"எங்கள் இருக்கை இலக்கம் 28 அங்கெ இவர் தனது கண்ணாடியை தொலைத்து விட்டார். தேடி தரமுடியுமா.? "

இதுவும் அழகான குரலில் ஆங்கில உச்சரிப்பு தான் ஆனால் எனக்கு தான் பழக்கபட்டு புளித்துவிட்டதே.

"நீங்கள் விமான நிலையத்துக்குள் செல்லுங்கள் நான் தேடி பார்த்து வருகிறேன்" என்றாள் அந்த பதுமை.

அவள் சென்ற வழி பார்த்து நின்ற என்னை "அப்பா you naughty " என்ற எனது நான்கு வயது மகனின் குரல் திருப்பிவிட்டது.

ஹ்ம்ம் ...முளைச்சு நான்கு இலை கூட விடவில்லை இவனுக்கும் தெரிந்துவிட்டது. ஒரே இரத்தம் உறுதிபடுத்தி கொண்டேன்.

நான்காவது நுழைவாயிலில் உள்நுழைந்து சொற்ப நேரத்தில் மீண்டும் வந்தாள், கையில் இருந்த அலைபேசியில் கதைத்தவாறே..

ஓடிச்சென்று வாங்கி கொண்டாள் என் மனைவி. நான் கண்ணாடியை வாங்கும் சாக்கில் தொட்டுவிடுவேன் என்று அவளுக்கும் தெரியும்.

"மிக்க நன்றி." இது மட்டும் தான் நான் அந்த அழகு பதுமையுடன் பேசிய முதலும் கடைசியுமான வார்த்தைகள்.

இரவல் வாகனம் எடுக்குமிடத்தை நோக்கி நகர்ந்த போது தொடங்கியது என் கஷ்ட காலம்.

முதலாவது இடதுபக்க சாரதி அமைப்பு. நோர்வேயில் வலது பக்கமாக ஓடி பழகிய எனக்கு இடதுபக்க சாரதி அமைப்பு (UK style ) கொஞ்சம் கடினமாக தான் இருக்கும் ஆரம்பத்தில்.

img0521h.jpg

இரண்டாவது அவர்களின் விதி முறை.

இரண்டு இரவல் கார் எடுக்கும் நிறுவனங்களிடம் பேசினேன்.

  1. Herz - இவர்களிடம் காரை எடுக்கும் போது அரைவாசி தாங்கியை நிரப்பி தருவார்களாம், திரும்ப கொடுக்கும் போதும் அரைவாசி தாங்கி எரிபொருளுடன் கொடுக்க வேண்டுமாம். நான் முழு தாங்கியை நிரப்பி தாருங்கள் நான் திரும்ப முழு தாங்கி நிரப்பி தாரேன் என்ற போது மறுத்து விட்டார்கள்.
  2. எரிச்சலுடன் அடுத்த நிறுவனமான AVIS , Budget (இரண்டும் ஒரே குடையின் கீழ் இருக்கும் இரு நிறுவனங்கள்) இடம் சென்ற போது அவர்கள் அரைதாங்கி எரிபொருள் 30 Euro நிரப்பியபடி தருவார்களாம். திரும்ப விடும்போது வெற்று தாங்கியுடன் விட்டால் போதுமாம்.

எப்படி வெற்று தாங்கியுடன் விடுவது, இடை வழியில் நின்றால் என்ன செய்வது என்று கேட்ட போது சில எண்களை கையில் திணித்தார்கள், எங்காவது கார் நின்றால் தொடர்பு எடுக்க.

img0891d.jpg

என்னமா technical ஆக திருடுறாங்களப்பா வடிவேலு பாணியில் மனைவி குசுகுசுத்தாள்.

