Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத்தலைவர் பற்றி.........!

Featured Replies

தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமை, ஆளுமை, உறுதி, கொள்கை வழுவாத்தன்மை பற்றி எவருக்கும் தெரியாமலிருக்காது. அதற்கு அப்பால் அவர் சிறந்த பண்பாளனாகவும் பிறர்மேல் கரிசனை கொண்ட அன்புள்ளம் கொண்டவராகவும் இருந்தார். தலைமைக்குரிய கண்டிப்பும் நேர்மையும் அதேநேரம் பிறருடைய உணர்வுகளைg; புரிந்தவாராக, அவர்களுடைய உணர்விகளிற்கும் மதிப்புக் கொடுக்கும் ஒருவராக இருந்தார். வெறுமனே தலைவர் அவர்களின் ஆளுமைக் கவர்ச்சியில் மட்டும் இளைஞர்கள் அவரை நோக்கி ஈர்க்கப்படவில்லை. அவரிடம் இருந்த பனமுகப்  பண்புகளே அவரைத்  தலைவராக ஏற்றுக்கொள்ள வைத்தது. 
 
ஒரு நாள் தலைவர் வாகனத்தில் முகாமை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் மீன் வித்துக் கொண்டு சென்றார் ஒரு வியாபாரி. அவரைப்பார்த்ததும் தலைவருக்கு மீன் சாப்பிடும் எண்ணம் ஏற்பட்டது. உடனே மீன் வாங்கும் படி கூறி, வாகனத்தை நிறுத்தினார். வாகனத்தில் இருந்த பாதுகாவலர் பின்னுக்கு வந்த பாதுகாப்பு வாகனத்தில் வந்தவர்களிடம் மீன் வாங்குமாறு கூறினர். சிறிது நேரத்திலேயே மீன் வாங்கியாகிவிட்டது என தெரிவித்தனர். தலைவர் ‘என்ன இவ்வளவு கெதியா வாங்கிட்டீங்களா?’ எனக் கேட்க, அந்தப்போராளியும் ‘ஓம் அண்ணை வாங்கியிட்டம்’ எனக் கூறினார். பின்னர் வாகனங்கள் புறப்பட்டு முகாமிற்குச் சென்றுவிட்டன.
 
வாகனத்திலிருந்து இறங்கிய தலைவர்  ‘எங்க மீனைப்பாப்பம்’ என கேட்க அவர்கள் பெட்டிக்குள் இருந்த மீனைக்காட்டினார்கள். ஆச்சரியமைந்த தலைவர், ஏன் பெட்டியுடன் வாங்கினீர்கள் எனக் கேட்டார். அதற்குப் போராளி ‘நாங்கள் ஐந்து கிலோ கேட்டனாங்கள், அவரிடம் ஐந்து கிலோ மட்டில் இருந்ததால் அப்படியே எடுக்கச் சொன்னவர். எங்களிட்ட பை ஒன்றும் இல்லை, அதால பெட்டியுடன் தாறீங்களா? அதுக்கும் காசு தருகின்றோம் எனக் கேட்டேன், வியாபாரியும் ‘மறுக்காமல் சரி என்று சொன்னார். அதோட அந்த இடத்தில் உங்களை வைத்துக்கொண்டு தாமதிக்க விரும்பவில்லை எனவே அப்படியே வாங்கிக் கொண்டு வந்திட்டன்’ என்றனர்.
 
