Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போத்தல் பித்தளை அலுமினியம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போத்தல் பித்தளை அலுமினியம்.

இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது.

பேத்தில் பித்தளை அலுமினியம். இந்த சத்தத்தை ஊரில் கேட்காதர்களே இருந்திருக்க மாட்டீர்கள். ஒரு சைக்கிளில் பின்னால் இரண்டுபக்கமும் சாக்கு அல்லது உரப்பையை கட்டியபடி போத்தில் பித்தளை அலுமினியம் இருக்கா என்று கத்தியபடியே வருவார்கள்.வீடுகளில் உள்ள பழைய உபோகிக்க முடியாத இரும்பு பித்தளை சாமான்களை நிறுத்து வாங்கி கொண்டு போவார்கள்.சிலர் பண்டமாற்று முறையில் வாங்கிய பொருட்களிற்கு பிளாஸ்ரிக் அல்லது அலுமினிய பாத்திரங்களை தருவார்கள். முன்னர் யாழ்சோனதெருவில் வசித்துவந்த சோனகர்களே பெரும்பாலும் இந்த வியாபாரத்தை செய்தனர்.இப்படி வேறு சில வியாபாரிகளின் கூவல் சத்தங்களையும் ஊரிலை கேட்கலாம் ஆடு இரிக்கா ஆடு.பழையகோட்.இப்பிடி இன்னும். அடுத்ததாய் மீன்வியாபாரிகளும். ஜஸ்பழவியாபாரிகளும் கோண் அடிப்பார்கள் அல்லது மணியடித்தபடி வருவார்கள்.

இதில் இந்த ஜஸ்பழம்தான்தான் இந்தவாரத்து கதை.ஜஸ்பழம் எண்டதும் வாயூறாத ஆக்களே இருக்க முடியாது அதுவும் புலம்பெயர்ந்து வாழுறவைக்கு ஜஸ்பழம் எண்டதும் ஊர் கோயில்திருவிழா அல்லது வேறை அதோடை சம்பந்தபட்ட மறக்கமுடியாத சம்பவம் கனக்க ஞாபகத்துக்கு வரும்.அதுமாதிரித்தான் எனக்கு ஒரு நினைவு. ஊரிலை நான் முதல் சொன்னது போலை சைக்கிளில் பின்னுக்கு ஒரு பெட்டிகட்டி அதில் ஜஸ்பழத்தை வைத்து வித்துகொண்டு வருவார்கள் பெட்டியில் கலர்கலராய் படம்கீறி அந்த ஜஸ்பழகொம்பனியின் பெயரும் எழுதியிருக்கும்.உள்ளை ஜஸ்பழமும் கலர்கலாய் இருக்கும். இதிலை கொஞ்சம் விசேசமானது ஜஸ்சொக் கொஞ்சம் விலையும் கூடுதல்.இந்த ஜஸ்பழ சைக்கிள் வியாபாரியள் சாதாரமாக ஒவ்வொருநாளும் ஊரிலை வலம் வருவினம். அடுத்ததா வாகனத்திலையும் வருவினம் இந்த வாகனகாரர் அனேகமா ஏதாவது நல்லநாள் பெருநாளிலைதான் ஊருக்கை வலம் வருவினம்.இல்லாட்டி கோயில் திருவிழாக்கள் பள்ளிக்கூட விழையாட்டு போட்டிஇப்பிடி ஏதாவது நிகழ்ச்சி நடக்கிற இடங்களிலை காணலாம்.

இந்த வாகனத்தை சுத்தி கலர் ரியூப்லைற் பூட்டி சின்ன ஸ்பீக்கரும் பூட்டி அதிலை சினிமா பாட்டைபோட்டுகொண்டுதான் வருவினம். அவையின்ரை ஸ்பீக்கரிலை பாடுற சினிமாபாட்டை செளந்தர்ராஜனும்.பி.சுலாவும் பாடியிருந்தாலும் அதிலை வாற சத்தம் இரண்டு பேரின்ரை குரலும் ஒரேமாதிரி வித்தியாசம் கண்டு பிடிக்கேலாத குரலாதான் கேக்கும்.ஆனாலும் பாட்டு என்ன பாட்டு எண்டு விளங்கும்.அதைவிட ஜஸ்பழவானின்ரை டீசல் இஞ்சின்வேலைசெய்யிற சத்தம் பாட்டுச்சத்தத்துக்கு மேலாலை கேக்கும்.சின்னவயசிலை ஜஸ்பழம் வாங்கிகுடிக்கிறதெண்டது ஒரு போராட்டமானவிசயம். ஏணெண்டால் ஊரிரை சாதாரணமா குடும்பங்கள் எல்லாத்திலையும் குறைஞ்சது அஞ்சு அல்லது ஆறு பிள்ளையள் இருப்பினம். இதிலை வருமானத்ததை கணக்கு பாத்து வாழுகின்ற நடுத்தரக்குடும்பங்களிலை கிழைமைக்கு ஒருக்கா எல்லா பிள்ளைகளிற்கும் ஜஸ்பழம் வாங்கி குடுக்கிறதெண்டால் கட்டுபடியாகாத விசயம்.

