Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனந்த சங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உள்ளார்
22 ஜூலை 2013

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் ஆனந்த சங்கரி போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் கடுயைமாக சாடியவர்களில் முக்கியமான தமிழ் அரசியல் தலைவராக ஆனந்த சங்கரியை ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, புளொட் அமைப்பின் தவைலர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94331/language/ta-IN/article.aspx

வெக்கம் கெட்டது எண்டு சொன்னால் கடுமை காணாமல் இருக்கும் எண்டு நினைக்கிறன்... :D

எவன் எவனோ சாகிறான் :rolleyes: ஹ்ம்ம் என்ன செய்வது எங்கட விதி இப்பிடித்தான் எண்டால்  :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை சம்பந்தன் தனது சாணக்கியத்தால் கூத்தமைப்பு ஆக்கிட்டார். வாழ்க குள்ள நரிகள்..! :rolleyes::(

விடுதலை புலிகள் பேச்சுவார்த்தையின் இறுதி்க் காலத்தில் ஜதார்த்தத்தை உணர்ந்து சற்றே பொறுப்புடன் நடந்திருந்தால் அவர்களின் தன்னலமற்ற தியாகங்களும் பெறுமதியற்றதாகியிருக்காது. இன்றைய கண்டவர்களும் தலைமைதாங்கும் நிலையும் வந்திருக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் இஞ்சையிருந்து கதைக்கிறம்....அங்கை உள்ளுக்கை என்னென்ன பிரச்சனையோ யாரறிவார்?????

  • கருத்துக்கள உறவுகள்

cartoon20072013.jpg

சென் சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயட வஞ்சகன் மகிந்தனட .... சம்பந்தா  வஞ்சகன் மகிந்தனட 
 
  • கருத்துக்கள உறவுகள்

வென்றா பிறகு இலங்கை அரசின் வேட்பாளரை ஆதரித்தாலும் ஆதரிப்பார்....

தேர்தலில் வென்றா பிறகு ஒரு குழு கட்சி தாவினாலும் ஆச்சரியம் இல்லை அங்க நிக்கிது சம்மந்தனின் அரசியல் சாணக்கியம்.....

  • கருத்துக்கள உறவுகள்

சுரேஸ் பிரேமச்சந்திரனும் முன்பு விடுதலைப்புலிகளை எதிர்த்தவர்தான். மண்டையன் குழுவில் இருந்து இந்திய இராணுவகாலத்தில் செய்த அட்டகாசம் எண்ணில் அடங்காது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரை சரியாக கணித்தது பியதாச என்ற ஒருவர் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

cartoon23072013.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே  எஐமானர்

இவர்களுக்கு அவர்களையும்

அவர்களுக்கு  இவர்களையும் தெரியும்

சறுக்கினால்  மரணம்  என்பதும் வரலாறு  தந்திருக்கும் பாடம்

அதுவும் இவர்களுக்கு புரியும்

இனி  ஆயுதம் தேவையில்லை  இதைச்செய்ய.......

உமிழ் நீர் போதும் :( 

தனித்து போட்டியிட்டால் சங்கரிக்கும் சித்தருக்கும்   நூறு வாக்குகள் விழுவதே கஷ்டம் .

கூட்டமைப்பை உடைத்து தமிழரசு தனித்து போட்டியிட்டால் மற்ற கட்சிகளுக்கும் அதே நிலைதான். சுரேசிற்கும்,செல்வத்திற்கும் ,சிவாஜிலிங்கதிற்கும் கூட பெரிய அளவில் வாக்குகள் விழபோவதில்லை .

இதே கதி புலியென்று முத்திரை குத்தப்பட்ட புலம் பெயர்ந்தோரால் உசுப்பேத்தப்பட்ட கஜேந்திரகுமார் ,கஜேந்திரன்,பத்மினி ஆகியோருக்கும் நடந்தது .