அதற்குத் தலைவர் ‘நாங்கள் இயக்கம் என்டபடியால், கேட்டதை மக்கள் மறுக்காமல் தருவினம் ஆனால் ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு பொருளை அதிஸ்டமாகக் கருதுவினம், அதுபோன்று இந்த வியாபாரிக்கும் அந்தப்பெட்டியில் மீன்வித்தால் நல்ல வியாபாரம் நடக்கும் என்ற ஒரு நம்பிக்கை இருந்திருக்கும். சிலவேளை நாளைக்கு புதிய பெட்டி வாங்கி வியாபாரத்திற்குச் செல்லும் போது, சரியாக வியாபாரம் போகாவிட்டால், அதிஸ்டமான பெட்டியை பெடியள் கேட்டதால கொடுத்திட்டனே என்று கவலைப்படக்கூடும். இந்தக் கருத்து மனைவி, பிள்ளைகளிற்குகூட ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. இது இயக்கத்தைப்பற்றிய ஒரு தவறான பார்வையை மக்களிற்குள் தோற்றுவிக்கும். எனவே நீங்கள் நாளை எப்படியாவது இந்தப்பெட்டியை வியாபாரிக்கு கிடைக்கச் செய்து விடுங்கள்’ என்றார்.
 
மறுநாள் மீன் வாங்கிய இடத்துக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் மீன்வியாபாரியின் வீடு எங்கிருக்கின்றது என தேடிக்கண்டு பிடித்து, அந்தப்பெட்டியை திருப்பிக் கொடுக்க வியாபாரி வியப்படைந்து ஒரு புன்முறுவலுடன் வாங்கிக் கொண்டார். அன்று மதியம் மீன் வாங்கிய போராளியை அழைத்த தலைவர் ‘மீன் பெட்டியைத் திருப்பிக் கொடுத்து விட்டீர்களா?’ என அவ்வளவு வேலைகளுற்கு மத்தியிலும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.
 
பிறிதொரு சம்பவத்தில்  தலைவர் காலையுணவருந்திக் கொண்டிருந்தவேளை கேணல் சங்கர் அண்ணை அலுவலாக வந்திருந்தார். அப்போது தலைவர் மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சங்கர் அண்ணை வந்ததும் ‘அண்ணை மாம்பழம் சாப்பிடுங்கோ’ என்று கூற அவரும் சாப்பிட்டார். மாம்பழம் நல்ல சுவையாக இருந்தது. சங்கர் அண்ணையும் நல்ல சுவையாக இருக்கின்றது எனச் சொல்லிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரது மனவோட்டத்தை புரிந்து கொண்ட தலைவர் ‘மற்றப்பழத்தையும் சாப்பிடுங்கோ அண்ணை’ என்றார். சங்கர் அண்ணை  சாப்பிடத் தொடங்க அண்ணை பாதுகாவலர்களிடம் ‘இன்னுமொரு மாம்பழம் ஒன்று வெட்டிவாங்கோ’ என்றார். உள்ளே சென்றுவிட்டு திரும்பி வந்த அவர் ‘மாம்பழம் முடிந்து விட்டது’ என்றார்.
 
சங்கர் அண்ணை முகம் சற்று மாறியதை கவனித்த தலைவர் உடனேயே ‘சரி, வாழைப்பழம் எடுத்துவாங்கோ’ எனக் கூற அவர் அதுவும் முடிந்து விட்டது என்றார். சங்கர் அண்ணை சங்கடப்படுவதை உணர்ந்த தலைவர். ‘சரி தம்பி’ என்று அந்த சம்பாசனையை முடித்துக் கொண்டார். பின்னர் சங்கர் அண்ணையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை கதைத்து அவருக்கு மனச்சங்கடம் இல்லாமல் வேறு வகையில் அவரை சந்தோசமாக அனுப்பி வைத்தார்.
 