எனவே நடுத்தரகுடும்பங்களிலை உள்ள பிள்ளையளிற்கு ஊர் கோயில் கொடியேறினால் இல்லாட்டி தீபாவளி வருசத்துக்குதான் ஜஸ்பழம். இல்லாட்டி தூரத்து உறவினர் யாராவது வீட்டுக்குவந்திட்டு போகேக்கை கையிலை தாற சில்லறை அதுவும்இல்லாட்டி வீட்டிலை இருந்து மல்லிப்பேணி. உள்ளிப்பேணிக்கை அம்மா இல்லாட்டி அம்மம்மா வைக்கிறகாசிலை சில்லறையை களவெடுத்தால்தான்(உள்ளதை சொல்லதானே வேணும்) ஜஸ்பழம் குடிக்கலாம். அப்பிடி ஜஸ்பழத்தை வாங்கி குடிச்சு முடிஞ்சாலும் கடைசியா இருக்கிற தடிக்குச்சியையும் சூப்பி அதை சப்புசப்பெண்டு சப்பி அது முரசிலை குத்தி ரத்தம் வந்தாலும் கவலைப்படாமல் சப்பி தும்பாக்கி தான் எறிவம்.இப்பிடி சின்னவயசிலை நாங்கள் ஜஸ்பழம் குடிக்க படுகிற கஸ்ரங்களை பாத்து ஜஸ்பழவியாபாரியள் எல்லாருமா சேர்ந்து எங்கடை நெஞ்சிலை ரின்பாலை வாக்கிறமாதிரி ஒரு திட்டத்தை கொண்டு வந்திச்சினம்.அதாவது ஜஸ்பழவியாபாரியளும் போத்தில் பித்தளை இரும்புசாமானை வாங்கிகொண்டு அதுக்கு மாற்றீடா பண்டமாற்று முறையிலை ஜஸ்பழம் தருவினம் .

ஆனால் என்ன நாங்கள் எந்த விலையான பெருளை குடுத்தாலும் அதுக்கு விலை நிர்ணயம் கிடையாது ஒரு ஜஸ்பழம்மதான் கிடைக்கும். எங்களுக்கு அது போதும் தானே.இனி விசயத்துக்கு வாறன் அப்ப எனக்கொரு 10 வயது இருக்கும் ஒருநாள் பின்னேரம்வீட்டிலை நானும் தங்கையும்தான் என்ரை சின்னவயது நணபன் இருள்அழகனும் ஒழிச்சு பிடிச்சு விழையாடிக்கொண்டு நிண்டனாங்கள் அந்த நேரம் ஜஸ்பழகாரனின்ரை மணிச்சத்தம் கேக்க இருள்அழகன் அவசரமாய் ஓடினான் கொஞ்ச நேரத்தாலை கையிலை ஜஸ்பழம்குடிச்சபடி வர. எங்காலை காசு எண்டு நான் கேட்கவும் அவன் சொன்னான் காசு தேவையில்லை நான் வீட்டிலை இருந்த அலுமினிய பானையை குடுத்து வாங்கினனான் எண்டான். அப்பதான் எனக்கு மூளை வேகமாக வேலை செய்தது ஓடிப்போய் வீட்டிலை பழைய பாவிக்காத சாமான் ஏதாவது இருக்கா எண்டு தேடினன் கிடைக்கேல்லை ஜஸ்பழகாரனின் மணிச்சத்தம் தூரமாக போய்கொண்டிருந்தது அவசரத்துக்கு பாவமில்லை எண்டு கழுவி கவிட்டு வைத்திருந்த பித்தளை தேத்தண்ணி கேத்திலின்ரை மூடியை தூக்கி கொண்டோடிப்போய் ஜஸ்பழகாரனிட்டை குடுக்க அவனும் ஒரு ஜஸ்பழத்தை தந்தான்.

