Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. அக்னியஷ்த்ரா

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    1962
    Posts
  2. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    23926
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38778
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20025
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/06/21 in all areas

  1. பார்வைகள் “Me Too” Movement அவுஸ்திரேலியாவை சுற்றி வளைத்து பிரதம மந்திரி இலிருந்து பாதுகாப்பு அமைச்சர் , Attorney General , பிரபல உதை பந்தாட்ட வீரர்கள், கடை நிலை அலுவலக ஊழியர்கள் என்று வாழ்வின் எல்லா நிலைகளிலும் இருக்கக் கூடியவர்களின் இருப்பினை கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கிறது. பெண் உரிமை என்று வாய் கிழியக் கத்தி கொண்டிருக்கும் நாம் உண்மையில் நடை முறையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்…? எனது அனுபவங்களின் தொகுப்பாக சில பதிவுகள் ………… பார்வை 1 கொஞ்ச நாட்களாகவே எனது கண் பார்வை சரியில்லை என்று ஒரு ஃபீலிங். இரவு நேரங்களில் டிரைவ் பண்ணும் போது முன்னாலிருக்கும் ரோடு மங்கலாக தெரிவது போல ஒரு பிரமை . போன கிழமை நிலைமை மேலும் மோசமாயிற்று. இரவு டிரைவ் பண்ணும் பொது முன்பு மங்கலாயிருந்த தெருக்களெல்லாம் இப்ப கறுப்பாகத் தெரியத் தொடங்கிற்று.இதென்னடா கொடுமை சரவணா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு ஹை பீம் ஐ தட்டி விட்டால் வீதி நன்கு தெரிந்தது. அத்துடன் எதிரே வந்த கார்க்காரனின் ஆட்சேப ஹார்ன் சத்தமும் கூடவே வந்தது. இருந்தால் போல் பொறி தட்டியது. வாகனத்தை நிற்பாட்டி விட்டு முன்னுக்கு ஹெட் லைட் ஐ போய்ப் பார்த்தல், சுத்தம் - இரண்டும் செத்துப் போய் இருந்தன . டொயோட்டா காரன் இப்ப இரண்டு வருடமாக முன்னும் பின்னமும் புது மொடலுக்கு மாத்தவில்லையோ என்று கேட்ட படி. அலுவலகத்தில் புதிதாக சேர்பவர்கள் முதல் தரம் எனது வாகனத்தைப் பார்க்கும் போது “என்ன ஒரு வருடம் இருக்குமா வாங்கி” என்று தான் கேட்பார்கள். ஏழு , எட்டு வருடம் என்று சொன்னால் நான் எதோ பகிடி விடுகிறேன் என்று அப்பால் போய் விடுவார்கள். இப்பிடி இருக்கும் போது அலுவலகம் தரும் வெஹிகிள் அலவன்ஸை திரும்பவும் கொண்டு போய் டொயோட்டா காரனிடம் கொட்டி அழ வேண்டிய அவசியம் இல்லை தானே. சொல்ல வந்த விஷயமே வேறு. எனது கார் ஓடும் 34 வருட கால அனுபவத்தில் -பழைய பியட் ஒன்றுடன் 1987 இல் திருகோணமலையில் தொடங்கியது- ஹெட் லைட் பல்பு பியூஸ் ஆகி மாற்ற வேண்டிய தேவை வந்தது இது தான் முதல் தரம். ஹெட் லைட் அப்பிடியே செட் ஆக மாற்ற வேண்டுமாக்கும் என நினைத்துக் கொண்டே டொயோட்டா சேவை காரனுக்கு அடிக்க , அவன் மாடல் நம்பரை கேட்டு விட்டு தங்களிடம் ரீபிளேஸ்மென்ட் பல்பு ஸ்டாக் இல் இல்லை என்றும் “சூப்பர் சீப் ஆட்டோ” போன்ற கடைகளில் இருக்கும் என்றும் சொன்னான் . அதனை வாங்கி வந்தால் போட்டுத் தருவானா என்று கேட்க, சில வினாடிகள் மௌனத்தின் பின்னர் “ ஓம் செய்யலாம், ஆனால் வாங்கிற இடத்திலேயேயே அவர்கள் போட்டும் தருவார்கள், இங்கே கொண்டு வந்தால் நாங்கள் சேவை சார்ஜ் எடுப்போம்” என்றான் . சோ “சூப்பர் சீப் ஆட்டோ “இற்கு போனேன். கவுண்டர் பெண்மணியிடம் கேட்க , இன்னொரு பெண்மணியிடம் என்னை அனுப்பி வைத்தா ள் , சிறு பெண்ணொருத்தி ,வயது இருபதுகளில் தான் இருக்கும் , பல்கலை மாணவியாக பகுதி நேர வேலை செய்பவராக இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன். கார் சமாச்சாரங்களில் அனுபவம் உடையவர்கள் யாரிடமாவது கூட்டிச் செல்வாள் என நினைத்துக் கொண்டேன். அந்த பெண்மணி என்னை ஒரு கம்ப்யூட்டர் திரைக்கு அழைத்துச் சென்று எனது வாகன மாடல் போன்ற விபரங்களை கேட்டு கம்ப்யூட்டருக்குள் அவற்றை தட்டி அனுப்பி இரண்டு விதமான பல்புகள் இருக்கின்றன என்று 30 செகண்ட்ஸ் நேரத்தில் சொல்கிறாள். இதே அலுவலை எனது கம்ப்யூட்டர் இல் 10 நிமிடங்களுக்கு மேலாக செலவழித்தது கண்டுபிடித்தது எனது ஞாபகத்திற்கு வந்தது. மூன்றாவதாக ஒரு LED பல்பும் இருந்தது. 6000K ரகம் 50% வெளிச்சம் கூட. அதை பற்றி கேட்டேன் , இருக்கின்றது, ஆனால் அது Off-Road பாவனைக்கு மட்டும் தான் அலவ்டு , Town ஓட்டத்திற்கு தர மாட்டோம் என்று தெளிவாக சொன்னாள். அந்த பல்புகளை பொருத்தி விடும் சேவையும் இருக்கா என கேட்டேன் . “ஆம் பத்து டாலர் சேவைக் கூலி” என்று பதில் வந்தது. “நல்லது , பொருத்துபவனை அழைத்துக் கொண்டு போய் இந்த பல்புகள் சரியாக பொருந்துகின்றதா என சரி பார்த்து விடலாமா” என கேட்டேன். “பிரச்சனை இல்லை செய்து விடலாம்” என்று பதில் வந்தது . அந்த இரண்டு செட் பல்புகளையும் எடுத்துக் கொண்டு வாகனம் நிற்பாட்டி இருக்கும் இடத்தை காட்டுமாறு சொல்லிக் கொண்டு முன்னே போனாள். பொருத்துபவனுக்கு அறிவித்திருப்பாளாக்கும் என உள்ளுக்குள்ளே நினைத்து கொண்டாலும் எதற்கும் உறுதி செய்து கொள்வோம் என்று பொருத்துபவன் அங்கே வருவான் தானே என்று கேட்டும் ( whether HE will come over there ) வைத்தேன். நிமிர்ந்து பார்த்து மெல்லிய புன்சிரிப்புடன் ஓம் என்றாள். வாகனத்தை நெருங்கியதும் Bonnet ஐ திறக்கச் சொன்னாள். கைக்கு கையுறையை மாட்டினாள். ஹெட் லைட் இன் பின் புறமாக கையை கொடுத்து வெகு இலாவகமாக சுட்டுப் போயிருந்த பல்பை கழற்றி எடுத்தாள். கையில் வைத்திருந்த இரண்டு வகைகளுடனும் ஒப்பிட்டுப் பார்த்தாள். அதில் ஒன்று தான் பொருந்தும் என்றாள். எல்லாம் ஒரு நிமிடத்துக்குள்ளேயே நடந்து முடிந்திருக்கும். நான் பேச்சிழந்து போய் அவள் செய்வதை பார்த்து கொண்டிருந்தேன். என் உள்ளேயிருந்து ஒரு குரல் எங்கேயேடா உனது “அவன்” என்று என்னை பரிகாசம் செய்து கொண்டிருந்தது, அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை தான். அடுத்த 10 செகண்ட்ஸ் இல் பல்பை மாத்தி விட்டு நிமிர்ந்தாள். மற்ற பக்கமும் மாத்த வேண்டும் என்றேன். இரண்டுக்குமென்றால் 15 டாலர் வரும் என்றாள். மௌனமாக தலையாட்டினேன். உள்ளுக்குள் ஒரேயடியாக வெட்கித்துப் போய் நின்றிருந்தேன். நான் இரண்டு வளர்ந்த பெண்பிள்ளைகளின் தகப்பன். இருவரும் மருத்துவ துறையில். வீட்டில் ஆண், பெண் சமத்துவம் பற்றி அடிக்கடி மனம் திறந்த உரையாடல்கள் இடம்பெறும் . தங்கள் அப்பா ஆண் பெண் சமத்துவம் பற்றி மிக நல்ல புரிந்துணர்வு கொண்டிருக்கிறார் என அவர்கள் முழுமையாக நம்புபவர்கள். அந்த பெண்ணுக்கு அந்த பல்புகளை மாற்றும் தத்துவம் இருக்கும் என்று யோசிக்கக் கூட இடம் கொடுத்திராத எனது ஆண் உயர்ச்சி மனப்பான்மை தடுத்துக் கொண்டிருந்த வெட்கக் கேடான விஷயத்தைப் பற்றி இளைய மகளுடன் கதைத்தேன் . “இதைத் தானே அப்பா நாங்களும் சொல்கிறோம் , எங்களையும் சமயங்களில் சில தூக்கி பறிக்கிற விடயங்களை நீங்கள் செய்ய விடுவதில்லை தானே; அதனுடைய நீட்சி தான் அப்பா இது.” “கவலைப்படாதீர்கள் எல்லாம் போக போக சரியாகி விடும். ரோம் கூட ஒரே நாளில் கட்டி முடிக்கப்பட்டதல்ல என்று நீங்கள் தானே அடிக்கடி சொல்வீர்கள்” என்று ஆறுதல் மொழியும் வந்தது…. பார்வை 2 வேறொரு சமயம் …..
