Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்

Featured Replies

கணவன் மனைவிக்கிடையே, திருமணமான புதிதில் இருக்கும் நெருக்கம், நாட்கள் செல்லச் செல்ல குறைந்துவிடும் என்பது பொதுவான கருத்து. இதற்கு காரணம், சரியான, பரஸ்பர புரிதல் இல்லாமையே.

கீழே தரப்பட்டிருக்கும் கருத்துக்கள், ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் இருவரும் கடைபிடிக்க வேண்டிய பொதுவான ஆலோசனைகள். இங்கு தரப்பட்டிருக்கும் ஆலோசனைகளில் சில, குழந்தைத்தனமானதாகவும் நகைச்சுவையாகவும் தோன்றலாம்.. ஆனாலும் தம்பதிகளுக்குள் கவுரவம் பார்க்காது, கடைபிடிப்பதில் தவறில்லையே..

1. எழும்போதே ஒருவருக்கொருவர் புன்ன

கையுடன் பார்த்துக் கொள்ளுங்கள். குட்மார்னிங் சொல்லிக்கொள்வதில் தவறில்லை.

2. வாரத்திற்கொருமுறை குடும்பத்தோடு வெளியில் சென்று வரலாம்.

3. மனைவிக்கு / கணவனுக்கு வேண்டியவர்களிடம் தன்மையாக நடந்துகொள்ளுங்கள.

4. அவ்வப்போது சின்னச் சின்ன பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து ஆச்சர்யப்படுத்துங்கள்.

5. எப்போதும் செய்தித்தாள் அல்லது டிவி பார்த்துக்கொண்டே இருக்காமல், கூடுமானவரை ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேச முயலுங்கள்.

6. சமையல் முதல் அனைத்து வேலைகளிலும் ஒருவருக்கொருவர் உதவ முற்படுங்கள்.

7. சாப்பிடும் தருணங்களில் டிவி பார்க்காமல் பேசிக்கொண்டே சமையலை ருசித்து சாப்பிடுங்கள். அது எதிர் தரப்பினரை திருப்தியடையச் செய்யும்.

8. தொடுதல் மிக முக்கியம். தனிமையான தருணங்களில் இடைவெளிகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். தலைகோதிவிடுவது, மடியில் தலை வைத்துப்படுப்பது, கை கோர்த்துக்கொள்வது போன்ற தொடுதல்கள் நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தும்.

9. எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்ற எதிர்காலக் கனவுகள் பற்றி ஒருவருக்கொருவர் பேசுங்கள்.

10. இருவருக்கும் பிடித்த, பொதுவான பாடல்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கேளுங்கள். அது யதார்த்த சூழலில் கேட்கப்படும்போது மனதுக்குள் புன்னகை உண்டாக்கும்.

11. பின்கூட்டி அணையுங்கள். இது உடல் சார்ந்தது மட்டுமின்றி மனரீதியாகவும் நெருக்கத்தினை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

12. நகைச்சுவையான தருணங்களில் ஒருவருக்கொருவர் விஷயத்தைப் பகிர்ந்து சிரியுங்கள்.

13. I love you அல்லது I miss you போன்ற க்ரீட்டிங் கார்டுகளை அவ்வப்போது பரிமாறிக்கொள்ளுங்கள்.

14. ஒருவரின் தேவைகள் என்னவேன்று மற்றொருவர் கேட்கும் முன்பே, அதனைப் புரிந்துகொண்டு நிறைவேற்றுங்கள்.

15. வாதம் செய்யும்போதோ, அறிவுரை கூறும்போதோ, ஒருவர் சொல்வதை மற்றொருவர் அசட்டை செய்யாது கவனிக்க வேண்டும்.

16. தனக்குப் பிடித்த விஷயங்களை இன்னொருவர் செய்யும்போது மனம் விட்டுப் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள்.

17. ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணும்போது மற்றொருவரின் பார்வையிலும் இருந்து பார்த்து நடுநிலையாக முடிவெடுக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், தன் வாதம் தான் கடைசியாக இருக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள்.

18. வெளியிலிருப்பின், அழைபேசி மூலம் அவ்வப்போது பேசி அக்கறையை வெளிக்காட்டுங்கள்.