என்ன செய்வது Herz நிறுவனத்திடமே ஒரு KIA Ceed மாடல் வாகனத்தை எடுத்து கொண்டு இடதுகையால் கியர் போட்டு, சுற்று திருப்பம் (ரவுண்டர் போர்ட்களில்) தடுமாறி, சிக்னலுக்கு பதிலாக வைப்பரை போட்டு தட்டு தடுமாறி St Pauls Bay யில் அமைந்த ஒரு ஐந்து நட்சத்திர விடுதிக்கு வந்த போது நேரம் இரண்டு முப்பது.

img0559qh.jpg

நெடுஞ்சாலை எங்கும் சுற்று திருப்பங்களும், பாதை எங்கும் சிக்னல்களும், கரடுமுரடான பாதைகளும், இந்திய இலங்கை வீதிகளை தான் நினைவூட்டின.

img0560yx.jpg

வரவேற்பாளராக இருந்த Malta பதுமை ஐந்தாம் மாடியில் இருந்த இரட்டை படுக்கையறையின் சாவிகளை நீட்டும் போது, இரவு உணவிற்கான Buffe மெனு கார்டையும் சேர்த்து நீட்டினாள். அதில் இருந்த உணவு வகையினை விட, இத்தாலி வைன் தான் என்னை மகிழ்வூட்டியது.

img0910ua.jpg

பயணம் தொடரும் ..

Edited by பகலவன்

பயணக் கட்டுரை நன்றாக உள்ளது பகலவன், பாதியில் விட்டு விடாமல் தொடருங்கள்..

இத்தாலியில் சில வீதிகளில் நடைபாதை & வாகனப் பாதை இரண்டுமே ஒரே நேரத்தில் பச்சை நிறம் காட்டும்... :blink: அதை விட இது எவ்வளவோ பறவாய் இல்லை... ^_^

ஆழமான கடும் நீல நிற கடலும் மெலிய நீல நிறத்தில் வானமும் பார்க்க மிகவும் அழகான இடமென நினைக்கிறன்... :wub:

மோல்டா வர்த்தக ரீதியான & விடுமுறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் இடமா அல்லது வரலாறும் சம்பத்தப்பட்டதா என்றும் உங்கள் பயணத் தொடரில் தெளிவு படுத்துவீர்களா? :)

  • கருத்துக்கள உறவுகள்

மோல்ரேய் என்கிற மோல்ரா மொழியும் ஆங்கிலமும் அங்கு அரசமொழியாக இருக்கின்றது எனக்கு பிடித்த இடம் Valette துறைமுகமும் அந்த நகரமும்தான்.புகழ்வாய்ந்த மோல்ரா விஸ்கியும். :icon_mrgreen:

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகலவன்! உங்கள் பயணக்கட்டுரையை படங்களுடன் அழகாக கொண்டு செல்கிறீர்கள். தொடருங்கள் .முடிவுவரை காத்திருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பயணக் கட்டுரை நன்றாக உள்ளது பகலவன், பாதியில் விட்டு விடாமல் தொடருங்கள்....

எந்த செலவும் இன்றி மல்டவுக்கு என்னை அழைத்து சென்றதற்கு நன்றி பகலவன் :)

உங்களுக்கு ஒரு பிள்ளை என்பதினால் பெரியளவில் செலவு இருந்திருக்காது எனக்கு மூன்று பிள்ளைகள் நானும் பிளான் பண்ணி கொண்டே இருக்கின்றேன் மல்ட கொலிடேக்கு உகந்த இடமா ? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Malta சர்வதேச (??? ஒரே ஒரு ) விமான நிலையத்தின் நான்காவது வாசல் வழி உள்நுழைந்த போது, கையில் வைத்திருந்த கறுப்பு (குளிர்)கண்ணாடியை காணவில்லை.

ஆசை (?) மனைவியின் நச்சரிப்பு தாங்காமல் திரும்ப விமானத்தை நோக்கி நடையை கட்டியபோது மறித்தால் ஒரு மாது. அழகுபதுமை. குளிர் கண்ணாடியால் கண்களை மறைத்து இருந்தாள்.

"நீங்கள் திரும்ப விமான ஓடுபாதைக்குள் நுழையமுடியாது. உங்களுடைய பிரச்சனை என்ன என்று சொன்னால் என்னால் தீர்த்து வைக்க முடியும்." என்றாள் அழகான ஆங்கிலத்தில் மெதுவாக உச்சரித்தபடி. (Malta வின் முதன்மை மொழி ஆங்கிலம் என்பது அவள் பேசுவதில் புரிந்தது)

என் கண்களின் திசை கண்டு மனைவியே பதிலளித்தாள்.