பின்னர் அன்று மாலை தலைவர் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தவேளை சம்பந்தப்பட்ட போராளி தலைவருக்கு முன்னால் சென்றார். ‘தம்பி இங்கை வாங்கோ’ என அப்போராளியை அழைத்து காலையில் நீங்கள் நடந்து கொண்டு முறை சரியா?’ எனக்கேட்டார். அவரும் எது என்று தெரியாமல் விழிக்க,  தலைவர் சொன்னார் ‘காலையில் பழம்; கொண்டு வாங்கோ என்று சொல்ல, நீங்கள் சங்கர் அண்ணைக்கு கேட்கக்கூடியவாறு பழம் முடிந்து விட்டது என்று சொன்னீர்கள். அப்படி சொல்லியிருக்கக்கூடாது. ஏனென்றால் எனக்குரிய உணவை தான் சாப்பிட்டுவிட்டேனே என்ற குற்ற உணர்ச்சி சங்கரண்ணைக்கு ஏற்பட்டதை அவரின் முகமாற்றத்திலிருந்து அறிந்து கொண்டேன். உணவு பரிமாறும் போது விருந்தினர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ளவும் உணவு பரிமாறிமாறவும் பழகிக் கொள்ளவேண்டும். இனிமேல் இப்படியான தருணங்களில் நான் கேட்கும் உணவு முடிந்து விட்டால், ஒரு ஒற்றையில் எழுதித்தாருங்கள் நான் அதைப் புரிந்து கொள்வேன் அவர்களிற்கும் தர்மசங்கடம்; ஏற்படாது’ என்று சொன்னார்.
 
இது தனிமனிதர்கள் மீதும் அவர்களின் தனிமனித உணர்வுகளிற்கும் தலைவர் கொடுக்கும் முன்னுரிமை, மதிப்பை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. இதனூடாகப்  போராளிகளை மனிதநேயம், மனிதப் பண்புகள் உள்ளவர்களாக உருவாக்குவதன் மூலம், இப்போராளிகாளால் உருவாக்கப்படும் சமூகம் ஒரு நன்நெறி மிக்க சமூகமாகவும்  நல்ல சிந்தனைகள், நற்பண்புகளைக் கொண்ட சமூகமாகவும் அடுத்தவர்களின் உணர்வுகளிற்கு மதிப்புக் கொடுப்பவர்களாகவும் உருவாக வேண்டும் என்பதை, தன்னைச் சுற்றியுள்ளவர்களிலிருந்து மாற்றவேண்டும் என்பதில் ஒரு தெளிவான பார்வை இருப்பதை வெளிக்காட்டுகின்றது.
 
 
 
 

Edited by வாணன்

  • Replies 65
  • Views 16.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மிகவும் அருமையான பதிவு 
உண்மை வரலாறுகளை தொடர்ந்து பதிவிடுங்கள் வாணன் 
  • கருத்துக்கள உறவுகள்
இது போல் என்னும் எத்தனை அவருடைய பண்புகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் அற்புதமான தலைவர் அவர் எங்களுக்கு கிடைத்தது நாம் செய்த பாக்கியமாகவே கருதலாம்.
 
பகிற்விற்க்கு நன்றி வாணன்.   
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவராலும் அவர்  இடத்தை  நிரப்பமுடியாது என்று  தெரியும்போதே

அவரது பன்முக  ஆற்றலையும்  பண்புகளையும் புரிந்து கொள்ளமுடியும்

 

என்ன

தமிழனுக்கு  அவரது அருமை  தெரியவில்லை

தனியே  விட்டு விட்டோம்

இனி..........

 

பகிற்விற்க்கு நன்றி வாணன்.   

தொடருங்கள்

பதியப்படணும்  இவை.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து உங்கள் அனுபவத்தை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவுகளைத் தரும் வாணனுக்கு நன்றிகள்..!

ஒரு தலைவனுக்கு சரியான வரைவிலக்கணம் கொடுக்கவேண்டுமென்றால்....

ஒற்றைச் சொல்லில் சொல்லிவிடலாம்.... அது "பிரபாகரன்" என்று.

ஒரு நல்ல தலைவனின் மதிப்பினை நம் தமிழினம் முழுமையாக உணர்ந்து கொள்ளவுமில்லை, அவருக்கு ஒத்துழைக்கவும் இல்லை.

 

இனியும் இப்படியொரு சிறந்த தலைவனுக்கு எத்தனையாயிரம் வருடங்கள் காத்திருக்கவேண்டி வருமோ!!!??? :(

  • கருத்துக்கள உறவுகள்

 இவைகள் எல்லாவற்றையும் தாண்டியே அவர் எமது இதையங்களில் அரியணையிட்டிருக்கிறார். ஆகவே எங்கள் நட்பு வட்டத்துக்குள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அவற்றைப் பேசுபொருளாகக் கொள்வோம். 