19. தங்கள் விருப்பங்களை மற்றொருவர் உடனே நிறைவேற்ற வேண்டும் என்று அவசரப்படுத்தாதீர்கள். பொறுமை அவசியம். அதே போன்று நீ இப்படித் தான் இருக்க வேண்டுமென தன்னுடைய விருப்பங்களை அடுத்தவர் மேல் திணிக்கவும் கூடாது.

20. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுங்கள். சுய விருப்பு வெறுப்புக்களை தெரிந்துவைத்துக்கொள்வது மிக முக்கியம்.

21. எந்த சூழ்நிலையிலும் அவரவர்க்குரிய சுய மரியாதையை கெடுக்கும் வண்ணம் நடக்கக் கூடாது.

22. நண்பர்கள் உறவினர்கள் போன்ற வெளியாட்கள் வீட்டுக்கு வரும்போது அவர்கள் முன் ஒருவருக்கொருவர் குறை கூறிக்கொள்ளக் கூடாது.

23. உறவினர்கள் இருப்பின், மறைமுகமான, காதல் ஜாடைகளில் பேசிக்கொள்ளுங்கள்.

24. பிறந்த நாள், காதலர் தினம் போன்ற நாட்களை மறந்துவிடாமல் ஒருவருடன் ஒருவர் ஒன்றாக நேரத்தை செலவழியுங்கள்.

25. தவறுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், தன் மேலுள்ள குறைகளையோ அல்லது தவறுகளையோ ஒத்துக்கொண்டு மனமார மன்னிப்பு கேட்கப் பழகுங்கள்.

26. கணவனோ மனைவியோ தம்மிடம் தவறினை ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்கும்போது அவரைக் குத்திக்காட்டாமல் மனதார மன்னித்து ஏற்றுக்கொண்டு சகஜநிலைக்குத் திரும்புங்கள்.

27. முத்தம் என்பது காமம் சார்ந்ததில்லை. அது காதலை வெளிப்படுத்தும் ஊடகமே.. தினமும் ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொள்ளுங்கள்.

28. தான் என்ன செய்தால் மற்றொருவர் மகிழ்ச்சியாக இருப்பார் என்பதை அறியமுடியவில்லையெனில், “நான் என்ன செய்தால் உனக்கு சந்தோசமாக இருக்கும்“என வெளிப்படையாக அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

29. எப்போதும் பாசிடிவ்வாக யோசியுங்கள்.

30. வீட்டில், குழந்தைகளிடமும் தன்மையாக இனிமையாகப் பேசுங்கள், பழகுங்கள்.

31. ஏதேனும் சந்தர்ப்பங்களில் பலவீனமாக உணர்ந்தீர்களானால் அதை தாராளமாக தன் துணையிடம் தெரிவித்து அவருடைய உதவியை ஈகோ பார்க்காமல் ஏற்றுக்கொள்ளலாம்.

32. வேண்டாவெறுப்பாக இருக்காமல், வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் உண்மையான அக்கறையைக் காட்டுங்கள்.

33. உங்கள் வாழ்வின் கடந்த கால அனுபவங்களை, அதாவது உங்கள் இருவருக்குள் நடந்த ஸ்வாரஸ்யமான காதல் சம்பவங்களை அவ்வப்போது நினைவுபடுத்தி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள்.

34. மனரீதியாக மட்டுமின்றி உடல்ரீதியாகவும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துவைத்திருக்க வேண்டும். உடல் சார்ந்த நேரங்களில் கூட, காமத்தை விட காதல் ப்ரதானமாக இருக்க வேண்டும்..

35. சாதாரணமாக கை கோர்க்கும் பிடியில் கூட உனக்காக நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.

36. ஏதாவதொரு பொதுவான விஷயத்தை தேர்ந்தெடுத்து அதை சேர்ந்து ரசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உதாரணமாக இசை, மழை, பௌர்ணமி நிலவு, கவிதைகள், புத்தகங்கள் போன்றவைகள்.

37. தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறும்போது, உதாரணமாக தலைவலி என்று சொன்னால் “எனக்கு அதுக்கு மேல வலிக்குது“ என்று பதிலளிக்காதீர்கள். உண்மையான அக்கறையுடன் பணிவிடை செய்யுங்கள்.

38. என்னதான் ஒருவருக்கொருவர் அதிகமாக காதலித்தாலும் அதை வெளிக்காட்டப் பழகுங்கள். மனதிற்குள் வைத்து ஒளிக்கும் காதல் ப்ரயோஜனப்படாது.