"எங்கள் இருக்கை இலக்கம் 28 அங்கெ இவர் தனது கண்ணாடியை தொலைத்து விட்டார். தேடி தரமுடியுமா.? "

இதுவும் அழகான குரலில் ஆங்கில உச்சரிப்பு தான் ஆனால் எனக்கு தான் பழக்கபட்டு புளித்துவிட்டதே.

"நீங்கள் விமான நிலையத்துக்குள் செல்லுங்கள் நான் தேடி பார்த்து வருகிறேன்" என்றாள் அந்த பதுமை.

அவள் சென்ற வழி பார்த்து நின்ற என்னை "அப்பா you naughty " என்ற எனது நான்கு வயது மகனின் குரல் திருப்பிவிட்டது.

ஹ்ம்ம் ...முளைச்சு நான்கு இலை கூட விடவில்லை இவனுக்கும் தெரிந்துவிட்டது. ஒரே இரத்தம் உறுதிபடுத்தி கொண்டேன்.

நான்காவது நுழைவாயிலில் உள்நுழைந்து சொற்ப நேரத்தில் மீண்டும் வந்தாள், கையில் இருந்த அலைபேசியில் கதைத்தவாறே..

ஓடிச்சென்று வாங்கி கொண்டாள் என் மனைவி. நான் கண்ணாடியை வாங்கும் சாக்கில் தொட்டுவிடுவேன் என்று அவளுக்கும் தெரியும்.

"மிக்க நன்றி." இது மட்டும் தான் நான் அந்த அழகு பதுமையுடன் பேசிய முதலும் கடைசியுமான வார்த்தைகள்.

இந்த இடத்திலைதான் ஆண்சிங்கங்கள் சிலிர்த்துக்கொண்டு நிக்கிறாங்கள் :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

( தமிழீழ விமான படையினர் - வான் புலிகள் எந்தவித தானியக்க கருவிகளும் இன்றி, சரியான ஓடு பாதையின்றி, மக்கள் நடமாடும் வீதிகளில்/ பாடசாலை மைதானங்களில் கூட விமானங்களை பாதுகாப்பாக இறக்கி இருந்தார்கள் என்பது வரலாறு).

பகலவன் எந்த சந்தர்ப்பத்திலும் தாயாக நினைவுகளோடு இருப்பதை நினைத்து பெருமை கொள்கின்றேன் சகோதரா ! :)

பயணக் கட்டுரை நன்றாக உள்ளது. முன்பு ஆங்கிலேயர்கள் அதிகமாகப் போய்வரும் இடம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது, பகலவன்!

தொடர்ந்து எழுதுங்கள்!

எனக்கு இங்கு, Malta வைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு வெள்ளை நண்பர் இருக்கின்றார்.

திருமணம் செய்யவில்லை!

ஒரு பெருங்குடிமகன்! :D

Valeta, உலகின் மிகவும் அழகிய நகரங்களில் ஒன்றாகும்!

  • தொடங்கியவர்

பயணக் கட்டுரை நன்றாக உள்ளது பகலவன், பாதியில் விட்டு விடாமல் தொடருங்கள்..

மோல்டா வர்த்தக ரீதியான & விடுமுறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் இடமா அல்லது வரலாறும் சம்பத்தப்பட்டதா என்றும் உங்கள் பயணத் தொடரில் தெளிவு படுத்துவீர்களா? :)

நன்றி உங்கள் கருத்துக்கு. Malta வர்த்தக ரீதியான இடம் அல்ல. ஆங்கிலேயரின் காலனித்துவ நாடு. இரண்டாம் உலகமாக யுத்தத்தில் இத்தாலிக்கு எதிரான தாக்குதல்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்திருக்கவேண்டும். கடலை ஒட்டிய கூடைகளும் பீரங்கிகளும் இன்னும் இருக்கின்றன.

குளிர் நாட்டு வெள்ளையின மக்களுக்கு தங்களின் ஐரோப்பாவிலேயே கடற்கரையும் வெய்யிலும் கிடைத்தால் சொல்லவா வேண்டும். மலிவான விடுமுறையை கழிக்கும் அநேக ஐரோப்பியரை அங்கு காணாலாம். இருந்தாலும் ஜெர்மனி, பிரான்ஸ் உல்லாசபயணிகள் அதிகம்.