Edited by Elugnajiru

நல்லதொரு பதிவு நன்றி வாணன்.  ஆளுமையுடைய ஒரு மனிதன்.


நல்லதொரு பதிவு நன்றி வாணன்.  ஆளுமையுடைய ஒரு மனிதன்.

ஒரு பக்கம் மட்டும் பார்த்தால் வாணன் சொல்வதை முழுமையாக ஏற்று கொள்ளத்தான் வேண்டும் .

தமது தலைவர்களின்  நல்ல பக்கத்தை மட்டும் பார்க்கதான் தொண்டர்கள் விரும்புவார்கள் ஆனால் உலகம் அப்படி பார்க்காது .

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் 90 or 91  எண்டு  நினைக்கிறேன்  அண்ணயை சந்திக்க  சென்றோம் .அப்போது எங்கள் வேலை ஒவ்வொரு மாவட்டமாக சென்று போராளிகளுக்கு  அரசியல்  படிப்பது ,போவதற்கு ஒழுங்கான

வாகன வசதி எதுவும் எங்களுக்கில்லை .நடந்தும்  வருகின்ற பொதுமக்களின் வாகனங்களில் ஏறியும் எங்களுக்குரிய இடத்தை சென்றடைவோம் .பொதுவான விஷயங்கள் கதைத்து முடியும் பொது

கேட்டார் ,உங்கள் போக்குவரத்து எப்பிடி எண்டு நாங்களும் உள்ளதைச் சொன்னோம் .உடனே அண்ணர்,யோகி அண்ணயை  பாத்து சொன்னார்  இப்பதானே  மண்ணெண்ணெயில்  ஊதி விளையாடுற 

சாமான் இருக்கு ,ஒழுங்கு செய்யுங்கோ எண்டு , அடுத்த நாள்  15 வாகனம்  வந்து இறங்கிச்சு

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம் மட்டும் பார்த்தால் வாணன் சொல்வதை முழுமையாக ஏற்று கொள்ளத்தான் வேண்டும் .

தமது தலைவர்களின்  நல்ல பக்கத்தை மட்டும் பார்க்கதான் தொண்டர்கள் விரும்புவார்கள் ஆனால் உலகம் அப்படி பார்க்காது .

 

 

நேரடிச்சாட்சிகளை நம்பவும். கனவுலகில் சஞ்சரிக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் 90 or 91  எண்டு  நினைக்கிறேன்  அண்ணயை சந்திக்க  சென்றோம் .அப்போது எங்கள் வேலை ஒவ்வொரு மாவட்டமாக சென்று போராளிகளுக்கு  அரசியல்  படிப்பது ,போவதற்கு ஒழுங்கான

வாகன வசதி எதுவும் எங்களுக்கில்லை .நடந்தும்  வருகின்ற பொதுமக்களின் வாகனங்களில் ஏறியும் எங்களுக்குரிய இடத்தை சென்றடைவோம் .பொதுவான விஷயங்கள் கதைத்து முடியும் பொது

கேட்டார் ,உங்கள் போக்குவரத்து எப்பிடி எண்டு நாங்களும் உள்ளதைச் சொன்னோம் .உடனே அண்ணர்,யோகி அண்ணயை  பாத்து சொன்னார்  இப்பதானே  மண்ணெண்ணெயில்  ஊதி விளையாடுற 

சாமான் இருக்கு ,ஒழுங்கு செய்யுங்கோ எண்டு , அடுத்த நாள்  15 வாகனம்  வந்து இறங்கிச்சு

உண்மைகள் வெளிவரவேண்டும்...வரட்டும்...நன்றி நந்தன்.

நேரடிச்சாட்சிகளை நம்பவும். கனவுலகில் சஞ்சரிக்க வேண்டாம்.

முழுக்க முழுக்க அவர்களை நான் நம்புகின்றேன் .வெறும் சம்பவங்களும் மனிதாபிமானமும் அல்ல எமது இனத்தின் விடுதலையை தீர்மானிப்பது .