  2. அங்கே சரியாக கூடைப்பந்தாட்ட மைதானத்தை ஒட்டியவாறு செல்லும் மின்விளக்கு கம்பத்தின் கீழ் வில்லி கைகள் இரண்டையும் தனது காட்சட்டை பையினுள் விட்டவாறு அந்த கம்பத்தின் மீது சாய்ந்து நின்றுகொண்டு பீலீக்ஸை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார், பீலீக்சின் கண்களால் நம்பமுடியவில்லை கண்களை மீண்டும் கசக்கிவிட்டு பார்த்தார், அது வில்லியே தான் மின்விளக்கின் வெளிச்சத்தில் அவரது முகம் தெளிவாக தெரிந்தது பீலீக்சின் வாய் அவரையறியாமலே வி .....ல் .....லி என்று குழறியது, சற்று நேரம் அவரை வெறித்து பார்த்துக்கொண்டிருந்த வில்லி மெதுவாக பின்னோக்கி நடந்து அந்த இருட்டிலேயே கரைந்து போனார். வெளிறிப்போன முகத்துடன் திரும்பிய பிலீக்சின் மனச்சாட்சி உறுத்தியது இனிமேல் தான் உனக்கு இருக்கு என்று. ரெக்டராக இருந்தகாலத்திலேயே வில்லி அகாலமரணமடைந்தால், கல்லூரி யாப்பின் படி அடுத்த நிலையிலிருந்த பீலிக்ஸ் பாடசாலை ரெக்டரானார், தன்னுடன் ஒரு உதவியாளரையும் வைத்துக்கொண்டார் ஆரம்பத்திலிருந்தே மூர்க்கத்தனம் அதிகமாக இருந்ததால் பாடசாலை முகாமைத்துவத்தில் பல சிக்கல்கள் உருவாக ஆரம்பித்தன, ஆசிரியர்களுடனும் சுமூகமான உறவு இல்லாமல் போக ஆரம்பித்தது, காலம் செல்லச்செல்ல பீலீக்ஸிடம் ஒரு தொய்வு தென்படத்தொடங்கியது, அந்தத்தொய்வு தானாக உருவாகியதல்ல, அவர் பார்க்கும் இடமெல்லாம் வில்லி அவருக்கு அருகிலிருந்து அவரையே உற்றுப்பார்த்து போல் தோன்றியது, இரவுகள் அவருக்கு எமனாகின, அந்த நேரத்தில் வெளியே செல்ல நடுங்கினார், முதலில் எப்போதாவது மது அருந்தும் பீலிக்ஸ் பயத்தினை போக்க தொடந்து மது அருந்த நாளடைவில் ஒரு முழுநேர குடிமகனாகிப்போனார். பீலீக்ஸை இந்தப்பாடு படுத்தும் வில்லி சமையல்காரியை விட்டுவிடுவாரா என்ன... வில்லி போட்டு வாட்டியெடுத்ததில் சொல்லாமல் கொள்ளாமல் அவள் இல்லத்தைவிட்டு ஓடியே போய்விட்டாள் அதற்க்கு பிறகு அவளுக்கு என்ன ஆனது என்று யாருக்குமே தெரியவில்லை.காலப்போக்கில் பீலிக்ஸ் ஒரு மன நோயாளி போல் நடந்து கொள்ளத்தொடங்கினார், இவையனைத்தும் ஒரு குறுகிய காலத்திலேயே நடக்க ஆரம்பித்துவிட்டது, ஒவ்வொரு நாளும் ஒரு கரிய உருவம் அவர் கண்முன்னே வில்லியின் அறையிலிருந்து அவரது தட்டு முட்டு பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த குடவுன் நோக்கி நடந்து செல்வதும், அந்த குடவுனில் ரோனியோ இயந்திரம் இயங்கும் சத்தம் இவரது காதிற்கு அருகில் இயங்குவது போல் கேட்பதும் வாடிக்கையாகி போனது, 1962, இலங்கை கிழக்கு மாகாணம் கார்த்திகை 8 அன்று முழுவதும் பீலீக்ஸை காணக்கிடைக்கவில்லை, அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது, பாடசாலைக்கும் பீலிக்ஸ் விடுப்பு அறிவித்திருக்கவில்லை, நீண்ட நேரமாக காத்திருந்தும் பீலீக்சிடமிருந்து எந்த தகவலும் வரவில்லையென்பதால் அவரது உதவியாளர் அவரை தேடி இல்லத்திற்கு வந்திருந்தார் நேரடியாக பீலீக்சின் அறைக்கு சென்ற அவர் கதவினை மெதுவாக தட்டினார், எந்த பதிலும் இல்லை சற்று நேரத்தின் பின் ஓங்கி தட்டினார், அப்போதும் எந்த பதிலும் இல்லை, பயந்து போனவர் பலங்கொண்டமட்டும் கதவினை தான் தோளினால் இடித்து தள்ளினார், கதவும் டமார் என்ற சத்தத்துடன் ஆவென்று திறந்து கொள்ள ,உள்ளெ வெறுமையாக இருந்தது, அங்கே பீலிக்ஸ் இருந்ததற்கான அடையாளமே இல்லை, அப்படியென்றால் எப்படி உள்பக்கமாக தாழிடப்பட்டிருக்கும் யார் தாழிட்டிருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே மேல் மாடியிலிருந்த இன்னுமோர் சகோதரரிடம் விசாரிக்க அவரின் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார், அந்த சகோதரரின் அறை வில்லியின் அறையை விட்டு சற்று தள்ளி இருக்க வில்லியின் அறையை , வில்லியின் அகாலமரணத்தின் பின் யாரும் பாவிக்க ஆரம்பிக்கவில்லை பெரும்பாலும் வெளிப்பக்கமாக பூட்டப்பட்டுதான் இருக்கும், உதவியாளர் கடக்கும்போதுதான் அவதானித்தார் இன்று அந்த அறை அரைகுறையாக மூடப்பட்டு கிடக்க கதவிடைவெளியினூடு யன்னல் வெளிச்சம் நிலத்தில் பட்டுக்கொண்டிருந்தது, யார் திறந்திருப்பார்கள் என்று கதவினை மூட முற்படும் போது எதேச்சையாக அவரது பார்வை அந்த இடைவெளியினூடு செல்ல, அவர் கண்ட காட்சியில் இதயம் ஒருகணம் நின்று பின் அதிவேகமாக துடிக்க ஆரம்பித்திருந்தது 2003 , இலங்கை கிழக்கு மாகாணம் அன்று காலை பாடசாலைக்கு சுலக்சன் வரவில்லை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனும் நண்பர்களும் அன்று நள்ளிரவு இரவு நடந்த விடயங்களையே சிலாகித்துக்கொண்டிருந்தனர், எப்படி அந்த கரிய உருவம் கணப்பொழுதில் காணாமல் போயிருக்கும் என்ற கேள்வி அவனை உசுப்பிக்கொண்டே இருந்தது, அப்படியே அன்றைய பாடசாலை பொழுது கடந்துவிட , இண்டைக்கு டியூசன் வகுப்பிற்கும் சுலக்சன் வரமாட்டான் வகுப்பு முடிந்ததும் நோட்ஸ் கொப்பியை அவனுடைய வீட்டிற்கு கொண்டுபோய் கொடுப்போம் என்று மனதிற்குள் நினைத்தவாறே டியூட்டரியை நோக்கி தன்னுடைய மிதிவண்டியை மிதித்தான், சரியாக வகுப்பை நெருங்கும் தருணம் அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது, சற்று தொலைவில் சுலக்சனோ காலைக் கெந்திக்கெந்தி வந்துகொண்டிருந்தான், "என்ன மச்சான், இண்டைக்கு வரமாட்டாய் என்று நினைத்தேன், கால் எப்படி...?" "கால் கொஞ்சம் பரவாயில்லை மச்சி, நாம எப்ப பள்ளியில் படிச்சிருக்கோம் அதுதான் காலையில் ஸ்கூலுக்கு வரவில்லை" "எப்படி வந்தனீ" "ஆட்டோவில் வந்தனான், டேய் இண்டைக்கும் இரவு படிக்க வருவியா" "உனக்கு பைத்தியமா,நான் வரல்ல வீட்டில் உன்னை விட்டுட்டாங்களா " "நான் ஏற்கனவே சொல்லிப்போட்டன் அப்பா போகச்சொல்லி சொல்லிவிட்டார் , நீயும் வா மச்சான் ஒரு முக்கிய விடயம் சொல்லவேண்டும்" "நான் வரல்ல" "டேய் வா மச்சான், கொஞ்சம் முக்கியமான விஷயம் வாணி மடங்கிட்டாள் கனக்க இருக்கு கதைக்க " "என்னது வாணியை மடக்கிட்டியா, அப்போ கட்டாயம் வாறன் " இருவரும் பேசி விட்டு வகுப்பு முடிந்ததும் இவன் சைக்கிளை எடுத்துகொண்டு வரும் முன் சுலக்சன் சென்றுவிட்டான் (தொடரும் )
  3. வீரம் தாய்மையில் விளைஞ்சது ........! 🦃
  4. தாண்டவம்
  5. இந்தக் கட்டுரையை சென்ற வருடம் இதே நாளில் எழுதியிருக்க வேண்டியது, கொரோனா வந்து திசைமாற்றி விட்டது. எழுத நினைத்த கட்டுரையை ஒரு வருடத்தின் பின்னர் வேறு விதமாக எழுதுகிறேன். ஐம்பதிலும் ஆசை என்பதில் எனக்கு உடைபாடில்லை. சென்ற வருடம் ஐம்பதாவது வயதை எட்டியிருந்தேன். முன்பெல்லாம் ஒவ்வொரு பத்தை எட்டும்போதும் வயதாகிக் கொண்டே போகிறதே எதையும் சாதிக்கவில்லையே என்ற விரக்தியும் எதிர்பார்த் இலக்குகளை எட்டவில்லையே என்ற கவலையும் தோன்றும். இப்போது ஆறுதலாக நான் கடந்துவந்த பாதையை யோசித்துப் பார்க்கும்போது பரவாயில்லையே என்று தோன்றுகிறது. எனது பாட்டனார் எனக்குச் சின்ன வயதில் தனது அனுபவங்களைக கதை போல் சொல்வார். பன்றி வேட்டையாடியது, வயலில் சூடு அடிக்கும்போது யானை வந்தது, சகோதரங்களுடன் முரன்பட்டு வேறு ஊர் சென்று கடின உழைப்பால் முன்னேறியது போன்ற பல கதைகள் சொல்வார். அன்று ஆவற்றைப் பெரிதாகக் காதில் வாங்கியதில்லை. அவர் சொன்னவற்றில் நினைவில் இருந்த சிலவற்றை பல வருடங்கள் கழித்து மீட்டபோது அவரைப்போல் எனக்கு சொல்லத்தக்கவாறு அனுபவங்கள் எதுவும் இல்லையே என்று தோன்றும். இப்போது அந்த ஏக்கம் இல்லை. இப்போது என்ன நிலையில் உள்ளேனோ அதைத் திருப்தியாக ஏற்றுக் கொண்டு அதனை மேம்படுத்தி எதிர்காலத்தைத் திட்டமிடுவதே புத்திசாலித்தனம் என்பதில் உறுதியாக உள்ளேன். வாழ்வதற்கு வாழ்க்கை இன்னும் ஏராளம் உள்ளது. அதற்கு எனது உடல் ஆரோக்கியம் முக்கியம். என்னுடைய உடலைக் கவனமாகப் பார்க்காவிட்டால் உள்ளத்தால் என்னை நிறைவாக உணர முடியாது. எனது இனம் நிலைக்க வேண்டுமானால் முதலில் நான் நன்றாக இருக்க வேண்டும். ஏனென்றால் எனது இனத்தில் நானும் ஒரு அங்கம். *** முன்பு ஒரு திரியில் ஓட்டப் பயிற்சி செய்வதாக எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் 15 நிமிடங்கள் - 2 கிலோமீற்றர் தூரம் ஓடினேன். ஓடி முடிந்ததும் மிகக் களைப்பாக இருக்கும். அதன்பின்னர் இன்னும் தூரம் ஓட வேண்டும் என்பதற்காக 3 கிலோமீற்றராக மாற்றிக் கொண்டேன். அது காலப்போக்கில் கடினமான பிரயத்தனத்துடன் 35-40 நிமிடங்களில் 5 கிலோமீற்றர்களாக ஆக மாறியது. அதுவே எனது அதி உச்ச எல்லை என்று நினைத்திருந்தேன். சில காலங்களின் பின்னர் படிப்படியாக நின்று ஓய்வெடுத்து ஒரு மணி நேரம் 7 கிமீ வரை ஓட முடிந்தது. இப்படியே சுமார் ஒரு வருடம் சென்றது. நான் இருக்கும் ஊரில் ஒரு உடற்பயிற்சி நிலைய உறுப்பினர்கள் சிலரைத் தற்செயலாக சந்திக்க நேரிட்டது. ஓட்டப் பயிற்சி செய்தால் இன்னும் முன்னேறலாம் என்று உற்சாகப் படுத்தினார்கள். அது நகரசபையால் நடத்தப்படுவதால் வருடத்துக்கு 75 யூரோ, முயற்சித்தும் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். வாரத்தில் 3 நாள் பயிற்சி. மாலை 6.30 க்கு ஆரம்பிக்கும். வேலை காரணமாக வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மட்டுமே பங்குபற்ற முடியும். 6 மாதப் பயிற்சியின் பின் 10 கிமீ ஓட்டப் போட்டி ஒன்றில் பங்குபெற முடிந்தது மட்டுமல்லாது சில மாதங்களுக்குப் பின்னர் அரை மரதன் ஓடும் அளவுக்கு வந்துவிட்டேன். முதலாவது 10 கிமீ போட்டி சரி, 50 வயதாகிறது ஒரு தடவை மரதன் ஓடினால் என்ன என்று தோன்றியது. மரதன் ஓடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்கும். ஓடியோ நடந்தோ தவழ்ந்தோ முடிவு எல்லை ஓட வேண்டும் என்பதே எனது இலக்கு. இந்த எல்லையைத் தாண்டுவதென்பது விவரிக்க முடியாத இனிய அனுபவம் என்று ஓடி முடித்தவர்கள் கூறிக் கேட்டுள்ளேன். சிலர் எல்லையில் காத்திருக்கும் தமது பிள்ளைகள், மனைவி அல்லது உறவினர்களைக் கட்டி அணைத்துக் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதைக் காணொலிகளில் கண்டிருக்கிறேன். ஆகவே கால்கள் சரியாக இயங்கும்போதே வாழ்க்கையில் ஒரு தடவை ஓடிப் பார்க்க முடிவு செய்தேன். எனக்குப் பயிற்சி தருபவராகிய ஸாஹிர் என்பவனிடம் சொன்னேன். மகிழ்ச்சியாக உற்சாகப்படுத்தினான். ஆனால் கடுமையான பயிற்சியைப் பின்பற்றினால் நான் நிர்ணயித்த இலக்கை விட நன்றாக ஓடலாம் என்றான். அதன்படி பரிசில் ஏப்ரல் 2020 இல் நடக்கவிருந்த சர்வதேச மரதன் போட்டியில் பதிவு செய்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 65 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். இது மரதன் வரலாற்றில் உலகில் அதிகம் பேர் பங்குகொள்ளும் மிகப் பெரிய போட்டியாகக் கருதப்பட்டது. போட்டிக்கு 4 மாதங்களுக்கு முன்னர் கடுமையான பயிற்சி ஆரம்பமாகியது. மழை குளிர் காற்று என்று எதையும் பார்க்க முடியாது. ஓட வெளிக்கிட்டால் ஓட வேண்டியதுதான். கிளப் உறுப்பினர்கள் 3 குழுவாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். முதலாவது குழு முயல் வேகத்தில் ஓடக் கூடியது. நான் 3 ஆவது ஆமை வேகக் குழு. நான் ஒரு தடவை முதல் முழுவோடு சேர்ந்து ஓடி ஆவஸ்தைப்பட்ட அனுபவம் இருந்ததால் அவர்களோடு சேர்வதில்லை. மழையிலும் பனி உறைந்த குளிரிலும் கொட்டும் வியர்வையுடன் அன்றொருநாள் மார்கழி மாதம் குளிர் மழை தூறிக்கொண்டிருந்தது, சிலர் பயிற்சிக்கு வரவில்லை. வேகமாக ஓடுபவர்களே அதிகமாக இருந்தனர். பழைய உறுப்பினர் ஒருவவன் அன்று வந்திருந்தான். அவன் பெயர் பிரெடெரிக், கரிபியன் தீவைச் சேர்ந்தவன். தனது ஊரில் சில காலம் தங்கிவிட்டு பிரான்சுக்குத் திரும்பியிருந்தான். அன்றைய இருளில் அவனது முகம் சரியாகத் தெரியவில்லை. அதிகம் நின்று பேசிக் கொண்டிருந்தால் குளிரில் நடுங்கத் தொடங்கும் ஆகவே மெதுவாக ஓட்டத்தை ஆரம்பிப்போம் என ஸாஹிர் கூறிவிட்டு பிரெடெரிக்கை அறிமுகப்படுத்தி நீங்கள் இருவரும் மட்டுமே இரண்டாவது முழுவில் பயிற்சி செய்யப் போகிறீர்கள் என்று கூறி நாங்கள் ஓட வேண்டிய பாதையையும் வேக மாற்றங்களையும் அவசரமாக் விளக்கிவிட்டு முதல் குழுவுடம் பறந்துவிட்டான். நானும் பிரெடெரிக்கும் தனியே நின்றிருந்தோம். ஓரிரு வார்த்தைகள் பரிமாறிக் கொண்டு ஓட ஆரம்பித்தோம். வீதியின் மின் வெளிச்சத்தில் சில நிமிடங்கள் மௌனமாக ஓடிக் கொண்டிருந்தோம். பிரெடெரிக் மெதுவாக ஓடுவதற்கே சற்றுச் சிரமப் படுவதாகத் தோன்றியது. 