Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    33600
    Posts
  2. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    10209
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20018
    Posts
  4. putthan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    14676
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/03/24 in all areas

  1. கலிபோர்னியாவில் இடைவிடாமல் மழையும், பனியும் ஆக இருக்கின்றது. போன வருடமும் இவ்வாறே. கொட்டும் பனியிலும், கடும் காற்றிலும் ஒரு சோடி கழுகளின் கூட்டையும், அவைகளின் முட்டைகளையும் இங்கு சிலர் பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். இது இங்கு செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றது ************* ஒரு வழிச் சாலை --------------------------- இரண்டு வெண்தலைக் கழுகுகள் அவற்றுக்கு பெயரும் உள்ளது ஒன்று லிபர்ட்டி மற்றது கார்டியன் மூன்று முட்டைகள் போட்டு மாறி மாறி அடைகாக்கின்றன வாழும் நாள் முழுதும் இவை சோடி மாறுவதில்லை கூடும் மாறுவதில்லை ஒவ்வொரு வருடமும் தண்டும் தடியும் கொடியும் புதிதாக அதே கூட்டில் அகலமாகச் சேரும் இப்பொழுது கொட்டும் பனியிலும் பலத்த காற்றிலும் ஒரு முட்டை உடைந்து விட்டது பார்த்துக் கொண்டிருப்பவர்கள் மீதமிருக்கும் இரண்டு குஞ்சுகளாவது தப்ப வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் நேற்று விளக்கேற்றிய போது நானும் கும்பிட்டேன் குடுமபத்திற்கான நண்பர்களுக்கான தெரிந்தவர்களுக்கான ஈழத்துக்கான இலங்கைக்கான இந்தியாவிற்கான உக்ரேனுக்கான ரஷ்யாவிற்கான பலஸ்தீனியர்களுக்கான யூதர்களுக்கான இப்பொழுது இரண்டு கழுகுகளுக்கும் அவைகளின் இரண்டு முட்டைகளுக்குமான என் பழைய மற்றும் புதிய பிரார்த்தனைகள் விண்வெளியில் சென்று கொண்டேயிருக்கின்றன கேட்பார் ஒருவரைத் தேடி.
  2. மயிலிறகு........ 03. அப்போது மயிலம்மாவின் மகன் சுந்தரேசன் என்னும் சுந்துவும் அவன் நண்பன் வாமதேவனும் சைக்கிளில் வந்து இறங்குகின்றனர்.அம்மா வேலர் அப்பா இறந்துட்டாராம்.....உங்களிடம் சொல்லச் சொன்னவை என்று சுந்து சொல்கிறான். எப்படியும் இன்று பின்னேரம் எடுத்து விடுவார்கள். சரியில்லை, எதுக்கும் நாங்கள் நேரத்துக்கு போவம் என்னடி கனகம். ஓம் மயூரி, நான் போய் சீலை மாற்றிக்கொண்டு வருகிறன்.பக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு போக கிளம்பியவளை நில்லடி நானும் உன் கூடவாறன் என்று சொல்லி விட்டு இரண்டு பொடியலையும் பார்த்து பிள்ளைகள் நான் சமைச்சு வைத்திருக்கிறன், வடிவாய் போட்டு சாப்பிடுங்கோ என்று சொல்லும் போது மயிலம்மாவின் மகள் பூவனமும் கனகத்தின் மகள் கோமளமும் தனித்தனி சைக்கிளில் வந்து இறங்குகின்றனர். அம்மா வேலர் அப்பா செத்துட்டாராம் இண்டைக்கே எடுக்கினமாம் என்று சொல்ல ....ஓம் இப்பதான் அண்ணன்மார் சொன்னவங்கள். சரி, நீங்களும் அண்ணன்மாரோட கொழுத்தாடு பிடிக்காமல் இருக்கிறதை போட்டுச் சாப்பிடுங்கோ. நாங்கள் அங்க போயிட்டு வாறம் என்று வீட்டினுள் போகிறாள். அறைக்குள்ளே கொடியில் கிடந்த பாவாடையை எடுத்து அதில் இருந்த கிழிசலை ஒருபக்கம் மறைவாக விட்டு கட்டிக்கொண்டு இருப்பதிலேயே நல்லதொரு வெள்ளைப் புடவையை எடுத்துக் கட்டிக் கொள்கிறாள். மயிலம்மா மகள் பூவனம் பெரியவளான நாள் தொட்டு தனக்கென ஒரு சீலையோ நகையோ வாங்கியதில்லை.கிடைக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அவளுக்கென ஆடைகளும், நகைகளும் வாங்கி விடுவாள். மேலும் சுந்தரேசனின் படிப்புக்கும் காசு தேவையாய் இருக்கும். ஆனாலும் அவை போதாது என்று அவளுக்கும் தெரியும். அவள் வெளிக்கிட்டு வெளியே வரும்போது மயிலம்மாவிடம் ஒரு கம்பீரமும் சேர்ந்து வருகின்றது. இனி அந்த அயலைப் பொறுத்தவரை எங்கும் அவள் பேச்சு செல்லும். அனைவரும் அவளுக்கு மரியாதை குடுத்து நடந்து கொள்வார்கள். கணவன் இருக்கும்வரை அந்த ஊரில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுக்கும் அவர்கள் முதன்மையானவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒருநாள் அவள் கணவன் லொறியால் மோதுண்டு இறந்தபின் அவள் தானாகவே சிலபல நல்ல காரியங்களில் முன்னுக்கு நிற்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டாள். மயிலும் கனகமும் தாழ்வாரத்தில் கிடந்த "பாட்டா"வைப் போட்டுக் கொண்டுவந்து படலையைத் திறக்க வெளியே அவர்களின் பசுமாடு கன்றுடன் நிக்கிறது அவற்றை உள்ளே விட்டு சத்தமாய் பிள்ளை லெச்சுமி வருகுது கட்டையில் கட்டிப் போட்டு குண்டானுக்குள் இருக்கும் கழனிய எடுத்து வை என்று சொல்லி படலையை சாத்தி கொழுவிவிட்டு வெளியில் இறங்கி நடக்கிறார்கள்.பக்கத்தில் அம்மன் கோயில் குறுக்கிட அங்கு டேப்பில் சன்னமாய் தேவாரப்பாடல் ஒலிக்கின்றது.அங்கு வந்த மயிலம்மா ஐயரிடம் ஐயா வேலர் மோசம் போயிட்டாராம் என்று சொல்லிவிட்டு, இனி ஐயா பிணம் சுடுகாட்டில் தகனமாகும் வரை நடை திறக்க மாட்டார் என்று கனகத்திடம் சொல்லிக்கொண்டு சுவாமியைப் பார்த்து கன்னத்தில் போட்டுகொண்டு செத்த வீட்டுக்குப் போகிறார்கள். அங்கு சின்ன சின்ன சண்டை சச்சரவுகளுடன் கிருத்தியம் முடிந்து பாடை வேலியைப் பிய்த்துக் கொண்டு போக இவர்கள் இருவரும் கிளம்பி வீட்டுக்கு வருகிறார்கள்.செத்தவீட்டால் வர நாலு மணிக்கு மேலாகி விட்டது. வீட்டில் நாலு பொடியலும் வெகு மும்மரமாய் தாயம் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரே சத்தமும் கும்மாளமுமாய் இருக்குது.அதைப் பார்த்த கனகம் ஓமனை உந்த மும்மரத்தை படிப்பிலே காட்டினால் எங்கேயோ போயிடுவீங்கள்,இதுக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று சொல்ல, விடு கனகம் அதுகளும்தான் என்ன செய்யிறது.சும்மா விளையாடட்டும் நீ வா நாங்கள் குளத்துல தோய்ஞ்சு போட்டு வருவம் என்று கனகத்தையும் கூட்டிக்கொண்டு போகிறாள். போகும்போது எட்டி அடியெடுத்து நடக்க மயிலம்மாவின் பாட்டா செருப்பு அறுந்து விடுகிறது.உடனே அவள் தடுமாறி விழ இருந்து சமாளித்துக் கொள்கிறாள்.பிள்ளைகள் சிரிக்க வாமன் எழுந்து வந்து அந்த அறுந்த செருப்பை எடுத்து யாரிடமாவது ஒரு ஊசி இருந்தால் தாங்கோ என்று கேட்க மயிலம்மாவே தனது சட்டையில் குத்தியிருந்த ஊசியை கழட்டி அவனிடம் தருகிறாள். வாமனும் அதைக்கொண்டு செருப்பை சரிசெய்து அவளிடம் தர அவளும் போட்டுகொண்டு கனகத்தின் பின்னால் போகிறாள். குளத்தில் இருவரும் ஆடைகளைக் களைந்து அலம்பிக் கரையில் வைத்து விட்டு நன்றாக முங்கி நீந்தித் தோய்கிறார்கள்........! மயில் ஆடும்....... 🦚
  3. சிங்களவர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் உள்ள மரபணு நெருக்கம் Published By: VISHNU 01 MAR, 2024 | 05:27 PM தெற்காசியாவில் வேறு எந்த இனக் குழுமங்களுக்கும் இடையில் இத்தகைய நெருக்கம் கிடையாது என்று ஆய்வில் கண்டுபிடிப்பு பி.ரி.ஐ. (புதுடில்லி ) இலங்கையின் இரு பெரிய இனக்குழுமங்களான சிங்களவர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் இருக்கும் மரபணு ஒப்புடைமை தெற்காசியாவில் வேறு எந்த இனக்குழுமங்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய மரபணு ஒப்புடைமையை விடவும் மிகவும் நெருக்கமானது ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இலங்கையையும் இந்தியாவையும் சேர்ந்த மரபணு விஞ்ஞானிகளினால் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் 'ஐ சயனஸ் ' (i Science)என்ற சஞ்சிகையில் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. அந்த முடிவுகள் இலங்கையின் இனக்குழுமங்களின் தோற்றுவாய்களையும் அவற்றுக்கு இடையிலான சமூக ஊடாட்டங்களையும் தெளிவுபடுத்துகிறது. குறிப்பிடத்தக்க கலாசார மற்றும் மொழியியல் வேறுபாடுகள் இருக்கின்ற போதிலும் சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் கடந்த காலத்தில் பல நூற்றாண்டுகளாக கலந்து வாழ்ந்திருப்பதன் விளைவாக அவர்களுக்கிடையில் மரபணு ஒப்புடைமை ஏற்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். "பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கும் சிறுபான்மையினரான இலங்கை தமிழர்களுக்கும் இடையில் பரஸ்பர அவநம்பிக்கையும் பகைமையும் இருந்துவருகின்ற போதிலும், உள்நாட்டுப் போரொன்றில் அவர்கள் ஈடுபட்டபோதிலும் எமது கண்டுபிடிப்புக்கள் மிகுந்த வியப்பைத் தருகின்றன" என்று இந்தியாவின் வாரணாசியில் உள்ள பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் விலங்கியல் இலாகாவை சேர்ந்த பேராசிரியர் கியனேஷ்வர் ஷோபே கூறுகிறார். லக்னோவில் உள்ள பிர்பால் சானி தொல்லியல் ஆய்வு நிறுவனத்தையும் மங்களூர் பல்கலைக்கழகத்தையும் இலங்கையின் கொழும்பு பல்கலைக் கழகத்தையும் சேர்ந்த ஆய்வாளர்களும் பெனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் சேர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். இலங்கையின் மிகப்பெரிய இனக் குழுமத்தினரான சிங்களவர்கள் சனத்தொகையில் 74.9 சதவீதத்தினராக இருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களும் உள்நாட்டில் சோனகர் என்று அறியப்படும் முஸ்லிம்களும் முறையே 11.1 சதவீதத்தினராகவும் 9.3 சதவீதத்தினராகவும் இருக்கின்ற அதேவேளை, இந்தியத் தமிழர்கள் 4.1 சதவீதத்தினராக இருக்கிறார்கள். மிகவும் சிறிய ஒரு சதவீதத்தில் பறங்கியரும், மலாயர்களும், வேடர்களும் (ஆதிவாசிகள்) இருக்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் கி.பி.500 அளவில் அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டது. "சிங்களவர்கள் இந்தியாவின் மேற்கு பாகத்தில் இருந்து குடிபெயர்ந்த அதேவேளை இலங்கைத் தமிழர்கள் தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தார்கள். இரு இனத்தவர்களின் குடிபெயர்வுகளும் ஏககாலத்தில் இடம்பெற்றது. இரு தரப்புகளில் இருந்தும் பல நூறு வருடங்களாக மரபணு பரவல் அல்லது மரபணு ஓட்டம் ( Flow of genes) இடம்பெற்றிருப்பதாக தோன்றுகிறது. அதன் விளைவே இந்த மரபணு ஒப்புடைமை" என்று கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விஞ்ஞானி ஆர். ரணசிங்க கூறினார். இந்த துறையில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மரபணு விபரங்களில் ஆழமானவையாக இருக்கவில்லை. அதனால் அவை தீர்க்கமான முடிவாகக் கொள்ளக்கூடியவையாக இருக்கவில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டார்கள். "ஒரு தனிநபரில் ஒரு ஐந்து இலட்சம் மரபணு மாற்றம் அல்லது மரபணு விகாரம் ( Genetic mutations ) மீது மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வாக இது அமைந்திருக்கிறது. இந்த பணியின் முனைப்பு மற்றும் பரந்தளவிலான வீச்செல்லை காரணமாக எமது ஆய்வின் முடிவுகள் தீர்க்கமானவையாகவும் வலுவானவையாகவும் இருக்கிறது என்று நம்புகிறோம்" என்று ஷோபே கூறினார். ஒரு தனிநபரின் மரபணு விபரங்கள் அவரைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ளவர்களின் மரபணு விபரங்களுடன் பொதுத்தன்மையை வழமையாகக் கொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. "உதாரணமாக நாட்டின் வடபாகத்தைச் சேர்ந்த ஒருவரின் வட இந்தியாவில் உள்ள வேறு நகரங்களில் இருப்பவர்களுடன் பெருமளவுக்கு மரபணு ஒற்றுமையைக் கொண்டிருப்பார். ஆனால் இலங்கை ஆய்வில் தென்னிந்தியாவை விடவும் இந்தியாவின் மேற்கு பாகத்தின் மரபணுக் கூறுகளைக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சிங்களவர்களுக்கும் மராட்டியர்களுக்கும் ஒரு பொதுவான வேருக்கான தடயங்கள் இருக்கின்றன" என்று ரணசிங்க கூறினார். இனத்துவ மற்றும் மொழியியல் எல்லைக்கு அப்பால் இலங்கைத் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் வலுவான மரபணு பரவல் இருப்பது வியப்பைத் தருகின்ற இன்னொரு அம்சமாகும். தெற்காசியப் பின்புலம் ஒன்றில் இது வழமைக்கு மாறானதாகும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் உள்ள சிங்கபுரவில் இருந்து சிங்களவர்கள் வந்தார்கள் என்றும் புராணக்கதைகள் கூறுவதை அவதானித்த விஞ்ஞானிகள் குழு அது சரியான இடம் அல்ல என்று மறுத்துரைக்கிறார்கள். "இரண்டு சிந்தனைகளைக் கொண்ட பிரிவினர் இருக்கிறார்கள். ஒரு பிரிவினர் அந்த இடம் வடமேற்கு இந்தியா என்று கூறுகிறார்கள். மற்றையவர்கள் மேற்கு வங்காளம் என்று கூறுகிறார்கள்.எமது ஆய்வு அவர்களின் தாயகம் வடமேற்கு இந்தியா என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது." என்று பிர்பால் சானி தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் புராதன மரபணு ஆய்வுகூடத்தைச் சேர்ந்த இன்னொரு மரபணு விஞ்ஞானி நிராஜ் ராய் கூறினார். இந்த ஆய்வை நடத்த முடிக்க ஐந்து வருடங்கள் சென்றது. இலங்கைத் தமிழர்கள் (88), சிங்களவர்கள் (129 ), இலங்கையைச் சேர்ந்த இந்தியத் தமிழர்கள் (56), இந்தியாவைச் சேர்ந்த இந்தியத் தமிழர்கள் (562 ) ஆகியோரிடமிருந்து 834 மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. https://www.virakesari.lk/article/177697
  4. யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள் யாழ். மானிப்பாய் வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக வெளிநாட்டவர்களால் துவிச்சக்கரவண்டி பயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த 30 இற்கும் மேற்பட்டோர், துவிச்சக்கர வண்டிப் பயணம் மூலம் நிதி சேகரித்து அதனை யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு வழங்கி அதனை சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கான துவிச்சக்சகர வண்டிப் பயணமானது, கண்டியில் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி அங்கிருந்து மாத்தளை ஊடாக தம்புள்ளை வந்து, அங்கிருந்து நேற்றையதினம்(01) வவுனியாவை அடைந்தனர். அதன்பின்னர் யாழ்ப்பாணம் நோக்கி துவிச்சக்கரவண்டி பயணம் ஆரம்பமாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த ஆண், பெண் எனப் பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை வெளிநாட்டவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் துவிச்சக்கரவண்டி பயணத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://samugammedia.com/foreigners-made-jaffna-people-look-back-accumulating-praises-1709350973
  5. இந்திய ஊடகங்களின் கருத்துப்படி சாந்தன் விடுதலை புலிகள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர். விடுதலை புலிகளால் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நின்று விடுதலை புலிகளுக்காக வேலை பார்த்தார். வெவ்வேறு புலனாய்வு போராளிகள் வெவ்வேறு திட்டங்களில் செயற்பட்டார்கள் என வைத்தால் சாந்தனும் அவ்வாறு செயற்பட்டு உள்ளார். அவர் ராஜீவ் கொலை திட்டத்தில் பங்குபற்றாமல் போய் இருக்கலாம். ஆனால் விடுதலை புலிகள் அமைப்பிற்காக இந்தியாவில் செயற்பட்டு உள்ளார் தானே? அப்படி பார்த்தால் வீரவணக்கம் சொல்வது தவறாக தெரியவில்லை. நாங்கள் நீங்கள் சமூக ஊடகத்தில் எழுதுவதை வைத்து உலகம் விடயங்களை அறியும் என எண்ணுவது நகைப்பானது. ஆளாளுக்கு தமது மன அழுத்தங்களை போக்கவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், பொழுது போகவும், பெருமைக்கும், மற்றும் இன்னோரன்ன காரணங்களுக்கு கருத்துக்கள் கூறுகின்றார்கள். இப்போது சாந்தன் பேசுபொருள் ஆகி உள்ளார். சிறிது நாட்களில் தலைப்பு இன்னோரிடம் சென்றுவிடும்.