இந்த நாடு பெரும்பாலும் சுற்றுலா துறையிலேயே தங்கியுள்ளது.

மோல்ரேய் என்கிற மோல்ரா மொழியும் ஆங்கிலமும் அங்கு அரசமொழியாக இருக்கின்றது எனக்கு பிடித்த இடம் Valette துறைமுகமும் அந்த நகரமும்தான்.புகழ்வாய்ந்த மோல்ரா விஸ்கியும். :icon_mrgreen:

உண்மைதான் சாத்திரி. வலாட்டா தான் அந்த நாட்டின் தலைநகரமும் கூட. அந்த நாட்டு விஸ்கி குடிக்கவில்லை, ஆனால் பியர் குடித்திருந்தேன். அருமையாக இருந்தது.

பகலவன்! உங்கள் பயணக்கட்டுரையை படங்களுடன் அழகாக கொண்டு செல்கிறீர்கள். தொடருங்கள் .முடிவுவரை காத்திருப்பேன்.

நன்றி குமா அண்ணா.

பயணக் கட்டுரை நன்றாக உள்ளது பகலவன், பாதியில் விட்டு விடாமல் தொடருங்கள்....

எந்த செலவும் இன்றி மல்டவுக்கு என்னை அழைத்து சென்றதற்கு நன்றி பகலவன் :)

உங்களுக்கு ஒரு பிள்ளை என்பதினால் பெரியளவில் செலவு இருந்திருக்காது எனக்கு மூன்று பிள்ளைகள் நானும் பிளான் பண்ணி கொண்டே இருக்கின்றேன் மல்ட கொலிடேக்கு உகந்த இடமா ? :D

மூன்று பிள்ளைகள் என்றாலும் பெரிதாக செலவு வாராது என்று நினைக்கிறேன். எங்கள் நாட்டு பண விகிதப்படி எனக்கு 12 000 நோர்வே குரோனர் மட்டில் முடிந்தது நான்கு நாட்களுக்கு.

ஐரோப்பாவில் வித்தியாசமான இடம். இந்த இடமும் ஐரோப்பாவில் தானா இருக்கிறது என்ற கேள்வி அடிக்கடி வரும். இலங்கையில் இருந்த போது இலங்கை ஐரோப்பாவில் இருந்தால் எப்படி இருக்கும் என்று அடிக்கடி எண்ணிகொள்வேன். Malta போன போது அதை நேரில் கண்டேன்.

இந்த இடத்திலைதான் ஆண்சிங்கங்கள் சிலிர்த்துக்கொண்டு நிக்கிறாங்கள் :lol: :lol:

இப்பவே அவசரபடாதீங்கள் குமா அண்ணா இன்னும் சிலிர்க்க நிறைய இடங்கள் உண்டு. :lol:

பயணக் கட்டுரை நன்றாக உள்ளது. முன்பு ஆங்கிலேயர்கள் அதிகமாகப் போய்வரும் இடம்.

அவர்களின் காலனியாக இருந்து 1964 இல் தான் சுதந்திரமடைந்தது. ஆங்கில மொழியிலேயே எங்கும் பேசலாம். அது தான் காரணமாக இருக்கும்.

நன்றாக இருக்கின்றது, பகலவன்!

தொடர்ந்து எழுதுங்கள்!

எனக்கு இங்கு, Malta வைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு வெள்ளை நண்பர் இருக்கின்றார்.

திருமணம் செய்யவில்லை!

ஒரு பெருங்குடிமகன்! :D

Valeta, உலகின் மிகவும் அழகிய நகரங்களில் ஒன்றாகும்!

உண்மைதான். அவர்களை பார்க்கும் போது ஒரு அரேபிய வெள்ளையின கலப்பு போல் காட்சியளிப்பார்கள். பெண்கள் அழகாக எல்லாமே மொத்தமாக . மொத்தத்தில் அழகாக இருப்பார்கள். வேண்டாமப்பா வம்பு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று பிள்ளைகள் என்றாலும் பெரிதாக செலவு வாராது என்று நினைக்கிறேன். எங்கள் நாட்டு பண விகிதப்படி எனக்கு 12 000 நோர்வே குரோனர் மட்டில் முடிந்தது நான்கு நாட்களுக்கு.

