Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளைகளைக் குத்திக் கொன்ற தமிழர்கள்.

Featured Replies

தெற்கு லண்டனில் கார்ல்ஸ்ரன் பகுதியில் இரு சகோதரங்கள் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களின் இன்னும்மொரு சகோதரன் கத்திக் குத்துக்கு ஆளாகி உள்ளார்.

இது தொடர்பாக இக்குழந்தைகளின் பெற்றோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் நேற்று (மே 30) இரவு 10:30 மணியளவில் இடம்பெற்று உள்ளது. 5 வயது மகனும் நான்கு வயது மகளும் கத்திக் குத்துக்கு இலக்காகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அவ்விரு குழந்தைகளும் உயிருக்காகப் போராடி நடு இரவளவில் உயிரிழந்தனர். அவர்களுடைய 6 மாதமே ஆன குழந்தைச் சகோதரி இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக இக்குழந்தைகளின் பெற்றோர் 39 வயதான தந்தையும் 35 வயதான தாயும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இச்சம்பவம் பற்றி இக்குடும்பத்தினரது உறவினர் ஒருவர் தெரிவிக்கையில் தாயே குழந்தைகளை குத்திவிட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததாகத் தெரிவித்தார். அண்மைக் காலத்தில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்றே தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.

தற்போது அமைதியான கிராமப் புறமான அவர்கள் வாழ்ந்த வீட்டில் மரண விசாரணைக் குழுவினரும் சிறுவர் துஸ்பிரயோக விசாரணைக் குழுவினரும் விசாரணைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

இன்று காலை மருத்துவநிலைப்படி ஆறு மாதப் பெண்குழந்தையின் உடல்நிலை தேறிவருவதாக அறியமுடிகிறது.

அயலவரின் தகவல்படி இலங்கையைச் சேர்ந்த தமிழர்களான இவர்கள் ஒரு வருடத்திற்கு முன்னரே அவ்வீட்டிற்கு குடிபெயர்ந்து உள்ளதாகத் தெரிகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து 10 வரையா அம்புலன்ஸ் வண்டிகள் நேற்று அவ்வீட்டிற்கு வந்ததாக அயலவர்கள் கூறுகிறார்கள்.

இறந்த குழந்தைகளின் பிரேத பரிசோதணைகள் இன்று அல்லது நாளை நடைபெறும்.

http://isoorya.blogspot.com/

space.gif

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கு லண்டனில் இன்று நடந்த சம்பவமொன்றில் சொந்தப் பிள்ளைகளையே இலங்கைத் தமிழ் பெற்றோர் கத்தியால் குத்திக் கொன்றுள்ளனர். இச்சம்பவத்தில் 5 வயதுப் பையனும் 4 வயதுப் பெண்ணும் கொல்லப்பட 6 மாதக் குழந்தை கடுங் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.

இக்கொடூரக் கொலைக்காக பெற்றோர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்..!

http://news.bbc.co.uk/1/hi/england/london/7428946.stm

  • கருத்துக்கள உறவுகள்

குருரமாக கொல்லப்பட்டுள்ளார்கள் ஒன்றும் அறியா பிஞ்சுகள்.

மனநோயாளிகளால்தான் இப்படி செய்யமுடியும்...

Neighbour Carol Bradley told BBC News she used to see the children as they played outside their home.

She recalled: "They were lovely little children, you know, really sweet." :)

Edited by vasisutha

  • கருத்துக்கள உறவுகள்

ஏதும் மதம் மாறின குடும்பமோ தெரியேல்லை இப்பிடித்தான் பிரான்சிலை மற்து யெர்மனியிலையும் மதம் மாறினதுகள் பிள்ளையிலை சாத்தான் எண்டு கொலை செய்த சம்பவங்கள் நடந்திருக்கிது.

39 வயதுடைய ஆண் கைது செய்யப்பட்டு இருக்கிறார்...! 35 வயதுடைய பெண் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்....!!! விசாரனைக்காக காவலில் உள்ளார்...!

Two Arrested After Children Stabbed

Updated:15:55, Saturday May 31, 2008

Two people have been arrested after two young children died in a suspected stabbing.