பின்னாலையே தங்கை தனக்கும் ஜஸ்பழம் வாங்கித்தரசொல்லி அழுதபடி ஓடிவரவே என்ன செய்யலாமென யோசித்த நான் மூடியே இல்லை பிறகென்னத்துக்கு கேத்தில் என நினைச்சு கேத்திலையும் தூக்கிகொண்டோடிப்போய் ஜஸ்பழகாரனிட்டை குடுக்க அவனும் ஏதோ லொத்தோ விழுந்த சந்தோசத்திலை சிரிச்சபடி ஒரு ஜஸ்பழத்தை தந்தான்.நாங்கள் ஜஸ்பழத்தை குடிச்சு முடிஞ்சு தடியை சப்பிக்கொண்டிருக்கவே வெளியிலை போயிருந்த அம்மா வந்து எங்களை பாத்திட்டு என்னட்டை ஜஸ்பழம் எங்காலை ஆர் வாங்கி தந்தது எண்டு கேட்டார். அந்த வயசிலை திட்டம் போட்டு பொய் சொல்ல தெரியாதுதானே நானும் மாமா வாங்கிதந்திட்டு போனவர் எண்டு சொல்ல அம்மாவும் பேசாமல் போய் வெளியாலை போய் வந்த களைப்பிற்கு தேத்தண்ணி போட கேத்திலை தேடினார். கேத்திலை காணமால் என்னைக்கூப்பிட்டு கேத்தில் எங்கை எண்டு கேக்கவும் நானும் பயத்திலை முழுசதொடங்க தங்கச்சி உடைனையே அம்மாதரப்பு சாட்சியாய் மாறி கேத்தில் ஜஸ்பழமாய் மாறியதை சொல்லி அப்புறூவர்ஆகி விட்டாள்.பிறகென்ன வேலியில் நின்ற பூவரசம் தடியொன்று அம்மாவின் கைகளிற்கு மாறி என்மீது விழையாடியது.

அது முடிய அம்மா என்ரை கையிலை காசை தந்து மரியாதையாய் ஓடிப்போய் ஜஸ்பழகாரன் எங்கை நிண்டாலும் தேடிப்பிடிச்சு காசை குடுத்திட்டு கேத்திலை வாங்கிகொண்டுவா என கலைச்சு விட்டார்.நானும் அழுதபடி ஜஸ்பழகாரனை தேடி இருள்அழகன் வீட்டை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் போது அய்யோ அய்யோ எண்டு இளுள்அழகனின்ரை அலறல் சத்தம் கோட்டது ஏணெண்டால் இருள்அழகன் ஜஸ்பழகாரனிட்டை குடுத்தது அவங்கடை வீட்டு புட்டுபானையை. :icon_idea::icon_idea:

ஓ சாத்திரி நீங்களும் சிறுவயதில் ஐஸ்பழம் குடிக்க இவ்வளவு கஸ்டப்பட்டு இருக்கிறீங்களா?

நாங்கள் இப்படியான அகாலவேளைகளில வீட்டில் செய்வது துணிகரமான களவுதான். ஆபத்துக்கு பாவம் இல்லை.

அம்மாவின் பேர்ஸ் சாமிப்படத்திற்கு பின்னால்தான் வழமையாக இருக்கும். அப்பாவின் பேர்ஸ் அப்பா கடைசியாக போட்ட காற்சட்டை பொக்கற்றினுள் இருக்கும். எது இலகுவாக வசதிப்படுகிதோ அங்கிருந்து சில சில்லறைகளை களவாடுவோம்.

பேர்சினுள் சில்லறை காசு எவ்வளவு வைத்தோம் என்று அம்மா, அப்பாவிற்கு தெரிந்து இருக்காது. எனவே சில்லறையை திருடினாலும் பிரச்சனை இல்லை. ஆனால், தாள் காசில் கைவைத்தால் பிடிபட்டு விடுவோம். ஓரிருமுறை பிடிபட்டு அடிவாங்கி உள்ளோம். அது ஐஸ்பழம் போல் அல்ல்லாது கொஞ்சம் பெரிய புரஜக்ட்டிற்கு திருடியபோது பிடிபட்டது.

சிலவேளைகளில் அம்மா சாமிமேசைக்கு கிட்டபோனால் என்ன விசயம் என்று கேட்பா. சும்மா பார்க்க வந்ததாய் சொல்லிவிட்டு அப்பாவின் பேர்ஸை தேடிபோவோம். இரண்டு வழியும் சரிவராவிட்டால் அத்துடன் முயற்சியை கைவிட்டுவிடுவோம். சிலவேளைகளில் அக்காமாரிடம் கடன் கேட்பது. எங்கள் திருட்டு புத்தி அறிந்து அக்காமார் காசை எப்போதும் ஒளித்துத்தான் வைப்பார்கள்.

தூரத்தில் ஐஸ்பழகாரனின் மணிச்சத்தம் கேட்கும்போதே உசாராகிவிடுவோம். நாங்கள் காசை திருடி ரெடி பண்ணி முடிப்பதற்குள் அவன் எமது வீட்டை தாண்டி சென்றுவிடுவான். எனவே, வழமையாக ஐஸ்பழக்காரனை துரத்திப்பிடித்துதான் ஐஸ்பழம் வாங்குவது.