ஐரோப்பாவில் வித்தியாசமான இடம். இந்த இடமும் ஐரோப்பாவில் தானா இருக்கிறது என்ற கேள்வி அடிக்கடி வரும். இலங்கையில் இருந்த போது இலங்கை ஐரோப்பாவில் இருந்தால் எப்படி இருக்கும் என்று அடிக்கடி எண்ணிகொள்வேன். Malta போன போது அதை நேரில் கண்டேன்.

நன்றி சகோதரா !

உங்கள் பயண கட்டுரையை தொடருங்கள் நன்றாகவுள்ளது தொடர்ந்து படிக்க ஆவலாகவுள்ளேன் :)

  • தொடங்கியவர்

பயணம் 03

வைனை கண்ட மகிழ்ச்சியில் குளித்துவிட்டு, ஒரு காற்சட்டையும் மாத்தி கொண்டு கடற்கரையை உலாத்த தயாரானேன். என்னை போலவே குளித்துவிட்டு காற்சட்டையுடன் வந்த மனைவியை பார்க்க கிக் ஏறத்தான் செய்தது.

img0533rv.jpg

எல்லாத்தையும் இரவு பார்த்து கொள்ளலாம் என்று மகனையும் கூட்டி கொண்டு St Pauls Bay யின் கடற்கரை வீதியில் கடைகளையும், ஹோட்டல்களையும் பார்த்து ரசித்தாவாறே, கடற்கரையில் ஒரு இடத்தை எடுத்து குடையும், படுக்கையும் வாடகைக்கு எடுத்து நானும் மனைவியும் படுத்திருந்தோம்.

மாலை வேளையும், கடற்கரை பொன்னிற மண்ணும், கடல் அலைகளும், அங்கு திரிந்த வெள்ளையின பெண்களும் அவர்களின் சூரியன் படாத கவர்ச்சி இடங்களும் , அருகில் உடம்பை ஸ்லிம்மாக வைத்திருக்கும் ஆசை மனைவியும் சொல்லவா வேணும் மனசுக்கு. அங்கே ஓடித்திரிந்த வாட்டர் ஸ்கூட்டரை விட வேகமாக அலையை பாய்ந்தது.

img0548bh.jpg

இன்றைக்கு வைனுக்கும் கட்டிலுக்கும் நிறைய வேலை இருக்கு என்று மனசுக்குள் சொல்லி கொண்டேன்.

"என்னப்பா மனசுக்குள் புறுபுறுக்கிறியள்" மனுசி என்ர பார்வையை திருப்ப தான் அந்த கேள்வியை கேட்டாள்.

நானும் பதிலுக்கு ஏதாவது சொல்லவேணும் என்று "கடலை பாத்தீராப்பா எவ்வாளவு வடிவேண்டு "

அதோட விடாமல் "இவன் ஒரு இடத்தில் நிக்க மாட்டான்" என்று அந்த மணலில் பந்து விளையாடி கொண்டிருந்த மகனின் மீது ஏறி விழுந்தேன்.

img0543z.jpg

ஒரு ஐந்து மணி போல ஹோட்டல் திரும்பினோம். நல்லதொரு நீச்சல் தடாகம். பாய வேணும் போல தான் இருந்தது. என்னை விட மனைவி நல்லா நீந்துவாள். அவளையும் கேட்டேன், மகனுடன் இருக்க வேண்டி இருந்ததால் வர முடியாமல் போய்விட்டது.

img0531uw.jpg

அது எனக்கு வாய்ப்பாக போய்விட்டது. தங்க மீன்களுடன் நீந்தி விளையாடினேன். தண்ணி காயும் வரை ஒரு தேவதைக்கு பக்கத்தில் சூரிய குளியல் எடுத்தேன். மாடியில் இருந்து மனைவியின் கண்கள் என்னை நோக்கி இருந்தது.

img0532wl.jpg

நான் விரும்பிய இரவும் வந்தது, வெளியில் போக பஞ்சியாக இருந்தது, நாங்கள் தங்கி இருத்த ஹோட்டலிலேயே, உணவகத்தில் buffe , தலைக்கு 25 Euro , ஒரு அறைக்கு ஒரு வைன் இலவசம். மூன்று நிறத்தில் எது வேண்டும் என்று கேட்டான் அந்த பரிமாறுபவன். எரிக்கும் மனைவியின் கண்களை மீறி ஒரு Red Wine ஆர்டர் பண்ணி எடுத்தேன்.