Officers investigating the incidentA five-year-old boy and a four-year-old girl were found at an address in Carshalton, Surrey, suffering from serious injuries believed to be stab wounds.

They were taken to hospital in South London but died within minutes of each other late last night.

A six-month-old baby is in a serious condition in hospital with stab injuries following the incident, a Metropolitan Police spokesman said.

A 39-year-old man and a 35-year-old woman were arrested at the scene. He is being held at a police station while she is being treated in hospital.

It is understood the two people are the children's parents.

A neighbour told Sky News he saw the children being taken out of a house shortly after police were called at 10.30pm.

"We first of all saw a child being carried out to the ambulance just right outside our house," said Jim Duffy, who lives three doors away.

The house in CarshaltonAnother child was taken out on a stretcher by ambulance staff around half an hour later, he added.

"It was very quick and very glimpsed so we didn't get a sense of whether the child was conscious or unconscious," he said.

"Then there was a woman taken out who had blood on her back. She went into an ambulance, not into a police car.

"Then a chap came out perhaps three quarters of an hour on and he was arrested."

Police believe they know the identities of the youngsters but they have not been formally identified.

Officers from the Homicide and Serious Crime Command and the Child Abuse Investigation Command are investigating the incident.

http://news.sky.com/skynews/article/0,,30100-1317690,00.html

ஐயோ என்ன கொடுமை இது?

மனநோயால் பாதிக்கப்பட்டவர் மதம் மாறியோர் இப்படியானோர் பிஞ்சுக்குழந்தைகளை இபப்டி கொல்லுவதா? எபப்டி தான் மனம் வருதோ.................... :)

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ, பாவம் அந்த பிஞ்சு குழந்தைகள்.

தாய்க்கு மன அழுத்தம் ஏற்பட்டிருந்தால் கணவர் அதனை முன்பே கண்டறிந்து வைத்தியரை நாடியிருக்கவேண்டும் .

இப்போ எல்லாம் பிந்தி விட்டதே , இனி வாழ்க்கையில் எப்படி நிம்மதியாக வாழப்போகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

_44706293_carshalton_baby226.jpg

காயங்களுடன் தப்பிய 6 மாதப் பெண் குழந்தை.

இந்தக் கொலைகளுடன் சம்பந்தப்பட்டதாக கருதப்பட்டு கைது செய்யப்பட்ட இப்பிள்ளைகளின் தந்தை விசாரணைகளின் பின் குற்றம்சாட்டப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தாய் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார். தாயே இக்கொலைகளுக்கான சூத்திரதாரி என்று சில தகவல்கள் கூறுகின்றன. அதை உறுதி செய்ய முடியவில்லை..!

இதற்கிடையே தந்தை வேறொரு விடயம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் "பெயிலில் "விடுவிக்கப்பட்டவராவார்.

இச் செய்திக்கான பிரதான மூலம்:

http://news.bbc.co.uk/1/hi/england/london/7429772.stm

இதில் முன்னர் எழுதின விடயம் காணாமல் போயிட்டுதே எப்படி..??! நான் எடிட் பண்ணேல்லையே..??! :lol::lol:

Edited by nedukkalapoovan
நீக்கப்பட்டுள்ளது

பிள்ளைகளின் தந்தையான 39 வயது நபர் கொலை சம்பந்தமான எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படாமல் விடுதலை செய்ய பட்டு இருக்கிறார்...!! ஆனால் வேறு ஒரு காரணத்துக்காக பிணை அழிக்கப்பட்டு இருக்கிறார். அதன் காரணத்தை காவல்த்துறை வெளியிடவில்லை...!!

Children Stabbings: Father Released

Updated:08:48, Sunday June 01, 2008

The father of two young children stabbed to death in Surrey has been released without charge.

The scene at the family homeThe five-year-old brother and four-year-old sister died in hospital on Friday after being found injured at their home in Carshalton.

A baby girl is in a "critical but stable" condition in hospital.

The six-month-old was operated on by surgeons on Saturday night.

Police have questioned a couple believed to be the parents of all three children.

But the man, aged 39, has now been released.