விட்டுக்கொடுப்பதும், புரிந்துகொள்வதும் அந்நியோன்யத்தை வலுப்படுத்தும். ஒருவருக்கொருவர் அவமானமோ வெட்கமோ பார்க்காமல் வெளிப்படையாக இருத்தல், ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேட்கவும், மன்னிக்கவும், பாரபட்சம் பார்க்காமல் அனைத்து விஷயங்களையும் ஒளிவுமறைவின்றி பகிர்தல் போன்றவைகள் கணவன் மனைவி உறவினை மேலும் வலுப்படுத்தும்.

இவைகள் பொதுவான கருத்துகள் . உங்கள் வீட்டில் எப்படி என்று பதியுங்கள் உறவுகளே!!!!!!

படித்ததில் மனதில் பதிந்தது

http://chellakirukka.../blog-post.html

Edited by மோகன்
இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பலவற்றை நான் செய்வதில்லை என்று இதை வாசிக்கும்போது தெரிகிறது. உண்மைச்சொல்ல எப்போதும் நான் தயங்கியதில்லை.

ஆனால் என்னிடம் இன்னொரு மந்திரமுண்டு.

இளவயதில் நான் கொஞ்சம் காவாலி. அப்பிடி இப்படி இருப்பேன்.

அந்த நேரத்தில் பலரை விரும்புவதுபோலிருந்தேன். ஆனால் என்னைக்காதலித்தவளை எனக்காக எதையும் செய்ய தயாராக இருந்தவளைக்கட்டிக்கிட்டேன். இன்று ராசா மாதிரி அரவணைக்கப்படுகின்றேன். மந்திரம் அங்குதான் உள்ளது. இன்றைய இளசுகளுளுக்கு நான் சொல்வதும் இதைதத்தான். இரு பாலாருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிவுரைகளை பிரிண்ட எடுத்து சமையலறை குளிர்சாதனப் பெட்டியிலும் தொலைபேசி மற்றும் கணனி வைத்திருக்கும் இடத்திலும் பார்வையில் நன்கு படக்கூடிய மாதிரி ஒட்டி வையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா கண்ணோடு கண் நோக்கில் அவ்வளவுதான் பார்வையிலேயே எல்லாம் புரிஞ்சுடும். நாள் செல்ல செல்ல புரிதல் அதிகமாகும். வார்த்தைகள் குறையும் இதுக்கெல்லாம் பக்கம் பக்கமாய் விளக்கம் எழுதிக்கொண்டு

நன்றி கோமகன்.

இந்த விபரங்களையும் சுருக்கமாக விட்டுக்கொடுத்தல் - புரிதல் - சகித்தல் என மூன்று புள்ளிகளை கொண்ட முக்கோணத்துக்குள் அடக்கி விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன்.

இந்த விபரங்களையும் சுருக்கமாக விட்டுக்கொடுத்தல் - புரிதல் - சகித்தல் என மூன்று புள்ளிகளை கொண்ட முக்கோணத்துக்குள் அடக்கி விடலாம்.

அகூதா, இதைவிட சுருக்கமா ஆழமா சொல்ல வார்த்தையில்லை, நன்றி கோமகன் இணைப்பிற்கு

அகூதா ஒரு தரம் சொன்னால் நாலுதரம் சொன்ன மாதிரி... :) :)

அகூதா,

இந்த மூன்று புள்ளிகளை கொண்ட முக்கோணத்தை உருவாக்குவதற்கான யோசனைகளைத்தான் கோமகன் இணைத்திருக்கிறார்.

புரிதலே அற்ற விட்டுக் கொடுத்தல் சகித்தல் என்பன சாத்தியமற்றவை....

விட்டுக் கொடுத்தலின்பால் புரிதலைத் தவிர்ப்பது முட்டாள்தனம்

புரிந்து, விட்டுக் கொடுத்து, அதன்பால் எழுந்த சகித்துக் கொள்ளுதல் என்ற சொற்பதம் வாழ்க்கைத்துணைகளுக்குள் இருக்குமென்றால் அவர்களிடத்தில் அந்நியோன்னியமாக வாழ்க்கை இல்லை என்பதாய்தானே அர்த்தம். ரொம்பக் குழப்புகிறேனோ?....