காங்கிரசில் இருந்து தமிழரசு தமிழர்களின் ஒரே பலம் வாய்ந்த அமைப்பாக அது மாறிவிட்டது .காலத்தின் தேவை கருதி கூட்டணியாகவும்,கூட்டைமைப்பாகவும் அது மாறினாலும் முதுகெலும்பு தமிழரசுதான் .இருந்தும் உதிரிகளை வெளியில் விட்டு சிங்களவனுக்கு ஒரு சீட்டை கொடுப்பதையோ அல்லது தமிழனுக்குள் இவ்வளவு பிரிவோ என்று காட்ட தமிழரசு தலைமைகள் விரும்பவில்லை .

விக்கினேஸ்வரனின் தெரிவும், சங்கரி ,சித்தர் உள்வாங்கப்பட்டது இரண்டுமே இப்போதைக்கு மிக சரியான முடிவு எனத்தான் தோன்றுகின்றது .

சில வருடங்களில் பல மாற்றங்கள் தமிழர்களின் அரசியலில் உருவாக அதிக சாத்தியங்கள் இருக்கு என்றே நினைக்கின்றேன் .

புலம் பெயர்ந்த புலி வாலுகளின் கனவு நாட்டில் எக்காலமும் நிறைவேறப்போவதில்லை .நாலு ஊடங்களில் சேர்த்த பணம் இருக்கும் வரை கத்திவிட்டு பின்னர் ஓய்ந்துவிடுவார்கள். சிலர் மண்டையை யும் போட்டு விட்டார்கள். 

உங்கட மனத்திருப்திக்கு இப்படி எதையாவது சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்....

உண்மை என்ன எண்டு ஒட்டு மொத்த தமிழ் சனத்துக்கு தெரியும்... அது உங்களுக்கும் தெரியும்.. கூட்டமைப்புக்கு எதனால் மக்களின் ஆதரவு எண்டதை சிங்களவனே சிறப்பாக தெரிஞ்சு வைத்து இருக்கும் போது நீங்கள் கொஞ்சப்பேர்தான் கடுமையா குத்தி முறிகிறீயள்...!

தமிழரசு கட்சியிலை மாவை, சம்பந்தர், சுமத்திரன் தவிர புலிகளுடன் தொடர்பு இல்லாதவர்கள் ஒரு 10% கூட உங்களால் காட்ட முடியாது எண்டதுதான் உண்மை...

Edited by தயா

இப்பவும் மிக முக்கியமாக சொல்வதானால் தமிழரசு கட்ச்சியின் (கிளிநொச்சி..? ) வன்னி மாவட்டத்துக்கான வேட்பாளர் தெரிவை பாராட்டலாம்...

இவ்வளவு விளக்கமாக நான் எழுதியும் விளாங்காவிட்டால் கஷ்டம் தான் .அதற்குதான் தமிழரசு கட்சியின் சரித்திரம் மேலோட்டமாக  எழுதினேன் .

புலிகள் இயக்கம் தொடங்குமுதலே இருந்த கட்சி தமிழரசு கட்சி .அதன் தொடர்சி தான் இன்று இருப்பதும் .புலிகள் உலகிற்கு ஜனநாயக முகம் ஒன்று காட்ட கூட்டைமைப்பை உருவாக்கியது .இது ஒரு பம்மாத்து அமைப்பு என்று உலகிற்கு தெரியும் .அவர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்ப கூட புலிகள் எக்காலமும் முன்வரவில்லை .அவர்கள் தொடங்கிய ஜனநாயக அரசியல் கட்சிக்கு என்ன நடந்தது ?.

புலிகள் அழிந்ததும் சம்பந்தர் முக்கிய வாலுகளை வெளியேற்றிவிட்டார்(இப்பவும் அவர்கள் ஊளை இட்டுக்கொண்டு திரிவது வேறுவிடயம் ).இப்பவும் சில மித வாதவாலுகளை வைத்திருக்கின்றார் . கனக்க கதைத்தால் அவர்களும் வெளியில்தான் .