இங்கு வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளிற்கு ஐஸ்பழம், உணவு, காசின் மகிமை தெரியாது. எல்லாவற்றையும் கொட்டிச் சிந்தி விளையாடுங்கள்.

இப்ப உங்கட பழைய ஆசையை போக்க ஒரு ஐஸ்கிரீம் கடையை பிரான்ஸில் ஓப்பின் செய்யலாமே?

:icon_idea: நகைச்சுவையா எழுதி இருக்கின்றீங்க ......

எப்பவாவது களவெடுப்பது பின்னர் திருட்டு முழி முழித்து பிடிபட்டு விடுவேன் ... அனேகமாக அடம்பிடித்து அழுது புரண்டு வாங்கிடுவன்.... ஊர் ஐஸ்கிறீம் இப்ப நினைத்தாலும் வாயூறூது.... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி கதை தூள் கிளப்புது நான் பக்கத்துவீட்டு பிலா பழத்தை விற்று ஜஸ்கிரிம் குடித்தி இருக்கிறேன். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாகனத்தை சுத்தி கலர் ரியூப்லைற் பூட்டி சின்ன ஸ்பீக்கரும் பூட்டி அதிலை சினிமா பாட்டைபோட்டுகொண்டுதான் வருவினம். அவையின்ரை ஸ்பீக்கரிலை பாடுற சினிமாபாட்டை செளந்தர்ராஜனும்.பி.சுலாவும் பாடியிருந்தாலும் அதிலை வாற சத்தம் இரண்டு பேரின்ரை குரலும் ஒரேமாதிரி வித்தியாசம் கண்டு பிடிக்கேலாத குரலாதான் கேக்கும்.ஆனாலும் பாட்டு என்ன பாட்டு எண்டு விளங்கும் :icon_idea::icon_idea::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா இப்பதான் கனபேரின்ரை விசயம் வெளியிலை வருகிது. :lol:^_^ கலைஞன் கௌரிபாலன் புத்தன் நுணாவிலான் கருத்துகளிற்கு நன்றிகள்.புத்தன் எங்கடை வீட்டு வனவுக்கை அடிக்கடி பிலாக்காய் களவு போறது இப்பதான் விசயம் விழங்கிது. :icon_idea::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் யதார்த்தமாக,நகைசுவை இழையோடியுள்ள இக்கதை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.நன்றி சாத்திரி.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஐஸ்பழம் வாங்கினது போத்தல் பித்தளை காலத்துக்கு அப்புறம். நாங்கள் குறித்த ஒரு காலத்துக்குப் பிறகு வசிச்சது யாழ் நகரில் கோட்டையை அண்டி. அங்குதானே ஒரே சண்டை. கெலி வந்து அடிக்கும். அவன் 50 கலிபர் சன்ன வெற்றுக் கோதுகளை கொட்டிவிட்டு போவான். சிலவேளை லிங்களோட கூட விழும்.

வீட்டுக் கூரைகளில் விழும் சத்தத்தை வைத்து தேடுதல் வேட்டை ஆரம்பமாகும். ஒரு 50 கலிபர் கோது 1 ரூபாக்கு போத்தல் பித்தளை பேப்பர் கடையில விற்பம் (மணிக்கூட்டு வீதியில புட்டுச்சந்தியில இருக்கு அந்தக் கடை. இப்ப இருக்கோ தெரியல்ல). LMG வெற்றுச் சன்ன கோதுகள் 50 சதம். AK கோது 25 சதம். செல் fan (செல்லின் பின் பகுதியில் உள்ள விசிறி) 50 சதம்.

அதுமட்டுமன்றி பாடசாலை நண்பர்களிடையேயும் இந்த வியாபாரம் நடக்கும். அங்கு கேள்வியைப் பொறுத்து வெற்றுக் கோதுகளின் பெறுமதி 5 ரூபா வரை உயரும். இப்படி வாற பணத்தை சேர்த்து வைத்து நூலகம் நடத்தினம். அதில அங்கத்துவமாக ஆளுக்கு 5 ரூபா மாதத்துக்கு கட்டணும். அதுகளை எடுத்து எங்கள் செலவைக் கவனிக்கிறதுதான்..!

இங்கு வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளிற்கு ஐஸ்பழம், உணவு, காசின் மகிமை தெரியாது. எல்லாவற்றையும் கொட்டிச் சிந்தி விளையாடுங்கள்.