நிச்சயமாக

விட்டுக்கொடுத்தலும் புரிதலும் மழை இருளும் அதன் பின் வரும் சூரியனும் போன்றவை. அதாவது விட்டுக்கொடுத்தால் பின்னர் புரிதல் தானாக பின்வரும்.

புரிந்து, விட்டுக் கொடுத்து, அதன்பால் எழுந்த சகித்துக் கொள்ளுதல் என்ற சொற்பதம்

வாழ்க்கைத்துணைகளுக்குள் இருக்குமென்றால் அவர்களிடத்தில் அந்நியோன்னியமாக வாழ்க்கை இல்லை என்பதாய்தானே அர்த்தம். ரொம்பக் குழப்புகிறேனோ?....

அந்நியோன்னியமாக வாழ்க்கை என்பது வீட்டுக்கு வீடு வாசற்படியானது.

வாழ்க்கை துணைகள் தாமாக தமக்குள், மற்றையவர்கள் தலையீடு இல்லாமல், புரிந்து, விட்டுக் கொடுத்து, அதன்பால் எழுந்த சகித்துக் கொள்ளுதல் - அவர்களின் அந்நியோன்னியமாக வாழ்க்கை.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா ஒரு தரம் சொன்னால் நாலுதரம் சொன்ன மாதிரி... :) :)

இப்பதான் பார்த்தன், நாலு தரம் வந்திருக்கு, விடிய யாழ் எனக்கு பல பிரச்சனை தந்துவிட்டது, 2 தரம் restart......

ஒருக்கா கிளிக் பண்ண, 4 தரம் பதிச்சிட்டுது...............

கணவன் மனைவிக்கிடையே, திருமணமான புதிதில் இருக்கும் நெருக்கம், நாட்கள் செல்லச் செல்ல குறைந்துவிடும் என்பது பொதுவான கருத்து. இதற்கு காரணம், சரியான, பரஸ்பர புரிதல் இல்லாமையே.

அதெல்லாம் இல்ல......சரியான பொஸ்பரஸ் போல வந்து எரிச்சலூட்டுறாளேன்னுதான்!

1. எழும்போதே ஒருவருக்கொருவர் புன்ன

கையுடன் பார்த்துக் கொள்ளுங்கள். குட்மார்னிங் சொல்லிக்கொள்வதில் தவறில்லை.

இரண்டுபேரும் ஒரே நேரத்துலயா எழுந்துக்குவாங்க? அப்டி எழுந்திருச்சாலும், இங்கிலீசுல குட்மார்னிங் சொல்றது ஓகே....... தமிழனுங்க எப்டி சொல்லணும்?

காலை வணக்கம் என் இனிய காதலா/காதலின்னு ,, காலங்காத்தாலயே ,,சுத்த தமிழில வெறுப்பேத்தினா . கொலைவெறி வராதா?

<_<

இதெல்லாம் நல்லாவே இல்ல கோமகன்,,, ! ^_^

  • கருத்துக்கள உறவுகள்

புரிதலே அற்ற விட்டுக் கொடுத்தல் சகித்தல் என்பன சாத்தியமற்றவை....

விட்டுக் கொடுத்தலின்பால் புரிதலைத் தவிர்ப்பது முட்டாள்தனம்

புரிந்து, விட்டுக் கொடுத்து, அதன்பால் எழுந்த சகித்துக் கொள்ளுதல் என்ற சொற்பதம் வாழ்க்கைத்துணைகளுக்குள் இருக்குமென்றால் அவர்களிடத்தில் அந்நியோன்னியமாக வாழ்க்கை இல்லை என்பதாய்தானே அர்த்தம். ரொம்பக் குழப்புகிறேனோ?....

பாவம் என் சகோதரன்

அநேகமாக தலையில் முடியே இருக்க வாய்ப்பில்லை. :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா,

இந்த மூன்று புள்ளிகளை கொண்ட முக்கோணத்தை உருவாக்குவதற்கான யோசனைகளைத்தான் கோமகன் இணைத்திருக்கிறார்.

புரிதலே அற்ற விட்டுக் கொடுத்தல் சகித்தல் என்பன சாத்தியமற்றவை....