நல்ல ஒரு BUFFE . Starter ஆக நல்லதொரு கோழி சூப்பும், பாண் ரோஸ்ட் பண்ணி சீஸ் உடன் சாப்பிட்டோம், main course இல் பன்றி, மாட்டிறைச்சி, கோழி பொரியல், மீன் குழம்பு, சலாட் என்று ஒரு பிடி பிடித்தேன். மகன் ஐஸ் கிரீமை ஒரு பிடி பிடிக்க, நான் வைனை உள்ளே விட்டு கொண்டிருந்தேன்.

dsc1921h.jpg

எல்லா ஆண்களும் செய்யும் அதே தவற்றை நானும் செய்தேன். இரண்டு கிளாஸ் உள்ளே போனதும், "இஞ்சே நீரும் கொஞ்சம் அடிச்சு பாருமனப்பா, அங்கே பாரும் அந்த வெள்ளைகார குட்டிகள் எல்லாம் எப்படி அடிகுதுகள்" என்று மனைவியிடம் ஒரு போடு போட்டேன்.

நீண்ட நேர வற்புறுத்தலுக்கு பின்னர் அனைவரும் எங்களை பார்க்க தொடங்க அவமானம் தாங்காமல், சரி "உங்களுக்காக கொஞ்சம் அடிச்சு பார்க்கிறேன்" என்று வாயிலே கொஞ்சம் குடித்துவிட்டு என்னை கண்ணகி போல பார்த்தாள்.

எல்லா மனைவ்மாரும் கேட்கும் அதே கேள்வி "என்னண்டப்பா இதையெல்லாம் குடிக்கிறீங்கள் ".

dsc1922i.jpg

"இருமனப்பா இண்டைக்கு இரவு பாரும் என்னுடைய வல்லமையை" என்று ஒரு போத்தல் வைனுக்கு ஏற்ற வெறியில் பேசினேன்.

வெட்கத்தில் தலையை குனிந்து, "கதையை மாத்துங்கப்பா உங்களுக்கு எப்ப பார்த்தாலும் இதே எண்ணம் தான்" என்றாள்.

என்னத்தை கதைப்பம், தண்ணி அடிச்சிட்டு அரசியல் (அரசியல் அலசல்) கதைச்சால் விடிய விடிய கதைக்க வேணும்.

நோர்வேயில் ஏன் அநேகமான குடும்பம் நாப்பது வயசில் பிள்ளைகள் இருக்கும் போது பிரிகிறார்கள் என்று சமூக சாளரம் கதைச்சால் எதுக்கு உங்களுக்கு ஊர்வம்பு என்று வாயை மூடிப்போடுவாள்.

அப்பிளின் அடுத்த iphone எப்படி இருக்கும் என்று அறிவுதடாகம் கதைச்சால் ஏறின வெறி இறங்கி போடும்.

ஆரும் வன்னி பிள்ளையை தத்தெடுப்பம் என்று துளி துளியாய் கதைச்சால் வெறியிலே கதைக்கிற விடயம் இல்லை என்று மனுசி அடக்கி போடுவாள்.

முதல் பள்ளி கூட அனுபவம் எப்படி என்று பேசாப்பொருள் கதைச்சால் உங்களுக்கு எப்ப பார்த்தாலும் அதே எண்ணம் என்று முடிச்சு போடுவாள்.

சரி குஸ்புவின் இடுப்பு பற்றி செய்தி திரட்டியில் எடுத்து விடுவம் என்று ஒரு பேச்சை தொடங்கினேன்.

உண்மையில் திமுக கட்சி கூட்டத்தில் கிள்ளினது குஸ்புவின் இடுப்பு என்று நீர் நினைகிறீரா என்று எடுத்து விட்டேன்.

பிளேனில பார்த்த செய்தியை இன்னுமா நெனைச்சு கொண்டு இருக்கிறீங்க

இல்லையப்பா இடுப்பு என்றாள் குஸ்பு கத்தி இருக்க மாட்டாள், கிள்ளினது அவளுக்கு தெரிஞ்சும் இருக்காது .