15 நிமிடங்களுக்குப் பிறகு வேகத்தைச் சற்றே அதிகரிக்க வேண்டும் ஆனால் வேகம் அதிகரித்ததாகத் தெரியவில்லை. 30 நிமிடத்தின் பின் வேகம் அடுத்த கட்டத்தை அடைய வேண்டும். ஆனால் அவன் கொஞ்சம் மூச்சு வாங்குவது தெரிந்தது. பேசாமல் முதல் குழுவோடு ஓடியிருக்கலாம் என்று தோன்றியது. பேச்சு வாக்கில் உனக்கு எத்தனை வயது என்று கேட்டேன். 71 என்றான். ஒரு கணம் எனது நாடி நரம்புகள் எல்லாம் செயலிழந்து அதிர்ச்சியிலிருந்து மீழ சில வினாடிகள் ஆனது. வாயிலிருந்து அப்படியா, நன்றாக ஓருகிறாய் என்ற வார்த்தைகள் மட்டுமே வந்தது. ஓடுவதற்கு வயது எல்லை கிடையாது என்பதை அன்றுதான் புரிந்து கொண்டேன். இன்றுவரை பிரெடெரிக் எனக்கு மரியாதைக்குரிய நண்பனாகவும் அறிவுரை கூறும் ஆசானாகவும் இருக்கிறான். படத்தில் இடது பக்கத்தில் பிரெடெரிக் பயிற்சி தொடர ஆர்வம் அதிகரிக்க இலக்குகளும் மாறிக்கொண்டிருந்தன. மரதன் ஆரம்பமாவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. *** ஓட்டப் பயிற்சியோ போட்டியோ ஏனைய விளையாட்டுகள் போல் போட்டி மனப்பான்மையுடன் அமைவதல்ல. ஒவ்வொருவரும் தமது தகமைக்கேற்ப தாங்களே ஒரு வரயறையை அல்லது தமது சொந்த இலக்கை வைத்து ஓடுவதால் மனதளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. இன்னொருவர்போல் ஓடவேண்டும் என்ற போட்டி மனப்பான்மையும் ஏற்படாது. மரதன் போட்டியிலும் 50 ஆயிரம் பேர் ஓடினால் அதில் முதல் 100 பேருக்குள்தால் சரியான போட்டி இருக்கும். ஏனையவர்கள் தமது சொந்த இலக்கை வைத்தே ஓடுவார்கள். ஆகவே 5கிலோமீற்றர் ஓடும் ஒருவர் ஒருவர் தன்னால் 10 கிலோமீற்றர் ஓட முடியவில்லையே என்ற கவலை தேவையில்லை. உடல் அமைப்பும் இவ்வாறுதான். எல்லோருக்கும் உடல் அமைப்பு ஒரே மாதிரி இருக்காது. என்னை விட உயரம் மிகக் குறைந்த ஒருவர் என்னைவிட மிக வேகமாக ஓடுகிறார். அதேபோல் என்னைவிட எடை கூடிய ஒருவர் என்னைவிட வேகமாக ஓடுகிறார். அதற்காக நான் இந்த இருவரையும் விட வேகமாக ஓட முடியவில்லையே என்று ஏங்க முடியாது. ஓடுவதால் உள்ள நன்மைகளில் முக்கியமானவை சில வேக ஓட்டத்தின்போது இதயம் அதிகமான இரத்தத்தினை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதால் இதயத் தசைகள் வலுவடைந்து இதயம் விரிவடைந்து ஒரே இதயத்துடிப்பில் அதிகமான இரத்தைதை உடலுக்கு வழங்கம் ஆற்றலைப் பெற்றுக் கொள்ளும். இதன் மூலம் இதயத்துக்கும் வேலைப்பழு குறைந்து நீண்ட காலம் இயங்கும் ஓடும்போது கால்கள் தரையில் படும்போது ஏற்படும் மைக்க்ரோ அதிர்வுகளால் தசைகளும் எலும்பும் சிறிய சிதைவுகளுக்குள்ளாகொன்றன. பின்னை ஓய்வின்போது சிதைவுகள் மறுசீரமைக்கப்பட்டு தசைகளும் எலும்புகளிம் புத்துயிர் பெறுகின்றன இரத்தத்தில் மேலதிக சீனியும் கொலஸ்ரரோலும் சக்தியாக எரிக்கப்படும் போட்டி மனப்பான்மையற்ற பயிற்சியாதலால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். ஒவ்வொரு பயிற்சியின்போதும் ஓடும்போது ஏற்படும் களைப்பு சோர்வு ஏக்கம் தளர்வு அவஸ்தை எல்லாவற்றையும் ஓட்ட முடிவில் மறந்து வர்ணிக்க முடியாத மகிழ்ச்சியை உணர முடியும் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். இன்னும் பல உடலை அசைத்து அதிக நேரம் வேலை செய்கிறேன், ஆகவே உடற்பயிற்சி தேவையில்லை என்று நினைப்பது தவறு. இரண்டும் ஒன்றல்ல. 1 மணி நேர உடற்பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள் உடலை வருத்திச் செய்யும் வேலையால் கிடைக்காது. *** ஆரம்ப ஓட்டப் பயிற்சி இது ஓட விருப்பம் இருந்தாலும் தயங்குபவர்களுக்கும் நாளைக்கு ஓடலாம் என்று இன்றுவர ஆரம்பிக்காமல் இருப்பவர்களுக்கும். முக்கிய குறிப்பு : உடல், இதயம் பலவீனமானவர்கள் உங்களது வைத்தியரின் ஆலோசனைக்குப் பின்னர் இதனைப் பின்பற்ற வேண்டும். சரியான சப்பாத்து உடை மற்றும் இதர உபகரணங்கள் இருந்தால்தான் ஓடுவேன் என்று நினைக்க வேண்டாம். இதையெல்லாம் பின்னர் பார்க்கலாம். முதலில் இருப்பவற்றை அணிந்து கொண்டு வெளியே வாருங்கள். எப்போது உங்கள் வயது, உயரம், நிறை, உருவம் எல்லாவற்றையும் விட்டு ஓட முன்வருகிறீர்களோ அதுவே உங்களது முதல் வெற்றி. உங்கள் உடையையோ உடலையோ ஓட்டத்தையோ பார்த்து யாராவது சிரிப்பார்களோ என்ற தயக்கம் சிறிதும் வேண்டாம். எல்லா அனுகூலங்களும் இருந்தும் ஓட்டத்தால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் புறக்கணித்து ஓடாதிருக்கும் கோடிக்கணக்கானவர்கள் மத்தியில் நீங்கள் ஓட முன்வந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். எடுத்த உடனேயே ஓட முயற்சிக்க வேண்டாம். தசைகளையும் இதயத்தையும் தயார்படுத்த வேண்டும். படிப்படியாகப் பயிற்சியை ஆரம்பிப்போம். நாள் 1 15 நிமிட வேக நடை அதைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் உங்களால் எவ்வளவு மெதுவாக ஓட முடியுமோ அவ்வளவு மெதுவாக ஓடுங்கள். அது வேகமாக நடப்பதை விட வேகம் குறைந்ததாகக் கூட இருக்கலாம். இந்த 10 நிமிடங்களை எட்ட முடியாமல் போனல் நீங்கள் மெதுவாக ஓடவில்லை என்று அர்த்தம். 10 நிமிடம் சாதாரண நடை நன்றாகச் சாப்பிட்டு நிறைய நீர் அருந்தி நன்றாகத் தூங்குங்கள். நாள் 2 பயிற்சி இல்லை நாள்3 1 மணி நேர வேக நடை நாள் 4 பயிற்சி இல்லை நாள் 5 15 நிமிட வேக நடை 30 நிமிட ஓட்டமும் நடையும். 1நிமிட மெதுவான ஓட்டம், 30 விநாடிகள் நடை என்பதைச் சுழற்சியாகச் செய்யுங்கள் 15 நிமிட நடை நாள் 6 பயிற்சி இல்லை நாள் 7 10 நிமிட வேக நடை விரும்பிய அளவு நேரம் மெதுவான ஓட்டம். கடைசி 1 நிமிடத்தை உங்களால் முடிந்தவரை வேகமாக ஓடுங்கள். 10 நிமிட நடை மெதுவாக ஓடும்படி வற்புறுத்தக் காரணம் அதிகமாகக் களைத்து அரைவாசியில் பயிற்சியை முடிக்கக் கூடாது என்பதற்காக. அத்துடன் மெதுவான ஓட்டம் என்பது ஓட்டப் பயிற்சியில் முக்கியமான அங்கம். மெதுவாக ஆரம்பிப்பது படிப்படியாக இதயத் துடிப்பை அதிகரிப்பதற்கு. சடுதியாக ஆரம்பித்தால் 10 நிமிடத்தில் களைப்பு ஏற்பட்டு பயிற்சியைத் தொடர முடியாமல் போய்விடும். தொடரும் நாட்களில் வேகத்தையும் நேரத்தையும் படிப்படியாக அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். *** வேகத்தை அதிகரிப்பதற்கான பயிற்சி இதும் ஏற்கனவே ஓரளவு ஓட முடியுமானவர்களுக்கானது. ஆரம்ப நிலையில் ஓடுபவர்களும் தாராளமாகச் செய்யலாம். பயிற்சியின் அங்கங்கள். A. Warm up : மிக மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக இதயத் துடிப்பை அதிகரித்து அதிக வேகம் எடுக்காமல் அதிக களைப்பு இல்லாமல் ஓடுவது. இது இதயத்தை சாதாரண நிலையில் இருந்து வேகத் துடிப்பிற்குத் தயார் படுத்துவது மட்டுமே. உங்கள் அதிகபட்ச வலுவில் 50-60% போதுமானது. B. மெதுவான ஓட்டம் : ஓட்டப் பயிற்சியில் இதுவும் மிக முக்கியமானது. இதயத் துடிப்பைக் குறைத்து தொடர்ச்சியாக சக்தியை உடலுக்கு வழங்குவது. மெதுவான ஓட்டத்தின் இறுதியில் களைப்பு உண்டாகக் கூடாது. C. தயார்படுத்தல் 1 - கால்களைப் பின்னால் மடித்து ஓடுதல். முன்னர் குறிப்பிட்டது போல இந்தத் தடவை கால்களை எந்த அளவு பின்னால் மடிக்க முடியுமோ அவ்வளவு மடித்து வேகமாகக் கால்கள அசைக்க வேண்டும். ஒவ்வொர அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். D. தயார்படுத்தல் 2 - முழங்கால்களை உயர்த்தி ஓடுதல். முழங்கால்களைச் சமாந்தரமாக மேலே தூக்கி வேகமாக ஓடுதல். ஒவ்வொரு அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். ஏறத்தாள நின்ற இடத்திலேயே ஓடுவது போன்றது. E. தயார்படுத்தல் 3 - கால்களை மடிக்காமல் ஓடுதல். முழங்கால்களை மடிக்காமல் கால்களை முன்னே மட்டும் உயர்த்தி வேகமாக ஓட வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். கிட்டத்தட்ட நின்ற இடத்திலேயே ஓடுவது போன்று இருக்கும். இந்த 3 பயிற்சிகளும் (C, D, E) இந்த வீடியோவில் 1:22 முதல் 2:18 வரை உள்ளது. F. Jamping jack - இது உங்களுக்குத் தெரிந்திருக்கும். G. ஓய்வு : கை கால்களைத் தளர விட்டு ஆழமாகச் சுவாசித்தல். நீர் அருந்தலாம். H. Stretching - அவசியமில்லை. செய்வதாக இருந்தால் 2 மணி நேரத்துக்குப் பிறகு அல்லது அடுத்த நாள் செய்யலாம். இனி பயிற்சியை ஆரம்பிக்கலாம். நீங்கள் ஏற்கனவே நன்றாக ஓடுவதால் நேரடியாகவே இரண்டாவது நிலை பயிற்சிக்கே போகலாம். 1 வாரத்தில் 4 நாட்கள் செய்ய வேண்டியவை. பயிற்சி 1 15 நிமிட Warm up (A) 1 நிமிட ஓய்வு 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் C 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் D 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் E 30 வினாடிகள் ஓய்வு. நீர் அருந்தலாம். மேலே குறிப்பிட்ட 15 வினாடிப் பயிற்சிகளை மீண்டும் 2 தடவை செய்யுங்கள் மிகவும் களைப்பாக இருக்கும். 15 நிமிட மெதுவான ஓட்டம் B. பயிற்சி முடிவடைகிறது. அடுத்த நாள் கால்களில் வலி இருக்கும். ஒரு நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 2 10 நிமிட Warm up (A) 1 நிமிட ஓய்வு 1 நிமிட Jamping jack F 1 நிமிட மெதுவான ஓட்டம் B 1 நிமிட Jamping jack F 1 நிமிட மெதுவான ஓட்டம் B 30 நிமிட ஓட்டம். முதல் 10 நிமிடங்கள் உங்கள் உச்ச வலுவில் 60 வீதமாக இருக்க வேண்டும். அடுத்த 7 நிமிடங்கள் 70 வீதமாக அதிகரியுங்கள். அதற்கடுத்த 7 நிமிடங்கள் உங்களால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு ஓட வேண்டும் ஆனால் களைத்து ஓட்டத்தைக் கைவிடும்படியாக ஓடக் கூடாது. மீதி நேரத்தை மெதுவாக ஓடி முடிக்க வேண்டும். பயிற்சி முடிவடைகிறது. அடுத்த நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 3 interval running 20 நிமிட Warm up (A) 30 வினாடிகள் ஓய்வு. 30 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 30 வினாடிகள் வேகமான ஓட்டம். இந்த 30 விநாடி ஓட்டங்கள் இரண்டையும் 10 தடவைகள் நிற்காமல் மாறி மாறிச் செய்ய வேண்டும். வேகமான ஓட்டத்தின்போது 80-90 வீதமான உச்ச வலுவுடன் ஓடலாம். 10 தவடவை ஓடி முடிக்க முடியாது போனால் நீங்கள் 90 வீதத்துக்கு மேலான வலுவுடன் ஓடியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். மறுபடி இன்னொரு தடவை 30 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 30 வினாடிகள் வேகமான ஓட்டம். இந்த 30 விநாடி ஓட்டங்கள் இரண்டையும் 10 தடவைகள் நிற்காமல் மாறி மாறிச் செய்ய வேண்டும். 5 நிமிட மெதுவான ஓட்டம் B. பயிற்சி முடிவடைகிறது. மிகவும் களைப்பாக இருக்கும், அடுத்த 1 அல்லது 2 நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 4 விரும்பியபடி ஓட்டம் உங்க விருப்பத்திற்கேற்ப நேர எல்லை வைத்தோ தூர எல்லை வைத்தோ விரும்பிய வேகத்தில் ஓடலாம். இந்த 4 பயிற்சிகளையும் சுழற்சியாகச் செய்யுங்கள். *** ஐம்பதுக்கு வருவோம். பிள்ளைகள் வளர்ந்து விட்டனர். ஊரில் இருந்திருந்தால் பிள்ளைகளின் படிப்பு முடிந்தால் அவர்களுக்கான வேலை, திருமணம், செலவு பற்றியெல்லாம் நினைத்துக் கவலைப்பட வேண்டும். இங்கு அதொன்றும் இல்லை. பொருளாதார ரீதியாக சாதாரனமாக வாழ்வதற்கான தன்நிறைவை அடைந்துவிட்டேன். வேலையிலிருந்து ஓய்வு பெறும் எல்லை தொலைவில் தெரிகிறது. எனக்கான எதிர்காலத்தைத் திட்டமிட்டு விட்டேன். என்மேலுள்ல அழுத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதுபோல் உணர்வு. சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் மனதில் இளமையுடனும் வாழ்க்கையைத் தொடர இதுவே பொற்காலம். நீங்களும் வாருங்கள் ஓடி வாழ்ந்திடலாம்.