  6. அதாவது சாந்தனை இரகசியமாக புதைத்திருக்கவேண்டும். எவருடைய பொல்லாங்கும் வேண்டாம். எம் இனம் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு வாழப் பழகணும்.
  7. இலங்கையில் இந்தியாவில் இரண்டு துதரங்கள். அதுவும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் துணைத்தூரகம் அமைத்திருத்தும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த விருப்பு என்ன என்பதை அறியமுடியாத துணைத்தூரகம் தமிழர்தாயகத்தில் எதற்காக இருக்கிறது. இந்திய அரசின் நயவஞ்சகத்தால் வீரச்சாவடைந்த சாந்தனுக்கு தமிழர்தாயகம் பெருமளவில் திரண்டு வந்து உணர்வு பூர்வாக வீரவணக்கம் செய்து இந்தியாவின் முகத்தில் ஓங்கி அறைந்திருக்கிறது. ஆம் இந்திய அரசு முதுகில்குத்தினாலும் தமிழர்தாயகம்இந்திய அரசின் முகத்தில்தான் குத்தியிருக்கிறது.https://fb.watch/qAfJ49Box0/
  8. சிறு கதை - 124 / "தற்கொலை தீர்வாகுமா?" காவியா தனது ஸ்கூட்டரில் அரசடி சந்தியால் திரும்பி, வைமன் வீதியால், அத்தியடி புது வீதியூடாக, யாழ் போதனா வைத்திய சாலைக்கு வேலைக்கு காலை புறப்பட்டாள். அவள் ஒரு இளம் செவிலியாக அண்மையில் தான் பணிக்கு சேர்ந்தவள். அவள் முகத்தில் புன்னகையைக் காணவில்லை. எதோ ஏக்கம் துக்கம் அவளை வாட்டுவது அப்படியே தெரிகிறது. அதை அவளால் மூடி மறைக்க முடியவில்லை. அத்தியடி புதுவீதியால் போகும் பொழுது, அந்த வீட்டில் பலர் கூடியிருப்பதைக் கண்டு, செவிலி தானே, என்ன ஏது என்று தன்னை யறியாமலே விசாரித்தாள். தானே தற்கொலை செய்து, வாழ்வை முடிக்க திட்டமிட்டவளுக்கு, இப்ப அது உண்மையில் தேவையில்லாத ஒன்றுதான். தன் வேலையிடத்தில், தான் பார்க்கும் நோயாளிகளை முறையாக இன்னும் ஒரு செவிலியிடம் பாரம் கொடுத்து விட்டு, தற்கொலையை எனோ ஒரு தீர்வாக எடுத்து, இரவு இந்த உலகை விட்டு போக வேண்டும் என்பதே அவளின் இறுதி முடிவாக இருந்தது. அதற்கிடையில் இது! ரமேஷ் மீதான அவளுடைய காதல் ஆழமாக இருந்தாலும், காலத்தையும் சமூக எல்லைகளையும் தாண்டிய ஒரு பந்தம் இருவருக்கும் இடையில் இருந்தாலும், அவர்களின் காதல் சமூகத்தின் கடுமையான மரபுகளுடன் மோதியதால், காவியா விரக்தியின் தவிர்க்க முடியாத வலையில் சிக்கிக் கொண்டாள். சமூக எதிர்பார்ப்புகளின் கனமும், அவளது காதலுக்கும் வேரூன்றிய மரபுகளுக்கும் இடையிலான மோதலும், ரமேஷ் இல்லாத எதிர்காலத்தைப் பற்றிய பயமும் காவியாவிற்குள் ஒரு நம்பிக்கையற்ற உணர்வை உருவாக்கியது. தான் ஆழமாக நேசித்த ஒருவரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிந்து போக வேண்டும் என்ற எண்ணமும், அவர்களின் காதல் செழிக்கக் கூடிய எதிர்காலத்தை கற்பனை செய்ய முடியாத இயலாமையும் சேர்ந்து, அத்தகைய சோகமான தீர்வை யோசிக்க வைத்தது அவளுக்கு. எல்லாத் தற்கொலைகளும் மூடத்தனமானதுதானா? தன் உயிருக்கு மேலாகத் தான் நம்பும் ஒன்றை நிறுவ உயிரை மாய்க்கும் சமூக விழுமியத்தை நாம் தக்கவைக்க வேண்டாமா? தற்கொலைகளில் தியாகமாக? ஒரு மானுட உச்சமா? அவளால் சிந்தித்து பார்க்கும் நிலையில் அவள் இப்ப இல்லை. வில்லியம் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களில் அவரது கதாபாத்திரங்கள் தற்கொலையால் இறக்கின்றன. ரோமியோ ஜூலியட்டின் இறுதிக் காட்சியில், இளம் காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அது கதைக்கு ஒரு கவர்ச்சியை கொடுத்து இருக்கலாம்? மற்றும் படி அது எந்த தீர்வையும் தரவில்லை என்பதே உண்மை! இலங்கையின் யாழ்ப்பாணத்தின் பரபரப்பான தெருக்களில், யாழ்ப்பாணத்துக்கே உரிய மசாலா வாசனை, பாரம்பரியத்தில் ஊறிய கலாச்சாரத்தினையும் சேர்த்து ஆழமாக எதிரொலிக்க, பாலச்சந்திரன் குடும்பம் அங்கு பெருமையுடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்தது. பாலச்சந்திரனுக்கு ரமேஷ் என்ற ஒரு மகனும் மூன்று மகளும் இருந்தனர். அதில் ஒருவளுடன் சிறு வயது முதல் நண்பியாக இருப்பவள் தான் காவியா. அதனால் ரமேஸுடனும் தோழியாக, சிறுவயதில் நெருக்கமாக இருந்ததால். பிற்காலத்தில் அது காதலாக மாறி, ஒருவருக்கொருவர் சகவாசத்தில் ஆறுதல் கண்டனர். என்றாலும் அவர்களின் காதல் இரகசியமாகவே மலர்ந்தது. ஏனென்றால் அவர்களுக்கிடையில் சமூக ஏற்றத் தாழ்வுகள், அவர்களின் இணைப்புக்கு குறுக்காக நின்றது. ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும் அழகிய விழியும் [அழகாகத் திலகம் இட்ட அழகிய ஒளி பொருந்திய நெற்றியும், அழகிய கண்களும்] மட்டும் அல்ல, "அறம்திகழ் தவமும் அகிலமும் இதனால் அழியுமென் றயன்படைத் திலனோ சிறந்தவேல் விழியை முன்படைத்தயர்ந்து செங்கரம் சோர்ந்ததோ திகைத்து மறந்ததோ கரந்து வைத்ததோ களப வனமுலைப் பொறைசுமந் துருகி இறந்ததோ உளதோ இல்லையோ இனிமேல் எய்துமோ அறியொணா திடையே." அறநெறி விளங்கும் வீட்டு நெறியும் உலகியல் நெறியும் இடையினால் அழியும் என்று எண்ணி இடையினைப் படைக்கவில்லையோ? சிறந்த வேல் போன்ற கண்களை முதலில் படைத்து இளைத்துச் சிவந்த கைகள் தளர்ந்தனவோ? செய்வதறியாது மதிமயங்கி மறந்துபோனினனோ? அல்லது அவள் வடிவில் மறைத்து வைத்திருக்கிறானோ? சந்தனக் குழம்பணிந்த அழகிய முலைகளின் பாரத்தைச் சுமந்து உருகி இற்றுப்போயிற்றோ? இடை இருக்கிறதோ இல்லையோ அல்லது இனி மேல்தான் உண்டாகுமோ? இடை இருப்பதாகவே அவளிடம் தெரியவில்லை. அப்படி ஒரு அழகு அவள். அவள் தான் காவியா! அவள் தனது பிரகாசமான புன்னகையுடனும் உறுதியுடனும், காதல் அனைத்தையும் வெல்லும் எதிர்காலத்தை கனவு கண்டாள். ரமேஷ், சமமான உற்சாகத்துடன், ஆனால் குடும்பப் பொறுப்புகளின் சுமைகளை சுமந்து கொண்டு, தனது இதயத்தின் ஆசைகள் மற்றும் தன் மீது சுமத்தப்பட்ட கடமைகளுக்கு இடையே, தவிர்க்க முடியாத மோதலுடன் போராடினான். தன்னால் இரண்டையும் சமாளிக்க முடியும் என்ற தெம்பு அவனிடம் இருந்தது. ரமேஷ், யாழ்ப்பாணத்தில் உள்ள பல மேல் மட்ட தமிழ் மக்களைப் போலவே, பாரம்பரியத்தில் மூழ்கிய ஒரு இறுக்கமான சமூகத்தில் பிறந்து வளர்ந்தவன். சிறு வயதிலிருந்தே, குடும்ப மரியாதை, கடமை, பெரியவர்களுக்கு மரியாதை போன்ற மதிப்புகளை ஊட்டி வளர்க்கப் பட்டவன். அதிலும் மூன்று தங்கைகளுடன் பிறந்தவன் என்பதால் பொறுப்பும் அதிகம் இருந்தது. இந்த கலாச்சார, கடமை நெறிமுறைகள் அவனது தனிப்பட்ட அபிலாஷைகள் மற்றும் ஆசைகளுடன் மோதின. ரமேஷின் போராட்டத்தின் அடிப்படையானது காவியா மீதான அவனது இதயப்பூர்வமான பாசத்திற்கும் அவனது குடும்பம் அமைத்துள்ள, முன்னரே தீர்மானிக்கப்பட்ட பாதைக்கும் இடையிலான மோதலாகும். பாரம்பரிய நம்பிக்கைகளில் ஆழமாக வேரூன்றியிருந்த அவனது குடும்பம், ஸ்திரத்தன்மை, சமூக அந்தஸ்து மற்றும் குடும்ப உறவுகள் பற்றிய அவர்களின் கருத்துக்களுடன் இணங்கக்கூடிய இன்னும் ஒரு ஒத்த குடும்பத்தில் அவனுக்கு ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்யத் தொடங்கினர். இருந்தாலும் ரமேஷின் இதயம் காவியாவுக்கே ஏங்கியது. குழந்தைப் பருவத்தில் உருவான அவர்களின் பிணைப்பு, காலப்போக்கில் வலுப்பெற்று, எல்லைகளைத் தாண்டிய காதலுக்குச் சான்றாக இருந்தது. அவன் தனது இதயத்தின் கட்டளைகளைப் பின்பற்றவும், அன்பே வழிகாட்டும் சக்தியாக இருக்கும் எதிர்காலத்தைத் தழுவவும் விரும்பினான். இதனால், தன் தங்கையினூடாக தன் காதலை பெற்றோரிடம் தெரியப்படுத்தினான். தான் காவியாவை திருமணம் செய்தாலும், கட்டாயம் மூன்று தங்கையின் வாழ்வை தீர்மானிப்பேன், நான் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறேன். ஆகவே பயம் தேவையில்லை என்று உறுதிமொழியும் கொடுத்தான். என்றாலும் அவனது தந்தை பாலச்சந்திரன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தாயும் கூட தந்தையின் பக்கமே நின்றாள். இதனால் ஏற்பட்ட தவறான புரிதல்களும் குடும்ப அழுத்தங்களும் காவியா, ரமேஷ் இடையே கடக்க முடியாத சுவர்களை எழுப்பின. ஏங்கித் தவிக்கும் இரு இதயங்களுக்கும் ரமேஷ் குடும்பத்தின் தவிர்க்க முடியாத கோரிக்கைகளுக்கும் இடையில் அகப்பட்ட காதலர்கள் இருவரும், வாழ்வில் ஒரு பள்ளத்தை எதிர்கொண்டனர். தங்கள் காதலுக்கு, தாங்கள் சேர்ந்த உலகில் ஒருபோதும் இடம் கிடைக்காது என்ற மனவருத்தம் தரும் உணர்வு அவர்களை கடுமையான நடவடிக்கைகளைச் சிந்திக்கத் தள்ளியது. என்றாலும் ரமேஷ் தான் இன்னும் பெற்றோருடன் கதைத்து பேசி நல்ல முடிவுக்கு வரலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தான். ஆனால், குடும்ப எதிர்பார்ப்புகளுக்கு இணங்க வேண்டிய அழுத்தம், சமூகத்தின் தீர்ப்பு பற்றிய பயம் மற்றும் அவர்களின் இக்கட்டான நிலைக்கு சாத்தியமான தீர்வு கிடைக்காது என்ற விரக்தி ஆகியவை காவியாவின் தோள்களில் தாங்க முடியாத பாரமாக மாறியது. இது அவளுடைய தனிப்பட்ட ஆசைகளைப் பற்றியது மட்டுமல்ல, அவர்களின் அன்பைத் தடுக்கும் சமூகத் தடைகள் மற்றும் அவர்களின் மகிழ்ச்சியின் வழியில் நிற்கும் கடக்க முடியாத தடைகள் பற்றியதாகவும் விரிந்தது. தன் இறப்பு மூலம் தன் வேதனைக்கு, மனச் சஞ்சலத்துக்கு முடிவு கட்டலாம் என்பதுடன் இது பெற்றோர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து, பிள்ளைகளின் கருத்தையும் அலசும் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என்று எண்ணினாள். காதல் வெற்றி பெற முடியாததால், அவள் இதயம் வேதனைப் பட்டபோது, அவளுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் எண்ணம் ஒரு தீர்வாக அவளுக்கு தோன்றியிருக்கலாம்? இது ஒரு பகுத்தறிவு முடிவு அல்ல, மாறாக அவளது வேதனையின் ஆழத்தின் பிரதிபலிப்பு, அவளுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளால் அவள் மூழ்கடிக்கப் பட்ட போது தன்னை இழந்த நிலையில், ஏற்பட்ட ஒரு உணர்வு. அவள் தன் உணர்வுகளை சமாளித்துக் கொண்டு அந்த வீட்டுக்குள் நுழைந்தாள். ஆனால், அது பிந்திவிட்டது. பக்கத்து வீட்டாரின் துணை பெற்று, கதவு உடைத்து திறக்க நேரம் கடந்து விட்டது. தந்தையின் எதிர்பாராத திடீர் விபத்து மரணத்தால், மனம் உடைந்த இளம் உயர் வகுப்பு மாணவன் தாயின் சீலையில் கழுத்தில் தூக்கு போட்டு அங்கு சடலமாக தொங்கிக் கொண்டு