He has been bailed in relation to another matter, details of which police would not release.

http://news.sky.com/skynews/article/0,,30100-1317735,00.html

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான மனப்பிறழ்வுகள் ஏற்படக் காரணம் பாசைப் பிரச்சனை தனிப்படுத்துகை (ஐசொலேசன்) போன்ற விடயங்கள்தான். தமிழ்க் குடும்பங்கள் பல லண்டனில் இருந்தாலும் மற்றவர்களோட எந்தவித தொடர்புமில்லாமல் காட்டுமிராண்டிகள்போல் வாழ்கிறார்கள். யாருடனும் பேசுவதில்லை உறவு வைப்பதில்லை. போதாததற்கு குறைந்த வருமானம் அதே நேரம் உயர்ந்து வீட்டு வாடகை அல்லது மோடகேஜ் விஸாவில்லாமல் நெடுங்காலம் வாழுவது அதனால் ஒரு உதவியும் கிடைக்காமல் நெடுங்காலம் பரிதவிப்பது என்று பட்டியல் நீளுகிறது. கௌன்சில் ராக்ஸ், மேலும் பல செலவுகள்(யூட்டிலிட்டீஸ்) வந்து தலையை அழுத்துவதாலும் கோட்ஸ் ஓடர்களும் வேறு நெருக்குதல்களும் வருவதாலும் குடம்பத்தலைவர் தலைவியர் தலையைப் பிச்சுக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பதும் குடும்பத்திற்கிடையில் பிரச்சனைகள் வாக்குவாதம் அடிபிடி ஏற்படுவதும் குடிப்பதும் மேலும் அழுத்தங்களை உருவாக்குவதால் ஒன்றும் அறியாத இளம் பிஞ்சுகளே இறுதியில் பாதிக்கப் படுகின்றன. தமிழர் சமூக நலசேவை அமைப்புக்கள் இத்தகைய கஸ்ரப்படும் குடும்பங்களை அணுகி உரிய முறையில் வழிகாட்டினால் மட்டுமே இத்தகைய அவலங்களைத் தடுத்து நிறுத்தலாம்.

முன்பு இதுபோல் கனடாவிலும் நடந்தது. இப்படியான சம்பவங்கள் நடைபெறும்போது அதைப்பற்றி ஒவ்வொருவரும் விதம்விதமான விமர்சனங்களை வைப்பதோடு முடித்து விடுகின்றோம். பின் இவ்விடயம் பற்றி எவருமே சிந்திப்பதில்லை. இப்படியான நிகழ்வுகள் ஏற்படுவதற்கான அடிப்படைகளை ஆராய்ந்து, உண்மையில் பிள்ளைபேற்றின் பின் வரும் மனப்பிறழ்வுகள் தான் இதற்குக் காரணம் என்றால், எம்மினப் பெண்களுக்கு மகப்பேற்றின் பின் இது சம்பந்தமான வைத்திய ஆலோசகைள், கௌன்சிலிங் போன்றவற்றைக் கொடுப்பது அவசியம். அதுபோல் முடிந்தவரை பிள்ளைப்பேற்றின் போது சம்பந்தப்பட்ட பெண்மணியின் தாயையோ அல்லது சகோதரியையோ அவருக்கு உதவியாக வரவழைத்து வைத்திருப்பதும் சாலச்சிறந்தது.

இச் சம்பவம் எங்கள் வீட்டிற்கு அருகிலேயே நடந்தது....

நான் அறிந்து கொண்டதன் படி கணவர் ஒரு கடை வைத்திருப்பவர்... மேலதிக விபரங்கள் தெரியவில்லை..