கூட்டைமைப்பு யாரை இப்போ முன்னிலை படுத்த  நினைக்கின்றது என்று சற்று அரசியல தெரிந்தாலே விளங்கும் .

அவ்வளவு அறிவாளிக்கு தமிழரசு கட்ச்சி இடையிலை காணாமல் போய் மீண்டும் முளைச்சது எண்டது தெரியாமல் போனது ஆச்சரியம்...

ஆனந்த சங்கரி கூட்டமைப்பிலை இருந்து பிரிந்த போது தமிழரசு கட்சி கூட்டமைப்பிலை இருந்ததோ இல்லையோ எண்டு கூட தெரியவில்லை எண்டது பரிதாபம்...  தமிழரசு கட்சி  மீள் உருவாக்கம் மட்டும் தான்... 

சிறீதரன், சரவணபவான், அரியேந்திரன், பொன். செல்வராசா, யோகேஸ்வரன் எல்லாம் இப்போதும் தமிழரசின் பாராளுமண்ற உறுப்பினர்கள் ( பழையவை மாவை, சம்பந்தன் மட்டுமே புதியவர் சுமந்திரன்) . தமிழரசு கட்ச்சிக்கும் அவர்களுக்கும் புலிகளின் கூட்டமைப்பு உருவாக்கதுக்கு முன்னர் எந்த சம்பந்தமும் கிடையாது எண்டதை உங்களின் தண்ணி பாட்டிகளிலை யாரும் கதைச்சது கூட கிடையாதோ...

எதை சொல்லுறதாக இருந்தாலும் வரலாற்றை திரும்பி பாருங்கோ... இருக்கிற அறிவிலை கொஞ்சம் உபயோகித்தாலும் போதும் அது முடியும்...

இப்பவும் பழைய PLOTE வேலையை தான் செய்கிறீர்கள்... எதை வேணும் எண்டாலும் புழுகலாம் கேக்க ஆக்கள் இல்லை ... அப்படித்தானே...?

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் பழைய PLOTE வேலையை தான் செய்கிறீர்கள்... எதை வேணும் எண்டாலும் புழுகலாம் கேக்க ஆக்கள் இல்லை ... அப்படித்தானே...?

அவர்  30 வருடமா  கோமாவில்  கிடந்தவர்

அவரிடம் போய்............. :(

அவர்  30 வருடமா  கோமாவில்  கிடந்தவர்

அவரிடம் போய்............. :(

நான் உண்மையிலேயே அவர் விதண்டா வாதத்துக்கு தான் அப்படி எழுதுகிறார் எண்று நினைத்தேன்...   ஆனால்  அவர் உண்மையாக அப்படிதான் நம்புகிறார்....   

இண்டைக்கு 40 , 50 வயதுகளில் இருக்கும் பலர் தமிழரசுக்கு ஆதரவு  குடுத்தவர்கள் கிடையாது...  காரணம் செல்வா கூட்டணியை உருவாக்கி இருந்தார்...   அப்போ தமிழரசு கட்ச்சி கிடையாது... 

1977 ல் கூட்டணி உருவான போது இண்டைக்கு 60 வயதுக்கும் மேலை இருப்பவர்கள் தான் அப்போ இளைஞர்களாக அரசியல் செய்து இருப்பார்கள் எனும் போது அதுக்கும் முன்னம் இருந்து கூட்டணியான தமிழரசு கட்சியை அதுக்கு பிறகும் பிறந்தவர்கள்  ஆதரிக்கிறார்கள் எண்கிறார்...  நம்பும் படியா இருக்கு... ??? 

அதுதான் ஜதார்த்தமாம்...   இவர் தன்னை நிறைய அரசியல் தெரிந்தவர் எண்று தம்பட்டம் அடிச்சதில் நான் அதில் ஒரு சத வீதம் தன்னும் உண்மை இருக்கும் எண்று நினைத்ததில் தோல்வி எனக்குதான்.... 