இருந்தான். அவன் விட்டு சென்றது தாயும், தங்கையும், தந்தை இல்லா நேரம் ஒரு வலுவான துணையாக இருந்து பொறுப்புகளை சுமக்க வேண்டிய ஒருவன், தன்னை மரித்து அதில் இருந்து தப்பிவிட்டான் என்று தான் சொல்லவேண்டும் என்று அவளுக்கு, காவியாவுக்கு தோன்றியது. அப்படி என்றால் ? அவள் சிந்திக்க தொடங்கினாள்! ரமேஷ் மீதான அவளது காதலுக்கு இடையூறுகள் தோன்றி, கடக்க முடியாத தடைகளை எதிர்கொண்டபோது, அவள் அனுபவித்த தீவிரமான உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்து, தற்கொலை என்ற இந்த கடுமையான நடவடிக்கை பற்றிய அவளது சிந்தனை தோன்றியது என்னவோ உண்மையே. ஆனால் இப்ப இந்த தொங்கும் சடலத்தையும், வெம்பி வெம்பி அழுது புலம்பிக் கொண்டு இருக்கும் அவனின் தாயையும் தங்கையையும் பார்த்த பின், அவள் மனதில் ஒரு ஞானம், ஒரு தெம்பு பிறந்தது. தான் சாவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை, தன்னை விரும்பியவர்களுக்கு, தன் குடும்பத்துக்கு கவலை மற்றும் துன்பத்தையே அது கொடுத்து, அவர்களின் வாழ்வைக் கூட அது சிதைக்கலாம் என்ற ஞானமே அது! அவள் அன்று வேலை முடிய நேராக ரமேஷ் வீட்டுக்கு போனாள். முன்பு எத்தனையோ தடவை ரமேஷின் தங்கையுடன் அங்கு போனவள் தான். அவனின் பெற்றோர்களை சந்தித்தவள் தான். ஆனால் இந்த சூழ்நிலை வேறு. "தற்கொலை தீர்வாகுமா?" என்ற மனதில் ஏற்பட்ட போராட்டத்துக்கு ஒரு மறுமொழியாக அங்கு போகிறாள். வலது கால் எடுத்து மங்கள வாத்தியம் ஒலிக்க ரமேஷின் குடும்பத்துடன் இணைவதற்கு, தானே அவர்களுடன் கதைத்து, விளங்கப்படுத்தி உறுதிகொடுக்க போகிறாள். அது தான் வேறுபாடு. காவியாவுடன் ரமேஸும் இணைய, இருவரின் உணர்ச்சிபூர்வமான நேர்மையும் ஆர்வமும் நிறைந்த வேண்டுகோள், ரமேஷின் பெற்றோர்களுக்கு எதையோ தூண்டியது. மெதுவாக, பாரம்பரியத்தின் விறைப்பு தணிந்து, புரிதல் மற்றும் பச்சாதாபத்தின் ஒரு மினுமினுப்புக்கு வழிவகுத்து, பெற்றோர்களின் மன மாற்றத்திற்கான வாய்ப்பு அடிவானத்தில் மின்னியது. பாலச்சந்திரன் குடும்பம், காவியா ரமேஷின் நேர்மையால் நகர்ந்து, அது உணர்த்திய ஞானத்தால் ஈர்க்கப்பட்டு, அவர்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்தனர். இதனால் காவியாவும் ரமேஷும் நம்பிக்கையுடன் மீண்டும் உற்சாகமடைந்தனர், அவர்கள் கைகோர்த்து நின்றனர், இது ஒரு உடனடி புரட்சி அல்ல, ஆனால் மாற்றத்தின் விதை விதைக்கப் பட்டு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் புரிந்துகொள்வதற்கான பயணத்தின் தொடக்கத்தை ஏற்படுத்தியது. "தற்கொலை தீர்வாகுமா?" என்றால் கட்டாயம் இல்லை. காவியா அதைத்தான் அந்த கடைசி நிமிடத்தில் மனம் மாறி தெம்பு பெற்று, ரமேஸுடன் சேர்ந்து செய்தாள். அந்த இளம் உயர் வகுப்பு மாணவனின் தற்கொலை எந்த தீர்வையும் தந்ததா? என்ற காவியாவின் கேள்வி, அவளுக்கும் ஒரு வாழ்வு சமைக்க வழிவகுக்கிறது என்று நம்புவோம். பாலச்சந்திரனும் அதற்கு எந்த தடையும் இல்லாமல் ஒத்துழைக்கட்டும்! "தற்கொலை தீர்வா? இல்லை வாழ்க்கை ஒரு பாடல்! ஒவ்வொரு இசைச்சுரமும் இடைநிறுத்தமும் வளர ஒரு வாய்ப்பு! வலி கடந்து போகும் காயங்கள் காய்ந்து குணமாகும்! ஆறுதல் ஒன்று தேடுங்கள் அன்பில், நண்பரில் உங்களில்!" "பொறுமையுடன் வாழ்நாள் இருந்தால் பல பெருமைக்கு ஆளாவாயே! துணிந்து நின்றால் துர்க்கையையும் நீ வதம் செய்திடுவாயே! சரித்திரத்தில் இடம் பெற்று சாதிக்க பிறந்த மனிதா! நிற்காமல் ஓடு மானிடா தற்கொலை உனக்கு எதற்கடா?" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  9. சிந்திப்போம் செயல்படுவோம் களியாட்டத்தில் கலாட்டாவா அனைவருக்கும் வணக்கம். அண்மையில் யாழ்நகரில் நடைபெற்ற நிகழ்வின் பொழுது நடந்த ஒர் அசம்பாவிதத்தை பற்றி பல வாத பிரதிவாதங்கள் இடம் பெறுவதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த அசம்பாவிதத்தை ஊதி பெருப்பித்த பெறுமை நெட்டிசன் மாரை சேரும் .அதாவது சமுக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவு செய்யும் நபர்கள்..அநேகமான நபர்கள் தங்களுக்கு அதிக பார்வையாளர்கள்,மற்றும் லைக் வேணும் என்ற காரணத்தால் கவர்ச்சிகரமான தலையங்கங்களை எழுதி தங்களது கற்பனைக்கு எட்டியவற்றை கூறினார்கள் ..அவர்களில் அனேகமானவ்ர்கள் போட்ட படம், அதாவது சனம் தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு முன்னுக்கு செல்லும் காட்சி...இந்த ஒரு காட்சியை ஏதோ ஒரு மூலத்தில் கொப்பி பண்ணி அதை தாங்கள் எடுத்த காட்சி போல பிரசுரித்து கருத்துக்களை அள்ளி வாரி இறைத்தனர். யாழ்ப்பாணத்தவன் உலகத்திலயே சிறந்த பிறவியாக இருக்க வேணும் என்ற கருத்து பட சிலர் எழுதினர்.இன்னும் சிலர் இந்த அசம்பாவிதத்தினால் யாழ்ப்பாணத்தானின் மானம் கப்பல் ஏறிவிட்டது என முதலை கண்ணீர் விட்டனர்.. இந்த யூ டியுப் விண்னர்கள் முழுக்க முழுக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொழிலதிபர் இந்திரன்,மற்றும் நடன தயாரிப்பாளர் கலா மாஸ்டர் மற்றும் தமன்னா மீது குற்றங்களை சாட்டுகிறார்கள் அல்லது அவர்களை வசை பாடுகிறார்கள். அவர்களின் ஒழுங்கமைப்பில் தவறுகள் இருக்கின்றது அதை சுட்டி காட்டுங்கள் இனி வரும் காலங்களில் இப்படியான தவறுகள் வராமல் செயல் பட உதவியாக இருக்கும்...இவர்களுக்கு மட்டுமல்ல எந்த ஒழுங்கமைப்பாளர்களுக்கும் அது உதவியாக இருக்கும் அதாவது பொது மனபான்மை ... தொழிலதிபர் தனது கல்வி நிறுவனத்தின் விளம்பரத்திற்காக நிகழ்ச்சியை நடத்தியதாக குற்றம் சாட்டுகிறீர்கள் அதில என்ன தப்பு இருக்கின்றது? தாயகத்தில் இன்று புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் தொழிலதிபர்கள் பலர் தொழில் முதலீடு செய்ய முன் வருகின்றனர் ,ஈடுபடுகின்றனர்.அவர்கள் புலம் பெயர்ந்த மண்ணிலயோ, இந்தியா,அல்லது ஏனைய ஆசிய நாடுகளில் தங்கள் முதலீடுகளை இலகுவாக செய்யலாம் இருந்தும் தாயகத்தில் இருக்கும் தங்களது பற்று காரணமாக அங்கு முதலீடு செய்ய முன்வருகின்றனர். அவர்களை ஊக்கபடுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் தாயக மக்களுக்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள் .சில யூ டியுப் நபர்கள் இந்த விடயத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றனர் .அவர்கள் உண்மையிலயே பாராட்ட பட வேண்டியவர்கள் தொழிலதிபர் இந்திரனின் அரவணைப்பால் தாயக மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் அதிமாக இருக்கும்..இந்த இசை நிகழ்ச்சியின் பொழுது நடை பெற்ற அசம்பாவிதத்தினால் பாதிப்பு பொருட்களுக்கு மட்டுமே...எனவே எந்த தொழிலதிபர்கள் முதலீடு செய்ய வந்தாலும் அரவணைத்து ஊக்க படுத்த வேண்டியவர்கள் மண்ணின் மைந்தர்களே.. யாழ் மாநகர சபையினர்,மற்றும் பொலிசார்,அரசு போன்ற துறையினரும் இந்த அசம்பாவித் நிகழ்வுக்கு பொறுப்பாளிகள் ..இவர்களை கேள்வி கேட்க வேண்டிய மண்னின் யூ டியுப் விண்ணர்கள்,சமுக வலைத்தள ஜாம்பவாங்கள் எல்லாம் பணத்தை முதலீடு செய்ய முன்வரும் தொழிலதிபர் மீது குற்றம் சாட்டுகின்றனர். காவாலி கூட்டங்கள் உலகில் எல்லா நாடுகளிலும் உண்டு இவர்களை திறுத்த முடியாது .ஆனால் கட்டுப்படுத்த முடியும் அதை சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொலிசார் செய்ய வேண்டும் . மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் போதைப்பொருள் பாவிப்பவர்கள் நடமாடுவதை பொலிசார் தடை செய்திருக்க வேணும் .மாநகர சபை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அனுமதி கொடுக்கும் பொழுது சில கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேணும் .. ஒர் அரசியல்கட்சியின் எதிர்ப்பு ஊர்வலத்திற்கு மக்களை விட கலகம் அடக்கும் பொலிசார் அதிகமாக நிற்பார்கள் இங்கு அப்படியான எதுவும் ஒழுங்கு செய்ய படவில்லை.. பாதுகாப்பு செய்ய வேண்டியவர்கள் இங்கு தவறு செய்து விட்டார்கள் .. ஏற்கனவே மக்கள் கொந்தளிப்பு நிலையில் இருக்கும் பொழுது மக்களை அமைதி படுத்த வேண்டிய பொலிஸ் அதிகாரி சிங்கள மொழியில் அமைதி காக்கும் மாறு கோருகின்றார் இது இன்னும் மக்களின் மனவேதனையை தூண்டும் செயல் ...அடுத்து தமிழில் பேசிய அதிகாரி கூறியவை எதுவும் மக்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பு இல்லை.. இன்று தொழிலதிபர் இந்திரன் தனது சார்பில் அறிக்கை விடுத்துள்ளார் அதைப்பற்றி எவரும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை...அதை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமையும் இந்த யூ டியுப் விண்ணர்களுக்கு உண்டு... இளைய வயதில் பிரபல தொழிலதிபராக வந்து தாயக மக்களின் கல்வி வளர்ச்சிக்கு குறிப்பாக வடமாகாண மக்களுக்கு ஒர் கல்வி நிறுவனத்தை தொடங்குவது என்பது உண்மையிலயே பாராட்டபட வேண்டிய ஒன்று ..கல்வி அறிவே எவராலும் அழிக்க முடியாத சொத்து...எம் மக்கள் இதை பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர். இப்படி எழுதிய காரணத்தால் நானும் இந்திரனிடம் பணம் வாங்கி எழுதுகிறேன் பதிவுகளை போட சிலர் நினைக்கலாம் எனக்கு அவர் யார் என தெரியாது என்பதையும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.. எல்லோரையும் குற்றம் சாட்டி, எம் மண்ணின் மைந்தர்கள் தொழில் செய்ய விடாமல் தடுக்க பல முயற்சிகள் திரைமறைவில் நடை பெறுவது கசப்பான உண்மை... நலன் விரும்பி
  10. எனது சிறு குறிப்பு ஆசான் ஜெயமோகனின் தளத்திலும் வந்துள்ளது😃 https://www.jeyamohan.in/197234/ போருக்கு முன்… February 27, 2024
  11. தமிழர்கள் தங்களை வெறுக்கின்றனர் என்ற செய்தியை இந்தியா சிங்கள மக்களுக்கு காட்டுவதற்கு இது உதவும்....நாங்கள் தமிழரை விட சிங்களவராகிய உங்களுக்கே ஆதரவு என காட்டுகின்றனர்...தமிழகமீனவர்களுக்கு எதிரான போராட்டம்,மற்றும் கச்சடீவுக்கு அவர்களை வரமால் பண்ணியவை... சாணி தானே ...அது அகிம்சையின் உச்சம் அசிட் அடிச்சால் தான் வன்முறை ... அகிம்சை என்ற காரணத்தால் நீங்கள் தொடரலாம்😃
  12. சிங்களவர்கள் மட்டுமல்ல தமிழர்களுக்கும் இப்போது புராணக்கதைகள் கூறுபவை தான் உண்மை என்கின்றார்கள்.