விட்டுக் கொடுத்தலின்பால் புரிதலைத் தவிர்ப்பது முட்டாள்தனம்

புரிந்து, விட்டுக் கொடுத்து, அதன்பால் எழுந்த சகித்துக் கொள்ளுதல் என்ற சொற்பதம் வாழ்க்கைத்துணைகளுக்குள் இருக்குமென்றால் அவர்களிடத்தில் அந்நியோன்னியமாக வாழ்க்கை இல்லை என்பதாய்தானே அர்த்தம். ரொம்பக் குழப்புகிறேனோ?....

உங்களுக்கே விளங்குதெல்லோ..? :icon_mrgreen: பிறகென்ன? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் பார்த்தன், நாலு தரம் வந்திருக்கு, விடிய யாழ் எனக்கு பல பிரச்சனை தந்துவிட்டது, 2 தரம் restart......

ஒருக்கா கிளிக் பண்ண, 4 தரம் பதிச்சிட்டுது..........

..

.அகூதாவும் உடையாரும் ஒருவரா ? :D :D :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

.அகூதாவும் உடையாரும் ஒருவரா ? :D :D :D :D :D

நீங்க மேல என் பதிவை பாக்கலை அக்கா, நான் ஒரு பதிலை 4 தரம் போட இந்த நுணா பையன் கலாய்க்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

ஓ..........சாரி

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய கொக்கிரீட் பாலமா போட்டிங்கன்னா.. உறவு பலமாகும்..! இந்த சம்சாரிகள் தொல்லை தாங்க முடியல்லைடா சாமி. :lol::D:icon_idea:

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் விசுகு , வல்வை சாகாரா , சாத்திரி , அகோதா , உடையார் , நுணாவிலான் அறிவிலி , இசைக்கலைஞன் , நிலாமதி , நெடுக்காலபோவான் :) :) :) .

  • தொடங்கியவர்

இதெல்லாம் நல்லாவே இல்ல கோமகன்,,, ! ^_^

ஏன் கோபம் அறிவிலி?????????? தமிழனுக்குத் தானே இருக்கு உம்மா , அதைக்குடுத்தால் போச்சு . :) :)

  • தொடங்கியவர்

நன்றி கோமகன்.

இந்த விபரங்களையும் சுருக்கமாக விட்டுக்கொடுத்தல் - புரிதல் - சகித்தல் என மூன்று புள்ளிகளை கொண்ட முக்கோணத்துக்குள் அடக்கி விடலாம்.

நன்றிகள் அகோதா . நீங்கள் சொல்கின்ற முக்கோணமான விட்டுக்கொடுத்தல் , புரிதல் , சகிப்புத்தன்மை , போன்றவையில் < நான் > என்கின்ற நிலை வரும்பொழுது , இவை மூன்றும் அடிபட்டுப்போகின்றன . மாறாக , < நாங்கள் > என்ற நிலமையில் நீங்கள் சொல்கின்ற முக்கோண நிலை உருவாகலாம் என்பது எனது நிலைப்பாடு :) :) :) .

Edited by komagan

  • தொடங்கியவர்

அகூதா,

இந்த மூன்று புள்ளிகளை கொண்ட முக்கோணத்தை உருவாக்குவதற்கான யோசனைகளைத்தான் கோமகன் இணைத்திருக்கிறார்.

புரிதலே அற்ற விட்டுக் கொடுத்தல் சகித்தல் என்பன சாத்தியமற்றவை....

விட்டுக் கொடுத்தலின்பால் புரிதலைத் தவிர்ப்பது முட்டாள்தனம்

புரிந்து, விட்டுக் கொடுத்து, அதன்பால் எழுந்த சகித்துக் கொள்ளுதல் என்ற சொற்பதம் வாழ்க்கைத்துணைகளுக்குள் இருக்குமென்றால் அவர்களிடத்தில் அந்நியோன்னியமாக வாழ்க்கை இல்லை என்பதாய்தானே அர்த்தம். ரொம்பக் குழப்புகிறேனோ?....

உங்களின் கொள்கையில் நானும் உடன்படுகின்றேன் வல்வை சகாரா . நம்மில் பலர் <சகிப்புத்தன்மை> என்ற வியாக்கியானத்தில் பெண்களை மூளைச்சலவை செய்து திமிர்படைத்த ஆண்களுக்கேற்ப வளர்க்கின்றார்கள் . இவை புலம்பெயர்ந்தும் தொடர்வது தான் வேதனை . ஆண்கள் எப்பொழுதும் , புரிந்து ,விட்டுக்குடுத்து , அதன்பால் எழுகின்ற சகிப்புத்தன்மையை அனுகூலமாகவே எடுக்கின்றனர் . நாகேஸ் 1985 இன்று போட்ட கதை ஓர் நல்ல உதாரணம். மிக்க நன்றிகள் சகாரா :) :) :) .