Edited by தயா

அதுதான்  வந்து வரிக்கு வரி சம்பந்தரையும் சுமேந்திரனையும் புலி வாலுகள் திட்டுகின்றார்கள் .சரவணபவன் புலி ?

கோமா ,என்றால் நினைவிற்கு வருவது இந்த கடைசி நான்கு வருடங்களும் புலிகள் பாடுதான்    :icon_mrgreen: .

தயாவிற்கு தமிழும் விளங்க கொஞ்சம் கஷ்டம் போல .

முதலில் நான் எழுதிய பதிவை திரும்ப வாசியுங்கள் .

தமிழரசுக்கட்சியை திரும்ப வரவைத்தவர் ஆனந்தசங்கரி.  அவர் தமிழ் இனத்துக்கு(கூட்டமைப்புக்கு) செய்த துரோகங்களை  தணிக்க கொண்டுவந்த முடிவுதான் தமிழரசுக்கட்டிசியை புத்துப்பித்தமை.  ஆனந்த சங்கரி பிறந்திருக்காவிட்டால் தமிழரசுக்கட்சி வெளியே வந்திருக்காது.

தமிழரசுக்கு திரும்ப அரசியலுக்கு வந்தால் நடந்த அவலம்தான் இன்றைய கூட்டமைப்பில் இருக்கும் தில்லு முல்லுகளுக்கு காரணம். தமிழரசுக்கட்சியின் தலை வெளியே தெரியும் வரை மற்றய கட்சிகள் முழு மனத்துடன் கூட்டமைப்பில் இணையமட்டா. அது கூட்டமைப்பின் ஆரம்பகால அங்கத்தவரும் அல்ல.  சம்பந்தர் அதை இராம பாணமாகத்தான் பாவித்தார். இதனால் ஆனந்தசங்கரி கூட்டமைப்பில் வந்து இணையவேண்டிய தேவை ஏற்பட்டது. இராமபாணம் தன் தீமையையும் செய்து விட்டது.  மேற்கு நாடுகளிடமிருந்து கூட்டமைப்புக்கு வந்திருக்க வேண்டிய அங்கீகரம் தவறிப்போனது. எப்படி தமிழரசுக்கட்சியவை வைத்து ஆனந்த சங்கரியை பிடிக்கவேண்டி வந்ததோ அதே யனையை அடக்கவேதான் விக்கினேஸ்வரனைக் கொண்டு வரவேண்டி வந்தது.

அரசுனனிற்கு அரசியல் புரிவது கஸ்டம்.  ஆனாலும் நாம் எழுத வேண்டியது இன்றைய நாட்களின் நிர்பந்தம். 