  • கருத்துக்கள உறவுகள்

முழுக்க முழுக்க அவர்களை நான் நம்புகின்றேன் .வெறும் சம்பவங்களும் மனிதாபிமானமும் அல்ல எமது இனத்தின் விடுதலையை தீர்மானிப்பது .

 

 

ஓ  உலகம் எப்படி பார்க்கிறதோ அப்படி நாங்கள் பார்க்க வேண்டும் என்கிறீர்கள் போல.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடுதலைப் போராளியின் வரலாற்றுப் பெருமைகள் என்பது அவனுடைய தனிமனித பண்புகள் சார்ந்தும் உள்ளது. அதனை அழகுறச் சொல்லி இருக்கும் வாணனுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்க.

 

தலைவர் அன்று திட்டங்களாகச் செயற்படுத்தியதை இன்று பலர் கொப்பி பண்ணி செயற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவையும் தலைவரின் சிந்தனையின் பெறுதிகளே..!

 

தலைவர் மக்களின் நன்மைக்காகத் தான் அவற்றை செயற்படுத்தினார். அன்று அவர் செயற்படுத்தியதால் அவற்றை விமர்சித்தவர்கள் இன்று தாம் அந்த நிலையில் நின்று கொண்டு செயற்படுத்தும் போது நியாயப்படுத்திக் கொள்கின்றனர். இது தான் மனித இயல்பும் கூட. தான் சாதிக்க முடியாததை இன்னொருவன் சாதித்தால்.. போற்றிப் புகழ்வதை விட இகழும் மனிதர்களே அதிகம். அதனையே தான் சாதிக்கும் போது.. புகழ்ச்சியே வரனும் என்று விரும்புவான். ஆனால் தலைவர் இந்தச் சாராசரி மனித உணர்வுகளைத் தாண்டிய ஒரு உன்னத மனிதராக வாழ்ந்து காட்டினார் என்றால் மிகையல்ல..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

நன்றி வாணன் & நந்தன் பகிர்வுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் 90 or 91  எண்டு  நினைக்கிறேன்  அண்ணயை சந்திக்க  சென்றோம் .அப்போது எங்கள் வேலை ஒவ்வொரு மாவட்டமாக சென்று போராளிகளுக்கு  அரசியல்  படிப்பது ,போவதற்கு ஒழுங்கான

வாகன வசதி எதுவும் எங்களுக்கில்லை .நடந்தும்  வருகின்ற பொதுமக்களின் வாகனங்களில் ஏறியும் எங்களுக்குரிய இடத்தை சென்றடைவோம் .பொதுவான விஷயங்கள் கதைத்து முடியும் பொது

கேட்டார் ,உங்கள் போக்குவரத்து எப்பிடி எண்டு நாங்களும் உள்ளதைச் சொன்னோம் .உடனே அண்ணர்,யோகி அண்ணயை  பாத்து சொன்னார்  இப்பதானே  மண்ணெண்ணெயில்  ஊதி விளையாடுற 

சாமான் இருக்கு ,ஒழுங்கு செய்யுங்கோ எண்டு , அடுத்த நாள்  15 வாகனம்  வந்து இறங்கிச்சு

 

இது மட்டுமல்ல. தென்மராட்சியில் ஒரு விபத்து. அதில் ஒரு பள்ளிச் சிறுவனை இயக்க லொறி ஓட்டி வந்தவர் மதிலோடு நெரித்திக் கொன்று விட்டார். லொறி ஓட்டியவர் இயக்கம் அல்ல. தவறு இரு தரப்பிலும் இருந்தது.