  13. 1 point
    2007, நான் அத்தொழிற்சாலையில் இணைந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகியிருந்தது. என்னைப்போலவே இங்குவந்து, தம்மை நிலைநிறுத்திக்கொள்ள பல இந்தியர்களும், இலங்கையர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம். வெள்ளை நிறத்தவரின் தொழிற்சாலை, வேலைத்தளத்தில் அணியின் மேலாளர்களில் இருந்து அதியுயர் நிர்வாகத் தலைவர்கள் எல்லோருமே வெள்ளை நிறத்தவர்கள். அவர்களுடன், அவர்கள் பேசும் மொழியினையும், பேசும் சங்கேத வார்த்தைகளும் விளக்கமேயின்றிக் கேட்டுக்கொண்டு, அருகில் இருப்பவன் சிரித்தால், நாமும் சிரித்துக்கொண்டு, வேலைத்தளத்தில் சமூகப் படிகளில் நாம் ஏறலாம் என்று நினைத்திருந்த காலம். எனது வேலைத்தள அணியில் 20 பேர் இருந்தோம். எமது மேலாளர் ஒரு வெள்ளையினத்தவர். சுவிட்ஸர்லாந்தில் பிறந்து, இங்கு வளர்ந்தவர். சிலவேளைகளில் அவர் பேசுவதைக் கிரகிப்பதற்குள் அவர் அடுத்த வசனத்தைத் தொடங்கிருப்பார். புரிந்துகொள்வதற்குச் சிரமப்பட்டுக்கொண்டே பணிபுரிந்த காலம். சிலவேளைகளில் நாம் அவர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆறுதலாய்ப் பேசுவர்கள். அதுகூட சிலவேளை சிரமாகத் தெரிந்தது. என்ன உலகமடா இது என்று சலித்துக்கொண்ட பொழுதுகள். ஆனால், அணியிலிருந்த வெள்ளையர்களை விட நம்மவர் வேலைகளில் சுறுசுறுப்பானவர்கள். ஊரில் கஸ்ட்டப்பட்டு வேலை தேடி, அதனைத் தக்கவைத்துக்கொள்ள அதைவிடக் கஸ்ட்டப்பட்டு வேலை செய்யும் எமக்கு இங்குள்ள வேலை கடிணமானதாகத் தெரியவில்லை. ஆகவே, வேலையென்றால் கூப்பிடுங்கள் இலங்கையர்களையும் இந்தியர்களையும் என்று வெள்ளையர்களே அவ்வப்போது பேசுவது கேட்கும். கடிண உழைப்பாளிகள் என்கிற பெயரும் எமக்கு இருந்தது. அதனால், வழமை போலவே மேலாளரின் செல்லப்பிள்ளைகள் யாரென்பதில் எமக்குள்ப் போட்டி ஏற்படுவதுண்டு. எம்மிடம் வேலை வாங்கலாம் என்று அவர் எண்ணி வந்தபோதிலும், நாம் அதனை ஒரு கெளரவமாக பார்க்க ஆரம்பித்தோம். ஆகவே, எம்மைத்தவிர வேறு எவரும் மேலாளரின் மதிப்பிற்கு பாத்திரமாயிருப்பது எமக்கு எரிச்சலைத் தரும். அந்தக் காலமொன்றில்த்தான் அவன் வந்தான். என்னை விட வயதில் சிறியவன். 26 அல்லது 27 வயதிருக்கலாம். மிகவும் திடகாத்திரமானவன். வெள்ளையினத்தவன். சுருள் சுருளான மயிர்க்கற்றைகள் பொன்னிறத்தில் வளர்ந்திருக்க தனது பெயர் சொல்லி ஒருநாள்க் காலையில் அணியின் கூட்டத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டான். அவன் பற்றி மேலாளர் அறிமுகம் கொடுத்தபோது மனதிற்குள் சிறிய எரிச்சல். "எமக்கெல்லாம் இந்த அறிமுகம் கொடுத்தார்களா, இல்லையே? இவனுக்கு மட்டும் எதற்கு இந்த அறிமுகம்?" என்கிற கேள்வி. விடை எமக்குத் தெரியவில்லை. அணியில் பணிபுரிந்தவர்களில் கீழ்மட்ட வேலைகள், இடைநிலை வேலைகள், உயர் நிலை வேலைகள் என்று மூன்று பிரிவுகளாகாப் பிரிக்கப்பட்டிருந்தோம். இடைநிலை வேலைகளை பெரும்பாலும் இந்தியர்களும் இலங்கையர்களும் செய்துகொள்ள கீழ்மட்ட வேலைகளையும் உயர் மட்ட வேலைகளையும் வெள்ளையர்களே பார்த்துக்கொண்டார்கள். அவனும் கீழ்மட்டத்திலிருந்தே ஆரம்பித்தான். எமக்குக்கீழ் இருக்கிறான் என்பதால் அவன் பற்றி அதிக அக்கறை காண்பிப்பதை நாம் மறந்துவிட்டோம். ஆனால், அடிக்கடி அணிக் கூட்டங்களில் அவனின் பெயர் அடிபடும். அவனது பெயரை அணியின் மேலாளர் உச்சரிக்கும்போது வியப்பும், எரிச்சலும் ஒருங்கே வந்து போகும். ஆனாலும் அவன்குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்று இருந்துவிட்டோம். நாட்கள் செல்லச் செல்ல அவன் அணியில் முக்கியமானவர்களில் ஒருவனாகிப் போனான். கூட்டங்களில் அவன் பேசுவதை மேலாளர் உன்னிப்பாகக் கேட்பது புரிந்தது. அவன் ஈடுபட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து அவர் அடிக்கடி பெருமையுடன் பேசும்பொழுதுகளில் அதே எரிச்சல் வந்து போகும். ஆனால், அவன் குறித்த எமது பார்வைகள் தவறானவை என்பதை அவன் தொடர்ச்சியாக நிரூபித்து வந்தான். இலங்கையில் பொறியியல் படித்துப் பட்டம் பெற்றவன் என்கிற பெருமையும், இங்கிருக்கும் வெள்ளைக்காரனை விடவும் நாம் படித்தவர்கள் என்கிற எண்ணமும் அவனை எம்மிலும் கீழானவனாகப் பார்க்கத் தூண்டியது எமக்கு. அதனாலேயே அவனின் திறமைகளை ஏறெடுத்தும் பார்க்க நாம் நினைக்கவில்லை. ஆனால் எமது எண்ணங்களையும், பெருமைகளையும் அவன் மிக இலகுவாக உடைத்துக்கொண்டே எம்மை நோக்கி வந்துகொண்டிருந்தான். ஒருநாள் திடீரென்று கீழ்மட்ட அணியில் இருந்த அவனை எமது, அதாவது நடுத்தர வர்க்க அணியில் கொண்டு வந்து இணைத்தார் மேலாளர். எமக்கோ தூக்கிவாரிப் போட்டது. "இது எப்படித் தகும்? நாம் படித்தவர்கள் இல்லையா? பண்ணைகளில் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு நின்றவனை எம்மோடு, சரிக்குச் சமமாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். வெள்ளைக்காரன் என்பதால்த்தானே இதுவெல்லாம்?" என்கிற எண்ணம் தலையில் ஏறி அமர்ந்துகொள்ள அவன் மீது தேவையில்லாமல் எரிச்சலை வாரியிறைக்கத் தொடங்கினோம். ஆனால், அவனுக்குத்தான் நாம் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறோம் அல்லது எமக்குள் என்ன பேசிக்கொள்கிறோம் என்பதுபற்றி எதுவும் தெரியாதே? அவனோ எம்மிடம் மிகவும் சகஜமாகப் பழகினான். சில வேளைகளில் எம்மிடமே வந்து சில விடயங்களை எப்படிச் செய்யலாம் என்று கூடக் கேட்பான். விரும்பாதுவிடினும் கூட, அவன் கேட்கும்போது நாம் உதவியிருக்கிறோம். அவனும் நன்றியுடன் சென்றுவிடுவான். சில காலத்தின் பின்னர் இந்தியர்கள் மற்றும் இலங்கையர்கள் என்று கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியில் வேலையில் இணைந்தவர்களுக்கு அணியில் மேல்த்தட்டுப் பிரிவில் பதவி உயர்வு கிடைத்தது. அவ்வாறு பதவி உயர்வு கிடைத்துச் சென்றவர்களில் நானும் ஒருவன். மூன்று அல்லது நான்கு வருடங்கள் இருக்கலாம். 2010 வாக்கில் அவனையும் பதவியுயர்வு கொடுத்து எமக்குச் சமனானவனாக ஆக்கி அழகுபார்த்தது நிர்வாகம். இத்தனைக்கும் அவன் எம்மை வெறுக்கவில்லை. நிர்வாகத்திற்கு நெருக்கமானவன் என்பதைத்தவிர அவனை நாம் வெறுப்பதற்கு வேறு எந்த காரணங்களும் எமக்கு இருக்கவில்லை. அவன் குறுகிய காலத்தில் காட்டிய அதீத வளர்ச்சி எமக்குள் அச்சத்தை ஏற்படுத்தியிர்ந்தாலும் கூட, அவன் எமக்குப் போட்டியாக வரலாம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.
  14. பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம் காவ்யா பதிப்பக நிறுவனர் பேரா.சு.சண்முகசுந்தரம் அவர்கள் தமது புதினங்களான பொருநை, கூவம் இவற்றில் முறையே தமது நெல்லை, சென்னை வாழ்க்கையினைச் சொல்லோவியமாய் வரைந்துள்ளார். இத்தலைப்புகளால் ஈர்க்கப்பட்ட அடியேன், "என் வாழ்க்கையைச் சித்தரிக்கப் பெரிதாக ஏதுமில்லையெனினும், பொருநைக் கரையிலேயே அநேகமாக வாழ்நாள் முழுதும் கழிக்கும், களிக்கும் பேறு பெற்ற நான் இங்கு கற்றதையும் பெற்றதையும் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாய் அல்லது கட்டுரைத் தொடராய்ப் பதிவு செய்யலாமே என எண்ணியதன் வெளிப்பாடே இந்த என் எழுத்து. அக்காலத்தில் (ஓரளவு இக்காலத்திலும்) தலைப்பிள்ளை தாயாரின் ஊரில் பிறக்க வேண்டும் என்ற வழக்கத்தின்படி நான் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணிக் (பொருநை) கரையிலுள்ள அரியநாயகிபுரம் எனும் அழகிய கிராமத்தில் பிறவி எடுக்கும் பேறு பெற்றேன். பிறந்த ஊர் என்பதும் பள்ளிப் பருவத்தில் நீண்ட விடுமுறை நாட்களில் அங்கிருந்த ஆச்சி - தாத்தா வீட்டிற்குச் செல்வேன் என்பதுமே எனக்கும் அந்த கிராமத்துக்குமான தொடர்பு. மற்றபடி எனது தந்தையாரின் ஊரான பாளையங்கோட்டையே நான் வளர்ந்த, வாழ்ந்த ஊர். அதுவும் பொருநையின் கரையில் அமைந்த ஊர் என்பது எனக்கான பெரும்பேறு. தந்தையார் நெல்லை மாவட்டத்தில் அரசுப்பணியில் இருந்ததால், எனது சிறார் பருவத்தில் அவர்கள் வேலை பார்த்த கிராமத்தில் ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். செய்தி அறிந்த என் ஆச்சி (இந்த ஆச்சி என் அப்பாவின் தாயார்) உடனே அங்கு வந்து, "எங்கெங்கெல்லாமோ இருந்து நம்ம ஊரைத் தேடி வந்து பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். நீ என்ன இந்தப் பட்டிக்காட்டில் (!!) பிள்ளையைச் சேர்த்து இருக்கிறாய் ?" என்று என் அப்பாவைக் கடிந்து, என்னைப் பாளையங்கோட்டையில் படிக்க வைக்கத் தூக்கி வந்து விட்டாள். திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியதும் மேற்கொண்டு அன்று பேருந்து எதுவும் ஓடாது என்றதும் (அப்போதுதான் பிரதமர் நேரு இறந்த செய்தி வெளிவந்திருந்தது), என்னைத் தூக்கிக்கொண்டு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாளை வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தாள். வரும்போது பாலத்தில் நின்றபடி எனக்குத் தாமிரபரணியைக் காண்பித்தாள். என் வாழ்க்கையில் விவரம் தெரிந்து நான் முதன் முதலில் பொருநையைக் கண்ணுற்ற தருணம் அது. நாங்கள் நின்ற அந்தப் பாலம் வரலாற்றுப் புகழ்பெற்ற சுலோச்சன முதலியார் பாலம் என்பதெல்லாம் பின்னர் என் ஆச்சி கதையாகக் கூறியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஓரளவு இறுதியில் கட்டப்பட்டது இந்தப் பாலம். அதற்கு முன் பொருநையாற்றின் கிழக்கில் உள்ள பாளையங்கோட்டைக்கும் மேற்கில் உள்ள திருநெல்வேலிக்கும் இடையே போக்குவரத்து, பரிசல் மூலமாகவே நடைபெற்று வந்துள்ளது. பரிசலில் இடம் கிடைக்க அவற்றை இயக்குவோருக்குக் கையூட்டு தரவேண்டிய சூழல் நிலவியபோது, பரிசல் குழாமில் அடிக்கடி தகராறுகளும் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வந்துள்ளன. எனவே மாவட்ட ஆட்சியரின் பல பரிந்துரைகளுக்குப் பின் அங்கு ஒரு பாலம் அமைக்க ஆங்கில அரசால் ஒத்துக் கொள்ளப்பட்டது. எனினும் அதற்குரிய திட்டச் செலவான ஐம்பதாயிரம் ரூபாயை அதன் பயனாளிகளான மக்களிடமே நன்கொடையாகப் பெறத் திட்டமிடப்பட்டது. தங்களுக்குப் பெரிதும் பயனில்லாத திட்டங்களுக்கு ஆங்கிலேய அரசு (அன்றைய கம்பெனி அரசு) வரி வருவாயில் இருந்து செலவு செய்வதில்லை. அக்காலத்தில் செல்வந்தரும் நல்லுள்ளம் படைத்தவருமான திரு. சுலோச்சன முதலியார், அவருக்குக் கௌரவப் பதவியாக அளிக்கப்பட்டிருந்த சிரஸ்தார் பொறுப்பில் இருந்தார். மக்களிடம் நன்கொடை பெற்றுப் பாலம் கட்டும் பொறுப்பை அவரிடமே அளித்தது கம்பெனி அரசு. செல்வந்தரான அவர் பிறரிடம் நன்கொடை கேட்பதில் ஏற்பட்ட தயக்கத்தின் காரணமாகத் தமது சொந்தச் செலவிலேயே பாலம் கட்டித் தரத் தீர்மானித்தார். சில சொத்துக்களை விற்றது போக எஞ்சிய தொகைக்குத் தமது துணைவியாரின் இசைவுடன் அவர்தம் நகைகளையும் விற்றுக் கட்டினார். லண்டனில் தேம்ஸ் நதியின் மீது உள்ள 'வெஸ்ட் மினிஸ்டர்' பாலத்தின் மாதிரியில் கட்டப்பட்டது இப்பாலம். பின்னர் இயல்பாக சுலோச்சன முதலியார் பெயராலேயே இப்பாலம் வழங்கலாயிற்று. இப்பாலத்தையொட்டிய ஆற்றுப்பகுதியில் நான் கண்டவையும் கேட்டவையும் படித்தவையும் சில எப்போதும் நெஞ்சில் நிழலாடுகின்றன. பாலத்திலிருந்து பார்த்தால் தெரிகிறதே தைப்பூச மண்டபம் ! 1908 ல் 'திருநெல்வேலி எழுச்சி' எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க, மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்திற்குச் சில நாட்கள் முன்பு வங்காளப் புரட்சியாளர் விபின் சந்திரபாலின் விடுதலையைக் கொண்டாடும் வகையில் வ.உ.சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் ஆங்கில ஆட்சியரின் தடையை மீறி இதே தைப்பூச மண்டபத்தில் வீர எழுச்சியுரை நிகழ்த்தினர் என்பது தோழர் இரா.வேங்கடாசலபதியின் 'திருநெல்வேலி எழுச்சி'யில் வாசித்து அறிந்தது. நெல்லை சந்திப்பில் அப்போது செயல்பட்ட ம.தி.தா. இந்துக் கல்லூரி வளாகத்தில் ஆரம்பித்த ஊர்வலம் தபால் நிலையம், நகராட்சி வளாகம் போன்றவற்றைத் தீக்கிரையாக்கிய திருநெல்வேலி எழுச்சியும், அதைத்தொடர்ந்து ஆங்கிலேயரின் அடக்கு முறையும் வாசித்து அறிந்தவை. நெல்லைக்காரனாக என்னைத் தலைநிமிரச் செய்பவை. 1970 களின் ஆரம்பத்தில் தூய சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் காவல்துறையினரால் அநியாயமாகத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட பெருங் கொந்தளிப்பில் மாணவர் லூர்துநாதன் காவல்துறையின் தடியடிக்குப் பலியானது சுலோச்சன முதலியார் பாலத்திற்குக் கீழேதான். லூர்துநாதனை ஆற்றில் இருந்து மக்கள் தூக்கிய காட்சியை ஒரு பள்ளி மாணவனாக நான் பார்த்தது நேற்று நடந்தது போல் தோன்றுகிறது. 1999 ல் கூலி உயர்வு உட்பட நியாயமான காரணங்களுக்காகப் போராடிய மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் காவல்துறையால் ஓட ஓட விரட்டப்பட்டதும், உயிரைக் காத்துக் கொள்ள ஆற்றில் இறங்கியவர்களையும் விடாமல் அடித்ததில் பெண்கள், கைக்குழந்தை உட்பட பதினேழு பேர் உயிர்நீத்ததும் பொருநைக் கரைக்கு ஏற்பட்ட நீங்காத கறை. முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதில் ஜனநாயக (!) அரசுகள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல போலும் ! தினமும் பாலத்தைக் கடந்து அலுவலகம் செல்லுகையில் இரத்தவாடை அடிக்கிறதே, அது என் போன்றோர்க்கு ஏற்பட்ட மனநல பாதிப்போ ! 1992 லும் தற்போது 2024 லும் பாலத்தை மூழ்கடித்துப் பொருநை ஆடிய கோரத்தாண்டவமும் மக்களுக்கு ஏற்பட்ட பெருஞ்சேதமும் என்றென்றும் நெஞ்சைப் பதற வைப்பவை. சுலோச்சன முதலியார் பாலத்தைக் காட்டிய ஆச்சி அதனைக் கடந்து சிறியதொரு பாலத்தின் கீழே ஓடுகிற ஒரு ஓடையைக் காட்டினாள். அதன் பெயர் 'பிள்ளையைப் போட்டுப் பலாப்பழம் எடுத்த ஓடை' என்றாள். பிற்காலத்தில் சுருக்கமாக 'பலாப்பழ ஓடை' என்றாகி தற்போது யாருக்கும் பெயரே தெரியாத ஓடையாகி விட்டது. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுவில் நிகழ்ந்ததாக ஒரு கதை சொன்னாள். அந்த ஓடையில் மிதந்து வந்த ஒரு பெரிய பலாப்பழத்தை எடுக்க ஆசைப்பட்ட தாய் ஒருத்தி தனது குழந்தையைக் கரையில் விட்டு விட்டுப் பலாப்பழத்தை விரட்டிச் சென்றிருக்கிறாள். குழந்தை மெதுவாகத் தவழ்ந்து ஆற்றில் மூழ்கி விட்டது. எனவே அந்த ஓடைப்பாலத்திற்கு அப்பெயர். இப்படி எத்தனையோ கதைகள் ஊரைச் சேர்ந்த பலர் சொல்வதால் அவற்றில் சில ஓரளவு உண்மையாய் இருக்க வேண்டும். எது எப்படியோ சில செவிவழிக் கதைகள் சுவாரஸ்யமானவை. பழைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் புகழ்பெற்ற தாமிர சபையான நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயில், சித்திர சபையான குற்றாலநாதர் - குழல்வாய்மொழி அம்மை திருக்கோயில், நவ திருப்பதி, நவகைலாய திருத்தலங்கள், குற்றாலம் மற்றும் பாபநாச நீர்வீழ்ச்சிகள், திருநெல்வேலி அல்வா, பத்தமடைப் பாய் என நெல்லையின் சிறப்புகள் எண்ணிலடங்கா. ஐவகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டது நான் சிறுவனாய்ப் பார்த்த பழைய திருநெல்வேலி மாவட்டம். இவையெல்லாம் பெரும்பாலும் அனைவரும் அறிந்தமையின், வெகுசனம் அறியாத சிலவற்றைத் தொட்டுச் செல்வது இங்கு பொருந்தி அமைவது. நானே கண்டுணர்ந்த எனது எண்ணவோட்டத்தைப் பகிர்ந்து அளித்தல் அதுவேயாம். இன்றைய பாளையங்கோட்டை நகரின் நடுப்பகுதிக்கு மேற்கே 'மேலக்கோட்டை வாசல்' உள்ளது. அதன் மேல் தளத்தில் 'மேடைப் போலீஸ் ஸ்டேஷன்' இருந்தது. இப்போது காவல்துறை சார்ந்த தகவல் கட்டுப்பாட்டு நிலையம் உள்ளது. கிழக்கே 'கீழக்கோட்டை வாசல்' உள்ளது. அதில் தற்போது தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் இருக்கிறது. கோட்டையின் வடபக்க மதிற்சுவர் இன்றைய வடக்குக் கடைவீதி வழியாகச் சென்றது; தென்புறத்து மதிற்சுவர் சவேரியார் கல்லூரியின் முன்புறம் தற்போது செல்லும் முக்கிய சாலையின் மீது அமைந்திருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை பாளையங்கோட்டை ஒரு கோட்டை நகரமாக இருந்துள்ளது. அது ஒரு கற்கோட்டை. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே சிதிலமடையும் நிலையில் இருந்த கோட்டையின் மதிற் சுவர்கள் மக்களின் பாதுகாப்பு கருதி ஒரு சட்ட வரைவின் மூலமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயரால் தகர்க்கப்பட்டது. கோட்டையின் கிழக்கு, மேற்கு வாசல்கள் உறுதியானவையாக வீரர்கள் தங்கும் வசதியுடன் இருந்தன. அவை மட்டும் இடிபடாமல் மேற்கூறியவாறு இன்றும் பயன்பாட்டில் உள்ளன. நான் சிறுவனாக இருக்கும்போது அக்கோட்டை பற்றி என் ஆச்சி உட்பட சுற்றாரும் உற்றாரும் சொன்ன தவறான பாடம், அது வீரபாண்டிய கட்டபொம்மனால் கட்டப்பட்டது - அதாவது, பாளையக்காரர்களின் கோட்டை - என்பது. அதற்கேற்றாற் போல் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கோட்டை இருந்த இடத்தின் தென்மேற்கு மூலையில் (பாளை பேருந்து நிலையம் அருகில்) கட்டபொம்மன் சிலை நிறுவப்பட்டிருந்தது. இக்கோட்டை நகரத்துக்கு 'பாளையங்கோட்டை' என்பது ஒரு தவறான பெயர் (misnomer) என்பதை என் குருநாதர் பேரா. தொ.பரமசிவன் அவர்களிடமே தெரிந்து கொண்டேன். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் திருநெல்வேலி ஆட்சியராயிருந்த ஜாக்ஸன் துரை பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் ஆட்சி புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மனை, வரி கட்டாமல் தவறியமைக்காக பாளையங்கோட்டை (அப்போது ஸ்ரீ வல்லப மங்கலத்தின் ஒரு பகுதி) கிழக்கு வாசலில் அக்காலத்தில் அமைந்திருந்த கச்சேரியில் (நீதிமன்றத்தில்) ஆஜராகுமாறு பணித்திருந்தார். அதன்படியும், தமது அமைச்சர் தானாபதிப் பிள்ளையின் ஆலோசனையின்படியும் கட்டபொம்மன் ஆஜரானார். மக்களால் பரவலாகப் பேசப்பட்ட இந்நிகழ்வு இவ்வூருக்கும் பாளையக்காரர்களுக்கும் உள்ள ஒரு தொடர்பு (ஆஜரான கட்டபொம்மனை ஜாக்ஸன் சந்திக்காமல் குற்றாலத்திற்கும் ராமநாதபுரத்திற்கும் பாளையக்காரர் படையினை அலைய விட்டதும், ராமநாதபுரத்தில் ஆங்கிலேய கம்பெனி படையினரோடு மோதல் ஏற்பட்டதும் தனிக்கதை). மற்றுமொரு தொடர்பு உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை, முதல் பாளையக்காரர் போரில் கம்பெனிப் படையினரால் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டையின் (அன்றைய ஸ்ரீ வல்லபமங்கலம்) கிழக்குக்கோட்டை வாசலின் கீழ்த் தளத்தில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் 1801 ல் அச்சிறையில் இருந்து தப்பினார் (சிறிது காலத்திற்குப் பின்னர் வேறு பாளையக்காரர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு, ஆங்கிலேயரிடம் மீண்டும் சிறைப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார் என்பதுவும் தனிக்கதை). இவ்விரண்டு நிகழ்வுகளும் மக்களால் பரவலாகப் பேசப்பட்டன. இக்கதைகளை மக்களிடம் பிற்காலத்தில் வாய்மொழியாகத் திரட்டிய ஒரு ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் (அவரது பெயர் தொ.ப என்னிடம் சொல்லி நான் மறந்தது. தொ.ப இப்போது இல்லை. வாய்ப்பை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆவணக் காப்பகத்தில் பெயரைத் தேட வேண்டும்) மக்கள் பேசிய மொழியிலிருந்து அரைகுறையாகப் புரிந்து, அக்கோட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்கள் கட்டியது எனப் பதிவு செய்துவிட்டார். அவர் ஒரு அரைகுறை வரலாற்று ஆய்வாளர் என்பதற்குச் சான்று - ஊர் மக்கள் ஏதோ ஒரு மலபாரி மொழி பேசினர் என்று அவர் குறிப்பது; தொன்மையான தமிழ் மொழி பற்றி ஏதும் அறியாதவர் என்பது. உடனே அப்போது இருந்த அரைவேக்காட்டு மாவட்ட அதிகார வர்க்கம் ஊருக்கு 'பாளையங்கோட்டை' எனப் பெயரிட்டிருக்க வாய்ப்புள்ளது. மற்றபடி அக்கோட்டை ஒன்பதாம் நூற்றாண்டில் வீரநாராயண பராந்தக பாண்டியனால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது கோட்டைக்கு நடுவே அம்மன்னனால் கட்டப்பட்ட கோபாலசுவாமி கோயிலில் கிடைத்த கல்வெட்டுகளின் தரவுகள் அடிப்படையில் அனுமான விதியாகக் (rule of inference) கொள்ளலாம் என்று பண்பாட்டு அறிஞர் தொ.பரமசிவன் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். அக்கோயிலின் பெருமாள் அம்மன்னன் பெயராலேயே 'வீரநாராயணர்' (வீரநாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) என்று முதலில் அழைக்கப்பட்டு, இப்போதிருந்து சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு 'வேதநாராயணர்' (வேத நாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) எனப் பெயர் மாற்றம் பெற்ற தகவல் அக்கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்தி. வேதாகமத்தினருக்கு 'வீரநாராயணர்' சரி வரவில்லை போலும். மேலும் வீரநாராயண பராந்தகனின் தந்தை பராந்தக நெடுஞ்சடையன் ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன் ஆவார்; தனது தந்தையார் பெயரைக் கொண்டே அவ்வூருக்கு 'ஸ்ரீ வல்லப மங்கலம்' எனும் பெயர் சூட்டினான். பின்னர் அது 'பாளையங்கோட்டை' ஆன கதை முன்னம் நாம் பார்த்தது. மேற்கூறிய ராஜகோபாலசுவாமி கோயிலுக்குக் கிழக்கே சற்று தூரத்தில் அமைந்த சிவன் கோயில் (திரிபுராந்தீஸ்வரர் ஆலயம்) சேர மன்னன் உதயமார்த்தாண்ட வர்மன் ஆட்சிக் காலத்தில் (கிபி 16 ஆம் நூற்றாண்டில்) கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலிலும் பதினொரு கல்வெட்டுகள் கிடைக்கப் பெறுகின்றன. கோட்டை மற்றும் இவ்விரண்டு கோயில்கள் பற்றி மேலும் செய்திகளைப் பெற பேரா. தொ.பரமசிவன், பேரா. ச.நவநீதகிருஷ்ணன் எழுதிய "பாளையங்கோட்டை - ஒரு மூதூரின் வரலாறு" என்னும் நூலில் காணலாம். கோட்டையின் மேற்கு வாசலுக்கு அருகில் உள்ள ராமசாமி கோயில் பற்றிய குறிப்பும் அந்நூலில் உள்ளது. இவை தவிர நாட்டார் தெய்வங்களாக சிறிய அம்மன் கோயில்கள் பல உள்ளமை கோட்டை நகரத்தின் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு. இந்த அம்மன்கள் போர்க்காலத்தின் தாய்த் தெய்வங்கள் ஆகும் (War Deities). கோயில்கள் தோன்றிய வரிசைப்படி இந்த அம்மன்கள் சகோதரிகளாக மக்களால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். மூத்த அம்மனான ஆயிரத்தம்மன் ஆயிரம் படை வீரர்களைக் கொண்ட பாசறைத் தெய்வமாக இருந்திருக்க வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டில் போருக்குச் செல்லுமுன் இக்கோயிலில் வீரன் ஒருவனை நரபலி கொடுக்கும் வழக்கமும், பின்னர் அது எருமைப் பலியாகி, தற்காலத்தில் போர்க்கால விழாவான தசராவில் ஆடு பலியாக உருமாறி உள்ளது என்பது மக்களிடம் உள்ள செவிவழிச் செய்தி. பொருநையாற்றின் கரையில் வண்ணார்பேட்டையில் அமைந்துள்ளது பேராற்றுச்செல்வி அம்மன் கோயில். போருக்குச் செல்லும்போது கோட்டையின் வடக்கு வாசல் வழியாகவே படை கிளம்பி செல்வது வழக்கம். எனவே அவ்வாசலருகில் அமைந்திருக்கும் அம்மனான 'வடக்கு வாசல் செல்வி' இப்போது 'வடக்குவாச் செல்வி'. இப்படியே பல. இப்போது வருடந்தோறும் பாளையில் தசரா எனக் கொண்டாடப்படும் போர்க்கால விழா சுற்று வட்டாரத்தில் மிகப் பிரபலம். சுமார் பதினைந்து அம்மன்கள் சப்பர பவானியாக வருவது மக்களுக்குக் கண்கொள்ளாக் காட்சி. பதினெட்டாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் பாளையங்கோட்டை சிறிது காலம் ஆற்காட்டு நவாபின் தளபதியாய் இருந்த யூசுப் கானின் கட்டுப்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அப்போது இப்பகுதியில் தோன்றிய இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு ஊர்வலத்திற்கு எதிர்வினையாகவே, யூசுப் கான் ஆங்கிலேயரால் கொல்லப்பட்ட பிறகு, அம்மன் கோயில்களின் சப்பர பவனியோடு தசரா விழா கொண்டாடும் வழக்கம் பாளையில் தோன்றியிருக்கலாம் என்ற தொ.ப வின் ஊகத்தைக் கேட்டிருக்கிறேன். பழைய கோட்டையில் மேலவாசலில் இருந்து வட திசையில் சென்ற மதிலை ஒட்டிய தெரு சிறிது காலம் முன்பு வரை பாடைத் தெரு என வழங்கியது. ஊரில் இறந்தோரைத் தூக்கிச் செல்லும் பாடைகள் மற்ற தெருக்களுக்கு ஊடே செல்லாமல் ஊரின் மேற்குக் கோடியில் இருந்த அத்தெருவின் வழியே சென்று தாமிரபரணியின் வெள்ளக்கோயில் பகுதியைச் சென்றடையும். எனவே அது பாடைத் தெரு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மதிற்சுவர் இடிக்கப்பட்ட பின் அங்கே ஒரு ராணுவ உணவகம் (military canteen) அமைந்திருந்தது. அது பஞ்சாபி மொழியில் 'லங்கர் கானா' என அழைக்கப்பட்டது. சீக்கிய குருத்வாராக்களில் சமையல் செய்யும் இடத்திற்குப் பெயர் லங்கர் கானா. பாடைத் தெருவில் வீடுகள் வர ஆரம்பித்த பின் தெருவின் பெயரை 'லங்கர் கானா தெரு' என மாற்றிவிட்டனர். அங்கு வாழ்ந்த மக்களுக்கு 'பாடை' ஏதோ மனதை உறுத்தியிருக்கலாம். அத்தெருவிற்குக் கிழக்கே அதற்கு இணையாகச் செல்வது பெருமாள் மேல ரத வீதியாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் கோட்டை ஆங்கிலக் கம்பெனிப் படை மற்றும் யூசுப் கானின் தலைமையில் ஆற்காட்டு நவாபின் படை கோட்டையைத் தாக்கிய போது இறந்த வீரர்களின் உடல்கள் விழுந்த இடத்தில் சுடலை, கருப்பசாமி முதலிய நாட்டார் தெய்வங்களைத் தோற்றுவித்தனர். மேல ரத வீதியின் மேற்குப் புறத்தில் வீடு கட்டும் போது அத்தெய்வங்களின் பூடங்களை வீடுகளின் பின்புறம் வைத்துக் கட்டினர். வருடத்தில் ஒருமுறை அத்தெய்வங்களுக்குப் படையல் வைக்கும்போது கருப்பசாமிக்கு தோசை மாவில் கருப்பட்டி கலந்து, சுட்டு கருப்பட்டி தோசை படைக்கும் வழக்கம் இருந்தது. அதன் விவரம் மூத்தோரிடம் கர்ண பரம்பரையாக வந்திருக்க வாய்ப்பு இருந்தமையாலும், நான் அந்தத் தெருக்காரன் என்பதாலும் அவ்விவரம் சேகரிக்க பேரா. தொ.ப என்னைப் பணித்தார். கருப்பசாமிக்கும் கருப்பட்டிக்கும் பொதுவில் 'கருப்பு' எனும் வேடிக்கை விளக்கம் தவிர என்னால் வேறு விவரம் சேகரிக்க இயலவில்லை (!). கோட்டையைப் பாதுகாத்த படை பெரும்பாலும் மதுரையிலிருந்து வந்திருந்ததால், இறந்த வீரன் சார்ந்த இடத்தை வைத்து அவன் கருப்பசாமி ஆகியிருப்பான் என்பதும் அவன் வாழ்ந்த இடத்தில் கருப்பசாமிக்கான படையலில் அந்த வழக்கம் இருந்திருக்கலாம் என்பதும் ஒரு ஊகம். இப்படி பல வழக்கங்களும் கதைகளும் ! கருப்பட்டி தோசை கூட பண்பாட்டு அசைவின் ஒரு குறியீடோ ! இவ்வாறு நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக்கான சிறந்த களமாக பாளையங்கோட்டை திகழ்வதும் இவ்வூருக்கான ஒரு சிறப்பு. ஒவ்வொரு சாதி, சமய, இனக்குழுவின் பங்களிப்பும் உண்டு. உதாரணமாக, விசயநகர ஆட்சிக் காலத்திலும் பின்னர் திருமலை நாயக்கர் காலத்திலும் மதுரைக்குப் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் பரவிய சௌராட்டிரர்களின் பங்களிப்பினைப் பாளை சிவன் கோயில் சுற்று வட்டாரத்தில் காணலாம் - நெல்லை நகரில் தற்காலத்தில் நெல்லையப்பர் கோயில் சமீபத்தில் மார்வாடி ஜைன சமூகத்தினரைப் போல. நமது பாளையங்கோட்டைச் சித்திரம் இதுகாறும் பெரும்பாலும் கோயில்களையும் சாமிகளையும் சுற்றி அமைந்தது இயல்பான ஒன்றே ! நாத்திகராயிருப்பினும் பேரா. தொ.பரமசிவன் மக்களை வாசிக்க அவர்களின் கோயில்களையும் சமய நம்பிக்கைகளையும் அவை சார்ந்த பழக்க வழக்கங்களையும் வாசிக்க வேண்டுமென்பார். அவரிடம் பாடம் படித்த மாணவன் வேறு எப்படி எழுத முடியும் ? சரி, கோவில்கள், கோட்டை கொத்தளங்கள் மட்டும் இன்றைய பாளையங்கோட்டை ஆகுமா ? கோட்டை இடிந்து போயிற்றே ! அதன் எச்சங்களான மேல, கீழக்கோட்டை வாசல்கள் வரலாற்றுச் சின்னங்கள் ஆகிவிட்டனவே ! பாளையங்கோட்டைக்காரனாகிய நான் 'நான்' ஆக ஆனது 'தென்னகத்து ஆக்ஸ்போர்டு' என்று பெருமையுடன் நிற்கும் பாளையங்கோட்டையில் ஆயிற்றே ! அந்த முகத்தை இவ்வூருக்குத் தந்த கிறித்தவ மிஷனரிகளின் வரலாற்றைக் கூறினால்தானே இவ்வூரின் வரலாறு ஓரளவு முழுமை பெறும் ? பொருநைக்கு அக்கரையில் அமைந்த நெல்லை நகரத்தையும் சிறிதளவு தொட்டுக் காட்டினால்தானே கட்டுரைத் தலைப்பிற்கும், நான் அநேகமாகத் தினந்தோறும் அந்நகரைக் கடந்து சென்றதற்கும் நியாயம் கற்பிப்பதாகும் ? இவற்றை அடுத்த தொடராகப் பார்ப்போமா ?