தமிழரசுக்கட்சி என்பது குபேரன் பறந்து திரிந்த புஷ்பக விமானம் போன்றது ஒன்றல்ல.  செல்வநாயகம், இராஜவரோதயம் வன்னிய சிங்கம் பொன்றதலைவர்கள் கட்டி எழுப்பிய கட்சி. அதாவது்தமிழ் மக்களின் மனத்தில் ஏற்றப்பட்டிருக்கும் ஒரு நம்பிக்கையின் நிலைப்படு.  இது நியாமான  தலைவர்களிடமிருந்து  தமிழ் மக்களுக்கு கிடைத்த அரசியல் பாடத்தின் உருவம். முஸ்லீம், சிங்கள் சமூகத்தில் இந்த அரசியல் பாடம் இடம் பெறவுமில்லை, அவர்கள் படிக்கவுமில்லை. இது எங்கும் நிஜ உலக சுவர் ஒன்றில் "கட்சி" என்று ஆணி அடித்து இறுக்கப்பட்ட படம் அல்ல. மக்களின் மனகளில் தூங்கும் அரசியல் பாடம். அதாவது உரிமை தேடி வக்களிக்க வேண்டும் என்பதுதான் ராஜவரோதயம், நவரத்தினம், செல்வநாயகம் ஜி.ஜி பொன்னம்பலம் எல்லோரும் தமிழ் மக்களிடம் விட்டு வைத்து விட்டுப்போன பாடம். இதனால்த்தான் மக்கள் ஒருநாள் காங்கிரசை, விடுதலை கூட்டணியை, கூட்டமைப்பில் இருந்து பிரிந்து போன கிளையை எல்லாவற்றையும் நிராகரித்தமை.  கட்சி என்ற முறையில் தமிழரசுக்கட்சி அசையாத சாதனையை செய்துவைத்திருக்கிறது. இதற்கு தனி ஒருமனிதன் செல்வா காரணம். ஆனால் தமிழ் மக்கள் வாக்களிப்பது விடுதலைக்கு. (இதை படிப்பித்ததுதான் தமிழரசுக்கட்சி.) பொன்னம்பலம்  விடுதலை என்ற பெயரில் போலிகளை கட்ட முயன்றபோது செல்வா பிரிந்து வந்து விடுதலை கொள்கையில் போலிகளை பிரித்தறியும் பாடத்தை ஈழத்தமிழருக்கு படிப்பித்தார். அதானல், தமிழ் மக்கள், காங்கிரஸ் பிற்காலம் உரிமை பற்றி பேசினாலும் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழ் மக்கள் கேட்பது உரிமை. இதை மிக கூடிய ஐக்கியத்துடன் வெளிக்காட்ட வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு. எனவே தமிழரசுக்கட்சி, அதன் மற்றைய கட்சிகளை துவம்சம் பண்ணத்தக்க பலத்தை வெளிக்காடுவது இந்த நோக்கத்திற்கு உதவ போவதில்லை. இதானால் கூட்டமைப்பு முன்னால் சென்று தமிழ் மக்களின் இதய பூர்வமான நோக்கமான விடுதலையை அதிக பட்ச இணைவுடன் காட்ட வேண்டும்.

தனித்து போட்டியிட்டால் சங்கரிக்கும் சித்தருக்கும்   நூறு வாக்குகள் விழுவதே கஷ்டம் .

கூட்டமைப்பை உடைத்து தமிழரசு தனித்து போட்டியிட்டால் மற்ற கட்சிகளுக்கும் அதே நிலைதான். சுரேசிற்கும்,செல்வத்திற்கும் ,சிவாஜிலிங்கதிற்கும் கூட பெரிய அளவில் வாக்குகள் விழபோவதில்லை .

இதே கதி புலியென்று முத்திரை குத்தப்பட்ட புலம் பெயர்ந்தோரால் உசுப்பேத்தப்பட்ட கஜேந்திரகுமார் ,கஜேந்திரன்,பத்மினி ஆகியோருக்கும் நடந்தது .

காங்கிரசில் இருந்து தமிழரசு தமிழர்களின் ஒரே பலம் வாய்ந்த அமைப்பாக அது மாறிவிட்டது .காலத்தின் தேவை கருதி கூட்டணியாகவும்,கூட்டைமைப்பாகவும் அது மாறினாலும் முதுகெலும்பு தமிழரசுதான் .இருந்தும் உதிரிகளை வெளியில் விட்டு சிங்களவனுக்கு ஒரு சீட்டை கொடுப்பதையோ அல்லது தமிழனுக்குள் இவ்வளவு பிரிவோ என்று காட்ட தமிழரசு தலைமைகள் விரும்பவில்லை .

விக்கினேஸ்வரனின் தெரிவும், சங்கரி ,சித்தர் உள்வாங்கப்பட்டது இரண்டுமே இப்போதைக்கு மிக சரியான முடிவு எனத்தான் தோன்றுகின்றது .