34. மனரீதியாக மட்டுமின்றி உடல்ரீதியாகவும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துவைத்திருக்க வேண்டும். உடல் சார்ந்த நேரங்களில் கூட, காமத்தை விட காதல் ப்ரதானமாக இருக்க வேண்டும்..

மற்ற எல்லா விடயங்களையும் விட இது முக்கியம் அப்பு....மனமும் உடலும் புரிந்தால் மற்ற எல்லாமே தானாக சரியாக வரும்.

மற்றது, அதென்ன காமம் இல்லா காதல் என்றெல்லாம் சொல்ல வாரீர்கள்..?

காமம் இல்லாக் காதல் = பிரதிபலன் இல்லாத காதல் என்றும் சொல்லலாம் :) :) . அதாவது , பொதுவாகக் காதலின் பிரதியீடு காமத்திலேயே முடிகின்றது . மிக்க நன்றிகள் நிழலி.

Edited by komagan

துணையை, சக மனிதமாக மதித்தால் புரிதல், உணர்வு, உறவு எல்லாம் சரி வரும் என நினைக்கிறேன்.

எதிர்ப்பக்கதின் கீழ் செம்பக்கத்தைப் பிரிக்கும் அகூதாவின் முக்கோண விளக்கமும் உண்மை.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் மனைவிக்கிடையே, திருமணமான புதிதில் இருக்கும் நெருக்கம், நாட்கள் செல்லச் செல்ல குறைந்துவிடும் என்பது பொதுவான கருத்து. இதற்கு காரணம், சரியான, பரஸ்பர புரிதல் இல்லாமையே.

கீழே தரப்பட்டிருக்கும் கருத்துக்கள், ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் இருவரும் கடைபிடிக்க வேண்டிய பொதுவான ஆலோசனைகள். இங்கு தரப்பட்டிருக்கும் ஆலோசனைகளில் சில, குழந்தைத்தனமானதாகவும் நகைச்சுவையாகவும் தோன்றலாம்.. ஆனாலும் தம்பதிகளுக்குள் கவுரவம் பார்க்காது, கடைபிடிப்பதில் தவறில்லையே..

1. எழும்போதே ஒருவருக்கொருவர் புன்ன

கையுடன் பார்த்துக் கொள்ளுங்கள். குட்மார்னிங் சொல்லிக்கொள்வதில் தவறில்லை.

குட்மார்னிங் சொல்லிக்கொள்ளலாமே

2. வாரத்திற்கொருமுறை குடும்பத்தோடு வெளியில் சென்று வரலாம்.

வாரத்துக்கொருமுறையா குறைவா இருக்கே!

3. மனைவிக்கு / கணவனுக்கு வேண்டியவர்களிடம் தன்மையாக நடந்துகொள்ளுங்கள.

வில்லங்கம்

4. அவ்வப்போது சின்னச் சின்ன பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து ஆச்சர்யப்படுத்துங்கள்.

லஞ்சம்

5. எப்போதும் செய்தித்தாள் அல்லது டிவி பார்த்துக்கொண்டே இருக்காமல், கூடுமானவரை ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேச முயலுங்கள்.

டிவி கணெக்‌ஷன் கட் பண்ணினால் ஒகே.

6. சமையல் முதல் அனைத்து வேலைகளிலும் ஒருவருக்கொருவர் உதவ முற்படுங்கள்.

உதவும் கரங்கள்

7. சாப்பிடும் தருணங்களில் டிவி பார்க்காமல் பேசிக்கொண்டே சமையலை ருசித்து சாப்பிடுங்கள். அது எதிர் தரப்பினரை திருப்தியடையச் செய்யும்.

டிவி கணெக்‌ஷன் கட் சமையலை ருசித்து சாப்பிடலாம்.

8. தொடுதல் மிக முக்கியம். தனிமையான தருணங்களில் இடைவெளிகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். தலைகோதிவிடுவது, மடியில் தலை வைத்துப்படுப்பது, கை கோர்த்துக்கொள்வது போன்ற தொடுதல்கள் நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தும்.