ஊரில நாங்கள் பெற்றோரை எதிர்பார்க்கிறது குறைவு. ஆனால் வெளிநாட்டில சின்னப் பிள்ளைகள் குறிப்பா தமிழ் பிள்ளைகள் பெற்றோரை எதிர்பார்த்திட்டுத்தான் இருப்பினம். குழப்படியும் அதிகம். குழப்படியைக் குறைக்க சாப்பாட்டை அள்ளிக் கொடுக்கிறது. விளையாட்டுச் சாமானை வாங்கி வீசுறது. அதுகளும் நாளுக்கு ஒன்று என்று அவற்றின் அருமை தெரியாம இருக்குதுகள். எங்களுக்கெல்லாம் ஒரு விளையாட்டுக் கார் வாங்கித் தாறதெண்டா கோயில் திருவிழா வரணும். அப்படி வாங்கித் தந்திட்டா அப்புறம் அந்த ஐரம் கிடையாது. சோ நாங்க வாங்கித்தாற ஒரு பொருளை பாதுகாக்க அதன் மீது கவனமெடுக்க பழகிக் கொண்டம்.ஆனா இங்க பிள்ளைகள் பழுதாக்கிப் போட்டு.. அடுத்ததில கைவைக்க பெற்றோருக்கு வேற வழியில்லாமல் புதிசை வாங்கிக் கொடுக்கினம்.

நான் எப்பவன் இருந்திட்டு ரி வி கேம்ஸ் எல்லாம் மணிக்கூட்டுச் சந்தியில உள்ள நியுவிக்ரேர்ஸ் போய் விளையாடுவன். எனக்கு ஒரு ரி வி கேம் கைக்கு வந்திச்சுது. நான் அதை கிட்டத்தட்ட ஆண்டு 7 இல் இருந்து ஏல் வரை வச்சிருந்தன். ஆனா வெளிநாட்டில உள்ள பிள்ளைகள் கேம் அப்கிரேட் ஆகுதோ இல்லையோ மாதத்துக்கு ஒன்று என்று கேட்குதுகள். ஸ்கூலில ஒருத்தன் கொஞ்சம் புதிசா கொண்டு வந்திட்டா அது இவைக்கும் வேணும்.

பொதுவா புலம்பெயர் நாடுகளில வளருற பிள்ளைகளுக்கு பணம் மற்றும் பொருட்களின் பெறுமதி தெரிவதில்லை. பெற்றோரும் அதைப் பற்றிக் கவலைப்படுறதில்லை. ஆனால் இது ஆபத்தான ஒரு அம்சம். நாளை இந்தப் பிள்ளைகள் பெற்றோரின் பெறுமதியை என்றாலும் உணருங்களா என்பதுதான் கேள்விக் குறி..??! இதையேன் இங்க சொல்லுறன்னா யாழிலும் குடும்பமான பெற்றோர் இருக்கிறீங்க. உங்கள் பிள்ளைகள எப்படி திட்டமிட்டு வளர்க்கிறீங்க இல்ல வளர்க்கப் போறீங்க என்பதில கவனம் செலுத்துங்க. பிள்ளை வளர்ப்பு என்பதும் ஒரு கலை தான். அதை ஏதோ பெத்தம் வளர்த்தம் என்று வளர்த்தீர்கள்.. வெட்டையில் போட்ட விதையாகி பயனற்றும் போகலாம்..! :icon_mrgreen::icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நண்பரே, நல்ல பதிவு. இளமையை மீண்டும் மீட்டு வாழ துணைசெய்கிறீர். ஒரு நாவல் முயற்ச்சியில் இருப்பதால் உங்கள் எழுத்துக்களில் பயனுள்ள வகையில் காலத்துள் பயணிக்க முடிகிறது. நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதிய நெடுக்ஸ் மற்றும் poet ஆகியோரிற்கு நன்றிகள் :icon_mrgreen::icon_mrgreen:

சாத்திரி அங்கிள் கதை நல்லா இருக்கு ஆனா நேக்கு ஒரு சந்தேகம் அது தான் கடைசியா அந்த கேத்திலை ஜஸ்பழகாரனிட்ட இருந்து எடுத்துவிட்டீங்களோ இல்லையோ :lol: அது தெரியாம நேக்கு நித்தா வருது இல்லை :D ஆனாலும் சாத்திரி அங்கிளின்ட வாழ்கையில எத்தனை சோகமான பிளாஸ்பக் :lol: அடுத்த பிளாஸ்பக்கை வாசிக்கும் ஆவலில்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

அதுதானே கேத்தலை கைப்பற்றினீர்களா? பக்கத்து வீட்டு இருளழகனின் பானை கிடைத்ததா இல்லையா?

நெடுக்கு, உங்கட கதை ஏதோ என்னை உளவு பார்த்து எழுதின மாதிரி இருக்கு!

ஆனா ஒரு சின்ன வித்தியாசம், எனக்கு தெரியாது அந்த தோட்டா கோதுகளை விற்று காசாக்கலாம் என்கிற விசயம். ஒரு முறை ஒரு 50 கலிபர் கோது ஒன்றுக்கு ஒரு காந்தம் போட்ட பென்சில் பெட்டி பண்டமாற்று செய்ததாக ஞாபகம்.