  15. (எழிலன்): - முதலாளி இன்றைக்கு லீவு தாங்கோ? எனக்கு காய்ச்சலா இருக்கு உடம்பும் நடுங்குகிறது (எழிலன்) முதலாளி:- இன்றைக்கு லீவு கொடுக்க இயலாது இன்று ஞாயிற்றுக்கிழமை கன சனம் கடைக்கு வரும் நீயும் லீவு எடுத்தால் நான் யாரைக்கொண்டு க‌டையை நடத்துற‌ வேலை செய்யுற என்று சொன்னார் முதலாளி முதலாளி:- இல்லை ஐயா எனக்கு நிற்க கூட முடியல அதுதான் லீவு கேட்கிறன் முதலாளி:- சரி லீவு இல்ல கணக்கை பார்த்து காசை மொத்தமா வாங்கிட்டு போ இனி வேலைக்கும் வராத‌ என்றார் முதலாளி. (எழிலன்): உடலைப்பார்த்தால் தான் நாளைக்கு வேலை செய்யலாம் என காசை தாங்கோ என கேட்க முதலாளி:- எத்தனை நாள்? (எழிலன்): 15 நாள் ஐயா 15000 ரூபா முதலாளி:- இந்தா 10000 பிறகு வந்து 5000 ரூபாவை வாங்கித்துப்போ என்றார் முதலாளி நம்ம தமிழ் முதலாளிகளின் நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்று காசை வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு நான் செல்ல அங்கே காவாலாளி இன்றைக்கு ஓ பி ரி (O.P.T) இல்லை நாளைக்கு வாங்க என்றார். எனக்கு நிற்க முடியல மருந்து எடுக்கணூம் தம்பி உள்ள விடுங்க யாரையாவது பார்த்து மருந்து எடுத்து செல்கிறேன் என நானும் சொல்ல அவங்க விடுவதாக இல்லை லேசாக மயக்கம் வருவது போல அமர உள்ளே கிளினிக் செய்யும் வைத்திரியரிட்ட அனுப்புங்க என சொல்லி உள்ள விட அங்கே ஒரு பெண் தரையை துடைத்துக்கொண்டிருந்தாள். நான் சென்றால் அந்த பகுதி மீண்டும் அழுக்காகிவிடும் என்ற காரணத்தால் காயும் வரைக்கும் நிற்க அவளோ போங்க பறவாயில்லை என்றாள் ஆளை அடையாளம் காண முடியவில்லை முகத்தை மறைத்து முகக்கவசம் அணிந்திருந்தாள். சரி நான் போய் வைத்தியரைப்பார்க்க வரிசையில் நிற்க அந்த குரல் எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறது என மனம் சொல்ல அந்த‌ குரலையும் அவளையும் தேடியது கண்கள் அவவாக இருக்குமோ என்ற‌ ?? கேள்விதான் எழுகிறது பதில் இல்லாமல் வைத்தியர் :- அடுத்த ஆள் வாங்கோ உள்ளே அழைக்க என்ன பிரச்சினை! ஐயா நேற்றில இருந்து நடுங்கி காய்ச்சல் காயுது சரி இந்த குழுசைகளை விழுங்குங்க பனிக்காலம் என்ற படியால் பனிவெளியில திரியாதிங்கோ சரி ஐயா நன்றி என்று வெளியில் வர நீலன் நீலன் என அழைக்க திரும்பி பார்த்தேன் அந்த பெயரோ போராட்ட காலத்தில் எனக்கு வைத்த பெயர் அது அந்த பெயரை தெரிந்தவர் யார் என திரும்பி பார்த்த போது அந்த பெண்தான் நீங்க?? நான் ரோசி (சுடர்) அக்கா நீங்களா? நீங்கள் எப்படி இங்க இந்த வேலைக்கு அது பெரிய கதை வா என கூட்டிக்கொண்டு போனா இங்க இரு......... சாப்பிட்ட நீயா? ஓம் சாப்பிட்ட நான் சரி பிளேன் டி குடி இல்ல அக்கா வேணாம் தம்பி ஒரு பிளேன் டீ போடு அக்கா காசை எடுத்துவர போனா வேலைக்கு கொண்டு வரும் பையை எடுக்க‌ அதிலதான் காசு வைத்திருந்தா அப்போது சிற்றுண்டி சாலைக்கு முன்னால் உள்ள சிறிய கோவிலில் பதறி விழுந்து ஒருவன் ஓடி வந்து நீயெல்லாம் கடவுளே இல்லை உன்னை நான் கும்பிட்டிருக்கவே கூடாது என்றான் உறவினர் யாரோ இறந்திருப்பார்கள் போல இன்னொருவன் வந்து விழுந்து வணங்கினான் ஆண்டவரே உனக்கு நன்றியப்பா என் வாழ் நாள் உனக்காகவே என்றான் பாவம் கடவுள் எவ்வளவு பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. கல்லாகவே இருப்பது கடவுளுக்கு நல்லது என என் மனதுக்குள் தோன்ற அக்கா ஓடி வந்தா என்ன குடிச்ச நீயோ ஓம் குடிச்சன் இங்க நல்ல புதுனம் பார்க்கலாமே அக்கா இங்க நேரம் போறதே தெரியுறல்ல கடைக்கார தம்பி இந்தா 20 ரூபா அக்கா கடை பக்கமே வாரல்ல போல இப்ப பிளேண்டீ 25 ரூபா ஓ அப்படியா சரி அஞ்சு ரூபா பிறகு தாரன் கடைக்கு வார ஆட்கள் இதயே சொல்லுங்க‌ இப்ப எல்லாம் விலை கூடிப்போச்சு அக்காவுக்கு தெரியாதே என்று கேட்டான் அந்த சிற்றுண்டிச்சாலை தம்பி அக்கா இத கொடுங்க நான் கூட வேலையில் இருந்து விலகித்தான் ஆஸ்பத்திரிக்கு வந்த நான் காய்ச்சலுக்கு லீவு கேட்ட நான் கணக்க முடிச்சு துரட்டிட்டாரு அக்கா இந்தா கையில இருக்கு 10000 ரூபா பார்த்தியா நம்ம சனத்தா ஓம் அக்கா உலகமே அப்படித்தானே இயங்குது ஓம் ஓம் பறவாயில்ல நீ வச்சுக்க ................. சரி குழுசையை காட்டு இந்தா பாருங்க உங்களுக்கு தெரியாத குழுசையா என்ன‌ ?? இந்த பவர் கூடுன குழுசைகளை விழுங்காமல் நல்ல ஊறல் பைய வாங்கு ஊறல் போட்டு குடி அது உடம்புக்கும் நல்லது பச்சை தண்ணியில அளையாமலும் இரு ம் சரி அக்கா என்ன நடந்த? அந்த கதைகளை விடு அதைப்பேசி பலன் இல்லை என மறுத்துவிட்டார் இஞ்ச பாரு என முகத்தை காட்டுனா முகம் ஒரு பக்கமாக தீ காயம் ஏற்பட்டு கழுத்து வரை நீண்டு இருந்தது. நீங்க மருத்துவ பிரிவிலிருக்கும் போது பார்த்தது அக்கா ம் நம்மட பிள்ளைகள் எல்லாம் போயிட்டுது நான் மட்டும் தான் அந்த ஷெல் தாக்குதல்ல காயப்பட்டு வந்த நான் ஊருக்கு எங்கயும் போக முடியல. போனாலும் பிரச்சினை இப்ப இங்கதான் ஒரு பிள்ளை படிக்குது அவரும் இறந்து போனார் ஓ அப்படியா? அதுதான் இந்த வேலையில சேர்ந்த நான் சாப்பாடு இங்க கிடைக்கும் அந்த செலவு மிச்சம் பிள்ளைக்கு படிப்புக்கு மட்டும் காசு............... ம் அக்கா இப்ப முன்னாள் போராளிகளுக்கு கனபேர் உதவி செய்யுறாங்க தானே அக்கா ம் செய்யுறாங்க ஆனால்???? அவங்க போண் நம்பற எடுத்து நமக்கு நீங்க போராளிதானா என பரீட்சை வைத்து பார்த்து உதவி செய்யுறதுல பல மாதம் போய் விடுகிறது தம்பி.............. ஓம் அக்கா நானும் கூட யாரிட்டயும் சொல்கிறதில்லை கடந்த காலத்தை . சரி சாப்பாடு ஒன்று கட்டித்தருகிறேன் கொண்டு போய் சாப்பிடு இங்க ஆஸ்பத்திரி சாப்பாடு என்று யாரும் பெரிதாக சாப்பிடமாட்டார்கள் சாப்பாடு இருக்கு கோழிகறி இன்றைக்கு என அக்கா சாப்பாடு எடுக்க போனா கையில் இருந்த அந்த 10000 ரூபாவை அவ பையில் அவக்கு தெரியாமல் வைத்துவிட்டு இருந்தேன் .அக்கா பொலித்தீன் பையையினுள் சாப்பாடு இட்டு தந்தா நானும் வாங்கிக்கொண்டு கோவிலுக்கு வெளியில் இருக்கும் ஒரு மர நிழலில் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் தூங்கி விட்டேன் திடிரெனா யாரோ அதட்டி எழுப்புவது தெரிந்தது கோழி சாப்பிட்டு கோவிலுக்கு முன்ன உறங்க கடவுள் கோபித்து விட்டாரோ அவர்தான் அதட்டி எழுப்புகிறாரோ???? என எழும்ப கோவில் நிர்வாகியாம் இங்க படுக்க கூடாது போங்க என்றார். நானோ அந்த பஸ் நிற்கும் நிறுத்துமிடத்தில் இருக்கையில் அன்றிரவு தூங்க ஆயத்தமாகிறேன் அப்போது அந்த‌ சுவற்றில்............. இதோ கடவுள் வருகிறார் என போஸ்டர் ,இன்னும் பல கோவில்களின் போஸ்டர்கள் ஒட்டி இருந்தது அந்த நிலையத்தில் நான் கூட பயமில்லாமல் தூங்கினேன் நாளை என்னை எழுப்பி விடுவார் என்ற நினைப்பில்... மலிந்து போன கடவுள்களை நோக்கி..................................
  16. புத்தகத்தின் பெயர் : AK47 எப்படி இயக்குவது
  17. சிங்கள பெரும்பான்மை தேசியம் வளர, அவர்கள் மகிழ்ச்சியாக இனவழிப்பு செய்ய ...நாங்கள் பொத்திக்கொண்டு தான் வாழ வேண்டும்.. என சிலர் விரும்பலாம்...
  18. காணொளியின் 30 வது நிமிடங்களில் இருந்து பாருங்கள்.
  19. நீங்கள் பிரார்த்திக்க வேண்டியவர்கள் வேண்டியதுகளின் அட்டவனை அதிகமாகிக் கொண்டே போகின்றது......! 😂 பாராட்டுக்கள் .......!
  20. கழுகை வைத்தே கவிதை. அருமை.
  21. இந்தியாவில் மோடியை விரும்பாத மக்கள் இருப்பது போ, அமெரிக்காவில் ஜோ பைடன் சனாதிபதியாக இருப்பதை விரும்பாத மக்கள் இருப்பது போல ரஸ்யாவிலும் புடினின் ஆட்சியை விரும்பாத மக்கள் இருப்பதில் வியப்பில்லையே? புட்டினை பயங்கரவாதியாக, அடக்குமுறையாளனாக மேற்குலகு சித்தரிக்கும் நிலையில் ரஸ்யாவில் புடினின் எதிர்ப்பாளர் ஒருவரின் இறுதிச் சடங்கில் இத்தனை மக்கள் கூட்டம் எதுவித பாரிய அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி ஒன்றுகூடக் கூடிய சூழல் இருப்பதைத் தாங்கள் வரவேற்க வேண்டும்.
  22. வணக்கம் ரசோ. உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
  23. இந்த அறிவியல் ஆதாரத்தை வைத்து இங்குள்ளோர் ஒற்றுமையாக வாழட்டும் என நினைத்தார்களோ?!
  24. சாணியில் பிள்ளையாரை பிடித்து வைத்து கும்புடுகிறீர்கள். சாணியை கரைத்து வீட்டுக்கு தெளிக்கிறீர்கள். சாணியை கரைத்து முகத்தில் அடிப்பதை நீங்கள் பெருமையாக நினைக்க வேண்டும். 😁
  25. யாரப்பா யாழ்கள ஆய்வாளர்களை மிஞ்சி ஆய்வு செய்து மராட்டியர்களை இதற்குள் கொண்டு வந்து செருகியது?
  26. வணக்கம்… வாருங்கள் 🙏
  27. வணக்கம் நல்வரவு.
  28. முதலில் இங்கு உள்ள ஒரு சிலரில் மரபணு வை பார்க்கணும் சிலவேளை முழுக்க சிங்களவர் என்றே காட்டினாலும் ஆச்சரியபட தேவையில்லை . 1 தமிழரை கொஞ்சம் பெருமையா சொன்னால் உடனே பக்கம் பக்கம் ஆக கோபத்தின் உச்சியில் நின்று எழுதுவார்கள் 2. புலிகள் இனி வரப்போவதில்லை ஆனாலும் புலி செய்தபுலிகளே ஒரு சில பிழைகளை திருப்பி திருப்பி எழுதி இன்பம் காண்பார்கள் . 3.சிங்களவர்கள் என்ன செய்தாலும் அவர்கள் சிறந்த அறிவுடனே தான் செயற்படுகிறார்கள் என்று பெருமை கொள்வார்கள் .
  29. நன்றி நிலாமதி. பெயர் தமிழ் இல்லை, ஆள் அசல் தமிழ் தான் அக்கா நான் சாட்சி. ஆள் அசல் தமிழ் தான். இன்னமும் நினைவிருக்கிறது. தம்பி @நீர்வேலியான் அறிமுகப்படுத்தியிருந்தார்.
  30. இன்னமும் நினைவிருக்கிறது. ஏற்கனவே உறுப்பினர் என்று எண்ணிவிட்டேன். இப்போதும் Piedmont CA இல்த் தான் நிற்கிறேன். 13ம் திகதி நியூயோர்க் பயணம். இந்த வருட போட்டி எப்போது?