 

இயக்கத்திற்கு பெற்றோர் கொடுத்த அழுத்தம் தலைவருக்குச் செய்தியாக எட்டியது. தலைவரின் நேரடி அறிவுறுத்தலின் பெயரில்..  சிறுவன் சம்பவ இடத்தில் அல்ல வைத்தியசாலையில் தான் இறந்தான்... அந்தக் காலவெளியில்.. அந்தச் சிறுவனின் பராமரிப்பு.. மருந்துகள் வழங்கல்.. என்று அவனுக்கு ஒரு போராளிக்குரிய மரியாதை கொடுக்கச் சொன்னார் தலைவர். பின்னர் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்து விட்டான். அவனுக்கு போராளிகளுக்குரிய மரியாதையோடு அடக்கம் செய்ய இயக்கமே உதவியது. பிரதேச தலைவர்கள் இறுதிச் சடங்கிலும் கலந்து கொண்டு பெற்றோரின் குறை நிறைகளை கவனிக்கப் பணிக்கப்பட்டிருந்தனர். அதன் பின் பெற்றோருக்கு மாவீரர் குடும்பத்திற்குரிய எல்லா சலுகைகளும் வழங்கப்பட்டன.

 

அடிப்படையில் தலைவர் அறியாமல் நிகழும் தவறுகள் சில இயக்கத்திற்கு சில சங்கடங்களை தந்திருந்தாலும்.. தலைவர் அறிய ஒரு சம்பவம் நடந்தால் அது உடனடி நீதிக்கும் தர்மத்திற்கும் அமைய தீர்வுகள் வழக்கப்படும் நிகழ்வுகளாக அமைந்ததே அதிகம்.

 

இன்னொன்று.. ஒரு அண்ணை. அவர் கள்வியங்காடு நல்லூரில் வசித்தவர். தான் கரும்புலியாக வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தார். வீட்டுக்கு ஒரேயொரு ஆண் வாரிசு அவர் தான். இரண்டு தங்கைகள். பெற்றோர் அந்த அண்ணைக்குத் தெரியாமல் தகவல் பெட்டி ஊடாக தலைவருக்கு செய்தியை சேர்ப்பித்தனர். சில மாதங்களின் பின் தலைவரின் நேரடி உத்தரவின் பெயரில் அவர் இயக்கத்தில் இருந்தே விடுவிக்கப்பட்டு பெற்றோரிடம் கையளிக்கப்பட்டார். ஆனாலும் அந்த அண்ணை இயக்கத்தை விட்டுப் போகமாட்டேன் என்று அடம்பிடித்து முகாமிலேயே போய் இருந்துவிட்டார். அவருக்குப் பின் உளவுப் போராளியாக இயக்கம் செயற்பட அனுமதித்தது..!

 

இப்படிப் பல சம்பவங்கள். தலைவரின் நேரடி கவனத்தைப் பெற்ற மக்களின் கஸ்டங்களுக்கு அவர் மிகுந்த அக்கறையும் மனிதாபிமானமும் காட்டி முடிவுகளை எடுத்தமை பல உதாரணங்களில் வெளிப்பட்டுள்ளது.

 

மேற்படி சம்பவங்கள் நாங்கள் அறிய நடந்த சம்பவங்களில் சில..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல் இன்னொரு சம்பவம். இந்த அண்ணை முக்கிய ஒரு போராளி. தென்மராட்சியை சேர்ந்தவர். படிப்பில் சுட்டி. மாத்தையா அவர்களின் தலைமையின் கீழ் இயங்கிய அணியில் செயற்பட்டவர். ஆனையிறவு ஆகாயக் கடல் வெளிச் சமரில் முக்கிய பங்கெடுத்தவர்.  மாத்தையாவின் துரோகம் வெளிப்பட்ட போது அந்த அணி கலைக்கப்பட்டது. துரோகத்திற்கு உதவியர்கள் தவிர மற்றவர்களை இயக்கம் இயக்கத்தில் இருந்து விடுவித்து வந்தது. அதன்படி மேற்படி போராளியையும் இயக்கம் விடுவித்தது. அதனால் அவருக்கு ஒரே மன உளைச்சல். இச்செய்தியை அவர் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். அதன் பின் தலைவரின் நேரடி அறிவுறுத்தலின் கீழ் அவர் அரசியல்துறைப் போராளியாக உள்வாங்கப்பட்டிருந்தார். அதுவும் தண்ணி சாப்பாடு இல்லாமல் ஆனையிறவில் போரிட்டு.. சிறுநீரகங்களில் ஒன்று பாதிப்படைந்த நிலையிலும்.. இயக்கம் அதை சுட்டிக்காட்டி அவரை குடும்பத்தோடு இணையக் கேட்ட போதும்.. அவரின் வேண்டுகோளை மதித்து தலைவர் மீண்டும் அவரை இயக்கத்தில்.. ஏற்றுக் கொண்டிருந்தார்..!