நீயூவிக்டேர்ஸ், ஸ்டான்லி றோட் - லிங்கம் கூல்பார், ஆஸ்பத்திரி றோட் - பூபாலசிங்கம் புத்தகக்கடை, ராணி கொமிக்ஸ், லயன் கொமிக்ஸ், வீட்டு காமிக்ஸ் நூலகம் என்பனவற்றை மீளவும் நினைவூட்டியமைக்கு நன்றி.

மீண்டும் ஊருக்கு போகலாம்.....

நம்மை நாமங்கே தேடலாம்......

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே கேத்தலை கைப்பற்றினீர்களா? பக்கத்து வீட்டு இருளழகனின் பானை கிடைத்ததா இல்லையா?

நெடுக்கு, உங்கட கதை ஏதோ என்னை உளவு பார்த்து எழுதின மாதிரி இருக்கு!

ஆனா ஒரு சின்ன வித்தியாசம், எனக்கு தெரியாது அந்த தோட்டா கோதுகளை விற்று காசாக்கலாம் என்கிற விசயம். ஒரு முறை ஒரு 50 கலிபர் கோது ஒன்றுக்கு ஒரு காந்தம் போட்ட பென்சில் பெட்டி பண்டமாற்று செய்ததாக ஞாபகம்.

நீயூவிக்டேர்ஸ், ஸ்டான்லி றோட் - லிங்கம் கூல்பார், ஆஸ்பத்திரி றோட் - பூபாலசிங்கம் புத்தகக்கடை, ராணி கொமிக்ஸ், லயன் கொமிக்ஸ், வீட்டு காமிக்ஸ் நூலகம் என்பனவற்றை மீளவும் நினைவூட்டியமைக்கு நன்றி.

மீண்டும் ஊருக்கு போகலாம்.....

நம்மை நாமங்கே தேடலாம்......

நான் பலமுறை விற்றிருகிறேன். நான் குறிப்பிட்ட கடையில் எடுப்பார்கள். கோர்வையாகக் கூட வைச்சிருந்தன். இந்தியன் ஆமியோட சண்டை தொடங்க சொப்பிங் பாக்கில போட்டு வெட்டிப் புதைச்சன். புதைச்ச இடம் ஞாபகமிருக்கு.. ஆனா போகத்தான் வழியக் காணம்..! :lol:

மீண்டும் ஊருக்கு போகலாம்.....

நம்மை நாமங்கே தேடலாம்......

நான் ஸ்ரான்லி றோட்டில் விக்னா ரியுசன் சென்ரரில கொஞ்சக் காலம் படிச்சிருக்கன்.அப்புறம் ரியுசன் விட்டிட்டு வீட்டில படிச்சன். அப்புறம் மீண்டும் யுனிவேர்சல் (கந்தர்மடம்) தான். அப்ப ஐங்கரநேசன் சேர் நம்ம தோஸ்து. இப்ப அவர் லண்டனில அருவி என்ற பேப்பர் நடத்துறார் போல..! ஒருவேளை நீங்க அங்க கூட நம்ம தோஸ்தாக இருந்திருக்கலாம்..! :lol::lol:

ஒரு முறை நான் சேர்த்து வைச்ச சொத்தையெல்லாம் பொலித்தீன் பையில போட்டு புதைச்சு பிறகு அடுத்தநாள் அடை மழையோட காணமல் போய் நான் பட்ட துன்பம் எனக்கெல்லோ தெரியும்!

என்ன யுனிவேர்சலோ? அப்ப கிட்டவந்திட்டிங்கள் போல! காணும் இனி இத்தோட நிறுத்துவம், முகமூடியோட இருக்கிறதிலயும் ஒரு சுகம் இருக்குதானே.

அது சரி உங்கடை வயசு உதைக்குதே?

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உங்கடை வயசு உதைக்குதே?

எல்லாம் 90 களில நடந்து முடிஞ்சுது. இப்ப எனக்கு வயசாகிட்டுது.. இப்ப வயது 95+ தானே...! :)

ஹாஹா இந்த சாத்ரி தாத்தாவோடை சேர்ந்து இருளழகன் பாவம்.

ஐஸ்கிறீம் குடிச்ச பின்னர் கேத்தலைக்காணாமல் அடி வாங்கி அழுததை விட ஐஸ்கிறீம் குடிக்காமலே இருந்திருக்கலாம்.

நகைச்சுவையாக சொல்லிச்சென்ற கதை சூப்பர் தாத்தா,

  • கருத்துக்கள உறவுகள்

உங்க வாழ்க்கையில நடந்ததை அழகாய் கதையா சொல்லியிருக்கிறீங்க சாத்திரி .