  6. கொரோனா நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊர் வித்தியாசப்படுகின்றது. இதனால் தான் ஒவ்வொரு நாடும் அரசுகளும் முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாறுகின்றன. இதில் வீராவேசமோ அல்லது நான் சொல்வது சரி செய்தது சரி என எவராலும் முடிவெடுக்க முடியாது. கொரோனா வைரசு புதிசு கண்ணா புதிசு...😁
  7. வேண்டாம் தாயே, நடையே போதும், கொரோணா அதிர்விலிருந்து இன்னும் லண்டன் மீளவில்லை
  8. நான் ஜிம்மாவுக்கு போய் வருகிறன் கடை பூட்டித்தான் இருக்கிறது நீ வெளியில் இரு. சரி காக்கா. அந்த மனுசன் கடவுளுக்கு மிக பயந்தவர் 5 வேளையும் தொழுது கொண்டே இருப்பார். நான் சிறையிலிருந்து வந்து பல இடங்களில் வேலை தேடினேன் கிடைக்கவில்லை யாரும் கொடுப்பதாகவும் இல்லை போராளிகளுக்கு வேலை கொடுத்தால் எங்களுக்கு பிரச்சினை வரும் என்று சொன்ன கூட்டங்களுக்காக போராடினோமே என நினைக்கும் போது மனத்துக்குள் எனக்கு நானே காறி உமிழ்ந்து கொள்கிறேன். சிறையிலிருந்த‌ சிங்களவராகட்டும் , சிறைக்காவலராகட்டும் , அடிமை என நினைத்தாலும் மனிதராக பார்த்தார்கள் தமிழர்களோ மனிதராக பார்க்காமல் விரோதியாகவும் , துரோகியாவுமே பார்த்தார்கள் இதில் தமிழர்களின் பழக்கம் ஒன்று இருக்கிறது எப்பவும் வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரை கணித்து விடுவது, அல்லது இப்படித்தான் நடந்து இருக்குமெனவும் எண்னி கணித்தும் விடுவார்கள் இதுதான் இன்றுவரைக்கும் தொடர்கிறது என நினைத்து. வெளியில் இருந்த ஒரு உடுப்பு மூடையில் சாய நித்திரை வருகிறது எப்போதும் வேலை நேரத்திலே நித்திரை வரும் .நித்திரைக்கு போனால் நித்திரை வரவே வராது எனக்கு. பலர் ஏன் மதம் மாறுகிறார்கள் இனத்தை விட்டு தூர செல்கிரார்கள் என மெல்ல எனக்கும் புரிய வைத்தது அந்த வேலைத்தள சம்பவங்கள் எப்போதும் கஸ்டத்தில் இருப்பவர்களை கண்டு கொள்ளாது நம்ம சமூகம் அவன் வேறு மதத்தை தளுவிக்கொண்டால் அவன் வம்சத்தை இழுத்து கழுவிதிரிவார்கள் , காவியும் திரிவார்கள். நித்திரை மெல்ல கண்ணை அரட்ட என் இருண்ட வாழ்வு கனவு வெளிச்சத்தில் நிழலாக மிதந்து வருகிறது. எடேய் சின்னவோவ்!!................ அவன காணல்ல அம்மா என்ற சத்தத்தோடு பெரியவன் வருகிறான் அவன கண்ட நீயா? பள்ளிவிட்டு வந்தான் இந்தா புத்தக பைய எறிஞ்சு போட்டு , சோத்துக்கோப்பையும் கழுவல விளையாட ஓடிட்டான் நீ வெளிய எங்கயும் போகாத எங்க தங்கச்சி? இந்தா உள்ள இருக்கா சரி ரெண்டு பேரும் வீட்டில இருங்க அவனுக்கு ரெண்டு போட்டு ஆள கூட்டுக்கொண்டு வாரன் என செல்கிறாள் பொன்னி . பொன்னி வாழ்வது படுவாங்கரையில். படுவாங்கரையென்பது மட்டக்களப்பில் சூரியன் எழும் பகுதி எழுவாங்கரையெனவும் மறையும் பகுதி படுவாங்கரையெனவும் அந்த காலத்திலிருந்து சொல் வழக்கில் வருகிறது படுவாங்கரையில் அழகிய கிராமம் தும்பங்கேணி. பொன்னியும் அவள் மூன்று பிள்ளைகளும் வாழ்ந்து வருகிறார்கள் . மூத்தவன் ( மோகன் ) சின்னவன் ( கீரன் ) புள்ள ( கீதா) தன் பிள்ளைகளை பெயர் சொல்லி அழைக்கமாட்டாள் பொன்னி மூத்தவனை மூத்தவன் எனவும் , இளையவனை சின்னவன் எனவும் பெண் பிள்ளையை புள்ள எனவும் செல்லமாக கூப்பிடுவாள். ஊரவர்களும் அப்படியே கூப்பிடுவார்கள் மூத்தவன் உயர்தரம் படிக்க, இளையவன் தரம் 10 படிக்க , பெண் புள்ள தரம் 8 படிக்கிறாள் . தகப்பனாரோ விறகு வெட்ட காடு சென்றவர் இதுவரை வீடுதிரும்பல இவர்களும் தேடாத காடு இல்லை. சின்னவனை தேடிச்சென்ற பொன்னிக்கு அவன் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தான் எடேய் இப்ப வரப்போறியா இல்ல கம்ப முறிச்சு வெளுக்கட்டுமா உனக்கு? நான் வரமாட்டன் போ போ என்றான் அவன். எடேய் நீ எங்க விளையாடுனாலும் ராவைக்கு வீட்டுக்குத்தானே வரணும் வா உனக்கு அப்ப பூச தாரன் . ஒரு வழியாக அவனும் வர எடேய் கெதியா வாடா வீட்டுக்கு விசயம் ஒன்று சொல்லுறன் என்ன சொல்லுங்கவன் ஊட்ட வா சொல்லுறன் ம் வீட்டை வந்தடைந்ததும் முதலில் வாசலில் இருந்த முருங்க கம்பை முறிச்சு நாலு அடி போட்டாள் பொன்னி அவனும் அடியாதீங்க அம்மா அடியாதீங்க அம்மா என கத்தினான் . அடேய் நாளைக்கு பொடியனுகள் ஆள் பிடிக்கப்போறாங்களாம் உங்க மாமா வந்து சொல்லிட்டு போனான். உங்கள கவனமா இருக்கட்டாம் நீ சொன்ன கேட்கமாட்டியா உங்க அப்பன தொலச்சிட்டு நான் படுற பாடு காணாத நீங்களும் போகப்போறிங்களா? அவனுகள் வேற வீட்டுக்கு ஒருவர் வந்து போராட்டத்துக்கு வாங்க என கூப்பிடுறானுகள் உங்க மாமாவ‌ அம்மம்மா காறி கொடுத்துட்டு இப்பவும் அழுது கொண்டிருக்கிறது நீங்க பார்க்கலயா? நானும் அது போல வாழ்நாள் முழுக்க அழணுமா? சொல்லு சொல்லு என கண்னைக்கசக்கினாள் பொன்னி. நீ இங்க படிக்காத கல்லடி சிவானந்தா கொஸ்டலில் படி இளையவா அண்ணா இங்க படிக்கட்டும் வீட்ட ரெண்டு பொடியனுகள் இருந்தால் விடமாட்டானுகள் எப்படியும் பிடிச்சிட்டு போயிடுவானுகள் . சொல்லுறது விளங்குதா ம்ம் அங்க உங்க அப்பாட சொந்தங்கள் எல்லாம் இருக்கு அவங்க கிட்ட போகவேணாம் போனால் எப்படியும் நாலு கத கத கதைக்கும் காது பட. நீ கொஸ்டலில இருந்து படி அப்பாவும் இல்லலெண்டால் படிக்க இடம் தருவாங்கள் நான் இங்க ஆட , மாட வச்சி இவங்களுக்கு சோறு கொடுப்பன் . உன்னை நாளைக்கு கொண்டு போய் அங்க சேர்க்கிறன் என்ன ம்ம் என்றான் இளையவன். ஆட்டம் தொடரும்
  9. Movie:Nilave Nee Saatchi Music: MSV Singer:SPB Starring:Jaishankar,K.R.Vijaya Directed by P.Madhavan Year: 1971 மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து அருமை.,அருமை.
  10. நான் அழுத போதெல்லாம் என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது - 2 இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா - 2 - என் கூடவே கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா - 2 - என் கூடவே வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே (2) என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே - என் கூடவே
  11. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 மஹமூது நபிகள் பிரானே தமிழகத்து தர்ஹாக்களை காண வருவோம் || A.R.ஷேக் முஹம்மது
  12. இதுவரை சொன்னது......! இதுதான் தினசரி நடப்பது .......! 😂
  13. வேண்டாம், சில ஆய்வுகளின் படி, அதிகம் ஓடுவதும் சிலருக்கு முழங்கால் சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய தேவையை உருவாக்குகிறது. நாளுக்கு ஒரு மணித்தியாலம் வேக நடை போங்கள். சோறு, புட்டு, இடியப்பம், பாண் போன்ற அரிசி, மா, தானிய வகை உணவுகளை வாரத்துக்கு ஒருமுறை சிறிய அளவு என்று குறைத்து கொள்ளுங்கள். இரவு ஒரு பழம் மட்டும் சாப்பிட்டு தண்ணீர் குடியங்கள். காலையில் என்ன நிறை என்று நாளும் நெறுத்து பாருங்கள். ஒரு மாதத்துக்கு பிறகு நிறை குறைவதையும், உயர்இரத்த அழுத்தம் குறைவதையும் நன்கு தூங்க முடிவதையும் அவதானிப்பீர்கள். இந்த முறைகளில் இருந்து ஒரு வாரம் தவறினாலும் எல்லா பயனும் இழந்து போய் மீண்டும் நிறை கூடி, நோய்களும் வர தொடங்கும்.
  14. புத்த‌ன் மாமாவை நீண்ட‌ நாட்க‌ளுக்கு பிற‌க்கு க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி
  15. என் நண்பியின் கணவருக்கு மூன்று வாரங்களிற்கு முதல் கொறோனா தொற்று ஏற்பட்டது. கடுமையான காய்சல் 10 நாட்களாக தொடர்ந்தது.ஆனாலும் அவர் பயத்தில் வைத்தியசாலைக்கு செல்லவில்லை.ஆவி பிடிப்பது, ரசம் குடிப்பது என பல தமிழ் வைத்திய முறைகளை விடாமல் செய்து கொண்டிருந்தார்.ஆனால் அவருக்கு மூச்சு விடிவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. அவர்களிற்கு 1 வயதில் ஒரு குழந்தை இருக்கின்றது அந்த குழந்தையை பரிசோதிப்பதற்காக வந்த nurse தற்செயலாக நண்பியின் கணவரின் நாடித் துடிப்பை பரிசீலித்துள்ளார்.அப்போது அவரின் நாடித்துடிப்பு மிக குறைவாக இருந்ததால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது அவரது ஙரையீரல் 90% பாதிக்கப்பட்டிருந்தது.மிக கடுமையான நிலையில் அவர் உடல்நிலை காணப்பட்டது.தப்புவது கடினம் என வைத்தியர்களால் கூறப்பட்டது.எனினும் வைத்தியர்களின் கடுமையான ஒரு கிழமை போராட்டத்தில் அவர் இப்போது அபாய கட்டத்தை இப்போது தாண்டிவிட்டார். அவர் வைத்தியசாலை செல்லாமல் இருந்திருந்தால் இப்போது அவரை பார்த்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஒவ்வொரு உடலுக்கேற்ப இந்த கொறோனா தன் இயல்பை மாற்றிக்கொள்கிறது.யாராக இருந்தாலும் ஒரு வைத்தியரின் ஆலோசனையை பெறுவது பாதுகாப்பானது..