நான் என்னத்தை சொல்ல வாறன் என்று புரிஞ்சு கொண்ட மனைவி

உங்களுக்கு எதுக்கப்பா உந்த ஆராய்ச்சி எல்லாம், 4G ல ஒரு ஆராச்சி செய்து அது பாதியிலே நிக்குது குஸ்புவுக்கு எங்கே கிள்ளினது என்றது தான் இப்போ உங்களுக்கு தேவையா என்றாள்.

கிள்ளினது கருணாநிதியாக தான் இருக்கும் என்று மனசுக்குள் நினைத்து கொண்டேன்.

வழக்கமான குடிகாரர் போலவே அங்கே இங்கே கதைச்சு கடைசியாக அவளது குடும்ப விசயத்துக்கு வந்தேன்.

அவள் தான் தொடக்கினாள்.

ஊரிலே அண்ணாவின் கல்யாணத்துக்கு ஒரு iphone வாங்கி கொடுக்க வேண்டும் என்றாள்.

அவசரப்படாதே iphone 6 வர விட்டு வாங்குவம் என்றேன்.

(அவன் ஒரு டாக்டர், அவளின் அப்பா அம்மாவின் சாதி, அந்தஸ்து கொள்கைகளால் முப்பது வயதுக்கு மேலாகியும் கல்யாணம் ஆகவில்லை, விரைவில் ஆக போவதும் இல்லை).

வந்துச்சே அவளுக்கு கோபம், அந்த கோபம் எண்ட இரவு திட்டத்தை முழுசா பாதிக்கும் என்று எனக்கு அப்ப தெரியாது.

எதுவுமே நடக்காதது போல எண்ட மகன் முகம் முழுவதும் ஐஸ்கிரீமை அப்பி வைத்து கொண்டிருந்தான்.

img0596cw.jpg

பயணம் தொடரும் ...

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான பயணக்கதை

வாழ்த்துகள் பகலவன்

தொடருங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

தனியச் சோத்தோட கறி எண்டு மட்டுமில்லாம, ஊறுகாய், மோர் மிளகாயோட சாப்பிடுற மாதிரி இருக்கு!

எனக்கு வாழ்க்கையில ஒரே ஒரு கவலை தான்!

விடுதியில் இருந்த காலத்தில், வியாழக்கிழமை இரவு நேரத்தில், புட்டும் சம்பலும், கோழிக்கூடு வாழைப்பழமும் தருவார்கள்!

இன்னும் தேடுகிறேன்! அந்தக் கொம்பினேசன் வந்து அமையுதில்லை!

பயணத்தொடர் நன்றாகப் போகின்றது! தொடருங்கள், பகலவன்!

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படியப்பா

அண்ணன் தம்பிகளலெல்லாம் இந்த விசயத்தில் மட்டும்

அப்படீடீடீடீடீடீடீடீடீயே இருக்கின்றோம்.

ரத்தம்

ரத்த உறவு... :wub:

நன்றி உங்கள் கருத்துக்கு. Malta வர்த்தக ரீதியான இடம் அல்ல. ஆங்கிலேயரின் காலனித்துவ நாடு. இரண்டாம் உலகமாக யுத்தத்தில் இத்தாலிக்கு எதிரான தாக்குதல்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்திருக்கவேண்டும். கடலை ஒட்டிய கூடைகளும் பீரங்கிகளும் இன்னும் இருக்கின்றன.

குளிர் நாட்டு வெள்ளையின மக்களுக்கு தங்களின் ஐரோப்பாவிலேயே கடற்கரையும் வெய்யிலும் கிடைத்தால் சொல்லவா வேண்டும். மலிவான விடுமுறையை கழிக்கும் அநேக ஐரோப்பியரை அங்கு காணாலாம். இருந்தாலும் ஜெர்மனி, பிரான்ஸ் உல்லாசபயணிகள் அதிகம்.

இந்த நாடு பெரும்பாலும் சுற்றுலா துறையிலேயே தங்கியுள்ளது.

...

தெளிவு படுத்தியமைக்கு நன்றி பகலவன்!

உங்கள் தொடரின் மூன்றாம் பகுதியில் இணைத்த முதலாவது, மூன்றாவது படங்கள் மிக நன்றாக உள்ளது, தொடருங்கள்... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.