  31. எனக்கு I science ன் நம்பகத்தன்மையின் மீது சந்தேகம் வந்துவிட்டது. 🤣
  32. சிறப்பு முகாமிலிருந்து ஓர் திறந்த மடல் -இராபர்ட் பயஸ், சிறப்பு முகாம், கொட்டப்பட்டு, திருச்சி. 29/2/ 2024 உலகத் தமிழர்களுக்கு.... வணக்கம். நான் இராபர்ட் பயஸ் பேசுகிறேன். உங்களை உங்களோடு உங்களில் ஒருவனாக சுதந்திர மனிதனாக இல்லாமல் எங்களில் ஒருவரான சாந்தனை இழந்து இதோ இந்த கம்பிகளுக்கு பின்னால் இருந்து இப்படி உங்களை சந்திக்க நேர்ந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. 32 வருட நீண்ட சிறைக் கொட்டடிக்கு பிறகு கடந்த 11-11- 2022 அன்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்த ஆறுபேரில் நானும் ஒருவன். அந்த ஆறுபேரில் நான், ஜெயக்குமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய நால்வரையும் இலங்கைத் தமிழர் எனக் காரணம் கூறி இந்திய வெளியுறத்துறை நாட்டைவிட்டு வெளியே அனுப்பும் வரை சிறப்பு முகாமில் அடைத்து வைக்க உத்தரவிட்டது. தொலைந்து போன வாழ்க்கையை எதிர்நோக்கி 32 வருட நீண்ட காத்திருப்பு முற்றுபெறும் தருவாயில் கூட விடுதலையை ருசிக்க முடியாமல், சிறிது நேரம் கூட விடுதலைக் காற்றை சுவாசிக்க முடியாமல் புழல் சிறையிலிருந்து நானும் ஜெயக்குமாரும் வேலூர் சிறையிலிருந்து சாந்தனும் முருகனும் திருச்சி சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து அடைக்கப்பட்டோம். இதோ முடியப்போகுது 32 ஆண்டுக்கால சிறைக் காத்திருப்பு என்று எண்ணிய எங்களுக்கு அப்பொழுது விளங்கவில்லை நாங்கள் சிறை மாற்றப்படுகிறோம் என்று. ஆம், அன்று நடந்தேறியது அப்பட்டமான சிறை மாறுதல் தான் என்பதை எங்களுக்கு காலம் தான் விளக்கியது. இது சிறையல்ல சிறப்பு முகாம் தானே என்று எண்ணிய எங்களுக்கு இது சிறையல்ல சிறையை விட கொடுஞ்சிறை என்பதும் எங்களுக்கு போகப்போகத் தான் விளங்கியது. நாட்டைவிட்டு அனுப்பும்வரை எங்களை சிறப்பு முகாமில் வைக்கிறோம் என்றவர்கள் இன்றைய தேதிவரை நாட்டைவிட்டு அனுப்புவதற்கு எடுத்த முன்னெடுப்புகள் என்னவென்று கேட்டால் மிகப்பெரிய கேள்விக்குறியும் ஆச்சரியக்குறியும் தான் மிஞ்சும். "சிறப்பு முகாமா..? அது ஜெயில் மாதிரிலாம் இல்லைங்க சார். எல்லா வசதிகளும் செய்து கொடுப்போம்" என்று பேசி சமாளிக்கும் அரசும் நிர்வாகமும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. கடந்த ஜனவரி 28 ஆம் தேதி ஒரு வார காலமாக மருந்து மாத்திரை கிடைக்காமல் ஒருவர் இறந்து போனார். இப்பொழுது சாந்தன் கல்லீரல் முழுவதும் செயலிழந்து, எழுந்து நிற்கக் கூட முடியாமல் மிக மோசமடைந்து பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் ஏதும் பலனளிக்காத நிலையில் இறந்து போயிருக்கிறார். இந்த மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது..? யாரை நாங்கள் நொந்துக்கொள்வது..? அனைத்து அடிப்படை உரிமைகளையும் மறுத்து, உடல்நலன் குன்றி 'விடுதலை ஆகிவிடுவோம். விடுதலை ஆகிவிடுவோம்.' என்று கனவு கண்டு விடுதலை ஆகிவிட்டோம் என்று பூரிப்பு கிடைத்த தருவாயில் மீண்டும் ஏமாற்றப்பட்டு சிறைமாற்றப்பட்டு இதனால் மனநலனும் பாதிக்கப்பட்டு இறந்து போன சாந்தனுக்கு சிறை வாழ்வு முடிந்தது. இன்னும் மீதம் மூன்று பேர் இருக்கிறோம். நாங்கள் மீண்டும் காத்திருக்க தொடங்குகிறோம் இந்த சிறப்பு முகாமில். சிறையில் கூட சிறை நிர்வாகத்திற்கு சிறை விதிகள் கையேடு இருக்கிறது. அதன்படி கைதிகளுக்கு இருக்கக்கூடிய மற்றும் இல்லாத உரிமைகள் கடமைகள் வரையறுக்கப்பட்டு இருக்கும். ஆனால் சிறப்பு முகாமோ சிறையை விட கொடுமையானது, இங்கு எந்த சட்டத்திட்டங்களோ வரையறைகளோ கிடையாது. அரசும், மாவட்ட ஆட்சியரும், முகாம் நிர்வாகமும் என்ன நினைக்கிறதோ அவையெல்லாம் விதிமுறைகளாகவும் சட்டத்திட்டங்களாகவும் ஆகின்றன. மருத்துவம் கிடையாது என்று இவர்கள் முடிவெடுத்தால் முகாம்வாசிகளுக்கு மருத்துவம் கிடையாது. தனிமைச் சிறை என்று இவர்கள் முடிவெடுத்தால் தனிமைச் சிறை யாரும் மனு பார்க்கக்கூடாது என்று இவர்கள் முடிவெடுத்தால் யாரும் மனுப்பார்க்க முடியாது. இப்படியான நிர்வாகம் தான் நாட்டைவிட்டு வெளியில் அனுப்புவதற்காக என்று காரணம் கூறி சிறப்பு முகாமில் அடைக்கப்படுபவர்கள் அதற்கான எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படாமல் வருடக்கணக்கில் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இன்னொரு சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றனர். நாங்கள் சிறு சிறு அடிப்படைத் தேவைகளையும் மற்றும் அடிப்படை உரிமைகளையும் கூட போராடி, உயிரைக் கொடுத்து பெறவேண்டிய சூழலே இருக்கிறது. எங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியான 32 வருடங்கள் ராஜீவ்காந்தி பெயரைச் சொல்லியே சிறையில் கடத்தப்பட்டது. இறுதியில் உச்சநீதிமன்றத்தின் விடுதலை ஆணைக்கு பின்னும் எங்களை எங்கள் குடும்பங்களோடு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்காமல் காலங்கடத்தி காலங்கடத்தி இறுதியில் சாந்தனை இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மீதமுள்ள நாங்களும் எங்களுக்கான ஒவ்வொரு அடிப்படை உரிமையையும் பெறுவதற்கு இதுவரை எண்ணற்ற மனுக்களையும், வழக்குகளையும், உண்ணாநிலை போராட்டங்களையும் மேற்கொண்டே பெற்று வருகின்றோம். அதில் பெரும்பான்மையான வாக்குறுதிகள் காற்றிலே போகும். மீதி, கேட்கப்படாமலே மக்கிப் போகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இந்த மாத தொடக்கத்தில் இலங்கை துணைத் தூதரகம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நானும் முருகனும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட பொழுது ஒரு வாரத்தில் அழைத்துச் செல்கிறோம் என்று எங்களுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டு 20 நாட்களை கடந்தும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இவ்வாறில்லாமல் உரிய அரசுப் பொறிமுறைகள் அவர்கள் கடமையை முறையே செய்திருந்தால் இன்று சாந்தன் உயிருடன் அவருடைய தாயாருடனும் குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியாக இன்னும் ஓரிரு வருடங்களாவது இருந்திருப்பார். 33 வருடங்களாக தனது மகனை பிரிந்து கண்பார்வை குன்றி வயது முதிர்ச்சியடைந்து கடைசியாக ஒருமுறையாவது தனது மகனை பார்த்துவிடவேண்டும் என்று ஏங்கிய ஒரு தாயின் கையில் அந்த மகனின் உயிரற்ற உடலைத்தான் கொண்டுபோய் சேர்க்கப் போகிறோம். கடைசியாக தனது கையால் தன்மகனுக்கு ஒருபிடி உணவு கொடுக்க மாட்டோமா என்று ஏங்கிய அந்த தாய் அந்தமகனுக்கு கடைசியாகக் வாய்க்கரிசி கொடுக்கத்தான் வாய்க்கப்பட்டிருக்கிறார். இதோ இன்று தன் மகன் வந்துவிடுவான், என்று எதிர்பார்த்து காத்திருந்த அந்தத் தாயிடம் 'உன் மகன் வரவில்லை. அவனின் உயிரற்ற உடல்தான் வருகிறது' என்கிற செய்தியை அந்தத் தாயிடம் யாரால் சொல்லியிருக்க முடியும். அத்தகைய கல்நெஞ்சம் படைத்த மனிதர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்களா என்ன.!? 33 வருடங்கள் கழித்து தன் மகனின் வருகைக்காக மகிழ்ச்சியாக காத்திருந்திருக்கும் அந்த வீட்டில் இந்த செய்தி ஏற்படுத்திய மயான அமைதியின் பேரிரைச்சலை தாங்கிக் கொள்ளும் கனத்த இதயம் கொண்ட மனிதர்களும் இவ்வுலகில் இருக்கிறார்களா என்ன?! இதோ கடந்த மாதம் என்னுடன் நடந்து மருத்துவ பரிசோதனைக்கு வந்த சாந்தன் இன்று எங்களோடு இல்லை. ஒரு மாதத்தில், எங்களோடு உறவாடி, பேசி உலாவிய சாந்தன் இன்று உயிரோடு இல்லை. மீதமிருக்கிற, ஜெயக்குமாரும் முருகனும் 33 வருடங்களாக தங்கள் குடும்பங்களை பிரிந்து வாடும் நிலையில் நானோ, மனைவி ஒரு நாட்டில் மகன் ஒரு நாட்டில் தாய், சகோதர சகோதரிகள் வேறு நாட்டில் என சிதறுண்டுக் சிதைந்துக் கிடக்கும் குடும்பத்தை ஒன்றுசேர்த்து ஒரு நாளேனும் வாழ்ந்து விட மாட்டோமா?! பச்சிளம் பாலகனாக பார்ந்த எனது மகன் எவ்வளவு உயரம் இருப்பான்? அவன் என்னைவிட உயரமா? அல்ல உயரம் குறைவா? அவனுக்கு திருமணம் ஆகி எனக்கு பேரன் பிறந்திருக்கிறானாம்.! நான் எந்த வயதில் என் மகனை பிரிந்தேனோ அந்த வயதில் எனக்கு இப்பொழுது பேரன் இருக்கிறான். அவனதுப் பஞ்சு பாதங்களை அள்ளியெடுத்து ஒருமுறையேனும் என் முத்தங்களை காணிக்கையாக்கிவிட மாட்டேனா..?! அன்பார்ந்த உலகத் தமிழ் சமூகமே இன்னும் நாங்கள் மூன்று பேர் மிச்சம் இருக்கிறோம். எங்கள் நிலைமை? நீண்டகால சிறைவாசமும், குடும்பங்களை பிரிந்த துயரமும் எங்களை முழுமையான நோயாளிகளாக்கியுள்ளது. சாந்தனைப் போலல்லாமல் எங்களையாவது எங்கள் கடைசி காலத்தில் மிஞ்சியிருக்கிற கொஞ்ச காலம் எங்கள் தாயார், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்து விட்டுப் போக இந்த அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமா..? எங்கள் குடும்பங்களை பிரிந்து வாழ்க்கையை இழந்து வாடும் இப்பெருந்துன்பங்கள் முடிவுக்கு வருமா..? இப்படிக்கு இராபர்ட் பயஸ் https://www.facebook.com/share/p/aZ7vRzda99wrq7mL/
  33. மயிலிறகு.........02. இந்தப் பக்கம் அடுப்பின் மேல் புகட்டில் குளத்தில் பிடித்த பெரிய பெரிய யப்பான் மீன்கள் கீறி உப்பில் போட்டுப் பிரட்டி எடுத்து பனைநாரில் கோர்த்து தொங்குது. அங்கால வாழைத்தார் ஒன்றும் கயிற்றில் தொங்குது. அதி ஒரு எலி இடைப்பழம் ஒன்றை கொறித்து சுவைத்துக்கொண்டிருக்கு. அப்போது எவ்வித அசுமாத்தமும் இன்று ஒரு சாரைப் பாம்பு அந்த எலியைப் பார்த்துக் கொண்டு மெதுவாக நகருது. அதைக் கண்ட கனகம் அம்மாடி பாம்பு என்று கத்திக் கொண்டு மயிலம்மா அருகில் எட்டி அடியெடுத்து வருகிறாள். அந்த சலசலப்பு கேட்டு எலியும் திரும்பி பாம்பைப் பார்த்து வாழைத்தாரில் இருந்து எதிர் வளைக்குத் தாவ சடாரென பாம்பும் இரண்டு முழ நீளத்துக்கு தனது உடலை வீசி அந்தரத்தில் வைத்தே லபக்கென்று எலியைக் கவ்விப் பிடித்து சரசரவென பனைமட்டையில் சறுக்கி சுவரில் ஊர்ந்து குசினி மூளைக்குள் சுருண்டு கொள்கிறது. இவ்வளவும் ஒரு கனப் பொழுதுக்குள் நடந்து முடிகின்றது. காணக்கிடைக்காத காலமெல்லாம் மறக்க முடியாத ஒரு காட்சி அதுபாட்டுக்கு இயல்பாக நடந்து முடிந்தது. கனகம் ஒரு எட்டில் கதவால் பாய்ந்து முத்தத்துக்கு வர மயிலம்மா கேத்திலுக்குள் கொஞ்சம் தேயிலையும் போட்டு பனங்கருப்பட்டியையும் எடுத்துக் கொண்டு பதட்டமில்லாமல் வெளியே வருகிறாள். என்ன மயூரி மெதுவாக வருகிறாய், பாம்பு பாய்ந்து புடுங்கினால் அப்ப தெரியும் உனக்கு. பதறாத கனகம். அது குட்டியாய் இருந்து இங்கினதான் தெரியுது. முன்பு ஒருநாள் அதை உடும்போ பிராந்தோ கடித்து குற்றுயிரும் குலையுயிருமாய் இந்தத் தாழ்வாரத்தில் வந்து கிடந்தது நாய் குரைக்குது, பூனை சீறுது அப்போது நானும் வாமனும் ஓடிவந்து பார்த்தால் இது சுருண்டு கிடக்குது. எனக்கு அதை அடித்துக் கொல்ல மனம்வரவில்லை. வாமன் அதுக்கு ஒரு சிரட்டையில் பால் ஊத்தி வைக்க குடிச்சுது. பிறகு அதை ஒரு பெட்டியில் போட்டு நான் கொஞ்சம் சாம்பலும் மஞ்சலும் கலந்து கொட்டி விட்டன். சில நாட்களாக அதுக்கு வாமனும் நானும் தினம் ஒரு மீனும் ஒரு முட்டையும் குடுத்து வர அதுவும் தேறி வந்திட்டுது.என்ர மகன் சுந்து அதுக்கு கிட்டவும் வரமாட்டான் அவ்வளவு பயம்.பூவனம் அதைத் தொடமாட்டாள் ஆனால் பயமும் இல்லை.அது அவள் அருகாகப் போய் வரும்.எங்கட நாயும் பூனையும் கூட அதோடு சேட்டைகள் செய்வதில்லை. வாமு கண்டான் என்றால் அதோடு தூக்கி விளையாடாமல் போகமாட்டான். இந்தக் கூத்து எப்ப நடந்தது.எனக்குத் தெரியாதே. அது நீ கலியாணம் கட்டி புகுந்தவீடு போன நாட்களில் நடந்தது.. இப்ப நீ இங்கு வந்து ஒரு வருசம் இருக்குமா .....ம்.....இருக்கும். காலம் போற போக்கு....என்று சொன்ன கனகம் உனக்கு இரவில பயமில்லையா .....இல்லை. அது இரவில் வீடுகளில் தங்காது. மேலும் அதுக்கு இங்கு புழங்கும் ஆட்களையும் மிருகங்களையும் நன்றாதத தெரியும். நீ இந்த தேத்தண்ணியைக் குடி என்று குடுக்கிறாள். இவர்கள் கதைத்துக் கொண்டு தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் போது பாம்பும் குசினிக்குள் இருந்து வெளியேறி பின்னால் காட்டுக்குள் உள்ள புற்றுக்குப் போகிறது.........! மயில் ஆடும்........! 🦚
  34. நான் என் 16 ஆவது வயதில் இதைப் படித்தேன். 😀
  35. விளக்கத்திற்கு நன்றி. கசிப்பு காச்சுவதையும் ஊறல் என்று தான் சொல்வார்கள் என்று நினைக்கின்றேன் 😄
  36. இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024 இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் நடக்க இருப்பதாக கூறுகிறார்கள்.இந்த தேர்தலுக்காக சிங்கள கட்சிகள் இப்போதிருந்தே ஆயத்தமாகத் தொடங்கிவிட்டன. ஐக்கிய தேசிய கட்சி ராஜபக்ச கட்சி சார்பாக ரணிலும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் சயித் பிரேமதாசவும் மக்கள் விடுதலை முன்னணி சார்பாக அனுர குமாரவும் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.இனிவரும் காலங்களில் இன்னும் புதிதாக யார் வேண்டுமானாலும் களமிறங்கலாம். இதுவரை இலங்கையில் நடந்த எந்த ஒரு தேர்தல்களிலும் நான் வாக்குச் செலுத்தவில்லை.இலங்கை ஜனாதிபதி தேர்தல்கள் சட்டதிட்டங்களைப் பற்றி எதுவும் இதுவரை அறிய முற்படவில்லை. எனவே இந்த வருடம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எந்த சிங்கள கட்சிக்கும் வாக்கு போட்டு பிரயோசனமில்லை.வழமை போன்றே ஏதாவது உத்தரவாதம் தருவார்கள்.இல்லாவிட்டால் வெளியே சொன்னால் சிங்கள மக்கள் இதைச் சாட்டாக வைத்தே எமக்கு வாக்குப் போட மாட்டார்கள் என்று சொல்லி இரகசியம் பேணுவார்கள்.வென்ற பின்பு இப்படி கதைத்ததையே மறந்துவிடுவார்கள். ஆகையினால் அடுத்த தேர்தலில் யாராவது ஒரு தமிழர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் தமிழர்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன். ஆனாலும் இப்போ தான் தெரிகிறது போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை என்றால் இரண்டாவது யாருக்கு புள்ளடி போட்டிருக்கிறார்கள் என்று பார்த்து அதையும் கணக்கிலெடுப்பார்கள் என்கிறார்கள். அப்படியானால் தமிழர் ஒருவர் பொது வேட்பாளராக களமிறங்கி பிரயோசனம் இல்லை.இந்த நிலையில் பொது வேட்பாளராக இரு தமிழர்கள் களமிறங்கி முதலாவதாகவும் இரண்டாவதாவும் இரு தமிழர்களுக்கும் வாக்குப் போட்டால் தமிழர்களின் வாக்குகள் சிங்கள கட்சிகளுக்கு போவதை தடுக்கலாமா? இப்படி செய்வார்களாக இருந்தால் முதலாவது அல்லது இரண்டாவது வேட்பாளரை மலையகத் தமிழர் ஒருவரை நிறுத்தலாம். இதுவரை ஜனாதிபதி தேர்தலுக்காக மக்களை ஒன்று சேர்த்து அவர்களை எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சியும் ஒழுங்குபடுத்தியதாக தெரியவில்லை. வெளிநாடுகளே இலங்கையில் யார் ஜனாதிபதியாக வரப் போகிறார் என்று கருத்துக் கணிப்புகளை நடாத்தி முன்னணியில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள தொடங்கிவிட்டார். ஐரோப்பா அமெரிக்கா போன்றவை ரணிலுக்கு ஆதரவாக மறைமுகமாக பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.எதிரும் புதிருமாக இருந்த இந்தியாவும் ஜேவிபியும் ஒன்றாகியுள்ளனர்.இது யாருமே எதிர் பார்க்க ஒன்று.அரசியலில் வெட்கம் மானம் சூடு சுறணை இருக்கக் கூடாது என்பார்கள்.அதையே தான் இந்தியா செய்துள்ளது. மாலைதீவை விட்ட மாதிரி இலங்கையையும் விட தயாரில்லை என்பதையே இந்தியாவின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. அனுர குமாரவைக் கூப்பிட்டு கதைத்த பின்பும் ஜேவிபி ஆதரவாளர்களிடமிருந்து இந்தியாவுக்கு எதிரான பழைய போக்கு மாறவில்லை என்கிறார்கள். வெளிநாடுகள் தங்களுக்கேற்ற அரசியல் தலைவர்களை கொண்டுவர முயற்சி பண்ணுகிறார்கள்.இதில் அவர்களை குறை கூறி பிரயோசமில்லை. இதே நிலையை அமெரிக்க இந்திய சங்கீதத்துக்கு ஆடாமல் மற்றவர்களை ஆட வைக்க வேண்டும்.