  16. சப்தம் வந்த பாடசாலை குப்பைமேட்டு திசையை நோக்கி ஓடினர் நால்வரும், ஐடியா மணியோ "மச்சான் சுலக்சனை நாய் முழுதும் குதறிப்போட்டுதோ தெரியாது, இண்டைக்கு நாய்க்கு வேட்டை தான் " என்று திகில்களத்திலும் கிளுகிளுப்பேற்றினான், அவனை முறைத்துவிட்டு நான்குபேருமாக டார்ச் ஒளியில் குப்பை மேட்டை நோட்டமிட துவங்கினர், அந்த இடத்தில் சுலக்சன் இருந்ததற்கான அறிகுறியே தென்படவில்லை, அப்போதுதான் குப்பை மேட்டை கூர்ந்து கவனித்தான் அவன் , ஓரிடத்தில் அழுத்தமாக இரத்த திட்டு தென்பட அந்த திசைவழியே நால்வரும் வெளிச்சத்தை பாய்ச்சினர் கொஞ்சம் தள்ளி இரத்தத்தடம் சற்று அதிகமாக காணப்பட்டது, இரத்தத்தடத்தை தொடர தொடர மெதுவாக சுலக்சனின் முனகல் ஈனஸ்வரத்தில் கேட்க ஆரம்பித்தது, இரத்தத்தடத்தில் இரத்தத்தின் அடர்த்தியும் மெதுவாக மெதுவாக அதிகரித்திருந்தது, நால்வருக்கும் விளங்கிவிட்டது எதுவுமே சரியாக்கப்படவில்லை. இரத்ததடத்தை தொடர தொடர மெதுவாக சுலக்சனின் முனகல் ஈனஸ்வரத்தில் கேட்கத்தொடங்கியது, இவர்கள் சென்ற வழி ஆண்கள் மலசல கூடத்திற்கு செல்லும்வழி அந்த வழியிலிருந்த ஒரு சிறிய வகுப்பறையின் மூலையில் முனகல் சத்தம் அதிகமாக கேட்க தமது டார்ச் வெளிச்சத்தை பாய்ச்சினர், அங்கே இடது காலில் குருதி பெருக்கெடுக்க வலியில் முனகியவாறு சுலக்சன் சுவருடன் குந்ததவைத்து உட்காந்திருந்தான்,பெருக்கெடுத்த குருதியின் அளவிலேயே விளங்கிவிட்டது இது நாய் கடித்த காயத்தால் வந்ததல்ல பயபிள்ளை நாய் விரட்டியதும் தலைதெறிக்க ஓடிய ஓட்டத்தில் குப்பை மேட்டில் நீட்டிக்கொண்டிருந்த போத்தல் ஓடு ஒன்றின் மீது காலை வைக்க தயாராக இருந்த ஓடு பாட்டா செருப்பை துளைத்துக்கொண்டு தம்பியுடைய காலை பதம் பார்த்து விட்டது , தரமான கீறல் , இடது பாதத்தில் தசை கிழிந்து தொங்கியது, "இப்படியே பார்த்து கொண்டு நிக்காமலுக்கு தூக்குங்கடா, இன்னும் கொஞ்ச நேரம் விட்டால் இரத்தப்போக்கில் மயங்கிருவான் " எல்லோரும் சேர்ந்து கைலாகு கொடுத்து சுலக்சனை தூக்க இவனோ ஐடியா மணியை பார்த்து சுலக்சனின் அப்பாவை வைத்தியசாலைக்கு அழைத்துக்கொண்டுவருமாறு தகவல் அனுப்பிவிட்டு, சுலக்சனுடன் பாடசாலையிலிருந்து நடைதூரத்திலிருந்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை நோக்கி நடந்தனர் இவர்கள் வைத்தியசாலையை அடையவும் சுலக்சனுடயை அப்பா மோட்டார் சைக்கிளில் வரவும் சரியாக இருந்தது, வந்தவர் இவர்களை பார்த்து முறைத்துவிட்டு சுலக்சனுடன் வைத்தியரை நோக்கி சென்றுவிட. நால்வரும் வெளிச்சத்தில் வெளி நோயாளர் பிரிவு இருக்கைகளில் ஒருவரை ஒருவர் நோக்கியவாறு உட்கார்ந்துகொண்டு நடந்தவைகளை அலச ஆரம்பித்தனர், அண்ணளவாக 15 நிமிடங்கள் கரைந்தித்திருக்கும், சுலக்சனை கொண்டு சென்ற அறையிலிருந்து வெளிப்பட்டார் அவனுடைய அப்பா, மெதுவாக நடந்து இவர்களை நோக்கி வந்தவர் அருகிலிருந்த இருக்கையில் உட்கார்ந்தவாறே கேட்டார், "டேய் நீங்களெல்லாம் படிக்கிறம் எண்டுபோட்டு இரவில் குப்பை மேட்டுப்பக்கம் என்ன செய்றிங்கள் , ஒண்ணுக்கு ஒதுங்குவது என்றால் பார்த்து ஒதுங்குறதில்லையா,ஆளுக்கு கால் நன்றாக கிழிஞ்சுபோட்டு எப்படியும் 15 தையலுக்கு மேல விழும் போல" என்று விட்டு இவர்கள் முகத்தை பார்த்தார், நால்வரும் நடந்தவற்றை சொல்லவா முடியும்.? ஆளாளுக்கு நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு தலையை குனிந்து கொண்டு உடகார்ந்திருந்தனர். சற்றைக்கெல்லாம் சுலக்சனுக்கு சிகிச்சை முடிந்துவிட்டது, காலை கெந்தியவாறே வெளிநோயாளர் பிரிவிலிருந்து வெளிப்பட்டான் சுலக்சன். நால்வரும் சுலக்சனை நோக்கிச்செல்ல, சுலக்சனின் அப்பாவோ நிறுத்திவிட்டு வந்த மோட்டார்சைக்கிளை எடுக்க சென்றுவிட்டார், சுலக்சன் மெதுவாக "நடந்த ஒன்றையும் சொல்லவில்லை தானே ...?" என்று கேட்க நால்வரும் ஏக காலத்தில் இல்லை என்று தலையை ஆட்டினர், சுலக்சன் மெதுவான குரலில் "நான் உனக்கு பின்னால தான் ஓடிவந்து கொண்டிருந்தன் திடீரென்று பார்த்தால் முன்னாள் அதே நாய் மச்சான் , இரண்டி அடி முன்னாலே வைத்து பாய தயாராக நானும் திரும்பி குப்பை மேட்டுப்பக்கம் ஓட்டமெடுத்தேன் போத்தல் ஓடும் காலை பதம் பார்த்து விட்டது" என்றான் அவனோ "நான் திரத்திய கறுப்புருவத்தை கண்டனியோ...? என்று கேட்க "ஓமடா உனக்கு முன்னால சில அடிதூரத்தில் தானே ஓடிக்கொண்டிருந்தவன், பிடிச்சிட்டீங்களோ" என்று கேட்க "இல்லடா மண்டப மூலையில் திரும்பினான் திடீரெண்டு ஆளை காணோம் ", "என்னடா சொல்றாய்...?" கால் வலியிலும் விறைத்து போய் நின்றிருந்தான் சுலக்சன், எல்லோரும் முழித்துக்கொண்டிருந்த தருணத்தில் சுலக்சனின் அப்பாவும் மோட்டார்சைக்கிளுடன் வந்துவிட அவருடன் போய் தொற்றிக்கொண்டான் சுலக்சன். சுலக்சனையும் அவனது தந்தையையும் அனுப்பிவிட்டு திரும்பிய அவன் இன்றைக்கு படித்தது போதும் எல்லோரும் வீட்டுக்கு கிளம்புவோம் என்று சொல்லிமுடிக்க முதல் ஐடியா மணியோ "வேற இனி இந்த விளையாட்டே வேணாம் நான் இனி இரவில் படிக்க வரமாட்டேன்" என்று சொல்லவும் மற்ற இருவரும் அதனை ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டினர் , நால்வரும் பாடசாலைக்கு திரும்பி தங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு ஆளை விட்டால் போதும் என்றவாறு ஓட்டமெடுத்தனர் 1962, இலங்கை கிழக்கு மாகாணம் வில் ......காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றது, சமையல்காரியின் கூக்குரல், சற்று நிமிடத்தில் செய்தி தீயை போல் பரவ முழு பாடசாலை ஆசிரியர்களும், ஊர் மக்களும் சகோதர்களது இல்லத்தில் முன் கூடிவிட்டனர், சகல சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு வில்லியின் உயிரற்ற உடலை சவப்பெட்டியில் கிடத்தி மக்கள் பார்வைக்கு வைத்தனர், பீலிக்ஸோ வியர்த்து விறுவிறுத்து காணப்பட்டார், கொரோனரிடம் வில்லியின் உடல் சென்றுவிடாமல் இருக்க செய்த பகீரத பிரயத்தனங்கள் அவரை அப்படி வியர்க்கவைத்துவிட்டது, வில்லியின் ஈமச்சடங்கில் முழு பாடசாலையும்,ஊரும் கதறியழுதது, ஒருவாறாக வில்லியை நல்லடக்கம் செய்துவிட்டு வந்த சகோதரர்கள் தங்களது முழு இல்லத்தையும் சுத்தம் செய்துவிட்டு களைத்து போய் தூங்கச்சென்றார்கள், பீலீக்ஸும் களைத்துப்போய் வந்து கட்டிலில் சரிந்தார் அப்படியே தூங்கிப்போனார், திடிரென்று திடுக்கிட்டு முழித்த பீலீக்சிற்கு கொஞ்சம் தண்ணீர் சாப்பிடலாம் போல தோன்றவும் , ஒரு குவளையில் நீரை நிரப்பிகுடித்துக்கொண்டே மொட்டை மாடியில் நின்று நோட்டம் விட்டார், அங்கெ அவர்கண்ட காட்சியால் அவர் கை நடுநடுங்க கையிலிருந்த குவளை தவறி விழுந்து உடைய அதனுள்ளிருந்த நீர் அவர் முகத்தில் தெறித்தது. (தொடரும் )
  17. அதை நான் விளங்கி பல காலம்🤣😂
  18. இனி இளவேனில் காலம் - நிழலி வெயில் சரம் பிடித்து நிலம் நோக்கி இறங்குகின்றது வானை வகுந்தெடுத்து பெரும் காற்று வீசுகின்றது பனிக்காலத்தை பெயர்த்து இளவேனில் விதைகளை விதைத்து செல்கின்றது வசந்தகாலத்தின் முதல் பாடல்களை சுமந்த வண்ணம் வனக் குருவிகள் ஊர் திரும்புகின்றன குளிர்காலம் இராப்பாடகனின் தொலைதூர குரலை போல் மெல்ல தேய்கின்றது முதன் முதலில் குறுக்கு கட்டியவளின் மார்பின் சரிவுகளில் தேங்கிய நீர்த் துளி போல் இலைகள் துளிர்க்க தொடங்குகின்றன வனம் இனி சூல் கொள்ளும் சிற்றாறுகள் உறைவிலிருந்து உருக்கொள்ளும் முத்தங்களுக்கிடையில் பரிமாற ரோசாக்கள் பூக்கத்தொடங்கும் கட்டைக் கால் தாராக்கள் குஞ்சுகளுடன் வெளிவரும் ரக்கூன்கள் குட்டிகளுடன் முற்றத்தில் வந்து நின்று விடுப்பு பார்க்கும் ஒரு நாளும் கேட்காத பாடல்களை சிறுகுருவிகள் பாட புதிய காலைகள் மலரும் பகல் ஒரு நீண்ட ரயிலாக வளைந்து செல்ல இரவு கடைசிப் பயணியாக வந்து அமரும் காலம் மீண்டும் தப்பாமல் இளவேனில் காலத்தை கொண்டுவரும் (இன்று நீண்ட நாட்களின் பின் வெப்பநிலை நேர் 11 இற்கு வருகின்றது. என் சிறு பூந்தோட்டத்தின் செடியில் இவ் வருத்தின் முதல் துளிர் தெரிகின்றது)
  19. காலம் மெதுவாக உருண்டோடிக்கொண்டிருக்க, மெதுவாக சபையிற்குள் நடக்க ஆரம்பித்திருந்த விரும்பத்தகாத விடயங்கள் வில்லியின் காதில் விழத்தொடங்கியது, சில விடயங்கள் கையும் மெய்யுமாக வில்லியிடமே மாட்டிக்கொண்டன , தொடர்ந்து அமைதி காத்த வில்லி ஒருகட்டத்தில் பொறுமை எல்லை மீற நேரடியாக சகோதரர் பீலிக்சிடமே சொல்லிவிட்டார், பீலிக்ஸும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்துவிட்டு தான் அவற்றை கவனத்திலெடுப்பதாக சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார், ஆனால் காலப்போக்கில் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை, சொல்லப்போனால் நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டே சென்றது, வில்லியால் தொடர்ந்தும் கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை , கடைசியாக தனது பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த வில்லி, தொடர்ந்தும் இப்படி நீடித்தால் தீவு முழுவதற்கும் பொறுப்பான சபை முதல்வரிடம் முறையிடுவதை தவிர வேறு வழியில்லை என்று பீலீக்ஸிடம் சொல்லிவிட்டு எழுந்து செல்வதை பீலிக்ஸ் வெறித்துப்போய் நோக்கிக்கொண்டிருந்தார், 1962, ஏப்ரல் 26 மதியம் 1 மணி சகோதரர் வில்லியும், மற்றைய சகோதர்களும் மத்திய உணவருந்திக்கொண்டிருந்தனர், வில்லி எப்போதும் மதிய உணவு முடிந்ததும் மிளகு ரசம் குடிப்பது வழக்கம், இந்த