இப்படி எப்படி அழகாய் எழுதமுடியுது உங்களால் எண்டு அடிக்கடி நினைச்சு பார்ப்பேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியாரின் கதை எனது பழசுகளையெல்லாம் கிளறிவிட்டது.ஐஸ்பழம்,ஐஸ்சொக் இவற்றுக்காக நான் தேங்காய்,செத்தல்மிளகாய் என்பவற்றை பண்டமாற்று செய்திருக்கின்றேன் :wub:

எனது தாயார்:டேய் தம்பி உந்த ஐஸ்பழம் ஒண்டையும் குடிக்காதையடா.....உவங்கள் சங்கக்கடையளிலை நிலத்திலை கொட்டிக் கிடக்கிற சீனியை கூட்டி அள்ளித்தான் ஐஸ்பழம் செய்யிறவங்கள் :lol:

Edited by குமாரசாமி

ஓம் கு.சா அண்ணா. அவர்கள் விற்கும் ஐஸ்பழங்கள் நல்லவை என்று கூறுவதற்கு இல்லை. குடிக்கும்போது இனிப்பாக இருக்கும் அவ்வளவுதான். ஆனா, எப்படி செய்யுறீனம், எதைப்போட்டு செய்யுறீனம் என்பது மர்மமாகத்தான் இருக்கும். சீனி என்று சொல்லிவிட்டு சகரின் போட்டாங்களோ எதப்போட்டாங்களோ யாருக்கு தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் கதை எனது பழசுகளையெல்லாம் கிளறிவிட்டது.ஐஸ்பழம்,ஐஸ்சொக் இவற்றுக்காக நான் தேங்காய்,செத்தல்மிளகாய் என்பவற்றை பண்டமாற்று செய்திருக்கின்றேன் :wub:

நீங்களும் நம்மடி விளையட்டு தான் விட்டிருக்கிறீர்கள். எங்கள் வீட்டிலும் தேசி மற்றும் தென்னை நிறைய உண்டு. அதனால் வீட்டில பெரிசா கணக்கு தெரியாது. But நாமள் சீப்பா எல்லாம் குடுக்க மாட்டோம். 10 தேசிக்காய சந்தியில மரக்கறி விக்கிற லட்சுமி அக்காட்டையோ, ராசம்மா அக்காட்டையோ போய் அம்மா ஒரு ரூபா படி குடுக்க சொன்னவா எண்டு சொல்ல அவை 10 ரூபா தருவினம். அதே போல சோடாப் போத்தில ஜஸ்பழ காறனுக்கு குடுத்தால் 1 ரூபா குச்சி ஜஸ்தான் தருவான். நான் சங்க கடை மனேச்சரிட்டை போய் "அண்டைக்கு கழிச்ச 5ரூபாவ தாங்கோ" எண்டு போத்தல குடுக்க அவரும் 5 ரூபா தருவார். பிறகு அப்பர் போத்தலுகளை காணஇல்லை எண்டு தேடுறது வேற கதை. ஆனாலும் செய்த பாவம் எண்டால் தம்பிமார் சல்லிமுட்டியில போடுற காசை காம்புசத்தகத்தால தட்டி எடுக்கிறது. இல்லையெண்டால் "நான் 3 காசு தாறேன் நீ ஒரு காசு தா" எண்டு 3 - 50 சத குத்திய குடுத்து 5 ரூபா குத்திய வாங்கிறது. (இப்ப நினைச்சால் சிரிப்பு தான் வரும்.) அதே போல மில்லில ஏதாவது திரிச்சு வர தருவினம். எல்லாம் சொந்த தோட்டத்தில விளையுறதால நிறுக்காம தான் உர பாக்கில போட்டு தர இருந்ததை விட 2கிலோ கூட கிடந்தது எண்டு சொல்லி 2 கி லோ திரிக்கிற கூலிய வசூல் பண்ணுவோம்.

சாத்திரியின்ர கதைய வாசிச்ச பின் 2 நாளா பழைய நினைவுகள் எல்லாம் மனத்திரையில் ஓட, நம்ம பையன் நமக்கு என்ன என்ன திருகுதாளம் பண்ண போறானோ எண்டு வேற யோசிக்க வேண்டி இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்க வாழ்க்கையில நடந்ததை அழகாய் கதையா சொல்லியிருக்கிறீங்க சாத்திரி .

இப்படி எப்படி அழகாய் எழுதமுடியுது உங்களால் எண்டு அடிக்கடி நினைச்சு பார்ப்பேன் .