சில வருடங்களில் பல மாற்றங்கள் தமிழர்களின் அரசியலில் உருவாக அதிக சாத்தியங்கள் இருக்கு என்றே நினைக்கின்றேன் .

புலம் பெயர்ந்த புலி வாலுகளின் கனவு நாட்டில் எக்காலமும் நிறைவேறப்போவதில்லை .நாலு ஊடங்களில் சேர்த்த பணம் இருக்கும் வரை கத்திவிட்டு பின்னர் ஓய்ந்துவிடுவார்கள். சிலர் மண்டையை யும் போட்டு விட்டார்கள். 

மக்கள் தமிழரசை மட்டும் ஆதரிக்கிறார்கள் என்பதை விட வேறை ஏதும் இதில் இருக்கா...?? 

இது அப்பட்டமான பொய் இல்லை...??? 

சரி   கூட்டமைபை விட்டு தமிழரசு தனிச்சு போட்டி இட்டால் யார்  சம்பந்தரோடு போவார்கள்...  ??   மாவை , சம்பந்தர், சுமத்திரன்...?? 

சங்கரி தானாக விலகியவர், புலிகளால் விலக்கப்படவில்லை...  சித்தார்த்தன் இணைய விரும்பினாலும்  ஆயுதங்களை கைவிட கூட இருந்தவை விரும்பவில்லை அதுதான் புலிகளின் நிபந்தனையாக இருந்தது ...  சித்தார்தன் இணையாமைக்கும் அவரே காரணம் ...  அரசாங்க கொடுப்பனவுகளும்  வவுனியாவில் வாங்கும் கப்பத்துக்கும் பிரச்சின வந்தா பொருளாதாரம் படுக்கும் எனும் காரணத்தால்...   

திரிவு செய்யுறது யார்...?? 

Edited by தயா

தயா எதற்கும் சற்று எமது பழைய அரசியல் தெரிந்தவர்களுடன் கதைப்பது நல்லது .

இலங்கை தமிழர்களின் அரசியல் தெரிந்த எவருக்கும் புரிந்த  விடயம் அது .

56 ,60,65,70,தேர்தல்களில் தமிழரசு வென்ற சீட்டுக்கள் முறையே 10,15,14,13 கொங்கிரஸ் வென்ற சீட்டுக்கள் 1,1,3,3 .

77 இல் கூட்டணி உருவாக்கி வென்ற சீட்டுக்கள் 18.

கூட்டணி உருவானதற்கான காரணம் தமிழர்களின் ஐக்கியத்தை காட்ட.(தொண்டமானும் சேர்ந்தார் )

தமிழர்களின் முதுகெலும்பாக தமிழரசு இருக்கவில்லை என்றால் அது பெரும் பகிடி. பின்னர் காங்கிரஸ் என்று வெளிக்கிட்ட குமார் பொன்னம்பலதிற்கு கட்டுகாசு கூட கிடைக்கவில்லை .

அமிரையும்,யோகேஸ்வரனையும்,சிவசிதம்பரத்தை அழித்து தாங்களே தமிழர்களின் ஏகப்பிரநிதிகள் ஆக புலிகள் எடுத்த முயற்சி கடைசிவரையும் வெற்றி அழிக்கவில்லை .

இயக்கம் தொடங்கிய நாளில் இருந்து பிரபாகரனின் கனவு இதுதான் -வன்னி இராச்சியமும் அதன் மன்னர் கரிகாலனும் .சாண்டில்யன் கதைகள் வாசித்ததன் விளைவு அது .எதிர் கட்சியே இல்லாமல் தான் ஆட்சி புரியவேண்டும் .அதற்க்ககத்தான் அதனை சகோதர கொலைகளும் புரிந்தார் உலகம் எப்படி இருக்கு எங்கே நோக்கி போகின்றது என்பதை பற்றி அவருக்கு அக்கறையே இல்லை .

