நம்பினால்... நம்புங்கள்.
யாழ்ப்பாணத்தில்... வீட்டுடன் உள்ள பெரிய காணி.
அங்கு வசித்தவர்கள்... புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளுக்கு சென்று விட.
ஊரில்... இருக்கும் அவர்களின் உறவினர்,
அந்த வீடு, சும்மா இருக்கப் படாது என்று,
பல்கலைக் கழக மாணவர்களுக்கு, சிறிய வாடகையுடன் கொடுத்து வந்ததுடன்,
மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை...
அந்தக் காணியையும்... சுற்றிப் பார்த்து விட்டு வருவார்.
எல்லாம்... நல்ல படியாக இருந்ததால்,
அவரும், அங்கு போவதை சிறிது குறைத்துக் கொண்டார்.
இப்படியிருக்க....
ஸ்ரீலங்காவில், ஒரு ஐரோ..... 235 ரூபாய் போகுது என்றவுடன்,
அந்தக் காணிக்கு... இப்ப ஒரு, சுற்று மதிலை கட்டுவம் என்று,
ஊரில், உள்ள உறவினருக்கு... சொல்ல,
அவரும், நல்ல விசயம். உடனே செய்வம் என்று,
ஆட்களைப் பிடித்து, நல்ல நாள் ஒன்றில்... வேலையை ஆரம்பித்து, மதில் கட்ட... வேலியை வெட்டி,
அத்திவாரம் கிண்டும் போது, அயல் காணியில் இருந்து...
ஒரு குழாய், குறுக்கே வந்து நிற்கிறது. 😮
அவரும்... அதைப் பார்த்து, திகைத்துப் போய்... "தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்கு", அறிவிக்க வேண்டிய... விசயம் போலுள்ளது , என்று குழம்பி நிற்க... 🤣
பக்கத்து காணிக்காரன், தனது காணியில்.. "கக்கூசை" கட்டி விட்டு, 🚽
பராமரிப்பு அற்று இருந்த, அயல் வீட்டு காணியில்...
குழாயை நீட்டி... ஆழமாக "கக்கூஸ்" குழியை, தோண்டி..
தனது, அன்றாட... மலசல கடன்களை,
சிறப்பாக செய்து கொண்டிருந்ததை... காலம் கடந்து அறிந்தார்.
இது... என்ன கோதாரியாய் கிடக்கு,
"போனது... போனது தான்", அதனை திருப்பி...
அவனது காணிக்குள், தள்ள முடியாது.
இதுக்கு.... வக்கீல் வைத்து, நீதிமன்றத்துக்குப் போனால்...
தீர்ப்பு வர, பத்து வருசம் எடுக்குமே, என்று விட்டு...
யாழ். மாநகரசபைக்குப் போய்... நடந்த விடயத்தை சொல்ல,
அவர்கள்... அந்த விடயத்தை,
தமது, அதிகாரத்துக்கு உட்பட்டு...
உடனே... தீர்த்து, வைத்து விட்டார்கள்.