Edited by nedukkalapoovan

தலைவரைப் பற்றீ சொல்ல வார்த்தைகளே இல்லை ஆனால் அவரை வைத்துப் பிழைக்கும் துரோகிகள்,எதிரிகள விட அவரால் வளர்க்கப்பட்டவர்களே அதிகம்

சாயிபாபா பக்தர்கள் ரேஞ்சிற்கு போகுது நெடுக்கரின் பதிவுகள் .

  • கருத்துக்கள உறவுகள்

சாயிபாபா பக்தர்கள் ரேஞ்சிற்கு போகுது நெடுக்கரின் பதிவுகள் .

 

பஜனை வைக்கிறோம் என்று சொல்லுறீயளோ?....இரண்டு பேரும் மக்களின் நாயகன் ஆகிவிட்டார்கள் .மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்கள் ஒருவர் தேசிய நாயகன் மற்றவர் ஆத்மீக நாயகன்......என்னதான் குத்துக்கரணம் அடித்தாலும் இருவரையும் டமிழ்மக்களின் மனதிலிருந்து அசைக்கமுடியாது.... :D

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

சாய் பாபா போல தலைவர் ஒன்றும் மாஜாயால வித்தை காட்டும் கதையல்ல இவை. எம் கண் முன்னால் நடந்த நிதர்சனங்கள். சில பேருக்கு சில மனிதர்களை அசுரர்களாக விபரிச்சால் தான் ரசிக்கும் ஒரு வகை மன நோய் உள்ளது. அது புராண காலம் தொட்டுத் தொடர்கிறது. அவர்கள் அதில் இருந்து இறங்கி வந்து நிதர்சனத்தைப் பார்க்கனும். இல்லாவிட்டால்.. திட்டித் திட்டி திட்டலிலேயே வாழ்வும் ஓய்ந்திடும்..!

 

மக்கள் தலைவராக ஒருவரை சும்மா ஏற்கவில்லை. அவர் மக்கள் முன் அப்படி வாழ்ந்து காட்டியதால் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் களத்தில் இல்லாத போதும் அது தெளிவாக உணரப்படுகிறது. இது கண்டு சில குரோதமனநிலையில் உள்ளோருக்கு மனசு வேகுது. அதில் இருந்து விடுபட... அவர்கள் தான் தம்மை மாற்றிக் கொள்ளனும். மக்கள் அல்ல..! :lol::)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

கருத்துக்களை  பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி

 

தலைவர் பற்றிய  சம்பவங்களை பகிர்ந்து கொண்ட நெடுக்ஸ், நந்தன் ஆகியோருக்கு நன்றி. இது போன்று யாழ் குடும்பத்திலுள்ளவர்களும் தங்களுக்குத் தெரிந்த புதிய உண்மைச்சம்பவங்களை பதிவு செய்தால் தலைவரின் பல்வேறு பண்புகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பிருக்கினறது. எப்போதும் தலைவரைப்பற்றி அறிவதற்கு   “தேசியத்லைவரைப்பற்றி....!“  என்ற இந்தத்தலைப்பு ஒரு அடித்தளத்தைக் கொடுத்தால் நல்லாயிருக்கும். அவரைப்பற்றிய தனியொருவரால் சொல்லிவிட முடியாது. கூட்டுமுயற்சியாக தெரிந்தவர்கள் எல்லோரும் பதியத்தொடங்கினால் புதிய பல விடயங்கள் வெளிப்படும்.

 

நன்றி

Edited by வாணன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.