இவ்வளவு உயிரிழப்புகளும் அழிவுகளும் தனி ஒருவரின் அறியாமையாலும் பேராசையாலும்   தான் வந்தது.

கூட்டமைப்பை பற்றி அருச்சுனுக்கு விளங்க வைப்பது கஸ்டம்.  கூட்டமைப்பு கொள்கையால் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு.  அது நம்பிக்கையால் கட்டி எழுப்பட்ட அமைப்பு அல்ல. நம்பிக்கையால் கட்டி எழுப்பட்ட அமைப்பென்றால் அதில் சித்தார்த்தான், ஆனந்த சங்கரி, .... மற்றும் பலருக்கு அங்கு இடம் கிடைத்திருக்காது. அருச்சுன் இதை தான் விளங்கிக் கொள்ளாமல் தடுமாறுகிறார். தமிழரசுக்கட்சி Double Barrel Gun போன்றது. அதன் கொள்கையும், நம்பிகையும் எப்போதும் தமிழ் மக்களுக்கு கவர்சிகரமானது. ஆனால் இன்றைய இன்று கூட்டமைப்பு கொள்கையினால் கட்டி எழுப்பப்படிருப்பத்தால் அதில் நம்பிக்கை என்பது அவசியமான மூலகம் இல்லை.(இதில் நம்பிக்கை குறைந்த அங்கத்தவர்கள் இருப்பதால் கொள்கையில் தடுமாற்றம் வராது). நம்பிக்கையென்பது கூட்டமைப்பின் முதுகெலும்பென்றால் எப்படி அரசியல் அனுபவம் இல்லாத விக்கினேஸ்வரன் மீது மக்கள் நம்பிக்கை வைக்க போகிறார்கள்? விக்கினேஸ்வரன் தமிழரசுக்கட்சி என்பதால் தெரியப்படவில்லை. தமிழரசுக்கட்சி அல்ல என்பதால் தெரியப்பட்டார்.  அதாவது கூட்டமைப்பு இன்று நம்பிக்கை என்ற கடலை கடந்து தமிழரசுக்கட்டி படிப்பித்த பாடத்தில் தங்கியிருக்கிறது. மக்கள் அந்த அறிவை வைத்து கொள்கையில் பிடிப்பானவர்களை அடையாளம் காண்பார்கள் என்ற அனுமானத்தால்தான் விக்கினேஸ்வரன் தெரியப்பட்டார். தமிழரசுக்கட்சியின் ஒரு Barrel இன்றைய நேரத்தில் தேவை இல்லாதது. கூட்டமைப்பு மக்களின் அறிவை வைத்துதான் பயணம் ஆரம்பிக்கிறது. தன்னை தமிழரசுக்கட்சிக்கு போட்டியான நம்பிக்கை நட்சத்திரமாக காட்ட முயலவில்லை.

இதில் தமிழரசுக்கட்சி முதுகெலும்பென்பது பொருத்தமில்லாத கரையில் விவாதத்தை எடுத்து செல்வதாகும். தமிழரசுக்குக்கட்சி வளர்த்த பாடத்தை இனி அதானால் கூட undo பண்ண முடியாதென்பதுதான் யதார்த்தம். இதில் வயது பெரியபாகம் கொண்டிருக்கவில்லை. தாய் மானைப்பார்த்து காட்டில் குழவியும் புல்லு பேயப் பழகுகிறது.  பின்னர் அது தான் தாயக வந்துவிடும். இதனால்தான் மேற்கு நாடுகளில் அரசியல் முதிர்ச்சி என்பது பல ஆண்டுகளாக ப்ரம்பரைபரம்பரையாக காண்ப்படுகிறது. அமெரிக்க சுதந்திர போரில் இருந்த தலைவர்கள் இன்று இல்லாவிட்டாலும் அவர்களிடம் சுதந்திர உணர்வுக்கு பஞ்சமில்லை.  இது தாயிடமிருந்து பிள்ளைக்கு, கடத்தப்படும் அறிவும், நம்பிக்கையும் உணர்வுமாகும்.