  37. Marlyn Monroe வின் காலடியில் மனைவியும் நானும். Plam Springs California வில்
  38. Putthan, உங்களின் இந்த ஆதங்கம் என்னிடத்திலும் இருக்கிறது. பேனை பெரிதாக்கி பெருச்சாளியாக்கி பேயாகவும் காட்டியிருக்கிறார்கள். “நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டது கவலை அளிக்கிறது. ஆனலும் நிலமையைச் சீராக்கி, நிகழ்ச்சி தொடர்ந்தது” என்று தென்னிந்திய கலைஞர்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், சில தென்னிந்திய ஊடகங்களும் அறியத்தந்திருக்கிறார்கள். இதற்குள் எம்மவர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து இழிந்த அரசியலும் செய்திருக்கிறார்கள். பொலிஸ் அதிகாரி சிங்களத்தில் வேண்டுகோள் விடுத்த போது, “தமிழில் கதை” என்று கத்தினார்கள். அவர் தமிழில் வேண்டுகோள் விடுத்த போதும் எம்மவர்களுக்குப் புரியவில்லை என்பது வேதனை. புலம் பெயர்ந்தவர்கள், தாயகத்தில் வந்து முதலீடு செய்துதான் பணம் பார்க்க வேண்டிய நிலையில் இல்லை. அவர்கள் பொது நலன் கருதியோ, தங்கள் புகழ் விரும்பியோ தாயகத்துக்கு உதவ முன் வரலாம். அதை தங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளும் திறன் அங்கு இல்லை என்பதைத்தான் நடந்த சம்பவம் காட்டியிருக்கிறது. வீழ்ந்திருந்து கொண்டு இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் வீரம் பேசப் போகிறோம்?
  39. 7 31ந்திகதி குற்றவாளியைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் துரிதமாக நடந்தேறின. குற்றம் சாட்டப்பட்டவரது விபரங்கள், கொலைக்கான ஆதாரங்களை எல்லாம் ஆராய்ந்த ஸ்வேபிஸ் ஹால் மூத்த அரச சட்டத்தரணி லுஸ்ரிக், ‘குற்றவாளி என சந்தேகிக்கப்படுவரை கைது செய்து விசாரிக்கலாம்’ என பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார். எந்த இடத்தில் இலக்கத் தகடு இல்லாமல் சில்வர் நிற VW கார் நின்றதோ அதற்கு முன்னாலேயே குற்றவாளி என சந்தேகிக்கப்படுபவருடைய வீடும் இருந்தது. அந்தக் காருக்குப் பக்கத்தில் இருந்து ஆராய்ந்த இரண்டு பொலிஸாருக்கும் அன்று அது தெரிந்திருக்கவில்லை. பொலிஸார் வீட்டுக்குள் சென்ற போது டானியல் ஷோபாவில் அமர்ந்து கோப்பி குடித்துக் கொண்டிருந்தான். பொலிஸாரைக் கண்டதும் எழுந்து கொண்டான். அவனது பத்து மற்றும் பன்னிரண்டு வயதான இரு பெண் குழந்தைகளும் தங்கள் அறையில் நித்திரையில் இருந்தார்கள். அறையை விட்டு வெளியே வந்த டானியலின் மனைவி ஆயுதங்களுடன் இருந்த பொலிஸாரைக் கண்டு பயந்து நின்றாள். வீட்டில் இருந்த அலுமாரிகள் எல்லாம் வெறுமையாக இருந்தன. தரையில் இருந்த சூட்கேஸுகள் நிரம்பி இருந்தன. சேர்பியாவுக்குப் பயணிப்பதற்கு தயாராக எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு, கொஞ்சம் ஆற அமர இருந்து கோப்பி குடித்துக் கொண்டிருந்த டானியல் மாட்டிக் கொண்டான். பொலிஸ் கொமிஸனர் Inge (41) டானியலைக் கைது செய்யும் போது, அவன் எந்த எதிர்ப்பும் காட்டாது அமைதியா இருந்தான். அவனைக் கைது செய்யும் போது அவனது பணப் பையில் பல 100, 200 ரூபா யூரோ தாள்கள் இருந்தன. டானியலுடன் யேர்மனிய மொழியில் உரையாட முடியவில்லை. அவனைக் கைது செய்து பயணிக்கும் போது, பொலிஸ் கொமிஸனர், “குற்றம் செய்ததாக சந்தேகித்து உன்னைக் கைது செய்து விசாரணைக்காக கொண்டு செல்கிறோம்” என எழுதி அதை கூகுளில் சேர்பிய மொழியில் மொழி பெயர்த்து டானியலுக்குக் காட்டிய போதும் டானியல் அதை வாசித்து விட்டு அமைதியாக இருந்தான். டானியல் மேல் சுமத்தப்பட்ட கொலை வழக்கு பன்னிரண்டு தடவைகளாக ஹைல்புறோன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு நடந்த ஒவ்வொரு தடவையும் அவனது பெற்றோர், சகோதரிகள், மனைவி ஆகியோர் சேர்பியாவில் இருந்து வந்து பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தார்கள். கை விலங்கிடப்பட்ட நிலையிலேயே டானியல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தான். வழக்கில் மொத்தமாக எழுபத்தி இரண்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். வழக்கின் 12வது அமர்வு 29.09.2023 அன்று நடைபெற்றது. அன்று டானியலின் 32வது பிறந்த தினம். தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர், மூத்த அரச தரப்பு சட்டத்தரணி லுஸ்ரிக் தனது வாதத்தின் தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தார். “எடித்லாங்கின் மரணமும் ஒரு கொலைதான். போதுமான தடயங்களை சேகரித்து வைக்காததும், எடித்லாங்கின் உடல் தகனம் செய்யப் பட்டதாலும் விசாரணைகளை தொடர்ந்து செய்ய முடியாமல் போனதாகவும் பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் குற்றம் சுமத்தப்பட்ட டானியலின் டீஎன்ஏ பரிசோதனையில், அவர் கொலை நடந்த இடத்தில் இருந்தார் என்பதற்கான ஆதாரங்களும் தரப்படவில்லை. ஆகவே அந்தக் கொலையில் டானியலை குற்றவாளியாகச் சேர்க்க முடியாது. ஹைடமேரியின் கொலையில், கொலை நடந்த அன்று, டானியலை முதலாவது மாடியில் கண்டதாக சாட்சியங்கள் சொல்கின்றன. அன்று அவரது கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள் இருந்ததையும் கண்டிருக்கிறார்கள். கொலை நடந்த இடத்தில் டானியல் இருந்தார் என்பதற்கான தடயங்களை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள். டானியலின் ‘டீஎன்ஏ’யும் கொலை நடந்த இடத்தில் எடுத்த ‘டீஎன்ஏ’யும் பொருந்துகின்றன. டானியல் அணிந்திருந்த வெள்ளை அடிடாஸ் சப்பாத்தின் அடையாளங்களும், அது டானியலுடையதுதான் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. கொலைக்கான ஆயுதம் கண்டுபிடிக்கப்படவில்லை. இல்ஸ்கொபனில், முதியவரைத் தாக்கியது, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட முதியவர், டானியல்தான் அதைச் செய்தது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும், முதியவர் டானியலின் மாதிரிப் படத்தை வரைய உதவி செய்திருக்கிறார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து வரையப்பட்ட மாதிரிப் படம் தொண்ணூறு சதவீதம் டானியலின் முகத்துடன் ஒத்துப் போயிருக்கிறது. அந்தப்படம் பின்னாளில் டானியலை இனம் காண பெரிதும் உதவியாகவும் இருந்திருக்கிறது. முதியவர் வீட்டின் அழைப்பு மணி, மற்றும் புதருக்குள் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி,லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள், ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட தடயங்களை பரிசோதித்த போது அவை டானியலின் ‘டீஎன்ஏ” உடன் பொருந்தின. அன்று டானியல் பயணித்த கார் அவர், 29.12.2022 இல் ஹூஸைனிடம் இருந்து 350 யூரோக்களுக்கு வாங்கியது நிரூபிக்கப் பட்டது. காரை வாங்கும் போது, டானியல் விற்பனைக்கான ஒப்பந்தத்தை செய்ய விரும்பாததால், ஹூஸைன், தன்னுடைய பாது காப்புக்காக டானியலை அவரது கைத் தொலைபேசியில் படம் பிடித்திருக்கிறார். அந்தப் படம், பொலிஸ் திணைக்களத்தினால் வரையப்பட்ட மாதிரிப் படத்துடன் ஒத்துப் போயிருந்ததை கவனிக்க வேண்டும். அத்தோடு குற்றவாளியான டானியலையும் கண்டறிய அந்தப் படம் உதவி இருக்கிறது. ஹேரயுற்றேயின் மரணத்தில், அவர் தாக்கப்பட்டு கொலை செய்த ஆயுதமான சுத்தியல், ஹேரயுற்றேயின் வீட்டில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் கண்டெடுக்கப் பட்டிருந்தது. அந்தக் கொலையில் சேகரிக்கப்பட்ட தடயங்களில் டானியலின் டீஎன்ஏ கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. அவர் அணிந்த சப்பாத்தின் பதிவும் கொலை நடந்த இடத்தில் இருந்திருக்கிறது. டானியலைக் கைது செய்து, அவரது வீட்டைச் சோதனை செய்த போது அவரது வெள்ளை அடிடாஸ் சப்பாத்து கழுவப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருந்தாலும், சப்பாத்து கட்டும் நாடாவில் இரத்தக்கறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அது ஹேரயுற்றேயின் இரத்தம் என்பது நிரூபிக்கப் பட்டுமிருக்கிறது. கொலைக்கான 100 கிராம் உலோக எடையைக் கொண்ட சுத்தியலை அவர் கட்டிடப் பொருள் விற்பனை நிலையத்தில் இருந்து களவாடி தனது ஜக்கற்றினுள் மறைத்துக் கொண்டு, காசாளர் பகுதியில் தொலைபேசி கதைப்பது போல் வெளியேறியது கமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோ நீதி மன்றத்தில் பார்வையிடப்பட்டிருந்தது….” “நான், எனது இரண்டு பிள்ளைகள் மனைவியுடன் ஸ்வேபிஸ் ஹாலுக்கு வந்தது, வாழ்வதற்காக மட்டுமே. யாரையும் நான் கொல்லவும் இல்லை, யாரிடமும் கொள்ளையடிக்கவும் இல்லை. எனக்கு ஆண்டவன்தான் சாட்சி” என்று டானியல் சொன்னான். “ஆயுள் தண்ட னை . தண்டனை முடிவடைந்ததன் பின்னால் டானியலின் நடவடிக்கை கவனிக்கப்பட்டு, விடுதலைக்கு தகுதியானவர் என்றால் மட்டும் அவர் விடுதலை பெற முடியும். அத்துடன் ஆயுள் தண்டனையை அவர் யேர்மனியிலேயே அனுபவிக்க வேண்டும்” என தீர்ப்பு வந்தது. கொலைகள் நடந்து, குற்றவாளி பிடிபட்டு தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது. ஸ்வேபிஸ் ஹால் நகரம் இப்பொழுது அமைதி ஆயிற்றா என்று நீங்கள் கேட்கலாம். 14.10. 2020இல், எல்பிரிடே கூகெரைக் கொன்றது யார் என்று இன்னமும் தெரியவில்லை. அந்தக் கொலையைச் செய்தவர் இன்னமும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டுதானே இருக்கிறார். கொஞ்சம் ஆறப் போட்டு, இரண்டு வருடங்களுக்குப் பின்னாலும் ஏதும் நடக்கலாம். டானியல் கூட ஒருவேளை, கூலிக்குக் கொலை செய்பவனாகவும் இருந்திருக்கலாம். இருந்தால் பார்க்கலாம்.
  40. அப்துல் ஹமீத் அவர்கள் எழுதிய "வானலைகளில் ஒரு வழிப்போக்கன்" என்ற புத்தகத்தை வாசிக்கும் பொழுது அடியேன் அறிந்து கொண்ட ஒரு சில விடயங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன் அந்த வகையில் 1.தென்கிழக்காசியாவின் முதல் வானோலி இலங்கை வானோலி 2.இங்கிலாந்தில் மார்க்கோனி ஆரம்பித்த முன்றாண்டுகளுக்குள் இலங்கையில் வானொலி ஆரம்பமனது. 3.முதலாவது உலக மகாயுத்தம் (ஜூலை 28, 1914‍_ நவம்பர் 11,1918)முடிவடைந்த் பின்னர்,யுத்த காலத்தில் தரை தட்டியிருந்த ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பலில் சிதிலமடைந்திருந்த வயர்லஸ் ரேடிஜோக் கருவியின் பாகங்களை ஒன்றிணைத்து முதலாவது பரீட்சார்த்த ஒலிபரப்பு 1923 ஆண்டிலயே கொழும்பு தந்தித் திணைக்களத்தில் நடைபெற்றது. 4.ஏட்வேர்ட் கார்பர் என்பவரின் தலமையில் உள்ளூர் பொறியியலாளர்கள் ஒன்றிணைந்த் அதை சாதித்தனர். 5.அந்த வெற்றியை தொடர்ந்து அடுத்து வந்த மூன்று ஆண்டுகளும் தந்தித் திணைக்களப் பொறியாளர்களின் தொடர்ந்த அயராத முயற்சியால் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 திகதி முறையான வானோலி ஒலிபரப்பு இலங்கையில் ஆரம்பமானது 6.தந்தி திணைக்களத்தின் ஒர் பகுதியாக இயங்கிய இந்த ஒலிபரபுச் சேவையில் ஆரம்பத்தில் ஆங்கில சேவையே கோலாச்சி செய்தது . 7.சிறுது காலத்தின் பின் இடையிடையே இசைத்தடுக்களின் உதவியோடு தமிழ் மற்றும் சிங்கள இசையும் சிறிய அறிவுப்புக்களும் இடம் பெற்றன. 8.இந்த பணியை அங்கு பணி புரிந்த பொறிய‌ளார்களும் எழுது விளைஞர்களும் தான் செய்து வந்தனர். 9.தந்தி திணக்களத்தில் இருந்த ஓர் அறை கலையகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 10.1933 ஆண்டு முதல் மும்மொழிகளிலும் கிரமமாக செய்ய தீர்மானிக்கபட்ட பொழுது தமிழ் மொழி அறிவிப்பாளராக வினாயகமூர்த்தி நியமிக்கப்பட்டார்.இவர் தந்தி திணக்களத்தில் எழுது விளஞராக கடமை புரிந்து கொண்டே வானொலி அறிவிப்பு பணிகளை செய்து வந்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.