பழக்கம் அவர் ஆசியாவிற்கு வந்ததும் அவரிடம் தொற்றிக்கொண்டது , உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருக்க தவறாது அதனை பின்பற்றிவந்தார், சமையல்காரியும் மிளகு ரசத்தை மேசையில் வைத்துவிட்டு போக வழமை போலவே அதனை எடுத்து ரசித்து குடிக்க ஆரம்பித்தார், இன்று என்னவோ ரசத்தில் உப்பு கொஞ்சம் தூக்கலாக தெரிந்தது இருந்தாலும் வித்தியாசமான சுவையாக இருந்ததால் தொடந்து குடித்துவிட்டு, ஒரு குட்டித்தூக்கம் போட மாடியிலிருந்த அறைக்கு ஏறிப்போய் கட்டிலில் சரிந்தார். சிறிது நேரத்தில் இதயத்தை கையால் பிடித்து நெருக்குவது போல் உணர்வு, அப்படியே அடிவயிற்றிலிருந்து தொண்டை வரை எரியத்தொடங்கியது, கஷ்ட்டப்பட்டு எழுந்த வில்லி அருகிலிருந்த தண்ணீர் கோப்பையினை எடுத்தார் உள்ளே காலியாக இருந்தது , எழுந்து கதவுப்பிடியை அடைவதற்கு முன் தடுமாறி விழுந்தார் வில்லி கடைவாயோரம் ஈரலிப்பாக அரித்தது , ஆட்காட்டி விரலால் வாயோரம் வருடி எடுத்தார் விரலில் இரத்தத்துளி , ஒருவாறு சுதாரித்து எழுந்த வில்லி பலம் கொண்டமட்டும் கதவின் பிடியை திருகினார்,அது வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது. தொடர்ந்து போராடமுடியாத வில்லி அப்படியே கதவோரமாக உட்கார்ந்தார், வாயிலிருந்து இரத்தம் பீறிட கண்கள் மங்கிக்கொண்டு சென்றது, அந்த மங்கலினிடையே அவரது உயிர் கொஞ்சம், கொஞ்சமாக பிரிந்துகொண்டிருந்தது, சரியாக 20 நிமிடம் கழித்து வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்த கதவு திறக்கப்பட இரண்டு சோடி கால்கள் உள்ளே நுழைந்தன, அதில் ஒன்று மெதுவாக தடி ஒன்றினை எடுத்து முன்னோக்கி சரிந்து கிடந்த வில்லியின் தலையை உயர்த்தி பார்க்க நிலைகுத்தி நின்ற வில்லியின் வெளிறிப்போன கண்கள் அவர் ஏற்கனவே காலாவதியாகிவிட்டதை சொல்லாமல் சொல்லின. தடியை கொண்டு வில்லியை பரிசோதித்தவர் அடுத்தவரிடம் "இன்னும் சரியாக இருபது நிமிடம் கழித்து நீ அலறப்போகும் அலறலில் ஒட்டுமொத்த இல்லமும் கதவின் முன் நிக்க வேண்டும், இனிமேல் நமக்கு பிரச்சினை இல்லை " என்று விட்டு வில்லியின் அறையிலிருந்து வெளிப்பட்டார் பீலிக்ஸ். 2003 , இலங்கை கிழக்கு மாகாணம் எல்லோரும் இரவு 7:00 மணிக்கே பாடசாலைக்குள் ஆஜராகிவிட்டனர், சரியாக பதினொன்றரை மணிக்கு தங்களது அதிரடி நடவடிக்கைக்கு உரிய முஸ்தீபுகளை இட்டவாறு ஒவ்வொருவரும் தங்களுடைய டார்ச்சை இயக்கிப்பார்ப்பதும், எதிர்பாராத வகையில் அந்த நபர் எதிர் தாக்குதல் நடத்தினால் எப்படி எதிர்கொள்வது என்று ஒரு அதிரடிப்படையின் திடீர் அதிரடி நடவடிக்கைக்கு தயாராவதுபோல் தயாராகிக்கொண்டிருந்தனர். நேரம் 11:45 இரவுக்காவலாளி இன்றைக்கும் (சுலக்சனின் உபயத்தில் ) அரைப்போத்தல் சோமபானம் மாட்டிய உட்சாகத்தில் போதையில் உழன்றுகொண்டிருந்தான் ஐடியா மணி கட்டிட மாடியில் நிலையெடுக்க, அவனும் சுலக்சனும் எதிரெதிராக இருந்த இரு புதர்களின் பின் மறைந்து கொண்டனர் , இரண்டாவது குழு மண்டபத்தின் கடைக்கோடி மூலையில் நிலை எடுத்துக்கொண்டது. நேரம் 12:40 நேற்றையதை போன்றே அதே கரிய உருவம் வளவின் வாசலில் தென்பட ஐடியா மணி சுதாரித்துக்கொண்டான், நாய் காவல் காக்கத்துவங்கியதும் உருவம் குடவுன் உள்ளே செல்ல மெஷின் இயங்கத்துவங்கியது, உருவம் உள்நுழைந்ததை தெரிவிக்க ஐடியா மணி ஒருதடவை டார்ச்சை ஒளிர்ப்பித்து காட்டினான், கட்டிடத்தை வைத்தகண்வாங்காது பார்த்துக்கொண்டிருந்த அவனும்,சுலக்சனும் நடவடிக்கைக்கு தயாராகினர் நேரம் 1:05 மாடியிலிருந்து இரண்டுமுறை டார்ச் ஒளிர அவனும் சுலக்சனும் தயாராகிவிட்டனர், சரியாக ஐந்துநிமிட இடைவெளியில் காற்றை கிழிப்பது போல் அந்த உருவம் இவர்களை கடக்க, புதரை விட்டு எம்பி குதித்த அவனும், சுலக்சனும் அந்த கரிய உருவத்தை விரட்ட துவங்கினர், நிலையான வேகத்தில் காற்றில் மிதப்பது போல் வேகமாக சென்று கொண்டிருந்த உருவத்தை எட்டிப்பிடிக்க தன் வேகத்தை அதிகப்படுத்தினான் அவன், சுலக்சனோ அவனது வேகத்திற்கு தாக்குபிடிக்கமுடியாமல் மெதுவாக பின்தங்கத்தொடங்கினான் ஒருவாறு உருவத்தை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு நெருங்கியபோது அவனும் உருவமும் மண்டபத்தின் கடைக்கோடியை நெருங்கிவிட்டிருந்தனர். சரியாக இவன் கையை நீட்டவும் உருவம் மூலையில் திரும்பவும் அடுத்தபக்கத்திலிருந்து மற்றைய இருவரும் வெளிப்படவும் சரியாக இருந்தது, கணப்பொழுதில் அவன் கைக்கெட்டிய தூரத்திலிருந்த அந்த உருவம் மறைந்துபோயிருந்தது. "டேய் இப்பதான் விரட்டிக்கொண்டு வந்தனான்" "உனது காலடி சப்தம் கேட்டுத்தான் நாங்கள் ரெண்டுபேரும் வந்தம் " "டேய் நீங்க உண்மையாகவே காணவில்லையா ....?" "விரட்டிக்கொண்டு வந்தன் எண்டுபோட்டு நீ மட்டும் வாராய் " அவனுக்கு தலை விறைத்தது, சரி சுலக்சனிடம் கேட்போம் என்று விட்டு திரும்பினால் சுலக்சனை காணோம் அந்த கணத்தில் "ஐயோ அம்மா" என்று உச்சஸ்தாயியில் சுலக்சனின் அலறல் ,நாயின் உறுமலுடன் அந்த நிசப்தத்தில் எதிரொலித்தது. டேய் சுலக்சண்டா .. ஏக காலத்தில் அலறிய நால்வரும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓட்டமெடுத்தனர் (தொடரும் )
  20. ஈழத்தமிழினத்தின் இனறைய நிலையை எவ்வாறு புரிந்து கொள்வது?? எந்தவகையில் நீ போராடினாலும் எந்த வகையிலும் நீ கவனிக்கப்படமாட்டாய் இது சிறீலங்கா சொல்வதல்ல உலகம் ஏன் மக்களை காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஐநா சொல்வது? இன்றைய ஈழத்தமிழினத்தின் மௌனநிலை என்பதும் கூட மற்றவர்களால் கேட்கப்பட்டு அல்லது தேவைப்பட்ட ஒன்றல்ல ஈழத்தமிழினம் தன்னால் இதற்கு மேல் அழிவை சந்திக்கமுடியாது இதற்கு மேலும் தன்னிடம் போராடும் வலு கிடையாது என்பதனால் வந்தது அப்போ ஈழத்தமிழினத்தின் அடுத்த கட்டம் என்ன?? மீண்டும் உண்ணாவிரதம் ஊர்வலங்கள்? ஒன்றை மதிப்பவரிடம் அல்லது மனித மாண்புகளை கொண்டோரிடம் நாம் பரீட்சிக்கவேண்டியவை இவை கொலைகாரர்களிடம் அதற்கு துணைபோனவர்களிடம் அதற்காக ஆயுத விநியோகம் செய்தவர்களிடம் .... எவ்வாறு ஒரு படியாவது அவர்கள் முன்னகர்த்துவர்??? அவர்களுக்கு ஆப்பிழுத்த குரங்கின் கதை தெரியாதா??? நான் பிரான்சில் நடாத்தப்படும் அத்தனை ஊர்வலங்களுக்கும் சென்றிருக்கின்றேன் ஐரொப்பாவில் நடாத்தப்படும் அநேக ஊர்வலங்களுக்கும் சென்றிருக்கின்றேன் ஐநா வுக்கு முன்னால் நடாத்தப்படும் அத்தனை ஊர்வலங்களுக்கும் சென்றிருக்கின்றேன் இது வருடத்துக்கு 2 அல்லது 3 ஆக இருக்கும் இவ்வாறு செல்வதென்பது எவ்வளவு கடினமானது எவ்வளவு நேரத்தை விழுங்கக்கூடியது எவ்வளவு செலவானது என்று பல தமிழருக்கும் தெரிவதில்லை (அவ்வாறு தெரிந்தால் அவை பற்றி கிண்டலடிக்கமாட்டார்கள்) 2 நாட்கள் லீவு வேண்டும் மற்றும் எல்லைகளில் சோதனை என்ற பெயரில் நடக்கும் அவமதிப்புக்கள் திருப்பி அனுப்புதல்கள்....??? மற்றும் செலவுகள்?? இதையெல்லாம் தாண்டித்தான் போவதுண்டு போய் கால் கடுக்க பல மணி நேரம் நின்று நடந்து ஊர்வலமாக சென்றால் அங்கே எதையுமே கணக்கெடுக்கமாட்டார்கள் இத்தனை வருடங்களாக இவ்வளவு ஆயிரம் பேர் அமைதியாக வருகிறார்களே எமது கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நாம் சொல்வதையெல்லாம் கேட்டு திரும்பி சென்று மீண்டும் மீண்டும் அமைதியாக வந்து கெஞ்சுகிறார்களே என்று எந்த மனச்சாட்சியும் அற்ற செயற்பாடற்ற நிலை தான் ஒவ்வொரு முறையும். கடைசியாக நான் சென்றது 2018. அன்று அதே நடைமுறை அதே நடை ஊர்வலம் மேடைப்பேச்சு... இவை நடந்து கொண்டிருந்தபோது ஐநா வாசலில் சில கூக்குரல்கள் கேட்டன அங்கே சென்று பார்த்தபோது சில இளைஞர்கள் ஐநாவுக்குள் உட்புக எத்தனித்துக்கொண்டிருந்தார்கள் காவலர்கள் இவர்களை தடுத்து வைத்திருந்தாலும் அமைதியாக ஆனால் ஆக்ரோசமாக இளைஞர்கள் உட்புக எத்தனித்தனர் இந்த இளைஞர்களுக்கு ஆதரவாக கூட்டம் அதிகரிக்கத்தொடங்கியது நானும் அவர்களுடன் சேர்ந்த கொண்டேன் மேலும் நின்றிருந்த காவல்த்துறையினர் தம்மால் முடியாது போவதை உணர்ந்து மேலதிக காவல்த்துறையினரை வரவளைத்து சுற்றி வளைத்தனர். ஆனால் இளைஞர்கள் எவரும் பின் வாங்கவோ வன்முறையை பாவிக்கவோ இல்லை இறுதியாக இனியும் முன்னேறுவது என்றால் வன்முறையை தவிர வேறு வழியில்லை என்பதால் அழுதபடியும் திட்டியபடியும் எல்லோரும் பின் வாங்கினர். நானும் தான் அதற்கு பின்னர் நான் ஐநா ஊர்வலத்துக்கு போவதில்லை ஏனெனில் அவர்கள் எம்மிடம் வன்முறையை மட்டுமே விட்டு வைத்திருக்கின்றனர். இந்த யுத்தத்துக்கு உதவிய அனைவரும் அழிந்து உலகம் தலைகீழாக மாறினால் மட்டுமே எமக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு எம்மினத்தின் மேல் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அட்டூழியங்களுக்கு நியாயம் கிடைக்க சிலவேளைகளில் வழியுண்டு.. அதைவிடுத்து அமைதி வழி இவர்களுக்கு புரியும் என்று அப்பாவித்தனமாக நம்பி திலீபனாக பூபதி அம்மாவாக முருகதாசாக இறுதியாக அம்பிகை அம்மாவாக .... கைவிடப்படுவீர்கள்????? (ஆனால் அதே கதவை இன்றும் இன்னும் பலர் தட்டியபடி தான் உள்ளனர். தட்டுங்கள்)