தயா எதற்கும் சற்று எமது பழைய அரசியல் தெரிந்தவர்களுடன் கதைப்பது நல்லது .

இலங்கை தமிழர்களின் அரசியல் தெரிந்த எவருக்கும் புரிந்த  விடயம் அது .

56 ,60,65,70,தேர்தல்களில் தமிழரசு வென்ற சீட்டுக்கள் முறையே 10,15,14,13 கொங்கிரஸ் வென்ற சீட்டுக்கள் 1,1,3,3 .

77 இல் கூட்டணி உருவாக்கி வென்ற சீட்டுக்கள் 18.

கூட்டணி உருவானதற்கான காரணம் தமிழர்களின் ஐக்கியத்தை காட்ட.(தொண்டமானும் சேர்ந்தார் )

தமிழர்களின் முதுகெலும்பாக தமிழரசு இருக்கவில்லை என்றால் அது பெரும் பகிடி. பின்னர் காங்கிரஸ் என்று வெளிக்கிட்ட குமார் பொன்னம்பலதிற்கு கட்டுகாசு கூட கிடைக்கவில்லை .

அமிரையும்,யோகேஸ்வரனையும்,சிவசிதம்பரத்தை அழித்து தாங்களே தமிழர்களின் ஏகப்பிரநிதிகள் ஆக புலிகள் எடுத்த முயற்சி கடைசிவரையும் வெற்றி அழிக்கவில்லை .

இயக்கம் தொடங்கிய நாளில் இருந்து பிரபாகரனின் கனவு இதுதான் -வன்னி இராச்சியமும் அதன் மன்னர் கரிகாலனும் .சாண்டில்யன் கதைகள் வாசித்ததன் விளைவு அது .எதிர் கட்சியே இல்லாமல் தான் ஆட்சி புரியவேண்டும் .அதற்க்ககத்தான் அதனை சகோதர கொலைகளும் புரிந்தார் உலகம் எப்படி இருக்கு எங்கே நோக்கி போகின்றது என்பதை பற்றி அவருக்கு அக்கறையே இல்லை .

இவ்வளவு உயிரிழப்புகளும் அழிவுகளும் தனி ஒருவரின் அறியாமையாலும் பேராசையாலும்   தான் வந்தது.

1989 லை  நடந்த நாடாளுமண்ற தேர்தல், 1994 லை , 2000 ம் ஆண்டு நாடாளுமண்ற தேர்தல்கள் நடந்தவை உங்களுக்கு ஞாபகம் இருக்குமோ தெரியவில்லை...  

1977 க்கு பிறகு நடந்த தேர்தல்  1989 ம் ஆண்டு

1989 ல் நடந்த தேர்தலில் EROS 13  ஆசனங்களை பெற்றது...

 தமிழர் விடுதலைக்கூட்டணி  எனும் பெயரி கேட்டவை ( ENDLF, TELO, EPRLF, தமிழர் விடுதலை கூட்டணி)  10 ஆசனங்களை பெற்றனர்...   கிட்டத்தட்ட இதே கூட்டமைப்பு... ( இதுவும் கூட இந்திய தயாரிப்பு..) 

1994 ல் நடந்த தேர்தலில்    EPDP - 9 ஆசனங்களையும், விடுதலை கூட்டணி  5 ஆசனங்களையும் பெற்றது...   

2000 ம் ஆண்டும் கூட்டணி - 5 ஆசனங்களை மட்டுமே  பெற்றது...   யாழ்ப்பாணத்தில் ஐதேக  கூட்டணியை விட அதிகமாக வாக்குகள் வாங்கியது...  

விசயம் இப்படி இருக்க எதுக்காக திரிக்கிற வேலை... 

பொய் சொல்லும் பொருத்தமாக பார்த்து சொல்லுங்கள்... 

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.