தொடுதல் சுகம்

9. எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்ற எதிர்காலக் கனவுகள் பற்றி ஒருவருக்கொருவர் பேசுங்கள்.

எதிர்கால திட்டங்கள் அவசியம்

10. இருவருக்கும் பிடித்த, பொதுவான பாடல்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கேளுங்கள். அது யதார்த்த சூழலில் கேட்கப்படும்போது மனதுக்குள் புன்னகை உண்டாக்கும்.

பாடல்கள் கேட்கும்போது மனதில் அமைதி, புத்துணர்வு உண்டாகும்

11. பின்கூட்டி அணையுங்கள். இது உடல் சார்ந்தது மட்டுமின்றி மனரீதியாகவும் நெருக்கத்தினை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

விளக்கை அணையுங்கள்

12. நகைச்சுவையான தருணங்களில் ஒருவருக்கொருவர் விஷயத்தைப் பகிர்ந்து சிரியுங்கள்.

மனம் விட்டு சிரிக்க வேண்டும்.

13. I love you அல்லது I miss you போன்ற க்ரீட்டிங் கார்டுகளை அவ்வப்போது பரிமாறிக்கொள்ளுங்கள்.

தினம் தினம் வாய்மொழியாலே பகிரலாமே!

14. ஒருவரின் தேவைகள் என்னவேன்று மற்றொருவர் கேட்கும் முன்பே, அதனைப் புரிந்துகொண்டு நிறைவேற்றுங்கள்.

அருமை

15. வாதம் செய்யும்போதோ, அறிவுரை கூறும்போதோ, ஒருவர் சொல்வதை மற்றொருவர் அசட்டை செய்யாது கவனிக்க வேண்டும்.

சாத்தியமாவது கஷ்டம்தான்

16. தனக்குப் பிடித்த விஷயங்களை இன்னொருவர் செய்யும்போது மனம் விட்டுப் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள்.

திருப்தியை தரும்

17. ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணும்போது மற்றொருவரின் பார்வையிலும் இருந்து பார்த்து நடுநிலையாக முடிவெடுக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், தன் வாதம் தான் கடைசியாக இருக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள்.

முடிவு உங்கள் கைகளில்

18. வெளியிலிருப்பின், அழைபேசி மூலம் அவ்வப்போது பேசி அக்கறையை வெளிக்காட்டுங்கள்.

உடன் உதவும் தொடர்புச்சாதனம்

19. தங்கள் விருப்பங்களை மற்றொருவர் உடனே நிறைவேற்ற வேண்டும் என்று அவசரப்படுத்தாதீர்கள். பொறுமை அவசியம். அதே போன்று நீ இப்படித் தான் இருக்க வேண்டுமென தன்னுடைய விருப்பங்களை அடுத்தவர் மேல் திணிக்கவும் கூடாது.

சுதந்திரம்.

20. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுங்கள். சுய விருப்பு வெறுப்புக்களை தெரிந்துவைத்துக்கொள்வது மிக முக்கியம்.

புரிந்துணர்வு

21. எந்த சூழ்நிலையிலும் அவரவர்க்குரிய சுய மரியாதையை கெடுக்கும் வண்ணம் நடக்கக் கூடாது.

நம்பிக்கை

22. நண்பர்கள் உறவினர்கள் போன்ற வெளியாட்கள் வீட்டுக்கு வரும்போது அவர்கள் முன் ஒருவருக்கொருவர் குறை கூறிக்கொள்ளக் கூடாது.

சின்னப்பிள்ளைத்தனம்

23. உறவினர்கள் இருப்பின், மறைமுகமான, காதல் ஜாடைகளில் பேசிக்கொள்ளுங்கள்.

மாயாஜாலம்

24. பிறந்த நாள், காதலர் தினம் போன்ற நாட்களை மறந்துவிடாமல் ஒருவருடன் ஒருவர் ஒன்றாக நேரத்தை செலவழியுங்கள்.

கூடி மகிழ்தல்

25. தவறுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், தன் மேலுள்ள குறைகளையோ அல்லது தவறுகளையோ ஒத்துக்கொண்டு மனமார மன்னிப்பு கேட்கப் பழகுங்கள்.

பாவமன்னிப்பா!