Edited by uthayam

மனப் பிறழ்வு வேறு, மன அழுத்தம் வேறு... இத்தகைய கொலைகள் அனேகமாக மன அழுத்ததினால் ஏற்படுபவை ("டிப்ரஷன்"). குழந்தை பிறந்தவுடன் அனேக பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் நிலை தற்கால வாழும் முறையில் ஏற்படுகின்றது. மன அழுத்தம் மிக இலகுவாக கண்டுபிடிக்கப் பட்டு மருத்துவம் செய்ய கூடிய ஒரு 'நிலை' அல்லது வியாதி. ஆனால் வரட்டு கவுரவத்தினால் எம்மவர்கள் தமது உறவுக்கோ, குடும்ப உறுப்பினருக்கோ வந்தால் அதனை ஒழித்து வைக்க விரும்புவர்

இந்த சம்பவத்திலும் சகோதரி கடுமையாக பாதிக்கப் பட்டவராக் தெரிகிறது... தேவை அவசர கவனிப்பும் எல்லோரது பரிவும், அன்புமே. மதம் காரணம் எனும் வக்க்ரமான பார்வைகள் அல்ல

தனிமை, சதா பணம் பணம் என்று அலையும் 3 நேர வேலை பார்க்கும் முறை மட்டும் அல்ல, சிறு வயதில் ஏற்படும் பாலியல் துஷ்பிரயோகமும் (அதுவும் நெருங்கிய உறவினர்களால்) ஒரு வலிதான காரணம்

மனப் பிறழ்வு என்பது... ஒரு முற்றிய கோளாறு...அதாவது எம் மொழியில் "விசர்"... மன அழுத்தம் என்பது, ஒரு சிறிய கால கட்டத்தில், ஆனால் மீண்டும் மீண்டும் வரக்கூடியது (மருந்து எடுக்காவிடில்).

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தப் பிள்ளைகளையே கத்தியால் குத்திக் கொன்றும் காயப்படுத்திய தமிழ் தாய் தற்போது மனநல சுகாதாரம் சார்ந்த விதிகளின் (Mental Health Act) கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

http://news.bbc.co.uk/1/hi/england/london/7429772.stm

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக வீட்டைத் தங்கள் பொருளாதாரத் தகைமைக்கு மீறி வாங்கி அவதிப் படுவது நமது பெரும்பாலான புலம் பெயர் தமிழரின் வாடிக்கை. கனடாவிலும் போன வருடம் இப்படி இரு கொலைகள் ஒரு தாயாரினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதற்கும் மன அழுத்தமே காரணமாகக் கூறப்பட்டிருந்தது. அவர்களுக்குப் பொருளாதாரச் சுமை இருந்ததோடு புதிதாக ஒரு பிள்ளை பிறக்கவும் அழுத்தம் கூடி இவ்வாறான ஒரு சோகம் நிகழ்ந்து விட்டிருந்தது.

வீடு வாகனம் போட்டிக்கு வாங்குவது அளவு கணக்கு இல்லாமல் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் சக சமூகத்தவரிடம் (தமிழரிடம்) உள்ள போட்டி பொறாமை காரணம். 0% முதல் இட்டு $400,000 க்கும் மேற்பட்ட விலையுள்ள வீட்டை வாங்க வேண்டியது. வீட்டில் அக்கா தங்கை மாரையும் இருத்தி வாடகை வசூலித்து, புருசன் இரு வேலைகளும் பெண்டாட்டி ஒரு வேலையும் செய்து அடகுப் பணம் (மோட்கேஜ்) கட்டவேண்டியது. இந்தப் பணத்தில் அனேகமாக 70% வீதம் வட்டியாகப் போகும். இடையில் வாடகைக் காரர் வீட்டைக் காலி பண்ணினால் அதோ கதி. இப்படி இருந்தால் மன அழுத்தம் வராமல் வேறு என்ன வரும்? :rolleyes:

நானும்தான் முதலில் வேலையே இல்லாமல்தான் வீடு வாங்கினேன். :rolleyes: ஆனால் அது வியாபாரம். இரு வருடங்கள் ஒரு வேலையுடன் சமாளித்து விட்டு நல்ல விலைக்கு விற்றுவிட்டேன். நான் வீடு வாங்கும்போது நல்லவா பெரியவா எனக்குச் சொன்னது என்னவென்றால் வீடு வாங்குவது முக்கியமில்லை, ஆனால் காசு கட்ட முடியாமல் விற்க வேண்டி வந்தால் அது பெருத்த அவமானமாம்..! இந்த அளவில் தான் அவர்களின் சிந்தனை இருக்கிறது. :rolleyes:

தனிமையினால் ஏற்பட்ட மன அழுத்தமே இலங்கை சிறுவர்கள் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம்

தனிமையின் மன அழுத்தம் காரணமாகவே தமது குழந்தைகளை அவர்களின் தாய் கொலை செய்திருக்கலாம் என பிரித்தானியாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களின் உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். தென் லண்டனில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மனநல வைத்திய சிகிச்கைகளுக்கும் அவர் உட்படுத்தப்படவுள்ளார். காவல்துறையினர் கொலைகள் தொடர்பான காரணங்களை வெளியிட மறுத்தபோதும் குறித்த குழந்தைகள் இரண்டும் தொண்டைப்பகுதி வெட்டப்பட்டு கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

குழந்தைகளின் தந்தையும் சம்பவம் இடம்பெற்ற நாளன்று கைதுசெய்யப்பட்டார் எனினும் அவர் மீது குற்றமில்லை என்ற அடிப்படையில் அவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.இதேவேளை கணவன் வேலைக்கு சென்ற பின்னர் குறித்த பெண் அதிக நேரம் தனிமையில் இருந்ததன் தாக்கமே இந்த கொலைகளுக்கான காரணம் என வைத்திய தரப்புகள் குறிப்பிட்டுள்ளன. இந்தநிலையில் பிரித்தாணியாவில் உள்ள தமிழர்களுக்கு மனரீதியான ஆலோசனைகள் வழங்கப்படுவதில்லை எனக்குறிப்பிட்டுள்ள கிழக்கு லண்டனில் உள்ள ஆலோசகரான போல் சதீசன் இதனைப்பற்றி யாரும் கதைப்பதில்லை என தெரிவித்துள்ளார். தமிழர்கள் மன அழுத்தங்களுக்கு உட்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளவேண்டும் என அவர் கேட்டுள்ளார்

நன்றி தமிழ்வின் இணையம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகப்பேற்றுக் காலங்களில் பெண்களுக்கு நிறைந்த ஆதரவும் அரவணைப்பும் தேவைப்படும். அது இல்லாத பட்சத்தில் இப்படித்தான் மன அழுத்தங்களும் தனிமையும் சேர்ந்து தான் செய்வது என்னவென்றே தெரியாத நிலை ஏற்படும். இதுகளைக் குறைக்க வேண்டும் என்றால் முதலில் எங்கட சனம் 'வட்டி, சீட்டு, 3 நேர வேலைகளில் இருந்து விடுபட வேணும்.

தமிழனை அங்கையும் கொல்லுகினம்; இங்கையும் கொல்லுகினம்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விடயம் மிகவும் பரிதாபத்திற்குரியது. நாங்கள் வசிக்கும் இடத்தில் எமது கவுன்சிலின் ஏசியன் வுமன் டெவ்லொப்மென்ற் அலுவலகத்தால் இலவசமாகஆசிய பெண்களுக்காக மனஅழுத்தம் சம்பந்தமான கருத்தரங்குகள் பெண்களுக்கான விழிப்புணர்வுக்காக வருடத்திற்கு ஒரு தடவை வைப்பார்கள்.மற்ற சமூகத்துப் பெண்கள் எல்லோரும் பயனடைவார்கள். ஆனால் எமது பெண்கள் வீட்டிலை சமைக்க வேணும் மாதிரி ஏதாவது ஒரு விடயம் சொல்லி வராமல் இருப்பார்கள். தாங்களாகவே வருபவர்கள் சரியான குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயம் மிகவும் பரிதாபத்திற்குரியது. நாங்கள் வசிக்கும் இடத்தில் எமது கவுன்சிலின் ஏசியன் வுமன் டெவ்லொப்மென்ற் அலுவலகத்தால் இலவசமாகஆசிய பெண்களுக்காக மனஅழுத்தம் சம்பந்தமான கருத்தரங்குகள் பெண்களுக்கான விழிப்புணர்வுக்காக வருடத்திற்கு ஒரு தடவை வைப்பார்கள்.மற்ற சமூகத்துப் பெண்கள் எல்லோரும் பயனடைவார்கள். ஆனால் எமது பெண்கள் வீட்டிலை சமைக்க வேணும் மாதிரி ஏதாவது ஒரு விடயம் சொல்லி வராமல் இருப்பார்கள். தாங்களாகவே வருபவர்கள் சரியான குறைவு.