கப்பியக்கா உங்களை மனசிலை நினைச்சதும் கதை அருவிபோலை தானா கொட்டுது. ஒரு வாளியிலை அள்ளிகிங்க. :lol::o

வெண்ணிலா உங்கள் கருத்திற்கு நன்றி :lol: குமாரசாமி சபேஸ் ஆகியோர் என்னுடைய கதை மீண்டும்உங்கடை பழைய ஞாபகங்களை அசை போட வைத்ததையிட்டு மகிழ்ச்சி பழைய சம்பவங்களை நினைத்து பார்ப்பதே ஒரு சுகம்தானே. :D:huh:

  • கருத்துக்கள உறவுகள்

கப்பியக்கா உங்களை மனசிலை நினைச்சதும் கதை அருவிபோலை தானா கொட்டுது. ஒரு வாளியிலை அள்ளிகிங்க. :lol::o

வெண்ணிலா உங்கள் கருத்திற்கு நன்றி :lol: குமாரசாமி சபேஸ் ஆகியோர் என்னுடைய கதை மீண்டும்உங்கடை பழைய ஞாபகங்களை அசை போட வைத்ததையிட்டு மகிழ்ச்சி பழைய சம்பவங்களை நினைத்து பார்ப்பதே ஒரு சுகம்தானே. :D:huh:

ஐயே................

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாள் ஞாபகம் .............ஆனால் நாங்கள் கொடுத்து வாங்கியது அடுத்தவன் பானைகள் வேலி கம்பில் கவிழ்த்து விடப்பட்டிருக்கும் அப்போது சுட்டு கொள்வதுதான் சாத்திரி :):unsure:

நல்ல நகைச்சுவையான கதை

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி! உங்களுக்குத் தெரியுமா, ஒரு சதுர வண்டிலில் ஐஸ்பழத்துக்குரிய பொருள் எல்லாம் வைத்து தள்ளிக் கொண்டு வருவினம். நாங்கள் ஐஸ்பழம் கேட்டதும் உடனே ஒன்டரை சான் நீளமான பனை ஈக்கை எடுத்து ஒரு குழாயினுள் வைத்து பக்கத்தில் இருக்கும் எல் வடிவமான கம்பியால் வேகமாய்ச் சுற்றுவார். அப்போது ஐஸ்பழம் அந்த ஈக்கிலில் அழகாய் ஒட்டிக் கொண்டு வரும். பால் ஐஸ்கிறீமாக நல்ல சுவையாய் இருக்கும்.

மற்றும்படி வீட்டில் சிறு களவுகள் செய்வதும், விழுப் புண்கள் பெறுவதும் நமது பிறப்புரிமையல்லவா. தழும்புகளைத் தடவிக் கொண்டு சுவி!!!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை சாத்திரி அண்ணா. முந்தி வாசிச்சது எண்டாலும் உங்கட கதையள திரும்பி வாசிச்சுச் சிரிக்கிறதில ஒரு தனி சுகம் பாருங்கோ. நானும் என்ட சில தேவயளுக்கு சிலவேளை வீட்டில காசு கேக்கேலாது, களவு எடுக்க விருப்பமில்லை, அப்ப எங்கட வீட்டில நிக்கிற வாழைக்காய், மாங்காய், தேங்காய், எலுமிச்சம்பழம், முருக்கங்காய் எண்டு எல்லாத்தையும் கொண்டு பொய் சந்தையில குடுத்து காசாக்கிப் போடுவன். அம்மாவுக்கும் சிலவேளையில ஏதாவது கொமிசன் குடுப்பன். என்டாத்தானே அடுத்தமுறை சும்மா இருப்பா. :unsure: அவவும் லேசுப்பட்ட ஆளில்லை. தம்பி வந்து சாப்பிடு எண்டு சொல்லிப்போட்டு சாப்பிடப் போகேக்கிள்ள நானும் இனி சமைக்கிறதுக்கு உங்கலேல்லாரிட்டையும் காசு வாங்கப் போறன் எண்டுவா. இதில என்ன சோகம் எண்டா, சில வியாபாரியள் விடிய வெள்ளன எண்டா உடனேயே காசு தராமல் பின்னேரம் வாங்கோ எண்டுவீனம். என்ட தம்பி தான் சந்தைக்குப் போக மாட்டான், யாராவது பெட்டயள் பாத்திடுவீனம் என்ட கௌரவப் பிரச்சினை அவருக்கு. நான் உதெல்லாம் பாக்காமல் உயிரைப் பணயம் வச்சு மரத்தில ஏறி காய் பிஞ்சுகளை ஆஞ்சு கரியரில கட்டி சந்தைக்குக் கொண்டு பொய் குடுத்தாப் பிறகு பின்னேரவாக்கில அவன் போய் காச வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆயிடுவான். வியாபாரிமாருக்கும் நாங்கள் சகோதரம் எண்டு தெரியிறதால காசக் குடுத்துப் போடுவினம். பிறகு அவன தேடிப் பிடிச்சு பேச்சு வார்த்தை நடத்தி அவருக்கும் கொமிசன் குடுத்தாப் பிறகுதான் எனக்கு எதுவும்... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.