  21. அசரீரி..! ******* மனிதா... உலகம் உனக்கென யாரவர் சொன்னார் உயிரினம் யாவையும் உந்தனின் படைப்பா இயற்கையின் அழகை எப்படி அழிப்பாய்-உன் இறப்புக்குள் மட்டுமா உலகத்தை படைத்தான். பிறப்புக்கு முன்னே எத்தனை கோடி-உன் இறப்புக்கு பின்னாலும் எத்தனை கோடி வாழ வருகின்ற உயிரினமுண்டு-உன் வாழ்க்கைக்கு மட்டுமா வையகமுண்டு. உன்னையே நீயே வெறுக்கின்ற காலம் உன்னால் தானே உருவானதிங்கு-நீயோ விண்ணையும், மண்ணையும் விஞ்ஞானமென்று அன்னையின் கண்ணையே அபகரித்தாயே. ஒவ்வொரு உயிரினம் வாழ்வதற்க்கேற்ப ஒவ்வொரு நிலமாக பிரித்துமே தந்தான் ஒவ்வொரு நிலத்தையும் உன் நிலமாக்கி-மற்ற உயிரினம் அனைத்தையும் அழிய நீ வைத்தாய். மனிதனாய் வாழவே உன்னை படைத்தான் மனிதநேயமும் உன்னுக்குள் வைத்தான் பொது நலம் தவிர்த்து நீ சுயநலமானாய்-பூமி பொறுமை இழந்துமே போராளியானாள். அன்புடன் -பசுவூர்க்கோபி- 16,03.2021
  22. செந்தில் அரிய வகை பகிடி..😊
  23. ஒரு கரிய உருவம் வளவின் வாயிலில் திடீரெண்டு தென்பட்டது, படுத்துக்கிடந்த நாயோ சரேலென்று எழும்பி அந்த உருவத்தின் முன்னே ஓடி வந்து அந்த குடவுன் அருகே நெருங்கவும், இழை அறுந்த மின்குமிழ் மங்கலான ஒளியை பரப்பவும் சரியாக இருந்தது, அந்த கரிய உருவமோ ஓட்டமா,நடையா என்று அனுமானிக்க முடியாத வேகத்தில் குடவுனை நெருங்கி உள்ளேசென்றதும் ரோனியோ இயந்திரம் கைகளால் சுற்றப்படும் சத்தம் மெதுவாக காற்றில் எதிரொலிக்க தொடங்கியது, அனைவரும் விறைத்துப்போய் நோக்கிக்கொண்டிருக்க அந்த நாயோ குடவுனை சுற்றி காவல் காக்க தொடங்கியது, அனைவரிடமும் இருந்த மிகப்பெரிய கேள்வி அந்த உருவம் நடந்ததா இல்லை காற்றில் மிதந்ததா என்பதே, சரியாக ஒரு நாற்பத்தைந்து நிமிடம் கழித்து அந்த உருவம் குடவுனிலிருந்து வெளிப்பட நாயோ வளவின் வாயிலுக்கு சென்று நின்றுகொள்ள மின்குமிழும் அணைந்துவிட்டது, மெதுவாக சென்ற உருவம் இவர்கள் இருந்து படிக்கும் மண்டபத்தின் பின்புறம் சென்று இருட்டில் கரைய, நாயோ சர சரக்கும் புதரினுள் புகுந்து வந்த வழியே மறைந்துவிட்டது, நடந்த அனைத்து சம்பவங்களையும் பார்த்து பயத்தில் உலர்ந்து காய்ந்து போன வாயில் பேச்சுவராது ஆளையாள் பார்த்து முழித்துக்கொண்டிருந்தனர் அனைவரும், ஐடியா மணிதான் மௌனத்தை கலைத்தான் மச்சான்ஸ்....இது யாரோ ஒருவன் நம்மட ஸ்கூலை தப்பா யூஸ் பண்றான் போல இருக்கு ,நம்மட வொச்சரும் உடந்தை இல்லாட்டி எப்படி டெய்லி அண்ணருக்கு அரைப்போத்தல் ஊத்த காசு வருகுது . சுலக்சன் : "அப்பிடி என்ன நம்மடை பள்ளியில் செய்யப்போறான் " , ஐடியாமணி : 'மெஷின் சத்தம் கேட்கலையோ கள்ள நோட்டுகூட அடிக்கலாம் ' இது அவன் :'டேய் அது ரோனியோ மெஷின் சத்தமடா ' ஐடியாமணி : "நீ போய் கிட்ட நின்று பார்த்தநீயோ" அவன்: "அப்போ கரண்ட் எங்கயிருந்து வருது " ஐடியாமணி : "டேய் நிலத்திற்கு கீழாலையிருந்தும் கரண்ட் எடுக்கலாம்டா" இதற்கு மேல் ஒருவருக்கும் தங்களது கருத்துக்களை வைத்து எதிர் வாதம் செய்ய முடியவில்லை, அடுத்து என்ன செய்வது என்று ஒவ்வொருவரும் ஒருத்தரை ஒருத்தர் நோக்கிக்கொண்டிருக்க சுலக்சன் தீர்க்கமாக சொன்னான், நாளைக்கு அவனை பிடிக்கவேண்டும், எல்லோரும் விறைத்து போய் திரும்பினர் ஐடியா மணியோ "உனக்கு லூசா அந்த நாயை தாண்டி எப்படி பிடிப்பாய் " சுலக்சன் "ஒழுங்காக கவனி வளவு வாசல் வரைக்கும் தான் நாய் வருகிறது, அதற்க்கு பிறகு ஆள் தனியாகத்தான் போகுது நாளைக்கு நானும் ,அவனும் வாசல் தாண்டி மண்டபம் நோக்கிய ஒழுங்கைக்குள் ஒழித்து நிற்போம், ஆள் வாசல் தாண்டியதும் ஐடியா மணி மேல் மாடியிலிருந்து டார்ச்ச்சை இரண்டு முறை விட்டு விட்டு அடிப்பான், நாங்கள் பின்னால் விரட்ட நீங்கள் இருவரும் மண்டபத்தின் மூலையிலிருந்து முன்னாள் வரவேண்டும் ஆளை கோழி அமுக்குவது போல் அமுக்குகிறோம் " தரமான திட்டம், எல்லோரும் தயார் ,ஆளாளுக்கு மெதுவாக கட்டிடத்திலிருந்து வெளியே வந்து தங்களது படிப்பை தொடர்ந்தனர் 1952, இலங்கை கிழக்கு மாகாணம் வில்லியை பொறுத்தவரை சகலமும் சிறப்பாக போய்க்கொண்டிருந்தது, காலையில் பாடசாலை, பிற்பகலில் கூடைப்பந்து பயிற்சி, தேவாலயம் இப்படி அவருக்கென்றே ஒரு வாழ்க்கைமுறையை அமைத்துக்கொண்டார், பாடசாலையின் தற்போதைய ரெக்டர் ஓய்வு பெறும் காலமம் நெருங்கிக்கொண்டிருக்க, வில்லி ஒவ்வொருநாளும் தன்னை மேம்படுத்திக்கொண்டிருந்தார், அந்த நேரத்தில் தான் புதிய சகோதரர் ஒருவர் அவரது மடத்திற்கு மாற்றலாகி வந்திருந்தார், இந்தியாவில் பிறந்து வளர்ந்த சுதேசியாக இந்திய சபை பிரிவிற்குள் உள்வாங்கப்பட்டு ஒரு சிரேஷ்ட துறவியாக வளர்ந்திருந்த அவரது பெயர் பீலிக்ஸ் (Felix), சகோதரர் பீலிக்ஸ் பார்ப்பதற்கு சற்று கண்டிப்பான முரட்டு சுபாவம் கொண்டவர் தோற்றமும் அப்படித்தான் இருக்கும், நாளடைவில் வில்லிக்கும் , பீலிக்சிற்க்கும் நெருக்கம் ஏற்பட்டு பீலீக்சின் ஆன்மீக வழிகாட்டியாகவே மாறிவிட்டார் வில்லி.காலப்போக்கில் பாடசாலையின் தற்போதைய ரெக்டர் ஓய்வுபெற்று மாற்றலாகி சென்றுவிட, வில்லி பாடசாலையையும், பீலிக்ஸ் சபை மட முதல்வராகவும் பொறுப்பெடுத்துக்கொண்டனர், (தொடரும்)
  24. மொழி ஆதிக்கம்..! ************ சிங்கள நகரமெல்லாம் சீன எழுத்துக்கு முதலிடமா.. சிங்களம் ஆங்கிலம் அதற்கு கீழே இருப்பது சிரிப்பைத் தருகிறது. ஊர் பலகையில்-தமிழ் மொழி இல்லையென்று உனக்கு மகிழ்வு இருந்தால் விரைவில்.. உன் மொழியும் அழிந்து உலக மொழியொன்று வியாபிக்கும்.. இது உண்மை. அப்போதும் உணருவாயோ தெரியவில்லை ஏனென்றால் இப்போது தேசத்தின் கீதம் கூட குயிலாக இருந்தாலும் மயிலாக இருந்தாலும் சிங்கம் போலத் தான் கர்ச்சிக்க வேண்டுமாமே. உன்நாட்டில்.. அன்புடன் -பசுவூர்க்கோபி-
  25. சபை முதல்வரின் கூற்றுக்கிணங்க , கோவாவிலிருந்து நேராக இலங்கை கிழக்கு மாகாணம் வந்திறங்கினார் வில்லி, பயணக்களைப்பை இரண்டுநாட்கள் ஓய்விலிருந்து கழித்துவிட்டு பாடசாலையை சுற்றி நோட்டம்விட தொடங்கினார். அந்த பாடசாலையும் ,அதன் சூழலும் அவருக்கு பிடித்துப்போனது, மெது மெதுவாக பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் என்று எல்லோரது மனதிலும் இடம்பிடித்த வில்லி,சில மாதங்களிலேயே முழுப்பாடசாலைக்குமே பிடித்துப்போன ஆசிரியராக மாறிப்போனார், பாடசாலை நேரம் தவிர்ந்த மாலை நேரங்களில் பாடசாலை கூடைப்பந்து அணிக்கு பயிற்சி வழங்கி மெருகேற்றினார், கிட்டத்தட்ட முழு இலங்கையிலும் முதன்முதலில் ரோனியோ மெஷினை ஐரோப்பாவிலிருந்து தருவித்து ரோனியோ மெஷின் பாவித்த முதல் பாடசாலை எனும் பெருமை பாடசாலைக்கு கிடைக்க வழிசமைத்தார், பிரதர் வில்லியம் என்று அழைக்கப்பட்டாலும் அவர் ரோனியோ மெஷின் இயக்குவதை அடிக்கடி பார்க்கும் சிறுவர்கள் எல்லாம் காலப்போக்கில் "ரோனியோ பிரதர்" என்று அழைக்க தொடங்கினர், இப்படி பாடசாலையில் ஒரு முக்கிய நபராக தன்னை தகவமைத்துக்கொண்டார் வில்லி. காலம் மெதுவாக நகர நகர இவரது சபை இல்லத்திற்கு புதிய துறவிகள் மாற்றலாகி வருவதும் போவதுமாக இருக்கும் போது வில்லியின் வாழ்க்கையை புரட்டிபோடப்போகும் ஒருவரது அறிமுகம் கிடைத்தது 2003, கிழக்கு மாகாணம் 'தீபம்' பாடசாலையின் வெள்ளிவிழா சஞ்சிகை அவனுள் ஏற்படுத்தியிருந்த பிரமிப்புகள் ஏராளம் 100 வருட பாரம்பரியம் கொண்ட அந்த பாடசாலையில் இரண்டு சஞ்சிகைகளே வெளியாகியிருந்தது, முதல் சஞ்சிகை வில்லியின் காலத்திலும் ,இரண்டாவது சஞ்சிகை இன்னுமொருஅதிபரின் காலத்திலும் வெளியாகியிருந்தது, இரண்டினதும் பிரதம பதிப்பாசிரியர் வேறுயாருமில்லை அது அவனுடைய பாட்டி அவரொரு பயிற்றப்பட்ட ஆசிரியராக பிரதர் வில்லியம் பணியிலிருக்கும் போதுதான் அவரது பாடசாலையில் இணைந்தார், வில்லியால் ஒரு பல்துறை விற்பன்னராக வளர்த்தெடுக்கப்பட்டவர் , இரண்டாவது சஞ்சிகை பதிப்பை 5 வயது சிறுவனாக வீட்டில் இருந்து வேடிக்கை பார்த்த நினைவுகள் அவனை வருடிச்சென்றன, இன்றும் அந்த இரண்டு சஞ்சிகைகளையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான். சிறுவயதில் அவனது பாட்டியிடமிருந்து பல செவிவழி கதைகள் கேட்டு நினைவினில் வைத்திருந்தான் நேரம் இரவு 8:30 பாடசாலையின் கூடைப்பந்து மைதானம் முன்னே அத்தனை பேரும் ஆஜர் திட்டம் ஏற்கனவே தீட்டியதுபோல இரவு 11:00 மணிக்கு மூன்றாம் மாடி கட்டிடத்தினுள் உள்நுழைந்து நோட்டம் விடுவது, ஒவொருத்தராக மற்றவருடைய முகத்தை பார்த்துக்கொண்டு நேரத்தை போக்கிக்கொண்டிருந்தனர் நேரம் 11:00 ஒருவர் பின் ஒருவராக கட்டிடத்தினுள் நுழைந்துகொண்டிருக்க காவலாளியோ வாங்கி வைத்திருந்த அரைப்போத்தல் சோம பானத்தை உள்ளே தள்ளிவிட்டு நிறைவெறியில் சாக்குக்கட்டிலில் உழன்று கொண்டிருந்தான், மேசைகளை அடுக்கி ஏறி நின்று கொண்டு ஒவ்வொருத்தராக நோட்டம் விட ஆரம்பித்தனர், நேரம் 11:49 ஆகும் போது, அந்த வளவினை ஒட்டியிருந்த புதர்கள் சர சரக்க அதனுள்ளேயிருந்து ஒரு நாய் வெளியே வந்தது, பார்த்தமாத்திரத்திலேயே அவனுக்கும்,சுலக்சனுக்கும் புரிந்துவிட்டது இது அதே நாய் தான், வந்த நாய் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அந்தவளவின் வாயிலில் சென்று படுத்துக்கொள்ள ஒன்றுமே நடப்பதாக தெரியவில்லை, நிமிடங்கள் கரைய மேசையில் நின்று கால்கள் வலித்தது தான் மிச்சம், ஒவொருத்தராக மேசையின் மீது திரும்பி உட்கார்ந்து கொண்டு தங்களுக்குள்ளே முறை போட்டுக்கொண்டு 15 நிமிடத்திற்கொருவர் என்று நோட்டம்விட்டுக்கொண்டிருந்தனர் நேரம் 12:55 "ஐடியா மணியின்" முறை திடிரென்று அருகில் திரும்பிப்பார்த்தவாறு உட்கார்ந்திருந்த அவனின் தலையை உசுப்பி எழும்புமாறு சைகை செய்ய முழு குழுவும் எழுந்து நின்று மெதுவாக தங்கள் தலையை உயர்த்தினர்..அப்போது அங்கே சில அமானுஷ்யங்கள் நடக்க ஆரம்பித்தன (தொடரும் )