நீங்கள் வசிக்கிற இடத்திலை வருசத்துக்கு ஒருக்கால்தான் பெண்களிற்கு மனஅழுத்தம் வாறதோ. அது கிடக்கட்டும் எங்கடை பெண்கள் சமைக்கிறதாலையாவது அதிலை மனவோட்டம் திரும்பி ஓரளவு மன அழுத்தம் குறையும் ஆனால் பாக்கிற தொடர் நாடகங்கள் அதை திரும்பவும் கூட்டிவிட்டிடுமே?????தொடர் நாடகங்களிலை மனசை தொட வைக்கவேணுமெண்டிறதுக்காக அழுகிற மாதிரியே காட்சியை அமைப்பாங்கள் அதை பாத்து எங்கடை பெண்களும் உச்சு கொட்டி கண்ணை கசக்கிட்டு அதையே யோசிச்சுக்கொண்டிருந்தால் அழுத்தம் வராமல் என்ன செய்யும்.அதாலை பப்புக்கு போங்கோ ஆடுங்கோ அழுத்தம் குறையும். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியிலும் சிசுக்கொலை மற்றும் குழந்தைகள் கொலை என அளவுக்கதிகமாக இடம்பெற்றுவருகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி மாமா, வருசத்திலை ஒருக்கால வைக்கிறதுக்கே வரக் காணேல்லை. வைக்கிற ஒரு நாளிலை மன அழுத்தத்தைக் குறைக்கிறதுக்கு என்ன செய்ய வேண்டும். மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் , மன அழுத்தம் உள்ளவையள் அதைக்குறைக்கிறதுக்காக எங்கை ஆலோசனை பெறலாம் எண்டு எல்லாம் விபரங்களும் தருவினம். சாத்திரி மாமா சொல்லுறதிலயும் நியாயங்கள் இருக்கு. நாடகங்களைப் பார்த்தால் இன்னும் ரென்சனைக் கூட்டிவிட்டிடும். ஆனாலும் இஞ்ச யாரும் பப்புக்கு போய் இன்னும் பழகேல்லை. இனித்தான் பழகோணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கு பலவிதங்களில் மன அழுத்தங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. போதியளவு வருமானம் இல்லாதுவிட்டாலும் பகட்டாக வாழவேண்டும் என்கின்ற பேராசை. உள் மனதுள் இருக்கும் போட்டி மனப்பான்மைகளால் பகட்டான பொருள்கள், பெரிய வீடு, பகட்டான மோட்டார் வண்டி என்பவற்றை வாங்கவேண்டும் என்ற மன உந்துதல்களால் ஏற்படும் மன அழுத்தங்கள் ஒருபுறம். 'பேராசை கோடி தரித்திரம்" என்பார்கள்.

தாயகத்தில் தொடர்ந்து நிகழும் போரினால் ஏற்படும் பாதிப்புகளால் பலர் பலவிதமான மன அழுத்தங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். புலம்பெயர்ந்து வாழ்ந்தபோதும் அது ஒரு தொடர்கதைபோலவே தொடர்கிறது.

பெண்களைப் பொறுத்தவரையில் பிரசவ காலங்களில் ஏற்படும் Post natal என்பதனால் ஏற்படும் மன அழுத்தம் மிகவும் பொல்லாத ஒன்று. புலத்தில் வாழும் புதிய கணவன்மார்களுக்கு இந்த அனுபவம் இருக்க மாட்டாது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் பலர். இந்தத் தம்பதியினரும் இப்படியான அவதிக்குள் அகப்பட்டிருக்கலாம். இந்த வேளைகளில்தான் பெற்ற தாய், சகோதரர்கள் பக்கத்தில் இருந்து பராமரிக்க வேண்டும் என்று கூறுவார்கள்.

எது எப்படியிருந்தபோதும் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் எம்மவர்களே என்று எண்ணும்போது மனம் வேதனையடைகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.