26. கணவனோ மனைவியோ தம்மிடம் தவறினை ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்கும்போது அவரைக் குத்திக்காட்டாமல் மனதார மன்னித்து ஏற்றுக்கொண்டு சகஜநிலைக்குத் திரும்புங்கள்.

மன்னிப்போம் மறப்போம்

27. முத்தம் என்பது காமம் சார்ந்ததில்லை. அது காதலை வெளிப்படுத்தும் ஊடகமே.. தினமும் ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொள்ளுங்கள்.

அன்பின் வெளிப்பாடு

28. தான் என்ன செய்தால் மற்றொருவர் மகிழ்ச்சியாக இருப்பார் என்பதை அறியமுடியவில்லையெனில், “நான் என்ன செய்தால் உனக்கு சந்தோசமாக இருக்கும்“என வெளிப்படையாக அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

தேவைகளின் சங்கமம்

29. எப்போதும் பாசிடிவ்வாக யோசியுங்கள்.

எப்போதுமேயா! ஆஆஆ.........

30. வீட்டில், குழந்தைகளிடமும் தன்மையாக இனிமையாகப் பேசுங்கள், பழகுங்கள்.

குடும்பம் அது கதம்பம்

31. ஏதேனும் சந்தர்ப்பங்களில் பலவீனமாக உணர்ந்தீர்களானால் அதை தாராளமாக தன் துணையிடம் தெரிவித்து அவருடைய உதவியை ஈகோ பார்க்காமல் ஏற்றுக்கொள்ளலாம்.

பாரத்தை இறக்கிவைக்கலாம்

32. வேண்டாவெறுப்பாக இருக்காமல், வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் உண்மையான அக்கறையைக் காட்டுங்கள்.

எதிர்பார்ப்பே வாழ்க்கையா!

33. உங்கள் வாழ்வின் கடந்த கால அனுபவங்களை, அதாவது உங்கள் இருவருக்குள் நடந்த ஸ்வாரஸ்யமான காதல் சம்பவங்களை அவ்வப்போது நினைவுபடுத்தி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள்.

நினைவுகள் மீட்டப்படுகின்றன

34. மனரீதியாக மட்டுமின்றி உடல்ரீதியாகவும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துவைத்திருக்க வேண்டும். உடல் சார்ந்த நேரங்களில் கூட, காமத்தை விட காதல் ப்ரதானமாக இருக்க வேண்டும்..

காதல் இல்லை என்றால் வாழ்க்கை இல்லையா!

35. சாதாரணமாக கை கோர்க்கும் பிடியில் கூட உனக்காக நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.

கையணைப்பு - நம்மிக்கை

36. ஏதாவதொரு பொதுவான விஷயத்தை தேர்ந்தெடுத்து அதை சேர்ந்து ரசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உதாரணமாக இசை, மழை, பௌர்ணமி நிலவு, கவிதைகள், புத்தகங்கள் போன்றவைகள்.

ரசனை

37. தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறும்போது, உதாரணமாக தலைவலி என்று சொன்னால் “எனக்கு அதுக்கு மேல வலிக்குது“ என்று பதிலளிக்காதீர்கள். உண்மையான அக்கறையுடன் பணிவிடை செய்யுங்கள்.

அழகு

38. என்னதான் ஒருவருக்கொருவர் அதிகமாக காதலித்தாலும் அதை வெளிக்காட்டப் பழகுங்கள். மனதிற்குள் வைத்து ஒளிக்கும் காதல் ப்ரயோஜனப்படாது.

காதல் - கண்ணாடி

விட்டுக்கொடுப்பதும், புரிந்துகொள்வதும் அந்நியோன்யத்தை வலுப்படுத்தும். ஒருவருக்கொருவர் அவமானமோ வெட்கமோ பார்க்காமல் வெளிப்படையாக இருத்தல், ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேட்கவும், மன்னிக்கவும், பாரபட்சம் பார்க்காமல் அனைத்து விஷயங்களையும் ஒளிவுமறைவின்றி பகிர்தல் போன்றவைகள் கணவன் மனைவி உறவினை மேலும் வலுப்படுத்தும்.

இவைகள் பொதுவான கருத்துகள் . உங்கள் வீட்டில் எப்படி என்று பதியுங்கள் உறவுகளே!!!!!!

படித்ததில் மனதில் பதிந்தது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.