  26. இருவரும் இரத்தம் உறைந்து போய் , மெதுவாக பின்னேறிக்கொண்டிருக்க நாயோ இன்று ஒரு சம்பவத்தை நடத்திக்காட்டியே தீருவது என்ற முடிவில் இருவர்மேலும் வெறிகொண்டு பாய எதுவாக குனிந்து எம்ப தயாரானது, அந்தக்கணத்தில் ..திடீரென்று இவர்களிருவரும் பின்புறமிருந்து ஒரு டோர்ச்சின் மின்னொளியுடன் "தம்பி நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன செய்றீங்க...?" என்ற வசனமும் சேர்ந்து ஒலித்தது , திடுக்கிட்டு இருவரும் திரும்பி பார்க்க அங்கே பாடசாலை இரவு காவலாளி நின்றுகொண்டிருந்தார். அவரை பார்த்துவிட்டு இருவரும் நாயை நோக்கி திரும்பிய கணம் அங்கு நாய் நின்ற அடையாளமே இல்லை, கணப்பொழுதில் நடந்து முடிந்துவிட்ட சம்பவத்தால் இருவருக்குமே குரல் அடைந்துக்கொண்டது, இருந்தும் ஒரு மாதிரி சுதாகரித்துக்கொண்டு "அது .......ஒண்டுக்கு போக வந்தம் அண்ணன் " என்று சுலக்சன் சொல்ல காவலாளியோ சகட்டு மேனிக்கு கிழிக்க தொடங்கினான், "இங்கே வரக்கூடாது என்றெல்லா சொல்லியிருக்கன் ...நாளைக்கு நாய் அது இது என்று கடிச்சால் நான் தான் பதில் சொல்லவேணும், இப்படி நீங்க கண்டபடிக்கு இருட்டிற்குள் திரிவீர்கள் என்றால் நான் அதிபரிடம் முறையிட்டுவிடுவேன்,இது தான் கடைசி எச்சரிக்கை இனி உங்களில் யாரையும் இங்காலப்பக்கம் காணக்கூடாது " என்று முடித்தான், மன்னித்துக்கொள்ளுங்கோ அண்ணன் என்றுவிட்டு இருவரும் நடந்ததை தமக்குள்ளே மென்குரலில் பேசிக்கொண்டுசெல்வதை அவன் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன, அடுத்தநாள் மொத்த குழுவும் பாடசாலையில் அவர்கள் வழமையாக சந்திக்குமிடத்தில் ஆஜர், நடந்தவற்றை இவன் விபரிக்க, நாயிடம் மாட்டிய கதையை சுலக்சன் விபரிக்க மற்றைய மூவருக்கும் ஆர்வம் பற்றிக்கொண்டது, மூவரில் ஒருவன் (அவனது பட்டப்பெயர் ஐடியா மணி, முக்கியமான நேரங்களில் வித்தியாசமாக யோசித்து ஆச்சரியமூட்டும் வகையில் ஐடியா தருவதால் மொத்தக்குழுவும் அவனுக்கு வைத்த பெயர் அது ) தாடையை தடவி கொஞ்சம் யோசித்துவிட்டு சொன்னான். "புதரிட்க்கு அருகிலும் போகக்கூடாது, ஆனால் வளவிற்குள் என்ன நடக்குது என்றும் பார்க்கவேண்டும் டேய் எதுக்குடா இப்படி யோசிக்கிறீங்க கோமேர்ஸ் கிளாசில் வலப்பக்க சுவரில் மேசை வைத்து ஏறியிருந்து பார்த்தால் முழுவதுமே தெரியுமே ...? " .ஐடியா மணி ஐடியா மணிதான் அவன் சொல்லிய வர்த்தக வகுப்பு அந்த வெறும் வளவின் இடதுபுற வேலியுடன் ஒட்டிக்கொண்டுசெல்லும் மூன்று மாடிக்கட்டடத்தில் கடைக்கோடியில் இருந்தது, அட ஆமால்ல.... மெதுவாக காவலாளிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கட்டிடத்திற்குள் புகுந்தால் அப்புறம் வேட்டை தான், சரி இன்றைக்கு மொத்தக்குழுவும் இரவு 11:00 மணியளவில் கட்டிடத்திற்குள் புகுந்து தொடர்ந்து நோட்டம் விடுவது என்று தீர்மானிக்கப்பட்டது 1946, கோவா பதினைந்து நாட்களாக தொடர்ந்து பயணித்த களைப்பில் தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணுவதும் உறங்குவதுமாகவே போய்விட்டது வில்லிக்கு, எழுந்து ஒரு காப்பியை தயார்செய்து மேசையிவைத்துவிட்டு பத்திரிகையை கையில் எடுக்க அவரது சபை முதல்வரிடமிருந்து அழைத்துவந்தது, உடனடியாக முதல்வரை சந்திக்க அவரோ "நீர் உடனடியாக இன்னும் ஐந்து தினங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் எங்களதுசபையின் கீழுள்ள பாடசாலைக்கு புறப்படவேண்டும், அங்கே ஆங்கில ஆசிரியருக்கு வெற்றிடமுள்ளதுடன் அடுத்த ரெக்டராக உம்மைத்தான் சபை தெரிவுசெய்துள்ளது, எனவே இப்போதுள்ள ரெக்டரின் கீழ் நீர் பணி செய்து அனுபவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்" என்று முடித்தார் புதிய இடம் புதிய அனுபவம் புதிய இனக்குழுமத்திற்கு சேவை செய்யப்போவதை நினைத்து தனக்குள்ளே மகிழ்ந்து போன வில்லி பயண ஏற்பாடுகளை செய்யத்தொடங்கினார். (தொடரும்) பணியில் மாட்டிக்கொண்டதால் இரண்டுநாட்கள் எழுதமுடியவில்லை எதிர்பார்ப்புடன் இருந்த வாசக உள்ளங்களுக்கு எனது வருத்தத்தை பகிர்ந்துகொள்கிறேன்
  27. வில்லி தங்களுடன் இருந்த இரண்டுமாதங்களும் போனதே தெரியவில்லை, மிகவும் இயல்பாக எதிலுமே பற்றற்றவனாக , கனிவும் சாந்தியும் எதிலும் நிதானம் கொண்டவனாக ஒரு முற்றுமுழுதான துறவியாக மாறிவிட்டான், நாளை மதியம் ரோட்டர்டாமிலுள்ள (rotterdam ) துறைமுகத்திலிருந்து கோவா துறைமுகத்திற்கு செல்லும் கப்பலில் 15 நாட்கள் தொடர்ந்து பயணம் , சோபியாவிற்கு இருக்கும் ஒரே பயம் உலகப்போர் இப்போதுதான் முடிந்து ஒரு பிரளயமே ஓய்ந்திருக்கும் சமயத்தில் எங்காவது தனித்து விடப்பட்ட ஜேர்மனிய யு போர்ட் (U-boat) தனது மகன் செல்லப்போகும் கப்பலை குறிவைத்துவிடுமோ எனபதுதான், உலகப்போர்க்காலத்தில் ஏகப்பட்ட பயணிகள் கப்பல்கள் இப்படி யு போட்களால் துவம்சம் செய்யப்பட ஒருகாலத்தில் ஐரோப்பாவிலிருந்தான பயணிகள் கப்பல் போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டன, பயத்திலிருந்தவள் அதனை மகனிடம் கேட்டும்விட்டாள் ,வில்லியும் சிரித்துக்கொண்டே பயப்படாதீர்கள் அம்மா , ஒரு மாதத்திற்கு முன்னர் தான் என்னுடைய மூன்றாம் பிரிவு துறவிகள் எதுவித இடர்பாடுகளுமின்றி கோவா சென்றடைந்தனர், நீங்கள் பயப்படுமளவுக்கு ஒன்றும் இல்லை என்று ஆறுதல் கூறிவிட்டு தன்னுடைய நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அடுத்தநாள் மதியம் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க எதனையும் வெளிக்காட்டாது துறைமுகத்தின் இறங்குதுறையுடன் தொடுகையிலிருந்த கப்பலின் படிக்கட்டில் தனது உறவுகளை திரும்பிப்பார்த்துக்கொண்டே ஏறினார் வில்லி, தாய் சோபியாவோ அழுகை உச்சத்தில் வாயை பொத்திக்கொண்டு விசும்பிக்கொண்டிருக்க தங்கை அவள் தோளை இருகரத்தால் பற்றிப்பிடித்துக்கொண்டிருந்தாள், தம்பியின் கையிலிருந்த டியூக் அவரிடம் ஓடிவர திமிறிக்கொண்டிருந்தது, இறுதியாக எல்லோரையும் பார்த்து கையசைத்த வில்லி கீழிருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு எறும்பு போல தெரிந்தார், கப்பல் புறப்படபோவதற்கு முன்னர் கப்பல் கப்டன் தனது சமிங்ஞ்சையான அந்த காதினை செவிடாக்கும் ஒலியெழுப்பியை இயக்க பாபா.....ங்ங் என்ற சத்தம் முழு துறைமுகம் முழுக்க கேட்டது, மெதுவாக கப்பல் கண்களிருந்து மறையும் வரை வெறித்து பார்த்துக்கொண்டிருந்த வில்லியின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக தங்களது வாகனம் நோக்கி செல்லத்தொடங்கினர். 2003 , இலங்கை கிழக்கு மாகாணம் உள்ளே சுலக்சனை காணவில்லை என்றதும் தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு, எங்கே போயிருப்பான் இவன் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே சுலக்சனின் கை இவன் தோள்மீது விழுந்தது, சற்று பயந்துவிட்டான் இருப்பினும் காட்டிக்கொள்ளாமல் திரும்ப சுலக்சனோ என்ன ...முடிஞ்சுதா ....? ம்...நீ எங்க போனனீ ......? இது அவன் ங்கே ...நீங்க மட்டும்தான் மனுஷன் எங்களுக்கெல்லாம் வராது பாருங்க என்றான் சுலக்சன் சிரித்துக்கொண்டே தூங்கிக்கொண்டு இருந்தியே எப்போ எழும்பின நீ ...? இது அவன் நீங்க பூனை நடையென்று யானை நடை நடந்தபோதே எழும்பிட்டன் . அதிருக்கட்டும் எங்க ரிலீஸ் பண்ணநீ ...? நான் குப்பை மேட்டுப்பக்கம் நீ ...? அதைத்தான் மச்சான் சொல்லவந்தனான் என்று தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒன்றும் விடாமல் சுலக்சனிடம் சொல்லிமுடித்தான். சொல்லிமுடிக்கும் தறுவாயில் சுலக்சன் பார்த்த பார்வையே சொல்லியது இவன் சொல்லிய எதையுமே அவன் நம்பவில்லை என்று, சரி ,நீ நம்பேல்ல தானே என்னோட வா உனக்கு என்ன நடக்குது என்று காட்டுறன், தலையை சொறிந்துவிட்டு சரி நட என்றுவிட்டு சுலக்சனும் அவன் பின்னால் நடக்கிறான், இருவரும் புதரை நெருங்கியிருப்பார்கள் சட்டென்று அவர்களை நோக்கி மெதுவான உறுமலுடன் எதுவோ ஒன்று வருவதை போல் தோன்றியது. இருவருமே அவ்விடத்தில் நின்று இருளை உற்று நோக்க வாயை திறந்து தன்னுடைய வேட்டைப்பற்களை காட்டியவாறு உறுமிக்கொண்டே பாயத்தயாராக நாயொன்று அவர்களை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது , இதுவரை எத்தனையோ நாய்களை பார்த்திருக்கிறான் எவற்றிலும் இந்த நாயின் கண்களை அவன் கண்டதில்லை அப்படியொரு இரத்த சிவப்பில் அந்த இரவு வேளையிலும் மினுமினுத்துக்கொண்டிருந்தது. ம...ச்...சா...ன் சுலக்சன் உடைந்த குரலில் ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்துக்கொண்டு இவனுடன் சேர்ந்து ஒவ்வொரு அடியாக பின்னேறிக்கொண்டிருக்க மாட்டினால் வெறும் எலும்புதான் என்பதை வேட்டை தோரணையில் முன்னேறிக்கொண்டிருந்த நாயின் பார்வையும் அதன் வாயிலிருந்து வடிந்த வீணியும் சொல்லாமல் சொல்லியது (தொடரும் )
  28. அனுபவ பகிர்வுக்கு நன்றி. நீங்கள் சிலரை போல அதிஸ்டசாலி(கள்). பெரிதாக வாட்டி எடுக்கவில்லை. எனக்கு தெரிந்த ஒருவருக்கு கொரனா வந்தது 2000 பங்குனியில். சில மாதங்கள் வேலைக்கு செல்லவில்லை நோயின் தீவிரம் காரணமாக வரவில்லை. மருத்துவரிடம் கடிதம் எடுத்து வேலைக்கு செல்லவில்லை. இந்த வருடம் (2021ல்) வேறு வழியின்றி வேலைக்கு வந்துள்ளார். அவர் சொல்கிறார் தான் நோயில் இருந்து முற்று முழுதாக விடுபடவில்லை என. அவர் மூச்சு விடும் போது ஏற்படும் சத்தத்தை(wheezing) இப்போதும் கேட்க முடிகிறது. உடலளவில் மிகவும் பலவீனமாக உள்ளார். வேலையின் HR அனுமதியுடன் நாளுக்கு 4 மணித்தியாலங்கள் மட்டும் வேலை செய்கிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.